1
மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி யேன்மிக நற்பணிசெய்கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண் டுவந்திலன் உண்பதற்கேபொய்த்தொண்டு பேசிப் புறம்புற மேஉன்னைப் போற்றுகின்றஇத்தொண்ட னேன்பணி கொள்ளுதி யோகச்சி ஏகம்பனே.
சொற்பிரிப்பு
மெய்த்தொண்டர் செல்லும் நெறி அறி யேன் மிக நற்பணிசெய்கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண்டு உவந்திலன் உண்பதற்கேபொய்த்தொண்டு பேசிப் புறம்புறமே உன்னைப் போற்றுகின்றஇத்தொண்டனேன் பணி கொள்ளுதியோ கச்சி ஏகம்பனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
ஏகம்பனே என்னை ஆள்பவ னேஇமை யோர்க்கிரங்கிப்போகம்பன் னாளும் கொடுக்கின்ற நாயக பொங்கும்ஐவாய்நாகம்பொன் னாரம் எனப்பொலி வுற்றுநல் நீறணியும்ஆகம்பொன் மாமலை ஒப்பவ னேயென்பன் ஆதரித்தே.
சொற்பிரிப்பு
ஏகம்பனே என்னை ஆள்பவனே இமையோர்க்கு இரங்கிப்போகம் பன்னாளும் கொடுக்கின்ற நாயக பொங்கும் ஐவாய்நாகம் பொன்னாரம் எனப் பொலி வுற்று நல் நீறணியும்ஆகம் பொன் மாமலை ஒப்பவனே என்பன் ஆதரித்தே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
தரித்தேன் மனத்துன் திகழ்தரு நாமம் தடம்பொழில்வாய்வரித்தேன் முரல்கச்சி ஏகம்ப னேஎன்றன் வல்வினையைஅரித்தேன் உனைப்பணி யாதவர் ஏழைமை கண்டவரைச்சிரித்தேன் உனக்கடி யாரடி பூணத் தெளிந்தனனே.
சொற்பிரிப்பு
தரித்தேன் மனத்து உன் திகழ்தரு நாமம் தடம்பொழில்வாய்வரித்தேன் முரல் கச்சி ஏகம்பனே என்றன் வல்வினையைஅரித்தேன் உனைப் பணியாதவர் ஏழைமை கண்டவரைச்சிரித்தேன் உனக்கு அடியார் அடி பூணத் தெளிந்தனனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
தெளிதரு கின்றது சென்றென் மனம்நின் திருவடிவம்அளிதரு நின்னருட் கையம் இனியில்லை அந்திச் செக்கர்ஒளிதரு மேனிஎம் ஏகம்ப னேஎன் றுகந்தவர்தாள்தளிதரு தூளிஎன் றன்தலை மேல்வைத்த தன்மைபெற்றே.
சொற்பிரிப்பு
தெளிதருகின்றது சென்றென் மனம் நின் திருவடிவம்அளிதரு நின்னருட்கு ஐயம் இனியில்லை அந்திச் செக்கர்ஒளிதரு மேனி எம் ஏகம்பனே என்று உகந்தவர் தாள்தளிதரு தூளி என்றன் தலை மேல் வைத்த தன்மை பெற்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
பெற்றுகந் தேன்என்றும் அர்ச்சனை செய்யப் பெருகுநின்சீர்கற்றுகந் தேன்என் கருத்தினி தாக்கச்சி ஏகம்பத்தின்பற்றுகந் தேறும் உகந்தவ னேபட நாகக்கச்சின்சுற்றுகந் தேர்விடை மேல்வரு வாய்நின் துணையடியே.
சொற்பிரிப்பு
பெற்று உகந்தேன் என்றும் அர்ச்சனை செய்யப் பெருகு நின்சீர்கற்று உகந்தேன் என் கருத்து இனிதாக் கச்சி ஏகம்பத்தின்பற்று உகந்து ஏறும் உகந்தவனே பட நாகக் கச்சின்சுற்று உகந்து ஏர்விடை மேல் வருவாய் நின் துணையடியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
அடிநின்ற சூழல் அகோசரம் மாலுக் கயற்கலரின்முடிநின்ற சூழ்முடி காண்பரி தாயிற்றுக் கார்முகிலின்இடிநின்ற சூழ்குரல் ஏறுடை ஏகம்ப யாம்எங்ஙனேவடிநின்ற சூலப் படையுடை யாயை வணங்குவதே.
சொற்பிரிப்பு
அடிநின்ற சூழல் அகோசரம் மாலுக்கு அயற்கு அலரின்முடிநின்ற சூழ் முடி காண்பரிது ஆயிற்றுக் கார்முகிலின்இடிநின்ற சூழ்குரல் ஏறுடைஏகம்ப யாம் எங்ஙனேவடிநின்ற சூலப் படை உடையாயை வணங்குவதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
வணக்கம் தலைநின் திருவடிக் கேசெய்யும் மையல்கொண்டோர்இணக்கன்றி மற்றோர் இணக்கறி வோமல்லம் வல்லரவின்குணக்குன்ற வில்லி குளிர்கச்சி ஏகம்பம் பாடின் அல்லால்கணக்கன்று மற்றொரு தேவரைப் பாடும் கவிநலமே.
சொற்பிரிப்பு
வணக்கம் தலை நின் திருவடிக்கே செய்யும் மையல் கொண்டோர்இணக்கன்றி மற்றோர் இணக்கறிவோம் அல்லம் வல் அரவின்குணக்குன்ற வில்லி குளிர்கச்சி ஏகம்பம் பாடின் அல்லால்கணக்கன்று மற்றொரு தேவரைப் பாடும் கவிநலமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
நலந்தர நானொன்று சொல்லுவன் கேண்மின்நல் லீர்கள்அன்புகலந்தர னார்கச்சி ஏகம்பம் கண்டு கனல்திகிரிசலந்தரன் ஆகம் ஒழிக்கவைத் தாய்தக்கன் வேள்வியெல்லாம்நிலந்தர மாகச்செய் தாயென்று பூசித்து நின்மின்களே.
சொற்பிரிப்பு
நலந்தர நானொன்று சொல்லுவன் கேண்மின் நல்லீர்கள் அன்புகலந்து அரனார் கச்சி ஏகம்பம் கண்டு கனல் திகிரிசலந்தரன் ஆகம் ஒழிக்க வைத்தாய் தக்கன் வேள்வியெல்லாம்நிலந்தரமாகச் செய்தாய் என்று பூசித்து நின்மின்களே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
மின்கள்என் றார்சடை கொண்டல்என் றார்கண்டம் மேனிவண்ணம்பொன்கள்என் றார்வெளிப் பாடுதம் பொன்அடி பூண்டுகொண்டஎன்களென் றாலும் பிரிந்தறி யார்கச்சி ஏகம்பத்தான்தன்களென் றார்உல கெல்லாம் நிலைபெற்ற தன்மைகளே.
சொற்பிரிப்பு
மின்கள் என்றார் சடை கொண்டல் என்றார் கண்டம் மேனி வண்ணம்பொன்கள் என்றார் வெளிப்பாடு தம் பொன் அடி பூண்டு கொண்ட‘என்கள்?’ என்றாலும் பிரிந்தறியார் கச்சி ஏகம்பத்தான்தன்கள் என்றார் உலகெல்லாம் நிலைபெற்ற தன்மைகளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
தன்மையிற் குன்றாத் தவத்தோர் இமையவர் தாம்வணங்கும்வன்மையிற் குன்றா மதிற்கச்சி ஏகம்பர் வண்கயிலைப்பொன்மயிற் சாயலும் சேயரிக் கண்ணும் புரிகுழலும்மென்மையிற் சாயும் மருங்குலும் காதல் விளைத்தனவே.
சொற்பிரிப்பு
தன்மையில் குன்றாத் தவத்தோர் இமையவர் தாம் வணங்கும்வன்மையில் குன்றா மதில் கச்சி ஏகம்பர் வண்கயிலைப்பொன்மயில் சாயலும் சேய் அரிக் கண்ணும் புரிகுழலும்மென்மையில் சாயும் மருங்குலும் காதல் விளைத்தனவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
தனமிட் டுமைதழு வத்தழும் புற்றவர் தம் அடியார்மனம்விட் டகலா மதிற்கச்சி ஏகம்பர் வான்கயிலைச்சினம்விட் டகலாக் களிறு வினாவியோர் சேயனையார்புனம்விட் டகலார் பகலாம் பொழுதும்நம் பூங்கொடியே.
சொற்பிரிப்பு
தனமிட்டு உமை தழுவத் தழும்பு உற்றவர் தம் அடியார்மனம்விட்டு அகலா மதில் கச்சி ஏகம்பர் வான்கயிலைச்சினம்விட்டு அகலாக் களிறு வினாவியோர் சேயனையார்புனம்விட்டு அகலார் பகலாம் பொழுதும் நம் பூங்கொடியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
பூங்கொத் திருந்தழை யார்பொழில் கச்சிஏ கம்பர்பொற்பார்கோங்கத் திருந்த குடுமிக்கயிலைஎம் பொன்னொருத்திபாங்கொத் திருந்தனை ஆரணங் கேபடர் கல்லருவிஆங்கத் திருந்திழை ஆடிவந் தாற்கண் டடிவருத்தே.
சொற்பிரிப்பு
பூங்கொத்து இருந்தழை ஆர் பொழில் கச்சி ஏகம்பர் பொற்பார்கோங்கத்து இருந்த குடுமிக் கயிலை எம் பொன்னொருத்திபாங்கொத்து இருந்தனை ஆரணங்கே படர் கல்லருவிஆங்கு அத் திருந்திழை ஆடி வந்தால் கண்டு அடிவருத்தே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
வருத்தம் தருமெய்யும் கையில் தழையும் வன்மாவினவும்கருத்தந் தரிக்கும் நடக்கவின் றைய கழல்நினையத்திருத்தந் தருளும் திகழ்கச்சி ஏகம்பர் சீர்க்கயிலைத்துருத்தந் திருப்பதன் றிப்புனங் காக்கும் தொழில்எமக்கே.
சொற்பிரிப்பு
வருத்தம் தரும் மெய்யும் கையில் தழையும் வன்மாவினவும்கருத்தம் தரிக்கும் நடக்கவின் றைய கழல்நினையத்திருத் தந்தருளும் திகழ் கச்சி ஏகம்பர் சீர்க்கயிலைத்துருத்தந்திருப்பதன்றிப் புனங் காக்கும் தொழில் எமக்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
எம்மையும் எம்மைப் பணிகொள்ளும் கம்பர் எழிற்கயிலைஉம்மையும் மானிடம் இப்புனத் தேவிட்டு வந்தமைந்தர்தம்மையும் மானையும் சிந்தையும் நோக்கங் கவர்வஎன்றோஅம்மையும் அம்மலர்க் கண்ணும் பெரியீர் அருளுமினே.
சொற்பிரிப்பு
எம்மையும் எம்மைப் பணிகொள்ளும்கம்பர் எழில் கயிலைஉம்மையும் மானிடம் இப்புனத்தே விட்டு வந்த மைந்தர்தம்மையும் மானையும் சிந்தையும் நோக்கம் கவர்க என்றோஅம்மையும் அம்மலர்க் கண்ணும் பெரியீர் அருளுமினே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
அருளைத் தருகம்பர் அம்பொற் கயிலையுள் எம்மையரம்பிருளைக் கரிமறிக் கும்இவர் ஐயர் உறுத்தியெய்யவெருளக் கலைகணை தன்னொடும் போயின வில்லிமைக்குமருளைத் தருசொல்லி எங்கோ விலையுண்டிவ் வையகத்தே.
சொற்பிரிப்பு
அருளைத் தரு கம்பர் அம்பொற் கயிலையுள் எம் ஐயர் அம்புஇருளைக் கரிமறிக்கும் இவர் ஐயர் உறுத்தியெய்யவெருளக் கலைகணை தன்னொடும் போயின வில்லிமைக்குமருளைத் தரு சொல்லி எங்கோ விளையுண்டு இவ்வையகத்தே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
வையார் மழுப்படை ஏகம்பர் ஈங்கோய் மலைப்புனத்துள்ஐயார் வருகலை ஏனம் கரிதொடர் வேட்டையெல்லாம்பொய்யான ஐயர் மனத்தவெம் பூங்கொடி கொங்கைபொறாப்பையார் அரவிடை ஆயிற்று வந்து பரிணமித்தே.
சொற்பிரிப்பு
வையார் மழுப்படை ஏகம்பர் ஈங்கோய் மலைப்புனத்துள்ஐயார் வருகலை ஏனம் கரிதொடர் வேட்டையெல்லாம்பொய்யான ஐயர் மனத்து எம் பூங்கொடி கொங்கை பொறாப்பையார் அரவிடை ஆயிற்று வந்து பரிணமித்தே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
பருமுத் துதிர்த்திடும் சீர்மத்த யானை நுதல்பகுந்திட்டுருமொத்த திண்குரற் சீயம் திரிநெறி ஓங்குவைவாய்ப்பொருமுத் தலைவேற் படைக்கம்பர் பூங்கயி லைப் புனத்துள்தருமுத் தனநகை தன்நசை யால்வெற்ப சார்வரிதே.
சொற்பிரிப்பு
பருமுத்து உதிர்த்திடும் சீர்மத்த யானை நுதல் பகுந்திட்டுஉருமொத்த திண்குரல் சீயம் திரிநெறி ஓங்கு வைவாய்ப்பொரு முத்தலைவேல் படைக்கம்பர் பூங்கயிலைப் புனத்துள்தருமுத்து அனநகை தன் நசை யால் வெற்பு சார்வரிதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
அரிதன் திருக்கண் இடநிரம் பாயிரம் போதணியஅரிதன் திருவடிக் கர்ச்சித்த கண்ணுக் கருளுகம்பர்அரிதன் திருக்கங் குலியால் அழிந்த கயிலையல்லிங்கரிதென் றிருப்பதெம் பால்வெற்ப எம்மையர்க் கஞ்சுதுமே.
சொற்பிரிப்பு
அரி தன் திருக்கண் இட நிரம்பு ஆயிரம் போதணியஅரி தன் திருவடிக்கு அர்ச்சித்த கண்ணுக்கு அருளு கம்பர்அரி தன் திருக்கு அங்குலியால் அழிந்த கயிலை அல் இங்குஅரிது என்றிருப்பது எம்பால் வெற்ப எம்மையர்க்கு அஞ்சுதுமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
அஞ்சரத் தான்பொடி யாய்விழத் தீவிழித் தன்புசெய்வோர்நெஞ்சரத் தாழ்வுகந் தோர்கச்சி ஏகம்பர் நீள்கயிலைக்குஞ்சரத் தாழ்வரை வீழநுங் கொம்புய்யக் கும்பமூழ்கும்வெஞ்சரத் தாரன வோஅல்ல வோஇவ் வியன்முரசே.
சொற்பிரிப்பு
அஞ்சரத்தான் பொடியாய் விழத் தீ விழித்து அன்பு செய்வோர்நெஞ்சரத்து ஆழ்வு உகந்தோர் கச்சி ஏகம்பர் நீள்கயிலைக்குஞ்சரத் தாழ்வரை வீழ நும் கொம்புய்யக் கும்ப மூழ்கும்வெஞ்சரத் தாரனவோ அல்லவோ இவ்வியன் முரசே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
சேய்தந் தகைமை உமைகண வன்திரு ஏகம்பத்தான்தாய்தந்தை யாய்உயிர் காப்போன் கயிலைத் தயங்கிருள்வாய்வேய்தந்த தோளிநம் ஊச லொடும் விரை வேங்கைதன்னைப்பாய்தந்து பூசலுண் டாங்கொண்ட தோசைப் பகடுவந்தே.
சொற்பிரிப்பு
சேய்தம் தகைமை உமை கணவன் திருஏகம்பத்தான்தாய் தந்தையாய் உயிர் காப்போன் கயிலைத் தயங்கு இருள்வாய்வேய் தந்த தோளி நம் ஊசலொடும் விரை வேங்கை தன்னைப்பாய்தந்து பூசலுண்டாங் கொண்டகு ஓசைப் பகடு வந்தே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
வந்தும் மணம்பெறின் பொன்னனை யீர்மன்னும் ஏகம்பர்தம்முந்தும் அருவிக் கயிலை மலையுயர் தேன்இழிச்சித்தந்தும் மலர்கொய்தும் தண்தினை மேயுங் கிளிகடிந்தும்சிந்தும் புகர்மலை கைச்சும்இச் சாரல் திரிகுவனே.
சொற்பிரிப்பு
வந்தும் மணம் பெறின் பொன் அனை யீர் மன்னும் ஏகம்பர் தம்முந்தும் அருவிக் கயிலை மலையுயர் தேன் இழிச்சித்தந்தும் மலர்கொய்தும் தண்தினை மேயும் கிளி கடிந்தும்சிந்தும் புகர்மலை கைச்சும் இச் சாரல் திரிகுவனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
திரியப் புரமெய்த ஏகம்ப னார்திக ழுங்கயிலைக்கிரியக் குறவர் பருவத் திடுதர ளம்வினையோம்விரியச் சுருள்முத லானும் அடைந்தோம் விரைவிரைந்துபிரியக் கதிர்முத்தின் நீர்பெற்ற தென்அங்குப் பேசுமினே.
சொற்பிரிப்பு
திரியப் புரமெய்த ஏகம்ப னார் திகழும் கயிலைக்கிரியக் குறவர் பருவத்து இடுதரளம் வினையோம்விரியச் சுருள்முதலானும் அடைந்தோம் விரைவிரைந்துபிரியக் கதிர்முத்தின் நீர் பெற்றது என் அங்குப் பேசுமினே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
பேசுக யாவரு மைக்கணி யார்என்று பித்தர்எங்கும்பூசுகை யார்திரு நீற்றெழில் ஏகம்பர் பொற்கயிலைத்தேசுகை யார்சிலை வெற்பன் பிரியும் பரிசிலர்அக்கூசுகை யாதுமில் லாக்குலை வேங்கைப் பெயர்நும்மையே.
சொற்பிரிப்பு
பேசுக யாவர் உமைக் கணியார் என்று பித்தர் எங்கும்பூசுகையார் திரு நீற்றெழில் ஏகம்பர் பொற்கயிலைத்தேசுகையார் சிலை வெற்பன் பிரியும் பரிசிலர் அக்கூசுகை யாதுமில்லாக் குலை வேங்கைப் பெயர் நும்மையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
பெயரா நலத்தொழில் ஏகம்ப னார்பிறை தோய்கயிலைப்பெயரா திருக்கப் பெறுகிளி காள்புன மேபிரிவின்துயரால் வருந்தி மனமும்இங் கோடித் தொழுதுசென்றதயரா துரையும்வெற் பற்கடி யேற்கும் விடைதமினே.
சொற்பிரிப்பு
பெயரா நலத்தொழில் ஏகம்பனார் பிறை தோய் கயிலைப்பெயரா திருக்கப் பெறு கிளி காள் புனமே பிரிவின்துயரால் வருந்தி மனமும் இங்கு ஓடித் தொழுது சென்றதுஅயராது உரையும் வெற்பற்கு அடி யேற்கும் விடைதம்மினே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
தம்மைப் பிறவிக் கடல்கடப் பிப்பவர் தாம்வணங்கும்மும்மைத் திருக்கண் முகத்தெழில் ஏகம்பர் மொய்கயிலைஅம்மைக் கருங்கண்ணி தன்னொடின் பந்தரும் தண்புனமேஎம்மைக் கவலை செயச்சொல்லி யோவல்லி எய்தியதே.
சொற்பிரிப்பு
தம்மைப் பிறவிக் கடல் கடப் பிப்பவர் தாம் வணங்கும்மும்மைத் திருக்கண் முகத்தெழில் ஏகம்பர் மொய்கயிலைஅம்மைக் கருங்கண்ணி தன்னொடு இன்பந் தரும் தண்புனமேஎம்மைக் கவலை செயச் சொல்லியோ வல்லி எய்தியதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
இயங்கும் திரிபுரம் எய்தஏ கம்பர் எழிற்கயிலைத்தயங்கு மலர்ப்பொழில் காள்தையல் ஆடரு வித்தடங்காள்முயங்கு மணியறை காள்மொழி யீர்ஒழி யாதுநெஞ்சம்மயங்கும் பரிசுபொன் னார்சென்ற சூழல் வகுத்தெமக்கே.
சொற்பிரிப்பு
இயங்கும் திரிபுரம் எய்த ஏகம்பர் எழிற்கயிலைத்தயங்கு மலர்ப் பொழில்காள் தையல் ஆடருவித் தடங்காள்முயங்கு மணியறைகாள் மொழியீர் ஒழியாது நெஞ்சம்மயங்கும் பரிசு பொன்னார் சென்ற சூழல் வகுத்து எமக்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
வகுப்பார் இவர்போல் மணத்துக்கு நாள்மணந் தன்னொடின்பம்மிகுப்பார்கள் ஆருயிர் ஒன்றாம் இருவரை விள்ளக்கள்வாய்நெகுப்பால் மலர்கொண்டு நின்றார் கிடக்க நிலாவுகம்பர்தொகுப்பால் மணிசிந் தருவிக் கயிலைஇச் சூழ்புனத்தே.
சொற்பிரிப்பு
வகுப்பார் இவர்போல் மணத்துக்கு நாள் மணம் தன்னொடு இன்பம்மிகுப்பார்கள் ஆருயிர் ஒன்றாம் இருவரை விள்ளக் கள்வாய்நெகுப்பால் மலர்கொண்டு நின்றார் கிடக்க நிலாவு கம்பர்தொகுப்பால் மணிசிந்து அருவிக் கயிலை இச்சூழ் புனத்தே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
புனங்குழை யாதென்று மென்தினை கொய்ததும் போகலுற்றகனங்குழை யாள்தற் பிரிய நமக்குறும் கையறவால்மனங்குழை யாவரும் கண்களி பண்பல பாடுந்தொண்டர்இனங்குழை யாத்தொழும் ஏகம்பர் இக்கயி லாயத்துள்ளே.
சொற்பிரிப்பு
புனங் குழையாது என்று மென்தினை கொய்ததும் போகலுற்றகனங்குழையாள் தற்பிரிய நமக்குறும் கையறவால்மனங் குழையாவரும் கண் கனி பண் பல பாடுந் தொண்டர்இனங் குழையாத் தொழும் ஏகம்பர் இக்கயிலாயத்துள்ளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
உள்ளம் பெரியரல் லாச்சிறு மானுடர் உற்றசெல்வம்கள்ளம் பெரிய சிறுமனத் தார்க்கன்றிக் கங்கையென்னும்வெள்ளம் பெரிய சடைத்திரு ஏகம்பர் விண்அரணம்தள்ளம் பெரிகொண் டமைத்தார் அடியவர் சார்வதன்றே.
சொற்பிரிப்பு
உள்ளம் பெரியரல்லாச் சிறு மானுடர் உற்ற செல்வம்கள்ளம் பெரிய சிறுமனத் தார்க்கு அன்றிக் கங்கை என்னும்வெள்ளம் பெரிய சடைத் திரு ஏகம்பர் விண் அரணம்தள்ளம் பெரிகொண்டு அமைத்தார் அடியவர் சார்வதன்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
அன்றும் பகையடர்க் கும்பரி மாவும் மதஅருவிக்குன்றும் பதாதியும் தேரும் குலவிக் குடைநிழற்கீழ்நின்றும் பொலியினும் கம்பர்நன் னீறு நுதற்கிலரேல்என்றும் அரசும் முரசும் பொலியா இருநிலத்தே.
சொற்பிரிப்பு
அன்றும் பகையடர்க்கும் பரி மாவும் மதஅருவிக்குன்றும் பதாதியும் தேரும் குலவிக் குடை நிழற்கீழ்நின்றும் பொலியினும் கம்பர் நன் னீறு நுதற்கு இலரேல்என்றும் அரசும் முரசும் பொலியா இருநிலத்தே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
நிலத்திமை யோரில் தலையாய்ப் பிறந்து மறையொடங்கம்வலத்திமைப் போதும் பிரியா எரிவளர்த் தாலும்வெற்பன்குலத்துமை யோர்பங்கர் கச்சியுள் ஏகம்பம் கூடித்தொழும்நலத்தமை யாதவர் வேட்டுவர் தம்மின் நடுப்படையே.
சொற்பிரிப்பு
நிலத்து இமையோரில் தலையாய்ப் பிறந்து மறையொடு அங்கம்வலத்து இமைப்போதும் பிரியா எரி வளர்த்தாலும் வெற்பன்குலத்து உமையோர் பங்கர் கச்சியுள் ஏகம்பம் கூடித்தொழும்நலத்து அமையாதவர் வேட்டுவர் தம்மின் நடுப்படையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
படையால் உயிர்கொன்று தின்று பசுக்களைப் போலச்செல்லும்நடையால் அறிவின்றி நட்பிடைப் பொய்த்துக் குலங்களினும்கடையாய்ப் பிறக்கினும் கச்சியுள் ஏகம்பத் தெங்களையாள்உடையான் கழற் கன்ப ரேல்அவர் யாவர்க்கும் உத்தமரே.
சொற்பிரிப்பு
படையால் உயிர் கொன்று தின்று பசுக்களைப் போலச் செல்லும்நடையால் அறிவின்றி நட்பிடைப் பொய்த்துக் குலங்களினும்கடையாய்ப் பிறக்கினும் கச்சியுள் ஏகம்பத்து எங்களை ஆள்உடையான் கழற்கு அன்பரேல் அவர் யாவர்க்கும் உத்தமரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
உத்துங்க யானை உரியார் விரலால் அரக்கன்சென்னிபத்துங்கை யான இருபதும் சோர்தர வைத்திலயம்ஒத்துங்கை யாலவன் பாடக் கயிலையின் ஊடுகைவாள்எத்துங்கை யான்என் றுகந்தளித் தார்கச்சி ஏகம்பரே.
சொற்பிரிப்பு
உத்துங்க யானை உரியார் விரலால் அரக்கன் சென்னிபத்தும் கையான இருபதும் சோர்தர வைத்து இலயம்ஒத்துங்கையால் அவன் பாடக் கயிலையின் ஊடு கைவாள்எத்தும் கையான் என்று உகந்தளித்தார் கச்சி ஏகம்பரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
அம்பரம் கால்அனல் நீர்நிலம் திங்கள் அருக்கன்அணுஅம்பரம் கொள்வதொர் வேழத் துரியவன் தன்னுருவாம்எம்பரன் கச்சியுள் ஏகம்பத் தான்இடை யாதடைவான்நம்பரன் தன்னடி யார்அறி வார்கட்கு நற்றுணையே.
சொற்பிரிப்பு
அம்பரம் கால் அனல் நீர் நிலம் திங்கள் அருக்கன் அணுஅம்பரம் கொள்வதோர் வேழத்து உரியவன் தன்னுருவாம்எம்பரன் கச்சியுள் ஏகம்பத் தான் இடையாது அடைவான்நம்பரன் தன்னடியார் அறி வார்கட்கு நற்றுணையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
துணைத்தா மரையடி யும்பவ ளத்திரள் நன்குறங்கும்பணைத்தோள் அகலமும் கண்டத்து நீலமும் அண்டத்துமின்பிணைத்தா லனசடை யுந்திரு முக்கணும் பெண்ணொர்பக்கத்தணைத்தார் எழிற்கம்பர் எங்கள் பிரானார்க் கழகியவே.
சொற்பிரிப்பு
துணைத்தாமரை அடியும் பவ ளத்திரள் நன் குறங்கும்பணைத்தோள் அகலமும் கண்டத்து நீலமும் அண்டத்து மின்பிணைத்தால் அன சடையும் திரு முக்கணும் பெண்ணொர் பக்கத்துஅணைத்தார் எழில் கம்பர் எங்கள் பிரானார்க்கு அழகியவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
36
அழகறி விற்பெரி தாகிய ஏகம்பர் அத்தர்கொற்றம்பழகறி விற்பெரி யோர்தமைப் பற்றலர் பற்றும்அன்பின்குழகறி வேற்பினுள் ஒன்றறி யாரறி யாமைதெய்வம்கிழகெறி யப்பட் டுலந்தார் உலகிற் கிடந்தனரே.
சொற்பிரிப்பு
அழகு அறிவில் பெரிதாகிய ஏகம்பர் அத்தர் கொற்றம்பழகறிவில் பெரியோர் தமைப் பற்றலர் பற்றும் அன்பின்குழகு அறிவு ஏற்பினுள் ஒன்று அறியார் அறியாமை தெய்வம்கிழகு எறியப்பட்டு உலந்தார் உலகில் கிடந்தனரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
37
கிடக்கும் ஒருபால் இரைக்கின்ற பாம்பொரு பால்மதியம்தொடக்குண் டிலங்கும் மலங்கும் திரைக்கங்கை சூடுங்கொன்றைவடக்குண்டு கட்டத் தலைமாலை வாளால் மலைந்தவெம்போர்கடக்கும் விடைத்திரு ஏகம்பர் கற்றைச் சடைமுடியே.
சொற்பிரிப்பு
கிடக்கும் ஒருபால் இரைக்கின்ற பாம்பு ஒரு பால்மதியம்தொடக்குண்டு இலங்கும் மலங்கும் திரைக்கங்கை சூடும் கொன்றைவடக்குண்டு கட்டத் தலைமாலை வாளால் மலைந்த வெம்போர்கடக்கும் விடைத் திருஏகம்பர் கற்றைச் சடைமுடியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
38
கற்றைப் பவளச் சடைவலம் பூக்கமழ் கொன்றையந்தார்முற்றுற் றிலாமதி யின்கொழுந் தேகம்பர் மொய்குழலாம்மற்றைத் திசையின் மணிப்பொற் கொழுந்தத் தரங்கழுநீர்தெற்றிப் பொலிகின்ற சூட்டழ காகித் திகழ்தருமே.
சொற்பிரிப்பு
கற்றைப் பவளச் சடை வலம் பூக்கமழ் கொன்றையந்தார்முற்றுற்று இலா மதியின் கொழுந்தே கம்பர் மொய் குழலாம்மற்றைத் திசையின் மணிப்பொற் கொழுந்தத் தரங் கழுநீர்தெற்றிப் பொலிகின்ற சூட்டு அழகாகித் திகழ்தருமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
39
தருமருட் டன்மை வலப்பால் கமலக்கண் நெற்றியின்மேல்திருமலர்க் கண்பிள வின்றிக ழுந்தழல் செல்வக்கம்பர்கருமலர்க் கண்இடப் பாலது நீலம் கனிமதத்துவருநுதற் பொட்டணங் குக்குயர்ந் தோங்கும் மலர்க்குழலே.
சொற்பிரிப்பு
தருமருள் தன்மை வலப்பால் கமலக்கண் நெற்றியின் மேல்திருமலர்க் கண் பிளவின் திகழுந்தழல் செல்வக் கம்பர்கருமலர்க் கண் இடப் பாலது நீலம் கனி மதத்துவரு நுதல் பொட்டு அணங்குக்கு உயர்ந்து ஓங்கும் மலர்க்குழலே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
40
மலர்ந்த படத்துச்சி ஐந்தினும் செஞ்சுடர் மாமணிவிட்டலர்ந்த மணிக்குண் டலம்வலக் காதினில் ஆடிவரும்நலந்திரு நீள்வயி ரம்வெயிற் பாய நகுமணிகள்கலந்தசெம் பொன்மக ரக்குழை ஏகம்பர் காதிடமே.
சொற்பிரிப்பு
மலர்ந்த படத்து உச்சி ஐந்தினும் செஞ்சுடர் மாமணிவிட்டுஅலர்ந்த மணிக் குண்டலம் வலக் காதினில் ஆடிவரும்நலந்திரு நீள்வயிரம் வெயில் பாய நகுமணிகள்கலந்த செம்பொன் மகரக்குழை ஏகம்பர் காது இடமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
41
காதலைக் கும்வலத் தோள்பவ ளக்குன்றம் அங்குயர்ந்துபோதலைக் கும்பனிப் பொன்மலை நீற்றின் பொலியகலம்தாதலைக் குங்குழல் சேர்பணைத் தோள்நறுஞ் சாந்தணிந்துசூதலைக் கும்முலை மார்பிடம் ஏகம்பர் சுந்தரமே.
சொற்பிரிப்பு
காதலைக்கும் வலத்தோள் பவளக் குன்றம் அங்கு உயர்ந்துபோதலைக்கும் பனிப் பொன்மலை நீற்றின் பொலி அகலம்தாதலைக்குங் குழல் சேர் பணைத் தோள் நறும் சாந்தணிந்துசூதலைக்கும் முலை மார்பிடம் ஏகம்பர் சுந்தரமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
42
தரம்பொற் பழியும் உலகட்டி எய்த்துத் தரந்தளராஉரம்பொற் புடைய திருவயி றாம்வலம் உம்பர்மும்மைப்புரம்பொற் பழித்தகம் பர்க்குத் தரத்திடு பூண்முலையும்நிரம்பப் பொறாது தளரிள வஞ்சியும் நேர்வுடைத்தே.
சொற்பிரிப்பு
தரம் பொற்பு அழியும் உலகட்டி எய்த்துத் தரம் ததளராஉரம் பொற்புடைய திருவயிறாம் வலம் உம்பர் மும்மைப்புரம் பொற்பழித்த கம்பர்க்குத் தரத்திடு பூண்முலையும்நிரம்பப் பொறாது தளரிள வஞ்சியும் நேர்வுடைத்தே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
43
உடைப்புலி ஆடையின் மேலுர கக்கச்சு வீக்கிமுஞ்சிவடத்தொரு கோவணந் தோன்றும் அரைவலம் மற்றையல்குல்தொடக்குறு காஞ்சித் தொடுத்த அரசிலை தூநுண்டுகில்அடல்பொலி ஏறுடை ஏகம்பம் மேய அடிகளுக்கே.
சொற்பிரிப்பு
உடைப் புலி ஆடையின் மேல் உரகக் கச்சு வீக்கி முஞ்சிவடத்து ஒரு கோவணம் தோன்றும் அரைவலம் மற்றை அல்குல்தொடக்குறு காஞ்சித் தொடுத்த அரசிலை தூநுண் துகில்அடல் பொலி ஏறுடை ஏகம்பம் மேய அடிகளுக்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
44
அடிவலப் பாலது செந்தா மரையொத் ததிர்கழல்சூழ்ந்திடிகுரற் கூற்றின் எருத்திற வைத்த திளந்தளிரின்அடியிடப் பாலது பஞ்சுற அஞ்சுஞ் சிலம்பணிந்தவடிவுடைத் தார்கச்சி ஏகம்பம் மேய வரதருக்கே.
சொற்பிரிப்பு
அடி வலப்பாலது செந்தா மரை ஒத்து அதிர்கழல் சூழ்ந்துஇடிகுரல் கூற்றின் எருத்து இற வைத்தது இளந்தளிரின்அடி இடப்பாலது பஞ்சுற அஞ்சும் சிலம்பணிந்தவடிவுடைத் தார் கச்சி ஏகம்பம் மேய வரதருக்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
45
தருக்கவற் றான்மிக்க முப்புரம் எய்தயன் தன்தலையைநெருக்கவற் றோட மழுவாள் விசைத்தது நெற்களென்றும்பருக்கவற் றாங்கச்சி ஏகம்பர் அத்தர்தம் பாம்புகளின்திருக்கவற் றாலிட் டருளும் கடகத் திருக்கரமே.
சொற்பிரிப்பு
தருக்கு அவற்றால் மிக்க முப்புரம் எய்து அயன்தன் தலையைநெருக்கு அவற்றோட மழுவாள் விசைத்தது நெற்கள் என்றும்பருக்கவற்றாங் கச்சி ஏகம்பர் அத்தர் தம் பாம்புகளின்திருக்கு அவற்றால் இட்டருளும் கடகத் திருக்கரமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
46
கரத்தத் தமருகத் தோசை கடுத்தண்டம் மீபிளப்பஅரத்தத்த பாதம் நெரித்திட் டவனி தலம்நெரியத்தரத்தத் திசைகளுக் கப்புறம் போர்ப்பச் சடைவிரித்துவரத்தைத் தருகம்பர் ஆடுவர் எல்லியும் மாநடமே.
சொற்பிரிப்பு
கரத்தத் தமருகத்து ஓசை கடுத்து அண்டம் மீ பிளப்பஅரத்தத்த பாதம் நெரித்திட்டு அவனி தலம் நெரியத்தரத்தத் திசைகளுக்கு அப்புறம் போர்ப்பச் சடைவிரித்துவரத்தைத் தரு கம்பர் ஆடுவர் எல்லியும் மாநடமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
47
நடனம் பிரான்உகந் துய்யக்கொண் டானென்று நான்மறையோர்உடன்வந்து மூவா யிரவர் இறைஞ்சி நிறைந்தஉண்மைக்கடனன்றி மற்றறி யாத்தில்லை அம்பலம் காளத்தியாம்இடம்எம் பிரான்கச்சி ஏகம்பம் மேயாற் கினியனவே.
சொற்பிரிப்பு
நடனம் பிரான் உகந்து உய்யக்கொண்டான் என்று நான்மறையோர்உடன் வந்து மூவாயிரவர் இறைஞ்சி நிறைந்த உண்மைக்கடன் அன்றி மற்று அறியாத் தில்லை அம்பலம் காளத்தியாம்இடம் எம்பிரான் கச்சி ஏகம்பம் மேயாற்கு இனியனவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
48
இனியவர் இன்னார் அவரையொப் பார்பிறர் என்னவொண்ணாத்தனியவர் தையல் உடனாம் உருவர் அறம்பணித்தமுனியவர் ஏறும் உகந்தமுக் கண்ணவர் சண்டிஅன்புக்கினியவர் காய்மழு வாட்படை யார்கச்சி ஏகம்பரே.
சொற்பிரிப்பு
இனியவர் இன்னார் அவரை ஒப்பார் பிறர் என்ன ஒண்ணாத்தனியவர் தையல் உடனாம் உருவர் அறம் பணித்தமுனியவர் ஏறும் உகந்த முக் கண்ணவர் சண்டி அன்புக்குஇனியவர் காய் மழு வாட்படையார் கச்சி ஏகம்பரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
49
பரவித் தனைநினை யக்கச்சி ஏகம்பர் பண்ணும்மையல்வரவித் தனையுள்ள தெங்கறிந் தேன் முன் அவர்மகனார்புரவித் தனையடிக் கக்கொடி தாய்விடி யாஇரவில்அரவித் தனையுங்கொண் டார்மட வார்முன்றில் ஆட்டிடவே.
சொற்பிரிப்பு
பரவித் தனை நினையக் கச்சி ஏகம்பர் பண்ணும் மையல்வரவு இத்தனையுள்ளது எங்கறிந்தேன் முன் அவர் மகனார்புரவு இத்தனை அடிக்கக் கொடி தாய் விடியா இரவில்அரவு இத்தனையும் கொண்டார் மடவார் முன்றில் ஆட்டிடவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
50
இடவம் சுறுக்கெனப் பாயுமுஞ் சென்னி நகுதலைகண்டிடஅஞ் சுவர்மட வார்இரி கின்றனர் ஏகம்பத்தீர்படம்அஞ்சு வாயது நாகம் இரைக்கும் அதனுக்குமுற்படஅஞ் சுவர்எங்ங னேபலி வந்திடும் பாங்குகளே.
சொற்பிரிப்பு
இடவம் சுறுக்கெனப் பாயும் உம் சென்னி நகுதலை கண்டுஇட அஞ்சுவர் மடவார் இரிகின்றனர் ஏகம்பத்தீர்படம் அஞ்சு வாயது நாகம் இரைக்கும் அதனுக்கு முற்பட அஞ்சுவர் எங்ஙனே பலி வந்திடும் பாங்குகளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
51
பாங்குடை கோள்புலி யின்அதள் கொண்டீர்நும் பாரிடங்கள்தாங்குடை கொள்ளப் பலிகொள்ள வந்தீர் தடங்கமலம்பூங்குடை கொள்ளப் புனற்கச்சி ஏகம்பம் கோயில்கொண்டீர்ஈங்கிடை கொள்ளக் கலைகொள்ள வந்தீர் இடைக்குமின்றே.
சொற்பிரிப்பு
பாங்குடை கோள் புலியின் அதள் கொண்டீர் நும் பாரிடங்கள்தாம் குடைகொள்ளப் பலி கொள்ளவந்தீர் தடங்கமலம்பூங்குடை கொள்ளப் புனல் கச்சி ஏகம்பம் கோயில் கொண்டீர்ஈங்கு இடை கொள் அக்கலை கொள்ள வந்தீர் இடைக்கும் இன்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
52
இடைக்குமின் தோற்கும் இணைமுலை யாய்முதி யார்கள்தஞ்சொல்கடைக்கண்நன் றாங்கச்சி ஏகம்பர் ஐயங் கொளக்கடவும்விடைக்குமுன் தோற்றநில் லேநின் றினியிந்த மொய்குழலார்கிடைக்குமுன் தோற்றநஞ் சங்கிது வோதங் கிறித்துவமே.
சொற்பிரிப்பு
இடைக்கு மின் தோற்கும் இணைமுலையாய் முதியார்கள் தஞ்சொல்கடைக்கண் நன்றாம் கச்சி ஏகம்பர் ஐயம் கொளக் கடவும்விடைக்கு முன் தோற்ற நில்லே நின்று இனி இந்த மொய்குழலார்கிடைக்கு முன் தோற்ற நஞ்சங்கு இதுவோ தம் கிறித்துவமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
53
கிறிபல பேசிச் சதிரால் நடந்து விடங்குபடக்குறிபல பாடிக் குளிர்கச்சி ஏகம்பர் ஐயங்கொள்ளநெறிபல வார்குழ லார்மெலி வுற்ற நெடுந்தெருவில்செறிபல வெள்வளை போயின தாயர்கள் தேடுவரே.
சொற்பிரிப்பு
கிறி பல பேசிச் சதிரால் நடந்து விடங்கு படக்குறி பல பாடிக் குளிர்கச்சி ஏகம்பர் ஐயம் கொள்ளநெறி பல வார் குழலார் மெலிவுற்ற நெடுந்தெருவில்செறி பல வெள்வளை போயின தாயர்கள் தேடுவரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
54
தேடுற் றிலகள்ள நோக்கம் தெரிந்தில சொற்கள்முடிகூடுற் றிலகுழல் கொங்கை பொடித்தில கூறும்இவள்மாடுற் றிலமணி யின்மட அல்குலும் மற்றிவள்பால்நாடுற் றிலஎழில் ஏகம்ப னார்க் குள்ளம் நல்கிடத்தே.
சொற்பிரிப்பு
தேடுற்றில கள்ள நோக்கம் தெரிந்தில சொற்கள் முடிகூடுற்றில குழல் கொங்கை பொடித்தில கூறும் இவள்மாடுற்றில மணியின் மட அல்குலும் மற்று இவள் பால்நாடுற்றில எழில் ஏகம்பனார்க்கு உள்ளம் நல்கிடத்தே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
55
நல்கும் புகழ்க்கட வூர்நன் மறையவன் உய்யநண்ணிக்கொல்கின்ற கூற்றைக் குமைத்த வெங் கூற்றம் குளிர்திரைகள்மல்கும் திருமறைக் காட்டமிர் தென்றும் மலைமகள் தான்புல்கும் பொழிற்கச்சி ஏகம்பம் மேவிய பொன்மலையே.
சொற்பிரிப்பு
நல்கும் புகழ்க்கடவூர் நன் மறையவன் உய்ய நண்ணிக்கொல்கின்ற கூற்றைக் குமைத்த வெங்கூற்றம் குளிர்திரைகள்மல்கும் திருமறைக்காட்டு அமிர் தென்றும் மலைமகள் தான்புல்கும் பொழில் கச்சி ஏகம்பம் மேவிய பொன்மலையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
56
மலையத் தகத்தியன் அர்ச்சிக்க மன்னி வடகயிலைநிலையத் தமரர் தொழஇருந் தான்நெடு மேருஎன்னும்சிலையத்தன் பைம்பொன் மதில்திரு ஏகம்பத் தான்திகழ்நீர்அலையத் தடம்பொன்னி சூழ்திரு ஐயாற் றருமணியே.
சொற்பிரிப்பு
மலையத்து அகத்தியன் அர்ச்சிக்க மன்னி வடகயிலைநிலையத்து அமரர் தொழஇருந்தான் நெடுமேரு என்னும்சிலை அத்தன் பைம்பொன் மதில் திரு ஏகம்பத்தான் திகழ்நீர்அலையத் தடம் பொன்னி சூழ் திரு ஐயாற்று அருமணியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
57
மணியார் அருவித் தடம்இம யங்குடக் கொல்லிகல்லின்திணியார் அருவியின் ஆர்த்த சிராமலை ஐவனங்கள்அணியார் அருவி கவர்கிளி ஓப்பும்இன் சாரல்விந்தம்பணிவார் அருவினை தீர்க்கும்ஏ கம்பர் பருப்பதமே.
சொற்பிரிப்பு
மணியார் அருவித் தடம் இம யங் குடக் கொல்லி கல்லின்திணியார் அருவியின் ஆர்த்த சிராமலை ஐவனங்கள்அணியார் அருவி கவர் கிளி ஒப்பும் இன் சாரல் விந்தம்பணிவார் அருவினை தீர்க்கும் ஏகம்பர் பருப்பதமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
58
பருப்பதம் கார்தவழ் மந்தரம் இந்திர நீலம்வெள்ளைமருப்பதங் கார்கருங் குன்றியங் கும்பரங் குன்றம் வில்லார்நெருப்பதங் காகுதி நாறும் மகேந்திரம் என்றிவற்றில்இருப்பதங் காவுகந் தான்கச்சி ஏகம்பத் தெம்மிறையே.
சொற்பிரிப்பு
பருப்பதம் கார் தவழ் மந்தரம் இந்திர நீலம் வெள்ளைமருப்பது அங்கு ஆர் கருங்குன்று இயங்கும் பரங்குன்றம் வில்லார்நெருப்பது அம் ஆகுதி நாறும் மகேந்திரம் என்று இவற்றில்இருப்பது அங்கா உகந்தான் கச்சி ஏகம்பத்து எம்மிறையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
59
இறைத்தார் புரம்எய்த வில்லிமை நல்லிம வான்மகட்குமறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம் செங்குன்ற மன்னல்குன்றம்நிறைத்தார் நெடுங்குன்றம் நீள்கழுக் குன்றம்என் தீவினைகள்குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர் குன்றென்று கூறுமினே.
சொற்பிரிப்பு
இறைத்து ஆர் புரம் எய்த வில்லி மை நல் இமவான் மகட்குமறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம் செங்குன்றம் அந் நற்குன்றம்நிறைத்தார் நெடுங்குன்றம் நீள் கழுக் குன்றம் என் தீவினைகள்குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர் குன்று என்று கூறுமினே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
60
கூறுமின் தொண்டர்குற் றாலம்நெய்த் தானம் துருத்தியம்பேர்தேறுமின் வேள்விக் குடிதிருத் தோணி புரம்பழனம்ஆறுமின் போல்சடை வைத்தவன் ஆரூர் இடைமருதென்றேறுமின் நீரெம் பிரான்கச்சி ஏகம்பம் முன்நினைந்தே.
சொற்பிரிப்பு
கூறுமின் தொண்டர் குற்றாலம் நெய்த்தானம் துருத்தி அம் பேர்தேறுமின் வேள்விக்குடி திருத் தோணிபுரம் பழனம்ஆறு மின் போல்சடை வைத்தவன் ஆரூர் இடைமருது என்றுஏறுமின் நீர் எம்பிரான் கச்சி ஏகம்பம் முன் நினைந்தே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
61
நினைவார்க் கருளும் பிரான்திருச் சோற்றுத் துறைநியமம்புனைவார் சடையோன் புகலூர் புறம்பயம் பூவணம்நீர்புனைவார் பொழில்திரு வெண்காடு பாச்சில் அதிகையென்றுநினைவார் தருநெஞ்சி னீர்கச்சி ஏகம்பம் நண்ணுமினே.
சொற்பிரிப்பு
நினைவார்க்கு அருளும் பிரான் திருச்சோற்றுத்துறை நியமம்புனை வார் சடையோன் புகலூர் புறம்பயம் பூவணம் நீர்புனைவார் பொழில் திருவெண்காடு பாச்சில் அதிகை என்றுநினைவார் தரு நெஞ்சினீர் கச்சி ஏகம்பம் நண்ணுமினே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
62
நண்ணிப் பரவும் திருவா வடுதுறை நல்லம்நல்லூர்மண்ணில் பொலிகடம் பூர்கடம் பந்துறை மன்னுபுன்கூர்எண்ணற் கரிய பராய்த்துறை ஏர்கொள் எதிர்கொள்பாடிகண்ணிப் பிறைச்சடை யோன்கச்சி ஏகம்பம் காண்மின் சென்றே.
சொற்பிரிப்பு
நண்ணிப் பரவும் திருவா வடுதுறை நல்லம் நல்லூர்மண்ணில் பொலி கடம்பூர் கடம் பந்துறை மன்னு புன்கூர்எண்ணற்கு அரிய பராய்த்துறை ஏர்கொள் எதிர்கொள்பாடிகண்ணிப் பிறைச்சடையோன் கச்சி ஏகம்பம் காண்மின் சென்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
63
சென்றேறி விண்ணுறும் அண்ணா மலைதிகழ் வல்லம்மென்பூவின்தேறல் பாய்திரு மாற்பேறு பாசூர் எழில்அழுந்தூர்வன்தே ரவன்திரு விற்பெரும் பேறு மதில்ஒற்றியூர்நின்றேர் தருகச்சி ஏகம்பம் மேயார் நிலாவியவே.
சொற்பிரிப்பு
சென்றேறி விண்ணுறும் அண்ணாமலை திகழ் வல்லம் மென்பூவின் தேறல் பாய் திருமாற்பேறு பாசூர் எழில் அழுந்தூர்வன் தேர் அவன் திருவிற்பெரும் பேறு மதில் ஒற்றியூர்நின்று ஏர் தரு கச்சி ஏகம்பம் மேயார் நிலாவியவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
64
நிலாவு புகழ்த்திரு வோத்தூர் திருஆமாத் தூர்நிறைநீர்சுலாவு சடையோன் புலிவலம் வில்வலம் கொச்சைதொண்டர்குலாவு திருப்பனங் காடுநன் மாகறல் கூற்றம்வந்தால்அலாய்என் றடியார்க் கருள்புரி ஏகம்பர் ஆலயமே.
சொற்பிரிப்பு
நிலாவு புகழ்த் திருவோத்தூர் திருஆமாத்தூர் நிறைநீர்சுலாவு சடையோன் புலிவலம் வில்வலம் கொச்சை தொண்டர்குலாவு திருப்பனங்காடு நன் மாகறல் கூற்றம் வந்தால்அலாய் என்று அடியார்க்கு அருள்புரி ஏகம்பர் ஆலயமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
65
ஆலையங் கார்கரு காவைகச் சூர்திருக் காரிகரைவேலையங் கேறு திருவான்மி யூர்திரு ஊறல்மிக்கசோலையங் கார்திருப் போந்தைமுக் கோணம் தொடர்கடுக்கைமாலையன் வாழ்திரு ஆலங்கா டேகம்பம் வாழ்த்துமினே.
சொற்பிரிப்பு
ஆலை அங்கு ஆர் கருகாவை கச்சூர் திருக்காரிகரைவேலை அங்கேறு திருவான்மியூர்திருஊறல் மிக்கசோலையங் கார் திருப்போந்தை முக்கோணம் தொடர் கடுக்கைமாலையன் வாழ் திருஆலங்காடு ஏகம்பம் வாழ்த்துமினே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
66
வாழப் பெரிதெமக் கின்னருள் செய்யும் மலர்க்கழலோர்தாழச் சடைத்திரு ஏகம்பர் தம்மைத் தொழாதவர்போய்வாழப் பரற்சுரம் ஆற்றா தளிரடி பூங்குழல் எம்ஏழைக் கிடையிறுக் குங்குய பாரம் இயக்குறினே.
சொற்பிரிப்பு
வாழப் பெரிது எமக்கு இன்னருள் செய்யும் மலர்க்கழலோர்தாழச்சடைத் திருஏகம்பர் தம்மைத் தொழாதவர் போய்வாழப் பரற்சுரம் ஆற்றா தளிரடி பூங்குழல் எம்ஏழைக்கு இடை இறுக்குங் குய பாரம் இயக்குறினே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
67
உறுகின்ற வெவ்வழல் அக்கடம் இக்கொடிக் குன்பின்வரப்பெறுகின்ற வண்மையி னால்ஐய பேரருள் ஏகம்பனார்துறுகின்ற மென்மலர்த் தண்பொழில் கச்சியைச் சூழ்ந்திளையோர்குறுகின்ற பூங்குவ ளைக்குறுந் தண்பணை என்றுகொளே.
சொற்பிரிப்பு
உறுகின்ற வெவ்வழல் அக்கடம் இக்கொடிக்கு உன் பின்வரப்பெறுகின்ற வண்மையினால் ஐய பேரருள் ஏகம்பனார்துறுகின்ற மென்மலர்த் தண்பொழில் கச்சியைச் சூழ்ந்து இளையோர்குறுகின்ற பூங்குவளைக் குறும் தண்பணை என்று கொளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
68
கொள்ளுங் கடுங்கதி ரிற்கள்ளி தீச்சில வேய்உலறிவிள்ளும் வெடிபடும் பாலையென் பாவை விடலைபின்னேதெள்ளும் புனற்கச்சி யுள்திரு ஏகம்பர் சேவடியைஉள்ளும் அதுமறந் தாரெனப் போவ துரைப்பரிதே.
சொற்பிரிப்பு
கொள்ளும் கடுங்கதிரில் கள்ளி தீச்சில வேய் உலறிவிள்ளும் வெடிபடும் பாலை என் பாவை விடலை பின்னேதெள்ளும் புனல் கச்சியுள் திரு ஏகம்பர் சேவடியைஉள்ளும் அது மறந்தாரெனப்போவது உரைப்பரிதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
69
பரிப்பருந் திண்மைப் படையது கானர் எனிற்சிறகுவிரிப்பருந் துக்கிரை ஆக்கும்வெய் யேன்அஞ்சல் செஞ்சடைமேல்தரிப்பருந் திண்கங்கை யார்திரு வேகம்பம் அன்னபொன்னேவரிப்பருந் திண்சிலை யேயும ராயின் மறைகுவனே.
சொற்பிரிப்பு
பரிப்பரும் திண்மைப் படையது கானர் எனில் சிறகுவிரிப் பருந்துக்கு இறை ஆக்கும் வெய்யேன் அஞ்சல் செஞ்சடைமேல்தரிப்பரும் திண்கங்கையார் திரு ஏகம்பம் அன்ன பொன்னேவரிப்பரும் திண்சிலையே உமர் ஆயின் மறைகுவனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
70
வனவரித் திண்புலி யின்அதள் ஏகம்ப மன்னருளேஎனவரு பொன்னணங் கென்னணங் கிற்கென் எழிற்கழங்கும்தனவரிப் பந்தும் கொடுத்தெனைப் புல்லியும் இற்பிரிந்தேஇனவரிக் கல்லதர் செல்வதெங் கே ஒல்கும் ஏழைநெஞ்சே.
சொற்பிரிப்பு
வனவரித் திண்புலியின் அதள் ஏகம்ப மன் அருளேஎனவரு பொன் அணங்கு என் அணங்கிற்கு என் எழில் கழங்கும்தனவரிப்பந்தும் கொடுத்து எனைப் புல்லியும் இல் பிரிந்தேஇனவரிக்கல் அதர் செல்வது எங்கே ஒல்லும் ஏழை நெஞ்சே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
71
நெஞ்சார் தரஇன்பம் செய்கழல் ஏகம்பர் கச்சியன்னாள்பஞ்சார் அடிவைத்த பாங்கிவை ஆங்கவள் பெற்றெடுத்தவெஞ்சார் வொழியத்தன் பின்செல முன்செல் வெடுவெடென்றஅஞ்சா அடுதிறற் காளைதன் போக்கிவை அந்தத்திலே.
சொற்பிரிப்பு
நெஞ்சு ஆர்தர இன்பம் செய்கழல் ஏகம்பர் கச்சியன்னாள்பஞ்சார் அடிவைத்த பாங்கிவை ஆங்கவள் பெற்றெடுத்தவெஞ்சார்வு ஒழியத் தன் பின்செல முன்செல் வெடுவெடென்றஅஞ்சா அடுதிறற் காளை தன் போக்கிவை அந்தத்திலே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
72
இலவவெங் கான்உனை யல்லால் தொழுஞ்சரண் ஏகம்பனார்நிலவும் சுடரொளி வெய்யவ னேதண் மலர்மிதித்துச்செலவும் பருக்கை குளிரத் தளிரடி செல்சுரத்துன்உலவுங் கதிர்தணி வித்தருள் செய்யுன் உறுதுணைக்கே.
சொற்பிரிப்பு
இலவ வெங்கான் உனை அல்லால் தொழுஞ்சரண் ஏகம்பனார்நிலவும் சுடரொளி வெய்யவனே தண் மலர் மிதித்துச்செலவும் பருக்கை குளிரத் தளிரடி செல்சுரத்து உன்உலவும் கதிர் தணிவித்தருள் செய் உன் உறுதுணைக்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
73
துணையொத்த கோவையும் போலெழில் பேதையும் தோன்றலுமுன்இணையொத்த கொங்கையொ டேஒத்த காதலொ டேகினரேஅணையத்தர் ஏறொத்த காளையைக் கண்டனம் மற்றவரேல்பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே.
சொற்பிரிப்பு
துணையொத்த கோவையும் போல் எழில் பேதையும் தோன்றலும் முன்இணையொத்த கொங்கையொடே ஒத்த காதலொடு ஏகினரேஅணை அத்தர் ஏறொத்த காளையைக் கண்டனம் மற்றவரேல்பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
74
மின்நலிக் கும்வணக் கத்திடை யாளையும் மீளியையும்நென்னல்இப் பாக்கைவந் தெய்தின ரேல்எம் மனையிற்கண்டீர்பின்னரிப் போக்கருங் குன்று கடந்தவர் இன்றுகம்பர்மன்னரி தேர்ந்து தொழுங்கச்சி நாட்டிடை வைகுவரே.
சொற்பிரிப்பு
மின் நலிக்கும் வணக்கத்திடை யாளையும் மீளியையும்நென்னல் இப் பாக்கை வந்து எய்தினரேல் எம் மனையிற் கண்டீர்பின்னர் இப்போக்கருங் குன்று கடந்தவர் இன்று கம்பர்மன் அரி தேர்ந்து தொழுங் கச்சி நாட்டிடை வைகுவரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
75
உவரச்சொல் வேடுடைக் காடுகந் தாடிய ஏகம்பனார்அவரக்கன் போன விமானத்தை ஆயிரம் உண்மைசுற்றும்துவரச் சிகரச் சிவாலயம் சூலம் துலங்குவிண்மேல்கவரக் கொடிதிளைக் குங்கச்சி காணினும் கார்மயிலே.
சொற்பிரிப்பு
உவரச்சொல் வேடுடைக் காடு உகந்து ஆடிய ஏகம்பனார்அவரக்கன் போன விமானத்தை ஆயிரம் உண்மை சுற்றும்துவரச் சிகரச் சிவாலயம் சூலம் துலங்கு விண்மேல்கவரக் கொடி திளைக்குங் கச்சி காணினும் கார்மயிலே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
76
கார்மிக்க கண்டத் தெழில்திரு ஏகம்பர் கச்சியின்வாய்ஏர்மிக்க சேற்றெழில் நெல்நடு வோர்ஒலி பொன்மலைபோல்போர்மிக்க செந்நெல் குவிப்போர் ஒலிகருப் பாலையொலிநீர்மிக்க மாக்கட லின்ஒலி யேஒக்கும் நேரிழையே.
சொற்பிரிப்பு
கார் மிக்க கண்டத்தெழில் திரு ஏகம்பர் கச்சியின்வாய்ஏர் மிக்க சேற்றெழில் நெல் நடுவோர் ஒலி பொன்மலை போல்போர் மிக்க செந்நெல் குவிப்போர் ஒலி கருப்பாலை ஒலிநீர் மிக்க மாக்கடலின் ஒலியே ஒக்கும் நேரிழையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
77
நேர்த்தமை யாமை விறற்கொடு வேடர் நெடுஞ்சுரத்தைப்பார்த்தமை யால்இமை தீந்தகண் பொன்னே பகட்டுரிவைபோர்த்தமை யால்உமை நோக்கருங் கம்பர்கச் சிப்பொழிலுள்சேர்த்தமை யால்இமைப் போதணி சீதம் சிறந்தனவே.
சொற்பிரிப்பு
நேர்த்து அமையாமை விறற்கொடு வேடர் நெடுஞ்சுரத்தைப்பார்த்தமையால் இமை தீந்த கண் பொன்னே பகட்டு உரிவைபோர்த்தமையால் உமைநோக்கரும் கம்பர் கச்சிப் பொழிலுள்சேர்த்தமையால் இமைப் போதணி சீதம் சிறந்தனவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
78
சிறைவண்டு பாடும் கமலக் கிடங்கிவை செம்பழுக்காய்நிறைகொண்ட பாளைக் கமுகின் பொழில்இவை தீங்கனியின்பொறைகொண்ட வாழைப் பொதும்புவை புன்சடை ஏகம்பனார்நறைகொண்ட பூங்கச்சி நாடெங்கும் இவ்வண்ணம் நன்னுதலே.
சொற்பிரிப்பு
சிறைவண்டு பாடும் கமலக் கிடங்கிவை செம்பழுக்காய்நிறைகொண்ட பாளைக் கமுகின் பொழில் இவை தீங்கனியின்பொறைகொண்ட வாழைப் பொதும்பு உவை புன்சடை ஏகம்பனார்நறைகொண்ட பூங்கச்சி நாடெங்கும் இவ்வண்ணம் நன்னுதலே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
79
நன்னுத லார்கருங் கண்ணும் செவ்வாயும் இவ் வாறெனப்போய்மன்னித ழார்திரு நீலமும் ஆம்பலும் பூப்பவள்ளைஎன்னவெ லாம்ஒப்புக் காதென்று வீறிடும் ஏகம்பனார்பொன்னுத லார்விழி யார்கச்சி நாட்டுள்இப் பொய்கையுளே.
சொற்பிரிப்பு
நன்னுதலார் கருங்கண்ணும் செவ்வாயும் இவ்வாறெனப் போய்மன் இதழ் ஆர் திருநீலமும் ஆம்பலும் பூப்ப வள்ளைஎன்ன எலாம் ஒப்புக் காதென்று வீறிடும் ஏகம்பனார்பொன்னுதலார் விழியார் கச்சி நாட்டுள் இப்பொய்கையுளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
80
உள்வார் குளிர நெருங்கிக் கருங்கிடங் கிட்டநன்னீர்வள்வா ளைகளொடு செங்கயல் மேய்கின்ற எங்களைஆட்கொள்வார் பிறவி கொடாதஏ கம்பர் குளிர்குவளைகள்வார் தருகச்சி நாட்டெழில் ஏரிக் களப்பரப்பே.
சொற்பிரிப்பு
உள்வார் குளிர நெருங்கிக்கருங்கிடங்கிட்ட நன்னீர்வள் வாளைகளொடு செங்கயல் மேய்கின்ற எங்களை ஆட்கொள்வார் பிறவி கொடாத ஏகம்பர் குளிர்குவளைகள்வார் தருகச்சி நாட்டெழில் ஏரிக் களப்பரப்பே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
81
பரப்பார் விசும்பிற் படிந்த கருமுகில் அன்னநன்னீர்தரப்பா சிகள்மிகு பண்பொடு சேம்படர் தண்பணைவாய்ச்சுரப்பார் எருமை மலர்தின்னத் துன்னுக ராஒருத்தல்பொரப்பார் பொலிநுத லாய்செல்வக் கம்பர்தம் பூங்கச்சியே.
சொற்பிரிப்பு
பரப்பார் விசும்பிற் படிந்த கருமுகில் அன்ன நன்னீர்தரப்பாசிகள் மிகு பண்பொடு சேம்படர் தண்பணைவாய்ச்சுரப்பார் எருமை மலர் தின்னத் துன்னு கரா ஒருத்தல்பொரப்பார் பொலி நுதலாய் செல்வக் கம்பர் தம் பூங்கச்சியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
82
கச்சார் முலைமலை மங்கைகண் ணாரஎண் ணான்கறமும்வைச்சார் மகிழ்திரு ஏகம்பர் தேவி மகிழவிண்ணோர்விச்சா தரர்தொழு கின்ற விமானமும் தன்மமறாஅச்சா லையும்பரப் பாங்கணி மாடங்கள் ஓங்கினவே.
சொற்பிரிப்பு
கச்சார் முலை மலை மங்கை கண் ணார எண்ணான்கு அறமும்வைச்சார் மகிழ் திரு ஏகம்பர் தேவி மகிழ விண்ணோர்விச்சாதரர் தொழுகின்ற விமானமும் தன்மம் அறாஅச் சாலையும் பரப் பாங்கணி மாடங்கள் ஓங்கினவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
83
ஓங்கின ஊரகம் உள்ளகம் உம்பர் உருகிடமாம்பாங்கினில் நின்ற தரியுறை பாடகம் தெவ்இரியவாங்கின வாட்கண்ணி மற்றவர் மைத்துனி வான்கவிகள்தாங்கின நாட்டிருந் தாளது தன்மனை ஆயிழையே.
சொற்பிரிப்பு
ஓங்கின ஊரகம் உள்ளகம் உம்பர் உருகிடமாம்பாங்கினில் நின்றது அரியுறை பாடகம் தெவ் இரியவாங்கின வாட்கண்ணி மற்றவர் மைத்துனி வான் கவிகள்தாங்கின நாட்டிருந்தாள் அது தன்மனை ஆயிழையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
84
இழையார் அரவணி ஏகம்பர் நெற்றி விழியின்வந்தபிழையா அருள்நம் பிராட்டிய தின்ன பிறங்கல்உன்னும்நுழையா வருதிரி சூலத்தள் நோக்கரும் பொன்கடுக்கைத்தழையார் பொழிலிது பொன்னே நமக்குத் தளர்வில்லையே.
சொற்பிரிப்பு
இழையார் அரவணி ஏகம்பர் நெற்றி விழியின் வந்தபிழையா அருள் நம் பிராட்டியது இன்ன பிறங்கல் உன்னும்நுழையா வரு திரிசூலத்தள் நோக்கரும் பொன்கடுக்கைத்தழையார் பொழில் அது பொன்னே நமக்குத் தளர்வில்லையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
85
தளரா மிகுவெள்ளம் கண்டுமை ஓடித் தமைத்தழுவக்கிளையார் வளைக்கை வடுப்படும் ஈங்கோர் கிறிபடுத்தார்வளமாப் பொழில்திரு ஏகம்பம் மற்றிது வந்திறைஞ்சிஉளரா வதுபடைத் தோம்மட வாய்இவ் வுலகத்துளே.
சொற்பிரிப்பு
தளரா மிகு வெள்ளம் கண்டு உமை ஓடித் தமைத் தழுவக்கிளையார் வளைக்கை வடுப்படும் ஈங்கோர் கிறி படுத்தார்வளமாப் பொழில் திருஏகம்பம் மற்றிது வந்திறைஞ்சிஉளராவது படைத்தோம் மடவாய் இவ்வுலகத்துளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
86
உலவிய மின்வடம் வீசி உருமதிர் வுள்முழங்கிவலவிய மாமதம் பாய்முகில் யானைகள் வானில்வந்தால்சுலவிய வார்குழல் பின்னரென் பாரிர் எனநினைந்துநிலவிய ஏகம்பர் கோயிற் கொடியன்ன நீர்மையனே.
சொற்பிரிப்பு
உலவிய மின் வடம் வீசி உரும் அதிர்வுள் முழங்கிவலவிய மாமதம் பாய் முகில் யானைகள் வானில் வந்தால்சுலவிய வார் குழல் பின்னர் என் பாரிர் என நினைந்துநிலவிய ஏகம்பர் கோயிற் கொடியன்ன நீர்மையனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
87
நீரென்னி லும்அழுங் கண்முகில் காள்நெஞ்சம் அஞ்சலையென்றாரென்னி லுந்தம ராயுரைப் பார்அம ராவதிக்குநேரென்னி லுந்தகும் கச்சியுள் ஏகம்பர் நீள்மதில்வாய்ச்சேரென்னி லும்தங்கும் வாட்கண்ணி தான்அன்பர் தேர்வரவே.
சொற்பிரிப்பு
நீரென்னிலும் அழும் கண் முகில் காள் நெஞ்சம் அஞ்சலையென்றுஆரென்னிலும் தமரா உரைப்பார் அமராவதிக்குநேர் என்னிலும் தகும் கச்சியுள் ஏகம்பர் நீள் மதில்வாய்ச்சேரென்னிலும் தங்கும் வாட்கண்ணி தான் அன்பர் தேர் வரவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
88
வரங்கொண் டிமையோர் நலங்கொள்ளும் ஏகம்பர் கச்சியன்னாய்பரங்கொங்கை தூவன்மின் நீர்முத்தம் அன்பர்தம் தேரின்முன்னேதரங்கொண்டு பூக்கொண்டு கொன்றைபொன் னாகத்தண் காந்தட்கொத்தின்கரங்கொண்டு பொற்சுண்ணம் ஏந்தவும் போந்தன கார்முகிலே.
சொற்பிரிப்பு
வரங்கொண்டு இமையோர் நலங்கொள்ளும் ஏகம்பர் கச்சியன்னாய்பரங்கொங்கை தூவன்மின் நீர் முத்தம் அன்பர் தம் தேரின் முன்னேதரங்கொண்டு பூக்கொண்டு கொன்றை பொன்னாகத் தண் காந்தள் கொத்தின்கரங்கொண்டு பொற்சுண்ணம் ஏந்தவும் போந்தன கார்முகிலே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
89
கார்முகம் ஆரவண் கைக்கொண்ட கம்பர் கழல்தொழுதுபோர்முக மாப்பகை வெல்லச்சென் றார்நினை யார்புணரிநீர்முக மாக இருண்டு சுரந்தது நேரிழைநாம்ஆர்முக மாக வினைக்கடல் நீந்தும் அயர்வுயிர்ப்பே.
சொற்பிரிப்பு
கார்முகம் ஆர வண் கைக்கொண்ட கம்பர் கழல் தொழுதுபோர்முகமாப் பகை வெல்லச் சென்றார் நினையார் புணரிநீர் முகமாக இருண்டு சுரந்தது நேரிழை நாம்ஆர்முகமாக வினைக்கடல் நீந்தும் அயர்வுயிர்ப்பே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
90
உயிரா யினஅன்பர் தேர்வரக் கேட்டுமுன் வாட்டமுற்றபயிரார் புயல்பெற்ற தென்னநம் பல்வளை பான்மைகளாம்தயிரார்பால் நெய்யொடும் ஆடிய ஏகம்பர் தம்மருள்போல்கையிரா வளையழுந் தக்கச் சிறுத்தன கார்மயிலே.
சொற்பிரிப்பு
உயிராயின அன்பர் தேர் வரக் கேட்டு முன் வாட்டமுற்றபயிரார் புயல் பெற்றது என்ன நம் பல்வளை பான்மைகளாம்தயிரார் பால் நெய்யொடும் ஆடிய ஏகம்பர் தம்மருள் போல்கையிரா வளையழுந்தக் கச்சு இறுத்தன கார்மயிலே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
91
கார்விடை வண்ணத்தன் அன்றேழ் தழுவினும் இன்றுதனிப்போர்விடை பெற்றெதிர் மாண்டார் எனஅண்டர் போதவிட்டார்தார்விடை ஏகம்பர் கச்சிப் புறவிடைத் தம்பொன் நன்பூண்மார்விடை வைகல் பெறுவார் தழுவ மழவிடையே.
சொற்பிரிப்பு
கார்விடை வண்ணத்தன் அன்று ஏழ் தழுவினும் இன்று தனிப்போர்விடை பெற்று எதிர் மாண்டார் என அண்டர் போதவிட்டார்தார்விடை ஏகம்பர் கச்சிப் புறவிடைத் தம்பொன் நன்பூண்மார்விடை வைகல் பெறுவார் தழுவ மழவிடையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
92
விடைபாய் கொடுமையெண் ணாதுமே லாங்கன்னி வேல்கருங்கண்கடைபாய் மனத்திளங் காளையர் புல்கொலி கம்பர்கச்சிமடைபாய் வயலின முல்லையின் மான்கன்றொ டான்கன்றினம்கடைபாய் தொறும்பதி மன்றில் கடல்போல் கலந்தெழுமே.
சொற்பிரிப்பு
விடைபாய் கொடுமை எண்ணாது மேலாம் கன்னிவேல் கருங்கண்கடைபாய் மனத்து இளம் காளையர் புல்க ஒலி கம்பர் கச்சிமடைபாய் வயலின முல்லையின் மான் கன்றொடு ஆன் கன்றினம்கடை பாய்தொறும் பதி மன்றில் கடல்போல் கலந்தெழுமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
93
எழுமலர்த் தண்பொழில் ஏகம்பர் கச்சி இருங்கடல்வாய்க்கொழுமணப் புன்னைத் துணர்மணற் குன்றில் பரதர்கொம்பேசெழுமலர்ச் சேலல்ல வாளல்ல வேலல்ல நீலமல்லமுழுமலர்க் கூர்அம்பின்ஓர்இரண் டாலும் முகத்தனவே.
சொற்பிரிப்பு
எழுமலர்த் தண்பொழில் ஏகம்பர் கச்சி இருங்கடல்வாய்க்கொழுமணப் புன்னைத் துணர் மணல் குன்றில் பரதர் கொம்பேசெழுமலர்ச் சேல் அல்ல வாள் அல்ல வேல் அல்ல நீலம் அல்லமுழுமலர்க் கூர் அம்பின் ஓர் இரண்டாலும் முகத்தனவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
94
முகம்பாகம் பண்டமும் பாகமென் றோதிய மூதுரையைஉகம்பார்த் திரேல்என் நலம்உயர் ஏகம்பர் கச்சிமுன்நீர்அகம்பாக ஆர்வின் அளவில்லை என்னின் பவளச் செவ்வாய்நகம்பால் பொழில்பெற்ற நாமுற்ற வர்கொள்க நன்மயலே.
சொற்பிரிப்பு
முகம் பாகம் பண்டமும் பாகமென்று ஓதிய மூதுரையைஉகம் பார்த்திரேல் என் நலம் உயர் ஏகம்பர் கச்சி முன் நீர்அகம் பாக ஆர்வின் அளவில்லை என்னின் பவளச் செவ்வாய்நகம்பால் பொழில் பெற்ற நாமுற்ற வர் கொள்க நன்மயலே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
95
மயக்கத்த நல்லிருள் கொல்லும் சுறவோ டெறிமகரம்இயக்கத் திடுசுழி ஓதம் கழிகிளர் அக்கழித்தார்துயக்கத் தவர்க்கரு ளாக்கம்பர் கச்சிக் கடலபொன்னூல்முயக்கத் தகல்வு பொறாள்கொண்க நீர்வரும் ஊர்க்கஞ்சுமே.
சொற்பிரிப்பு
மயக்கத்த நல்லிருள் கொல்லும் சுறவோடு எறி மகரம்இயக்கத்திடு சுழி ஓதம் கழிகிளர் அக்கழித்தார்துயக்கத்தவர்க்கு அருளாக் கம்பர் கச்சிக் கடல பொன்னூல்முயக்கத் தகல்வு பொறாள் கொண்க நீர்வரும் ஊர்க் கஞ்சுமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
96
மேயிரை வைகக் குருகுண ராமது உண்டுபுன்னைமீயிரை வண்டோ தமர்புக் கடிய விரிகடல்வாய்ப்பாயிரை நாகங்கொண் டோன்தொழும் கம்பர்கச் சிப்பவ்வநீர்தூயிரை கானல்மற் றார்அறி வார்நந் துறைவர்பொய்யே.
சொற்பிரிப்பு
மேய் இரை வைகு அக்குருகு உணரா மது உண்டு புன்னைமீ இரை வண்டோ தமர்புக் கடிய விரி கடல்வாய்ப்பாய் இரை நாகம் கொண்டோன் தொழும் கம்பர் கச்சிப் பவ்வநீர்தூ இரை கானல் மற்று ஆர் அறிவார் நம் துறைவர் பொய்யே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
97
பொய்வரு நெஞ்சினர் வஞ்சனை யாரையும் போகவிடாமெய்வரும் பேரருள் ஏகம்பர் கச்சி விரையினவாய்க்கைவரும் புள்ளொடு சங்கினம் ஆர்ப்பநம் சேர்ப்பர்திண்தேர்அவ்வரு தாமங் களினம் வந் தார்ப்ப அணைகின்றதே.
சொற்பிரிப்பு
பொய் வரு நெஞ்சினர் வஞ்சனை யாரையும் போகவிடாமெய்வரும் பேரருள் ஏகம்பர் கச்சி விரையினவாய்க்கைவரும் புள்ளொடு சங்கினம் ஆர்ப்ப நம் சேர்ப்பர் திண்தேர்அவ்வரு தாமங்களினம் வந்து ஆர்ப்ப அணைகின்றதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
98
இன்றுசெய் வோம்இத னில்திரு ஏகம்பர்க் கெத்தனையும்நன்றுசெய் வோம்பணி நாளையென் றுள்ளிநெஞ் சேயுடலில்சென்றுசெ யாரை விடும்துணை நாளும் விடா தடிமைநின்றுசெய் வாரவர் தங்களின் நீள்நெறி காட்டுவரே.
சொற்பிரிப்பு
இன்று செய்வோம் இதனில் திரு ஏகம்பர்க்கு எத்தனையும்நன்று செய்வோம் பணி நாளையென்று உள்ளி நெஞ்சே உடலில்சென்று செயாரை விடும் துணை நாளும் விடாதடிமைநின்று செய்வாரவர் தங்களின் நீள்நெறி காட்டுவரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
99
காட்டிவைத் தார்தம்மை யாம்கடிப் பூப்பெய்யக் காதல்வெள்ளம்ஈட்டிவைத் தார்தொழும் ஏகம்பர் ஏதும் இலாதஎம்மைப்பூட்டிவைத் தார்தமக் கன்பது பெற்றுப் பதிற்றுப் பத்துப்பாட்டிவைத் தார்பர வித்தொழு வாம்அவர் பாதங்களே.
சொற்பிரிப்பு
காட்டி வைத்தார் தம்மை யாம் கடிப் பூப் பெய்யக் காதல் வெள்ளம்ஈட்டி வைத்தார் தொழும் ஏகம்பர் ஏதும் இலாத எம்மைப்பூட்டி வைத்தார் தமக்கு அன்பது பெற்றுப் பதிற்றுப் பத்துப்பாட்டிவைத்தார் பரவித் தொழுவாம் அவர் பாதங்களே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
100
பாதம் பரவியோர் பித்துப் பிதற்றினும் பல்பணியும்ஏதம் புகுதா வகையருள் ஏகம்பர் ஏத்தெனவேபோதம் பொருளால் பொலியாத புன்சொல் பனுவல்களும்வேதம் பொலியும் பொருளாம் எனக்கொள்வர் மெய்த்தொண்டரே.
சொற்பிரிப்பு
பாதம் பரவியோர் பித்துப் பிதற்றினும் பல் பணியும்ஏதம் புகுதா வகையருள் ஏகம்பர் ஏத்தனவேபோதம் பொருளால் பொலியாத புன்சொல் பனுவல்களும்வேதம் பொலியும் பொருளாம் எனக்கொள்வர் மெய்த்தொண்டரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.