1
கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடிமேல் வைத்தஅங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடுமங்கையர் வதன சீதமதி இரு மருங்கும் ஓடிச்செங்கயல் குழைகள் நாடும் திரு முனைப்பாடி நாடு.
சொற்பிரிப்பு
கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்தஅங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடுமங்கையர் வதன சீத மதி இரு மருங்கும் ஓடிச்செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப் பாடி நாடு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
பெருகிய நலத்தால் மிக்கபெரும் திருநாடு தன்னில்அரு மறைச் சைவம் ஓங்க அருளினால் அவதரித்தமருவிய தவத்தால் மிக்க வளம்பதி வாய்மை குன்றாத்திரு மறையவர்கள் நீடும் திரு நாவலூராம் அன்றே.
சொற்பிரிப்பு
பெருகிய நலத்தால் மிக்க பெருந்திருநாடு தன்னில்அருமறைச் சைவம் ஓங்க அருளினால் அவதரித்தமருவிய தவத்தால் மிக்க வளம்பதி வாய்மை குன்றாத்திருமறையவர்கள் நீடும் திருநாவலூராம் அன்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும்வேதியர் குலத்துள் தோன்றி மேம் படு சடையனார்க்(கு)ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்பால்தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார்.
சொற்பிரிப்பு
"மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும்வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனாருக்குஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசைஞானியார் பால்தீது அகன்று உலகம் உய்யத் திருஅவதாரஞ் செய்தார். "
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்று(ம்)நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றி மிக்கஐம் படைச் சதங்கை சாத்தி அணிமணிச் சுட்டிச் சாத்திச்செம்பொன் நாண் அரையில் மின்னத்தெருவில் தேர்உருட்டு நாளில்.
சொற்பிரிப்பு
"தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும்நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றி மிக்கஐம்படை சதங்கை சாத்தி அணிமணிச் சுட்டி சாத்திச்செம்பொன் நாண் அரையில்மின்னத் தெருவில் தேர் உருட்டு நாளில்."
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
நரசிங்க முனையர் என்னும் நாடுவாழ் அரசர் கண்டுபரவருங் காதல் கூரப் பயந்தவர் தம்பால் சென்றுவிரவிய நண்பினாலே வேண்டினர் பெற்றுத் தங்கள்அரசிளங் குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார்.
சொற்பிரிப்பு
"நரசிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டுபரவரும் காதல் கூரப் பயந்தவர் தம்பால் சென்றுவிரவிய நண்பினாலே வேண்டினர் பெற்றுத் தங்கள்அரசிளங் குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார்."
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
பெருமைசால் அரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள்வருமுறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய்கோலத்துஅருமறை முந்நூல் சாத்தி அளவில் தொல்கலைகள் ஆய்ந்துதிருமலி சிறப்பின் ஓங்கிச்சீர் மணப் பருவஞ் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
பெருமை சால் அரசர் காதல் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள்வருமுறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்துஅருமறை முந்நூல் சாத்தி அளவில் தொல் கலைகள் ஆய்ந்துதிருமலி சிறப்பின் ஓங்கிச் சீர் மணப் பருவம் சேர்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
தந்தையார் சடையனார் தம் தனித் திருமகற்குச் சைவஅந்தணர் குலத்துள் தங்கள் அரும்பெரும் மரபுக்கு ஏற்பவந்த தொல் சிறப்பிற் புத்தூர்ச் சடங்கவி மறையோன் தன்பால்செந் திரு அனைய கன்னி மணத் திறஞ் செப்பி விட்டார்.
சொற்பிரிப்பு
தந்தையார் சடையனார் தம் தனித்திரு மகற்குச் சைவஅந்தணர் குலத்துள் தங்கள் அரும்பெரும் மரபுக்கு ஏற்பவந்த தொல் சிறப்பில் புத்தூர்ச் சடங்கவி மறையோன் தன்பால்செந்திரு அனைய கன்னி மணத்திறம் செப்பி விட்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
குலமுதல் அறிவின் மிக்கார் கோத்திர முறையும் தேர்ந்தார்நலமிகு முதியோர் சொல்லச் சடங்கவி நன்மை ஏற்றுமலர்தரு முகத்தன் ஆகி மணம்புரி செயலின் வாய்மைபலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான்.
சொற்பிரிப்பு
குலமுதல் அறிவின் மிக்கார் கோத்திர முறையும் தேர்ந்தார்நலமிகு முதியோர் சொல்லச் சடங்கவி நன்மை ஏற்றுமலர்தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மைபலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
மற்றவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல் தன்னைப்பெற்றவர் தம்பால் சென்று சொன்னபின் பெருகு சிந்தைஉற்றதோர் மகிழ்ச்சி எய்தி மணவினை உவந்து சாற்றிக்கொற்றவர் திருவுக்கு ஏற்பக் குறித்து நாள்ஓலை விட்டார்.
சொற்பிரிப்பு
மற்றவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல் தன்னைப்பெற்றவர் தம்பால் சென்று சொன்ன பின் பெருகு சிந்தைஉற்றதோர் மகிழ்ச்சி எய்தி மணவினை உவந்து சாற்றிக்கொற்றவர் திருவுக்கு ஏற்பக் குறித்து நாள் ஓலை விட்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
மங்கலம் பொலியச் செய்த மணவினை ஓலை ஏந்திஅங்கயற் கண்ணி னாரும் ஆடவர் பலரும் ஈண்டிக்கொங்கலர்ச் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்துபங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார்.
சொற்பிரிப்பு
மங்கலம் பொலியச் செய்த மணவினை ஓலை ஏந்திஅங்கயல் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டிக்கொங்கலர்ச் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்துபங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
மகிழ்ச்சியால் மணம் மீக் கூறி மங்கல வினைகள் எல்லாம்புகழ்ச்சியால் பொலிந்து தோன்றப் போற்றிய தொழில ராகிஇகழ்ச்சி ஒன்றானும் இன்றி ஏந்து பூமாலைப் பந்தர்நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி நீள் முளை சாத்தினார்கள்.
சொற்பிரிப்பு
மகிழ்ச்சியால் மணமீக் கூறி மங்கல வினைகள் எல்லாம்புகழ்ச்சியால் பொலிந்து தோன்றப் போற்றிய தொழிலர் ஆகிஇகழ்ச்சி ஒன்றானும் இன்றி ஏந்து பூமாலைப் பந்தர்நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி நீள் முளை சாத்தினார்கள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
மணவினைக்கு அமைந்த செய்கை மாதினைப் பயந்தார் செய்யத்துணர் மலர்க் கோதைத் தாமச் சுரும்பணை தோளினானைப்புணர் மணத் திருநாள் முன்னாட் பொருந்திய விதியினாலேபணை முரசு இயம்ப வாழ்த்திப்பைம் பொன் நாண்காப்புச் சேர்த்தார்.
சொற்பிரிப்பு
மணவினைக்கு அமைந்த செய்கை மாதினைப் பயந்தார் செய்யத்துணர்மலர்க் கோதைத் தாமச் சுரும்பு அணை தோளினானைப்புணர்மணத் திருநாள் முன்னாள் பொருந்திய விதியினாலேபணைமுரசு இயம்ப வாழ்த்திப் பைம்பொன் நாண் காப்புச் சேர்த்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
மாமறை விதி வழாமல் மணத்துறைக் கடன்கள் ஆற்றித்தூமறை மூதூர்க் கங்குல் மங்கலந் துவன்றி ஆர்ப்பத்தேமரு தொடையல் மார்பன் திருமணக் கோலம் காணக்காமுறு மனத்தான் போலக் கதிரவன் உதயம் செய்தான்.
சொற்பிரிப்பு
மாமறை விதி வழாமல் மணத்துறைக் கடன்கள் ஆற்றித்தூமறை மூதூர்க் கங்குல் மங்கலம் துவன்றி ஆர்ப்பத்தேமரு தொடையல் மார்பன் திருமணக் கோலம் காணக்காமுறு மனத்தான் போலக் கதிரவன் உதயம் செய்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
காலை செய்வினைகள் முற்றிக் கணிதநூல் புலவர் சொன்னவேலை வந்து அணையும் முன்னர் விதிமணக்கோலம் கொள்வான்நூல்அசைந்து இலங்கு மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன்மாலையுந் தாரும் பொங்க மஞ்சன சாலை புக்கான்.
சொற்பிரிப்பு
காலை செய் வினைகள் முற்றிக் கணித நூல் புலவர் சொன்னவேலை வந்து அணையும் முன்னர் விதி மணக்கோலம் கொள்வான்நூல்அசைந்து இலங்கு மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன்மாலையும் தாரும் பொங்க மஞ்சன சாலை புக்கான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
வாசநெய் ஊட்டி மிக்க மலர்விரை அடுத்த தூநீர்ப்பாசனத்து அமைந்த பாங்கர்ப் பருமணி பைம்பொன் திண்கால்ஆசனத்து அணிநீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால்ஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள்.
சொற்பிரிப்பு
வாச நெய் ஊட்டி மிக்க மலர்விரை அடுத்த தூநீர்ப்பாசனத்து அமைந்த பாங்கர்ப் பருமணிப் பைம்பொன் திண்கால்ஆசனத்து அணி நீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால்ஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
அகில் விரைத்தூபம் ஏய்ந்த அணிகொள் பட்டாடை சாத்திமுகில்நுழை மதியம் போலக் கைவலான் முன்கை சூழ்ந்ததுகில்கொடு குஞ்சி ஈரம் புலர்த்தித்தன் தூய செங்கைஉகிர்நுதி முறையில் போக்கி ஒளிர் நறுஞ்சிகழி ஆர்த்தான்.
சொற்பிரிப்பு
அகில் விரைத் தூபம் ஏய்ந்த அணிகொள் பட்டு ஆடை சாத்திமுகில் நுழை மதியம் போலக் கைவலான் முன்கை சூழ்ந்ததுகில்கொடு குஞ்சி ஈரம் புலர்த்தித் தன் தூய செங்கைஉகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறும் சிகழி ஆர்த்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
தூநறும் பசும் கர்ப்பூரச் சுண்ணத்தால் வண்ணப் போதில்ஆனதண் பனிநீர் கூட்டி அமைந்த சந்தனச் சேறாட்டிமான்மதச் சாந்து தோய்ந்த மங்கலக் கலவை சாத்திப்பான்மறை முந்நூல் மின்னப் பவித்திரஞ் சிறந்த கையான்.
சொற்பிரிப்பு
தூநறும் பசுங்கர்ப் பூரச் சுண்ணத்தால் வண்ணப் போதில்ஆன தண் பனிநீர் கூட்டி அமைத்த சந்தனச் சேறு ஆட்டிமான் மதச் சாந்து தோய்ந்த மங்கலக் கலவை சாத்திப்பான்முறை முந்நூல் மின்னப் பவித்திரம் சிறந்த கையான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
தூமலர்ப் பிணையல் மாலை துணர்இணர்க் கண்ணி கோதைதாமம் என்று இனையவேறு தகுதியால் அமையச் சாத்திமாமணி அணிந்த தூய வளர்ஒளி இருள்கால் சீக்கு(ம்)நாம நீள்கலன்கள் சாத்தி நன்மணக் கோலம் கொண்டான்.
சொற்பிரிப்பு
தூமலர்ப் பிணையல் மாலை துணர் இணர்க் கண்ணி கோதைதாமம் என்று இனைய வேறு தகுதியால் அமையச் சாத்திமாமணி அணிந்த தூய வளர் ஒளி இருள்கால் சீக்கும்நாம நீள் கலன்கள் சாத்தி நன் மணக் கோலம் கொண்டான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்கநன்நகர் விழவு கொள்ள நம்பி ஆரூரர் நாதன்தன்அடி மனத்துள் கொண்டு தகும் திருநீறு சாத்திப்பொன்அணி மணியார் யோகப் புரவிமேற் கொண்டு போந்தார்.
சொற்பிரிப்பு
மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்கநன்னகர் விழவு கொள்ள நம்பி ஆரூரர் நாதன்தன்னடி மனத்துள் கொண்டு தகுந் திருநீறு சாத்திப்பொன்னணி மணியார் யோகப் புரவிமேல் கொண்டு போந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
இயம்பல துவைப்ப எங்கும் ஏத்தொலி எடுப்ப மாதர்நயந்து பல்லாண்டு போற்ற நான்மறை ஒலியின் ஓங்கவியந்துபார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பஞ் செய்தேஉயர்ந்த வாகன யானங்கள் மிசைக் கொண்டார் உழையரானார்.
சொற்பிரிப்பு
இயம்பல துவைப்ப எங்கும் ஏத்தொலி எடுப்ப மாதர்நயந்து பல்லாண்டு போற்ற நான்மறை ஒலியின் ஓங்கவியந்து பார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பம் செய்தேஉயர்ந்த வாகன யானங்கள் மிசைக்கொண்டார் உழையர் ஆனார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
மங்கலகீத நாத மறை யவர் குழாங்களோடுதொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துவன்றிச் சூதும்பங்கய முகையும் சாய்த்துப் பணைத்து எழுந்தணியில் மிக்ககுங்கும முலையினாரும் பரந் தெழு கொள்கைத் தாகி.
சொற்பிரிப்பு
மங்கல கீத நாத மறையவர் குழாங்களோடுதொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துவன்றிச் சூதும்பங்கய முகையும் சாய்த்துப் பணைத்து எழுந்து அணியில் மிக்ககுங்கும முலையினாரும் பரந்து எழு கொள்கைத் தாகி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
அருங்கடி எழுந்த போழ்தின் ஆர்த்த வெள்வளை களாலும்இருங்குழை மகரத் தாலும் இலங் கொளி மணிகளாலும்நெருங்கிய பீலிச் சோலை நீல நீர்த் தரங்கத் தாலும்கருங்கடல் கிளர்ந்தது என்னக் காட்சியில் பொலிந்தது அன்றே.
சொற்பிரிப்பு
அருங்கடி எழுந்த போழ்தின் ஆர்த்த வெள் வளைகளாலும்இருங்குழை மகரத்தாலும் இலங்கொளி மணிகளாலும்நெருங்கிய பீலிச் சோலைநீல நீர்த் தரங்கத்தாலும்கருங்கடல் கிளர்ந்தது என்னக் காட்சியில் பொலிந்தது அன்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்கப்பெருங்குடை மிடைந்து செல்லப் பிணங்கு பூங் கொடிகள் ஆடஅருங்கடி மணம்வந்து எய்த அன்றுதொட்டு என்றும் அன்பில்வருங்குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூராமால்.
சொற்பிரிப்பு
நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்கப்பெருங்குடை மிடைந்து செல்லப் பிணங்கு பூங்கொடிகள் ஆடஅருங்கடி மணம் வந்து எய்த அன்றுதொட்டு என்றும் அன்பில்வருங்குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூர் ஆமால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
நிறைகுடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்திநறைமலர் அறுகு சுண்ண நறும்பொரி பலவும் வீசிஉறைமலி கலவைச் சாந்தின் உறுபுனல் தெளித்து வீதிமறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர்கொள்ள வந்தார்.
சொற்பிரிப்பு
நிறைகுடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்திநறைமலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசிஉறைமலி கலவைச் சாந்தின் உறுபுனல் தெளித்து வீதிமறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர் கொள்ள வந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
கண்கள் எண்ணிலாத வேண்டுங் காளையைக் காண என்பார்பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார்மண்களிகூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார்பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடுவார்கள்.
சொற்பிரிப்பு
கண்கள் எண் இலாத வேண்டும் காளையைக் காண என்பார்பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார்மண் களி கூர வந்த மணம்கண்டு வாழ்ந்தோம் என்பார்பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடுவார்கள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
ஆண்டகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம் என்பார்தாண்டிய பரியும் நம்பால் தகுதியின் நடந்தது என்பார்பூண்டயங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி என்பார்ஈண்டிய மடவார் கூட்டம் இன்னன இசைப்பச் சென்றார்.
சொற்பிரிப்பு
ஆண்டகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம் என்பார்தாண்டிய பரியும் நம்பால் தகுதியின் நடந்தது என்பார்பூண் தயங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி என்பார்ஈண்டிய மடவார் கூட்டம்இன்னன இசைப்பச் சென்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
வருமணக் கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாசத்திருமணப் பந்தர் முன்பு சென்று வெண்சங்கம் எங்கும்பெருமழைக் குலத்தின் ஆர்ப்பப் பரிமிசை இழிந்து பேணும்ஒரு மணத்திறத்தின் அங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன்.
சொற்பிரிப்பு
வருமணக் கோலத்து எங்கள்வள்ளலார் தெள்ளும் வாசத்திருமணப் பந்தர் முன்பு சென்று வெண் சங்கம் எங்கும்பெருமழைக் குலத்தின் ஆர்ப்பப்பரிமிசை இழிந்து பேணும்ஒருமணத் திறத்தின் அங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
ஆலுமறை சூழ் கயிலையின் கண் அருள் செய்தசாலு மொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான்மேலுற எழுந்து மிகு கீழுற அகழ்ந்துமாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார்.
சொற்பிரிப்பு
ஆலு மறை சூழ் கயிலையின்கண் அருள் செய்தசாலு மொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான்மேலுற எழுந்து மிகு கீழ் உற அகழ்ந்துமாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
கண்ணிடை கரந்த கதிர் வெண்படம் எனச் சூழ்புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எய்தத்தண்மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதேவெண்ணரை முடித்தது விழுந் திடை சழங்க.
சொற்பிரிப்பு
கண் இடை கரந்த கதிர் வெண்படம் எனச்சூழ்புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எய்தத்தண்மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதேவெண்நரை முடித்தது விழுந்திடை சழங்க.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழச்சோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின்மீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்கஆதபம் மறைக் குடை அணிக்கரம் விளங்க.
சொற்பிரிப்பு
காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழச்சோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின்மீது புனை உத்தரிய வெண்துகில் நுடங்கஆதபம் மறைக் குடை அணிக்கரம் விளங்க.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
பண்டி சரி கோவண உடைப் பழமை கூரக்கொண்ட தோர் சழங்கலுடை ஆர்ந்து அழகு கொள்ளவெண் துகிலுடன் குசை முடிந்து விடு வேணுத்தண்டொருகை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள.
சொற்பிரிப்பு
பண்டி சரி கோவண உடைப் பழமை கூரக்கொண்டதோர் சழங்கல் உடை ஆர்ந்து அழகு கொள்ளவெண்துகில் உடன் குசை முடிந்து விடு வேணுத்தண்டு ஒருகை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
மொய்த்து வளர் பேரழகு மூத்தவடி வேயோஅத்தகைய மூப்பெனும் அதன் படிவ மேயோமெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோஇத்தகைய வேடம் என ஐயமுற எய்தி.
சொற்பிரிப்பு
மொய்த்து வளர் பேரழகு மூத்த வடிவேயோஅத்தகைய மூப்பு எனும் அதன் படிவமேயோமெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோஇத்தகைய வேடம் என ஐயமுற எய்தி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
வந்து திரு மாமறை மணத் தொழில் தொடங்கும்பந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன்நின்று"இந்த மொழி கேண்மின் எதிர் யாவர்களும்" என்றான்முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான்.
சொற்பிரிப்பு
வந்து திரு மாமறை மணத்தொழில் தொடங்கும்பந்தர் இடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று“இந்த மொழி கேள்மின் எதிர் யாவர்களும்” என்றான்முந்தை மறை ஆயிரம் மொழிந்த திருவாயான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
என்றுரை செய் அந்தணனை எண்ணில் மறை யோரும்மன்றல் வினை மங்கல மடங்கல் அனை யானும்"நன்று உமது நல்வரவு நங்கள் தவம் என்றேநின்றது இவண் நீர்மொழிமின் நீர் மொழிவது" என்றார்.
சொற்பிரிப்பு
என்று உரைசெய் அந்தணனை எண்ணில் மறையோரும்மன்றல் வினை மங்கல மடங்கல் அனையானும்‘நன்று உமது நல்வரவு நங்கள் தவம்’ என்றே‘நின்றது இவண் நீர் மொழிமின் நீர் மொழிவது’ என்றார்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
பிஞ்ஞகனும் நாவலர் பெருந் தகையை நோக்கிஎன்னிடையும் நின்னிடையும் நின்ற இசை வால்யான்முன்னுடையது ஓர் பெரு வழக்கினை முடித்தேநின்னுடைய வேள்வியினை நீ முயல்தி என்றான்.
சொற்பிரிப்பு
பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி‘என்னிடையும் நின்னிடையும் நின்ற இசைவால் யான்முன் உடையதோர் பெரு வழக்கினை முடித்தேநின்னுடைய வேள்வியினை நீ முயல்தி’ என்றான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
36
நெற்றி விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான்"உற்றதோர் வழக்கு எனிடை நீ உடையது உண்டேல்மற்றது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன்முற்ற இது சொல்லுக"என எல்லை முடிவு இல்லான்.
சொற்பிரிப்பு
நெற்றி விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான்‘உற்றதொர் வழக்கு எனிடை நீ உடையது உண்டேல்மற்றது முடித்து அலது யான் வதுவை செய்யேன்;முற்ற இது சொல்லுக’ என எல்லை முடிவு இல்லான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
37
ஆவதிது கேண்மின் மறையோர்! என் அடியான் இந்நாவல்நகர் ஊரன் இது நான் மொழிவது என்றான்தேவரையும் மாலயன் முதன் திரு வின் மிக்கோர்யாவரையும் வேறு அடிமை யாவுடைய எம்மான்.
சொற்பிரிப்பு
‘ஆவது இது கேள்மின் மறையோர் என் அடியான் இந்நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது’ என்றான்தேவரையும் மால் அயன் முதல் திருவின் மிக்கோர்யாவரையும் வேறுஅடிமையா உடைய எம்மான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
38
என்றான் இறையோன் அது கேட்டவர் எம் மருங்கும்நின்றார் இருந்தார் "இவன் என்நினைந்தான் கொல்" என்றுசென்றார் வெகுண்டார் சிரித்தார் திரு நாவ லூரான்"நன்றால் மறையோன் மொழி" என்று எதிர்நோக்கி நக்கான்.
சொற்பிரிப்பு
என்றான் இறையோன் அதுகேட்டவர் எம்மருங்கும்நின்றார் இருந்தார் “இவன் என் நினைந்தான்கொல்” என்றுசென்றார், வெகுண்டார், சிரித்தார்; திருநாவலூரான்“நன்றால் மறையோன் மொழி” என்று எதிர் நோக்கி நக்கான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
39
நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்மிக்கான் மிசையுத்தரியத் துகில் தாங்கி மேல் சென்று"அக்காலம் உன் தந்தைதன் தந்தை ஆள்ஓலை ஈதால்இக்காரியத்தை நீ இன்று சிரித்தது என்ஏட" என்ன.
சொற்பிரிப்பு
நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்மிக்கான் மிசை உத்தரியத் துகில் தாங்கி மேற்சென்று“அக்காலம் உன் தந்தை தன் தந்தை ஆள் ஓலை ஈதால்இக்காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏட” என்ன.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
40
மாசிலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கிநேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி"ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல்பேசஇன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோன்" என்றார்.
சொற்பிரிப்பு
மாசிலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கிநேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி“ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல்பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோன்” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
41
பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்றுஎத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன்அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந் திலை ஆகில் நின்றுவித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும் என்றார்.
சொற்பிரிப்பு
“பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்றுஎத்தனை தீங்கு சொன்னால் யாதுமற்று அவற்றால் நாணேன்அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்றுவித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும்” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
42
கண்டதோர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும்கொண்டதோர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்உண்டொராள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்றுதொண்டனார் "ஓலை காட்டுக" என்றனர் துணை வனாரை.
சொற்பிரிப்பு
கண்டதோர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும்;கொண்டதோர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்;உண்டொர் ஆள் ஓலை என்னும் அதனுண்மை அறிவேன் என்றுதொண்டனார் “ஓலை காட்டுக” என்றனர் துணைவனாரை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
43
ஓலை காட்டு என்று நம்பி உரைக்க "நீஓலை காணல்பாலையோ அவை முன் காட்டப் பணிசெயற் பாலை" என்றவேலையில் நாவ லூரர் வெகுண்டு மேல் விரைந்து சென்றுமாலயன் தொடரா தானை வலிந்து பின் தொடரல் உற்றார்.
சொற்பிரிப்பு
‘ஓலை காட்டு’ என்று நம்பி உரைக்க ‘நீ ஓலை காணல்பாலையோ அவை முன் காட்டப் பணி செயற் பாலை’ என்றவேலையில் நாவலூரர் வெகுண்டு மேல் விரைந்து சென்றுமாலயன் தொடராதானை வலிந்து பின் தொடரல் உற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
44
ஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்த ணாளன்காவணத்து இடையே ஓடக் கடிது பின்தொடர்ந்து நம்பிபூவணத்து அவரை உற்றார் அவரலால் புரங்கள் செற்றஏவணச் சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார்.
சொற்பிரிப்பு
ஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்தணாளன்காவணத்து இடையே ஓடக் கடிது பின் தொடர்ந்து நம்பிபூவணத்து அவரை உற்றார் அவர் அலால் புரங்கள் செற்றஏவணச் சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார்?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
45
மறைகள் ஆயின முன் போற்றி மலர்ப்பதம் பற்றி நின்றஇறைவனைத் தொடர்ந்து பற்றி எழுதும் ஆள் ஓலை வாங்கிஅறை கழல் அண்ணல் "ஆளாய் அந்தணர் செய்தல் என்னமுறை" எனக் கீறியிட்டார் முறை யிட்டான் முடிவி லாதான்.
சொற்பிரிப்பு
மறைகள் ஆயின முன் போற்றி மலர்ப்பதம் பற்றி நின்றஇறைவனைத் தொடர்ந்து பற்றி எழுதும் ஆள் ஓலை வாங்கிஅறைகழல் அண்ணல், “ஆளாய் அந்தணர் செய்தல் என்னமுறை” எனக் கீறி இட்டார்; முறையிட்டான் முடிவு இலாதான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
46
அருமறை முறை யிட்டின்னும் அறி வதற்கு அறியான் பற்றிஒரு முறை முறையோ என்ன உழைநின்றார் விலக்கி "இந்தப்பெருமுறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்கு கின்றதிரு மறை முனிவரே நீர் எங்குளீர் செப்பும்" என்றார்.
சொற்பிரிப்பு
அருமறை முறையிட்டு இன்னும் அறிவதற்கு அரியான் பற்றிஒருமுறை “முறையோ” என்ன உழைநின்றார் விலக்கி, “இந்தப்பெருமுறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்குகின்றதிருமறை முனிவரே நீர் எங்குளீர் செப்பும்” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
47
என்றலும் நின்ற ஐயர் "இங்குளேன் இருப்புஞ் சேயதுஅன்றிந்த வெண்ணெய் நல்லூர் அதுநிற்க அறத்தாறு இன்றிவன்றிறல் செய்து என்கையில் ஆவணம் வலிய வாங்கிநின்றிவன் கிழித்துத் தானே நிரப்பினான் அடிமை" என்றான்.
சொற்பிரிப்பு
என்றலும் நின்ற ஐயர்‘ இங்குளேன் இருப்பும் சேயதுஅன்று இந்த வெண்ணெய் நல்லூர் அது நிற்க அறத்தாறு இன்றிவன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கிநின்று இவன் கிழித்துத் தானே நிரப்பினான் அடிமை’ என்றான்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
48
குழை மறை காதினானைகோதில் ஆரூரர் நோக்கிப்பழைய மன்றாடி போலும் இவன்என்று பண்பின் மிக்கவிழைவுறு மனமும் பொங்க"வெண்ணெய் நல்லூராயேல் உன்பிழை நெறி வாழ்க்கை ஆங்கே பேச நீபோதாய்" என்றார்.
சொற்பிரிப்பு
குழை மறை காதினானைக் கோதில் ஆரூரர் நோக்கிப்பழைய மன்றாடி போலும் இவன் என்று, பண்பின் மிக்கவிழைவுறு மனமும் பொங்க, ‘வெண்ணெய் நல்லூராயேல் உன்பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய்’ என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
49
வேதியன் அதனைக் கேட்டு "வெண்ணெய் நல்லூரிலே நீபோதினும் நன்று மற்றப்புனித நான்மறையோர் முன்னர்ஆதியின் மூல ஓலை காட்டி நீ அடிமைஆதல்சாதிப்பன்" என்று முன்னே தண்டுமுன் தாங்கிச் சென்றான்.
சொற்பிரிப்பு
வேதியன் அதனைக் கேளா ‘வெண்ணெய் நல்லூரிலே நீபோதினும் நன்று மற்று அப்புனித நான்மறையோர் முன்னர்ஆதியில் மூல ஓலை காட்டி நீ அடிமை ஆதல்சாதிப்பன்’ என்று முன்னே தண்டு முன் தாங்கிச் சென்றான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
50
செல்லு நான் மறையோன் தன்பின் திரிமுகக்காந்தஞ் சேர்ந்தவல்லிரும்பணையு மா போல் வள்ளலும் கடிது சென்றான்எல்லையில் சுற்றத்தாரும் "இது என்னாம்" என்று செல்லநல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல்லூரை நண்ணி.
சொற்பிரிப்பு
செல்லு நான்மறையோன் தன் பின் திரிமுகக் காந்தம் சேர்ந்தவல் இரும்பு அணையுமா போல் வள்ளலும் கடிது சென்றான்எல்லையில் சுற்றத்தாரும் “இது என்னாம்” என்று செல்லநல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல்லூரை நண்ணி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
51
வேத பாரகரின் மிக்கார் விளங்கு பேரவை முன்சென்றுநாதனாம் மறையோன் சொல்லும் "நாவலூர் ஆரூரன் தான்காதல் என் அடியான் என்னக் காட்டிய ஓலைகீறிமூதறிவீர் முன் போந்தானிது மற்றென் முறைபாடு" என்றான்.
சொற்பிரிப்பு
வேத பாரகரின் மிக்கார் விளங்கு பேரவை முன் சென்றுநாதனாம் மறையோன் ‘சொல்லும் நாவலூர் ஆரூரன் தான்காதல் என் அடியான் என்னக் காட்டிய ஓலை கீறிமூதறிவீர் முன் போந்தான் இது மற்று என் முறைப்பாடு’ என்றான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
52
அந்தணர் அவையில் மிக்கார் "மறையவர் அடிமை ஆதல்இந்த மாநிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயர்"** என்றார்வந்த வாறிசைவே அன்றோ வழக்கு இவன் கிழித்த ஓலைதந்தை தன் தந்தை நேர்ந்தது என்றனன் தனியாய் நின்றான்.(**ஐயா என்றும் பாடம்)
சொற்பிரிப்பு
அந்தணர் அவையில் மிக்கார் ‘மறையவர் அடிமை ஆதல்இந்த மாநிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயர்!’ என்றார்;‘வந்தவாறு இசைவே அன்றோ வழக்கு இவன் கிழித்த ஓலைதந்தை தன் தந்தை நேர்ந்தது’ என்றனன் தனியாய் நின்றான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
53
இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்றுவிசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி ஆமோ?தசையெலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினை சாரச் சொன்னான்அசைவில் ஆரூரர் எண்ணம் என் என்றார் அவையில்மிக்கார்.
சொற்பிரிப்பு
‘இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்றுவிசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றியாமோ?தசை எலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினைச் சாரச் சொன்னான்;அசைவில் ஆரூரர் எண்ணம் என்?; என்றார் அவையில் மிக்கார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
54
அனைத்து நூல் உணர்ந்தீர்! ஆதிசைவன் என்று அறிவீர்! என்னைத்தனக்கு வேறு அடிமை என்றுஇவ் அந்தணன் சாதித்தானேல்மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான்எனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன் எண்ணம் மிக்கான்.
சொற்பிரிப்பு
‘அனைத்து நூல் உணர்ந்தீர்! ஆதி சைவன் என்று அறிவீர்! என்னைத்தனக்கு வேறு அடிமை என்று இவ் அந்தணன் சாதித்தானேல்மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை! என் சொல்லுகேன் யான்?எனக்கு இது தெளிய ஒண்ணாது’ என்றனன் எண்ணம் மிக்கான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
55
அவ் வுரை அவையின் முன்பு நம்பி ஆரூரர் சொல்லச்செவ்விய மறையோர் நின்ற திரு மறை முனியை நோக்கி"இவ்வுலகின் கண் நீ இன்று இவரை உன்அடிமை என்றவெவ்வுரை எம்முன்பு ஏற்ற வேண்டும்" என்று உரைத்து மீண்டும்.
சொற்பிரிப்பு
‘அவ்வுரை அவையின் முன்பு நம்பி ஆரூரர் சொல்லச்செவ்விய மறையோர் நின்ற திருமறை முனியை நோக்கி‘இவ்வுலகின்கண் நீ இன்று இவரை உன் அடிமை என்றவெவ்வுரை எம் முன்பு ஏற்ற வேண்டும்’ என்று உரைத்து மீண்டும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
56
ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன "முன்னேமூட்சியிற் கிழித்த ஓலை படியோலை மூல ஓலைமாட்சியில் காட்ட வைத்தேன்" என்றனன் மாயை வல்லான்.
சொற்பிரிப்பு
‘ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய்’ என்ன, முன்னேமூட்சியில் கிழித்த ஓலை படி ஓலை; மூல ஓலைமாட்சியில் காட்ட வைத்தேன் என்றனன் மாயை வல்லான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
57
வல்லையேல் காட் டிங்கு என்ன மறையவன் வலி செய்யாமல்சொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன் என்று சொல்லச்செல்வ நான் மறையோய் நாங்கள் தீங்குற ஒட்டோம் என்றார்அல்லல் தீர்த்து ஆள நின்றார்ஆவணம் கொண்டு சென்றார்.
சொற்பிரிப்பு
‘வல்லையேல் காட்டு இங்கு’ என்ன ‘மறையவன் வலி செய்யாமல்சொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன்’ என்று சொல்லச்செல்வ நான்மறையோர் “நாங்கள் தீங்குற ஒட்டோம்” என்றார்;அல்லல் தீர்த்து ஆள நின்றார் ஆவணம் கொண்டு சென்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
58
இருள் மறை மிடற்றோன் கையில் ஓலை கண்டு அவையோர்ஏவஅருள் பெறு கரண த்தானும் ஆவணம் தொழுது வாங்கிச்சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கித்தெருள் பெறு சபையோர் கேட்ப வாசகம் செப்பு கின்றான்.
சொற்பிரிப்பு
இருள் மறை மிடற்றோன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவஅருள்பெறு கரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கிச்சுருள்பெறு மடியை நீக்கி விரித்து அதன் தொன்மை நோக்கித்தெருள்பெறு சபையோர் கேட்ப வாசகம் செப்புகின்றான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
59
அருமறை நாவல் ஆதி சைவன் ஆரூரன்செய்கைபெருமுனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கியானும் என்பால்வருமுறை மரபுளோரும் வழித்தொண்டு செய்தற்கு ஓலைஇருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்குஇவை என்எழுத்து.
சொற்பிரிப்பு
“அருமறை நாவல் ஆதி சைவன் ஆருரன் செய்கைபெருமுனி வெண்ணெய் நல்லூர்ப்பித்தனுக்கு யானும் என்பால்வருமுறை மரபுளோரும் வழித்தொண்டு செய்தற்கு ஓலைஇருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து.”
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
60
வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள்ஆசிலா எழுத்தை நோக்கி அவை யொக்கும் என்ற பின்னர்மாசிலா மறை யோர் "ஐயா! மற்றுங்கள் பேரனார் தம்தேசுடை எழுத்தே ஆகில் தெளியப் பார்த்து அறிமின்" என்றார்.
சொற்பிரிப்பு
வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்திட்டார்கள்ஆசிலா எழுத்தை நோக்கி அவை ஒக்கும் என்ற பின்னர்மாசிலா மறையோர் ‘ஐயா மற்று உங்கள் பேரனார் தம்தேசுடை எழுத்தே ஆகில் தெளியப் பார்த்து அறிமின்’ என்றார்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
61
அந்தணர் கூற "இன்னும் ஆள்ஓலை இவனே காண்பான்தந்தைதன் தந்தை தான் வேறு எழுதுகைச் சாத்துண்டாகில்இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கிவந்தது மொழிமின்" என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல்.
சொற்பிரிப்பு
அந்தணர் கூற ‘இன்னும்ஆள் ஓலை இவனே காண்பான்தந்தை தன் தந்தை தான் வேறு எழுது கைச்சாத்து உண்டாகில்இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கிவந்தது மொழிமின்’ என்றான் வலிய ஆட் கொள்ளும் வள்ளல்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
62
திரண்ட மாமறையோர் தாமும் திரு நாவலூரர் கோ முன்மருண்டது தெளிய மற்ற மறை யவன் எழுத்தால் ஓலைஅரண் தரு காப்பில் வேறுஒன்று அழைத்து உடன் ஒப்புநோக்கி"இரண்டும் ஒத்திருந்தது என்னே! இனிச் செயல் இல்லை" என்றார்.
சொற்பிரிப்பு
திரண்ட மாமறையோர் தாமும் திருநாவலூரர் கோ முன்மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலைஅரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்துடன் ஒப்பு நோக்கி‘இரண்டும் ஒத்து இருந்தது என்னே! இனிச்செயல் இல்லை’ என்றார்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
63
நான் மறை முனிவ னார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர்பான்மையின் ஏவல் செய்தல் கடன் என்று பண்பில் மிக்கமேன்மையோர் விளம்ப நம்பி "விதி முறை இதுவே ஆகில்யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ" என்று நின்றார்.
சொற்பிரிப்பு
‘நான்மறை முனிவனார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர்பான்மையின் ஏவல் செய்தல் கடன்’ என்று பண்பில் மிக்கமேன்மையோர் விளம்ப, நம்பி ‘விதிமுறை இதுவே ஆகில்யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ’ என்று நின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
64
திருமிகு மறையோர் நின்ற செழுமறை முனியை நோக்கி"அருமுனி! நீமுன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள்பெருமை சேர் பதியே யாகப் பேசியதுமக்கு இவ்வூரில்வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக" என்றார்.
சொற்பிரிப்பு
‘திருமிகு மறையோர் நின்ற செழுமறை முனியை நோக்கி‘அருமுனி! நீ முன் காட்டும்ஆவணம் அதனில் எங்கள்பெருமை சேர் பதியே ஆகப் பேசியது உமக்கு இவ் ஊரில்வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக’ என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
65
பொருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னைஒருவரும் அறியீராகில் 'போதும்'என்று ரைத்துச் சூழ்ந்தபெரு மறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்லத்திருவருட் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார்.
சொற்பிரிப்பு
‘பொருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் ‘என்னைஒருவரும் அறியீர் ஆகில் போதும்’ என்று உரைத்துச் சூழ்ந்தபெருமறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்லத்திருவருள் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
66
எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் "எங்கள்நம்பர் தங்கோயில் புக்கது என் கொலோ" என்று நம்பிதம்பெரு விருப்பி னோடு தனித் தொடர்ந்து அழைப்ப மாதோ(டு)உம்பரின் விடைமேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார்.
சொற்பிரிப்பு
எம்பிரான் கோயில் நண்ண ‘இலங்கு நூல் மார்பர் எங்கள்‘நம்பர் தம் கோயில் புக்கது என்கொலோ’ என்று நம்பிதம் பெரு விருப்பினோடு தனித் தொடர்ந்து அழைப்ப மாதோடுஉம்பரின் விடைமேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
67
முன்புநீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப்பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீதுதுன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்துநன்புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோம் என்றார்.
சொற்பிரிப்பு
“முன்பு நீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப்பின்பு நம் ஏவலாலேபிறந்தனை மண்ணின் மீதுதுன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வு அறத் தொடர்ந்து வந்துநன்புல மறையோர் முன்னர் நாம் தடுத்து ஆண்டோம்” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
68
என்று எழும் ஓசை கேளா ஈன்றஆன் கனைப்புக் கேட்டகன்று போல் கதறி நம்பி கரசரண் ஆதி அங்கம்துன்றிய புளகம் ஆகத்தொழுத கை தலை மேல் ஆக"மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட் கொண்டது" என்றார்.
சொற்பிரிப்பு
என்று எழும் ஓசை கேளா ஈன்ற ஆன் கனைப்புக் கேட்டகன்று போல் கதறி நம்பி கரசரண் ஆதி அங்கம்துன்றிய புளகம் ஆகத் தொழுதகை தலைமேல் ஆக‘மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட் கொண்டது’ என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
69
எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பிடை நிறைய எங்கும்விண்ணவர் பொழி பூமாரி மேதினி நிறைந்து விம்மமண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்பஅண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளிச் செய்வார்.
சொற்பிரிப்பு
எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பிடை நிறைய எங்கும்விண்ணவர் பொழி பூமாரி மேதினி நிறைந்து விம்மமண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்பஅண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளிச் செய்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
70
மற்று நீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம்பெற் றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்கஅற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மைச்சொற் தமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்.
சொற்பிரிப்பு
‘மற்று நீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம்பெற்றனை; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்கஅற்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண்மேல் நம்மைச்சொற்றமிழ் பாடுக’ என்றார் தூமறை பாடும் வாயார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
71
தேடிய அயனும் மாலும் தெளிவுறா ஐந்து எழுத்தும்பாடிய பொருளாய் உள்ளான் "பாடுவாய் நம்மை" என்னநாடிய மனத்த ராகி நம்பி ஆரூரர் மன்றுள்ஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று.
சொற்பிரிப்பு
தேடிய அயனும் மாலும் தெளிவுறாது ஐந்தெழுத்தும்பாடிய பொருளாய் உள்ளான் ‘பாடுவாய் நம்மை’ என்னநாடிய மனத்தர் ஆகி நம்பி ஆரூரர் மன்றுள்ஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
72
வேதியன் ஆகி என்னை வழக் கினால் வெல்ல வந்தஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்டகோதிலா அமுதே! இன்று உன் குணப் பெருங்கடலை நாயேன்யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன்" என மொழிந்தார்.
சொற்பிரிப்பு
‘வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்தஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்டகோதிலா அமுதே இன்று உன்குணப்பெருங்கடலை நாயேன்யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன்’ என மொழிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
73
அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார்"முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலால்லேஎன்பெயர் பித்தன் என்றே பாடுவாய்" என்றார் நின்றவன்பெருந் தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடல் உற்றார்.
சொற்பிரிப்பு
அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார்‘முன்பெனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலேஎன்பெயர் பித்தன் என்றே பாடுவாய்’ என்றார்; நின்றவன்பெரும் தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடல் உற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
74
கொத்தார் மலர்க்குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்மெய்த் தாயினும் இனியானை அவ்வியன் நாவலர் பெருமான்"பித்தா பிறை சூடி எனப் பெரிதாம் திருப்பதிகம்இத்தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்.
சொற்பிரிப்பு
கொத்தார் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர்பால்மெய்த்தாயினும் இனியானை அவ் வியன் நாவலர் பெருமான்‘பித்தா பிறை சூடி’ எனப் பெரிதாந் திருப்பதிகம்இத்தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
75
முறையால் வரு மருதத்துடன் மொழி இந்தள முதலில்குறையா நிலை மும்மைப்படிக் கூடுங் கிழமை யினால்நிறைபாணியின் இசை கோள்புணர் நீடும் புகல் வகையால்இறையான் மகிழ்இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான்.
சொற்பிரிப்பு
முறையால் வரு மதுரத்துடன் மொழி இந்தளம் முதலில்குறையா நிலை மும்மைப் படி கூடும் கிழமையினால்நிறைபாணியின் இசைகோள் புணர் நீடும் புகழ் வகையால்இறையான் மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
76
சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன் தனை இன்னும்பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு" என்றுறு பரிவில்நல்லார் வெண்ணெய் நல்லூர் அ ருள் துறை மேவிய நம்பன்எல்லா உலகும் உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான்.
சொற்பிரிப்பு
சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன் தனை ‘இன்னும்பல்லாறு உலகினில் நம்புகழ் பாடு’ என்று உறு பரிவில்நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள்துறை மேவிய நம்பன்எல்லா உலகு உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
77
அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும்உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில்பெயராது உயர் சிவ லோகமும் எளிதாம் வகை பெற்றாள்.
சொற்பிரிப்பு
அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்செயலால் நிகழ் புத்தூர் வரு சிவவேதியன் மகளும்உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில்பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
78
நாவலர் கோன் ஆரூரன் தனை வெண்ணெய் நல் ஊரில்மேவும் அருள் துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதற்பின்பூ அலரும் தடம் பொய்கைத் திரு நாவலூர் புகுந்துதேவர் பிரான் தனைப் பணிந்து திருப் பதிகம் பாடினார்.
சொற்பிரிப்பு
நாவலர் கோன் ஆரூரன் தனை வெண்ணெய் நல்லூரில்மேவும் அருட்துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டதற் பின்பூவலரும் தடம் பொய்கைத் திருநாவலூர் புகுந்துதேவர்பிரான் தனைப் பணிந்து திருப்பதிகம் பாடினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
79
சிவன் உறையுந் திருத்துறையூர்சென்ற ணைந்து தீவினையால்அவநெறியில் செல்லாமே தடுத்து ஆண் டாய் அடியேற்குத்தவ நெறிதந்து அருள் என்று தம்பிரான் முன்நின்றுபவ நெறிக்கு விலக்கு ஆகுந் திருப்பதிகம் பாடினார்.
சொற்பிரிப்பு
சிவன் உறையும் திருத்துறையூர் சென்று அணைந்து ‘தீவினையால்அவநெறியில் செல்லாமே தடுத்து ஆண்டாய் அடியேற்குத்தவநெறி தந்து அருள்’ என்று தம்பிரான் முன் நின்றுபவநெறிக்கு விலக்கு ஆகும் திருப்பதிகம் பாடினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
80
புலன் ஒன்றும்படி தவத்திற் புரிந்த நெறி கொடுத்து அருளஅலர் கொண்ட நறுஞ் சோலைத் திருத்துறையூர் அமர்ந்து அருளும்நிலவும் தண் புனலும் ஒளிர் நீள் சடையோன் திருப்பாதம்மலர் கொண்டு போற்றி சைத்து வந்தித்தார் வன் தொண்டர்.
சொற்பிரிப்பு
புலன் ஒன்றும்படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்தருளஅலர்கொண்ட நறுஞ்சோலைத் திருத்துறையூர் அமர்ந்தருளும்நிலவுந் தண்புனலும் ஒளிர் நீள்சடையோன் திருப்பாதம்மலர்கொண்டு போற்றிசைத்து வந்தித்தார் வன்றொண்டர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
81
திருத்துறையூர் தனைப்பணிந்து சிவபெருமான் அமர்ந்து அருளும்பொருத்தமாம் இடம் பலவும் புக்கிறைஞ்சி பொற்புலியூர்நிருத்தனார் திருக் கூத்துத் தொழுவதற்கு நினைவுற்றுவருத்தம்மிகு காதலினால் வழிக் கொள்வான் மனங் கொண்டார்.
சொற்பிரிப்பு
திருத்துறையூர் தனைப்பணிந்து சிவபெருமான் அமர்ந்தருளும்பொருத்தமாம் இடம் பலவும் புக்கு இறைஞ்சிப் பொற்புலியூர்நிருத்தனார் திருக்கூத்துத் தொழுவதற்கு நினைவுற்றுவருத்தமிகு காதலினால் வழிக்கொள்வான் மனங்கொண்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
82
மலைவளர் சந்து அகில் பீலி மலர்பரப்பி மணி கொழிக்கும்அலை தருதண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறியபின்இலகு பசும் புரவிநெடும் தேர் இரவிமேல் கடலில்செலவணையும் பொழுது அணையத் திருவதிகை புறத்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
மலைவளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணிகொழிக்கும்அலைதரு தண்புனல் பெண்ணை ஆறு கடந்து ஏறியபின்நிலவு பசும்புரவி நெடும் தேர் இரவி மேல்கடலில்செலவு அணையும் பொழுது அணையத் திருவதிகைப் புறத்தணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
83
உடைய அரசு உல கேத்தும் உழவாரப் படை யாளிவிடை யவர்க்குக் கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்துஅடையும் அதற்கு அஞ்சுவான் என்று அந் நகரில் புகுதாதேமடைவளர் தண் புறம் பணையிற் சித்தவட மடம் புகுந்தார்.
சொற்பிரிப்பு
‘உடைய அரசு உலகு ஏத்தும் உழவாரப் படையாளிவிடையவர்க்குக் கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்துஅடையும் அதற்கு அஞ்சுவன்’ என்று அந்நகரில் புகுதாதேமடைவளர் தண் புறம்பணையில் சித்தவட மடம் புகுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
84
வரிவளர் பூஞ்சோலை சூழ் மடத்தின் கண் வன்தொண்டர்விரிதிரை நீர்க் கெடில வடவீரட்டானத்து இறை தாள்புரி வுடைய மனத்தினராய்ப் புடை எங்கும் மிடைகின்றபரிசனமும் துயில் கொள்ளப் பள்ளி அமர்ந்து அருளினார்.
சொற்பிரிப்பு
வரிவளர் பூஞ்சோலை சூழ் மடத்தின்கண் வன்றொண்டர்விரிதிரை நீர்க் கெடில வட வீரட்டானத்து இறை தாள்புரிவுடைய மனத்தினராய்ப் புடை எங்கும் மிடைகின்றபரிசனமும் துயில் கொள்ளப் பள்ளி அமர்ந்து அருளினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
85
அது கண்டு வீரட்டத்து அமர்ந்துஅருளும் அங் கணரும்முது வடிவின் மறை யவராய் முன் ஒருவர் அறியாமேபொது மடத்தின் உள்புகுந்து பூந் தாரான் திரு முடிமேல்பதும மலர்த் தாள் வைத்துப் பள்ளிகொள்வார் போல் பயின்றார்.
சொற்பிரிப்பு
அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங்கணரும்முதுவடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமேபொதுமடத்தின் உட்புகுந்து பூந்தாரான் திருமுடிமேல்பதும மலர்த்தாள் வைத்துப் பள்ளிகொள்வார் போல் பயின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
86
அந்நிலை ஆரூரன் உணர்ந்து அரு மறையோய் உன்னடி என்சென்னியில் வைத்தனை என்னத் திசை அறி யாவகை செய்த(து)என்னுடைய மூப்புக் காண் என்று அருள அதற்கு இசைந்துதன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ்நாதன்.
சொற்பிரிப்பு
அந்நிலை ஆரூரன் உணர்ந்து ‘அருமறையோய் உன் அடி என்சென்னியில் வைத்தனை’ என்னத் ‘திசை அறியா வகை செய்ததுஎன்னுடைய மூப்புக் காண்’என்றருள அதற்கு இசைந்துதன்முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ்நாதன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
87
அங்குமவன் திரு முடிமேல் மீண்டும் அவர் தாள் நீட்டச்செங்கயல் பாய் தடம் புடை சூழ் திரு நாவலூராளிஇங்கு என்னைப் பலகாலும் மிதித்தனை நீ யார் என்னக்கங்கை சடைக் கரந்த பிரான் அறிந்திலையோ எனக் கரந்தான்.
சொற்பிரிப்பு
அங்கும் அவன் திருமுடி மேல் மீட்டும் அவர் தாள் நீட்டச்செங்கயல்பாய் தடம்புடை சூழ் திருநாவலூர் ஆளி‘இங்கு என்னைப் பலகாலும் மிதித்தனை நீ யார்’ என்னக்கங்கை சடைக் கரந்த பிரான்‘அறிந்திலையோ’ எனக் கரந்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
88
செம்மாந்து இங்குயான் அறியாது என்செய்தேன் எனத்தெளிந்துதம்மானை அறியாத சாதியார் உளரே என்(று)அம்மானைத் திருவதிகை வீரட்டா னத்து அமர்ந்தகைம்மாவின் உரியானைக் கழல் பணிந்து பாடினார்.
சொற்பிரிப்பு
‘செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன்’ எனத் தெளிந்து‘தம்மானை அறியாத சாதியார் உளரே’ என்றுஅம்மானைத் திருவதிகை வீரட்டானத்துஅமர்ந்தகைம்மாவின் உரியானைக் கழல் பணிந்து பாடினார்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
89
பொன் திரளும் மணித் திரளும் பொரு கரிவெண் கோடுகளும்மின்றிரண்ட வெண் முத்தும் விரை மலரும் நறுங் குறடும்வன்றிரை களாற் கொணர்ந்து திரு வதிகை வழி படலால்தென் திசையில் கங்கை எனும் திருக் கெடிலம் திளைத்தாடி.
சொற்பிரிப்பு
பொன்திரளும் மணித்திரளும் பொருகரி வெண்கோடுகளும்மின்திரண்ட வெண்முத்தும் விரைமலரும் நறுங்குறடும்வன்திரைகளால் கொணர்ந்து திருவதிகை வழிபடலால்தென்திசையில் கங்கை எனும் திருக்கெடிலம் திளைத்து ஆடி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
90
அங்கணரை அடி போற்றி அங்கு அகன்று மற்று அந்தப்பொங்கு நதித் தென்கரை போய்ப்போர் வலித்தோள் மாவலி தன்மங்கல வேள் வியில் பண்டு வாமனனாய் மண் இரந்தசெங் கணவன் வழி பட்ட திரு மாணிகுழி அணைந்தார்.
சொற்பிரிப்பு
அங்கணரை அடிபோற்றி அங்கு அகன்று மற்று அந்தப்பொங்கு நதித் தென்கரை போய்ப் போர் வலித்தோள் மாவலி தன்மங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்தசெங்கண் அவன் வழிபட்ட திருமாணிகுழி அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
91
பரம் பொருளைப் பணிந்து தாள் பரவி ப்போய்ப் பணிந்தவர்க்குவரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண்தமிழ் பாடிநரம்புடை யாழ்ஒலி முழவின் நாத ஒலி வேத ஒலிஅரம்பையர் தம் கீதஒலி அறாத் தில்லை மருங்கு அணைந்தார்.
சொற்பிரிப்பு
பரம்பொருளைப் பணிந்து தாள் பரவிப் போய்ப் பணிந்தவர்க்குவரந்தருவான் தினைநகரை வணங்கினர் வண் தமிழ் பாடிநரம்புடை யாழ் ஒலி, முழவின் நாத ஒலி, வேத ஒலி,அரம்பையர் தம் கீத ஒலி அறாத்தில்லை மருங்கு அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
92
தேம் அலங்கல் அணி மாமணி மார்பின் செம்மல் அங்கயல்கள் செங்கமலத் தண்பூமலங்க எதிர் பாய்வன மாடே புள்ளலம்பு திரை வெள் வளை வாவிதா மலங்குகள் தடம் பணை சூழும் தன் மருங்கு தொழு வார்கள் தம்மும்மைமா மலங்களற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி .
சொற்பிரிப்பு
தேம் அலங்கல் அணி மாமணி மார்பில் செம்மல் அங்கயல்கள் செங்கமலத் தண்பூ மலங்க எதிர் பாய்வன மாடே புள் அலம்பு திரை வெள்வளை வாவித்தா மலங்குகள் தடம்பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள் தம் மும்மைமா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
93
நாக சூத வகுளஞ் சரளஞ் சூழ் நாளி கேரம் இலவங்கம் நரந்தம்பூக ஞாழல் குளிர் வாழை மதூகம்பொதுளும் வஞ்சி பலஎங்கும் நெருங்கிமேக சால மலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்றப்போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம் புறம் பணை கடந்து புகுந்தார்.
சொற்பிரிப்பு
நாக சூத வகுளஞ் சரளஞ் சூழ் நாளிகேரம் இலவங்க நரந்தம்பூக ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கிமேக சால மலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்றப்போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம் புறம்பணை கடந்து புகுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
94
வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம்கன்னி காரங் குரவங் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித்துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்தபன் மலர்ப் புனித நந்த வனங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்.
சொற்பிரிப்பு
வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம்கன்னிகாரங் குரவங் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித்துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்தி கரவீரம் மிடைந்தபன் மலர்ப் புனித நந்தன வனங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
95
இடம் மருங்கு தனிநாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்துநடநவின்று அருள் சிலம்பொலி போற்றும் நான் மறைப் பதியை நாளும் வணங்ககடல் வலங் கொள்வது போல் புடை சூழுங் காட்சி மேவி மிகுசேட்செல ஓங்கும் தடமருங்கு வளர் மஞ்சிவர் இஞ்சிதண் கிடங்கை எதிர்கண்டு மகிழ்ந்தார்.
சொற்பிரிப்பு
இடமருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும்புவனம் உய்ய எடுத்துநடம்நவின்று அருள் சிலம்பொலி போற்றும் நான்மறைப்பதியை நாளும் வணங்கக்கடல் வலங்கொள்வது போல் புடை சூழும் காட்சி மேவி மிகு சேண் செல ஓங்கும்தடமருங்கு வளர் மஞ்சிவர் இஞ்சித் தண்கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
96
மன்றுளாடு மதுவின் நசை யாலே மறைச் சுரும் பறை புறத்தின் மருங்கேகுன்று போலு மணி மாமதில் சூழுங் குண்ட கழக்கமல வண்டலர் கைதைத்துன்று நீறு புனை மேனிய வாகித் தூயநீறு புனை தொண்டர்கள் என்னச்சென்று சென்று முரல்கின்றன கண்டு சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார்.
சொற்பிரிப்பு
மன்றுள் ஆடும் மதுவின் நசையாலே மறைச்சுரும்பு அறை புறத்தின் மருங்கேகுன்று போலும் மணி மாமதில் சூழும் குண்டு அகழ்க் கமல வண்டலர் கைதைத்துன்று நீறு புனை மேனிய ஆகித் தூய நீறு புனை தொண்டர்கள் என்னச்சென்று சென்று முரல்கின்றன கண்டு சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
97
பார் விளங்க வளர் நான்மறை நாதம் பயின்ற பண்புமிக வெண்கொடி ஆடும்சீர் விளங்கு மணி நாவொ லியாலும் திசைகள் நான்கு எதிர் புலப்படலாலும்தார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர்முகங்கள் எனஆயின தில்லைஊர்விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தரத் திசை வாயில் முன் எய்தி.
சொற்பிரிப்பு
பார் விளங்க வளர் நான்மறை நாதம் பயின்ற பண்பு மிக வெண்கொடி ஆடும்சீர் விளங்கு மணி நா ஒலியாலும் திசைகள் நான்கு எதிர் புறப்படலாலும்தார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர்முகங்கள் என ஆயின தில்லைஊர் விளங்கு திருவாயில்கள் நான்கின் உத்தரத் திசை வாயில் முன் எய்தி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
98
அன்பின் வந்து எதிர் கொண்ட சீர்அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோமுன்பு இறைஞ்சினரியாவர் என்று அறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்துபின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெரு மானும்பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொருவிறந்த திரு வீதி புகுந்தார்.
சொற்பிரிப்பு
அன்பின் வந்து எதிர் கொண்ட சீர் அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோமுன்பு இறைஞ்சினர் யாவர் என்று அறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்துபின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும்பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொரு இறந்த திருவீதி புகுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
99
அங்கண் மா மறை முழங்கும் மருங்கே ஆட ரம்பையர் அரங்கு முழங்கும்மங்குல் வானின் மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளில் வண்டு முழங்கும்பொங்கும் அன்பருவி கண் பொழி தொண்டர் போற்றி சைக்கும் ஒலி எங்கும் முழங்கும்திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும் தேவ தேவர் புரியும் திருவீதி.
சொற்பிரிப்பு
அங்கண் மாமறை முழங்கும் மருங்கே ஆடு அரம்பையர் அரங்கு முழங்கும்மங்குல் வானின் மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளின் வண்டு முழங்கும்பொங்கும் அன்பருவி கண்பொழி தொண்டர் போற்றிசைக்கும் ஒலி எங்கும் முழங்கும்திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும் தேவ தேவர் புரியும் திருவீதி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
100
போக நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கிமாகம் முன் பருகு கின்றன போலும் மாளிகைக் குலம் மிடைந்த பதாகையோக சிந்தை மறை யோர்கள் வளர்க்கும்ஓம தூமம் உயர்வானில் அடுப்பமேக பந்தி களின் மீதிடை எங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும்.
சொற்பிரிப்பு
போகம் நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கிமாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகைக் குலம் மிடைந்த பதாகையோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓம தூமம் உயர் வானில் அடுப்பமேக பந்திகளின் மீது இடை எங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
101
ஆடுதோகை புடை நாசிகள் தோறும் அரணி தந்த சுடர் ஆகுதி தோறும்மாடு தாம மணி வாயில்கள் தோறும் மங்கலக் கலசம் வேதிகை தோறும்சேடு கொண்ட ஒளி தேர் நிரை தோறும் செந்நெல் அன்னமலை சாலைகள் தோறும்நீடு தண்புனல்கள் பந்தர்கள் தோறும் நிறைந்த தேவர் கணம் நீளிடை தோறும்.
சொற்பிரிப்பு
ஆடு தோகை புடை நாசிகள் தோறும் அரணி தந்த சுடர் ஆகுதி தோறும்மாடு தாமம் அணி வாயில்கள் தோறும் மங்கலக் கலசம் வேதிகை தோறும்சேடு கொண்ட ஒளி தேர் நிரை தோறும் செந்நெல் அன்ன மலை சாலைகள் தோறும்நீடு தண்புனல்கள் பந்தர்கள் தோறும் நிறைந்த தேவர்கணம் நீள் இடை தோறும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
102
எண்ணில் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லையில் அழகு சொல்லிய எல்லாம்மண்ணில் இப் பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகிப்புண்ணியப் புனித அன் பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும்அண்ணல் ஆடு திரு அம்பலம் சூழ்ந்த அம்பொன் வீதியினை நம்பி வணங்கி.
சொற்பிரிப்பு
எண்ணில் பேருலகு அனைத்திலும் உள்ள எல்லை இல் அழகு சொல்லிய எல்லாம்மண்ணில் இப்பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகிப்புண்ணியப் புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும்அண்ணல் ஆடு திரு அம்பலம் சூழ்ந்த அம்பொன் வீதியினை நம்பி வணங்கி,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
103
மால் அயன் சதமகன் பெரும் தேவர் மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கிசீல மாமுனிவர் சென்று முன் துன்னித் திருப் பிரம்பின் அடி கொண்டு திளைத்துக்காலம் நேர் படுதல் பார்த்தயல் நிற்பக் காதல் அன்பர் கணநாதர் புகும்பொற்கோல நீடு திருவாயில் இறைஞ்சிக் குவித்த செங்கை தலை மேற்கொடு புக்கார்.
சொற்பிரிப்பு
மால் அயன் சதமகன் பெரும் தேவர் மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கிச்சீல மாமுனிவர் சென்று முன் துன்னித் திருப்பிரம்பின் அடி கொண்டு திளைத்துக்காலம் நேர்படுதல் பார்த்து அயல் நிற்பக் காதல் அன்பர் கண நாதர் புகும் பொன்கோல நீடு திருவாயில் இறைஞ்சிக் குவித்த செங்கை தலை மேற்கொண்டு புக்கார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
104
பெரு மதில் சிறந்த செம் பொன் மாளிகை மின் பிறங்கும் பேரம்பலம் மேருவரு முறை வலம் கொண் டிறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார்அரு மறை முதலில் நடுவினில் கடையில் அன்பர் தம் சிந்தையில் அலர்ந்ததிருவளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில்.
சொற்பிரிப்பு
பெருமதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கு பேரம்பலம் மேருவருமுறை வலங்கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார்அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர் தம் சிந்தையில் அலர்ந்ததிருவளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திருஅணுக்கன் திருவாயில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
105
வையகம் பொலிய மறைச் சிலம்பு ஆர்ப்ப மன்றுளே மால் அயன் தேடஐயர் தாம் வெளியே ஆடு கின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்தகை களோ திளைத்த கண்களோ அந்தக் கரணமோ கலந்த அன்பு ந்தச்செய் தவப் பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திருக் களிற்றுப்படி மருங்கு.
சொற்பிரிப்பு
வையகம் பொலிய மறைச்சிலம்பு ஆர்ப்ப மன்றுளே மால் அயன் தேடஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்தகைகளோ திளைத்த கண்களோ அந்தக் கரணமோ கலந்த அன்பு உந்தச்செய்தவப் பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திருக்களிற்றுப் படி மருங்கு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
106
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும்சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆகஇந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங் கூத்தின்வந்த பேரின்ப வெள்ளத் துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
சொற்பிரிப்பு
ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும்சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆகஇந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின்வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
107
தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திரு நடம் கும்பிடப் பெற்றுமண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம் ஆம் என்றுகண்ணில் ஆனந்த அருவி நீர் சொரியக் கைம்மலர் உச்சிமேற் குவித்துப்பண்ணினால் நீடி அறி வரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்.
சொற்பிரிப்பு
“தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன் தன் திருநடம் கும்பிடப் பெற்றுமண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம்” என்றுகண்ணில் ஆனந்த அருவி நீர் சொரியக் கைம்மலர் உச்சி மேல் குவித்துப்பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
108
தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனிப் பெருந்தாண்டவம் புரியஎடுத்த சேவடியார் அருளினால் "தரளம் எறிபுனல் மறி திரைப் பொன்னிமடுத்த நீள்வண்ணப் பண்ணை ஆரூரில் வருக நம்பால்" என வானில்அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர்நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார்.
சொற்பிரிப்பு
தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனிப் பெரும் தாண்டவம் புரியஎடுத்த சேவடியார் அருளினால் ‘தரளம் எறிபுனல் மறி திரைப் பொன்னிமடுத்த நீள் வண்ணப் பண்ணை ஆரூரில் வருக நம் பால்’ என வானில்அடுத்த போதினில் வந்து எழுந்ததோர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
109
ஆடுகின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த அப்பணி சென்னி மேற் கொண்டுசூடு தங்கரங்கள் அஞ்சலி கொண்டு தொழுந் தொறும் புறவிடை கொண்டுமாடு பேரொளியின் வளரும் அம்பலத்தை வலங் கொண்டு வணங் கினர் போந்துநீடுவான் பணிய உயர்ந்த பொன்வரை போல் நிலை எழுகோபுரங் கடந்து.
சொற்பிரிப்பு
ஆடுகின்றவர் பேரருளினால் நிகழ்ந்த அப்பணி சென்னி மேல் கொண்டுசூடு தம் கரங்கள் அஞ்சலி கொண்டு தொழுந்தொறும் புறவிடை கொண்டுமாடு பேரொளியின் வளரும் அம்பலத்தை வலங்கொண்டு வணங்கினர் போந்துநீடு வான் பணிய உயர்ந்த பொன் வரை போல் நிலை எழு கோபுரம் கடந்து,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
110
நின்று கோபுரத்தை நில முறப் பணிந்து நெடுந் திருவீதியை வணங்கிமன்ற லார் செல்வ மறுகி னூடேகி மன்னிய திருப்பதி அதனில்தென்திசை வாயில் கடந்து முன்போந்து சேட்படுந் திரு எல்லை இறைஞ்சிக்கொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிடத் திருநதி கடந்தார்.
சொற்பிரிப்பு
நின்று கோபுரத்தை நிலம் உறப் பணிந்து நெடுந்திரு வீதியை வணங்கிமன்றலார் செல்வ மறுகின் ஊடு ஏகி மன்னிய திருப்பதி அதனில்தென்றிசை வாயில் கடந்து முன் போந்து சேட்படும் திருஎல்லை இறைஞ்சிக்கொன்றை வார்சடையான் அருளையே நினைவார் கொள்ளிடத் திருநதி கடந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
111
புறந் தரு வார் போற்றி இசைப்ப புரி முந்நூல் அணிமார்பர்அறம் பயந்தாள் திரு முலைப் பால் அமுதுண்டு வளர்ந்தவர் தாம்பிறந்து அருளும் பெரும் பேறு பெற்றது என முற்று லகில்சிறந்த புகழ்க் கழுமல மாம் திருப் பதியைச் சென்று அணைந்தார்.
சொற்பிரிப்பு
புறந்தருவார் போற்றிசைப்பப் புரிமுந்நூல் அணிமார்பர்அறம்பயந்தாள் திருமுலைப்பால் அமுதுஉண்டு வளர்ந்தவர் தாம்பிறந்தருளும் பெரும்பேறு பெற்றது என முற்றுலகில்சிறந்த புகழ்க் கழுமலமாம் திருப்பதியைச் சென்றணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
112
பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலிஉள்ளு நான் மிதியேன் என்றூர் எல்லைப் புறம் வணங்கிவள்ள லார் வலமாக வரும் பொழுதின் மங்கை இடங்கொள்ளு மால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள.
சொற்பிரிப்பு
‘பிள்ளையார் திருஅவதாரஞ் செய்த பெரும் புகலிஉள்ளு நான் மிதியேன்’ என்று ஊர் எல்லைப் புறம் வணங்கிவள்ளலார் வலமாக வரும் பொழுதின் மங்கை இடம்கொள்ளுமால் விடையானும் எதிர்காட்சி கொடுத்தருள.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
113
மண்டிய பேரன் பினால் வன் தொண்டர் நின்று இறைஞ்சித்தெண் திரை வேலையில் மிதந்த திருத்தோணி புரத் தாரைக்கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்று இருந்த படி என்றுபண் டரும் இன்னிசை பயின்ற திருப் பதிகம் பாடினார்.
சொற்பிரிப்பு
மண்டிய பேர் அன்பினால் வன்தொண்டர் நின்று இறைஞ்சித்‘தெண்டிரை வேலையில் மிதந்த திருத்தோணி புரத்தாரைக்கண்டுகொண்டேன் கயிலையினில் வீற்றிருந்த படி’ என்றுபண்தரும் இன் இசை பயின்றதிருப்பதிகம் பாடினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
114
இருக்கோலம் இடும் பெருமான் எதிர் நின்றும் எழுந்து அருளவெருக் கோளுற்றது நீங்க ஆரூர் மேற் செல விரும்பிப்பெருக்கோதம் சூழ் புறவப் பெரும்பதியை வணங்கிப் போய்த்திருக் கோலக்கா வணங்கி செந் தமிழ் மாலைகள் பாடி.
சொற்பிரிப்பு
இருக்கு ஓலம் இடும் பெருமான் எதிர் நின்றும் எழுந்தருளவெருக்கோளுற்று அது நீங்க ஆரூர் மேல் செல விரும்பிப்பெருக்கு ஓதம் சூழ் புறவப் பெரும்பதியை வணங்கிப் போய்த்திருக்கோலக்கா வணங்கிச் செந்தமிழ் மாலைகள் பாடி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
115
தேன் ஆர்க்கும் மலர்ச் சோலைத் திருப்புன்கூர் நம்பர் பால்ஆனாப் பேரன்பு மிக அடி பணிந்து தமிழ் பாடிமானார்க்கும் கர தலத்தார் மகிழ்ந்த இடம் பல வணங்கிக்கானார்க்கும் மலர்த் தடஞ் சூழ் காவிரியின் கரை அணைந்தார்.
சொற்பிரிப்பு
தேனார்க்கும் மலர்ச்சோலைச் திருப்புன்கூர் நம்பர்பால்ஆனாப் பேரன்பு மிக அடி பணிந்து தமிழ் பாடிமான் ஆர்க்கும் கரதலத்தார் மகிழ்ந்த இடம் பல வணங்கிக்கானார்க்கும் மலர்த்தடஞ் சூழ் காவிரியின் கரை அணைந்தார்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
116
வம்புலா மலர் அலைய மணிகொழித்து வந்திழியும்பைம்பொன் வார் கரைப் பொன்னிப்பயில் தீர்த்தம் படிந்தாடிதம்பிரான் மயிலா டுதுறை வணங்கித் தாவில் சீர்அம்பர் மாகாளத்தின் அமர்ந்த பிரான் அடி பணிந்தார்.
சொற்பிரிப்பு
வம்புலா மலர் அலைய மணிகொழித்து வந்திழியும்பைம்பொன் வார்கரைப் பொன்னிப் பயில் தீர்த்தம் படிந்து ஆடித்தம்பிரான் மயிலாடுதுறை வணங்கித் தாவில் சீர்அம்பர் மாகாளத்தில் அமர்ந்த பிரான் அடி பணிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
117
மின்னார் செஞ்சடை அண்ணல் விரும்பு திருப்புகலூரைமுன்னாகப் பணிந்தேத்தி முதல்வன் தன்அருள் நினைந்துபொன்னாரும் உத்தரியம் புரி முந்நூல் அணிமார்பர்தென் நாவலூராளி திருவாரூர் சென்று அணைந்தார்.
சொற்பிரிப்பு
மின்னார் செஞ்சடை அண்ணல் விரும்பு திருப்புகலூரைமுன்னாகப் பணிந்து ஏத்தி முதல்வன் தன் அருள் நினைந்துபொன் ஆரும் உத்தரியம் புரி முந்நூல் அணி மார்பர்தென் நாவலூராளி திருவாரூர் சென்று அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
118
தேர் ஆரும் நெடு வீதித் திருவாரூர் வாழ்வார்க்கு"ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்கவாரா நின்றான் அவனை மகிழ்ந்து எதிர்கொள்வீர்" என்றுநீராரும் சடை முடிமேல்நிலவணிந்தார் அருள் செய்தார்.
சொற்பிரிப்பு
தேராரும் நெடுவீதித் திருவாரூர் வாழ்வாருக்கு‘ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்கவாராநின்றான் அவனை மகிழ்ந்து எதிர்கொள்வீர்’ என்றுநீராரும் சடைமுடி மேல் நிலவு அணிந்தார் அருள்செய்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
119
தம்பிரான் அருள் செய்யத்திருத்தொண்டர் அது சாற்றி"எம் பிரானார் அருள் தான் இருந்த பரிசு இதுவானால்நம் பிரானார் ஆவார் அவரன்றே" எனும் நலத்தால்உம்பர் நாடு இழிந்தது என எதிர்கொள்ள உடன் எழுந்தார்.
சொற்பிரிப்பு
தம்பிரான் அருள் செய்யத் திருத்தொண்டர் அது சாற்றி‘எம்பிரானார் அருள் தான் இருந்த பரிசு இதுவானால்நம்பிரானார் ஆவார் அவர் அன்றே’ எனும் நலத்தால்உம்பர் நாடு இழிந்தது என எதிர்கொள்ள உடன் எழுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
120
மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெருங் கொடி நெருங்கத்தாளின் நெடுந் தோரணமும் தழைக் கமுகும் குழைத் தொடையும்நீள் இலைய கதலிகளும் நிறைந்த பசும் பொற்ற சும்பும்ஒளி நெடு மணிவிளக்கும் உயர் வாயில் தொறும் நிரைத்தார்.
சொற்பிரிப்பு
மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெரும் கொடி நெருங்கத்தாளின் நெடும் தோரணமும் தழைக் கமுகும் குழைத் தொடையும்நீள் இலைய கதலிகளும் நிறைந்த பசும் பொன்தசும்பும்ஒளி நெடு மணிவிளக்கும் உயர் வாயில்தொறும் நிரைத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
121
சோதி மணி வேதிகைகள் தூநறுஞ் சாந்து அணி நீவிக்கோதில் பொரி பொற்சுண்ணங் குளிர் தரள மணி பரப்பிதாதிவர் பூந் தொடை மாலைத் தண் பந்தர்களுஞ் சமைத்துவீதிகள் நுண் துகள் அடங்க விரைப் பனிநீர் மிகத்தெளித்தார்.
சொற்பிரிப்பு
சோதி மணி வேதிகைகள் தூநறுஞ் சாந்து அணி நீவிக்கோதில் பொரி பொற்சுண்ணம் குளிர் தரளம் மணி பரப்பித்தாதவிழ் பூந் தொடை மாலைத் தண் பந்தர்களுஞ் சமைத்துவீதிகள் நுண் துகள் அடங்க விரைப் பனிநீர் மிகத் தெளித்தார்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
122
மங்கல கீதம் பாட மழை நிகர் தூரியம் முழங்கச்செங் கயற்கண் முற்றிழையார் தெற்றி தொறும் நடம் பயிலநங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன்பொங்கெயில் நீள் திரு வாயில் புறம் உறவந்து எதிர்கொண்டார்.
சொற்பிரிப்பு
மங்கல கீதம் பாட மழைநிகர் தூரியம் முழங்கச்செங்கயற்கண் முற்றிழையார் தெற்றி தொறும் நடம் பயிலநங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன்பொங்கு எயில் நீள் திருவாயில் புறம் உற வந்து எதிர் கொண்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
123
வந்து எதிர்கொண்டு வணங்குவார் முன் வன்தொண்டர் அஞ்சலி கூப்பி வந்துசிந்தை களிப்புற வீதியூடு செல்வார்திருத் தொண்டர் தம்மை நோக்கி"எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்" என்னும்சந்த இசைப் பதிகங்கள் பாடித்தம் பெருமான் திருவாயில் சார்ந்தார்.
சொற்பிரிப்பு
வந்து எதிர் கொண்டு வணங்குவார் முன் வன்றொண்டர் அஞ்சலி கூப்பி வந்துசிந்தை களிப்புற வீதி ஊடு செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி“எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்” என்னும்சந்த இசைப் பதிகங்கள் பாடித் தம் பெருமான் திருவாயில் சார்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
124
வானுற நீள்திரு வாயில் நோக்கி மண்ணுற ஐந்து உறுப்பால் வணங்கித்தேனுறை கற்பக வாச மாலைத் தேவா சிரியன் தொழுது இறைஞ்சிஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செங்கை களோடும்தூநறுங் கொன்றையான் மூலட்டானம் சூழ்திரு மாளிகை வாயில் புக்கார்.
சொற்பிரிப்பு
வான் உற நீள் திருவாயில் நோக்கி மண் உற ஐந்து உறுப்பால் வணங்கித்தேன் உறை கற்பக வாச மாலைத் தேவாசிரியன் தொழுது இறைஞ்சிஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செங்கைகளோடும்தூ நறும் கொன்றையான் மூலட்டானம் சூழ் திருமாளிகை வாயில் புக்கார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
125
புற்றிடங் கொண்ட புரா தனனைப் பூங் கோயில் மேய பிரானையார்க்கும்பற்று இடம் ஆயபரம் பொருளைப் பார்ப்பதி பாகனை பங்க யத்தாள்அர்ச்சனை செய்ய அருள் புரிந்த அண்ணலை மண்மிசை வீழ்ந்து இறைஞ்சிநற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார்.
சொற்பிரிப்பு
புற்றிடம் கொண்ட புராதனனைப் பூங்கோயில் மேய பிரானை, யார்க்கும்பற்றிடம் ஆய பரம்பொருளைப் பார்ப்பதி பாகனைப் பங்கயத்தாள்அர்ச்சனை செய்ய அருள் புரிந்த அண்ணலை மண்மிசை வீழ்ந்து இறைஞ்சிநற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
126
அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆகமுன்பு முறைமை யினால் வணங்கி முடிவு இலாக்காதல் முதிர ஓங்கிநன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றிநாயகன் சேவடி எய்தப் பெற்றஇன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றேஇன்னிசை வண்டமிழ் மாலை பாட.
சொற்பிரிப்பு
அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆகமுன்பு முறைமையினால் வணங்கி முடிவிலாக் காதல் முதிர ஓங்கிநன்புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்தப் பெற்றஇன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே இன்னிசை வண்டமிழ் மாலை பாட,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
127
வாழிய மா மறைப் புற்றிடங்கொள் மன்ன வனார் அருளாலோர் வாக்கு"தோழமை ஆக உனக்கு நம்மைத் தந்தனம் நாம் முன்பு தொண்டுகொண்டவேள்வியில் அன்று நீ கொண்டகோலம் என்றும் புனைந்து நின் வேட்கை தீரவாழி மண் மேல் விளையாடுவாய்" என்று ஆரூரர் கேட்க எழுந்ததுஅன்றே.
சொற்பிரிப்பு
வாழிய மாமறைப் புற்றிடங்கொள் மன்னவனார் அருளால் ஓர் வாக்குத்‘தோழமை ஆக உனக்கு நம்மைத் தந்தனம்’ நாம் முன்பு தொண்டு கொண்டவேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் புனைந்து நின் வேட்கை தீரவாழி மண் மேல் விளையாடுவாய்’ என்று ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
128
கேட்க விரும்பி வன்றொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றேஆட்கொள வந்த மறை யவனே ஆரூர் அமர்ந்த அரு மணியேவாட்கயல் கொண்ட கண்மங்கை பங்கா! மற்றுஉன் பெரிய கருணை அன்றேநாட் கமலப் பதம் தந்தது இன்று நாயினேனை பொருளாக என்றார்.
சொற்பிரிப்பு
கேட்க விரும்பி வன் தொண்டர் என்றும் கேடிலாதானை இறைஞ்சி நின்றே“ஆட்கொள வந்த மறையவனே! ஆரூர் அமர்ந்த அருமணியே!வாட்கயல் கொண்ட கண் மங்கை பங்கா! மற்று உன் பெரிய கருணை அன்றேநாட்கமலப்பதம் தந்தது இன்று நாயினேனைப் பொருளாக என்றார்”.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
129
என்று பல முறையால் வணங்கி எய்திய உள்ளக் களிப் பினொடும்வென்றி அடல் விடைபோல் நடந்து வீதி விடங்கப் பெருமான் முன்புசென்று தொழுது துதித்து வாழ்ந்து திருமாளிகை வலம் செய்து போந்தார்அன்று முதல் அடியார்கள் எல்லாம் தம்பிரான் தோழர் என்றே அறைந்தார்.
சொற்பிரிப்பு
என்று பல முறையால் வணங்கி எய்திய உள்ளக் களிப்பினோடும்வென்றி அடல்விடை போல் நடந்து வீதி விடங்கப் பெருமான் முன்புசென்று தொழுது துதித்து வாழ்ந்து திருமாளிகை வலம் செய்து போந்தார்;அன்று முதல் அடியார்கள் எல்லாம் தம்பிரான் தோழர் என்றே அறைந்தார்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
130
மை வளர் கண்டர் அருளினாலே வண்டமிழ் நாவலர் தம் பெருமான்சைவ விடங்கின் அணி புனைந்து சாந்தமும் மாலையும் தாரும் ஆகிமெய்வளர் கோலம் எல்லாம் பொலிய மிக்க விழுத்தவ வேந்தர் என்னத்தெய்வ மணிப் புற்றுளாரைப் பாடித்திளைத்து மகிழ் வொடுஞ் செல்லா நின்றார்.
சொற்பிரிப்பு
மை வளர் கண்டர் அருளினாலே வண்டமிழ் நாவலர் தம்பெருமான்சைவ விடங்கின் அணி புனைந்து சாந்தமும் மாலையும் தாரும் ஆகிமெய்வளர் கோலம் எல்லாம் பொலிய மிக்க விழுத் தவ வேந்தர் என்னத்தெய்வ மணிப் புற்றுளாரைப் பாடித் திளைத்து மகிழ்வொடும் செல்லா நின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
131
இதற்கு முன் எல்லை இல்லாத் திரு நகர் இதனுள் வந்துமுதல் பெருங் கயிலை ஆதி முதல்வர் தம் பங்கி னாட்குப்பொதுக் கடிந்து உரிமை செய்யும் பூங்குழற் சேடி மாரில் கதிர்த்தபூண்ஏந்து கொங்கை கமலினி அவதரித்தாள்.
சொற்பிரிப்பு
இதற்கு முன் எல்லை இல்லாத் திருநகர் இதனுள் வந்துமுதல் பெரும் கயிலை ஆதி முதல்வர் தம் பங்கினாட்குப்பொதுக் கடிந்து உரிமை செய்யும் பூங்குழல் சேடிமாரில்கதிர்த்த பூண் ஏந்து கொங்கைக் கமலினி அவதரித்தாள்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
132
கதிர் மணி பிறந்தது என்ன உருத்திர கணிகை மாராம்பதி யிலார் குலத்தில் தோன்றிப் பரவையார் என்னும் நாமம்விதி யுளி விளக் கத்தாலே மேதகு சான்றோர் ஆன்றமதி யணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாத்தி.
சொற்பிரிப்பு
கதிர்மணி பிறந்தது என்ன உருத்திர கணிகைமாராம்பதி இலார் குலத்தில் தோன்றிப் பரவையார் என்னும் நாமம்விதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்றமதி அணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
133
பரவினர் காப்புப் போற்றிப் பயில் பெருஞ் சுற்றம் திங்கள்விரவிய பருவம் தோறும் விழா அணி எடுப்ப மிக்கோர்"வர மலர் மங்கை இங்கு வந்தனள்" என்று சிந்தைதர வரு மகிழ்ச்சி பொங்கத் தளர்நடைப் பருவஞ் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
பரவினர் காப்புப் போற்றிப் பயில் பெரும் சுற்றம் திங்கள்விரவிய பருவம் தோறும் விழா அணி எடுப்ப மிக்கோர்வர மலர் மங்கை இங்கு வந்தனள் என்று சிந்தைதர வரு மகிழ்ச்சி பொங்கத் தளர் நடைப் பருவம் சேர்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
134
மானிளம் பிணையோ? தெய்வ வளரிள முகையோ? வாசத்தேனிளம் பதமோ? வேலைத் திரைஇளம் பவள வல்லிக்கானிளம் கொடியோ? திங்கள் கதிரிளங் கொழுந்தோ? காமன்தானிளம் பருவம் கற்கும் தனி இளந் தனுவோ என்ன.
சொற்பிரிப்பு
மான் இளம் பிணையோ? தெய்வ வளர் இள முகையோ? வாசத்தேன் இளம் பதமோ? வேலைத் திரை இளம் பவள வல்லிக்கான் இளம் கொடியோ? திங்கள் கதிர் இளம் கொழுந்தோ? காமன்தான் இளம் பருவம் கற்கும் தனி இளம் தனுவோ என்ன.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
135
நாடும் இன்பொற்பு வாய்ப்பு நாளும் நாள் வளர்ந்து பொங்கஆடும் மென் கழங்கும் பந்தும்அம்மனை ஊசல் இன்னபாடும் இன் னிசையும் தங்கள் பனிமலை வல்லி பாதம்கூடும் அன்பு உருகப் பாடும் கொள்கையோர் குறிப்புத் தோன்ற.
சொற்பிரிப்பு
நாடும் இன் பொற்பு வாய்ப்பு நாளும் நாள் வளர்ந்து பொங்கஆடும் மென் கழங்கும் பந்தும் அம்மனை ஊசல் இன்னபாடும் இன் இசையும் தங்கள் பனிமலை வல்லி பாதம்கூடும் அன்பு உருகப் பாடும் கொள்கை ஓர் குறிப்புத் தோன்ற.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
136
பிள்ளைமைப் பருவம் மீதாம் பேதை மைப் பருவம் நீங்கிஅள்ளுதற்கு அமைந்த பொற்பால் அநங்கன் மெய்த் தனங்கள் ஈட்டம்கெள்ள மிக்குயர்வ போன்ற கொங்கை கோங் கரும்பை வீழ்ப்பஉள்ள மெய்த் தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார்.
சொற்பிரிப்பு
பிள்ளைமைப் பருவம் மீதாம் பேதைமைப் பருவம் நீங்கிஅள்ளுதற்கு அமைந்த பொற்பால் அநங்கன் மெய்த் தனங்கள் ஈட்டம்கொள்ளமிக்கு உயர்வ போன்று கொங்கை கோங்கு அரும்பை வீழ்ப்பஉள்ள மெய்த் தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
137
பாங்கியர் மருங்கு சூழப் பட ரொளி மறுகு சூழத்தேங்கமழ் குழலின் வாசம் திசை யெலாம் சென்று சூழஓங்கு பூங் கோயில் உள்ளார் ஒருவரை அன்பி னோடும்பூங் கழல் வணங்க என்றும் போதுவார் ஒருநாட் போந்தார்.
சொற்பிரிப்பு
பாங்கியர் மருங்கு சூழப் படர்ஒளி மறுகு சூழத்தேங்கமழ் குழலின் வாசம் திசை எலாம் சென்று சூழஓங்கு பூங்கோயில் உள்ளார் ஒருவரை அன்பினோடும்பூங்கழல் வணங்க என்றும் போதுவார் ஒருநாள் போந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
138
அணி சிலம்பு அடிகள் பார் வென்றடிப் படுத்தனம் என்று ஆர்ப்பமணி கிளர் காஞ்சி அல்குல் வரி அர உலகை வென்றதுணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சுசுரி குழற் கழிய விண்ணும்பணியும் என்றின வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில்.
சொற்பிரிப்பு
அணிசிலம்பு அடிகள் “பார் வென்று அடிப்படுத்தனம்” என்று ஆர்ப்ப,மணிகிளர் காஞ்சி அல்குல் வரி அரவு உலகை வென்றதுணிவு கொண்டு ஆர்ப்ப, மஞ்சு சுரிகுழற்கு அழிய “விண்ணும்பணியும்” என்று இனவண்டு ஆர்ப்பப் பரவையார் போதும் போதில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
139
புற்றிடம் விரும்பினாரைப் போற்றினர் தொழுது செல்வார்சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடை நம்பிநற்பெரும்பான்மை கூட்ட நகை பொதிந்துஇலங்கு செவ்வாய்விற்புரை நுதலின் வேற்கண் விளங்கு இழையவரைக் கண்டார்.
சொற்பிரிப்பு
புற்றிடம் விரும்பினாரைப் போற்றினர் தொழுது செல்வார்சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடைய நம்பிநற்பெரும் பான்மை கூட்ட நகைபொதிந்து இலங்கு செவ்வாய்விற்புரை நுதலின் வேல் கண் விளங்கிழை அவரைக் கண்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
140
கற்பகத்தின் பூங் கொம்போ? காமன் தன் பெரு வாழ்வோ?பொற்புடைய புண்ணி யத்தின் புண்ணி யமோ புயல் சுமந்துவிற் குவளை பவள மலர் மதிபூத்த விரைக் கொடியோ?அற்புதமோ? சிவ னருளோ? அறி யேன் என்று அதிசயித்தார்.
சொற்பிரிப்பு
“கற்பகத்தின் பூங்கொம்போ? காமன் தன் பெருவாழ்வோ?பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ? புயல் சுமந்துவிற்குவளை பவளமலர் மதி பூத்த விரைக்கொடியோ?அற்புதமோ? சிவன் அருளோ? அறியேன்” என்று அதிசயித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
141
ஓவிய நான் முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால்மேவிய தன் வருத்தமுற விதித்ததொரு மணி விளக்கோமூவுலகின் பயனாகி முன் நின்றது என நினைந்துநாவலர் காவலர் நின்றார் நடு நின்றார் படைமதனார்.
சொற்பிரிப்பு
“ஓவிய நான்முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தான்மேவிய தன் வருத்தம் உற விதித்தது ஒரு மணிவிளக்கோ?மூவுலகின் பயன் ஆகி முன் நின்றது” என நினைந்துநாவலர் காவலர் நின்றார்; நடுநின்றார் படை மதனார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
142
தண்டரள மணித் தோடும் தகைத் தோடும் கடை பிறழும்கெண்டை நெடுங் கண் வியப்பப் கிளர்ஒளிப் பூண் உரவோனைஅண்டர் பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரும்பப்பண்டை விதி கடை கூட்டப் பரவையாருங் கண்டார்.
சொற்பிரிப்பு
தண்டரள மணித்தோடும் தகைத்தோடும் கடை பிறழும்கெண்டை நெடும் கண் வியப்பக் கிளர்ஒளிப் பூண் உரவோனைஅண்டர் பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரும்பப்பண்டை விதி கடை கூட்டப் பரவையாருங் கண்டார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
143
கண் கொள்ளாக் கவின் பொழிந்த திருமேனி கதிர் விரிப்பவிண் கொள்ளாப் பேரொளியான் எதிர் நோக்கும் மெல்லி யலுக்குஎண் கொள்ளா காதலின் முன்பு எய்தாத ஒரு வேட்கைமண்கொள்ளா நாண் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும்.
சொற்பிரிப்பு
கண்கொள்ளாக் கவின் பொழிந்த திருமேனி கதிர்விரிப்பவிண்கொள்ளாப் பேரொளியான் எதிர்நோக்கும் மெல்லியலுக்குஎண்கொள்ளாக் காதலின் முன்பு எய்தாதது ஒரு வேட்கைமண்கொள்ளா நாண் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
144
முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகு ஒளியால்தன் னேரில் மாரனோ? தார் மார்பின் விஞ் சையனோ?மின் நேர் செஞ் சடை அண்ணல்மெய்யருள் பெற்று உடையவனோ?என்னே என் மனம் திரித்தஇவன் யாரோ என நினைந்தார்.
சொற்பிரிப்பு
“முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகு ஒளியால்தன்னேரில் மாரனோ? தார் மார்பின் விஞ்சையனோ?மின்னேர் செஞ்சடை அண்ணல் மெய்அருள் பெற்று உடையவனோ?என்னே! என் மனந்திரித்த இவன் யாரோ?” என நினைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
145
அண்ணல் அவன் தன் மருங்கே அளவு இறந்த காதலினால்உண்ணிறையும் குணம் நான்கும் ஒரு புடைச் சாய்ந்தன எனினும்வண்ண மலர்க் கரும் கூந்தல் மடக் கொடியை வலிதாக்கிக்கண் நுதலைத் தொழும் அன்பே கைக் கொண்டு செலவுய்ப்ப.
சொற்பிரிப்பு
அண்ணல் அவன் தன் மருங்கே அளவிறந்த காதலினால்உண்ணிறையும் குண நான்கும் ஒரு புடைசாய்ந்தன எனினும்வண்ணமலர்க் கருங்கூந்தல் மடக்கொடியை வலிதாக்கிக்கண்ணுதலைத் தொழும் அன்பேகைக்கொண்டு செல உய்ப்ப.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
146
பாங்கு ஓடிச் சிலை வளைத்துப் படை அநங்கன் விடு பாணம்தாங் கோலி எம் மருங்கும் தடை செய்ய மடவரலும்தேங்கோதை மலர்க்குழல் மேல் சிறை வண்டு கலந்து ஆர்ப்பப்பூங்கோயில் அமர்ந்த பிரான் பொற் கோயில் போய்ப் புகுந்தாள்.
சொற்பிரிப்பு
பாங்கு ஓடிச் சிலைவளைத்துப் படை அனங்கள் விடுபாணம்தாங்கோலி எம்மருங்கும் தடை செய்ய மடவரலும்தேங்கோதை மலர்க்குழல் மேல் சிறைவண்டு கலந்து ஆர்ப்பப்பூங்கோயில் அமர்ந்த பிரான் பொற்கோயில் போய்ப் புகுந்தாள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
147
வன்தொண்டர் அது கண்டு "என் மனம் கொண்ட மயில் இயலின்இன்தொண்டைச் செங்கனி வாய் இளங்கொடி தான் யார்" என்னஅன் றங்கு முன் நின்றார் அவர் நங்கை பரவையார்சென் றும்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார் எனச் செப்ப.
சொற்பிரிப்பு
வன்றொண்டர் அது கண்டு” என் மனங்கொண்ட மயில் இயலின்இன்தொண்டைச் செங்கனி வாய் இளங்கொடி தான் யார்?” என்ன,அன்று அங்கு முன் நின்றார் “அவர் நங்கை பரவையார்சென்று உம்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார்” எனச் செப்ப.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
148
பேர் பரவை பெண்மையினில் பெரும் பரவை விரும்பல்குல்ஆர்பரவை அணி திகழும் மணி முறுவல் அரும் பரவைசீர்பரவை ஆயினாள் திரு உருவின் மென் சாயல்ஏர்பரவை இடைப் பட்ட என் ஆசை எழு பரவை.
சொற்பிரிப்பு
“பேர் பரவை; பெண்மையினில் பெரு உம்பர் அவை விரும்பு அல்குல்ஆர் பரவு ஐ; அணி திகழும் மணிமுறுவல் அரும்பர் அவை;சீர் பரவு ஐ ஆயினாள்; திருஉருவின் மென்சாயல்ஏர் பரவை இடைப்பட்ட என் ஆசை எழு பரவை.”
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
149
என்றினைய பலவும் நினைந்து எம் பெருமான் அருள் வகையான்முன் தொடர்ந்து வருங் காதல் முறைமை யினால் தொடக்குண்டு"நன்று எனை ஆட்கொண்டவர் பால் நண்ணுவன்" என்றுள் மகிழ்ந்துசென்றுடைய நம்பியும் போய்த் தேவர் பிரான் கோயில் புக.
சொற்பிரிப்பு
என்று இனைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள்வகையால்முன் தொடர்ந்து வருங்காதல் முறைமையினால் தொடக்குண்டு“நன்று எனை ஆட் கொண்டவர் பால் நண்ணுவன்” என்று உள் மகிழ்ந்துசென்று உடைய நம்பியும் போய்த் தேவர் பிரான் கோயில் புக.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
150
பரவையார் வலங் கொண்டு பணிந்து ஏத்தி முன்னரேபுரவலனார் கோயிலின் நின்று ஒரு மருங்கு புறப்பட்டார்விரவு பெருங் காதலினால் மெல்லியலார் தமை வேண்டிஅரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர்.
சொற்பிரிப்பு
பரவையார் வலங்கொண்டு பணிந்து ஏத்தி முன்னரேபுரவலனார் கோயிலின் நின்று ஒருமருங்கு புறப்பட்டார்விரவு பெரும் காதலினால் மெல்லியலார் தமைவேண்டிஅரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
151
அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணிப் புற்றின்மைவாழும் திரு மிடற்று வானவர்பால் நின்றும் போந்துஎவ்வாறு சென்றாள் என் இன்னுயிராம் அன்னம் எனச்செவ்வாய் வெண் நகைக் கொடியைத் தேடுவார் ஆயினார்.
சொற்பிரிப்பு
அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணிப்புற்றின்மைவாழும் திருமிடற்று வானவர்பால் நின்றும் போந்து“எவ்வாறு சென்றாள் என் இன் உயிராம் அன்னம்” எனச்செவ்வாய் வெண் நகைக் கொடியைத் தேடுவார் ஆயினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
152
பாசமாம் வினைப் பற்று அறுப்பான் மிகும்ஆசை மேலும் ஓர் ஆசை அளிப்பதோர்தேசின் மன்னி என் சிந்தை மயக்கியஈசனார் அருள் என் நெறிச் சென்றதே.
சொற்பிரிப்பு
பாசமாம் வினைப் பற்று அறுப்பான் மிகும்ஆசை மேலும் ஓர் ஆசை அளிப்பதோர்தேசின் மன்னி என் சிந்தை மயக்கியஈசனார் அருள் எந்நெறிச் சென்றதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
153
உம்பர் நாயகர் தங்கழல் அல்லதுநம்புமாறு அறியேனை நடுக்குறவம்பு மால் செய்து வல்லியின் ஒல்கியின்றுஎம் பிரான் அருள் எந்நெறிச் சென்றதே.
சொற்பிரிப்பு
உம்பர் நாயகர் தங்கழல் அல்லதுநம்பும் ஆறு அறியேனை நடுக்குறவம்பு மால் செய்து வல்லியின் ஒல்கி இன்றுஎம்பிரான் அருள் எந்நெறிச் சென்றதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
154
பந்தம் வீடு தரும் பரமன் கழல்சிந்தை ஆர்வுற உன்னும் என் சிந்தையைவந்து மால்செய்து மான் எனவே விழித்துஎந்தையார் அருள் எந் நெறிச் சென்றதே.
சொற்பிரிப்பு
பந்தம் வீடு தரும் பரமன் கழல்சிந்தை ஆரவும் உன்னும் என் சிந்தையைவந்து மால் செய்து மான் எனவே விழித்துஎந்தையார் அருள் எந்நெறிச் சென்றதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
155
என்று சாலவும் ஆற்றலர் என்னுயிர்நின்றது எங்கு என நித்திலப் பூண் முலைமன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான்சென்று தேவாசிரியனைச் சேர்ந்த பின்.
சொற்பிரிப்பு
என்று சாலவும் ஆற்றலர் “என் உயிர்நின்றது எங்கு” என நித்திலப் பூண்முலைமன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான்சென்று தேவாசிரியனைச் சேர்ந்த பின்..
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
156
காவி நேர் வரும் கண்ணியை நண்ணுவான்யாவ ரோடும் உரை யியம்பாது இருந்து"ஆவி நல் குவார் ஆரூரை ஆண்டவர்பூவின் மங்கையைத் தந்து" எனும் போழ்தினில்.
சொற்பிரிப்பு
காவி நேர் வரும் கண்ணியை நண்ணுவான்யாவரோடும் உரை இயம்பாது இருந்து“ஆவி நல்குவர் ஆரூரை ஆண்டவர்பூவின் மங்கையைத் தந்து” எனும் போழ்தினில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
157
நாட்டு நல்லிசை நாவ லூரன் சிந்தைவேட்ட மின்னிடை இன் அமு தத்தினைக்காட்டுவன் கடலை கடைந்தது என்ப போல்பூட்டும் ஏழ் பரித் தேரோன் கடல்புக.
சொற்பிரிப்பு
நாட்டு நல் இசை நாவலூரன்சிந்தைவேட்ட மின் இடை இன் அமுதத்தினைக்காட்டுவன் கடலைக் கடந்து என்ப போல்பூட்டும் ஏழ் பரித் தேரோன் கடல் புக.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
158
எய்து மென் பெடையோடும் இரைதேர்ந்து உண்டுபொய் கையிற் பகல் போக்கிய புள்ளினம்வைகு சேக்கை கண் மேற்செல வந்ததுபையுள் மாலை தமி யோர் பனிப்புற.
சொற்பிரிப்பு
எய்தும் மென் பெடையோடு இரை தேர்ந்துண்டுபொய்கையில் பகல் போக்கிய புள்இனம்வைகு சேக்கை கண் மேல் செல வந்ததுபையுள் மாலை தமியோர் பனிப்புற
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
159
பஞ்சின் மெல் அடிப் பாவையர் உள்ளமும்வஞ்ச மாக்கள் தம்வல் வினையும் அரன்அஞ்சு எழுத்தும் உணரா அறி விலோர்நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான்.
சொற்பிரிப்பு
பஞ்சின் மெல் அடிப் பாவையர் உள்ளமும்வஞ்ச மாக்கள் தம் வல்வினையும் அரன்அஞ்செழுத்தும் உணரா அறிவிலோர்நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
160
மறுவில் சிந்தை வன் தொண்டர் வருந்தினால்இறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார் என்றுநறுமலர்க் கங்குல் நங்கை முன் கொண்ட புன்முறுவல் என்ன முகிழ்த்தது வெண் நிலா.
சொற்பிரிப்பு
“மறுவில் சிந்தை வன் தொண்டர் வருந்தினால்இறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார்” என்றுநறுமலர்க் கங்குல் நங்கை முன் கொண்ட புன்முறுவல் என்ன முகிழ்ந்தது வெண்ணிலா.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
161
அரந்தை செய்வார்க்கு அழுங்கித் தம் ஆருயிர்வரன் கைதீண்ட மலர் குலமாதர் போல்பரந்த வெம் பகற்கொல்கிப் பனி மதிக்கரங்கள் தீண்ட அலர்ந்த கயி ரவம்.
சொற்பிரிப்பு
அரந்தை செய்வார்க்கு அழுங்கித் தம் ஆர் உயிர்வரன் கை தீண்ட மலர் குல மாதர் போல்பரந்த வெம்பகற்கு ஒல்கிப் பனிமதிக்கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
162
தோற்றும் மன் உயிர்கட்கு எலாம் தூய்மையேசாற்றும் இன்பமும் தண் மையும் தந்துபோய்ஆற்ற அண்டம் எலாம் பரந்து அண்ணல் வெண்நீற்றின் பேரொளி போன்றது நீள் நிலா.
சொற்பிரிப்பு
தோற்று மன் உயிர்கட்கு எலாம் தூய்மையேசாற்றும் இன்பமும் தண்மையும் தந்துபோய்ஆற்ற அண்டம் எலாம் பரந்து அண்ணல் வெண்நீற்றின் பேர்ஒளி போன்றது நீள்நிலா.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
163
வாவி புள் ளொலி மாறிய மாலையில்நாவ லூரரும் நங்கை பரவையாம்பாவை தந்த படர் பெருங் காதலும்ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார்.
சொற்பிரிப்பு
வாவி புள் ஒலி மாறிய மாலையில்நாவலூரரும் நங்கை பரவையாம்பாவை தந்த படர் பெரும் காதலும்ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
164
தந் திருக் கண் எரிதழலிற் பட்டுவெந்த காமன் வெளியே உருச் செய்துவந்து என் முன்நின்று வாளி தொடுப்பதேஎந்தையார் அருள் இவ் வண்ணமோ? என்பார்.
சொற்பிரிப்பு
“தம் திருக்கண் எரி தழலில் பட்டுவெந்த காமன் வெளியே உருச் செய்துவந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே!எந்தையார் அருள் இவ்வண்ணமோ?” என்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
165
ஆர்த்தி கண்டும் என்மேல் நின்று அழல்கதிர்தூர்ப்பதே! எனைத் தொண்டு கொண்டு ஆண்டவர்நீர்த் தரங்க நெடுங்கங்கை நீள் முடிச்சாத்தும் வெண்மதி போன்றிலை தண் மதி!.
சொற்பிரிப்பு
“ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழற்கதிர்தூர்ப்பதே! எனைத் தொண்டு கொண்டு ஆண்டவர்நீர்த் தரங்க நெடும் கங்கை நீள்முடிச்சாத்தும் வெண்மதி போன்று இலை தண்மதி!”
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
166
அடுத்து மேன்மேல் அலைத்து எழும் ஆழியேதடுத்து முன்எனை ஆண்டவர் தாம் உணக்கடுத்த நஞ் சுன் தரங்கக் கரங்களால்எடுத்து நீட்டு நீ என்னை இன்றுஎன் செயாய்.
சொற்பிரிப்பு
அடுத்து மேன்மேல் அலைத்து எழும் ஆழியேதடுத்து முன் எனை ஆண்டவர் தாம் உணக்கடுத்த நஞ்சு உன் தரங்கக் கரங்களால்எடுத்து நீட்டு நீ என்னை இன்று என்செயாய்?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
167
பிறந்தது எங்கள் பிரான் மலயத்து இடைச்சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில்புறம் பணைத் தடம் பொங்கழல் வீசிடமறம் பயின்றது எங்கோ? தமிழ் மாருதம்!.
சொற்பிரிப்பு
பிறந்தது எங்கள் பிரான் மலயத்திடைச்சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில்புறம்பணைத் தடம் பொங்கழல் வீசிடமறம் பயின்றது எங்கோ? தமிழ் மாருதம்!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
168
இன்ன தன்மைய பின்னும் இயம் புவான்மன்னு காதலன் ஆகிய வள்ளல் பால்தன் அரும்பெறல் நெஞ்சு தயங்கப் போம்அன்னம் அன்னவள் செய் கை அறைகுவாம்.
சொற்பிரிப்பு
இன்ன தன்மைய பின்னும் இயம்புவான்மன்னு காதலன் ஆகிய வள்ளல்பால்தன் அரும்பெறல் நெஞ்சு தயங்கப்போம்அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
169
கனங்கொண்ட மணிகண்டர் கழல் வணங்கிக் கணவனை முன்பெறுவாள் போலஇனங் கொண்ட சேடியர்கள் புடைசூழ எய்து பெருங் காதலோடும்தனங் கொண்டு தளர் மருங்குற் பரவையும் வன்தொண்டர் பால்தனித்துச்சென்ற மனங்கொண்டு வரும்பெரிய மயல்கொண்டு தன்மணி மாளிகையைச் சார்ந்தாள்.
சொற்பிரிப்பு
கனங்கொண்ட மணிகண்டர் கழல் வணங்கிக் கணவனை முன் பெறுவாள் போலஇனங்கொண்ட சேடியர்கள் புடைசூழ எய்து பெரும் காதலோடும்தனங்கொண்டு தளர் மருங்குல் பரவையும் வன் தொண்டர் பால் தனித்துச் சென்றமனங்கொண்டு வரும் பெரிய மயல் கொண்டு தன் மணி மாளிகையைச் சார்ந்தாள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
170
சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிதளவே ஒலிப்ப முன்னர்வேறொருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால்ஏறி மரகதத் தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலங்கொள் பொற்கால்மாறில் மலர்ச்சேக்கை மிசைமணி நிலா முன்றில் மருங்கிருந்தாள் வந்து.
சொற்பிரிப்பு
சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிதளவே ஒலிப்ப முன்னர்வேறு ஒருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால்ஏறி மரகதத் தூணத்து இலங்குமணி வேதிகையில் நலங்கொள் பொற்கால்மாறில் மலர்ச் சேக்கை மிசை மணிநிலா முன்றில் மருங்கு இருந்தாள் வந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
171
அவ்வளவில் அருகிருந்த சேடிதனை முகநோக்கி "ஆரூர் ஆண்டமைவிரவு கண்டரை நாம் வணங்கப்போம் மறுகெதிர் வந்தவரார்?" என்ன"இவ்வுலகில் அந்தணராய் இருவர் தேடொருவர் தாம் எதிர்நின்று ஆண்டசைவ முதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி" என்றாள்.
சொற்பிரிப்பு
அவ்வளவில் அருகிருந்த சேடி தனை முக நோக்கி “ஆரூர் ஆண்டமைவிரவு கண்டரை நாம் வணங்கப்போம் மறுகு எதிர் வந்தவர் ஆர்?” என்ன.“இவ்வுலகில் அந்தணராய் இருவர் தேடு ஒருவர் தாம் எதிர் நின்று ஆண்டசைவ முதல் திருத்தொண்டர்; தம்பிரான் தோழனார்; நம்பி” என்றாள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
172
என்றவுரை கேட்டலுமே "எம் பிரான் தம ரேயோ" என்னா முன்னம்வன்தொண்டர் பால் வைத்த மனக்காதல் அளவு இன்றி வளர்ந்து பொங்கநின்ற நிறை நாண்முதலாங் குணங்களுடன் நீங்க உயிர் ஒன்றும் தாங்கிமின்தயங்கு நுண் இடையாள் வெவ்வுயிர்த்து மெல்அணை மேல் வீழ்ந்த போது.
சொற்பிரிப்பு
என்ற உரை கேட்டலுமே “எம்பிரான் தமரேயோ!” என்னா முன்னம்வன்றொண்டர் பால் வைத்த மனக்காதல் அளவின்றி வளர்ந்து பொங்கநின்ற நிறை நாண் முதலாம் குணங்கள் உடன் நீங்க உயிர் ஒன்றும் தாங்கிமின் தயங்கு நுண் இடையாள் வெவ்வுயிர்த்து மெல் அணைமேல் வீழ்ந்த போது;
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
173
ஆர நறுஞ்சேறு ஆட்டி அரும் பனிநீர் நறுந்திவலை அருகு வீசிஈர இளந் தளிர்க்குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம்பேரழலின் நெய் சொரிந்தால் ஒத்தன மற்றுஅதன் மீது சமிதை என்னமாரனும் தன்பெருஞ் சிலையின் வலிகாட்டி மலர் வாளி சொரிந்தான் வந்து.
சொற்பிரிப்பு
ஆர நறும் சேறு ஆட்டி அரும் பனிநீர் நறுந் திவலை அருகு வீசிஈர இளம் தளிர்க் குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம்பேர் அழலின் நெய் சொரிந்தால் ஒத்தன; மற்று அதன் மீது சமிதை என்னமாரனும் தன் பெருஞ்சிலையின் வலி காட்டி மலர் வாளி சொரிந்தான் வந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
174
மலரமளித் துயில்ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு ஆற்றாள் மங்குல் வானில்நிலவுமிழும் தழல்ஆற்றாள் நிறை ஆற்றும் பொறை ஆற்றா நீர்மை யோடும்கலவ மயில் என எழுந்து கருங் குழலின் பரமாற்றாக் கையள் ஆகிஇலவ இதழ்ச் செந்துவர் வாய்நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள்.
சொற்பிரிப்பு
மலர் அமளித் துயில் ஆற்றாள்; வருந்தென்றல் மருங்கு ஆற்றாள்; மங்குல் வானில்நிலவுமிழும் தழல் ஆற்றாள்; நிறை ஆற்றும் பொறை ஆற்றாள்; நீர்மையோடும்கலவ மயில் என எழுந்து கருங்குழலின் பரம் ஆற்றாக் கையள் ஆகிஇலவ இதழ்ச் செந்துவர்வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
175
கந்தம் கமழ்மென் குழலீர்! இதுஎன்? கலை வாண் மதியம் கனல்வான் எனைஇச்சந்தின் தழ லைப்பனிநீர் அளவித் தடவுங் கொடியீர்! தவிரீர்! தவிரீர்!வந்துஇங்கு உலவும் நிலவும் விரையார் மலை யானிலமும் எரியாய் வருமால்அந்தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்றுடையார் அருளார்.
சொற்பிரிப்பு
“கந்தம் கமழ் மென் குழலீர்! இது என்? கலை வாண் மதியம் கனல் வான் எனை இச்சந்தின் தழலைப் பனிநீர் அளவித் தடவும் கொடியீர்! தவிரீர்! தவிரீர்!வந்திங்கு உலவும் நிலவும் விரையார் மலய அனிலமும் எரியாய் வருமால்அந்தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்று உடையார் அருளார்.”
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
176
புலரும் படியன்றி இரவென்னளவும்; பொறையும் நிறையும் இறையும் தரியா,உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ? பெருவாழ்வுரையீர்பலரும்புரியும் துயர்தான் இதுவோ படைமன் மதனார்புடை நின்று அகலார்!அலரும் நிலவும் மலரும் முடியார் அருள்பெற்று உடையார் அவரோ அறியார்.
சொற்பிரிப்பு
“புலரும் படி அன்று இரவு;என் அளவும் பொறையும் நிறையும் இறையும் தரியா;உலரும் தனமும் மனமும்; வினையேன் ஒருவேன் அளவோ? பெருவாழ்வு உரையீர்;பலரும் புரியும் துயர் தான் இதுவோ? படை மன்மதனார் புடை நின்று அகலார்!அலரும் நிலவும் மலரும் முடியார் அருள்பெற்று உடையார் அவரோ அறியார்.”
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
177
தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவா ரூரிர்! நீரே அல்லால்ஆரென் துயரம் அறிவார்? அடிகேள் அடியேன் அயரும் படியோ இதுதான்?நீரும் பிறையும் பொறிவாள் அரவின் நிரையும் நிரை வெண்டலையின் புடையேஊரும் சடையீர்! விடைமேல் வருவீர்! உமது அன்பிலர்போல் யானோ உறுவேன்?.
சொற்பிரிப்பு
“தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவாரூரீர்! நீரே அல்லால்ஆர் என் துயரம் அறிவார்? அடிகேள் அடியேன் அயரும் படியோ இது தான்நீரும் பிறையும் பொறிவாள் அரவின் நிரையும் நிரைவெண் தலையின் புடையேஊரும் சடையீர்! விடைமேல் வருவீர் உமது அன்பிலர் போல் யானோ உறுவேன்?”;
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
178
என்றின்னனவே பலவும் புகலும் இருளார் அளகச் சுருள் ஓதியையும்வன்தொண்டரையும் படிமேல் வரமுன்பு அருளுவான் அருளும் வகையார் நினைவார்சென்று உம்பர்களும் பணியும் செல்வத் திருவாரூர்வாழ் பெருமான் அடிகள்அன்றுஅங்கு அவர் மன்றலை நீர்செயும் என்றுஅடியார் அறியும்படியால் அருளி.
சொற்பிரிப்பு
என்று இன்னனவே பலவும் புகலும் இருளார் அளகச் சுருள் ஓதியையும்வன்றொண்டரையும் படிமேல் வர முன்பு அருள்வான் அருளும் வகையார் நினைவார்?சென்று உம்பர்களும் பணியும் செல்வத் திருவாரூர் வாழ் பெருமான் அடிகள்“அன்று அங்கு அவர் மன்றலை நீர் செயும்” என்று அடியார் அறியும் படியால் அருளி,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
179
மன்னும் புகழ் நாவலர்கோன் மகிழ "மங்கை பரவை தன்னைத் தந் தோம்இன்னவ்வகை நம் அடியார் அறியும் படியே உரை செய்தனம்" என்று அருளிப்பொன்னின் புரி புன் சடையன் விடையன் பொருமா கரியின் உரிவை புனைவான்அன்னந் நடையாள் பரவைக்கு "அணியது ஆரூரன் பால் மணம்" என்று அருள.
சொற்பிரிப்பு
மன்னும் புகழ் நாவலர்கோன் மகிழ “மங்கை பரவை தன்னைத் தந்தோம்;இன்னவ் வகை நம் அடியார் அறியும் படியே உரை செய்தனம்;” என்று அருளிப்பொன்னின் புரி புன்சடையன் விடையன் பொருமா கரியின் உரிவை புனைவான்அன்னந் நடையாள் பரவைக்கு “அணியது ஆருரன் பால் மணம்” என்று அருள,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
180
காமத் துயரில் கவல்வார் நெஞ்சிற் கரையில் இருளும் கங்குல் கழி போம்யாமத்து இருளும் புலரக் கதிரோன் எழு காலையில் வந்து அடியார் கூடிச்சேமத் துணையாம் அவர் பேர் அருளைத்தொழுதே திரு நாவலர் கோன் மகிழத்தாமக் குழலாள் பரவை வதுவைதகு நீர்மை யினால் நிகழச் செய்தார்.
சொற்பிரிப்பு
காமத் துயரில் கவல்வார் நெஞ்சில் கரையில் இருளும் கங்குல் கழிபோம்யாமத்து இருளும் புலரக் கதிரோன் எழு காலையில் வந்து அடியார் கூடிச்சேமத் துணையாம் அவர் பேரருளைத் தொழுதே திருநாவலர்கோன் மகிழத்தாமக் குழலாள் பரவை வதுவை தகு நீர்மையினால் நிகழச் செய்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
181
தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திரு வருளால்மின்னாருங் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல் தன்பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வாகப்பன் னாளும் பயில் யோக பரம்பரையின் விரும்பினார்.
சொற்பிரிப்பு
தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திருஅருளால்மின்னாரும் கொடிமருங்குல் பரவை எனும் மெல்லியல் தன்பொன்னாரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வாகப்பன்னாளும் பயில் யோகம் பரம்பரையின் விரும்பினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
182
தன்னை யாளுடைய பிரான் சரணர விந்த மலர்சென்னியிலும் சிந்தையிலும் மலர் வித்துத் திருப் பதிகம்பன்னு தமிழ்த்தொடை மாலைபல சாத்திப் பரவை எனும்மின்னிடையாள் உடன் கூடி விளையாடிச் செல் கின்றார்.
சொற்பிரிப்பு
தன்னை ஆளுடையபிரான் சரண அரவிந்த மலர்சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்துத் திருப்பதிகம்பன்னு தமிழ்த் தொடைமாலை பல சாத்திப் பரவை எனும்மின் இடையாள் உடன் கூடி விளையாடிச் செல்கின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
183
மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலைபோதலர் வாவி மாடு செய் குன்றின் புடையோர் தெற்றிச்சீதளத் தரளப் பந்தர்ச் செழுந் தவிசி இழிந்து தங்கள்நாதர் பூங் கோயில் நண்ணிக் கும்பிடும் விருப்பால் நம்பி.
சொற்பிரிப்பு
மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலைப்போது அலர் வாவி மாடு செய்குன்றின் புடை ஓர் தெற்றிச்சீதளத் தரளப் பந்தர்ச் செழுந்தவிசு இழிந்து தங்கள்நாதர் பூங்கோயில் நண்ணிக் கும்பிடும் விருப்பால் நம்பி,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
184
அந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர் ஆடை சாத்திச்சந் தனத்து அளறு தோய்ந்த குங்குமக் கலவை சாத்திச்சுந்தரச் சுழியஞ் சாத்திச் சுடர் மணிக் கலன்கள் சாத்திஇந்திரத் திருவின் மேலாம் எழில் மிக விளங்கித் தோன்ற.
சொற்பிரிப்பு
அந்தரத்து அமரர் போற்றும் அணிகிளர் ஆடை சாத்திச்சந்தனத்து அளறு தோய்ந்த குங்குமக் கலவைச் சாத்திச்சுந்தரச் சுழியம் சாத்திச் சுடர்மணிக் கலன்கள் சாத்திஇந்திரத் திருவின் மேலாம் எழில் மிக விளங்கித் தோன்ற,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
185
கையினிற் புனை பொற் கோலும் காதினில் இலங்கு தோடும்மெய் யினில் துவளு நூலும் நெற்றியில் விளங்கும் நீறும்ஐயனுக்கு அழகு இதாம் என்று ஆயிழை மகளிர் போற்றச்சைவ மெய்த்திருவின் கோலம் தழைப்ப வீதி யினைச் சார்ந்தார்.
சொற்பிரிப்பு
கையினில் புனை பொற்கோலும் காதினில் இலங்கு தோடும்மெய்யினில் துவளு நூலும் நெற்றியின் விளங்கு நீறும்ஐயனுக்கு அழகிதாம் என்று ஆயிழை மகளிர் போற்றச்சைவ மெய்த் திருவின் கோலம் தழைப்ப வீதியினைச் சார்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
186
நாவலூர் வந்த சைவ நற் தவக் களிறே என்றும்"மேலவர் புரங்கள் செற்ற விடை யவர்க்கு அன்பர்" என்றும்"தாவில் சீர்ப் பெருமை ஆரூர் மறையவர் தலைவ" என்றும்மேவினர் இரண்டு பாலும் வேறு வேறா யம் போற்ற.
சொற்பிரிப்பு
நாவலூர் வந்த சைவ நற்றவக் களிறே! என்றும்,மேவலர் புரங்கள் செற்ற விடையவர்க்கு அன்ப! என்றும்,தாவில் சீர்ப் பெருமை ஆரூர் மறையவர் தலைவ! என்றும்,மேவினர் இரண்டு பாலும் வேறுவேறு ஆயம் போற்ற,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
187
கைக் கடா குரங்கு கோழி சிவல் கவுதாரி பற்றிப்பக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றிச் செல்லமிக்க பூம் பிடகை கொள்வோர் விரையடைப் பையோர் சூழமைக்கருங் கண்ணி னார்கள் மறுக நீள் மறுகில் வந்தார்.
சொற்பிரிப்பு
கைக்கிடா குரங்கு கோழி சிவல் கவுதாரி பற்றிப்பக்கம் முன் போதுவார்கள் பயில்மொழி பயிற்றிச் செல்லமிக்க பூம்பிடகை கொள்வோர் விரை அடைப்பையோர் சூழமைத்தடங் கண்ணினார்கள் மறுக நீள் மறுகில் வந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
188
பொலங் கலப் புரவி பண்ணிப் போதுவார் பின்பு போதஇலங்கொளி வலயப் பொற்தோள் இடை இடை மிடைந்து தொங்கல்நலங் கிளர் நீழல் சூழ நான்மறை முனிவரோடும்அல ங்கலந் தோளினான் வந்து அணைந்தனன் அண்ணல் கோயில்.
சொற்பிரிப்பு
பொலங்கலப் புரவி பண்ணிப் போதுவார் பின்பு போதஇலங்கு ஒளி வலயப் பொன்தோள் இடைஇடை மிடைந்து தொங்கல்நலங்கிளர் நீழல் சூழ நான்மறை முனிவரோடும்அலங்கல் அம் தோளினான் வந்து அணைந்தனன் அண்ணல் கோயில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
189
கண் நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்துவிண்ணவர் ஒழிய மண் மேல்மிக்க சீர் அடியார் கூடிஎண்இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியான் ஆகப்பண்ணு நாள் எந்நாள் என்று பரமர்தாள் பரவிச் சென்றார்.
சொற்பிரிப்பு
கண் நுதல் கோயில் தேவாசிரியனாம் காவணத்துவிண்ணவர் ஒழிய மண்மேல் மிக்க சீர் அடியார் கூடிஎண்ணிலார் இருந்த போதில் “இவர்க்கு யான் அடியேன் ஆகப்பண்ணு நாள் எந்நாள்?” என்று பரமர் தாள் பரவிச் சென்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
190
அடி யவர்க்கு அடியன் ஆவேன்" என்னும் ஆதரவு கூரக்கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்துகை குவித்துப் புக்கார்கடிகொள்பூங் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காணக் காட்டும்படி எதிர் தோன்றி நிற்கப் பாதங்கள் பணிந்து பூண்டு.
சொற்பிரிப்பு
“அடியவர்க்கு அடியன் ஆவேன்” என்னும் ஆதரவு கூரக்கொடிநெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்துப் புக்கார்,கடிகொள் பூங்கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காணக் காட்டும்படி எதிர் தோன்றி நிற்கப், பாதங்கள் பணிந்து பூண்டு,
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
191
மன்பெருந் திருமா மறை வண்டு சூழ்ந்(து)அன்பர் சிந்தை அலர்ந்த செந் தாமரைநன்பெரும் பரம ஆனந்த நன் மதுஎன் தரத்தும் அளித்து எதிர் நின்றன.
சொற்பிரிப்பு
“மன் பெருந் திரு மாமறை வண்டு சூழ்ந்துஅன்பர் சிந்தை அலர்ந்த செந்தாமரைநன்பெரும் பரம ஆனந்த நன்மதுஎன் தரத்தும் அளித்து எதிர் நின்றன;”
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
192
ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின;காலன் ஆருயிர் மாளக் கறுத்தன;மாலை தாழ் குழல் மாமலையாள் செங் கைசீலம் ஆக வருடச் சிவந்தன.
சொற்பிரிப்பு
“ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின:காலன் ஆர் உயிர் மாளக் கறுத்தன;மாலை தாழ்குழல் மாமலையாள் செங்கைசீலம் ஆக வருடச் சிவந்தன,”
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
193
நீதி மாதவர் நெஞ்சில் பொலிந்தன;வேதி யாதவர் தம்மை வேதிப்பன;சோதியாய் எழுஞ் சோதியுட் சோதிய ;ஆதி மால் அயன் காணா அளவின.
சொற்பிரிப்பு
“நீதி மாதவர் நெஞ்சில் பொலிந்தன;வேதியாதவர் தம்மை வேதிப்பன;சோதியாய் எழும் சோதியுள் சோதிய;ஆதி மால் அயன் காணா அளவின;”
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
194
வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன;பேதையேன் செய் பிழை பொறுத்து ஆண்டன;ஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன;பூத நாத! நின் புண்டரீகப் பதம்.
சொற்பிரிப்பு
“வேத ஆரணம் மேற்கொண்டு இருந்தன;பேதையேன் செய் பிழை பொறுத்து ஆண்டன;ஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன;பூத நாத நின் புண்டரீகப் பதம்.”
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
195
இன்னவாறு ஏத்துநம்பிக் கேறுசேவகனார் தாமும்அந்நிலை அவர்தாம் வேண்டும் அதனையே அருளவேண்டிமன்னு சீர்அடியார் தங்கள் வழித் தொண்டை உணர நல்கிப்பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளிச் செய்வார்.
சொற்பிரிப்பு
இன்னவாறு ஏத்து நம்பிக்கு ஏறு சேவகனார் தாமும்அந்நிலை அவர் தாம் வேண்டும் அதனையே அருள வேண்டிமன்னு சீர் அடியார் தங்கள் வழித்தொண்டை உணர நல்கிப்பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளிச் செய்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
196
பெருமையால் தம்மை ஒப்பார்; பேணலால் எம்மைப் பெற்றார்ஒருமையால் உலகை வெல்வார்;ஊனம்மேல் ஒன்றும் இல்லார்;அருமையாம் நிலையில் நின்றார்;அன்பினால் இன்பம் ஆர்வார்இருமையும் கடந்து நின்றார்; இவரை நீ அடைவாய் என்று.
சொற்பிரிப்பு
“பெருமையால் தம்மை ஒப்பார்; பேணலால் எம்மைப் பெற்றார்;ஒருமையால் உலகை வெல்வார்; ஊனம் மேல் ஒன்றும் இல்லார்;அருமையாம் நிலையில் நின்றார்; அன்பினால் இன்பம் ஆர்வார்;இருமையும் கடந்து நின்றார்; இவரை நீ அடைவாய்” என்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
197
நாதனார் அருளிச் செய்ய நம்பி ஆரூரர்" நான் இங்குஏதந் தீர் நெறியைப் பெற்றேன்" என்றெதிர் வணங்கிப் போற்ற" நீதியால் அவர்கள் தம்மைப் பணிந்து நீ நிறை சொன் மாலைகோதிலா வாய் மையாலே பா" டென அண்ணல் கூற.
சொற்பிரிப்பு
நாதனார் அருளிச் செய்ய, நம்பி ஆரூரர் “நான் இங்குஏதம் தீர் நெறியைப் பெற்றேன்” என்று எதிர் வணங்கிப் போற்ற,“நீதியால் அவர்கள் தம்மைப் பணிந்து நீ நிறைசொல் மாலைகோதிலா வாய்மையாலே பாடு” என அண்ணல் கூற.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
198
தன்னை ஆளுடைய நாதன் தான் அருள் செய்யக் கேட்டுச்சென்னியால் வணங்கி நின்ற திரு முனைப் பாடி நாடர்"இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் அதற்கு யான்யார்பன்னுபா மாலை பாடும் பரிசு எனக்கு அருள்செய்" என்ன.
சொற்பிரிப்பு
தன்னை ஆளுடைய நாதன் தான் அருள் செய்யக் கேட்டுச்சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர்“இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன்? அதற்கு யான் ஆர்?பன்னு பாமாலை பாடும் பரிசு எனக்கு அருள் செய்” என்ன.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
199
தொல்லை மால் வரை பயந்த தூய்ஆள் தன் திருப் பாகன்அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு வாக்கால்" தில்லை வாழ் அந்தணர் தம் அடி யார்க்கும் அடியேன்" என்று"எல்லை யில் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி" என்றார்.
சொற்பிரிப்பு
தொல்லை மால் வரை பயந்த தூயாள் தன் திருப்பாகர்அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறையளித்த திருவாக்கால்“தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்றுஎல்லையில் வண் “புகழாரை எடுத்து இசைப்பா மொழி” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
200
மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர்சென்னியுற அடி வணங்கித் திருவருள் மேல் கொள் பொழுதில்முன்னம் மால் அயன் அறியா முதல்வர்தாம் எழுந்து அருளஅந்நிலை கண்டு அடியவர் பால் சார்வதனுக்கு அணை கின்றார்.
சொற்பிரிப்பு
மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன்தொண்டர்சென்னி உற அடி வணங்கித் திருவருள் மேற்கொள் பொழுதில்முன்ன மால் அயன்அறியா முதல்வர்தாம் எழுந்தருள,அந்நிலைகண்டு அடியவர்பால் சார்வதனுக்கு அணைகின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
201
தூரத்தே திரு க்கூட்டம் பல முறையால் தொழுது அன்புசேரத் தாழ்ந்து எழுந்து அருகுசென்று எய்தி நின்று அழியாவீரத்தார் எல்லார்க்கும் தனித் தனி வேறு அடியேன் என்றுஆர்வத்தால் திருத் தொண்டத் தொகைப் பதிகம் அருள் செய்தார்.
சொற்பிரிப்பு
தூரத்தே திருக்கூட்டம் பல முறையால் தொழுது அன்புசேரத் தாழ்ந்து எழுந்து அருகு சென்று எய்தி நின்று அழியாவீரத்தார் எல்லார்க்கும் தனித்தனி வேறு “அடியேன்” என்றுஆர்வத்தால் திருத்தொண்டத் தொகைப் பதிகம் அருள்செய்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
202
தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆகத் தமிழ் மாலைச்செம் பொருளால் திருத் தொண்டத் தொகை ஆன திருப் பதிகம்உம்பர் பிரான் தான் அருளும்உணர்வு பெற உல கேத்தஎம் பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார்.
சொற்பிரிப்பு
தம்பெருமான் கொடுத்த மொழி முதலாகத் தமிழ்மாலைச்செம்பொருளால் திருத்தொண்டத் தொகையான திருப்பதிகம்உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகு ஏத்தஎம்பெருமான் வன்றொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
203
உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்தநம்பி ஆரூரர் திருக் கூட்டத்தின் நடு வணைந்தார்தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையேஎம் பிரான் தமர்கள் திருத் தொண்டு ஏத்தல் உறுகின்றேன்.- திருமலைச் சருக்கம் முற்றிற்று -
சொற்பிரிப்பு
உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்தநம்பி ஆரூரர் திருக்கூட்டத்தின் நடுவு அணைந்தார்தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையேஎம்பிரான் தமர்கள் திருத்தொண்டு ஏத்தல் உறுகின்றேன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.