1
மல்லல் நீர்ஞாலந் தன்னுள் மழவிடை உடையான் அன்பர்க்குஒல்லை வந்துஉற்ற செய்கை உற்றிடத்து உதவும் நீரார்எல்லையில் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால்சொல்லலாம் படித்து அன்றேனும் ஆசையால் சொல்லல் உற்றாம்.
சொற்பிரிப்பு
மல்லல் நீர் ஞாலம் தன்னுள் மழவிடை உடையான் அன்பர்க்குஒல்லை வந்து உற்ற செய்கை உற்றிடத்து உதவும் நீரார்எல்லையில் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால்சொல்லலாம் படித்தன்றேனும் ஆசையால் சொல்லல் உற்றாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
பொன் மலைப்புலி வென்றுஓங்கப் புதுமலை இடித்துப் போற்றும்அந்நெறி வழியே ஆகஅயல் வழி அடைத்த சோழன்மன்னிய அநபாயன் சீர் மரபின் மாநகர மாகும்தொன்நெடுங் கருவூர் என்னுஞ்சுடர் மணி வீதி மூதூர்.
சொற்பிரிப்பு
பொன்மலைப் புலிவென்று ஓங்கப் புதுமலை இடித்துப் போற்றும்அந்நெறி வழியே ஆக அயல் வழி அடைத்த சோழன்மன்னிய அநபாயன் சீர் மரபின் மாநகரம் ஆகும்தொல்நெடும் கருவூர் என்னும் சுடர் மணி வீதி மூதூர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
மாமதில் மஞ்சுசூழும் மாளிகை நிரை விண் சூழும்தூமணி வாயில் சூழும் சோலையில் வாசம் சூழும்தேமலர் அளகஞ் சூழும் சிலமதி தெருவிற் சூழும்தாம் மகிழ்ந்து அமரர்சூழும் சதமகன் நகரம் தாழ.
சொற்பிரிப்பு
மாமதில் மஞ்சு சூழும்; மாளிகை நிரை விண் சூழும்;தூமணி வாயில் சூழும்; சோலையில் வாசம் சூழும்;தேம்மலர் அளகம் சூழும்; சிலமதி தெருவு சூழும்;தாம் மகிழ்ந்து அமரர் சூழும் சதமகன் நகரம் தாழ.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
கடகரி துறையில் ஆடும்களி மயில் புறவில் ஆடும்அடர்மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டுஆடும்படரொளி மறுகில் ஆடும்பயில் கொடி கதிர் மீதுஆடும்தடம்நெடும் புவி கொண்டாடும் தனிநகர் வளமை ஈதால்.
சொற்பிரிப்பு
கடகரி துறையில் ஆடும்; களிமயில் புறவில் ஆடும்;அடர்மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டு ஆடும்;படர்ஒளி மறுகில் ஆடும் பயில் கொடி கதிர் மீது ஆடும்தட நெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
மன்னிய சிறப்பின் மிக்கவள நகர் அதனில் மல்கும்பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால்துன்னிய அன்பின் மிக்கதொண்டர் தம் சிந்தை நீங்காஅந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில்.
சொற்பிரிப்பு
மன்னிய சிறப்பின் மிக்க வள நகர் அதனின் மல்கும்பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால்துன்னிய அன்பின் மிக்க தொண்டர் தம் சிந்தை நீங்காஅந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
பொருட்டிரு மறை கடந்த புனிதரை இனிது அக்கோயில்மருட்டுறை மாற்றும் ஆற்றால் வழிபடும் தொழிலர் ஆகிஇருட்கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்குஅருட்பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார்.
சொற்பிரிப்பு
பொருள் திருமறை கடந்த புனிதரை இனிது அக்கோயில்மருள் துறை மாற்றும் ஆற்றால் வழிபடும் தொழிலர் ஆகிஇருள் கடு ஒடுங்கும் கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்குஅருள் பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
மழைவளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்கஅழலவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போதுமுழையரி என்னத் தோன்றிமுரண் கெட எறிந்து தீர்க்கும்பழமறை பரசும் தூய பரசுமுன் எடுக்கப் பெற்றார்.
சொற்பிரிப்பு
மழைவளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்கஅழல் அவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்தபோதுமுழை அரி என்னத் தோன்றி முரண் கெட எறிந்து தீர்க்கும்பழமறை பரசும் தூய பரசு முன் எடுக்கப் பெற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
அண்ணலார் நிகழும் நாளில் ஆனி லைஅடிக ளார்க்குத்திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும்புண்ணிய முனிவனார் தாம்பூப் பறித்து அலங்கல் சாத்திஉண்ணிறை காதலோடும் ஒழுகுவார் ஒருநாள் முன் போல்.
சொற்பிரிப்பு
அண்ணலார் நிகழும் நாளில் ஆனிலை அடிகளார்க்குத்திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும்புண்ணிய முனிவனார்தாம் பூப் பறித்து, அலங்கல் சாத்தி,உள்நிறை காதலோடும் ஒழுகுவார் ஒருநாள் முன்போல்,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
வைகறை உணர்ந்து போந்துபுனல் மூழ்கி வாயும் கட்டிமொய்ம்மலர் நெருங்கு வாச நந்தன வனத்து முன்னிக்கையினில் தெரிந்து நல்லகமழ் முகை அலரும் வேலைத்தெய்வ நாயகருக்குச் சாத்தும்திருப் பள்ளித் தாமம் கொய்து.
சொற்பிரிப்பு
வைகறை உணர்ந்து, போந்து, புனல் மூழ்கி, வாயும் கட்டி,மொய்ம்மலர் நெருங்கு வாச நந்தனவனத்து முன்னிக்,கையினில் தெரிந்து, நல்ல கமழ் முகை அலரும் வேலைத்தெய்வ நாயகர்க்குச் சாத்தும் திருப் பள்ளித் தாமம் கொய்து,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
கோலப் பூங்கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்வாலியநேசம் கொண்டு மலர்க் கையில் தண்டும் கொண்டங்குஆலயம் அதனை நோக்கி அங்கணர்க்கு அமைத்துச் சாத்தும்காலை வந்துஉதவ வேண்டிக் கடிதினில் வாரா நின்றார்.
சொற்பிரிப்பு
கோலப் பூங்கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு, நெஞ்சில்வாலிய நேசம் கொண்டு, மலர்க் கையில் தண்டும் கொண்டு அங்கு,ஆலயம் அதனை நோக்கி அங்கணர்க்கு அமைத்துச் சாத்தும்காலை வந்து உதவ வேண்டிக் கடிதினில் வாரா நின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
மற்றவர் அணைய இப்பால் வளநகர் அதனில் மன்னும்கொற்றவர் வளவர் தங்கள்குலப் புகழ்ச் சோழனார் தம்பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்ட வர்த்தனமாம் பண்புபெற்றவெங் களிறு கோலம் பெருகு மாநவமி முன்னாள்.
சொற்பிரிப்பு
மற்றவர் அணைய இப்பால் வளநகர் அதனின் மன்னும்கொற்றவர் வளவர் தங்கள் குலப் புகழ்ச்சோழனார் தம்பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த் தனமாம் பண்புபெற்ற வெங்களிறு கோலம் பெருகு மா நவமி முன்னாள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
மங்கல விழைவு கொண்டுவரு நதித் துறை நீராடிப்பொங்கிய களிப்பினோடும் பொழி மதம் சொரிய நின்றார்எங்கணும் இரியல் போகஎதிர் பரிக் காரர் ஓடத்துங்கமால் வரைபோல் தோன்றித் துண்ணென அணைந்தது அன்றே.
சொற்பிரிப்பு
மங்கல விழவு கொண்டு வரு நதித் துறை நீர் ஆடிப்,பொங்கிய களிப்பினோடும் பொழி மதம் சொரிய, நின்றார்எங்கணும் இரியல் போக, எதிர் பரிக்காரர் ஓடத்,துங்கமால் வரைபோல் தோன்றித் துண்ணென அணைந்தது அன்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
வென்றிமால் யானை தன்னை மேல் கொண்ட பாகரோடும்சென்றுஒரு தெருவின் முட்டிச் சிவகாமியார் முன் செல்லவன்தனித் தண்டில் தூங்கும் மலர்கொள் பூக்கூடை தன்னைப்பின்தொடர்ந்து ஓடிச் சென்று பிடித்துமுன் பறித்துச் சிந்த.
சொற்பிரிப்பு
வென்றிமால் யானை தன்னை மேல் கொண்ட பாகரோடும்சென்று ஒரு தெருவின் முட்டிச் சிவகாமியார் முன் செல்லவன் தனித் தண்டில் தூங்கும் மலர்கொள் பூக்கூடை தன்னைப்பின் தொடர்ந்து ஓடிச் சென்று பிடித்து முன் பறித்துச் சிந்த,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
மேல்கொண்ட பாகர் கண்டு விசைகொண்ட களிறு சண்டக்கால்கொண்டு போவார் போலக் கடிதுகொண்டு அகலப் போகநூல்கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்துப் பொங்கிமால்கொண்ட களிற்றின் பின்பு தண்டுகொண்டு அடிக்க வந்தார்.
சொற்பிரிப்பு
மேல்கொண்ட பாகர் கண்டு விசைகொண்ட களிறு சண்டக்கால்கொண்டு போவார் போலக் கடிது கொண்டு அகலப் போகநூல்கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்துப் பொங்கிமால்கொண்ட களிற்றின் பின்பு தண்டு கொண்டு அடிக்க வந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
அப்பொழுது அணைய ஒட்டாது அடற் களிறு அகன்றுபோகமெய்ப்பெருந் தொண்டர் மூப்பால் விரைந்து பின்செல்ல மாட்டார்தப்பினர் விழுந்து கையால்தரை அடித்து எழுந்து நின்றுசெப்புஅரும் துயரம்நீடிச் செயிர்த்து முன் சிவதா என்பார்.
சொற்பிரிப்பு
அப்பொழுது அணைய ஒட்டாது அடல் களிறு அகன்று போக,மெய்ப் பெருந்தொண்டர் மூப்பால் விரைந்து பின் செல்ல மாட்டார்,தப்பினர் விழுந்து, கையால் தரை அடித்து, எழுந்து, நின்று,செப்பரும் துயரம் நீடிச், செயிர்த்து, முன் “சிவதா” என்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
களி யானையின் ஈர்உரியாய் சிவதா!எளியார் வலியாம் இறைவா! சிவதா!அளியார் அடியார் அறிவே! சிவதா!தெளிவார் அமுதே! சிவதா! சிவதா!.
சொற்பிரிப்பு
“களி யானையின் ஈர் உரியாய்! சிவதா!எளியார் வலியாம் இறைவா! சிவதா!அளியார் அடியார் அறிவே! சிவதா!தெளிவார் அமுதே! சிவதா! சிவதா!,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
ஆறும் மதியும் அணியும் சடைமேல்ஏறும் மலரைக் கரிசிந் துவதேவேறுள் நினைவார் புரம்வெந்து அவியச்சீறும் சிலையாய்! சிவதா! சிவதா!.
சொற்பிரிப்பு
“ஆறும் மதியும் அணியும் சடைமேல்ஏறும் மலரைக் கரி சிந்துவதே?வேறு உள் நினைவார் புரம் வெந்து அவியச்சீறும் சிலையாய்! சிவதா! சிவதா!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
தஞ்சே சரணம் புகுதுந் தமியோர்நெஞ்சே துயரம் கெடநேர் தொடரும்மஞ்சே எனவீழ் மறலிக்கு இறைநீள்செஞ்சே வடியாய்! சிவதா! சிவதா!.
சொற்பிரிப்பு
“தஞ்சே சரணம் புகுதும் தமியோர்நெஞ்சு ஏய் துயரம் கெட நேர் தொடரும்மஞ்சே என வீழ் மறலிக்கு இறை நீள்செஞ்சேவடியாய்! சிவதா! சிவதா!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
நெடியோன் அறியா நெறியார் அறியும்படியால் அடிமைப் பணிசெய்து ஒழுகும்அடியார் களில்யான் ஆரா அணைவாய்முடியா முதலாய் எனவே மொழிய.
சொற்பிரிப்பு
“நெடியோன் அறியா நெறியார் அறியும்படியால் அடிமைப் பணி செய்து ஒழுகும்அடியார்களில் யான் ஆரா அணைவாய்முடியா முதலாய்!” எனவே மொழிய.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
என்றவர் உரைத்த மாற்றம் எறிபத்தர் எதிரே வாராநின்றவர் கேளாமூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கிமன்றவர் அடியார்க்கு என்றும்வழிப் பகை களிறே அன்றோகொன்று அதுவீழ்ப்பன் என்று கொலை மழுஎடுத்து வந்தார்.
சொற்பிரிப்பு
என்றவர் உரைத்த மாற்றம் எறிபத்தர் எதிரே வாராநின்றவர் கேளா மூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி“மன்றவர் அடியார்க்கு என்றும் வழிப் பகை களிறே அன்றோ,கொன்றது வீழ்ப்பன்” என்று கொலை மழு எடுத்து வந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
வந்தவர் அழைத்த தொண்டர்தமைக் கண்டு வணங்கி உம்மைஇந்தவல் இடும்பை செய்த யானை எங்குற்றது என்னஎந்தையார் சாத்தும் பூவைஎன் கையில் பறித்து மண்மேல்சிந்திமுன் பிழைத்துப் போகா நின்றது இத்தெருவே என்றார்.
சொற்பிரிப்பு
வந்தவர் அழைத்த தொண்டர் தமைக் கண்டு வணங்கி “உம்மைஇந்தவல் இடும்பை செய்த யானை எங்கு உற்றது?” என்ன,“எந்தையார் சாத்தும் பூவை என்கையில் பறித்து மண்மேல்சிந்தி முன் பிழைத்துப் போகா நின்றது இத் தெருவே” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
இங்கது பிழைப்பது எங்கே இனிஎன எரிவாய் சிந்தும்அங்கையின் மழுவும் தாமும் அனலும் வெங்காலும் என்னப்பொங்கிய விசையில் சென்றுபொரு கரி தொடர்ந்து பற்றும்*செங்கண் வாள்அரியிற் கூடிக் கிடைத்தனர் சீற்ற மிக்கார்.(*தொடர்ந்து செல்லும் என்றும் பாடம்)
சொற்பிரிப்பு
“இங்கு இது பிழைப்பது எங்கே இனி” என எரிவாய் சிந்தும்அங்கையின் மழுவும் தாமும் அனலும் வெங்காலும் என்னப்பொங்கிய விசையில் சென்று பொரு கரி தொடர்ந்து பற்றும்செங்கண்வாள் அரியில் கூடிக் கிடைத்தனர் சீற்றம் மிக்கார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
கண்டவர் இதுமுன்பு அண்ணல் உரித்த அக்களிறே போலும்அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்துச் சிந்தத்துண்டித்துக் கொல்வேன் என்றுசுடர் மழு வலத்தில் வீசிக்கொண்டு எழுந்து ஆர்த்துச்சென்று காலினால் குலுங்கப் பாய்ந்தார்.
சொற்பிரிப்பு
கண்டவர் “இது முன்பு அண்ணல் உரித்த அக்களிறே போலும்அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்துச் சிந்தித்துண்டித்துக் கொல்வேன்” என்று சுடர் மழு வலத்தில் வீசிக்கொண்டு எழுந்து ஆர்த்துச் சென்று காலினால் குலுங்கப் பாய்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
பாய்தலும் மிசைகொண்டு உய்க்கும் பாகரைக் கொண்டு சீறிக்காய்தழல் உமிழ்கண் வேழம் திரிந்து மேற்கதுவ அச்சம்தாய்தலை அன்பின் முன்பு நிற்குமே தகைந்து பாய்ந்துதோய்தனித் தடக்கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர்.
சொற்பிரிப்பு
பாய்தலும் மிசை கொண்டு உய்க்கும் பாகரைக் கொண்டு சீறிக்காய்தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேல் கதுவ, அச்சம்தாய் தலைஅன்பின் முன்பு நிற்குமே!, தகைந்து பாய்ந்துதோய் தனித் தடக்கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
கையினைத் துணித்த போதுகடல் எனக் கதறி வீழ்ந்துமைவரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்தவெய்யகோல் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர்ஆகஐவரைக் கொன்று நின்றார் அருவரை அனைய தோளார்.
சொற்பிரிப்பு
கையினைத் துணித்த போது கடல் எனக் கதறி வீழ்ந்துமைவரை அனைய வேழம் புரண்டிட, மருங்கு வந்தவெய்ய கோல் பாகர் மூவர் மிசைகொண்டார் இருவர் ஆகஐவரைக் கொன்று நின்றார் அருவரை அனைய தோளார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
வெட்டுண்டு பட்டுவீழ்ந்தார் ஒழிய மற்று உள்ளார் ஓடிமட்டவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கிபட்ட வர்த்தனமும் பட்டுப் பாகரும் பட்டார் என்றுமுட்ட நீர்கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார்.
சொற்பிரிப்பு
வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழிய மற்று உள்ளார் ஓடிமட்டு அவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கிப்“பட்டவர்த்தனமும் பட்டுப் பாகரும் பட்டார் என்றுமுட்ட நீர் கடிது புக்கு முதல்வனுக்கு உரையும்” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
மற்றவர் மொழிந்த மாற்றம் மணிக்கடை காப்போர் கேளாக்கொற்றவன் தன்பால் எய்திக்குரை கழல் பணிந்து போற்றிப்பற்றலர் இலாதாய் நின்பொற் பட்டமால் யானை வீழச்செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர் என்றார்.
சொற்பிரிப்பு
மற்றவர் மொழிந்த மாற்றம் மணிக்கடைக் காப்போர் கேளாக்கொற்றவன் தன்பால் எய்திக் குரை கழல் பணிந்து போற்றிப்“பற்றலர் இலாதாய்! ‘நின் பொன் பட்டமால் யானை வீழச்செற்றனர் சிலராம்’ என்று செப்பினார் பாகர்” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
வளவனும் கேட்ட போதில் மாறின்றி மண் காக்கின்றகிளர்மணித் தோள் அலங்கல் சுரும்பினம் கிளர்ந்து பொங்கஅளவில் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான்இளஅரி ஏறுபோல எழில் மணி வாயில் நீங்க.
சொற்பிரிப்பு
வளவனும் கேட்ட போதில் மாறு இன்றி மண் காக்கின்றகிளர் மணித்தோள் அலங்கல் சுரும்பு இனம் கிளர்ந்து பொங்கஅளவில் சீற்றத்தினாலே, யார் செய்தார் என்றும் கேளான்இளஅரி ஏறு போல எழில் மணிவாயில் நீங்க,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
தந்திரத் தலைவர் தாமும் தலைவன்தன் நிலைமை கண்டுவந்துறச் சேனை தன்னைவல் விரைந்து எழமுன் சாற்றஅந்தரத்து அகலம் எல்லாம் அணிதுகில் பதாகை தூர்ப்பஎந்திரத்தேரும் மாவும் இடை இடை களிறும் ஆகி.
சொற்பிரிப்பு
தந்திரத் தலைவர் தாமும் தலைவன் தன் நிலைமை கண்டுவந்துறச் சேனை தன்னை வல் விரைந்து எழ முன் சாற்றஅந்தரத்து அகலம் எல்லாம் அணி துகில் பதாகை தூர்ப்பஎந்திரத் தேரும் மாவும் இடைஇடை களிறும் ஆகி,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
வில்லொடு வேல்வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்கவல்லெழும் உசலம் நேமிமழுக் கழுக்கடை முன் ஆனபல்படைக் கலன்கள் பற்றிப் பைங்கழல் வரிந்தவன் கண்எல்லையில் படைஞர் கொட்புற்று எழுந்தனர் எங்கும் எங்கும்.
சொற்பிரிப்பு
வில்லொடு வேல் வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்கவல் எழு முசலம் நேமி மழுக் கழுக்கடை முன்னானபல்படைக் கலன்கள் பற்றிப் பைங்கழல் வரிந்த வன் கண்எல்லையில் படைஞர் கொட்புற்று எழுந்தனர் எங்கும்; எங்கும்,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரிவெங்குரல் பம்பை கண்டைவியன் துடி திமிலை தட்டிபொங்கொலிச் சின்னம் எல்லாம்பொரு படை மிடைந்த பொற்பின்மங்குல் வான்கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பிமல்க.
சொற்பிரிப்பு
சங்கொடு தாரை காளம் தழங்கு ஒலி முழங்கு பேரிவெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டிபொங்கு ஒலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின்மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
தூரியத் துவைப்பும் முட்டுஞ்சுடர்ப் படை ஒலியும் மாவின்தார்மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடந்தேர்ச் சீரும்வீரர்தஞ்செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லைக்காருடன் கடைநாள் பொங்கும் கடல்எனக் கலித்த அன்றே.
சொற்பிரிப்பு
தூரியத் துவைப்பும் முட்டும் சுடர்ப் படை ஒலியும் மாவின்தார்மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடம் தேர்ச் சீரும்வீரர் தம் செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லைக்கார் உடன் கடைநாள் பொங்கும் கடல் எனக் கலித்தது அன்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழுசேனை எல்லாம்மண்ணிடை இறுகால் மேன்மேல் வந்து எழுந்ததுபோல் தோன்றத்தண்ணளிக் கவிகை மன்னன் தானைபின் தொடரத் தானோர்அண்ணலம் புரவி மேற்கொண்டு அரச மாவீதி சென்றான்.
சொற்பிரிப்பு
பண் உறும் உறுப்பு நான்கில் பரந்து எழு சேனை எல்லாம்மண் இடை இறுகால் மேல்மேல் வந்து எழுந்தது போல் தோன்றத்தண் அளிக் கவிகை மன்னன் தானை பின் தொடரத் தான் ஓர்அண்ணல் அம் புரவி மேல் கொண்டு அரசமா வீதி சென்றான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
கடுவிசை முடுகிப் போகிக் களிற்றொடும் பாகர் வீழ்ந்தபடுகளம் குறுகச் சென்றான் பகைபுலத்து அவரைக் காணான்விடுசுடர் மழுஒன்று ஏந்தி வேறு இருதடக் கைத்தாயஅடுகளிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான்.
சொற்பிரிப்பு
கடுவிசை முடுகிப் போகிக் களிற்றொடும் பாகர் வீழ்ந்தபடுகளம் குறுகச் சென்றான் பகைப் புலத்தவரைக் காணான்.விடுசுடர் மழு ஒன்று ஏந்தி வேறு இரு தடக்கைத் தாயஅடுகளிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
பொன்தவழ் அருவிக் குன்றம் எனப்புரள் களிற்றின் முன்புநின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள்ளிக்குன்றவர் அடியார் ஆனார் கொன்றவர் இவரென்று ஓரான்வென்றவர் யாவர் என்றான் வெடிபட முழங்கும் சொல்லான்.
சொற்பிரிப்பு
பொன்தவழ் அருவிக் குன்றம் எனப் புரள் களிற்றின் முன்புநின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே புரியும் வெள்ளிக்குன்றவர் அடியார் ஆனார் கொன்றவர் இவர் என்று ஓரான்;“வென்றவர் யாவர்?” என்றான்வெடிபட முழங்கும் சொல்லான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
36
அரசன் ஆங்கருளிச் செய்ய அருகு சென்றணைந்து பாகர்விரை செய்தார் மாலையோய்நின் விறற் களிற்று எதிரேநிற்கும்திரை செய்நீர் உலகின் மன்னர் யாருளார் தீங்குசெய்தார்பரசு முன்கொண்டு நின்ற இவர்எனப் பணிந்து சொன்னார்.
சொற்பிரிப்பு
அரசன் ஆங்கு அருளிச் செய்ய அருகு சென்று அணைந்து பாகர்,“விரைசெய் தார் மாலையோய்! நின் விறல் களிற்று எதிரே நிற்கும்திரைசெய் நீர் உலகின் மன்னர் யார் உளார்? தீங்கு செய்தார்பரசு முன் கொண்டு நின்ற இவர்” எனப் பணிந்து சொன்னார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
37
குழை யணிகாதி னானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார்பிழை படின்அன்றிக் கொல்லார் பிழைத்தது உண்டுஎன்று உட்கொண்டுமழை மதயானை சேனை வரவினை மாற்றி மற்றஉழை வயப்புரவி மேல் நின்று இழிந்தனன் உலகமன்னன்.
சொற்பிரிப்பு
“குழை அணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார்பிழைபடின் அன்றிக் கொல்லார் பிழைத்தது உண்டு;” என்று உட்கொண்டுமழை மத யானைச் சேனை வரவினை மாற்றி, மற்றஉழைவயப் புரவி மேல் நின்று இழிந்தனன் உலக மன்னன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
38
மைத்தடம் குன்று போலும் மதக் களிற்று எதிரேஇந்தமெய்த்தவர் சென்றபோது வேறு ஒன்றும் புகுதா விட்டஅத்தவம் உடையேன் ஆனேன் அம்பல வாணர் அன்பர்இத்தனை முனியக் கெட்டேன்என் கொலோ பிழைஎன்று அஞ்சி.
சொற்பிரிப்பு
“மைத்தடம் குன்று போலும் மதக்களிற்று எதிரே இந்தமெய்த்தவர் சென்ற போது வேறு ஒன்றும் புகுதா விட்டஅத்தவம் உடையேன் ஆனேன் அம்பலவாணர் அன்பர்இத்தனை முனியக் கெட்டேன்! என் கொலோ பிழை?” என்று அஞ்சி,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
39
செறிந்தவர் தம்மைநீக்கி அன்பர் முன்தொழுது சென்று ஈதுஅறிந்திலேன் அடியேன் அங்குக் கேட்டது ஒன்றதுதான் நிற்கமறிந்த இக்களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாளஎறிந்ததே போதுமோதான் அருள் செய்யும் என்று நின்றார்.
சொற்பிரிப்பு
செறிந்தவர் தம்மை நீக்கி, அன்பர் முன் தொழுது சென்று” ஈதுஅறிந்திலேன் அடியேன்; அங்குக் கேட்டது ஒன்று; அதுதான் நிற்க;மறிந்த இக்களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாளஎறிந்ததே போதுமோ தான்? அருள் செயும்” என்று நின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
40
மன்னவன் தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர்சென்னி இத்துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்துபன்னக ஆபரணர்ச் சாத்தக் கொடுவரும் பள்ளித் தாமம்தன்னை முன்பறித்துச் சிந்தத் தரைபடத் துணித்து வீழ்த்தேன்.
சொற்பிரிப்பு
மன்னவன் தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர்“சென்னி! இத் துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்துபன்னகாபரணர்ச் சாத்தக் கொடுவரும் பள்ளித் தாமம்தன்னை முன் பறித்துச் சிந்தத் தரைப்படத் துணித்து வீழ்த்தேன்;
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
41
மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர் தாமும்மீதங்கு கடாவு வாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார்ஈதிங்கு நிகழ்ந்தது என்றார் எறிபத்தர் என்ன அஞ்சிப்பாதங்கள் முறையால் தாழ்ந்து பருவரைத் தடந்தோள் மன்னன்.
சொற்பிரிப்பு
“மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர் தாமும்மீது அங்குக் கடாவுவாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார்;ஈது இங்கு நிகழ்ந்தது” என்றார் எறிபத்தர்; என்ன, அஞ்சிப்பாதங்கள் முறையால் தாழ்ந்து பருவரைத் தடந்தோள் மன்னன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
42
அங்கணர் அடியார் தம்மைச் செய்த இவ்வப ராதத்துக்குஇங்கிது தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும்மங்கல மழுவால் கொல்கை வழக்குமன்று இதுவாம் என்றுசெங்கையால் உடைவாள் வாங்கிக் கொடுத்தனர் தீர்வு நேர்வார்.
சொற்பிரிப்பு
“அங்கணர் அடியார் தம்மைச் செய்த இவ் அபராதத்துக்குஇங்கு இது தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும்;மங்கல மழுவால் கொல்கை வழக்கும் அன்று; இதுவாம்;” என்றுசெங்கையால் உடைவாள் வாங்கிக் கொடுத்தனர் தீர்வு நேர்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
43
வெந்தழல் சுடர்வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக் கெட்டேன்அந்தமில் புகழான் அன்புக்கு அளவின்மை கண்டேன் என்றுதந்தவாள் வாங்க மாட்டார் தன்னைத் தான்துறக்கும் என்றுசிந்தையால் உணர்வுற்று அஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார்.
சொற்பிரிப்பு
வெந்தழல் சுடர்வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக் “கெட்டேன்!அந்தம் இல் புகழான் அன்புக்கு அளவு இன்மை கண்டேன்” என்றுதந்த வாள் வாங்க மாட்டார், தன்னைத் தான் துறக்கும் என்றுசிந்தையால் உணர்வு உற்று அஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
44
வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றேஈங்கெனை வாளினால் கொன்று என்பிழை தீர்க்க வேண்டிஓங்கிய உதவி செய்யப் பெற்றனன் இவர்பால் என்றேஆங்கவர் உவப்பக் கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி.
சொற்பிரிப்பு
வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே“ஈங்கு எனை வாளினால் கொன்று என் பிழை தீர்க்க வேண்டிஓங்கிய உதவி செய்யப் பெற்றனன் இவர்பால்” என்றேஆங்கு அவர் உவப்பக் கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
45
வன்பெருங் களிறுபாகர் மடியவும் உடை வாளைத் தந்துஎன்பெரும் பிழை யினாலே என்னையும் கொல்லும் என்னும்அன்பனார் தமக்குத் தீங்கு நினைந்தனன் என்று கொண்டுமுன்பெனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவென்று எண்ணி.
சொற்பிரிப்பு
“வன்பெரும் களிறு பாகர் மடியவும் உடைவாளைத் தந்துஎன்பெரும் பிழையினாலே என்னையும் கொல்லும் என்னும்அன்பனார் தம்மைத் தீங்கு நினைந்தனன்” என்று கொண்டு,“முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு” என்று எண்ணி,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
46
புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம்கழுத்தில் பூட்டிஅரிந்திடல் உற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கைஇருந்தவாறு இது என் கெட்டேன் என்று எதிர் கடிதிற் சென்றுபெருந்தடந் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும்.
சொற்பிரிப்பு
புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம் கழுத்தில் பூட்டிஅரிந்திடல் உற்ற போதில் அரசனும் “பெரியோர் செய்கைஇருந்தவாறு இது என்? கெட்டேன்!” என்று எதிர் கடிதில் சென்றுபெருந்தடம் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
47
வளவனார் விடாது பற்ற மாதவர் வருந்து கின்றஅளவிலாப் பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டிக்களமணி களத்துச் செய்ய கண்ணுதல் அருளால் வாக்குக்கிளரொளி விசும்பின் மேல் வந்தெழுந்தது பலரும் கேட்ப.
சொற்பிரிப்பு
வளவனார் விடாது பற்ற மாதவர் வருந்தி நிற்பஅளவிலாப் பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டிக்களமணி களத்துச் செய்ய கண்நுதல் அருளால் வாக்குக்கிளர்ஒளி விசும்பின் மேல் வந்து எழுந்தது பலரும் கேட்ப,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
48
தொழுங்கை அன்பின் மிக்கீர்! தொண்டினை மண் மேற்காட்டச்செழுந் திருமலரை இன்று சினக்கரி சிந்தத் திங்கள்கொழுந்தணி வேணிக் கூத்தர் அருளினால் கூடிற்றென்று அங்குஎழுந்தது பாக ரோடும் யானையும் எழுந்தது அன்றே.
சொற்பிரிப்பு
“தொழும் தகை அன்பின் மிக்கீர்! தொண்டினை மண்மேல் காட்டச்செழும் திருமலரை இன்று சினக்கரி சிந்தத் திங்கள்கொழுந்து அணி வேணிக் கூத்தர் அருளினால் கூடிற்று” என்று அங்குஎழுந்தது பாகரோடும் யானையும் எழுந்தது அன்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
49
ஈரவே பூட்டும் வாள்விட்டு எறிபத்தர் தாமும் அந்தநேரியர் பெருமான் தாள்மேல் விழுந்தனர் நிருபர் கோனும்போர்வடி வாளைப் போக எறிந்தவர் கழல்கள் போற்றிப்பார்மிசை பணிந்தான் விண்ணோர் பனிமலர் மாரி தூர்த்தார்.
சொற்பிரிப்பு
ஈரவே பூட்டும் வாள்விட்டு எறிபத்தர் தாமும் அந்தநேரியர் பெருமான் தாள் மேல் விழுந்தனர்; நிருபர் கோனும்போர் வடிவாளைப் போக எறிந்து அவர் கழல்கள் போற்றிப்பார்மிசைப் பணிந்தான்; விண்ணோர் பனிமலர் மாரி தூர்த்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
50
இருவரும் எழுந்து வானில் எழுந்த பேரொலியைப் போற்றஅருமறைப் பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை தன்னில்மருவிய பள்ளித் தாமம் நிறைந்திட அருள மற்றுஅத்திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமி யாரும் நின்றார்.
சொற்பிரிப்பு
இருவரும் எழுந்து வானில் எழுந்த பேர் ஒலியைப் போற்றஅருமறைப் பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை தன்னில்மருவிய பள்ளித் தாமம் நிறைந்திட அருள மற்றத்திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
51
மட்டவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர்உட்டரு களிப்பினோடும் உறங்கி மீது எழுந்தது ஒத்துமுட்ட வெங்கடங்கள் பாய்ந்து முகில்என முழங்கிப் பொங்கும்பட்ட வர்த்தனத்தைக் கொண்டு பாகரும் அணைய வந்தார்.
சொற்பிரிப்பு
மட்டவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர்உள்தரு களிப்பினோடும் உறங்கி மீது எழுந்தது ஒத்துமுட்டவெங் கடங்கள் பாய்ந்து முகில் என முழங்கிப் பொங்கும்பட்டவர்த் தனத்தைக் கொண்டு பாகரும் அணைய வந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
52
ஆனசீர்த் தொண்டர் கும்பிட்டு அடியனேன் களிப்ப இந்தமானவெங் களிற்றில்* ஏறிமகிழ்ந்து எழுந்து அருளும் என்னமேன்மையப் பணிமேற் கொண்டு வணங்கி வெண்குடையின் நீழல்யானை மேற்கொண்டு சென்றார் இவுளிமேற் கொண்டு வந்தார்.(*களிற்றை என்றும் பாடம்)
சொற்பிரிப்பு
ஆன சீர்த் தொண்டர் கும்பிட்டு “அடியனேன் களிப்ப இந்தமான வெங் களிற்றில் ஏறி மகிழ்ந்து எழுந்தருளும்” என்னமேன்மை அப் பணிமேல் கொண்டு வணங்கி வெண் குடையின் நீழல்யானைமேல் கொண்டு சென்றார் இவுளி மேல் கொண்டு வந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
53
அந்நிலை எழுந்த சேனை ஆர்கலி ஏழும் ஒன்றாய்மன்னிய ஒலியின் ஆர்ப்பமண் எலாம் மகிழ்ந்து வாழ்த்தப்பொன்னெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொற்றாள்சென்னியிற் கொண்டு சென்னி திருவளர் கோயில் புக்கான்.
சொற்பிரிப்பு
அந்நிலை எழுந்த சேனை ஆர்கலி ஏழும் ஒன்றாய்மன்னிய ஒலியின் ஆர்ப்பமண் எலாம் மகிழ்ந்து வாழ்த்தப்,பொன்நெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொன் தாள்சென்னியில் கொண்டு சென்னி திருவளர் கோயில் புக்கான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
54
தம்பிரான் பணிமேற் கொண்டு சிவகாமி யாரும் சாரஎம்பிரான் அன்பரான எறி பத்தர் தாமும் என்னேஅம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற்கு அரியார் என்றுசெம்பியன் பெருமை உன்னித் திருப்பணி நோக்கிச் சென்றார்.
சொற்பிரிப்பு
தம்பிரான் பணிமேல் கொண்டு சிவகாமியாரும் சாரஎம்பிரான் அன்பர் ஆன எறிபத்தர் தாமும் “என்னே!அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற்கு அரியார்” என்றுசெம்பியன் பெருமை உன்னித் திருப்பணி நோக்கிச் சென்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
55
மற்றவர் இனைய வானவன் பெரும் தொண்டு மண்மேல்உற்றிடத்து அடியார் முன்சென்று உதவியே நாளும் நாளும்நற்றவக் கொள்கை தாங்கி நலமிகு கயிலை வெற்பில்கொற்றவர் கணத்தின் முன்னாம்கோ முதல் தலைமை பெற்றார்.
சொற்பிரிப்பு
மற்றவர் இனையது ஆன வன் பெரும் தொண்டு மண்மேல்உற்றிடத்து அடியார் முன்சென்று உதவியே நாளும் நாளும்நற்றவக் கொள்கை தாங்கி நலமிகு கயிலை வெற்பில்கொற்றவர் கணத்தின் முன்னாம் கோமுதல் தலைமை பெற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
56
ஆளுடைத் தொண்டர் செய்த ஆண்மையும் தம்மைக் கொல்லவாளினைக் கொடுத்து நின்ற வளவனார் பெருமை தானும்நாளும் மற்றவர்க்கு நல்கும் நம்பர் தாம் அளக்கிலன்றிநீளும் இத்தொண்டின் நீர்மை நினைக்கிலார் அளக்க வல்லார்.
சொற்பிரிப்பு
ஆள்உடைத் தொண்டர் செய்த ஆண்மையும் தம்மைக் கொல்லவாளினைக் கொடுத்து நின்ற வளவனார் பெருமை தானும்நாளும் மற்று அவர்க்கு நல்கும் நம்பர் தாம் அளக்கில் அன்றிநீளும் இத்தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார்?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
57
தேனாரும் தண்பூங் கொன்றைச் செஞ்சடை யவர்பொற் றாளில்ஆனாத காதல் அன்பர் எறிபத்தர் அடிகள் சூடிவானாளும் தேவர் போற்றும் மன்றுளார் நீறு போற்றும்ஏனாதி நாதர் செய்த திருத்தொழில் இயம்ப லுற்றேன்.
சொற்பிரிப்பு
தேனாரும் தண் பூங்கொன்றைச் செஞ்சடையவர் பொன் தாளில்ஆனாத காதல் அன்பர் எறிபத்தர் அடிகள் சூடிவான் ஆளும் தேவர் போற்றும் மன்றுளார் நீறு போற்றும்ஏனாதி நாதர் செய்த திருத்தொழில் இயம்பல் உற்றேன்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.