திருமுறை 11 · 11.034 · 90

திருத்தொண்டர் திருவந்தாதி

அருளியவர்
நம்பியாண்டார் நம்பி

1

பொன்னி வடகரை சேர்நாரை யூரில் புழைக்கைமுகமன்னன் அறுபத்து மூவர் பதிதேம் மரபுசெயல்பன்னஅத் தொண்டத் தொகைவகை பல்கும்அந் தாதிதனைச்சொன்ன மறைக்குல நம்பிபொற் பாதத் துணைதுணையே.
சொற்பிரிப்பு
பொன்னி வடகரைசேர் நாரையூரில் புழைக்கை முகமன்னன் அறுபத்து மூவர் பதிதேம் மரபுசெயல்பன்னஅத் தொண்டத் தொகை வகை பல்கும் அந்தாதிதனைச்சொன்ன மறைக்குல நம்பி பொற்பாதத் துணை துணையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

செப்பத் தகுபுகழ்த் தில்லைப் பதியிற் செழுமறையோர்ஒப்பப் புவனங்கள் மூன்றினும் உம்பரின் ஊர்எரித்தஅப்பர்க் கமுதத் திருநடர்க் கந்திப் பிறையணிந்ததுப்பர்க் குரிமைத் தொழில்புரி வோர்தமைச் சொல்லுதுமே.
சொற்பிரிப்பு
செப்பத் தகுபுகழ்த் தில்லைப் பதியில் செழுமறையோர்ஒப்பப் புவனங்கள் மூன்றினும் உம்பரின் ஊர் எரித்தஅப்பர்க்கு அமுதத் திருநடர்க்கு அந்திப் பிறை அணிந்ததுப்பர்க்கு உரிமைத் தொழில் புரிவோர் தமைச் சொல்லுதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

சொல்லச் சிவன்திரு ஆணைதன்தூமொழி தோள்நசையைஒல்லைத் துறந்துரு மூத்ததற் பின்உமை கோன் அருளால்வில்லைப் புரைநுத லாளோ டிளமைபெற் றின்பமிக்கான்தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே.
சொற்பிரிப்பு
சொல்லச் சிவன் திரு ஆணை தன் தூமொழி தோள் நசையைஒல்லைத் துறந்து உரு மூத்ததன் பின் உமைகோன் அருளால்வில்லைப் புரை நுதலாளோடு இளமைபெற்று இன்பம் மிக்கான்தில்லைத் திருநீலகண்டக் குயவனாம் செய் தவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

செய்தவர் வேண்டிய தியாதும் கொடுப்பச் சிவன்தவனாய்க்கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமேமைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந்தெய்திய காவிரிப் பூம்பட் டினத்துள் இயற்பகையே.
சொற்பிரிப்பு
செய்தவர் வேண்டியது யாதும் கொடுப்பச் சிவன் தவனாய்க்கைதவம் பேசி ‘நின் காதலியைத் தருக’ என்றலுமேமைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்ந்த பெரும்புகழ் வந்துஎய்திய காவிரிப் பூம்பட் டினத்துள் இயற்பகையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

இயலா விடைச்சென்ற மாதவற் கின்னமு தாவிதைத்தவயலார் முளைவித்து வாரி மனைஅலக் கால்வறுத்துச்செயலார் பயிர்விழுத் தீங்கறி ஆக்கும் அவன்செழுநீர்க்கயலார் இளையான் குடியுடை மாறன்எங் கற்பகமே.
சொற்பிரிப்பு
இயலா இடைச் சென்ற மாதவற்கு இன்அமுதா விதைத்தவயல் ஆர் முளை வித்து வாரி மனை அலக்கால் வறுத்துச்செயல் ஆர் பயிர் விழுத் தீங்கறி ஆக்கும் அவன் செழுநீர்க்கயல் ஆர் இளையான்குடி உடை மாறன் எம் கற்பகமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கற்றநன் மெய்த்தவன் போல்ஒரு பொய்த்தவன் காய்சினத்தால்செற்றவன் தன்னை அவனைச் செறப்புக லும்திருவாய்மற்றவன் ‘தத்தா நமரே’ எனச்சொல்லி வான்உலகம்பெற்றவன் சேதிபன் மெய்ப்பொரு ளாம்என்று பேசுவரே.
சொற்பிரிப்பு
கற்ற நன் மெய்த்தவன் போல் ஒரு பொய்த்தவன் காய்சினத்தால்செற்றவன் தன்னை அவனைச் செறப்புகலும் திருவாய்மற்றவன் `தத்தா! நமரே' எனச்சொல்லி வான் உலகம்பெற்றவன் சேதிபன் மெய்ப்பொருளாம் என்று பேசுவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பேசும் பெருமையவ் வாரூரனையும் பிரானவனாம்ஈசன் தனையும் புறகுதட் டென்றவன் ஈசனுக்கேநேசன் எனக்கும் பிரான்மனைக் கேபுக நீடுதென்றல்வீசும் பொழில்திருச் செங்குன்றம் மேய விறன்மிண்டனே.
சொற்பிரிப்பு
பேசும் பெருமை அவ் ஆரூரனையும் பிரான் அவனாம்ஈசன் தனையும் புறகு தட்டு என்றவன் ஈசனுக்கேநேசன் எனக்கும் பிரான் மனைக்கே புக நீடு தென்றல்வீசும் பொழில் திருச்செங்குன்றம் மேய விறன்மிண்டனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மிண்டும் பொழில்பழை யாறை அமர்நீதி வெண்பொடியின்முண்டம் தரித்த பிராற்குநல் லூரின்முன் கோவணம்நேர்கொண்டிங் கருளென்று தன்பெருஞ் செல்வமும் தன்னையுந்தன்துண்ட மதிநுத லாளையும் ஈந்த தொழிலினனே.
சொற்பிரிப்பு
மிண்டும் பொழில் பழையாறை அமர்நீதி வெண்பொடியின்முண்டம் தரித்த பிராற்கு நல்லூரின் முன் ‘கோவணம் நேர்கொண்டுஇங்கு அருள்’ என்று தன்பெரும் செல்வமும் தன்னையும் தன்துண்ட மதிநுதலாளையும் ஈந்த தொழிலினனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

தொழுதும் வணங்கியும் மாலயன் தேடரும் சோதிசென்றாங்கெழுதும் தமிழ்ப்பழ ஆவணம் காட்டி எனக்குன்குடிமுழுதும் அடிமைவந் தாட்செய் எனப்பெற்ற வன்முரல்தேன்ஒழுகு மலரின்நற் றார்எம்பி ரான்நம்பி யாரூரனே.
சொற்பிரிப்பு
தொழுதும் வணங்கியும் மால் அயன் தேடரும் சோதி சென்று ஆங்குஎழுதும் தமிழ்ப் பழ ஆவணம் காட்டி ‘எனக்கு உன் குடிமுழுதும் அடிமை; வந்து ஆட்செய்’ எனப் பெற்றவன் முரல்தேன்ஒழுகும் மலரின் நல்தார் எம்பிரான் நம்பி ஆரூரனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஊர்மதில் மூன்றட்ட உத்தமற் கென்றோர் உயர்தவத்தோன்தார்மலர் கொய்யா வருபவன் தண்டின் மலர்பறித்தஊர்மலை மேற்கொள்ளும் பாகர் உடல்துணி யாக்குமவன்ஏர்மலி மாமதில் சூழ்கரு வூரில் எறிபத்தனே.
சொற்பிரிப்பு
ஊர்மதில் மூன்று அட்ட உத்தமற்கு என்றோர் உயர் தவத்தோன்தார் மலர் கொய்யா வருபவன் தண்டின் மலர் பறித்தஊர்மலை மேற்கொள்ளும் பாகர் உடல் துணி ஆக்கும் அவன்ஏர்மலி மாமதில் சூழ் கருவூரில் எறிபத்தனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

பத்தனை ஏனாதி நாதனைப் பார்நீ டெயினைதன்னுள்அத்தனைத் தன்னோ டமர்மலைந் தான்நெற்றி நீறுகண்டுகைத்தனி வாள்வீ டொழிந்தவன் கண்டிப்ப நின்றருளும்நித்தனை ஈழக் குலதீபன் என்பர்இந் நீள்நிலத்தே.
சொற்பிரிப்பு
பத்தனை ஏனாதி நாதனைப் பார் நீடு எயினை தன்னுள்அத்தனைத் தன்னோடு அமர் மலைந்தான் நெற்றி நீறு கண்டுகைத்தனி வாள் வீடு ஒழிந்தவன் கண்டிப்ப நின்றருளும்நித்தனை ஈழக் குலதீபன் என்பர் இந்நீள் நிலத்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

நிலத்தில் திகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மேல்நலத்தில் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுள்நடுங்கிவலத்தில் கடுங்கணை யால்தன் மலர்க்கண் இடந்தப்பினான்குலத்திற் கிராதன்நம் கண்ணப்ப னாம்என்று கூறுவரே.
சொற்பிரிப்பு
நிலத்தில் திகழ் திருக்காளத்தியார் திரு நெற்றியின்மேல்நலத்தில் பொழிதரு கண்ணில் குருதிகண்டு உள்நடுங்கிவலத்தில் கடுங்கணையால் தன் மலர்க்கண் இடந்து அப்பினான்குலத்தில் கிராதன் நம் கண்ணப்பனாம் என்று கூறுவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற் பூட்டி எழிற்பனந்தாள்சாய்ந்த சிவன்நிலைத் தான்என்பர் காதலி தாலிகொடுத்தாய்ந்தநற் குங்குலி யங்கொண் டனற்புகை காலனைமுன்காய்ந்த அரற்கிட்ட தென்கட வூரில் கலயனையே.
சொற்பிரிப்பு
ஏய்ந்த கயிறு தன் கண்டத்திற்பூட்டி எழில் பனந்தாள்சாய்ந்த சிவன் நிலைத்தான் என்பர் காதலி தாலி கொடுத்துஆய்ந்த நல் குங்குலியம் கொண்டு அனல்புகை காலனை முன்காய்ந்த அரற்கு இட்ட தென்கட வூரில் கலையனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

கலச முலைக்கன்னி காதற் புதல்வி கமழ்குழலைநலசெய் தவத்தவன் பஞ்ச வடிக்கிவை நல்கெனலும்அலசும் எனக்கரு தாதவள் கூந்தல் அரிந்தளித்தான்மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ் சாறன் எனும்வள்ளலே.
சொற்பிரிப்பு
கலச முலைக் கன்னி காதல் புதல்வி கமழ் குழலைநல செய் தவத்தவன் பஞ்ச வடிக்கு இவை நல்க எனலும்அலசும் எனக் கருதாது அவள் கூந்தல் அரிந்து அளித்தான்மலைசெய் மதில் கஞ்சை மானக்கஞ் சாறன் எனும் வள்ளலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

வள்ளற் பிராற்கமு தேந்தி வருவோன் உகலும்இங்கேவெள்ளச் சடையாய் அமுதுசெய் யாவிடில் என்தலையைத்தள்ளத் தகுமென்று வாட்பூட் டியதடங் கையினன் காண்அள்ளற் பழனக் கணமங் கலத்தரி வாட்டாயனே.
சொற்பிரிப்பு
வள்ளற் பிராற்கு அமுது ஏந்தி வருவோன் உகலும் ‘இங்கேவெள்ளச் சடையாய்! அமுது செய்யாவிடில் என்தலையைத்தள்ளத் தகும்’ என்று வாள் பூட்டிய தடம் கையினன் காண்அள்ளல் பழனக் கணமங்கலத்து அரிவாள் தாயனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

தாயவன் யாவுக்கும் தாழ்சடை மேல்தனித் திங்கள்வைத்ததூயவன் பாதம் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும்வேயவன் மேல்மழ நாட்டு விரிபுனல் மங்கலக்கோன்ஆயவன் ஆனாயன் என்னை உவந்தாண் டருளினனே.
சொற்பிரிப்பு
தாயவன் யாவுக்கும் தாழ்சடைமேல் தனித் திங்கள் வைத்ததூயவன் பாதம் தொடர்ந்து தொல் சீர்துளையால் பரவும்வேயவன் மேன்மழநாட்டு விரிபுனல் மங்கலக்கோன்ஆயவன் ஆனாயன் என்னை உவந்து ஆண்டு அருளினனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

‘அருட்டுறை அத்தற் கடிமைப் பட்டேன் இனி அல்லன்’என்னும்பொருட்டுறை யாவதென் னேஎன்ன வல்லவன் பூங்குவளைஇருட்டுறை நீர்வயல் நாவற் பதிக்கும் பிரான்அடைந்தோர்மருட்டுறை நீக்கிநல் வான்வழி காட்டிட வல்லவனே.
சொற்பிரிப்பு
‘அருள்துறை அத்தற்கு அடிமைப் பட்டேன் இனி அல்லன் எனும்பொருள்துறை ஆவது என்னே’ என்ன வல்லவன் பூங்குவளைஇருள்துறை நீர்வயல் நாவல் பதிக்கும் பிரான் அடைந்தார்மருள்துறை நீக்கி நல்வான் வழி காட்டிட வல்லவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

அவந்திரி குண்டமண் ஆவதின் மாள்வனென் றன்றாலவாய்ச்சிவன்திரு மேனிக்குச் செஞ்சந் தனமாச் செழுமுழங்கைஉவந்தொளிர் பாறையில் தேய்த்துல காண்டஒண் மூர்த்திதன்னூர்நிவந்தபொன் மாட மதுரா புரியென்னும் நீள்பதியே.
சொற்பிரிப்பு
அவம் திரி குண்டுஅமண் ஆவதின் மாள்வன் என்று அன்று ஆலவாய்ச்சிவன் திருமேனிக்குச் செஞ்சந்தனமாச் செழு முழங்கைஉவந்து ஒளிர் பாறையில் தேய்த்து உலகு ஆண்ட ஒண் மூர்த்தி தன் ஊர்நிவந்த பொன்மாட மதுரா புரி என்னும் நீள்பதியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

பதிகம் திகழ்தரு பஞ்சாக் கரம்பயில் நாவினன்சீர்மதியம் சடையாற் கலர்தொட் டணிபவன் யான்மகிழ்ந்துதுதியம் கழற்சண்பை நாதற்குத் தோழன்வன் றொண்டன்அம்பொன்அதிகம் பெறும்புக லூர்முரு கன்எனும் அந்தணனே.
சொற்பிரிப்பு
பதிகம் திகழ்தரு பஞ்சாக்கரம் பயில் நாவினன் சீர்மதியம் சடையாற்கு அலர்தொட்டு அணிபவன் யான் மகிழ்ந்துதுதி அம்கழல் சண்பை நாதற்குத் தோழன் வன்தொண்டன் அம்பொன்அதிகம் பெறும் புகலூர் முருகன் எனும் அந்தணனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

அந்தாழ் புனல்தன்னில் அல்லும் பகலும்நின் றாதரத்தால்உந்தாத அன்பொ டுருத்திரஞ் சொல்லிக் கருத்தமைந்தபைந்தார் உருத்(தி)ர பசுபதி தன்னற் பதிவயற்கேநந்தார் திருத்தலை யூர்என் றுரைப்பர்இந் நானிலத்தே.
சொற்பிரிப்பு
அந்தாழ் புனல் தன்னில் அல்லும் பகலும் நின்று ஆதரத்தால்உந்தாத அன்பொடு உருத்திரம் சொல்லிக் கருத்து அமைந்தபைந்தார் உருத்திர பசுபதி தன் நல் பதி வயற்கேநந்தார் திருத்தலையூர் என்று உரைப்பர் இந்நானிலத்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

நாவார் புகழ்த்தில்லை அம்பலத் தான்அருள் பெற்றுநாளைப்போவான் அவனாம் புறத்திருத் தொண்டன்தன் புன்புலைபோய்மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான்மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர்இம் மண்டலத்தே.
சொற்பிரிப்பு
நாவார் புகழ்த்தில்லை அம்பலத்தான் அருள் பெற்று நாளைப்போவான் அவனாம் புறத் திருத் தொண்டன் தன் புன்புலை போய்மூவாயிரவர் கை கூப்ப முனி ஆயவன் பதி தான்மாவார் பொழில் திகழ் ஆதனூர் என்பர் இம் மண்டலத்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

மண்டும் புனற்சடை யான்தமர் தூசெற்றி வாட்டும்வகைவிண்டு மழைமுகில் வீடா தொழியின்யான் வீவன்என்னாமுண்டம் படர்பாறை முட்டும் எழிலார் திருக்குறிப்புத்தொண்டன் குலங்கச்சி ஏகா லியர்தங்கள் தொல்குலமே.
சொற்பிரிப்பு
மண்டும் புனல்சடையான் தமர் தூசு எற்றி வாட்டும் வகைவிண்டு மழை முகில் வீடாது ஒழியின் யான் வீவன் என்னாமுண்டம் படர்பாறை முட்டும் எழிலார் திருக்குறிப்புத்தொண்டன் குலம் கச்சி ஏகாலியர் தங்கள் தொல்குலமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

குலமே றியசேய்ஞ லூரில் குரிசில் குரைகடல்சூழ்தலமே றியவிறல் சண்டிகண் டீர்தந்தை தாள்இரண்டும்வலமே றியமழு வால்எறிந் தீசன் மணிமுடிமேல்நலமே றியபால் சொரிந்தலர் சூட்டிய நன்னிதியே.
சொற்பிரிப்பு
குலம் ஏறிய சேய்ஞலூரில் குரிசில் குரைகடல் சூழ்தலம் ஏறிய விறல் சண்டி கண்டீர் தந்தை தாள் இரண்டும்வலம் ஏறிய மழுவால் எறிந்து ஈசன் மணிமுடிமேல்நலம் ஏறிய பால் சொரிந்து அலர் சூட்டிய நன்நிதியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

‘நிதியார் துருத்திதென் வேள்விக் குடியாய் நினைமறந்தமதியேற் கறிகுறி வைத்த புகர்பின்னை மாற்றி’டென்றுதுதியா அருள்சொன்ன வாறறி வாரிடைப் பெற்றவன்காண்நதியார் புனல்வயல் நாவலர் கோன்என்னும் நற்றவனே.
சொற்பிரிப்பு
‘நிதியார் துருத்தி தென் வேள்விக் குடியாய் நினைமறந்தமதியேற்கு அறிகுறி வைத்த புகர் பின்னை மாற்றிடு’என்றுதுதியா அருள் சொன்னவாறு அறிவார் இடைப் பெற்றவன்காண்நதியார் புனல்வயல் நாவலர் கோன் என்னும் நல்தவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப் பாதம்தன் சென்னிவைக்கப்பெற்றவன் மற்றிப் பிறப்பற வீரட்டர் பெய்கழற்றாள்உற்றவன் உற்ற விடம்அடை யார்இட ஒள்ளமுதாத்துற்றவன் ஆமுரில் நாவுக் கரசெனும் தூமணியே.
சொற்பிரிப்பு
நல்தவன் நல்லூர்ச் சிவன் திருப் பாதம் தன் சென்னிவைக்கப்பெற்றவன் மற்று இப்பிறப்பு அற வீரட்டர் பெய்கழல்தாள்உற்றவன் உற்ற விடம் அடையார் இட ஒள் அமுதாத்துற்றவன் ஆமுரில் நாவுக்கு அரசு எனும் தூமணியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால்திணியன நீள்கத வந்திறப் பித்தன தெண்கடலிற்பிணியன கல்மிதப் பித்தன சைவப் பெருநெறிக்கேஅணியன நாவுக் கரையர் பிரான்தன் அருந்தமிழே.
சொற்பிரிப்பு
மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால்திணியன நீள் கதவம் திறப் பித்தன தெண்கடலில்பிணியன கல் மிதப்பித்தன சைவப் பெருநெறிக்கேஅணியன நாவுக்குஅரையர் பிரான் தன் அருந்தமிழே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

அருந்தமி ழாகரன் வாதில் அமணைக் கழுநுதிமேல்இருந்தமிழ் நாட்டிடை ஏற்றுவித் தோன்எழிற் சங்கம்வைத்தபெருந்தமிழ் மீனவன் தன்அதி காரி பிரசம்மல்குகுருந்தவிழ் சாரல் மணமேற் குடிமன் குலச்சிறையே.
சொற்பிரிப்பு
அருந்தமிழாகரன் வாதில் அமணைக் கழு நுதிமேல்இருந்தமிழ் நாட்டிடை ஏற்றுவித் தோன் எழில் சங்கம் வைத்தபெருந்தமிழ் மீனவன் தன் அதிகாரி பிரசம் மல்குகுருந்து அவிழ் சாரல் மணமேற்குடி மன் குலச்சிறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

சிறைநன் புனல்திரு நாவலூ ராளி செழுங்கயிலைக்கிறைநன் கழல்நாளை எய்தும் இவனருள் போற்றஇன்றேபிறைநன் முடியன் அடியடை வேன்என் றுடல்பிரிந்தான்நறைநன் மலர்த்தார் மிழலைக் குறும்பன் எனும்நம்பியே.
சொற்பிரிப்பு
சிறைநன் புனல் திருநாவலூர் ஆளி செழுங்கயிலைக்குஇறை நன்கழல் நாளை எய்தும் இவன் அருள் போற்ற இன்றேபிறை நன் முடியன் அடி அடைவேன் என்று உடல் பிரிந்தான்நறை நன் மலர்த்தார் மிழலைக் குறும்பன் எனும் நம்பியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

‘நம்பன் திருமலை நான்மிதி யேன்’என்று தாள்இரண்டும்உம்பர் மிசைத்தலை யால்நடந் தேற உமைநகலும்செம்பொன் உருவன்’என் அம்மை’ எனப்பெற் றவள் செழுந்தேன்கொம்பின் உகுகாரைக் காலினில் மேய குலதனமே.
சொற்பிரிப்பு
‘நம்பன் திருமலை நான் மிதியேன்’ என்று தாள் இரண்டும்உம்பர் மிசைத் தலையால் நடந்து ஏற உமை நகலும்செம்பொன் உருவன் ‘என் அம்மை’ எனப் பெற்றவள் செழும் தேன்கொம்பின் உகு காரைக்காலினில் மேய குலதனமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

தனமா வதுதிரு நாவுக் கரசின் சரணம்என்னாமனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்தமிழ்க்கேஇனமாத் தனது பெயரிடப் பெற்றவன் எங்கள்பிரான்அனமார் வயல்திங்கள் ஊரினில் வேதியன் அப்பூதியே.
சொற்பிரிப்பு
தனம்ஆவது திருநாவுக்கரசின் சரணம் என்னாமனம்ஆர் புனல் பந்தர் வாழ்த்தி வைத்து ஆங்கு அவன் வண்தமிழ்க்கேஇனமாத் தனது பெயர் இடப் பெற்றவன் எங்கள் பிரான்அனம் ஆர் வயல் திங்களூரினில் வேதியன் அப்பூதியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

பூதிப் புயத்தர் புயத்திற் சிலந்தி புகலும்அஞ்சிஊதித் துமிந்த மனைவியை நீப்பஉப் பாலவெல்லாம்பேதித் தெழுந்தன காணென்று பிஞ்ஞகன் காட்டுமவன்நீதித் திகழ்சாத்தை நீலநக் கன்எனும் வேதியனே.
சொற்பிரிப்பு
பூதிப் புயத்தர் புயத்தில் சிலந்தி புகலும் அஞ்சிஊதித் துமிந்த மனைவியை நீப்ப ‘உப்பால எல்லாம்பேதித்து எழுந்தன காண்’ என்று பிஞ்ஞகன் காட்டும்அவன்நீதித் திகழ் சாத்தை நீலநக்கன் எனும் வேதியனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

வேத மறிக்கரத் தாரூர் அரற்கு விளக்குநெய்யைத்தீது செறிஅமண் கையர்அட் டாவிடத் தெண்புனலால்ஏத முறுக அருகரென் றன்று விளக்கெரித்தான்நாதன் எழில்ஏமப் பேறூர் அதிபன் நமிநந்தியே.
சொற்பிரிப்பு
வேத மறிக்கரத்து ஆரூர் அரற்கு விளக்கு நெய்யைத்தீது செறி அமண் கையர் அட்டா விடத் தெண்புனலால்‘ஏதம் உறுக அருகர்’ என்று அன்று விளக்கு எரித்தான்நாதன் எழில் ஏமப்பேறூர் அதிபன் நமிநந்தியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

நந்திக்கும் நம்பெரு மாற்குநல் ஆருரில் நாயகற்குப்பந்திப் பரியன செந்தமிழ் பாடிப் படர்புனலிற்சிந்திப் பரியன சேவடி பெற்றவன் சேவடியேவந்திப் பவன்பெயர் வன்தொண்டன் என்பர்இவ் வையகத்தே.
சொற்பிரிப்பு
நந்திக்கு நம் பெருமாற்கு நல் ஆருரில் நாயகற்குப்பந்திப்பு அரியன செந்தமிழ் பாடிப் படர்புனலில்சிந்திப்பு அரியன சேவடி பெற்றவன் சேவடியேவந்திப்பவன் பெயர் வன்தொண்டன் என்பர் இவ்வையகத்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

வையம் மகிழயாம் வாழ அமணர் வலிதொலையஐயன் பிரம புரத்தரற் கம்மென் குதலைச் செவ்வாய்பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்தையல் அருள்பெற் றனன்என்பர் ஞானசம் பந்தனையே.
சொற்பிரிப்பு
வையம் மகிழ யாம் வாழ அமணர் வலி தொலையஐயன் பிரமபுரத்து அரற்கு அம்மென் குதலைச் செவ்வாய்பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்தையல் அருள் பெற்றனன் என்பர் ஞானசம்பந்தனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகன்நல்லசந்தார் அகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்துகொந்தார் சடையர் பதிகத்தில் இட்டடி யேன்கொடுத்தஅந்தாதி கொண்ட பிரான்அருட் காழியர் கொற்றவனே.
சொற்பிரிப்பு
பந்தார் விரலியர் வேள் செங்கட் சோழன் முருகன் நல்லசந்தார் அகலத்து நீலநக்கன் பெயர் தான் மொழிந்துகொந்தார் சடையர் பதிகத்தில் இட்டு அடியேன் கொடுத்தஅந்தாதி கொண்ட பிரான் அருள் காழியர் கொற்றவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

கொற்றத் திறல்எந்தை தந்தைதன் தந்தைஎங் கூட்ட மெல்லாம்தெற்றச் சடையாய் நினதடி யேந்திகழ் வன்தொண்டனேமற்றிப் பிணிதவிர்ப் பான்என் றுடைவாள் உருவிஅந்நோய்செற்றுத் தவிர்கலிக் காமன் குடிஏயர் சீர்க்குடியே.
சொற்பிரிப்பு
கொற்றத்திறல் எந்தை தந்தை தன் தந்தை எம் கூட்டம் எல்லாம்தெற்றச் சடையாய் நினது அடியேம் திகழ் வன்தொண்டனேமற்று இப்பிணி தவிர்ப்பான் என்று உடைவாள் உருவி அந்நோய்செற்றுத் தவிர் கலிக்காமன் குடி ஏயர் சீர்க்குடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பைபுக்குமுடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின்படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டென்உச்சிஅடிமன்ன வைத்த பிரான்மூலன் ஆகின்ற அங்கணனே.
சொற்பிரிப்பு
குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பை புக்குமுடிமன்னு கூனல் பிறையாளன் தன்னை முழுத்தமிழின்படிமன்னு வேதத்தின் சொல்படியே பரவிட்டு என் உச்சிஅடி மன்ன வைத்த பிரான் மூலன் ஆகின்ற அங்கணனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

38

கண்ணார் மணிஒன்றும் இன்றிக் கயிறு பிடித்தரற்குத்தண்ணார் புனல்தடம் தொட்டலும் தன்னை நகும்அமணர்கண்ணாங் கிழப்ப அமணர் கலக்கங்கண் டம்மலர்க்கண்விண்ணா யகனிடைப் பெற்றவன் ஆரூர் விறல்தண்டியே.
சொற்பிரிப்பு
கண் ஆர் மணி ஒன்றும் இன்றிக் கயிறு பிடித்து அரற்குத்தண்ணார் புனல் தடம் தொட்டலும் தன்னை நகும் அமணர்கண் ஆங்கு இழப்ப அமணர் கலக்கம்கண்டு அம்மலர்க்கண்விண்நாயகன் இடைப் பெற்றவன் ஆரூர் விறல் தண்டியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

39

தண்டலை சூழ்திரு வேற்காட்டூர் மன்னன் தருகவற்றால்கொண்டவல் லாயம்வன் சூதரை வென்றுமுன் கொண்டபொருள்முண்டநன் னீற்றன் அடியவர்க் கீபவன் மூர்க்கனென்பர்நண்டலை நீரொண் குடந்தையில் மேவுநற் சூதனையே.
சொற்பிரிப்பு
தண்டலை சூழ் திருவேற்காட்டூர் மன்னன் தகு கவற்றால்கொண்ட வல் ஆயம் வன் சூதரை வென்று முன் கொண்டபொருள்முண்ட நல் நீற்றன் அடியவர்க்கு ஈபவன் மூர்க்கன் என்பர்நண்டு அலை நீர் ஒண் குடந்தையின் மேவு நல் சூதனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

40

சூதப் பொழில் அம்பர் அந்தணன் சோமாசி மாறன்என்பான்வேதப் பொருள்அஞ் செழுத்தும் விளம்பியல் லால்மொழியான்நீதிப் பரன்மன்னு நித்த நியமன் பரவையென்னும்மாதுக்குக் காந்தன்வன் தொண்டன் தனக்கு மகிழ்துணையே.
சொற்பிரிப்பு
சூதப் பொழில் அம்பர் அந்தணன் சோமாசி மாறன் என்பான்வேதப் பொருள் அஞ்செழுத்தும் விளம்பி அல்லால் மொழியான்நீதிப் பரன் மன்னு நித்த நியமன் பரவை என்னும்மாதுக்குக் காந்தன் வன் தொண்டன் தனக்கு மகிழ்துணையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

41

துணையும் அளவும் இல் லாதவன் தன்னரு ளேதுணையாக்கணையும் கதிர்நெடு வேலும் கறுத்த கயலிணையும்பிணையும் நிகர்த்தகண் சங்கிலி பேரமைத் தோள்இரண்டும்அணையும் அவன்திரு வாரூரன் ஆகின்ற அற்புதனே.
சொற்பிரிப்பு
துணையும் அளவும் இல்லாதவன் தன் அருளே துணையாக்கணையும் கதிர் நெடுவேலும் கறுத்த கயல் இணையும்பிணையும் நிகர்த்த கண் சங்கிலி பேர் அமைத் தோள் இரண்டும்அணையும் அவன் திரு ஆரூரன் ஆகின்ற அற்புதனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

42

தகடன ஆடையன் சாக்கியன் மாக்கற் றடவரையன்மகள்தனந் தாக்கக் குழைந்ததிண் தோளர்வண் கம்பர்செம்பொன்திகழ்தரு மேனியிற் செங்கல் எறிந்து சிவபுரத்துப்புகழ்தரப் புக்கவன் ஊர்சங்க மங்கை புவனியிலே.
சொற்பிரிப்பு
தகடன ஆடையன் சாக்கியன் மாக்கல் தடவரையன்மகள் தனம் தாக்கக் குழைந்த திண் தோளர் வண்கம்பர் செம்பொன்திகழ்தரு மேனியில் செங்கல் எறிந்து சிவபுரத்துப்புகழ் தரப் புக்கவன் ஊர் சங்க மங்கை புவனியிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

43

புவனியிற் பூதியும் சாதன மும்பொலி வார்ந்துவந்ததவநிய மற்குச் சிறப்புச்செய் தத்துவ காரணனாம்அவனியில் கீர்த்தித் தென் ஆக்கூர் அதிபன் அருமறையோன்சிவன்நிய மந்தலை நின்றதொல் சீர்நஞ் சிறப்புலியே
சொற்பிரிப்பு
புவனியில் பூதியும் சாதனமும் பொலிவு ஆர்ந்துவந்ததவ நியமற்குச் சிறப்புச் செய் தத்துவ காரணனாம்அவனியில் கீர்த்தித் தென் ஆக்கூர் அதிபன் அருமறையோன்சிவன் நியமம் தலை நின்ற தொல் சீர் நம் சிறப்புலியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

44

புலியின் அதளுடைப் புண்ணியற் கின்னமு தாத்தனதோர்ஒலியின் சதங்கைக் குதலைப் புதல்வன் உடல்துணித்துக்கலியின் வலிகெடுத் தோங்கும் புகழ்ச்சிறுத் தொண்டன்கண்டீர்மலியும் பொழில்ஒண்செங் காட்டம் குடியவர் மன்னவனே.
சொற்பிரிப்பு
புலியின் அதள் உடைப் புண்ணியற்கு இன்அமுதாத் தனது ஓர்ஒலியின் சதங்கைக் குதலைப் புதல்வன் உடல் துணித்துக்கலியின் வலிகெடுத்து ஓங்கும் புகழ்ச் சிறுத்தொண்டன் கண்டீர்மலியும் பொழில் ஒண் செங்காட்டங் குடியவர் மன்னவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

45

மன்னர் பிரான்எதிர் வண்ணான் உடல்உவர் ஊறிநீறார்தன்னர் பிரான்தமர் போல வருதலும் தான்வணங்கஎன்னர் பிரான்அடி வண்ணான் எனஅடிச் சேரன்என்னும்தென்னர் பிரான்கழ றிற்றறி வான்எனும் சேரலனே.
சொற்பிரிப்பு
மன்னர் பிரான் எதிர் வண்ணான் உடல் உவர் ஊறி நீறார்தன்னர் பிரான் தமர் போல வருதலும் தான் வணங்க‘என்னர் பிரான், அடி வண்ணான்’ என ‘அடிச் சேரன்’ என்னும்தென்னர் பிரான் கழறிற்றறிவான் எனும் சேரலனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

46

சேரற்குத் தென்னா வலர்பெரு மாற்குச் சிவன்அளித்தவீரக் கடகரி முன்புதன் பந்தி இவுளிவைத்தவீரற்கு வென்றிக் கருப்புவில் வீரனை வெற்றிகொண்டசூரற் கெனதுள்ளம் நன்றுசெய் தாய்இன்று தொண்டுபட்டே.
சொற்பிரிப்பு
சேரற்குத் தென் நாவலர் பெரு மாற்குச் சிவன் அளித்த*வீரக் கடகரி முன்பு தன் பந்தி இவுளி வைத்தவீரற்கு வென்றிக் கருப்பு வில் வீரனை வெற்றிகொண்டசூரற்கு எனது உள்ளம் நன்று செய் தாய் இன்று தொண்டுபட்டே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

47

தொண்டரை யாக்கி அவரவர்க் கேற்ற தொழில்கள் செய்வித்தண்டர்தங் கோனக் கணத்துக்கு நாயகம் பெற்றவன்காண்கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக் கோல மடல்கள் தொறும்கண்டல்வெண் சோறளிக் குங்கடல் காழிக் கணநாதனே.
சொற்பிரிப்பு
தொண்டரை ஆக்கி அவர்அவர்க்கு ஏற்ற தொழில்கள் செய்வித்துஅண்டர் தம் கோன் அக்கணத்துக்கு நாயகம் பெற்றவன் காண்கொண்டல் கொண்டு ஏறிய மின்னுக்குக் கோல மடல்கள்தொறும்கண்டல் வெண்சோறு அளிக்கும் கடல் காழிக் கணநாதனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

48

நாதன் திருவடி யேமுடி யாகக் கவித்துநல்லபோதங் கருத்திற் பொறித்தமை யால்அது கைகொடுப்பஓதந் தழுவிய ஞாலம்எல் லாமொரு கோலின்வைத்தான்கோதை நெடுவேற் களப்பாளன் ஆகிய கூற்றுவனே.
சொற்பிரிப்பு
நாதன் திருவடியே முடி யாகக் கவித்து நல்லபோதம் கருத்தில் பொறித்தமையால் அது கைகொடுப்பஓதம் தழுவிய ஞாலம் எல்லாம் ஒரு கோலின் வைத்தான்கோதை நெடுவேல் களப்பாளன் ஆகிய கூற்றுவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

49

கூற்றுக் கெவனோ புகல்திரு வாரூரன் பொன்முடிமேல்ஏற்றுத் தொடையலும் இன்அடைக் காயும் இடுதருமக்கோற்றொத்துக் கூனனும் கூன்போய்க் குருடனும் கண்பெற்றமைசாற்றித் திரியும் பழமொழி யாம்இத் தரணியிலே.
சொற்பிரிப்பு
கூற்றுக்கு எவனோ புகல் திரு ஆரூரன் பொன்முடிமேல்ஏற்றுத் தொடையலும் இன் அடைக் காயும் இடு தரும் அக்கோல்தொத்துக் கூனனும் கூன்போய்க் குருடனும் கண் பெற்றமைசாற்றித் திரியும் பழமொழியாம் இத்தரணியிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

50

தரணியிற் பொய்ம்மை இலாத்தமிழ்ச் சங்கம் அதிற்கபிலர்பரணர்நக் கீரர் முதல்நாற்பத் தொன்பது பல்புலவோர்அருள்நமக் கீயும் திருவால வாய்அரன் சேவடிக்கேபொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே.
சொற்பிரிப்பு
தரணியில் பொய்ம்மை இலாத்தமிழ்ச் சங்கம் அதில் கபிலர்பரணர் நக்கீரர் முதல் நாற்பத்து ஒன்பது பல் புலவோர்அருள் நமக்கு ஈயும் திரு ஆலவாய் அரன் சேவடிக்கேபொருள்அமைத்து இன்பக் கவி பல பாடும் புலவர்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

51

புலமன் னியமன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்தகுலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன்நலமன் னியபுகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள்வலமன் னியஎறி பத்தனுக் கீந்ததோர் வண்புகழே.
சொற்பிரிப்பு
புலமன்னிய மன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்தகுலமன்னிய புகழ்க் கோகன நாதன் குலமுதலோன்நலமன்னிய புகழ்ச் சோழனது என்பர் நகு சுடர்வாள்வலமன்னிய எறிபத்தனுக்கு ஈந்ததொர் வண்புகழே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

52

புகழும் படிஎம் பரமே தவர்க்குநற் பொன்னிடுவோன்இகழும் படியோர் தவன்மட வார்புனை கோலம்எங்கும்நிகழும் படிகண் டவனுக் கிரட்டிபொன்இட்டவன்நீள்திகழு முடிநர சிங்க முனையர சன்திறமே.
சொற்பிரிப்பு
புகழும்படி எம் பரமே தவர்க்கு நற்பொன் இடுவோன்இகழும்படி ஓர் தவன் மடவார் புனை கோலம் எங்கும்நிகழும்படி கண்டு அவனுக்கு இரட்டி பொன் இட்டவன் நீள்திகழும் முடி நரசிங்க முனை அரசன் திறமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

53

திறம்அமர் மீன்படுக் கும்பொழு தாங்கொரு மீன்சிவற்கென்றுறஅமர் மாகடற் கேவிடு வோன்ஒரு நாட்கனகநிறம்அமர் மீன்பட நின்மலற் கென்றுவிட் டோன்கமலம்புறம்அமர் நாகை அதிபத்த னாகிய பொய்யிலியே.
சொற்பிரிப்பு
திறம் அமர் மீன் படுக்கும் பொழுது ஆங்கு ஒரு மீன் சிவற்கு என்றுஉற அமர் மா கடற்கே விடுவோன் ஒரு நாள் கனகநிறம் அமர் மீன் பட நின்மலற்கு என்று விட்டோன் கமலம்புறம் அமர் நாகை அதிபத்தன் ஆகிய பொய்யிலியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

54

பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க் காட்பட்டுத் தன்அடியான்சைவத் திருவுரு வாய்வரத் தான்அவன் தாள்கழுவவையத் தவர்முன்பு வெள்கிநீர் வாரா விடமனைவிகையைத் தடிந்தவன் பெண்ணா கடத்துக் கலிக்கம்பனே.
சொற்பிரிப்பு
பொய்யைக் கடிந்து நம் புண்ணியர்க்கு ஆட்பட்டுத் தன் அடியான்சைவத் திரு உருவாய் வரத் தான் அவன் தாள் கழுவவையத்தவர் முன்பு வெள்கி நீர் வாரா விட மனைவிகையைத் தடிந்தவன் பெண்ணா கடத்துக் கலிக்கம்பனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

55

கம்பக் கரிக்கும் சிலந்திக்கும் நல்கிய கண்ணுதலோன்உம்பர்க்கு நாதற் கொளிவிளக் கேற்றற் குடல்இலனாய்க்கும்பத் தயிலம்விற் றுஞ்செக் குழன்றும்கொள் கூலியினால்நம்பற் கெரித்த கலிஒற்றி மாநகர்ச் சக்கிரியே.
சொற்பிரிப்பு
கம்பக் கரிக்கும் சிலந்திக்கும் நல்கிய கண்ணுதலோன்உம்பர்க்கு நாதற்கு ஒளிவிளக்கு ஏற்றற்கு உடல் இலனாய்க்கும்பத் தயிலம் விற்றும் செக் குழன்றும் கொள் கூலியினால்நம்பற்கு எரித்த கலி ஒற்றி மாநகர்ச் சக்கிரியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

56

கிரிவில் லவர்தம் அடியரைத் தன்முன்பு கீழ்மைசொன்னதிருவில் லவரைஅந் நாவரி வோன்திருந் தாரைவெல்லும்வரிவில் லவன்வயற் செங்கழு நீரின் மருவுதென்றல்தெருவில் விரைகம ழுந்தென் வரிஞ்சைத் திகழ்சத்தியே.
சொற்பிரிப்பு
கிரி வில்லவர் தம் அடியரைத் தன் முன்பு கீழ்மை சொன்னதிருவில்லவரை அந்நா அரிவோன் திருந்தாரை வெல்லும்வரி வில்லவன் வயல் செங்கழுநீரின் மருவு தென்றல்தெருவில் விரை கமழும் தென் வரிஞ்சைத் திகழ் சத்தியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

57

சத்தித் தடக்கைக் குமரன்நல் தாதைதன் தானம்எல்லாம்முத்திப் பதமொரொர் வெண்பா மொழிந்து முடியரசாமத்திற்கு மும்மைநன் தாள்அரற் காய்ஐயம் ஏற்றலென்னும்பத்திக் கடல்ஐ யடிகளா கின்றநம் பல்லவனே.
சொற்பிரிப்பு
சத்தித் தடக்கைக் குமரன் நல் தாதை தன் தானம் எல்லாம்முத்திப் பதம் ஒரொர் வெண்பா மொழிந்து ‘முடிஅரசாம்அத்திற்கு மும்மை நன்று ஆள்அரற்காய் ஐயம் ஏற்றல்’என்னும்பத்திக் கடல் ஐயடிகள் ஆகின்ற நம் பல்லவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

58

பல்லவை செங்கதி ரோனைப் பறித்தவன் பாதம்புகழ்சொல்லவன் தென்புக லூர்அரன் பால்துய்ய செம்பொன்கொள்ளவல்லவன் நாட்டியத் தான்குடி மாணிக்க வண்ணனுக்குநல்லவன் தன்பதி நாவலூர் ஆகின்ற நன்னகரே.
சொற்பிரிப்பு
பல்லவை செங்கதிரோனைப் பறித்தவன் பாதம் புகழ்சொல்லவன் தென்புகலூர் அரன் பால் துய்ய செம்பொன் கொள்ளவல்லவன் நாட்டியத்தான்குடி மாணிக்கவண்ணனுக்குநல்லவன் தன் பதி நாவலூர் ஆகின்ற நன்னகரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

59

நன்னக ராய இருக்குவே ளூர்தனில் நல்குவராய்ப்பொன்னக ராயநற் றில்லை புகுந்து புலீச்சரத்துமன்னவ ராய அரற்குநற் புல்லால் விளக்கெரித்தான்கன்னவில் தோள்எந்தை தந்தை பிரான்எம் கணம்புல்லனே.
சொற்பிரிப்பு
நன்னகர் ஆய இருக்கு வேளூர் தனில் நல்குவராய்ப்பொன்னகர் ஆய நல் தில்லை புகுந்து புலீச்சரத்துமன்னவராய அரற்கு நல் புல்லால் விளக்கு எரித்தான்கல் நவில் தோள் எந்தை தந்தை பிரான் எம் கணம்புல்லனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

60

புல்லன வாகா வகைஉல கத்துப் புணர்ந்தனவும்சொல்லின வும்நய மாக்கிச் சுடர்பொற் குவடுதனிவில்லனை வாழ்த்தி விளங்கும் கயிலைபுக் கான்என்பரால்கல்லன மாமதில் சூழ்கட வூரினிற் காரியையே.
சொற்பிரிப்பு
புல்லன ஆகாவகை உல கத்துப் புணர்ந்தனவும்சொல்லினவும் நயம் ஆக்கிச் சுடர்பொன் குவடு தனிவில்லனை வாழ்த்தி விளங்கும் கயிலை புக்கான் என்பரால்கல்லன மாமதில் சூழ் கடவூரினில் காரியையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

61

கார்த்தண் முகில்கைக் கடற்காழி யர்பெரு மாற்கெதிராய்ஆர்த்த அமணர் அழிந்தது கண்டுமற் றாங்கவரைக்கூர்த்த கழுவின் நுதிவைத்த பஞ்சவன் என்றுரைக்கும்வார்த்தை யதுபண்டு நெல்வேலி யில்வென்ற மாறனுக்கே.
சொற்பிரிப்பு
கார்த் தண் முகில் கைக் கடற்காழியர் பெருமாற்கு எதிராய்ஆர்த்த அமணர் அழிந்தது கண்டு மற்று ஆங்கு அவரைக்கூர்த்த கழுவின் நுதி வைத்த பஞ்சவன் என்று உரைக்கும்வார்த்தை அது பண்டு நெல்வேலியில் வென்ற மாறனுக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

62

மாறா அருளரன் தன்னை மனஆ லயத்திருத்திஆறா அறிவாம் ஒளிவிளக் கேற்றி அகமலர்வாம்வீறா மலரளித் தன்பெனும் மெய்யமிர் தம்கொடுத்தான்வீறார் மயிலையுள் வாயிலான் என்று விளம்புவரே.
சொற்பிரிப்பு
மாறா அருள்அரன் தன்னை மன ஆலயத்து இருத்திஆறா அறிவாம் ஒளி விளக்கு ஏற்றி அகமலர்வாம்வீறா மலர் அளித்து அன்பெனும் மெய் அமிர்தம் கொடுத்தான்வீறார் மயிலையுள் வாயிலான் என்று விளம்புவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

63

என்று விளம்புவர் நீடூர் அதிபன் முனையடுவோன்என்றும் அமருள் அழிந்தவர்க் காக்கூலி ஏற்றெறிந்துவென்று பெருஞ்செல்வம் எல்லாம் கனகநன் மேருவென்னும்குன்று வளைத்த சிலையான் தமர்க்குக் கொடுத்தனனே.
சொற்பிரிப்பு
என்று விளம்புவர் நீடூர் அதிபன் முனையடுவோன்என்றும் அமருள் அழிந்தவர்க்காக் கூலி ஏற்று எறிந்துவென்ற பெருஞ்செல்வம் எல்லாம் கனக நன் மேரு என்னும்குன்று வளைத்த சிலையான் தமர்க்குக் கொடுத்தனனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

64

கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் குயிர்அன்று புக்கொளியூர்த்தொடுத்தான் மதுர கவிஅவி நாசியை வேடர்சுற்றம்படுத்தான் திருமுரு கன்பூண் டியினில் பராபரத்தேன்மடுத்தான் அவனென்பர் வன்தொண்ட னாகின்ற மாதவனே.
சொற்பிரிப்பு
கொடுத்தான் முதலை கொள் பிள்ளைக்கு உயிர் அன்று புக்கொளியூர்த்தொடுத்தான் மதுரகவி அவி நாசியை வேடர் சுற்றம்படுத்தான் திருமுருகன்பூண்டியினில் பராபரத் தேன்மடுத்தான் அவன் என்பர் வன்தொண்டன் ஆகின்ற மாதவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

65

மாதவத் தோர்தங்கள் வைப்பினுக் காரூர் மணிக்குவைத்தபோதினைத் தான்மோந்த தேவிதன் மூக்கை அரியப் பொற்கைகாதிவைத் தன்றோ அரிவதென் றாங்கவள் கைதடிந்தான்நாதமொய்த் தார்வண்டு கிண்டுபைங் கோதைக் கழற்சிங்கனே.
சொற்பிரிப்பு
மாதவத்தோர் தங்கள் வைப்பினுக்கு ஆரூர் மணிக்கு வைத்தபோதினைத் தான் மோந்த தேவி தன் மூக்கை அரியப் பொற்கைகாதி வைத்து அன்றோ அரிவது என்று ஆங்கு அவள் கை தடிந்தான்நாத மொய்த்தார் வண்டு கிண்டு பைங் கோதைக் கழற்சிங்கனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

66

சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடுகொங்கிற் கனகம் அணிந்தஆ தித்தன் குலமுதலோன்திங்கட் சடையர் தமரதென் செல்வம் எனப்பறைபோக்கெங்கட் கிறைவன் இருக்குவே ளூர்மன் இடங்கழியே.
சொற்பிரிப்பு
சிங்கத்து உருவனைச் செற்றவன் சிற்றம்பல முகடுகொங்கில் கனகம் அணிந்த ஆதித்தன் குலமுதலோன்திங்கள் சடையர் தமரது என் செல்வம் எனப் பறைபோக்குஎங்கட்கு இறைவன் இருக்கு வேளூர் மன் இடங்கழியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

67

கழிநீள் கடல்நஞ் சயின்றார்க் கிருந்த கடிமலரைமொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்தன் தேவிமுன் மோத்தலுமேஎழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந் தானென் றியம்புவரால்செழுநீர் மருகல்நன் னாட்டமர் தஞ்சைச் செருத்துணையே.
சொற்பிரிப்பு
கழிநீள் கடல்நஞ்சு அயின்றார்க்கு இருந்த கடிமலரைமொழிநீள் புகழ்க் கழற்சிங்கன் தன் தேவி முன் மோத்தலுமேஎழில் நீள் குமிழ் மலர் மூக்கரிந்தான் என்று இயம்புவரால்செழுநீர் மருகல் நன் நாட்டு அமர் தஞ்சைச் செருத்துணையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

68

செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையம் சிறுவிலைத்தாஉருவலி கெட்டுண வின்றி உமைகோனை மஞ்சனம்செய்தருவதோர் போதுகை சோர்ந்து கலசம் விழத்தரியாதருவரை வில்லி அருளும் நிதியது பெற்றனனே.
சொற்பிரிப்பு
செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையம் சிறுவிலைத்தாய்உருவலி கெட்டு உணவின்றி உமைகோனை மஞ்சனம் செய்தருவதோர் போது கை சோர்ந்து கலசம் விழத் தரியாதுஅருவரை வில்லி அருளும் நிதியது பெற்றனனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

69

பெற்றம் உயர்த்தோன் விரையாக் கலிபிழைத் தோர்தமதுசுற்றம் அறுக்கும் தொழில்திரு நாட்டியத் தான்குடிக்கோன்குற்றம் அறுக்கும்நங் கோட்புலி நாவற் குரிசில் அருள்பெற்ற அருட்கடல் என்றுல கேத்தும் பெருந்தகையே.
சொற்பிரிப்பு
பெற்றம் உயர்த்தோன் விரையாக் கலி பிழைத்தோர் தமதுசுற்றம் அறுக்கும் தொழில் திரு நாட்டியத்தான்குடிக் கோன்குற்றம் அறுக்கும் நம் கோட்புலி நாவல் குரிசில் அருள்பெற்ற அருட்கடல் என்று உலகு ஏத்தும் பெருந்தகையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

70

தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால்புகுமணக் காதலி னால் ஒற்றி யூர்உறை புண்ணியன்தன்மிகுமலர்ப் பாதம் பணிந்தரு ளால்இவ் வியனுலகம்நகுவழக் கேநன்மை யாப்புணர்ந் தான்நாவ லூர்அரசே.
சொற்பிரிப்பு
தகுமகள் பேசினோன் வீயவே நூல் போன சங்கிலிபால்புகுமணக் காதலினால் ஒற்றியூர் உறை புண்ணியன் தன்மிகுமலர்ப் பாதம் பணிந்து அருளால் இவ் வியன் உலகம்நகும் வழக்கே நன்மையாப் புணர்ந்தான் நாவலூர் அரசே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

71

அரசினை ஆரூர் அமரர் பிரானை அடிபணிந்திட்டுரைசெய்த வாய்தடு மாறி உரோம புளகம்வந்துகரசர ணாதி அவயவம் கம்பித்துக் கண்ணருவிசொரிதரும் அங்கத்தி னோர்பத்தர் என்று தொகுத்தவரே.
சொற்பிரிப்பு
அரசினை ஆரூர் அமரர் பிரானை அடிபணிந்திட்டுஉரைசெய்த வாய் தடுமாறி உரோம புளகம் வந்துகர சரண ஆதி அவயவம் கம்பித்துக் கண் அருவிசொரிதரும் அங்கத்தினோர் பத்தர் என்று தொகுத்தவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

72

தொகுத்த வடமொழி தென்மொழி யாதொன்று தோன்றியதேமிகுத்த இயலிசை வல்ல வகையில்விண் தோயுநெற்றிவகுத்த மதில்தில்லை அம்பலத் தான்மலர்ப் பாதங்கள்மேல்உகுத்த மனத்தொடும் பாடவல் லோர்என்பர் உத்தமரே.
சொற்பிரிப்பு
தொகுத்த வடமொழி தென்மொழி யாது ஒன்று தோன்றியதேமிகுத்த இயல் இசை வல்ல வகையில் விண் தோயு நெற்றிவகுத்த மதில் தில்லை அம்பலத் தான் மலர்ப் பாதங்கள்மேல்உகுத்த மனத்தொடும் பாடவல்லோர் என்பர் உத்தமரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

73

உத்தமத் தானத் தறம்பொருள் இன்ப மொடியெறிந்துவித்தகத் தானத் தொருவழிக் கொண்டு விளங்கச்சென்னிமத்தம்வைத் தான்திருப் பாத கமல மலரிணைக் கீழ்ச்சித்தம்வைத் தார்என்பர் வீடுபே றெய்திய செல்வர்களே.
சொற்பிரிப்பு
உத்தமத்தானத்து அறம் பொருள் இன்பம் ஒடி எறிந்துவித்தகத் தானத்து ஒருவழிக் கொண்டு விளங்கச் சென்னிமத்தம் வைத்தான் திருப்பாத கமல மலர் இணைக் கீழ்ச்சித்தம் வைத்தார் என்பர் வீடுபேறு எய்திய செல்வர்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

74

செல்வம் திகழ்திரு வாரூர் மதில்வட்டத் துட்பிறந்தார்செல்வன் திருக்கணத் துள்ளவ ரேஅத னால் திகழச்செல்வம் பெருகுதென் ஆரூர்ப் பிறந்தவர் சேவடியேசெல்வ நெறியுறு வார்க் கணித் தாய செழுநெறியே.
சொற்பிரிப்பு
செல்வம் திகழ் திரு ஆரூர் மதில் வட்டத்து உள் பிறந்தார்செல்வன் திருக்கணத்து உள்ளவரே அதனால் திகழச்செல்வம் பெருகு தென் ஆரூர்ப் பிறந்தவர் சேவடியேசெல்வ நெறி உறுவார்க்கு அணித்தாய செழுநெறியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

75

நெறிவார் சடையரைத் தீண்டிமுப் போதும்நீ டாகமத்தின்அறிவால் வணங்கி அர்ச் சிப்பவர் நம்மையும் ஆண்டமரர்க்கிறையாய்முக் கண்ணும்எண் தோளும் தரித்தீறில் செல்வத்தொடும்உறைவார் சிவபெரு மாற்குறை வாய உலகினிலே.
சொற்பிரிப்பு
நெறிவார் சடையரைத் தீண்டி முப் போதும் நீடு ஆகமத்தின்அறிவால் வணங்கி அர்ச்சிப்பவர் நம்மையும் ஆண்டு அமரர்க்குஇறையாய் முக்கண்ணும் எண்தோளும் தரித்து ஈறில் செல்வத்தொடும்உறைவார் சிவபெருமாற்கு உறைவாய உலகினிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

76

உலகு கலங்கினும் ஊழி திரியினும் உள்ளொருகால்விலகுதல் இல்லா விதியது பெற்றநல் வித்தகர்காண்அலகில் பெருங்குணத் தாரூர் அமர்ந்த அரனடிக்கீழ்இலகுவெண் ணீறுதம் மேனிக் கணியும் இறைவர்களே.
சொற்பிரிப்பு
உலகு கலங்கினும் ஊழி திரியினும் உள் ஒருகால்விலகுதல் இல்லா விதியது பெற்ற நல் வித்தகர்காண்அலகில் பெருங்குணத்து ஆரூர் அமர்ந்த அரன் அடிக்கீழ்இலகு வெண் நீறு தம் மேனிக்கு அணியும் இறைவர்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

77

வருக்கம் அடைத்துநன் னாவலூர் மன்னவன் வண்தமிழால்பெருக்கு மதுரத் தொகையில் பிறைசூடிப் பெய்கழற்கேஒருக்கு மனத் தொடப் பாலடிச் சார்ந்தவர் என்றுலகில்தெரிக்கு மவர்சிவன் பல்கணத் தோர்நம் செழுந்தவரே.
சொற்பிரிப்பு
வருக்கம் அடைத்து நன்நாவலூர் மன்னவன் வண்தமிழால்பெருக்கு மதுரத் தொகையில் பிறைசூடிப் பெய்கழற்கேஒருக்கு மனத்தொடு அப்பால் அடிச் சார்ந்தவர் என்று உலகில்தெரிக்கும் அவர் சிவன் பல்கணத்தோர் நம் செழுந்தவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

78

செழுநீர் வயல்முது குன்றினில் செந்தமிழ் பாடிவெய்யமழுநீள் தடக்கையன் ஈந்தபொன் ஆங்குக்கொள் ளாதுவந்தப்பொழில்நீ டருதிரு வாரூரில் வாசியும் பொன்னுங்கொண்டோன்கெழுநீள் புகழ்த்திரு வாரூரன் என்றுநாம் கேட்பதுவே.
சொற்பிரிப்பு
செழுநீர் வயல் முதுகுன்றினில் செந்தமிழ் பாடி வெய்யமழுநீள் தடக்கையன் ஈந்த பொன் ஆங்குக் கொள்ளாது வந்து அப்பொழில் நீள் தரு திருஆரூரில் வாசியும் பொன்னும் கொண்டோன்கெழுநீள் புகழ்த் திருஆரூரன் என்று நாம் கேட்பதுவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

79

பதுமநற் போதன்ன பாதத் தரற்கொரு கோயிலையாம்கதுமெனச் செய்குவ தென்றுகொ லாமென்று கண்துயிலாததுமனத் தேஎல்லி தோறும் நினைந்தருள் பெற்றதென்பர்புதுமணத் தென்றல் உலாநின்ற வூர்தனில் பூசலையே.
சொற்பிரிப்பு
‘பதும நற்போது அன்ன பாதத்து அரற்கு ஒரு கோயிலை யான்கதும் எனச் செய்குவது என்று கொலாம்’ என்று கண்துயிலாதுஅது மனத்தே எல்லி தோறும் நினைந்து அருள் பெற்றது என்பர்புதுமணத் தென்றல் உலா நின்றவூர் தனில் பூசலையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

80

பூசல் அயில்தென்ன னார்க்கன லாகப் பொறாமையினால்வாச மலர்க்குழல் பாண்டிமா தேவியாம் மானிகண்டீர்தேசம் விளங்கத் தமிழா கரர்க்கறி வித்தவரால்நாசம் விளைத்தாள் அருகந் தருக்குத் தென் னாட்டகத்தே.
சொற்பிரிப்பு
பூசல் அயில் தென்னனார்க்கு அனலாகப் பொறாமையினால்வாச மலர்க்குழல் பாண்டி மாதேவியாம் மானி கண்டீர்தேசம் விளங்கத் தமிழாகரர்க்கு அறிவித்து அவரால்நாசம் விளைத்தாள் அருகந்தருக்குத் தென்நாட்டகத்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

81

நாட்டமிட் டன்றரி வந்திப்ப வெல்படைநல்கினர்தந்தாட்டரிக் கப்பெற்ற வன்என்பர் சைவத் தவர் அரையில்கூட்டுமக் கப்படங் கோவணம் நெய்து கொடுத்துநன்மைஈட்டுமக் காம்பீலிச் சாலிய நேசனை இம்மையிலே.
சொற்பிரிப்பு
நாட்டம் இட்டு அன்று அரி வந்திப்ப வெல்படை நல்கினர் தம்தாள் தரிக்கப் பெற்றவன் என்பர் சைவத்தவர் அரையில்கூட்டும் அக்கப் படம் கோவணம் நெய்து கொடுத்து நன்மைஈட்டும் அக்காம்பீலிச் சாலிய நேசனை இம்மையிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

82

மைவைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறிகருதாத்தெய்வக் குடிச் சோழன் முன்பு சிலந்தியாய்ப் பந்தர்செய்துசைவத் துருவெய்தி வந்து தரணிநீ டாலயங்கள்செய்வித்த வன்திருக் கோச்செங்க ணான்என்னும் செம்பியனே.
சொற்பிரிப்பு
மைவைத்த கண்டன் நெறி அன்றி மற்றோர் நெறி கருதாத்தெய்வக் குடிச் சோழன் முன்பு சிலந்தியாய்ப் பந்தர் செய்துசைவத்து உருவெய்தி வந்து தரணி நீடு ஆலயங்கள்செய்வித்தவன் திருக் கோச்செங்கணான் என்னும் செம்பியனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

83

செம்பொன் அணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகம்எய்திநம்பன் கழற்கீழ் இருந்தோன் குலமுதல் என்பர்நல்லவம்பு மலர்த்தில்லை ஈசனைச் சூழ மறைவளர்த்தான்நிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க ணான்என்னும் நித்தனையே.
சொற்பிரிப்பு
செம்பொன் அணிந்து சிற்றம்பலத்தைச் சிவலோகம் எய்திநம்பன் கழல் கீழ் இருந்தோன் குலமுதல் என்பர் நல்லவம்பு மலர்த்தில்லை ஈசனைச் சூழ மறைவளர்த்தான்நிம்ப நறுந்தொங்கல் கோச்செங்கணான் என்னும் நித்தனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

84

தனையொப் பரும்எருக் கத்தம் புலியூர்த் தகும்புகழோன்நினையொப் பருந்திரு நீலகண் டப்பெரும் பாணனைநீள்சினையொப் பலர்பொழிற் சண்பையர் கோன்செந் தமிழொடிசைபுனையப் பரன்அருள் பெற்றவன் என்பர்இப் பூதலத்தே.
சொற்பிரிப்பு
தனைஒப்பரும் எருக்கத்தம் புலியூர்த் தகும் புகழோன்நினை ஒப்பரும் திரு நீலகண்டப் பெரும்பாணனை நீள்சினை ஒப்பலர் பொழில் சண்பையர் கோன் செந்தமிழொடு இசைபுனையப் பரன் அருள் பெற்றவன் என்பர் இப் பூதலத்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

85

தலம்விளங் குந்திரு நாவலூர் தன்னில் சடையன்என்னும்குலம்விளங் கும்புக ழோனை உரைப்பர் குவலயத்தில்நலம்விளங் கும்படி நாம்விளங் கும்படி நற்றவத்தின்பலம்விளங் கும்படி ஆரூரனைமுன் பயந்தமையே.
சொற்பிரிப்பு
தலம் விளங்கும் திரு நாவலூர் தன்னில் சடையன் என்னும்குலம் விளங்கும் புகழோனை உரைப்பர் குவலயத்தின்நலம் விளங்கும்படி நாம் விளங்கும்படி நற்றவத்தின்பலம் விளங்கும்படி ஆரூரனை முன் பயந்தமையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

86

பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள் ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக்கயந்தான் உகைத்தநற் காளையை என்றும் கபாலங்கைக்கொண்டயந்தான் புகும்அரன் ஆரூர்ப் புனித அரன்திருத்தாள்நயந்தாள் தனதுள்ளத் தென்றும் உரைப்பது ஞானியையே.
சொற்பிரிப்பு
பயந்தாள் கறுஉடைச் செங்கண் வெள்ளைப் பொள்ளல் நீள் பனைக்கைக்கயந்தான் உகைத்த நல் காளையை என்றும் கபாலங் கைக்கொண்டுஅயந்தான் புகும் அரன் ஆரூர்ப் புனித அரன் திருத்தாள்நயந்தாள் தனது உள்ளத்து என்றும் உரைப்பது ஞானியையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

87

ஞானஆ ரூரரைச் சேரரை அல்லது நாம்அறியோம்மானவ ஆக்கை யொடும்புக் கவரை வளரொளிப்பூண்வானவ ராலும் மருவற் கரிய வடகயிலைக்கோனவன் கோயிற் பெருந்தவத் தோர்தங்கள் கூட்டத்திலே.
சொற்பிரிப்பு
ஞான ஆரூரரைச் சேரரை அல்லது நாம் அறியோம்மானவ ஆக்கையொடும் புக் கவரை வளர்ஒளிப்பூண்வானவராலும் மருவற்கு அரிய வடகயிலைக்கோன்அவன் கோயில் பெருந்தவத்தோர் தங்கள் கூட்டத்திலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

88

கூட்டம்ஒன் பானொ டறுபத்து மூன்று தனிப்பெயராஈட்டும் பெருந்தவத் தோர்எழு பத்திரண் டாம்வினையைவாட்டும் தவத்திருத் தொண்டத் தொகைபதி னொன்றின்வகைப்பாட்டும் திகழ்திரு நாவலூராளி பணித்தனனே.
சொற்பிரிப்பு
கூட்டம் ஒன்பானொடு அறுபத்து மூன்று தனிப்பெயராஈட்டும் பெருந்தவத்தோர் எழுபத்து இரண்டாம் வினையைவாட்டும் தவத் திருத்தொண்டத் தொகை பதினொன்றின் வகைப்பாட்டும் திகழும் திரு நாவலூர் ஆளி பணித்தனனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

89

பணித்தநல் தொண்டத் தொகைமுதல் தில்லை இலைமலிந்தஅணித்திகழ் மும்மை திருநின்ற வம்பறா வார்கொண்டசீர்இணைத்தநற் பொய்யடி மைகறைக் கண்டன் கடல்சூழ்ந்தபின்மணித்திகழ் சொற்பத்தர் மன்னிய சீர்மறை நாவனொடே.
சொற்பிரிப்பு
பணித்தநல் தொண்டத் தொகை முதல் தில்லை இலைமலிந்தஅணித்திகழ் மும்மை திருநின்ற வம்பறா வார்கொண்டசீர்இணைத்த நல் பொய்யடிமை கறைக் கண்டன் கடல்சூழ்ந்த பின்மணித்திகழ் சொல் பத்தர் மன்னிய சீர் மறை நாவனொடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

90

ஓடிடும் பஞ்சேந் திரியம் ஒடுக்கிஎன் ஊழ்வினைகள்வாடிடும் வண்ணம்நின் றெத்தவம் செய்தனன் வானினுள்ளோர்சூடிடும் சீர்த்திருப் பாதத்தர் தொண்டத் தொகையின்உள்ளசேடர்தம் செல்வப் பெரும்புகழ் அந்தாதி செப்பிடவே.
சொற்பிரிப்பு
ஓடிடும் பஞ்சேந்திரியம் ஒடுக்கி என் ஊழ்வினைகள்வாடிடும் வண்ணம் நின்று எத்தவம் செய்தனன் வானின் உள்ளோர்சூடிடும் சீர்த் திருப்பாதத்தர் தொண்டத் தொகையின் உள்ளசேடர் தம் செல்வப் பெரும்புகழ் அந்தாதி செப்பிடவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.