திருமுறை 11 · 11.029 · 30

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

அருளியவர்
பட்டினத்துப் பிள்ளையார்
தலம்
இடைமருதூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்துவாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்துசிலம்பும் கழலும் அலம்பப் புனைந்துகூற்றின் ஆற்றல் மாற்றிப் போற்றாதுவலம்புரி நெடுமால் ஏனமாகி நிலம்புக்கு ...(5)ஆற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்துபத்தி அடியவர் பச்சிலை இடினும்முத்தி கொடுத்து முன்னின் றருளித்திகழ்ந்துள தொருபால் திருவடி அகஞ்சேந்துமறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி ....(10)நெய்யில் தோய்த்த செவ்வித் தாகிநூபுரம் கிடப்பினும் நொந்து தேவர்மடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்தசின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்துபஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத் ...(15)திருவொடும் பொலியும் ஒருபால் திருவடிநீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத்தோலின் கலிங்கம் மேல்விரித் தசைத்துநச்செயிற் றரவக் கச்சையாப் புறுத்துப்பொலிந்துள தொருபால் திருவிடை இலங்கொளி ...(20)அரத்த ஆடை விரித்து மீதுறீஇஇரங்குமணி மேகலை ஒருங்குடன் சாத்தியமருங்கிற் றாகும் ஒருபால் திருவிடைசெங்கண் அரவும் பைங்கண் ஆமையும்கேழற் கோடும் வீழ்திரள் அக்கும் ....(25)நுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்துதவளநீ றணிந்ததோர் பவளவெற் பென்னஒளியுடன் திகழும் ஒருபால் ஆகம்வாரும் வடமும் ஏர்பெறப் புனைந்துசெஞ்சாந் தணிந்து குங்குமம் எழுதிப் ....(30)பொற்றா மரையின் முற்றா முகிழெனஉலகேழ் ஈன்றும் நிலையில் தளராமுலையுடன் பொலியும் ஒருபால் ஆகம்அயில்வாய் அரவம் வயின்வயின் அணிந்துமூவிலை வேலும் பூவாய் மழுவும் ....(35)தமருகப் பறையும் அமர்தரத் தாங்கிச்சிறந்துள தொருபால் திருக்கரம் செறிந்தசூடகம் விளங்கிய ஆடகக் கழங்குடன்ஒம்மென் பந்தும் அம்மென் கிள்ளையும்தரித்தே திகழும் ஒருபால் திருக்கரம் ...(40)இரவியும் எரியும் விரவிய வெம்மையின்ஒருபால் விளங்கும் திருநெடு நாட்டம்நவ்வி மானின் செவ்வித் தாகிப்பாலிற் கிடந்த நீலம் போன்றுகுண்டுநீர்க் குவளையின் குளிர்ந்து நிறம்பயின்று ...(45)எம்மனோர்க் கடுத்த வெம்மைநோய்க் கிரங்கிஉலகேழ் புரக்கும் ஒருபால் நாட்டம்நொச்சிப் பூவும் பச்சை மத்தமும்கொன்றைப் போதும் மென்துணர்த் தும்பையும்கங்கை யாறும் பைங்கண் தலையும் ...(50)அரவும் மதியமும் விரவித் தொடுத்துச்சூடா மாலை சூடிப் பீடுகெழுநெருப்பில் திரித்தனைய உருக்கிளர் சடிலமொடுநான்முகம் கரந்த பால்நிற அன்னம்காணா வண்ணம் கருத்தையும் கடந்து ...(55)சேண்இகந் துளதே ஒருபால் திருமுடி பேணியகடவுட் கற்பின் மடவரல் மகளிர்கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக்கைவைத்துப் புனைந்த தெய்வ மாலைநீலக் குழல்மிசை வளைஇமேல் நிவந்து ...(60)வண்டுந் தேனுங் கிண்டுபு திளைப்பத்திருவொடு பொலியும் ஒருபால் திருமுடிஇனையவண் ணத்து நினைவருங் காட்சிஇருவயின் உருவும் ஒரு வயிற்றாகிவலப்பால் நாட்டம் இடப்பால் நோக்க ...(65)வாணுதல் பாகம் நாணுதல் செய்யவலப்பால் திருக்கரம் இடப்பால் வனமுலைதைவந்து வருட மெய்ம்மயிர் பொடித்தாங்குஉலகம் ஏழும் பன்முறை ஈன்றுமருதிடம் கொண்ட ஒருதனிக் கடவுள்நின் ....(70)திருவடி பரவுதும் யாமே நெடுநாள்இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும்சிறைக்கருப் பாசயம் சேராமறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே.
சொற்பிரிப்பு
தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்துவாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்துசிலம்பும் கழலும் அலம்பப் புனைந்துகூற்றின் ஆற்றல் மாற்றிப் போற்றாதுவலம்புரி நெடுமால் ஏனமாகி நிலம் புக்கு …5ஆற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்துபத்தி அடியவர் பச்சிலை இடினும்முத்தி கொடுத்து முன்னின்று அருளித்திகழ்ந்துளது ஒருபால் திருவடி அகஞ்சேந்துமறுவில் கற்பகத்து உறுதளிர் வாங்கி …10நெய்யில் தோய்த்த செவ்வித்தாகிநூபுரம் கிடப்பினும் நொந்து தேவர்மடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்தசின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்துபஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத் …15திருவொடும் பொலியும் ஒருபால் திருவடிநீலப் புள்ளி வாள் உகிர் வேங்கைத்தோலின் கலிங்கம் மேல் விரித்து அசைத்துநச்சு எயிற்று அரவக் கச்சை யாப்புறுத்துப்பொலிந்துளது ஒருபால் திருவிடை இலங்கொளி …20அரத்த ஆடை விரித்து மீதுறீஇஇரங்குமணி மேகலை ஒருங்குடன் சாத்தியமருங்கிற்று ஆகும் ஒருபால் திருவிடைசெங்கண் அரவும் பைங்கண் ஆமையும்கேழற் கோடும் வீழ்திரன் அக்கும் …25நுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்துதவள நீறு அணிந்ததோர் பவள வெற்பு என்னஒளியுடன் திகழும் ஒருபால் ஆகம்வாரும் வடமும்ஏர்பெறப் புனைந்துசெஞ்சாந்து அணிந்து குங்குமம் எழுதிப் …30பொற்றாமரையின் முற்றா முகிழெனஉலகேழ் ஈன்றும் நிலையில் தளராமுலையுடன் பொலியும் ஒருபால் ஆகம்அயில்வாய் அரவம் வயின்வயின் அணிந்துமூவிலை வேலும் பூவாய் மழுவும் …35தமருகப் பறையும் அமர் தரத் தாங்கிச்சிறந்து உளது ஒருபால் திருக்கரம் செறிந்தசூடகம் விளங்கியஆடகக் கழங்குடன்ஒம்மென் பந்தும் அம்மென் கிள்ளையும்தரித்தே திகழும் ஒருபால் திருக்கரம் …40இரவியும் எரியும் விரவிய வெம்மையின்ஒருபால் விளங்கும் திருநெடு நாட்டம்நவ்வி மானின் செவ்வித் தாகிப்பாலிற் கிடந்த நீலம் போன்றுகுண்டுநீர்க் குவளையின்குளிர்ந்து நிறம் பயின்று …45எம்மனோர்க் கடுத்த வெம்மை நோய்க்கு இரங்கிஉலகேழ் புரக்கும் ஒருபால் நாட்டம்நொச்சிப் பூவும் பச்சை மத்தமும்கொன்றைப் போதும் மென்துணர்த் தும்பையும்கங்கை ஆறும் பைங்கண் தலையும் …50அரவும் மதியமும் விரவித் தொடுத்தசூடா மாலை சூடிப் பீடுகெழுநெருப்பில் திரித்தனைய உருக்கிளர் சடிலமொடுநான்முகம் கரந்த பால்நிற அன்னம்காணா வண்ணம் கருத்தையும் கடந்து …55சேண் இகந்து உளதே ஒருபால் திருமுடி பேணியகடவுட் கற்பின் மடவரல் மகளிர்கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக்கைவைத்துப் புனைந்த தெய்வ மாலைநீலக் குழல் மிசை வளைஇ மேல் நிவந்து …60வண்டும் தேனும் கிண்டுபு திளைப்பத்திருவொடு பொலியும் ஒருபால் திருமுடிஇனைய வண்ணத்து நினைவரும் காட்சிஇருவயின் உருவும் ஒரு வயிற்றாகிவலப்பால் நாட்டம் இடப்பால் நோக்க …65வாணுதல் பாகம் நாணுதல் செய்யவலப்பால் திருக்கரம் இடப்பால் வனமுலைதைவந்து வருட மெய்ம்மயிர் பொடித்தாங்குஉலகம் ஏழும் பன்முறை ஈன்றுமருதிடம் கொண்ட ஒருதனிக் கடவுள் நின் …70திருவடி பரவுதும் யாமே நெடுநாள்இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும்சிறைக் கருப்பாசயம் சேராமறித்தும் புகாஅ வாழ்வு பெறற் பொருட்டே. …74
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பொருளும் குலனும் புகழும் திறனும்அருளும் அறிவும் அனைத்தும் - ஒருவர்கருதாஎன் பார்க்கும் கறைமிடற்றாய் தொல்லைமருதாஎன் பார்க்கு வரும்.
சொற்பிரிப்பு
பொருளும் குலனும்புகழும் திறனும்அருளும் அறிவும் அனைத்தும் – ஒருவர்கருதா என்பார்க்கும் கறைமிடற்றாய் தொல்லைமருதா என்பார்க்கு வரும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வருந்தேன் இறந்தும் பிறந்தும் மயக்கும் புலன்வழிபோய்ப்பொருந்தேன் நரகிற் புகுகின்றி லேன்புகழ் மாமருதிற்பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றில் ஆசையின்றிஇருந்தேன் இனிச்சென் றிரவேன் ஒருவரை யாதொன்றுமே.
சொற்பிரிப்பு
வருந்தேன் இறந்தும் பிறந்தும் மயக்கும் புலன் வழிபோய்ப்பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன் புகழ் மாமருதிற்பெருந்தேன் முகந்துகொண்டு உண்டு பிறிதொன்றில் ஆசையின்றிஇருந்தேன் இனிச் சென்று இரவேன் ஒருவரை யாதொன்றுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஒன்றினோ டொன்று சென்றுமுகில் தடவிஆடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகைதெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்தஓவநூற் செம்மைப் பூவியல் வீதிக்குயிலென மொழியும் மயிலியற் சாயல் ..(5)மான்மற விழிக்கும் மானார் செல்வத்துஇடைமரு திடங்கொண் டிருந்த எந்தைசுடர்மழு வலங்கொண் டிருந்த தோன்றல்ஆரணந் தொடராப் பூரண புராணநாரணன் அறியாக் காரணக் கடவுள் ...(10)சோதிச் சுடரொளி ஆதித் தனிப்பொருள்ஏக நாயக யோக நாயகயானொன் றுணர்த்துவ துளதே யான்முன்நனந்தலை உலகத் தனந்த யோனியில்பிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழன்றுழீஇத் ...(15)தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்துயாயுறு துயரமும் யானுறு துயரமும்இறக்கும் பொழுதின் அறப்பெருந் துன்பமும்நீயல தறிகுநர் யாரே அதனால்யான்இனிப் பிறத்தல் ஆற்றேன் அஃதான்று .....(20)உற்பவம் துடைத்தல் நிற்பிடித் தல்லதுபிறிதொரு நெறியின் இல்லைஅந் நெறிக்குவேண்டலும் வெறுத்தலும் ஆண்டொன்றிற் படராஉள்ளமொன் றுடைமை வேண்டும்அஃதன்றிஐம்புலன் ஏவல் ஆணைவழி நின்று ......(25)தானல தொன்றைத் தானென நினையும்இதுஎன துள்ளம் ஆதலின் இதுகொடுநின்னை நினைப்ப தெங்ஙனம் முன்னம்கற்புணை யாகக் கடல்நீர் நீந்தினர்எற்பிறர் உளரோ இறைவ கற்பம் .....(30)கடத்தல்யான் பெறவும் வேண்டும் கடத்தற்குநினைத்தல்யான் பெறவும் வேண்டும் நினைத்தற்குநெஞ்சுநெறி நிற்கவும் வேண்டும் நஞ்சுபொதிஉரைஎயிற் றுரகம் பூண்டகறைகெழு மிடற்றெங் கண்ணுத லோயே. ...(35)
சொற்பிரிப்பு
ஒன்றினோடு ஒன்று சென்று முகில் தடவிஆடுகொடி நுடங்கும் பீடு கெழு மாளிகைதெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்தஓவநூல் செம்மைப் பூவியல் வீதிக்குயிலென மொழியும் மயிலியற் சாயல் …5மான்மற விழிக்கும் மானார் செல்வத்துஇடைமருது இடங்கொண்டு இருந்த எந்தைசுடர்மழு வலங்கொண்டுஇருந்த தோன்றல்ஆரணம் தொடராப் பூரண புராணநாரணன் அறியாக் காரணக் கடவுள் …10சோதிச் சுடரொளி ஆதித் தனிப்பொருள்ஏக நாயக யோக நாயகயானொன்று உணர்த்துவது உளதே யான் முன்நனந்தலை உலகத்துஅனந்த யோனியில்பிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழன்றுழித் …15தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்துயாயுறு துயரமும் யானுறு துயரமும்இறக்கும் பொழுதின் அறப்பெரும் துன்பமும்நீயலது அறிகுநர் யாரே அதனால்யான் இனிப் பிறத்தல் ஆற்றேன் அஃதான்று …20உற்பவம் துடைத்தல் நிற்பிடித்து அல்லதுபிறிதொரு நெறியின் இல்லை அந்நெறிக்குவேண்டலும் வெறுத்தலும் ஆண்டொன்றிற் படராஉள்ளமொன்று உடைமைவேண்டும் அஃதன்றிஐம்புலன் ஏவல் ஆணை வழி நின்று …25தானலது ஒன்றைத் தானென நினையும்இது எனதுள்ளம் ஆதலின் இது கொடுநின்னை நினைப்பது எங்ஙனம் முன்னம்கற்புணையாகக் கடல் நீர் நீந்தினர்எற்பிறர் உளரோ இறைவ கற்பம் …30கடத்தல் யான் பெறவும் வேண்டும் கடத்தற்குநினைத்தல் யான் பெறவும் வேண்டும் நினைத்தற்குநெஞ்சு நெறி நிற்கவும் வேண்டும் நஞ்சு பொதிஉரை எயிற்று உரகம் பூண்டகறைகெழு மிடற்று எம் கண்ணுதலோயே. …35
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கண்ணென்றும் நந்தமக்கோர் காப்பென்றும் கற்றிருக்கும்எண்ணென்றும் மூல எழுத்தென்றும் - ஒண்ணைமருதப்பா என்றும் உனை வாழ்த்தாரேல் மற்றும்கருதஅப்பால் உண்டோ கதி.
சொற்பிரிப்பு
கண்ணென்றும் நந்தமக்கோர் காப்பென்றும் கற்றிருக்கும்எண்ணென்றும் மூல எழுத்தென்றும் – ஒண்ணைமருத அப்பா என்றும் உனை வாழ்த்தாரேல் மற்றும்கருத அப்பால் உண்டோ கதி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கதியா வதுபிறி தியாதொன்றும் இல்லை களேவரத்தின்பொதியா வதுசுமந் தால்விழப் போமிது போனபின்னர்விதியாம் எனச்சிலர் நோவதல் லால்இதை வேண்டுநர்யார்மதியா வதுமரு தன்கழ லேசென்று வாழ்த்துவதே.
சொற்பிரிப்பு
கதியாவது பிறிதி யாதொன்றும் இல்லை களேவரத்தின்பொதியாவது சுமந்தால் விழப் போமிது போன பின்னர்விதியாம் எனச்சிலர் நோவது அல்லால் இதை வேண்டுநர் யார்மதியாவது மருதன் கழலே சென்று வாழ்த்துவதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க் குதவாதுதன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்காதுஉண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகிஅவியடு நர்க்குச் சுவைபகர்ந் தேவிஆரா உண்டி அயின்றன ராகித் ....(5)தூராக் குழியைத் தூர்த்துப் பாராவிழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும்தன்னிற் சிறந்த நன்மூ தாளரைக்கூஉய்முன் னின்றுதன்ஏவல் கேட்கும்சிறாஅர்த் தொகுதியின் உறாஅப் பேசியும் ......(10)பொய்யொடு புன்மைதன் புல்லர்க்குப் புகன்றும்மெய்யும் மானமும் மேன்மையும் ஒரீஇத்தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்தநன்மனைக் கிழத்தி யாகிய அந்நிலைச்சாவுழிச் சாஅந் தகைமையள் ஆயினும் ......(15)மேவுழி மேவல் செல்லாது காவலொடுகொண்டோள் ஒருத்தி உண்டிவேட் டிருப்பஎள்ளுக் கெண்ணெய் போலத் தள்ளாதுபொருளின் அளவைக்குப் போகம்விற் றுண்ணும்அருளில் மடந்தையர் ஆகந் தோய்ந்தும் .........(20)ஆற்றல்செல் லாது வேற்றோர் மனைவயின்கற்புடை மடந்தையர் பொற்புநனி வேட்டுப்பிழைவழி பாராது நுழைவழி நோக்கியும்நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம்விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியின் ........(25)அகமலர்ந் தீவார் போல முகமலர்ந்துஇனிது மொழிந்தாங் குதவுதல் இன்றிநாளும் நாளும் நாள்பல குறித்தவர்தாளின் ஆற்றலும் தவிர்த்துக் கேள்இகழ்ந்துஇகமும் பரமும் இல்லை என்று .......(30)பயமின் றொழுகிப் பட்டிமை பயிற்றிமின்னின் அனையதன் செல்வத்தை விரும்பித்தன்னையும் ஒருவ ராக உன்னும்ஏனையோர் வாழும் வாழ்க்கையும் நனைமலர்ந்துயோசனை கமழும் உற்பல வாவியிற் .........(35)பாசடைப் பரப்பிற் பால்நிற அன்னம்பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள்போர்த்தொழில் புரியும் பொருகா விரியும்மருதமும் சூழ்ந்த மருத வாணசுருதியும் தொடராச் சுருதி நாயக .........(40)பத்தருக் கெய்ப்பினில் வைப்பென உதவும்முத்தித் தாள மூவா முதல்வநின்திருவடி பிடித்து வெருவரல் விட்டுமக்களும் மனைவியும் ஒக்கலும் திருவும்பொருளென நினையா துன்அரு ளினைநினைந்து .......(45)இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும்வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச்சின்னச் சீரை துன்னல் கோவணம்அறுதற் கீளொடு பெறுவது புனைந்துசிதவல் ஓடொன் றுதவுழி எடுத்தாங்கு ....(50)இடுவோர் உளரெனின் நிலையினின் றயின்றுபடுதரைப் பாயலிற் பள்ளி மேவிஓவாத் தகவெனும் அரிவையைத் தழீஇமகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப்பார்க்கும்நின் .......(55)செல்வக் கடவுள் தொண்டர் வாழ்வும்பற்றிப் பார்க்கின் உற்ற நாயேற்குக்குளப்படி நீரும் அளப்பருந் தன்மைப்பிரளய சலதியும் இருவகைப் பொருளும்ஒப்பினும் ஒவ்வாத் துப்பிற் றாதலின் ......(60)நின்சீர் அடியார் தம்சீர் அடியார்க்குஅடிமை பூண்டு நெடுநாட் பழகிமுடலை யாக்கையொடு புடைபட்டு ஒழுகிஅவர்காற்றலை ஏவல்என் நாய்த்தலை ஏற்றுக்கண்டது காணின் அல்லதொன் .......(65)றுண்டோ மற்றெனக் குள்ளது பிறிதே
சொற்பிரிப்பு
வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க்கு உதவாதுதன்னுயிர்க்கு இரங்கி மன்னுயிர்க்கு இரங்காதுஉண்டிப் பொருட்டால் கண்டன வெஃகிஅவியடுநர்க்குச் சுவை பகர்ந்து ஏவிஆரா உண்டி அயின்றனர் ஆகித் …5தூராக் குழியைத் தூர்த்துப் பாராவிழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும்தன்னிற் சிறந்த நன் மூதாளரைக்கூஉய்முன் நின்று தன் ஏவல் கேட்கும்சிறாஅர்த் தொகுதியின் உறாஅப் பேசியும் …10பொய்யொடு புன்மை தன்புல்லர்க்குப் புகன்றும்மெய்யும் மானமும் மேன்மையும் ஒரீஇத்தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்தநன்மனைக் கிழத்தி யாகிய அந்நிலைச்சாவுழிச் சாஅந் தகைமையள் ஆயினும் …15மேவுழி மேவல் செல்லாது காவலொடுகொண்டோள் ஒருத்தி உண்டி வேட்டிருப்பஎள்ளுக்கு எண்ணெய் போலத் தள்ளாதுபொருளின் அளவைக்குப் போகம் விற்று உண்ணும்அருளில் மடந்தையர் ஆகம் தோய்ந்தும் …20ஆற்றல் செல்லாது வேற்றோர் மனைவயின்கற்புடை மடந்தையர் பொற்பு நனி வேட்டுப்பிழைவழி பாராது நுழைவழி நோக்கியும்நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம்விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியின் …25அகமலர்ந்து ஈவார் போல முகமலர்ந்துஇனிது மொழிந்தாங்கு உதவுதல் இன்றிநாளும் நாளும் நாள் பல குறித்தவர்தாளின் ஆற்றலும் தவிர்த்துக் கேள் இகழ்ந்துஇகமும் பரமும் இல்லை என்று …30பயமின்று ஒழுகிப் பட்டிமை பயிற்றிமின்னின் அனைய தன் செல்வத்தை விரும்பித்தன்னையும் ஒருவர் ஆக உன்னும்ஏனையோர் வாழும் வாழ்க்கையும் நனைமலர்ந்துயோசனை கமழும் உற்பல வாவியில் …35பாசடைப் பரப்பிற் பால்நிற அன்னம்பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள்போர்த்தொழில் புரியும் பொருகா விரியும்மருதமும் சூழ்ந்த மருத வாணசுருதியும் தொடராச் சுருதி நாயக …40பத்தருக்கு எய்ப்பினில் வைப்பென உதவும்முத்தித் தாள மூவா முதல்வ நின்திருவடி பிடித்து வெருவரல் விட்டுமக்களும் மனைவியும் ஒக்கலும் திருவும்பொருளென நினையாது உன் அருளினை நினைந்து …45இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும்வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச்சின்னச் சீரை துன்னல் கோவணம்அறுதற் கீளொடு பெறுவது புனைந்துசிதவல் ஓடொன்று உதவுழி எடுத்தாங்கு …50இடுவோர் உளரெனின் நிலையினின்று அயின்றுபடுதரைப் பாயலிற் பள்ளி மேவிஓவாத் தகவெனும் அரிவையைத் தழீஇமகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப்பார்க்கும் நின் …55செல்வக் கடவுள் தொண்டர் வாழ்வும்பற்றிப் பார்க்கின் உற்ற நாயேற்குக்குளப்படி நீரும் அளப்பரும் தன்மைப்பிரளய சலதியும் இருவகைப் பொருளும்ஒப்பினும் ஒவ்வாத் துப்பிற்று ஆதலின் …60நின் சீர் அடியார் தம் சீர் அடியார்க்குஅடிமை பூண்டு நெடுநாள் பழகிமுடலை யாக்கையொடு புடைபட்டு ஒழுகி அவர்கால் தலை ஏவல் என் நாய்த்தலை ஏற்றுக்கண்டது காணின் அல்லது ஒன்றுஉண்டோ மற்றெனக்கு உள்ளது பிறிதே. …66
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பிறிந்தேன் நரகம் பிறவாத வண்ணம்அறிந்தேன் அநங்கவேள் அம்பிற் - செறிந்தபொருதவட்ட வில்பிழைத்துப் போந்தேன் புராணன்மருதவட்டந் தன்னுளே வந்து.
சொற்பிரிப்பு
பிறிந்தேன் நரகம் பிறவாத வண்ணம்அறிந்தேன் அநங்கவேள் அம்பில் – செறிந்தபொருதவட்ட வில் பிழைத்துப் போந்தேன் புராணன்மருதவட்டம் தன்னுளே வந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வந்தி கண்டாய்அடி யாரைக்கண் டால்மற வாதுநெஞ்சேசிந்திகண் டாய்அரன் செம்பொற் கழல்திரு மாமருதைச்சந்திகண் டாயில்லை யாயின் நமன்தமர் தாங்கொடுபோய்உந்திகண் டாய்நிர யத்துன்னை வீழ்த்தி உழக்குவரே.
சொற்பிரிப்பு
வந்திகண்டாய் அடியாரைக் கண்டால் மறவாது நெஞ்சேசிந்திகண்டாய் அரன் செம்பொன் கழல் திருமாமருதைச்சந்திகண்டாய் இல்லையாயில் நமன் தமர் தாங்கொடுபோய்உந்திகண்டாய் நிரயத்து உன்னை வீழ்த்தி உழக்குவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

உழப்பின் வாரா உறுதிகள் உளவோகழப்பின் வாராக் கையற வுளவோ அதனால்நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையைவேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்துஅன்பென் பாத்தி கோலி முன்புற ......(5)மெய்யெனும் எருவை விரித்தாங் கையமில்பத்தித் தனிவித் திட்டு நித்தலும்ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி நேர்நின்றுதடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும்பட்டி அஞ்சினுக் கஞ்சியுட் சென்று .....(10)சாந்த வேலி கோலி வாய்ந்தபின்ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக்கருணை இளந்தளிர் காட்ட அருகாக்காமக் குரோதக் களையறக் களைந்துசேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி ....(15)மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்ந்திட் டம்மெனக்கண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து புண்ணியஅஞ்செழுத் தருங்காய் தோன்றி நஞ்சுபொதிகாள கண்டமும் கண்ணொரு மூன்றும்தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும் ......(20)பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசிஅறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்க்காணினும் கேட்பினும் கருதினுங் களிதரும்சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனிபையப் பையப் பழுத்துக் கைவர ....(25)எம்ம னோர்கள் இனிதினிது அருந்திச்செம்மாந் திருப்பச் சிலர்இதின் வாராதுமனமெனும் புனத்தை வறும்பா ழாக்கிக்காமக் காடு மூடித் தீமைசெய்ஐம்புல வேடர் ஆறலைத் தொழுக .....(30)இன்பப் பேய்த்தேர் எட்டா தோடக்கல்லா உணர்வெனும் புல்வாய் அலமரஇச்சைவித் துகுத்துழி யானெனப் பெயரியநச்சு மாமரம் நனிமிக முளைத்துப்பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும் ...(35)பாவப் பல்தழை பரப்பிப் பூவெனக்கொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்துதுன்பப் பல்காய் தூக்கிப் பின்புமரணம் பழுத்து நரகிடை வீழ்ந்துதமக்கும் பிறர்க்கும் உதவாது (40)இமைப்பிற் கழியும் இயற்கையோர் உடைத்தே.
சொற்பிரிப்பு
உழப்பின் வாரா உறுதிகள் உளவோகழப்பின் வாராக் கையற வுளவோ, அதனால்நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையைவேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்துஅன்பென் பாத்தி கோலி முன்புற …5மெய்யெனும் எருவை விரித்து ஆங்கு ஐயமில்பத்தித் தனி வித்திட்டு நித்தலும்ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி நேர்நின்றுதடுக்குநர்க்கு அடங்காது இடுக்கண் செய்யும்பட்டி அஞ்சினுக்கு அஞ்சி உள் சென்று …10சாந்த வேலி கோலி வாய்ந்தபின்ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக்கருணை இளந்தளிர் காட்ட அருகாக்காமக் குரோதக் களையறக் களைந்துசேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி …15மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்ந்திட்டு அம்மெனக்கண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து, புண்ணியஅஞ்செழுத்து அருங்காய் தோன்றி நஞ்சுபொதிகாள கண்டமும் கண்ணொரு மூன்றும்தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும் …20பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசிஅறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்க்காணினும் கேட்பினும் கருதினும் களிதரும்சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனிபையப் பையப் பழுத்துக் கைவர …25எம்மனோர்கள் இனிதின் அருந்திச்செம்மாந்து இருப்பச் சிலர் இதின் வாராதுமனமெனும் புனத்தை வறும் பாழாக்கிக்காமக் காடு மூடித் தீமைசெய்ஐம்புல வேடர் ஆறலைத்து ஒழுக …30இன்பப் பேய்த்தேர் எட்டாது ஓடக்கல்லா உணர்வெனும் புல்வாய் அலமரஇச்சைவித்து குத்துழி யானெனப் பெயரியநச்சு மாமரம் நனிமிக முளைத்துப்பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும் …35பாவப் பல்தழை பரப்பிப் பூவெனக்கொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்துதுன்பப் பல்காய் தூக்கிப் பின்புமரணம் பழுத்து நரகிடை வீழ்ந்துதமக்கும் பிறர்க்கும் உதவாதுஇமைப்பிற் கழியும் இயற்கையோர் உடைத்தே. …41
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

உடைமணியின் ஓசைக் கொதுங்கி அரவம்படமொடுங்கப் பையவே சென்றங் -கிடைமருதர்ஐயம் புகுவ தணியிழையார் மேல்அநங்கன்கையம் புகவேண்டிக் காண்.
சொற்பிரிப்பு
உடைமணியின் ஓசைக்கு ஒதுங்கி அரவம்படமொடுங்கப் பையவே சென்றங்கு – இடைமருதர்ஐயம் புகுவது அணியிழையார் மேல் அநங்கன்கை அம்பு உக வேண்டிக் காண்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

காணீர் கதியொன்றும் கல்லீர் எழுத்தஞ்சும் வல்லவண்ணம்பேணீர் திருப்பணி பேசீர் அவன்புகழ் ஆசைப்பட்டுப்பூணீர் உருத்திர சாதனம் நீறெங்கும் பூசுகிலீர்வீணீர் எளிதோ மருதப் பிரான்கழல் மேவுதற்கே.
சொற்பிரிப்பு
காணீர் கதியொன்றும் கல்லீர் எழுத்து அஞ்சும் வல்லவண்ணம்பேணீர் திருப்பணி பேசீர் அவன் புகழ் ஆசைப்பட்டுப்பூணீர் உருத்திர சாதனம் நீறு எங்கும் பூசுகிலீர்வீணீர் எளிதோ மருதப் பிரான் கழல் மேவுதற்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர்பாவிய தோலின் பரப்போ தோலிடைப்புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடைஊறும் உதிரப் புனலோ கூறுசெய்துஇடையிடை நிற்கும் எலும்போ எலும்பிடை ......(5)முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்துஉள்ளிடை ஒழுகும் வழும்போ மெள்ளநின்றுஊரும் புழுவின் ஒழுங்கோ நீரிடைவைத்த மலத்தின் குவையோ வைத்துக்கட்டிய நரம்பின் கயிறோ உடம்பிற்குள் .....(10)பிரியா தொறுக்கும் பிணியோ தெரியாதுஇன்னது யானென் றறியேன் என்னைஏதினுந் தேடினன் யாதினுங் காணேன் முன்னம்வரைத்தனி வில்லாற் புரத்தை அழல் ஊட்டிக்கண்படை யாகக் காமனை ஒருநாள் .......(15)நுண்பொடி யாக நோக்கி அண்டத்துவீயா அமரர் வீயவந் தெழுந்ததீவாய் நஞ்சைத் திருவமு தாக்கிஇருவர் தேடி வெருவர நிமிர்ந்துபாலனுக் காகக் காலனைக் காய்ந்து ......(20)சந்தன சரள சண்பக வகுளநந்தன வனத்திடை ஞாயிறு வழங்காதுநவமணி முகிழ்த்த புதுவெயில் எறிப்பஎண்ணருங் கோடி இருடிகணங் கட்குப்புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த ...(25)திருவிடை மருத பொருவிடைப் பாகமங்கை பங்க கங்கை நாயகநின்தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்மாயப் படலம் கீறித் தூயஞான நாட்டம் பெற்றபின் யானும் ........(30)நின்பெருந் தன்மையும் கண்டேன் காண்டலும்என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன்நின்னிலை அனைத்தையும் கண்டேன் என்னேநின்னைக் காணா மாந்தர்தன்னையும் காணாத் தன்மை யோரே.
சொற்பிரிப்பு
மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர்பாவிய தோலின் பரப்போ தோலிடைப்புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடைஊறும் உதிரப் புனலோ கூறுசெய்துஇடையிடை நிற்கும் எலும்போ எலும்பிடை …5முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்துஉள்ளிடை ஒழுகும் வழும்போ மெள்ள நின்றுஊரும் புழுவின் ஒழுங்கோ நீரிடைவைத்த மலத்தின் குவையோ வைத்துக்கட்டிய நரம்பின் கயிறோ உடம்பிற்குள் …10பிரியாது ஒறுக்கும் பிணியோ தெரியாதுஇன்னது யானென்று அறியேன் என்னைஏதினும் தேடினன் யாதினும் காணேன் முன்னம்வரைத்தனி வில்லால் புரத்தை அழல் ஊட்டிக்கண் படையாகக் காமனை ஒருநாள் …15நுண்பொடியாக நோக்கி அண்டத்துவீயா அமரர் வீய வந்து எழுந்ததீவாய் நஞ்சைத் திருவமுது ஆக்கிஇருவர் தேடி வெருவர நிமிர்ந்துபாலனுக்காகக் காலனைக் காய்ந்து …20சந்தன சரள சண்பக வகுளநந்தன வனத்திடை ஞாயிறு வழங்காதுநவமணி முகிழ்த்த புதுவெயில் எறிப்பஎண்ணரும் கோடி இருடி கணங்கட்குப்புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த …25திருவிடை மருத பொருவிடைப் பாகமங்கை பங்க கங்கை நாயக நின்தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்மாயப் படலம் கீறித் தூயஞான நாட்டம் பெற்றபின் யானும் …30நின்பெருந் தன்மையும் கண்டேன் காண்டலும்என்னையும் கண்டேன் பிறரையும் கண்டேன்நின்னிலை அனைத்தையும் கண்டேன் என்னேநின்னைக் காணா மாந்தர்தன்னையும் காணாத் தன்மையோரே. …35
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

ஓராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும்நேராதே நீரும் நிரப்பாதே - யாராயோஎண்ணுவார் உள்ளத் திடைமருதர் பொற்பாதம்நண்ணுவாம் என்னுமது நாம்.
சொற்பிரிப்பு
ஓராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும்நேராதே நீரும் நிரப்பாதே – யாராயோஎண்ணுவார் உள்ளத்து இடைமருதர் பொற்பாதம்நண்ணுவாம் என்னுமது நாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

நாமே இடையுள்ள வாறறி வாம்இனி நாங்கள்சொல்லலாமே மருதன் மருத வனத்தன்னம் அன்னவரைப்பூமேல் அணிந்து பிழைக்கச் செய் தார்ஒரு பொட்டுமிட்டார்தாமே தளர்பவ ரைப்பாரம் ஏற்றுதல் தக்கதன்றே.
சொற்பிரிப்பு
நாமே இடையுள்ளவாறு அறிவாம் இனி நாங்கள் சொல்லல்ஆமே மருதன் மருத வனத்து அன்னம் அன்னவரைப்பூமேல் அணிந்து பிழைக்கச் செய்தார் ஒரு பொட்டுமிட்டார்தாமே தளர்பவரைப் பாரம் ஏற்றுதல் தக்கதன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

அன்றினர் புரங்கள் அழலிடை அவியக்குன்றுவளைத் தெய்த குன்றாக் கொற்றத்துநுண்பொடி அணிந்த எண்தோள் செல்வகயிலைநடந் தனைய உயர்நிலை நோன்தாள்பிறைசெறிந் தன்ன இருகோட் டொருதிமில் .....(5)பால்நிறச் செங்கண் மால்விடைப் பாகசிமையச் செங்கோட் டிமையச் செல்வன்மணியெனப் பெற்ற அணியியல் அன்னம்வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளைகுயிலெனப் பேசும் மயிலிளம் பேடை ....(10)கதிரொளி நீலம் கமலத்து மலர்ந்தனமதரரி நெடுங்கண் மானின் கன்றுவருமுலை தாங்கும் திருமார்பு வல்லிவையம் ஏழும் பன்முறை ஈன்றஐய திருவயிற் றம்மைப் பிராட்டி ...(15)மறப்பருஞ் செய்கை அறப்பெருஞ் செல்விஎமையா ளுடைய உமையாள் நங்கைகடவுட் கற்பின் மடவரல் கொழுநபவள மால்வரைப் பணைக்கைபோந் தனையதழைசெவி எண்தோள் தலைவன் தந்தை ...(20)பூவலர் குடுமிச் சேவலம் பதாகைமலைதுளை படுத்த கொலைகெழு கூர்வேல்அமரர்த் தாங்கும் குமரன் தாதைபொருதிடம் பொன்னி புண்ணியம் புரக்கும்மருதிடங் கொண்ட மருத வாண ...(25)நின்னது குற்றம் உளதோ நின்னினைந்துஎண்ணருங் கோடி இடர்ப்பகை கடந்துகண்ணுறு சீற்றத்துக் காலனை வதையாஇறப்பையும் பிறப்பையும் இகந்து சிறப்பொடுதேவர் ஆவின் கன்றெனத் திரியாப் ...(30)பாவிகள் தமதே பாவம் யாதெனின்முறியாப் புழுக்கல் முப்பழங் கலந்தஅறுசுவை அடிசில் அட்டினி திருப்பப்புசியா தொருவன் பசியால் வருந்துதல்அயினியின் குற்றம் அன்று வெயிலின்வைத்து ...(35)ஆற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்பமடாஅ ஒருவன் விடாஅ வேட்கைதெண்ணீர்க் குற்றம் அன்று கண்ணகன்றுதேந்துளி சிதறிப் பூந்துணர் துறுமிவாலுகங் கிடந்த சோலை கிடப்ப ...(40)வெள்ளிடை வெயிலிற் புள்ளிவெயர் பொடிப்பஅடிபெயர்த் திடுவான் ஒருவன்நெடிது வருந்துதல் நிழல்தீங் கன்றே.
சொற்பிரிப்பு
அன்றினர் புரங்கள் அழலிடை அவியக்குன்றுவளைத்து எய்த குன்றாக் கொற்றத்துநுண்பொடி அணிந்த எண்தோள் செல்வகயிலை நடந்தனைய உயர்நிலை நோன்தாள்பிறைசெறிந்து அன்ன இருகோட்டு ஒருதிமில் …5பால்நிறச் செங்கண் மால்விடைப் பாகசிமையச் செங்கோட்டு இமையச் செல்வன்மணியெனப் பெற்ற அணியியல் அன்னம்வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளைகுயிலெனப் பேசும் மயிலிளம் பேடை …10கதிரொளி நீலம் கமலத்து மலர்ந்தனமதரரி நெடுங்கண் மானின் கன்றுவருமுலை தாங்கும் திருமார்பு வல்லிவையம் ஏழும் பன்முறை ஈன்றஐய திருவயிற்று அம்மைப் பிராட்டி …15மறப்பரும் செய்கை அறப்பெரும் செல்விஎமை ஆளுடைய உமையாள் நங்கைகடவுள் கற்பின் மடவரல் கொழுநபவள மால்வரைப் பணைக்கை போந்தனையதழைசெவி எண்தோள் தலைவன் தந்தை …20பூவலர் குடுமிச் சேவலம் பதாகைமலைதுளை படுத்த கொலைகெழு கூர்வேல்அமரர்த் தாங்கும் குமரன் தாதைபொருதிடம் பொன்னி புண்ணியம் புரக்கும்மருதுஇடம் கொண்ட மருதவாண …25நின்னது குற்றம் உளதோ நின் நினைந்துஎண்ணரும் கோடி இடர்ப்பகை கடந்துகண்ணுறு சீற்றத்துக் காலனை வதையாஇறப்பையும் பிறப்பையும் இகந்து சிறப்பொடுதேவர் ஆவின் கன்றெனத் திரியாப் …30பாவிகள் தமதே பாவம் யாதெனின்முறியாப் புழுக்கல் முப்பழம் கலந்தஅறுசுவை அடிசில் அட்டினிது இருப்பப்புசியாது ஒருவன் பசியால் வருந்துதல்அயினியின் குற்றம் அன்று வெயிலின் வைத்து …35ஆற்றிய தெண்ணீர் நாற்றமிட்டு இருப்பமடாஅ ஒருவன் விடாஅ வேட்கைதெண்ணீர்க் குற்றம் அன்று கண் அகன்றுதேன்துளி சிதறிப் பூம் துணர் துறுமிவாலுகம் கிடந்த சோலை கிடப்ப …40வெள்ளிடை வெயிலில் புள்ளி வெயர் பொடிப்பஅடிபெயர்த்து இடுவான் ஒருவன்நெடிது வருந்துதல் நிழல் தீங்கு அன்றே. …43
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள்ஒன்றொன்றொடு ஒவ்வா துரைத்தாலும் - என்றும்ஒருதனையே நோக்குவார் உள்ளத் திருக்கும்மருதனையே நோக்கி வரும்.
சொற்பிரிப்பு
அன்று என்றும் ஆம் என்றும் ஆறு சமயங்கள்ஒன்று ஒன்றோடு ஒவ்வாது உரைத்தாலும் – என்றும்ஒருதனையே நோக்குவார் உள்ளத்து இருக்கும்மருதனையே நோக்கி வரும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

நோக்கிற்றுக் காமன் உடல்பொடி யாக நுதிவிரலாற்தாக்கிற் றரக்கன் தலைகீழ்ப் படத்தன் சுடர்வடிவாள்ஓக்கிற்றுத் தக்கன் தலைஉருண் டோடச் சலந்தரனைப்போக்கிற் றுயர்பொன்னி சூழ்மரு தாளுடைப் புண்ணியமே.
சொற்பிரிப்பு
நோக்கிற்றுக் காமன் உடல் பொடியாக நுதி விரலால்தாக்கிற்று அரக்கன் தலை கீழ்ப்படத் தன்சுடர் வடிவாள்ஓக்கிற்றுத் தக்கன் தலை உருண்டு ஓடச் சலந்தரனைப்போக்கிற்று உயர் பொன்னி சூழ் மருது ஆள் உடைப் புண்ணியமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக்கண்ணி வேய்ந்த கைலை நாயககாள கண்ட கந்தனைப் பயந்தவாளரி நெடுங்கண் மலையாள் கொழுநபூத நாத பொருவிடைப் பாக ......(5)வேத கீத விண்ணோர் தலைவமுத்தி நாயக மூவா முதல்வபத்தி யாகிப் பணைத்தமெய் யன்பொடுநொச்சி யாயினும் கரந்தை யாயினும்பச்சிலை இட்டுப் பரவுந் தொண்டர் ...(10)கருவிடைப் புகாமல் காத்தருள் புரியும்திருவிடை மருத திரிபு ராந்தகமலர்தலை உலகத்துப் பலபல மாக்கள்மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇமனையும் பிறவுந் துறந்து நினைவரும் ....(15)காடும் மலையும் புக்குக் கோடையில்கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கிஐவகை நெருப்பின் அழுவத்து நின்றுமாரி நாளிலும் வார்பனி நாளிலும்நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும் ...(20)சடையைப் புனைந்தும் தலையைப் பறித்தும்உடையைத் துறந்தும் உண்ணா துழன்றும்காயும் கிழங்கும் காற்றுதிர் சருகும்வாயுவும் நீரும் வந்தன அருந்தியும்களரிலும் கல்லிலும் கண்படை கொண்டும் ......(25)தளர்வுறும் யாக்கையைத் தளர்வித் தாங்கவர்அம்மை முத்தி அடைவதற் காகத்தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்ஈங்கிவை செய்யாது யாங்கள் எல்லாம்பழுதின் றுயர்ந்த எழுநிலை மாடத்தும் ...(30)செழுந்தா துதிர்ந்த நந்தன வனத்தும்தென்றல் இயங்கும் முன்றில் அகத்தும்தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்பூவிரி தரங்க வாரிக் கரையிலும்மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும் ...(35)வேண்டுழி வேண்டுழி ஆண்டாண் டிட்டமருப்பின் இயன்ற வாளரி சுமந்தவிருப்புறு கட்டில் மீமிசைப் படுத்தஐவகை அமளி அணைமேல் பொங்கத்தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப் ...(40)பட்டினுள் பெய்த பதநுண் பஞ்சின்நெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப்பாயல் மீமிசை பரிபுரம் மிழற்றச்சாயல் அன்னத்தின் தளர்நடை பயிற்றிப்பொற்றோ ரணத்தைச் சுற்றிய துகிலென ...(45)அம்மென் குறங்கின் நொம்மென் கலிங்கம்கண்ணும் மனமும் கவற்றப் பண்வரஇரங்குமணி மேகலை மருங்கிற் கிடப்பஆடர வல்குல் அரும்பெறல் நுசுப்புவாட வீங்கிய வனமுலை கதிர்ப்ப ...(50)அணியியல் கமுகை அலங்கரித் ததுபோல்மணியியல் ஆரங் கதிர்விரித் தொளிர்தரமணிவளை தாங்கும் அணிகெழு மென்தோள்வரித்த சாந்தின்மிசை விரித்துமீ திட்டஉத்தரீ யப்பட் டொருபால் ஒளிர்தர ...(55)வள்ளை வாட்டிய ஒள்ளிரு காதொடுபவளத் தருகாத் தரளம் நிரைத்தாங்குஒழுகி நீண்ட குமிழொன்று பதித்துக்காலன் வேலும் காம பாணமும்ஆல காலமும் அனைத்துமிட் டமைத்த ...(60)இரண்டு நாட்டமும் புரண்டுகடை மிளிர்தரமதியென மாசறு வதனம் விளங்கப்புதுவிரை அலங்கல் குழன்மிசைப் பொலியும்அஞ்சொல் மடந்தையர் ஆகந் தோய்ந்தும்சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில் ....(65)அறுசுவை அடிசில் வறிதினி தருந்தாதுஆடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும்வாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும்பூசுவன பூசியும் புனைவன புனைந்தும்தூசின் நல்லன தொடையிற் சேர்த்தியும் .......(70)ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும்மைந்தரும் ஒக்கலும் மகிழ மனமகிழ்ந்துஇவ்வகை இருந்தோம் ஆயினும் அவ்வகைமந்திர எழுத்தைந்தும் வாயிடை மறவாதுசிந்தை நின்வழி செலுத்தலின் அந்த ...(75)முத்தியும் இழந்திலம் முதல்வ அத்திறம்நின்னது பெருமை அன்றோ என்னெனின்வல்லான் ஒருவன் கைம்முயன்று எறியினும்மாட்டா ஒருவன் வாளா எறியினும்நிலத்தின் வழாஅக் கல்லேபோல் ...(80)நலத்தின் வழார்நின் நாமம்நவின் றோரே.
சொற்பிரிப்பு
புண்ணிய புராதன புதுப்பூங்கொன்றைக்கண்ணி வேய்ந்த கைலை நாயககாள கண்ட கந்தனைப் பயந்தவாளரி நெடுங்கண் மலையாள் கொழுநபூத நாத பொருவிடைப் பாக …5வேத கீத விண்ணோர் தலைவமுத்தி நாயக மூவா முதல்வபத்தியாகிப் பணைத்த மெய் அன்பொடுநொச்சி ஆயினும் கரந்தை ஆயினும்பச்சிலை இட்டுப் பரவும் தொண்டர் …10கருவிடைப் புகாமல் காத்தருள் புரியும்திருவிடை மருத திரிபுராந்தகமலர்தலை உலகத்துப் பலபல மாக்கள்மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇமனையும் பிறவும் துறந்து நினைவரும் …15காடும் மலையும் புக்குக் கோடையில்கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கிஐவகை நெருப்பின்அழுவத்து நின்றுமாரி நாளிலும் வார்பனி நாளிலும்நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும் …20சடையைப் புனைந்தும் தலையைப் பறித்தும்உடையைத் துறந்தும் உண்ணாது உழன்றும்காயும் கிழங்கும் காற்று உதிர் சருகும்வாயுவும் நீரும் வந்தன அருந்தியும்களரிலும் கல்லிலும் கண்படை கொண்டும் …25தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்து ஆங்கு அவர்அம்மை முத்தி அடைவதற்கு ஆகத்தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்ஈங்கு இவை செய்யாது யாங்கள் எல்லாம்பழுதின்று உயர்ந்த எழுநிலை மாடத்தும் …30செழுந்தாது உதிர்ந்த நந்தன வனத்தும்தென்றல் இயங்கும் முன்றில் அகத்தும்தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்பூவிரி தரங்க வாரிக் கரையிலும்மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும் …35வேண்டுழி வேண்டுழி ஆண்டாண்டு இட்டமருப்பின் இயன்ற வாளரி சுமந்தவிருப்புறு கட்டில் மீமிசைப் படுத்தஐவகை அமளி அணைமேல் பொங்கத்தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப் …40பட்டினுள் பெய்த பத நுண் பஞ்சின்நெட்டணை அருகாக் கொட்டைகள் பரப்பிப்பாயல் மீமிசை பரிபுரம் மிழற்றச்சாயல் அன்னத்தின் தளர்நடை பயிற்றிப்பொன் தோரணத்தைச் சுற்றிய துகிலென …45அம்மென் குறங்கின் நொம்மென் கலிங்கம்கண்ணும் மனமும் கவற்றப் பண்வரஇரங்கு மணிமேகலை மருங்கில் கிடப்பஆடரவு அல்குல் அரும்பெறல் நுசுப்புவாட வீங்கிய வனமுலை கதிர்ப்ப …50அணியியல் கமுகை அலங்கரித்தது போல்மணியியல் ஆரம் கதிர் விரித்து ஒளிர்தரமணிவளை தாங்கும் அணிகெழு மென்தோள்வரித்த சாந்தின் மிசை விரித்து மீதிட்டஉத்தரீயப் பட்டு ஒருபால் ஒளிர்தர …55வள்ளை வாட்டிய ஒள்ளிரு காதொடுபவளத் தருகாத் தரளம் நிரைத்தாங்குஒழுகி நீண்ட குமிழொன்று பதித்துக்காலன் வேலும் காம பாணமும்ஆல காலமும் அனைத்தும் இட்டு அமைத்த …60இரண்டு நாட்டமும் புரண்டு கடை மிளிர்தரமதியென மாசறு வதனம் விளங்கப்புதுவிரை அலங்கல் குழன்மிசைப் பொலியும்அஞ்சொல் மடந்தையர் ஆகம் தோய்ந்தும்சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில் …65அறுசுவை அடிசில் வறிது இனிது அருந்தாதுஆடினர்க்கு என்றும் பாடினர்க்கு என்றும்வாடினர்க்கு என்றும் வரையாது கொடுத்தும்பூசுவன பூசியும் புனைவன புனைந்தும்தூசின் நல்லன தொடையில் சேர்த்தியும் …70ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும்மைந்தரும் ஒக்கலும் மகிழ மனமகிழ்ந்துஇவ்வகை இருந்தோம் ஆயினும் அவ்வகைமந்திர எழுத்து ஐந்தும் வாயிடை மறவாதுசிந்தை நின்வழி செலுத்தலின் அந்த …75முத்தியும் இழந்திலம் முதல்வ அத்திறம்நின்னது பெருமை அன்றோ என் எனின்வல்லான் ஒருவன் கைம்முயன்று எறியினும்மாட்டா ஒருவன் வாளா எறியினும்நிலத்தின் வழாஅக் கல்லே போல் நலத்தின் வழார் நின்நாமம் நவின்றோரே. …81
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

நாமம்நவிற் றாய்மனனே நாரியர்கள் தோள்தோய்ந்துகாமம் நவிற்றிக் கழிந்தொழியல் - ஆமோபொருதவனத் தானைஉரி போர்த்தருளும் எங்கள்மருதவனத் தானை வளைந்து.
சொற்பிரிப்பு
நாமம் நவிற்றாய் மனனே நாரியர்கள் தோள்தோய்ந்துகாமம் நவிற்றிக் கழிந்தொழியல் – ஆமோபொருத வனத்து ஆனை உரி போர்த்து அருளும் எங்கள்மருத வனத்தானை வளைந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

வளையார் பசியின் வருந்தார் பிணியின் மதனன்அம்புக்கிளையார் தனங்கண் டிரங்கிநில் லார்இப் பிறப்பினில்வந்தளையார் நரகினுக் கென்கட வார்பொன் அலர்ந்தகொன்றைத்தளையார் இடைமரு தன்னடி யார்அடி சார்ந்தவரே.
சொற்பிரிப்பு
வளையார் பசியின் வருந்தார் பிணியின் மதனன் அம்புக்குஇளையார் தனங்கண்டு இரங்கி நில்லார் இப்பிறப்பினில் வந்துஅளையார் நரகினுக்கு என் கடவார் பொன் அலர்ந்த கொன்றைத்தளையார் இடைமருதன் அடியார் அடி சார்ந்தவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

அடிசார்ந் தவர்க்கு முடியா இன்பம்நிறையக் கொடுப்பினும் குறையாச் செல்வமூலமும் நடுவும் முடிவும் இகந்துகாலம் மூன்றையும் கடந்த கடவுள்உளக்கணுக் கல்லா தூன்கணுக் கொளித்துத் ...(5)துளக்கற நிமிர்ந்த சோதித் தனிச்சுடர்எறுப்புத் துளையின் இருசெவிக் கெட்டாதுஉறுப்பினின் றெழுதரும் உள்ளத் தோசைவைத்த நாவின் வழிமறுத் தகத்தேதித்தித் தூறும் தெய்வத் தேறல் ........(10)துண்டத் துளையிற் பண்டை வழியன்றிஅறிவில் நாறும் நறிய நாற்றம்ஏனைய தன்மையும் எய்தா தெவற்றையும்தானே யாகி நின்ற தத்துவதோற்றுவ தெல்லாம் தன்னிடைத் தோற்றித் .....(15)தோற்றம் பிறிதில் தோற்றாச் சுடர்முளைவிரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினும்இருள்விரி கண்டத் தேக நாயகசுருதியும் இருவரும் தொடர்ந்துநின் றலமரமருதிடம் கொண்ட மருதமா ணிக்க ......(20)உமையாள் கொழுந ஒருமூன் றாகியஇமையா நாட்டத் தென்தனி நாயகஅடியேன் உறுகுறை முனியாது கேண்மதிநின்னடி பணியாக் கல்மனக் கயவரொடுநெடுநாட் பழகிய கொடுவினை ஈர்ப்பக் ....(25)கருப்பா சயமெனும் இருட்சிறை அறையில்குடரென் சங்கிலி பூண்டு தொடர்பட்டுக்கூட்டுச்சிறைப் புழுவின் ஈட்டுமலத் தழுந்திஉடனே வருந்தி நெடுநாட் கிடந்துபல்பிணிப் பெயர்பெற் றல்லற் படுத்தும் ..(30)தண்ட லாளர் மிண்டிவந் தலைப்பஉதர நெருப்பிற் பதைபதை பதைத்தும்வாதமத் திகையின் மோதமொத் துண்டும்கிடத்தல் நிற்றல் நடத்தல் செல்லாதுஇடங்குறை வாயிலின் முடங்கி இருந்துழிப் ....(35)பாவப் பகுதியில் இட்டுக் காவற்கொடியோர் ஐவரை ஏவி நெடியஆசைத் தளையில் என்னையும் உடலையும்பாசப் படுத்திப் பையென விட்டபின்யானும் போந்து தீதினுக் குழன்றும் ....(40)பெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வெளவியும்பரியா தொழிந்தும் பல்லுயிர் செகுத்தும்வேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும்பொய்பல கூறியும் புல்லினம் புல்லியும்ஐவரும் கடுப்ப அவாவது கூட்டி ....(45)ஈண்டின கொண்டு மீண்டு வந்துழிஇட்டுழி இடாது பட்டுழிப் படாஅதுஇந்நாள் இடுக்கண் எய்திப் பன்னாள்வாடுபு கிடப்பேன் வீடுநெறி காணேன்நின்னை அடைந்த அடியார் அடியார்க்கு ....(50)என்னையும் அடிமை யாகக் கொண்டேஇட்டபச் சிலைகொண் டொட்டி அறிவித்துஇச்சிறை பிழைப்பித் தினிச்சிறை புகாமல்காத்தருள் செய்ய வேண்டும்தீத்திரண் டன்ன செஞ்சடை யோனே. ...(55)
சொற்பிரிப்பு
அடிசார்ந்தவர்க்கு முடியா இன்பம்நிறையக் கொடுப்பினும் குறையாச் செல்வம்மூலமும் நடுவும் முடிவும் இகந்துகாலம் மூன்றையும் கடந்த கடவுள்உளக்கணுக்கு அல்லாது ஊன்கணுக்கு ஒளித்துத் …5துளக்கற நிமிர்ந்த சோதித் தனிச்சுடர்எறுப்புத் துளையின் இருசெவிக்கு எட்டாதுஉறுப்பினின்று எழுதரும் உள்ளத்து ஓசைவைத்த நாவின் வழிமறுத்து அகத்தேதித்தித்து ஊறும் தெய்வத் தேறல் …10துண்டத் துளையில் பண்டை வழியன்றிஅறிவில் நாறும் நறிய நாற்றம்ஏனைய தன்மையும் எய்தாத எவற்றையும்தானே யாகி நின்ற தத்துவதோற்றவது எல்லாம் தன்னிடைத் தோற்றி …15தோற்றம் பிறிதில் தோற்றாச் சுடர்முளைவிரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினும்இருள்விரி கண்டது ஏக நாயகசுருதியும் இருவரும் தொடர்ந்துநின்று அலமரமருதிடம் கொண்ட மருத மாணிக்க …20உமையாள் கொழுந ஒரு மூன்று ஆகியஇமையா நாட்டத்து என் தனி நாயகஅடியேன் உறுகுறை முனியாது கேண்மதிநின் அடி பணியாக் கல்மனக் கயவரொடுநெடுநாள் பழகிய கொடுவினை ஈர்ப்பக் …25கருப்பாசயம் எனும் இருட்சிறை அறையில்குடர் என் சங்கிலி பூண்டு தொடர்பட்டுக்கூட்டுச்சிறைப் புழுவின் ஈட்டுமலத்து அழுந்திஉடனே வருந்தி நெடுநாள் கிடந்துபல்பிணிப் பெயர்பெற்று அல்லல் படுத்தும் …30தண்ட லாளர் மிண்டிவந்து அலைப்பஉதர நெருப்பில் பதைபதை பதைத்தும்வாதமத்திகையின் மோத மொத்துண்டும்கிடத்தல் நிற்றல் நடத்தல் செல்லாதுஇடங்குறை வாயிலின் முடங்கி இருந்துழிப் …35பாவப் பகுதியில் இட்டுக் காவற்கொடியோர் ஐவரை ஏவி நெடியஆசைத் தளையில் என்னையும் உடலையும்பாசப் படுத்திப் பையென விட்டபின்யானும் போந்து தீனுக்கு உழன்று …40பெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வௌவியும்பரியாது ஒழிந்தும் பல்லுயிர் செகுத்தும்வேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும்பொய்பல கூறியும் ல்லினம் புல்லியும்ஐவரும் கடுப்ப அவாவது கூட்டி …45ஈண்டின கொண்டு மீண்டு வந்துழிஇட்டுழி இடாது பட்டுழிப் படாஅதுஇந்நாள் இடுக்கண் எய்திப் பன்னாள்வாடுபு கிடப்பேன் வீடுநெறி காணேன்நின்னை அடைந்த அடியார் அடியார்க்கு …50என்னையும் அடிமையாகக் கொண்டேஇட்ட பச்சிலை கொண்டு ஒட்டி அறிவித்துஇச்சிறை பிழைப்பித்து இனிச்சிறை புகாமல்காத்தருள் செய்ய வேண்டும்தீத்திரண்டு அன்ன செஞ்சடையோனே. …55
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப்புடைமேல் ஒருத்தி பொலிய - இடையேபோய்ச்சங்கே கலையே மருதற்குத் தான்கொடுப்பதெங்கே இருக்க இவள்.
சொற்பிரிப்பு
சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப்புடைமேல் ஒருத்தி பொலிய – இடையே போய்ச்சங்கே கலையே மருதற்குத் தான் கொடுப்பதுஎங்கே இருக்க இவள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

இருக்கும் மருதினுக் குள்ளிமை யோர்களும் நான்மறையும்நெருக்கும் நெருக்கத்தும் நீளகத் துச்சென்று மீளவொட்டாத்திருக்கும் அறுத்தைவர் தீமையும் தீர்த்துச் செவ் வேமனத்தைஒருக்கும் ஒருக்கத்தின் உள்ளே முளைக்கின்ற ஒண்சுடரே.
சொற்பிரிப்பு
இருக்கும் மருதினுக்கு உள் இமை யோர்களும் நான்மறையும்நெருக்கும் நெருக்கத்தும் நீள் அகத்துச் சென்று மீளவொட்டாத்திருக்கும் அறுத்து ஐவர் தீமையும் தீர்த்துச் செவ்வே மனத்தைஒருக்கும் ஒருக்கத்தின் உள்ளே முளைக்கின்ற ஒண்சுடரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

சுடர்விடு சூலப் படையினை என்றும்விடைஉகந் தேறிய விமல என்றும்உண்ணா நஞ்சம் உண்டனை என்றும்கண்ணாற் காமனைக் காய்ந்தனை என்றும்திரிபுரம் எரித்த சேவக என்றும் ...(5)கரியுரி போர்த்த கடவுள் என்றும்உரகம் பூண்ட உரவோய் என்றும்சிரகஞ் செந்தழல் ஏந்தினை என்றும்வலந்தரு காலனை வதைத்தனை என்றும்சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும் ....(10)அயன்சிரம் ஒருநாள் அரிந்தனை என்றும்வியந்தவாள் அரக்கனை மிதித்தனை என்றும்தக்கன் வேள்வி தகர்த்தனை என்றும்உக்கிரப் புலியுரி உடுத்தனை என்றும்ஏனமும் அன்னமும் எட்டா தலமர .....(15)வானம் கீழ்ப்பட வளர்ந்தனை என்றும்செழுநீர் ஞாலம் செகுத்துயிர் உண்ணும்அழல்விழிக் குறளினை அமுக்கினை என்றும்இனையன இனையன எண்ணில் கோடிநினைவருங் கீர்த்தி நின்வயின் புகழ்தல் ......(20)துளக்குறு சிந்தையேன் சொல்லள வாதலின்அளப்பரும் பெருமைநின் அளவில தாயினும்என்றன் வாயிற் புன்மொழி கொண்டுநின்னை நோக்குவன் ஆதலின் என்னைஇடுக்கண் களையா அல்லற் படுத்தாது ......(25)எழுநிலை மாடத்துச் செழுமுகில் உறங்கஅடித்துத் தட்டி எழுப்பவ போலநுண்துகில் பதாகை கொண்டுகொண் டுகைப்பத்துயிலின் நீங்கிப் பயிலும் வீதித்திருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர் .......(30)அருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்தகல்லால் எறிந்த பொல்லாப் புத்தன்நின்நினைந் தெறிந்த அதனால்அன்னவன் தனக்கும் அருள்பிழைத் தின்றே.
சொற்பிரிப்பு
சுடர்விடு சூலப் படையினை என்றும்விடை உகந்து ஏறிய விமல என்றும்உண்ணா நஞ்சம் உண்டனை என்றும்கண்ணால் காமனைக் காய்ந்தனை என்றும்திரிபுரம் எரித்த சேவக என்றும் …5கரி உரி போர்த்த கடவுள் என்றும்உரகம் பூண்ட உரவோய் என்றும்சிரகரம் செந்தழல் ஏந்தினை என்றும்வலந்தரு காலனை வதைத்தனை என்றும்சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும் …10அயன் சிரம் ஒருநாள் அரிந்தனை என்றும்வியந்த வாள் அரக்கனை மிதித்தனை என்றும்தக்கன் வேள்வி தகர்த்தனை என்றும்உக்கிரப் புலி உரி உடுத்தனை என்றும்ஏனமும் அன்னமும் எட்டாது அலமர …15வானம் கீழ்ப்பட வளர்ந்தனை என்றும்செழுநீர் ஞாலம் செகுத்துயிர் உண்ணும்அழல் விழிக் குறளினை அமுக்கினை என்றும்இனையன இனையன எண்ணிலி கோடிநினைவரும் கீர்த்தி நின்வயின் புகழ்தல் …20துளக்குறு சிந்தையேன் சொல்லளவு ஆதலின்அளப்பரும் பெருமை நின் அளவிலது ஆயினும்என் தன் வாயில் புன்மொழி கொண்டுநின்னை நோக்குவன் ஆதலின் என்னைஇடுக்கண் களையா அல்லல் படுத்தாது …25எழுநிலை மாடத்துச் செழுமுகில் உறங்கஅடித்துத் தட்டி எழுப்புவ போலநுண்துகில் பதாகை கொண்டுகொண்டு உகைப்பத்துயிலின் நீங்கிப் பயிலும் வீதித்திருமருது அமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர் …30அருள் சுரந்து அளிக்கும் அற்புதக் கூத்தகல்லால் எறிந்த பொல்லாப் புத்தன்நின் நினைந்து எறிந்த அதனால்அன்னவன் தனக்கும் அருள் பிழைத்தின்றே. …34
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

இன்றிருந்து நாளை இறக்கும் தொழிலுடையபுன்தலைய மாக்கள் புகழ்வரோ - வென்றிமழுவாளுடையான் தெய்வ மருதுடையான் நாயேனைஆளுடையான் செம்பொன் அடி.
சொற்பிரிப்பு
இன்றிருந்து நாளை இறக்கும் தொழிலுடையபுன்தலைய மாக்கள் புகழ்வரோ – வென்றி மழுவாளுடையான் தெய்வ மருதுடையான் நாயேனைஆளுடையான் செம்பொன் அடி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

அடியா யிரந்தொழில் ஆயின ஆயிரம் ஆயிரம்பேர்முடியா யிரம்கண்கள் மூவா யிரம்முற்றும் நீறணிந்ததொடியா யிரங்கொண்ட தோள்இரண் டாயிரம் என்றுநெஞ்சேபடியாய் இராப்பகல் தென்மரு தாளியைப் பற்றிக்கொண்டே.
சொற்பிரிப்பு
அடி ஆயிரம் தொழில் ஆயின ஆயிரம் ஆயிரம் பேர்முடி ஆயிரம் கண்கள் மூவா யிரம் முற்றும் நீறணிந்ததொடி ஆயிரம் கொண்ட தோள் இரண் டாயிரம் என்று நெஞ்சேபடியாய் இராப்பகல் தென்மருது ஆளியைப் பற்றிக்கொண்டே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

கொண்டலின் இருண்ட கண்டத் தெண்தோள்செவ்வான் உருவிற் பையர வார்த்துச்சிறுபிறை கிடந்த நெறிதரு புன்சடைமூவா முதல்வ முக்கட் செல்வதேவ தேவ திருவிடை மருத .....(5)மாசறு சிறப்பின் வானவர் ஆடும்பூசத் தீர்த்தம் புரக்கும் பொன்னிஅயிரா வணத்துறை ஆடும் அப்பகைலாய வாண கெளரி நாயகநின்னருள் சுரந்து பொன்னடி பணிந்து .......(10)பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர்இமையா நெடுங்கண் உமையாள் நங்கையும்மழைக்கட் கடத்துப் புழைக்கைப் பிள்ளையும்அமரர்த் தாங்கும் குமர வேளும்சுரிசங் கேந்திய திருநெடு மாலும் .......(15)வான்முறை படைத்த நான்முகத் தொருவனும்தாருகற் செற்ற வீரக் கன்னியும்நாவின் கிழத்தியும் பூவின் மடந்தையும்பீடுயர் தோற்றத்துக் கோடி உருத்திரரும்ஆனாப் பெருந்திறல் வானோர் தலைவனும் .......(20)செயிர்தீர் நாற்கோட் டயிரா வதமும்வாம்பரி அருக்கர் தாம்பன் னிருவரும்சந்திரன் ஒருவனும் செந்தீக் கடவுளும்நிருதியும் இயமனும் சுருதிகள் நான்கும்வருணனும் வாயுவும் இருநிதிக் கிழவனும் .....(25)எட்டு நாகமும் அட்ட வசுக்களும்மூன்று கோடி ஆன்ற முனிவரும்வசிட்டனும் கபிலனும் அகத்தியன் தானும்தும்புரு நாரதர் என்றிரு திறத்தரும்வித்தகப் பாடல் முத்திறத் தடியரும் ......(30)திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும்அத்தகு செல்வத் தவமதித் தருளியசித்த மார்சிவ வாக்கிய தேவரும்வெள்ளை நீறு மெய்யிற் கண்டுகள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும் ......(35)ஓடும் பல்நரி ஊளைகேட் டரனைப்பாடின என்று படாம்பல அளித்தும்குவளைப் புனலில் தவளை அரற்றஈசன் தன்னை ஏத்தின என்றுகாசும் பொன்னும் கலந்து தூவியும் .....(40)வழிபடும் ஒருவன் மஞ்சனத் தியற்றியசெழுவிதை எள்ளைத் தின்னக் கண்டுபிடித்தலும் அவன்இப் பிறப்புக் கென்னஇடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும்மருத வட்டத் தொருதனிக் கிடந்த ......(45)தலையைக் கண்டு தலையுற வணங்கிஉம்மைப் போல எம்இத் தலையும்கிடத்தல் வேண்டுமென் றடுத்தடுத் திரந்தும்கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்பவாய்த்த தென்றுநாய்க் கட்டம் எடுத்தும் ........(50)காம்பவிழ்த் துதிர்ந்த கனியுருக் கண்டுவேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும்விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்றுபுரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்தபெரிய அன்பின் வரகுண தேவரும் .......(55)இனைய தன்மையர் எண்ணிறந் தோரேஅனையவர் நிற்க யானும் ஒருவன்பத்தி என்பதோர் பாடும் இன்றிச்சுத்த னாயினும் தோன்றாக் கடையேன் நின்னைஇறைஞ்சிலன் ஆயினும் ஏத்திலன் ஆயினும் .....(60)வருந்திலன் ஆயினும் வாழ்த்திலன் ஆயினும்கருதி யிருப்பன் கண்டாய் பெருமநின்னுல கனைத்தும் நன்மை தீமைஆனவை நின்செயல் ஆதலின்நானே அமையும் நலமில் வழிக்கே. ........(65)
சொற்பிரிப்பு
கொண்டலின் இருண்ட கண்டத்து எண்தோள்செவ்வான் உருவில் பையரவு ஆர்த்துச்சிறுபிறை கிடந்த நெறிதரு புன்சடைமூவா முதல்வ முக்கண் செல்வதேவ தேவ திருவிடை மருத …5மாசறு சிறப்பின் வானவர் ஆடும்பூசத் தீர்த்தம் புரக்கும் பொன்னிஅயிராவணத்துறை ஆடும் அப்பகைலாய வாண கௌரி நாயகநின் அருள் சுரந்து பொன்அடி பணிந்து …10பெரும்பதம் பிழையா வரம் பல பெற்றோர்இமையா நெடுங்கண் உமையாள் நங்கையும்மழைக்கட் கடத்துப் புழைக்கைப் பிள்ளையும்அமரர்த் தாங்கும் குமரவேளும்சுரிசங்கு ஏந்திய திருநெடு மாலும் …15வான்முறை படைத்த நான்முகத்து ஒருவனும்தாருகற் செற்ற வீரக் கன்னியும்நாவின் கிழத்தியும் பூவின் மடந்தையும்பீடுயர் தோற்றத்துக் கோடி உருத்திரரும்ஆனாப் பெருந்திறல் வானோர் தலைவனும் …20செயிர்தீர் நால் கோட்டஅயிராவதமும்வாம்பரி அருக்கர் தாம் பன்னிருவரும்சந்திரன் ஒருவனும் செந்தீக் கடவுளும்நிருதியும் இயமனும் சுருதிகள் நான்கும்வருணனும் வாயுவும் இருநிதிக் கிழவனும் …25எட்டு நாகமும் அட்ட வசுக்களும்மூன்று கோடி ஆன்ற முனிவரும்வசிட்டனும் கபிலனும் அகத்தியன் தானும்தும்புரு நாரதர் என்று இரு திறத்தரும்வித்தகப் பாடல் முத்திறத்து அடியரும் …30திருந்திய அன்பில் பெருந்துறைப் பிள்ளையும்அத்தகு செல்வத் தவமதித் தருளியசித்தமார் சிவ வாக்கிய தேவரும்வெள்ளை நீறு மெய்யில் கண்டுகள்ளன் கையில் கட்டு அவிழ்ப்பித்தும் …35ஓடும் பல்நரி ஊளை கேட்டு அரனைப்பாடின என்று படாம் பல அளித்தும்குவளைப் புனலில் தவளை அரற்றஈசன் தன்னை ஏத்தின என்றுகாசும் பொன்னும் கலந்து தூவியும் …40வழிபடும் ஒருவன் மஞ்சனத்து இயற்றியசெழுவிதை எள்ளைத் தின்னக் கண்டுபிடித்தலும் அவன் இப் பிறப்புக்கு என்னஇடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும்மருத வட்டத்து ஒரு தனிக் கிடந்த …45தலையைக் கண்டு தலையுற வணங்கிஉம்மைப் போல எம் இத்தலையும்கிடத்தல் வேண்டுமென்று அடுத்தடுத்து இரந்தும்கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்பவாய்த்தது என்று நாய்க் கட்டம் எடுத்தும் …50காம்பவிழ்த்து உதிர்ந்த கனி உருக் கண்டுவேம்புகட்கு எல்லாம் விதானம் அமைத்தும்விரும்பின கொடுக்கை பரம்பரற்கு என்றுபுரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்தபெரிய அன்பின் வரகுண தேவரும் …55இனைய தன்மையர் எண்ணிறந்தோரேஅனையவர் நிற்க யானும் ஒருவன்பத்தி என்பதோர் பாடும் இன்றிச்சுத்தன் ஆயினும் தோன்றாக் கடையேன் நின்னைஇறைஞ்சிலன் ஆயினும் ஏத்திலன் ஆயினும் …60வருந்திலன் ஆயினும் வாழ்த்திலன் ஆயினும்கருதியிருப்பன் கண்டாய் பெருமநின்னுலகு அனைத்தும் நன்மை தீமைஆனவை நின்செயல் ஆதலின்நானே அமையும் நலமில் வழிக்கே. …65
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்துபழிபிழைத்த பாவங்கள் எல்லாம் - பொழில்சூழ்மருதிடத்தான் என்றொருகால் வாய்கூப்ப வேண்டாகருதிடத்தாம் நில்லா கரந்து.
சொற்பிரிப்பு
வழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்துபழிபிழைத்த பாவங்கள் எல்லாம் – பொழில்சூழ்மருதிடத்தான் என்றொருகால் வாய் கூப்ப வேண்டாகருதிடத்தாம் நில்லா கரந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

கரத்தினில் மாலவன் கண்கொண்டு நின்கழல் போற்றநல்லவரத்தினை ஈயும் மருதவப் பாமதி ஒன்றும் இல்லேன்சிரத்தினு மாயென்றன் சிந்தையு ளாகிவெண் காடனென்னும்தரத்தினு மாயது நின்னடி யாம்தெய்வத் தாமரையே.
சொற்பிரிப்பு
கரத்தினில் மாலவன் கண் கொண்டு நின் கழல் போற்ற நல்லவரத்தினை ஈயும் மருத அப்பா மதி ஒன்றும் இல்லேன்சிரத்தினுமாய் என்தன் சிந்தையுள் ஆகி வெண்காடன் என்னும்தரத்தினும் ஆயது நின் அடியாம் தெய்வத் தாமரையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.