திருமுறை 12 · 12.005 · 11

திருக்கூட்டச் சிறப்பு

அருளியவர்
சேக்கிழார்

1

பூதநாயகர் புற்று இடம் கொண்டவர்ஆதிதேவர் அமர்ந்த பூங் கோயிலிற்சோதிமாமணி நீள்சுடர் முன்றில் சூழ்மூதெயில் திரு வாயில் முன்னாயது.
சொற்பிரிப்பு
பூத நாயகர் புற்றிடம் கொண்டவர்ஆதி தேவர் அமர்ந்த பூங்கோயிலில்சோதி மாமணி நீள்சுடர் முன்றில் சூழ்மூது எயில் திருவாயில் முன் ஆயது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பூவார் திசைமுகன் இந்திரன் பூமிசைமாவாழ் அகலத்து மால்முதல் வானவர்ஓவாது எவரும் நிறைந்துறைந் துள்ளதுதேவா சிரியன் எனுந் திருக்காவணம்.
சொற்பிரிப்பு
பூவார் திசைமுகன் இந்திரன் பூமிசைமாவாழ் அகலத்து மால் முதல் வானவர்ஓவாது எவரும் நிறைந்து உறைந்து உள்ளதுதேவாசிரியன் எனும் திருக்காவணம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்நிரந்த நீற்று ஒளியால்நிறை தூய்மையால்புரந்த அஞ்சு எழுத்துஓசை பொலிதலால்பரந்த ஆயிரம் பாற்கடல் போல்வது.
சொற்பிரிப்பு
அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்நிரந்த நீற்றொளியால் நிறை தூய்மையால்புரந்த அஞ்செழுத்து ஓசை பொலிதலால்பரந்த ஆயிரம் பாற்கடல் போல்வது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அகில காரணர்தாள் பணிவார்கள் தாம்அகில லோகமும் ஆளற்கு உரியர்என்றுஅகில லோகத்து உளார்கள் அடைதலின்அகில லோகமும் போல்வத தனிடை.
சொற்பிரிப்பு
அகில காரணர் தாள் பணிவார்கள் தாம்அகில லோகமும் ஆளற்கு உரியர் என்றுஅகில லோகத்து உளார்கள் அடைதலின்அகில லோகமும் போல்வது அதன் இடை
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அத்தர் வேண்டிமுன் ஆண்டவர் அன்பினால்மெய்த் தழைந்து விதிர்ப்புறு சிந்தையார்கைத் திருத்தொண்டு செய்கடப் பாட்டினார்இத்தி றத்தவர் அன்றியும் எண்ணிலார்.
சொற்பிரிப்பு
அத்தர் வேண்டி முன் ஆண்டவர் அன்பினால்மெய்த் தழைந்து விதிர்ப்புறு சிந்தையார்கைத் திருத்தொண்டு செய் கடப்பாட்டினார்இத்திறத்தவர் அன்றியும் எண் இலார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மாசிலாத மணி திகழ் மேனிமேல்பூசுநீறு போல் உள்ளும் புனிதர்கள்தேசினால் எத்தி சையும் விளக்கினார்பேசஒண் ணாப் பெருமை பிறங்கினார்.
சொற்பிரிப்பு
மாசிலாத மணி திகழ் மேனிமேல்பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள்தேசினால் எத்திசையும் விளக்கினார்பேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பூதம் ஐந்தும் நிலையிற் கலங்கினும்மாதோர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்ஓதுகாதல் உறைப்பின் நெறி நின்றார்கோதிலாத குணப் பெருங் குன்றனார்.
சொற்பிரிப்பு
பூதம் ஐந்தும் நிலையில் கலங்கினும்மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார்கோதிலாத குணப்பெரும் குன்று அனார்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்கூடும் அன்பினில் கும்பிடலே அன்றிவீடும் வேண்டா விறலின் விளங்கினார்.
சொற்பிரிப்பு
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்கூடும் அன்பினில் கும்பிடலே அன்றிவீடும் வேண்டா விறலின் விளங்கினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையேபாரம் ஈசன்பணி அலதுஒன்று இலார்ஈர அன்பினர் யாதுங்குறைவு இலார்வீரம் என்னால் விளம்பும் தகையதோ.
சொற்பிரிப்பு
ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையேபாரம் ஈசன் பணி அலது ஒன்றிலார்ஈர அன்பினர் யாதும் குறைவிலார்வீரம் என்னால் விளம்பும் தகையதோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர்தாண்டவப் பெருமான் தனித் தொண்டர்கள்நீண்ட தொல்புகழார் தம் நிலைமையைஈண்டு வாழ்த்துகேன் என்னறிந்து ஏத்துகேன்.
சொற்பிரிப்பு
வேண்டும் ஆறு விருப்புறும் வேடத்தர்தாண்டவப் பெருமான் தனித் தொண்டர்கள்நீண்ட தொல் புகழார் தம் நிலைமையைஈண்டு வாழ்த்துகேன் என் அறிந்து ஏத்துகேன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்அந்தம் இல்புகழ் ஆலால சுந்தரன்சுந்தரத் திருத்தொண்டத் தொகைத் தமிழ்வந்து பாடிய வண்ணம் உரைசெய்வாம்.
சொற்பிரிப்பு
இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்அந்தம் இல் புகழ் ஆலால சுந்தரன்சுந்தரத் திருத்தொண்டத் தொகைத் தமிழ்வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.