திருமுறை 11 · 11.031 · 10

ஒற்றியூர்

அருளியவர்
பட்டினத்துப் பிள்ளையார்
தலம்
ஒற்றியூர்
நாடு
தொண்டைநாடு

1

இருநில மடந்தை இயல்பினின் உடுத்தபொருகடல் மேகலை முகமெனப் பொலிந்தஒற்றி மாநகர் உடையோய் உருவின்பெற்றிஒன் றாகப் பெற்றோர் யாரேமின்னின் பிறக்கம் துன்னும்நின் சடையே. ....(5)மன்னிய அண்டம்நின் சென்னியின் வடிவே.பாவகன் பரிதி பனிமதி தன்னொடும்மூவகைச் சுடரும்நின் நுதல்நேர் நாட்டம்தண்ணொளி ஆரந் தாரா கணமேவிண்ணவர் முதலா வேறோர் இடமாக் ...(10)கொண்டுறை விசும்பே கோலநின் ஆகம்எண்திசை திண்தோள் இருங்கடல் உடையேஅணியுடை அல்குல் அவனிமண் டலமேமணிமுடிப் பாந்தள்நின் தாளிணை வழக்கேஒழியா தோடிய மாருதம் உயிர்ப்பே ...(15)வழுவா ஓசை முழுதும்நின் வாய்மொழிவானவர் முதலா மன்னுயிர் பரந்தஊனமில் ஞானத் தொகுதிநின் உணர்வேநெருங்கிய உலகினில் நீர்மையும் நிற்றலும்சுருங்கலும் விரிதலும் தோற்றுநின் தொழிலே ..(20)அமைத்தலும் அழித்தலும் ஆங்கதன் முயற்சியும்இமைத்தலும் விழித்தலும் ஆகும்நின் இயல்பேஎன்றிவை முதலா இயல்புடை வடிவினோடொன்றிய துப்புரு இருவகை ஆகிமுத்திறக் குணத்து நால்வகைப் பிறவி ...(25)அத்திறத் தைம்பொறி அறுவகைச் சமயமோடேழுல காகி எண்வகை மூர்த்தியோடூழிதோ றூழி எண்ணிறந் தோங்கிஎவ்வகை அளவினிற் கூடிநின்றுஅவ்வகைப் பொருளும்நீ ஆகிய இடத்தே.
சொற்பிரிப்பு

உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

இடத்துறை மாதரோ டீருடம் பென்றும்நடத்தினை நள்ளிருள் நவிற்றினை என்றும்புலியதள் என்பொடு புனைந்தோய் என்றும்பலிதிரி வாழ்க்கை பயின்றோய் என்றும்அருவமும் உருவமும் ஆனாய் என்றும் ...(5)திருவமர் மாலொடு திசைமுகன் என்றும்உளனே என்றும் இலனே என்றும்தளரான் என்றும் தளர்வோன் என்றும்ஆதி என்றும் அசோகினன் என்றும்போதியிற் பொலிந்த புராணன் என்றும் ...(10)இன்னவை முதலாத் தாமறி அளவையின்மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப்பிணங்கு மாந்தர் பெற்றிமை நோக்கிஅணங்கிய அவ்வவர்க் கவ்வவை ஆகிஅடையப் பற்றிய பளிங்கு போலும் ...(15)ஒற்றி மாநகர் உடையோய் உருவே.

3

உருவாம் உலகுக் கொருவன் ஆகியபெரியோய் வடிவிற் பிறிதிங் கின்மையின்எப்பொரு ளாயினும் இங்குள தாமெனின்அப்பொருள் உனக்கே அவயவம் ஆதலின்முன்னிய மூவெயில் முழங்கெரி ஊட்டித் ....(5)தொன்னீர் வையகம் துயர்கெடச் சூழ்ந்ததும்வேள்வி மூர்த்திதன் தலையினை விடுத்ததும்நீள்விசும் பாளிதன் தோளினை நெரித்ததும்ஓங்கிய மறையோற் கொருமுகம் ஒழித்ததும்பூங்கணை வேளைப் பொடிபட விழித்ததும் ......(10)திறல்கெட அரக்கனைத் திருவிரல் உறுத்ததும்குறைபடக் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும்என்றிவை முதலா ஆள்வினை எல்லாம்நின்றுழிச் செறிந்தவை நின்செய லாதலின்உலவாத் தொல்புகழ் ஒற்றி யூர .....(15)பகர்வோர் நினக்குவே றின்மை கண்டவர்நிகழ்ச்சியின் நிகழின் அல்லதுபுகழ்ச்சியிற் படுப்பரோ பொருளுணர்ந் தோரே.

4

பொருள்உணர்ந் தோங்கிய பூமகன் முதலாஇருள்துணை யாக்கையில் இயங்கு மன்னுயிர்உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும்திருவினும் திறலினும் செய்தொழில் வகையினும்வெவ்வே றாகி வினையொடும் பிரியாது ....(5)ஒவ்வாப் பன்மையுள் மற்றவர் ஒழுக்கம்மன்னிய வேலையுள் வான்திரை போலநின்னிடை எழுந்து நின்னிடை ஆகியும்பெருகியும் சுருங்கியும் பெயர்ந்தும் தோன்றியும்விரவியும் வேறாய் நின்றனை விளக்கும் ...(10)ஓவாத் தொல்புகழ் ஒற்றி யூரமூவா மேனி முதல்வ நின்னருள்பெற்றவர் அறியின் அல்லதுமற்றவர் அறிவரோ நின்னிடை மயக்கே.

5

மயக்கமில் சொல்நீ ஆயினும் மற்றவைதுயக்க நின்திறம் அறியாச் சூழலும்உறைவிடம் உள்ளம் ஆயினும் மற்றதுகறைபட ஆங்கே கரந்த கள்ளமும்செய்வினை உலகினில் செய்வோய் எனினும் .....(5)அவ்வினைப் பயன்நீ அணுகா அணிமையும்இனத்திடை இன்பம் வேண்டிநின் பணிவோர்மனத்திடை வாரி ஆகிய வனப்பும்அன்பின் அடைந்தவர்க் கணிமையும் அல்லவர்ச்சேய்மையும் நாள்தொறும் ......(10)என்பினை உருக்கும் இயற்கைய ஆதலின்கண்டவர் தமக்கே ஊனுடல் அழிதல்உண்டென உணர்ந்தனம் ஒற்றி யூரமன்னிய பெரும்புகழ் மாதவத்துன்னிய செஞ்சடைத் தூமதி யோயே. ........(15)

6

தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறிஆமதி யான்என அமைத்த வாறேஅறனுரு வாகிய ஆனே றேறுதல்இறைவன் யானென இயற்று மாறேஅதுஅவள் அவனென நின்றமை யார்க்கும் ....(5)பொதுநிலை யானென உணர்த்திய பொருளேமுக்கணன் என்பது முத்தீ வேள்வியில்தொக்க தென்னிடை என்பதோர் சுருக்கேவேத மான்மறி ஏந்துதல் மற்றதன்நாதன் நான்என நவிற்று மாறே ..(10)மூவிலை ஒருதாள் சூலம் ஏந்துதல்மூவரும் யான்என மொழிந்த வாறேஎண்வகை மூர்த்தி என்பதிவ் வுலகினில்உண்மை யான்என உணர்த்திய வாறேநிலம்நீர் தீவளி உயர்வான் என்றும் ......(15)உலவாத் தொல்புகழ் உடையோய் என்றும்பொருளும் நற்பூதப் படையோய் என்றும்தெருளநின் றுலகினில் தெருட்டு மாறேஈங்கிவை முதலா வண்ணமும் வடிவும்ஓங்குநின் பெருமை உணர்த்தவும் உணராத் .......(20)தற்கொலி மாந்தர் தம்மிடைப் பிறந்தசொற்பொருள் வன்மையிற் சுழலும் மாந்தர்க்காதி யாகிய அறுதொழி லாளர்ஓதல் ஓவா ஒற்றி யூரசிறுவர் தம் செய்கையிற் படுத்து .......(25)முறுவலித் திருத்திநீ முகப்படும் அளவே.

7

அளவினில் இறந்த பெருமையை ஆயினும்எனதுளம் அகலா தொடுங்கிநின் றுளையேமெய்யினை இறந்த மெய்யினை ஆயினும்வையகம் முழுதும்நின் வடிவெனப் படுமேகைவலத் திலைநீ எனினும் காதல் ...(5)செய்வோர் வேண்டும் சிறப்பொழி யாயேசொல்லிய வகையால் துணையலை ஆயினும்நல்லுயிர்க் கூட்ட நாயகன் நீயேஎங்கும் உள்ளோய் எனினும் வஞ்சனைதங்கிய அவரைச் சாராய் நீயே, அஃதான்று .....(10)பிறவாப் பிறவியை பெருகாப் பெருமையைதுறவாத் துறவியை தொடராத் தொடர்ச்சியைநுகரா நுகர்ச்சியை நுணுகா நுணுக்கினைஅகலா அகற்சியை அணுகா அணிமையைசெய்யாச் செய்கையை சிறவாச் சிறப்பினை .....(15)வெய்யை தணியை விழுமியை நொய்யைசெய்யை பசியை வெளியை கரியைஆக்குதி அழித்தி ஆன பல்பொருள்நீக்குதி தொகுத்தி நீங்குதி அடைதிஏனைய வாகிய எண்ணில் பல்குணம் .....(20)நினைதொறும் மயக்கும் நீர்மைய ஆதலின்ஓங்குகடல் உடுத்த ஒற்றி யூரஈங்கிது மொழிவார் யாஅர் தாஅம்சொல்நிலை சுருங்கின் அல்லதுநின்இயல் அறிவோர் யார்இரு நிலத்தே. ....(25)

8

நிலத்திடைப் பொறையாய் அவாவினில் நீண்டுசொலத்தகு பெருமைத் தூரா ஆக்கைமெய்வளி ஐயொடு பித்தொன் றாகஐவகை நெடுங்காற் றாங்குடன் அடிப்பநரையெனும் நுரையே நாடொறும் வெளுப்ப .....(5)திரையுடைத் தோலே செழுந்திரை யாகக்கூடிய குருதி நீரினுள் நிறைந்துமூடிய இருமல் ஓசையின் முழங்கிச்சுடுபசி வெகுளிச் சுறவினம் எறியக்குடரெனும் அரவக் கூட்டம்வந் தொலிப்ப .......(10)ஊன்தடி எலும்பின் உள்திடல் அடைந்துதோன்றிய பல்பிணிப் பின்னகஞ் சுழலக்கால்கையின் நரம்பே கண்ட மாகமேதகு நிணமே மெய்ச்சா லாகமுழக்குடைத் துளையே முகங்க ளாக .......(15)வழுக்குடை மூக்கா றோதம்வந் தொலிப்பஇப்பரி சியற்றிய உடலிருங் கடலுள்துப்புர வென்னும் சுழித்தலைப் பட்டிங்காவா என்றுநின் அருளினைப் பெற்றவர்நாவா யாகிய நாதநின் பாதம் ...(20)முந்திச் சென்று முறைமையின் வணங்கிச்சிந்தைக் கூம்பினைச் செவ்விதின் நிறுத்திஉருகிய ஆர்வப் பாய்விரித் தார்த்துப்பெருகிய நிறையெனும் கயிற்றிடைப் பிணித்துத்துன்னிய சுற்றத் தொடர்க்கயி றறுத்து ...(25)மன்னிய ஒருமைப் பொறியினை முறுக்கிக்காமப் பாரெனும் கடுவெளி அற்றதூமச் சோதிச் சுடர்க்குற நிறுத்திச்சுருங்கா உணர்ச்சித் துடுப்பினைத் துழாவிநெருங்கா அளவில் நீள்கரை ஏற்ற ... (30)வாங்க யாத்திரை போக்குதி போலும்ஓங்குகடல் உடுத்த ஒற்றியூ ரோயே.

9

ஒற்றி யூர உலவா நின்குணம்பற்றி யாரப் பரவுதல் பொருட்டாஎன்னிடைப் பிறந்த இன்னாப் புன்மொழிநின்னிடை அணுகா நீர்மைய ஆதலின்ஆவலித் தழுதலின் அகன்ற அம்மனை ...(5)கேவலம் சேய்மையிற் கேளாள் ஆயினும்பிரித்தற் கரிய பெற்றிய தாகிக்குறைவினில் ஆர்த்தும் குழவிய தியல்பினைஅறியா தெண்ணில் ஊழிப் பிறவியின்மயங்கிக் கண்ணிலர் கண்பெற் றாங்கே ...(10)தாய்தலைப் படநின் தாளிணை வணக்கம்வாய்தலை அறியா மயக்குறும் வினையேன்மல்கிய இன்பத் தோடுடன் கூடியஎல்லையில் அவாவினில் இயற்றிய வாகக்கட்டிய நீயே அவிழ்க்கின் அல்லது ....(15)எட்டனை யாயினும் யான்அவிழ்க் கறியேன்துன்னிடை இருளெனும் தூற்றிடை ஒதுங்கிவெள்ளிடை காண விருப்புறு வினையேன்தந்தையும் தாயும் சாதியும் அறிவும்நம்சிந்தையும் திருவும் செல்கதித் திறனும் ...(20)துன்பமும் துறவும் தூய்மையும் அறிவும்இன்பமும் புகழும் இவைபல பிறவும்சுவைஒளி ஊறோசை நாற்றம் தோற்றம்என்றிவை முதலா விளங்குவ எல்லாம்ஒன்றநின் அடிக்கே ஒருங்குடன் வைத்து ...(25)நின்றனன் தமியேன் நின்னடி அல்லதுசார்வுமற் றின்மையின் தளர்ந்தோர் காட்சிக்சேர்விட மதனைத் திறப்பட நாடிஎய்துதற் கரியோய் யான்இனிச்செய்வதும் அறிவனோ தெரியுங் காலே. ...(30)

10

காலற் சீறிய கழலோய் போற்றிமூலத் தொகுதி முதல்வ போற்றிஒற்றி மாநகர் உடையோய் போற்றிமுற்றும் ஆகிய முதல்வ போற்றிஅணைதொறும் சிறக்கும் அமிர்தே போற்றி ....(5)இணைபிறி தில்லா ஈச போற்றிஆர்வம் செய்பவர்க் கணியோய் போற்றிதீர்வில் இன்சுவைத் தேனேபோற்றிவஞ்சனை மாந்தரை மறந்தோய் போற்றிநஞ்சினை அமிர்தாய் நயந்தோய் போற்றி .......(10)விரிகடல் வையக வித்தே போற்றிபுரிவுடை வனமாய்ப் புணர்ந்தோய் போற்றிகாண முன்பொருள் கருத்துறை செம்மைக்காணி யாகிய அரனே போற்றிவெம்மை தண்மையென் றிவைகுணம் உடைமையின் ......(15)பெண்ணோ டாணெனும் பெயரோய் போற்றிமேவிய அவர்தமை வீட்டினிற் படுக்கும்தீப மாகிய சிவனே போற்றிமாலோய் போற்றி மறையோய் போற்றிமேலோய் போற்றி வேதிய போற்றி .....(20)சந்திர போற்றி தழலோய் போற்றிஇந்திர போற்றி இறைவ போற்றிஅமரா போற்றி அழகா போற்றிகுமரா போற்றி கூத்தா போற்றிபொருளே போற்றி போற்றி என்றுனை ....(25)நாத்தழும் பிருக்க நவிற்றின் அல்லதுஏத்துதற் குரியோர் யார்இரு நிலத்தே.