1
சேதி நன்னாட்டு நீடு திருக் கோவலூரின் மன்னிமாதொரு பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான்வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டுகாதலால் ஈசர்க்கு அன்பர் கருத்து அறிந்து ஏவல் செய்வார்.
சொற்பிரிப்பு
சேதி நன் நாட்டில் நீடு திருக்கோவலூரின் மன்னிமாதொரு பாகர் அன்பின் வழிவரு மலாடர் கோமான்வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டுகாதலால் ஈசர்க்கு அன்பர் கருத்தறிந்து ஏவல் செய்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.