திருமுறை 12 · 12.013 · 49

அமர்நீதி நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

சீரில் நீடிய செம்பியர் பொன்னி நன்னாட்டுக்காரின் மேவிய களி அளி மலர்ப் பொழில் சூழ்ந்துதேரின் மேவிய செழு மணிவீதிகள் சிறந்துபாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை.
சொற்பிரிப்பு
சீரின் நீடிய செம்பியர் பொன்னி நன்நாட்டுக்காரின் மேவிய களி அளி மலர்ப்பொழில் சூழ்ந்துதேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்துபாரின் நீடிய பெருமை சேர் பதி பழையாறை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மன்னும் அப் பதி வணிகர்தம் குலத்தினில் வந்தார்பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூந்துகில் முதலாஎந் நிலத்தினும் உள்ளன வரு வளத்து இயல்பால்அந் நிலைக்கண் மிக்கவர் அமர் நீதியார் என்பார்.
சொற்பிரிப்பு
மன்னும் அப்பதி வணிகர் தம் குலத்தினில் வந்தார்பொன்னும் முத்தும் நன் மணிகளும் பூந்துலகில் முதலாஎந்நிலத்தினும் உள்ளன வருவளத்து இயல்பால்அந்நிலைக்கண் மிக்கவர் அமர் நீதியார் என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார்அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்துக்கந்தை கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவிவந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார்.
சொற்பிரிப்பு
சிந்தை செய்வது சிவன்கழல் அல்லது ஒன்று இல்லார்அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்துக்கந்தை கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவிவந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

முக்கண் நக்கராம் முதல்வனார் அவர் திரு நல்லூர்மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கித்தக்க அன்பர்கள் அமுது செய் திருமடம் சமைத்தார்தொக்க சுற்றமும் தாமும் வந்து அணைந்தனர் தூயோர்.
சொற்பிரிப்பு
முக்கண் நக்கராம் முதல்வனார் அவர் திரு நல்லூர்மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கித்தக்க அன்பர்கள் அமுது செய் திருமடம் சமைத்தார்தொக்க சுற்றமும் தாமும் வந்து அணைந்தனர் தூயோர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மருவும் அன்பொடு வணங்கினர் மணி கண்டர் நல்லூர்த்திரு விழா அணி சேவித்துத் திரு மடத்து அடியார்பெருகும் இன்பமோடு அமுது செய்திட அருள் பேணிஉருகு சிந்தையின் மகிழ்ந்து உறை நாளிடை ஒருநாள்.
சொற்பிரிப்பு
மருவும் அன்பொடு வணங்கினர் மணிகண்டர் நல்லூர்த்திருவிழா அணி சேவித்துத் திருமடத்து அடியார்பெருகும் இன்பமோடு அமுது செய்திட அருள் பேணிஉருகு சிந்தையின் மகிழ்ந்து உறைநாள் இடை ஒருநாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பிறைத் தளிர் சடைப் பெருந்தகைப் பெரும் திரு நல்லூர்க்கறைக் களத்து இறை கோவணப் பெருமை முன் காட்டிநிறைத்த அன்புடைத் தொண்டர்க்கு நீடருள் கொடுப்பான்மறைக் குலத்தொரு பிரமசாரியின் வடிவு ஆகி.
சொற்பிரிப்பு
பிறைத்தளிர்ச் சடைப் பெருந்தகைப் பெருந்திரு நல்லூர்க்கறைக்களத்து இறை கோவணப் பெருமை முன் காட்டிநிறைத்த அன்புடைத் தொண்டர்க்கு நீடு அருள் கொடுப்பான்மறைக்குலத்து ஒரு பிரமசாரியின் வடிவு ஆகி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

செய்ய புன் சடை கரந்தது ஓர் திருமுடிச் சிகையும்சைவ வெண் திரு நீற்று முண்டகத்து ஒளித் தழைப்பும்மெய்யின் வெண் புரி நூலுடன் விளங்கும் மான் தோலும்கையில் மன்னிய பவித்திர மரகதக் கதிரும்.
சொற்பிரிப்பு
செய்ய புன்சடை கரந்தது ஓர் திருமுடிச் சிகையும்சைவ வெண் திருநீற்று முண்டத்து ஒளித் தழைப்பும்மெய்யின் வெண்புரி நூலுடன் விளங்கு மான் தோலும்கையின் மன்னிய பவித்திர மரகதக் கதிரும்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

முஞ்சி நாணுற முடிந்தது சாத்திய அரையில்தஞ்ச மா மறைக் கோவண ஆடையின் அசைவும்வஞ்ச வல் வினைக் கறுப்பறும் மனத்து அடியார்கள்நெஞ்சில் நீங்கிடா அடி மலர் நீணிலம் பொலிய.
சொற்பிரிப்பு
முஞ்சி நாண் உற முடிந்தது சாத்திய அரையில்தஞ்ச மாமறைக் கோவண ஆடையின் தசைவும்வஞ்ச வல்வினைக் கறுப்பறும் மனத்து அடியார்கள்நெஞ்சில் நீங்கிடா அடிமலர் நீள் நிலம் பொலிய,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருகத்தொண்டர் அன்பு எனும் தூ நெறி வெளிப் படுப்பார் ஆய்த்தண்டின் மீதிரு கோவணம் நீற்றுப்பை தருப்பைகொண்டு வந்து அமர் நீதியார் திரு மடம் குறுக.
சொற்பிரிப்பு
கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருகத்தொண்டர் அன்பெனும் தூநெறி வெளிப்படுப்பாராய்த்தண்டின் மீது இரு கோவண நீற்றுப்பை தருப்பைகொண்டு வந்து அமர் நீதியார் திருமடம் குறுக.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

வடிவு காண்டலும் மனத்தினும் முகமிக மலர்ந்துகடிது வந்து எதிர் வணங்கி இம் மடத்தினில் காணும்படி இலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோஅடியனேன் செய்தது என்றனர் அமர்நீதி அன்பர்.
சொற்பிரிப்பு
வடிவு காண்டலும் மனத்தினும் மிக முகம் மலர்ந்து,கடிது வந்து எதிர் வணங்கி, ”இம் மடத்தினில் காணும்படியிலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோஅடியனேன் செய்தது?” என்றனர் அமர்நீதி அன்பர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

பேணும் அன்பரை நோக்கி நீர் பெருகிய அடியார்க்குஊணும் மேன்மையில் ஊட்டி நற் கந்தை கீள் உடைகள்யாணர் வெண் கிழிக் கோவணம் ஈதல் கேட்டு உம்மைக்காண வந்தனம் என்றனன் கண் நுதல் கரந்தோன்.
சொற்பிரிப்பு
பேணும் அன்பரை நோக்கி ”நீர் பெருகிய அடியார்க்குஊணும் மேன்மையில் ஊட்டி நல் கந்தை கீள் உடைகள்யாணர் வெண்கிழிக் கோவணம் ஈதல் கேட்டு உம்மைக்காண வந்தனம்” என்றனன் கண்ணுதல் கரந்தோன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

என்று தம்பிரான் அருள் செய இத் திரு மடத்தேநன்று நான் மறை நற்றவர் அமுது செய்து அருளத்துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால்இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும் என்று இறைஞ்ச.
சொற்பிரிப்பு
என்று தம்பிரான் அருள்செய “இத்திரு மடத்தேநன்று நான்மறை நற்றவர் அமுது செய்து அருளத்துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால்இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும்” என்று இறைஞ்ச,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தேஅணங்கு நீர்ப் பொன்னி ஆடி நான் வர மழை வரினும்உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும் என்று ஒரு வெண்குணங் கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்துக் கொடுப்பார்.
சொற்பிரிப்பு
வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே“அணங்கு நீர்ப் பொன்னி ஆடி நான் வர மழை வரினும்உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும்” என்று ஒரு வெண்குணங்கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்து கொடுப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறு உமக்கேஈங்கு நான் சொல்ல வேண்டுவது இல்லை நீர் இதனைவாங்கி நான் வரும் அளவும் உம்மிடத்து இகழாதேஆங்கு வைத்து நீர் தாரும் என்று அவர் கையில் கொடுத்தார்.
சொற்பிரிப்பு
“ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறு உமக்கேஈங்கு நான் சொல்ல வேண்டுவது இல்லை நீர் இதனைவாங்கி நான்வரும் அளவும் உம் இடத்து இகழாதேஆங்கு வைத்து நீர் தாரும்” என்று அவர் கையில் கொடுத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

கொடுத்த கோவணம் கைக் கொண்டு கோது இலா அன்பர்கடுப்பில் இங்கு எழுந்து அருளும் நீர் குளித்து எனக் கங்கைமடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அம் மறையோர்அடுத்த தெண்டிரைப் பொன்னி நீர் ஆட என்று அகன்றார்.
சொற்பிரிப்பு
கொடுத்த கோவணம் கைக்கொண்டு கோதிலா அன்பர்“கடுப்பில் இங்கு எழுந்தருளும் நீர் குளித்து எனக் கங்கைமடுத்த தும்பிய வளர்சடை மறைத்த அம் மறையோர்அடுத்த தெண்திரைப் பொன்னி நீர் ஆட என்று அகன்றார்.”
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

தந்த கோவணம் வாங்கிய தனிப் பெருந் தொண்டர்முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும்கந்தை கீள் உடை கோவணம் அன்றி ஓர் காப்புச்சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்தின் வைத்தார்.
சொற்பிரிப்பு
தந்த கோவணம் வாங்கிய தனிப்பெருந் தொண்டர்முந்தை அந்தணர் மொழிகொண்டு முன்பு தாம் கொடுக்கும்கந்தை கீள் உடை கோவணம் அன்றி ஓர் காப்புச்சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்து வைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

போன வேதியர் வைத்த கோவணத்தினைப் போக்கிப்பானலந்துறைப் பொன்னி நீர் படிந்து வந்தாரோதூநறுஞ் சடைக் கங்கை நீர் தோய்ந்து வந்தாரோவானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
போன வேதியர் வைத்த கோவணத்தினைப் போக்கிப்பானல் அம்துறைப் பொன்னி நீர் படிந்து வந்தாரோ?தூநறும் சடைக் கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ?வான நீர் மழை பொழிந்திட நனைத்து வந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

கதிர் இளம் பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதில்முதிரும் அன்பு உடைத் தொண்டர் தாம் முறைமையின் முன்னேஅதிக நன்மையின் அறு சுவைத் திருவமுது ஆக்கிஎதிர் எழுந்து சென்று இறைஞ்சிட நிறைந்த நூல் மார்பர்.
சொற்பிரிப்பு
கதிர் இளம்பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதில்முதிரும் அன்புடைத் தொண்டர் தாம் முறைமையின் முன்னேஅதிக நன்மையின் அறுசுவைத் திருவமுது ஆக்கிஎதிர் எழுந்துசென்று இறைஞ்சிட நிறைந்த நூல் மார்பர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டிமண்டு தண் புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்தண்டின் மேலதும் ஈரம் நான் தந்த கோவணத்தைக்கொண்டு வாரும் என்று உரைத்தனர் கோவணக் கள்வர்.
சொற்பிரிப்பு
தொண்டர் அன்பெனும் தூய நீர் ஆடுதல் வேண்டி“மண்டு தண் புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்தண்டின் மேல் அதும் ஈரம் நான் தந்த கோவணத்தைக்கொண்டு வாரும்” என்று உரைத்தனர் கோவணக் கள்வர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகிஎய்தி நோக்குறக் கோவணம் இருந்த வேறு இடத்தில்மை இல் சிந்தையர் கண்டிலர் வைத்த கோவணம் முன்செய்தது என் என்று திகைத்தனர் தேடுவார் ஆனார்.
சொற்பிரிப்பு
ஐயர் கைதவம் அறிவுறாதவர் கடிது அணுகிஎய்தி நோக்குறக் கோவணம் இருந்த வேறு இடத்தில்மையில் சிந்தையர் கண்டிலர்; “வைத்த கோவணம் முன்செய்தது என்” என்று திகைத்தனர் தேடுவார் ஆனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

பொங்கு வெண் கிழிக் கோவணம் போயின நெறி மேல்சங்கை இன்றியே தப்பினது என்று தம் சரக்கில்எங்கு நாடியும் கண்டிலர் என் செய்வார் நின்றார்அங்கண் வேதியர் பெரும் தொடக்கினில் அகப் பட்டார்.
சொற்பிரிப்பு
“பொங்கு வெண் கிழிக் கோவணம் போயின நெறிமேல்சங்கை இன்றியே தப்பினது” என்று தம் சரக்கில்எங்கு நாடியும் கண்டிலர்; என்செய்வார்; நின்றார்;அங்கண் வேதியர் பெருந்தொடக்கினில் அகப்பட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

மனைவி யாரொடு மன்னிய கிளைஞரும் தாமும்இனையது ஒன்று வந்து எய்தியது என இடர் கூர்ந்துநினைவது ஒன்று இலர் வருந்தினர் நிற்கவும் மாட்டார்புனைய வேறு ஒரு கோவணம் கொடு புறப்பட்டார்.
சொற்பிரிப்பு
மனைவியாரொடு மன்னிய கிளைஞரும் தாமும்இனையது ஒன்று வந்து எய்தியது என இடர் கூர்ந்துநினைவது ஒன்றிலர் வருந்தினர்; நிற்கவும் மாட்டார்;புனைய வேறு ஒரு கோவணம் கொடு புறப்பட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

அத்தர் முன்பு சென்று அடிகள் நீர் தந்த கோவணத்தைவைத்த இடத்து நான் கண்டிலேன் மற்றும் ஓர் இடத்தில்உய்த்து ஒளித்தனர் இல்லை (அஃது ஒழிந்தவாறு அறியேன் *)இத்தகைத்த வேறு அதிசயம் கண்டிலேன் என்று.( * "நான் ஒளித்தவாறு அறியேன் " என்றும் பாடம் )
சொற்பிரிப்பு
அத்தர் முன்பு சென்று “அடிகள்! நீர் தந்த கோவணத்தைவைத்திடத்து நான் கண்டிலன்; மற்றும் ஓர் இடத்தில்உய்த்து ஒளித்தனர் இல்லை; அஃது ஒழிந்தவாறு அறியேன்;இத்தகைத்த வேறு அதிசயம் கண்டிலேன்” என்று,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

வேறு நல்லது ஓர் கோவணம் விரும்பி முன் கொணர்ந்தேன்கீறு கோவணம் அன்று நெய்தமைத்தது கிளர் கொள்நீறு சாத்திய நெற்றியீர் மற்றது களைந்துமாறு சாத்தி என் பிழை பொறுப்பீர் என வணங்க.
சொற்பிரிப்பு
“வேறு நல்லதோர் கோவணம் விரும்பி முன் கொணர்ந்தேன்;கீறு கோவணம் அன்று;நெய்து அமைத்தது; கிளர்கொள்நீறு சாத்திய நெற்றியீர்! மற்றது களைந்துமாறு சாத்தி என் பிழை பொறுப்பீர்” என வணங்க,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

நின்ற வேதியர் வெகுண்டு அமர் நீதியார் நிலைமைநன்று சாலவும் நாள் இடை கழிந்ததும் அன்றால்இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் வேறுஒன்று கொள்க என உரைப்பதே நீர் என உரையா.
சொற்பிரிப்பு
நின்ற வேதியர் வெகுண்டு” அமர் நீதியார்! நிலைமைநன்று!; சாலவும் நாள் இடை கழிந்ததும் அன்றால்;இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் வேறுஒன்று கொள்க என உரைப்பதே! நீர்” என உரையா,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

நல்ல கோவணம் கொடுப்பன் என்று உலகின் மேல் நாளும்சொல்லும் விதத்தது என் கோவணம் கொள்வது துணிந்தோஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு என்றுஎல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான்.
சொற்பிரிப்பு
“நல்ல கோவணம் கொடுப்பன் என்று உலகின் மேல் நாளும்சொல்லுவித்தது என் கோவணம் கொள்வது துணிந்தோ?ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு!” என்றுஎல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

மறி கரந்து தண்டு ஏந்திய மறைவர் வெகுளப்பொறி கலங்கிய உணர்வினர் ஆய் முகம் புலர்ந்துசிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள் செய்வீர் அடியேன்அறிய வந்தது ஒன்று என அடி பணிந்து அயர்வார்.
சொற்பிரிப்பு
மறி கரந்து தண்டு ஏந்திய மறையவர் வெகுளப்பொறி கலங்கிய உணர்வினராய் முகம் புலர்ந்து“சிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள் செய்வீர்! அடியேன்அறிய வந்தது ஒன்று” என அடிபணிந்து அயர்வார்;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

செயத்தகும் பணி செய்வன் இக் கோவணம் அன்றிநயத் தகுந்தன நல்ல பட்டு ஆடைகள் மணிகள்உயர்த்த கோடி கொண்டு அருளும் என்று உடம்பினில் அடங்காப்பயத்தொடுங்குலைந்து அடி மிசைப் பல முறை பணிந்தார்.
சொற்பிரிப்பு
“செயத்தகும் பணி செய்வன் இக்கோவணம் அன்றிநயத்தகும் தனம் நல்ல பட்டாடைகள் மணிகள்உயர்த்த கோடி கொண்டு அருளும்” என்று உடம்பினில் அடங்காப்பயத்தொடும் குலைந்து அடிமிசைப் பலமுறை பணிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

பணியும் அன்பரை நோக்கி அப் பரம் பொருளானார்தணியும் உள்ளத்தர் ஆயினர் போன்று நீர் தந்தமணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்யஅணியும் கோவணம் நேர் தர அமையும் என்றான்.
சொற்பிரிப்பு
பணியும் அன்பரை நோக்கி அப் பரம்பொருள் ஆனார்தணியும் உள்ளத்தர் ஆயினார் போன்று,”நீர் தந்தமணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய?அணியும் கோவணம் நேர் தர அமையும்”என்று அருள,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார்அலர்ந்த வெண்ணிறக் கோவணம் அதற்கு நேராகஇலங்கு பூந் துகில் கொள்வதற்கு இசைந்து அருள் செய்யீர்நலங் கொள் கோவணம் தரும் பரிசு யாதென நம்பர்.
சொற்பிரிப்பு
மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார்“அலர்ந்த வெண் நிறக் கோவணம் அதற்கு நேர் ஆகஇலங்கு பூந்துகில் கொள்வதற்கு இசைந்து அருள் செய்யீர்;நலங்கொள் கோவணம் தரும் பரிசு யாது” என நம்பர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

உடுத்த கோவணம் ஒழிய நாம் உம் கையில் தர நீர்கெடுத்ததாக முன் சொல்லும் அக் கிழித்த கோவணநேர்அடுத்த கோவணம் இது என்று தண்டினில் அவிழாதுஎடுத்து மற்று இதன் எடையிடும் கோவணம் என்றார்.
சொற்பிரிப்பு
“உடுத்த கோவணம் ஒழிய நாம் உங்கையில் தர நீர்கெடுத்தது ஆக முன் சொல்லும் அக் கிழித்த கோவணம் நேர்அடுத்த கோவணம் இது” என்று, தண்டினில் அவிழாஎடுத்து, “மற்று இதன் எடையிடும் கோவணம்” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

நன்று சால என்று அன்பரும் ஒரு துலை நாட்டக்குன்ற வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார்நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவணம் தட்டுஒன்றிலே இட நிறை நிலாது ஒழிந்தமை கண்டார்.
சொற்பிரிப்பு
“நன்று சால!” என்று அன்பரும் ஒரு துலை நாட்டக்குன்ற வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார்;நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவணம் தட்டுஒன்றிலே இட நிறை நிலாது ஒழிந்தமை கண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

நாடும் அன்பொடு நாயன்மார்க் களிக்க முன் வைத்தநீடு கோவணம் அடைய நேராக ஒன்று ஒன்றாக்கோடு தட்டின் மீது இடக் கொண்டு எழுந்தது கண்டுஆடு சேவடிக்கு அடியரும் அற்புதம் எய்தி.
சொற்பிரிப்பு
நாடும் அன்பொடு நாயன்மார்க்கு அளிக்க முன் வைத்தநீடு கோவணம் அடைய நேர் ஆக ஒன்று ஒன்றாக்கோடு தட்டின் மீது இடஇடக் கொண்டு எழுந்தது கண்டுஆடு சேவடிக்கு அடியரும் அற்புதம் எய்தி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

உலகில் இல்லதோர் மாயை இக் கோவணம் ஒன்றுக்குஅலகில் கோவணம் ஒத்தில என்று அதிசயத்துப்பலவும் மென் துகில் பட்டுடன் இட இட உயரஇலகு பூந்துகிற் பொதிகளை எடுத்து மேல் இட்டார்.
சொற்பிரிப்பு
“உலகில் இல்லது ஓர் மாயை! இக் கோவணம் ஒன்றுக்குஅலகில் கோவணம் ஒத்தில!” என்று அதிசயித்துப்பலவும் வெண்துகில் பட்டுடன் இடஇட உயரஇலகு பூந்துகில் பொதிகளை எடுத்துமேல் இட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

முட்டில் அன்பர் தம் அன்பிடுந் தட்டுக்கு முதல்வர்மட்டு நின்ற தட்டு அருளொடுந் தாழ்வு உறும் வழக்கால்பட்டொடும் துகில் அநேக கோடிகளிடும் பத்தர்தட்டு மேற் படத் தாழ்ந்தது கோவணத் தட்டு.
சொற்பிரிப்பு
முட்டில் அன்பர் தம் அன்பிடும் தட்டுக்கு முதல்வர்மட்டு நின்ற தட்டு அருளொடும் தாழ்வுறும் வழக்கால்பட்டொடும் துகில் அநேக கோடிகள் இடும் பத்தர்தட்டு மேற்படத் தாழ்ந்தது கோவணத் தட்டு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன்தூ நறுந் துகில் வர்க்க நூல் வர்க்கமே முதலாமானம் இல்லன குவிக்கவும் தட்டின் மட்டு இதுவால்ஏனை என் தனம் இடப்பெற வேண்டும் என்று இறைஞ்ச.
சொற்பிரிப்பு
ஆன தன்மைகண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன்“தூநறும் துகில் வருக்கம் நூல் வருக்கமே முதலாமானம் இல்லன குவிக்கவும் தட்டின் மட்டு இதுவால்;ஏனை என் தனம் இடப்பெற வேண்டும்” என்று இறைஞ்ச,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தேஇங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்வது என் கொல்அங்கு மற்று உங்கள் தனங்களினாகிலும் இடுவீர்எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது என்றார்.
சொற்பிரிப்பு
மங்கை பாகராம் மறையவர் மற்றதற்கு இசைந்தே“இங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்லுவது என்கொல்!அங்கு மற்று உங்கள் தனங்களின் ஆகிலும் இடுவீர்;எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

38

நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவ மணித் திரளும்பல் வகைத் திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும்எல்லை இல் பொருள் சுமந்து அவர் இட இடக் கொண்டேமல்கு தட்டு மீது எழுந்தது வியந்தனர் மண்ணோர்.
சொற்பிரிப்பு
நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவமணித் திரளும்பல்வகைத்திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும்எல்லை இல்பொருள் சுமந்து அவர் இடஇடக் கொண்டேமல்கு தட்டு மீது எழுந்தது; வியந்தனர் மண்ணோர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

39

தவம் நிறைந்த நான் மறைப் பொருள் நூல்களால் சமைந்தசிவன் விரும்பிய கோவணம் இடும் செழுந்தட்டுக்குஅவனி மேலமர் நீதியார் தனமெலாம் அன்றிப்புவனம் யாவையும் நேர் நிலா என்பது புகழோ.
சொற்பிரிப்பு
தவம் நிறைந்த நான்மறைப் பொருள் நூல்களால் சமைந்தசிவன் விரும்பிய கோவணம் இடும் செழும் தட்டுக்குஅவனி மேல் அமர் நீதியார் தனம் எலாம் அன்றிப்புவனம் யாவையும் நேர் நிலா என்பது புகழோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

40

நிலைமை மற்றது நோக்கிய நிகர் இலார் நேர் நின்றுஉலைவில் பஃறனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன்தலைவ யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல்துலையில் ஏறிடப் பெறுவது உன் அருள் எனத் தொழுதார்.
சொற்பிரிப்பு
நிலைமை மற்றது நோக்கிய நிகர் இலார் நேர் நின்று“உலைவில் பல்தனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன்;தலைவ! யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல்துலையில் ஏறிடப் பெறுவது உன் அருள்” எனத் தொழுதார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

41

பொச்சமில்ல அடிமைத் திறம் புரிந்தவர் எதிர்நின்றுஅச்ச முன்புற உரைத்தலும் அங்கணர் அருளால்நிச்சயித்தவர் நிலையினைத் துலை எனுஞ் சலத்தால்இச் சழக்கினின்று ஏற்றுவார் ஏறுதற்கு இசைந்தார்.
சொற்பிரிப்பு
பொச்சம் இல் அடிமைத்திறம் புரிந்தவர் எதிர் நின்றுஅச்சம் முன்புற உரைத்தலும், அங்கணர் அருளால்நிச்சயித்து அவர் நிலையினைத் துலை எனும் சலத்தால்இச்சழக்கின் நின்று ஏற்றுவார் ஏறுதற்கு இசைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

42

மனம் மகிழ்ந்து அவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கிப்புனை மலர்க் குழல் மனைவியார் தம்மொடு புதல்வன்தனை உடன் கொடு தனித் துலை வலம் கொண்டு தகவால்இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து.
சொற்பிரிப்பு
மனம் மகிழ்ந்து அவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கிப்புனை மலர்க்குழல் மனைவியார் தம்மொடு புதல்வன்தனை உடன்கொடு தனித்துலை வலம்கொண்டு தகவால்இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

43

இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமைபிழைத்திலோம் எனில் பெருந்துலை நேர் நிற்க என்றுமழைத் தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கித்தழைத்த அஞ்செழுத்து ஓதினார் ஏறினார் தட்டில்.
சொற்பிரிப்பு
“இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமைபிழைத்திலோம் எனில் பெருந்துலை நேர் நிற்க!” என்று,மழைத்தடம் பொழில் திருநல்லூர் இறைவரை வணங்கித்தழைத்த அஞ்செழுத்து ஓதினார்; ஏறினார் தட்டில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

44

மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்து உடன் ஏறஅண்டர் தம்பிரான் திரு அரைக் கோவணம் அதுவும்கொண்ட அன்பினில் குறைபடா அடியவர் அடிமைத்தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது அத் துலைதான்.
சொற்பிரிப்பு
மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்து உடன் ஏற,அண்டர் தம்பிரான் திருஅரைக் கோவணம் அதுவும்கொண்ட அன்பினில் குறைபடா அடியவர் அடிமைத்தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது அத் துலை தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

45

மதி விளங்கிய தொண்டர் தம் பெருமையை மண்ணோர்துதி செய்து எங்கணும் அதிசயம் உற எதிர் தொழுதார்கதிர் விசும்பு இடை கரந்திட நிரந்த கற்பகத்தின்புதிய பூ மழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார்.
சொற்பிரிப்பு
மதி விளங்கிய தொண்டர் தம் பெருமையை மண்ணோர்துதி செய்து எங்கணும் அதிசயம் உற எதிர் தொழுதார்;கதிர் விசும்பு இடை கரந்திட நிரந்த கற்பகத்தின்புதிய பூமழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

46

அண்டர் பூ மழை பொழிய மற்று அதனிடை ஒளித்தமுண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர்ப்பண்டு தாம் பயில் கோலமே விசும்பினிற் பாகங்கொண்ட பேதையும் தாமுமாய்க் காட்சி முன் கொடுத்தார்.
சொற்பிரிப்பு
அண்டர் பூமழை பொழிய மற்று அதன் இடை ஒளித்தமுண்ட வேதியர் ஒருவழியான் முதல் நல்லூர்ப்பண்டு தாம் பயில் கோலமே விசும்பினில் பாகம்கொண்ட பேதையும் தாமுமாய்க் காட்சி முன் கொடுத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

47

தொழுது போற்றி அத் துலை மிசை நின்று நேர் துதிக்கும்வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும்முழுதும் இன்னருள் பெற்றுத் தம் முன் தொழுது இருக்கும்அழிவில் வான் பதங் கொடுத்து எழுந்து அருளினார் ஐயர்.
சொற்பிரிப்பு
தொழுது போற்றி அத் துலைமிசை நின்று நேர் துதிக்கும்வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும்முழுதும் இன் அருள் பெற்றுத் தம் முன் தொழுது இருக்கும்அழிவில் வான் பதம் கொடுத்து எழுந்து அருளினார் ஐயர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

48

நாதர் தம் திரு அருளினால் நல் பெருந் துலையேமீது கொண்டெழு விமானம் அதுவாகி மேல் செல்லக்கோதில் அன்பரும் குடும்பமும் குறைவு அறக் கொடுத்தஆதி மூர்த்தியாருடன் சிவ புரியினை அணைந்தார்.
சொற்பிரிப்பு
நாதர் தம் திரு அருளினால் நல்பெரும் துலையேமீது கொண்டு எழு விமானம் அது ஆகி மேல் செல்லக்கோதில் அன்பரும் குடும்பமும் குறைவு அறக் கொடுத்தஆதி மூர்த்தியார் உடன் சிவ புரியினை அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

49

மலர் மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல்பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் ஆவணப் பழமை காட்டிஉலகு உய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம் உன்னித்தலை மிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும்.தில்லைவாழ் அந்தணர் சருக்கம் முற்றிற்று.
சொற்பிரிப்பு
மலர்மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல்பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் ஆவணப் பழைமை காட்டிஉலகு உய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம் உன்னித்தலைமிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.