1
பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுள்கோட்டுயர் பனிவரைக் குன்றின் உச்சியில்சூட்டிய வளர்புலிச் சோழர் காவிரிநாட்டியல் பதனை யான்நவிலல் உற்றனன்.
சொற்பிரிப்பு
பாட்டியல் தமிழ் உரை பயின்ற எல்லையுள்கோட்டுயர் பனிவரைக் குன்றின் உச்சியில்சூட்டிய வளர்புலிச் சோழர் காவிரிநாட்டியல்பு அதனை யான் நவிலல் உற்றனன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
ஆதிமாத வமுனி அகத்தியன்தருபூதநீர்க் கமண்டலம் பொழிந்த காவிரிமாதர் மண்மடந்தை பொன்மார்பில் தாழ்ந்ததோர்ஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால்.
சொற்பிரிப்பு
ஆதி மாதவ முனி அகத்தியன் தருபூதநீர்க் கமண்டலம் பொழிந்த காவிரிமாதர் மண் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்ததோர்ஓத நீர் நித்திலத் தாமம் ஒக்குமால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
சையமால் வரைபயில் தலைமை சான்றதுசெய்யபூ மகட்கு நற்செவிலி போன்றதுவையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும்உய்யவே சுரந்தளித் தூட்டும் நீரது.
சொற்பிரிப்பு
சையமால் வரை பயில் தலைமை சான்றது;செய்ய பூமகட்கு நல் செவிலி போன்றது;வையகம் பல் உயிர் வளர்த்து நாள்தொறும்உய்யவே சுரந்து அளித்து ஊட்டும் நீரது.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
மாலின் உந்திச்சுழி மலர்தன் மேல்வரும்சால்பினால் பல்லுயிர் தரும்தன் மாண்பினால்கோலநற் குண்டிகை தாங்குங் கொள்கையால்போலும் நான்முகனையும் பொன்னி மாநதி.
சொற்பிரிப்பு
மாலின் உந்திச் சுழி மலர் தன் மேல்வரும்சால்பினால், பல்உயிர் தரு தன் மாண்பினால்,கோல நற் குண்டிகை தாங்கும் கொள்கையால்,போலும் நான்முகனையும் பொன்னி மாநதி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
திங்கள் சூடியமுடிச் சிகரத்து உச்சியில்பொங்கு வெண்தலை நுரைபொருது போதலால்எங்கள் நாயகன் முடிமிசை நின்றேயிழிகங்கையாம் பொன்னியாம் கன்னி நீத்தமே.
சொற்பிரிப்பு
திங்கள் சூடிய முடிச் சிகரத்து உச்சியில்பொங்கு வெண் தலை நுரை பொருது போதலால்எங்கள் நாயகன் முடி மிசை நின்றே இழிகங்கையாம் பொன்னியாம் கன்னி நீத்தமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
வண்ண நீள்வரை தரவந்த மேன்மையால்எண்ணில் பேர்அறங்களும் வளர்க்கும் ஈகையால்அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகிஉண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது.
சொற்பிரிப்பு
வண்ண நீள் வரை தர வந்த மேன்மையால்.எண்ணில் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால்,அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகிஉள்நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
வம்புலா மலர் நீரால் வழிபட்டுச்செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்துஎம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னிஉம்பர் நாயகர்க் கன்பரும் ஒக்குமால்.
சொற்பிரிப்பு
வம்புலா மலர் நீரால் வழிபட்டுச்செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்துஎம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம்பொன்னிஉம்பர் நாயகற்கு அன்பரும் ஒக்குமால்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
வாசநீர் குடை மங்கையர் கொங்கையில்பூசும் குங்குமமும் புனை சாந்தமும்வீசு தெண்டிரை மீதிழித்தோடு நீர்தேசுடைத் தெனினும் தெளி வில்லதே.
சொற்பிரிப்பு
வாச நீர்குடை மங்கையர் கொங்கையில்பூசு குங்குமமும் புனை சாந்தமும்வீசு தெண்திரை மீது இழிந்து ஓடுநீர்தேசு உடைத்து எனினும் தெளிவு இல்லதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
மாவிரைத் தெழுந்து ஆர்ப்ப வரைதருபூவிரித்த புது மதுப் பொங்கிடவாவியிற் பொலிநாடு வளம் தரக்காவிரிப் புனல் கால்பரந்து ஓங்குமால்.
சொற்பிரிப்பு
மா இரைத்து எழுந்து ஆர்ப்ப வரை தருபூ விரித்த புது மதுப் பொங்கிடவாவியில் பொலி நாடு வளம்தரக்காவிரிப் புனல் கால் பரந்து ஓங்குமால்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
ஒண்து றைத்தலை மாமதகூடு போய்மண்டு நீர்வய லுட்புக வந்தெதிர்கொண்ட மள்ளர் குரைத்தகை ஓசைபோய்அண்டர் வானத்தின் அப்புறஞ் சாருமால்.
சொற்பிரிப்பு
ஒண்துறைத் தலை மாமதகு ஊடுபோய்மண்டு நீர் வயல் உள் புக வந்து எதிர்கொண்ட மள்ளர் குரைத்த கை ஓசைபோய்அண்டர் வானத்தின் அப்புறம் சாருமால்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும்சீதநீர் முடி சேர்ப்பவர் செய்கையும்ஓதையார் செய் உழுநர் ஒழுக்கமும்காதல் செய்வதோர் காட்சி மலிந்ததே.
சொற்பிரிப்பு
மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும்சீத நீர் முடி சேர்ப்பவர் செய்கையும்ஓதையார் செய் உழுநர் ஒழுக்கமும்காதல் செய்வதொர் காட்சி மலிந்ததே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
உழுத சால்மிக வூறித் தெளிந்தசேறுஇழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம்தொழுது நாறு நடுவார் தொகுதியேபழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்.
சொற்பிரிப்பு
உழுத சால் மிக ஊறித் தெளிந்த சேறுஇழுது செய்யின் உள் இந்திரத் தெய்வதம்தொழுது நாறு நடுவார் தொகுதியேபழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்கண்டுழவர் பதங்காட்டக் களைகளையுங் கடைசியர்கள்தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்வண்டலையும் குழல்அசைய மடநடையின் வரம்பணைவார்.
சொற்பிரிப்பு
மண்டு புனல் பரந்த வயல் வளர்முதலின் சுருள் விரியக்கண்டு உழவர் பதம் காட்டக் களை களையும் கடைசியர்கள்தண் தரளம் சொரி பணிலம் இடறி இடை தளர்ந்து அசைவார்வண்டலையும் குழல் அசைய மடநடையின் வரம்பு அணைவார்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
செங்குவளை பறித்தணிவார் கருங்குழல்மேல் சிறைவண்டைஅங்கைமலர்க் களைக்கொடுகைத்தயல் வண்டும் வரவழைப்பார்திங்கள்நுதல் வெயர்வரும்பச் சிறுமுறுவல் தளவரும்பப்பொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவாய் மடுத்தயர்வார்.
சொற்பிரிப்பு
செங்குவளை பறித்து அணிவார் கருங்குழல் மேல் சிறை வண்டைஅங்கை மலர் களைக்கொடு உகைத்து அயல் வண்டும் வர அழைப்பார்திங்கள் நுதல் வெயர்வு அரும்பச் சிறுமுறுவல் தளவு அரும்பப்பொங்குமலர்க் கமலத்தின் புதுமது வாய் மடுத்து அயர்வார்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்னச்சுரும்பல்லி குடைநீலத் துகளல்ல பகலெல்லாம்அரும்பல்ல முலையென்ன அமுதல்ல மொழியென்னவரும்பல்லாயிரம் கடைசி மடந்தையர்கள் வயல்எல்லாம்.
சொற்பிரிப்பு
கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்னச்சுரும்பல்லி குடை நீலத் துகள் அல்ல பகல் எல்லாம்அரும்பல்ல முலை என்ன அமுதல்ல மொழி என்னவரும்பல் ஆயிரம் கடைசி மடந்தையர்கள் வயல் எல்லாம்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
கயல்பாய் பைந்தடநந்தூன் கழிந்தபெருங் கருங்குழிசிவியல்வாய் வெள்வளைத்தரள மலர்வேரி உலைப்பெய்தங்கயலாமை அடுப்பேற்றி அரக்காம்பல் நெருப்பூதும்வயல்மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பெல்லாம்.
சொற்பிரிப்பு
கயல் பாய் பைந்தடம் நந்தூன் கழிந்த பெரும் கருங்குழிசிவியல்வாய் வெள்வளைத் தரள மலர் வேரி உலைப்பெய்து அங்குஅயல் ஆமை அடுப்பு ஏற்றி அரக்காம்பல் நெருப்பு ஊதும்வயல் மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பு எல்லாம்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்புமாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளைகோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்னநாடெல்லா(ம்) நீர்நாடுதனை ஒவ்வா நலமெல்லாம்.
சொற்பிரிப்பு
காடெல்லாம் கழைக்கரும்பு கா எல்லாம் குழைக்கு அரும்புமாடெல்லாம் கருங்குவளை வயல் எல்லாம் நெருங்கு வளைகோடெல்லாம் மடஅன்னம் குளம் எல்லாம் கடல் அன்னநாடெல்லாம் நீர்நாடு தனை ஒவ்வா நலம் எல்லாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும்சோலை வாய்வண்டு இரைத்தெழு சும்மையும்ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும்வேலை ஓசையின் மிக்கு விரவுமால்.
சொற்பிரிப்பு
ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும்சோலை வாய் வண்டு இரைத்து எழு சும்மையும்ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும்வேலை ஓசையின் மிக்கு விரவுமால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில்துன்னும் மேதிபடியத் துதைந் தெழும்கன்னி வாளை கமுகின் மேற்பாய்வனமன்னு வான்மிசை வானவில் போலுமால்.
சொற்பிரிப்பு
அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில்துன்னு மேதி படியத் துதைந்து எழும்கன்னி வாளை கமுகின் மேல் பாய்வனமன்னு வான்மிசை வானவில் போலுமால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
காவினிற் பயிலுங் களிவண் டினம்வாவியிற் படிந்து உண்ணும் மலர்மதுமேவி அத்தடம் மீதெழப் பாய்கயல்தாவி அப்பொழிலிற் கனி சாடுமால்.
சொற்பிரிப்பு
காவினில் பயிலும் களி வண்டு இனம்வாவியில் படிந்து உண்ணும் மலர் மதுமேவி அத்தடம் மீது எழப் பாய்கயல்தாவி அப்பொழிலில் கனி சாடுமால்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றிமிக்குவாலிதாம் வெண்மை உண்மைக் கருவினாம் வளத்தவாகிச்சூல்முதிர் பசலை கொண்டுசுருள் விரித்தரனுக் கன்பர்ஆலின சிந்தை போலஅலர்ந்தன கதிர்களெல்லாம்.
சொற்பிரிப்பு
சாலி நீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்குவாலிதாம் வெண்மை உண்மைக் கருவினாம் வளத்த ஆகிச்சூல்முதிர் பயலை கொண்டு சுருள் விரித்து அரனுக்கு அன்பர்ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்கள் எல்லாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
பத்தியின் பாலர்ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர்தத்தமிற் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல்மொய்த்தநீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கி மற்றைவித்தகர் தன்மை போல விளைந்தன சாலியெல்லாம்.
சொற்பிரிப்பு
பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர்தத்தமில் கூடினார்கள் தலையினால் வணங்குமா போல்மொய்த்து நீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கி மற்றைவித்தகர் தன்மை போல விளைந்தன சாலி எல்லாம்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
அரிதரு செந்நெற் சூட்டின்அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்பரிவுறத் தடிந்த பன்மீன்படர்நெடுங் குன்று செய்வார்சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப்பெரும் பொருப்பு யர்ப்பார்விரிமலர்க் கற்றை வேரிபொழிந் திழி வெற்பு வைப்பார்.
சொற்பிரிப்பு
அரிதரு செந்நெல் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்;பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடும் குன்று செய்வார்;சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப்பெரும் பொருப்பு யாப்பார்;விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்மேல் வலங் கொண்டு சூழுங் காட்சியின் மிக்கதன்றே.
சொற்பிரிப்பு
சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்கால்இரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்மேல்வலம் கொண்டு சூழும் காட்சியின் மிக்கது அன்றே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
வைதெரிந் தகற்றி ஆற்றிமழைப் பெயல் மானத் தூற்றிச்செய்ய பொற்குன்றும் வேறு நவமணிச் சிலம்பும் என்னக்கைவினை மள்ளர் வானம் கரக்கவாக்கிய நெல் குன்றால்மொய்வரை உலகம் போலும் முளரிநீர் மருத வைப்பு.
சொற்பிரிப்பு
வைதெரிந்து அகற்றி ஆற்றி மழைப்பெயல் மானத் தூற்றிச்செய்யபொன் குன்றும் வேறு நவமணிச் சிலம்பும் என்னக்கைவினை மள்ளர் வானம் கரக்க ஆக்கிய நெல் குன்றால்மொய்வரை உலகம் போலும் முளரி நீர் மருத வைப்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
அரசுகொள் கடன்கள் ஆற்றி மிகுதி கொண்டறங்கள் பேணிப்பரவருங் கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின்விரவிய கிளையும் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கிவரைபுரை மாடம்நீடி மலர்ந் துள பதிகள் எங்கும்.
சொற்பிரிப்பு
அரசுகொள் கடன்கள் ஆற்றி மிகுதி கொண்டு அறங்கள் பேணிப்பரவரும் கடவுள் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின்விரவிய கிளையும் தாங்கிவிளங்கிய குடிகள் ஓங்கிவரைபுரை மாடம் நீடி மலர்ந்துள பதிகள் எங்கும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
கரும்படு களமர் ஆலைக் கமழ்நறும் புகையோ மாதர்சுரும்பெழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்விப்பெரும் பெயர்ச்சாலை தோறும் பிறங்கிய புகையோ வானின்வருங்கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும்.
சொற்பிரிப்பு
கரும்படு களமர் ஆலைக் கமழ் நறும் புகையோ மாதர்சுரும்பெழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்விப்பெரும்பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய புகையோ வானின்வரும் கருமுகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
நாளி கேரஞ் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்கோளி சாலந்த மாலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும்.
சொற்பிரிப்பு
நாளிகேரம் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்கோளி சாலம் தமாலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
சூத பாடலங்கள் எங்கும்சூழ் வழை ஞாழல் எங்கும்சாதி மாலதிகள் எங்கும் தண்தளிர் நறவம் எங்கும்மாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள் எங்கும்போதவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும்.
சொற்பிரிப்பு
சூதபா டலங்கள் எங்கும் சூழ்வழை ஞாழல் எங்கும்சாதி மாலதிகள் எங்கும் தண்தளிர் நறவம் எங்கும்மாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள் எங்கும்போதவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
மங்கல வினைகள் எங்கும் மணஞ்செய் கம்பலைகள் எங்கும்பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும்பொங்கொளிக் கலன்கள் எங்கும் புதுமலர்ப் பந்தர் எங்கும்செங்கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும்.
சொற்பிரிப்பு
மங்கல வினைகள் எங்கும் மணம்செய் கம்பலைகள் எங்கும்பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும்பொங்கொளிக் கலன்கள் எங்கும் புதுமலர்ப் பந்தர் எங்கும்செங்கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும்யாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும்யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும் எங்கும்போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர் எங்கும்.
சொற்பிரிப்பு
மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும்யாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும்யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும் எங்கும்போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர் எங்கும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
பண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி எங்கும்வண்டறை குழல்கள் எங்கும் வளர்இசைக் குழல்கள் எங்கும்தொண்டர் தம்இருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை எங்கும்தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும்.
சொற்பிரிப்பு
பண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி எங்கும்வண்டறை குழல்கள் எங்கும் வளர் இசைக் குழல்கள் எங்கும்தொண்டர் தம் இருக்கை எங்கும் சொல்லுவது இருக்கை எங்கும்தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
மாடு போதகங்கள் எங்கும் வண்டு போதகங்கள் எங்கும்பாடும் அம்மனைகள் எங்கும் பயிலும் அம்மனைகள் எங்கும்நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும்தோடு சூழ்மாலை எங்கும் துணைவர் சூழ்மாலை எங்கும்.
சொற்பிரிப்பு
மாடுபோது அகங்கள் எங்கும் வண்டு போதகங்கள் எங்கும்பாடும் அம்மனைகள் எங்கும் பயிலும் அம் மனைகள் எங்கும்நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும்தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்சாதிகள் நெறியில் தப்பாதனயரும் மனையில் தப்பாநீதிய புள்ளும் மாவும் நிலத்திருப் புள்ளு மாவும்ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வரத்தாம் அஞ்சும்.
சொற்பிரிப்பு
வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பாநீதிய புள்ளும் மாவும் நிலத்து இருப்பு உள்ளும் ஆவும்ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வரத்தாம் அஞ்சும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
நற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம்புகழ் திருநாடு என்றும்பொற்தடந் தோளால் வையம்பொதுக் கடிந்து இனிது காக்கும்கொற்றவன் அநபாயன் பொற்குடை நிழல் குளிர்வ தென்றால்மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்ப லாமோ.
சொற்பிரிப்பு
நற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம் புகழ் திருநாடு என்றும்பொற்றடம் தோளால் வையம் பொதுக் கடிந்து இனிது காக்கும்கொற்றவன் அநபாயன் பொன் குடைநிழல் குளிர்வது என்றால்மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்பல் ஆமோ.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.