1
புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றிப் புவி அளிக்கும்தண்டரள வெண்கவிகைத் தார் வளவர் சோணாட்டில்வண்டறை பூஞ் சோலை வயல் மருதத் தண் பணை சூழ்ந்துஎண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினனூர்.
சொற்பிரிப்பு
புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றிப் புவி அளிக்கும்தண் தரள வெண் கவிகைத் தார் வளவர் சோணாட்டில்வண்டு அறை பூஞ்சோலை வயல் மருதத் தண்பணை சூழ்ந்துஎண் திசையும் ஏறிய சீர் எயிர் மூதூர் எயினனூர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
வேழக் கரும்பினோடு மென் கரும்பு தண்வயலில்தாழக் கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மையதாய்வாழக் குடி தழைத்து மன்னிய அப் பொற் பதியில்ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாதனார்.
சொற்பிரிப்பு
வேழக் கரும்பினொடு மென் கரும்பு தண் வயலில்தாழக் கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மையதாய்வாழக் குடி தழைத்து மன்னிய அப் பொற்பதியில்ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாதனார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
தொன்மைத் திரு நீற்றுத் தொண்டின் வழிபாட்டின்நன்மைக்கண் நின்ற நலம் என்றும் குன்றாதார்மன்னர்க்கு வென்றி வடிவாட் படை பயிற்றும்தன்மைத் தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார்.
சொற்பிரிப்பு
தொன்மைத் திருநீற்றுத் தொண்டின் வழிபாட்டின்நன்மைக்கண் நின்ற நலம் என்றும் குன்றாதார்மன்னர்க்கு வென்றி வடிவாள் படை பயிற்றும்தன்மைத் தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம்நாளும் பெரு விருப்பால் நண்ணுங் கடப் பாட்டில்தாளும் தட முடியும் காணாதார் தம்மையுந் தொண்டுஆளும் பெருமான் அடித் தொண்டர்க்கு ஆக்குவார்.
சொற்பிரிப்பு
வாளின் படைபயிற்சி வந்த வளம் எல்லாம்நாளும் பெருவிருப்பில் நண்ணும் கடப்பாட்டில்தாளும் தடமுடியும் காணாதார் தம்மையும் தொண்டுஆளும் பெருமான் அடித் தொண்டர்க்கு ஆக்குவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
நள்ளார்களும் போற்றும் நன்மைத் துறையின் கண்எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள்தள்ளாத தங்கள் தொழில் உரிமைத் தாயத்தின்உள்ளான் அதிசூரன் என்பான் உளன் ஆனான்.
சொற்பிரிப்பு
நள்ளார்களும் போற்றும் நன்மைத் துறையின் கண்எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள்தள்ளாத தங்கள் தொழில் உரிமைத் தாயத்தின்உள்ளான் அதிசூரன் என்பான் உளன் ஆனான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
மற்ற அவனும் கொற்ற வடிவாட் படைத் தொழில்கள்கற்றவர்கள் தன்னில் கடந்துள்ளார் இல்லை எனும்பெற்றிமையான் மா நிலத்து மிக்க பெருமிதம் வந்துஉற்றுலகில் தன்னையே சால மதித்து உள்ளான்.
சொற்பிரிப்பு
மற்றவனும் கொற்ற வடிவாள் படைத்தொழில்கள்கற்றவர்கள் தன்னில் கடந்துளார் இல்லை எனும்பெற்றிமையால் மா நிலத்து மிக்க பெருமிதம் வந்துஉற்று உலகில் தன்னையே சால மதித்து உள்ளான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
தானாள் விருத்தி கெடத் தங்கள் குலத் தாயத்தின்ஆனாத செய் தொழிலாம் ஆசிரியத் தன்மை வளம்மேனாளுந் தான் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால்ஏனாதி நாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான்.
சொற்பிரிப்பு
தான் ஆள் விருத்தி கெடத் தங்கள் குலத் தாயத்தின்ஆனாத செய்தொழிலாம் ஆசிரியத் தன்மை வளம்மேனாளும் தான் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால்ஏனாதி நாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
கதிரோன் எழ மழுங்கிக் கால்சாயுங்காலைமதி போல் அழிந்து பொறா மற்றவனுஞ் சுற்றப்பதியோர் உடன் கூடப் பண்ணி அமர் மேல் சென்றுஎதிர் போர் விளைப்பதற்கே எண்ணித் துணிந்து எழுந்தான்.
சொற்பிரிப்பு
கதிரோன் எழ மழுங்கிக் கால்சாயும் காலைமதிபோல் அழிந்து பொறா மற்றவனும் சுற்றப்பதியோர் உடன் கூடப் பண்ணி அமர்மேல் சென்றுஎதிர்போர் விளைப்பதற்கே எண்ணித் துணிந்து எழுந்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
தோள் கொண்ட வல் ஆண்மைச் சுற்றத்தொடும் துணையாம்கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டத்தொடுஞ் சென்றுவாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது எனமூள்கின்ற செற்றத்தான் முன் கடையில் நின்று அழைத்தான்.
சொற்பிரிப்பு
தோள் கொண்ட வல் ஆண்மைச் சுற்றத்தொடும் துணையாம்கோள்கொண்ட போர் மள்ளர் கூட்டத்தொடும் சென்று“வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது” எனமூள்கின்ற செற்றத்தான் முன் கடையின் நின்று அழைத்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
வெங்கட் புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும்பைங்கண் குறுநரியே போல்வான் படை கொண்டுபொங்கிப் புறம் சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றேஅங்கட் கடை நின்று அழைத்தான் ஒலி கேளா.
சொற்பிரிப்பு
வெங்கண் புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும்பைங்கண் குறுநரியே போல்வான் படை கொண்டுபொங்கிப் புறம் சூழ்ந்து போர் குறித்து நேர்நின்றேஅங்கண் கடை நின்று அழைத்தான் ஒலிகேளா.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
ஆர் கொல் பொர அழைத்தார் என்றரி ஏற்றின் கிளர்ந்துசேர்வு பெறக் கச்சில் செறிந்த உடை மேல் வீக்கிவார் கழலுங் கட்டி வடிவாட் பலகைகொடுபோர் முனையில் ஏனாதி நாதர் புறப்பட்டார்.
சொற்பிரிப்பு
“ஆர் கொல் பொர அழைத்தார்?” என்று அரி ஏற்றில் கிளர்ந்துசேர்வு பெறக் கச்சில் செறிந்த உடை மேல் வீக்கிவார்கழலும் கட்டி வடிவாள்பலகைகொடுபோர் முனையில் ஏனாதி நாதர் புறப்பட்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
புறப்பட்ட போதின் கட் போர்த் தொழில்கள் கற்கும்விறல் பெருஞ் சீர்க் காளையர்கள் வேறு இடத்து நின்றார்மறப் படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்துசெறற்கரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள்.
சொற்பிரிப்பு
புறப்பட்ட போதின் கண் போர்த்தொழில்கள் கற்கும்விறல்பெரும் சீர்க் காளையர்கள் வேறு இடத்து நின்றார்மறப்படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்துசெறற்கு அரும்போர் வீரர்க்கு இருமருங்கும் சேர்ந்தார்கள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
வந்தழைத்த மாற்றான் வயப் புலிப் போத்து அன்னார் முன்நம் தமது வாள் பயிற்று நற்றாயம் கொள்ளுங்கால்இந்த வெளி மேற்கை வகுத்து இருவேம் பொரு படையும்சந்தித்து அமர் விளைத்தால் சாயாதார் கொள்வதென.
சொற்பிரிப்பு
வந்து அழைத்த மாற்றான் வயப்புலிப் போத்து அன்னார் முன்“நந்தமது வாள் பயிற்றும் நல்தாயம் கொள்ளும் கால்இந்தவெளி மேல்கை வகுத்து இருவேம் பொருபடையும்சந்தித்து அமர்விளைத்தால் சாயாதார் கொள்வது என”.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதி நாதர் அதுநன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்துசென்றவன் முன் சொன்ன செருக் களத்துப் போர் குறிப்பக்கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார்.
சொற்பிரிப்பு
என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதி நாதர்”அதுநன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன்” என்று உள் மகிழ்ந்துசென்றவன் முன் சொன்ன செருக் களத்துப் போர் குறிப்பக்கன்றி இருபடையும் கைவகுத்து நேர் மலைவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
மேக ஒழுங்குகள் முன் கொடு மின்னிரை தம்மிடையே கொடுமாக மருங்கினும் மண்ணினும் வல்லுரு மேல் எதிர் செல்வனவாக நெடும் பல கைக்குல மாள் வினை வாளுடை ஆடவர்காக மிடைந்த களத்திரு கைகளின் வந்து கலந்தனர்.
சொற்பிரிப்பு
மேக ஒழுங்குகள் முன்கொடு மின் நிரை தம் இடையே கொடுமாக மருங்கினும் மண்ணினும் வல் உரும் ஏறு எதிர் செல்வனஆக நெடும் பலகைக் குலம் ஆள் வினை வாள் உடை ஆடவர்காகம் மிடைந்த களத்து இரு கைகளின் வந்து கலந்தனர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கியவாளொளி வட்ட முனைத்திட வந்து இரு கைகளின் முந்தினர்வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டுயர்ஞாலமுறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன.
சொற்பிரிப்பு
கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கியவாள் ஒளிவட்டம் முனைந்திட வந்து இரு கைகளின் முந்தினர்;வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டு உயர்ஞாலம் உறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
வெங்கண் விறற் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர்தங்கள் சிலைக்குலம் உந்தின தாவில் சரங்கள் நெருங்குவபொங்கு சினத்து எரியிற் புகை போகு கொடிக்கள் வளைத்து எதிர்செங்கண் விழிக் கனல் சிந்திய சீறு பொறிச் செலவு ஒத்தன.
சொற்பிரிப்பு
வெங்கண் விறல் சிலை வீரர்கள் வேறு இரு கையினும் நேர்பவர்தங்கள் சிலைக்குலம் உந்தின தாவில் சரங்கள் நெருங்குவபொங்கு சினத்து எரியில் புகை போகு கொடிக்கள் வளைத்து எதிர்செங்கண் விழிக்கனல் சிந்திய சீறு பொறிச்செலவு ஒத்தன.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
வாளொடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தனதோளொடு வாளி நிலத்தன தோலொடு தோல்கள் தகைத்தனதாளொடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றனநாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர் செய் களத்தினில்.
சொற்பிரிப்பு
வாளொடு நீள்கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன;தோளொடு வாளி நிலத்தன தோலொடு தோல்கள் தகைத்தன;தாளொடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றன;நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர்செய் களத்தினில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தனபொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பினவெருவர எருவை நெருங்கின விசியறு துடிகள் புரண்டனஇரு படை தனினும் எதிர்ந்தவர் எதிர் எதிர் அமர் செய் பறந்தலை.
சொற்பிரிப்பு
குருதியின் நதிகள் பரந்தன; குறை உடல் ஓடி அலைந்தன;பொருபடை அறுதுணி சிந்தின; புடை சொரி குடர் உடல் பம்பின;வெருவர எருவை நெருங்கின விசி அறு துடிகள் புரண்டன;இருபடை தனினும் எதிர்த்தவர் எதிர் எதிர் அமர்செய் பறந்தலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
நீள் இடை முடுகி நடந்து எதிர் நேர் இருவரில் ஒரு வன்றொடர்தாளிரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன்வாளொடு விழுமுடல் வென்றவன் மார்பிடை அறமுன் எறிந்திடஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும்.
சொற்பிரிப்பு
நீள்இடை முடுகி நடந்து எதிர் நேர் இருவரில் ஒருவன் தொடர்தாள் இருதொடை அற முன்பெயர் சாரிகை முறைமை தடிந்தனன்;வாளொடு விழும் உடல் வென்றவன் மார்பு இடை அறமுன் எறிந்திடஆளியின் அவனும் மறிந்தனன்; ஆயினர் பலர் உளர் எங்கணும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன்நேருரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர் எதிர் குத்தினர்ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமைபோரடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவிலர் பட்டனர்.
சொற்பிரிப்பு
கூர்முனை அயில்கொடு முட்டினர் கூடிமுன் உருவிய தட்டுடன்நேர்உரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர் எதிர் குத்தினர்ஆர்உயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமைபோர்அடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவிலர் பட்டனர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
பொற்சிலை வளைய எதிர்ந்தவர் புற்றரவு அனைய சரம்படவிற்படை துணியவும் நின்றிலர் வெற்றி கொள் சுரிகை வழங்கினர்முற்றிய பெருவளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிடஉற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டர்கள்.
சொற்பிரிப்பு
பொற்சிலை வளைய எதிர்ந்தவர் புற்றரவு அனைய சரம்படவிற்படை துணியவும் நின்றிலர் வெற்றிகொள் சுரிகை வழங்கினர்முற்றிய பெருவளன் இன்றியும் முற்படு கொடைநிலை நின்றிடஉற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சிலர் கண்டகர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
அடல்முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிருள வென்றுறுபடர் சிறை சுலவு கருங்கொடி படர்வன சுழல்வன துன்றலில்விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதிபுடை மிடை கரியிடை தங்கிய புகை விடு தழலை நிகர்த்தன.
சொற்பிரிப்பு
அடல் முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிர் உள என்று உறுபடர் சிறை சுலவு கருங்கொடி படர்வன சுழல்வன துன்றல்இல்விடுசுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம்பொதிபுடைமிடை கரிஇடை தங்கிய புகைவிடு தழலை நிகர்ந்தன.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர்புண்படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடுகொண்டெழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர்விண்படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர்.
சொற்பிரிப்பு
திண்படை வயவர் பிணம்படு செங்களம் அதன் இடை முன் சிலர்புண்படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடுகொண்டு எழு பொழுதினும் முன்செயல் குன்றுதல் இலர் தலை நின்றவர்விண்படர் கொடிவிடு பண்பயில் விஞ்சையர் குமரரை வென்றனர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
இம் முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர்வெம் முனையில் வீடியபின் வீடாது மிக்கு ஒழிந்ததம்முடைய பல் படைஞர் பின்னாகத் தாம் முன்புதெம்முனையில் ஏனாதி நாதர் செயிர்த்து எழுந்தார்.
சொற்பிரிப்பு
இம்முனைய வெம்போரில் இருபடையின் வாள்வீரர்வெம்முனையில் வீடிய பின் வீடாது மிக்கு ஒழிந்ததம்முடைய பல்படைஞர் பின்னாகத் தாம் முன்புதெம்முனையில் ஏனாதி நாதர் செயிர்த்து எழுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
வெஞ்சினவாள் தீ உமிழ வீரக் கழல் கலிப்பநஞ்சணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின் கண்எஞ்சி எதிர் நின்ற இகல் முனையில் வேலுழவர்தஞ்சிரமும் தோளுரமும் தாளும் விழத் துணித்தார்.
சொற்பிரிப்பு
வெஞ்சின வாள் தீ உமிழ வீரக் கழல் கலிப்பநஞ்சு அணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின்கண்எஞ்சிஎதிர் நின்ற இகல்முனையில் வேல் உழவர்தம் சிரமும் தோள் உரமும் தாள் உரமும் தாம்துணித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில்கொலைப் பட்டார் முட்டாதார் கொல் களத்தை விட்டுநிலைப்பட்ட மெய் உணர்வு நேர் பட்ட போதில்அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம் போல் ஆயினார்.
சொற்பிரிப்பு
தலைப்பட்டார் எல்லாரும் தனிவீரர் வாளில்கொலைப்பட்டார்; முட்டாதார் கொல்களத்தை விட்டுநிலைப்பட்ட மெய் உணர்வு நேர்பட்ட போதில்அலைப்பட்ட ஆர்வம் முதல் குற்றம் போல் ஆயினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
இந் நிலைய வெங்களத்தில் ஏற்றழிந்த மானத்தால்தன்னுடைய பல் படைஞர் மீண்டார் தமைக் கொண்டுமின்னொளி வாள் வீசி விறல் வீரர் வெம் புலி யேறுஅன்னவர் தம் முன் சென்று . அதி சூரன் நேர் அடர்ந்தான்.
சொற்பிரிப்பு
இந்நிலைய வெங்களத்தின் ஏற்றழிந்த மானத்தால்தன் உடைய பல் படைஞர் மீண்டார் தமைக்கண்டுமின்ஒளி வாள் வீசி விறல் வீரர் வெம்புலி ஏறுஅன்னவர் தம் முன் சென்று அதிசூரன் நேர் அடர்ந்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
மற்றவர் தம் செய்கை வடி வாள் ஒளி காணச்சுற்றி வரும் வட்ட அணையில் தோன்றா வகை கலந்துபற்றி அடர்க்கும் பொழுதில் தானும் படை பிழைத்துப்பொற்றடந் தோள் வீரர்க்கு உடைந்து புறகிட்டான்.
சொற்பிரிப்பு
மற்றவர் தம் செய்கை வடிவாள் ஒளிகாணச்சுற்றி வரும் வட்டணையில் தோன்றா வகைகலந்துபற்றி அடர்க்கும் பொழுதில் தானும் படை பிழைத்துப்பொன்தடம் தோள் வீரர்க்கு உடைந்து புறகு இட்டான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
போன அதிசூரன் போரில் அவர்க் கழிந்தமான மிக மீதூர மண் படுவான் கண் படான்ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமருவான்ஈன மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான்.
சொற்பிரிப்பு
போன அதிசூரன் போரில் அவர்க்கு அழிந்தமானம் மிக மீது ஊர மண்படுவான் கண்படான்ஆனசெயல் ஓர் இரவும் சிந்தித்து அலமந்தே“ஈனமிகு வஞ்சனையால் வெல்வன்” என எண்ணினான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
சேட்டாரும் கங்குல் புலர்காலைத் தீயோனும்நாட்டாரைக் கொல்லாதே நாம் இருவேம் வேறு இடத்துவாட்டாயங் கொள் போர் மலைக்க வருக எனத்தோட்டார் பூந்தாரார்க்குச் சொல்லிச் செலவிட்டான்.
சொற்பிரிப்பு
சேட்டாரும் கங்குல் புலர்காலைத் தீயோனும்“நாட்டாரைக் கொல்லாதே நாம் இருவேம் வேறு இடத்துவாள் தாயம் கொள் போர் மலைக்க வருக” எனத்தோட்டார் பூந்தாரார்க்குச் சொல்லிச் செலவு இட்டான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார்அவ்வாறு செய்தல் அழகிதென அமைந்துகை வாள் அமர் விளைக்கத் தான் கருதும் அக் களத்தில்வெவ்வாள் உரவோன் வருக என மேற் கொள்வார்.
சொற்பிரிப்பு
இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார்“அவ்வாறு செய்தல் அழகு இது” என அமைந்து,“கைவாள் அமர்விளைக்கத் தான் கருதும் அக்களத்தில்வெவ்வாள் உரவோன் வருக” என மேற்கொள்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள்பொற் பலகையும் தாமே கொண்டு புறம் போந்துமற்றவன் முன் சொல்லி வரக்குறித்த அக் களத்தேபற்றலனை முன் வரவு பார்த்துத் தனி நின்றார்.
சொற்பிரிப்பு
சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர்வாள்பொற்பலகையும் தாமே கொண்டு புறம்போந்துமற்றவன்முன் சொல்லி வரக்குறித்த அக்களத்தேபற்றலனை முன் வரவு பார்த்துத் தனி நின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
தீங்கு குறித்து அழைத்த தீயோன் திரு நீறு 1தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும் 2ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானாய்ப்பாங்கில் திரு நீறு பண்டு பயிலாதான்.
சொற்பிரிப்பு
தீங்கு குறித்து அழைத்த தீயோன், “திருநீறுதாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும்ஆங்கு அவரும் தீங்கு இழையார்” என்பது அறிந்தானாய்ப்பாங்கில் திருநீறு பண்டு பயிலாதான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
வெண்ணீறு நெற்றி விரவப் புறம் பூசிஉள் நெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன் கொண்டுவண்ணச் சுடர் வாள் மணிப் பலகை கைக் கொண்டுபுண்ணியப் போர் வீரர்க்குச் சொன்ன இடம் புகுந்தான்.
சொற்பிரிப்பு
வெண்நீறு நெற்றி விரவப் புறம் பூசிஉள்நெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன்கொண்டுவண்ணச் சுடர்வாள் மணிப்பலகை கைக் கொண்டுபுண்ணியப் போர் வீரர்க்குச் சொன்ன இடம் புகுந்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
36
வென்றி மடங்கல் விடக்கு வர முன் பார்த்துநின்றாற் போல் நின்ற நிலை கண்டு தன் நெற்றிசென்று கிடப்பளவுந் திண் பலகையான் மறைத்தேமுன் தன் வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான்.
சொற்பிரிப்பு
வென்றி மடங்கல் விடக்கு வர முன் பார்த்துநின்றால் போல நின்ற நிலை கண்டு தன்நெற்றிசென்று கிடைப்பளவும் திண் பலகையான் மறைத்தேமுன் தனி வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
37
அடல் விடையேறு என்ன அடர்த்தவனைக் கொல்லும்இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதி நாதர்புடை பெயர்ந்த மாற்றான் பலகை புறம் போக்கக்கடையவன் தன் நெற்றியின் மேல் வெண்ணீறு தாம் கண்டார்.
சொற்பிரிப்பு
அடல்விடை ஏறு என்ன அடர்த்தவனைக் கொல்லும்இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதி நாதர்புடைபெயர்ந்த மாற்றான் பலகை புறம்போக்கக்கடையவன் தன் நெற்றியின் மேல் வெண்நீறு தாம் கண்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
38
கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாதவெண் திரு நீற்றின் பொலிவு மேற்கண்டேன் வேறு இனி என்அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம்கொண்டு இவர் தம் கொள்கைக் குறி வழி நிற்பேன் என்று.
சொற்பிரிப்பு
கண்டபொழுதே ”கெட்டேன்! முன்பு இவர் மேல் காணாதவெண் திருநீற்றின் பொலிவு மேற்கண்டேன்; வேறு இனி என்?அண்டர்பிரான் சீர் அடியார் ஆயினார்” என்று மனம்கொண்டு “இவர்தம் கொள்கைக் குறி வழி நிற்பேன்” என்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
39
கை வாளுடன் பலகை நீக்கக் கருதியதுசெய்யார் நிராயுதரைக் கொன்றார் எனும் தீமைஎய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகைநெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நின்றார்.
சொற்பிரிப்பு
கைவாள் உடன் பலகை நீக்கக் கருதி அதுசெய்யார் “நிராயுதரைக் கொன்றார் எனும் தீமைஎய்தாமை வேண்டும் இவர்க்கு” என்று இரும்பலகைநெய்வாள் உடன் அடர்த்து நேர்வார் போல் நேர் நின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
40
அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார்முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான்இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருளமின்னின்ற செஞ்சடையார் தாமே வெளி நின்றார்.
சொற்பிரிப்பு
அந்நின்ற தொண்டர் திருஉள்ளம் ஆர் அறிவார்?முன்நின்ற பாதகனும் தன்கருத்தே முற்றுவித்தான்;இந்நின்ற தன்மை அறிவார் இவர்க்கு அருளமின்நின்ற செஞ்சடையார் தாமே வெளிநின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
41
மற்றினி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளைப்பற்றலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளிஉற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளிப்பொற்றொடியாள் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார்.
சொற்பிரிப்பு
மற்று இனி நாம் போற்றுவது என்? வானோர் பிரான் அருளைப்பற்றலர் தம் கைவாளால் பாசம் அறுத்தருளிஉற்றவரை என்றும் உடன் பிரியா அன்பருளிப்பொற்றொடியாள் பாகனார் பொன் அம்பலம் அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
42
தம் பெருமான் சாத்தும் திரு நீற்றுச் சார்புடையஎம் பெருமான் ஏனாதி நாதர் கழல் இறைஞ்சிஉம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண்ணப்பும்நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம்.
சொற்பிரிப்பு
தம்பெருமான் சாத்தும் திருநீற்றுச் சார்பு உடையஎம்பெருமான் ஏனாதி நாதர் கழல் இறைஞ்சிஉம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண்ணப்பும்நம்பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.