திருமுறை 12 · 12.016 · 186

கண்ணப்ப நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக்காவலர் திருக் காளத்திக் கண்ணப்பர் திரு நாடு என்பர்நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்றபூவலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு.
சொற்பிரிப்பு
மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக்காவலர் திருக்காளத்திக் கண்ணப்பர் திருநாடு என்பர்நாவலர் புகழ்ந்து போற்றும் நல்வளம் பெருகி நின்றபூவலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

இத் திரு நாடு தன்னில் இவர் திருப் பதியாதென்னில்நித்தில அருவிச் சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர்மத்த வெம் களிற்றுக் கோட்டு வன் தொடர் வேலி கோலிஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும்.
சொற்பிரிப்பு
இத்திருநாடு தன்னில் இவர் திருப்பதி யாது என்னில்நித்தில அருவிச் சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர்மத்த வெங் களிற்றுக் கோட்டு வன்தொடர் வேலி கோலிஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ் செவி ஞமலி யார்த்தவன்றிரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப்பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வைஅன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும்.
சொற்பிரிப்பு
குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ் செவி ஞமலி ஆர்த்தவன்திரள் விளவின் கோட்டு வார் வலை மருங்கு தூங்கப்பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வைஅன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

வன் புலிக் குருளையோடும் வயக் கரி கன்றினோடும்புன்றலைச் சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றிஅன்புறு காதல் கூர அணையும் மான் பிணைகளோடும்இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும்.
சொற்பிரிப்பு
வன்புலிக் குருளையோடும் வயக் கரிக் கன்றினோடும்புன்தலைச் சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றிஅன்புறு காதல் கூர அணையு மான் பிணைகளோடும்இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடிகல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும்.
சொற்பிரிப்பு
வெல்படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்சில்லரித் துடியும் கொம்பும் சிறுகண் ஆகுளியும் கூடிக்கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஆறலைத்து உண்ணும் வேடர் அயற் புலங் கவர்ந்து கொண்டவேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றிஏறுடை வானம் தன்னில் இடிக் குரல் எழிலி யோடுமாறுகொள் முழக்கங் காட்டும் மதக்கை மாநிரைகள் எங்கும்.
சொற்பிரிப்பு
ஆறலைத்து உண்ணும் வேடர் அயற்புலம் கவர்ந்து கொண்டவேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றிஏறுடை வானம் தன்னில் இடிக்குரல் எழிலியோடுமாறுகொள் முழக்கம் காட்டும் மதக்கை மாநிரைகள் எங்கும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மைச் செறிந்தனைய மேனி வன் தொழில் மறவர் தம்பால்அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார்பொச்சை யின் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும்நச்சழற்பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான்.
சொற்பிரிப்பு
மைச்செறிந்து அனைய மேனி வன்தொழில் மறவர் தம்பால்அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார்பொச்சையின் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும்நச்சழல் பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலை நின்றுள்ளான்வில் தொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான்மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள்.
சொற்பிரிப்பு
பெற்றியால் தவம் முன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலைநின்று உள்ளான்;வில் தொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான்;மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அரும் பெறல் மறவர் தாயத்தான்ற தொல் குடியில் வந்தாள்இரும் புலி எயிற்றுத் தாலி இடை இடை மனவு கோத்துப்பெரும் புறம் அலையப் பூண்டாள் பீலியும் குழையும் தட்டச்சுரும்புறு படலை முச்சிச் சூர் அரிப் பிணவு போல்வாள்.
சொற்பிரிப்பு
அரும் பெறல் மறவர் தாயத்து ஆன்ற தொல் குடியில் வந்தாள்;இரும்புலி எயிற்றுத் தாலி இடைஇடை மனவு கோத்துப்பெரும்புறம் அலையப் பூண்டாள் பீலியும் குழையும் தட்டச்சுரும்பு உறு படலை முச்சிச் சூர் அரிப் பிணவு போல்வாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனிப் புதல்வர் பேறேஅரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலேமுருகலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்றுபரவுதல் செய்து நாளும் பராய்க் கடன் நெறியில் நிற்பார்.
சொற்பிரிப்பு
பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனிப் புதல்வர்ப் பேறேஅரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலேமுருகலர் அலங்கல் செவ்வேல் முருகவேள் முன்றில் சென்றுபரவுதல் செய்து நாளும் பராய்க்கடன் நெறியில் நிற்பார்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

வாரணச் சேவலோடும் வரிமயிற் குலங்கள் விட்டுத்தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப்போரணி நெடுவேலோற்குப் புகழ்புரி குரவை தூங்கப்பேரணங்கு ஆடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை.
சொற்பிரிப்பு
வாரணச் சேவலோடும் வரிமயில் குலங்கள் விட்டுத்தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப்போர் அணி நெடுவேலோற்குப் புகழ் புரி குரவை தூங்கப்பேர் அணங்கு ஆடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

பயில் வடுப் பொலிந்த யாக்கை வேடர்தம் பதியாம் நாகற்குஎயிலுடைப் புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆனமயிலுடைக் கொற்ற ஊர்தி வரையுரங் கிழித்த திண்மைஅயிலுடைத் தடக்கை வென்றி அண்ணலார் அருளினாலே.
சொற்பிரிப்பு
பயில் வடுப் பொலிந்த யாக்கை வேடர் தம் பதியாம் நாகற்குஎயில் உடைப் புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆனமயில் உடைக் கொற்ற ஊர்தி வரை உரம் கிழித்த திண்மைஅயில் உடைத் தடக்கை வென்றி அண்ணலார் அருளினாலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீடஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறி ஆட்டோ டும்ஆன அத் திங்கள் செல்ல அளவில் செய் தவத்தினாலேபான்மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது.
சொற்பிரிப்பு
கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீடஊனம் இல் பலிகள் போக்கி உறுகடன் வெறியாட்டோடும்ஆனஅத் திங்கள் செல்ல அளவில் செய் தவத்தினாலேபான்மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

கரிப்பரு மருப்பின் முத்தும் கழை விளை செழுநீர் முத்தும்பொருப்பினின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றிவரிச் சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும்அரிக்குறுந் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த.
சொற்பிரிப்பு
கரிப்பரு மருப்பின் முத்தும் கழை விளை செழுநீர் முத்தும்பொருப்பினின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றிவரிச்சுரும்பு அலைய வானின் மலர்மழை பொழிந்தது எங்கும்;அரிக்குறுந் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

அருவரைக் குறவர் தங்கள் அகன் குடிச் சீறூர் ஆயம்பெரு விழா எடுத்து மிக்க பெருங்களி கூறும் காலைக்கருவரை காள மேகம் ஏந்தியது என்னத் தாதைபொருவரைத் தோள்களாரப் புதல்வனை எடுத்துக் கொண்டான்.
சொற்பிரிப்பு
அருவரைக் குறவர் தங்கள் அகன்குடிச் சீறூர் ஆயம்பெருவிழா எடுத்து மிக்க பெருங்களி கூரும் காலைக்கருவரை காள மேகம் ஏந்தியது என்னத் தாதைபொருவரைத் தோள்கள் ஆரப் புதல்வனை எடுத்துக் கொண்டான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

கருங் கதிர் விரிக்கும் மேனி காமரு குழவி தானும்இரும்புலிப் பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றிஅரும் பெறல் உலகமெல்லாம் அளப்பரும் பெருமை காட்டித்தருங்குறி பலவும் சாற்றும் தன்மையிற் பொலிந்து தோன்ற.
சொற்பிரிப்பு
கருங்கதிர் விரிக்கும் மேனிக் காமரு குழவி தானும்இரும்புலிப் பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றிஅரும்பெறல் உலகம் எல்லாம் அளப்பரும் பெருமை காட்டித்தருங்குறி பலவும் சாற்றும் தன்மையில் பொலிந்து தோன்ற,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

அண்ணலைக் கையில் ஏந்தற்கு அருமையால் உரிமைப் பேரும்திண்ணன் என்றியம்பும் என்னத் திண்சிலை வேடர் ஆர்த்தார்புண்ணியப் பொருளாய் உள்ள பொருவில் சீர் உருவினானைக்கண்ணினுக்கு அணியாத் தங்கள் கலன்பல அணிந்தார் அன்றே.
சொற்பிரிப்பு
அண்ணலைக் கையில் ஏந்தற்கு அருமையால் ”உரிமைப் பேரும்திண்ணன் என்று இயம்பும்” என்னத் திண்சிலை வேடர் ஆர்த்தார்;புண்ணியப் பொருளாய் உள்ள பொருவில் சீர் உருவினானைக்கண்ணினுக்கு அணியாத் தங்கள் கலன் பல அணிந்தார் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

வரையுறை கடவுட் காப்பு மறக்குடி மரபில் தங்கள்புரையில் தொல் முறைமைக்கு ஏற்பப் பொருந்துவ போற்றிச் செய்துவிரையிளந் தளிருஞ் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்தஅரை மணிக் கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில்.
சொற்பிரிப்பு
வரை உறை கடவுள் காப்பு மறக்குடி மரபில் தங்கள்புரையில் தொன் முறைமைக்கு ஏற்பப் பொருந்துவ போற்றிச் செய்துவிரை இளம் தளிரும் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்தஅரைமணிக் கவடி கட்டி அழகு உற வளர்க்கும் நாளில்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

வருமுறைப் பருவம் தோறும் வளமிகு சிறப்பில் தெய்வப்பெருமடை கொடுத்துத் தொக்க பெருவிறல் வேடர்க்கெல்லாம்திருமலி துழனி பொங்கச் செழுங்களி மகிழ்ச்சி செய்தேஅருமையில் புதல்வர் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார்.
சொற்பிரிப்பு
வருமுறைப் பருவம் தோறும் வளமிகு சிறப்பில் தெய்வப்பெருமடை கொடுத்துத் தொக்க பெருவிறல் வேடர்க்கு எல்லாம்திருமலி துழனி பொங்கச் செழுங்களி மகிழ்ச்சி செய்தேஅருமையில் புதல்வர்ப் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடித் தளர்வு நீங்கிப்பூண் திகழ் சிறு புன் குஞ்சிப் புலியுகிர்ச் சுட்டி சாத்திமூண்டெழு சினத்துச் செங்கண் முளவு முள் அரிந்து கோத்தநாண்டரும் எயிற்றுத் தாலி நலங்கிளர் மார்பில் தூங்க.
சொற்பிரிப்பு
ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடித் தளர்வு நீங்கிப்பூண் திகழ் சிறு புன் குஞ்சிப் புலி உகிர்ச் சுட்டி சாத்திமூண்டு எழு சினத்துச் செங்கண் முளவு முள் அரிந்து கோத்தநாண்தரும் எயிற்றுத் தாலி நலங்கிளர் மார்பில் தூங்க,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

பாசொளி மணியோடு ஆர்த்த பன் மணிச் சதங்கை ஏங்ககாசொடு தொடுத்த காப்புக் கலன் புனை அரைஞாண் சேர்த்தித்தேசுடை மருப்பில் தண்டை செறிமணிக் குதம்பை மின்னமாசறு கோலம் காட்டி மறுகிடை ஆடும் நாளில்.
சொற்பிரிப்பு
பாசொளி மணியோடு ஆர்த்த பன்மணிச் சதங்கை ஏங்கக்காசொடு தொடுத்த காப்புக் கலன் புனை அரைஞாண் சேர்த்தித்தேசுடை மருப்பில் தண்டை செறிமணிக் குதம்பை மின்னமாசு அறு கோலம் காட்டி மறுகு இடை ஆடும் நாளில்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்துபுண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில்உண்ணனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலைத் தீஞ் சொல்வண்ண மென் பவளச் செவ்வாய் குதட்டியே வளரா நின்றார்.
சொற்பிரிப்பு
தண்மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்துபுண்ணியக் கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில்உள் நனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலைத் தீஞ்சொல்வண்ணமென் பவளச் செவ்வாய் குதட்டியே வளரா நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

பொரு புலிப் பார்வைப் பேழ்வாய் முழை எனப் பொற்கை நீட்டப்பரிஉடைத் தந்தை கண்டு பைந்தழை கைக் கொண்டோச்சஇரு சுடர்க் குறு கண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கிவருதுளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி.
சொற்பிரிப்பு
பொருபுலிப் பார்வைப் பேழ்வாய் முழை எனப் பொற்கை நீட்டப்பரிவுடைத் தந்தை கண்டு பைந்தழை கைக்கொண்டு ஓச்சஇருசுடர்க்கு உறுகண் தீர்க்கும் எழில் வளர் கண் நீர் மல்கிவருதுளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

துடிக் குறடு உருட்டி ஓடித் தொடக்கு நாய்ப் பாசம் சுற்றிப்பிடித்து அறுத்து எயினப் பிள்ளைப் பேதையர் இழைத்த வண்டல்அடிச் சிறு தளிரால் சிந்தி அருகுறு சிறுவரோடும்குடிச் செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து.
சொற்பிரிப்பு
துடிக்குறடு உருட்டி ஓடித் தொடக்கு நாய்ப் பாசம் சுற்றிப்பிடித்து அறுத்து எயினப் பிள்ளைப் பேதையர் இழைத்த வண்டல்அடிச்சிறு தளிரால் சிந்தி, அருகுறு சிறுவரோடும்குடிச்செறி குரம்பை எங்கும் குறுநடைக் குறும்பு செய்து,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின்வனை தரு வடிவார் கண்ணி மறச் சிறு மைந்த ரோடும்சினை மலர்க் காவுள் ஆடிச் செறிகுடிக் குறிச்சி சூழ்ந்தபுனை மருப் புழலை வேலிப் புறச்சிறு கானிற் போகி.
சொற்பிரிப்பு
அனையன பலவும் செய்தே ஐந்தின்மேல் ஆன ஆண்டின்வனைதரு வடிவார் கண்ணி மறச் சிறு மைந்த ரோடும்சினைமலர்க் காவுள் ஆடிச் செறி குடிக் குறிச்சி சூழ்ந்தபுனைமருப்பு உழலை வேலிப் புறச் சிறு கானில் போகி,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

கடு முயல் பறழினோடுங் கான ஏனத்தின் குட்டிகொடு வரிக் குருளை செந்நாய் கொடுஞ் செவிச் சாபம் ஆனமுடுகிய விசையில் ஓடித் தொடர்ந்து உடன் பற்றி முற்றத்துஇடு மரத் திரளில் கட்டி வளர்ப்பன எண்ணிலாத.
சொற்பிரிப்பு
கடுமுயல் பறழினோடும் கான ஏனத்தின் குட்டிகொடுவரிக் குருளை செந்நாய்க் கொடுஞ் செவிச் சாபம் ஆனமுடுகிய விசையில் ஓடித் தொடர்ந்து உடன் பற்றி முற்றத்துஇடு மரத் திரளில் கட்டி வளர்ப்பன எண்ணிலாத.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

அலர் பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையும் ஆட்டிக்குலமுது குறத்தி ஊட்டிக் கொண்டு கண் துயிற்றிக் கங்குல்புலர ஊன் உணவு நல்கிப் புரி விளையாட்டின் விட்டுச்சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
அலர் பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையும் ஆட்டிக்குல முது குறத்தி ஊட்டிக் கொண்டு கண் துயிற்றிக் கங்குல்புலர ஊன் உணவு நல்கிப் புரி விளையாட்டின் விட்டுச்சில முறை ஆண்டு செல்லச் சிலைபயில் பருவம் சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

தந்தையும் மைந்தனாரை நோக்கித் தன் தடித்த தோளால்சிந்தை உள் மகிழப் புல்லிச் சிலைத் தொழில் பயிற்ற வேண்டிமுந்தை அத் துறையில் மிக்க முதியரை அழைத்துக் கூட்டிவந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்குச் சொல்லி விட்டான்.
சொற்பிரிப்பு
தந்தையும் மைந்தனாரை நோக்கித் தன் தடித்த தோளால்சிந்தை உள் மகிழப் புல்லிச் சிலைத்தொழில் பயிற்ற வேண்டிமுந்தை அத்துறையில் மிக்க முதியரை அழைத்துக் கூட்டிவந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்குச் சொல்லி விட்டான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

வேடர் தம் கோமான் நாகன் வென்றி வேள் அருளால் பெற்றசேடரின் மிக்க செய்கைத் திண்ணன் வில் பிடிக்கின்றான் என்றுஆடியல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டுமாடுயர் மலைகள் ஆளும் மறக் குலத் தலைவர் எல்லாம்.
சொற்பிரிப்பு
“வேடர் தம் கோமான் நாகன் வென்றி வேள் அருளால் பெற்றசேடரின் மிக்க செய்கைத் திண்ணன் வில் பிடிக்கின்றான்” என்றுஆடியல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டுமாடுயர் மலைகள் ஆளும் மறக்குலத் தலைவர் எல்லாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும்கொலை புரி களிற்றுக் கோடும் பீலியின் குவையும் தேனும்தொலைவில் பல் நறவும் ஊனும் பலங்களும் கிழங்கும் துன்றச்சிலை பயில் வேடர் கொண்டு திசை தொறும் நெருங்க வந்தார்.
சொற்பிரிப்பு
மலைபடு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும்கொலை புரி களிற்றுக் கோடும் பீலியின் குவையும் தேனும்தொலைவில் பல் நறவும் ஊனும் பலங்களும் கிழங்கும் துன்றச்சிலை பயில் வேடர் கொண்டு திசைதொறும் நெருங்க வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறில் சீறூர்எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தார் எங்கும்பல்பெருங் கிளைஞர் போற்றப் பராய்க் கடன் பலவும் செய்துவில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமான்.
சொற்பிரிப்பு
மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறில் சீறூர்எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தார்; எங்கும்“பல் பெரும் கிளைஞர் போற்றப் பராய்க் கடன் பலவும் செய்துவில் விழா எடுக்க” என்று விளம்பினான் வேடர் கோமான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

பான்மையில் சமைத்துக் கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்ததேனலர் கொன்றையார் தம் திருச்சிலைச் செம்பொன் மேருவானது கடலின் நஞ்சம் ஆக்கிட அவர்க்கே பின்னும்கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினைக் காப்புச் சேர்த்தார்.
சொற்பிரிப்பு
பான்மையில் சமைத்துக் கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்தத்தேன் அலர் கொன்றையார் தம் திருச்சிலைச் செம்பொன் மேருவானது கடலின் நஞ்சம் ஆக்கிட அவர்க்கே பின்னும்கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினைக் காப்புச் சேர்த்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

சிலையினைக் காப்புக் கட்டும் திண் புலி நரம்பில் செய்தநலமிகு காப்பு நன்னாண் நாகனார் பயந்த நாகர்குலம் விளங் கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்திமலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்து எடுத்து இயம்பினார்கள்.
சொற்பிரிப்பு
சிலையினைக் காப்புக் கட்டும் திண் புலி நரம்பில் செய்தநலமிகு காப்பு நல்நாள் நாகனார் பயந்த நாகர்குலம் விளங்கு அரிய குன்றின் கோல முன் கையில் சேர்த்திமலை உற மாக்கள் எல்லாம் வாழ்த்து எடுத்து இயம்பினார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

ஐவன அடிசில் வெவ்வேறு அமைந்தன புற்பாற் சொன்றிமொய் வரைத் தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும்கைவினை எயினர் ஆக்கிக் கலந்த ஊன் கிழங்கு துன்றச்செய் வரை உயர்ப்ப எங்கும் கலந்தனர் சினவில் வேடர்.
சொற்பிரிப்பு
ஐவன அடிசில், வெவ்வேறு அமைந்தன புல்பால் சொன்றி,மொய்வரைத் தினை மென் சோறு, மூங்கில் வன் பதங்கள் மற்றும்கைவினை எயினர் ஆக்கிக் கலந்த ஊன் கிழங்கு துன்றச்செய்வரை உயர்ப்ப எங்கும் கலந்தனர் சினவில் வேடர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

செம் தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்துவெந்த ஊன் அயில்வார் வேரி விளங்கனிக் கவளம் கொள்வார்நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார் வெவ்வேறுஅந்தமில் உணவின் மேலோர் ஆயினர் அளவிலார்கள்.
சொற்பிரிப்பு
செந்தினை இடியும் தேனும் அருந்துவார்; தேனில் தோய்த்துவெந்த ஊன் அயில்வார்; வேரி விளங்கனிக் கவளம் கொள்வார்;நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார்; வெவ்வேறுஅந்தமில் உணவின் மேலோர் ஆயினர் அளவிலார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

அயல் வரைப் புலத்தின் வந்தார் அருங்குடி இருப்பின் உள்ளார்இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம்உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவில் பல் நறவு மாந்திமயலுறு களிப்பின் நீடி வரிசிலை விழவு கொள்வார்.
சொற்பிரிப்பு
அயல்வரைப் புலத்தின் வந்தார் அருங்குடி இருப்பின் உள்ளார்இயல்வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம்உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவில் பல் நறவு மாந்திமயல் உறு களிப்பின் நீடி வரிசிலை விழவு கொள்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

பாசிலைப் படலைச் சுற்றிப் பன் மலர்த் தொடையல் சூடிக்காசுடை வடத் தோல் கட்டி கவடி மெய்க் கலன்கள் பூண்டார்மாசில் சீர் வெட்சி முன்னா வருதுறைக் கண்ணி சூடிஆசில் ஆசிரியன் ஏந்தும் அடற் சிலை மருங்கு சூழ்ந்தார்.
சொற்பிரிப்பு
பாசிலைப் படலை சுற்றிப் பன்மலர்த் தொடையல் சூடிக்காசுடை வடத்தோல் கட்டிக் கவடி மெய்க் கலன்கள் பூண்டுமாசில் சீர் வெட்சி முன்னர் வருதுறைக் கண்ணி சூடிஆசில் ஆசிரியன் ஏந்தும் அடற்சிலை மருங்கு சூழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

38

தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும்எண்டிசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடுதிண்டிறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும்பு இடித்துச் செல்லக்கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலம் கொண்டார்கள்.
சொற்பிரிப்பு
தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளைகொள் வேயும்எண்திசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும்திண் திறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும்பு இடித்துச் செல்லக்கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலங்கொண்டார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

39

குன்றவர் களி கொண்டாடக் கொடிச்சியர் துணங்கை ஆடதுன்றிய மகிழ்ச்சியோடும் சூர் அரமகளிர் ஆடவென்றி வில் விழவினோடும் விருப்புடை ஏழாம் நாளாம்அன்றிரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர்.
சொற்பிரிப்பு
குன்றவர் களிகொண்டு ஆடக் கொடிச்சியர் துணங்கை ஆடத்துன்றிய மகிழ்ச்சியோடும் சூர் அர மகளிர் ஆடவென்றி வில் விழவினோடும் விருப்புடை ஏழாம் நாளாம்அன்று இரு மடங்கு செய்கை அழகு உற அமைத்த பின்னர்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

40

வெங்கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும்மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்பத்தங்கள் தொல் மரபின் விஞ்சைத் தனுத் தொழில் வலவர் தம்பால்பொங்கொளிக் கரும் போர்ஏற்றைப் பொருசிலை பிடிப்பித்தார்கள்.
சொற்பிரிப்பு
வெங்கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும்மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்பத்தங்கள் தொல் மரபின் விஞ்சைத் தனுத்தொழில் வலவர் தம்பால்பொங்கு ஒளிக் கரும்போர் ஏற்றைப் பொருசிலை பிடிப்பித்தார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

41

பொற்றட வரையின் பாங்கர்ப் புரிவுறு கடன் முன் செய்தவில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும்அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்றக்கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம்.
சொற்பிரிப்பு
பொன் தட வரையின் பாங்கர்ப் புரிவுறு கடன் முன் செய்தவில்தொழில் களத்தின் நண்ணி விதிமுறை வணங்கி மேவும்அற்றை நாள் தொடங்கி நாளும் அடற்சிலை ஆண்மை முற்றக்கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

42

வண்ணவெஞ் சிலையும் மற்றப் படைகளும் மலரக் கற்றுகண்ணகல் சாயல் பொங்கக் கலை வளர் திங்களே போல்எண்ணிரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லாப்புண்ணியம் தோன்றி மேல் மேல் வளர்வதன் பொலிவு போல்வார்.
சொற்பிரிப்பு
வண்ண வெஞ் சிலையும் மற்றைப் படைகளும் மலரக் கற்றுக்கண்ணகல் சாயல் பொங்கக் கலைவளர் திங்களே போல்எண் இரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லாப்புண்ணியம் தோன்றி மேன்மேல் வளர்வதன் பொலிவு போல்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

43

இவ் வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில் இருங் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆயமை வண்ண வரை நெடுந் தோள் நாகன் தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பில் காலம்கை வண்ணச் சிலை வேட்டை ஆடித் தெவ்வர் கண நிரைகள் பல கவர்ந்து கானம் காத்துமெய் வண்ணந்தளர் மூப்பின் பருவம் எய்தி வில்லுழவின் பெரு முயற்சி மெலிவான் ஆனான்.
சொற்பிரிப்பு
இவ்வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில் இருங்குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆயமைவண்ண வரை நெடுந்தோள் நாகன் தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பில் காலம்கைவண்ணச் சிலை வேட்டை ஆடித் தெவ்வர் கணம் நிரைகள் பல கவர்ந்து கானம் காத்துமெய்வண்ணம் தளர் மூப்பின் பருவம் எய்தி வில் உழவின் பெருமுயற்சி மெலிவான் ஆனான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

44

அங்கண் மலைத் தடஞ்சாரல் புனங்கள் எங்கும் அடலேனம் புலி கரடி கடமை ஆமாவெங் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள் மிக நெருங்கி மீதூர் காலைத்திங்கள் முறை வேட்டை வினை தாழ்த்தது என்று சிலை வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்றுதங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல் நாகன் பால் சார்ந்து சொன்னார்.
சொற்பிரிப்பு
அங்கண் மலைத் தடஞ்சாரல் புனங்கள் எங்கும் அடல் ஏனம் புலி கரடி கடமை ஆமாவெங்கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள் மிக நெருங்கி மீதூர் காலைத்“திங்கள் முறை வேட்டை வினை தாழ்த்தது” என்று சிலைவேடர் தாம் எல்லாம் திரண்டு சென்றுதங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண்தெரியல் நாகன் பால் சார்ந்து சொன்னார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

45

சொன்ன உரை கேட்டலுமே நாகன் தானும் சூழ்ந்து வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கிமுன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல் வேட்டையினில் முயல கில்லேன்என் மகனை உங்களுக்கு நாதனாக எல்லீரும் கைக் கொண்மின் என்ற போதின்அன்னவரும் இரங்கிப் பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி இம் மாற்றம் அறைகின்றார்கள்.
சொற்பிரிப்பு
சொன்ன உரை கேட்டலுமே நாகன் தானும் சூழ்ந்து வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கிமுன்னவர்கட்கு உரைசெய்வான் “மூப்பினாலே முன்பு போல் வேட்டையினில் முயலகில்லேன்;என் மகனை உங்களுக்கு நாதன் ஆக எல்லீரும் கைக்கொண்மின்! என்ற போதின்அன்னவரும் இரங்கிப் பின் மகிழ்ந்து தங்கோன் அடி வணங்கி இம்மாற்றம் அறைகின்றார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

46

இத்தனை காலமும் நினது சிலைக் கீழ் தங்கி இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும்அத்த! நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி வேறு உளதோ அதுவே அன்றிமெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம் படவே பெற்று அளித்தாய் விளங்கு மேன்மைவைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர்.
சொற்பிரிப்பு
“இத்தனை காலமும் நினது சிலைக் கீழ்த் தங்கி இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம்!; இன்னும்அத்த நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி வேறு உளதோ; அதுவே அன்றிமெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம்படவே பெற்று அளித்தாய்; விளங்கு மேன்மைவைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள்” என்றார் மகிழ்ந்து வேடர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

47

சிலை மறவர் உரை செய்ய நாகன் தானும் திண்ணனை முன் கொண்டுவரச் செப்பி விட்டுமலை மருவு நெடும் கானில் கன்னி வேட்டை மகன் போகக் காடு பலி மகிழ ஊட்டதலை மரபின் வழி வந்த தேவராட்டிதனை அழைமின் என அங்குச் சார்ந்தோர் சென்றுநிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து விருப்பினொடும் கடிது வந்தாள்.
சொற்பிரிப்பு
சிலை மறவர் உரை செய்ய நாகன் தானும் திண்ணனை முன் கொண்டு வரச் செப்பி விட்டு“மலை மருவு நெடுங்கானில் கன்னி வேட்டை மகன் போகக் காடு பலி மகிழ ஊட்டத்தலை மரபின் வழி வந்த தேவராட்டிதனை அழைமின்” என அங்குச் சார்ந்தோர் சென்றுநிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது உவந்து விருப்பினொடும் கடிது வந்தாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

48

கானில் வரித்தளிர் துதைந்த கண்ணி சூடிக் கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்துமானின் வயிற்று அரிதாரத் திலகம் இட்டு மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டுதான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழத் தழைப்பீலி மரவுரி மேல் சார எய்திப்பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கிப் போர் வேடர் கோமானைப் போற்றி நின்றாள்.
சொற்பிரிப்பு
கானில் வரித் தளிர் துதைந்த கண்ணி சூடிக் கலைமருப்பின் அரிந்த குழை காதில் பெய்துமானின் வயிற்று அரிதாரத் திலகம் இட்டு மயில் கழுத்து மனவுமணி வடமும் பூண்டுதான் இழிந்து திரங்கி முலை சரிந்து தாழத் தழைப்பீலி மர உரிமேல் சார எய்திப்பூநெருங்கு தோரை மலி சேடை நல்கிப் போர் வேடர் கோமானைப் போற்றி நின்றாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

49

நின்ற முதுகுறக்கோலப் படிமத்தாளை நேர் நோக்கி அன்னை நீ நிரப்பு நீங்கிநன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்லமென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை வளனும் பிறவளனும் வேண்டிற்று எல்லாம்அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி என் என்றாள் அணங்கு சார்ந்தாள்.
சொற்பிரிப்பு
நின்ற முது குறக்கோலப் படிமத்தாளை நேர் நோக்கி “அன்னை! நீ நிரப்பு நீங்கிநன்று இனிதின் இருந்தனையோ?” என்று கூறும் நாகன் எதிர் நலம்பெருக வாழ்த்தி, “நல்லமென்தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளைவளனும் பிறவளனும் வேண்டிற்று எல்லாம்அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி என்?” என்றாள் அணங்கு சார்ந்தாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

50

கோட்டமில் என்குல மைந்தன் திண்ணன் எங்கள் குலத் தலைமை யான் கொடுப்பக்கொண்டு பூண்டுபூட்டுறு வெஞ் சிலை வேடர் தம்மைக் காக்கும் பொருப்புரிமை புகுகின்றான் அவனுக்கு என்றும்வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு புலங் கவர் வென்றி மேவு மாறுகாட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக் காடு பலி ஊட்டு என்றான் கவலை இல்லான்.
சொற்பிரிப்பு
“கோட்டம் இல் என் குலமைந்தன் திண்ணன் எங்கள் குலத்தலைமை யான் கொடுப்பக் கொண்டு பூண்டுபூட்டுறு வெஞ் சிலைவேடர் தம்மைக் காக்கும் பொருப்புரிமை புகுகின்றான்; அவனுக்கு என்றும்வேட்டை வினை எனக்கு மேல் ஆக வாய்த்து வேறுபுலம் கவர் வென்றி மேவு மாறுகாட்டில் உறை தெய்வங்கள் விரும்பி உண்ணக் காடு பலி ஊட்டு” என்றான் கவலை இல்லான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

51

மற்று அவன்தன் மொழி கேட்ட வரைச் சூராட்டி மனமகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்குஎற்றையினுங் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன் மைந்தன் திண்ணனான வெற்றி வரிச்சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான் என்று விரும்பி வாழ்த்திக்கொற்றவனத் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன குறைவின்றிக் கொண்டு போனாள்.
சொற்பிரிப்பு
மற்றவன் தன் மொழி கேட்ட வரைச் சூராட்டி “மன மகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்குஎற்றையினும் குறிகள் மிக நல்ல வான; இதனாலே உன் மைந்தன் திண்ணன் ஆனவெற்றி வரிச் சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான்” என்று விரும்பி வாழ்த்திக்கொற்ற வன தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன குறைவு இன்றிக் கொண்டு போனாள்”.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

52

தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார் சிலைத் தாதை அழைப்பச் சீர்கொள்மைவிரவு நறுங் குஞ்சி வாசக் கண்ணி மணிநீல மலைஒன்று வந்தது என்னக்கைவிரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி தாதை கழல் வணங்கும் போதில்செய்வரை போல் புயம் இரண்டும் செறியப் புல்லிச் செழும் புலித்தோல் இருக்கையின் முன்சேர வைத்தான்.
சொற்பிரிப்பு
தெய்வ நிகழ் குறமுதியாள் சென்ற பின்பு திண்ணனார் சிலைத் தாதை அழைப்பச் சீர் கொள்மை விரவு நறுங்குஞ்சி வாசக் கண்ணி மணி நீல மலை ஒன்று வந்தது என்னக்கைவிரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி தாதை கழல் வணங்கும் போதில்செய்வரை போல் புயம் இரண்டும் செறியப் புல்லிச் செழும் புலித்தோல் இருக்கையின் முன் சேர வைத்தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

53

முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன் மூப்பு எனை வந்து அடைதலினால் முன்புபோலஎன்னுடைய முயற்சியினால் வேட்டை ஆட இனி எனக்குக் கருத்து இல்லை எனக்கு மேலாய்மன்னு சிலை மலையர் குலக் காவல் பூண்டு மாறு எறிந்து மா வேட்டை ஆடி என்றும்உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்றுடை தோலும் சுரிகையும் கைக் கொடுத்தான் அன்றே.
சொற்பிரிப்பு
முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன் “மூப்பு எனை வந்து அடைதலினால் முன்பு போலஎன்னுடைய முயற்சியினால் வேட்டை ஆட இனி எனக்குக் கருத்து இல்லை; எனக்கு மேலாய்மன்னு சிலை மலையர் குலக் காவல் பூண்டு மாறு எறிந்து மாவேட்டை ஆடி என்றும்உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய்” என்று உடைதோலும் சுரிகையும் கைக் கொடுத்தான் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

54

தந்தை நிலை உட்கொண்டு தளர்வு கொண்டு தங்கள் குலத் தலைமைக்குச் சாய்வு தோன்றவந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டுமுந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை உடை தோலும் வாங்கிக் கொண்டுசிந்தை பரங்கொள நின்ற திண்ணனார்க்குத் திருத் தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான்.
சொற்பிரிப்பு
தந்தை நிலை உட்கொண்டு தளர்வு கொண்டு, தங்கள் குலத் தலைமைக்குச் சார்வு தோன்றவந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு,முந்தை அவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல்சு ரிகை உடை தோலும் வாங்கிக் கொண்டு,சிந்தை பரம் கொளநி ன்ற திண்ணனார்க்குத் திருத்தாதை முகமலர்ந்து செப்புகின்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

55

நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்துதெம் முனையில் அயற் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளமொழியாச் சிறப்பின் வாழ்வாய்வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும் விரைந்து நீ தாழாதே வேட்டை ஆடஇம் முரண் வெஞ் சிலை வேடர் தங்களோடும் எழுக என விடை கொடுத்தான் இயல்பில் நின்றான்.
சொற்பிரிப்பு
“நம் உடை குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு பரித்ததன் மேல் நலமே செய்துதெம்முனையில் அயல் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளம் ஒழியாச் சிறப்பின் வாழ்வாய்!;வெம்முனையில் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும்; விரைந்து நீ தாழாதே வேட்டை ஆடஇம்முரண் வெஞ் சிலை வேடர் தங்களோடும் எழுக!” என விடைகொடுத்தான் இயல்பில் நின்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

56

செங்கண் வயக் கோளரியேறு அன்ன திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்றவெங்கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடை கொண்டு புறம் போந்து வேடரோடுமங்கல நீர்ச் சுனை படிந்து மனையின் வைகி வைகிருளின் புலர் காலை வரிவிற் சாலைப்பொங்கு சிலை அடல் வேட்டைக் கோலம் கொள்ளப் புனை தொழில் கை வினைஞருடன் பொலிந்து புக்கார்.
சொற்பிரிப்பு
செங்கண்வயக் கோள் அரி ஏறு அன்ன திண்மைத் திண்ணனார் செய்தவத்தின் பெருமை பெற்றவெங்கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடைகொண்டு புறம்போந்து வேடரோடும்மங்கல நீர்ச் சுனை படிந்து மனையின் வைகி வைகிருளின் புலர் காலை வரிவில் சாலைப்பொங்குசிலை அடல் வேட்டைக் கோலம் கொள்ளப் புனைதொழில் கை வினைஞரொடும் பொலிந்து புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

57

நெறி கொண்ட குஞ்சிச் சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்கமுறி கொண்ட கண்ணிக்கு இடை மொய்யொளிப் பீலி சேர்த்திவெறி கொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சிசெறி கொண்ட வண்டின் குலம் சீர் கொளப் பின்பு செய்து.
சொற்பிரிப்பு
நெறிகொண்ட குஞ்சிச் சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்கமுறிகொண்ட கண்ணிக்கு இடை மொய்ஒளிப் பீலி சேர்த்தி,வெறிகொண்ட முல்லைப் பிணை மீது குறிஞ்சி வெட்சிசெறிகொண்ட வண்டின் குலம் சீர்கொளப் பின்பு செய்து,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

58

முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றிதன்னில் புரி கொண்ட மயிர் கயிறாரச் சாத்திமின்னில் திகழ் சங்கு விளங்கு வெண் தோடு காதின்மன்னிப் புடை நின்றன மா மதி போல வைக.
சொற்பிரிப்பு
முன் நெற்றியின் மீது முருந்து இடை வைத்த குன்றிதன்னில் புரி கொண்ட மயிர்க்கயிறு ஆரச் சாத்தி,மின்னில் திகழ் சங்கு விளங்கு வெண்தோடு காதின்மன்னிப் புடை நின்றன மாமதி போல வைக,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

59

கண்டத்திடை வெண் கவடிக் கதிர் மாலை சேரக்கொண்டக் கொடு பன் மணி கோத்திடை ஏனக் கோடுதுண்டப் பிறை போல்வன தூங்கிட வேங்கை வன்தோல்தண்டைச் செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க.
சொற்பிரிப்பு
கண்டத்து இடை வெண்கவடிக் கதிர் மாலை சேரக்கொண்டு அக்கொடு பன்மணி கோத்து இடை ஏனக் கோடுதுண்டப் பிறை போல்வன தூங்கிட, வேங்கை வன்தோல்தண்டைச் செயல் பொங்கிய சன்னவீரம் தயங்க,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

60

மார்பில் சிறு தந்த மணித்திரள் மாலைத் தாழத்தாரிற் பொலி தோள் வலயங்கள் தழைத்து மின்னச்சேர்விற் பொலி கங்கண மீது திகழ்ந்த முன் கைக்கார்விற் செறி நாண் எறி கைச் செறி கட்டி கட்டி.
சொற்பிரிப்பு
மார்பில் சிறு தந்த மணித்திரள் மாலை தாழத்,தாரில் பொலி தோள் வலயங்கள் தழைத்து மின்னச்,சேர்வில் பொலி கங்கணம் மீது திகழ்ந்த முன்கைக்கார்வில்செ றி நாண் எறி கைச்செறி கட்டி கட்டி,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

61

அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவத்திரையில் படு வெள்ளலகு ஆர்த்து விளிம்பு சேர்த்திநிரையில் பொலி நீளுடை தோள் சுரி கைப்புறம் சூழ்விரையில் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி.
சொற்பிரிப்பு
அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவத்திரையில் படு வெள் அலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி,நிரையில் பொலி நீள் உடை தோல் சுரி கைப்புறம் சூழ்விரைவில் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

62

வீரக் கழல் காலின் விளங்க அணிந்து பாதம்சேரத் தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப்பாரப் பெரு வில் வலம் கொண்டு பணிந்து திண்ணன்சாரத் திருத்தாள் மடித்து ஏற்றி வியந்து தாங்கி.
சொற்பிரிப்பு
வீரக் கழல் காலின் விளங்க அணிந்து பாதம்சேரத் தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப்பாரப்பெரு வில் வலம் கொண்டு பணிந்து திண்ணன்சாரத் திருத்தாள் மடித்து ஏற்றி வியந்து தாங்கி,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

63

அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கித்துங்கப் பெரு மா மழை போன்று துண் என்று ஒலிப்பவெங்கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்கச்செங்கைத் தலத்தால் தடவிச் சிறு நாண் எறிந்தார்.
சொற்பிரிப்பு
அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கித்துங்கப் பெருமாமழை போன்று துண் என்று ஒலிப்பவெங்கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்கச்செங்கைத் தலத்தால் தடவிச் சிறு நாண் எறிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

64

பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவிவில் வேடர் ஆயத் துடி மேவி ஒலிக்கு முன்றில்சொல் வேறு வாழ்த்துத் திசைதோறும் துதைந்து விம்மவல்லேறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார்.
சொற்பிரிப்பு
பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவிவில்வேடர் ஆயம் துடி மேவி ஒலிக்கும் முன்றில்சொல்வேறு வாழ்த்துத் திசைதோறும் துதைந்து விம்மவல் ஏறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

65

மானச் சிலை வேடர் மருங்கு நெருங்கும் போதில்பானற்குல மாமலரில் படர் சோதியார் முன்தேனற்றசை தேறல் சருப் பொரி மற்றும் உள்ளகானப் பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள்.
சொற்பிரிப்பு
மானச் சிலை வேடர் மருங்கு நெருங்கு போதில்பானல் குல மாமலரில் படர் சோதியார் முன்தேன் நல் தசை தேறல் சருப்பொரி மற்றும் உள்ளகானப் பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

66

நின்று எங்கும் மொய்க்கும் சிலைவேடர்கள் நீங்கப் புக்குச்சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்திஉன் தந்தை தந்தைக்கும் இந் நன்மைகள் உள்ள வல்லநன்றும் பெரிது உன்விறல் நம்மளவு அன்று இது என்றாள்.
சொற்பிரிப்பு
நின்று எங்கும் மொய்க்கும் சிலை வேடர்கள் நீங்கப் புக்குச்சென்று அங்கு வள்ளல் திருநெற்றியில் சேடை சாத்தி“உன் தந்தை தந்தைக்கும் இந்நன்மைகள் உள்ள அல்லநன்றும் பெரிது உன் விறல் நம் அளவு அன்று இது” என்றாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

67

அப் பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை ஆட்டி தன்னைச்செப்பற்கு அரிதாய சிறப்பு எதிர் செய்து போக்கிக்கைப் பற்றிய திண் சிலை கார் மழை மேகம் என்னமெய்ப் பொற்புடை வேட்டையின் மேல்கொண்டு எழுந்து போந்தார்.
சொற்பிரிப்பு
அப்பெற்றியின் வாழ்த்தும் அணங்குடையாட்டி தன்னைச்செப்பற்கு அரிது ஆய சிறப்பு எதிர் செய்து போக்கிக்கைப்பற்றிய திண்சி லைக் கார்மழை மேகம் என்னமெய்ப் பொற்புடை வேட்டையின் மேற்கொண்டு எழுந்து போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

68

தாளில் வாழ் செருப்பர் தோல் தழைத்த நீடு தானையார்வாளியோடு சாபம் மேவு கையர் வெய்ய வன் கணார்ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்ணிலார்மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே.
சொற்பிரிப்பு
தாளில் வாழ் செருப்பர் தோல் தழைத்த நீடு தானையார்வாளியோடு சாபம் மேவு கையர் வெய்ய வன்கணார்ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண் இலார்மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

69

வன் தொடர்ப் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவேவென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதமுன்சென்று நீளுமாறு போல்வ செய்ய நாவின் வாய வாய்ஒன்றொடு ஒன்று நேர் படாமல் ஓடு நாய்கள் மாடெலாம்.
சொற்பிரிப்பு
வன் தொடர்ப் பிணித்த பாசம் வன்கை மள்ளர் கொள்ளவேவென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதமுன்சென்று நீளும் ஆறு போல்வ செய்ய நாவின் வாயவாய்ஒன்றொடு ஒன்று நேர் படாமல் ஓடு நாய்கள் மாடெலாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

70

போர் வலைச் சிலைத் தொழில் புறத்திலே விளைப்ப அச்சார் வலைத் தொடக்கு அறுக்க ஏகும் ஐயர் தம் முனேகார் வலைப் படுத்த குன்று கானமா வளைக்க நீள்வார் வலைத் திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார்.
சொற்பிரிப்பு
போர் வலைச் சிலைத் தொழில் புறத்திலே விளைப்ப அச்சார்வலைத் தொடக்கு அறுக்க ஏகும் ஐயர் தம் முனேகார்வலைப்படுத்த குன்று கான மாவளைக்க நீள்வார்வலைத் திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

71

நண்ணி மா மறைக் குலங்கள் நாட என்று நீடும் அத்தண்ணிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார் தமைக்கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன்எண்ணில் பார்வை கொண்டு வேடர் எம் மருங்கும் ஏகினார்.
சொற்பிரிப்பு
நண்ணி மாமறைக் குலங்கள் நாட என்று நீடும் அத்தண் நிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார் தமைக்கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன்எண்ணில் பார்வை கொண்டு வேடர் எம்மருங்கும் ஏகினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

72

கோடுமுன் பொலிக்கவும் குறுங் கணா குளிக்குலம்மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும்சேடு கொண்டகை விளிச் சிறந்த ஓசை செல்லவும்காடு கொண்டு எழுந்த வேடு கை வளைந்து சென்றதே.
சொற்பிரிப்பு
கோடு முன்பு ஒலிக்கவும் குறுங்கண் ஆகுளிக்குலம்மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும்சேடு கொண்ட கைவிளிச் சிறந்த ஓசை செல்லவும்காடு கொண்டு எழுந்த வேடு கைவளைந்து சென்றதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

73

நெருங்கு பைந்தருக் குலங்கள் நீடு காடு கூட நேர்வருங்கருஞ் சிலைத் தடக்கை மான வேடர் சேனை தான்பொருந் தடந் திரைக்கடல் பரப்பு இடைப் புகும் பெருங்கருந்தரங்க நீள் புனல் களிந்தி கன்னி ஒத்ததே.
சொற்பிரிப்பு
நெருங்கு பைந்தருக் குலங்கள் நீடு காடு கூடநேர்வருங்கருஞ் சிலைத் தடக்கை மான வேடர் சேனை தான்பொருந் தடம் திரைக்கடல் பரப்பு இடைப் புகும் பெரும்கருந்தரங்க நீள்புனல் களிந்தி கன்னி ஒத்ததே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

74

தென் திசைப் பொருப்புடன் செறிந்த கானின் மான் இனம்பன்றி வெம் மரைக் கணங்கள் ஆதியான பல் குலம்துன்றி நின்ற வென்றடிச் சுவட்டின் ஒற்றர் சொல்லவேவன் தடக்கை வார்கொடு எம் மருங்கும் வேடர் ஓடினார்.
சொற்பிரிப்பு
தென் திசைப் பொருப்பு உடன் செறிந்த கானின் மான் இனம்பன்றி வெம்மரைக் கணங்கள் ஆதி ஆன பல்குலம்துன்றி நின்ற என்று அடிச் சுவட்டின் ஒற்றர் சொல்லவேவன்தடக்கை வார்கொடு எம்மருங்கும் வேடர் ஓடினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

75

ஒடி எறிந்து வாரொழுக்கி யோசனைப் பரப்பு எலாம்நெடிய திண் வலைத் தொடக்கு நீளிடைப் பிணித்து நேர்கடி கொளப் பரந்த காடு காவல் செய்து அமைத்த பின்செடி தலைச் சிலைக்கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார்.
சொற்பிரிப்பு
ஒடி எறிந்து வார் ஒழுக்கி யோசனைப் பரப்பு எலாம்நெடிய திண் வலைத் தொடக்கு நீள் இடைப் பிணித்து நேர்கடிகொளப் பரந்த காடு காவல் செய்து அமைத்த பின்செடி தலைச் சிலைக்கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

76

வெஞ்சிலைக்கை வீரனாரும் வேடரோடு கூடி முன்மஞ்சலைக்கு மாமலை சரிப் புறத்து வந்த மாஅஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள்செஞ்சரத்தினோடு சூழல் செய்த கானுள் எய்தினார்.
சொற்பிரிப்பு
வெஞ்சிலைக்கை வீரனாரும் வேடரோடு கூடி முன்மஞ்சு அலைக்கும் மாமலைச் சரிப்புறத்து வந்த மாஅஞ்சுவித்து அடர்க்கு நாய்கள் அட்டமாக விட்டு நீள்செஞ்சரத்தினோடு சூழல் செய்த கான் உள் எய்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

77

வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பராயம் ஓடி நேர்எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும்மொய் குரல் துடிக் குலங்கள் பம்பை முன் சிலைத்து எழக்கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கானெலாம்.
சொற்பிரிப்பு
வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பர் ஆயம் ஓடி நேர்எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும்மொய் குரல் துடிக்குலங்கள் பம்பை முன் சிலைத்து எழக்கைவிளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கான் எலாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

78

ஏனமோடு மான் இனங்கள் எண்கு திண் கலைக் குலம்கான மேதி யானை வெம் புலிக் கணங்கள் கான் மரைஆன மா அநேக மா வெருண்டு எழுந்து பாய முன்சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார்.
சொற்பிரிப்பு
ஏன மோடு மான் இனங்கள் எண்கு திண் கலைக்குலம்கான மேதி யானை வெம் புலிக்கணங்கள் கான்மரைஆன மா அநேகமா வெருண்டு எழுந்து பாய முன்சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

79

தாளறுவன இடை துணிவன தலை துமிவன கலைமாவாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மாநீளுடல் விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மாமீளிகொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே.
சொற்பிரிப்பு
தாள் அறுவன இடை துணிவன தலை துமிவன கலை மா;வாளிகளொடு குடல் சொரி தர மறிவன சில மரை மா;நீள் உடல் விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா;மீளி கொள்கணை படும் உடல் எழ விழுவன பல உழையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

80

வெங்கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய்செங் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமாஅங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனைப்பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள்.
சொற்பிரிப்பு
வெங்கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய்செங்கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமாஅங்கு எழு சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனைப்பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

81

பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய்முன் நடுமுக மிசை உருவிட முடுகிய விசையுடன் அக்கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவத்தன் எதிர் எதிர் பொருவன நிகர் தலையன பல கலைகள்.
சொற்பிரிப்பு
பின் மறவர்கள் விடு பகழிகள் பிறகு உற வயிறு இடைபோய்முன் நடு முகம் மிசை உருவிட முடுகிய விசை உடன்அக்கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவத்தன் எதிர்எதிர் பொருவன நிகர் தலையன பல கலைகள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

82

கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர்குரிசில் முன் விடும் அடுசரம் எதிர் கொலை பயில் பொழுது அவையேபொரு கரி யொடு சின அரியிடை புரையறவுடல் புகலால்வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அவ்வனமே.
சொற்பிரிப்பு
கருவரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர்குரிசில் முன்விடும் அடுசரம் எதிர் கொலைபயில் பொழுது அவையேபொரு கரியொடு சின அரி இடை புரை அற உடல் புகலால்வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அவ் வனமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

83

நீளிடை விசை மிசை குதிகொள நெடு முகில் தொட எழு மான்தாளுறு கழல் மறவர்கள் விடு சரம் நிரை தொடர்வன தாம்வாள் விடுகதிர் மதி பிரிவுற வருமென விழும் உழையைக்கோளொடு பயில் பணி தொடர் நிலை கொளவுள எதிர் பலவே.
சொற்பிரிப்பு
நீள் இடை விசைமிசை குதிகொள நெடுமுகில் தொட எழுமான்தாள்உறு கழல் மறவர்கள் விடு சரம் நிரை தொடர்வனதாம்வாள்விடு கதிர் மதி பிரிவு உற வரும் என விழும் உழையைக்கோளொடு பயில் பணி தொடர் நிலை கொள உள எதிர் பலவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

84

கடல் விரி புனல் கொள விழுவன கரு முகிலென நிரையேபடர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல்அடலுறு சரம் உடலுற வரை அடியிடம் அலமரலால்மிடை கரு மரை கரடிகளொடு விழுவன வன மேதி.
சொற்பிரிப்பு
கடல் விரி புனல் கொள விழுவன கருமுகில் என நிரையேபடர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல்அடல் உறு சரம் உடல் உறவரை அடி இடம் அலமரலால்மிடை கருமரை கரடிகளொடு விழுவன வன மேதி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

85

பல துறைகளின் வெருவரலொடு பயில் வலையற நுழை மாஉலமொடு படர்வன தகையுற உறு சினமொடு கவர் நாய்நிலவிய இரு வினை வலை இடை நிலை சுழல் பவர் நெறி சேர்புலனுறு மனனிடை தடைசெய்த பொறிகளின் அளவுளவே.
சொற்பிரிப்பு
பலதுறைகளின் வெருவரலொடு பயில் வலைஅற நுழைமாஉலமொடு படர் வனதகைவு உற உறுசினமொடு கவர்நாய்நிலவிய இரு வினை வலைஇடை நிலை சுழல்பவர் நெறிசேர்புலன் உறு மனன் இடை தடைசெய்த பொறிகளின் அளவு உளவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

86

துடியடியன மடி செவியன துறுகய முனி தொடரார்வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார்அடி தளர்வுறு கரு உடையன அணை உறு பிணை அலையார்கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவோர்.
சொற்பிரிப்பு
துடி அடியன மடி செவியன துறுகயமுனி தொடரார்;வெடிபட இரி சிறு குருளைகள் மிசைபடு கொலை விரவார்;அடிதளர்வுறு கருஉடையன அணைவுறு பிணை அலையார்;கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரிசிலை மறவோர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

87

இவ்வகை வரு கொலை மறவினை எதிர் நிகழ்வுழி அதிரக்கைவரைகளும் வெருவுற இடை கான் எழுவதோர் ஏனம்பெய் கருமுகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறிமொய் வலைகளை அற நிமிர் முடுகிய கடு விசையில்.
சொற்பிரிப்பு
இவ்வகை வரு கொலை மறவினை எதிர் நிகழ்வுழி அதிரக்கைவரைகளும் வெருவுற மிடை கான் எழுவதொர் ஏனம்பெய்கருமுகில் என இடியொடு பிதிர் கனல்விழி சிதறிமொய் வலைகளை அற நிமிர்வுற முடுகிய கடு விசையில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

88

போமது தனை அடுதிறலொடு பொரு மறவர்கள் அரியேறுஆமவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில்தாம் ஒருவரும் அறிகிலரவர் தனி தொடர்வுழி அதன்மேல்ஏமுனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார்.
சொற்பிரிப்பு
போம் அது தனை அடு திறலொடு பொரு மறவர்கள் அரி ஏறுஆம் அவர் தொடர்வுறும் விசை உடன் அடி வழி செலும் அளவில்தாம் ஒருவரும் அறிகிலர் அவர் தனி தொடர்வுழி அதன்மேல்ஏமுனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

89

நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரிவில்காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில்கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவிநீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல்.
சொற்பிரிப்பு
நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரிவில்காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில்கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவிநீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

90

குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இடி குரல் நீள்பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிதோடித்துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி சூழல்சென்று அதனிடை நின்றது வலிதெருமரமர நிரையில்.
சொற்பிரிப்பு
குன்றியை நிகர் முன்செற எரி கொடு விழிஇடி குரல்நீள்பன்றியும் அடல் வன் திறலொடு படர்நெறி நெடிது ஓடித்துன்றியது ஒரு குன்று அடிவரை சுலவிய செறி சூழல்சென்றதன் இடை நின்றது வலி தெருமர மர நிரையில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

91

அத் தரு வளர் சுழல் இடை அடை அதன் நிலை அறிபவர் முன்கைத் தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகிமொய்த்தெழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவிகுத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர்.
சொற்பிரிப்பு
அத்தரு வளர் சுழல் இடை அடை அதன் நிலை அறிபவர் முன்கைத்தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகிமொய்த்து எழுசுடர் விடு சுரிகையை முனைபெற எதிர் உருவிக்குத்தினர் உடல் முறிபட எறி குலமறவர்கள் தலைவர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

92

வேடர் தங்கரிய செங்கண் வில்லியார் விசையில் குத்தமாடிரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு நாணன்காடனே இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம்ஆடவன் கொன்றான் அச்சோ என்று அவர் அடியில் தாழ்ந்தார்.
சொற்பிரிப்பு
வேடர் தம் கரிய செங்கண் வில்லியார் விசையில் குத்தமாடு இரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு நாணன்“காடனே! இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம்;ஆடவன் கொன்றான் அச்சோ!” என்று அவர்·அடியில் தாழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

93

மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்றஉற்றது பசி வந்து எம்மை உதவிய இதனைக் காய்ச்சிச்சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்துவெற்றி கொள் வேட்டைக் காடு குறுகுவோம் மெல்ல என்றார்.
சொற்பிரிப்பு
மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் “வழி வந்து ஆற்றஉற்றது பசி வந்து எம்மை உதவிய இதனைக் காய்ச்சிச்சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்துவெற்றி கொள் வேட்டைக்காடு குறுகுவோம் மெல்ல” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

94

என்று அவர் கூற நோக்கித் திண்ணனார் தண்ணீர் எங்கேநன்றும் இவ் வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன்நின்ற இப் பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்டகுன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான்.
சொற்பிரிப்பு
என்றவர் கூற நோக்கித், திண்ணனார் “தண்ணீர் எங்கேநன்றும் இவ் வனத்தில் உள்ளது?” என்று உரை செய்ய, நாணன்“நின்ற இப் பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்டகுன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன்முகலி” என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

95

பொங்கிய சின வில் வேடன் சொன்னபின் போவோம் அங்கேஇங்கிது தன்னைக் கொண்டு போதுமின் என்று தாமும்அங்கது நோக்கிச் சென்றார் காவதம் அரையில் கண்டார்செங்கண் ஏறு உடையார் வைகும் திருமலைச் சாரல் சோலை.
சொற்பிரிப்பு
பொங்கிய சினவில் வேடன் சொன்ன பின், “போவோம் அங்கே;இங்கு இது தன்னைக் கொண்டு போதுமின்” என்று தாமும்அங்கு அது நோக்கிச் சென்றார்; காவதம் அரையில் கண்டார்செங்கண் ஏறு உடையார் வைகும் திருமலைச் சாரல் சோலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

96

நாணனே தோன்றும் குன்றில் நண்ணுவோம் என்ன நாணன்காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச்சேணுயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வேகோணமில் குடுமித் தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான்.
சொற்பிரிப்பு
“நாணனே! தோன்றும் குன்றில் நண்ணுவோம்” என்ன, நாணன்,“காண நீ போதின் நல்ல காட்சியே காணும்; இந்தச்சேண் உயர் திருக்காளத்தி மலை மிசை எழுந்து செவ்வேகோணம் இல் குடுமித் தேவர் இருப்பர்; கும்பிடலாம்” என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

97

ஆவதென் இதனைக் கண்டு இங்கு அணை தொறும் என் மேல் பாரம்போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல் மேல்மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா நிற்கும்தேவர் அங்கு இருப்பது எங்கே போகென்றார் திண்ணனார் தாம்.
சொற்பிரிப்பு
“ஆவது என்? இதனைக் கண்டு இங்கு அணைதொறும் என்மேல் பாரம்போவது ஒன்று உளது போலும்; ஆசையும் பொங்கி மேன்மேல்மேவிய நெஞ்சும் வேறு ஓர் விருப்பு உற விரையா நிற்கும்;தேவர் அங்கு இருப்பது எங்கே? போது” என்றார் திண்ணனார் தாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

98

உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்துகரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும்வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம் தோறும்திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினைச் சார்ந்தார்.
சொற்பிரிப்பு
உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்துகரைவளர் கழையின் முத்தும் கார்அகில் குறடும் சந்தும்வரைதரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம் தோறும்திரைகள் முன் திரட்டி வைத்த திருமுகலியினைச் சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

99

ஆங்கு அதன் கரையின் பாங்கோர் அணி நிழல் கேழல் இட்டுவாங்கு வில் காடன் தன்னை மரக் கடை தீக் கோல் பண்ணிஈங்கு நீ நெருப்புக் காண்பாய் இம்மலை ஏறிக் கண்டுநாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார்.
சொற்பிரிப்பு
ஆங்கதன் கரையின் பாங்கு ஓர் அணிநிழல் கேழல் இட்டுவாங்குவில் காடன் தன்னை மரக்கடை தீக்கோல் பண்ணி“ஈங்கு நீ நெருப்புக் காண்பாய் இம்மலை ஏறிக் கண்டுநாங்கள் வந்து அணைவோம்” என்று நாணனும் தாமும் போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

100

அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின்தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார் தாம்களி வரும் மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டு கொண்டுகுளிர் வரு நதி ஊடு ஏகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
அளிமிடை கரைசூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின்தெளிபுனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார் தாம்களிவரு மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டு கொண்டுகுளிர்வரு நதி ஊடு ஏகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

101

கதிரவன் உச்சி நண்ணக் கடவுள் மால் வரையின் உச்சிஅதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர் கலி முழக்கம் காட்டஇது என் கொல் நாணா என்றார்க்கு இம் மலைப் பெருந்தேன் சூழ்ந்துமது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி கொல் என்றான்.
சொற்பிரிப்பு
கதிரவன் உச்சி நண்ணக் கடவுள் மால் வரையின் உச்சிஅதிர்தரும் ஓசை ஐந்தும் ஆர் கலி முழக்கம் காட்ட,இது என் கொல் நாணா? என்றார்க்கு இம்மலைப் பெருந்தேன் சூழ்ந்துமதுமலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலிகொல் என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

102

முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பம் ஆனஅன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கிமன் பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கிஎன்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கை யோடும்.
சொற்பிரிப்பு
முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவு இலா இன்பம் ஆனஅன்பினை எடுத்துக் காட்ட அளவு இலா ஆர்வம் பொங்கிமன்பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கிஎன்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கையோடும்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

103

நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏறத் தாமும்பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறிஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல ஐயர்நீணிலை மலையை ஏறி நேர் படச் செல்லும் போதில்.
சொற்பிரிப்பு
நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏறத் தாமும்பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறிஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல ஐயர்நீள்நிலை மலையை ஏறி நேர்படச் செல்லும் போதில்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

104

திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னேஅங்கணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்தத்தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டு அகல நீங்கிப்பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன்பு உருவம் ஆனார்.
சொற்பிரிப்பு
திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணாமுன்னேஅங்கணர் கருணை கூர்ந்த அருள் திருநோக்கம் எய்தத்தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டு அகல நீங்கிப்பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன்பு உருவம் ஆனார்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

105

மாகமார் திருக் காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ளஏக நாயகரைக் கண்டார் எழுந்த பேர் உவகை அன்பின்வேகம் ஆனது மேல் செல்ல மிக்கது ஓர் விரைவின் ஓடும்மோகமாய் ஓடிச் சென்றார் தழுவினார் மோந்து நின்றார்.
சொற்பிரிப்பு
மாகமார் திருக்காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ளஏக நாயகரைக் கண்டார்; எழுந்த பேர் உவகை அன்பின்வேகமானது மேல் செல்ல மிக்கது ஓர் விரைவினோடும்மோகமாய் ஓடிச் சென்றார்; தழுவினார்; மோந்து நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

106

நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால் தோறும்வடிவெலாம் புளகம் பொங்க மலர்க் கண்ணீர் அருவி பாயஅடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்றுபடி இலாப் பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற.
சொற்பிரிப்பு
நெடிது போது உயிர்த்து நின்று, நிறைந்து எழு மயிர்க்கால் தோறும்வடிவு எலாம் புளகம் பொங்க, மலர்க் கண்ணீர் அருவி பாய,“அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ!” என்றுபடிஇலாப் பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

107

வெம் மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதியார் போல்கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம் தன்னில்உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றிக் கெட்டேன்இம் மலைத் தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார்.
சொற்பிரிப்பு
வெம்மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதியார் போல்கைம்மலை கரடி வேங்கை அரி திரி கானம் தன்னில்உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றிக் கெட்டேன்!இம்மலைத் தனியே நீர் இங்கு இருப்பதே!” என்று நைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

108

கைச்சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள இந்தப்பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு நீரும் வார்த்துமச்சிது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்றஅச்சிலை நாணன் தானும் நான் இது அறிந்தேன் என்பான்.
சொற்பிரிப்பு
கைச்சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள “இந்தப்பச்சிலையோடு பூவும் பறித்து இட்டு நீரும் வார்த்துமச்சிது செய்தார் யாரோ?” என்றலும் மருங்கு நின்றஅச்சிலை நாணன் தானும் “நான் இது அறிந்தேன்” என்பான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

109

வன்றிறல் உந்தை யோடு மா வேட்டை ஆடிப் பண்டிக்குன்று இடை வந்தோம் ஆகக் குளிர்ந்த நீர் இவரை ஆட்டிஒன்றிய இலைப் பூச்சூட்டி ஊட்டி முன் பறைந்தோர் பார்ப்பான்அன்றிது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான்.
சொற்பிரிப்பு
“வன்திறல் உந்தையோடு மாவேட்டை ஆடிப் பண்டுஇக்குன்று இடை வந்தோம் ஆகக், குளிர்ந்த நீர் இவரை ஆட்டி,ஒன்றிய இலைப் பூச் சூட்டி, ஊட்டி, முன் பறைந்து, ஓர் பார்ப்பான்அன்று இது செய்தான்; இன்றும் அவன் செய்தான் ஆகும்” என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

110

உண்ணிறைந்து எழுந்த தேனும் ஒழிவின்றி ஆரா அன்பில்திண்ணனார் திருக் காளத்தி நாயனார்க்கு இனிய செய்கைஎண்ணிய இவைகொலாம் என்று இது கடைப் பிடித்துக் கொண்டு அவ்அண்ணலைப் பிரிய மாட்டாத அளவில் ஆதரவு நீட.
சொற்பிரிப்பு
உள் நிறைந்து எழுந்ததேனும் ஒழிவின்றி ஆரா அன்பில்திண்ணனார் “திருக்காளத்தி நாயனார்க்கு இனிய செய்கைஎண்ணிய இவை கொலாம்” என்று இது கடைப் பிடித்துக் கொண்டவ்அண்ணலைப் பிரிய மாட்டா அளவில் ஆதரவு நீட.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

111

இவர் தமைக் கண்டேனுக்குத் தனியராய் இருந்தார் என்னேஇவர் தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லைஇவர் தமைப் பிரிய ஒண்ணாது என்செய்கேன் இனி யான் சாலஇவர் தமக்கு இறைச்சி கொண்டிங்கு எய்தவும் வேண்டும் என்று.
சொற்பிரிப்பு
“இவர் தமைக் கண்டேனுக்குத் தனியராய் இருந்தார்; என்னே!இவர் தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை;இவர் தமைப் பிரிய ஒண்ணாது; என் செய்கேன்; இனி யான் சாலஇவர் தமக்கு இறைச்சி கொண்டு இங்கு எய்தவும் வேண்டும் என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

112

போதுவர் மீண்டு செல்வர் புல்லுவர் மீளப் போவர்காதலின் நோக்கி நிற்பர் கன்று அகல் புனிற்று ஆப் போல்வர்நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானேகோதறத் தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார்.
சொற்பிரிப்பு
போதுவர் மீண்டு செல்வர்; புல்லுவர்; மீளப் போவர்;காதலின் நோக்கி நிற்பர்; கன்று அகல் புனிற்றாப் போல்வர்;“நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானேகோதறத் தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன்” என்பார்;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

113

ஆர்தமராக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன்நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்றுசோர் தரு கண்ணீர் வாரப் போய் வரத் துணிந்தார் ஆகிவார் சிலை எடுத்துக் கொண்டு மலர்க் கையால் தொழுது போந்தார்.
சொற்பிரிப்பு
“ஆர் தமர் ஆக நீர் இங்கு இருப்பது என்று அகல மாட்டேன்;நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் கில்லேன்” என்றுசோர் தரு கண்ணீர் வாரப் போய் வரத் துணிந்தார் ஆகிவார்சிலை எடுத்துக் கொண்டு மலர்க்கையால் தொழுது போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

114

முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன்பின்பு வந்து அணைய முன்னைப் பிற துறை வேட்கை நீங்கிஅன்பு கொண்டு உய்ப்பச் செல்லும் அவர் திரு முகலி ஆற்றின்பொன் புனை கரையில் ஏறிப் புது மலர்க் காவில் புக்கார்.
சொற்பிரிப்பு
முன்பு நின்று அரிதில் நீங்கி மொய்வரை இழிந்து நாணன்பின்பு வந்து அணைய முன்னைப் பிறதுறை வேட்கை நீங்கிஅன்புகொண்டு உய்ப்பச் செல்லும் அவர் திரு முகலி ஆற்றின்பொன்புனை கரையில் ஏறிப் புதுமலர்க் காவில் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

115

காடனும் எதிரே சென்று தொழுது தீக் கடைந்து வைத்தேன்கோடுடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம்மாடுற நோக்கிக் கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்றுநீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன்.
சொற்பிரிப்பு
காடனும் எதிரே சென்று தொழுது தீக் கடைந்து வைத்தேன்;கோடு உடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம்மாடு உற நோக்கிக் கொள்ளும்; மறித்து நாம் போகைக்கு இன்றுநீட நீர் தாழ்த்தது என்னோ?” என்றலும் நின்ற நாணன்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

116

அங்கிவர் மலையில் தேவர் தம்மைக் கண்டு அணைத்துக் கொண்டுவங்கினைப் பற்றிப் போதாவல்லுடும்பு என்ன நீங்கான்இங்கும் அத் தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏகப் போந்தான்நம்குலத் தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான்.
சொற்பிரிப்பு
“அங்கிவன் மலையில் தேவர் தம்மைக் கண்டு அணைத்துக் கொண்டுவங்கினைப் பற்றிப் போகா வல் உடும்பு என்ன நீங்கான்;இங்கும் அத் தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏகப் போந்தான்;நங்குலத் தலைமை விட்டான்; நலப்பட்டான் தேவர்க்கு” என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

117

என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள்முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார்வன் பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி மிக்கஇன்புறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு.
சொற்பிரிப்பு
“என் செய்தாய் திண்ணா! நீ தான், என்ன மால் கொண்டாய் எங்கள்முன்பெரு முதலி அல்லையோ?” என, முகத்தை நோக்கார்,வன்பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி மிக்கஇன்புறு தசைகள் வெவ்வேறு அம்பினில் ஈர்ந்து கொண்டு,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

118

கோலினில் கோத்துக் காய்ச்சி கொழும் தசை பதத்தில் வேவவாலிய சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கிப் பார்த்துச்சாலவும் இனிய எல்லாம் சருகு இலை இணைத்த கல்லைஏலவே கோலிக் கூட அதன் மிசை இடுவார் ஆனார்.
சொற்பிரிப்பு
கோலினில் கோத்துக் காய்ச்சிக் கொழுந்தசை பதத்தில் வேவவாலிய சுவை முன் காண்பான் வாயினில் அதுக்கிப் பார்த்துச்சாலவும் இனிய எல்லாம் சருகிலை இணைத்த கல்லைஏலவே கோலிக் கூட அதன்மிசை இடுவார் ஆனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

119

மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னேஅரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான்பெரும் பசி உடையன் ஏனும் பேச்சிலன் எமக்கும் பேறுதரும் பரிசு உணரான் மற்றைத் தசை புறத்து எறியா நின்றான்.
சொற்பிரிப்பு
மருங்கு நின்றவர்கள் பின்னும், “மயல் மிக முதிர்ந்தான்; என்னே!அரும்பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான்;பெரும் பசி உடையனேனும் பேச்சிலன்; நமக்கும் பேறுதரும் பரிசு உணரான்; மற்றைத் தசை புறத்து எறியா நின்றான்;”
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

120

தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன் மற்று இதனைத் தீர்க்கல்ஆவது ஒன்று அறியோம் தேவராட்டியை நாகனோடுமேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும் அவ் வேட்டைக் கானில்ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் என்று எண்ணிப் போனார்.
சொற்பிரிப்பு
“தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன்; மற்று இதனைத் தீர்க்கல்ஆவது ஒன்று அறியோம்; தேவர் ஆட்டியை நாகனோடுமேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும் அவ் வேட்டைக் காட்டில்ஏவல் ஆட்களையும் கொண்டு போதும்” என்று எண்ணிப் போனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

121

கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண்ஊன் அமுது அமைத்துக் கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னிமா நதி நன்னீர் தூய வாயினில் கொண்டு கொய்ததூ நறும் பள்ளித் தாமங் குஞ்சி மேல் துதையக் கொண்டார்.
சொற்பிரிப்பு
கானவர் போனது ஓரார், கடிதினில் கல்லையின் கண்ஊன் அமுது அமைத்துக் கொண்டு, மஞ்சனம் ஆட்ட உன்னிமாநதி நன்னீர் தூய வாயினில் கொண்டு, கொய்ததூ நறும் பள்ளித் தாமம் குஞ்சி மேல் துதையக் கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

122

தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கிக் கல்லைப்புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்திஇனிய எம்பிரானார் சாலப் பசிப்பர் என்று இரங்கி ஏங்கிநனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்தாம்.
சொற்பிரிப்பு
தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கிக் கல்லைப்புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒருகை ஏந்திஇனிய எம் பிரானார் சாலப் பசிப்பர் என்று இரங்கி ஏங்கிநனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார் தாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

123

இளைத்தனர் நாயனார் என்று ஈண்டச் சென்று எய்தி வெற்பின்முளைத்து எழு முதலைக் கண்டு முடிமிசை மலரைக் காலில்வளைத்த பொற் செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர் தன்னைவிளைத்த அன்பு உமிழ்வார் போல விமலனார் முடிமேல் விட்டார்.
சொற்பிரிப்பு
இளைத்தனர் நாயனார் என்று ஈண்டச்சென்று, எய்தி, வெற்பின்முளைத்து எழு முதலைக் கண்டு, முடிமிசை மலரைக் காலில்வளைத்த பொன் செருப்பால் மாற்றி, வாயில் மஞ்சன நீர் தன்னைவிளைத்த அன்பு உமிழ்வார் போல விமலனார் முடிமேல் விட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

124

தலை மிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடங் காளத்திமலை மிசைத் தம்பிரானார் முடி மிசை வணங்கிச் சாத்திச்சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார் சேர்த்த கல்லைஇலை மிசைப் படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து.
சொற்பிரிப்பு
தலைமிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடம் காளத்திமலைமிசைத் தம்பிரானார் முடிமிசை வணங்கிச் சாத்திச்சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார் சேர்த்த கல்லைஇலைமிசைப் படைத்த ஊனின் திருஅமுது எதிரே வைத்து,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

125

கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்குஅழலுறு பதத்தில் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி நாவில்பழகிய இனிமை பார்த்துப் படைத்த இவ் இறைச்சி சாலஅழகிது நாயனீரே அமுது செய்து அருளும் என்றார்.
சொற்பிரிப்பு
“கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து, அங்குஅழல் உறு பதத்தில் காய்ச்சிப், பல்லினால் அதுக்கி, நாவில்பழகிய இனிமை பார்த்துப், படைத்த இவ் இறைச்சி, சாலஅழகு இது; நாயனீரே! அமுது செய்து அருளும்” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

126

அன்ன இம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர்மன்னனார் திருக் காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன்இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டுபன்னெடுங் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் தாழ்ந்தான்.
சொற்பிரிப்பு
அன்ன இம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர்மன்னனார் திருக்காளத்தி மலையினார்க்கு இனிய நல்ஊன்இன்னமும் வேண்டும் என்னும் எழுபெரும் காதல் கண்டுபன்நெடும் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் தாழ்ந்தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

127

அவ்வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும்வெவ்விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளாச்செவ்விய அன்பு தாங்கித் திருக் கையில் சிலையும் தாங்கிமைவரை என்ன ஐயர் மருங்கு நின்று அகலா நின்றார்.
சொற்பிரிப்பு
அவ்வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும்வெவ்விலங்கு உள என்று அஞ்சி மெய்ம்மையின் வேறு கொள்ளாச்செவ்விய அன்பு தாங்கித் திருக்கையில் சிலையும் தாங்கிமைவரை என்ன, ஐயர் மருங்கு நின்று, அகலா நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

128

சார்வரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும்கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார் தம்மைஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டேநேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார்.
சொற்பிரிப்பு
சார்வரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும்கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார் தம்மைஆர்வமுன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டேநேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

129

கழை சொரி தரளக் குன்றில் கதிர் நிலவு ஒருபால் பொங்கமுழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒருபால் மொய்ப்பத்தழை கதிர்ப் பரிதியோடும் சந்திரன் தலை உவாவில்குழையணி காதர் வெற்பைக் கும்பிடச் சென்றால் ஒக்கும்.
சொற்பிரிப்பு
கழைசொரி தரளக் குன்றில் கதிர்நிலவு ஒருபால் பொங்க,முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒருபால் மொய்ப்பத்தழைகதிர்ப் பரிதியோடும் சந்திரன் தலை உவாவில்குழை அணி காதர் வெற்பைக் கும்பிடச் சென்றால் ஒக்கும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

130

விரவு பன்மணிகள் கான்ற விரிகதிர்ப் படலை பொங்கமரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதிபொர இரு சுடருக்கு அஞ்சிப் போயின புடைகள் தோறும்இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது எங்கும் எங்கும்.
சொற்பிரிப்பு
விரவு பன் மணிகள் கான்ற விரிகதிர்ப் படலை பொங்கமரகதம் ஒளிகொள் நீல மணிகளும் இமைக்கும் சோதிபொர இரு சுடருக்கு அஞ்சிப் போயின புடைகள் தோறும்இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது எங்கும் எங்கும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

131

செந்தழல் ஒளியில் பொங்கும் தீப மா மரங்களாலும்மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும்ஐந்தும் ஆறடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும்எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை.
சொற்பிரிப்பு
செந்தழல் ஒளியில் தோன்றும் தீப மா மரங்களாலும்,மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும்ஐந்தும் ஆறு அடக்கி உள்ளார் அரும்பெரும் சோதியாலும்எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

132

வரும் கறைப் பொழுது நீங்கி மல்கிய யாமஞ் சென்றுசுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டுக்கருங்கடல் என்ன நின்ற கண் துயிலாத வீரர்அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி.
சொற்பிரிப்பு
வருங்கறைப் பொழுது நீங்கி மல்கிய யாமம் சென்றுசுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டுக்கருங்கடல் என்ன நின்ற கண் துயிலாத வீரர்அரும்பெறல் தம்பிரானார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

133

ஏறுகாற்பன்றியோடும் இருங்கலை புனமான் மற்றும்வேறு வேறு இனங்கள் வேட்டை வினைத் தொழில் விரகினாலேஊறுசெய் காலம் சிந்தித்து உருமிகத் தெரியாப் போதின்மாறடு சிலையும் கொண்டு வள்ளலைத் தொழுது போந்தார்.
சொற்பிரிப்பு
ஏறுகால் பன்றியோடும் இருங்கலை புனமான் மற்றும்வேறு வேறு இனங்கள் வேட்டை வினைத்தொழில் விரகினாலேஊறுசெய் காலம் சிந்தித்து உருமிகத் தெரியாப் போதின்மாறு அடு சிலையும் கொண்டு வள்ளலைத் தொழுது போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

134

மொய் காட்டும் இருள் வாங்கி முகம் காட்டும் தேர் இரவிமெய் காட்டும் அன்புடைய வில்லியார் தனி வேட்டைஎய்காட்டின் மாவளைக்க இட்ட கரும் திரை எடுத்துக்கை காட்டும் வான் போலக் கதிர் காட்டி எழும் போதில்.
சொற்பிரிப்பு
மொய்காட்டும் இருள் வாங்கி முகம்காட்டும் தேர் இரவிமெய்காட்டும் அன்பு உடைய வில்லியார் தனி வேட்டைஎய்காட்டின் மாவளைக்க இட்டகரும் திரை எடுத்துக்கை காட்டுவான் போலக் கதிர் காட்டி எழும் போதில்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

135

எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்பக்கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார்மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழி பாடுசெய்து வரும் தவம் உடைய முனிவர் சிவ கோசரியார்.
சொற்பிரிப்பு
எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்பக்கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார்மைதழையும் கண்டத்து மலைமருந்தை வழிபாடுசெய்துவரும் தவம் உடைய முனிவர் சிவ கோசரியார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

136

வந்து திருமலையின் கண் வானவர் நாயகர் மருங்குசிந்தை நியமத்தோடும் செல் கின்றார் திரு முன்புவெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடிஇந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார் என்று அழிவார்.
சொற்பிரிப்பு
வந்து திரு மலையின்கண் வானவர் நாயகர் மருங்குசிந்தை நியமத்தோடும் செல்கின்றார் திருமுன்புவெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடி“இந்த அநுசிதம் கெட்டேன்! யார் செய்தார்?” என்று அழிவார்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

137

மேவநேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார்தேவ தேவ ஈசனே திருமுன்பே இது செய்துபோவதே இவ் வண்ணம் புகுத நீர் திரு உள்ளம்ஆவதே எனப் பதறி அழுது விழுந்து அலமந்தார்.
சொற்பிரிப்பு
“மேவ நேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார்;தேவ தேவ ஈசனே திருமுன்பே இதுசெய்துபோவதே! இவ்வண்ணம் புகுத நீர் திருஉள்ளம்ஆவதே?” எனப் பதறி, அழுது, விழுந்து அலமந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

138

பொருப்பில் எழுஞ் சுடர்க் கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான்இருப்பது இனி ஏன் என்று அவ் இறைச்சி எலும்புடன் இலையும்செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின்விருப்பின் ஒடும் திருமுகலிப் புனல் மூழ்கி விரைந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
“பொருப்பில் எழும் சுடர்க்கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான்இருப்பது இனி என்?”என்று அவ் இறைச்சி எலும்பு உடன் இலையும்செருப்படியும் நாயடியும் திருஅலகால் மாற்றிய பின்விருப்பினொடும் திருமுகலிப் புனல் மூழ்கி விரைந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

139

பழுது புகுந்தது அது தீரப் பவித்திரமாம் செயல் புரிந்துதொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கிவழுவில் திரு மஞ்சனமே முதலாக வரும் பூசைமுழுது முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார்.
சொற்பிரிப்பு
பழுது புகுந்தது தீரப் பவித்திரமாம் செயல்புரிந்துதொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கிவழுவில் திருமஞ்சனமே முதலாக வரும் பூசைமுழுது முறைமையில் முடித்து முதல்வனார் கழல்பணிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

140

பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால்துணிந்த மறை மொழியாலே துதி செய்து சுடர்த் திங்கள்அணிந்த சடை முடிக் கற்றை அங்கணரை விடை கொண்டுதணிந்த மனத் திருமுனிவர் தபோ வனத்தினிடைச் சார்ந்தார்.
சொற்பிரிப்பு
பணிந்து எழுந்து, “தனி முதலாம் பரன்” என்று பன்முறையால்துணிந்த மறை மொழியாலே துதி செய்து, சுடர்த்திங்கள்அணிந்த சடை முடிக் கற்றை அங்கணரை விடைகொண்டுதணிந்த மனத் திருமுனிவர் தபோவனத்தின் இடைச்சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

141

இவ் வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனி இப்பால்மைவண்ணக் கருங் குஞ்சி வன வேடர் பெருமானார்கைவண்ணச் சிலை வளைத்துக் கான் வேட்டை தனி ஆடிச்செய்வண்ணத் திறம் மொழிவேன் தீவினையின் திறம் ஒழிவேன்.
சொற்பிரிப்பு
இவ்வண்ணம் பெருமுனிவர் ஏகினார்; இனி இப்பால்மைவண்ணக் கருங்குஞ்சி வனவேடர் பெருமானார்கைவண்ணச் சிலை வளைத்துக் கான் வேட்டை தனிஆடிச்செய்வண்ணத் திறம் மொழிவேன் தீவினையின் திறம் ஒழிவேன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

142

திரு மலையின் புறம் போன திண்ணனார் செறி துறுகல்பெருமலைகள் இடைச் சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்துவருவனவும் துணி படுத்து மான் இனங்கள் கான் இடை நின்றுஒரு வழிச் சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி.
சொற்பிரிப்பு
திருமலையின் புறம் போன திண்ணனார் செறி துறுகல்பெருமலைகள் இடைச்சரிவில் பெரும்பன்றி புனமேய்ந்துவருவனவும் துணிபடுத்து மான்இனங்கள் கான் இடைநின்றுஒருவழிச்சென்று ஏறுதுறை ஒளிநின்று கொன்றருளி,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

143

பயில் விளியால் கலை அழைத்துப் பாடு பெற ஊடுருவும்அயில் முகவெங் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள்துயில் இடையில் கிடை யெய்து தொடர்ந்து கடமைகள் எய்துவெயில் படு வெங்கதிர் முதிரத் தனி வேட்டை வினை முடித்தார்.
சொற்பிரிப்பு
பயில் விளியால் கலை அழைத்துப் பாடு பெற ஊடு உருவும்அயில்முக வெங் கணைபோக்கி அடிஒற்றி மரைஇனங்கள்துயில் இடையில் கிடை எய்து தொடர்ந்து கடமைகள் எய்துவெயில்படு வெங்கதிர் முதிரத் தனிவேட்டை வினைமுடித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

144

பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல்இட்டு அருகு தீக் கடை கோல் இரும் சுரிகை தனை உருவிவெட்டி நறுங் கோல் தேனும் மிக முறித்துத் தேக்கு இலையால்வட்டமுறு பெருங் கல்லை மருங்கு புடை பட அமைத்தார்.
சொற்பிரிப்பு
பட்ட வன விலங்கு எல்லாம் படர்வனத்தில் ஒருசூழல்இட்டு அருகு தீக்கடைகோல் இருஞ்சுரிகை தனை உருவிவெட்டிநறும் கோல்தேனை மிக முறித்துத் தேக்கு இலையால்வட்டம் உறு பெருங்கல்லை மருங்கு புடை பட அமைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

145

இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில்வெம் தழலைப் பிறப்பித்து மிக வளர்த்து மிருகங்கள்கொந்தி அயில் அலகம்பால் குட்டம் இட்டுக் கொழுப்பரிந்துவந்தன கொண்டு எழும் தழலில் வக்குன வக்குவித்து.
சொற்பிரிப்பு
இந்தனத்தை முறித்து அடுக்கி எரிகடையும் அரணியினில்வெந்தழலைப் பிறப்பித்து மிகவளர்த்து மிருகங்கள்கொந்தி அயில் அலகு அம்பால் குட்டம் இட்டுக் கொழுப்பு அரிந்துவந்தன கொண்டு எழுந்தழலில் வக்குவன வக்குவித்து,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

146

வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின்ஆய உறுப்பு இறைச்சி யெலாம் அரிந்து ஒருகல் இலையில் இட்டுகாய நெடும் கோல் கோத்துக் கனலின் கண் உறக்காய்ச்சிதூய திரு அமுது அமைக்கச் சுவை காணல் உறுகின்றார்.
சொற்பிரிப்பு
வாயம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின்ஆய உறுப்பு இறைச்சி எலாம் அரிந்து ஒரு கல்லையில் இட்டுக்காய நெடும் கோல்கோத்துக் கனலின் கண் உறக் காய்ச்சித்தூய திரு அமுது அமைக்கச் சுவை காணல் உறுகின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

147

எண்ணிறைந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும்வண்ண எரி வாயின் கண் வைத்தது எனக் காளத்திஅண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்குத்திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது.
சொற்பிரிப்பு
எண் இறந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும்வண்ண எரி வாயின் கண் வைத்தது எனக் காளத்திஅண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்குத்திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திருஅமுது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

148

நல்ல பதமுற வெந்து நாவின் கண் இடும் இறைச்சிகல்லையினிற் படைத்துத் தேன் பிழிந்து கலந்து அது கொண்டுவல் விரைந்து திருப் பள்ளித் தாமமும் தூய் மஞ்சனமும்ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
நல்ல பதம் உற வெந்து நாவின்கண் இடும் இறைச்சிகல்லையினில் படைத்துத் தேன் பிழிந்து கலந்து அது கொண்டுவல்விரைந்து திருப்பள்ளித்தாமமும் தூய் மஞ்சனமும்ஒல்லையினின் முன்புபோல் உடன்கொண்டு வந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

149

வந்து திருக் காளத்தி மலை ஏறி வனசரர்கள்தந்தலைவனார் இமையோர் தலைவனார் தமை எய்திஅந்தணனார் பூசையினை முன்பு போல் அகற்றிய பின்முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார்.
சொற்பிரிப்பு
வந்து திருக்காளத்தி மலை ஏறி வனவேடர்தம் தலைவனார் இமையோர் தலைவனார் தமை எய்திஅந்தணனார் பூசையினை முன்புபோல் அகற்றியபின்முந்தை முறை தம் உடைய பூசனையின் செயல்முடிப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

150

ஊனமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்றால்ஏனமொடு மான் கலைகள் மரை கடமை இவையிற்றில்ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன்தேனும் உடன் கலந்து இதுதித்திக்கும் என மொழிந்தார்.
சொற்பிரிப்பு
ஊன் அமுது கல்லை உடன் வைத்து “இது முன்னையின் நன்றால்;ஏனமொடு மான்கலைகள் மரை கடமை இவை இற்றில்ஆனஉறுப்பு இறைச்சி அமுது; அடியேனும் சுவைகண்டேன்;தேனும் உடன் கலந்தது இது தித்திக்கும்” என மொழிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

151

இப் பரிசு திரு அமுது செய்வித்துத் தம்முடையஒப்பரிய பூசனை செய்து அந்நெறியில் ஒழுகுவார்எப்பொழுதும் மேன்மேல்வந்து எழும் அன்பால் காளத்திஅப்பர் எதிர் அல்லுறங்கார் பகல் வேட்டை ஆடுவார்.
சொற்பிரிப்பு
இப்பரிசு திருஅமுது செய்வித்துத் தம்உடையஒப்பரிய பூசனை செய்து அந்நெறியில் ஒழுகுவார்எப்பொழுதும் மேன்மேல் வந்து எழும்அன்பால் காளத்திஅப்பர் எதிர் அல் உறங்கார் பகல் வேட்டை ஆடுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

152

மாமுனிவர் நாள் தோறும் வந்து அணைந்து வன வேந்தர்தாம் முயலும் பூசனைக்குச் சால மிகத் தளர்வு எய்தித்தீமை என அது நீக்கிச் செப்பிய ஆகம விதியால்ஆமுறையில் அர்ச்சனை செய்து அந் நெறியில் ஒழுகுவரால்.
சொற்பிரிப்பு
மாமுனிவர் நாள்தோறும் வந்து அணைந்து வனவேந்தர்தாம்முயலும் பூசைனைக்குச் சால மிகத் தளர்வு எய்தித்தீமை என அதுநீக்கிச் செப்பிய ஆகமவிதியால்ஆம் முறையில் அர்ச்சனை செய்து அந்நெறியில் ஒழுகுவரால்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

153

நாணனொடு காடனும் போய் நாகனுக்குச் சொல்லியபின்ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டுபேணு மகனார் தம் பால் வந்து எல்லாம் பேதித்துக்காணு நெறி தங்கள் குறி வாராமல் கை விட்டார்.
சொற்பிரிப்பு
நாணனொடு காடனும் போய் நாகனுக்குச் சொல்லிய பின்ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டுபேணு மகனார் தம்பால் வந்து எல்லாம் பேதித்துக்காணு நெறி தங்கள் குறி வாராமல் கைவிட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

154

முன்பு திருக் காளத்தி முதல்வனார் அருள் நோக்கால்இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கைத்தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அறஅன்பு பிழம் பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ?.
சொற்பிரிப்பு
முன்பு திருக்காளத்தி முதல்வனார் அருள் நோக்கால்இன்புறு வேதகத்து இரும்பு பொன்ஆனால் போல், யாக்கைதன்பரிசும் வினை இரண்டும் சாரு மலம் மூன்றும் அறஅன்பு பிழம்பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

155

அந்நிலையில் அன்பனார் அறிந்த நெறி பூசிப்பமன்னிய ஆகமப் படியால் மாமுனிவர் அருச்சித்து இங்குஎன்னுடைய நாயகனே இது செய்தார் தமைக் காணேன்உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும் என.
சொற்பிரிப்பு
அந்நிலையில் அன்பனார் அறிந்த நெறி பூசிப்ப,மன்னிய ஆகமப்படியால் மாமுனிவர் அருச்சித்து” இங்குஎன்னுடைய நாயகனே! இது செய்தார் தமைக்காணேன்;உன்னுடைய திருஅருளால் ஒழித்து அருள வேண்டும்” என,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

156

அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர் தம்பாலேமின் திகழும் சடை மவுலி வேதியர் தாம் எழுந்து அருளிவன்திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல்நன்றவன் தன் செயல் தன்னை நாம் உரைப்பக் கேள் என்று.
சொற்பிரிப்பு
அன்று இரவு கனவின்கண் அருள் முனிவர் தம்பாலேமின் திகழும் சடை மவுலி வேதியர் தாம் எழுந்தருளி“வன் திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல்;நன்று அவன் தன் செயல் தன்னை நாம் உரைப்பக் கேள்” என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

157

அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும்அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு என்றும்அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும்அவனுடைய நிலை இவ்வாறு அறிநீ என்று அருள் செய்வார்.
சொற்பிரிப்பு
“அவனுடைய வடிவு எல்லாம் நம்பக்கல் அன்பு” என்றும்,“அவனுடைய அறிவு எல்லாம் நமை அறியும் அறிவு” என்றும்,“அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம்” என்றும்,“அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ” என்று அருள்செய்வார்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

158

பொருட்பினில் வந்தவன் செய்யும் பூசனைக்கு முன்பென்மேல்அருப்புறுமென் மலர்முன்னை அவை நீக்கும் ஆதரவால்விருப்புரும் அன்பெனும் வெள்ளக்கால் பெருகிற் றெனவீழ்ந்தசெருப்படி அவ்விளம்பருவச் சேயடியிற் சிறப்புடைத்தால்.
சொற்பிரிப்பு
“பொருப்பினில் வந்தவன் செய்யும் பூசனைக்கு முன்பு என்மேல்அருப்புறு மென் மலர் முன்னை அவைநீக்கும் ஆதரவால்விருப்புறும் அன்பு எனும் வெள்ளம் கால் பெருகிற்று என வீழ்ந்தசெருப்பு அடி அவ் இளம் பருவச் சேயடியில் சிறப்புடைத்தால்”.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

159

உருகிய அன்பொழிவின்றி நிறைந்த அவன் உருவென்னும்பெருகியகொள் கலமுகத்தில் பிறங்கியினி தொழுகுதலால்ஒருமுனிவன் செவிஉமிழும் உயர்கங்கை முதல்தீர்த்தப்பொருபுனலின் எனக்கவன்தன் வாயுமிழும் புனல்புனிதம்.
சொற்பிரிப்பு
“உருகிய அன்பு ஒழிவின்றி நிறைந்த அவன் உரு என்னும்பெருகிய கொள் கலம் முகத்தில் பிறங்கி இனிது ஒழுகுதலால்ஒரு முனிவன் செவி உமிழும் உயர் கங்கை முதல் தீர்த்தப்பொருபுனலின் எனக்கு அவன்தன் வாய் உமிழும் புனல் புனிதம்”
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

160

இம்மலைவந் தெனையடைந்த கானவன்தன் இயல்பாலேமெய்மலரும் அன்புமேல் விரிந்தனபோல் விழுதலால்செம்மலர்மேல் அயனொடுமால் முதல்தேவர் வந்துபுனைஎம்மலரும் அவன் தலையால் இடுமலர்போல் எனக்கொல்வா.
சொற்பிரிப்பு
“இம்மலை வந்து எனை அடைந்த கானவன் தன் இயல்பாலேமெய்ம்மலரும் அன்புமேல் விரிந்தனபோல் விழுதலால்செம்மலர்மேல் அயனொடு மால் முதல் தேவர் வந்து புனைஎம்மலரும் அவன் தலையால் இடுமலர்போல் எனக்கு ஒவ்வா”.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

161

வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால்நையுமனத் தினிமையினால் நையமிக மென்றிடலால்செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியில்எய்யும்வரிச் சிலையவந்தான் இட்டஊன் எனக்கினிய.
சொற்பிரிப்பு
“வெய்ய கனல் பதம் கொள்ள வெந்து உளதோ எனும் அன்பால்நையுமனத்து இனிமையினில் நைய மிக மென்றிடலால்செய்யு மறை வேள்வியோர் முன்பு தரும் திருந்து அவியில்எய்யும் வரிச் சிலையவன் தான் இட்ட ஊன் எனக்கு இனிய.”
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

162

மன்பெருமா மறைமொழிகள் மாமுனிவர் மகிழ்ந்துரைக்கும்இன்பமொழித் தோத்திரங்கள் மந்திரங்களியாவையினும்முன்பிருந்து மற்றவன்தன்முகமலர அகநெகிழஅன்பில்நினைந் தெனையல்லால் அறிவுறா மொழிநல்ல.
சொற்பிரிப்பு
“மன் பெரு மா மறை மொழிகள் மாமுனிவர் மகிழ்ந்து உரைக்கும்இன்பமொழித் தோத்திரங்கள் மந்திரங்கள் யாவையினும்முன்பு இருந்து மற்றவன் தன் முகமலர அகநெகிழஅன்பில் நினைந்து எனைஅல்லால் அறிவுஉறா மொழி நல்ல”
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

163

உனக்கவன் தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால்எனக்கு அவன் தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய்மனக் கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள் செய்துபுனல் சடிலத் திரு முடியார் எழுந்து அருளிப் போயினார்.
சொற்பிரிப்பு
“உனக்கு அவன் தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால்எனக்கு அவன் தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய்மனக்கவலை ஒழிக” என்று மறைமுனிவர்க்கு அருள்செய்துபுனல் சடிலத் திருமுடியார் எழுந்தருளிப் போயினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

164

கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குல் இடைப்புனை தவத்து மாமுனிவர் புலர் அளவும் கண் துயிலார்மனம் உறும் அற்புதமாகி வரும் பயமும் உடன் ஆகித்துனை புரவித் தனித் தேர் மேல் தோன்றுவான் கதிர் தோன்ற.
சொற்பிரிப்பு
கனவுநிலை நீங்கியபின் விழித்து உணர்ந்து கங்குல் இடைப்புனைதவத்து மாமுனிவர் புலர்வளவும் கண் துயிலார்மனம் உறும் அற்புதம் ஆகி வரும் பயமும் உடன்ஆகித்துனை புரவித் தனித்தேர் மேல் தோன்றுவான் கதிர்தோன்ற,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

165

முன்னை நாள் போல் வந்து திருமுகலிப் புனல் மூழ்கிப்பன் முறையும் தம்பிரான் அருள் செய்த படி நினைந்துமன்னு திருக் காளத்தி மலை ஏறி முன்பு போல்பிஞ்ஞகனைப் பூசித்துப் பின்பாக ஒளித்திருந்தார்.
சொற்பிரிப்பு
முன்னை நாள் போல் வந்து திருமுகலிப் புனல் மூழ்கிப்,பன்முறையும் தம்பிரான் அருள்செய்தபடி நினைந்து,மன்னு திருக்காளத்தி மலை ஏறி, முன்பு போல்பிஞ்ஞகனைப் பூசித்துப் பின்பாக ஒளித்து இருந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

166

கருமுகில் என்ன நின்ற கண் படா வில்லியார் தாம்வருமுறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த காலைஅருமறை முனிவனார் வந்தணை வதன் முன்னம் போகித்தருமுறை முன்பு போலத் தனிப்பெரு வேட்டை ஆடி.
சொற்பிரிப்பு
கருமுகில் என்ன நின்ற கண்படா வில்லியார் தாம்வருமுறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த காலைஅருமறை முனிவனார் வந்து அணைவதன் முன்னம் போகித்,தருமுறை முன்பு போலத் தனிப் பெரு வேட்டை ஆடி,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

167

மாறில் ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலும் சென்னிஏறு நாண் மலரும் வெவ்வேறு இயல்பினில் அமைத்துக் கொண்டுதேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்திஆறுசேர் சடையார் தம்மை அணுக வந்து அணையா நின்றார்.
சொற்பிரிப்பு
மாறு இல் ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலும் சென்னிஏறு நாண் மலரும் வெவ்வேறு இயல்பினில் அமைத்துக் கொண்டு,தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்திஆறுசேர் சடையார் தம்மை அணுக, வந்து அணையா நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

168

இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன்மொய்த்த பல்சகுனம் எல்லாம் முறை முறை தீங்கு செய்யஇத் தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரங் காட்டும்அதனுக்கு என் கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில்.
சொற்பிரிப்பு
“இத்தனை பொழுது தாழ்த்தேன்” என விரைந்து ஏகுவார் முன்மொய்த்த பல் சகுனம் எல்லாம் முறைமுறை தீங்கு செய்ய,“இத்தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரம் காட்டும்;அத்தனுக்கு என்கொல் கெட்டேன்! அடுத்தது” என்று அணையும் போதில்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

169

அண்ணலார் திருக் காளத்தி அடிகளார் முனிவனார்க்குதிண்ணனார் பரிவு காட்டத் திரு நயனத்தில் ஒன்றுதுண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அவ்வண்ணவெஞ் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார்.
சொற்பிரிப்பு
அண்ணலார் திருக்காளத்திஅடிகளார் முனிவனார்க்குத்திண்ணனார் பரிவு காட்டத் திருநயனத்தில் ஒன்றுதுண் என உதிரம் பாய இருந்தனர்; தூரத்தே அவ்வண்ண வெஞ்சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

170

வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நன்னீர்சிந்திடக் கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழக்கொந்தவர் பள்ளித் தாமம் குஞ்சி நின்று அலைந்து சோரப்பைந்தழை அலங்கல் மார்பர் நிலத்து இடைப் பதைத்து வீழ்ந்தார்.
சொற்பிரிப்பு
வந்தவர் குருதி கண்டார்; மயங்கினார்; வாயில் நன்னீர்சிந்திடக், கையில் ஊனும் சிலை உடன் சிதறி வீழக்,கொந்தலர் பள்ளித் தாமம் குஞ்சி நின்று அலைந்து சோரப்,பைந்தழை அலங்கல் மார்பர் நிலத்து இடைப் பதைத்து வீழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

171

விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வதுஒழிந்திடக் காணார் செய்வது அறிந்திலர் உயிர்த்து மீளஅழிந்து போய் வீழ்ந்தார் தேறி யாரிது செய்தார் என்னாஎழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும்.
சொற்பிரிப்பு
விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி; வீழ்வதுஒழிந்திடக் காணார்; செய்வது அறிந்திலர் உயிர்த்து மீளஅழிந்து போய் வீழ்ந்தார்; தேறி “யார் இது செய்தார்?” என்னாஎழுந்தனர்; திசைகள் எங்கும் பார்த்தனர்; எடுத்தார் வில்லும்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

172

வாளியுந் தெரிந்து கொண்டு இம் மலையிடை எனக்கு மாறாமீளி வெம் மறவர் செய்தார் உளர் கொலோ? விலங்கின் சாதிஆளி முன்னாகி யுள்ள விளைத்தவோ? அறியேன் என்றுநீளிருங் குன்றைச் சாரல் நெடிதிடை நேடிச் சென்றார்.
சொற்பிரிப்பு
வாளியும் தெரிந்து கொண்டு ”இம் மலை இடை எனக்கு மாறாமீளி வெம் மறவர் செய்தார் உளர் கொலோ? விலங்கின் சாதிஆளி முன் ஆகி உள்ள விளைத்தவோ? அறியேன்” என்றுநீளிரும் குன்றச் சாரல் நெடிது இடை நேடிச் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

173

வேடரைக் காணார் தீய விலங்குகள் மருங்கும் எங்கும்நாடியுங் காணார் மீண்டும் நாயனார் தம்பால் வந்துநீடிய சோகத்தோடு நிறை மலர்ப் பாதம் பற்றிமாடுறக் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணீர் வார.
சொற்பிரிப்பு
வேடரைக் காணார்; தீய விலங்குகள் மருங்கும் எங்கும்நாடியும் காணார்; மீண்டு நாயனார் தம்பால் வந்துநீடிய சோகத் தோடு நிறைமலர்ப் பாதம் பற்றிமாடுறக் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணீர் வார;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

174

பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ?ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ ?மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ?ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும்.
சொற்பிரிப்பு
“பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ?ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ?மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ?ஆவதுஒன்று அறிகிலேன் யான்; என் செய்கேன்;” என்று பின்னும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

175

என் செய்தால் தீருமோதான்? எம்பிரான் திறத்துத் தீங்குமுன்செய்தார் தம்மைக் காணேன் மொய் கழல் வேடர் என்றும்மின்செய்வார் பகழிப் புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடிப்பொன்செய் தாழ் வரையிற் கொண்டு வருவன் நான் என்று போனார்.
சொற்பிரிப்பு
“என் செய்தால் தீருமோ தான்?; எம்பிரான் திறத்துத் தீங்குமுன்செய்தார் தம்மைக் காணேன்; மொய்கழல் வேடர் என்றும்மின்செய்வார் பகழிப் புண்கள் தீர்க்கு மெய் மருந்து தேடிப்பொன்செய் தாழ் வரையில் கொண்டு வருவன் நான்” என்று போனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

176

நினைத்தனர் வேறு வேறு நெருங்கிய வனங்கள் எங்கும்இனத்திடை பிரிந்த செங்கணேறு என வெருக் கொண்டு எய்திப்புனத்திடைப் பறித்துக் கொண்டு பூத நாயகன்பால் வைத்தமனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார்.
சொற்பிரிப்பு
நினைத்தனர் வேறு வேறு நெருங்கிய வனங்கள் எங்கும்இனத்து இடைப் பிரிந்த செங்கண் ஏறு என வெருக்கொண்டு எய்திப்புனத்து இடைப் பறித்துக் கொண்டு பூத நாயகன்பால் வைத்தமனத்தினும் கடிது வந்து அம் மருந்துகள் பிழிந்து வார்த்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

177

மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக் காளத்திக்கொற்றவர் கண்ணில் புண்ணீர் குறை படாது இழியக் கண்டும்இற்றையின் நிலைமைக்கு என்னோ இனிச் செயல் என்று பார்ப்பார்உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரைமுன் கண்டார்.
சொற்பிரிப்பு
மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக்காளத்திக்கொற்றவர் கண்ணில் புண்ணீர் குறைபடாது இழியக் கண்டும்“இற்றையின் நிலைமைக்கு என்னோ இனிச்செயல்” என்று பார்ப்பார்“உற்றநோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன்” எனும் உரை முன் கண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

178

இதற்கினி என்கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண்அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கும் என்றுமதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தங்கண்முதற்சரம் அடுத்து வாங்கி முதல்வர் தம் கண்ணில் அப்ப.
சொற்பிரிப்பு
“இதற்கு இனி என் கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண்அதற்கு இது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கும்” என்றுமதர்த்து எழும் உள்ளத்தோடும் மகிழ்ந்து முன் இருந்து தங்கண்முதல் சரம் மடுத்து வாங்கி முதல்வர் தம் கண்ணில் அப்ப,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

179

நின்ற செங்குருதி கண்டார் நிலத்தின் நின்றேறப் பாய்ந்தார்குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடிநன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்றஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார்.
சொற்பிரிப்பு
“நின்ற செங்குருதி கண்டார்; நிலத்தின் நின்று ஏறப் பாய்ந்தார்;குன்று என வளர்ந்த தோள்கள் கொட்டினார்; கூத்தும் ஆடி“நன்று நான் செய்த இந்த மதி” என நகையும் தோன்றஒன்றிய களிப்பினாலே உன்மத்தர் போல மிக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

180

வலத்திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார் தம்நலத்தினைப் பின்னும் காட்ட நாயனார் மற்றைக் கண்ணில்உலப்பில் செம் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர்குலப்பெருந் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார்.
சொற்பிரிப்பு
வலத் திருக்கண்ணில் தங்கண் அப்பிய வள்ளலார் தம்நலத்தினைப் பின்னும் காட்ட நாயனார் மற்றைக் கண்ணில்உலப்பில் செங்குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர்குலப்பெரும் தவத்தால் வந்த கொள்கையின் உம்பர் மேலார்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

181

கண்டபின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்றுபுண்டரு குருதி நிற்க மற்றைக் கண் குருதி பொங்கிமண்டுமற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும்உண்டொரு கண் அக்கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று.
சொற்பிரிப்பு
கண்டபின் ”கெட்டேன்! எங்கள் காளத்தியார் கண் ஒன்றுபுண் தரு குருதி நிற்க, மற்றைக்கண் குருதி பொங்கிமண்டு மற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன்; இன்னும்உண்டு ஒரு கண்;அக் கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன்” என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

182

கண்ணுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பிற் காணும் நேர்பாடுஎண்ணுவார் தம்பிரான் தன் திருக் கண்ணில் இடக்கால் ஊன்றிஉண்ணிறை விருப்பினோடும் ஒரு தனிப் பகழி கொண்டுதிண்ணனார் கண்ணில் ஊன்றத் தரித்திலர் தேவ தேவர்.
சொற்பிரிப்பு
கண்நுதல் கண்ணில் தங்கண் இடந்து அப்பில் காணும் நேர்பாடுஎண்ணுவார் தம்பிரான் தன் திருக்கண்ணில் இடக்கால் ஊன்றிஉண்நிறை விருப்பினோடும் ஒரு தனிப் பகழி கொண்டுதிண்ணனார் கண்ணில் ஊன்றத் தரித்திலர் தேவ தேவர்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

183

செங்கண் வெள்விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்டஅங்கணர் திருக் காளத்தி அற்புதர் திருக்கை அன்பர்தங்கண் முன் இடக்குங் கையைத் தடுக்க மூன்று அடுக்கு நாககங்கணர் அமுதவாக்குக் கண்ணப்ப நிற்க என்றே.
சொற்பிரிப்பு
செங்கண் வெள்விடையின் பாகர், திண்ணனார் தம்மை ஆண்டஅங்கணர், திருக்காளத்தி அற்புதர் திருக்கை அன்பர்தங்கண் முன் இடக்கும் கையைத் தடுக்க மூன்று அடுக்கு நாககங்கணர் அமுதவாக்குக் “கண்ணப்ப நிற்க” என்ற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

184

கானவர் பெருமானார் தங்கண் இடந்து அப்பும் போதும்ஊனமுது உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும்ஞான மாமுனிவர் கண்டார் நான்முகன் முதலாய் உள்ளவானவர் வளர் பூ மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப.
சொற்பிரிப்பு
கானவர் பெருமானார் தம் கண்இடந்து அப்பும் போதும்ஊன் அமுது உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும்ஞானமா முனிவர் கண்டார்; நான்முகன் முதலாய் உள்ளவானவர் வளர் பூமாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

185

பேறினி இதன் மேல் உண்டோ ? பிரான் திருக் கண்ணில் வந்தஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்தப்ப உதவும் கையைஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு என் வலத்தில்மாறிலாய் நிற்க என்று மன்னு பேர் அருள் புரிந்தார்.
சொற்பிரிப்பு
பேறு இனி இதன் மேல் உண்டோ? பிரான் திருக்கண்ணில் வந்தஊறு கண்டு அஞ்சித் தங்கண் இடந்து அப்ப உதவும் கையைஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக்கொண்டு “என் வலத்தில்மாறிலாய்! நிற்க” என்று மன்னு பேரருள் புரிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

186

மங்குல் வாழ் திருக் காளத்தி மன்னனார் கண்ணில் புண்ணீர்தங்கணால் மாற்றப் பெற்ற தலைவர் தாள் தலைமேற் கொண்டேகங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில் கலயனாராம்பொங்கிய புகழின் மிக்கார் திருத் தொண்டு புகலல் உற்றேன்.
சொற்பிரிப்பு
மங்குல் வாழ் திருக்காளத்தி மன்னனார் கண்ணில் புண்ணீர்தங்கணால் மாற்றப் பெற்ற தலைவர் தாள் தலைமேல் கொண்டேகங்கைவாழ் சடையார் வாழும் கடவூரில் கலயனாராம்பொங்கி புகழின் மிக்கார் திருத்தொண்டு புகலல் உற்றேன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.