1
சீர் மன்னு செல்வக்குடி மல்கு சிறப்பின் ஓங்கும்கார் மன்னு சென்னிக் கதிர் மாமணி மாட வைப்புநார் மன்னு சிந்தைப் பல நற்றுறை மாந்தர் போற்றும்பார் மன்னு தொன்மைப் புகழ் பூண்டது பாண்டி நாடு.
சொற்பிரிப்பு
சீர் மன்னு செல்வக் குடி மல்கு சிறப்பின் ஓங்கும்கார் மன்னு சென்னிக் கதிர் மாமணி மாட வைப்புநார் மன்னு சிந்தைப் பல நல்துறை மாந்தர் போற்றும்பார் மன்னு தொன்மைப் புகழ் பூண்டது பாண்டி நாடு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
சாயுந்தளிர் வல்லி மருங்குல் நெடுந் தடங்கண்வேயும் படு தோளியர் பண்படும் இன்சொல் செய்யவாயும் படும் நீள் கரை மண் பொருந்தண் பொருந்தம்பாயுங் கடலும் படும் நீர்மை பணித்த முத்தம்.
சொற்பிரிப்பு
சாயும் தளிர் வல்லி மருங்குல் நெடும் தடம்கண்வேயும் படு தோளியர் பண்படும் இன்சொல் செய்யவாயும் படும்; நீள்கரை மண் பொரும் தண் பொருந்தம்பாயும் கடலும் படும்; நீர்மை பணித்த முத்தம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
மொய்வைத்த வண்டின் செறிசூழல் முரன்ற சந்தின்மை வைத்த சோலை மலையந்தர வந்த மந்தமெய் வைத்த காலுந் தரும் ஞாலம் அளந்த மேன்மைத்தெய்வத் தமிழும் தரும் செவ்வி மணஞ்செயீரம்.
சொற்பிரிப்பு
மொய் வைத்த வண்டின் செறிசூழல் முரன்ற சந்தின்மை வைத்த சோலை மலயம் தர வந்த மந்தமெய் வைத்த காலும் தரும்; ஞாலம் அளந்த மேன்மைத்தெய்வத் தமிழும் தரும் செவ்வி மணம்செய் ஈரம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
சூழும்இதழ்ப் பங்கயமாக அத் தோட்டின் மேலாள்தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது அத் தையல் ஒப்பார்யாழின் மொழியில் குழல் இன்னிசையும் சுரும்பும்வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும்.
சொற்பிரிப்பு
சூழும் இதழ்ப் பங்கயம் ஆக அத் தோட்டின் மேலாள்தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது அத் தையல் ஒப்பார்யாழின் மொழியில் குழலில் இசையும் சுரும்பும்வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
சால்பாய மும்மைத் தமிழ் தங்கிய அங்கண் மூதூர்நூல் பாய் இடத்தும் உள நோன்றலை மேதி பாயப்பால் பாய் முலை தோய் மதுப் பங்கயம் பாய எங்கும்சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கேறு சங்கம்.
சொற்பிரிப்பு
சால்பு ஆய மும்மைத் தமிழ் தங்கிய அங்கண் மூதூர்நூல் பாய் இடத்தும் உள; நோன்தலை மேதி பாயப்பால்பாய் முலைதோய் மதுப் பங்கயம் பாய எங்கும்சேல்பாய் தடத்தும் உள; செய்யுள் மிக்கு ஏறு சங்கம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
மந்தா நிலம் வந்து அசை பந்தரின் மாடம் முன்றில்பந்தாடிய மங்கையர் பங்கயச் செங்கை தாங்கும்சந்தார் முலை மேலன தாழ் குழை வாள் முகப்பொற்செந்தாமரை மேலன நித்திலஞ் சேர்ந்த கோவை.
சொற்பிரிப்பு
மந்த அநிலம் வந்து அசை பந்தரின் மாடம் முன்றில்பந்து ஆடிய மங்கையர் பங்கயச் செங்கை தாங்கும்சந்தார் முலை மேலன; தாழ்குழை வாள் முகப்பொன்செந்தாமரை மேலன; நித்திலம் சேர்ந்த கோவை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
மும்மைப் புவனங்களின் மிக்கது அன்றே அம் மூதூர்மெய்ம்மைப் பொருளாந் தமிழ் நூலின் விளங்கு வாய்மைசெம்மைப் பொருளுந் தருவார் திருஆலவாயில்எம்மைப் பவந் தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால்.
சொற்பிரிப்பு
மும்மைப் புவனங்களின் மிக்கதன்றே அம் மூதூர்மெய்ம்மைப் பொருளாம் தமிழ் நூலின் விளங்கு வாய்மைச்செம்மைப் பொருளும் தருவார் திருஆலவாயில்எம்மைப் பவம் தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
அப் பொற் பதிவாழ் வணிகக் குலத்து ஆன்ற தொன்மைச்செப்பத் தகு சீர்க் குடி செய்தவஞ் செய்ய வந்தார்எப்பற்றினையும் அறுத்து ஏறுகைத்து ஏறுவார் தாள்மெய்ப் பற்று எனப் பற்றி விடாத விருப்பின் மிக்கார்.
சொற்பிரிப்பு
அப்பொன் பதி வாழ் வணிகக் குலத்து ஆன்ற தொன்மைச்செப்பத் தகு சீர்க்குடி செய்தவம் செய்ய வந்தார்எப்பற்றினையும் அறுத்து ஏறு உகைத்து ஏறுவார் தாள்மெய்ப்பற்று எனப் பற்றி விடாத விருப்பின் மிக்கார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
நாளும் பெருங் காதல் நயப்புறும் வேட்கை யாலேகேளும் துணையும் முதல் கேடில் பதங்கள் எல்லாம்ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்மூளும் பெருகு அன்பு எனும் மூர்த்தியார் மூர்த்தியார்தாம்.
சொற்பிரிப்பு
நாளும் பெரும் காதல் நயப்பு உறும் வேட்கையாலேகேளும் துணையும் முதல் கேடில் பதங்கள் எல்லாம்ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்மூளும் பெருகு அன்பு எனும் மூர்த்தியார் மூர்த்தியார் தாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
அந்திப் பிறை செஞ்சடை மேல் அணி ஆலவாயில்எந்தைக்கு அணி சந்தனக் காப்பிட என்றும் முட்டாஅந்தச் செயலின் நிலை நின்று அடியார் உவப்பச்சிந்தைக்கு இனிதாய திருப்பணி செய்யும் நாளில்.
சொற்பிரிப்பு
அந்திப் பிறை செஞ்சடை மேல் அணி ஆலவாயில்எந்தைக்கு அணி சந்தனக் காப்பு இட என்றும் முட்டாஅந்தச் செயலின் நிலை நின்று அடியார் உவப்பச்சிந்தைக்கு இனிதாய திருப்பணி செய்யும் நாளில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
கானக் கடி சூழ் வடுகக் கரு நாடர் காவல்மானப் படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய்யானைக் குதிரைக் கருவிப் படை வீரர் திண்டேர்சேனைக் கடலுங் கொடு தென் திசை நோக்கி வந்தான்.
சொற்பிரிப்பு
கானக் கடி சூழ் வடுகக் கருநாடர் காவல்மானப் படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய்யானைக் குதிரைக் கருவிப்படை வீரர் திண்தேர்சேனைக் கடலும் கொடு தென் திசை நோக்கி வந்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
வந்துற்ற பெரும் படை மண் புதையப் பரப்பிச்சந்தப் பொதியில் தமிழ் நாடு உடை மன்னன் வீரம்சிந்தச் செரு வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால்கந்தப் பொழில் சூழ் மதுரா புரி காவல் கொண்டான்.
சொற்பிரிப்பு
வந்து உற்ற பெரும்படை மண் புதையப் பரப்பிச்சந்தப் பொதியில் தமிழ்நாடு உடை மன்னன் வீரம்சிந்தச் செரு வென்று, தன் ஆணை செலுத்தும் ஆற்றால்கந்தப்பொழில் சூழ் மதுராபுரி காவல் கொண்டான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
வல்லாண்மையின் வண் தமிழ் நாடு வளம் படுத்துநில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேருவில்லான் அடிமைத் திறம் மேவிய நீற்றின் சார்புசெல்லாதரு கந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான்.
சொற்பிரிப்பு
வல்லாண்மையின் வண் தமிழ்நாடு வளம்படுத்திநில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேருவில்லான் அடிமைத் திறம் மேவிய நீற்றின் சார்புசெல்லாது அருகந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்துவீழும் கொடியோன் அது அன்றியும் வெய்ய முன்னைச்சூழும் வினையால் அரவம் சுடர்த் திங்களோடும்வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான்.
சொற்பிரிப்பு
தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்துவீழும் கொடியோன் அது அன்றியும் வெய்ய முன்னைச்சூழும் வினையால் அரவம் சுடர்த் திங்களோடும்வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
செக்கர்ச் சடையார் விடையார் திரு ஆல வாயுள்முக்கட் பரனார் திருத் தொண்டரை மூர்த்தியாரைமைக்கற்புரை நெஞ்சுடை வஞ்சகன் வெஞ்ச மண் பேர்எக்கர்க்குடனாக இகழ்ந்தன செய்ய எண்ணி.
சொற்பிரிப்பு
செக்கர்ச் சடையார் விடையார் திரு ஆலவாயுள்முக்கட் பரனார் திருத் தொண்டரை மூர்த்தியாரைமைக் கல் புரை நெஞ்சுடை வஞ்சகன் வெஞ்சமண் பேர்எக்கர்க்கு உடனாக இகழ்ந்தன செய்ய எண்ணி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
அந்தம் இலவாம் இறை செய்யவும் அன்பனார் தாம்முந்தை தம் முறைமைப் பணி முட்டலர் செய்து வந்தார்தம் தம் பெருமைக்கு அளவாகிய சார்பில் நிற்கும்எம் தம் பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார்.
சொற்பிரிப்பு
அந்தம் இலவாம் மிறை செய்யவும் அன்பனார் தாம்முந்தை முறைமைப் பணி முட்டலர் செய்து வந்தார்தந்தம் பெருமைக்கு அளவு ஆகிய சார்பில் நிற்கும்எந்தம் பெருமக்களை யாவர் தடுக்க வல்லார்?.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்யத்தள்ளுஞ் செயல் இல்லார் சந்தனக் காப்புத் தேடிக்கொள்ளுந் துறையும் அடைத்தான் கொடும் கோன்மை செய்வான்தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து.
சொற்பிரிப்பு
எள்ளும் செயல் வன்மைகள் எல்லையில்லாத செய்யத்தள்ளும் செயல் இல்லவர் சந்தனக் காப்புத் தேடிக்கொள்ளும் துறையும் அடைத்தான் கொடும் கோன்மை செய்வான்தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
புன்மைச் செயல்வல் அமண்குண்டரிற் போது போக்கும்வன்மைக் கொடும் பாதகன் மாய்ந்திட வாய்மை வேதநன்மைத் திரு நீற்று உயர் நன்னெறி தாங்கு மேன்மைத்தன்மைப் புவி மன்னரைச் சார்வதென்(று)என்று சார்வார்.
சொற்பிரிப்பு
“புன்மைச் செயல் வல் அமண் குண்டரில் போது போக்கும்,வன்மைக் கொடும் பாதகன் மாய்ந்திட வாய்மை வேதநன்மைத் திருநீற்று உயர் நன்னெறி தாங்கும் மேன்மைத்தன்மைப் புவி மன்னரைச் சார்வது என்று?” என்று சார்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
காய்வுற்ற செற்றங் கொடு கண்டகன் காப்பவும் சென்றுஆய்வுற்ற கொட்பில் பகல் எல்லை அடங்க நாடிஏய்வுற்ற நற்சந்தனம் எங்கும் பெறாது சிந்தைசாய் உற்றிட வந்தனர் தம்பிரான் கோயில் தன்னில்.
சொற்பிரிப்பு
காய்வுற்ற செற்றம் கொடு கண்டகன் காப்பவும் சென்றுஆய்வுற்ற கொட்பில் பகல் எல்லை அடங்க நாடிஏய்வுற்ற நற் சந்தனம் எங்கும் பெறாது சிந்தைசாய்வுற்றிட வந்தனர் தம்பிரான் கோயில் தன்னில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
நட்டம் புரிவார் அணி நற்றிரு மெய்ப் பூச்சு இன்றுமுட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கைமுட்டாது என்றுவட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார்கட்டும் புறந்தோல் நரம்பு என்பு கரைந்து தேய.
சொற்பிரிப்பு
நட்டம் புரிவார் அணி நல் திரு மெய்ப்பூச்சு இன்றுமுட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கை முட்டாது என்றுவட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார்கட்டும் புறம் தோல் நரம்பு என்பு கரைந்து தேய.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
கல்லின் புறந் தேய்த்த முழங்கை கலுழ்ந்து சோரிசெல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து மூளைபுல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பிரானார்அல்லின் கண் எழுந்தது உவந்து அருள் செய்த வாக்கு.
சொற்பிரிப்பு
கல்லின் புறம் தேய்த்த முழங்கை கலுழ்ந்து சோரிசெல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்த மூளைபுல்லும் படி கண்டு பொறுத்திலர் தம்பிரானார்;அல்லின் கண் எழுந்தது உவந்து அருள் செய்த வாக்கு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
அன்பின் துணிவால் இது செய்திடல் ஐய! உன்பால்வன் புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டுமுன் பின்னல் புகுந்தன முற்றவும் நீத்துக் காத்துப்பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன.
சொற்பிரிப்பு
“அன்பின் துணிவால் இது செய்திடல்; ஐய! உன்பால்வன் புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டுமுன்பு இன்னல் புகுந்தன முற்றவும் நீத்துக் காத்துப்பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக” என்ன.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
இவ் வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து அஞ்சி முன்புசெய் வண்ணம் ஒழிந்திடத் தேய்ந்த புண் ஊறு தீர்ந்துகை வண்ணம் நிரம்பின வாசம் எல்லாம் கலந்துமொய் வண்ண விளங்கு ஒளி எய்தினர் மூர்த்தியார் தாம்.
சொற்பிரிப்பு
இவ்வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து அஞ்சி முன்புசெய்வண்ணம் ஒழிந்திடத் தேய்ந்த புண் ஊறு தீர்ந்துகைவண்ணம் நிரம்பின வாசம் எல்லாம் கலந்துமொய்வண்ண விளங்கு ஒளி எய்தினர் மூர்த்தியார் தாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
அந் நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும்மன் ஆகிய போர் வடுகக் கருநாடர் மன்னன்தன்னாளும் முடிந்தது சங்கரன் சார்பு இலோர்க்குமின்னாம் என நீடிய மெய்ந் நிலையாமை வெல்ல.
சொற்பிரிப்பு
அந்நாள் இரவின்கண் அமண் புகல் சார்ந்து வாழும்மன் ஆகிய போர் வடுகக் கருநாடர் மன்னன்தன் நாளும் முடிந்தது சங்கரன் சார்பு இலோர்க்குமின்னாம் என நீடிய மெய்ந் நிலையாமை வெல்ல.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர்மெய் வாழ் உலகத்து விரைந்து அணைவார்களே போல்அவ்வாறு அரனார் அடியாரை அலைத்த தீயோன்வெவ்வாய் நிரயத்து இடை விரைந்து வீந்தான்.
சொற்பிரிப்பு
இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர்மெய்வாழ் உலகத்து விரைந்து அணைவார்களே போல்அவ்வாறு அரனார் அடியாரை அலைத்த தீயோன்வெவ்வாய் நிரயத்து இடை வீழ விரைந்து வீந்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
முழுதும் பழுதே புரி மூர்க்கன் உலந்த போதின்எழுதும் கொடி போல்பவர் உட்பட ஏங்கு சுற்றம்முழுதும் புலர்வுற்றது மற்று அவன் அன்ன மாலைப்பொழுதும் புலர்வுற்றது செங்கதிர் மீது போத.
சொற்பிரிப்பு
முழுதும் பழுதே புரி மூர்க்கன் உலந்த போதின்எழுதும் கொடி போல்பவர் உட்பட ஏங்கு சுற்றம்அழுதும் புலர்வுற்றது; மற்றவன் அன்ன மாலைப்பொழுதும் புலர்வுற்றது; செங்கதிர் மீது போத.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
அவ் வேளையில் அங்கண் அமைச்சர்கள் கூடித் தங்கள்கை வேறு கொள் ஈம அருங்கடன் காலை முற்றிவை வேலவன் தன் குல மைந்தரும் இன்மை யாலேசெய் வேறு வினைத் திறம் சிந்தனை செய்து தேர்வார்.
சொற்பிரிப்பு
அவ்வேலையில் அங்கண் அமைச்சர்கள் கூடித் தங்கள்கைவேறுகொள் ஈம அருங்கடன் காலை முற்றிவைவேலன் தன் குல மைந்தரும் இன்மையாலேசெய் வேறு வினைத்திறம் சிந்தனை செய்து தேர்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
தாழும் செயலின்று ஒரு மன்னவன் தாங்க வேண்டும்கூழும் குடியும் முதலாயின கொள்கைத்தேனும்சூழும் படை மன்னவன் தோள் இணைக் காவல் இன்றிவாழும் தகைத்து அன்றி இந்த வையகம் என்று சொன்னார்.
சொற்பிரிப்பு
“தாழும் செயல் இன்று ஒரு மன்னவன் தாங்க வேண்டும்;கூழும் குடியும் முதல் ஆயின கொள்கைத்து ஏனும்சூழும் படை மன்னவன் தோள் இணைக் காவல் இன்றிவாழும் தகைத்து அன்று இந்த வையகம்” என்று சொன்னார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
பன்முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான்தன் நெடும் குடைக் கீழ்த் தத்தம் நெறிகளில் சரித்து வாழும்மன்னரை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணுங் காலைஇன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார்.
சொற்பிரிப்பு
“பன்முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான்தன்னெடும் குடைக் கீழ்த் தத்தம் நெறிகளில் சரித்து வாழும்மன்னரை இன்றி வைகும் மண் உலகு எண்ணும் காலைஇன் உயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும்” என்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
இவ் வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லைசெய்வகை இதுவே என்று தெளிபவர் சிறப்பின் மிக்கமை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்றக்கை வரை கைக் கொண்டார் மண் காவல் கைக் கொள்வார் என்று.
சொற்பிரிப்பு
இவ்வகை பலவும் எண்ணி “இங்கு இனி அரசர் இல்லைசெய்வகை இதுவே” என்று தெளிபவர் “சிறப்பின் மிக்கமைவரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்று அக்கைவரை கைக்கொண்டார் மண் காவல் கைக் கொள்வார்” என்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து தோளால்இம் மாநிலம் ஏந்த ஓர் ஏந்தலை ஏந்துக என்றுபெய்ம் மா முகில் போல் மதம் பாய் பெருகோடை நெற்றிக்கைம்மாவை நறுந் துகில் கொண்டு கண் கட்டி விட்டார்.
சொற்பிரிப்பு
செம்மாண் வினை அர்ச்சனை நூல்முறை செய்து “தோளால்இம்மாநிலம் ஏந்த ஓர் ஏந்தலை ஏந்துக” என்றுபெய்ம் மாமுகில் போல் மதம் பாய் பெருகு ஓடை நெற்றிக்கைம்மாவை நறுந்துகில் கொண்டு கண் கட்டி விட்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
கண் கட்டி விடுங்களி யானை அக் காவல் மூதூர்மண் கொள் புற வீதி மருங்கு திரிந்து போகித்திண் பொன் தட மாமதில் சூழ் திரு ஆல வாயின்விண் பிற்பட ஓங்கிய கோபுரம் முன்பு மேவி.
சொற்பிரிப்பு
கண்கட்டி விடும் களி யானைக் காவல் மூதூர்மண்கொட்பு உற வீதி மருங்கு திரிந்து போகித்திண் பொன்தடம் மாமதில் சூழ் திரு ஆலவாயில்விண் பிற்பட ஓங்கிய கோபுரம் முன்பு மேவி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
நீங்கும் இரவின் கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர்ஈங்கு எம் பெருமான் அருளாம் எனில் இந்த வையம்தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கிப்பூங்கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப.
சொற்பிரிப்பு
நீங்கும் இரவின்கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர்“ஈங்கு எம்பெருமான் அருளாம் எனில் இந்த வையம்தாங்கும் செயல் பூண்பன்” என்று உள்ளம் தளர்வு நீங்கிப்பூங்கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்றுவாழ்வுற்று உலகம் செய்தவத்தினின் வள்ளலாரைச்சூழ் பொற் சுடர் மாமணி மாநிலம் தோய முன்புதாழ்வுற்று எடுத்துப் பிடர் மீது தரித்தது அன்றே.
சொற்பிரிப்பு
வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்றுவாழ்வுற்று உலகம் செய் தவத்தினின் வள்ளலாரைச்சூழ் பொன் சுடர் மாமணி மாநிலம் தோய முன்புதாழ்வுற்று எடுத்துப் பிடர் மீது தரித்தது அன்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மைக் காணாஏதங்கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம்பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள் அப்போதுஓதங்கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அவ்வூர்.
சொற்பிரிப்பு
மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மைக் காணாஏதங்கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம்பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள் அப்போதுஓதங்கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அவ்ஊர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
36
சங்கங்கள் முரன்றன தாரைகள் பேரி யோடும்எங்கெங்கும் இயம்பின பல்லியம் எல்லையில்லஅங்கங்கு மலிந்தன வாழ்த்தொலி அம்பொற் கொம்பின்பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும்.
சொற்பிரிப்பு
சங்கங்கள் முரன்றன; தாரைகள் பேரியோடும்எங்கு எங்கும் இயம்பின பல்லியம்; எல்லை இல்லஅங்குஅங்கும் மலிந்தன வாழ்த்து ஒலி; அம்பொன் கொம்பின்பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
37
வெங்கட் களிற்றின் மிசை நின்றும் இழிச்சி வேரித்துதொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலைஅங்கண் கொடு புக்கரி ஆசனத்து ஏற்றி ஒற்றைத்திங்கட்குடைக் கீழ் உரிமைச் செயல் சூழ்ந்து செய்வார்.
சொற்பிரிப்பு
வெங்கண் களிற்றின் மிசை நின்றும் இழிச்சி வேரித்தொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலைஅங்கண் கொடு புக்கு அரி ஆசனத்து ஏற்றி ஒற்றைத்திங்கள் குடைக் கீழ் உரிமைச் செயல் சூழ்ந்து செய்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
38
மன்னுந் திசை வேதியில் மங்கல ஆகுதிக் கண்துன்னுஞ் சுடர் வன்னி வளர்த்துத் துதைந்த நூல் சூழ்பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூ நீர்உன்னுஞ் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள்.
சொற்பிரிப்பு
மன்னும் திசைவேதியில் மங்கல ஆகுதிக்கண்துன்னும் சுடர் வன்னி வளர்த்துத் துதைந்த நூல் சூழ்பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூநீர்உன்னும் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
39
வந்துற்றெழு மங்கல மாந்தர்கள் தம்மை நோக்கிச்சிந்தைச் சிவமே தெளியும் திரு மூர்த்தியார் தாம்முந்தைச் செயலாம் அமண் போய் முதல் சைவம் ஓங்கில்இந்தப் புவி தாங்கி இவ் வின்னரசு ஆள்வன் என்றார்.
சொற்பிரிப்பு
வந்து உற்று எழு மங்கல மாந்தர்கள் தம்மை நோக்கிச்சிந்தைச் சிவமே தெளியும் திருமூர்த்தியார் தாம்“முந்தைச் செயலாம் அமண் போய் முதல் சைவம் ஓங்கில்இந்தப் புவி தாங்கி இவ் இன்அரசு ஆள்வன்” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
40
அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சரோடுமெய் வாழ் தரு நூல் அறிவின் மிகு மாந்தர் தாமும்எவ்வாறு அருள் செய்தனை மற்று அவை அன்றி யாவர்செய்வார் பெரியோய் எனச் சேவடி தாழ்ந்து செப்ப.
சொற்பிரிப்பு
அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சரோடுமெய் வாழ்தரு நூல் அறிவின் மிகு மாந்தர் தாமும்“எவ்வாறு அருள் செய்தனை மற்றவை அன்றி யாவர்செய்வார்? பெரியோய்;” எனச் சேவடி தாழ்ந்து செப்ப.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
41
வையம் முறை செய்குவன் ஆகில் வயங்கு நீறேசெய்யும் அபிடேகமும் ஆக செழுங்கலன்கள்ஐயன் அடையாளமும் ஆக அணிந்து தாங்கும்மொய் புன் சடைமாமுடியே முடி ஆவது என்றார்.
சொற்பிரிப்பு
வையம் முறை செய்குவன் ஆகில் வயங்கு நீறேசெய்யும் அபிடேகமும் ஆகச், செழுங்கலன்கள்ஐயன் அடையாளமும் ஆக, அணிந்து தாங்கும்மொய் புன்சடை மாமுடியே முடி ஆவது” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
42
என்று இவ்வுரை கேட்டலும் எல்லையில் கல்வி யோரும்வன் திண் மதி நூல் வளர் வாய்மை அமைச்சர் தாமும்நன்றிங்கு அருள் தான் என நற்தவ வேந்தர் சிந்தைஒன்றும் அரசாள் உரிமைச் செயலான உய்த்தார்.
சொற்பிரிப்பு
என்று இவ்உரை கேட்டலும் எல்லையில் கல்வியோரும்வன் திண்மதி நூல்வளர் வாய்மை அமைச்சர் தாமும்“நன்று இங்குஅருள் தான்” என நல்தவ வேந்தர் சிந்தைஒன்றும் அரசு ஆள் உரிமைச்செயல் ஆன உய்த்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
43
மாடு எங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்கச்சூடும் சடை மௌலி அணிந்தவர் தொல்லை ஏனம்தேடுங் கழலார் திருஆல வாய் சென்று தாழ்ந்துநீடுங்களிற்றின் மிசை நீள் மறுகூடு போந்தார்.
சொற்பிரிப்பு
மாடு எங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்கச்சூடும் சடை மௌலி அணிந்தவர் தொல்லை ஏனம்தேடும் கழலார் திரு ஆலவாய் சென்று தாழ்ந்துநீடும் களிற்றின் மிசை நீள் மறுகு ஊடு போந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
44
மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழ மீதுதன்னின்றும் இழிந்து தயங்கு ஒளி மண்டபத்தில்பொன்னின் அரி மெல்லணைச் சாமரைக் காமர் பூங்கால்மன்னும் குடை நீழல் இருந்தனர் வையம் தாங்கி.
சொற்பிரிப்பு
மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழம் மீதுதன் நின்றும் இழிந்து தயங்கு ஒளி மண்டபத்தில்பொன்னின் அரி மெல்லணைச் சாமரைக் காமர் பூங்கால்மன்னும் குடை நீழல் இருந்தனர் வையம் தாங்கி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
45
குலவுந் துறை நீதி அமைச்சர் குறிப்பின் வைககலகம் செய் அமண்செயல் ஆயின கட்டு நீங்கிநிலவும் திரு நீற்று நெறித் துறை நீடு வாழஉலகெங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன.
சொற்பிரிப்பு
குலவும் துறை நீதி அமைச்சர் குறிப்பின் வைகக்கலகம் செய் அமண் செயல் ஆயின கட்டு நீங்கிநிலவும் திருநீற்று நெறித்துறை நீடு வாழஉலகு எங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
46
நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின்பதம் எங்கும் நிறைந்து விளங்கப் பவங்கள் மாறஉதவும் திருநீறு உயர் கண்டிகை கொண்ட வேணிமுதன் மும்மையினால் உலகு ஆண்டனர் மூர்த்தியார் தாம்.
சொற்பிரிப்பு
நுதலின்கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின்பதம் எங்கும் நிறைந்து விளங்கப் பவங்கள் மாறஉதவும் திருநீறு உயர் கண்டிகை கொண்ட வேணிமுதன் மும்மையினால் உலகு ஆண்டனர் மூர்த்தியார் தாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
47
ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும்சீலங்கொடு வெம் புலன் தெவ்வுடன் வென்று நீக்கிஞாலந் தனி நேமி நடாத்தி நலம் கொள் ஊழிக்காலம் உயிர்கட்கு இடர் ஆன கடிந்து காத்து.
சொற்பிரிப்பு
ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும்சீலம் கொடு வெம்புலன் தெவ்வுடன் வென்று நீக்கிஞாலம் தனி நேமி நடாத்தி நலம் கொள் ஊழிக்காலம் உயிர்கட்கு இடர் ஆன கடிந்து காத்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
48
பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்றஏதம் பிணியா வகை இவ் உலகு ஆண்டு தொண்டின்பேதம் புரியா அருள் பேர் அரசாளப் பெற்றுநாதன் கழற் சேவடி நண்ணினர் அண்ணலாரே.
சொற்பிரிப்பு
பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்றஏதம் பிணியாவகை இவ்உலகு ஆண்டு தொண்டின்பேதம் புரியா அருள் பேரரசு ஆளப் பெற்றுநாதன் கழல் சேவடி நண்ணினர் அண்ணலாரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
49
அகல் பாறையின் வைத்து முழங் கையை அன்று தேய்த்தஇகலார் களிற்று அன்பரை ஏத்தி முருகனாராம்முகில் சூழ் நறுஞ் சோலையின் மொய் ஒளி மாட வீதிப்புகலூர் வரும் அந்தணர் தம் திறம் போற்றல் உற்றாம்.
சொற்பிரிப்பு
அகல் பாறையின் வைத்து முழங்கையை அன்று தேய்த்தஇகலார் களிற்று அன்பரை ஏத்தி முருகனாராம்முகில் சூழ் நறும்சோலையின் மொய் ஒளி மாட வீதிப்புகலூர் வரும் அந்தணர் தம்திறம் போற்றல் உற்றாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.