1
ஆதியாய் நடுவுமாகி அளவு இலா அளவுமாகிச்சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப்பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப்போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
ஆதியாய் நடுவும் ஆகி அளவிலா அளவும் ஆகிச்சோதியாய் உணர்வும் ஆகித் தோன்றிய பொருளும் ஆகிப்பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப்போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி! போற்றி!!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.