1
பாலித் தெழில்தங்கு பார்முகம் உய்யப் பறிதலையோர்மாலுற் றழுந்த அவதரித் தோன்மணி நீர்க்கமலத்தாலித் தலர்மிசை அன்னம் நடப்ப அணங்கிதென்னாச்சாலித் தலைபணி சண்பையர் காவலன் சம்பந்தனே.
சொற்பிரிப்பு
பாலித்து எழில் தங்கு பார்முகம் உய்யப் பறிதலையோர்மாலுற்று அழுந்த அவதரித்தோன் மணி நீர்க்கமலத்துஆலித்து அலர்மிசை அன்னம் நடப்ப அணங்கு இதென்னாச்சாலித் தலைபணி சண்பையர் காவலன் சம்பந்தனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.