திருமுறை 11 · 11.035 · 101

ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

அருளியவர்
நம்பியாண்டார் நம்பி

1

பார்மண் டலத்தினில் பன்னிரு பேரொடு மன்னிநின்றநீர்மண் டலப்படப் பைப்பிர மாபுரம் நீறணிந்தகார்மண் டலக்கண்டத் தெண்தடந் தோளன் கருணைபெற்றதார்மண் டலமணி சம்பந்தன் மேவிய தண்பதியே.
சொற்பிரிப்பு
பார் மண்டலத்தினில் பன்னிரு பேரொடு மன்னி நின்றநீர் மண்டலப் படப்பைப் பிரமாபுரம் நீறணிந்தகார் மண்டலக் கண்டத்து எண் தடந் தோளன் கருணை பெற்றதார் மண்டல மணி சம்பந்தன் மேவிய தண்பதியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பதிகப் பெருவழி காட்டப் பருப்பதக் கோன்பயந்தமதியத் திருநுதல் பங்கன் அருள்பெற வைத்தஎங்கள்நிதியைப் பிரமா புரநகர் மன்னனை என்னுடையகதியைக் கருதவல் லோர்அம ராவதி காப்பவரே.
சொற்பிரிப்பு
பதிகப் பெருவழி காட்டப் பருப்பதக் கோன் பயந்தமதியத் திருநுதல் பங்கன் அருள்பெற வைத்த எங்கள்நிதியைப் பிரமாபுர நகர் மன்னனை என்னுடையகதியைக் கருதவல்லோர் அமராவதி காப்பவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

காப்பயில் காழிக் கவுணியர் தீபற்கென் காரணமாமாப்பழி வாரா வகைஇருப் பேன்என்ன மாரன்என்னேபூப்பயில் வாளிகள் அஞ்சும்என் நெஞ்சரங் கப்புகுந்தஏப்பயில் வார்சிலை கால்வளை யாநிற்கும் ஈண்டிரவே.
சொற்பிரிப்பு
காப்பயில் காழிக் கவுணியர் தீபற்கு என் காரணமாமாப்பழி வாரா வகை இருப்பேன் என்ன மாரன் என்னேபூப்பயில் வாளிகள் அஞ்சும் என் நெஞ்சரங்கப் புகுந்தவேப்பயில் வார்சிலை கால் வளையா நிற்கும் ஈண்டு இரவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

இரவும் பகலும்நின் பாதத் தலர்என் வழிமுழுதும்பரவும் பரிசே அருளுகண் டாய்இந்தப் பாரகத்தேவிரவும் பரமத கோளரி யேகுட வெள்வளைகள்தரளம் சொரியும் கடல்புடை சூழ்ந்த தராய்மன்னனே.
சொற்பிரிப்பு
இரவும் பகலும் நின் பாதத்தலர் என் வழி முழுதும்பரவும் பரிசே அருளுகண்டாய் இந்தப் பாரகத்தேவிரவும் பரமத கோளரியே குட வெள்வளைகள்தரளம் சொரியும் கடல்புடை சூழ்ந்த தராய் மன்னனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மன்னிய மோகச் சுவைஒளி ஊறோசை நாற்றமென்றிப்பன்னிய ஐந்தின் பதங்கடந் தோர்க்குந் தொடர்வரியபொன்னியல் பாடகக் கிங்கிணிப் பாதநிழல் புகுவோர்துன்னிய காவமர் சண்பையர் நாதற்குத் தொண்டர்களே.
சொற்பிரிப்பு
மன்னிய மோகச்சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று இப்பன்னிய ஐந்தின் பதங் கடந் தோர்க்கும் தொடர்வரியபொன்னியல் பாடகக் கிங்கிணிப் பாதநிழல் புகுவோர்துன்னிய காவமர் சண்பையர் நாதற்குத் தொண்டர்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தொண்டினஞ் சூழச் சுரிகுழ லார்தம் மனந்தொடரவண்டினம் சூழ வருமிவன் போலும் மயில்உகுத்தகண்டினம் சூழ்ந்த வளைபிரம் போர்கழு வாஉடலம்விண்டினம் சூழக் கழுவின ஆக்கிய வித்தகனே.
சொற்பிரிப்பு
தொண்டினம் சூழச் சுரி குழலார் தம் மனந்தொடரவண்டினம் சூழ வரும் இவன் போலும் மயில் உகுத்தகண்டினம் சூழ்ந்த வளை பிரம் போர் கழுவா உடலம்விண்டினம் சூழக் கழுவின ஆக்கிய வித்தகனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வித்தகம் பேசிநம் வேணுத் தலைவனை வாள்நிகர்த்துமுத்தகங் காட்டு முறுவல்நல் லார்தம் மனம்அணையஉய்த்தகம் போந்திருந் துள்ளவும் இல்லா தனவுமுறுபுத்தகம் போலும் முதுபுலைப் பாணன் புணர்க்கின்றதே.
சொற்பிரிப்பு
வித்தகம் பேசி நம் வேணுத் தலைவனை வாள்நிகர்த்துமுத்தகம் காட்டு முறுவல் நல்லார் தம் மனம் அணையஉய்த்தகம் போந்திருந்து உள்ளவும் இல்லாதனவும் உறுபுத்தகம் போலும் முதுபுலைப் பாணன் புணர்க்கின்றதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

புணர்ந்தநன் மேகச் சிறுநுண் துளியிற் சிறகொதுக்கிஉணர்ந்தனர் போல இருந்தனை யால்உல கம்பரசும்குணந்திகழ் ஞானசம் பந்தன் கொடிமதிற் கொச்சையின்வாய்மணந்தவர் போயின ரோசொல்லு வாழி| மடக்குருகே.
சொற்பிரிப்பு
புணர்ந்த நன் மேகச் சிறுநுண் துளியில் சிறகு ஒதுக்கிஉணர்ந்தனர் போல இருந்தனையால் உலகம் பரசும்குணந்திகழ் ஞானசம்பந்தன் கொடிமதில் கொச்சையின்வாய்மணந்தவர் போயினரோ சொல்லு வாழி மடக்குருகே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

குருந்தலர் முல்லையங் கோவலர் ஏற்றின் கொலைமருப்பால்அருந்திறல் ஆகத் துழுதசெஞ் சேற்றரு காசனிதன்பெருந்திற மாமதிற் சண்பை நகரன்ன பேரமைத்தோள்திருந்திழை ஆர்வம் ............ .............. முரசே.
சொற்பிரிப்பு
குருந்தலர் முல்லையம் கோவலர் ஏற்றின் கொலை மருப்பால்அருந்திறல் ஆகத்து உழுத செம் சேற்று அருகாசனி தன்பெருந்திற மாமதில் சண்பை நகரன்ன பேரமைத்தோள்திருந்திழை ஆர்வம் …—…—…—……— …—…—…முரசே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

முரசங் கரையமுன் தோரணம் நீட முழுநிதியின்பரிசங் கொணர்வான் அமைகின் றனர்பலர் பார்த்தினிநீஅரிசங் கணைதலென் னாமுன் கருதரு காசனிதன்சுரிசங் கணைவயல் தந்த நகரன்ன தூமொழிக்கே.
சொற்பிரிப்பு
முரசம் கரைய முன் தோரணம் நீட முழுநிதியின்பரிசம் கொணர்வான் அமைகின்றனர் பலர் பார்த்தினி நீஅரிசங்கு அணைதல் என்னா முன் கருது அருகாசனி தன்சுரிசங்கு அணைவயல் தந்த நகரன்ன தூமொழிக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

மொழிவது சைவ சிகாமணி மூரித் தடவரைத்தோள்தொழுவது மற்றவன் தூமலர்ப் பாதங்கள் தாமங்கமழ்ந்தெழுவது கூந்தலம் பூந்தா மரைஇனி யாதுகொலோமொழிவது சேரி முரிப்புதை மாதர் முறுவலித்தே.
சொற்பிரிப்பு
மொழிவது சைவ சிகாமணி மூரித் தடவரைத்தோள்தொழுவது மற்றவன் தூமலர்ப் பாதங்கள் தாமம் கமழ்ந்துஎழுவது கூந்தலம் பூந்தாமரை இனி யாதுகொலோமொழிவது சேரி முரிப்புதை மாதர் முறுவலித்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

வலிகெழு குண்டர்க்கு வைகைக் கரைஅன்று வான்கொடுத்தகலிகெழு திண்தோள் கவுணியர் தீபன் கடல்உடுத்தஒலிதரு நீர்வைய கத்தை உறையிட்ட தொத்துதிருமலிதரு வார்பனி யாம்மட மாதினை வாட்டுவதே.
சொற்பிரிப்பு
வலிகெழு குண்டர்க்கு வைகைக் கரை அன்று வான்கொடுத்தகலிகெழு திண்தோள் கவுணியர் தீபன் கடல் உடுத்தஒலிதரு நீர் வையகத்தை உறையிட்டது ஒத்து திருமலி தரு வார் பனியாம் மட மாதினை வாட்டுவதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

வாட்டுவர் தத்தம் துயரைவன் கேழலின் பின்புசென்றவேட்டுவர் கோலத்து வேதத் தலைவனை மெல்விரலால்தோட்டியல் காதன் இவனென்று தாதைக்குச் சூழ்விசும்பிற்காட்டிய கன்றின் கழற்றிற மானவை கற்றவரே.
சொற்பிரிப்பு
வாட்டுவர் தத்தம் துயரை வன் கேழலின் பின்பு சென்றவேட்டுவர் கோலத்து வேதத் தலைவனை மெல்விரலால்தோட்டியல் காதன் இவனென்று தாதைக்குச் சூழ்விசும்பில்காட்டிய கன்றின் கழல் திறமானவை கற்றவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

அவர்சென் றணுகுவர் மீள்வதிங் கன்னை அருகர்தம்மைத்தவர்கின்ற தண்டமிழ்ச் சைவ சிகாமணி சண்பைஎன்னப்பவர்கின்ற நீள்கொடிக் கோபுரம் பல்கதி ரோன்பரியைக்கவர்கின்ற சூலத் தொடுநின்று தோன்றும் கடிநகரே.
சொற்பிரிப்பு
அவர் சென்று அணுகுவர் மீள்வதிங்கு அன்னை அருகர் தம்மைத்தவர்கின்ற தண்டமிழ்ச் சைவ சிகாமணி சண்பை என்னப்பவர்கின்ற நீள்கொடிக் கோபுரம் பல்கதிரோன் பரியைக்கவர்கின்ற சூலத்தொடு நின்று தோன்றும் கடிநகரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

நகரம் கெடப்பண்டு திண்தேர் மிசைநின்று நான்மறைகள்பகர்அம் கழலவ னைப்பதி னாறா யிரம்பதிகம்மகரம் கிளர்கடல் வையந் துயர்கெட வாய்மொழிந்தநிகரங் கிலிகலிக் காழிப் பிரான்என்பர் நீள்நிலத்தே.
சொற்பிரிப்பு
நகரம் கெடப் பண்டு திண் தேர் மிசை நின்று நான்மறைகள்பகர் அம் கழலவனைப் பதி னாறாயிரம் பதிகம்மகரம் கிளர்கடல் வையம் துயர்கெட வாய்மொழிந்தநிகர் அங்கு இலி கலிக்காழிப் பிரான் என்பர் நீள்நிலத்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

நிலமே றியமருப் பின்திரு மாலும் நிலம்படைத்தகுலமே றியமலர்க் கோகன தத்தய னுங்கொழிக்கும்சலமே றியமுடி தாள்கண் டிலர்தந்தை காணஅன்றுநலமே றியபுகழ்ச் சம்பந்தன் காட்டிய நாதனையே.
சொற்பிரிப்பு
நிலமேறிய மருப்பின் திரு மாலும் நிலம்படைத்தகுலமேறிய மலர்க் கோகன தத்து அயனுங் கொழிக்கும்சலமேறிய முடி தாள் கண் டிலர் தந்தை காண அன்றுநலமேறிய புகழ்ச் சம்பந்தன் காட்டிய நாதனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானக மாக்கியஃதேபோதின் மலிவய லாக்கிய கோன்அமர் பொற்புகலிஓத நெடுங்கடல் வாருங் கயலோ விலைக்குளதுகாதின் அளவும் மிளிர்கய லோசொல்லு காரிகையே.
சொற்பிரிப்பு
நாதன் நனி பள்ளி சூழ் நகர் கானகமாக்கி அஃதேபோதின் மலி வயலாக்கியகோன் அமர் பொற்புகலிஓத நெடுங்கடல் வாரும் கயலோ விலைக்குளதுகாதின் அளவும் மிளிர் கயலோ சொல்லு காரிகையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

கைம்மையி னால்நின் கழல்பர வாதுகண் டார்க்கிவனோர்வன்மைய னேஎன்னும் வண்ணம் நடித்து விழுப்பொருளோடிம்மையில் யான்எய்தும் இன்பம் கருதித் திரிதருமத்தன்மையி னேற்கும் அருளுதி யோசொல்லு சம்பந்தனே.
சொற்பிரிப்பு
கைம்மையினால் நின் கழல் பரவாது கண்டார்க்கு இவனோர்வன்மையனே என்னும் வண்ணம் நடித்து விழுப்பொருளோடுஇம்மையில் யான் எய்தும் இன்பம் கருதித் திரி தருமத்தன்மையினேற்கும் அருளுதியோ சொல்லு சம்பந்தனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

பந்தார் அணிவிரல் பங்கயக் கொங்கைப் பவளச்செவ்வாய்க்கொந்தார் நறுங்குழல் கோமள வல்லியைக் கூறருஞ்சீர்நந்தா விளக்கினைக் கண்டது நானெப் பொழுதும்முன்னும்சந்தா ரகலத் தருகா சனிதன் தடவரையே.
சொற்பிரிப்பு
பந்தார் அணிவிரல் பங்கயக் கொங்கைப் பவளச் செவ்வாய்க்கொந்தார் நறுங்குழல் கோமள வல்லியைக் கூறருஞ்சீர்நந்தா விளக்கினைக் கண்டது நான் எப்பொழுதும் உன்னும்சந்தார் அகலத்து அருகா சனி தன் தடவரையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

வரைகொண்ட மாமதில் சண்பைத் தலைவனை வாழ்த்தலர்போல்நிரைகொண்டு வானோர் கடைந்ததில் நஞ்ச நிகழக்கொலாம்நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளம் சுழலநொந்தோர் இரவும்திரைகொண் டலமரும் இவ்வகன் ஞாலம் செறிகடலே.
சொற்பிரிப்பு
வரைகொண்ட மாமதில் சண்பைத் தலைவனை வாழ்த்தலர்போல்நிரைகொண்டு வானோர் கடைந்ததில் நஞ்ச நிகழக்கொலாம்நுரைகொண்டு மெய்ப்பரத்து உள்ளம் சுழல நொந்தோர் இரவும்திரைகொண்டு அலமரும் இவ்வகன் ஞாலம் செறிகடலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

கடலன்ன பொய்ம்மைகள் செய்யினும் வெய்ய கடுநரகத்திடநமன் ஏவுதற் கெவ்விடத் தான்இருஞ் செந்தமிழால்திடமன்னு மாமதில் சண்பைத் தலைவன் செந் தாமரையின்வடமன்னு நீண்முடி யான்அடிப் போதவை வாழ்த்தினமே.
சொற்பிரிப்பு
கடலன்ன பொய்ம்மைகள் செய்யினும் வெய்ய கடுநரகத்திட நமன் ஏவுதற்கு எவ்விடத்தான் இரும் செந்தமிழால்திடமன்னு மாமதில் சண்பைத் தலைவன் செந்தாமரையின்வடமன்னு நீண்முடியான் அடிப் போதவை வாழ்த்தினமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

வாழ்த்துவ தெம்பர மேயாகும் அந்தத்து வையமுந்நீர்ஆழ்த்திய காலத்தும் ஆழா ததுஅரன் சேவடியேஏத்திய ஞானசம் பந்தற் கிடம்இசைத் தும்பிகொம்பர்க்காத்திகழ் கேதகம் போதகம் ஈனும் கழுமலமே.
சொற்பிரிப்பு
வாழ்த்துவது எம்பரமே ஆகும் அந்தத்து வைய முந்நீர்ஆழ்த்திய காலத்தும் ஆழா தது அரன் சேவடியேஏத்திய ஞானசம்பந்தற்கு இடம் இசைத் தும்பி கொம்பர்க்காத்திகழ் கேதகம் போதகம் ஈனும் கழுமலமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

மலர்பயில் வாட்கண்ணி கேள்கண்ணி நீண்முடி வண்கமலப்பலர்பயில் கீர்த்திக் கவுணியர் தீபன் பகைவர்என்னத்தலைபயில் பூம்புனங் கொய்திடு மேகணி யார்புலம்பஅலர்பயி லாமுன் பறித்தன மாகில் அரும்பினையே.
சொற்பிரிப்பு
மலர்பயில் வாள்கண்ணி கேள் கண்ணி நீண்முடி வண்கமலப்பலர்பயில் கீர்த்திக் கவுணியர் தீபன் பகைவர் என்னத்தலைபயில் பூம்புனம் கொய்திடும் ஏகணியார் புலம்பஅலர்பயிலா முன் பறித்தனம் ஆகில் அரும்பினையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

அரும்பின அன்பில்லை அர்ச்சனை இல்லை அரன்நெறியேவிரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி செய்கிலம் பொய்க்கமைந்தஇரும்பன உள்ளத்தி னேற்கெங்ங னேவந்து நேர்பட்டதால்கரும்பன நீள்வயல் சூழ்காழி நாதன் கழலடியே.
சொற்பிரிப்பு
அரும்பின அன்பில்லை அருச்சனை இல்லை அரன்நெறியேவிரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி செய்கிலம் பொய்க்கமைந்தஇரும்பன உள்ளத்தினேற்கு எங்ஙனே வந்து நேர்பட்டதால்கரும்பன நீள்வயல் சூழ் காழி நாதன் கழலடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

அடியால் அலர்மிதித் தாலரத் தம்பிற் கமிர்தமின்றிக்கொடியா னொடும்பின் நடந்ததெவ்வா றலர்கோகனதக்கடியார் நறுங்கண்ணி ஞானசம் பந்தன் கருதலர்சேர்வெடியா விடுவெம் பரற்சுறு நாறு வியன்சுரத்தே.
சொற்பிரிப்பு
அடியால் அலர் மிதித்தால் அரத்தம் பில்கு அமிர்தம் இன்று இக்கொடியானொடும் பின் நடந்தது எவ்வாறு அலர் கோகனதக்கடியார் நறுங்கண்ணி ஞானசம்பந்தன் கருதலர்சேர்வெடியா விடு வெம்பரல் சுறு நாறு வியன் சுரத்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

சுரபுரத் தார்தந் துயருக் கிரங்கிச் சுரர்கள்தங்கள்பரபுரத் தார்தந் துயர்கண் டருளும் பரமன்மன்னும்அரபுரத் தான்அடி எய்துவன் என்ப தவனடிசேர்சிரபுரத் தான்அடி யார்அடி யேன்என்னும் திண்ணனவே.
சொற்பிரிப்பு
சுரபுரத்தார் தம் துயருக்கு இரங்கிச் சுரர்கள் தங்கள்பரபுரத்தார் தம் துயர் கண்டு அருளும் பரமன் மன்னும்அரபுரத்தான் அடி எய்துவன் என்பது அவனடி சேர்சிரபுரத்தான் அடியார் அடியேன் என்னும் திண்ணனவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

திண்ணன வார்சென்ற நாட்டிடை இல்லைகொல் தீந்தமிழோர்கண்ணென ஓங்கும் கவுணியர் தீபன்கை போல்பொழிந்துவிண்ணின வாய்முல்லை மெல்லரும் பீனமற் றியாம்மெலியஎண்ணின நாள்வழு வாதிறைத் தோடி எழுமுகிலே.
சொற்பிரிப்பு
திண்ணனவார் சென்ற நாட்டிடை இல்லை கொல் தீந்தமிழோர்கண்ணென ஓங்கும் கவுணியர் தீபன் கை போல்பொழிந்துவிண்ணின வாய் முல்லை மெல்லரும்பு ஈன மற்றியாம் மெலியஎண்ணின நாள் வழுவாது இரைத்து ஓடி எழுமுகிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

எழுவாள் மதியால் வெதுப்புண் டலமந் தெழுந்துவிம்மித்தொழுவாள் தனக்கின் றருளுங் கொலாந்தொழு நீரவைகைக்குழுவாய் எதிர்ந்த உறிக்கைப் பறிதலைக் குண்டர்தங்கள்கழுவா உடலம் கழுவின ஆக்கிய கற்பகமே.
சொற்பிரிப்பு
எழுவாள் மதியால் வெதுப்புண்டு அலமந்து எழுந்து விம்மித்தொழுவாள் தனக்கு இன்று அருளும் கொலாம் தொழு நீர வைகைக்குழுவாய் எதிர்ந்த உறிக்கைப் பறிதலைக் குண்டர் தங்கள்கழுவா உடலம் கழுவின ஆக்கிய கற்பகமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

கற்பா நறவ மணிகொழுத் துந்து மலைச்சிலம்பாநற்பா மொழிஎழில் ஞானசம் பந்தன் புறவமன்னவிற்பா நுதலிதன் மென்முலை யின்னிளம் செவ்விகண்டிட்டிற்பா விடும்வண்ணம் எண்ணுகின் றாள்அம்ம எம்அனையே.
சொற்பிரிப்பு
கற்பா நறவ மணிகொழித்து உந்து மலைச்சிலம்பாநற்பா மொழி எழில் ஞானசம்பந்தன் புறவம் அன்னவிற்பா நுதலி தன் மென்முலையின் இளம் செவ்வி கண்டிட்டுஇற்பா விடும் வண்ணம் எண்ணுகின்றாள் அம்ம எம் அனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

எம்அனை யாய்எந்தை யாய்என்னை ஆண்டென் துயர்தவிர்த்தசெம்மலர் நீள்முடி ஞானசம் பந்தன் புறவமன்னீர்வெம்முனை வேல்என்ன என்ன மிளிர்ந்து வெளுத்தரிபோன்றும்மன வோஅல்ல வோவந்தென் உள்ளத்தொளிர்வனவே.
சொற்பிரிப்பு
எம் அனையாய் எந்தையாய் என்னை ஆண்டு என் துயர்தவிர்த்தசெம்மலர் நீள்முடி ஞானசம்பந்தன் புறவம் அன்னீர்வெம்முனை வேல் என்ன என்ன மிளிர்ந்து வெளுத்து அரிபோன்றுஉம்மனவோ அல்லவோ வந்தென் உள்ளத்து ஒளிர்வனவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

ஒளிறு மணிப்பணி நாட்டும் உலகத்தும் உம்பருள்ளும்வெளிறு படச்சில நிற்பதுண் டேமிண்டி மீன்உகளும்அளறு வயற்சண்பை நாதன் அமுதப் பதிகமென்னும்களிறு விடப்புகு மேல்தொண்டர் பாடும் கவிதைகளே.
சொற்பிரிப்பு
ஒளிறு மணிப்பணி நாட்டும் உலகத்தும் உம்பர் உள்ளும்வெளிறு படச் சில நிற்பதுண்டே மிண்டி மீன் உகளும்அளறு வயல் சண்பை நாதன் அமுதப் பதிகமென்னும்களிறு விடப் புகுமேல் தொண்டர் பாடும் கவிதைகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

கவிக்குத் தகுவன கண்ணுக் கினியன கேட்கில்இன்பம்செவிக்குத் தகுவன சிந்தைக் குரியன பைந்தரளம்நவிக்கண் சிறுமியர் முற்றில் முகந்துதம் சிற்றில்தொறும்குவிக்கத் திரைபரக் குங்கொச்சை நாதன் குரைகழலே.
சொற்பிரிப்பு
கவிக்குத் தகுவன கண்ணுக்கு இனியன கேட்கில் இன்பம்செவிக்குத் தகுவன சிந்தைக்கு உரியன பைந்தரளம்நவிக்கண் சிறுமியர் முற்றில் முகந்து தம் சிற்றில்தொறும்குவிக்கத் திரை பரக்கும்கொச்சை நாதன் குரைகழலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

கழல்கின்ற ஐங்கணை அந்தியும் அன்றிலும் கால்பரப்பிட்டழல்கின்ற தென்றலும் வந்திங் கடர்ப்பஅன் றாயிழைக்காச்சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன் தன்னைத் தொடர்ந்துபின்போய்உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ இனியின் றுறுகின்றதே.
சொற்பிரிப்பு
கழல்கின்ற ஐங்கணை அந்தியும் அன்றிலும் கால்பரப்பிட்டுஅழல்கின்ற தென்றலும் வந்திங்கு அடர்ப்ப அன்று ஆயிழைக்காச்சுழல்கின்ற நஞ்சம் தணித்தவன் தன்னைத் தொடர்ந்து பின்போய்உழல்கின்ற நெஞ்சம் இங்கு என்னோ இனி இன்று உறுகின்றதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

உறுகின்ற அன்பினோ டொத்திய தாளமும் உள்ளுருகிப்பெறுகின்ற இன்பும் பிறைநுதல் முண்டமும் கண்டவரைத்தெறுகின்ற வாறென்ன செய்தவ மோவந்தென் சிந்தையுள்ளேதுறுகின்ற பாதன் கழுமலம் போலும் துடியிடைக்கே.
சொற்பிரிப்பு
உறுகின்ற அன்பினோடு ஒத்திய தாளமும் உள்ளுருகிப்பெறுகின்ற இன்பும் பிறைநுதல் முண்டமும் கண்டவரைத்தெறுகின்றவாறு என்ன செய்தவமோ வந்தென் சிந்தையுள்ளேதுறுகின்ற பாதன் கழுமலம் போலும் துடியிடைக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

இடையும் எழுதா தொழியலு மாம்இன வண்டுகளின்புடையும் எழுதிலும் பூங்குழல் ஒக்கும்அப் பொன்னனையாள்நடையும் நகையும் தமிழா கரன்தன் புகலிநற்றேன்அடையும் மொழியும் எழுதிடில் சால அதிசயமே.
சொற்பிரிப்பு
இடையும் எழுதாது ஒழியலுமாம் இன வண்டுகளின்புடையும் எழுதிலும் பூங்குழல் ஒக்கும் அப் பொன்னனையாள்நடையும் நகையும் தமிழாகரன் தன் புகலி நற்றேன்அடையும் மொழியும் எழுதிடில் சால அதிசயமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

மேனாட் டமரர் தொழஇருப் பாரும் வினைப்பயன்கள்தானாட் டருநர கிற்றளர் வாரும் தமிழர்தங்கள்கோனாட் டருகர் குழாம்வென்ற கொச்சையர் கோன்கமலப்பூநாட் டடிபணிந் தாரும்அல் லாத புலையருமே.
சொற்பிரிப்பு
மேனாட்டு அமரர் தொழ இருப்பாரும் வினைப்பயன்கள்தானாட்டு அருநரகில் தளர் வாரும் தமிழர் தங்கள்கோனாட்டு அருகர் குழாம் வென்ற கொச்சையர் கோன் கமலப்பூநாட்டடி பணிந்தாரும் அல்லாத புலையருமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

புலையடித் தொண்டனைப் பூசுர னாக்கிப் பொருகயற்கண்மலைமடப் பாவைக்கு மாநட மாடு மணியைஎன்றன்தலையிடைப் பாதனைக் கற்றாங் குரைத்தசம் பந்தனென்னாமுலையிடைப் பொன்கொண்டு சங்கிழந் தாள்என்றன் மொய்குழலே.
சொற்பிரிப்பு
புலையடித் தொண்டனைப் பூசுரன் ஆக்கிப் பொருகயல் கண்மலை மடப்பாவைக்கு மாநட மாடு மணியை என்றன்தலையிடைப் பாதனைக் கற்றாங்கு உரைத்த சம்பந்தன் என்னாமுலையிடைப் பொன் கொண்டு சங்கிழந்தாள் என்றன் மொய்குழலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

38

குழலியல் இன்கவி ஞானசம் பந்தன் குரைகழல்போல்கழலியல் பாதம் பணிந்தேன் உனையும் கதிரவனேதழலியல் வெம்மை தணித்தருள் நீதணி யாதவெம்மைஅழலியல் கான்நடந் தாள்வினை யேன்பெற்ற ஆரணங்கே.
சொற்பிரிப்பு
குழலியல் இன்கவி ஞானசம்பந்தன் குரைகழல் போல்கழலியல் பாதம் பணிந்தேன் உனையும் கதிரவனேதழலியல் வெம்மை தணித்தருள் நீ தணியாத வெம்மைஅழலியல் கான் நடந்தாள் வினையேன் பெற்ற ஆரணங்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

39

அணங்கமர் யாழ்முரித் தாண்பனை பெண்பனை ஆக்கிஅமண்கணங்கழு வேற்றிக் கடுவிடந் தீர்த்துக் கதவடைத்துப்பிணங்கலை நீர்எதிர் ஓடஞ் செலுத்தின வெண்பிறையோடிணங்கிய மாடச் சிரபுரத் தான்தன் இருந்தமிழே.
சொற்பிரிப்பு
அணங்கமர் யாழ்முரித்து ஆண்பனை பெண்பனை ஆக்கி அமண்கணம் கழு ஏற்றிக் கடுவிடம் தீர்த்துக் கதவடைத்துப்பிணங்கலை நீர் எதிர் ஓடம் செலுத்தின வெண்பிறையோடுஇணங்கிய மாடச் சிரபுரத்தான் தன் இருந்தமிழே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

40

இருந்தண் புகலிகோ லக்கா எழில்ஆ வடுதுறைசீர்பொருந்தும் அரத்துறை போனகம் தாளம்நன்பொன்சிவிகைஅருந்திட வொத்தமுத் தீச்செய ஏறஅரன் அளித்தபெருந்தகை சீரினை எம்பர மோநின்று பேசுவதே.
சொற்பிரிப்பு
இருந்தண் புகலி கோலக்கா எழில் ஆவடுதுறை சீர்பொருந்தும் அரத்துறை போனகம் தாளம் நன்பொன் சிவிகைஅருந்திட ஒத்த முத்தீச் செய ஏற அரன் அளித்தபெருந்தகை சீரினை எம்பரமோ நின்று பேசுவதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

41

பேசுந் தகையதன் றேஇன்றும் அன்றும் தமிழ்விரகன்தேசம் முழுதும் மழைமறந் தூண்கெடச் செந்தழற்கைஈசன் திருவரு ளால்எழில் வீழி மிழலையின்வாய்க்காசின் மழைபொழிந் தானென்றிஞ் ஞாலம் கவின்பெறவே.
சொற்பிரிப்பு
பேசுந்தகையது அன்றே இன்றும் அன்றும் தமிழ்விரகன்தேசம் முழுதும் மழை மறந்து ஊண்கெடச் செந்தழற்கைஈசன் திருவருளால் எழில் வீழி மிழலையின் வாய்க்காசின் மழை பொழிந்தான் என்று இஞ் ஞாலம் கவின்பெறவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

42

பெறுவது நிச்சயம் அஞ்சல்நெஞ் சேபிர மாபுரத்துமறுவறு பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துதலால்வெறியுறு கொன்றை மறியுறு செங்கை விடைஎடுத்தபொறியுறு பொற்கொடி எம்பெரு மான்அமர் பொன்னுலகே.
சொற்பிரிப்பு
பெறுவது நிச்சயம் அஞ்சல் நெஞ்சே பிரமாபுரத்துமறுவறு பொற்கழல் ஞானசம்பந்தனை வாழ்த்துதலால்வெறியுறு கொன்றை மறியுறு செங்கை விடைஎடுத்தபொறியுறு பொற்கொடி எம்பெருமான் அமர் பொன்னுலகே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

43

பொன்னார் மதில்சூழ் புகலிக் கரசை அருகர்தங்கள்தென்னாட் டரண்அட்ட சிங்கத் தினைஎஞ் சிவன்இவனென்றந்நாள் குதலைத் திருவாய் மொழிகள் அருளிச் செய்தஎன்னானை யைப்பணி வார்க்கில்லை காண்க யமாலயமே.
சொற்பிரிப்பு
பொன்னார் மதில் சூழ் புகலிக்கு அரசை அருகர் தங்கள்தென்னாட்டு அரண் அட்ட சிங்கத்தினை எம் சிவன் இவனென்றுஅந்நாள் குதலைத் திருவாய் மொழிகள் அருளிச் செய்தஎன்னானையைப் பணிவார்க்கு இல்லை காண்க எமாலயமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

44

மாலையொப் பாகும் பிறைமுன்பு நின்று மணிகுறுக்கிவேலையைப் பாடணைந் தாங்கெழில் மன்மதன் வில்குனித்தகோலைஎப் போதும் பிடிப்பன் வடுப்படு கொக்கினஞ்சூழ்சோலையைக் காழித் தலைவன் மலர்இன்று சூடிடினே.
சொற்பிரிப்பு
மாலை ஒப்பாகும் பிறைமுன்பு நின்று மணிகுறுக்கிவேலையைப் பாடணைத்து ஆங்கெழில் மன்மதன் வில்குனித்தகோலை எப்போதும் பிடிப்பன் வடுப்படு கொக்கினம்சூழ்சோலையைக் காழித் தலைவன் மலர் இன்று சூடிடினே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

45

சூடுநற் றார்த்தமி ழாகரன் தன்பொற் சுடர்வரைத்தோள்கூடுதற் கேசற்ற கொம்பினை நீயும் கொடும்பகைநின்றாடுதற் கேஅத்த னைக்குனை யேநின்னை ஆடரவம்வாடிடக் காரும் மறுவும் படுகின்ற வாண்மதியே.
சொற்பிரிப்பு
சூடுநற்றார்த் தமிழாகரன் தன்பொற்சுடர் வரைத்தோள்கூடுதற்கு ஏசற்ற கொம்பினை நீயும் கொடும்பகை நின்றுஆடுதற்கே அத்தனைக்கு உனையே நின்னை ஆடரவம்வாடிடக் காரும் மறுவும் படுகின்ற வாண்மதியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

46

மதிக்கக் தகுநுதல் மாதொடும் எங்கள் மலையில்வைகித்துதிக்கத் தகுசண்பை நாதன் சுருதி கடந்துழவோர்மிதிக்கக் கமலம் முகிழ்த்ததண் தேனுண்டு மிண்டிவரால்குதிக்கக் குருகிரி யுங்கொச்சை நாடு குறுகுமினே.
சொற்பிரிப்பு
மதிக்கக் தகுநுதல் மாதொடும் எங்கள் மலையில் வைகித்துதிக்கத் தகு சண்பை நாதன் சுருதி கடந்து உழவோர்மிதிக்கக் கமலம் முகிழ்த்த தண் தேனுண்டு மிண்டி வரால்குதிக்கக் குருகு இரியுங் கொச்சை நாடு குறுகுமினே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

47

குறுமனம் முள்கல வாத்தமி ழாகரன் கொச்சையன்னநறுமலர் மென்குழ லாய்அஞ்சல் எம்மூர் நகுமதிசென்றுறுமனை ஒண்சுவர் ஓவியக் கிள்ளைக்கு நும்பதியிற்சிறுமிகள் சென்றிருந் தங்கையை நீட்டுவர் சேயிழையே.
சொற்பிரிப்பு
குறுமனம் உள்கலவாத் தமிழாகரன் கொச்சையன்னநறுமலர் மென்குழலாய் அஞ்சல் எம்மூர் நகுமதி சென்றுஉறுமனை ஒண்சுவர் ஓவியக் கிள்ளைக்கு நும்பதியில்சிறுமிகள் சென்றிருந்து அங்கையை நீட்டுவர் சேயிழையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

48

இழைவளர் ஆகத்து ஞானசம் பந்தன் இருஞ்சுருதிக்கழைவளர் குன்று கடத்தலும் காண்பீர் கடைசியர்நீள்முழைவளர் நண்டு படத்தடஞ் சாலிமுத் துக்கிளைக்கும்மழைவளர் நீள்குடு மிப்பொழில் சூழ்ந்த வளவயலே.
சொற்பிரிப்பு
இழைவளர் ஆகத்து ஞானசம்பந்தன் இருஞ்சுருதிக்கழைவளர் குன்று கடத்தலும் காண்பீர் கடைசியர் நீள்முழைவளர் நண்டு படத் தடம் சாலி முத்துக்கு இளைக்கும்மழைவளர் நீள்குடுமிப் பொழில் சூழ்ந்த வளவயலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

49

வயலார் மருகல் பதிதன்னில் வாளர வாற்கடியுண்டயலா விழுந்த அவனுக் கிரங்கி அறிவழிந்தகயலார் கருங்கண்ணி தன்துயர் தீர்த்த கருணைவெள்ளப்புயலார் தருகையி னான் என்னத் தோன்றிடும் புண்ணியமே.
சொற்பிரிப்பு
வயலார் மருகல் பதி தன்னில் வாள்அரவால் கடியுண்டுஅயலா விழுந்த அவனுக்கு இரங்கி அறிவழிந்தகயலார் கருங்கண்ணி தன்துயர் தீர்த்த கருணைவெள்ளப்புயலார் தருகையினான் என்னத் தோன்றிடும் புண்ணியமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

50

புண்ணிய நாடு புகுவதற் காகப் புலன்அடக்கிஎண்ணிய செய்தொழில் நிற்பதெல் லாருமின் றியானெனக்குநண்ணிய செய்தொழில் ஞானசம் பந்தனை நந்தமர்நீர்க்கண்ணியன் மாடக் கழுமலத் தானைக் கருதுவதே.
சொற்பிரிப்பு
புண்ணிய நாடு புகுவதற்காகப் புலன் அடக்கிஎண்ணிய செய்தொழில் நிற்பது எல்லாரும் இன்று (இ) யான் எனக்குநண்ணிய செய்தொழில் ஞானசம்பந்தனை நந்தமர் நீர்க்கண்ணியன் மாடக் கழுமலத் தானைக் கருதுவதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

51

கருதத் தவஅருள் ஈந்தருள் ஞானசம் பந்தன்சண்பைஇரதக் கிளிமொழி மாதே கலங்கல் இவர்உடலம்பொருதக் கழுநிரை யாக்குவன் நுந்தமர் போர்ப்படையேல்மருதச் சினையில் பொதும்பருள் ஏறி மறைகுவனே.
சொற்பிரிப்பு
கருதத் தவ அருள் ஈந்தருள் ஞானசம்பந்தன் சண்பைஇரதக் கிளிமொழி மாதே கலங்கல் இவர் உடலம்பொருதக் கழுநிரை ஆக்குவன் நுந்தமர் போர்ப்படையேல்மருதச் சினையில் பொதும்பருள் ஏறி மறைகுவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

52

மறைமுழங் குங்குழ லார்கலி காட்ட வயற்கடைஞர்பறைமுழங் கும்புக லித்தமி ழாகரன் பற்றலர்போல்துறைமுழங் குங்கரி சீறி மடங்கல் சுடர்ப்பளிங்கின்அறைமுழங் கும்வழி நீவரிற் சால வரும்பழியே.
சொற்பிரிப்பு
மறைமுழங்கும் குழலார் கலி காட்ட வயற்கடைஞர்பறைமுழங்கும் புகலித் தமிழாகரன் பற்றலர் போல்துறைமுழங்கும் கரி சீறி மடங்கல் சுடர்ப் பளிங்கின்அறைமுழங்கும் வழி நீவரிற் சால வரும் பழியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

53

பழிக்கே தகுகின்ற தின்றிப் பிறைபல் கதிர்விழுந்தவழிக்கே திகழ்தரு செக்கரைக் கொச்சை வயவரென்னும்மொழிக்கே விரும்பி முளரிக் கலமரும் ஓவியர்தம்கிழிக்கே தரும்உரு வத்திவள் வாடிடக் கீள்கின்றதே.
சொற்பிரிப்பு
பழிக்கே தகுகின்றது இன்று இப்பிறை பல்கதிர் விழுந்தவழிக்கே திகழ் தரு செக்கரைக் கொச்சைவயவர் என்னும்மொழிக்கே விரும்பி முளரிக் கலமரும் ஓவியர் தம்கிழிக்கே தரும் உருவத்து இவள் வாடிடக் கீள்கின்றதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

54

கீளரிக் குன்றத் தரவம் உமிழ்ந்த கிளர்மணியின்வாளரிக் கும்வைகை மாண்டனர் என்பர் வயற்புகலித்தாளரிக் கும்மரி யான்அருள் பெற்ற பரசமயகோளரிக் குந்நிக ராத்தமிழ் நாட்டுள்ள குண்டர்களே.
சொற்பிரிப்பு
கீள் அரிக் குன்றத்து அரவம் உமிழ்ந்த கிளர்மணியின்வாள் அரிக்கும் வைகை மாண்டனர் என்பர் வயற் புகலித்தாள் அரிக்கும் அரியான் அருள் பெற்ற பரசமயகோளரிக்கும் நிகராத் தமிழ் நாட்டுள்ள குண்டர்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

55

குண்டகழ் சூழ்தரு கொச்சைத் தலைவன்தன் குன்றகஞ்சேர்வண்டக மென்மலர் வில்லியன் னீர்வரி விற்புருவக்கண்டக வாளி படப்புடை வீழ்செங் கலங்கலொடும்புண்டகக் கேழல் புகுந்ததுண் டோநுங்கள் பூம்புனத்தே.
சொற்பிரிப்பு
குண்டகழ் சூழ்தரு கொச்சைத் தலைவன் தன் குன்றகஞ்சேர்வண்டக மென்மலர் வில்லியன் னீர் வரி வில்புருவக்கண்டக வாளி படப்புடை வீழ் செங்கலங்கலொடும்புண்டகக் கேழல் புகுந்தது உண்டோ நுங்கள் பூம்புனத்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

56

புனத்தெழு கைமதக் குன்றம தாயங்கொர் புன்கலையாய்வனத்தெழு சந்தனப் பைந்தழை யாய்வந்து வந்தடியேன்மனத்தெழு பொற்கழல் ஞானசம் பந்தன்வண் கொச்சையன்னாள்கனத்தெழு கொங்கைக ளாய்அல்கு லாய்த்திவர் கட்டுரையே.
சொற்பிரிப்பு
புனத்தெழு கைம்மதக் குன்றமதாய் அங்கொர் புன்கலையாய்வனத்தெழு சந்தனப் பைந்தழையாய் வந்து வந்தடியேன்மனத்தெழு பொற்கழல் ஞானசம்பந்தன் வண் கொச்சையன்னாள்கனத்தெழு கொங்கைகளாய் அல்கு லாய்த்து இவர் கட்டுரையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

57

கட்டது வேகொண்டு கள்ளுண்டு நுங்கைக ளாற்சுணங்கைஇட்டது வேயன்றி எட்டனைத் தான்இவள் உள்ளுறுநோய்விட்டது வேயன்றி வெங்குரு நாதன்தன் பங்கயத்தின்மட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின் பேதை மகிழ்வுறவே.
சொற்பிரிப்பு
கட்டதுவே கொண்டு கள்ளுண்டு நுங்கைகளாற் சுணங்கைஇட்டதுவே அன்றி எட்டனைத் தான் இவள் உள்ளுறுநோய்விட்டதுவே அன்றி வெங்குரு நாதன் தன் பங்கயத்தின்மட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின் பேதை மகிழ்வுறவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

58

உறவும் பொருளும்ஒண் போகமும் கல்வியும் கல்வியுற்றதுறவும் துறவிப் பயனும் எனக்குச் சுழிந்தபுனல்புறவும் பொழிலும் பொழில்சூழ் பொதும்பும் ததும்பும்வண்டின்நறவும் பொழில்எழிற் காழியர் கோன்திரு நாமங்களே.
சொற்பிரிப்பு
உறவும் பொருளும் ஒண் போகமும் கல்வியும் கல்வியுற்றதுறவும் துறவிப் பயனும் எனக்குச் சுழிந்த புனல்புறவும் பொழிலும் பொழில்சூழ் பொதும்பும் ததும்பும் வண்டின்நறவும் பொழில் எழிற் காழியர் கோன் திருநாமங்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

59

நாம்உகந் தேத்திய ஞானசம் பந்தனை நண்ணலர்போல்ஏமுக வெஞ்சரஞ் சிந்திவல் இஞ்சி இடிபடுக்கத்தீமுகந் தோன்றிகள் தோன்றத் தளவ முகைஅரும்பக்காமுகம் பூமுகம் காட்டிநின் றார்த்தன காரினமே.
சொற்பிரிப்பு
நாம் உகந்து ஏத்திய ஞானசம்பந்தனை நண்ணலர்போல்ஏமுக வெஞ்சரம் சிந்திவல் இஞ்சி இடிபடுக்கத்தீமுகம் தோன்றிகள் தோன்றத் தளவ முகை அரும்பக்காமுகம் பூமுகம் காட்டி நின்று ஆர்த்தன காரினமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

60

காரங் கணைபொழிற் காழிக் கவுணியர் தீபன்நல்லூர்ச்சீரங் கணைநற் பெருமணந் தன்னிற்சிவபுரத்துவாரங் கணைகொங்கை மாதொடும் புக்குறும் போதுவந்தார்ஆரங் கொழிந்தனர் பெற்றதல் லால்அவ் வரும்பதமே.
சொற்பிரிப்பு
காரங்கணை பொழில் காழிக் கவுணியர் தீபன் நல்லூர்ச்சீரங்கணை நற் பெருமணம் தன்னில் சிவபுரத்துவாரங்கணை கொங்கை மாதொடும் புக்குறும் போதுவந்தார்ஆரங்கொழிந்தனர் பெற்றது அல்லால் அவ் அரும்பதமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

61

அரும்பதம் ஆக்கும் அடியரொ டஞ்சலித் தார்க்கரியபெரும்பதம் எய்தலுற் றீர்வந் திறைஞ்சுமின் பேரரவம்வரும்பத நான்மறைக் காழித் தலைவன் மலர்க்கமலத்தரும்பத ஞானசம் பந்தன்என் னானைதன் தாளிணையே.
சொற்பிரிப்பு
அரும்பதம் ஆக்கும் அடியரொடு அஞ்சலித்தார்க்கு அரியபெரும்பதம் எய்தல் உற்றீர் வந்து இறைஞ்சுமின் பேரரவம்வரும்பத நான்மறைக் காழித் தலைவன் மலர்க்கமலத்துஅரும்பத ஞானசம்பந்தன் என்னானை தன் தாளிணையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

62

தாளின் சரணம் தருஞ்சண்பை நாதன் தரியலர்போல்கீளின் மலங்க விலங்கே புகுந்திடுங் கெண்டைகளும்வாளுந் தொலைய மதர்த்திரு காதின் அளவும்வந்துமீளுங் கருங்கண்ணி மின்புரி யாவைத்த மென்னகையே.
சொற்பிரிப்பு
தாளின் சரணம் தரும் சண்பை நாதன் தரியலர் போல்கீளின் மலங்க விலங்கே புகுந்திடும் கெண்டைகளும்வாளும் தொலைய மதர்த்திரு காதின் அளவும்வந்துமீளும் கருங்கண்ணி மின்புரியா வைத்த மென்னகையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

63

நகுகின்ற முல்லைநண் ணார்எரி கண்டத் தவர்கவர்ந்தமிகுகின்ற நன்னிதி காட்டின கொன்றை விரவலர்ஊர்புகுகின்ற தீயெனப் பூத்தன தோன்றிப் புறமவன்கைத்தகுகின்ற கோடல்கள் அன்பரின் றெய்துவர் கார்மயிலே.
சொற்பிரிப்பு
நகுகின்ற முல்லை நண்ணார் எரி கண்டத்தவர் கவர்ந்தமிகுகின்ற நன்னிதி காட்டின கொன்றை விரவலர் ஊர்புகுகின்ற தீயெனப் பூத்தன தோன்றிப் புறவமன் கைத்தகுகின்ற கோடல்கள் அன்பர் இன்று எய்துவர் கார்மயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

64

மயிலேந் தியவள்ளல் தன்னை அளிப்ப மதிபுணர்ந்தஎயிலேந் தியசண்பை நாதன் உலகத் தெதிர்பவர்யார்குயிலேந் தியபொழிற் கொங்கேந் தியகொம்பின் அம்புதழீஇஅயிலேந் தியமலர் கண்டுள னாய்வந்த அண்ணலுக்கே.
சொற்பிரிப்பு
மயிலேந்திய வள்ளல் தன்னை அளிப்ப மதி புணர்ந்தஎயிலேந்திய சண்பை நாதன் உலகத்து எதிர்பவர் யார்குயிலேந்திய பொழிற் கொங்கு ஏந்திய கொம்பின் அம்பு தழீஇஅயிலேந்திய மலர் கண்டுளனாய் வந்த அண்ணலுக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

65

அண்ணல் மணிவளைத் தோள்அரு காசனி சண்பையன்னபெண்ணின் அமிர்தநல் லாள்குழல் நாற்றம் பெடையொடும்பூஞ்சுண்ணம் துதைந்தவண் டேகண்ட துண்டுகொல் தூங்கொலிநீர்த்தண்ணம் பொழில்எழிற் காசினி பூத்தமென் தாதுகளே.
சொற்பிரிப்பு
அண்ணல் மணிவளைத் தோள் அரு காசனி சண்பையன்னபெண்ணின் அமிர்த நல்லாள் குழல் நாற்றம் பெடையொடும் பூஞ்சுண்ணம் துதைந்த வண்டே கண்டது உண்டுகொல் தூங்கொலி நீர்த்துஅண்ணம் பொழில் எழில் காசினி பூத்தமென் தாதுகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

66

தாதுகல் தோய்த்தநஞ் சன்னாசி யார்சட லம்படுத்துத்தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து வாளா துலுக்குகின்றீர்போதியிற் புத்தர்கள் வம்மின் புகலியர் கோனன்னநாட்காதியிட் டேற்றுங் கழுத்திறம் பாடிக் களித்திடவே.
சொற்பிரிப்பு
தாதுகல் தோய்த்த நம் சன்னாசி யார் சடலம் படுத்துத்தூதையில் சிக்கம்கரம் சேர்த்து வாளாது உலுக்குகின்றீர்போதியில் புத்தர்கள் வம்மின் புகலியர் கோன் அன்ன நாட்காதியிட்டு ஏற்றும் கழுத்திறம் பாடிக் களித்திடவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

67

களியுறு தேன்தார்க் கவுணியர் தீபன் கருதலர்போல்வெளியுறு ஞாலம் பகல்இழந் தால்விரை யார்கமலத்தளியுறு மென்மலர்த் தாதளைந் தாழி அமைப்பவரும்துளியுறு வாடையி தாம்மட மானைத் துவள்விப்பதே.
சொற்பிரிப்பு
களியுறு தேன்தார்க் கவுணியர் தீபன் கருதலர்போல்வெளியுறு ஞாலம் பகல் இழந்தால் விரையார் கமலத்துஅளியுறு மென்மலர்த் தாதளைந்து ஆழி அமைப்பவரும்துளியுறு வாடையிதாம் மட மானைத் துவள்விப்பதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

68

தேறும் புனல்தில்லைச் சிற்றம்பலத்துச் சிறந்துவந்துள்ஊறும் அமிர்தைப் பருகிட் டெழுவதோர் உட்களிப்புக்கூறும் வழிமொழி தந்தெனை வாழ்வித்தவன் கொழுந்தேன்நாறும் அலங்கல் தமிழா கரனென்னும் நன்னிதியே.
சொற்பிரிப்பு
தேறும் புனல்தில்லைச் சிற்றம்பலத்துச் சிறந்து வந்துள்ஊறும் அமிர்தைப் பருகிட்டு எழுவதோர் உட்களிப்புக்கூறும் வழிமொழி தந்தெனை வாழ்வித்தவன் கொழுந்தேன்நாறும் அலங்கல் தமிழாகரன் என்னும் நன்னிதியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

69

நிதியுறு வார்அறன் இன்பம்வீ டெய்துவர் என்னவேதம்துதியுறு நீள்வயற் காழியர் கோனைத் தொழாரின்நையநதியுறு நீர்தெளித் தஞ்சல் எனஅண்ணல் அன்றோஎனாமதியுறு வாணுதல் பாதம் பணிந்தனள் மன்னனையே.
சொற்பிரிப்பு
நிதியுறுவார் அறன் இன்பம் வீடெய்துவர் என்னவேதம்துதியுறு நீள்வயல் காழியர் கோனைத் தொழாரின் நையநதியுறு நீர்தெளித்து அஞ்சல் என அண்ணல் அன்றோ எனாமதியுறு வாணுதல் பாதம் பணிந்தனள் மன்னனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

70

மன்னங் கனைசெந் தமிழா கரன்வெற்பில் வந்தொருவர்அன்னங்கள் அஞ்சன்மின் என்றடர் வேழத் திடைவிலங்கிப்பொன்னங் கலைசா வகைஎடுத் தாற்கிவள் பூண்அழுந்திஇன்னந் தழும்புள வாம்பெரும் பாலும்அவ் ஏந்தலுக்கே.
சொற்பிரிப்பு
மன் அங்கு அனை செந்தமிழாகரன் வெற்பில் வந்தொருவர்அன்னங்கள் அஞ்சன்மின் என்று அடர் வேழத்திடை விலங்கிப்பொன்னம் கலை சா வகை எடுத்தாற்கு இவள் பூண் அழுந்திஇன்னம் தழும்புளவாம் பெரும் பாலும் அவ் ஏந்தலுக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

71

ஏந்தும் உலகுறு வீர்எழில் நீலநக் கற்கும்இன்பப்பூந்தண் புகலூர் முருகற்கும் தோழனைப் போகமார்ப்பைக்காந்துங் கனலிற் குளிர்படுத் துக்கடற் கூடலின்வாய்வேந்தின் துயர்தவிர்த் தானைஎப் போதும் விரும்புமினே.
சொற்பிரிப்பு
ஏந்தும் உலகுறுவீர் எழில் நீலநக்கற்கும் இன்பப்பூந்தண் புகலூர் முருகற்கும் தோழனைப் போகமார்ப்பைக்காந்தும் கனலிற் குளிர்படுத்துக் கடற் கூடலின்வாய்வேந்தின் துயர் தவிர்த்தானை எப்போதும் விரும்புமினே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

72

விரும்பும் புதல்வனை மெய்யரிந் தாக்கிய இன்னமிர்தம்அரும்பும் புனற்சடை யாய்உண் டருள் என் றடிபணிந்தஇரும்பின் சுடர்க்களிற் றான்சிறுத் தொண்டனை ஏத்துதிரேல்சுரும்பின் மலர்த்தமி ழாகரன் பாதத் தொடர்வெளிதே.
சொற்பிரிப்பு
விரும்பும் புதல்வனை மெய்யரிந்து ஆக்கிய இன்னமிர்தம்அரும்பும் புனற்சடையாய் உண்டருள் என்றடி பணிந்தஇரும்பின் சுடர்க்களிற்றான் சிறுத் தொண்டனை ஏத்துதிரேல்சுரும்பின் மலர்த் தமிழாகரன் பாதத் தொடர்வு எளிதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

73

எளிவந்த வாஎழிற் பூவரை ஞாண்மணித் தார்தழங்கத்துளிவந்த கண்பிசைந் தேங்கலும் எங்கள் அரன்துணையாம்கிளிவந்த சொல்லிபொற் கிண்ணத்தின் ஞான அமிர்தளித்தஅளிவந்த பூங்குஞ்சி யின்சொற் சிறுக்கன்தன் ஆரருளே.
சொற்பிரிப்பு
எளிவந்தவா எழிற் பூவரை ஞாண் மணித்தார் தழங்கத்துளிவந்த கண்பிசைந்து ஏங்கலும் எங்கள் அரன் துணையாம்கிளிவந்த சொல்லி பொற்கிண்ணத்தின் ஞான அமிர்தளித்தஅளிவந்த பூங்குஞ்சியின் சொற் சிறுக்கன் தன் ஆரருளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

74

அருளும் தமிழா கரன்நின் அலங்கல்தந் தென்பெயரச்சுருளுங் குழலியற் கீந்திலை யேமுன்பு தூங்குகரத்துருளும் களிற்றினொ டோட்டரு வானை அருளியன்றேமருளின் மொழிமட வாள்பெயர் என்கண் வருவிப்பதே.
சொற்பிரிப்பு
அருளும் தமிழாகரன் நின் அலங்கல் தந்தென்பெயரச்சுருளும் குழலியற்கு ஈந்திலையே முன்பு தூங்குகரத்துஉருளும் களிற்றினொடு ஓட்டரு வானை அருளியன்றேமருளின் மொழி மடவாள் பெயர் என்கண் வருவிப்பதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

75

வருவார் உருவின் வழிவழி வைத்த வனமருந்தும்திருவார் இருந்த செழுநகர்ச் செவ்வித் திருவடிக்காள்தருவான் தமிழா கரன்கரம் போற்சலம் வீசக்கண்டுவெருவா வணங்கொண்டல் கள்மிண்டி வானத்து மின்னியவே.
சொற்பிரிப்பு
வருவார் உருவின் வழிவழி வைத்த வனமருந்தும்திருவார் இருந்த செழுநகர்ச் செவ்வித் திருவடிக்கு ஆள்தருவான் தமிழாகரன் கரம் போல் சலம் வீசக்கண்டுவெருவா வணம் கொண்டல்கள் மிண்டிவானத்து மின்னியவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

76

மின்னார் குடுமி நெடுவெற் பகங்கொங்கில் வீழ்பனிநோய்தன்னார் வழிகெட் டழிந்தமை சொல்லுவர் காண்இறையேமன்னார் பரிசனத் தார்மேற் புகலும் எவர்க்கும்மிக்கநன்னா வலர்பெரு மான்அரு காசனி நல்கிடவே.
சொற்பிரிப்பு
மின்னார் குடுமி நெடு வெற் பகங் கொங்கில் வீழ்பனிநோய்தன்னார் வழிகெட்டு அழிந்தமை சொல்லுவர் காண் இறையேமன்னார் பரிசனத்தார் மேற் புகலும் எவர்க்கு மிக்கநன்னாவலர் பெருமான் அரு காசனி நல்கிடவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

77

நல்கென் றடியின் இணைபணி யார்சண்பை நம்பெருமான்பல்கும் பெரும்புகழ் பாடகில் லார்சிலர் பாழ்க்கிறைத்திட்டொல்கும் உடம்பின ராய்வழி தேடிட் டிடறிமுட்டிப்பில்கும் இடம்அறி யார்கெடு வார்உறு பேய்த்தனமே.
சொற்பிரிப்பு
நல்கு என்று அடியின் இணை பணியார் சண்பை நம்பெருமான்பல்கும் பெரும்புகழ் பாடகில்லார் சிலர் பாழ்க்கு இறைத்திட்டுஒல்கும் உடம்பினராய் வழி தேடிட்டு இடறிமுட்டிப்பில்கும் இடம் அறியார் கெடுவார் உறு பேய்த்தனமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

78

தனமே தருபுகழ்ச் சைவ சிகாமணி தன்அருள்போல்மனமே புகுந்த மடக்கொடி யேமலர் மேல்இருந்தஅனமே அமிர்தக் குமுதச் செவ்வாய்உங்கள் ஆயமென்னும்இனமே பொலியவண் டாடெழிற் சோலையுள் எய்துகவே.
சொற்பிரிப்பு
தனமே தரு புகழ்ச் சைவ சிகாமணி தன்அருள்போல்மனமே புகுந்த மடக்கொடியே மலர் மேல்இருந்தஅனமே அமிர்தக் குமுதச் செவ்வாய் உங்கள் ஆயமென்னும்இனமே பொலிய வண்டாடு எழிற் சோலையுள் எய்துகவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

79

உகட்டித்து மோட்டு வராலினம் மேதி முலைஉரிஞ்சஅகட்டிற் சொரிபால் தடம்நிறை கொச்சை வயத்தரசைத்தகட்டில் திகழ்மணிப் பூண்தமி ழாகரன் தன்னையல்லால்பகட்டில் பொலியினும் வேண்டேன் ஒருவரைப் பாடுதலே.
சொற்பிரிப்பு
உகட்டித்து மோட்டு வரால் இனம் மேதி முலை உரிஞ்சஅகட்டிற் சொரிபால் தடம் நிறை கொச்சைவயத்து அரசைத்தகட்டில் திகழ்மணிப் பூண் தமிழாகரன் தன்னையல்லால்பகட்டில் பொலியினும் வேண்டேன் ஒருவரைப் பாடுதலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

80

பாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில்பெற்றநீடிய சீர்த்திரு ஞானசம் பந்தன் நிறைபுகழான்நேடிய பூந்திரு நாவுக் கரசோ டெழில்மிழலைக்கூடிய கூட்டத்தி னால்உள தாய்த்திக் குவலயமே.
சொற்பிரிப்பு
பாடிய செந்தமிழால் பழங்காசு பரிசில் பெற்றநீடிய சீர்த் திருஞானசம்பந்தன் நிறைபுகழான்நேடிய பூந் திருநாவுக்கரசோடு எழில் மிழலைக்கூடிய கூட்டத்தினால் உளதாய்த்து இக்குவலயமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

81

வலையத் திணிதோள் மிசைமழ வேற்றி மனைப்புறத்துநிலைஎத் தனைபொழு தோகண்ட தூரனை நீதிகெட்டார்குலையக் கழுவின் குழுக்கண்ட வன்திகழ் கொச்சையன்னசிலையொத்த வாள்நுதல் முன்போல் மலர்க திருக்கண்களே.
சொற்பிரிப்பு
வலையத் திணிதோள் மிசை மழ வேற்றி மனைப்புறத்துநிலை எத்தனை பொழுதோ கண்டது ஊரனை நீதிகெட்டார்குலையக் கழுவின் குழுக்கண்டவன் திகழ் கொச்சையன்னசிலையொத்த வாள்நுதல் முன்போல் மலர்க திருக்கண்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

82

கண்ணார் திருநுத லோன்கோலக் காவில் கரநொடியால்பண்ணார் தரப்பாடு சண்பையர் கோண்பாணி நொந்திடுமென்றெண்ணா எழுத்தஞ்சும் இட்டபொன் தாளங்கள் ஈயக்கண்டும்மண்ணார் சிலர்சண்பை நாதனை ஏத்தார் வருந்துவதே.
சொற்பிரிப்பு
கண்ணார் திருநுதலோன் கோலக்காவில் கர நொடியால்பண்ணார் தரப்பாடு சண்பையர் கோண் பாணி நொந்திடுமென்றுஎண்ணா எழுத்து அஞ்சும் இட்ட பொற் தாளங்கள் ஈயக்கண்டும்மண்ணார் சிலர் சண்பை நாதனை ஏத்தார் வருந்துவதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

83

வருந்துங் கொலாங்கழல் மண்மிசை ஏகிடின் என்றுமென்றார்த்திருந்தும் புகழ்ச்சண்பை ஞானசம் பந்தற்குச் சீர்மணிகள்பொருந்துஞ் சிவிகை கொடுத்தனன் காண்புண ரித்திகழ்நஞ்சருந்தும் பிரான்நம் அரத்துறை மேய அரும்பொருளே.
சொற்பிரிப்பு
வருந்தும் கொலாம் கழல் மண்மிசை ஏகிடின் என்று மென்றார்த்திருந்தும் புகழ் சண்பை ஞானசம்பந்தற்குச் சீர்மணிகள்பொருந்தும் சிவிகை கொடுத்தனன் காண் புணரித் திகழ் நஞ்சுஅருந்தும் பிரான் நம் அரத்துறை மேய அரும்பொருளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

84

பொருளென என்னைத்தன் பொற்கழல் காட்டிப் புகுந்தெனக்கிங்கருளிய சீர்த்திரு ஞானசம் பந்தன் அருளிலர்போல்வெருளின மானின்மென் நோக்கியை விட்டு விழுநிதியின்திரளினை ஆதரித் தானன்று சாலஎன் சிந்தனைக்கே.
சொற்பிரிப்பு
பொருளென என்னைத் தன் பொற்கழல் காட்டிப் புகுந்து எனக்கிங்குஅருளிய சீர்த் திருஞானசம்பந்தன் அருளிலர் போல்வெருளின மானின் மென் நோக்கியை விட்டு விழுநிதியின்திரளினை ஆதரித்தான் அன்று சால என் சிந்தனைக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

85

சிந்தையைத் தேனைத் திருவா வடுதுறை யுள்திகழும்எந்தையைப் பாடல் இசைத்துத் தொலையா நிதியம்எய்தித்தந்தையைத் தீத்தொழில் மூட்டிய கோன்சரண் சார்விலரேல்நிந்தையைப் பெற்றொழி யாதிரந் தேகரம் நீட்டுவரே.
சொற்பிரிப்பு
சிந்தையைத் தேனைத் திரு வாவடுதுறையுள் திகழும்எந்தையைப் பாடல் இசைத்துத் தொலையா நிதியம் எய்தித்தந்தையைத் தீத்தொழில் மூட்டிய கோன் சரண் சார்விலரேல்நிந்தையைப் பெற்று ஒழியாது இரந்தே கரம் நீட்டுவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

86

நீட்டுவ ரோதத்தொ டேறிய சங்கம் நெகுமுளரித்தோட்டுவெண் முத்தம் சொரிசண்பை நாதன் தொழாதவரில்வேட்டுவர் வேட்டதண் ணீரினுக் குண்ணீர் உணக்குழித்தகாட்டுவர் ஊறல் பருகுங் கொலாம்எம் கணங்குழையே.
சொற்பிரிப்பு
நீட்டுவர் ஓதத்தொடு ஏறிய சங்கம் நெகு முளரித்தோட்டு வெண்முத்தம் சொரி சண்பை நாதன் தொழாதவரின்வேட்டுவர் வேட்ட தண்ணீரினுக்கு உண்ணீர் உணக்குழித்தகாட்டுவர் ஊறல் பருகும் கொலாம் எம் கணங்குழையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

87

குழைக்கின்ற கொன்றைபொன் போல மலரநுங் கூட்டமெல்லாம்அழைக்கின்ற கொண்டல் இயம்புன் னிலையகன் றார்வரவுபிழைக்கின் றதுகொலென் றஞ்சியொண் சண்பைப் பிரான்புறவத்திழைக்கின்ற கூடல் முடியஎண் ணாத இளங்கொடிக்கே.
சொற்பிரிப்பு
குழைக்கின்ற கொன்றை பொன்போல மலர நும் கூட்டமெல்லாம்அழைக்கின்ற கொண்டல் இயம்பு ஒன்று இலை அகன்றார் வரவுபிழைக்கின்றது கொலென்று அஞ்சி ஒண் சண்பைப் பிரான் புறவத்துஇழைக்கின்ற கூடல் முடிய எண்ணாத இளங்கொடிக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

88

கொடித்தேர் அவுணர் குழாம்அனல் ஊட்டிய குன்றவில்லிஅடித்தேர்கருத்தின் அருகா சனியை அணியிழையார்முடித்தேர் கமலம் கவர்வான் முரிபுரு வச்சிலையால்வடித்தேர் நயனக் கணையிணை கோத்து வளைத்தனரே.
சொற்பிரிப்பு
கொடித் தேர் அவுணர் குழாம் அனல் ஊட்டிய குன்றவில்லிஅடித்தேர் கருத்தின் அருகா சனியை அணியிழையார்முடித்தேர் கமலம் கவர்வான் முரி புருவச் சிலையால்வடித்தேர் நயனக் கணையிணை கோத்து வளைத்தனரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

89

வளைபடு தண்கடல் கொச்சை வயவன் மலர்க்கழற்கேவளைபடு நீண்முடி வார்புன லூரன்தன் நீரிலங்குவளைபடு கண்ணியர் தம்பொதுத் தம்பலம் நாறும்இந்தவளைபடு கிங்கிணிக் கால்மைந்தன் வாயின் மணிமுத்தமே.
சொற்பிரிப்பு
வளைபடு தண்கடல் கொச்சை வயவன் மலர்க்கழற்கேவளைபடு நீண்முடி வார்புனல் ஊரன் தன் நீரிலங்குவளைபடு கண்ணியர் தம் பொதுத் தம்பலம் நாறும் இந்தவளைபடு கிங்கிணிக் கால் மைந்தன் வாயின் மணிமுத்தமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

90

முத்தன வெண்ணகை யார்மயல் மாற்றி முறைவழுவாதெத்தனை காலம்நின் றேத்தும் அவரினும் என்பணிந்தபித்தனை எங்கள் பிரானை அணைவ தெளிதுகண்டீர்அத்தனை ஞானசம் பந்தனைப் பாதம் அடைந்தவர்க்கே.
சொற்பிரிப்பு
முத்தன வெண்ணகையார் மயல் மாற்றி முறை வழுவாதுஎத்தனை காலம் நின்றேத்தும் அவரினும் என்பு அணிந்தபித்தனை எங்கள் பிரானை அணைவது எளிது கண்டீர்அத்தனை ஞானசம்பந்தனைப் பாதம் அடைந்தவர்க்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

91

அடைத்தது மாமறைக் காடர்தம் கோயிற் கதவினையன்றுடைத்தது பாணன்தன் யாழின் ஒலியை உரகவிடம்துடைத்தது தோணி புரத்துக் கிறைவன் சுடரொளிவாய்படைத்தது தண்மையை நள்ளாற் றரசு பணித்திடவே.
சொற்பிரிப்பு
அடைத்தது மாமறைக் காடர் தம் கோயில் கதவினை அன்றுஉடைத்தது பாணன் தன் யாழின் ஒலியை உரக விடம்துடைத்தது தோணிபுரத்துக்கு இறைவன் சுடரொளிவாய்படைத்தது தண்மையை நள்ளாற்று அரசு பணித்திடவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

92

பணிபடு நுண்ணிடை பாதம் பொறாபல காதம்என்றுதணிபடும் இன்சொற்க ளால்தவிர்த் தேற்குத் தழல்உமிழ்கான்மணிபடு பொற்கழல் ஞானசம் பந்தன் மருவலர்போல்துணிபடு வேலன்ன கண்ணியென் னோவந்து தோன்றியதே.
சொற்பிரிப்பு
பணிபடு நுண்ணிடை பாதம் பொறா பல காதம் என்றுதணிபடும் இன்சொற்களால் தவிர்த் தேற்குத் தழல் உமிழ் கான்மணிபடு பொற்கழல் ஞானசம்பந்தன் மருவலர்போல்துணிபடு வேலன்ன கண்ணி யென்னோ வந்து தோன்றியதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

93

தோன்றல்தன் னோடுடன் ஏகிய சுந்தரப் பூண்முலையைஈன்றவ ரேஇந்த ஏந்திழை யாரவர் இவ்வளவில்வான்றவர் சூழுந் தமிழா கரன்தன் வடவரையேபோன்றபொன் மாடக் கழுமல நாடு பொருந்துவரே.
சொற்பிரிப்பு
தோன்றல் தன்னோடுடன் ஏகிய சுந்தரப் பூண்முலையைஈன்றவரே இந்த ஏந்திழையார் அவர் இவ்வளவில்வான்றவர் சூழும் தமிழா கரன் தன் வடவரையேபோன்ற பொன்மாடக் கழுமல நாடு பொருந்துவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

94

பொருந்திடு ஞானத் தமிழா கரன்பதி பொற்புரிசைதிருந்திய தோணி புரத்துக் கிறைவன் திருவருளால்கருந்தடம் நீரெழு காலையில் காகூ கழுமலமென்றிருந்திட வாம்என்று வானவ ராகி இயங்கியதே.
சொற்பிரிப்பு
பொருந்திடு ஞானத் தமிழா கரன் பதி பொற்புரிசைதிருந்திய தோணிபுரத்துக்கு இறைவன் திருவருளால்கருந்தடம் நீரெழு காலையில் காகூ கழுமலமென்றுஇருந்திடவாம் என்று வானவராகி இயங்கியதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

95

இயலா தனபல சிந்தைய ராய்இய லுங்கொல்என்றுமுயலா தனவே முயன்றுவன் மோகச் சுழிஅழுந்திச்செயலார் வரைமதில் காழியர் கோன்திரு நாமங்களுக்கயலார் எனப்பல காலங்கள் போக்குவர் ஆதர்களே.
சொற்பிரிப்பு
இயலாதன பல சிந்தையராய் இயலுங்கொல் என்றுமுயலாதனவே முயன்று வன் மோகச்சுழி அழுந்திச்செயலார் வரைமதில் காழியர் கோன் திருநாமங்களுக்குஅயலார் எனப் பல காலங்கள் போக்குவர் ஆதர்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

96

ஆதர வும்பயப் பும்இவள் எய்தினள் என்றயலார்மாதர் அவஞ்சொல்லி என்னை நகுவது மாமறையின்ஓதர வம்பொலி காழித் தமிழா கரனொடன்றேதீதர வம்பட அன்னைஎன் னோபல செப்புவதே.
சொற்பிரிப்பு
ஆதரவும் பயப்பும் இவள் எய்தினள் என்று அயலார்மாதர் அவஞ்சொல்லி என்னை நகுவது மாமறையின்ஓது அரவம் பொலி காழித் தமிழாகரனொடு அன்றேதீதரவம் பட அன்னை என்னோ பல செப்புவதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

97

செப்பிய என்ன தவம்முயன் றேன்நல்ல செந்தமிழால்ஒப்புடை மாலைத் தமிழா கரனை உணர்வுடையோர்கற்புடை வாய்மொழி ஏத்தும் படிகத றிட்டிவரமற்படு தொல்லைக் கடல்புடை சூழ்தரு மண்ணிடையே.
சொற்பிரிப்பு
செப்பிய என்ன தவம் முயன்றேன் நல்ல செந்தமிழால்ஒப்புடை மாலைத் தமிழா கரனை உணர்வுடையோர்கற்புடை வாய்மொழி ஏத்தும் படி கதறிட்டு இவரமற்படு தொல்லைக் கடல் புடை சூழ்தரு மண்ணிடையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

98

மண்ணில் திகழ்சண்பை நாதனை வாதினில் வல்அமணைப்பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம் பந்த வினைஅறுக்கும்கண்ணைக் கதியைத் தமிழா கரனைஎங் கற்பகத்தைத்திண்ணற் றொடையல் கவுணியர் தீபனைச் சேர்ந்தனமே.
சொற்பிரிப்பு
மண்ணில் திகழ் சண்பை நாதனை வாதினில் வல் அமணைப்பண்ணைக் கழுவின் நுதி வைத்து எம் பந்த வினை அறுக்கும்கண்ணைக் கதியைத் தமிழாகரனை எம் கற்பகத்தைத்திண்ணத் தொடையல் கவுணியர் தீபனைச் சேர்ந்தனமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

99

சேரும் புகழ்த்திரு ஞானசம் பந்தனை யான்உரைத்தபேருந் தமிழ்ப்பா இவைவல் லவர்பெற்ற இன்புலகம்காருந் திருமிடற் றாய்அரு ளாய்என்று கைதொழுவர்நீரும் மலரும் கொளாநெடு மாலும் பிரமனுமே.
சொற்பிரிப்பு
சேரும் புகழ்த் திருஞானசம்பந்தனை யான் உரைத்தபேரும் தமிழ்ப்பா இவை வல்லவர் பெற்ற இன்புலகம்காரும் திருமிடற்றாய் அருளாய் என்று கைதொழுவர்நீரும் மலரும் கொளா நெடுமாலும் பிரமனுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

100

பிரமா புரம்வெங் குருசண்பை தோணி புகலிகொச்சைசிரமார் புரம்நற் புறவந் தராய்காழி வேணுபுரம்வரமார் பொழில்திரு ஞானசம் பந்தன் பதிக்குமிக்கபரமார் கழுமலம் பன்னிரு நாமம்இப் பாரகத்தே.
சொற்பிரிப்பு
பிரமாபுரம் வெங்குரு சண்பை தோணி புகலி கொச்சைசிரமார் புரம் நற்புறவம் தராய் காழி வேணுபுரம்வரமார் பொழில் திருஞானசம்பந்தன் பதிக்கு மிக்கபரமார் கழுமலம் பன்னிரு நாமம் இப்பாரகத்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

101

பாரகலத் துன்பம் கடந்தமர ராற்பணியும்ஏரகலம் பெற்றாலும் இன்னாதால் - காரகிலின்தூமம் கமழ்மாடத் தோணி புரத்தலைவன்நாமஞ் செவிக்கிசையா நாள்.
சொற்பிரிப்பு
பாரகலத் துன்பம் கடந்து அமரரால் பணியும்ஏரகலம் பெற்றாலும் இன்னாதால் – கார்அகிலின்தூமம் கமழ் மாடத் தோணிபுரத் தலைவன்நாமம் செவிக்கு இசையா நாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.