திருமுறை 12 · 12.019 · 23

அரிவாட்டாய நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

வரும் புனற்பொன்னி நாட்டு ஒரு வாழ்பதிசுரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிடவிரும்பு மென்கண் உடையவாய் விட்டு நீள்கரும்பு தேன் சொரியும் கணமங்கலம்.
சொற்பிரிப்பு
வரும் புனல் பொன்னி நாட்டு ஒரு வாழ்பதிசுரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிடவிரும்பு மென் கண் உடையவாய் விட்டு நீள்கரும்பு தேன் பொழியும் கண மங்கலம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

செந்நெல்லார் வயல் கட்ட செந்தாமரைமுன்னர் நந்துமிழ் முத்தம் சொரிந்திடத்துன்னு மள்ளர் கைம் மேற் கொண்டு தோன்றுவார்மன்னு பங்கய மாநிதி போன்றுள்ளார்.
சொற்பிரிப்பு
செந்நெல் ஆர்வயல் கட்ட செந்தாமரைமுன்னர் நந்து உமிழ் முத்தம் சொரிந்திடத்துன்னு மள்ளர் கைம் மேல்கொண்டு தோன்றுவார்மன்னு பங்கய மாநிதி போன்று உள்ளார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வளத்தில் நீடும் பதியதன் கண்வரிஉளர்த்தும் ஐம்பால் உடையோர் முகத்தினும்களத்தின் மீதும் கயல்பாய் வயல் அயல்குளத்தும் நீளும் குழையுடை நீலங்கள்.
சொற்பிரிப்பு
வளத்தின் நீடும் பதி அதன் கண் வரிஉளர்த்தும் ஐம்பால் உடையோர் முகத்தினும்களத்தின் மீதும், கயல் பாய் வயல் அயல்குளத்தும், நீளும் குழை உடை நீலங்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அக்குலப் பதி தன்னில் அறநெறித்தக்க மாமனை வாழ்க்கையில் தங்கினார்தொக்க மாநிதித் தொன்மையில் ஓங்கியமிக்க செல்வத்து வேளாண் தலைமையார்.
சொற்பிரிப்பு
அக்குலப்பதி தன்னில் அறநெறித்தக்க மாமனை வாழ்க்கையில் தங்கினார்தொக்க மாநிதித் தொன்மையில் ஓங்கியமிக்க செல்வத்து வேளாண் தலைமையார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

தாயனார் எனும் நாமம் தரித்துளார்சேய காலந் தொடர்ந்துந் தெளிவிலாமாயனார் மண் கிளைத்து அறியாத அத்தூய நாண் மலர்ப் பாதம் தொடர்ந்துளார்.
சொற்பிரிப்பு
தாயனார் எனும் நாமம் தரித்து உளார்;சேய காலம் தொடர்ந்தும் தெளிவு இலாமாயனார் மண் கிளைத்தும் அறியாத அத்தூய நாண்மலர்ப் பாதம் தொடர்ந்து உளார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மின்னும் செஞ்சடை வேதியர்க்காம் என்றுசெந் நெல் இன்னமுதோடு செங்கீரையும்மன்னு பைந்துணர் மாவடுவும் கொணர்ந்துஅன்ன என்றும் அமுது செய்விப்பாரால்.
சொற்பிரிப்பு
மின்னு செஞ்சடை வேதியர்க்கு ஆம் என்றுசெந்நெல் இன் அமுதோடு செங்கீரையும்மன்னு பைந்துணர் மாவடுவும் கொணர்ந்துஅன்ன என்றும் அமுது செய்விப்பரால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

இந்த நன்னிலை இன்னல் வந்து எய்தினும்சிந்தை நீங்காச் செயலின் உவந்திடமுந்தை வேத முதல்வர் அவர் வழிவந்த செல்வம் அறியாமை மாற்றினார்.
சொற்பிரிப்பு
இந்த நன்னிலை இன்னல் வந்து எய்தினும்சிந்தை நீங்காச் செயலின் உவந்திடமுந்தை வேத முதல்வர் அவர் வழிவந்த செல்வம் அறியாமை மாற்றினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மேவு செல்வம் களிறு உண் விளங்கனிஆவதாகி அழியவும் அன்பினால்பாவை பங்கர்க்கு முன்பு பயின்ற அத்தாவில் செய்கை தவிர்ந்திலர் தாயனார்.
சொற்பிரிப்பு
மேவு செல்வம் களிறு உண் விளங்கனிஆவது ஆகி அழியவும் அன்பினால்பாவை பங்கர்க்கு முன்பு பயின்ற அத்தாவில் செய்கை தவிர்ந்திலர் நாயனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அல்லல் நல்குரவு ஆயிடக் கூலிக்குநெல் அறுத்து மெய்ந் நீடிய அன்பினால்நல்ல செந்நெலிற் பெற்றன நாயனார்க்குஒல்லை இன்னமுதாக் கொண்டு ஒழுகுவார்.
சொற்பிரிப்பு
அல்லல் நல்குரவு ஆயிடக் கூலிக்குநெல் அறுத்து மெய்ந் நீடிய அன்பினால்நல்ல செந்நெலில் பெற்றன நாயனார்க்குஒல்லை இன் அமுதாக் கொண்டு ஒழுகுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

சாலி தேடி அறுத்தவை தாம் பெறும்கூலி எல்லாம் திரு அமுதாக் கொண்டுநீல நெல்லரி கூலி கொண்டு உண்ணும் நாள்மால் அயற்கு அரியார் அது மாற்றுவார்.
சொற்பிரிப்பு
சாலி தேடி அறுத்து அவை தாம் பெறும்கூலி எல்லாம் திரு அமுதாக் கொண்டுநீல நெல் அரிசி கூலி கொண்டு உண்ணும் நாள்மால் அயற்கு அரியார் அது மாற்றுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

நண்ணிய வயல்கள் எல்லாம் நாள் தொறும் முன்னம் காணவண்ணவார் கதிர்ச் செஞ்சாலி ஆக்கிட மகிழ்ந்து சிந்தைஅண்ணலார் அறுத்த கூலி கொண்டு இஃது அடியேன் செய்தபுண்ணியம் என்று போத அமுது செய்விப்பார் ஆனார்.
சொற்பிரிப்பு
நண்ணிய வயல்கள் எல்லாம் நாள்தொறும் முன்னம் காணவண்ணவார் கதிர்ச் செஞ்சாலிஆக்கிட, மகிழ்ந்து சிந்தைஅண்ணலார் அறுத்த கூலி கொண்டு, இஃது அடியேன் செய்தபுண்ணியம் என்று போத அமுது செய்விப்பார் ஆனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

வைகலும் உணவு இலாமை மனைப் படப்பையினிற் புக்குநைகரம் இல்லா அன்பின் நங்கை கைஅடகு** கொய்துபெய்கலத்து அமைத்து வைக்கப் பெருந்தகை அருந்தித் தங்கள்செய்கடன் முட்டா வண்ணந் திருப்பணி செய்யும் நாளில்.( ** நங்கையார் அடகு கொய்து" என்றும் பாடம் )
சொற்பிரிப்பு
வைகலும் உணவிலாமை மனைப்படப் பையினில் புக்குநைகரம் இல்லா அன்பின் நங்கை கை அடகு கொய்துபெய்கலத்து அமைத்து வைக்கப் பெருந்தகை அருந்தித் தங்கள்செய்கடன் முட்டா வண்ணம் திருப்பணி செய்யும் நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

மனை மருங்கு அடகு மாள வட நெடு வான மீனேஅனையவர் தண்ணீர் வார்க்க அமுது செய்து அன்பனாரும்வினை செயல் முடித்துச் செல்ல மேவு நாள் ஒருநாள் மிக்கமுனைவனார் தொண்டர்க்கு அங்கு நிகழ்ந்தது மொழியப் பெற்றேன்.
சொற்பிரிப்பு
மனைமருங்கு அடகு மாள வட நெடு வான மீனேஅனையவர் தண்ணீர் வார்க்க அமுது செய்து அன்பனாரும்வினைசெயல் முடித்துச் செல்ல மேவுநாள் ஒருநாள் மிக்கமுனைவனார் தொண்டர்க்கு அங்கு நிகழ்ந்தது மொழியப் பெற்றேன்.

14

முன்பு போல் முதல்வனாரை அமுது செய்விக்க மூளும்அன்பு போல் தூய செந்நெல் அரிசி மாவடு மென் கீரைதுன்புபோம் மனத்துத் தொண்டர் கூடையில் சுமந்து போகப்பின்புபோம் மனைவியார் ஆன் பெற்ற அஞ்சு ஏந்திச் சென்றார்.
சொற்பிரிப்பு
முன்பு போல் முதல்வனாரை அமுது செய்விக்க மூளும்அன்பு போல் தூய செந்நெல் அரிசி, மாவடு, மென் கீரைதுன்பு போம் மனத்துத் தொண்டர் கூடையில் சுமந்து போகப்பின்பு போம் மனைவியார் ஆன் பெற்ற அஞ்சு ஏந்திச் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

போதரா நின்ற போது புலர்ந்து கால் தளர்ந்து தப்பிமாதரார் வருந்தி வீழ்வார் மட்கல மூடுகையால்காதலால் அணைத்தும் எல்லாம் கமரிடைச் சிந்தக் கண்டுபூதநாயகர் தம் தொண்டர் போவது அங்கு இனி ஏன் என்று.
சொற்பிரிப்பு
போதராநின்ற போது புலர்ந்துகால் தளர்ந்து தப்பிமாதரார் வருந்தி வீழ்வார் மட்கலம் மூடு கையால்காதலால் அணைத்தும் எல்லாம் கமர் இடைச் சிந்தக் கண்டுபூத நாயகர் தம் தொண்டர் “போவது அங்கு இனி ஏன்?” என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

நல்ல செங்கீரை தூய மாவடு அரிசி சிந்தஅல்லல் தீர்த்தாள வல்லார் அமுது செய்து அருளும் அப்பேறுஎல்லையில் தீமையேன் இங்கு எய்திடப் பெற்றிலேன் என்றுஒல்லையில் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார்.
சொற்பிரிப்பு
நல்ல செங்கீரை தூய மாவடு, அரிசி சிந்த,“அல்லல் தீர்த்து ஆள வல்லார் அமுது செய்து அருளும் அப்பேறுஎல்லையில் தீமையேன் இங்கு எய்திடப் பெற்றிலேன்” என்றுஒல்லையில் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

ஆட் கொள்ளும் ஐயர் தாம் இங்கு அமுது செய்திலர் கொல் என்னாப்பூட்டிய அரிவாள் பற்றிப் புரையற விரவும் அன்புகாட்டிய நெறியின் உள்ளந் தண்டு அறக் கழுத்தினோடேஊட்டியும் அரியா நின்றார் உறுபிறப் பரிவார் ஒத்தார்.
சொற்பிரிப்பு
“ஆட்கொளும் ஐயர் தாம் இங்கு அமுது செய்திலர்கொல்” என்னாப்பூட்டிய அரிவாள் பற்றிப் புரை அற விரவும் அன்புகாட்டிய நெறியின் உள்ளம் தண்டு அறக் கழுத்தினோடேஊட்டியும் அரியா நின்றார் உறு பிறப்பு அரிவார் ஒத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

மாசறு சிந்தை அன்பர் கழுத்து அரி அரிவாள் பற்றும்ஆசில்வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர்வீசிய செய்ய கையும் மாவடு விடேல் விடேல் என்றஓசையும் கமரில் நின்றும் ஒக்கவே எழுந்த அன்றே.
சொற்பிரிப்பு
மாசு அறு சிந்தை அன்பர் கழுத்து அரி அரிவாள் பற்றும்ஆசில் வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர்வீசிய செய்ய கையும், மாவடு “விடேல் விடேல்” என்ஓசையும், கமரில் நின்றும் ஒக்கவே எழுந்த அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

திருக்கை சென்று அரிவாள் பற்றும் திண் கையைப் பிடித்த போதுவெருக்கொடங் கூறு நீங்க வெவ் வினை விட்டு நீங்கிப்பெருக்கவே மகிழ்ச்சி நீடத் தம்பிரான் பேணித் தந்தஅருட் பெரும் கருணை நோக்கி அஞ்சலி கூப்பி நின்று.
சொற்பிரிப்பு
திருக்கை சென்று அரிவாள் பற்றும் திண் கையைப் பிடித்த போதுவெருக்கொடு அங்கு ஊறு நீங்க வெவ்வினை விட்டு நீங்கிப்பெருக்கவே மகிழ்ச்சி நீடத்,தம்பிரான் பேணித் தந்தஅருட்பெருங் கருணை நோக்கி, அஞ்சலி கூப்பி நின்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

அடியனேன் அறிவு இலாமை கண்டும் என் அடிமை வேண்டிப்படி மிசைக் கமரில் வந்து இங்கு அமுது செய் பரனே போற்றிதுடியிடை பாக மான தூயநற் சோதி போற்றிபொடியணி பவள மேனிப் புரி சடைப் புராண போற்றி.
சொற்பிரிப்பு
அடியனேன் அறிவிலாமை கண்டும் என் அடிமை வேண்டிப்படிமிசைக் கமரில் வந்து இங்கு அமுது செய் பரனே போற்றி!துடி இடை பாகம் ஆன தூய நல் சோதி போற்றிபொடி அணி பவள மேனிப் புரிசடைப் புராண போற்றி!”
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

என்றவர் போற்றி செய்ய இடப வாகனராய்த் தோன்றிநன்று நீ புரிந்த செய்கை நன்னுதல் உடனே கூடஎன்றும்** நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ணமன்றுளே ஆடும் ஐயர் மழ விடை உகைத்துச் சென்றார்.( ** ஒன்றி நம் உலகில் என்றும் பாடம் )
சொற்பிரிப்பு
என்று அவர் போற்றி செய்ய இடப வாகனராய்த் தோன்றி“நன்று நீ புரிந்த செய்கை; நல்நுதல் உடனே கூடஎன்றும் நம் உலகில் வாழ்வாய்” என்று அவர் உடனே நண்ணமன்று உளே ஆடும் ஐயர் மழவிடை உகைத்துச் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

பரிவு உறு சிந்தை அன்பர் பரம் பொருளாகி உள்ளபெரியவர் அமுது செய்யப் பெற்றிலேன் என்று மாவின்வரிவடு விடேலெனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டிஅரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம்.
சொற்பிரிப்பு
பரிவு உறு சிந்தை அன்பர் பரம்பொருள் ஆகி உள்ளபெரியவர் அமுது செய்யப் பெற்றிலேன் என்று, மாவின்வரிவடு விடேல் எனாமுன், வன் கழுத்து அரிவாள் பூட்டிஅரிதலால் “அரிவாட்டாயர்” ஆயினார் தூய நாமம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

முன்னிலை கமரே யாக முதல்வனார் அமுது செய்யச்செந்நெலின் அரிசி சிந்தச் செவியுற வடுவின் ஓசைஅந் நிலை கேட்ட தொண்டர் அடி இணை தொழுது வாழ்த்திமன்னும் ஆனாயர் செய்கை அறிந்தவா வழுத்தல் உற்றேன்.
சொற்பிரிப்பு
முன்னிலை கமரே ஆக முதல்வனார் அமுது செய்யச்செந்நெலின் அரிசி சிந்தச் செவி உற வடுவின் ஓசைஅந்நிலை கேட்ட தொண்டர் அடி இணை தொழுது வாழ்த்திமன்னும் ஆனாயர் செய்கை அறிந்தவா வழுத்தல் உற்றேன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.