1
பொன்னின் வெண்திரு நீறுபுனைந் தெனப்பன்னும் நீள்பனி மால்வரைப் பாலதுதன்னை யார்க்கும் அறிவரியான் என்றும்மன்னி வாழ் கயிலைத் திருமாமலை.
சொற்பிரிப்பு
பொன்னின் வெண் திருநீறு புனைந்து எனப்பன்னு நீள் பனி மால் வரைப் பாலதுதன்னை யார்க்கும் அறிவரியான் என்றும்மன்னி வாழ் கயிலைத் திருமாமலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
அண்ணல் வீற்றிருக்கப் பெற்ற தாதலின்நண்ணும் மூன்று உலகுந்நான் மறைகளும்எண்ணில் மாதவம் செய்ய வந்தெய்தியபுண்ணியந் திரண்டு உள்ளது போல்வது.
சொற்பிரிப்பு
அண்ணல் வீற்றிருக்கப் பெற்றது ஆதலின்நண்ணும் மூன்று உலகும் நான்மறைகளும்எண்ணில் மாதவம் செய்ய வந்து எய்தியபுண்ணியம் திரண்டு உள்ளது போல்வது.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளிஇலகு தண்தளிர் ஆகஎழுந் ததோர்உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல்மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை.
சொற்பிரிப்பு
நிலவும் எண்ணில் தலங்களும் நீடுஒளிஇலகு தண்தளிர் ஆக எழுந்ததோர்உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல்மலரும் வெண்மலர் போல்வது அம் மால்வரை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்கான வீணையின் ஓசையும் காரெதிர்தான மாக்கள் முழக்கமும் தாவில்சீர்வான துந்துபி ஆர்ப்பும் மருங்கெலாம்.
சொற்பிரிப்பு
மேன்மை நால்மறை நாதமும் விஞ்சையர்கான வீணையின் ஓசையும் கார் எதிர்தான மாக்கள் முழக்கமும் தாவில் சீர்வான துந்துபி ஆர்ப்பும் மருங்கெலாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
பனிவி சும்பில் அமரர் பணிந்துசூழ்அனித கோடி அணிமுடி மாலையும்புனித கற்பகப் பொன்னரி மாலையும்முனிவர் அஞ்சலி மாலையும் முன்னெலாம்.
சொற்பிரிப்பு
பனி விசும்பில் அமரர் பணிந்து சூழ்அனித கோடி அணிமுடி மாலையும்புனித கற்பகப் பொன் அரி மாலையும்முனிவர் அஞ்சலி மாலையும் முன்னெலாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்நாடும் ஐம்பெரும் பூதமும் நாட்டுவகோடி கோடி குறட்சிறு பூதங்கள்பாடி ஆடும் பரப்பது பாங்கெலாம்.
சொற்பிரிப்பு
நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்நாடும் ஐம்பெரும் பூதமும் நாட்டுவகோடி கோடி குறள் சிறு பூதங்கள்பாடி ஆடும் பரப்பது பாங்கெலாம்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
நாயகன் கழல் சேவிக்க நான்முகன்மேய காலம் அலாமையின் மீண்டவன்தூயமால் வரைச்சோதி யில்மூழ்கி யொன்றுஆய அன்னமும் காணா தயர்க்குமால்.
சொற்பிரிப்பு
நாயகன் கழல் சேவிக்க நான்முகன்மேய காலம் அலாமையின் மீண்டவன்தூய மால்வரைச் சோதியில் மூழ்கி ஒன்றுஆய அன்னமும் காணாது அயர்க்குமால்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
காதில் வெண்குழை யோன்கழல் தொழ நெடியோன் காலம் பார்த்திருந்தும் அறியான்சோதி வெண்கயிலைத் தாழ்வரை முழையில் துதிக் கையோன் ஊர்தியைக் கண்டுமீதெழு பண்டைச் செஞ்சுடர் இன்று வெண்சுடர் ஆனது என்ற தன்கீழ்ஆதி ஏனமதாய் இடக்க லுற்றான் என்றதனை வந்தணை தரும் கலுழன்.
சொற்பிரிப்பு
காதில்வெண் குழையோன் கழல்தொழ நெடியோன் காலம் பார்த்து இருந்ததும் அறியான்சோதிவெண் கயிலைத் தாழ்வரை முழையில் துதிக்கையோன் ஊர்தியைக் கண்டுமீதெழு பண்டைச் செஞ்சுடர் இன்று வெண்சுடர் ஆனது என்று அதன் கீழ்ஆதி ஏனம் அதாய் இடக்கல் உற்றான் என்று அதனை வந்து அணைதரும் கலுழன்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
அரம்பையர் ஆடல் முழவுடன் மருங்கில் அருவிகள் எதிர் எதிர் முழங்கவரம்பெறு காதல் மனத்துடன் தெய்வ மது மலர் இருகை யும்ஏந்திநிரந்தரம் மிடைந்த விமான சோபான நீடு யர்வழி யினால் ஏறிப்புரந்தரன் முதலாங் கடவுளர் போற்றப் பொலி வதத்திரு மலைப் புறம்பு.
சொற்பிரிப்பு
அரம்பையர் ஆடல் முழவுடன் மருங்கில் அருவிகள் எதிர்எதிர் முழங்கவரம்பெறு காதல் மனத்துடன் தெய்வ மதுமலர் இருகையும் ஏந்திநிரந்தரம் மிடைந்த விமான சோபான நீடுயர் வழியினால் ஏறிப்புரந்தரன் முதலாம் கடவுளர் போற்றப் பொலிவது அத்திருமலைப் புறம்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
வேதநான் முகன்மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்ணி லார் மற்றும்காதலால் மிடைந்த முதல்பெருந் தடையாம் கதிர் மணிக் கோபுரத் துள்ளான்பூதவேதா ளப்பெரும் கணநாதர் போற்றிடப் பொது வில் நின்று ஆடும்நாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தி எம்பெரு மான்.
சொற்பிரிப்பு
வேத நான்முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்ணிலார் மற்றும்காதலால் மிடைந்த முதல் பெரும் தடையாம் கதிர்மணிக் கோபுரத்து உள்ளார்பூத வேதாளப் பெருங்கண நாதர் போற்றிடப் பொதுவில் நின்று ஆடும்நாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தி எம் பெருமான்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
நெற்றியின் கண்ணர் நாற்பெருந் தோளர் நீறணி மேனியர் அநேகர்பெற்றமேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன் தன்அருள் பெறுவார்மற்றவர்க் கெல்லாம் தலைமையாம் பணியும் மலர்க்கையில் சுரிகையும் பிரம்பும்கற்றைவார் சடையான் அருளினால் பெற்றான் காப்பதக் கயிலைமால் வரைதான்.
சொற்பிரிப்பு
நெற்றியில் கண்ணர் நாற்பெரும் தோளர் நீறணி மேனியர் அனேகர்பெற்றமேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன் தன் அருள் பெறுவார்மற்றவர்க்கு எல்லாம் தலைமையாம் பணியும் மலர்க்கையில் சுரிகையும் பிரம்பும்கற்றை வார்சடையான் அருளினால் பெற்றான் காப்பது அக் கயிலை மால் வரை தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
கையில்மான் மழுவர் கங்கைசூழ் சடையில் கதிரிளம் பிறைநறுங் கண்ணிஐயர்வீற்றி ருக்கும் தன்மை யினாலும் அளப்பரும் பெருமை யினாலும்மெய்யொளி தழைக்கும் தூய்மை யினாலும் வென்றி வெண்குடை அநபாயன்செய்யகோல் அபயன் திருமனத் தோங்கும் திருக்கயி லாயநீள் சிலம்பு.
சொற்பிரிப்பு
கையில் மான் மழுவர் கங்கை சூழ் சடையில் கதிர் இளம் பிறை நறும் கண்ணிஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும் அளப்பரும் பெருமையினாலும்மெய் ஒளி தழைக்கும் தூய்மையினாலும் வென்றி வெண்குடை அநபாயன்செய்யகோல் அபயன் திருமனத்து ஓங்கும் திருக்கயிலாய நீள் சிலம்பு
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
அன்ன தன்திருத் தாழ்வரை யின்இடத்துஇன்ன தன்மையன் என்றறி யாச்சிவன்தன்னையே உணர்ந்து ஆர்வம்தழைக் கின்றான்உன்னரும் சீர்உப மன்னிய முனி.
சொற்பிரிப்பு
அன்னதன் திருத்தாழ்வரையின் இடத்துஇன்ன தன்மையன் என்று அறியாச் சிவன்தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான்உன்னரும் சீர் உபமன்னிய முனி
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
யாதவன் துவரைக் கிறை யாகியமாதவன் முடிமேல் அடி வைத்தவன்பூதநாதன் பொருவ ருந்தொண் டினுக்குஆதி அந்தம் இலாமை அடைந்தவன்.
சொற்பிரிப்பு
யாதவன் துவரைக்கு இறை ஆகியமாதவன் முடிமேல் அடி வைத்தவன்பூத நாதன் பொருவரும் தொண்டினுக்குஆதி அந்தம் இலாமை அடைந்தவன்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
அத்தர் தந்தருட் பாற்கடல் உண்டுசித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்பத்தராய முனிவர் பல்லா யிரர்சுத்த யோகிகள் சூழ இருந்துழி.
சொற்பிரிப்பு
அத்தர் தந்த அருட்பாற்கடல் உண்டுசித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்பத்தராய முனிவர் பல்லாயிரர்சுத்த யோகிகள் சூழ இருந்துழி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறுபொங்கு பேரொளி போன்றுமுன் தோன்றிடத்துங்க மாதவர் சூழ்ந்திருந் தாரெலாம்இங்கி தென்கொல் அதிசயம் என்றலும்.
சொற்பிரிப்பு
அங்கண் ஓர் ஒளி ஆயிர ஞாயிறுபொங்கு பேர் ஒளி போன்று முன் தோன்றிடத்துங்க மாதவர் சூழ்ந்திருந்தார் எலாம்‘இங்கிது என்கொல் அதிசயம்?’ என்றலும்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்சிந்தியா உணர்ந்தம் முனி தென்திசைவந்த நாவலர் கோன்புகழ் வன்தொண்டன்எந்தையார் அருளால் அணைவான் என.
சொற்பிரிப்பு
அந்தி வான்மதி சூடிய அண்ணல் தாள்சிந்தியா உணர்ந்து அம்முனி “தென்திசைவந்த நாவலர் கோன் புகழ் வன்தொண்டன்எந்தையார் அருளால் அணைவான்”என
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
கைகள் கூப்பித் தொழுதெழுந்து அத்திசைமெய்யில் ஆனந்த வாரி விரவிடச்செய்ய நீள்சடை மாமுனி செல்வுழிஐயம் நீங்க வினவுவோர் அந்தணர்.
சொற்பிரிப்பு
கைகள் கூப்பித் தொழுது எழுந்து அத்திசைமெய்யில் ஆனந்த வாரி விரவிடச்செய்ய நீள்சடை மாமுனி செல்வுழிஐயம் நீங்க வினவுவோர் அந்தணர்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
சம்புவின் அடித் தாமரைப் போதலால்எம்பிரான் இறைஞ் சாயிஃதென் எனத்தம்பிரா னைத்தன் உள்ளம் தழீஇயவன்நம்பிஆரூ ரன்நாம் தொழும் தன்மையான்.
சொற்பிரிப்பு
“சம்புவின் அடித்தாமரைப் போதலால்எம்பிரான் இறைஞ்சாய் இஃது என்?” எனத்“தம்பிரானைத் தன் உள்ளம் தழீஇயவன்நம்பி ஆரூரன் நாம் தொழும் தன்மையான்”
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
என்று கூற இறைஞ்சி இயம்புவார்வென்ற பேரொளி யார்செய் விழுத்தவம்நன்று கேட்க விரும்பும் நசையினோம்இன்றெ மக்குரை செய்துஅருள் என்றலும்.
சொற்பிரிப்பு
என்று கூற, இறைஞ்சி, இயம்புவார்:“வென்ற பேர் ஒளியார் செய் விழுத்தவம்நன்று கேட்க விரும்பும் நசையினோம்இன்று எமக்கு உரை செய்தருள்” என்றலும்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்வெள்ள நீர்ச்சடை மெய்ப் பொருளாகியவள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்அள்ளும் நீறும் எடுத்தணை வானுளன்.
சொற்பிரிப்பு
உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்:‘வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொருள் ஆகியவள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்அள்ளும் நீறும் எடுத்து அணைவான் உளன்.’
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
அன்னவன் பெயர் ஆலால சுந்தரன்முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்குஇன்ன ஆமெனும் நாண்மலர் கொய்திடத்துன்னி னான் நந்தவனச் சூழலில்.
சொற்பிரிப்பு
‘அன்னவன் பெயர் ஆலால சுந்தரன்முன்னம் ஆங்கு ஒரு நாள் முதல்வன் தனக்குஇன்ன ஆம் எனும் நாள்மலர் கொய்திடத்துன்னினான் நந்தன வனச் சூழலில்.’
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
அங்கு முன்னெமை ஆளுடை நாயகிகொங்கு சேர்குழற் காம்மலர் கொய்திடத்திங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார்பொங்கு கின்ற கவினுடைப் பூவைமார்.
சொற்பிரிப்பு
‘அங்கு முன்னரே ஆளுடை நாயகிகொங்கு சேர் குழற்கு ஆமலர் கொய்திடத்திங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார்பொங்குகின்ற கவின் உடைப் பூவைமார்.’
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
அந்தமில் சீர் அனிந்திதை ஆய்குழல்கந்த மாலைக் கமலினி என்பவர்கொந்து கொண்ட திருமலர் கொய்வுழிவந்து வானவர் ஈசர்அருள் என.
சொற்பிரிப்பு
‘அந்தம் இல் சீர் அனிந்திதை ஆய்குழல்கந்த மாலைக் கமலினி என்பவர்கொந்து கொண்ட திருமலர் கொய்வுழிவந்து வானவர் ஈசர் அருள் என’
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்தீதுஇலாத் திருத்தொண்டத் தொகை தரப்போதுவார் அவர்மேல் மனம் போக்கிடக்காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்.
சொற்பிரிப்பு
‘மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்தீதிலாத் திருத்தொண்டத் தொகை தரப்போதுவார் அவர் மேல் மனம் போக்கிடக்காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்.’
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
முன்னம் ஆங்கவன் மொய்ம்முகை நாண்மலர்என்னை ஆட்கொண்ட ஈசனுக் கேய்வனபன்மலர் கொய்து செல்லப் பனிமலர்அன்னம் அன்னவருங் கொண்டகன்ற பின்.
சொற்பிரிப்பு
‘முன்னம் ஆங்கு அவன் மொய்ம்முகை நாள்மலர்என்னை ஆட்கொண்ட ஈசனுக்கு ஏய்வனபன்மலர் கொய்து செல்லப் பனிமலர்அன்னம் அன்னவரும் கொண்டு அகன்றபின்.’
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியேமாதர் மேல்மனம் வைத்தனை தென்புவிமீது தோன்றிஅம் மெல்லியலார் உடன்காதல் இன்பம்கலந்து அணைவாய் என.
சொற்பிரிப்பு
‘ஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே“மாதர் மேல் மனம் வைத்தனை; தென் புவிமீது தோன்றி அம் மெல்லியலார் உடன்காதல் இன்பம் கலந்து அணைவாய்” என.’
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
கைகள் அஞ்சலி கூப்பிக் கலங்கினான்"செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன்மையல் மானுடமாய் மயங்கும் வழிஐயனே தடுத்தாண்டருள் செய்" என.
சொற்பிரிப்பு
‘கைகள் அஞ்சலி கூப்பிக் கலங்கினான்“செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன்மையல் மானுடமாய் மயங்கும் வழிஐயனே தடுத்து ஆண்டு அருள் செய்”என.’
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
அங்கணாளன் அதற்கருள் செய்த பின்நங்கை மாருடன் நம்பிமற்றத் திசைதங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாருமென்றுஅங்கவன் செயல் எல்லாம் அறைந்தனன்.
சொற்பிரிப்பு
அங்கணாளன் அதற்கு அருள் செய்த பின்நங்கைமார் உடன் நம்பி மற்று அத்திசைத்தங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாரும் என்றுஅங்கு அவன் செயல் எல்லாம் அறைந்தனன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
அந்தணா ளரும் ஆங்கது கேட்டவர்"பந்த மானிடப் பாற்படு தென்திசைஇந்த வான்திசை எட்டினும் மேற்படவந்த புண்ணியம் யாதெ"ன மாதவன்.
சொற்பிரிப்பு
அந்தணாளரும் ஆங்கு அது கேட்டவர்“பந்த மானுடப் பாற்படு தென்திசைஇந்த வான் திசை எட்டினும் மேற்படவந்த புண்ணியம் யாது”என மாதவன்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
பொருவருந் தவத்தான் புலிக் காலனாம்அருமுனி எந்தை அர்ச்சித்தும் உள்ளதுபெருமை சேர்பெரும் பற்றப்புலியூர் என்றுஒருமையாளர் வைப்பாம் பதி ஓங்குமால்.
சொற்பிரிப்பு
பொரு அரும் தவத்தான் புலிக்காலனாம்அருமுனி எந்தை அர்ச்சித்தும் உள்ளதுபெருமை சேர் பெரும் பற்றப் புலியூர் என்றுஒருமையாளர் வைப்பாம் பதி ஓங்குமால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
அத்திருப் பதியில் நமை ஆளுடைமெய்த் தவக்கொடி காண விருப்புடன்அத்தன் நீடிய அம்பலத்தாடும் மற்றுஇத்திறம் பெறலாம் திசை எத்திசை.
சொற்பிரிப்பு
அத்திருப்பதியில் நமை ஆளுடைமெய்த் தவக்கொடி காண விருப்புடன்அத்தன் நீடிய அம்பலத்து ஆடும் மற்றுஇத்திறம் பெறலாம் திசை எத்திசை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
பூதம் யாவையின் உள்ளலர் போதெனவேத மூலம் வெளிப்படு மேதினிக்காதல் மங்கை இதய கமலமாம்மாதொர் பாகனார் ஆரூர் மலர்ந்ததால்.
சொற்பிரிப்பு
பூதம் யாவையின் உள் அலர் போது எனவேத மூலம் வெளிப்படு மேதினிக்காதல் மங்கை இதய கமலமாம்மாதொர் பாகனார் ஆரூர் மலர்ந்ததால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
எம்பிராட்டி இவ்வே ழுலகு ஈன்றவள்தம்பிரானைத் தனித் தவத்தால் எய்திக்கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சிஎன்றுஉம்பர் போற்றும் பதியும் உடையது.
சொற்பிரிப்பு
எம்பிராட்டி இவ் ஏழ்உலகு ஈன்றவள்தம்பிரானைத் தனித் தவத்தால் எய்திக்கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்றுஉம்பர் போற்றும் பதியும் உடையது
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
நங்கள் நாதனாம் நந்தி தவஞ்செய்துபொங்கு நீடருள் எய்திய பொற்பதுகங்கை வேணி மலரக் கனல்மலர்செங்கை யாளர் ஐயாறும் திகழ்வது.
சொற்பிரிப்பு
நங்கள் நாதனாம் நந்தி தவம்செய்துபொங்கு நீடு அருள் எய்திய பொற்பதுகங்கை வேணி மலரக் கனல்மலர்செங்கையாளர் ஐயாறும் திகழ்வது.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
36
தேசம் எல்லாம் விளக்கிய தென்திசைஈசர் தோணி புரத்துடன் எங்கணும்பூசனைக்குப் பொருந்தும் இடம் பலபேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை.
சொற்பிரிப்பு
தேசம் எல்லாம் விளக்கிய தென்திசைஈசர் தோணிபுரத்துடன் எங்கணும்பூசனைக்குப் பொருந்தும் இடம் பலபேசில் அத்திசை ஒவ்வா பிற திசை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
37
என்று மாமுனி வன்தொண்டர் செய்கையைஅன்று சொன்ன படியால் அடியவர்தொன்று சீர்த்திருத் தொண்டத் தொகைவிரிஇன்று என்ஆதரவால் இங்கியம் புகேன்.
சொற்பிரிப்பு
என்று மாமுனி வன்தொண்டர் செய்கையைஅன்று சொன்ன படியால் அடியவர்தொன்று சீர்த் திருத்தொண்டத் தொகை விரிஇன்று என் ஆதரவால் இங்கு இயம்புகேன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
38
மற்றி தற்குப்பதிகம் வன்தொண்டர் தாம்புற்று இடத்து எம்புராணர் அருளினால்சொற்ற மெய்த்திருத் தொண்டத்தொகை எனப்பெற்ற நற்பதிகம் தொழப் பெற்றதாம்.
சொற்பிரிப்பு
மற்று இதற்குப் பதிகம் வன் தொண்டர் தாம்புற்றிடத்து எம் புராணர் அருளினால்சொற்ற மெய்த் திருத்தொண்டத் தொகை எனப்பெற்ற நல் பதிகம் தொழப் பெற்றதால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
39
அந்த மெய்ப் பதிகத்து அடியார்களைநந்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பிபுந்தி ஆரப் புகன்ற வகையினால்வந்த வாறு வழாமல் இயம்புவாம்.
சொற்பிரிப்பு
அந்த மெய்ப் பதிகத்து அடியார்களைநந்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பிபுந்தி ஆரப் புகன்ற வகையினால்வந்தவாறு வழாமல் இயம்புவாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
40
உலகம் உய்யவும் சைவம்நின்று ஓங்கவும்அலகில் சீர்நம்பி ஆரூரர் பாடியநிலவு தொண்டர்தம் கூட்டம் நிறைந்துறைகுலவு தண்புனல் நாட்டணி கூறுவாம்.
சொற்பிரிப்பு
உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும்அலகில் சீர் நம்பி ஆரூரர் பாடியநிலவு தொண்டர் தம் கூட்டம் நிறைந்து உறைகுலவு தண் புனல் நாட்டணி கூறுவாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.