1
மேலாறு செஞ்சடை மேல் வைத்தவர் தாம் விரும்பியதுநூலாறு நன்கு உணர்வார் தாம் பாடு நோன்மையதுகோலாறு தேன் பொழியக் கொழுங் கனியின் சாறு ஒழுகும்காலாறு வயல் கரும்பின் கமழ் சாறூர் கஞ்சாறூர்.
சொற்பிரிப்பு
மேல் ஆறு செஞ்சடை மேல் வைத்தவர் தாம் விரும்பியதுநூல் ஆறு நன்கு உணர்வார் தாம் பாடும் நோன்மையதுகோல் ஆறு தேன் பொழியக் கொழுங்கனியின் சாறு ஒழுகும்கால் ஆறு வயல் கரும்பின் கமழ் சாறு ஊர் கஞ்சாறூர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
கண்ணீலக் கடைசியர்கள் கடுங்களையிற் பிழைத்து ஒதுங்கிஉண்ணீர்மைப் புணர்ச்சிக் கண் உறைத்து மலர்க்கண் சிவக்கும்தண்ணீர் மென் கழுநீர்க்குத் தடஞ்சாலி தலை வணங்கும்மண்ணீர்மை நலஞ்சிறந்த வள வயல்கள் உள அயல்கள்.
சொற்பிரிப்பு
கண் நீலக் கடைசியர்கள் கடுங்களையில் பிழைத்து ஒதுங்கிஉள் நீர்மைப் புணர்ச்சிக்கண் உறைத்து மலர்க் கண்சிவக்கும்தண்ணீர் மென் கழுநீர்க்குத் தடஞ்சாலி தலை வணங்கும்மண் நீர்மை நலம் சிறந்த வளவயல்கள் உள அயல்கள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
புயல் காட்டுங் கூந்தல் சிறு புறங்காட்டப் புன மயிலின்இயல் காட்டி இடை ஒதுங்க இனங்காட்டும் உழத்தியர்கண்முயல் காட்டும் மதி தோற்கும் முகம் காட்டக் கண் மூரிக்கயல் காட்டுந் தடங்கள் பல கதிர்காட்டுந் தடம் பணைகள்.
சொற்பிரிப்பு
புயல் காட்டும் கூந்தல் சிறு புறம் காட்டப் புனமயிலின்இயல்காட்டி இடை ஒதுங்க இனம் காட்டும் உழத்தியர்கள்முயல் காட்டும் மதி தோற்கும் முகம் காட்டக் கண்மூரிக்கயல் காட்டும் தடங்கள் பல கதிர்காட்டும் தடம்பணைகள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
சேறணி தண் பழன வயல் செழுநெல்லின் கொழுங் கதிர் போய்வேறருகு மிடை வேலிப் பைங்கமுகின் மிடறுரிஞ்சிமாறெழுதிண் குலை வளைப்ப வண்டலை தண்டலை உழவர்தாறரியும் நெடுங்கொடுவாள் அனையயுள தனி இடங்கள்.
சொற்பிரிப்பு
சேறு அணி தண் பழன வயல் செழுநெல்லின் கொழும் கதிர்போய்வேறு அருகு மிடைவேலிப் பைங்கமுகின் மிடறு உரிஞ்சிமாறு எழு திண் குலை வளைப்ப வண்டலை தண்டலை உழவர்தாறு அரியும் நெடும் கொடுவாள் அனைய உள தனி இடங்கள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
பாங்கு மணிப்பல வெயிலும் சுலவெயிலும் உள மாடம்ஞாங்கரணி துகிற் கொடியும் நகிற் கொடியும் உள அரங்கம்ஓங்கு நிலைத் தோரணமும் பூரண கும்பமும் உளவால்பூம் கணை வீதியில் அணைவோர் புலமறுகுஞ் சிலமறுகு.
சொற்பிரிப்பு
பாங்கின் மணிப் பல வெயிலும் சுலவு எயிலும் உளமாடம்;ஞாங்கர் அணி துகில் கொடியும் நகில் கொடியும் உள அரங்கம்;ஓங்கு நிலைத் தோரணமும் பூரணகும்பமும் உளவால்பூங்கணை வீதியில் அணைவோர் புலம் மறுகும் சில மறுகு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
மனை சாலும் நிலை அறத்தின் வழிவந்த வளம் பெருகும்வினை சாலும் உழவு தொழில் மிக்க பெரும் குடி துவன்றிப்புனை சாயல் மயில் அனையார் நடம் புரியப் புகல் முழவம்கனை சாறு மிடை வீதிக் கஞ்சாறு விளங்கியதால்.
சொற்பிரிப்பு
மனை சாலும் நிலை அறத்தின் வழிவந்த வளம் பெருகும்வினை சாலும் உழவு தொழில் மிக்க பெருங்குடி துவன்றிப்புனைசாயல் மயில் அனையார் நடம் புரியப் புகல் முழவம்கனைசாறு மிடை வீதிக் கஞ்சாறு விளங்கியதால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
அப் பதியில் குலப் பதியாய் அரசர் சேனா பதியாம்செப்பவருங் குடி விளங்க திரு அவதாரம் செய்தார்மெய்ப் பொருளை அறிந்து உணர்ந்தார் விழுமிய வேளாண் குடிமைவைப்பனைய மேன்மையினார் மானக்கஞ் சாறனார்.
சொற்பிரிப்பு
அப்பதியில் குலப்பதியாய் அரசர் சேனாபதியாம்செப்ப வரும் குடி விளங்கத் திரு அவதாரஞ் செய்தார்மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்தார் விழுமிய வேளாண் குடிமைவைப்பு அனைய மேன்மையினார் மானக் கஞ்சாறனார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
பணிவுடைய வடிவுடையார் பணியினொடும் பனி மதியின்அணிவுடைய சடை முடியார்க்கு ஆளாகும் பதம் பெற்றதணிவில் பெரும் பேறுடையார் தம் பெருமான் கழல் சார்ந்ததுணிவுடைய தொண்டர்க்கே ஏவல் செயும் தொழில் பூண்டார்.
சொற்பிரிப்பு
பணிவு உடைய வடிவு உடையார்; பணியினொடும் பனிமதியின்அணிவு உடைய சடைமுடியார்க்கு ஆள் ஆகும் பதம் பெற்றதணிவு இல் பெரும் பேறு உடையார்; தம்பெருமான் கழல் சார்ந்ததுணிவு உடைய தொண்டர்க்கே ஏவல்செயும் தொழில் பூண்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
மாறில் பெருஞ்செல்வத்தின் வளம் பெருக மற்றதெலாம்ஆறுலவுஞ் சடைக் கற்றை அந்தணர் தம் அடியாராம்ஈறில் பெருந் திருவுடையார் உடையார் என்றியாவையுநேர்கூறுவதன்முன் அவர் தங்குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார்.
சொற்பிரிப்பு
மாறில் பெரும் செல்வத்து வளம் பெருக மற்றது எலாம்ஆறு உலவும் சடைக்கற்றை அந்தணர் தம் அடியாராம்ஈறில் பெரும் திருஉடையார் உடையார் என்று யாவையும் நேர்கூறுவதன் முன் அவர் தம் குறிப்பு அறிந்து கொடுத்து உள்ளார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
விரிகடல் சூழ் மண்ணுலகை விளக்கிய இத் தன்மையராம்பெரியவர்க்கு முன் சில நாள் பிள்ளைப் பேறு இன்மையினால்அரியறியா மலர்க் கழல்கள் அறியாமை அரியாதார்வரு மகவு பெறல் பொருட்டு மனத்தருளால் வழுத்தினார்.
சொற்பிரிப்பு
விரிகடல் சூழ் மண் உலகை விளக்கிய இத் தன்மையராம்பெரியவர்க்கு முன் சிலநாள் பிள்ளைப்பேறு இன்மையினால்அரி அறியா மலர்க்கழல்கள் அறியாமை அறியாதார்வரு மகவு பெறல் பொருட்டு மனத்து அருளால் வழுத்தினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
குழைக் கலையும் வடி காதில் கூத்தனார் அருளாலேமழைக்கு உதவும் பெருங்கற்பின் மனைக் கிழத்தியார் தம்பால்இழைக்கும் வினைப் பயன் சூழ்ந்த இப் பிறவிக் கொடுஞ்சூழல்பிழைக்கும் நெறி தமக்கு உதவப் பெண் கொடியைப் பெற்று எடுத்தார்.
சொற்பிரிப்பு
குழைக்கு அலையும் வடிகாதில் கூத்தனார் அருளாலேமழைக்கு உதவும் பெரும் கற்பின் மனைக்கிழத்தியார் தம்பால்இழைக்கும் வினைப் பயன் சூழ்ந்த இப்பிறவிக் கொடும் சூழல்பிழைக்கு நெறி தமக்கு உதவப் பெண்கொடியைப் பெற்று எடுத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
பிறந்த பெரு மகிழ்ச்சியினால் பெரு மூதூர் களி சிறப்பச்சிறந்த நிறை மங்கல தூரியம் முழங்கத் தேவர் பிரான்அறந்தலை நின்று அவர்க்கெல்லாம் அளவில் வளத்து அருள் பெருக்கிப்புறந்தருவார் போற்றி இசைப்பப் பொற்கொடியை வளர்க்கின்றார்.
சொற்பிரிப்பு
பிறந்த பெரு மகிழ்ச்சியினால் பெருமூதூர் களி சிறப்பச்சிறந்த நிறை மங்கல தூரியம் முழங்கத் தேவர்பிரான்அறம் தலை நின்றவர்க்கு எல்லாம் அளவில் வளத்து அருள்பெருக்கிப்புறம் தருவார் போற்றிசைப்பப் பொற்கொடியை வளர்க்கின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
காப்பணியும் இளங்குழவிப் பதநீங்கிக் கமழ் சுரும்பின்பூப்பயிலுஞ் சுருள் குழலும் பொலங்குழையும் உடன் தாழயாப்புறு மென் சிறுமணிமேகலை அணி சிற்றாடையுடன்கோப்பமை கிண்கிணி அசையக் குறுந்தளிர் மெல்லடி ஒதுங்கி.
சொற்பிரிப்பு
காப்பு அணியும் இளங்குழவிப் பத நீங்கிக் கமழ் சுரும்பின்பூப்பயிலும் சுருள்குழலும் பொலங்குழையும் உடன் தாழயாப்புறு மென் சிறுமணி மேகலை அணி சிற்றாடை உடன்கோப்பு அமை கிண்கிணி அசையக் குறுந்தளிர் மெல் அடி ஒதுங்கி,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
புனை மலர்மென் கரங்களினால் போற்றிய தாதியர் நடுவண்மனையகத்து மணிமுன்றில் மணல் சிற்றில் இழைத்து மணிக்கனை குரல் நூபுரம் அலையக் கழன்முதலாய் பயின்று முலைநனை முகஞ்செய் முதல் பருவம் நண்ணினள் அப்பெண் அமுதம்.
சொற்பிரிப்பு
புனைமலர் மென் கரங்களினால் போற்றிய தாதியர் நடுவண்மனை அகத்து மணிமுன்றில் மணல் சிற்றில் இழைத்து மணிக்கனைகுரல் நூபுரம் அலையக் கழல்முதலாப் பயின்று முலைநனைமுகம் செய் முதல்பருவம் நண்ணினள் அப் பெண் அமுதம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
உறுகவின் மெய்ப் புறம் பொலிய ஒளி நுசுப்பை முலை வருத்தமுறுவல் புற மலராத முகிண்முத்த நகை என்னும்நறுமுகை மென் கொடி மருங்குல் நளிர்ச் சுருள் அந்தளிர்ச் செங்கைமறுவில் குலக்கொழுந்தினுக்கு மணப் பருவம் வந்தணைய.
சொற்பிரிப்பு
உறுகவின் மெய்ப் புறம்பொலிய ஒளிநுசுப்பை முலை வருத்தமுறுவல் புறம் அகலாத முகிழ் முத்த நகை என்னும்நறுமுகை மென் கொடி மருங்குல் நளிர்ச்சுருள் அம் தளிர்ச்செங்கைமறுவில் குலக் கொழுந்தினுக்கு மணப்பருவம் வந்து அணைய.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
திருமகட்கு மேல் விளங்கும் செம்மணியின் தீபம் எனும்ஒரு மகளை மண் உலகில் ஓங்கு குல மரபினராய்க்கரு மிடற்று மறையவனார் தமர் ஆய கழல் ஏயர்பெரு மகற்கு மகள் பேச வந்து அணைந்தார் பெரு முதியோர்.
சொற்பிரிப்பு
திருமகட்கு மேல்விளங்கும் செம்மணியின் தீபம் எனும்ஒருமகளை மண் உலகில் ஓங்கு குல மரபினராய்க்கருமிடற்று மறையவனார் தமர் ஆய கழல் ஏயர்பெருமகற்கு மகள் பேச வந்து அணைந்தார் பெருமுதியோர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
வந்த மூதறிவோரை மானக்கஞ் சாறனார்முந்தை முறைமையின் விரும்பி மொழிந்த மணத் திறம் கேட்டேஎந்தமது மரபினுக்குத் தகும் பரிசால் ஏயும் எனச்சிந்தை மகிழ்வுற உரைத்து மணநேர்ந்து செலவிட்டார்.
சொற்பிரிப்பு
வந்த மூது அறிவோரை மானக் கஞ்சாறனார்முந்தை முறைமையின் விரும்பி மொழிந்த மணத் திறம் கேட்டே“எந்தமது மரபினுக்குத் தகும் பரிசால் ஏயும்” எனச்சிந்தை மகிழ்வு உற உரைத்து மணம் நேர்ந்து செலவிட்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
சென்றவரும் கஞ்சாறர் மணம் இசைந்தபடி செப்பக்குன்றனைய புயத்தேயர் கோனாரும் மிக விரும்பிநின்ற நிலைமையின் இரண்டு திறத்தார்க்கும் நேர்வாயமன்றல் வினை மங்கல நாள் மதிநூல் வல்லவர் வகுத்தார்.
சொற்பிரிப்பு
சென்றவரும் கஞ்சாறர் மணம் இசைந்த படி செப்பக்குன்று அனைய புயத்து ஏயர் கோனாரும் மிக விரும்பிநின்ற நிலைமையின் இரண்டு திறத்தார்க்கும் நேர்வாயமன்றல் வினை மங்கலநாள் மதிநூல் வல்லவர் வகுத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
மங்கலமாஞ் செயல் விரும்பி மகள் பயந்த வள்ளலார்தங்குல நீள் சுற்றம் எலாம் தயங்கு பெருங்களி சிறப்பப்பொங்கிய வெண் முளைப் பெய்து பொலங் கலங்களிடை நெருங்கக்கொங்கலர் தண் பொழில் மூதூர் வதுவை முகங் கோடித்தார்.
சொற்பிரிப்பு
மங்கலமாம் செயல் விரும்பி மகள் பயந்த வள்ளலார்தங்குல நீள் சுற்றம் எலாம் தயங்கு பெரும் களி சிறப்பப்பொங்கிய வெண் முளைப்பெய்து பொலம்கலங்கள் இடைநெருங்கக்கொங்கு அலர் தண் பொழில் மூதூர் வதுவை முகம் கோடித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
கஞ்சாறர் மகள் கொடுப்பக் கைப் பிடிக்க வருகின்றஎஞ்சாத புகழ்ப் பெருமை ஏயர் குலப் பெருமானும்தஞ்சால்பு நிறை சுற்றம் தலை நிறைய முரசு இயம்பமஞ்சாலும் மலர்ச் சோலைக் கஞ்சாற்றின் மருங்கணைய.
சொற்பிரிப்பு
கஞ்சாறர் மகள் கொடுப்பக் கைப்பிடிக்க வருகின்றஎஞ்சாத புகழ்ப்பெருமை ஏயர் குலப் பெருமானும்தம்சால்பு நிறை சுற்றம் தலைநிறைய முரசு இயம்பமஞ்சாலும் மலர்ச்சோலைக் கஞ்சாற்றின் மருங்கு அணைய,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
வள்ளலார் மணம் அவ்வூர் மருங்கு அணையா முன் மலர்க்கண்ஒள்ளிழையைப் பயந்தார் தந் திருமனையில் ஒரு வழியேதெள்ளுதிரை நீர் உலகம் உய்வதற்கு மற்றவர்தம்உள்ள நிலைப் பொருளாய உம்பர் பிரான் தாம் அணைவார்.
சொற்பிரிப்பு
வள்ளலார் மணம் அவ்வூர் மருங்கு அணையா முன் மலர்க்கண்ஒள்இழையைப் பயந்தார் தம் திருமனையில் ஒருவழியேதெள்ளுதிரை நீர் உலகம் உய்வதற்கு மற்றவர் தம்உள்ள நிலைப் பொருள் ஆய உம்பர் பிரான் தாம் அணைவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
முண்டநிறை நெற்றியின் மேல் முண்டித்த திருமுடியில்கொண்டசிகை முச்சியின் கண் கோத்தணிந்த எற்பு மணிபண்டொருவன் உடல் அங்கம் பரித்த நாள் அது கடைந்தவெண்டரளம் எனக் காதின் மிசை அசையும் குண்டலமும்.
சொற்பிரிப்பு
முண்ட நிறை நெற்றியின் மேல் முண்டித்த திருமுடியில்கொண்ட சிகை, முச்சியின் கண் கோத்து அணிந்த எற்பு மணி,பண்டு ஒருவன் உடல் அங்கம் பரித்தநாள் அது கடைந்தவெண்தரளம் எனக் காதின் மிசைஅசையும் குண்டலமும்,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
அவ்வென்பின் ஒளிமணி கோத்து அணிந்த திருத் தாழ்வடமும்பைவன்பேர் அரவு ஒழியத் தோளில் இடும் பட்டிகையும்மைவந்த நிறக் கேச வடப் பூணு நூலும் மனச்செவ்வன்பர் பவமாற்றுந் திரு நீற்றுப் பொக்கணமும்.
சொற்பிரிப்பு
அவ் என்பின் ஒளிமணி கோத்து அணிந்த திருத் தாழ்வடமும்,பை வன்பேர் அரவுஒழியத் தோளில் இடும் பட்டிகையும்,மை வந்த நிறக் கேச வடப் பூணு நூலும், மனச்செவ்அன்பர் பவம் மாற்றும் திருநீற்றுப் பொக்கணமும்,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
ஒரு முன் கைத்தனி மணிகோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும்அருமறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திருவுடையும்இரு நிலத்தின் மிசை தோய்ந்த எழுதரிய திருவடியும்திருவடியில் திருப் பஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க.
சொற்பிரிப்பு
ஒருமுன் கைத் தனிமணி கோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும்,அருமறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திருஉடையும்,இருநிலத்தின் மிசைத்தோய்ந்த எழுதரிய திருவடியும்,திருவடியில் திருப்பஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
பொடி மூடு தழல் என்னத் திரு மேனி தனிற்பொலிந்தபடி நீடு திருநீற்றின் பரப்பணிந்த பான்மையராய்க்கொடி நீடு மறுகு அணைந்து தம்முடைய குளிர் கமலத்துஅடி நீடும் மனத்து அன்பர் தம் மனையின் அகம் புகுந்தார்.
சொற்பிரிப்பு
பொடி மூடு தழல் என்னத் திருமேனிதனில் பொலிந்தபடிநீடு திருநீற்றின் பரப்பு அணிந்த பான்மையராய்க்,கொடிநீடு மறுகு அணைந்து தம் உடைய குளிர்கமலத்துஅடிநீடும் மனத்து அன்பர் தம்மனையின் அகம்புகுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
வந்து அணைந்த மா விரத முனிவரைக் கண்டு எதிர் எழுந்துசிந்தை களி கூர்ந்து மகிழ் சிறந்த பெருந் தொண்டனார்எந்தை பிரான் புரி தவத்தோர் இவ் இடத்தே எழுந்து அருளஉய்ந்து ஒழிந்தேன் அடியேன் என்று உருகிய அன்பொடு பணிந்தார்.
சொற்பிரிப்பு
வந்து அணைந்த மாவிரத முனிவரைக் கண்டு, எதிர் எழுந்து,சிந்தை களி கூர்ந்து, மகிழ் சிறந்த பெரும் தொண்டனார்“எந்தை பிரான் புரிதவத்தோர் இவ்இடத்தே எழுந்தருளஉய்ந்து ஒழிந்தேன் அடியேன்” என்று உருகிய அன்பொடு பணிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
நற்றவராம் பெருமானார் நலமிகும் அன்பரை நோக்கிஉற்ற செயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என் என அடியேன்பெற்றது ஒரு பெண்கொடி தன் வதுவை எனப் பெருந்தவரும்மற்று உமக்குச் சோபனம் ஆகுவது என்று வாய் மொழிந்தார்.
சொற்பிரிப்பு
நற்றவராம் பெருமானார் நலமிகும் அன்பரை நோக்கி“உற்றசெயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என்” என,” அடியேன்பெற்றது ஒரு பெண்கொடி தன் வதுவை” எனப், பெருந்தவரும்“மற்று உமக்குச் சோபனம் ஆகுவது” என்று வாய்மொழிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
ஞானச் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணிமானக்கஞ் சாறனார் மணக் கோலம் புனைந்து இருந்ததேனக்க மலர்க் கூந்தல் திரு மகளைக் கொண்டு அணைந்துபானற்கந் தர மறைத்து வரும் அவரைப் பணிவித்தார்.
சொற்பிரிப்பு
ஞானச்செய் தவர் அடிமேல் பணிந்து மனை அகம் நண்ணிமானக் கஞ்சாறனார் மணக்கோலம் புனைந்து இருந்ததேன் நக்க மலர்க் கூந்தல் திருமகளைக் கொண்டு அணைந்துபானல் கந்தரம் மறைத்து வரும் அவரைப் பணிவித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
தம் சரணத்து இடைப் பணிந்து தாழ்ந்து எழுந்த மடக் கொடி தன்மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர்க் கூந்தல் புறம் நோக்கிஅஞ்சலி மெய்த் தொண்டரைப் பார்த்து அணங்கு இவள் தன் மயிர் நமக்குப்பஞ்ச வடிக்காம் என்றார் பரவ அடித் தலங்கொடுப்பார்.
சொற்பிரிப்பு
தஞ்சரணத்து இடைப் பணிந்து தாழ்ந்து எழுந்த மடக்கொடி தன்மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர்க்கூந்தல் புறம் நோக்கி,அஞ்சலி மெய்த் தொண்டரைப் பார்த்து, “அணங்கிவள் தன் மயிர் நமக்குப்பஞ்சவடிக்கு ஆம்” என்றார் பரவ அடித்தலம் கொடுப்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
அருள் செய்த மொழி கேளா அடல் சுரிகைதனை உருவிப்பொருள் செய்தாம் எனப் பெற்றேன் எனக் கொண்டு பூங்கொடி தன்இருள் செய்த கருங்கூந்தல் அடியில் அரிந்து எதிர் நின்றமருள் செய்த பிறப்பு அறுப்பார் மலர்க் கரத்தினிடை நீட்ட.
சொற்பிரிப்பு
அருள் செய்த மொழி கேளா அடல்சு ரிகை தனை உருவிப்,“பொருள் செய்தாம் எனப் பெற்றேன்” எனக் கொண்டு, பூங்கொடி தன்இருள்செய்த கருங்கூந்தல் அடியில் அரிந்து, எதிர் நின்றமருள்செய்த பிறப்பு அறுப்பார் மலர்க்கரத்தின் இடை நீட்ட,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
வாங்குவார் போல் நின்ற மறைப் பொருளாம் அவர் மறைந்துபாங்கின் மலை வல்லியுடன் பழைய மழவிடை யேறிஓங்கிய விண் மிசை வந்தார் ஒளி விசும்பின் நிலன் நெருங்கத்தூங்கிய பொன்மலர் மாரி தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார்.
சொற்பிரிப்பு
வாங்குவார் போல் நின்ற மறைப்பொருளாம் அவர் மறைந்துபாங்கின் மலை வல்லி உடன் பழைய மழவிடை ஏறிஓங்கிய விண்மிசை வந்தார்; ஒளி விசும்பின் நிலன் நெருங்கத்தூங்கிய பொன் மலர்மாரி; தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
விழுந்து எழுந்து மெய்ம் மறந்த மெய் அன்பர் தமக்கு மதிக்கொழுந்து அலைய விழுங் கங்கை குதித்த சடைக் கூத்தனார்எழும் பரிவு நம் பக்கல் உனக்கு இருந்த பரிசிந்தச்செழும் புவனங்களில் ஏறச் செய்தோம் என்று அருள் செய்தார்.
சொற்பிரிப்பு
விழுந்து எழுந்து மெய்ம்மறந்த மெய் அன்பர் தமக்கு மதிக்கொழுந்து அலைய விழும் கங்கை குதித்த சடைக் கூத்தனார்“எழும்பரிவு நம்பக்கல் உனக்கு இருந்த பரிசு இந்தச்செழும்புவனங்களில் ஏறச் செய்தோம்” என்று அருள்செய்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
மருங்கு பெருங்கண நாதர் போற்றிசைப்ப வானவர்கள்நெருங்க விடை மேல் கொண்டு நின்றவர் முன் நின்றவர்தாம்ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் உச்சியின் மேல் குவித்தையர்பெருங் கருணைத் திறம் போற்றும் பெரும் பேறு நேர் பெற்றார்.
சொற்பிரிப்பு
மருங்கு பெரும் கணநாதர் போற்றிசைப்ப வானவர்கள்நெருங்க விடை மேற்கொண்டு நின்றவர் முன் நின்றவர் தாம்ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் உச்சியின் மேல் குவித்து ஐயர்பெருங்கருணைத் திறம் போற்றும் பெரும்பேறு நேர் பெற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
தொண்டனார் தமக்கு அருளிச் சூழ்ந்து இமையோர் துதி செய்யஇண்டை வார் சடை முடியார் எழுந்து அருளிப் போயினார்வண்டுவார் குழற் கொடியைக் கைப் பிடிக்க மணக் கோலம்கண்டவர்கள் கண் களிப்பக் கலிக் காமனார் புகுந்தார்.
சொற்பிரிப்பு
தொண்டனார் தமக்கு அருளிச், சூழ்ந்து இமையோர் துதி செய்யஇண்டைவார் சடைமுடியார் எழுந்தருளிப் போயினார்வண்டுவார் குழல்கொடியைக் கைப்பிடிக்க, மணக்கோலம்கண்டவர்கள் கண்களிப்பக், கலிக்காமனார் புகுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
வந்தணைந்த ஏயர் குல மன்னவனார் மற்றந்தச்சிந்தை நினைவு அரிய செயல் செறிந்தவர் பால் கேட்டருளிப்புந்தியினில் மிக உவந்து புனிதனார் அருள் போற்றிச்சிந்தை தளர்ந்து அருள் செய்த திருவாக்கின் திறம் கேட்டு.
சொற்பிரிப்பு
வந்து அணைந்த ஏயர் குல மன்னவனார் மற்று அந்தச்சிந்தை நினைவு அரிய செயல் செறிந்தவர் பால் கேட்டருளிப்,புந்தியினின் மிக உவந்து, புனிதனார் அருள் போற்றிச்சிந்தை தளர்ந்து, அருள் செய்த திருவாக்கின் திறம்கேட்டு,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
36
மனந்தளரும் இடர் நீங்கி வானவர் நாயகர் அருளால்புனைந்த மலர்க் குழல் பெற்ற பூங்கொடியை மணம் புணர்ந்துதனம் பொழிந்து பெருவதுவை உலகெலாம் தலை சிறப்பஇனம்பெருகத் தம்முடைய எயின் மூதூர் சென்றணைந்தார்.
சொற்பிரிப்பு
மனம் தளரும் இடர் நீங்கி, வானவர் நாயகர் அருளால்புனைந்த மலர்க் குழல் பெற்ற பூங்கொடியை மணம் புணர்ந்து,தனம் பொழிந்து, பெருவதுவை உலகெலாம் தலைசிறப்பஇனம்பெருகத் தம் உடைய எயில் மூதூர் சென்று அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
37
ஒரு மகள் கூந்தல் தன்னை வதுவை நாள் ஒருவர்க்கு ஈந்தபெருமையார் தன்மை போற்றும் பெருமை என் அளவிற்றாமேமருவிய கமரிற் புக்க மா வடு விடேல் என் ஓசைஉரிமையால் கேட்க வல்லார் திறம் இனி உரைக்கல் உற்றேன்.
சொற்பிரிப்பு
ஒருமகள் கூந்தல் தன்னை வதுவை நாள் ஒருவர்க்கு ஈந்தபெருமையார் தன்மை போற்றும் பெருமை என் அளவிற்றாமே?மருவிய கமரில் புக்க மாவடு விடேல்! என் ஓசைஉரிமையால் கேட்க வல்லார் திறம் இனி உரைக்கல் உற்றேன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.