திருமுறை 11 · 11.039 · 49

ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

அருளியவர்
நம்பியாண்டார் நம்பி

1

அலையார்ந்த கடலுலகத் தருந்திசைதோ றங்கங்கேநிலையார்ந்த பலபதிகம் நெறிமனிதர்க் கினிதியற்றிஈங்கருளி யெம்போல்வார்க் கிடர்கெடுத்தல் காரணமாய்ஓங்குபுகழ்ச் சண்பையெனும் ஒண்பதியுள் உதித்தனையே.செஞ்சடைவெண் மதியணிந்த சிவன்எந்தை திருவருளால்வஞ்சியன நுண்ணிடையாள் மலையரையன் மடப்பாவைநற்கண்ணி அளவிறந்த ஞானத்தை அமிர்தாக்கிப்பொற்கிண்ணத் தருள்புரிந்த போனகமுன் நுகர்ந்தனையே.தோடணிகா தினன்என்றும் தொல்லமரர்க் கெஞ்ஞான்றும்தேடரிய பராபரனைச் செழுமறையின் அகன்பொருளைஅந்திச்செம் மேனியனை அடையாளம் பலசொல்லிஉந்தைக்குக் காணஅரன் உவனாமென் றுரைத்தனையே.(இவை மூன்றும் நான்கடித் தாழிசை)வளமலி தமிழிசை வடகலை மறைவலமுளரிநன் மலரணி தருதிரு முடியினை.கடல்படு விடமடை கறைமணி மிடறுடைஅடல்கரி உரியனை அறிவுடை அளவினை.(இவை இரண்டும் அராகம்)கரும்பினு மிக் கினியபுகழ்க் கண்ணுதல்விண்ணவன்அடிமேல்பரம்பவிரும் புவியவர்க்குப் பத்திமையை விளைத்தனையே.பன்மறையோர் செய்தொழிலும் பரமசிவா கமவிதியும்நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே.(இவை இரண்டும் இரண்டடித் தாழிசை)அணிதவத் தவர்களுக் கதிகவித் தகனும்நீதணிமனத் தருளுடைத் தவநெறிக் கமிர்தம்நீஅமணரைக் கழுநுதிக் கணைவுறுத் தவனும்நீதமிழ்நலத் தொகையினில் தகுசுவைப் பவனும்நீ(இவை நான்கும் நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்)மறையவர்க் கொருவன் நீமருவலர்க் குருமு நீநிறைகுணத் தொருவன் நீநிகரில்உத் தமனும் நீ(இவை நான்கும் முச்சீர் ஓரடி அம்போதரங்கம்)அரியை நீ. எளியை நீ.அறவன் நீ. துறவன் நீ.பெரியை நீ உரியை நீ.பிள்ளை நீ. வள்ளல் நீ.(இவை எட்டும் இருசீர் ஓரடி அம்போதரங்கம்)எனவாங்கு (இது தனிச்சொல்)அருந்தமிழ் விரகநிற் பரசுதும் திருந்தியநிரைச்செழு மாளிகை நிலைதொறும் நிலைதொறும்உரைச்சதுர் மறையின் ஓங்கிய ஒலிசேர்சீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத்தார்கெழு தண்டலை தண்பணை தழீஇக் (5)கற்றொகு புரிசைக் காழியர் நாதநற்றொகு கீர்த்தி ஞானசம் பந்தநின்பெருங் கருணையை நீதியின்அன்புடை அடியவர்க் கருளுவோய் எனவே.(இது சுரிதகம்)
சொற்பிரிப்பு
அலை ஆர்ந்த கடல் உலகத்து அருந்திசை தோறு அங்கங்கேநிலையார்ந்த பல பதிகம் நெறி மனிதர்க்கு இனிது இயற்றிஈங்கருளி எம் போல்வார்க்கு இடர் கெடுத்தல் காரணமாய்ஓங்கு புகழ்ச் சண்பையெனும் ஒண்பதியுள் உதித்தனையே.செஞ்சடை வெண்மதி அணிந்த சிவன் எந்தை திருவருளால்வஞ்சியன நுண்ணிடையாள் மலையரையன் மடப்பாவைநற்கண்ணி அளவிறந்த ஞானத்தை அமிர்தாக்கிப்பொற்கிண்ணத்து அருள்புரிந்த போனகம் முன் நுகர்ந்தனையே.தோடணி காதினன் என்றும் தொல் அமரர்க்கு எஞ்ஞான்றும்தேட அரிய பராபரனைச் செழுமறையின் அரும்பொருளைஅந்திச் செம்மேனியனை அடையாளம் பல சொல்லிஉந்தைக்குக் காண அரன் உவனாமென்று உரைத்தனயே.வளமலி தமிழிசை வடகலை மறை வலமுளரி நன் மலரணி தரு திரு முடியினை.கடல்படு விடமடை கறைமணி மிடறுடைஅடல்கரி உரியனை அறிவுடை அளவினை.கரும்பினும் மிக்கு இனிய புகழ்க் கண்ணுதல் விண்ணவன் அடிமேல்பரம்ப விரும்புவியவர்க்குப் பத்திமையை விளைத்தனையே.பன்மறையோர் செய்தொழிலும் பரம சிவாகம விதியும்நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே.அணி தவத்தவர்களுக்கு அதிக வித்தகனும் நீ;தணிமனத்து அருளுடைத் தவநெறிக்கு அமிர்தம் நீ;அமணரைக் கழுநுதிக்கு அணைவுறுத்தவனும் நீ;தமிழ் நலத் தொகையினில்தகு சுவைப்பவனும் நீ.மறையவர்க்கு ஒருவன் நீ;மருவலர்க்கு உருமு நீ;நிறைகுணத்து ஒருவன் நீ;நிகரில் உத்தமனும் நீ.அரியை நீ; எளியை நீ;அறவன் நீ; துறவன் நீ;பெரியை நீ; உரியை நீ;பிள்ளை நீ; வள்ளல் நீ.எனஆங்கு.அருந்தமிழ் விரக நிற் பரசுதும் திருந்தியநிரைச்செழு மாளிகை நிலைதொறும் நிலைதொறும்உரைச் சதுர் மறையின் ஓங்கிய ஒலி சேர்சீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத்தார்கெழு தண்டலை தண்பணை தழீஇக் …5கற்றொகு புரிசைக் காழியர் நாதநற்றொகு கீர்த்தி ஞானசம் பந்தநின்பெரும் கருணையை நீதியின்அன்புடை அடியவர்க்கு அருளுவோய் எனவே. …9
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

எனவே இடர்அகலும் இன்பமே எய்தும்நனவே அரன்அருளை நாடும் - புனல்மேயசெங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன்கொங்கமலத் தண்காழிக் கோ.
சொற்பிரிப்பு
எனவே இடர் அகலும் இன்பமே எய்தும்நனவே அரன் அருளை நாடும் – புனல் மேயசெங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன்கொங்கு அமலத் தண் காழிக் கோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கோலப் புலமணிச் சுந்தர மாளிகைக் குந்தளவார்ஏலப் பொழிலணி சண்பையர் கோனை இருங்கடல்சூழ்ஞாலத் தணிபுகழ் ஞானசம் பந்தனை நற்றமிழேபோலப் பலபுன் கவிகொண்டு சேவடி போற்றுவனே.
சொற்பிரிப்பு
கோலப் புலமணிச் சுந்தர மாளிகைக் குந்தள வார்ஏலப் பொழிலணி சண்பையர்கோனை இருங்கடல் சூழ்ஞாலத்து அணிபுகழ் ஞானசம்பந்தனை நற்றமிழேபோலப் பல புன் கவி கொண்டு சேவடி போற்றுவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

போற்று வார்இடர் பாற்றிய புனிதன்பொழில்சு லாவிய புகலியர் பெருமான்ஏற்ற வார்புகழ் ஞானசம் பந்தன்எம்பி ரான்இருஞ் சுருதியங் கிரிவாய்ச்சேற்று வார்புனங் காவல் புரிந்தென்சிந்தை கொள்வதும் செய்தொழி லானால்மாற்றம் நீர்எமக் கின்றுரை செய்தால்வாசி யோகுற மாதுந லீரே.
சொற்பிரிப்பு
போற்றுவார் இடர் பாற்றிய புனிதன்பொழில் சுலாவிய புகலியர் பெருமான்ஏற்றவார் புகழ் ஞானசம்பந்தன்எம்பிரான் இரும் சுருதி அம் கிரி வாய்ச்சேற்றுவார் புனம் காவல் புரிந்து என்சிந்தை கொள்வதும் செய் தொழில் ஆனால்மாற்றம் நீர் எமக்கு இன்று உரை செய்தால்வாசியோ குறமாது நலீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்பம்நனிபனிமதி அணைந்த பொழில்சூழ்பொலமதில் இரும்புகலி அதிபதி விதம்பெருகுபுனிதகுணன் எந்தம் இறைவன்பலமலி தருந்தமிழின் வடகலை விடங்கன்மிகுபரசமய வென்றி அரிதன்சலமலி தருங்கமல சரண்நினைவன் என்றனதுதகுவினைகள் பொன்றும் வகையே.
சொற்பிரிப்பு
நலமலி தரும் புவனி நிறை செய்புகழ் இன்பம் நனிபனி மதி அணைந்த பொழில் சூழ்பொலமதில் இரும்புகலி அதிபதி விதம் பெருகுபுனித குணன் எந்தம் இறைவன்பலமலி தருந்தமிழின் வடகலை விடங்கன் மிகுபரசமய வென்றி அரி தன்சலமலி தருங்கமல சரண் நினைவன் என்றனதுதகுவினைகள் பொன்றும் வகையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வகைதகு முத்தமி ழாகரன் மறைபயில் திப்பிய வாசகன்வலகலை வித்தகன் வானவில் மதியணை பொற்குவை மாளிகைதிகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ்புக லிக்கர சாகியதிருவளர் விப்ரசி காமணி செழுமல யத்தமிழ்க் கேசரிமிகமத வெற்றிகொள் வாரண மிடைவரு டைக்குலம் யாளிகள்விரவிரு ளிற்றனி நீணெறி வினைதுயர் மொய்த்துள வேமணிநகையெழி லிற்குற மாதுன தருமை நினைக்கிலள் நீயிவள்நசையின் முழுப்பழி யாதல்முன் நணுகலி னிக்கிரி வாணனே.
சொற்பிரிப்பு
வகைதகு முத்தமிழாகரன் மறைபயில் திப்பிய வாசகன்வலகலை வித்தகன் வானவில் மதியணை பொற்குவை மாளிகைதிகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ் புகலிக்கு அரசாகியதிருவளர் விப்ர சிகாமணி செழுமலயத் தமிழ்க் கேசரிமிகமத வெற்றி கொள் வாரண மிடை வருடைக்குலம் யாளிகள்விரவு இருளில் தனி நீள் நெறி வினை துயர் மொய்த்துளவே மணிநகையெழிலில் குற மாது உனது அருமை நினைக்கிலள் நீயிவள்நசையின் முழுப்பழி ஆதல் முன் நணுகல் இனிக் கிரிவாணனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வாணில வும்புன லும்பயில் செஞ்சடை வண்கரு ணாகரனைமலைமா துமையொடு மிவனா வானென முன்னாளுரை செய்தோன்சேணில வும்புகழ் மாளிகை நீடிய தென்புக லிக்கரசைத்திருவா ளனையெழி லருகா சனிதனை மருவா தவர்கிளைபோல்நாணில வும்பழி யோகரு தாதய லானொரு காளையுடன்நசைதீர் நிலைகொலை புரிவே டுவர்பயில் தருகா னதர்வெயிலிற்கேணில வுங்கிளி பாவையொ டாயமும் யாயெனை யும்மொழியக்கிறியா லெனதொரு மகள்போ யுறுதுயர் கெடுவேன் அறிகிலனே.
சொற்பிரிப்பு
வாணிலவும் புனலும் பயில் செஞ்சடை வண் கருணாகரனைமலைமாது உமையொடும் இவனாவான் என முன்னாள் உரை செய்தோன்சேணிலவும் புகழ் மாளிகை நீடிய தென்புகலிக்கு அரசைத்திருவாளனை எழில் அருகாசனி தனை மருவாதவர் கிளைபோல்நாணிலவும் பழியோ கருதாது அயலான் ஒரு காளையுடன்நசை தீர் நிலை கொலை புரி வேடுவர் பயில் தருகான் அதர் வெயிலில்கேள் நிலவுங் கிளி பாவையொடு ஆயமும் யாயெனையும் மொழியக்கிறியால் எனது ஒரு மகள் போய் உறுதுயர் கெடுவேன் அறிகிலனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அறிவாகி இன்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்தஅமணான வன்குண்டர் கழுவேற முன்கண்டசெறிமாட வண்சண்பை நகராளி யென்தந்தைதிருஞான சம்பந்தன் அணிநீடு திண்குன்றில்நெறியால மண்டுன்றி முனைநாள்சி னங்கொண்டுநிறைவார் புனந்தின்று மகள்மேல் வருந்துங்கவெறியார் மதந்தங்கு கதவா ரணங்கொன்றவெகுளாத நஞ்சிந்தை விறலான் உளன்பண்டே.
சொற்பிரிப்பு
அறிவாகி இன்பஞ்செய் தமிழ் வாதில் வென்று அந்தஅமணான வன்குண்டர் கழுவேற முன்கண்டசெறிமாட வண்சண்பை நகராளி என் தந்தைதிருஞானசம்பந்தன் அணிநீடு திண் குன்றில்நெறி ஆல மண் துன்றி முனைநாள் சினங்கொண்டுநிறைவார் புனந்தின்று மகள்மேல் வரும் துங்கவெறியார் மதம் தங்கு கத வாரணங் கொன்றவெகுளாத நஞ்சிந்தை விறலான் உளன் பண்டே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பண்டமுது செய்ததுமை நங்கையருள் மேவுசிவ ஞானம்பைந்தரள நன்சிவிகை செம்பொனணி நீடுகிற தாளம்கொண்டதரன் உம்பர்பரன் எங்கள்பெரு மானருள் படைத்துக்கொடுத்ததமி ழைத்தவகு லத்தவர்க ளுக்குலகில் இன்பம்கண்டதரு கந்தர்குலம் ஒன்றிமுழு துங்கழுவில் ஏறக்கறுத்தது வினைப்பயன் மனத்திலிறை காதலது வன்றிவிண்டதுவும் வஞ்சகரை மஞ்சணவு கின்றமணி மாடவேணுபுர நாதன்மிகு வேதியர் சிகாமணி பிரானே.
சொற்பிரிப்பு
பண்டு அமுது செய்தது உமை நங்கை அருள் மேவு சிவஞானம்பைந்தரள நன்சிவிகை செம்பொன் அணி நீடுகிற தாளம்கொண்டது அரன் உம்பர் பரன் எங்கள் பெருமான் அருள் படைத்துக்கொடுத்த தமிழைத் தவ குலத்தவர்களுக்கு உலகில் இன்பம்கண்டது அருகந்தர் குலம் ஒன்றி முழுதுங் கழுவில் ஏறக்கறுத்தது வினைப்பயன் மனத்தில் இறை காதல் அதுவன்றிவிண்டதுவும் வஞ்சகரை மஞ்சு அணவுகின்ற மணி மாடவேணுபுர நாதன் மிகு வேதியர்ச் சிகாமணி பிரானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பிரானை மெய்த்திரு ஞானசம் பந்தனை மறையவர் பெருமானைக்குராம லர்ப்பொழிற் கொச்சையர் நாதனைக் குரைகழ லிணைவாழ்த்தித்தராத லத்தினில் அவனருள் நினைவொடு தளர்வுறு தமியேனுக்கிராவி னைக்கொடு வந்ததிவ் வந்திமற் றினிவிடி வறியேனே.
சொற்பிரிப்பு
பிரானை மெய்த் திருஞானசம்பந்தனை மறையவர் பெருமானைக்குரா மலர்ப் பொழில் கொச்சையர் நாதனைக் குரைகழல் இணை வாழ்த்தித்தரா தலத்தினில் அவனருள் நினைவொடு தளர்வுறு தமியேனுக்குஇராவினைக் கொடு வந்தது இவ் அந்தி மற்றினி விடிவறியேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

ஏனமு கத்தவ புத்தரை இந்திர சித்து மணம்புணர் வுற்றான்ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை வெட்டி யிசித்தனர் பட்டர்தானம் இரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவ மிப்பரி சுண்டேஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரை யுங்கார்ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன் வண்களி யேன்எளி யேனோசோனக னுக்குமெ னக்கு மெனத்தரை அம்மனை சூலது கொண்டாள்தும்புரு வாலியை வென்று நிலத்திடை நின்று துலுக்குகி றாரே.
சொற்பிரிப்பு
ஏன முகத்து அவ புத்தரை இந்திர சித்து மணம் புணர்வுற்றான்ஈழவனார் சொரி தொட்டி இனங்களை வெட்டி இசித்தனர் பட்டர்தானம் இரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்சக்கரவர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவம் இப் பரிசுண்டேஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரையுங் கார்ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன் வண்களியேன் எளியேனோசோனகனுக்கும் எனக்கும் எனத்தரை அம்மனை சூலது கொண்டாள்தும்புரு வாலியை வென்று நிலத்திடை நின்று துலுக்குகிறாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

ஆர்மலி புகலி நாதன் அருளென இரவில் வந்தென்வார்முலை பயலை தீர மணந்தவர் தணந்து போனதேரதர் அழியல் உம்மைச் செய்பிழை எம்ம தில்லைகார்திரை புரள மோதிக் கரைபொருங் கடலி னீரே.
சொற்பிரிப்பு
ஆர்மலி புகலி நாதன் அருளென இரவில் வந்து என்வார்முலை பயலை தீர மணந்தவர் தணந்து போனதேர் அதர் அழியல் உம்மைச் செய்பிழை எம்மது இல்லைகார்திரை புரள மோதிக் கரைபொரும் கடலினீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

கடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன்தடமாடு மிகுகாழி தகுபேதை அருளாமல்திடமாகில் அணிநீறு செழுமேனி முழுதாடிமடலேறி எழில்வீதி வருகாதல் ஒழியேனே.
சொற்பிரிப்பு
கடல்மேவு புவியேறு கவி நீரர் பெருமான் தன்தடமாடு மிகுகாழி தகுபேதை அருளாமல்திடமாகில் அணிநீறு செழுமேனி முழுதாடிமடலேறி எழில்வீதி வருகாதல் ஒழியேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

ஒழியா தின்புறு பொழில்சூழ் சண்பைமன்உயர்பார் துன்றிய தகுஞா னன்புகழ்எழிலா ருங்கவு ணியர்தீபன்திகழ்இணையார் செங்கரன் நிகழ்வான் விண்குயின்பொழியா நின்றன துளிதார் கொன்றைகள்புலமே துன்றின கலைமான் ஒன்றினபழிமேல் கொண்டது நுமர்தேர் அன்பொடும்அருகே வந்தது அதுகாண் மங்கையே.
சொற்பிரிப்பு
ஒழியாது இன்புறு பொழில் சூழ் சண்பை மன்உயர் பார் துன்றிய தகு ஞானன் புகழ்எழிலாருங் கவுணியர் தீபன் திகழ்இணையார் செங்கரன் நிகழ்வான் விண் குயின்பொழியா நின்றன துளிதார் கொன்றைகள்புலமே துன்றின கலைமான் ஒன்றினபழிமேல் கொண்டது நமர் தேர் அன்பொடும்அருகே வந்தது அது காண் மங்கையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

மங்கை யிடத்தர னைக்கவி நீரெதிர் ஓட மதித்தருள்செய்தங்கு புகழ்ச்சதுர் மாமறை நாவளர் சைவசி காமணிதன்துங்க மதிற்பிர மாபுரம் மேவிய சூழ்பொழில் நின்றொளிர்மென்கொங்கை யுடைக்கொடி ஏரிடை யாள்குடி கொண்டனள் எம்மனமே.
சொற்பிரிப்பு
மங்கை இடத்து அரனைக் கவி நீர் எதிர் ஓட மதித்தருள் செய்தங்கு புகழ்ச் சதுர் மாமறை நாவளர் சைவசிகாமணி தன்துங்க மதில் பிரமாபுரம் மேவிய சூழ்பொழில் நின்றொளிர் மென்கொங்கை உடைக்கொடி ஏரிடையாள் குடி கொண்டனள் எம்மனமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

மனங்கொண்டு நிறைகொண்டு கலையுங் கொண்டுமணிநிறமும் இவள்செங்கை வளையுங் கொண்டதனங்கொண்ட பெருஞ்செல்வம் திகழும் கீர்த்திச்சண்பையர்கோன் திருஞான சம்பந் தற்குநனங்கொண்டு மெய்கொண்டு பயலை கொண்டேநன்னுதலாள் அயர்கின்றாள் நடுவே நின்றும்இனங்கொண்டு நகைகொண்டு மடவீர் வாளாஎன்செயநீர் அலர்தூற்றி எழுகின் றீரே.
சொற்பிரிப்பு
மனங்கொண்டு நிறைகொண்டு கலையும் கொண்டுமணிநிறமும் இவள் செங்கை வளையும் கொண்டதனங்கொண்ட பெருஞ்செல்வம் திகழும் கீர்த்திச்சண்பையர்கோன் திருஞானசம்பந்தற்குநனங்கொண்டு மெய்கொண்டு பயலை கொண்டேநன்னுதலாள் அயர்கின்றாள் நடுவே நின்றும்இனங்கொண்டு நகைகொண்டு மடவீர் வாளாஎன்செய நீர் அலர்தூற்றி எழுகின்றீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

எழுகுல வெற்பிவை மிடறில் அடக்குவன்எறிகட லிற்புனல் குளறிவ யிற்றினில்முழுதும் ஒளித்திர வியையிந் நிலத்திடைமுடுகுவன் இப்பொழு திவையல விச்சைகள்கழுமல நற்பதி அதிப தமிழ்க்கடல்கவுணிய நற்குல திலகன் இணைக்கழல்தொழுது வழுத்திய பிறரொரு வர்க்குறுதுயர்வரு விப்பனி தரியதோர் விச்சையே.
சொற்பிரிப்பு
எழு குல வெற்பிவை மிடறில் அடக்குவன்எறிகடலில் புனல் குளறி வயிற்றினில்முழுதும் ஒளித்து இரவியை இந்நிலத்திடைமுடுகுவன் இப்பொழுது இவையல விச்சைகள்கழுமல நற்பதி அதிப தமிழ்க்கடல்கவுணிய நற்குல திலகன் இணைக்கழல்தொழுது வழுத்திய பிறரொருவர்க்கு உறுதுயர் வருவிப்பன் இது அரியதோர் விச்சையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

சயமி குத்தரு கரைமு ருக்கிய தமிழ்ப யிற்றிய நாவன்வியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள் போதன்கயலு டைப்புனல் வயல்வ ளத்தகு கழும லப்பதி நாதன்இயலு டைக்கழல் தொழநி னைப்பவ ரிருவி னைத்துயர் போமே.
சொற்பிரிப்பு
சயமிகுத்து அருகரை முருக்கிய தமிழ் பயிற்றிய நாவன்வியலியல் திருமருகலில் கொடு விடம் அழித்து அருள் போதன்கயலுடைப் புனல் வயல் வளத்தகு கழுமலப் பதி நாதன்இயலுடைக் கழல் தொழ நினைப்பவர் இருவினைத் துயர் போமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

மேதகுந் திகழ்பூக நாகசண் பகசூதவேரிவண் டறைசோலை ஆலைதுன் றியகாழிநாதன்அந் தணர்கோனென் ஆனைவண் புகழாளிஞானசுந் தரன்மேவு தார்நினைந் தயர்வேனைநீதியன்றன பேசும் யாயுமிந் துவும்வாசம்நீடுதென் றலும்வீணை ஓசையும் கரைசேரமோதுதெண் திரைசேவல் சேரும்அன் றிலும்வேயும்மூடுதண் பனிவாடை கூடிவன் பகையாமே.
சொற்பிரிப்பு
மேதகும் திகழ் பூக நாக சண்பக சூதவேரி வண்டறை சோலை ஆலை துன்றிய காழிநாதன் அந்தணர் கோன் என்ஆனை வண் புகழாளிஞான சுந்தரன் மேவு தார் நினைந்து அயர்வேனைநீதியன்றன பேசும் யாயும் இந்துவும் வாசம்நீடு தென்றலும் வீணை ஓசையும் கரைசேரமோது தெண் திரை சேவல் சேரும் அன்றிலும் வேயும்மூடு தண் பனி வாடை கூடி வன் பகையாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

வன்பகை யாமக் குண்டரை வென்றோய்மாமலர் வாளிப் பொருமத வேளைத்தன்பகை யாகச் சிந்தையுள் நையும்தையலை உய்யக் கொண்டருள் செய்யாய்நின்புகழ் பாடிக் கண்பனி சோராநின்றெழில் ஞானா என்றகம் நெக்கிட்டன்பக லாமெய்ச் சிந்தையர் இன்பாஅம்பொழில் மாடச் சண்பையர் கோவே.
சொற்பிரிப்பு
வன்பகையாம் அக் குண்டரை வென்றோய்மாமலர் வாளிப் பொரு மதவேளைத்தன் பகையாகச் சிந்தையுள் நையும்தையலை உய்யக் கொண்டருள் செய்யாய்நின் புகழ் பாடிக் கண்பனி சோராநின்றெழில் ஞானாஎன்று அகம் நெக்கிட்டுஅன்பகலா மெய்ச் சிந்தையர் இன்பாஅம்பொழில் மாடச் சண்பையர் கோவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

கோவின்திரு முகமீதொடு வருதூதுவன் ஈரகுளிர்பைம்பொழில் வளநாடெழில் நிதியம்பரி மீசம்மாவீரியர் இவர்தங்கையென் மகுடன்திறம் அமணமறவெங்குல மறிகின்றிலன் பழியச்சத வரசன்பாவேறிய மதுரத்தமிழ் விரகன்புக லியர்மன்பயில்வண்புக ழருகாசனி பணியன்றெனின் நமர்காள்தூவேரியை மடுமின்துடி யடிமின்படை யெழுமின்தொகுசேனையும் அவனும்பட மலையும்பரி சினியே.
சொற்பிரிப்பு
கோவின் திருமுக மீதொடு வரு தூதுவன் ஈரகுளிர்பைம் பொழில் வளநாடு எழில் நிதியம் பரிசம் மீமா வீரியர் இவர் தங்கையென் மகுடன் திறம் அம் மணமற வெங்குலம் அறிகின்றிலன் பழி அச்சத அரசன்பாவேறிய மதுரத்தமிழ் விரகன் புகலியர் மன்பயில் வண்புகழ் அருகாசனி பணியன்று எனின் நமர்காள்தூ ஏரியை மடுமின் துடி யடிமின் படையெழுமின்தொகுசேனையும் அவனும் பட மலையும் பரிசு இனியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

இனியின் றொழிமினிவ் வெறியும் மறியடுதொழிலும் மிடுகுர வையுமெல்லாம்நனிசிந் தையி னிவள் மிகவன் புறுவதொர்நசையுண் டதுநரை முதுபெண்டீர்புனிதன் புகலியர் அதிபன் புனைதமிழ்விரகன் புயமுறும் அரவிந்தம்பனிமென் குழலியை அணிமின் துயரொடுமயலுங் கெடுவது சரதம்மே.
சொற்பிரிப்பு
இனியின்று ஒழிமின் இவ் வெறியும் மறிபடுதொழிலும் இடு குரவையும் எல்லாம்நனி சிந்தை இனிவள் மிகவன்பு உறுவதொர்நசையுண்டது நரை முது பெண்டீர்புனிதன் புகலியர் அதிபன் புனைதமிழ்விரகன் புயமுறும் அரவிந்தம்பனிமென் குழலியை அணிமின் துயரொடுமயலும் கெடுவது சரதம்மே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

சரத மணமலி பரிசம் வருவனதளர்வில் புகலியர் அதிபன் நதிதருவரதன் அணிதிகழ் விரகன் மிகுபுகழ்மருவு சுருதிநன் மலையின் அமர்தருவிரத முடையைநின டையின் அவள்மனம்விரைசெய் குழலியை அணைவ தரிதெனஇரதம் அழிதர வருதல் முனம்இனிஎளிய தொருவகை கருது மலையனே.
சொற்பிரிப்பு
சரத மணமலி பரிசம் வருவனதளர்வில் புகலியர் அதிபன் நதிதருவரதன் அணிதமிழ் விரகன் மிகுபுகழ்மருவு சுருதி நன் மலையின் அமர்தருவிரத முடையை நின் இடையின் அவள் மனம்விரைசெய் குழலியை அணைவது அரிதெனஇரதம் அழிதர வருதல் முனம் இனிஎளியதொரு வகை கருது மலையனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

அயன்நெடிய மாலும்அவ ரறிவரிய தாணுவரன்அருளினொடு நீடவனி இடர்முழுது போயகலவயலணிதென் வீழிமிழ லையின்நிலவு காசின்மலிமழைபொழியு மானகுண மதுரன்மதி தோய்கனகசெயநிலவு மாடமதில் புடைதழுவு வாசமலிசெறிபொழில்சு லாவிவளர் சிரபுரசு ரேசன்முதிர்பயன்நிலவு ஞானதமிழ் விரகன்மறை ஞானமுணர்பரமகுரு நாதன்மிகு பரசமய கோளரியே.
சொற்பிரிப்பு
அயன் நெடிய மாலும் அவர் அறிவரிய தாணு அரன்அருளினொடு நீடு அவனி இடர் முழுது போயகலவயலணி தென் வீழிமிழலையின் நிலவு காசின் மலிமழைபொழியும் ஆன குண மதுரன் மதி தோய் கனகசெய நிலவு மாட மதில் புடை தழுவு வாசமலிசெறிபொழில் சுலாவி வளர் சிரபுர சுரேசன் முதிர்பயன் நிலவு ஞான தமிழ் விரகன் மறை ஞானம் உணர்பரமகுரு நாதன் மிகு பரசமய கோளரியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

அரியாருங் கிரிநெறிஎங் ஙனம்நீர் வந்தீர்அழகிதினிப் பயமில்லை அந்திக் கப்பால்தெரியாபுன் சிறுநெறிகள் எந்தம் வாழ்விச்சிறுகுடியின் றிரவிங்கே சிரமந் தீர்ந்திச்சுரியார்மென் குழலியொடும் விடியச் சென்றுதொகுபுகழ்சேர் திருஞான சம்பந் தன்றன்வரியாரும் பொழிலுமெழில் மதிலும் தோற்றும்வயற்புகலிப் பதியினிது மருவ லாமே.
சொற்பிரிப்பு
அரி ஆரும் கிரி நெறி எங்ஙனம் நீர் வந்தீர்அழகிது இனிப் பயமில்லை அந்திக்கு அப்பால்தெரியா புன் சிறுநெறிகள் எந்தம் வாழ்விச்சிறுகுடியின் இரவு இங்கே சிரமம் தீர்ந்து இச்சுரியார் மென் குழலியொடும் விடியச் சென்றுதொகுபுகழ் சேர் திருஞான சம்பந்தன் தன்வரியாரும் பொழிலும் எழில் மதிலும் தோற்றும்வயற்புகலிப் பதி இனிது மருவலாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

ஆமாண்பொன் கூட்டகத்த அஞ்சொலிளம் பைங்கிளியேபாமாலை யாழ்முரியப் பாணழியப் பண்டருள்செய்மாமான சுந்தரன்வண் சம்பந்த மாமுனியெம்கோமான்தன் புகழொருகால் இன்புறநீ கூறாயேகொச்சையர்கோன் தன்புகழ்யான் இன்புறநீ கூறாயே.
சொற்பிரிப்பு
ஆம் மாண் பொன் கூட்டகத்த அஞ்சொல் இளம் பைங்கிளியேபாமாலை யாழ்முரியப் பாணழியப் பண்டருள் செய்மாமான சுந்தரன் வண் சம்பந்த மாமுனி எம்கோமான் தன் புகழொருகால் இன்புற நீ கூறாயேகொச்சையர் கோன் தன் புகழ் யான் இன்புற நீ கூறாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

கூற தாகமெய் யடிமை தான்எனை உடைய கொச்சையர் அதிபதிவீற தார்தமிழ் விரகன் மேதகு புகழி னான்இவன் மிகுவனச்சேற தார்தரு திரள்க ளைக்கன செழுமு லைக்குரி யவர்சினத்தேறு தானிது தழுவி னாரென இடிகொள் மாமுர சதிருமே.
சொற்பிரிப்பு
கூறதாக மெய் அடிமை தான் எனை உடைய கொச்சையர் அதிபதிவீறதார் தமிழ் விரகன் மேதகு புகழினான் இவன் மிகுவனச்சேறதார் தரு திரள்களைக் கன செழுமுலைக்கு உரியவர் சினத்துஏறு தான் இது தழுவினார் என இடிகொள் மாமுரசு அதிருமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

சதுரன் புகலியர் அதிபன்கூர்தவசுந் தரகவு ணியர்தஞ்சீர்முதல்வன் புகலியர் அதிபன்தாள்முறைவந் தடையலர் நகரம்போல்எதிர்வந்தனர்விறல் கெடவெம்போர்எரிவெங் கணைசொரி புரிமின்கார்அதிர்கின் றனஇது பருவஞ்சேரலர்தம் பதிமதில் இடிமின்னே.
சொற்பிரிப்பு
சதுரன் புகலியர் அதிபன் கூர் தவ சுந்தர கவுணியர் தஞ்சீர்முதல்வன் புகலியர் அதிபன் தாள் முறை வந்து அடையலர் நகரம் போல்எதிர்வந்தனர் விறல் கெட வெம்போர் எரி வெங்கணை சொரி புரிமின் கார்அதிர்கின்றன இது பருவஞ் சேரலர் தம் பதி மதில் இடிமின்னே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

மின்னு மாகத் தெழிலி யுஞ்சேர் மிகுபொன் மாடப் புகலி நாதன்துன்னு ஞானத் தெம்பி ரான்மெய்த் தொகைசெய் பாடற் பதிகம் அன்னாள்பொன்னு மாநல் தரள முந்தன் பொருக யற்கண் தனம்நி றைந்தாள்இன்னும் ஏகிப் பொருள்ப டைப்பான் எங்ஙனேநான் எண்ணு மாறே.
சொற்பிரிப்பு
மின்னும் ஆகத்து எழிலியும் சேர்மிகு பொன் மாடப் புகலி நாதன்துன்னு ஞானத்து எம்பிரான் மெய்த் தொகை செய் பாடல் பதிகம் அன்னாள்பொன்னு மாநல் தரள முந்தன் பொரு கயல் கண் தனம் நிறைந்தாள்இன்னும் ஏகிப் பொருள் படைப்பான் எங்ஙனே நான் எண்ணுமாறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

மாறி லாத பொடிநீ றேறு கோல வடிவும்வம்பு பம்பு குழலும் துங்க கொங்கை இணையும்ஊறி யேறு பதிகத் தோசை நேச நுகர்வும்ஒத்து கித்து நடையும் சித்த பத்தி மிகையும்வீற தேறும் வயல்சூழ் காழி ஞான பெருமான்வென்றி துன்று கழலின் ஒன்றி நின்ற பணியும்தேறல் போலும் மொழியும் சேல்கள் போலும் விழியும்சிந்தை கொண்ட பரிசும் நன்றி மங்கை தவமே.
சொற்பிரிப்பு
மாறிலாத பொடி நீறேறு கோல வடிவும்வம்பு பம்பு குழலும் துங்க கொங்கை இணையும்ஊறியேறு பதிகத்து ஓசை நேச நுகர்வும்ஒத்துகித்து நடையும் சித்த பத்தி மிகையும்வீற தேறும் வயல் சூழ் காழி ஞான பெருமான்வென்றி துன்று கழலின் ஒன்றி நின்ற பணியும்தேறல் போலும் மொழியும் சேல்கள் போலும் விழியும்சிந்தை கொண்ட பரிசும் நன்றி மங்கை தவமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

கைதவத்தால் என்னிடைக்கு நீவந்ததறியேனோ கலதிப் பாணாமெய்தவத்தார் உயிரனைய மிகுசைவசிகாமணியை வேணுக் கோனைச்செய்தவத்தால் விதிவாய்ந்த செழுமுலையார்அவனுடைய செம்பொன் திண்டோள்எய்தவத்தால் விளிவெனக்கென் யாதுக்குநீபலபொய் இசைக்கின் றாயே.
சொற்பிரிப்பு
கைதவத்தால் என்னிடைக்கு நீ வந்தது அறியேனோ கலதிப் பாணாமெய்தவத்தார் உயிரனைய மிகு சைவ சிகாமணியை வேணுக் கோனைச்செய்தவத்தால் விதி வாய்ந்த செழுமுலையார் அவனுடைய செம்பொன் திண்தோள்எய்தவத்தால் விளிவெனக்கு என் யாதுக்கு நீ பல பொய் இசைக்கின்றாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

இசையை முகந்தெழு மிடறுமி திங்கிவன்இடுகர ணங்களின் இயல்பும் வளம்பொலிதிசைதிசை துன்றிய பொழில்சுல வுந்திகழ்சிரிபுர மன்றகு தமிழ்விர கன்பலநசைமிகு வண்புகழ் பயிலு மதங்கிதன்நளிர்முலை செங்கயல் விழிநகை கண்டபின்வசைதகு மென்குல மவைமுழு துங்கொளமதிவளர் சிந்தனை மயல்வரு கின்றதே.
சொற்பிரிப்பு
இசையை முகந்தெழு மிடறும் இது இங்கிவன்இடு கரணங்களின் இயல்பும் வளம்பொலிதிசைதிசை துன்றிய பொழில் சுலவும் திகழ்சிரபுரமன் தகு தமிழ்விரகன் பலநசைமிகு வண்புகழ் பயிலு மதங்கி தன்நளிர்முலை செங்கயல் விழிநகை கண்டபின்வசைதகு மென்குலம் அவை முழுதுங் கொளமதிவளர் சிந்தனை மயல் வருகின்றதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

வருகின் றனன்என் றனதுள் ளமும்நின்வசமே நிறுவிக் குறைகொண் டுதணித்தருகும் புனல்வெஞ் சுரம்யான் அமரும்மதுநீ இறையுன் னினையா தெனின்முன்கருகும் புயல்சேர் மதில்வண் புகலிக்கவிஞன் பயில்செந் தமிழா கரன்மெய்ப்பெருகுந் திருவார் அருள்பே ணலர்போற்பிழைசெய் தனைவந் ததர்பெண் கொடியே.
சொற்பிரிப்பு
வருகின்றனன் என்று எனது உள்ளமும் நின்வசமே நிறுவிக் குறைகொண்டு தணித்தருகும் புனல் வெஞ் சுரம் யான் அமரும்மது நீ இறையுன் இனையாது எனின்முன்கருகும் புயல்சேர் மதில் வண் புகலிக்கவிஞன் பயில் செந்தமிழாகரன் மெய்ப்பெருகும் திருவார் அருள் பேணலர் போற்பிழைசெய்தனை வந் ததர் பெண் கொடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

கொடிநீடு விடையுடைய பெருமானை அடிபரவுகுணமேதை கவுணியர்கள் குலதீப சுபசரிதன்அடியேன திடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன்அணியான புகலிநகர் அணையான கனைகடலின்முடிநீடு பெருவலைகொ டலையூடு புகுவன்நுமர்முறையேவு பணிபுரிவன் அணிதோணி புனைவனவைபடியாரும் நிகரரிய வரியாரும் மதர்நயனிபணைவார்மென் முலைநுளையர் மடமாதுன் அருள்பெறினே.
சொற்பிரிப்பு
கொடிநீடு விடையுடைய பெருமானை அடிபரவுகுணமேதை கவுணியர்கள் குலதீப சுபசரிதன்அடியேன இடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன்அணியான புகலிநகர் அணையான கனை கடலின்முடிநீடு பெருவலை கொடலையூடு புகுவன் நுமர்முறை ஏவு பணிபுரிவன் அணிதோணி புனைவன் அவைபடியாரும் நிகரரிய வரியாரும் மதர்நயனிபணைவார் மென்முலை நுளையர் மடமாது உன் அருள்பெறினே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

பெறுபயன் மிகப்புவியுள் அருளுவன பிற்றைமுறைபெருநெறி அளிப்பனபல் பிறவியை ஒழிச்சுவனஉறுதுயர் அழிப்பனமுன் உமைதிரு வருட்பெருகஉடையன நதிப்புனலின் எதிர்பஃறி உய்த்தனபுன்நறுமுறு குறைச்சமணை நிரைகழு நிறுத்தியனநனிகத வடைத்தனது னருவிடம் அகற்றியனதுறுபொழில் மதிற்புறவ முதுபதிமன் ஒப்பரியதொழில்பல மிகுத்ததமிழ் விரகன கவித்தொகையே.
சொற்பிரிப்பு
பெறுபயன் மிகப்புவியுள் அருளுவன பிற்றைமுறைபெருநெறி அளிப்பன பல் பிறவியை ஒழிச்சுவனஉறுதுயர் அழிப்பன முன் உமை திருவருள் பெருகஉடையன நதிப்புனலின் எதிர்பஃறி உய்த்தன புன்நறுமுறு குறைச் சமணை நிரைகழு நிறுத்தியனநனி கதவடைத் தனது அருவிடம் அகற்றியனதுறுபொழில் மதிற்புறவ முதுபதி மன் ஒப்பரியதொழில் பல மிகுத்த தமிழ் விரகன கவித்தொகையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

தொகுவார் பொழில்சுற் றியவான் மதிதோ யுமதிற் கனமார்தொலையா ததிருப் பொழில்மா ளிகைமா டநெருக் கியசீர்மிருகா ழிமன்முத் தமிழா கரன்மே தகுபொற் புனைதார்விரையார் கமலக் கழலே துணையா கநினைப் பவர்தாம்மகரா கரநித் திலநீர் நிலையார் புவியுத் தமராய்வரலா றுபிழைப் பினினூ ழியிலக்................ கிதமாதகுவாழ் வுநிலைத் தெழில்சே ரறமா னபயிற் றுவர்மாசதுரால் வினைசெற் றதன்மே லணுகார் பிறவிக் கடலே.
சொற்பிரிப்பு
தொகுவார் பொழில் சுற்றிய வான் மதிதோயும் மதிற் கனமார்தொலையாத திருப்பொழில் மாளிகை மாட நெருக்கிய சீர்மிகுகாழி மன் முத் தமிழாகரன் மேதகு பொற் புனைதார்விரையார் கமலக் கழலே துணையாக நினைப்பவர் தாம்மகராகர நித்தில நீர் நிலையார் புவி உத்தமராய்வரலாறு பிழைப்பினின் ஊழி இலக்…—…—…கிதமாதகுவாழ்வு நிலைத்து எழில்சேர் அறமான பயிற்றுவர் மாசதுரால் வினை செற்ற தன் மேல் அணுகார் பிறவிக் கடலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

கருமங் கேண்மதி கருமங் கேண்மதிதுருமதிப் பாண கருமங் கேண்மதிநிரம்பிய பாடல் நின்கண் ணோடும்அரும்பசி நலிய அலக்கணுற் றிளைத்துக்காந்திய உதரக் கனல்தழைத் தெழுதலின் (5)தேய்ந்துடல் வற்றிச் சின்னரம் பெழுந்தேஇறுகுபு சுள்ளி இயற்றிய குரம்பைஉறுசெறித் தனைய உருவுகொண் டுள்வளைஇஇன்னிசை நல்லி யாழ்சுமந் தன்னம்மன்னிய வளநகர் மனைக்கடை தோறும் (10)சென்றுழிச் சென்றுழிச் சில்பலி பெறாதுநின்றுழி நிலாவு வன்றுயர் போயொழிந்தின்புற் றிருநிதி எய்தும் அதுநுனதுள்ளத் துள்ள தாயின் மதுமலர்வண்டறை சோலை வளவயல் அகவ (15)ஒண்திறற் கோண்மீன் உலாவு குண்டகம்உயர்தரு வரையில் இயல்தரு பதணத்துக்கடுநுதிக் கழுக்கடை மிடைதரு வேலிக்கனகப் பருமுரட் கணையக் கபாடவிலையக் கோபுர விளங்கெழில் வாயில் (20)நெகிழ்ச்சியில் வகுத்துத் திகழ்ச்சியில் ஓங்கும்மஞ்சணை இஞ்சி வண்கொடி மிடைந்தசெஞ்சுடர்க் கனகத் திகழ்சிலம் பனையமாளிகை ஓளிச் சூளிகை வளாகத்தணிவுடைப் பலபட மணிதுடைத் தழுத்திய (25)நல்லொளி பரந்து நயந்திகழ் இந்திரவில்லொளி பலபல விசும்பிடைக் காட்டமன்னிய செல்வத்துத் துன்னிய பெருமைச்செம்மலர் மாது சேர்ந்திறை பிரியாக்கழுமல நாதன் கவுணியர் குலபதி (30)தண்டமிழ் விரகன் சைவ சிகாமணிபண்டிதர் இன்பன் பரசமய கோளரிஎன்புனை தமிழ்கொண் டிரங்கிஎன் னுள்ளத்தன்பினை அருளிய ஆண்டகை தன்புகழ்குறைவறுத் துள்கி நிறைகடை குறுகி (35)நாப்பொலி நல்லிசை பாடமாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே.
சொற்பிரிப்பு
கருமம் கேள் மதி கருமம் கேள் மதிதுருமதிப் பாண கருமம் கேள் மதிநிரம்பிய பாடல் நின் கண்ணோடும்அரும்பசி நலிய அலக்கண் உற்று இளைத்துக்காந்திய உதரக் கனல் தழைத்து எழுதலின் …5தேய்ந்துடல் வற்றிச் சில் நரம்பு எழுந்தேஇறுகுபு சுள்ளி இயற்றிய குரம்பைஉறுசெறித்து அனைய உருவுகொண்டு உள்வளைஇஇன்னிசை நல்லி யாழ் சுமந்து அன்னம்மன்னிய வளநகர் மனைக்கடை தோறும் …10சென்றுழிச் சென்றுழிச் சில்பலி பெறாதுநின்றுழி நிலாவு வன் துயர் போயொழிந்துஇன்புற்று இருநிதி எய்தும் அது நுனதுள்ளத்து உள்ள தாயின் மதுமலர்வண்டறை சோலை வளவயல் அகவ …15ஒண்திறற் கோண்மீன் உலாவு குண்டகம்உயர்தரு வரையில் இயல்தரு பதணத்துக்கடுநுதிக் கழுக்கடை மிடைதரு வேலிக்கனகப் பருமுரன் கணையக் கபாடவிலையக் கோபுர விளங்கெழில் வாயில் …20நெகிழ்ச்சியில் வகுத்துத் திகழ்ச்சியில் ஓங்கும்மஞ்சணை இஞ்சி வண்கொடி மிடைந்தசெஞ்சுடர்க் கனகத் திகழ் சிலம்பனையமாளிகை ஓளிச் சூளிகை வளாகத்துஅணிவுடைப் பலபட மணிதுடைத்து அழுத்திய …25நல்லொளி பரந்து நயந்திகழ் இந்திரவில்லொளி பலபல விசும்பிடைக் காட்டமன்னிய செல்வத்துத் துன்னிய பெருமைச்செம்மலர் மாது சேர்ந்திறை பிரியாக்கழுமல நாதன் கவுணியர் குலபதி …30தண்தமிழ் விரகன் சைவ சிகாமணிபண்டிதர் இன்பன் பரசமய கோளரிஎன்புனை தமிழ்கொண்டு இரங்கி என் உள்ளத்துஅன்பினை அருளிய ஆண்தகை தன்புகழ்குறைவறுத்து உள்கி நிறைகடை குறுகி …35நாப்பொலி நல்லிசை பாடமாப்பெரும் செல்வம் மன்னுதி நீயே. …37
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

38

நீதியின் நிறைபுகழ்மேதகு புகலிமன்மாதமிழ் விரகனைஓதுவ துறுதியே.
சொற்பிரிப்பு
நீதியின் நிறைபுகழ்மேதகு புகலிமன்மாதமிழ் விரகனைஓதுவது உறுதியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

39

உறுதி முலைதாழ எனையி கழுநீதிஉனது மனமார முழுவ துமதாகஅறுதி பெறுமாதர் பெயல்த ருதறானும்அழகி தினியானுன் அருள்பு னைவதாகப்பெறுதி இவைநீயென் அடிப ணிதல்மேவுபெருமை கெடநீடு படிறொ ழிபொன்மாடநறைக மழுவாச வளர்பொ ழில்சுலாவும்நனிபு கலிநாத தமிழ்வி ரகநீயே.
சொற்பிரிப்பு
உறுதி முலைதாழ எனையி கழுநீதிஉனது மனமார முழுவதும் அதாகஅறுதி பெறுமாதர் பெயர் தருதல் தானும்அழகிது இனி யானுன் அருள் புனைவதாகப்பெறுதி இவை நீ என் அடிபணிதல் மேவுபெருமை கெட நீடு படிறொழி பொன்மாடநறைக மழுவாச வளர்பொழில் சுலாவும்நனி புகலி நாத தமிழ் விரக நீயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

40

நீமதித் துன்னி நினையேல் மடநெஞ்சமேகாமதிக் கார்பொழிற் காழிநாமதிக் கும்புகழ் ஞானசம் பந்தனொடுபூமதிக் குங்கழல் போற்றே.
சொற்பிரிப்பு
நீ மதித் துன்னி நினையேல் மடநெஞ்சமேகாமதிக் கார்பொழிற் காழிநாமதிக்கும் புகழ் ஞானசம் பந்தனொடுபூமதிக்கும் கழல் போற்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

41

போற்றி செய்தரன் பொற்கழல் பூண்டதேபுந்தி யானுந்தம் பொற்கழல் பூண்டதேமாற்றி யிட்டது வல்விட வாதையேமன்னு குண்டரை வென்றது வாதையேஆற்றெ திர்ப்புனல் உற்றதந் தோணியேஆன தன்பதி யாவதந் தோணியேநாற்றி சைக்கவி ஞானசம் பந்தனேநல்ல நாமமும் ஞானசம் பந்தனே.
சொற்பிரிப்பு
போற்றி செய்து அரன் பொற்கழல் பூண்டதேபுந்தி யான் உந்தம் பொற்கழல் பூண்டதேமாற்றி இட்டது வல்விட வாதையேமன்னு குண்டரை வென்றது வாதையேஆற்றெதிர்ப் புனல் உற்றதம் தோணியேஆன தன் பதி யாவது அம்தோணியேநாற்றிசைக் கவி ஞான சம்பந்தனேநல்ல நாமமும் ஞானசம்பந்தனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

42

அம்புந்து கண்ணிமைக்கும் ஆன நுதல்வியர்க்கும்வம்புந்து கோதை மலர்வாடும் - சம்பந்தன்காமரு கழுமலம் அனையாள்ஆமிவள் அணங்கலள் அடிநிலத் தனவே.
சொற்பிரிப்பு
அம்புந்து கண்ணிமைக்கும் ஆன நுதல்வியர்க்கும்வம்புந்து கோதை மலர்வாடும் – சம்பந்தன்காமரு கழுமலம் அனையாள்ஆமிவள் அணங்கு அலள் அடி நிலத்தனவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

43

தனமுந் துகிலுஞ் சாலிக் குவையுங் கோலக் கனமாடச்சண்பைத் திகழ்மா மறையோர் அதிபன் தவமெய்க் குலதீபன்கனவண் கொடைநீ டருகா சனிதன் கமலக் கழல்பாடிக்கண்டார் நிறையக் கொள்ளப் பசியைக் கருதா தெம்பாணபுனைதண் டமிழின் இசையார் புகலிக் கரசைப் புகழ்பாடிப்புலையச் சேரிக் காளை புகுந்தால் என்சொற் புதிதாக்கிச்சினவெங் கதமாக் களிறொன் றிந்தச் சேரிக் கொடுவந்தார்சேரிக் குடிலும் இழந்தார் இதனைச் செய்வ தறியாரே.
சொற்பிரிப்பு
தனமும் துகிலும் சாலிக் குவையும் கோலக் கனமாடச்சண்பைத் திகழ் மாமறையோர் அதிபன் தவமெய்க் குலதீபன்கனவண் கொடை நீடு அருகாசனி தன் கமலக் கழல்பாடிக்கண்டார் நிறையக் கொள்ளப் பசியைக் கருதாது எம் பாணபுனை தண்தமிழின் இசையார் புகலிக்கு அரசைப் புகழ் பாடிப்புலையச் சேரிக் காளை புகுந்தால் என் சொற் புதிதாக்கிச்சின வெங்கதமாக் களிறொன்று இந்தச் சேரிக் கொடு வந்தார்சேரிக் குடிலும் இழந்தார் இதனைச் செய்வது அறியாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

44

யாரேஎம் போல அருளுடையார் இன்கமலத்தாரேயுஞ் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும்கொச்சை வயன்தன் குரைகழற்கே மெச்சிஅடிமைசெயப் பெற்றேன் அறிந்து.
சொற்பிரிப்பு
யாரே எம் போல அருளுடையார் இன் கமலத்தாரேயும் சென்னித் தமிழ்விரகன் – சீரேயும்கொச்சை வயன் தன் குரைகழற்கே மெச்சிஅடிமை செயப் பெற்றேன் அறிந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

45

அறிதரு நுண்பொருள் சேர்பதி கம்மரன் கழல்மேல்அணிதரு சுந்தர மார்தமிழ் விரகன் பிறைதோய்செறிதரு பைம்பொழில் மாளிகை கலவுந் திகழ்சீர்த்திருவளர் சண்பையில் மாடலை கடலொண் கழிசேர்எறிதிரை வந்தெழு மீனிரை நுகர்கின் றிலைபோய்இனமும் அடைந்திலை கூரிட ரோடிருந் தனையால்உறுதுயர் சிந்தையி னூடுத வினரெந் தமர்போல்உமரும் அகன்றன ரோஇது உரைவண் குருகே.
சொற்பிரிப்பு
அறிதரு நுண்பொருள் சேர்பதிகம் அரன் கழல்மேல்அணிதரு சுந்தரமார் தமிழ் விரகன் பிறைதோய்செறிதரு பைம்பொழில் மாளிகை சுலவும் திகழ்சீர்த்திருவளர் சண்பையில் மாடலை கடல் ஒண் கழிசேர்எறிதிரை வந்தெழு மீன் இரை நுகர்கின்றிலை போய்இனமும் அடைந்திலை கூர் இடரோடு இருந்தனையால்உறுதுயர் சிந்தையின் ஊடு தவினர் எந்தமர்போல்உமரும் அகன்றனரோ இது உரை வண் குருகே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

46

குருகணி மணிமுன்கைக் கொடியுநல் விறலவனும்அருகணை குவரப்பால் அரிதினி வழிமீண்மின்தருகெழு முகில்வண்கைத் தகுதமிழ் விரகன்தன்கருகெழு பொழில்மாடக் கழுமல வளநாடே.
சொற்பிரிப்பு
குருகணி மணி முன் கைக் கொடியு நல் விறலவனும்அருகு அணைகுவர் அப்பால் அரிதினி வழி மீள்மின்தருகெழு முகில்வண்கைத் தகுதமிழ் விரகன்தன்கருகெழு பொழில்மாடக் கழுமல வளநாடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

47

நாடே றும்புகழ் ஞானசம் பந்தன்வண்சேடே றுங்கொச்சை நேர்வளஞ் செய்துனைமாடே றுந்தையல் வாட மலர்ந்தனைகேடே றுங்கொடி யாய்கொல்லை முல்லையே.
சொற்பிரிப்பு
நாடேறும் புகழ் ஞானசம்பந்தன் வண்சேடேறும் கொச்சை நேர்வளம் செய்துனைமாடேறும் தையல் வாட மலர்ந்தனைகோடேறும் கொடியாய் கொல்லை முல்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

48

முல்லை நகையுமைதன் மன்னு திருவருளைமுந்தியுறுபெரிய செந்தண் முனிவன்மிகுநல்ல பொழில்சுலவு தொல்லை யணிபுகலிநாதன் மறைமுதல்வன் வேத மலையதனில்வில்லை இலர்கணையும் இல்லை பகழியுறுவேழம் இரலைகலை கேழல் வினவுறுவர்சொல்லை யிலர்விரக ரல்லர் தழைகொணர்வர்தோழி இவரொருவர் ஆவ அழிதர்வரே.
சொற்பிரிப்பு
முல்லை நகை உமை தன் மன்னு திருவருளைமுந்தி உறு பெரிய செந்தண் முனிவன் மிகுநல்ல பொழில் சுலவு தொல்லையணி புகலிநாதன் மறைமுதல்வன் வேத மலையதனில்வில்லை இலர்கணையும் இல்லை பகழியுறுவேழம் இரலைகலை கேழல் வினவுறுவர்சொல்லையிலர் விரகர் அல்லர் தழை கொணர்வர்தோழி இவரொருவர் ஆவ அழிதர்வரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

49

வழிதரு பிறவியின்உறுதொழில்அமர் துயர்கெடுமிகுபொழிலணி தருபுகலிமன்எழிலிணை அடிஇசைமினே.
சொற்பிரிப்பு
வழிதரு பிறவியின் உறுதொழில் அமர் துயர்கெடு மிகுபொழிலணி தருபுகலி மன்எழிலிணை அடி இசைமினே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.