திருமுறை 12 · 12.008 · 44

திருநீலகண்ட நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

வேதியர் தில்லை மூதூர் வேட் கோவர் குலத்து வந்தார்மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தேஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக் கூத்து ஆடும்நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடும் நலத்தின் மிக்கார்.
சொற்பிரிப்பு
வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார்மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தேஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக்கூத்து ஆடும்நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடும் நலத்தின் மிக்கார்;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனற் சடை முடியார்க்கு அன்பர்மெய் அடியார் கட்கு ஆன பணி செயும் விருப்பில் நின்றார்வையகம் போற்றும் செய்கை மனை அறம் புரிந்து வாழ்வார்சைவ மெய்த் திருவின் சார்வே பொருள் எனச் சாரு நீரார்.
சொற்பிரிப்பு
பொய்கடிந்து அறத்தின் வாழ்வார்; புனல்சடை முடியார்க்கு அன்பர்மெய்யடியார்கட்கு ஆன பணிசெய்யும் விருப்பில் நின்றார்;வையகம் போற்றும் செய்கை மனைஅறம் புரிந்து வாழ்வார்;சைவ மெய்த் திருவின் சார்வே பொருள் எனச் சாரும் நீரார்;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அளவிலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கிவளரிளம் திங்கள் கண்ணி மன்றுளார் அடியார்க்கு என்றும்உள மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்.
சொற்பிரிப்பு
அளவிலா மரபின் வாழ்க்கை மட்கலம் அமுதுக்கு ஆக்கிவளர்இளம் திங்கள் கண்ணி மன்றுளார் அடியார்க்கு என்றும்உளமகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அவர் தம் கண் மனைவியாரும் அருந்ததிக் கற்பின் மிக்கார்புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய்தவ நின்று தடுத்தது என்னத் தகைந்து தான் தரித்தது என்றுசிவன் எந்தை கண்டம் தன்னைத் திரு நீல கண்டம் என்பார்.
சொற்பிரிப்பு
அவர் தங்கண் மனைவியாரும் அருந்ததிக் கற்பின் மிக்கார்புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய்தவம் நின்று தடுத்தது என்னத் தகைந்துதான் தரித்தது என்றுசிவன் எந்தை கண்டம் தன்னைத் “திருநீல கண்டம்” என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஆன தம் கேள்வர் அங்கோர் பரத்தை பால் அணைந்து நண்ணமானமுன் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கைஏனைய எல்லாஞ் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்தேனலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார்.
சொற்பிரிப்பு
ஆனதம் கேள்வர் அங்கோர் பரத்தைபால் அணைந்து நண்ணமானம் முன் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கைஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்தேனலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்றுபூண்டயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மைவேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில்தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம் என்றார்.
சொற்பிரிப்பு
மூண்ட அப்புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்றுபூண் தயங்கு இளமென் சாயல் பொற்கொடி அனையார் தம்மைவேண்டுவ இரந்து கூறி மெய் உற அணையும் போதில்“தீண்டுவீர் ஆயின் எம்மைத் திருநீல கண்டம்” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கிஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றைமாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார்.
சொற்பிரிப்பு
ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி,ஏதிலார் போல நோக்கி, “எம்மை என்ற அதனால் மற்றைமாதரார் தமையும் என்றன் மனத்தினும் தீண்டேன்” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம்பொற்புற மெய் உறாமல் பொருந்துவ போற்றிச் செய்யஇல் புறம்பு ஒழியாது அங் கண் இருவரும் வேறு வைகிஅன்புறு புணர்ச்சி இன்மை அயலறியாமை வாழ்ந்தார்.
சொற்பிரிப்பு
கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம்பொற்புற மெய் உறாமல் பொருந்துவ போற்றிச் செய்யஇல் புறம்பு ஒழியாது அங்கண் இருவரும் வேறு வைகிஅற்புறு புணர்ச்சி இன்மை அயல் அறியாமை வாழ்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

இளமையின் மிக்குளார்கள் இருவரும் அறிய நின்றஅளவில் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்லவள மலி இளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்துதளர்வொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்துச் சாயார்.
சொற்பிரிப்பு
இளமையின் மிக்கு உளார்கள் இருவரும் அறிய நின்றஅளவில் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்லவளமலி இளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்துதளர்வொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்துச் சாயார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

இந் நெறி ஒழுகும் நாளில் எரி தளர்ந்தது என்ன நீண்டமின்னொளிர் சடையோன் தானுந் தொண்டரை விளக்கங் காணநன்னெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும்அந் நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவ யோகி ஆகி.
சொற்பிரிப்பு
இந்நெறி ஒழுகும் நாளில் எரிதளிர்த்து என்ன நீண்டமின்ஒளிர் சடையோன் தானும் தொண்டரை விளக்கம் காணநன்னெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும்அந்நெறி காட்டும் ஆற்றால் அருட்சிவ யோகியாகி
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

கீள் ஒடு கோவணம் சாத்திக் கேடு இலாவாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மேல்தோளொடு மார்பிடைத் துவளும் நூலுடன்நீளொளி வளர் திரு முண்ட நெற்றியும்.
சொற்பிரிப்பு
கீளொடு கோவணம் சாத்திக் கேடிலாவாள்விடு நீற்றுஒளி மலர்ந்த மேனிமேல்தோளொடு மார்பிடைத் துவளும் நூலுடன்நீள் ஒளி வளர் திருமுண்ட நெற்றியும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

நெடுஞ் சடை கரந்திட நெறித்த பம்பையும்விடுங் கதிர் முறுவல் வெண்ணிலவும் மேம்படஇடும் பலிப் பாத்திரம் ஏந்து கையராய்நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார்.
சொற்பிரிப்பு
நெடுஞ்சடை கரந்திட நெறித்த பம்பையும்விடுங்கதிர் முறுவல் வெண்நிலவும் மேம்படஇடும் பலிப் பாத்திரம் ஏந்து கையராய்நடந்து வேட்கோவர் தம் மனையை நண்ணினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

நண்ணிய தவச் சிவ யோக நாதரைக்கண்ணுற நோக்கிய காதல் அன்பர் தாம்புண்ணியத் தொண்டராம் என்று போற்றி செய்துஎண்ணிய வகையினால் எதிர் கொண்டு ஏத்தினார்.
சொற்பிரிப்பு
நண்ணிய தவச் சிவ யோக நாதரைக்கண்ணுற நோக்கிய காதல் அன்பர் தாம்புண்ணியத் தொண்டராம் என்று போற்றி செய்துஎண்ணிய வகையினால் எதிர்கொண்டு ஏத்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

பிறை வளர் சடை முடிப் பிரானைத் தொண்டர் என்றுஉறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திடமுறைமையின் வழி பட மொழிந்த பூசைகள்நிறை பெரு விருப்பொடு செய்து நின்ற பின்.
சொற்பிரிப்பு
பிறை வளர் சடை முடிப் பிரானைத் தொண்டர் என்றுஉறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திடமுறைமையின் வழி பட மொழிந்த பூசைகள்நிறை பெரு விருப்பொடு செய்து நின்ற பின்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

எம்பிரான் யான் செயும் பணி எது என்றனர்வம்புலா மலர்ச் சடை வள்ளல் தொண்டனார்உம்பர் நாயகனும் இவ்வோடு நின்பால் வைத்துநம்பி நீ தருக நாம் வேண்டும் போது என்று.
சொற்பிரிப்பு
“எம்பிரான்! யான் செயும் பணி எது?” என்றனர்வம்புலா மலர்ச்சடை வள்ளல் தொண்டனார்;உம்பர்நா யகனும்” இவ் ஓடு உன் பால் வைத்துநம்பி! நீ தருக நாம் வேண்டும் போது” என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

தன்னை ஒப்பு அரியது தலத்துத் தன் உழைத்துன்னிய யாவையும் தூய்மை செய்வதுபொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவதுஇன்ன தன்மையது இது வாங்கு நீ என.
சொற்பிரிப்பு
“தன்னை ஒப்பு அரியது; தலத்துத் தன் உழைத்துன்னிய யாவையும் தூய்மை செய்வது;பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது;இன்ன தன்மையது இது; வாங்கு நீ” என,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றியமல்கு சீர்த் தொண்டனார் வணங்கி வாங்கிக் கொண்டுஒல்லையின் மனையில் ஓர் மருங்கு காப்புறும்எல்லையில் வைத்து வந்து இறையை எய்தினார்.
சொற்பிரிப்பு
தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றியமல்குசீர்த் தொண்டனார் வணங்கி வாங்கிக் கொண்டுஒல்லையின் மனையில் ஓர் மருங்கு காப்புறும்எல்லையில் வைத்து வந்து இறையை எய்தினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள்நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்உய்த்து உடன் போய் விடை கொண்டு மீண்டனர்அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார்.
சொற்பிரிப்பு
வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள்நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்உய்த்து உடன் போய் விடை கொண்டு மீண்டனர்;அத்தர் தம் அம்பலம் அணைய மேவினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

சால நாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்தகோலமார் ஓடு தன்னைக் குறி இடத்து அகலப் போக்கிச்சீலமார் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர் தம்பால்வாலிதாம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார்.
சொற்பிரிப்பு
சாலநாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்தகோலமார் ஓடு தன்னைக் குறி இடத்து அகலப் போக்கிச்சீலமார் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர் தம்பால்வாலிதாம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்துசிந்தை செய்து அருளிற்று எங்கள் செய்தவம் என்று நிற்பமுந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடுதந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்.
சொற்பிரிப்பு
வந்தபின் தொண்டனாரும் எதிர் வழிபாடு செய்து“சிந்தை செய்து அருளிற்று எங்கள் செய்தவம்” என்று நிற்ப,“முந்தை நாள் உன்பால் வைத்த மொய்ஒளி விளங்கும் ஓடுதந்து நில்” என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடுசென்று முன் கொணர்வான் புக்கார் கண்டிலர் திகைத்து நோக்கிநின்றவர் தம்மைக் கேட்டார் தேடியும் காணார் மாயைஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார்.
சொற்பிரிப்பு
என்றவர் விரைந்து கூற, இருந்தவர் ஈந்த ஓடுசென்று முன் கொணர்வான் புக்கார்; கண்டிலர்; திகைத்து நோக்கிநின்றவர் தம்மைக் கேட்டார்; தேடியும் காணார்; மாயைஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

மறையவன் ஆகி நின்ற மலைமகள் கேள்வன் தானும்உறை உளில் புக்கு நின்ற ஒரு பெருந் தொண்டர் கேட்பஇறையில் இங்கு எய்தப் புக்காய் தாழ்த்தது என் என்ன வந்துகறை மறை மிடற்றினானைக் கை தொழுது உரைக்கல் உற்றார்.
சொற்பிரிப்பு
மறையவன் ஆகி நின்ற மலைமகள் கேள்வன் தானும்உறையுளில் புக்கு நின்ற ஒரு பெரும் தொண்டர் கேட்ப“இறையில் இங்கு எய்தப் புக்காய்! தாழ்த்தது என்?” என்ன, வந்துகறைமறை மிடற்றினானைக் கைதொழுது உரைக்கல் உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

இழையணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போனவிழை தகும் ஓடு வைத்த வேறு இடம் தேடிக் காணேன்பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு இப்பிழையினைப் பொறுக்க வேண்டும் பெரும என்று இறைஞ்சி நின்றார்.
சொற்பிரிப்பு
“இழையணி முந்நூல் மார்பின் எந்தை! நீர் தந்து போனவிழைதகும் ஓடு வைத்த வேறிடம் தேடிக் காணேன்;பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு இப்பிழையினைப் பொறுக்க வேண்டும் பெரும!”என்று இறைஞ்சி நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

சென்னியால் வணங்கி நின்ற தொண்டரைச் செயிர்த்து நோக்கிஎன்னிது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றிப்பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினுங் கொள்ளேன் போற்றமுன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா என்றான் முன்னோன்.
சொற்பிரிப்பு
சென்னியால் வணங்கி நின்ற தொண்டரைச் செயிர்த்து நோக்கி“என் இது மொழிந்தவா நீ? யான் வைத்த மண் ஓடு அன்றிப்பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினும் கொள்ளேன்; போற்றமுன்னை நான் வைத்த ஓடே கொண்டுவா” என்றான் முன்னோன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

கேடு இலாப் பெரியோய் என்பால் வைத்தது கெடுதலாலேநாடியும் காணேன் வேறு நல்லது ஓர் ஓடு சாலநீடு செல்வது தான் ஒன்று தருகின்றேன் எனவும் கொள்ளாதுஊடி நின்று உரைத்தது என் தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன.
சொற்பிரிப்பு
“கேடிலாப் பெரியோய்! என்பால் வைத்தது கெடுதலாலேநாடியும் காணேன்; வேறு நல்லதோர் ஓடு சாலநீடு செல்வது தான் ஒன்று தருகிறேன் எனவும் கொள்ளாதுஊடி நின்று உரைத்தது என் தன் உணர்வுஎலாம் ஒழித்தது” என்ன;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

ஆவதென் உன்பால் வைத்த அடைக்கலப் பொருளை வௌவிப்பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய்யாவரும் காண உன்னை வளைத்து நான் கொண்டே அன்றிப்போவதும் செய்யேன் என்றான் புண்ணியப் பொருளாய் நின்றான்.
சொற்பிரிப்பு
“ஆவது என்? நின்பால் வைத்த அடைக்கலப் பொருளை வெளவிப்பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய்!யாவரும் காண உன்னை வளைத்து நான் கொண்டே அன்றிப்போவதும் செய்யேன்” என்றான் புண்ணியப் பொருளாய் நின்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன் ஒல்லைஉளத்தினும் களவிலாமைக்கு என் செய்கேன் உரையும் என்னகளத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனைப் பற்றிக்குளத்தினில் மூழ்கிப் போ என்று அருளினான் கொடுமை இல்லான்.
சொற்பிரிப்பு
“வளத்தினால் மிக்க ஓடு வெளவினேன் அல்லேன்; ஒல்லைஉளத்தினும் களவிலாமைக்கு என்செய்கேன்? உரையும்” என்னக்களத்து நஞ்சு ஒளித்து நின்றான் “காதல் உன் மகனைப் பற்றிக்குளத்தினில் மூழ்கிப் போ” என்று அருளினான் கொடுமை இல்லான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

ஐயர் நீர் அருளிச் செய்த வண்ணம் யான் செய்வதற்குப்பொய்யில் சீர்ப் புதல்வன் இல்லை என் செய்கேன் புகலும் என்னமையறு சிறப்பின் மிக்க மனையவள் தன்னைப் பற்றிமொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார்.
சொற்பிரிப்பு
“ஐயர்! நீர் அருளிச் செய்த வண்ணம் யான் செய்வதற்குப்பொய் இல் சீர்ப் புதல்வன் இல்லை; என் செய்கேன்? புகலும்” என்ன;“மையறு சிறப்பின் மிக்க மனையவள் தன்னைப் பற்றிமொய் அலர் வாவிப் புக்கு மூழ்குவாய்” என மொழிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

கங்கை நதி கரந்த சடை கரந்து அருளி எதிர் நின்றவெங் கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார்எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லைபொங்கு புனல் யான்மூழ்கித் தருகின்றேன் போதும் என.
சொற்பிரிப்பு
கங்கை நதி கரந்த சடை கரந்தருளி எதிர் நின்றவெங்கண் விடையவர் அருள, வேட்கோவர் உரைசெய்வார்“எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவில்லை;பொங்கு புனல் யான் மூழ்கித் தருகின்றேன்; போதும்” என;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

தந்தது முன் தாராதே கொள்ளாமைக்கு உன் மனைவிஅந் தளிர்ச் செங் கைப்பற்றி அலை புனலில் மூழ்காதேசிந்தை வலித்து இருக்கின்றாய் தில்லை வாழ் அந்தணர்கள்வந்து இருந்த பேர் அவையில் மன்னுவன் யான் எனச் சென்றார்.
சொற்பிரிப்பு
“தந்ததுமுன் தாராதே, கொள்ளாமைக்கு உன் மனைவிஅந்தளிர்ச் செங்கைப்பற்றி அலைபுனலில் மூழ்காதே,சிந்தை வலித்து இருக்கின்றாய்!; தில்லைவாழ் அந்தணர்கள்வந்திருந்த பேர் அவையில் மன்னுவன் யான்” எனச் சென்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

நல் ஒழுக்கம் தலை நின்றார் நான் மறையின் துறை போனார்தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த திருந்தவையில்எல்லை இலான் முன் செல்ல இருந்தொண்டர் அவர் தாமும்மல்கு பெரும் காதலினால் வழக்கு மேலிட்டு அணைந்தார்.
சொற்பிரிப்பு
நல் ஒழுக்கம் தலைநின்றார், நான்மறையின் துறை போனார்,தில்லைவாழ் அந்தணர்கள் வந்திருந்த திருந்தவையில்எல்லை இலான் முன் செல்ல, இருந்தொண்டர் அவர் தாமும்மல்குபெரும் காதலினால் வழக்குமேல் இட்டு அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

அந்தணன் ஆம் எந்தை பிரான் அரு மறையோர் முன் பகர்வான்இந்த வேட்கோவன்பால் யான் வைத்த பாத்திரத்தைத்தந்து ஒழியான் கெடுத்தானேல் தன் மனைவி கைப்பற்றிவந்து மூழ்கியும் தாரான் வலி செய்கின்றான் என்றார்.
சொற்பிரிப்பு
அந்தணனாம் எந்தை பிரான் அருமறையோர் முன் பகர்வான்“இந்த வேட்கோவன்பால் யான் வைத்த பாத்திரத்தைத்தந்தொழியான்; கெடுத்தானேல், தன் மனைவி கைப்பற்றிவந்து மூழ்கியுந் தாரான்; வலி செய்கின்றான்” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

நறை கமழும் சடை முடியும் நாற்றோளும் முக் கண்ணும்கறை மருவும் திரு மிடரும் கரந்து அருளி எழுந்து அருளும்மறையவன் இத்திறம் மொழிய மா மறையோர் உரை செய்வார்நிறையுடைய வேட்கோவர் நீர் மொழியும் புகுந்தது என.
சொற்பிரிப்பு
நறைகமழும் சடைமுடியும் நாற்றோளும் முக்கண்ணும்கறைமருவும் திருமிடறும் கரந்தருளி எழுந்தருளும்மறையவன் இத்திறம் மொழிய; மாமறையோர் உரைசெய்வார்“நிறை உடைய வேட்கோவர்; நீர் மொழியும் புகுந்தது” என,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

நீணிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடுபேணி நான் வைத்த இடம் பெயர்ந்து கரந்தது காணேன்பூண் அணி நூல் மணி மார்பீர் புகுந்த பரிசு இது என்றுசேணிடையும் தீங்கு அடையாத் திருத்தொண்டர் உரைசெய்தார்.
சொற்பிரிப்பு
“நீள் நிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடுபேணி நான் வைத்த இடம் பெயர்ந்து கரந்தது காணேன்;பூண் அணிநூல் மணிமார்பீர்! புகுந்த பரிசு இது” என்றுசேணிடையும் தீங்கு அடையாத் திருத்தொண்டர் உரைசெய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

திருவுடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின்உருவுடை இவர் தாம் வைத்த ஓட்டினைக் கெடுத்தீர் ஆனால்தருமிவர் குளத்தில் மூழ்கித் தருக என்று உரைத்தார் ஆகில்மருவிய மனைவியொடு மூழ்குதல் வழக்கே என்றார்.
சொற்பிரிப்பு
திருஉடை அந்தணாளர் செப்புவார் “திகழ்ந்த நீற்றின்உருஉடை இவர் தாம் வைத்த ஓட்டினைக் கெடுத்தீர் ஆனால்,தரும் இவர் ‘குளத்தில் மூழ்கித் தருக’ என்று உரைத்தார் ஆகில்,மருவிய மனைவியோடு மூழ்குதல் வழக்கே” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

அருந் தவத் தொண்டர் தாமும் அந்தணர் மொழியக் கேட்டுத்திருந்திய மனைவியாரைத் தீண்டாமை செப்ப மாட்டார்பொருந்திய வகையால் மூழ்கித் தருகின்றேன் போதும் என்றுபெருந் தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையைச் சார்ந்தார்.
சொற்பிரிப்பு
அருந்தவத் தொண்டர் தாமும் அந்தணர் மொழியக் கேட்டுத்திருந்திய மனைவியாரைத் தீண்டாமை செப்ப மாட்டார்.“பொருந்திய வகையால் மூழ்கித் தருகின்றேன் போதும்” என்றுபெருந்தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையைச் சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

மனைவியார் தம்மைக் கொண்டு மறைச் சிவ யோகியார் முன்சினவிடைப் பாகர் மேவும் திருப்புலீச் சுரத்து முன்னர்நனை மலர்ச் சோலை வாவி நண்ணித் தம் உண்மை காப்பார்புனை மணி வேணுத் தண்டின் இரு தலை பிடித்துப் புக்கார்.
சொற்பிரிப்பு
மனைவியார் தம்மைக் கொண்டு மறைச் சிவயோகியார் முன்சினவிடைப் பாகர் மேவும் திருப்புலீச்சரத்து முன்னர்நனைமலர்ச் சோலை வாவி நண்ணித் தம் உண்மை காப்பார்புனை மணி வேணுத்தண்டின் இருதலை பிடித்துப் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

38

தண்டிரு தலையும் பற்றிப் புகும் அவர் தம்மை நோக்கிவெண் திரு நீற்று முண்ட வேதியர் மாதைத் தீண்டிக்கொண்டு உடன் மூழ்கீர் என்னக் கூடாமை பாரோர் கேட்கப்பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார்.
சொற்பிரிப்பு
தண்டு இருதலையும் பற்றிப் புகும் அவர் தம்மை நோக்கிவெண் திருநீற்று முண்ட வேதியர் “மாதைத் தீண்டிக்கொண்டு உடன் மூழ்கீர்” என்னக், கூடாமை பாரோர் கேட்கப்பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுதிலாதார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

39

வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவி யாரும்மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்றுத்தேவரும் முனிவர் தாமும் சிறப்பொடு பொழியுந் தெய்வப்பூவின் மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற.
சொற்பிரிப்பு
வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவியாரும்மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்றுத்தேவரும் முனிவர் தாமும் சிறப்பொடு பொழியும் தெய்வப்பூவின்மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

40

அந்நிலை அவரைக் காணும் அதிசயம் கண்டார் எல்லாம்முன்நிலை நின்ற வேத முதல் வரைக் கண்டார் இல்லைஇந்நிலை இருந்த வண்ணம் என் என மருண்டு நின்றார்துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கண்டார்.
சொற்பிரிப்பு
அந்நிலை அவரைக் காணும் அதிசயம் கண்டார் எல்லாம்முன்னிலை நின்ற வேத முதல்வரைக் கண்டார் இல்லை;இந்நிலை இருந்த வண்ணம் என்? என மருண்டு நின்றார்துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடைமேல் கண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

41

கண்டனர் கைகளாரத் தொழுதனர் கலந்த காதல்அண்டரும் ஏத்தினார்கள் அன்பர்தம் பெருமை நோக்கிவிண்டரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார் தம்மைத்தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார்.
சொற்பிரிப்பு
கண்டனர், கைகள் ஆரத் தொழுதனர்; கலந்த காதல்அண்டரும் ஏத்தினார்கள்; அன்பர் தம் பெருமை நோக்கிவிண்டரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார் தம்மைத்தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

42

மன்றுளே திருக் கூத்து ஆடி அடியவர் மனைகள் தோறும்சென்றவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர் தாமும்வென்ற ஐம் புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்பால்என்றும் இவ் இளமை நீங்காது என்று எழுந்து அருளினாரே.
சொற்பிரிப்பு
மன்றுளே திருக்கூத்து ஆடி அடியவர் மனைகள் தோறும்சென்று அவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர் தாமும்“வென்ற ஐம் புலனால் மிக்கீர்! விருப்புடன் இருக்க நம்பால்என்றும் இவ் இளமை நீங்காது” என்று எழுந்தருளினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

43

விறலுடைத் தொண்டனாரும் வெண்ணகைச் செவ்வாய் மென் தோள்அறல் இயல் கூந்தல் ஆளாம் மனைவியும் அருளின் ஆர்ந்ததிறலுடைச் செய்கை செய்து சிவலோகம் அதனை எய்திப்பெறல் அரும் இளமை பெற்றுப் பேர் இன்பம் உற்றார் அன்றே.
சொற்பிரிப்பு
விறல் உடைத் தொண்டனாரும் வெண்நகைச் செவ்வாய் மென்தோள்அறல் இயல் கூந்தலாராம் மனைவியும் அருளின் ஆர்ந்ததிறல் உடைச் செய்கை செய்து சிவலோகம் அதனை எய்திப்பெறல் அரும் இளமை பெற்றுப் பேரின்பம் உற்றார் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

44

அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்தமயலில் சீர்த் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்திப்புயல் வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய்யில்செயல் இயற் பகையார் செய்த திருத் தொண்டு செப்பல் உற்றேன்.
சொற்பிரிப்பு
அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்தமயல் இல் சீர்த் தொண்டனாரை யான் அறி வகையால் வாழ்த்திப்,புயல் வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய் இல்செயல் இயற்பகையார் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.