திருமுறை 11 · 11.038 · 28

ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை

அருளியவர்
நம்பியாண்டார் நம்பி

5

திருந்தியசீர்ச் செந்தா மரைத்தடத்துச் சென்றோர்இருந்தண் இளமேதி பாயப் - பொருந்தியபுள்ளிரியப் பொங்கு கயல்வெருவப் பூங்குவளைக்கள்ளிரியச் செங்கழுநீர் கால்சிதையத் - துள்ளிக்குருகிரியக் கூன்இறவம் பாயக் களிறுமுருகுவிரி பொய்கையின்கண் மூழ்க -வெருவுற்றகோட்டகத்துப் பாய்வாளைக் கண்டலவன் கூசிப்போய்த்தோட்டகத்த செந்நெல் துறையடையச் - சேட்டகத்தகாவி முகமலரக் கார்நீலம் கண்படுப்பவாவிக்கண் நெய்தல் அலமர - மேவிய.
சொற்பிரிப்பு
திருந்திய சீர்ச் செந்தாமரைத் தடத்துச் சென்றோர்இருந்தண் இள மேதி பாயப் – பொருந்தியபுள் இரியப் பொங்கு கயல்வெருவப் பூங்குவளைக்கள் இரியச் செங்கழுநீர் கால்சிதையத் – துள்ளிக்குருகு இரியக் கூன் இறவம் பாயக் கெளிறுமுருகுவிரி பொய்கையின் கண் மூழ்க - வெருவுற்றகோட்டகத்துப் பாய் வாளைக் கண்டு அலவன் கூசிப்போய்த்தோட்டகத்த செந்நெல் துறையடையச் – சேட்டகத்தகாவி முகமலரக் கார்நீலம் கண்படுப்பவாவிக்கண் நெய்தல் அலமர – மேவிய …5
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அன்னம் துயில்இழப்ப அஞ்சிறைசேர் வண்டினங்கள்துன்னும் துணைஇழப்பச் சூழ்கிடங்கில் - மன்னியவள்ளை நகைகாட்ட வண்குமுதம் வாய்காட்டத்தெள்ளுபுனற் பங்கயங்கள் தேன்காட்ட - மெள்ளநிலவு மலரணையின் நின்றிழிந்த சங்கம்இலகுகதிர் நித்திலங்கள் ஈன - உலவியமல்லைப் பழனத்து வார்பிரசம் மீதழியஒல்லை வரம்பிடறி ஓடிப்போய்ப் - புல்லியபாசடைய செந்நெல் படரொளியால் பல்கதிரோன்தேசடைய ஓங்கு செறுவுகளும் - மாசில்நீர்.
சொற்பிரிப்பு
அன்னம் துயில் இழப்ப அஞ்சிறைசேர் வண்டினங்கள்துன்னும் துணை இழப்பச் சூழ்கிடங்கில் – மன்னியவள்ளை நகைகாட்ட வண்குமுதம் வாய்காட்டத்தெள்ளுபுனற் பங்கயங்கள் தேன்காட்ட – மெள்ளநிலவு மலரணையின் நின்றிழிந்த சங்கம்இலகுகதிர் நித்திலங்கள் ஈன – உலவியமல்லைப் பழனத்து வார்பிரசம் மீதழியஒல்லை வரம்பிடறி ஓடிப்போய்ப் – புல்லியபாசடைய செந்நெல் படரொளியால் பல்கதிரோன்தேசடைய ஓங்குசெறுவுகளும் – மாசில்நீர் …10
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

நித்திலத்தின் சாயும் நிகழ்மரக தத்தோலும்தொத்தொளி செம்பொன் தொழிற்பரிய - மொய்த்தபவளத்தின் செவ்வியும் பாங்கணைய ஓங்கித்திவளக் கொடிமருங்கில் சேர்த்தித் - துவளாமைப்பட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோ டிலங்குகுழைஇட்டமைந்த கண்ணார் இளங்கமுகும் - விட்டொளிசேர்கண்கள் அழல்சிதறிக் காய்சினத்த வாய்மதத்துத்தண்டலையின் நீழல் தறியணைந்து - கொண்டகொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்திமலையு மரவடிவங் கொண்டாங் - கிலைநெருங்கு.
சொற்பிரிப்பு
நித்திலத்தின் சாயும் நிகழ் மரகதத் தோலும்தொத்தொளி செம்பொன் தொழிற்பரிய – மொய்த்தபவளத்தின் செவ்வியும் பாங்கணைய ஓங்கித்திவளக் கொடிமருங்கில் சேர்த்தித் – துவளாமைப்பட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோட இலங்கு குழைஇட்டமைந்த கண்ணார் இளங்கமுகும் – விட்டொளிசேர்கண்கள் அழல் சிதறிக் காய் சினத்த வாய் மதத்துத்தண்டலையின் நீழல் தறியணைந்து – கொண்டகொலைபுரியா நீர்மையவாய்க் கொம்பு வளைத்தேந்திமலையு மரவடிவம் கொண்டாங்கு – இலை நெருங்கு …15
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

சூதத் திரளும் தொகுகனிக ளால்நிவந்தமேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும் - போதுற்றினமொருங்கு செவ்வியவாய் இன்தேன் ததும்புகனிநெருங்கு திண்கதலிக் காடும் - நனிவிளங்குநாற்றத்தால் எண்டிசையும் வந்து நலஞ்சிறப்பஊற்று மடுத்த உயர்பலவும் -மாற்றமரும்மஞ்சள் எழில்வளமும் மாதுளையின் வார்பொழிலும்இஞ்சி இளங்காவின் ஈட்டமும் - எஞ்சாதகூந்தற் கமுகும் குளிர்பாட லத்தெழிலும்வாய்ந்தசீர் சண்பகத்தின் வண்காடும் - ஏந்தெழிலார்.
சொற்பிரிப்பு
சூதத் திரளும் தொகு கனிகளால் நிவந்தமேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும் – போதுற்றுஇனமொருங்கு செவ்வியவாய் இன்தேன் ததும்புகனிநெருங்கு திண்கதலிக் காடும் – நனிவிளங்குநாற்றத்தால் எண்திசையும் வந்து நலஞ்சிறப்பஊற்று மடுத்த உயர்பலவும் - மாற்றமரும்மஞ்சள் எழில்வளமும் மாதுளையின் வார்பொழிலும்இஞ்சி இளங்காவின் ஈட்டமும் – எஞ்சாதகூந்தற் கமுகும் குளிர் பாடலத்து எழிலும்வாய்ந்தசீர் சண்பகத்தின் வண்காடும் – ஏந்தெழிலார் …20
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

மாதவியும் புன்னையும் மண்ணும் மலர்க்குரவும்கேதகையும் எங்கும் கெழீஇஇப் - போதின்இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் வாசம்வளந்துன்று வார்பொழிலின் மாடே - கிளர்ந்தெங்கும்ஆலை ஒலியும் அரிவார் குரல்ஒலியும்சோலைக் கிளிமிழற்றும் சொல்லொலியும் - ஆலும்அறுபதங்கள் ஆர்ப்பொலியும் ஆன்றபொலி வெய்திஉறுதிரைநீர் வேலை ஒலிப்ப - வெறிகமழும்நந்தா வனத்தியல்பும் நற்றவத்தோர் சார்விடமும்அந்தமில் சீரார் அழகினால் - முந்திப்.
சொற்பிரிப்பு
மாதவியும் புன்னையும் மண்ணும் மலர்க் குரவும்கேதகையும் எங்கும் கெழீஇப் – போதின்இளந்தென்றல் வந்தசைப்ப எண்திசையும் வாசம்வளந்துன்று வார்பொழிலின் மாடே – கிளர்ந்தெங்கும்ஆலை ஒலியும் அரிவார் குரல் ஒலியும்சோலைக் கிளி மிழற்றும் சொல்லொலியும் – ஆலும்அறுபதங்கள் ஆர்ப்பொலியும் ஆன்ற பொலிவு எய்திஉறுதிரைநீர் வேலை ஒலிப்ப – வெறிகமழும்நந்தா வனத்து இயல்பும் நற்றவத்தோர் சார்விடமும்அந்தமில் சீரார் அழகினால் – முந்திப் …25
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

புகழ்வாருந் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கிநிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப நேரே - திகழமுளைநிரைத்து மூரிச் சிறைவகுத்து மொய்த்தபுளகத்தின் பாம்புரிசூழ் போகி - வளரஇரும்பதணஞ் சேர இருத்திஎழில் நாஞ்சில்மருங்கனைய அட்டாலை யிட்டுப் - பொருந்தியசீர்த்தோமரமும் தொல்லைப் பொறிவீசி யந்திரமும்காமரமும் ஏப்புழையும் கைகலந்து - மீமருவும்வெங்கதிரோன் தேர்விலங்க மிக்குயர்ந்த மேருப்போன்றங்கனகத் திஞ்சி அணிபெற்றுப் - பொங்கொளிசேர்.
சொற்பிரிப்பு
புகழ்வாரும் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கிநிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப நேரே – திகழமுளைநிரைத்து மூரிச் சிறைவகுத்து மொய்த்தபுளகத்தின் பாம்புரிசூழ் போகி – வளரஇரும்பதணம் சேர இருத்தி எழில் நாஞ்சில்மருங்கனைய அட்டாலை இட்டுப் – பொருந்திய சீர்த்தோமரமும் தொல்லைப் பொறிவீசி யந்திரமும்காமரமும் ஏப்புழையும் கைகலந்து – மீமருவும்வெங்கதிரோன் தேர்விலங்க மிக்குயர்ந்த மேருப்போன்றுஅங்கனகத்து இஞ்சி அணிபெற்றுப் – பொங்கொளிசேர் …30
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

மாளிகையும் மன்னியசீர் மண்டபமும் ஒண்தலத்தசூளிகையும் துற்றெழுந்த தெற்றிகளும் - வாளொளியநாடக சாலையும் நன்பொற் கபோதஞ்சேர்பீடமைத்த மாடத்தின் பெற்றியும் - கேடில்உருவு பெறவகுத்த அம்பலமும் ஓங்குதெருவும் வகுத்தசெய் குன்றும் -மருவினியசித்திரக் காவும் செழும்பொழிலும் வாவிகளும்நித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும் - எத்திசையும்துன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தைமன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் - பொன்னும்.
சொற்பிரிப்பு
மாளிகையும் மன்னியசீர் மண்டபமும் ஒண்தலத்தசூளிகையும் துற்றெழுந்த தெற்றிகளும் – வாளொளியநாடக சாலையும் நன்பொற் கபோதம் சேர்பீடமைத்த மாடத்தின் பெற்றியும் – கேடில்உருவு பெறவகுத்த அம்பலமும் ஓங்குதெருவும் வகுத்த செய் குன்றும் - மருவினியசித்திரக் காவும் செழும் பொழிலும் வாவிகளும்நித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும் – எத்திசையும்துன்னி எழில் சிறப்பச் சோதிமலர் மடந்தைமன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் – பொன்னும் …35
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

40

மரகதமும் நித்திலமும் மாமணியும் பேணிஇரவலர்கட் கெப்போதும் ஈந்தும் - கரவாதுகற்பகமும் காருமெனக் கற்றவர்க்கும் நற்றவர்க்கும்தப்பாக் கொடைவளர்க்குஞ் சாயாத - செப்பத்தால்பொய்ம்மை கடிந்து புகழ்பரிந்து பூதலத்துமெய்ம்மை தலைசிறந்து மேதக்கும் - உண்மைமறைபயில்வார் மன்னு வியாகரணக் கேள்வித்துறைபயில்வார் தொன்னூல் பயில்வார் - முறைமையால்ஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப்போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் - சோகமின்றி.
சொற்பிரிப்பு
மரகதமும் நித்திலமும் மாமணியும் பேணிஇரவலர்கட்கு எப்போதும் ஈந்தும் – கரவாதுகற்பகமும் காருமெனக் கற்றவர்க்கும் நற்றவர்க்கும்தப்பாக் கொடைவளர்க்கும் சாயாத – செப்பத்தால்பொய்ம்மை கடிந்துபுகழ்பரிந்து பூதலத்துமெய்ம்மை தலைசிறந்துமேதக்கும் – உண்மைமறைபயில்வார் மன்னுவியாகரணக் கேள்வித்துறைபயில்வார் தொன்னூல்பயில்வார் – முறைமையால்ஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப்போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் – சோகமின்றி … 40
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

45

நீதி நிலைஉணர்வார் நீள்நிலத்துள் ஐம்புலனும்காதல் விடுதவங்கள் காமுறுவார் - ஆதிஅருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக்கருங்கலிநீங் கக்கனல்வ குப்பார் - ஒருங்கிருந்துகாமநூல் கேட்பார் கலைஞானம் காதலிப்பார்ஓமநூல் ஓதுவார் உத்தரிப்பார் - பூமன்னும்நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர்தாம்மன்னி வாழும் தகைமைத்தாய் - நாமன்னும்ஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல்மடவார்ஏரணங்கு மாடத் தினிதிருந்து - சீரணங்கு.
சொற்பிரிப்பு
நீதி நிலை உணர்வார் நீள் நிலத்துள் ஐம்புலனும்காதல் விடுதவங்கள் காமுறுவார் – ஆதிஅருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக்கருங்கலி நீங்கக் கனல் வகுப்பார் – ஒருங்கிருந்துகாமநூல் கேட்பார் கலைஞானம் காதலிப்பார்ஓமநூல் ஓதுவார் உத்தரிப்பார் – பூமன்னும்நான்முகனே அன்னசீர் நானூற்றுவர் மறையோர்தாம் மன்னி வாழும் தகைமைத்தாய் – நாமன்னும்ஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல்மடவார்ஏரணங்கு மாடத்து இனிதிருந்து – சீரணங்கு …45
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

50

வீணை பயிற்றுவார் யாழ்பயில்வார் மேவியசீர்ப்பாணம் பயில்வார் பயன்உறுவார் - பேணியசீர்ப்பூவைக்குப் பாட்டுரைப்பார் பொற்கிளிக்குச் சொற்பயில்வார்பாவைக்குப் பொன்புனைந்து பண்புறுவார் - ஆய்எங்கும்மங்கையர்கள் கூட்டமும் மன்னு சிறார்குழுவும்பொங்குலகம் எல்லாம் பொலிவடையத் - தங்கியவேத ஒலியும் விழாவொலியும் மெல்லியலார்கீத ஒலியும் கிளர்ந்தோங்கும் - மாதரார்பாவை ஒலியும் பறைஒலியும் பல்சனங்கள்மேவும் ஒலியும் வியன்நகரம் - காவலர்கள்.
சொற்பிரிப்பு
வீணை பயிற்றுவார் யாழ் பயில்வார் மேவிய சீர்ப்பாணம் பயில்வார் பயன்உறுவார் – பேணிய சீர்ப்பூவைக்குப் பாட்டுரைப்பார் பொற்கிளிக்குச் சொற்பயில்வார்பாவைக்குப் பொன்புனைந்து பண்புறுவார் – ஆய்எங்கும்மங்கையர்கள் கூட்டமும் மன்னு சிறார் குழுவும்பொங்குலகம் எல்லாம் பொலிவடையத் – தங்கியவேத ஒலியும் விழவொலியும் மெல்லியலார்கீத ஒலியும் கிளர்ந்தோங்கும் – மாதரார்பாவை ஒலியும் பறைஒலியும் பல்சனங்கள்மேவும் ஒலியும் வியன்நகரம் – காவலர்கள் …50
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

55

பம்பைத் துடிஒலியும் பெளவப் படைஒலியும்கம்பக் களிற்றொலியும் கைகலந்து - நம்பியகார்முழக்கும் மற்றைக் கடல்முழக்கும் போற்கலந்தசீர்முழக்கம் எங்கும் செவிடுபடப் - பார்விளங்குசெல்வம் நிறைந்தஊர் சீரில் திகழ்ந்தஊர்மல்கு மலர்மடந்தை மன்னும்ஊர் - சொல்லினியஞாலத்து மிக்கஊர் நானூற் றுவர்கள்ஊர்வேலொத்த கண்ணார் விளங்கும்ஊர் - ஆலித்துமன்னிருகால் வேலை வளர்வெள்ளத் தும்பரொடும்பன்னிருகால் நீரில் மிதந்தவூர் - மன்னும்.
சொற்பிரிப்பு
பம்பைத் துடிஒலியும் பௌவப் படைஒலியும்கம்பக் களிற்றொலியும் கைகலந்து – நம்பியகார்முழக்கும் மற்றைக் கடல்முழக்கும் போற்கலந்தசீர்முழக்கம் எங்கும் செவிடுபடப் – பார்விளங்குசெல்வம் நிறைந்த ஊர் சீரில் திகழ்ந்த ஊர்மல்கு மலர் மடந்தை மன்னும் ஊர் – சொல்லினியஞாலத்து மிக்கஊர் நானூற்றுவர்கள் ஊர்வேலொத்த கண்ணார் விளங்கும் ஊர் – ஆலித்துமன்னிருகால் வேலை வளர் வெள்ளத்து உம்பரொடும்பன்னிருகால் நீரில் மிதந்தவூர் – மன்னும் …55
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

60

பிரமனூர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பைஅரன்மன்னு தண்காழி அம்பொற் - சிரபுரம்பூந்தராய்க் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல்வாய்ந்தநல் தோணி புரம்மறையோர் - ஏய்ந்தபுகலி கழுமலம் பூம்புறவம் என்றிப்பகர்கின்ற பண்புற்ற தாகித் - திகழ்கின்றமல்லைச் செழுநகரம் மன்னவும் வல்லமணர்ஒல்லைக் கழுவில் உலக்கவும் - எல்லையிலாமாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும்மேதக்க வானோர் வியப்பவும் - ஆதியாம்.
சொற்பிரிப்பு
பிரமனூர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பைஅரன்மன்னு தண்காழி அம்பொற் – சிரபுரம்பூந்தராய்க் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல்வாய்ந்தநல் தோணி புரம் மறையோர் – ஏய்ந்தபுகலி கழுமலம் பூம்புறவம் என்றிப்பகர்கின்ற பண்புற்ற தாகித் – திகழ்கின்றமல்லைச் செழுநகரம் மன்னவும் வல்லமணர்ஒல்லைக் கழுவில்உலக்கவும் – எல்லையிலாமாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும்மேதக்க வானோர்வியப்பவும் – ஆதியாம் …60
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

65

வென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும்ஒன்றிச் சிவனடியார் ஓங்கவும் - துன்றியபன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல்மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் - முன்னியசிந்தனையாற் சீரார் கவுணியர்க்கோர் சேயென்னவந்தங் கவதரித்த வள்ளலை - அந்தமில்சீர்ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தைமான மறையவற்றின் வான்பொருளை - ஆனசீர்த்தத்துவனை நித்தனைச் சைவத் தவர்அரசைவித்தகத்தால் ஓங்கு விடலையை - முத்தமிழின்.
சொற்பிரிப்பு
வென்றிக் கலிகெடவும் வேதத்து ஒலிமிகவும்ஒன்றிச் சிவனடியார் ஓங்கவும் – துன்றியபன்னு தமிழ்ப் பதினா றாயிர நற்பனுவல்மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் – முன்னியசிந்தனையால் சீரார் கவுணியர்க்கோர் சேயென்னவந்தங்கு அவதரித்தவள்ளலை – அந்தமில்சீர்ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தைமான மறையவற்றின் வான்பொருளை – ஆனசீர்த்தத்துவனை நித்தனைச் சைவத்தவர் அரசைவித்தகத்தால் ஓங்கு விடலையை – முத்தமிழின் …65
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

70

செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத் தெவ்வர்உயிர்அஞ்சத் திகழ்ந்த அடல்உருமை - எஞ்சாமைஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில்கோதில் அமிர்தநுகர் குஞ்சரத்தைத் - தீதறுசீர்க்காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும்மூலப் பொருளும் முழுதுணர்ந்த - சீலத்திருஞான சம்பந்தன் என்றுலகம் சேர்ந்தஒருநாமத் தால் உயர்ந்த கோவை - வருபெருநீர்ப்பொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனைமன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை - முன்னே.
சொற்பிரிப்பு
செஞ்சொற் பொருள் பயந்த சிங்கத்தைத் தெவ்வர் உயிர்அஞ்சத் திகழ்ந்த அடல் உருமை – எஞ்சாமைஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில்கோதில் அமிர்த நுகர் குஞ்சரத்தைத் – தீதறுசீர்க்காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும்மூலப் பொருளும் முழுதுணர்ந்த – சீலத்திருஞானசம்பந்தன் என்றுலகம் சேர்ந்தஒருநாமத்தால் உயர்ந்த கோவை – வருபெருநீர்ப்பொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனைமன்னர் தொழுது இறைஞ்சும் மாமணியை – முன்னே …70
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

75

நிலவு முருகர்க்கும் நீலநக் கற்கும்தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டற்கும் - குலவியதோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனைமாழையொண்கண் மாதர் மதனனைச் - சூழொளியகோதைவேல் தென்னன்தன் கூடல் குலநகரில்வாதில் அமணர் வலிதொலையக் - காதலால்புண்கெழுவு செம்புனலா றோடப் பொருதவரைவண்கழுவில் தைத்த மறையோனை - ஒண்கெழுவுஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியதுபாலை தனைநெய்தல் ஆக்கியும் - காலத்து.
சொற்பிரிப்பு
நிலவு முருகர்க்கும் நீலநக்கற்கும்தொலைவில் புகழ்ச் சிறுத்தொண் டற்கும் – குலவியதோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனைமாழையொண் கண் மாதர் மதனனைச் – சூழொளியகோதைவேல் தென்னன் தன் கூடல் குலநகரில்வாதில் அமணர் வலிதொலையக் – காதலால்புண்கெழுவு செம்புனல் ஆறோடப் பொருதவரைவண்கழுவில் தைத்த மறையோனை – ஒண்கெழுவுஞாலத்தினர் அறிய மன்னுநனி பள்ளியதுபாலைதனை நெய்தல் ஆக்கியும் – காலத்து …75
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

80

நீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும்பாரெதிர்ந்த பல்விடங்கள் தீர்த்துமுன் - நேரெழுந்தயாழை முரித்தும் இருங்கதவம் தான்அடைத்தும்சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும் - தாழ்பொழில்சூழ்கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்துங்கப் புரிசை தொகுமிழலை - அங்கதனில்நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில்முத்தின் சிவிகை முதற்கொண்டும் - அத்தகுசீர்மாயிரு ஞாலத்து மன்னா வடுதுறைபுக்காயிரஞ் செம்பொன் அதுகொண்டும் - மாய்வரிய.
சொற்பிரிப்பு
நீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர் படைத்தும்பாரெதிர்ந்த பல்விடங்கள் தீர்த்துமுன் – நேரெழுந்தயாழை முரித்தும் இருங்கதவம் தான் அடைத்தும்சூழ்புனலில் ஓடத் தொழில் புரிந்தும் – தாழ்பொழில்சூழ்கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்துங்கப் புரிசை தொகுமிழலை – அங்கதனில்நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில்முத்தின் சிவிகை முதற்கொண்டும் – அத்தகுசீர்மாயிரு ஞாலத்து மன் ஆவடுதுறை புக்குஆயிரம் செம்பொன் அதுகொண்டும் – மாய்வரிய …80
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

85

மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு வோத்தூரில்ஆண்பனைகள் பெண்பனைகள் ஆக்கியும் - பாண்பரிசில்கைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற்சப்பாணி கொண்டு தராதலத்துள் - எப்பொழுதும்நீக்கரிய இன்பத் திராகம்இருக் குக்குறள்நோக்கரிய பாசுரம்பல் பத்தோடும் - ஆக்கரியயாழ்முரி சக்கரமாற் றீரடி முக்காலும்பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய - ஊழிஉரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத்திருப்பதிகம் பாடவல்ல சேயை – விருப்போடு.
சொற்பிரிப்பு
மாண்புதிகழ் எம்பெருமான் மன்னு திருவோத்தூரில்ஆண்பனைகள் பெண்பனைகள் ஆக்கியும் – பாண்பரிசில்கைப்பாணி ஒத்திக் காழிக் கோலக்காவிற் பொற்சப்பாணி கொண்டு தராதலத்துள் – எப்பொழுதும்நீக்கரிய இன்பத்து இராகம் இருக்குக்குறள்நோக்கரிய பாசுரம் பல் பத்தோடும் – ஆக்கரியயாழ்முரி சக்கரமாற்று ஈரடி முக்காலும்பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய – ஊழிஉரைப்பமரும் பல்புகழால் ஓங்க உமை கோனைத்திருப்பதிகம் பாடவல்ல சேயை விருப்போடு …85
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

90

நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர்எண்ணில் முனிவரர் ஈட்டத்துப் - பண்ணமரும்ஓலக்கத் துள்ளிருப்ப ஒண்கோயில் வாயிலின்கண்கோலக் கடைகுறுகிக் கும்பிட்டாங் - காலும்புகலி வளநகருள் பூசுரர் புக்காங்கிகலில் புகழ்பரவி யேத்திப் - புகலிசேர்வீதி எழுந்தருள வேண்டுமென விண்ணப்பம்ஆதரத்தாற் செய்ய அவர்க்கருளி - நீதியால்கேதகையும் சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்தமாதவியின் போதை மருங்கணைத்துக் - கோதில்.
சொற்பிரிப்பு
நண்ணு புகழ் மறையோர் நாற்பத்து எண்ணாயிரவர்எண்ணில் முனிவரர் ஈட்டத்துப் – பண்ணமரும்ஓலக்கத்துள் இருப்ப ஒண்கோயில் வாயிலின்கண்கோலக் கடை குறுகிக் கும்பிட்டாங் – காலும்புகலி வளநகருள் பூசுரர் புக்காங்குஇகலில் புகழ்பரவி ஏத்திப் – புகலிசேர்வீதி எழுந்தருள வேண்டுமென விண்ணப்பம்ஆதரத்தால் செய்ய அவர்க்கருளி – நீதியால்கேதகையும் சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்தமாதவியின் போதை மருங்கணைத்துக் – கோதில் …90
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

95

இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டுமருவோடு மல்லிகையை வைத்தாங் - கருகேகருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்பெருகு பிளவிடையே பெய்து - முருகியலும்புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சிதன்அயலே முல்லை தலையெடுப்ப - மன்னியவண்செருந்தி வாய்நெகிழ்ப்ப மெளவல் அலர்படைப்பத்தண்குருந்தம் மாடே தலையிறக்க - ஒண்கமலத்தாதடுத்த கண்ணியால் தண்ணறுங் குஞ்சிமேற்போதடுத்த கோலம் புனைவித்துக் - காதிற்.
சொற்பிரிப்பு
இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டுமருவோடு மல்லிகையை வைத்தாங்கு – அருகேகருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்பெருகு பிளவிடையே பெய்து – முருகியலும்புன்னாகம் தன்னைப் புணர இருவாச்சிதன் அயலே முல்லை தலையெடுப்ப – மன்னியவண் செருந்தி வாய் நெகிழ்ப்ப மௌவல் அலர் படைப்பத்தண் குருந்தம் மாடே தலையிறக்க – ஒண்கமலத்தாதடுத்த கண்ணியால் தண்ணறும் குஞ்சி மேற்போதடுத்த கோலம் புனைவித்துக் – காதில் …95
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

100

கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தின்இனமணியின் ஆரம் இலகப் - புனைகனகத்தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம்வைத்து மணிக்கண் டிகைபூண்டு - முத்தடுத்தகேயூரம் தோள்மேற் கிடத்திக் கிளர்பொன்னின்வாய்மை பெறுநூல் வலந்திகழ - வேயும்தமனியத்தின் தாழ்வடமும் தண்டரளக் கோப்பும்சிமைய வரைமார்பிற் சேர்த்தி - அமைவுற்றவெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில்ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து - திண்ணோக்கிற்.
சொற்பிரிப்பு
கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தின்இனமணியின் ஆரம் இலகப் – புனை கனகத்தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம்வைத்து மணிக் கண்டிகை பூண்டு – முத்தடுத்தகேயூரம் தோள்மேல் கிடத்திக் கிளர் பொன்னின்வாய்மை பெறுநூல் வலந்திகழ – வேயும்தமனியத்தின் தாழ்வடமும் தண்டரளக் கோப்பும்சிமைய வரைமார்பில் சேர்த்தி – அமைவுற்றவெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில்ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து – திண்ணோக்கில …100
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

105

காற்றுருமோ குன்றோ கடலோ அடல்உருமோகூற்றுருவோ என்னக் கொதித்தெழுந்து - சீற்றத்தழல்விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப்புழைத்தடக்கை கொண்டெறிந்து பொங்கி - மழை மதத்தாற்பூத்த கடதடத்துக் போகம் மிகப்பொலிந்தகாத்திரத்த தாகிக் கலித்தெங்கும் - கோத்தகொடுநிகளம் போக்கிநிமிர் கொண்டெழுந்து கோபித்திடுவண்டை யிட்டுக் கலித்து - முடுகிநெடுநிலத்தைத் தான்உழக்கி நின்று நிகர்நீத்திடிபெயரத் தாளந் திலுப்பி - அடுசினத்தால்.
சொற்பிரிப்பு
காற்றுருமோ குன்றோ கடலோ அடல் உருமோகூற்றுருவோ என்னக் கொதித்தெழுந்து – சீற்றத்தழல் விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப்புழைத்தடக்கை கொண்டெறிந்து பொங்கி – மழை மதத்தாற்பூத்த கடதடத்துக் போகம் மிகப்பொலிந்தகாத்திரத்ததாகிக் கலித்தெங்கும் – கோத்தகொடு நிகளம் போக்கி நிமிர் கொண்டெழுந்து கோபித்துஇடுவண்டை இட்டுக் கலித்து – முடுகிநெடுநிலத்தைத் தான் உழக்கி நின்று நிகர் நீத்துஇடிபெயரத் தாளம் திலுப்பி – அடுசினத்தால் …105
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

110

கன்ற முகம்பருகிக் கையெடுத் தாராய்ந்துவென்றி மருப்புருவ வெய்துயிர்த் - தொன்றியகூடம் அரணழித்துக் கோபுரங்க ளைக்குத்திநீடு பொழிலை நிகரழித் - தோடிப்பணப்பா கரைப்பரிந்து குத்திப் பறித்தநிணப்பாகை நீள்விசும்பின் வீசி - அணைப்பரியஓடைக் கருங்களிற்றை ஒண்பரிக்கா ரர்கள்தாம்மாடணையக் கொண்டு வருதலுமே - கூடிநயந்து குரற்கொடுத்து நட்பளித்துச் சென்றுவியந்தணுகி வேட்டம் தணிந்தாங் - குயர்ந்த.
சொற்பிரிப்பு
கன்ற முகம்பருகிக் கையெடுத்து ஆராய்ந்துவென்றி மருப்புருவ வெய்துயிர்த்து – ஒன்றியகூடம் அரணழித்துக் கோபுரங்களைக் குத்திநீடு பொழிலை நிகர் அழித்து – ஓடிப்பணப் பாகரைப் பரிந்து குத்திப் பறித்தநிணப்பாகை நீள் விசும்பின் வீசி – அணைப்பரியஓடைக் கருங்களிற்றை ஒண் பரிக்காரர்கள் தாம்மாடணையக் கொண்டு வருதலுமே – கூடிநயந்து குரற்கொடுத்து நட்பளித்துச் சென்றுவியந்தணுகி வேட்டம் தணிந்தாங்கு – உயர்ந்த …110
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

115

உடற்றூய வாசிதனைப் பற்றிமேல் கொண்டாங்கடற்கூடற் சந்தி யணுகி - அடுத்தபயில்பலவும் பேசிப் படுபுரசை நீக்கிஅயர்வு கெடஅணைத்துத் தட்டி - உயர்வுதருதண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்ச்சிறுத்தொண்டர் பிறகணையத் தோன்றுதலும் - எண்டிசையும்பல்சனமும் மாவும் படையும் புடைகிளரஒல்லொலியால் ஓங்கு கடல்கிளர - மல்லல்பரித்தூரங் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக்கருத்தோ டிசைகவிஞர் பாட - விரித்த.
சொற்பிரிப்பு
உடல் தூய வாசிதனைப் பற்றிமேல் கொண்டாங்குஅடற் கூடற் சந்தி அணுகி – அடுத்தபயில் பலவும் பேசிப் படுபுரசை நீக்கிஅயர்வு கெட அணைத்துத் தட்டி – உயர்வு தருதண்டு பேரோசையின் கண் தாள்கோத்துச் சீர்ச்சிறுத்தொண்டர் பிறகணையத் தோன்றுதலும் – எண்திசையும்பல்சனமும் மாவும் படையும் புடைகிளரஒல்லொலியால் ஓங்கு கடல் கிளர – மல்லல்பரித்தூரம் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக்கருத்தோடு இசை கவிஞர் பாட – விரித்த …115
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

120

குடைபலவும் சாமரையும் தொங்கல்களும் கூடிப்புடைபரந்து பொக்கம் படைப்பக் - கடைபடுவீதி அணுகுதலும் வெள்வளையார் உள்மகிழ்ந்துகாதல் பெருகிக் கலந்தெங்கும் - சோதிசேர்ஆடரங்கின் மேலும் அணிமா ளிகைகளிலும்சேடரங்கும் நீள்மறுகும் தெற்றியிலும் - பீடுடையபேரிளம் பெண் ஈறாகப் பேதை முதலாகவாரிளங் கொங்கை மடநல்லார் - சீர்விளங்கப்பேணும் சிலம்பும் பிறங்கொளிசேர் ஆரமும்பூணும் புலம்பப் புறப்பட்டுச் - சேண்மறுகில்.
சொற்பிரிப்பு
குடைபலவும் சாமரையும் தொங்கல்களும் கூடிப்புடைபரந்து பொக்கம் படைப்பக் – கடைபடுவீதி அணுகுதலும் வெள்வளையார் உள்மகிழ்ந்துகாதல் பெருகிக் கலந்தெங்கும் – சோதி சேர்ஆடரங்கின் மேலும் அணி மாளிகைகளிலும்சேடரங்கும் நீள்மறுகும் தெற்றியிலும் – பீடுடையபேரிளம் பெண் ஈறாகப் பேதை முதலாகவாரிளம் கொங்கை மடநல்லார் – சீர் விளங்கப்பேணும் சிலம்பும் பிறங்கொளி சேர் ஆரமும்பூணும் புலம்பப் புறப்பட்டுச் – சேண் மறுகில் …120
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

125

காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல்ஈண்டு குடையின் எழில் நிழற்கீழ்க் -காண்டலுமேகைதொழுவார் நின்று கலைசரிவார் மால்கொண்டுமெய்தளர்வார் வெள்வளைகள் போய்வீழ்வார் - வெய்துயிர்த்துப்பூம்பயலை கொள்வார் புணர்முலைகள் பொன்பயப்பார்காம்பனைய மென்தோள் கவின்கழிவார் - தாம்பயந்துவென்றிவேற் சேயென்ன வேனில்வேட் கோவென்னஅன்றென்ன ஆமென்ன ஐயுற்றுச் - சென்றணுகிக்காழிக் குலமதலை என்றுதங் கைசோர்ந்துவாழி வளைசரிய நின்றயர்வார் - பாழிமையால்.
சொற்பிரிப்பு
காண்டகைய வென்றிக் கருவரை மேல் வெண்மதிபோல்ஈண்டு குடையின் எழில் நிழற் கீழ்க் - காண்டலுமேகைதொழுவார் நின்று கலை சரிவார் மால் கொண்டுமெய் தளர்வார் வெள்வளைகள் போய்வீழ்வார் – வெய்துயிர்த்துப்பூம்பயலை கொள்வார் புணர் முலைகள் பொன் பயப்பார்காம்பனைய மென்தோள் கவின்கழிவார் – தாம் பயந்துவென்றிவேற் சேயென்ன வேனில் வேட்கோ என்னஅன்றென்ன ஆமென்னஐயுற்றுச் – சென்றணுகிக்காழிக் குலமதலை என்று தம் கைசோர்ந்துவாழி வளைசரிய நின்றயர்வார் – பாழிமையால் …125
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

130

உள்ளம் நிலைதளர்ந்த ஒண்ணுதலார் வெல்களிற்றைமெள்ள நடவென்று வேண்டுவார் - கள்ளலங்கல்தாராமை அன்றியும் தையல்நல் லார் முகத்தைப்பாராமை சாலப் பயன் என்பார் - நேராகஎன்னையே நோக்கினான் ஏந்திழையீர் இப்பொழுதுநன்மை நமக்குண் டெனநயப்பார் - கைம்மையால்ஒண்கலையும் நாணும் உடைதுகிலும் தோற்றவர்கள்வண்கமலத் தார்வலிந்து கோடுமெனப் - பண்பின்வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல்தொடுத்ததரந் தொண்டை துடிப்பப் - பொடித்தமுலைக்.
சொற்பிரிப்பு
உள்ளம் நிலைதளர்ந்த ஒண்ணுதலார் வெல் களிற்றைமெள்ள நடவென்று வேண்டுவார் – கள் அலங்கல்தாராமை அன்றியும் தையல் நல்லார் முகத்தைப்பாராமை சாலப் பயன் என்பார் – நேராகஎன்னையே நோக்கினான் ஏந்திழையீர் இப்பொழுதுநன்மை நமக்கு உண்டென நயப்பார் – கைம்மையால்ஒண் கலையும் நாணும் உடை துகிலும் தோற்றவர்கள்வண் கமலத்தார் வலிந்து கோடுமெனப் – பண்பின்வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல்தொடுத்ததரம் தொண்டை துடிப்பப் – பொடித்த முலைக் …130
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

135

காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால்பூசற் கமைந்து புறப்படுவார் - வாசச்செழுமலர்த்தார் இன்றெனக்கு நல்காதே சீரார்கழுமலர்த்தார் கோவே கழல்கள் - தொழுவார்கள்அங்கோல் வளையிழக்கப் போவது நின்னுடையசெங்கோன்மை யோவென்று செப்புவார்-நங்கைமீர்இன்றிவன் நல்குமேல் எண்பெருங் குன்றத்தில்அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் - பொன்றஉரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றிநிரைகழுமேல் உய்த்தானை நேர்ந்து - விரைமலர்த்தார்.
சொற்பிரிப்பு
காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால்பூசற் கமைந்து புறப்படுவார் – வாசச்செழுமலர்த்தார் இன்று எனக்கு நல்காதே சீரார்கழுமலர்த்தார் கோவே கழல்கள் – தொழுவார்கள்அங்கோல் வளையிழக்கப் போவது நின்னுடையசெங்கோன்மையோ என்று செப்புவார்-நங்கைமீர்இன்றிவன் நல்குமேல் எண் பெரும் குன்றத்தில்அன்று அமணர் கூட்டத்தை ஆசழித்துப் – பொன்றஉரை கெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றிநிரை கழுமேல் உய்த்தானை நேர்ந்து – விரை மலர்த்தார் …135
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

140

பெற்றிடலாம் என்றிருந்த நம்மிலும் பேதையர்கள்மற்றுளரோ என்று வகுத்துரைப்பார் - மற்றிவனேபெண்ணிரக்கம் அன்றே பிறைநுதலீர் மாசுணத்தின்நண்ணு கடுவிடத்தால் நாட்சென்று - விண்ணுற்றஆருயிரை மீட்டன் றவளை அணிமருகல்ஊரறிய வைத்த தெனஉரைப்பார் - பேரிடரால்ஏசுவார் தாம்உற்ற ஏசறவைத் தோழியர்முன்பேசுவார் நின்றுதம் பீடழிவார் - ஆசையால்நைவார் நலன்அழிவார் நாணோடு பூண்இழப்பார்மெய்வாடு வார்வெகுள்வார் வெய்துயிர்ப்பார் - தையலார்பூந்துகிலைப் பூமாலை என்றணிவார் பூவினைமுன்சாந்தம் எனமெய்யில் தைவருவார் - வாய்ந்தகிளியென்று பாவைக்குச் சொற்பயில்வார் பந்தைஒளிமே கலையென் றுடுப்பார் -அளிமேவுபூங்குழலார் மையலாய்க் கைதொழமுன் போதந்தான்ஓங்கொலிசேர் வீதி யுலா.
சொற்பிரிப்பு
பெற்றிடலாம் என்றிருந்த நம்மிலும் பேதையர்கள்மற்றுளரோ என்று வகுத்துரைப்பார் – மற்றிவனேபெண்ணிரக்கம் அன்றே பிறைநுதலீர் மாசுணத்தின்நண்ணு கடுவிடத்தால் நாட்சென்று – விண்ணுற்றஆருயிரை மீட்டன்று அவளை அணிமருகல்ஊரறிய வைத்தது எனஉரைப்பார் – பேரிடரால்ஏசுவார் தாம் உற்ற ஏசறவைத் தோழியர்முன்பேசுவார் நின்று தம் பீடழிவார் – ஆசையால்நைவார் நலன் அழிவார் நாணோடு பூண் இழப்பார்மெய் வாடுவார் வெகுள்வார் வெய்துயிர்ப்பார் – தையலார் …140பூந்துகிலைப் பூமாலை என்றணிவார் பூவினைமுன்சாந்தம் என மெய்யில் தைவருவார் – வாய்ந்தகிளியென்று பாவைக்குச் சொல் பயில்வார் பந்தைஒளிமே கலையென்று உடுப்பார் - அளிமேவுபூங்குழலார் மையலாய்க் கைதொழ முன் போதந்தான்ஓங்கொலி சேர் வீதி உலா. …143
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.