1
நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து நீள்மலர்க் கண்பனிப்பவஞ்சம் கடிந்துன்னை வந்தித்தி லேன்அன்று வானர்உய்யநஞ்சங் கருந்து பெருந்தகை யேநல்ல தில்லைநின்றஅஞ்செம் பவளவண் ணாஅருட்கு யான்இனி யாரென்பரே.
சொற்பிரிப்பு
நெஞ்சம் திருவடிக் கீழ் வைத்து நீள்மலர்க் கண் பனிப்பவஞ்சம் கடிந்து உன்னை வந்தித்திலேன் அன்று வானர் உய்யநஞ்சங்கு அருந்து பெருந்தகையே நல்ல தில்லை நின்றஅஞ்செம்பவள வண்ணா அருட்கு யான் இனி யாரென்பரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
என்பும் தழுவிய ஊனும் நெகஅக மேஎழுந்தஅன்பின் வழிவந்த ஆரமிர் தேஅடி யேன்உரைத்தவன்புன் மொழிகள் பொறுத்திகொ லாம்வளர் தில்லைதன்னுள்மின்புன் மிளிர்சடை வீசிநின் றாடிய விண்ணவனே.
சொற்பிரிப்பு
என்பும் தழுவிய ஊனும் நெக அகமே எழுந்தஅன்பின் வழிவந்த ஆரமிர்தே அடியேன் உரைத்தவன் புன் மொழிகள் பொறுத்தி கொலாம் வளர் தில்லை தன்னுள்மின்புன் மிளிர்சடை வீசி நின்றாடிய விண்ணவனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
அவநெறிக் கேவிழப் புக்கஇந் நான்அழுந் தாமைவாங்கித்தவநெறிக் கேஇட்ட தத்துவ னேஅத் தவப்பயனாம்சிவநெறிக் கேஎன்னை உய்ப்பவ னேசென னந்தொறுஞ்செய்பவமறுத் தாள்வதற் கோதில்லை நட்டம் பயில்கின்றதே.
சொற்பிரிப்பு
அவநெறிக்கே விழப் புக்க இந்நான் அழுந்தாமை வாங்கித்தவநெறிக்கே இட்ட தத்துவனே அத் தவப்பயனாம்சிவநெறிக்கே என்னை உய்ப்பவனே செனனந் தொறுஞ்செய்பவமறுத்து ஆள்வதற்கோ தில்லை நட்டம் பயில்கின்றதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
பயில்கின் றிலேன்நின் திறத்திரு நாமம் பனிமலர்த்தார்முயல்கின் றிலேன் நின் திருவடிக் கேஅப்ப முன்னுதில்லைஇயல்கின்ற நாடகச் சிற்றம் பலத்துள்எந் தாய்இங்ஙனேஅயர்கின்ற நான்எங்ங னேபெறு மாறுநின் னாரருளே.
சொற்பிரிப்பு
பயில்கின்றிலேன் நின் திறத் திரு நாமம் பனிமலர்த்தார்முயல்கின்றிலேன் நின் திருவடிக்கே அப்ப முன்னு தில்லைஇயல்கின்ற நாடகச் சிற்றம்பலத்துள் எந்தாய் இங்ஙனேஅயர்கின்ற நான் எங்ஙனே பெறு மாறு நின் ஆரருளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
அருதிக்கு விம்மி நிவந்ததோ வெள்ளிக் குவடதஞ்சுபருதிக் குழவி உமிழ்கின்ற தேஒக்கும் பற்றுவிட்டோர்கருதித் தொழுகழற் பாதமும் கைத்தலம் நான்கும்மெய்த்தசுருதிப் பதம்முழங் குந்தில்லை மேய சுடரினுக்கே.
சொற்பிரிப்பு
அருதிக்கு விம்மி நிவந்ததோ வெள்ளிக் குவடது அஞ்சுபருதிக் குழவி உமிழ்கின்றதே ஒக்கும் பற்றுவிட்டோர்கருதித் தொழு கழல் பாதமும் கைத்தலம் நான்கும் மெய்த்தசுருதிப் பதம் முழங்கும் தில்லை மேய சுடரினுக்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
சுடலைப் பொடியும் படுதலை மாலையும் சூழ்ந்தஎன்பும்மடலைப் பொலிமலர் மாலைமென் தோள்மேல் மயிர்க்கயிறும்அடலைப் பொலிஅயில் மூவிலை வேலும் அணிகொள்தில்லைவிடலைக்கென் ஆனைக் கழகிது வேத வினோதத்தையே.
சொற்பிரிப்பு
சுடலைப் பொடியும் படுதலை மாலையும் சூழ்ந்த என்பும்மடலைப் பொலி மலர்மாலை மென் தோள் மேல் மயிர்க்கயிறும்அடலைப் பொலி அயில் மூவிலை வேலும் அணிகொள் தில்லைவிடலைக்கு என் ஆனைக்கு அழகிது வேத வினோதத்தையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
வேத முதல்வன் தலையும் தலையாய வேள்விதன்னுள்நாதன் அவன்எச்சன் நற்றலை யும்தக்க னார்தலையும்காதிய தில்லைச்சிற் றம்பலத் தான்கழல் சூழந்துநின்றுமாதவர் என்னோ மறைமொழி யாலே வழுத்துவதே.
சொற்பிரிப்பு
வேத முதல்வன் தலையும் தலையாய வேள்வி தன்னுள்நாதன் அவன் எச்சன் நற்றலையும் தக்கனார் தலையும்காதிய தில்லைச் சிற்றம்பலத்தான் கழல் சூழந்து நின்றுமாதவர் என்னோ மறை மொழி யாலே வழுத்துவதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
வழுத்திய சீர்த்திரு மால்உல குண்டவன் பாம்புதன்னின்கழுத்தரு கேதுயின் றானுக்கப் பாந்தளைக் கங்கணமாச்செழுத்திரள் நீர்த்திருச் சிற்றம் பலத்தான் திருக்கடையிடஅழுத்திய கல்லொத் தனன்ஆயன் ஆகிய மாயவனே.
சொற்பிரிப்பு
வழுத்திய சீர்த் திருமால் உல குண்டவன் பாம்பு தன்னின்கழுத்தருகே துயின்றான் உக்கப் பாந்தளைக் கங்கணமாச்செழுத்திரள் நீர்த் திருச்சிற்றம் பலத்தான் திருக்கடையிடஅழுத்திய கல் ஒத்தனன் ஆயன் ஆகிய மாயவனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
மாயவன் முந்நீர்த் துயின்றவன் அன்று மருதிடையேபோயவன் காணாத பூங்கழல் நல்ல புலத்தினர்நெஞ்சேயவன் சிற்றம் பலத்துள்நின் றாடுங் கழல்எவர்க்கும்தாயவன் தன்பொற் கழல்என் தலைமறை நன்னிழலே.
சொற்பிரிப்பு
மாயவன் முந்நீர்த் துயின்றவன் அன்று மருதிடையேபோயவன் காணாத பூங்கழல் நல்ல புலத்தினர் நெஞ்சுஏயவன் சிற்றம்பலத்துள் நின் றாடும் கழல் எவர்க்கும்தாயவன் தன் பொற்கழல் என் தலைமறை நன்னிழலே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
நிழல்படு பூண்நெடு மால்அயன் காணாமை நீண்டவரேதழல்படு பொன்னகல் ஏந்தித் தமருகந் தாடித்தமைத்தெழில்பட வீசிக் கரமெறி நீர்த்தில்லை அம்பலத்தேகுழல்படு சொல்வழி ஆடுவர் யாவர்க்கும் கூத்தினையே.
சொற்பிரிப்பு
நிழல்படு பூண்நெடுமால் அயன் காணாமை நீண்டவரேதழல்படு பொன் அகல் ஏந்தித் தமருகம் தாடித்து அமைத்துஎழில்பட வீசிக் கரமெறி நீர்த்தில்லை அம்பலத்தேகுழல்படு சொல்வழி ஆடுவர் யாவர்க்கும் கூத்தினையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
கூத்தனென் றுந்தில்லை வாணன்என் றும்குழு மிட்டிமையோர்ஏத்தனென் றுஞ்செவி மாட்டிசை யாதே இடுசுணங்கைமூத்தவன் பெண்டீர் குணலையிட் டாலும் முகில்நிறத்தசாத்தனென் றாலும் வருமோ இவளுக்குத் தண்ணெனவே.
சொற்பிரிப்பு
கூத்தனென்றும் தில்லைவாணன் என்றும் குழுமிட்டு இமையோர்ஏத்தனென்றும் செவிமாட்டு இசை வாயாதே இடுசுணங்கைமூத்தவன் பெண்டீர் குணலை இட்டாலும் முகில் நிறத்தசாத்தன் என்றாலும் வருமோ இவளுக்குத் தண்ணெனவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
தண்ணார் புனல்தில்லைச் சிற்றம்பலந்தன்னில் மன்னிநின்றவிண்ணாள னைக்கண்ட நாள்விருப் பாயென் உடல்முழுதும்கண்ணாங் கிலோதொழக் கையாங் கிலோதிரு நாமங்கள்கற்றெண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி லோஎனக் கிப்பிறப்பே.
சொற்பிரிப்பு
தண்ணார் புனல்தில்லைச் சிற்றம்பலந்தன்னில் மன்னி நின்றவிண்ணாளனைக் கண்ட நாள் விருப்பாய் என் உடல் முழுதும்கண்ணாங்கிலோ தொழக் கையாங் கிலோ திரு நாமங்கள் கற்றுஎண்ணாம் பரிசெங்கும் வாயாங்கிலோ எனக்கு இப்பிறப்பே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
பிறவியிற் பெற்ற பயனொன்று கண்டிலம் பேரொலிநீர்நறவியல் பூம்பொழில் தில்லையுள் நாடகம் ஆடுகின்றதுறவியல் சோதியைச் சுந்தரக் கூத்தனைத் தொண்டர்தொண்டர்உறவியல் வாற்கண்கள் கண்டுகண் டின்பத்தை உண்டிடவே.
சொற்பிரிப்பு
பிறவியில் பெற்ற பயனொன்று கண்டிலம் பேரொலி நீர்நறவியல் பூம்பொழில் தில்லையுள் நாடகம் ஆடுகின்றதுறவியல் சோதியைச் சுந்தரக் கூத்தனைத் தொண்டர் தொண்டர்உறவு இயல்வாற் கண்கள் கண்டு கண்டு இன்பத்தை உண்டிடவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
உண்டேன் அவரருள் ஆரமிர் தத்தினை உண்டலுமேகண்டேன் எடுத்த கழலும் கனலும் கவித்தகையும்ஒண்டேன் மொழியினை நோக்கிய நோக்கும் ஒளிநகையும்வண்டேன் மலர்த்தில்லை அம்பலத் தாடும் மணியினையே.
சொற்பிரிப்பு
உண்டேன் அவர் அருளார் அமிர்தத்தினை உண்டலுமேகண்டேன் எடுத்த கழலும் கனலும் கவித்த கையும்ஒண் தேன் மொழியினை நோக்கிய நோக்கும் ஒளிநகையும்வண் தேன் மலர்த்தில்லை அம்பலத்து ஆடும் மணியினையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
மணியொப் பனதிரு மால்மகு டத்து மலர்க்கமலத்தணியொப் பனஅவன் தன்முடி மேல்அடி யேன்இடர்க்குத்துணியச் சமைந்தநல் லீர்வாள் அனையன சூழ்பொழில்கள்திணியத் திகழ்தில்லை அம்பலத் தான்தன் திருந்தடியே.
சொற்பிரிப்பு
மணியொப்பன திருமால் மகு டத்து மலர்க்கமலத்துஅணியொப்பன அவன்தன் முடி மேல் அடியேன் இடர்க்குத்துணியச் சமைந்த நல் ஈர் வாள் அனையன சூழ்பொழில்கள்திணியத் திகழ்தில்லை அம்பலத் தான் தன் திருந்தடியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
அடியிட்ட கண்ணினுக் கோஅவன் அன்பினுக் கோஅவுணர்செடியிட்ட வான்துயர் சேர்வதற் கோதில்லை அம்பலத்துமுடியிட்ட கொன்றைநன் முக்கட் பிரான்அன்று மூவுலகும்அடியிட்ட கண்ணனுக் கீந்தது வாய்ந்த அரும்படையே.
சொற்பிரிப்பு
அடியிட்ட கண்ணினுக்கோ அவன் அன்பினுக்கோ அவுணர்செடியிட்ட வான்துயர் சேர்வதற்கோ தில்லை அம்பலத்துமுடியிட்ட கொன்றை நன் முக்கட் பிரான் அன்று மூவுலகும்அடியிட்ட கண்ணனுக்கு ஈந்தது வாய்ந்த அரும்படையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
படைபடு கண்ணிதன் பங்கதென் தில்லைப் பரம்பரவல்விடைபடு கேதுக விண்ணப்பம் கேள்என் விதிவசத்தால்கடைபடு சாதி பிறக்கினும் நீவைத் தருளுகண்டாய்புடைபடு கிங்கிணித் தாட்செய்ய பாதம்என் னுள்புகவே.
சொற்பிரிப்பு
படைபடு கண்ணி தன் பங்க தென் தில்லைப் பரம்பர வல்விடைபடு கேதுக விண்ணப்பம் கேள் என் விதிவசத்தால்கடைபடு சாதி பிறக்கினும் நீ வைத்து அருளுகண்டாய்புடைபடு கிங்கிணித் தாட்செய்ய பாதம் என்னுள் புகவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
புகவுகிர் வாளெயிற் றால்நிலம் கீண்டு பொறிகலங்கிமிகவுகு மாற்கரும் பாதத்த னேல்வியன் தில்லைதன்னுள்நகவு குலாமதிக் கண்ணியற் கங்கணன் என்றனன்றும்தகவு கொலாந்தக வன்று கொலாமென்று சங்கிப்பனே.
சொற்பிரிப்பு
புக உகிர் வாள் எயிற்றால் நிலம் கீண்டு பொறிகலங்கிமிக உகு மாற்கு அரும்பாதத்தனேல் வியன் தில்லை தன்னுள்நகவு குலாமதிக் கண்ணியற்கு அங்கணன் என்ற நன்றும்தகவு கொலாம் தகவன்று கொலாம் என்று சங்கிப்பனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
சங்கோர் கரத்தன் மகன்தக்கன் தானவர் நான்முகத்தோன்செங்கோல இந்திரன் தோள்தலை ஊர்வேள்வி சீர்உடலம்அங்கோல வெவ்வழ லாயிட் டழிந்தெரிந் தற்றனவால்எங்கோன் எழில்தில்லைக் கூத்தன் கடைக்கண் சிவந்திடவே.
சொற்பிரிப்பு
சங்கோர் கரத்தன் மகன் தக்கன் தானவர் நான்முகத்தோன்செங்கோல இந்திரன் தோள் தலை ஊர் வேள்வி சீர்உடலம்அங்கோல வெவ்வழல் ஆயிட்டு அழிந்து எரிந்து அற்றனவால்எங்கோன் எழில்தில்லைக் கூத்தன் கடைக்கண் சிவந்திடவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
ஏவுசெய் மேருத் தடக்கை எழில்தில்லை அம்பலத்துமேவுசெய் மேனிப் பிரான்அன்றி அங்கணர் மிக்குளரேகாவுசெய் காளத்திக் கண்ணுதல் வேண்டும் வரங்கொடுத்துத்தேவுசெய் வான்வாய்ப் புனலாட் டியதிறல் வேடுவனே.
சொற்பிரிப்பு
ஏவுசெய் மேருத் தடக்கை எழில் தில்லை அம்பலத்துமேவு செய்மேனிப் பிரான் அன்றி அங்கணர் மிக்குளரேகாவு செய் காளத்திக் கண்ணுதல் வேண்டும் வரங்கொடுத்துத்தேவு செய்வான் வாய்ப் புனலாட்டிய திறல் வேடுவனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
வேடனென் றாள்வில் விசயற்கு வெங்கணை அன்றளித்தகோடனென் றாள்குழைக் காதனென் றாள்இடக் காதில்இட்டதோடனென் றாள்தொகு சீர்த்தில்லை அம்பலத் தாடுகின்றசேடனென் றாள்மங்கை அங்கைச் சரிவளை சிந்தினவே.
சொற்பிரிப்பு
வேடன் என்றாள் வில் விசயற்கு வெங்கணை அன்றளித்தகோடன் என்றாள் குழைக் காதன் என்றாள் இடக் காதில் இட்டதோடன் என்றாள் தொகு சீர்த்தில்லை அம்பலத்து ஆடுகின்றசேடன் என்றாள் மங்கை அங்கைச் சரிவளை சிந்தினவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
சிந்திக் கவும்உரை யாடவும் செம்மல ராற்கழல்கள்வந்திக் கவும்மனம் வாய்கரம் என்னும் வழிகள்பெற்றும்சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண் ணார்தில்லை அம்பலத்துள்அந்திக் கமர்திரு மேனிஎம் மான்தன் அருள்பெறவே.
சொற்பிரிப்பு
சிந்திக்கவும் உரையாடவும் செம்மலரால் கழல்கள்வந்திக்கவும் மனம் வாய் கரம் என்னும் வழிகள் பெற்றும்சந்திக்கிலர் சிலர் தெண்ணர் தண்ணார் தில்லை அம்பலத்துள்அந்திக்கு அமர் திருமேனி எம்மான் தன் அருள்பெறவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
அருள்தரு சீர்த்தில்லை அம்பலத் தான்தன் அருளி னன்றிப்பொருள்தரு வானத் தரசாத லிற்புழு வாதல்நன்றாம்சுருள்தரு செஞ்சடை யோன்அரு ளேல்துற விக்குநன்றாம்இருள்தரு கீழேழ் நரகத்து வீழும் இருஞ்சிறையே.
சொற்பிரிப்பு
அருள்தரு சீர்த்தில்லை அம்பலத்தான் தன் அருளின் அன்றிப்பொருள் தரு வானத்தரசு ஆதலிற் புழுவாதல் நன்றாம்சுருள்தரு செஞ்சடையோன் அருளேல் துறவிக்கு நன்றாம்இருள்தரு கீழ் ஏழ் நரகத்து வீழும் இருஞ்சிறையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
சிறைப்புள வாம்புனல் சூழ்வயல் தில்லைச் சிற்றம்பலத்துப்பிறைப்பிள வார்சடை யோன்திரு நாமங்க ளேபிதற்றமிறைப்புள வாகிவெண் ணீறணிந் தோடேந்தும் வித்தகர்தம்உறைப்புள வோஅயன் மாலினொ டும்பர்தம் நாயகற்கே.
சொற்பிரிப்பு
சிறைப் புள் அவாம் புனல்சூழ் வயல் தில்லைச் சிற்றம்பலத்துப்பிறைப் பிளவார் சடையோன் திரு நாமங்களே பிதற்றமிறைப்பு உளவாகி வெண்ணீறு அணிந்து ஓடேந்தும் வித்தகர்தம்உறைப்பு உளவோ அயன் மாலினொடு உம்பர் தம் நாயகற்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
அகழ்சூழ் மதில்தில்லை அம்பலக் கூத்த அடியம்இட்டமுகிழ்சூழ் இலையும் முகைகளும் ஏயுங்கொல் கற்பகத்தின்திகழ்சூழ் மலர்மழை தூவித் திறம்பயில் சிந்தையராய்ப்புகழ்சூழ் இமையவர் போற்றித் தொழும்நின் பூங்கழற்கே.
சொற்பிரிப்பு
அகழ் சூழ் மதில் தில்லை அம்பலக் கூத்த அடியம் இட்டமுகிழ் சூழ் இலையும் முகைகளும் ஏயுங்கொல் கற்பகத்தின்திகழ் சூழ் மலர்மழை தூவித் திறம்பயில் சிந்தையராய்ப்புகழ் சூழ் இமையவர் போற்றித் தொழும் நின் பூங்கழற்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசெம்பொன் அம்பலத்துவேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ தென்னே விரிதுணிமேல்ஆந்தண் பழைய அவிழைஅன் பாகிய பண்டைப்பறைச்சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே.
சொற்பிரிப்பு
பூந்தண் பொழில் சூழ் புலியூர்ப் பொலி சொம்பொன் அம்பலத்துவேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ தென்னே விரிதுணிமேல்ஆந்தண் பழைய அவிழை அன்பாகிய பண்டைப் பறைச்சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர்து ஆகியதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
ஆகங் கனகனைக் கீறிய கோளரிக் கஞ்சிவிண்ணோர்பாகங் கனங்குழை யாய்அரு ளாயெனத் தில்லைப்பிரான்வேகந் தருஞ்சிம்புள் விட்டரி வெங்கதஞ் செற்றிலனேல்மோகங் கலந்தன் றுலந்ததன் றோஇந்த மூவுலகே.
சொற்பிரிப்பு
ஆகங் கனகனைக் கீறிய கோளரிக்கு அஞ்சி விண்ணோர்பாகம் கனம் குழையாய் அருளாய் எனத் தில்லைப்பிரான்வேகந்தரும் சிம்புள் விட்டு அரி வெங்கதம் செற்றிலனேல்மோகம் கலந்து அன்று உலந்ததன்றோ இந்த மூவுலகே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
மூவுல கத்தவர் ஏத்தித் தொழுதில்லை முக்கட்பிராற்கேவு தொழில்செய்யப் பெற்றவர் யாரெனில் ஏர்விடையாய்த்தாவு தொழிற்பட் டெடுத்தனன் மால்அயன் சாரதியாமேவிர தத்தொடு பூண்டதொன் மாமிக்க வேதங்களே.
சொற்பிரிப்பு
மூவுலகத்தவர் ஏத்தித் தொழு தில்லை முக்கட்பிராற்குஏவு தொழில் செய்யப் பெற்றவர் யாரெனில் ஏர் விடையாய்த்தாவு தொழிற்பட்டு எடுத்தனன் மால் அயன் சாரதியாமேவு இரதத்தொடு பூண்ட தொல் மா மிக்க வேதங்களே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
வேதகச் சிந்தை விரும்பிய வன்தில்லை அம்பலத்துமேதகக் கோயில்கொண் டோன்சேய வன்வீ ரணக்குடிவாய்ப்போதகப் போர்வைப் பொறிவாள் அரவரைப் பொங்குசினச்சாதகப் பெண்பிளை தன்னையன் தந்த தலைமகனே.
சொற்பிரிப்பு
வேதகச் சிந்தை விரும்பிய வன்தில்லை அம்பலத்துமேதகக் கோயில் கொண்டோன் சேயவன் வீரணக் குடிவாய்ப்போதகப் போர்வைப் பொறிவாள் அரவரைப் பொங்கு சினச்சாதகப் பெண் பிளை தன் ஐயன் தந்த தலைமகனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
தலையவன் பின்னவன் தாய்தந்தை இந்தத் தராதலத்துநிலையவம் நீக்கு தொழில்புரிந் தோன்நடு வாகிநின்றகொலையவன் சூலப் படையவன் ஆலத்தெழு கொழுந்தின்இலையவன் காண்டற் கருந்தில்லை அம்பலத் துள்இறையே.
சொற்பிரிப்பு
தலையவன் பின்னவன் தாய் தந்தை இந்தத் தராதலத்துநிலை அவம் நீக்கு தொழில் புரிந்தோன் நடுவாகி நின்றகொலைய வன் சூலப் படையவன்ஆலத்தெழு கொழுந்தின்இலையவன் காண்டற்கு அருந்தில்லை அம்பலத்துள் இறையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
இறையும் தெளிகிலர் கண்டும் எழில்தில்லை அம்பலத்துள்அறையும் புனற்சென்னி யோன்அரு ளால்அன் றடுகரிமேல்நிறையும் புகழ்த்திரு வாரூ ரனும்நிறை தார்பரிமேல்நறையுங் கமழ்தொங்கல் வில்லவ னும்புக்க நல்வழியே.
சொற்பிரிப்பு
இறையும் தௌிகிலர் கண்டும் எழில் தில்லை அம்பலத்துள்அறையும் புனற் சென்னியோன் அருளால் அன் று அடு கரிமேல்நிறையும் புகழ்த் திருவாரூரனும் நிறை தார் பரிமேல்நறையும் கமழ் தொங்கல் வில்லவனும் புக்க நல்வழியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
நல்வழி நின்றார் பகைநன்று நொய்யர் உறவிலென்னும்சொல்வழி கண்டனம் யாம்தொகு சீர்த்தில்லை அம்பலத்துவில்வழி தானவர் ஊர்எரித் தோன்வியன் சாக்கியனார்கல்வழி நேர்நின் றளித்தனன் காண்க சிவகதியே.
சொற்பிரிப்பு
நல்வழி நின்றார் பகை நன்று நொய்யர் உறவில் என்னும்சொல்வழி கண்டனம் யாம் தொகு சீர்த்தில்லை அம்பலத்துவில்வழி தானவர் ஊர் எரித் தோன் வியன் சாக்கியனார்கல்வழி நேர் நின்று அளித்தனன் காண்க சிவகதியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
கதியே அடியவர் எய்ப்பினில் வைப்பாக் கருதிவைத்தநிதியே நிமிர்புன் சடைஅமிர் தேநின்னை என்னுள்வைத்தமதியே வளர்தில்லை அம்பலத் தாய்மகிழ் மாமலையாள்பதியே பொறுத்தரு ளாய்கொடி யேன்செய்த பல்பிழையே.
சொற்பிரிப்பு
கதியே அடியவர் எய்ப்பினில் வைப்பாக் கருதிவைத்தநிதியே நிமிர் புன்சடை அமிர்தே நின்னை என்னுள் வைத்தமதியே வளர்தில்லை அம்பலத்தாய் மகிழ் மாமலையாள்பதியே பொறுத்து அருளாய் கொடியேன் செய்த பல் பிழையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
பிழையா யினவே பெருக்கிநின் பெய்கழற் கன்புதன்னில்நுழையாத சிந்தையி னேனையும் மந்தா கினித்துவலைமுழையார் தருதலை மாலை முடித்த முழுமுதலேபுழையார் கரியுரித் தோய்தில்லை நாத பொறுத்தருளே.
சொற்பிரிப்பு
பிழையாயினவே பெருக்கி நின் பெய்கழற்கு அன்பு தன்னில்நுழையாத சிந்தையினேனையும் மந்தாகினித் துவலைமுழையார் தரு தலை மாலை முடித்த முழுமுதலேபுழையார் கரி உரித்தோய் தில்லை நாத பொறுத்தருளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
பொறுத்தில னேனும்பன் னஞ்சினைப் பொங்கெரி வெங்கதத்தைச்செறுத்தில னேனும்நந் தில்லைப் பிரான்அத் திரிபுரங்கள்கறுத்தில னேனுங் கமலத் தயன்கதிர் மாமுடியைஅறுத்தில னேனும் அமரருக் கென்கொல் அடுப்பனவே.
சொற்பிரிப்பு
பொறுத்திலனேனும் பல் நஞ்சினைப் பொங்கெரி வெங்கதத்தைச்செறுத்திலனேனும் நம் தில்லைப் பிரான் அத்திரிபுரங்கள்கறுத்திலனேனும் கமலத்து அயன் கதிர் மாமுடியைஅறுத்திலனேனும் அமரருக்கு என்கொல் அடுப்பனவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
36
அடுக்கிய சீலைய ராய்அகல் ஏந்தித் தசைஎலும்பில்ஒடுக்கிய மேனியோ டூண்இரப் பார்ஒள் இரணியனைநடுக்கிய மாநர சிங்கனைச் சிம்புள தாய்நரலஇடுக்கிய பாதன்தன் தில்லை தொழாவிட்ட ஏழையரே.
சொற்பிரிப்பு
அடுக்கிய சீலையராய் அகல் ஏந்தித் தசை எலும்பில்ஒடுக்கிய மேனியோடு ஊண் இரப்பார் ஒள் இரணியனைநடுக்கிய மாநரசிங்கனைச் சிம்புளதாய்நரலஇடுக்கிய பாதன் தன் தில்லை தொழாவிட்ட ஏழையரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
37
ஏழையென் புன்மை கருதா திடையறா அன்பெனக்குவாழிநின் பாத மலர்க்கே மருவ அருளுகண்டாய்மாழைமென் நோக்கிதன் பங்க வளர்தில்லை அம்பலத்துப்போழிளந் திங்கள் சடைமுடி மேல்வைத்த புண்ணியனே.
சொற்பிரிப்பு
ஏழையென் புன்மை கருதாது இடையறா அன்பு எனக்குவாழி நின் பாதமலர்க்கே மருவ அருளுகண்டாய்மாழைமென் நோக்கி தன் பங்க வளர்தில்லை அம்பலத்துப்போழிளம் திங்கள் சடைமுடி மேல் வைத்த புண்ணியனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
38
புண்ணிய னேஎன்று போற்றி செயாது புலன்வழியேநண்ணிய னேற் கினி யாது கொலாம்புகல் என்னுள்வந்திட்டண்ணிய னேதில்லை அம்பல வாஅலர் திங்கள் வைத்தகண்ணிய னேசெய்ய காமன் வெளுப்பக் கறுத்தவனே.
சொற்பிரிப்பு
புண்ணியனே என்று போற்றி செயாது புலன் வழியேநண்ணியனேற்கு இனி யாது கொலாம் புகல் என்னுள் வந்திட்டுஅண்ணியனே தில்லை அம்பலவா அலர் திங்கள் வைத்தகண்ணியனே செய்ய காமன் வெளுப்பக் கறுத்தவனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
39
கறுத்தகண் டாஅண்ட வாணா வருபுனற் கங்கைசடைசெறுத்தசிந் தாமணி யேதில்லை யாய்என்னைத் தீவினைகள்ஒறுத்தல்கண் டால்சிரி யாரோ பிறர்என் உறுதுயரைஅறுத்தல்செய் யாவிடின் ஆர்க்கோ வருஞ்சொல் அரும்பழியே.
சொற்பிரிப்பு
கறுத்த கண்டா அண்டவாணா வருபுனல் கங்கை சடைசெறுத்த சிந்தாமணியே தில்லை யாய் என்னைத் தீவினைகள்ஒறுத்தல் கண்டால் சிரியாரோ பிறர் என் உறுதுயரைஅறுத்தல் செய்யாவிடின் ஆர்க்கோ வரும் சொல் அரும்பழியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
40
பழித்தக் கவும்இக ழான்தில்லை யான்பண்டு வேட்டுவனும்பழித்திட் டிறைச்சி கலையன் அளித்த விருக்குழங்கன்மொழித்தக்க சீர்அதி பத்தன் படுத்திட்ட மீன்முழுதும்இழித்தக்க என்னா தமிர்துசெய் தான்என் றியம்புவரே.
சொற்பிரிப்பு
பழித்தக்கவும் இகழான் தில்லை யான் பண்டு வேட்டுவனும்பழித்திட்டு இறைச்சி கலையன் அளித்த விருக்குழங்கன்மொழித்தக்க சீர் அதிபத்தன் படுத்திட்ட மீன்முழுதும்இழித்தக்க என்னாது அமிர்து செய்தான் என்று இயம்புவரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
41
வரந்தரு மாறிதன் மேலும்உண் டோவயல் தில்லைதன்னுள்புரந்தரன் மால்தொழ நின்ற பிரான்புலைப் பொய்ம்மையிலேநிரந்தர மாய்நின்ற என்னையும் மெய்ம்மையின் தன்னடியார்தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன் பேசருந் தன்மைஇதே.
சொற்பிரிப்பு
வரம் தருமாறு இதன் மேலும் உண்டோ வயல் தில்லை தன்னுள்புரந்தரன் மால் தொழ நின்ற பிரான் புலைப் பொய்ம்மையிலேநிரந்தரமாய் நின்ற என்னையும் மெய்ம்மையின் தன்னடியார்தரம் தரு வான் செல்வத்து ஆழ்த்தினன் பேசரும் தன்மை இதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
42
தன்றாள் தரித்தார் யாவர்க்கும் மீளா வழிதருவான்குன்றா மதில்தில்லை மூதூர்க் கொடிமேல் விடைஉடையோன்மன்றாட வும்பின்னும் மற்றவன் பாதம் வணங்கிஅங்கேஒன்றார் இரண்டில் விழுவர்அந் தோசில ஊமர்களே.
சொற்பிரிப்பு
தன் தாள் தரித்தார் (இ) யாவர்க்கும் மீளா வழிதருவான்குன்றா மதில்தில்லை மூதூர்க் கொடிமேல் விடை உடையோன்மன்றாடவும் பின்னும் மற்று அவன் பாதம் வணங்கி அங்கேஒன்றார் இரண்டில் விழுவர் அந்தோ சில ஊமர்களே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
43
களைகண் இலாமையும் தன்பொற் கழல்துணை யாம்தன்மையும்துளைகள் நிலாம்முகக் கைக்கரிப் போர்வைச் சுரம்நினையான்தளைகள் நிலாமலர்க் கொன்றையன் தண்புலி யூரன்என்றேன்வளைகள் நிலாமை வணங்கும் அநங்கன் வரிசிலையே.
சொற்பிரிப்பு
களைகண் இலாமையும் தன்பொற்கழல் துணையாம் தன்மையும்துளைகள் நிலாம் முகக் கைக்கரிப் போர்வைச் சுரம் நினையான்தளைகள் நிலாமலர்க் கொன்றையன் தண்புலியூரன் என்றேன்வளைகள் நிலாமை வணங்கும் அநங்கன் வரிசிலையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
44
வரித்தடந் திண்சிலை மன்மதன் ஆதலும் ஆழிவட்டம்தரித்தவன் தன்மகன் என்பதோர் பொற்பும் தவநெறிகள்தெரித்தவன் தில்லையுள் சிற்றம் பலவன் திருப்புருவம்நெரித்தலுங் கண்டது வெண்பொடி யேயன்றி நின்றிலவே.
சொற்பிரிப்பு
வரித்தடம் திண்சிலை மன்மதன் ஆதலும் ஆழிவட்டம்தரித்தவன் தன்மகன் என்பதோர் பொற்பும் தவநெறிகள்தெரித்தவன் தில்லையுள் சிற்றம் பலவன் திருப்புருவம்நெரித்தலும் கண்டது வெண்பொடியே அன்றி நின்றிலவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
45
நின்றில வேவிச யன்னொடும் சிந்தை களிப்புறநீள்தென்தில்லை மாநடம் ஆடும் பிரான்தன் திருமலைமேல்தன்தலை யால்நடந் தேறிச் சரங்கொண் டிழிந்ததென்பர்கன்றினை யேவிள மேலெறிந் தார்த்த கரியவனே.
சொற்பிரிப்பு
நின்றிலவே விசயன்னொடும் சிந்தை களிப்புற நீள்தென்தில்லை மாநடம் ஆடும் பிரான்தன் திருமலைமேல்தன் தலையால் நடந்தேறிச் சரங்கொண்டு இழிந்ததென்பர்கன்றினையே விளமேல் எறிந்து ஆர்த்த கரியவனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
46
கருப்புரு வத்திரு வார்த்தைகள் கேட்டலும் கண்பனியேன்விருப்புரு வத்தினொ டுள்ளம் உருகேன் விதிர்விதிரேன்இருப்புரு வச்சிந்தை என்னைவந் தாண்டதும் எவ்வணமோபொருப்புரு வப்புரி சைத்தில்லை ஆடல் புரிந்தவனே.
சொற்பிரிப்பு
கருப்புருவத் திருவார்த்தைகள் கேட்டலும் கண்பனியேன்விருப்புருவத்தினொடு உள்ளம் உருகேன் விதிர் விதிரேன்இருப்புருவச் சிந்தை என்னை வந்தாண்டதும் எவ்வணமோபொருப்புருவப் புரிசைத் தில்லை ஆடல் புரிந்தவனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
47
புரிந்தஅன்பின்றியும் பொய்ம்மையி லேயும் திசைவழியேவிரிந்தகங் கைம்மலர் சென்னியில் கூப்பில் வியன்நமனார்பரிந்தவன் ஊர்புகல் இல்லை பதிமூன் றெரியஅம்புதெரிந்த எங் கோன்தன் திரையார் புனல்வயல் சேண்தில்லையே.
சொற்பிரிப்பு
புரிந்த அன்பின்றியும் பொய்ம்மையில் ஏயும் திசைவழியேவிரிந்த கங்கை மலர் சென்னியில் கூப்பில் வியன் நமனார்பரிந்தவன் ஊர் புகல் இல்லை பதி மூன்று எரிய அம்புதெரிந்த எங்கோன் தன் திரையார் புனல் வயல் சேண் தில்லையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
48
சேண்தில்லை மாநகர்த் திப்பியக் கூத்தனைக் கண்டும்அன்புபூண்டிலை நின்னை மறந்திலை ஆங்கவன் பூங்கழற்கேமாண்டிலை இன்னம் புலன்வழி யேவந்து வாழ்ந்திடுவான்மீண்டனை என்னைஎன் செய்திட வோசிந்தை நீவிளம்பே.
சொற்பிரிப்பு
சேண்தில்லை மாநகர்த் திப்பியக் கூத்தனைக் கண்டும் அன்புபூண்டிலை நின்னை மறந்திலை ஆங்கவன் பூங்கழற்கேமாண்டிலை இன்னம் புலன்வழியே வந்து வாழ்ந்திடுவான்மீண்டனை என்னை என் செய்திடவோ சிந்தை நீ விளம்பே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
49
விளவைத் தளர்வித்த விண்டுவும் தாமரை மேல்அயனும்அளவிற் கறியா வகைநின்ற அன்றும் அடுக்கல் பெற்றதளர்விற் றிருநகை யாளும்நின் பாகங்கொல் தண்புலியூர்க்களவிற் கனிபுரை யுங்கண்ட வார்சடைக் கங்கையனே.
சொற்பிரிப்பு
விளவைத் தளர்வித்த விண்டுவும் தாமரை மேல் அயனும்அளவிற்கு அறியா வகை நின்ற அன்றும் அடுக்கல் பெற்றதளர்வில் திருநகையாளும் நின் பாகங்கொல் தண்புலியூர்க்களவிற் கனி புரையுங் கண்ட வார்சடைக் கங்கையனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
50
கங்கை வலம்இடம் பூவலம் குண்டலம் தோடிடப்பால்தங்கும் கரவலம் வெம்மழு வீயிடம் பாந்தள்வலம்சங்கம் இடம்வலம் தோலிடம் ஆடை வலம்அக்கிடம்அங்கஞ் சரிஅம் பலவன் வலங்காண் இடம்அணங்கே.
சொற்பிரிப்பு
கங்கை வலம் இடம் பூ வலம் குண்டலம் தோடு இடப்பால்தங்கும் கரவலம் வெம்மழு வீ இடம் பாந்தள் வலம்சங்கம் இடம் வலம் தோல் இடம் ஆடை வலம் அக்கு இடம்அங்கஞ் சரி அம்பலவன் வலம் காண் இடம் அணங்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
51
அணங்கா டகக்குன்ற மாதற வாட்டிய வாலமர்ந்தாட்கிணங்கா யவன்தில்லை எல்லை மிதித்தலும் என்புருகாவணங்கா வழுத்தா விழாஎழும் பாவைத் தவாமதர்த்தகுணங்காண் இவள்என்ன என்றுகொ லாம்வந்து கூடுவதே.
சொற்பிரிப்பு
அணங்கு ஆடகக் குன்ற மாது அற ஆட்டிய ஆலமர்ந்தாட்குஇணங்கு ஆயவன் தில்லை எல்லை மிதித்தலும் என்புருகாவணங்கா வழுத்தா விழாஎழும் பாவைத் தவா மதர்த்தகுணங்காண் இவள் என்ன என்று கொலாம் வந்து கூடுவதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
52
கூடுவ தம்பலக் கூத்தன் அடியார் குழுவுதொறும்தேடுவ தாங்கவன் ஆக்கம்அச் செவ்வழி அவ்வழியேஓடுவ துள்ளத் திருத்துவ தொண்சுட ரைப்பிறவிவீடுவ தாக நினையவல் லோர்செய்யும் வித்தகமே.
சொற்பிரிப்பு
கூடுவது அம்பலக் கூத்தன் அடியார் குழுவுதொறும்தேடுவது ஆங்கவன் ஆக்கம் அச் செவ்வழி அவ்வழியேஓடுவது உள்ளத்து இருத்துவது ஒண்சுடரைப் பிறவிவீடுவதாக நினைய வல்லோர் செய்யும் வித்தகமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
53
வித்தகச் செஞ்சடை வெண்மதிக் கார்நிறக் கண்டத் தெண்தோள்மத்தகக் கைம்மலைப் போர்வை மதில்தில்லை மன்னனைத்தம்சித்தகக் கோயில் இருத்தும் திறத்தா கமிகர்க்கல்லால்புத்தகப் பேய்களுக் கெங்குத்த தோஅரன் பொன்னடியே.
சொற்பிரிப்பு
வித்தகச் செஞ்சடை வெண்மதிக் கார்நிறக் கண்டத்து எண்தோள்மத்தகக் கைம்மலைப் போர்வை மதில் தில்லை மன்னனைத் தம்சித்தகக் கோயில் இருத்தும் திறத்தாது ஆகமிகர்க்கு அல்லால்புத்தகப் பேய்களுக்கு எங்குத்ததோ அரன் பொன்னடியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
54
பொன்னம் பலத்துறை புண்ணியன் என்பர் புயல்மறந்தகன்னம்மை தீரப் புனிற்றுக் கலிக்காமற் கன்றுபுன்கூர்மன்னு மழைபொழிந் தீர்அறு வேலிகொண் டாங்கவற்கேபின்னும் பிழைதவிர்ந் தீர்அறு வேலிகொள் பிஞ்ஞகனே.
சொற்பிரிப்பு
பொன்னம்பலத்து உறை புண்ணியன் என்பர் புயல் மறந்தகன்னல் மை தீரப் புனிற்றுக் கலிக்காமற்கு அன்று புன்கூர்மன்னு மழை பொழிந்து ஈரறு வேலிகொண்டு ஆங்கு அவற்கேபின்னும் பிழை தவிர்ந்து ஈரறு வேலிகொள் பிஞ்ஞகனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
55
நேசன்அல் லேன்நினை யேன்வினை தீர்க்குந் திருவடிக்கீழ்வாசநன் மாமல ரிட்டிறைஞ் சேன்என்தன் வாயதனால்தேசன்என் னானை பொன்னார் திருச் சிற்றம் பலம்நிலவும்ஈசன்என் னேன்பிறப் பென்னாய்க் கழியுங்கொல் என்தனக்கே.
சொற்பிரிப்பு
நேசன் அல்லேன் நினையேன் வினை தீர்க்கும் திருவடிக்கீழ்வாச நன் மாமலரிட்டு இறைஞ்சேன் என் தன் வாயதனால்தேசன் என்னானை பொன்னார் திருச்சிற்றம்பலம் நிலவும்ஈசன் என்னேன் பிறப்பு என்னாய்க் கழியுங்கொல் என் தனக்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
56
தனந்தலை சக்கரம் வானத் தலைமை குபேரன்தக்கன்வனந்தலை ஏறடர்த் தோன்வா சவன்உயிர் பல்லுடல்ஊர்சினந்தலை காலன் பகல்காமன் தானவர் தில்லைவிண்ணோர்இனந்தலை வன்அரு ளால்முனி வால்பெற் றிகந்தவரே.
சொற்பிரிப்பு
தனம் தலை சக்கரம் வானத் தலைமை குபேரன் தக்கன்வனந்தலை ஏறடர்த்தோன் வாசவன் உயிர் பல் உடல் ஊர்சினந்தலை காலன் பகல் காமன் தானவர் தில்லை விண்ணோர்இனந்தலைவன் அருளால் முனிவால் பெற்று இகந்தவரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
57
அவமதித் தாழ்நர கத்தில் இடப்படும் ஆதர்களும்தவமதித் தொப்பிலர் என்னவிண் ஆளும் தகைமையரும்நவநிதித் தில்லையுட் சிற்றம் பலத்து நடம்பயிலும்சிவநிதிக் கேநினை யாரும் நினைந்திட்ட செல்வருமே.
சொற்பிரிப்பு
அவமதித்து ஆழ்நரகத்தில் இடப்படும் ஆதர்களும்தவமதித்து ஒப்பிலர் என்ன விண் ஆளும் தகைமையரும்நவநிதித் தில்லையுள் சிற்றம்பலத்து நடம் பயிலும்சிவநிதிக்கே நினையாரும் நினைந்திட்ட செல்வருமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
58
வருவா சகத்தினில் முற்றுணர்ந் தோனைவண் தில்லைமன்னைத்திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்பொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற் றப் பொருளைத்தெருளாத உள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே.
சொற்பிரிப்பு
வருவாசகத்தினில் முற்றுணர்ந்தோனை வண் தில்லை மன்னைத்திருவாதவூர்ச் சிவபாத்தியன் செய் திருச்சிற்றம்பலப்பொருளார் தரு திருக்கோவை கண்டேயும் மற்று அப்பொருளைத்தெருளாத உள்ளத்தவர் கவி பாடிச் சிரிப்பிப்பரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
59
சிரித்திட்ட செம்பவ ளத்தின் திரளும் செழுஞ்சடைமேல்விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும் வெங்கதப் பாந்தளும்தீத்தரித்திட்ட அங்கையும் சங்கச் சுருளும்என் நெஞ்சினுள்ளேதெரித்திட்ட வாதில்லைச் சிற்றம் பலத்துத் திருநடனே.
சொற்பிரிப்பு
சிரித்திட்ட செம்பவளத்தின் திரளும் செழுஞ்சடை மேல்விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும் வெங்கதப் பாந்தளும் தீத்தரித்திட்ட அங்கையும் சங்கச் சுருளும் என் நெஞ்சினுள்ளேதெரித்திட்டவா தில்லைச் சிற்றம் பலத்துத் திருநடனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
60
நடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி வென்செய்யும் காமன்அன்றுகொடுஞ்சினத் தீவிழித் தாற்குக் குளிர்ந்தனன் விற்கொடும்பூண்விடுஞ்சினத் தானவர் வெந்திலர் வெய்தென வெங்கதத்தைஒடுங்கிய காலன்அந் நாள்நின் றுதையுணா விட்டனனே.
சொற்பிரிப்பு
நடஞ்செய் சிற்றம்பலத்தான் முனிவு என்செய்யும் காமன் அன்றுகொடுஞ்சினத் தீ விழித்தாற்குக் குளிர்ந்தனன் விற்கொடும் பூண்விடுஞ்சினத் தானவர் வெந்திலர் வெய்தென வெங்கதத்தைஒடுங்கிய காலன் அந்நாள் நின்று உதையுணா விட்டனனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
61
விட்டங் கொளிமணிப் பூண்திகழ் வன்மதன் மெய்யுரைக்கில்இட்டங் கரியநல் லான்அல்லன் அம்பலத் தெம்பரன்மேல்கட்டங் கியகணை எய்தலும் தன்னைப்பொன் னார்முடிமேல்புட்டங்கி னான்மக னாமென்று பார்க்கப் பொடிந்தனனே.
சொற்பிரிப்பு
விட்டங்கொளி மணிப் பூண் திகழ் வன் மதன் மெய்யுரைக்கில்இட்டம் கரியன் நல்லான் அல்லன் அம்பலத்து எம்பரன் மேல்கட்டங்கிய கணை எய்தலும்தன்னைப் பொன்னார் முடிமேல்புள் தங்கினான் மகனாம் என்று பார்க்கப் பொடிந்தனனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
62
பொடியேர் தருமே னியனாகிப் பூசல் புகவடிக்கேகடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயிற் கருவியில்லாவடியே படஅமை யுங்கணை என்ற வரகுணன்தன்முடியே தருகழல் அம்பலத் தாடிதன் மொய்கழலே.
சொற்பிரிப்பு
பொடியேர் தருமேனியனாகிப் பூசல் புக அடிக்கேகடிசேர் கணை குளிப்பக் கண்டு கோயில் கருவியில்லாஅடியே பட அமையுங்கணை என்ற வரகுணன்தன்முடியே தருகழல் அம்பலத்து ஆடி தன் மொய்கழலே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
63
கழலும் பசுபாச ராம்இமை யோர்தங் கழல்பணிந்திட்டழலும் இருக்கும் தருக்குடை யோர்இடப் பால்வலப்பால்தழலும் தமருக மும்பிடித் தாடிசிற் றம்பலத்தைச்சுழலும் ஒருகால் இருகால் வரவல்ல தோன்றல்களே.
சொற்பிரிப்பு
கழலும் பசுபாசராம் இமையோர் தங்கழல் பணிந்திட்டுஅழலும் இருக்கும் தருக்குடையோர் இடப்பால் வலப்பால்தழலும் தமருகமும் பிடித்தாடி சிற்றம்பலத்தைச்சுழலும் ஒருகால் இருகால் வரவல்ல தோன்றல்களே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
64
தோன்றலை வெண்மதி தாங்கியைத் துள்ளிய மாலயற்குத்தான்தலை பாதங்கள் சார்எரி யோன்தன்னைச் சார்ந்தவர்க்குத்தேன்தலை ஆன்பால் அதுகலந் தால்அன்ன சீரனைச்சீர்வான்தலை நாதனைக் காண்பதென் றோதில்லை மன்றிடையே.
சொற்பிரிப்பு
தோன்றலை வெண்மதி தாங்கியைத் துள்ளிய மாலயற்குத்தான் தலை பாதங்கள் சார் எரியோன் தன்னைச் சார்ந்தவர்க்குத்தேன்தலை ஆன்பால் அது கலந்தால் அன்ன சீரனைச் சீர்வான் தலை நாதனைக் காண்பது என்றோ தில்லை மன்று இடையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
65
மன்றங் கமர்திருச் சிற்றம் பலவ வடவனத்துமின்றங் கிடைக்குந்தி நாடக மாடக்கொல் வெண்தரங்கம்துன்றங் கிளர்கங்கை யாளைச் சுடுசினத் தீயரவக்கன்றங் கடைசடை மேல்அடை யாவிட்ட கைதவமே.
சொற்பிரிப்பு
மன்று அங்கு அமர் திருச்சிற்றம் பலவ வடவனத்துமின்தங்கு இடைக்கு உந்தி நாடக மாடக் கொல் வெண்தரங்கம்துன்றம் கிளர் கங்கையாளைச் சுடு சினத் தீயரவக்கன்று அங்கடை சடை மேல் அடையா விட்ட கைதவமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
66
தவனைத் தவத்தவர்க் கன்பனைத் தன்அடி எற்குதவும்சிவனைச் சிவக்கத் திரிபுரத் தைச்சிவந் தானைச் செய்யஅவனைத் தவளத் திருநீ றனைப்பெரு நீர்கரந்தபவனைப் பணியுமின் நும்பண்டை வல்வினை பற்றறவே.
சொற்பிரிப்பு
தவனைத் தவத்தவர்க்கு அன்பனைத் தன்அடி எற்கு உதவும்சிவனைச் சிவக்கத் திரிபுரத்தைச் சிவந்தானைச் செய்யஅவனைத் தவளத் திருநீறனைப் பெருநீர் கரந்தபவனைப் பணியுமின் நும் பண்டை வல்வினை பற்றறவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
67
பற்றற முப்புரம் வெந்தது பைம்பொழில் தில்லைதன்னுள்செற்றரு மாமணிக் கோயிலில் நின்றது தேவர்கணம்சுற்றரு நின்புகழ் ஏத்தித் திரிவது சூழ்சடையோய்புற்றர வாட்டித் திரியும் அதுவொரு புல்லனவே.
சொற்பிரிப்பு
பற்றற முப்புரம் வெந்தது பைம்பொழில் தில்லை தன்னுள்செற்றரு மாமணிக் கோயிலில் நின்றது தேவர் கணம்சுற்றரு நின்புகழ் ஏத்தித் திரிவது சூழ்சடையோய்புற்று அரவாட்டித் திரியும் அதுவொரு புல்லனவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
68
புல்லறி வின்மற்றைத் தேவரும் பூம்புலி யூருள்நின்றஅல்லெறி மாமதிக் கண்ணிய னைப்போல் அருளுவரேகல்லெறிந் தானும்தன் வாய்நீர் கதிர்முடி மேலுகுத்தநல்லறி வாளனும் மீளா வழிசென்று நண்ணினரே.
சொற்பிரிப்பு
புல்லறிவின் மற்றைத் தேவரும் பூம்புலியூருள் நின்றஅல்லெறி மாமதிக் கண்ணியனைப் போல் அருளுவரேகல்லெறிந்தானும் தன் வாய்நீர் கதிர்முடி மேல் உகுத்தநல்லறிவாளனும் மீளா வழிசென்று நண்ணினரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
69
நண்ணிய தீவினை நாசஞ் செலுத்தி நமனுலகத்தெண்ணினை நீக்கி இமையோர் உலகத் திருக்கலுற்றீர்பெண்ணினொர் பாகத்தன் சிற்றம் பலத்துப் பெருநடனைக்கண்ணினை யார்தரக் கண்டுகை யாரத் தொழுமின்களே.
சொற்பிரிப்பு
நண்ணிய தீவினை நாசம் செலுத்தி நமனுலகத்துஎண்ணினை நீக்கி இமையோர் உலகத்து இருக்கலுற்றீர்பெண்ணினொர் பாகத்தன் சிற்றம் பலத்துப் பெருநடனைக்கண்ணினை ஆர் தரக் கண்டு கை யாரத் தொழுமின்களே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
70
கைச்செல்வம் எய்திட லாமென்று பின்சென்று கண்குழித்தல்பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட்கே என்றும் பொன்றல்இல்லாஅச்செல்வம் எய்திட வேண்டுதி யேல்தில்லை அம்பலத்துள்இச்செல்வன் பாதம் கருதிரந் தேன்உன்னை என்நெஞ்சமே.
சொற்பிரிப்பு
கைச்செல்வம் எய்திடலாம் என்று பின்சென்று கண்குழித்தல்பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட்கே என்றும் பொன்றல் இல்லாஅச்செல்வம் எய்திட வேண்டுதியேல் தில்லை அம்பலத்துள்இச்செல்வன் பாதம் கருது இரந்தேன் உன்னை என்நெஞ்சமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.