திருமுறை 11 · 11.037 · 30

ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை

அருளியவர்
நம்பியாண்டார் நம்பி

1

திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்கும்கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின்இதழியின் செம்பொன் இருகரை சிதறிப்புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன்திருவருள் பெற்ற இருபிறப் பாளன் ...(5)முத்தீ வேள்வி நான்மறை வளரஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன்ஏழிசை யாழை எண்டிசை அறியத்துண்டப் படுத்த தண்டமிழ் விரகன்காழி நாடன் கவுணியர் தலைவன் ...(10)மாழை நோக்கி மலைமகள் புதல்வன்திருந்திய பாடல் விரும்பினர்க் கல்லதுகடுந்துயர் உட்புகக் கைவிளிக் கும்இந்நெடும்பிற விக்கடல் நீந்துவ தரிதே.
சொற்பிரிப்பு
திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்கும்கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின்இதழியின் செம்பொன் இருகரை சிதறிப்புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன்திருவருள் பெற்ற இரு பிறப்பாளன் …5முத்தீ வேள்வி நான்மறை வளரஐவேள் உயர்த்த அறு தொழிலாளன்ஏழிசை யாழைஎண்திசை அறியத்துண்டப் படுத்த தண்தமிழ் விரகன்காழி நாடன் கவுணியர் தலைவன் …10மாழை நோக்கி மலைமகள் புதல்வன்திருந்திய பாடல் விரும்பினர்க்கு அல்லதுகடுந்துயர் உட்புகக் கைவிளிக்கும் இந்நெடும்பிறவிக் கடல் நீந்துவது அரிதே. …14
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அரியோடு நான்முகத்தோன் ஆதிசுரர்க் கெல்லாம்தெரியாமை செந்தழலாய் நின்ற - ஒருவன்சீர்தன்தலையின் மேல்தரித்த சம்பந்தன் தாளிணைகள்என்தலையின் மேலிருக்க என்று.
சொற்பிரிப்பு
அரியோடு நான்முகத்தோன் ஆதி சுரர்க்கு எல்லாம்தெரியாமை செந்தழலாய் நின்ற – ஒருவன் சீர்தன் தலையின் மேல் தரித்த சம்பந்தன் தாளிணைகள்என் தலையின் மேலிருக்க என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

என்றும் அடியவர் உள்ளத் திருப்பன இவ்வுலகோர்நன்று மலர்கொடு தூவித் துதிப்பன நல்லசங்கத்தொன்றும் புலவர்கள் யாப்புக் குரியன ஒண்கலியைப்பொன்றும் கவுணியன் சைவ சிகாமணி பொன்னடியே.
சொற்பிரிப்பு
என்றும் அடியவர் உள்ளத்து இருப்பன இவ்வுலகோர்நன்று மலர்கொடு தூவித் துதிப்பன நல்ல சங்கத்தொன்றும் புலவர்கள் யாப்புக் குரியன ஒண்கலியைப்பொன்றும் கவுணியன் சைவ சிகாமணி பொன்னடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அடுசினக் கடகரி அதுபட உரித்தபடர்சடைக் கடவுள்தன் திருவருள் அதனால் பிறந்ததுகழுமலம் என்னும் கடிநக ரதுவே வளர்ந்ததுதேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறுபூங்குழல் மாதிடு போனகம் உண்டே பெற்றது ...(5)குழகனைப் பாடிக் கோலக் காப்புக்கழகுடைச் செம்பொற் றாளம் அவையே தீர்த்ததுதாதமர் மருகற் சடையனைப் பாடிப்பேதுறு பெண்ணின் கணவனை விடமே அடைத்ததுஅரைசோ டிசையா அணிமறைக் காட்டுக் ...(10)குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே ஏறிற்றுஅத்தியும் மாவும் தவிர அரத்துறைமுத்தின் சிவிகை முன்னாள் பெற்றே பாடிற்றுஅருமறை ஓத்தூர் ஆண்பனை அதனைப்பெருநிறம் எய்தும் பெண்பனை யாவே கொண்டது ...(15)பூவிடு மதுவில் பொறிவண் டுழலும்ஆவடு துறையில் பொன்னா யிரமே கண்டதுஉறியொடு பீலி ஒருகையிற் கொள்ளும்பறிதலைச் சமணைப் பல்கழு மிசையே நீத்ததுஅவிழ்ச்சுவை யேஅறிந் தரனடி பரவும் ...(20)தமிழ்ச்சுவை அறியாத் தம்பங் களையே நினைந்ததுஅள்ளற் பழனக் கொள்ளம் பூதூர்இக்கரை ஓடம் அக்கரைச் செலவே மிக்கவர்ஊனசம் பந்தம் அறுத்துயக் கொளவலஞானசம் பந்தன்இஞ் ஞாலத் திடையே. ...(25)
சொற்பிரிப்பு
அடுசினக் கடகரி அதுபட உரித்தபடர்சடைக் கடவுள் தன் திருவருள் அதனால் பிறந்ததுகழுமலம் என்னும் கடிநகரதுவே வளர்ந்ததுதேங்கமழ் வாவிச் சிலம்பரையன் பெறுபூங்குழல் மாது இடு போனகம் உண்டே பெற்றது …5குழகனைப் பாடிக் கோலக்காப் புக்குஅழகுடைச் செம்பொற்றாளம் அவையே தீர்த்ததுதாதமர் மருகற் சடையனைப் பாடிப்பேதுறு பெண்ணின் கணவனை விடமே அடைத்ததுஅரைசோடு இசையா அணி மறைக்காட்டுக் …10குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே ஏறிற்றுஅத்தியும் மாவும் தவிர அரத்துறைமுத்தின் சிவிகை முன்னாள் பெற்றே பாடிற்றுஅருமறை ஓத்தூர் ஆண்பனை அதனைப்பெருநிறம் எய்தும் பெண் பனையாவே கொண்டது …15பூவிடு மதுவில் பொறிவண்டு உழலும்ஆவடுதுறையில் பொன் ஆயிரமே கண்டதுஉறியொடு பீலி ஒருகையிற் கொள்ளும்பறிதலைச் சமணைப் பல் கழு மிசையே நீத்ததுஅவிழ்ச்சுவையே அறிந்து அரனடி பரவும் …20தமிழ்ச்சுவை அறியாத் தம்பங்களையே நினைந்ததுஅள்ளற் பழனக் கொள்ளம்பூதூர்இக்கரை ஓடம் அக்கரைச் செலவே மிக்கவர்ஊன சம்பந்தம் அறுத்து உயக்கொள வலஞானசம்பந்தன் இஞ்ஞாலத்திடையே. …25
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நிலத்துக்கு மேல்ஆறு நீடுலகத் துச்சித்தலத்துக்கு மேலேதான் என்பர் - சொலத்தக்கசுத்தர்கள்சேர் காழிச் சுரன்ஞான சம்பந்தன்பத்தர்கள்போய் வாழும் பதி.
சொற்பிரிப்பு
நிலத்துக்கு மேல் ஆறு நீடுலகத்து உச்சித்தலத்துக்கு மேலே தான் என்பர் – சொலத்தக்கசுத்தர்கள் சேர் காழிச் சுரன் ஞானசம்பந்தன்பத்தர்கள் போய் வாழும் பதி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பதிகம் பலபாடி நீடிய பிள்ளை பரசுதரற்கதிகம் அணுக்கன் அமணர்க்குக் காலன் அவதரித்தமதியம் தவழ்மாட மாளிகைக் காழிஎன் றால்வணங்கார்ஒதியம் பணைபோல் விழுவர்அந் தோசில ஊமர்களே.
சொற்பிரிப்பு
பதிகம் பலபாடி நீடிய பிள்ளை பரசுதரற்குஅதிகம் அணுக்கன் அமணர்க்குக் காலன் அவதரித்தமதியம் தவழ் மாடமாளிகைக் காழி என்றால் வணங்கார்ஒதியம் பணைபோல் விழுவர் அந்தோ சில ஊமர்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கவள மாளிகைத் திவளும் யானையின்கவுள்தலைக் கும்பத்துஉம்பர்ப் பதணத் தம்புதம் திளைக்கும்பெருவளம் தழீஇத் திருவளர் புகலிவிளங்கப் பிறந்த வளங்கொள்சம் பந்தன் ....(5)கருதியஞ் செவ்விச் சுருதியஞ் சிலம்பில்தேமரு தினைவளர் காமரு புனத்துமும்மதஞ் சொரியும் வெம்முகக் கைம்மாமூரி மருப்பின் சீரிய முத்துக்கொடுஞ்சிலை வளைத்தே கொடுஞ்சரந் துரந்து ...(10)முற்பட வந்து முயன்றங் குதவிசெய்வெற்பனுக் கலதுசுணங்கணி மென்முலைச் சுரிகுழல் மாதினைமணஞ்செய மதிப்பது நமக்குவன் பழியே.
சொற்பிரிப்பு
கவள மாளிகைத் திவளும் யானையின்கவுள் தலைக் கும்பத்துஉம்பர்ப் பதணத்து அம்புதம் திளைக்கும்பெருவளம் தழீஇத் திருவளர் புகலிவிளங்கப் பிறந்த வளங்கொள் சம்பந்தன் …5கருதி அஞ் செவ்விச் சுருதி அம் சிலம்பில்தேமரு தினை வளர் காமரு புனத்துமும்மதம் சொரியும் வெம்முகக் கைம்மாமூரி மருப்பின் சீரிய முத்துக்கொடுஞ்சிலை வளைத்தே கொடுஞ்சரந் துரந்து …10முற்பட வந்து முயன்றங்கு உதவிசெய்வெற்பனுக்கு அலதுசுணங்கணி மென்முலைச் சுரிகுழல் மாதினைமணஞ்செய மதிப்பது நமக்கு வன் பழியே. …14
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பழிஒன்றும் ஓராதே பாய்இடுக்கி வாளாகழியுஞ் சமண்கையர் தம்மை - அழியத்துரந்தரங்கச் செற்றான் சுரும்பரற்றும் பாதம்நிரந்தரம்போய் நெஞ்சே நினை.
சொற்பிரிப்பு
பழிஒன்றும் ஓராதே பாய் இடுக்கி வாளாகழியும் சமண் கையர் தம்மை – அழியத்துரந்து அரங்கச் செற்றான் சுரும்பு அரற்றும் பாதம்நிரந்தரம் போய் நெஞ்சே நினை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நினைஆ தரவெய்தி மேகலை நெக்கு வளைசரிவாள்தனைஆவ என்றின் றருளுதி யேதடஞ் சாலிவயற்கனையா வருமேதி கன்றுக் கிரங்கித்தன் கால்வழிபால்நனையா வருங்காழி மேவிய சீர்ஞான சம்பந்தனே.
சொற்பிரிப்பு
நினை ஆதரவெய்தி மேகலை நெக்கு வளை சரிவாள்தனை ஆவ என்றின்று அருளுதியே தடம் சாலி வயல்கனையா வரு மேதி கன்றுக்கு இரங்கித் தன் கால்வழி பால்நனையா வருங் காழி மேவிய சீர் ஞானசம்பந்தனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

தனமலி கமலத் திருவெனும் செல்விவிருப்பொடு திளைக்கும் வீயா இன்பத்துஆடக மாடம் நீடுதென் புகலிக்காமரு கவினார் கவுணியர் தலைவபொற்பமர் தோள நற்றமிழ் விரக ...(5)மலைமகள் புதல்வ கலைபயில் நாவ நினாதுபொங்கொளி மார்பில் தங்கிய திருநீறுஆதரித் திறைஞ்சிய பேதையர் கையில்வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின்பிள்ளை யாவது தெரிந்தது பிறர்க்கே. ...(10)
சொற்பிரிப்பு
தனமலி கமலத் திருவெனும் செல்விவிருப்பொடு திளைக்கும் வீயா இன்பத்துஆடக மாடம் நீடுதென் புகலிக்காமரு கவினார் கவுணியர் தலைவபொற்பமர் தோள நற்றமிழ் விரக …5மலைமகள் புதல்வ கலைபயில் நாவ நினாதுபொங்கொளி மார்பில் தங்கிய திருநீறுஆதரித்து இறைஞ்சிய பேதையர் கையில்வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின்பிள்ளையாவது தெரிந்தது பிறர்க்கே. …10
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்துறவியெனும் தோற்றோணி கண்டீர் -நிறைஉலகிற்பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்தன்மாலை ஞானத் தமிழ்.
சொற்பிரிப்பு
பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்துறவியெனும் தொல் தோணி கண்டீர் - நிறை உலகிற்பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்தன்மாலை ஞானத் தமிழ்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

ஞானந் திரளையி லேஉண் டனையென்று நாடறியச்சோனந் தருகுழ லார்சொல் லிடாமுன் சுரும்புகட்குப்பானந் தருபங்க யத்தார் கொடுபடைச் சால்வழியேகூனந் துருள்வயல் சூழ்காழி மேவிய கொற்றவனே.
சொற்பிரிப்பு
ஞானந் திரளையிலே உண்டனை என்று நாடறியச்சோனந்தரு குழலார் சொல்லிடா முன் சுரும்புகட்குப்பானந்தரு பங்கயத்தார் கொடுபடைச் சால் வழியேகூன் நந்துருள் வயல் சூழ் காழி மேவிய கொற்றவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

அவனிதலம் நெரிய எதிர்எதிர் மலைஇச்சொரிமதக் களிற்று மத்தகம் போழ்ந்துசெஞ்சே றாடிச் செல்வன அரியே எஞ்சாப்படவர வுச்சிப் பருமணி பிதுங்கப்பிடரிடைப் பாய்வன பேழ்வாய்ப் புலியே இடையிடைச் ...(5)செறியிருள் உருவச் சேண்விசும் பதனிற்பொறியென விழுவன பொங்கொளி மின்னேஉறுசின வரையால் உந்திய கலுழிக்கரையா றுழல்வன கரடியின் கணனே நிரையார்பொருகடல் உதைந்த சுரிமுகச் சங்கு ....(10)செங்கயல் கிழித்த பங்கய மலரின்செம்மடல் நிறைய வெண்முத் துதிர்க்கும்பழனக் கழனிக் கழுமல நாடன்வைகையில் அமணரை வாதுசெய் தறுத்தசைவ சிகாமணி சம்பந்தன் வெற்பிற் ...(15)சிறுகிடை யவள்தன் பெருமுலை புணர்வான்நெறியினில் வரலொழி நீமலை யோனே.
சொற்பிரிப்பு
அவனிதலம் நெரிய எதிர்எதிர் மலைஇச்சொரிமதக் களிற்று மத்தகம் போழ்ந்துசெஞ்சேறாடிச் செல்வன அரியே எஞ்சாப்படவர வுச்சிப் பருமணி பிதுங்கப்பிடரிடைப் பாய்வன பேழ்வாய்ப் புலியே இடையிடைச் …5செறியிருள் உருவச் சேண் விசும்பதனில்பொறியென விழுவன பொங்கொளி மின்னேஉறுசின வரையால் உந்திய கலுழிக்கரையால் உழல்வன கரடியின் கணனே நிரையார்பொருகடல் உதைந்த சுரிமுகச் சங்கு …10செங்கயல் கிழித்த பங்கய மலரின்செம்மடல் நிறைய வெண்முத்து உதிர்க்கும்பழனக் கழனிக்கழுமல நாடன்வைகையில் அமணரைவாதுசெய்து அறுத்தசைவ சிகாமணி சம்பந்தன் வெற்பில் …15சிறுகிடையவள் தன் பெருமுலை புணர்வான்நெறியினில் வரலொழி நீ மலையோனே. …17
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்துமுலைத்தடங்கள் நீத்தாலும் மூப்பர் - கலைத்தலைவன்சம்பந்தற் காளாய்த் தடங்காழி கைகூப்பித்தம்பந்தம் தீராதார் தாம்.
சொற்பிரிப்பு
மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்துமுலைத்தடங்கள் நீத்தாலும் மூப்பர் – கலைத்தலைவன்சம்பந்தற்கு ஆளாய்த் தடங்காழி கைகூப்பித்தம் பந்தம் தீராதார் தாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

தாமரை மாதவி சேறிய நான்முகன் தன்பதிபோல்காமரு சீர்வளர் காழிநன் னாடன் கவித்திறத்துநாமரு மாதவர் போல்அழ கீந்துநல் வில்லிபின்னேநீர்மரு வாத சுரத்தெங்ஙன் ஏகும்என் நேரிழையே.
சொற்பிரிப்பு
தாமரை மாதவி சேறிய நான்முகன் தன் பதி போல்காமரு சீர்வளர் காழி நன்னாடன் கவித்திறத்துநாமரு மாதவர் போல் அழ கீந்து நல் வில்லி பின்னேநீர்மருவாத சுரத்து எங்ஙன் ஏகும் என் நேரிழையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

இழைகெழு மென்முலை இதழிமென் மலர்கொயத்தழைவர ஒசித்த தடம்பொழில் இதுவே காமர்சுனைகுடைந் தேறித் துகிலது புனையநின்றுஎனையுங் கண்டு வெள்கிடம் இதுவே தினைதொறும்பாய்கிளி இரியப் பைவந் தேறி ...(5)ஆயவென் றிருக்கும் அணிப்பரண் இதுவே ஈதேஇன்புறு சிறுசொல் அவைபல இயற்றிஅன்புசெய் தென்னை ஆட்கொளும் இடமே பொன்புரைதடமலர்க் கமலக் குடுமியி லிருந்துநற்றொழில் புரியும் நான்முகன் நாட்டைப் ...(10)புற்கடை கழீஇப் பொங்கு சராவத்துநெய்த்துடுப் பெடுத்த முத்தீப் புகையால்நாள்தொறும் மறைக்குஞ் சேடுறு காழிஎண்டிசை நிறைந்த தண்டமிழ் விரகன்நலங்கலந் தோங்கும் விலங்கலின் மாட்டுப் ...(15)பூம்புனம் அதனிற் காம்பன தோளிபஞ்சில் திருந்தபடி நோவப் போய்எனைவஞ்சித் திருந்த மணியறை இதுவே.
சொற்பிரிப்பு
இழை கெழு மென்முலை இதழி மென்மலர் கொயத்தழை வர ஒசித்த தடம் பொழில் இதுவே காமர்சுனை குடைந்து ஏறித் துகிலது புனையநின்றுஎனையும் கண்டு வெள்கிடம் இதுவே தினைதொறும்பாய்கிளி இரியப் பைவந்தேறி …5ஆயவென்று இருக்கும் அணிப்பரண் இதுவே ஈதேஇன்புறு சிறுசொல் அவை பல இயற்றிஅன்புசெய்து என்னை ஆட்கொளும் இடமே பொன்புரைதடமலர்க் கமலக் குடுமியில் இருந்துநற்றொழில் புரியும் நான்முகன் நாட்டைப் …10புற்கடை கழீஇப் பொங்கு சராவத்துநெய்த் துடுப்பெடுத்த முத்தீப் புகையால்நாள்தொறும் மறைக்கும் சேடுறு காழிஎண்டிசை நிறைந்த தண்தமிழ் விரகன்நலங்கலந்து ஓங்கும் விலங்கலின் மாட்டுப் …15பூம்புனம் அதனிற் காம்பன தோளிபஞ்சில் திருந்தடி நோவப் போய்எனைவஞ்சித்திருந்த மணியறை இதுவே. …18
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

வேழங்கள் எய்பவர்க்கு வில்லாவ திக்காலம்ஆழங் கடல்முத்தம் வந்தலைக்கும் - நீள்வயல்சூழ்வாய்ந்ததிவண் மாட மதிற்காழிக் கோன்சிலம்பிற்சாய்ந்தது வண்தழையோ தான்.
சொற்பிரிப்பு
வேழங்கள் எய்பவர்க்கு வில்லாவது இக்காலம்ஆழம் கடல் முத்தம் வந்தலைக்கும் – நீள் வயல் சூழ்வாய்ந்தது இவண் மாட மதிற்காழிக் கோன் சிலம்பில்சாய்ந்தது வண் தழையோ தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

தழைக்கின்ற சீர்மிகு ஞானசம் பந்தன் தடமலைவாய்அழைக்கின்ற மஞ்ஞைக் கலர்ந்தன கோடல்அம் பெய்திடுவான்இழைக்கின்ற தந்தரத் திந்திர சாபம்நின் எண்ணமொன்றும்பிழைக்கின்ற தில்லைநற் றேர்வந்து தோன்றிற்றுப் பெய்வளையே.
சொற்பிரிப்பு
தழைக்கின்ற சீர் மிகு ஞான சம்பந்தன் தடமலைவாய்அழைக்கின்ற மஞ்ஞைக்கு அலர்ந்தன கோடல் அம்பு எய்திடுவான்இழைக்கின்ற அந்தரத்து இந்திர சாபம் நின் எண்ணமொன்றும்பிழைக்கின்ற தில்லை நல் தேர் வந்து தோன்றிற்றுப் பெய்வளையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

வளைகால் மந்தி மாமரப் பொந்தில்விளைதேன் உண்டு வேணுவின் துணியாற்பாறை யில்துயில் பனைக்கை வேழத்தைஉந்தி எழுப்பும் அந்தண் சிலம்ப அஃதிங்குஎன்னையர் இங்கு வருவர் பலரே ...(5)அன்னை காணில் அலர்தூற் றும்மே பொன்னார்சிறுபரற் கரந்த விளிகுரற் கிங்கிணிசேவடி புல்லிச் சில்குரல் இயற்றிஅமுதுண் செவ்வாய் அருவி தூங்கத்தாளம் பிரியாத் தடக்கை அசைத்துச் ....(10)சிறுகூத் தியற்றிச் சிவன்அருள் பெற்றநற்றமிழ் விரகன் பற்றலர் போலஇடுங்கிய மனத்தொடும் ஒடுங்கிய சென்றுபருதியுங் குடகடல் பாய்ந்தனன்கருதிநிற் பதுபிழை கங்குலிப் புனத்தே. ..(15)
சொற்பிரிப்பு
வளைகால் மந்தி மாமரப் பொந்தில்விளை தேன் உண்டு வேணுவின் துணியாற்பாறையில் துயில் பனைக்கை வேழத்தைஉந்தி எழுப்பும் அந்தண் சிலம்ப அஃதிங்குஎன்னையர் இங்கு வருவர் பலரே …5அன்னை காணில் அலர் தூற்றும்மே பொன்னார்சிறு பரல் கரந்த விளி குரல் கிங்கிணிசேவடி புல்லிச் சில்குரல் இயற்றிஅமுதுண் செவ்வாய் அருவி தூங்கத்தாளம் பிரியாத் தடக்கை அசைத்துச் …10சிறுகூத்து இயற்றிச் சிவன் அருள் பெற்றநற்றமிழ் விரகன் பற்றலர் போலஇடுங்கிய மனத்தொடும் ஒடுங்கிய சென்றுபருதியும் குடகடல் பாய்ந்தனன்கருதி நிற்பது பிழை கங்குல் இப்புனத்தே. …15
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

தேம்புனமே உன்னைத் திரிந்து தொழுகின்றேன்வாம்புகழ்சேர் சம்பந்தன் மாற்றலர்போல் - தேம்பிஅழுதகன்றாள் என்னா தணிமலையர் வந்தால்தொழதகன்றாள் என்றுநீ சொல்லு.
சொற்பிரிப்பு
தேம்புனமே உன்னைத் திரிந்து தொழுகின்றேன்வாம்புகழ் சேர் சம்பந்தன் மாற்றலர் போல் – தேம்பிஅழுது அகன்றாள் என்னாது அணிமலையர் வந்தால்தொழது அகன்றாள் என்று நீ சொல்லு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

சொற்செறி நீள்கவி செய்தன்று வைகையில் தொல்அமணர்பற்செறி யாவண்ணம் காத்தசம் பந்தன் பயில்சிலம்பில்கற்செறி வார்சுனை நீர்குடைந் தாடும் கனங்குழையைஇற்செறி யாவண்ணம் காத்திலை வாழி இரும்புனமே.
சொற்பிரிப்பு
சொற் செறி நீள் கவி செய்தன்று வைகையில் தொல்அமணர்பற்செறியா வண்ணம் காத்த சம்பந்தன் பயில்சிலம்பில்கற்செறி வார் சுனை நீர் குடைந்து ஆடும் கனங்குழையைஇற்செறியா வண்ணம் காத்திலை வாழி இரும்புனமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

புனலற வறந்த புன்முளி சுரத்துச்சினமலி வேடர் செஞ்சரம் உரீஇப்படுகலைக் குளம்பின் முடுகு நாற்றத்தாடும் அரவின் அகடு தீயப்பாடு தகையின் பஞ்சுரங் கேட்டுக் ...(5)கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும்பொறிவரிப் புறவே உறவலை காண்நீ நறைகமழ்தேம்புனல் வாவித் திருக்கழு மலத்துப்பையர வசைத்த தெய்வ நாயகன்தன்அருள் பெற்ற பொன்னணிக் குன்றம் ....(10)மானசம் பந்தம் மண்மிசைத் துறந்தஞானசம் பந்தனை நயவார் கிளைபோல்வினையேன் இருக்கும் மனைபிரி யாதவஞ்சி மருங்குல் அஞ்சொற் கிள்ளைஏதிலன் பின்செல விலக்கா தொழிந்தனை ..(15)ஆதலின் புறவே உறவலை நீயே.
சொற்பிரிப்பு
புனலற வறந்த புன்முளி சுரத்துச்சினமலி வேடர் செஞ்சரம் உரீஇப்படுகலைக் குளம்பின் முடுகு நாற்றத்துஆடும் அரவின் அகடு தீயப்பாடு தகையின் பஞ்சுரம் கேட்டுக் …5கள்ளியம் கவட்டிடைப்பள்ளி கொள்ளும்பொறிவரிப் புறவே உறவலை காண் நீ நறை கமழ்தேம்புனல் வாவித் திருக்கழுமலத்துப்பையரவு அசைத்த தெய்வ நாயகன்தன் அருள் பெற்ற பொன்னணிக் குன்றம் …10மான சம்பந்தம் மண்மிசைத் துறந்தஞானசம்பந்தனை நயவார் கிளைபோல்வினையேன் இருக்கும் மனை பிரியாதவஞ்சி மருங்குல்அஞ்சொற் கிள்ளைஏதிலன் பின் செலவு இலக்காது ஒழிந்தனைஆதலின் புறவே உறவலை நீயே. …16
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

அலைகடலின் மீதோடி அந்நுளையர் வீசும்வலைகடலில் வந்தேறு சங்கம் - அலர்கடலைவெண்முத் தவிழ்வயல்சூழ் வீங்குபுனற் காழியேஒண்முத் தமிழ்பயந்தான் ஊர்.
சொற்பிரிப்பு
அலைகடலின் மீதோடி அந்நுளையர் வீசும்வலைகடலில் வந்தேறு சங்கம் – அலர்கடலைவெண்முத்து அவிழ் வயல் சூழ் வீங்குபுனற் காழியேஒண் முத்தமிழ் பயந்தான் ஊர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

ஊரும் பசும்புர வித்தேர் ஒளித்த தொளிவிசும்பில்கூரும் இருளொடு கோழிகண் துஞ்சா கொடுவினையேற்காரும் உணர்ந்திலர் ஞானசம் பந்தன்அந் தாமரையின்தாரும் தருகிலன் எங்ஙனம் யான்சங்கு தாங்குவதே.
சொற்பிரிப்பு
ஊரும் பசும்புரவித் தேர் ஒளித்தது ஒளி விசும்பில்கூரும் இருளொடு கோழி கண் துஞ்சா கொடுவினையேற்குஆரும் உணர்ந்திலர் ஞானசம்பந்தன் அம் தாமரையின்தாரும் தருகிலன் எங்ஙனம் யான் சங்கு தாங்குவதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

தேமலி கமலப் பூமலி படப்பைத்தலைமுக டேறி இளவெயிற் காயும்கவடிச் சிறுகாற் கர்க்கட கத்தைச்சுவடிச் சியங்கும் சூல்நரி முதுகைத்துன்னி எழுந்து செந்நெல் மோதும் ...(5)காழி நாட்டுக் கவுணியர் குலத்தைவாழத் தோன்றிய வண்டமிழ் விரகன்தெண்டிரைக் கடல்வாய்க்காண்டகு செவ்விக் களிறுகள் உகுத்தமுட்டைமுன் கவரும் பெட்டையங் குருகே ....(10)வாடை அடிப்ப வைகறைப் போதிற்தனிநீ போந்து பனிநீர் ஒழுகக்கூசிக் குளிர்ந்து பேசா திருந்துமேனி வெளுத்த காரணம் உரையாய்இங்குத் தணந்தெய்தி நுமரும் ...(15)இன்னம்வந் திலரோ சொல்லிளங் குருகே.
சொற்பிரிப்பு
தேமலி கமலப் பூமலி படப்பைத்தலைமுகடு ஏறி இளவெயிற் காயும்கவடிச் சிறுகாற் கர்க்கடகத்தைச்சுவடிச் சியங்கும் சூல்நரி முதுகைத்துன்னி எழுந்து செந்நெல் மோதும் …5காழி நாட்டுக் கவுணியர் குலத்தைவாழத் தோன்றிய வண்தமிழ் விரகன்தெண்திரைக் கடல்வாய்க்காண்டகு செவ்விக் களிறுகள் உகுத்தமுட்டை முன் கவரும் பெட்டையம் குருகே …10வாடை அடிப்ப வைகறைப் போதில்தனி நீ போந்து பனிநீர் ஒழுகக்கூசிக் குளிர்ந்து பேசாது இருந்துமேனி வெளுத்த காரணம் உரையாய்இங்குத் தணந்தெய்தி நுமரும்இன்னம் வந்திலரோ சொல் இளம் குருகே. …16
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

குருகும் பணிலமும் கூன்நந்தும் சேலும்பெருகும் வயற்காழிப் பிள்ளை - அருகந்தர்முன்கலங்க நட்ட முடைகெழுமு மால்இன்னம்புன்கலங்கல் வைகைப் புனல்.
சொற்பிரிப்பு
குருகும் பணிலமும் கூன்நந்தும் சேலும்பெருகும் வயற்காழிப் பிள்ளை – அருகந்தர்முன் கலங்க நட்டமுடை கெழுமுமால் இன்னம்புன்கலங்கல் வைகைப் புனல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

புனமா மயில்சாயல் கண்டுமுன் போகா கிளிபிரியாஇனமான் விழிஒக்கும் என்றுவிட் டேகா இருநிலத்துக்கனமா மதிற்காழி ஞானசம் பந்தன் கடமலைவாய்த்தினைமா திவள்காக்க எங்கே விளையும் செழுங்கதிரே.
சொற்பிரிப்பு
புனமா மயில் சாயல் கண்டு முன் போகா கிளிபிரியாஇனமான் விழி ஒக்கும் என்றுவிட்டு ஏகா இருநிலத்துக்கனமா மதிற்காழி ஞானசம்பந்தன் கடமலைவாய்த்தினை மாது இவள் காக்க எங்கே விளையும் செழுங்கதிரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

கதிர்மதி நுழையும் படர்சடை மகுடத்தொருத்தியைக் கரந்த விருத்தனைப் பாடிமுத்தின் சிவிகை முன்னாட் பெற்றஅத்தன் காழி நாட்டுறை அணங்கோ மொய்த்தெழுதாமரை அல்லித் தவிசிடை வளர்ந்த ...(5)காமரு செல்வக் கனங்குழை அவளோ மீமருத்தருவளர் விசும்பில் தவநெறி கலக்கும்உருவளர் கொங்கை உருப்பசி தானோவாருணக் கொம்போ மதனன் கொடியோஆரணி யத்துள் அருந்தெய்வ மதுவோ ....(10)வண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும்வஞ்சி மருங்கும் கிஞ்சுக வாயும்ஏந்திள முலையும் காந்தளங் கையும்ஓவியர் தங்கள் ஒண்மதி காட்டும்வட்டிகைப் பலகை வான்துகி லிகையால் ...(15)இயக்குதற் கரியதோர் உருவுகண் டென்னைமயக்கவந் துதித்ததோர் வடிவிது தானே.
சொற்பிரிப்பு
கதிர்மதி நுழையும் படர்சடை மகுடத்துஒருத்தியைக் கரந்த விருத்தனைப் பாடிமுத்தின் சிவிகை முன்னாள் பெற்றஅத்தன் காழி நாட்டுறை அணங்கோ மொய்த்தெழுதாமரை அல்லித் தவிசிடை வளர்ந்த …5காமரு செல்வக் கனங்குழை அவளோ மீமருத்தருவளர் விசும்பில் தவநெறி கலக்கும்உருவளர் கொங்கை உருப்பசி தானோவாருணக் கொம்போ மதனன் கொடியோஆரணியத்துள் அருந்தெய்வம் அதுவோ …10வண்டமர் குழலும் கெண்டையம் கண்ணும்வஞ்சி மருங்கும் கிஞ்சுக வாயும்ஏந்திள முலையும் காந்தள் அங்கையும்ஓவியர் தங்கள் ஒண்மதி காட்டும்வட்டிகைப் பலகை வான்துகில் இகையால் …15இயக்குதற்கு அரியதோர் உருவுகண்டு என்னைமயக்கவந்து உதித்ததோர் வடிவிது தானே. …17
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

வடிக்கண்ணி யாளைஇவ் வான்சுரத்தி னூடேகடிக்கண்ணி யானோடும் கண்டோம் - வடிக்கண்ணிமாம்பொழில்சேர் வைகை அமண்மலைந்தான் வண்காழிப்பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு.
சொற்பிரிப்பு
வடிக் கண்ணியாளை இவ் வான் சுரத்தின் ஊடேகடிக் கண்ணியானோடும் கண்டோம் – வடிக்கண்ணிமாம்பொழில்சேர் வைகை அமண் மலைந்தான் வண்காழிப்பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

குருந்தும் தரளமும் போல்வண்ண வெண்ணகைக் கொய்மலராள்பொருந்தும் திரள்புயத் தண்ணல்சம் பந்தன்பொற் றாமரைக்காவருந்தும் திரள்கொங்கை மங்கையை வாட்டினை வானகத்தேதிருந்தும் திரள்முகில் முந்திவந் தேறுதிங் கட்கொழுந்தே.
சொற்பிரிப்பு
குருந்தும் தரளமும் போல்வண்ண வெண்ணகைக் கொய்மலராள்பொருந்தும் திரள்புயத்து அண்ணல் சம்பந்தன் பொற்றாமரைக்காவருந்தும் திரள் கொங்கை மங்கையை வாட்டினை வானகத்தேதிருந்தும் திரள்முகில் முந்தி வந்து ஏறு திங்கள் கொழுந்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.