திருமுறை 12 · 12.012 · 11

விறன்மிண்ட நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

விரை செய் நறும் பூந் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவிப்பரசுபெறு மா தவ முனிவன் பரசு ராமன் பெறு நாடுதிரை செய் கடலின் பெருவளனும் திருந்து நிலனின் செழு வளனும்வரையின் வளனும் உடன் பெருகி மல்கு நாடு மலை நாடு.
சொற்பிரிப்பு
விரை செய் நறும் பூந்தொடை இதழி வேணியார் தம் கழல்பரவிப்பரசு பெறு மாதவ முனிவன் பரசுராமன் பெறுநாடுதிரை செய் கடலின் பெருவளனும் திருந்து நிலனின் செழுவளனும்வரையின் வளனும் உடன் பெருகி மல்கு நாடு மலைநாடு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வாரி சொரியும் கதிர் முத்தும் வயல்மென் கரும்பில் படு முத்தும்வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும்மூரல் எனச் சொல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும்சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர்.
சொற்பிரிப்பு
வாரி சொரியும் கதிர்முத்தும் வயல்மென் கரும்பில் படுமுத்தும்வேரல் விளையும் குளிர்முத்தும் வேழ மருப்பின் ஒளிர்முத்தும்மூரல் எனச்சொல் வெண்முத்த நகையார் தெரிந்து முறைகோக்கும்சேரர் திருநாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

என்னும் பெயரின் விளங்கி உலகேறும் பெருமை உடையது தான்அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறைசொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமைத் தலை நின்றார்மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபிற் பெரியோர் வாழ் பதியாம்.
சொற்பிரிப்பு
என்னும் பெயரின் விளங்கி உலகு ஏறும் பெருமை உடையதுதான்அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறைசொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமைத் தலைநின்றார்மன்னும் குலத்தின் மாமறைநூல் மரபில் பெரியோர் வாழ் பதியாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அப் பொற் பதியினிடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார்செப்பற்கு அரிய பெரும் சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றிஎப் பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார்மெய்ப் பத்தர்கள் பால் பரிவுடையார் எம்பிரானார் விறன் மிண்டர்.
சொற்பிரிப்பு
அப்பொற் பதியின் இடைவேளாண் குலத்தை விளக்க அவதரித்தார்;செப்பற்கு அரிய பெருஞ்சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றிஎப்பற்றினையும் அற எறிவார்; எல்லை தெரிய ஒண்ணாதார்மெய்ப் பத்தர்கள்பால் பரிவுடையார் எம்பிரானார்; விறன்மிண்டர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்தபதிகள் எங்கும் கும்பிட்டுப் படரும் காதல் வழிச் செல்வார்முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திருக் கூட்டத்துஎதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப் பெற்றார்.
சொற்பிரிப்பு
நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம்சிறந்தபதிகள் எங்கும் கும்பிட்டுப் படரும் காதல் வழிச்செல்வார்முதிரும் அன்பில் பெருந்தொண்டர் முறைமை நீடு திருக்கூட்டத்துஎதிர்முன் பரவும் அருள்பெற்றே இறைவர் பாதம் தொழப்பெற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பொன் தாழ் அருவி மலைநாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும்சென்று ஆள் உடையார் அடியவர் தம் திண்மை ஒழுக்க நடை செலுத்திவன் தாள் மேருச் சிலை வளைத்துப் புரங்கள் செற்ற வைதிகத் தேர்நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார்.
சொற்பிரிப்பு
பொன்தாழ் அருவி மலைநாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும்சென்றாள் உடையார் அடியவர் தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி,வன்தாள் மேருச் சிலை வளைத்துப் புரங்கள் செற்ற வைதிகத்தேர்நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

திருவார் பெருமை திகழ்கின்ற தேவாசிரிய னிடைப் பொலிந்துமருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்து அணையாதுஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகென்று உரைப்பச் சிவன் அருளால்பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார்.
சொற்பிரிப்பு
திருவார் பெருமை திகழ்கின்ற “தேவாசிரியன் இடைப்பொலிந்துமருவா நின்ற சிவன் அடியார் தம்மைத் தொழுது வந்து அணையாதுஒருவாறு ஒதுங்கும் வன்தொண்டன் புறகு” என்றுரைப்பச் சிவனருளால்பெருகா நின்ற பெரும்பேறு பெற்றார்; மற்றும் பெற நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

சேண் ஆர் மேருச் சிலை வளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம்பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரானாம் தன்மைப் பிறை சூடிப்பூணார் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர் பால்கோணா அருளைப் பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார்.
சொற்பிரிப்பு
சேணார் மேருச் சிலைவளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம்பேணாது ஏகும் ஊரனுக்கும் “பிரானாம் தன்மைப் பிறைசூடிப்பூணார் அரவம் புனைந்தார்க்கும் புறகு” என்று உரைப்ப மற்று அவர்பால்கோணா அருளைப் பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நன் னெறியின்சீலம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பாடச் செழு மறைகள்ஓலம் இடவும் உணர்வு அரியார் அடியா ருடனாம் உளது என்றால்ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தாரார்.
சொற்பிரிப்பு
ஞாலம் உய்ய, நாம் உய்ய, நம்பி, சைவ நன்னெறியின்சீலம் உய்யத், திருத்தொண்டத் தொகை முன் பாடச், செழுமறைகள்ஓலம் இடவும் உணர்வு அரியார், “அடியார் உடன் நாம் உளது” என்றால்,ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தார் ஆர்?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஒக்க நெடு நாள் இவ் உலகில் உயர்ந்த சைவப் பெருந் தன்மைதொக்க நிலைமை நெறி போற்றித் தொண்டு பெற்ற விறன் மிண்டர்தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழற்கீழ்மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார்.
சொற்பிரிப்பு
ஒக்க நெடுநாள் இவ்உலகில் உயர்ந்த சைவப் பெருந்தன்மைதொக்க நிலைமை நெறி போற்றித் தொண்டு பெற்ற விறன்மிண்டர்தக்க வகையால் தம்பெருமான் அருளினாலே தாள் நிழல்கீழ்மிக்க கணநாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

வேறு பிறிதென் திருத் தொண்டத் தொகையால் உலகு விளங்க வரும்பேறு தனக்குக் காரணராம் பிரானார் விறன் மிண்டரின் பெருமைகூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேற் கொண்டேஆறை வணிகர் அமர் நீதி அன்பர் திருத் தொண்டு அறைகுவாம்.
சொற்பிரிப்பு
வேறு பிறிது என்? திருத்தொண்டத் தொகையால் உலகு விளங்கவரும்பேறு தனக்குக் காரணராம் பிரானார் விறன்மிண்டரின் பெருமைகூறும் அளவு என் அளவிற்றே? அவர் தாள் சென்னி மேற்கொண்டேஆறை வணிகர் அமர்நீதி அன்பர் திருத்தொண்டு அறைகுவாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.