திருமுறை 12 · 12.001 · 10

பாயிரம்

அருளியவர்
சேக்கிழார்

1

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;நிலவு லாவிய நீர்மலி வேணியன்,அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
சொற்பிரிப்பு
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்நிலவு உலாவிய நீர் மலி வேணியன்அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஊன் அடைந்த உடம்பின் பிறவியேதான் அடைந்த உறுதியைச் சாருமால்தேன் அடைந்த மலர்ப்பொழில் தில்லையுள்மாநடஞ் செய்வரதர் பொற்றாள் தொழ.
சொற்பிரிப்பு
ஊன் அடைந்த உடம்பின் பிறவியேதான் அடைந்த உறுதியைச் சாருமால்தேன் அடைந்த மலர்ப்பொழில் தில்லையுள்மாநடம் செய் வரதர் பொன் தாள் தொழ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்கடக் களிற்றைக் கருத்துள் இருத்துவாம்.
சொற்பிரிப்பு
எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திடத்தடக்கை ஐந்துடைத் தாழ் செவி நீள் முடிக்கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மதிவளர் சடைமுடி மன்று ளாரைமுன்துதிசெயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்பொதிநலன் நுகர்தரு புனிதர் பேரவைவிதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே.
சொற்பிரிப்பு
மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன்துதி செயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்பொதிநலன் நுகர் தரு புனிதர் பேரவைவிதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அளவி லாத பெருமை யராகியஅளவிலா அடியார் புகழ் கூறுகேன்அளவுகூட உரைப்பது அரிது ஆயினும்அளவி லாசை துரப்ப அறைகுவேன்.
சொற்பிரிப்பு
அளவிலாத பெருமையர் ஆகியஅளவிலா அடியார் புகழ் கூறுகேன்அளவு கூட உரைப்பரிது ஆயினும்அளவில் ஆசை துரப்ப அறைகுவேன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தெரிவரும் பெருமைத் திருத்தொண் டர்தம்பொருவரும் சீர்புகல லுற்றேன் முற்றப்பெருகு தெண்கடல் ஊற்றுண் பெருநசைஒருசு ணங்கனை ஒக்கும் தகைமையேன்.
சொற்பிரிப்பு
தெரிவரும் பெருமைத் திருத்தொண்டர் தம்பொருவரும் சீர் புகலல் உற்றேன் முற்றப்பெருகு தண்கடல் ஊற்று உண் பெருநசைஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

செப்ப லுற்ற பொருளின் சிறப்பினால்அப்பொ ருட்குஉரை யாவரும் கொள்வரால்இப்பொ ருட்குஎன் உரைசிறிது ஆயினும்மெய்ப்பொ ருட்குஉரியார் கொள்வர் மேன்மையால்.
சொற்பிரிப்பு
செப்பல் உற்ற பொருளின் சிறப்பினால்அப்பொருட்கு உரை யாவரும் கொள்வரால்இப்பொருட்கு என் உரை சிறிது ஆயினும்மெய்ப்பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மேயஇவ் உரை கொண்டு விரும்புமாம்சேயவன் திருப் பேரம்பலம் செய்யதூயபொன் னணிசோழன் நீடூ ழிபார்ஆயசீர் அநபா யன்அர சவை.
சொற்பிரிப்பு
மேய இவ்வுரை கொண்டு விரும்புமாம்சேயவன் திருப்பேரம்பலம் செய்யதூய பொன் அணி சோழன் நீடூழி பார்ஆய சீர் அநபாயன் அரசவை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அருளின் நீர்மைத் திருத்தொண் டறிவரும்தெருளில் நீரிதுசெப்பு தற்காம் எனின்வெருளில் மெய்ம்மொழி வான்நிழல் கூறியபொருளின் ஆகும்எனப் புகல்வாம் அன்றே.
சொற்பிரிப்பு
அருளின் நீர்மைத் திருத்தொண்டு அறிவரும்தெருளின் நீரிது செப்புதற்காம் எனின்“வெருளில் மெய்ம்மொழி வான்நிழல் கூறியபொருளின் ஆகும்” எனப் புகல்வாம் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

இங்கிதன் நாமம்கூறின் இவ்வுலகத்து முன்னாள்தங்கிருள் இரண்டின்மாக்கள் சிந்தையுள் சார்ந்துநின்றபொங்கிய இருளைஏனைப் புறஇருள் போக்குகின்றசெங்கதிர வன்போல்நீக்கும் திருத்தொண்டர் புராணம்என்பாம்.
சொற்பிரிப்பு
இங்கு இதன் நாமம் கூறின் இவ்வுலகத்து முன்னாள்தங்கு இருள் இரண்டின் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்றபொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்குகின்றசெங்கதிரவன் போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம் என்பாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.