திருமுறை 11 · 11.032 · 20

நாரையூர்

அருளியவர்
நம்பியாண்டார் நம்பி
தலம்
நாரையூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்தன்னை நினையத் தருகின்றான் - புன்னைவிரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்அரசுமகிழ் அத்திமுகத் தான்.
சொற்பிரிப்பு
என்னை நினைந்து அடிமை கொண்டு என் இடர்கெடுத்துத்தன்னை நினையத் தருகின்றான் – புன்னைவிரசு மகிழ் சோலை வியன் நாரையூர் முக்கண்அரசு மகிழ் அத்தி முகத்தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

முகத்தாற் கரியன்என் றாலும் தனையே முயன்றவர்க்குமிகத்தான் வெளியன்என் றேமெய்ம்மை உன்னும் விரும்படியார்அகத்தான் திகழ்திரு நாரையூர் அம்மான் பயந்தஎம்மான்உகத்தா னவன்தன் உடலம் பிளந்த ஒருகொம்பனே.
சொற்பிரிப்பு
முகத்தாற் கரியன் என்றாலும் தனையே முயன்றவர்க்குமிகத்தான் வௌியன் என்றே மெய்ம்மை உன்னும் விரும்படியார்அகத்தான் திகழ் திருநாரையூர் அம்மான் பயந்த எம்மான்உகத்தான் அவன் தன் உடலம் பிளந்த ஒரு கொம்பனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமேவம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையேதன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாய்என்நோய்பின்னவலம் செய்வதெனோ பேசு.
சொற்பிரிப்பு
கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமேவம்பனைய மாங்கனியை நாரையூர் – நம்பனையேதன்னவலம் செய்து கொளும் தாழ் தடக்கையாய் என் நோய்பின்னவலம் செய்வது எனோ பேசு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பேசத் தகாதெனப் பேயெரு தும்பெருச் சாளியும்என்றேசத் தகும்படி ஏறுவ தேயிமை யாதமுக்கட்கூசத் தகுந்தொழில் நுங்கையும் நுந்தையும் நீயும்இந்தத்தேசத் தவர்தொழு நாரைப் பதியுள் சிவக்களிறே.
சொற்பிரிப்பு
பேசத் தகாதெனப் பேய எருதும் பெருச்சாளியும் என்றுஏசத் தகும்படி ஏறுவதே இமையாத முக்கட்கூசத் தகுந்தொழில் நுங்கையும் நுந்தையும் நீயும் இந்தத்தேசத்தவர் தொழு நாரைப் பதியுள் சிவக்களிறே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்ஒளிறும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும்பின்நாரை யூர்ஆரல் ஆரும் பெரும்படுகர்மன்நாரை யூரான் மகன்.
சொற்பிரிப்பு
களிறு முகத்தவனாய்க் காயம் செந்தீயின்ஒளிறும் உருக்கொண்டது என்னே – அளறு தொறும்பின் நாரையூர் ஆரல் ஆரும் பெரும்படுகர்மன் நாரையூரான் மகன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மகத்தினில் வானவர் பல்கண் சிரம்தோள் நெரித்தருளும்சுகத்தினில் நீள்பொழில் நாரைப் பதியுட் சுரன்மகற்குமுகத்தது கைஅந்தக் கையது மூக்கந்த மூக்கதனின்அகத்தது வாய்அந்த வாயது போலும் அடுமருப்பே.
சொற்பிரிப்பு
மகத்தினில் வானவர் பல் கண் சிரம் தோள் நெரித்தருளும்சுகத்தினில் நீள்பொழில் நாரைப் பதியுள் சுரன் மகற்குமுகத்தது கை அந்தக் கையது மூக்கு அந்த மூக்கதனின்அகத்தது வாய் அந்த வாயது போலும் அடுமருப்பே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மருப்பைஒரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்பொருப்பைஅடி போற்றத் துணிந்தால் - நெருப்பைஅருந்தஎண்ணு கின்றஎறும் பன்றே அவரைவருந்தஎண்ணு கின்ற மலம்.
சொற்பிரிப்பு
மருப்பை ஒரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்பொருப்பை அடி போற்றத் துணிந்தால் – நெருப்பைஅருந்த எண்ணுகின்ற எறும்பு அன்றே அவரைவருந்த எண்ணுகின்ற மலம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வருமப்புலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேற்சலஞ்செய்த நாரைப் பதியரன் தன்னைக் கனிதரவேவலஞ்செய்து கொண்ட மதக்களி றேஉன்னை வாழ்த்துவனே.
சொற்பிரிப்பு
மலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம் வருமப்புலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேல்சலஞ்செய்த நாரைப் பதியரன் தன்னைக் கனி தரவேவலஞ்செய்து கொண்ட மதக்களிறே உன்னை வாழ்த்துவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத்தனஞ்சாய லைத்தருவான் அன்றோ - இனஞ்சாயத்தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும்நாரையூர் நம்பர்மக னாம்.
சொற்பிரிப்பு
வனஞ்சாய வல்வினை நோய் நீக்கி வனசத்தனஞ்சாயலைத் தருவான் அன்றோ – இனஞ்சாயத்தேரையூர் நம்பர் மகன் திண்தோள் நெரித்தருளும்நாரையூர் நம்பர் மகனாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நாரணன் முன்பணிந் தேத்தநின் றெல்லை நடாவியவத்தேரண வும்திரு நாரையூர் மன்னு சிவன்மகனேகாரண னேஎம் கணபதி யேநற் கரிவதனாஆரண நுண்பொரு ளேயென் பவர்க்கில்லை அல்லல்களே.
சொற்பிரிப்பு
நாரணன் முன்பணிந்து ஏத்த நின்று எல்லை நடாவிய வத்தேரணவும் திருநாரையூர் மன்னு சிவன் மகனேகாரணனே எம் கணபதியே நற்கரி வதனாஆரண நுண்பொருளே என்பவர்க்கு இல்லை அல்லல்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின்எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களைசெங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்சேய்கொங்கெழுதார் ஐங்கரத்த கோ.
சொற்பிரிப்பு
அல்லல் களைந்தான் தன் அம்பொன் உலகத்தின்எல்லை புகுவிப்பான் ஈண்டு உழவர் – நெல்லல்களைசெங்கழுநீர் கட்கும் திருநாரையூர்ச் சிவன் சேய்கொங்கெழு தார் ஐங்கரத்த கோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

கோவிற் கொடிய நமன்தமர் கூடா வகைவிடுவன்காவிற் திகழ்தரு நாரைப் பதியிற் கரும்பனைக்கைமேவற் கரிய இருமதத் தொற்றை மருப்பின்முக்கண்ஏவிற் புருவத் திமையவள் தான்பெற்ற யானையையே.
சொற்பிரிப்பு
கோவிற் கொடிய நமன்தமர் கூடா வகை விடுவன்காவிற் திகழ் தரு நாரைப் பதியிற் கரும் பனைக்கைமேவற் கரிய இருமதத்து ஒற்றை மருப்பின் முக்கண்ஏவிற் புருவத்து இமையவள் தான் பெற்ற யானையையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமைதானே சனார்த்தனற்கு நல்கினான் - தேனேதொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலன்ஏந்திஎடுத்த மதமுகத்த ஏறு.
சொற்பிரிப்பு
யானேத்திய வெண்பா என்னை நினைந்தடிமைதானே சனார்த்தனற்கு நல்கினான் – தேனேதொடுத்த பொழில் நாரையூர்ச் சூலம் வலன் ஏந்திஎடுத்த மத முகத்த ஏறு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

ஏறிய சீர்வீ ரணக்குடி ஏந்திழைக் கும்இருந்தேன்நாறிய பூந்தார்க் குமரற்கும் முன்னினை நண்ணலரைச்சீறிய வெம்பணைச் சிங்கத்தி னுக்கிளை யானைவிண்ணோர்வேறியல் பால்தொழு நாரைப் பதியுள் விநாயகனே.
சொற்பிரிப்பு
ஏறிய சீர் வீரணக்குடி ஏந்திழைக்கும் இருந்தேன்நாறிய பூந்தார்க் குமரற்கும் முன்னினை நண்ணலரைச்சீறிய வெம்பணைச் சிங்கத்தினுக்கு இளையானை விண்ணோர்வேறியல்பால் தொழு நாரைப் பதியுள் விநாயகனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார்மனமருவி னான்பயந்த வாய்ந்த - சினமருவுகூசாரம் பூண்டமுகக் குஞ்சரக்கன் றென்றார்க்குமாசார மோசொல்லு வான்.
சொற்பிரிப்பு
கனமதில் சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார்மனம் மருவினான் பயந்த வாய்ந்த – சினமருவுகூசாரம் பூண்ட முகக் குஞ்சரக் கன்று என்றார்க்குமாசாரமோ சொல்லு வான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

வானிற் பிறந்த மதிதவ ழும்பொழில் மாட்டளிசூழ்தேனிற் பிறந்த மலர்த்திரு நாரைப் பதிதிகழும்கோனிற் பிறந்த கணபதி தன்னைக் குலமலையின்மானிற் பிறந்த களிறென் றுரைப்பர்இவ் வையகத்தே.
சொற்பிரிப்பு
வானிற் பிறந்த மதிதவழும் பொழில் மாட்டளிசூழ்தேனிற் பிறந்த மலர்த் திரு நாரைப் பதி திகழும்கோனிற் பிறந்த கணபதி தன்னைக் குலமலையின்மானிற் பிறந்த களிறென்று உரைப்பர் இவ்வையகத்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

வையகத்தார் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்துபொய்யகத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர்மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான்ஆங்கனிநஞ் சிந்தைஅமர் வான்.
சொற்பிரிப்பு
வையகத்தார் ஏத்த மதில் நாரையூர் மகிழ்ந்துபொய்யகத்தார் உள்ளம் புகலொழிந்து – கையகத்தோர்மாங்கனி தன் கொம்பண்டம் பாச மழு மல்குவித்தான்ஆங்கனி நம் சிந்தை அமர்வான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

அமரா அமரர் தொழுஞ்சரண் நாரைப் பதிஅமர்ந்தகுமரா குமரற்கு முன்னவ னேகொடித் தேர்அவுணர்தமரா சறுத்தவன் தன்னுழைத் தோன்றின னேஎனநின்றமரா மனத்தவர் ஆழ்நர கத்தில் அழுந்துவரே.
சொற்பிரிப்பு
அமரா அமரர் தொழுஞ்சரண் நாரைப்பதி அமர்ந்தகுமரா குமரர்க்கு முன்னவனே கொடித்தேர் அவுணர்தமர் ஆசறுத்தவன் தன்னுழைத் தோன்றினனே என நின்றுஅமரா மனத்தவர் ஆழ் நரகத்தில் அழுந்துவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

அவமதியா துள்ளமே அல்லலற நல்லதவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாம்கொம்பன் விநாயகன்கொங் கார்பொழில்சூழ் நாரையூர்நம்பன் சிறுவன்சீர் நாம்.
சொற்பிரிப்பு
அவமதியாது உள்ளமே அல்லல் அற நல்லதவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் – நவமதியாம்கொம்பன் விநாயகன் கொங்கார் பொழில் சூழ் நாரையூர்நம்பன் சிறுவன் சீர் நாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

நாந்தன மாமனம் ஏத்துகண் டாய்என்றும் நாண்மலரால்தாந்தன மாக இருந்தனன் நாரைப் பதிதன்னுளேசேர்ந்தன னேஐந்து செங்கைய னேநின் திரள்மருப்பைஏந்தின னேஎன்னை ஆண்டவ னேஎனக் கென்னையனே.
சொற்பிரிப்பு
நாந்தனமா மனம் ஏத்து கண்டாய் என்றும் நாண்மலரால்தாந்தனமாக இருந்தனன் நாரைப் பதி தன்னுளேசேர்ந்தனனே ஐந்து செங்கையனே நின் திரள்மருப்பைஏந்தினனே என்னை ஆண்டவனே எனக்கு என்னையனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.