திருமுறை 12 · 12.020 · 42

ஆனாய நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

மாடு விரைப் பொலி சோலையின் வான் மதிவந்து ஏறச்சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேறஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்தேறநீடு வளத்தது மேன்மழ நாடெனும் நீர் நாடு.
சொற்பிரிப்பு
மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்து ஏறச்சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பு ஏறஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்து ஏறநீடு வளத்தது மேன் மழநாடு எனும் நீர்நாடு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நீவி நிதம்ப உழத்தியர் நெய்க் குழல் மைச் சூழல்மேவி உறங்குவ மென் சிறை வண்டு விரைக் கஞ்சப்பூவில் உறங்குவ நீள் கயல் பூமலி தேமாவின்காவின் நறுங் குளிர் நீழல் உறங்குவ கார் மேதி.
சொற்பிரிப்பு
நீவி நிதம்ப உழத்தியர் நெய்க்குழல் மைச்சூழல்மேவி உறங்குவ மென்சிறை வண்டு; விரைக்கஞ்சப்பூவில் உறங்குவ நீள்கயல்; பூமலி தேமாவின்காவின் நறுங்குளிர் நீழல் உறங்குவ கார்மேதி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வன்னிலை மள்ளர் உகைப்ப எழுந்த மரக்கோவைப்பன் முறை வந்து எழும் ஓசை பயின்ற முழக்கத்தால்அன்னம் மருங்குறை தண் துறை வாவி அதன் பாலைக்கன்னல் அடும் புகையால் முகில் செய்வ கருப்பாலை.
சொற்பிரிப்பு
வன்னிலை மள்ளர் உகைப்ப எழுந்த மரக்கோவைபன்முறை வந்து எழும் ஓசை பயின்ற முழக்கத்தால்அன்னம் மருங்கு உறை தண் துறை வாவி அதன்பாலைக்கன்னல் அடும் புகையால் முகில் செய்வ கருப்பாலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பொங்கிய மாநதி நீடலை உந்து புனற் சங்கம்துங்க இலைக் கதலிப் புதல் மீது தொடக்கிப் போய்த்தங்கிய பாசடை சூழ் கொடி யூடு தவழ்ந்தேறிப்பைங்கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ பாளையென.
சொற்பிரிப்பு
பொங்கிய மாநதி நீடு அலை உந்து புனல் சங்கம்துங்க இலைக் கதலிப் புதல் மீது தொடக்கிப்போய்த்தங்கிய பாசடை சூழ் கொடி ஊடு தவழ்ந்து ஏறிப்பைங்கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ பாளை என.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அல்லி மலர்ப் பழனத்து அயல் நாகிள ஆன் ஈனும்ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழக்கன்றுகொல்லை மடக்குல மான் மறியோடு குதித்து ஓடும்மல்கு வளத்தது முல்லை உடுத்த மருங்கோர்பால்.
சொற்பிரிப்பு
அல்லி மலர்ப் பழனத்து அயல் நாகு இள ஆன் ஈனும்ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழக்கன்றுகொல்லை மடக்குல மான் மறியோடு குதித்து ஓடும்மல்கு வளத்தது முல்லை உடுத்த மருங்கு ஓர் பால்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கண் மலர் காவிகள் பாய இருப்பன கார் முல்லைத்தண் நகை வெண் முகை மேவும் சுரும்பு தடஞ் சாலிப்பண்ணை எழுங்கயல் பாய இருப்பன காயாவின்வண்ண நறுஞ்சினை மேவிய வன் சிறை வண்டானம்.
சொற்பிரிப்பு
கண்மலர் காவிகள் பாய இருப்பன கார் முல்லைத்தண்ணகை வெண்முகை மேவு சுரும்பு; தடம் சாலிப்பண்ணை எழும் கயல் பாய இருப்பன காயாவின்வண்ண நறும் சினை மேவிய வன்சிறை வண்டானம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் மேல் ஓடும்வெங்கதிர் தங்க விளங்கிய மேன்மழ நன்னாடாம்அங்கது மண்ணின் அருங்கலமாக அதற்கேயோர்மங்கல மானது மங்கலம் ஆகிய வாழ் மூதூர்.
சொற்பிரிப்பு
பொங்கரில் வண்டு புறம்பு அலை சோலைகள் மேலோடும்வெங்கதிர் தங்க விளங்கிய மேன் மழ நன்னாடாம்அங்கு அது மண்ணின் அருங்கலம் ஆக அதற்கே ஓர்மங்கலம் ஆனது மங்கலம் ஆகிய வாழ் மூதூர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஒப்பில் பெருங்குடி நீடிய தன்மையில் ஓவாமேதப்பில் வளங்கள் பெருக்கி அறம்புரி சால்போடும்செப்ப உயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர் மேவும்அப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர்.
சொற்பிரிப்பு
ஒப்பில் பெருங்குடி நீடிய தன்மையில் ஓவாமேதப்பில் வளங்கள் பெருக்கி அறம் புரி சால்போடும்செப்ப உயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர் மேவும்அப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார்தூய சுடர்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார்வாயினின் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப் பாலில்பேயுடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார்.
சொற்பிரிப்பு
ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார்;தூய சுடர்த் திருநீறு விரும்பு தொழும்பு உள்ளார்;வாயினின் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப்பாலில்பேய் உடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஆனிரை கூட அகன் புற வில் கொடு சென்று ஏறிக்கானுறை தீய விலங்குறு நோய்கள் கடிந்து எங்கும்தூநறு மென்புல் அருந்தி விரும்பிய தூ நீருண்டுஊனமில் ஆயம் உலப்பில பல்க அளித்து உள்ளார்.
சொற்பிரிப்பு
ஆன் நிரை கூட அகன் புறவில்கொடு சென்று ஏறிக்கான் உறை தீய விலங்கு,உறு நோய்கள் கடிந்து எங்கும்தூநறு மென்புல் அருந்தி விரும்பிய தூநீர் உண்டுஊனம் இல் ஆயம் உலப்பில பல்க அளித்து உள்ளார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

கன்றொடு பால் மறை நாகு கறப்பன பாலாவும்புன்றலை மென்சினை ஆனொடு நீடு புனிற்றாவும்வென்றி விடைக் குலமோடும் இனந்தொறும் வெவ்வேறேதுன்றி நிறைந்துள சூழல் உடன் பல தோழங்கள்.
சொற்பிரிப்பு
கன்றொடு பால்மறை நாகு, கறப்பன பால் ஆவும்,புன்தலை மென்சினை ஆனொடு, நீடு புனிற்று ஆவும்,வென்றி விடைக்குல மோடும், இனம் தொறும் வெவ்வேறேதுன்றி நிறைந்து உள சூழல் உடன் பல தோழங்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

ஆவின் நிரைக் குலம் அப்படி பல்க அளித்தென்றும்கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும்காவலர் தம் பெருமான் அடி அன்புறு கானத்தின்மேவு துளைக் கருவிக் குழல் வாசனை மேற்கொண்டார்.
சொற்பிரிப்பு
ஆவின் நிரைக்குலம் அப்படி பல்க அளித்து என்றும்கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும்காவலர் தம் பெருமான் அடி அன்புறு கானத்தின்மேவு துளைக்கருவிக் குழல் வாசனை மேற்கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

முந்தை மறை நூன்மரபின் மொழிந்த முறை எழுந்தவேய்அந்த முதல் நாலிரண்டில் அரிந்து நரம்புறு தானம்வந்ததுளை நிரையாக்கி வாயு முதல் வழங்கு துளைஅந்தமில் சீர் இடை ஈட்டின் அங்குலி எண் களின் அமைத்து.
சொற்பிரிப்பு
முந்தை மறை நூல் மரபின் மொழிந்த முறை எழுந்த வேய்அந்த முதல் நால் இரண்டில் அரிந்து நரம்பு உறு தானம்வந்த துளை நிரை ஆக்கி வாயு முதல் வழங்கு துளைஅந்தமில் சீர் இடை ஈட்டின் அங்குலி எண்களின் அமைத்து,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

எடுத்த குழற் கருவியினில் எம்பிரான் எழுத்து அஞ்சும்தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்துத்தடுத்தசரா சரங்களெலாம் தங்கவருந் தங்கருணைஅடுத்த இசை அமுது அளித்துச் செல்கின்றார் அங்கு ஒரு நாள்.
சொற்பிரிப்பு
எடுத்த குழல் கருவியினில் எம்பிரான் எழுத்து அஞ்சும்தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்துத்தடுத்த சர அசரங்கள் எலாம் தங்க வரும் தம் கருணைஅடுத்த இசை அமுது அளித்துச் செல்கின்றார். அங்கு ஒரு நாள்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

வாச மலர்ப் பிணை பொங்க மயிர் நுழுதி மருங்கு உயர்ந்ததேசுடைய சிகழிகையிற் செறி கண்ணித் தொடை செருகிப்பாசிலை மென் கொடியின் வடம் பயில நறு விலி புனைந்துகாசுடை நாண் அதற்கயலே கருஞ்சுருளின் புறங்கட்டி.
சொற்பிரிப்பு
வாசமலர்ப் பிணை பொங்க மயிர் நுழுதி, மருங்கு உயர்ந்ததேசு உடைய சிகழிகையில் செறி கண்ணித் தொடை செருகிப்பாசிலை மென் கொடியின் வடம் பயில நறுவிலி புனைந்துகாசு உடை நாண் அதற்கு அயலே கரும் சுருளின் புறம் கட்டி,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

வெண் கோடல் இலைச் சுருளிற் பைந்தோட்டு விரைத் தோன்றித்தண் கோல மலர் புனைந்த வடி காதின் ஒளி தயங்கத்திண் கோல நெற்றியின் மேல் திரு நீற்றின் ஒளி கண்டோர்கண் கோடல் நிறைந்தாராக் கவின் விளங்க மிசை அணிந்து.
சொற்பிரிப்பு
வெண்கோடல் இலைச்சுருளில் பைந்தோட்டு விரைத் தோன்றித்தண் கோல மலர் புனைந்த வடிகாதின் ஒளி தயங்கத்திண் கோல நெற்றியின் மேல் திருநீற்றின் ஒளி, கண்டோர்கண்கோடல் நிறைந்து ஆராக் கவின் விளங்க மிசை அணிந்து,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

நிறைந்த நீறு அணி மார்பின் நிரை முல்லை முகை சுருக்கிச்செறிந்த புனை வடம் தாழத் திரள் தோளின் புடை அலங்கல்அறைந்த சுரும்பு இசை அரும்ப அரையுடுத்த மரவுரியின்புறந்தழையின் மலி தானைப் பூம் பட்டுப் பொலிந்து அசைய.
சொற்பிரிப்பு
நிறைந்த நீறு அணி மார்பின் நிரை முல்லை முகை சுருக்கிச்செறிந்த புனை வடம் தாழத், திரள் தோளின் புடை அலங்கல்அறைந்த சுரும்பு இசை அரும்ப, அரை உடுத்த மர உரியின்புறம் தழையின் மலிதானைப் பூம்பட்டுப் பொலிந்து அசைய.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

சேவடியில் தொடு தோலும் செங்கையினில் வெண் கோலும்மேவும் இசை வேய்ங்குழலும் மிக விளங்க வினை செய்யும்காவல்புரி வல்லாயர் கன்றுடை ஆன் நிரை சூழப்பூவலர் தார்க் கோவலனார் நிரை காக்கப் புறம் போந்தார்.
சொற்பிரிப்பு
சேவடியில் தொடு தோலும் செங்கையினில் வெண் கோலும்மேவும் இசை வேய்ங்குழலும் மிக விளங்க, வினை செய்யும்காவல் புரி வல் ஆயர் கன்று உடை ஆன் நிரை சூழப்பூவலர் தார்க் கோவலனார் நிரை காக்கப் புறம் போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

நீலமா மஞ்ஞை ஏங்க நிரைக் கொடிப் புறவம் பாடக்கோல வெண் முகையேர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்டஆலு மின்னிடைச் சூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள்ஞால நீடு அரங்கில் ஆடக் கார் எனும் பருவ நல்லாள்.
சொற்பிரிப்பு
நீலமா மஞ்ஞை ஏங்க நிரைக்கொடிப் புறவம் பாடக்கோலவெண் முகை ஏர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்டஆலுமின் இடை சூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள்ஞால நீடு அரங்கில் ஆடக் கார் எனும் பருவ நல்லாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

எம்மருங்கு நிரை பரப்ப எடுத்த கோலுடைப் பொதுவர்தம்மருங்கு தொழுது அணையத் தண் புறவில் வருந்தலைவர்அம்மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மதுவுண்டுசெம்மருந்தண் சுரும்பு சுழல் செழுங் கொன்றை மருங்கு அணைந்தார்.
சொற்பிரிப்பு
எம்மருங்கும் நிரை பரப்ப எடுத்த கோல் உடைப் பொதுவர்தம்மருங்கு தொழுது அணையத் தண் புறவில் வரும் தலைவர்அம்மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மது உண்டுசெம்மருந் தண் சுரும்பு சுழல் செழும்கொன்றை மருங்கு அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

சென்றணைந்த ஆனாயர் செய்த விரைத் தாமம் எனமன்றல் மலர்த்துணர் தூக்கி மருங்குதாழ் சடையார் போல்நின்ற நறுங் கொன்றையினை நேர் நோக்கி நின்று உருகிஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர் பால் மடை திறந்தார்.
சொற்பிரிப்பு
சென்று அணைந்த ஆனாயர் செய்த விரைத் தாமம் எனமன்றல் மலர்த் துணர் தூக்கி மருங்கு தாழ் சடையார் போல்நின்ற நறும் கொன்றையினை நேர் நோக்கி நின்று உருகிஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர்பால் மடை திறந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

அன்பூறி மிசைப் பொங்கும் அமுத இசைக் குழல் ஒலியால்வன்பூதப் படையாளி எழுத்து ஐந்தும் வழுத்தித் தாம்முன்பூதி வரும் அளவின் முறைமையே எவ்வுயிரும்என்பூடு கரைந்து உருக்கும் இன்னிசை வேய்ங் கருவிகளில்.
சொற்பிரிப்பு
அன்பு ஊறி மிசைப்பொங்கும் அமுத இசைக் குழல் ஒலியால்வன்பூதப் படைஆளி எழுத்து ஐந்தும் வழுத்தித் தாம்முன்பு ஊதி வரும் அளவின் முறைமையே எவ்உயிரும்என்பு ஊடு கரைந்து உருக்கும் இன்இசை வேய்ங் கருவிகளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

ஏழு விரல் இடை இட்ட இன்னிசை வங்கியம் எடுத்துத்தாழுமலர் வரிவண்டு தாது பிடிப்பன போலச்சூழுமுரன்று எழ நின்று தூய பெரும் தனித் துளையில்வாழிய நந்தோன்றலார் மணி அதரம் வைத்தூத.
சொற்பிரிப்பு
ஏழுவிரல் இடை இட்ட இன்இசை வங்கியம் எடுத்துத்தாழுமலர் வரிவண்டு தாது பிடிப்பன போலச்சூழு முரன்று எழ நின்று தூய பெரும் தனித்துளையில்வாழிய நம் தோன்றலார் மணி அதரம் வைத்து ஊத.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

முத்திரையே முதல் அனைத்தும் முறைத் தானம் சோதித்துவைத்த துளை ஆராய்ச்சி வக்கரனை வழி போக்கிஒத்த நிலை உணர்ந்து அதற்பின் ஒன்று முதல்படி முறையாம்அத்தகைமை யாரோசை அமரோசைகளின் அமைத்தார்.
சொற்பிரிப்பு
முத்திரையே முதல் அனைத்தும் முறைத் தானம் சோதித்துவைத்த துளை ஆராய்ச்சி வக்கரனை வழி போக்கிஒத்த நிலை உணர்ந்ததற் பின் ஒன்று முதல் படிமுறையாம்அத்தகைமை ஆரோசை அமரோசைகளின் அமைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

மாறுமுதற் பண்ணின் பின் வளர் முல்லைப் பண்ணாக்கிஏறிய தாரமும் உழையும் கிழமை கொள இடுந்தானம்ஆறுலவுஞ் சடை முடியார் அஞ்செழுத்தின் இசை பெருகக்கூறிய பட்டடைக் குரலாங் கொடிப் பாலையினில் நிறுத்தி.
சொற்பிரிப்பு
மாறுமுதல் பண்ணின் பின் வளர் முல்லைப் பண் ஆக்கிஏறிய தாரமும் உழையும் கிழமைகொள இடும் தானம்ஆறு உலவும் சடைமுடியார் அஞ்செழுத்தின் இசை பெருகக்கூறிய பட்டடைக் குரலாம் கொடிப்பாலையினில் நிறுத்தி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

ஆய இசைப் புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்துமேய துளை பற்றுவன விடுபனவாம் விரல் நிரையிற்சேய வொளியிடை அலையத் திருவாளன் எழுத்தஞ்சும்தூய இசைக் கிளை கொள்ளுந் துறையஞ்சின் முறை விளைத்தார்.
சொற்பிரிப்பு
ஆய இசைப் புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்துமேய துளை பற்றுவன விடுப்பனவாம் விரல் நிரையில்சேய ஒளி இடை அலையத் திருவாளன் எழுத்து அஞ்சும்தூய இசைக் கிளை கொள்ளும் துறை அஞ்சின் முறை விளைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன் முறையால்தந்திரிகள் மெலிவித்தும் சமங்கொண்டும் வலிவித்தும்அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்தியக்கிச்சுந்தரச் செங்கனிவாயும் துளைவாயும் தொடக்குண்ண.
சொற்பிரிப்பு
மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன்முறையால்தந்திரிகள் மெலிவித்தும் சமம் கொண்டும் வலிவித்தும்அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்து இயக்கிச்சுந்தரச் செங்கனிவாயும் துளைவாயும் தொடக்கு உண்ண.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

எண்ணிய நூல் பெருவண்ணம் இடை வண்ணம் வனப்பென்னும்வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில்நண்ணிய பாணியும் இயலும் தூக்கு நடை முதற்கதியில்பண்ணமைய எழும் ஓசை எம் மருங்கும் பரப்பினார்.
சொற்பிரிப்பு
எண்ணிய நூல் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பு என்னும்வண்ண இசை வகை எல்லாம் மாதுரிய நாதத்தில்நண்ணிய பாணியும் இயலும் தூக்கு நடை முதல்கதியில்பண் அமைய எழும் ஓசை எம்மருங்கும் பரப்பினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

வள்ளலார் வாசிக்கும் மணித் துளைவாய் வேய்ங் குழலின்உள்ளுறை அஞ்செழுத்தாக ஒழுகியெழு மதுர ஒலிவெள்ளநிறைந்து எவ்வுயிர்க்கும் மேல் அமரர் தருவிளை தேன்தெள்ளமுதின் உடன் கலந்து செவி வார்ப்பது எனத் தேக்க.
சொற்பிரிப்பு
வள்ளலார் வாசிக்கும் மணித்துளைவாய் வேய்ங்குழலின்உள் உறை அஞ்செழுத்து ஆக ஒழுகி எழு மதுர ஒலிவெள்ளம் நிறைந்து, எவ்உயிர்க்கும் மேல் அமரர் தருவிளைதேன்தெள்அமுதின் உடன்கலந்து செவி வார்ப்பது எனத் தேக்க;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

ஆனிரைகள் அறுகருந்தி அசை விடாது அணைந்து அயரப்பால் நுரை வாய்த் தாய் முலையில் பற்றும் இளங்கன்று இனமும்தான் உணவு மறந்து ஒழியத் தட மருப்பின் விடைக் குலமும்மான் முதலாம் கான் விலங்கும் மயிர் முகிழ்த்து வந்து அணைய.
சொற்பிரிப்பு
ஆன்நிரைகள் அறுகு அருந்தி அசைவிடாது அணைந்து அயரப்,பால்நுரைவாய்த் தாய்முலையில் பற்றும் இளம் கன்று இனமும்தான் உணவு மறந்து ஒழியத், தடமருப்பின் விடைக்குலமும்மான் முதலாம் கான் விலங்கும் மயிர் முகிழ்த்து வந்து அணைய.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கணுகஊடுசெவி இசை நிறைந்த உள்ளமொடு புள்ளினமும்மாடுபடிந்து உணர்வு ஒழிய மருங்கு தொழில் புரிந்து ஒழுகும்கூடியவண் கோவலரும் குறை வினையின் துறை நின்றார்.
சொற்பிரிப்பு
ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கு அணுகஊடு செவி இசை நிறைந்த உள்ளமொடு புள் இனமும்மாடு படிந்து உணர்வு ஒழிய, மருங்கு தொழில் புரிந்து ஒழுகும்கூடிய வண் கோவலரும் குறைவினையின் துறை நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார்மணிவரை வாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார்தணிவில் ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர்அணிவிசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார்.
சொற்பிரிப்பு
பணி புவனங்களில் உள்ளார் பயில்பிலங்கள் வழி அணைந்தார்;மணிவரை வாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார்;தணிவில் ஒளி விஞ்சையர்கள், சாரணர், கின்னரர், அமரர்அணிவிசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

சுரமகளிர் கற்பகப் பூஞ்சோலைகளின் மருங்கிருந்துகர மலரின் அமுது ஊட்டும் கனி வாய் மென் கிள்ளையுடன்விரவு நறுங்குழல் அலைய விமானங்கள் விரைந்து ஏறிப்பரவிய ஏழிசை அமுதம் செவி மடுத்துப் பருகினார்.
சொற்பிரிப்பு
சுரமகளிர் கற்பகப் பூஞ் சோலைகளின் மருங்கு இருந்துகரமலரின் அமுது ஊட்டும் கனிவாய் மென் கிள்ளை உடன்விரவு நறும் குழல் அலைய விமானங்கள் விரைந்து ஏறிப்பரவிய ஏழ் இசை அமுதம் செவி மடுத்துப் பருகினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்திலினால்மலிவாய்வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும்சலியாத நிலை அரியும் தடம் கரியும் உடன் சாரும்புலி வாயின் மருங்கு அணையும் புல்வாய புல்வாயும்.
சொற்பிரிப்பு
நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்தலினால்மலிவாய் வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும்;சலியாத நிலை அரியும் தடங்கரியும் உடன்சாரும்;புலி வாயின் மருங்கு அணையும் புல் வாய புல்வாயும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

மருவிய கால் விசைத்து அசையா மரங்கள் மலர்ச் சினை சலியாகருவரை வீழ் அருவிகளும் கான்யாறும் கலித்து ஓடாபெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழியப் புனல் சோராஇரு விசும்பின் இடை முழங்கா எழுகடலும் இடை துளும்பா.
சொற்பிரிப்பு
மருவிய கால் விசைத்து அசையா; மரங்கள் மலர்ச் சினை சலியா;கருவரைவீ ழ் அருவிகளும் கான்யாறும் கலித்து ஓடா;பெருமுகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழியப் புனல் சோரா;இருவிசும்பின் இடை முழங்கா; எழுகடலும் இடை துளும்பா.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

இவ்வாறு நிற்பனமும் சரிப்பனவும் இசை மயமாய்மெய் வாழும் புலன் கரண மேவிய ஒன்று ஆயினவால்மொய்வாச நறுங்கொன்றை முடிச் சடையார் அடித் தொண்டர்செவ்வாயின் மிசை வைத்த திருக்குழல் வாசனை உருக்க.
சொற்பிரிப்பு
இவ்வாறு நிற்பனவும் சரிப்பனவும் இசை மயமாய்மெய்வாழும் புலன் கரண மேவி ஒன்று ஆயினவால்மொய் வாச நறுங்கொன்றை முடிச்சடையார் அடித்தொண்டர்செவ்வாயின் மிசை வைத்த திருக்குழல் வாசனை உருக்க.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

மெய்யன்பர் மனத்து அன்பின் விளைந்த இசைக் குழல் ஓசைவையம் தன்னையும் நிறைத்து வானம் தன் வயமாக்கிப்பொய் அன்புக்கு எட்டாத பொற் பொதுவில் நடம் புரியும்ஐயன் தன் திருச் செவியின் அருகணையப் பெருகியதால்.
சொற்பிரிப்பு
மெய் அன்பர் மனத்து அன்பின் விளைந்த இசைக் குழல் ஓசைவையம் தன்னையும் நிறைத்து வானம் தன் வயம் ஆக்கிப்பொய் அன்புக்கு எட்டாத பொற்பொதுவில் நடம்புரியும்ஐயன் தன் திருச்செவியின் அருகு அணையப் பெருகியதால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

38

ஆனாயர் குழல் ஓசை கேட்டு அருளி அருள் கருணைதானாய திரு உள்ளம் உடைய தவ வல்லியுடன்கானாதி காரணராம் கண்ணுதலார் விடையுகைத்துவானாறு வந்தணைந்தார் மதி நாறுஞ் சடை தாழ.
சொற்பிரிப்பு
ஆனாயர் குழல்ஓசை கேட்டருளி அருள் கருணைதானாய திருஉள்ளம் உடைய தவவல்லி உடன்கானாதி காரணராம் கண்நுதலார் விடை உகைத்துவானாறு வந்து அணைந்தார் மதிநாறும் சடைதாழ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

39

திசை முழுதுங் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கிமிசை மிடைந்து வரும் பொழுது வேற்று ஒலிகள் விரவாமேஅசைய எழுங்குழல் நாதத்து அஞ்செழுத்தால் தமைப் பரவும்இசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர் நின்றார்.
சொற்பிரிப்பு
திசை முழுதும் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கிமிசை மிடைந்து வரும்பொழுது வேற்று ஒலிகள் விரவாமேஅசைய எழும் குழல் நாதத்து அஞ்செழுத்தால் தமைப் பரவும்இசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர் நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

40

முன் நின்ற மழவிடை மேல் முதல்வனார் எப்பொழுதும்செந்நின்ற மனப் பெரியோர் திருக் குழல் வாசனை கேட்கஇந்நின்ற நிலையே நம்பால் அணைவாய் என அவரும்அந்நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திரு மருங்கு அணைந்தார்.
சொற்பிரிப்பு
முன் நின்ற மழவிடை மேல் முதல்வனார் எப்பொழுதும்செந்நின்ற மனப் பெரியோர் திருக்குழல் வாசனை கேட்க“இந்நின்ற நிலையே நம் பால் அணைவாய்” என அவரும்அந்நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திருமருங்கு அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

41

விண்ணவர்கள் மலர் மாரி மிடைந்து உலகமிசை விளங்கஎண்ணில் அருமுனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்தஅண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்லப்புண்ணியனார் எழுந்து அருளிப் பொற் பொதுவின் இடைப் புக்கார்.
சொற்பிரிப்பு
விண்ணவர்கள் மலர்மாரி மிடைந்து உலக மிசை விளங்கஎண்ணில் அரு முனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்தஅண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்லப்புண்ணியனார் எழுந்தருளிப் பொற்பொதுவின் இடைப்புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

42

தீது கொள் வினைக்கு வாரோம் செஞ்சடைக் கூத்தர் தம்மைக்காது கொள் குழைகள் வீசும் கதிர் நிலவு இருள் கால் சீப்பமாது கொள் புலவி நீக்க மனையிடை இரு கால் செல்லத்தூது கொள்பவராம் நம்மைத் தொழும்பு கொண்டு உரிமை கொள்வார்.இலை மலிந்த சருக்கம் முற்றிற்று
சொற்பிரிப்பு
தீது கொள் வினைக்கு வாரோம் செஞ்சடைக் கூத்தர் தம்மைக்காது கொள் குழைகள் வீசும் கதிர் நிலவு இருள்கால் சீப்பமாது கொள் புலவி நீக்க மனை இடை இருகால் செல்லத்தூது கொள்பவராம் நம்மைத் தொழும்பு கொண்டு உரிமை கொள்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.