திருமுறை 12 · 12.009 · 36

இயற்பகை நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

சென்னி வெண்குடை நீடு அநபாயன் திருக் குலம் புகழ் பெருக்கிய சிறப்பின்மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்துப்பொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி தன்னையும் புனித மாக்குவதோர்நன்னெடும் பெரும் தீர்த்த முன்னுடைய நலம் சிறந்தது வளம் புகார் நகரம்.
சொற்பிரிப்பு
சென்னி வெண்குடை நீடு அநபாயன் திருக்குலம் புகழ் பெருக்கிய சிறப்பின்மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம்தர இயல்பினில் அளித்துப்பொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதம் ஆக்குவதோர்நன்னெடும் பெரும் தீர்த்தம் முன் உடைய நலம் சிறந்தது வளம் புகார் நகரம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அக் குலப் பதிக் குடி முதல் வணிகர் அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார்செக்கர் வெண் பிறைச் சடையவர் அடிமைத் திறத்தின் மிக்கவர் மறைச் சிலம்படியார்மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதேஇக் கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற் பகையார்.
சொற்பிரிப்பு
அக்குலப்பதிக் குடி முதல் வணிகர்; அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார்;செக்கர் வெண்பிறைச் சடையவர் அடிமைத் திறத்தில் மிக்கவர்; மறைச்சிலம்பு அடியார்மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதேஇக்கடல்படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர்; உலகியற் பகையார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவிலாத ஓர் உளம் நிறை அருளால்நீறு சேர் திரு மேனியார் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்துமாறு இலாத நன்னெறியினில் விளங்கும் மனை அறம் புரி மகிழ்ச்சியின் வந்தபேறெலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே எனப் பேணி வாழ் நாளில்.
சொற்பிரிப்பு
ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவிலாதது ஓர் உளம் நிறை அருளால்நீறுசேர் திருமேனியர் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்துமாறிலாத நன்நெறியினில் விளங்கும் மனை அறம்புரி மகிழ்ச்சியின் வந்தபேறு எலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே எனப் பேணி வாழ்நாளில்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்துள் நின்று ஆடுவார் உம்பர்நாயகிக்கும் அஃது அறியவோ பிரியா நங்கைதான் அறியாமையோ அறியோம்தூய நீறு பொன் மேனியில் விளங்கத் தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய்மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார்.
சொற்பிரிப்பு
ஆயும் நுண்பொருள் ஆகியும் வெளியே அம்பலத்துள் நின்று ஆடுவார் உம்பர்நாயகிக்கும் அஃது அறியவோ? பிரியா நங்கை தான் அறியாமையோ? அறியோம்தூய நீறு பொன் மேனியில் விளங்கத் தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய்மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வந்து தண்புகார் வணிகர் தம் மறுகின் மருங்கு இயற் பகையார் மனை புகுதஎந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால்சிந்தை அன்பொடு சென்று எதிர் வணங்கிச் சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்துமுந்தை எம் பெரும் தவத்தினாலென்கோ முனிவர் இங்கு எழுந்து அருளியது என்றார்.
சொற்பிரிப்பு
வந்து தண் புகார் வணிகர் தம் மறுகின் மருங்கு இயற்பகையார் மனை புகுத“எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார்” என்று நின்றதோர் இன்ப ஆதரவால்சிந்தை அன்பொடு சென்று எதிர் வணங்கிச் சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து“முந்தை எம் பெரும் தவத்தினால் என்கோ முனிவர் இங்கு எழுந்து அருளியது” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அக் கைதவ மறையோர்கொன்ற வார்சடையார் அடியார்கள் குறித்துவேண்டின குணம் எனக் கொண்டேஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும் பாலொன்று வேண்டிஇன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார்.
சொற்பிரிப்பு
என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அக் கைதவ மறையோர்“கொன்றை வார் சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் எனக் கொண்டேஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும் பால் ஒன்று வேண்டிஇன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம்” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

என்ன அவ்வுரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில்அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள் செயும் என்னமன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அங்கணர் எதிரேசொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரை செய்வார்.
சொற்பிரிப்பு
என்ன அவ் உரை கேட்டு இயற்பகையார் “யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில்அன்னது எம்பிரான் அடியவர் உடைமை; ஐயம் இல்லை; நீர் அருள்செயும்” என்ன,“மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு” என அங்கணர் எதிரேசொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரை செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம் பிரான் செய்த பேறு எனக்கு என்னாக்கதுமெனச் சென்று தம் மனைவாழ் வாழ்க்கை கற்பின் மேம்படு காதலி யாரைவிதி மணக் குல மடந்தை இன்றுனை இம் மெய்த் தவர்க்கு நான் கொடுத்தனன் என்னமது மலர்க் குழலாள் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார்.
சொற்பிரிப்பு
“இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறு எனக்கு” என்னாக்கதும் எனச் சென்று தம்மனை வாழ்க்கைக் கற்பின் மேம்படு காதலியாரை“விதி மணக்குல மடந்தை! இன்று உனை இம் மெய்த்தவர்க்கு நான் கொடுத்தனன்” என்ன,மது மலர்க்குழல் மனைவியார் கலங்கி, மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

இன்று நீர் எனக்கு அருள் செய்தது இதுவேல் என் உயிர்க்கு ஒரு நாதர் நீர் உரைத்ததுஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்றுதன் தனிப்பெருங் கணவரை வணங்கத் தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர் வணங்கசென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள்.
சொற்பிரிப்பு
“இன்று நீர் எனக்கு அருள்செய்தது இதுவேல் என் உயிர்க்கு ஒரு நாத! நீர் உரைத்ததுஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு” என்றுதன் தனிப்பெரும் கணவரை வணங்கத், தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர் வணங்கச்,சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மாது தன்னை முன் கொடுத்த மாதவர் தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தேயாது நான் இனிச் செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர் தம் எதிர் நோக்கிசாதி வேதியர் ஆகிய தலைவர் தையல் தன்னை யான் தனிக் கொடு போகக்காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார்.
சொற்பிரிப்பு
மாது தன்னை முன் கொடுத்த மாதவர் தாம் மன மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே,“யாது நான் இனிச் செய் பணி?” என்றே இறைஞ்சி நின்றவர் தம் எதிர் நோக்கிச்சாதி வேதியர் ஆகிய தலைவர் “தையல் தன்னை யான் தனிக்கொடு போகக்காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக!” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

என்று அவர் அருளிச் செய்ய யானே முன் செய் குற்றேவல்ஒன்றிது தன்னை என்னை உடையவர் அருளிச் செய்யநின்றது பிழையாம் என்று நினைந்து வேறு இடத்துப் புக்குப்பொன் திகழ் அறுவை சாத்தி பூங்கச்சுப் பொலிய வீக்கி.
சொற்பிரிப்பு
என்றவர் அருளிச் செய்ய “யானே முன் செய் குற்றேவல்ஒன்று இது தன்னை என்னை உடையவர் அருளிச் செய்யநின்றது பிழையாம்” என்று நினைந்து வேறு இடத்துப் புக்குப்பொன்திகழ் அறுவை சாத்திப் பூங்கச்சுப் பொலிய வீக்கி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

வாளொடு பலகை ஏந்தி வந்து எதிர் வணங்கி மிக்கஆளரி ஏறு போல்வார் அவரை முன் போக்கிப் பின்னேதோளிணை துணையே ஆகப் போயினார் துன்னினாரைநீளிடைப் பட முன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார்.
சொற்பிரிப்பு
வாளொடு பலகை ஏந்தி வந்து எதிர் வணங்கி மிக்கஆள் அரி ஏறு போல்வார் அவரை முன் போக்கிப் பின்னேதோள் இணை துணையே ஆகப் போயினார் துன்னினாரைநீள் இடைப் பட முன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும்இனையது ஒன்றி யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால்புனை இழை தன்னைக் கொண்டு போவதாம் ஒருவன் என்றுதுனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார்.
சொற்பிரிப்பு
மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும்“இனையது ஒன்று யாரே செய்தார்? இயற்பகை பித்தன் ஆனால்புனை இழை தன்னைக் கொண்டு போவதாம் ஒருவன்?” என்றுதுனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்ககாலென விசையில் சென்று கடிநகர் புறத்துப் போகிப்பாலிரு மருங்கும் ஈண்டிப் பரந்த ஆர்ப் பரவம் பொங்கமால் கடல் கிளர்ந்தது என்ன வந்து எதிர் வளைத்துக் கொண்டார்.
சொற்பிரிப்பு
வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்ககால் என விசையில் சென்று கடிநகர்ப் புறத்துப் போகிப்பால் இரு மருங்கும் ஈண்டிப் பரந்த ஆர்ப்பு அரவம் பொங்கமால்கடல் கிளர்ந்தது என்ன வந்து எதிர் வளைத்துக் கொண்டார்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார்கழி பெரும் காதல் காட்டிக் காரிகை உடன் போம் போதில்அழிதகன் போகேல் ஈண்டவ் வருங் குலக் கொடியை விட்டுப்பழிவிட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார்.
சொற்பிரிப்பு
வழிவிடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார்கழிபெரும் காதல் காட்டிக் காரிகை உடன் போம் போதில்“அழிதகன்! போகேல்; ஈண்ட அவ் அருங்குலக் கொடியை விட்டுப்பழிவிட நீ போ” என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

மறை முனி அஞ்சினான் போல் மாதினைப் பார்க்க மாதும்இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும் என்னஅறை கழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லாம்தறை இடைப் படுத்துகின்றேன் தளர்ந்து அருள் செய்யேல் என்று.
சொற்பிரிப்பு
மறைமுனி அஞ்சினான் போல் மாதினைப் பார்க்க மாதும்“இறைவனே! அஞ்ச வேண்டா; இயற்பகை வெல்லும்” என்ன;அறைகழல் அண்ணல் கேளா “அடியனேன் அவரை எல்லாம்தறையிடைப் படுத்துகின்றேன்; தளர்ந்தருள் செய்யேல்” என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

பெரு விறல் ஆளி என்னப் பிறங்கு எரி சிதற நோக்கிப்பரிபவப் பட்டு வந்த படர் பெருஞ் சுற்றத் தாரைஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப் போய்ப் பிழையும் அன்றேல்எரி சுடர் வாளில் கூறாய்த் துடிக்கின்றீர் என்று நேர்ந்தார்.
சொற்பிரிப்பு
பெருவிறல் ஆளி என்னப் பிறங்கு எரி சிதற நோக்கிப்பரிபவப் பட்டு வந்த படர் பெரும் சுற்றத்தாரைஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப்போய்ப் பிழையும்; அன்றேல்எரிசுடர் வாளில் கூறாய்த் துடிக்கின்றீர்” என்று நேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

ஏட! நீ என் செய்தாயால் இத்திறம் இயம்பு கின்றாய்நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய் இன்றுபாடவம் உரைப்பது உன்றன் மனைவியைப் பனவற்கு ஈந்தோகூடவே மடிவது அன்றிக் கொடுக்க யாம் ஒட்டோம் என்றார்.
சொற்பிரிப்பு
“ஏட! நீ என் செய்தாயால்? இத்திறம் இயம்புகின்றாய்;நாடு உறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய்; இன்றுபாடவம் உரைப்பது உன் தன் மனைவியைப் பனவற்கு ஈந்தோ?கூடவே மடிவது அன்றிக் கொடுக்க யாம் ஒட்டோம்” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

மற்றவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்தசெற்ற முன் பொங்க உங்கள் உடல் துணி எங்கும் சிந்திமுற்று நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக் கொண்டுநற்றவர் தம்மைப் போக விடுவேன் என்று எழுந்தார் நல்லோர்.
சொற்பிரிப்பு
மற்றவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்தசெற்றம் முன் பொங்க “உங்கள் உடல் துணி எங்கும் சிந்திமுற்று நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக் கொண்டுநற்றவர் தம்மைப் போக விடுவன்” என்று எழுந்தார் நல்லோர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அச் சுற்றத்தாரும்சார்ந்தவர் தம் முன் செல்லார் தையலைக் கொண்டு பெற்றம்ஊர்ந்தவர் படிமேற் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கிஆர்ந்த வெஞ் சினத்தால் மேல் சென்று அடர்ந்து எதிர் தடுத்தார் அன்றே.
சொற்பிரிப்பு
நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அச் சுற்றத்தாரும்சார்ந்தவர் தம் முன் செல்லார் தையலைக் கொண்டு பெற்றம்ஊர்ந்தவர் படிமேல் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கிஆர்ந்த வெஞ்சினத்தால் மேல் சென்று அடர்ந்து எதிர் தடுத்தார் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறிவன்றுணை வாளே யாகச் சாரிகை மாறி வந்துதுன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்துவென்றடு புலியேறென்ன அமர் விளையாட்டில் மிக்கார்.
சொற்பிரிப்பு
சென்றவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறிவன் துணை வாளே ஆகச் சாரிகை மாறி வந்துதுன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்துவென்றடு புலி ஏறு என்ன அமர் விளையாட்டில் மிக்கார்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள்வேண்டிய திசைகள் தோறும் வேறு வேறு அமர் செய் போழ்தில்ஆண்டகை வீரர் தாமே அனைவர்க்கும் அனைவர் ஆகிக்காண்டகு விசையில் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார்.
சொற்பிரிப்பு
மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள்வேண்டிய திசைகள் தோறும் வேறுவேறு அமர் செய் போழ்தில்ஆண்டகை வீரர் தாமே அனைவர்க்கும் அனைவர் ஆகிக்காண்டகு விசையில் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள் எங்கும்விரிந்தன தலைகள் எங்கும் மிடைந்தன கழுகும் எங்கும்எரிந்தன விழிகள் எங்கும் எதிர்ப்பவர் ஒருவர் இன்றித்திரிந்தனர் களனில் எங்கும் சிவன் கழல் புனைந்த வீரர்.
சொற்பிரிப்பு
சொரிந்தன குடல்கள் எங்கும்; துணிந்தன உடல்கள் எங்கும்;விரிந்தன தலைகள் எங்கும்; மிடைந்தன கழுகும் எங்கும்;எரிந்தன விழிகள் எங்கும்; எதிர்ப்பவர் ஒருவர் இன்றித்திரிந்தனர் களனில் எங்கும் சிவன் கழல் புனைந்த வீரர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

மாடலை குருதி பொங்க மடிந்த செங் களத்தின் நின்றும்ஆடுறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார் தம்மில்ஓடினார் உள்ளார் உய்ந்தார் ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார்நீடிய வாளும் தாமும் நின்றவர் தாமே நின்றார்.
சொற்பிரிப்பு
மாடு அலை குருதி பொங்க மடிந்த செங்களத்தின் நின்றும்ஆடு உறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார் தம்மில்ஓடினார் உள்ளார் உய்ந்தார்; ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார்;நீடிய வாளும் தாமும் நின்றவர் தாமே நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

திருவுடை மனைவியாரைக் கொடுத்து இடைச் செறுத்து முன்புவரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டிஅருமறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம்பொருவருங் கானம் நீங்க விடுவன் என்று உடனே போந்தார்.
சொற்பிரிப்பு
திருஉடை மனைவியாரைக் கொடுத்து இடைச் செறுத்து முன்புவரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டிஅருமறை முனியை நோக்கி “அடிகள் நீர் அஞ்சா வண்ணம்பொருஅரும் கானம் நீங்க விடுவன்” என்று உடனே போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழைபொரு திறல் வீரர் பின்பு போக முன் போகும் போதில்அருமறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவித்திரு மலி தோளினானை மீள் எனச் செப்பினானே.
சொற்பிரிப்பு
இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழைபொருதிறல் வீரர் பின்பு போக முன் போகும் போதில்அருமறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவித்திருமலி தோளினானை “மீள்” எனச் செப்பினானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

தவ முனி தன்னை மீளச் சொன்ன பின் தலையால் ஆரஅவன் மலர்ப் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்றுபுவனம் மூன்று உய்ய வந்த பூசுரன் தன்னை ஏத்திஇவன் அருள் பெறப் பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார்.
சொற்பிரிப்பு
தவமுனி தன்னை மீளச் சொன்னபின் தலையால் ஆரஅவன் மலர்ப் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்றுபுவனம் மூன்று உய்ய வந்த பூசுரன் தன்னை ஏத்தி“இவன் அருள் பெறப் பெற்றேன்” என்று இயற்பகையாரும் மீண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போகமை திகழ் கண்டன் எண்தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கிப்பொய் தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான் என்றுமெய் தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல் உற்றான்.
சொற்பிரிப்பு
செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக;மைதிகழ் கண்டன் எண்தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கிப்“பொய்தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான்” என்றுமெய்தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல் உற்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம்அயர்ப்பு இலாதானே ஓலம் அன்பனே ஓலம் ஓலம்செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான்மயக்கறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான்.
சொற்பிரிப்பு
“இயற்பகை முனிவா ஓலம்! ஈண்டு நீ வருவாய் ஓலம்!அயர்ப்பு இலாதானே ஓலம்! அன்பனே ஓலம்! ஓலம்!செயற்கு அரும் செய்கை செய்த தீரனே ஓலம்! என்றான்மயக்கு அறு மறை ஓல் இட்டு மால் அயன் தேட நின்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன் வந்தேன்பிழைத்தவர் உளரேல் இன்னும் பெருவலி தடக்கை வாளின்இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்தக்குழைப் பொலி காதினானும் மறைந்தனன் கோலம் கொள்வான்.
சொற்பிரிப்பு
அழைத்த பேர் ஓசை கேளா “அடியனேன் வந்தேன்! வந்தேன்!”பிழைத்தவர் உளரேல் இன்னும் பெருவலித் தடக்கை வாளின்இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்தக்,குழைப்பொலி காதினானும் மறைந்தனன் கோலம் கொள்வான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

சென்றவர் முனியைக் காணார் சேயிழை தன்னைக் கண்டார்பொன்திகழ் குன்று வெள்ளிப் பொருப்பின் மேல் பொலிந்தது என்னதன்துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார்நின்றிலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தினின்று எழுந்தார் நேர்ந்தார்.
சொற்பிரிப்பு
சென்றவர் முனியைக் காணார்; சேயிழை தன்னைக் கண்டார்;பொன்திகழ் குன்று வெள்ளிப் பொருப்பின் மேல் பொலிந்தது என்னத்தன் துணை உடனே வானில் தலைவனை விடைமேல் கண்டார்;நின்றிலர்; தொழுது வீழ்ந்தார்; நிலத்தின் நின்று எழுந்தார்; நேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

சொல்லுவது அறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றிவல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றிஎல்லையில் இன்ப வெள்ளம் எனக்கு அருள் செய்தாய் போற்றிதில்லை அம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி என்ன.
சொற்பிரிப்பு
“சொல்லுவது அறியேன்! வாழி! தோற்றிய தோற்றம் போற்றி!வல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி!எல்லையில் இன்ப வெள்ளம் எனக்கு அருள் செய்தாய் போற்றி!தில்லை அம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி” என்ன.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மைஎண்ணிய உலகு தன்னில் இப்படி நம்பால் அன்புபண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய்நண்ணிய மனைவி யோடு நம்முடன் போதுக என்று.
சொற்பிரிப்பு
விண்இடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மைஎண்ணிய உலகு தன்னில் இப்படி நம் பால் அன்புபண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம்; பழுது இலாதாய்!நண்ணிய மனைவியோடு நம் உடன் போதுக” என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

திருவளர் சிறப்பின் மிக்க திருத் தொண்டர் தமக்குந் தேற்றம்மருவிய தெய்வக் கற்பின் மனைவியார் தமக்குந் தக்கபெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்தப்பொரு விடைப் பாகர் மன்னும் பொற் பொது அதனுள் புக்கார்.
சொற்பிரிப்பு
திருவளர் சிறப்பின் மிக்க திருத்தொண்டர் தமக்கும் தேற்றம்மருவிய தெய்வக் கற்பின் மனைவியார் தமக்கும் தக்கபெருகிய அருளின் நீடு பேறுஅளித்து இமையோர் ஏத்தப்பொருவிடைப் பாகர் மன்னும் பொற்பொது அதனுள் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

வானவர் பூவின் மாரி பொழிய மா மறைகள் ஆர்ப்பஞான மா முனிவர் போற்ற நல மிகு சிவலோகத்தில்ஊனமில் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார்ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார்.
சொற்பிரிப்பு
வானவர் பூவின் மாரி பொழிய மாமறைகள் ஆர்ப்பஞானமா முனிவர் போற்ற நலமிகு சிவலோகத்தில்ஊனமில் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார்ஏனைய சுற்றத் தாரும் வான்இடை இன்பம் பெற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

இன்புறு தாரம் தன்னை ஈசனுக்கு அன்பர் என்றேதுன்புறாது உதவும் தொண்டர் பெருமையைத் தொழுது வாழ்த்திஅன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடும்மன்புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல் உற்றேன்.
சொற்பிரிப்பு
இன்புறு தாரம் தன்னை ஈசனுக்கு அன்பர் என்றேதுன்புறாது உதவும் தொண்டர் பெருமையைத் தொழுது வாழ்த்திஅன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடுமன் புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல் உற்றேன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.