திருமுறை 11 · 11.028 · 30

திருக்கழுமல மும்மணிக் கோவை

அருளியவர்
பட்டினத்துப் பிள்ளையார்
தலம்
சீர்காழி - 12-கழுமலம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

திருவளர் பவளப் பெருவரை மணந்தமரகத வல்லி போல ஒருகூறுஇமையச் செல்வி பிரியாது விளங்கப்பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்தஅலைகதிர்ப் பரிதி ஆயிரந் தொகுத்த ...(5)வரன்முறை திரியாது மலர்மிசை இருந்தெனக்கதிர்விடு நின்முகங் காண்தொறும் காண்தொறும்முதிரா இளமுலை முற்றாக் கொழுந்தின்திருமுகத் தாமரை செவ்வியின் மலரநின்தையல் வாணுதல் தெய்வச் சிறுபிறை ...(10)இளநிலாக் காண்தொறும் ஒளியொடும் புணர்ந்தநின்செவ்வாய்க் குமுதம் செவ்வி செய்யநின்செங்கைக் கமலம் மங்கை வனமுலைஅமிர்த கலசம் அமைவின் ஏந்தமலைமகள் தனாது நயனக் குவளைநின் ....(15)பொலிவினோடு மலர மறையோர்கழுமல நெறிநின்று பொலியநாகர் நாடு மீமிசை மிதந்துமீமிசை உலகங் கீழ்முதல் தாழ்ந்திங்குஒன்றா வந்த குன்றா வெள்ளத்து ....(20)உலகம்மூன் றுக்கும் களைகண் ஆகிமுதலில் காலம் இனிது வீற் றிருந்துழித்தாதையொடு வந்த வேதியச் சிறுவன்தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்தஅன்னா யோவென் றழைப்பமுன் னின்று ....(25)ஞான போனகத் தருள்அட்டிக் குழைத்தஆனாத் திரளை அவன்வயின் அருளஅந்தணன் முனிந்து தந்தார் யாரெனஅவனைக் காட்டுவன் அப்ப வானார்தோஒ டுடைய செவியன் என்றும் ...(30)பீஇ டுடைய பெம்மான் என்றும்கையில் சுட்டிக் காட்டஐயநீ வெளிப்பட் டருளினை ஆங்கே.
சொற்பிரிப்பு
திருவளர் பவளப் பெருவரை மணந்தமரகத வல்லி போல ஒருகூறுஇமையச் செல்வி பிரியாது விளங்கப்பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்தஅலைகதிர்ப் பரிதி ஆயிரம் தொகுத்த …5வரன்முறை திரியாது மலர்மிசை இருந்தெனக்கதிர்விடு நின்முகம் காண்தொறும் காண்தொறும்முதிரா இளமுலை முற்றாக் கொழுந்தின்திருமுகத் தாமரை செவ்வியின் மலர நின்தையல் வாணுதல் தெய்வச் சிறுபிறை …10இளநிலாக் காண்தொறும் ஒளியொடும் புணர்ந்த நின்செவ்வாய்க் குமுதம் செவ்வி செய்ய நின்செங்கைக் கமலம் மங்கை வனமுலைஅமிர்த கலசம் அமைவின் ஏந்தமலைமகள் தனாது நயனக் குவளை நின் …15பொலிவினொடு மலர மறையோர்கழுமல நெறி நின்று பொலியநாகர் நாடு மீமிசை மிதந்துமீமிசை உலகம் கீழ்முதல் தாழ்ந்திங்குஒன்றா வந்த குன்றா வெள்ளத்து …20உலகம் மூன்றுக்கும் களைகண் ஆகிமுதலில் காலம் இனிது வீற்று இருந்துழித்தாதையொடு வந்த வேதியச் சிறுவன்தளர்நடைப் பருவத்து வளர் பசி வருத்தஅன்னாயோ என்று அழைப்ப முன்னின்று …25ஞான போனகத்து அருள் அட்டிக் குழைத்தஆனாத் திரளை அவன்வயின் அருளஅந்தணன் முனிந்து தந்தார் யாரெனஅவனைக் காட்டுவன் அப்ப வானார்தோஒடுடைய செவியன் என்றும் …30பீடு உடைய பெம்மான் என்றும்கையில் சுட்டிக் காட்டஐய நீ வெளிப்பட்டு அருளினை ஆங்கே. …33
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அருளின் கடல்அடியேன் அன்பென்னும் ஆறுபொருளின் திரள்புகலி நாதன் - இருள்புகுதும்கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார்அண்டத்தார் நாமார் அதற்கு.
சொற்பிரிப்பு
அருளின் கடல் அடியேன் அன்பென்னும் ஆறுபொருளின் திரள் புகலி நாதன் – இருள்புகுதும்கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவாற்குஅண்டத்தார் தாமார் அதற்கு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஆரணம் நான்கிற்கும் அப்பா லவன்அறி யத்துணிந்தநாரணன் நான்முக னுக்கரி யான்நடு வாய்நிறைந்தபூரணன் எந்தை புகலிப் பிரான்பொழில் அத்தனைக்கும்காரணன் அந்தக் கரணங் கடந்த கருப்பொருளே.
சொற்பிரிப்பு
ஆரணம் நான்கிற்கும் அப்பாலவன் அறியத் துணிந்தநாரணன் நான்முகனுக்கு அரியான் நடுவாய் நிறைந்தபூரணன் எந்தை புகலிப் பிரான் பொழில் அத்தனைக்கும்காரணன் அந்தக் கரணம் கடந்த கருப்பொருளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனும்தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததைஅரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறன்மையிருள் நிறத்து மதனுடை அடுசினத் ...(5)தைவகைக் கடாவும் யாப்பவிழ்த் தகற்றிஅன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித்துன்ப இருளைத் துரந்து முன்புறம்மெய்யெனும் விதானம் விரித்து நொய்யகீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப் .....(10)பாழறை உனக்குப் பள்ளியறை யாக்கிச்சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசுஎந்தைநீ இருக்க இட்டனன் இந்தநெடுநில வளாகமும் அடுகதிர் வானமும்அடையப் பரந்த ஆதிவெள் ளத்து .....(15)நுரையெனச் சிதறி இருசுடர் மிதப்பவரைபறித் தியங்கும் மாருதம் கடுப்பமாலும் பிரமனும் முதலிய வானவர்காலம் இதுவெனக் கலங்கா நின்றுழிமற்றவர் உய்யப் பற்றிய புணையாய் ......(20)மிகநனி மிதந்த புகலி நாயகஅருள்நனி சுரக்கும் பிரளய விடங்கநின்செல்வச் சிலம்பு மெல்லென மிழற்றஅமையாக் காட்சி இமையக்கொழுந்தையும் உடனே கொண்டிங்கு .......(25)எழுந்தரு ளத்தகும் எம்பெரு மானே.
சொற்பிரிப்பு
கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனும்தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததைஅரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறன்மையிருள் நிறத்து மதனுடை அடுசினத்து …5ஐவகைக் கடாவும் யாப்பவிழ்த்து அகற்றிஅன்புகொடு மெழுகி அருள்விளக்கு ஏற்றித்துன்ப இருளைத் துரந்து முன்புறம்மெய்யெனும் விதானம் விரித்து நொய்யகீழ்மையில் தொடர்ந்து கிடந்த என் சிந்தைப் …10பாழறை உனக்குப் பள்ளியறை யாக்கிச்சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசுஎந்தை நீ இருக்க இட்டனன் இந்தநெடுநில வளாகமும் அடுகதிர் வானமும்அடையப் பரந்த ஆதி வெள்ளத்து …15நுரையெனச் சிதறி இருசுடர் மிதப்பவரைபறித்து இயங்கும் மாருதம் கடுப்பமாலும் பிரமனும் முதலிய வானவர்காலம் இதுவெனக் கலங்கா நின்றுழிமற்றவர் உய்யப் பற்றிய புணையாய் …20மிக நனி மிதந்த புகலி நாயகஅருள் நனி சுரக்கும் பிரளய விடங்க நின்செல்வச் சிலம்பு மெல்லென மிழற்றஅமையாக் காட்சி இமயக்கொழுந்தையும் உடனே கொண்டிங்குஎழுந்தருளத்தகும் எம்பெருமானே. …26
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மானும் மழுவும் திருமிடற்றில் வாழும்இருள்தானும் பிறையும் தரித்திருக்கும் - வானவர்க்குவெள்ளத்தே தோன்றிக் கழுமலத்தே வீற்றிருந்தென்உள்ளத்தே நின்ற ஒளி.
சொற்பிரிப்பு
மானும் மழுவும் திருமிடற்றில் வாழும் இருள்தானும் பிறையும் தரித்திருக்கும் – வானவர்க்குவெள்ளத்தே தோன்றிக் கழுமலத்தே வீற்றிருந்து என்உள்ளத்தே நின்ற ஒளி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஒளிவந்த வாபொய் மனத்திருள் நீங்கஎன் உள்ளவெள்ளத்தெளிவந்த வாவந்து தித்தித்த வாசிந்தி யாததொருகளிவந்த வாஅன்பு கைவந்த வாகடை சாரமையத்தெளிவந்த வாநங் கழுமல வாணர்தம் இன்னருளே.
சொற்பிரிப்பு
ஒளிவந்தவா பொய் மனத்திருள் நீங்க என் உள்ள வெள்ளத்துஎளிவந்தவா வந்து தித்தித்தவா சிந்தியாததொருகளிவந்தவா அன்பு கைவந்தவா கடை சார் அமையத்துஎளிவந்தவா நம் கழுமல வாணர் தம் இன்னருளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அருள்பழுத் தளித்த கருணை வான்கனிஆரா இன்பத் தீராக் காதல்அடியவர்க் கமிர்த வாரி நெடுநிலைமாடக் கோபுரத் தாடகக் குடுமிமழைவயிறு கிழிக்கும் கழுமல வாணநின் ...(5)வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்பாவையுடன் இருந்த பரம யோகியானொன் றுணர்த்துவன் எந்தை மேனாள்அகில லோகமும் அனந்த யோனியும்நிகிலமும் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி ....(10)எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்துயாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்தாய ராகியும் தந்தைய ராகியும்வந்தி லாதவர் இல்லை யான்அவர்தந்தையர் ஆகியும் தாயர் ஆகியும் .....(15)வந்தி ராததும் இல்லை முந்துபிறவா நிலனும் இல்லை அவ்வயின்இறவா நிலனும் இல்லை பிறிதில்என்னைத் தின்னா உயிர்களும் இல்லையான் அவைதம்மைத் தின்னா தொழிந்ததும் இல்லை அனைத்தே ....(20)காலமும் சென்றது யான்இதன் மேலினிஇளைக்குமா றிலனே நாயேன்நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலும்தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம்பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும் ......(25)இயன்றதோர் பொழுதின் இட்டது மலராச்சொன்னது மந்திர மாக என்னையும்இடர்ப்பிறப்பு இறப்பெனும் இரண்டின்கடற்ப டாவகை காத்தல் நின்கடனே.
சொற்பிரிப்பு
அருள்பழுத்து அளித்த கருணை வான்கனிஆரா இன்பத் தீராக் காதல்அடியவர்க்கு அமிர்த வாரி நெடுநிலைமாடக் கோபுரத்து ஆடகக் குடுமிமழைவயிறு கிழிக்கும் கழுமல வாண நின் …5வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்பாவையுடன் இருந்த பரம யோகியானொன்று உணர்த்துவன் எந்தை மேனாள்அகில லோகமும் அனந்த யோனியும்நிகிலமும் தோன்ற நீ நினைந்தநாள் தொடங்கி …10எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்துயாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்தாயராகியும் தந்தையராகியும்வந்திலாதவர் இல்லை யான் அவர்தந்தையர் ஆகியும் தாயர் ஆகியும் …15வந்திராததும் இல்லை முந்துபிறவா நிலனும் இல்லை அவ்வயின்இறவா நிலனும் இல்லை பிறிதில்என்னைத் தின்னா உயிர்களும் இல்லை யான் அவைதம்மைத் தின்னாது ஒழிந்ததும் இல்லை அனைத்தே …20காலமும் சென்றது யான் இதன் மேலினிஇளைக்குமாறு இலனே நாயேன்நந்தாச் சோதி நின் அஞ்செழுத்து நவிலும்தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம்பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும் …25இயன்றதோர் பொழுதின் இட்டது மலராச்சொன்னது மந்திரமாக என்னையும்இடர்ப்பிறப்பு இறப்பெனும் இரண்டின்கடற் படாவகை காத்தல் நின்கடனே. …28
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கடலான காமத்தே கால்தாழ்வர் துன்பம்அடலாம் உபாயம் அறியார் - உடலாம்முழுமலத்தை ஓர்கிலார் முக்கட் பெருமான்கழுமலத்தைக் கைதொழா தார்.
சொற்பிரிப்பு
கடலான காமத்தே கால்தாழ்வார் துன்பம்அடலாம் உபாயம் அறியார் – உடலாம்முழுமலத்தை ஓர்கிலார் முக்கட் பெருமான்கழுமலத்தைக் கை தொழாதார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

தொழுவாள் இவள்வளை தோற்பாள்இவளிடர்க் கேஅலர்கொண்டெழுவாள் எழுகின்ற தென்செயவோஎன் மனத்திருந்தும்கழுவா மணியைக் கழுமலவாணனைக் கையிற்கொண்டமழுவா ளனைக்கண்டு வந்ததென்றால்ஓர் வசையில்லையே.
சொற்பிரிப்பு
தொழுவாள் இவள் வளை தோற்பாள்இவள் இடர்க்கே அலர்கொண்டுஎழுவாள் எழுகின்றது என் செயஓ என் மனத்திருந்தும்கழுவா மணியைக் கழுமலவாணனைக் கையில் கொண்டமழுவாளனைக் கண்டு வந்ததுஎன்றால் ஓர் வசை இல்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

வசையில் காட்சி இசைநனி விளங்கமுன்னாள் நிகழ்ந்த பன்னீ ருகத்துவேறுவேறு பெயரின் ஊறின் றியன்றமையறு சிறப்பின் தெய்வத் தன்மைப்புகலி நாயக இகல்விடைப் பாக .......(5)அமைநாண் மென்தோள் உமையாள் கொழுநகுன்று குனிவித்து வன்தோள் அவுணர்மூவெயில் எரித்த சேவகத் தேவஇளநிலா முகிழ்க்கும் வளர்சடைக் கடவுள்நின்நெற்றியில் சிறந்த ஒற்றை நாட்டத்துக் .......(10)காமனை விழித்த மாமுது தலைவவானவர் அறியா ஆதி யானேகல்லா மனத்துப் புல்லறிவு தொடரமறந்து நோக்கும் வெறுந்தண் நாட்டத்துக்காண்தொறும் காண்தொறும் எல்லாம் யாண்டை ......(15)ஆயினும் பிறவும் என்னதும் பிறரதும்ஆவன பலவும் அழிவன பலவும்போவதும் வருவதும் நிகழ்வதும் ஆகித்தெண்ணீர் ஞாலத்துத் திரண்ட மணலினும்எண்ணில் கோடி எனைப்பல வாகி ......(20)இல்லன உளவாய் உள்ளது காணாப்பன்னாள் இருள்வயிற் பட்டேன் அன்னதும்அன்ன தாதலின் அடுக்கும் அதென்னெனின்கட்புலன் தெரியாது கொட்புறும் ஒருவர்க்குக்குழிவழி யாகி வழிகுழி யாகி .......(25)ஒழிவின் றொன்றின் ஒன்றுதடு மாறவந்தாற் போல வந்த தெந்தைநின்திருவருள் நாட்டம் கருணையின் பெறலும்யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றிமேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை ....(30)ஓவியப் புலவன் சாயல்பெற எழுதியசிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித்தவிராது தடவினர் தமக்குச்சுவராய்த் தோன்றும் துணிவுபோன் றனவே.
சொற்பிரிப்பு
வசையில் காட்சி இசை நனி விளங்கமுன்னாள் நிகழ்ந்த பன்னீர் உகத்துவேறுவேறு பெயரின் ஊறின்று இயன்றமையறு சிறப்பின் தெய்வத் தன்மைப்புகலி நாயக இகல்விடைப் பாக …5அமைநாண் மென்தோள் உமையாள் கொழுநகுன்று குனிவித்து வன்தோள் அவுணர்மூவெயில் எரித்த சேவகத் தேவஇளநிலா முகிழ்க்கும் வளர்சடைக் கடவுள்நின்நெற்றியில் சிறந்த ஒற்றை நாட்டத்துக் …10காமனை விழித்த மாமுது தலைவவானவர் அறியா ஆதி யானேகல்லா மனத்துப் புல்லறிவு தொடரமறந்து நோக்கும் வெறுந்தண் நாட்டத்துக்காண்தொறும் காண்தொறும் எல்லாம் யாண்டை …15ஆயினும் பிறவும் என்னதும் பிறரதும்ஆவன பலவும் அழிவன பலவும்போவதும் வருவதும் நிகழ்வதும் ஆகித்தெண்ணீர் ஞாலத்துத் திரண்ட மணலினும்எண்ணில் கோடி எனைப்பல வாகி …20இல்லன உளவாய் உள்ளன காணாப்பன்னாள் இருள்வயிற் பட்டேன் அன்னதும்அன்னது ஆதலின் அடுக்கும் அது என் எனின்கட்புலன் தெரியாது கொட்புறும் ஒருவற்குக்குழி வழியாகி வழி குழியாகி …25ஒழிவின்றி ஒன்றின் ஒன்று தடுமாறவந்தாற் போல வந்த எந்தை நின்திருவருள் நாட்டம் கருணையின் பெறலும்யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றிமேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை …30ஓவியப் புலவன் சாயல்பெற எழுதியசிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித்தவிராது தடவினர் தமக்குச்சுவராய்த் தோன்றும் துணிவு போன்றெனவே. …39
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

எனவே எழுந்திருந்தாள் என்செய்வாள் இன்னம்சினவேறு காட்டுதிரேல் தீரும் - இனவேகப்பாம்புகலி யால்நிமிரும் பன்னாச் சடைமுடிநம்பூம்புகலி யான்இதழிப் போது.
சொற்பிரிப்பு
எனவே எழுந்திருந்தாள் என் செய்வாள் இன்னம்சினவேறு காட்டுதிரேல் தீரும் – இனவேகப்பாம்பு கலியால் நிமிரும் பன்னாச் சடைமுடி நம்பூம்புகலியான் இதழிப் போது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

போதும் பெறாவிடில் பச்சிலை உண்டு புனல்உண்டெங்கும்ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன் றேயிணை யாகச் செப்பும்சூதும் பெறாமுலை பங்கர்தென் தோணி புரேசர்வண்டின்தாதும் பெறாத அடித்தா மரைசென்று சார்வதற்கே.
சொற்பிரிப்பு
போதும் பெறாவிடில் பச்சிலை உண்டு புனல் உண்டு எங்கும்ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டு அன்றே இணையாகச் செப்பும்சூதும் பெறாமுலை பங்கர் தென் தோணி புரேசர் வண்டின்தாதும் பெறாத அடித்தாமரை சென்று சார்வதற்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

(பின்வரும் 13 முதல் 30 முடிய உள்ள பாசுரங்கள் சில அச்சுப் பிரதிகளில் கண்டவை.திருச்சிராப்பள்ளி திருமுறைக்கலைஞர் வித்துவான் திரு. பட்டுச்சாமி ஓதுவாரால் எடுத்துக் கொடுக்கப் பெற்றவை.மும்மணிக்கோவை முப்பது பாடல்களைக் கொண்டது என்பது இலக்கணம்.)சார்ந்தவர்ப் புரக்கும் ஈர்ஞ்சடைப் பெருமகருணை முதுவெள்ளம் பெருகு திருநயனகைவலம் நெல்லியங் கனியது போலச்சைவசித் தாந்தத் தெய்வ ஆகமத்தைவரன்முறை பகர்ந்த திருமலர் வாய .....(5)பவளவரை மீதில் தவளமின் என்னச்செப்பரு மார்பணி முப்புரி நூலபேரிகல் ஆணவக் காரிரு ளினுக்கும்பின்றொடர் வல்வினை வன்றொட ரினுக்கும்மாயைமா மாயை ஆயபே யினுக்கும் ...... (10)அஞ்சல்என் றமைத்த கஞ்சமென் கரதலஅருமறைச் சிரத்தும் பெருமைமெய் அன்பர்துங்க இதயத்தும் தங்கு பொற்பாததுன்னிய பயோதரம் மின்னினம் மிடைதலின்அளப்பரும் பெருமை வளத்தினை விளைத்தலின் ......(15)சந்திர திலகம் சிந்துரம் மருவலின்உறுகண் டீரவந் துறுமுழை உறுதலின்சாதமுறை சுழீஇச் சோதிமீ தமர்தலின்பணைஎழு மரவம் பிணையொடு மேவலின்காமரஞ் செவ்வழி காமரின் எய்தலின் ......(20)அளகை எதிரெனும் ஆசையுற் றுறைதலினாடக மருவி நீடறை பெருதலின்நாட்டியத் தோகை ஈட்டமங் கணைதலின்அகத்தியன் மன்னும் மகத்துவம் சிவணலின்மலையா சலமென நிலைசேர் மாட .......(25)மாளிகை சூழ்ந்த சூளிகைப் புரிசைநேமிமால் வரைஎனப் பூமிமீ திலங்கும்காழிமா நகரம் தூழிதே ரமர்ந்தஅமையா அன்பின் உமையாள் கொழுநதெரியநான் முகன்பணி பெரியநா யகநின் ......(30)பொன்மலர்ப் பாதம் சென்னிவைத் திறைஞ்சுதும்மேற்படும் இதயப் பாற்கடல் நடுவுள்பரம்பரை தவறா வரம்பெறு குரவன்மருளற இரங்கி அருளிய குறிஎனும்நிந்தையில் கனக மந்தரம் நிறுவி ......(35)மாண்அறிவென்னும் தூணிடைப் பிணித்தநேசம் என்னும் வாசுகி கொளுவிமதித்தல் என்னும் மதித்தலை உஞற்றியபேரா இன்பச் சீர்ஆ னந்தம்பெறலறும் அமுதம் திறனொடும் பெற்று .......(40)ஞானவாய் கொண்டு மோனமாய் உண்டுபிறப்பிறப் பென்னும் மறப்பெரும் பயத்தால்பன்னாட் பட்ட இன்னாங் ககற்றிஎன்னையும் தன்னையும் மறந்திட்டின்ப மேலீ டெய்துதற் பொருட்டே. ......(45)
சொற்பிரிப்பு
சார்ந்தவர்ப் புரக்கும் ஈர்ஞ்சடைப் பெருமகருணை முதுவெள்ளம் பெருகு திருநயனகைவலம் நெல்லியம் கனியது போலச்சைவசித்தாந்தத் தெய்வ ஆகமத்தைவரன்முறை பகர்ந்த திருமலர் வாய …5பவள வரை மீதில் தவள மின் என்னச்செப்பரு மார்பணி முப்புரி நூலபேரிகல் ஆணவக் கார் இருளினுக்கும்பின்றொடர் வல்வினை வன் தொடரினுக்கும்மாயை மா மாயை ஆய பேயினுக்கும் …10அஞ்சல் என்று அமைத்த கஞ்ச மென் கரதலஅருமறைச் சிரத்தும் பெருமை மெய் அன்பர்துங்க இதயத்தும் தங்கு பொற்பாததுன்னிய பயோதரம் மின்னினம் மிடைதலின்அளப்பரும் பெருமை வளத்தினை விளைத்தலின் …15சந்திர திலகம் சிந்துரம் மருவலின்உறுகண்டீர் வந்துறுமு உழை உறுதலின்சாதமுறை சுழீஇச் சோதி மீது அமர்தலின்பணை எழு மரவம் பிணையொடு மேவலின்காமரம் செவ்வழி காமரின் எய்தலின் …20அளகை எதிரெனும் ஆசையுற்று உறைதலின்நாடக மருவி நீடறை பெருதலின்நாட்டியத் தோகை ஈட்டமங்கு அணைதலின்அகத்தியன் மன்னும் மகத்துவம் சிவணலின்மலையா சலமென நிலைசேர் மாட …25மாளிகை சூழ்ந்த சூளிகைப் புரிசைநேமிமால் வரை எனப் பூமி மீது இலங்கும்காழிமா நகரம் தூழி தேரமர்ந்தஅமையா அன்பின் உமையாள் கொழுநதெரிய நான்முகன் பணி பெரியநாயக நின் …30பொன்மலர்ப் பாதம் சென்னி வைத்து இறைஞ்சுதும்மேற்படும் இதயப் பாற்கடல் நடுவுள்பரம்பரை தவறா வரம் பெரு குரவன்மருளற இரங்கி அருளிய குறி எனும்நிந்தையில் கனக மந்தரம் நிறுவி …35மாண் அறிவென்னும் தூணிடைப் பிணித்தநேசம் என்னும் வாசுகி கொளுவிமதித்தல் என்னும் மதித்தலை உஞற்றியபேரா இன்பச் சீர்ஆனந்தம்பெறலறும் அமுதம் திறனொடும் பெற்று …40ஞானவாய் கொண்டு மோனமாய் உண்டுபிறப்பு இறப்பென்னும் மறப்பெரும் பயத்தால்பன்னாள் பட்ட இன்னாங்கு அகற்றிஎன்னையும் தன்னையும் மறந்திட்டுஇன்ப மேலீடு எய்துதல் பொருட்டே. …45
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

பொருளாசை பெண்ணாசை பூவாசை என்னும்மருள்ஆசை யாமாசை மாற்றித் - தெருள்ஞானவேந்தராய் வாழலாம் மெய்யன்பால் நல்நெஞ்சேபூந்தராய் நாதரைநீ போற்று.
சொற்பிரிப்பு
பொருளாசை பெண்ணாசை பூவாசை என்னும்மருள் ஆசையாம் மாசை மாற்றித் – தெருள் ஞானவேந்தராய் வாழலாம் மெய்யன்பால் நல் நெஞ்சேபூந்தராய் நாதரை நீ போற்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

போற்றும் பழமறை வாசிப் புனிதர் புகலிவெற்பன்ஆற்றும் தவத்தினைக் கண்டே நகைத்த தணிகொள்முல்லைதூற்றும் புயல்வட காற்றோ அடிக்கத் தொடங்குமதிக்கீற்றிங் கெனது மனங்குழம் பாகக் கிடைத்ததின்றே.
சொற்பிரிப்பு
போற்றும் பழமறை வாசிப் புனிதர் புகலி வெற்பன்ஆற்றும் தவத்தினைக் கண்டே நகைத்த தணிகொள் முல்லைதூற்றும் புயல் வட காற்றோ அடிக்கத் தொடங்கு மதிக்கீற்றிங்கு எனது மனங்குழம் பாகக் கிடைத்ததின்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

இன்றென உளதென அன்றென ஆமெனஉரைதரு நூலையும் பொருளையும் தனித்தனிபல்வித மாகச் சொல்வகைச் சமயமாகிய பயம்பில் போகுதல் குறித்தநிலையில் துறைபல நிலையுள துறைசில .....(5)பொருந்திடும் உலகப் பெருங்கட லிடத்தின்மயிர்நூல் கிடத்திப் பயில்வுரு தோலெனும்வன்புறு பலகையின் என்பெனும் ஆணியில்நரம்பெனப் பெயரிய உரம்பெறு கயிற்றின்வெரிந்உறும் என்பெனும் பெரிய கூம்பின் .....(10)ஐம்பொறி யாகிய மொய்ம்புறு வாய்தலின்காயமென அமைத்த மாயநா வாயில்இருவினை என்ன வருசரக் கேற்றிக்காமம் உலோபம் ஏமமா மோகம்மிதமறு குரோதம் மதமாச் சரியமென் .....(15)றுரைபெறு யவனர் நிரையுற இருத்திநெடுநீர் என்னப் படுநெடு நாணில்தங்கிய மடிஎனும் நங்குரஞ் சேர்த்திஅற்றமில் மனம்எனப் பெற்றபாய் விரித்துத்தடைபடா ஆசைக் கடுவளி துரப்பத் .......(20)தானம் ஆதி யான தீவுகளிற்செல்வுழிச் சென்று புல்வுழிப் புல்லிஇவ்வா றியங்கும் அவ்வா றதனுள்முன்பார் கால வன்பார் தாக்கத்தொக்குறு மரக்கலம் பக்குவிட் டம்ம . ...(25)அக்கடல் நீருள் புக்கறி வழிவுழிமறலி என்னும் சுறவுபிடித் தீர்ப்பக்கடுநர கென்னும் படுகுழி அழுந்திஉளதுய ரினுக்கோர் அளவிலை அதனால்இம்முறை இயங்குதல் செம்மை அன்றென்று ....(30)முற்றுணர் பெரியோய் அற்றமில் வலியோய்ஓதா துணர்ந்த நாதா தீதஅருவுரு என்னும் பொருள்முழு துடையோய்யாவரும் நின்வய மேவரப் புரிவோய்கரையறும் இன்பப் புரைதவிர் நிமல .......(35)சாந்தணி வனமுலை ஏந்திழை பாகஞானமா மணநிறை மோனமா மலரேவித்தகம் பழுத்த முத்திவான் கனியேபரைமுதல் ஐம்பணை நிரைபெறக் கிளைத்ததிருத்தகு நீழல் அருட்பெருந் தருவே ...(40)பத்திகொள் நித்திலம் ஒத்துற நிரைத்தபசும்பொனிற் செய்த நசும்பு பலதொக்கதோற்றம் போல வீற்றுவீற் றமைந்ததீங்கனி பணைதொறும் தாங்குமா தணையும்வித்துரு மத்திணை ஒத்தசெந் தளிரும் .....(45)ஒளிர்வயி டூரியக் குளிர்மது மலரும்மேலிடு வண்டெனும் நீலமா மணியும்மரகதம் என்ன விரவுகாய்த் திரளும்மறுவில்மா மணிஎனும் நறியசெங் கனியும்கிடைத்தசீர் வணிகரில் படைத்தமாந் தருவும் ....(50)எண்டிசை சூழ்ந்து விண்தொடும் புகலிமேவிய பெரும ஆவி நாயகனேகணபணக் கச்சைப் பணஅர வசைத்தமட்டலர் புழுகணி சட்டை நாயகன்எனுமீ காமன் மன்னினன் புரப்பநீ ....(55)வீற்றினி திருக்க ஏற்றமெய்ப் பிரணவத்தோணியே பற்றெனத் துணிந்துகாணுறும் அறிவொடு கண்டு கொண்டேனே.
சொற்பிரிப்பு
இன்றென உளதென அன்றென ஆமெனஉரைதரு நூலையும் பொருளையும் தனித்தனிபல்விதமாகச் சொல்வகைச் சமயம்ஆகிய பயம்பில் போகுதல் குறித்தநிலையில் துறை பல நிலையுள துறை சில …5பொருந்திடும் உலகப் பெருங்கடல் இடத்தின்மயிர் நூல் கிடத்திப் பயில்வுரு தோலெனும்வன்புறு பலகையின் என்பெனும் ஆணியில்நரம்பெனப் பெயரிய உரம் பெறு கயிற்றின்வெரிந்உறும் என்பெனும் பெரிய கூம்பின் …10ஐம்பொறி யாகிய மொய்ம்புறு வாய்தலின்காயமென அமைத்த மாய நாவாயில்இருவினை என்ன வருசரக்கு ஏற்றிக்காமம் உலோபம் ஏம மா மோகம்மிதமறு குரோதம் மத மாச்சரியமென்று …15உரைபெறு அவனர் நிரையுற இருத்திநெடுநீர் என்னப் படுநெடு நாணில்தங்கிய மடி எனும் நங்குரம் சேர்த்திஅற்றமில் மனம் எனப் பெற்ற பாய் விரித்துத்தடைபடா ஆசைக் கடுவளி துரப்பத் …20தானம் ஆதியான தீவுகளிற்செல்வுழிச் சென்று புல்வுழிப் புல்லிஇவ்வாறு இயங்கும் அவ்வாறு அதனுள்முன்பார் கால வன்பார் தாக்கத்தொக்குறு மரக்கலம் பக்குவிட்டு அம்ம . …25அக்கடல் நீருள் புக்கறி வழிவுழிமறலி என்னும் சுறவு பிடித்து ஈர்ப்பக்கடுநரகு என்னும் படுகுழி அழுந்திஉள துயரினுக்கோர் அளவிலை அதனால்இம்முறை இயங்குதல் செம்மை அன்றென்று …30முற்றுணர் பெரியோய் அற்றமில் வலியோய்ஓதாது உணர்ந்த நாத அதீதஅருவுரு என்னும் பொருள் முழுதுடையோய்யாவரும் நின்வயமே வரப் புரிவோய்கரையறும் இன்பப் புரை தவிர் நிமல …35சாந்தணி வனமுலை ஏந்திழை பாகஞானமா மணநிறை மோன மாமலரேவித்தகம் பழுத்த முத்தி வான் கனியேபரைமுதல் ஐம்பணை நிரை பெறக் கிளைத்ததிருத்தகு நீழல் அருட்பெருந் தருவே …40பத்திகொள் நித்திலம் ஒத்துற நிரைத்தபசும்பொனிற் செய்த நசும்பு பல தொக்கதோற்றம் போல ஈற்று வீற்றமைந்ததீங்கனி பணைதொறும் தாங்கு மாதணையும்வித்துரு மத்திணை ஒத்த செந்தளிரும் …45ஒளிர் வயிடூரியக் குளிர்மது மலரும்மேலிடு வண்டெனும் நீலமா மணியும்மரகதம் என்ன விரவுகாய்த் திரளும்மறுவில்மா மணி எனும் நறிய செங்கனியும்கிடைத்தசீர் வணிகரில் படைத்த மாந்தருவும் …50எண்டிசை சூழ்ந்து விண்தொடும் புகலிமேவிய பெரும ஆவி நாயகனேகணபணக் கச்சைப் பண அரவசைத்தமட்டலர் புழுகணி சட்டை நாயகன்எனுமீ காமன் மன்னினன் புரப்ப நீ …55வீற்றினிது இருக்க ஏற்ற மெய்ப் பிரணவத்தோணியே பற்றெனத் துணிந்துகாணுறும் அறிவொடு கண்டு கொண்டேனே. …58
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

கண்டேன் புகலிக் கருத்தனைத்தன் மெய்ஞ்ஞானவண்டேனுண் டேமகிழும் வண்டானேன் – பண்டேஅளியனுமா னேன்மனமெய் யார்பதம்வே றின்றிக்குளிர்சிவா னந்தமிலங் கும்.
சொற்பிரிப்பு
கண்டேன் புகலிக் கருத்தனைத் தன் மெய்ஞ்ஞானவண் தேன் உண்டே மகிழும் வண்டானேன் – பண்டேஅளியனும் ஆனேன் மனமெய்யார் பதம் வேறின்றிக்குளிர் சிவானந்தம் இலங்கும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

கும்பிட்ட பத்தர்க் கழியாத இன்பம் கொடுக்குமுத்தர்வம்பிட்ட கொங்கை உமைபாகர் சண்பையர் வந்திலரேல்கொம்பிட்ட கோழிக் கொடிவேந்தன் கொச்சையைக் கொல்வதனால்அம்பிட்ட கட்சிச்சிற் றிடைச்சிக்கென் னோபயன் ஆகுவதே.
சொற்பிரிப்பு
கும்பிட்ட பத்தர்க்கு அழியாத இன்பம் கொடுக்கு முத்தர்வம்பிட்ட கொங்கை உமைபாகர் சண்பையர் வந்திலரேல்கொம்பிட்ட கோழிக் கொடிவேந்தன் கொச்சையைக் கொல்வதனால்அம்பிட்ட கட்சிச் சிற்றிடைச்சிக்கு என்னோ பயன் ஆகுவதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

ஆகுவா கனனைத் தோகைவா கனனைஉற்றசீர் மகார்எனப் பெற்றசுந் தரனைஞானவா ரிதியில் ஆனஆ ரமுதேகற்றவர் கருதும் நற்றவக் கரும்பேஇருட்குறும் பெறிந்த அருட்கலா மதியே .......(5)கதிர்த்தொகை குன்றா துதித்த செங்கதிரேநிறைந்தஅன் பவரின் உறைந்த செந்தேனேதுன்பமொன் றறியா இன்பவா ரிதியேமறைமுடி விளக்கும் சுடர்விடு மணியேவிறலரி பிரமன் பெறலரும் பொருளே .....(10)சிற்பநூல் முழுதும் அற்பமின் றுணர்ந்தஓவியர் அற்புத மேவுகைத் தொழிலர்சுத்தவெண் படிகப் பித்திகைத் தலத்தின்நவமணி தெளித்துக் குவவின கூர்நுதித்தூரியங் கொண்டு சீரிதிற் குயிற்றும் .......(15)இமைப்பிலா நாட்டத் தமைப்பருங் கலாபநீலமே காரமும் கோலமார் குயிலும்துப்பமர் வளைவாய் ஒப்பறு பச்சைத்தகைசிறைக் கிளியும் புகைநிறப் புறவும்மேல்நிமிர் தூவிப் பால்நிற அனமும் ......(20)நன்மது நிகர்த்த இன்மொழிப் பூவையும்இனமெனக் கருதி மனமுவந் தணைத்தஉயிர்நிலை பெற்ற மயில்முதற் பறவையும்கூறுபட நோக்கினர் வேறுபா டறியாவளனொடு செறிந்த அளவிலா மாடத் ...(25)துறைதரு கற்பு நிறைகுல மடவார்அளிமுரல் குழலும் ஒளிகிளர் முகமும்குலாவிய புருவமும் நிலாவிரி குழையும்நறியமென் சொல்லுஞ் சிறிய நுண்ணிடையும்தத்துநீர் உவரி முத்தமா லிகையும் ......(30)பிரளய வெள்ளத் திரளினும் அழியாத்திருநகர் இதுவெனக் கருதிவான் முகிலும்சந்திர விம்பமும் இந்திரத் தனுவும்இலங்குசெங் கதிரும் துலங்குவா னமுதும்வாரா மின்னும் தாரா கணமும் ...(35)ஒருங்குவந் திருந்த பெருந்திறன் ஏய்ப்பக்காட்சியிற் பொலிந்த மாட்சிமை சிறந்தகாழிநா யகனே வாழிபூ ரணனேஏர்தரும் பொற்கிரி சேர்கருங் கொடியும்பொன்னிற மாமெனச் சொன்னதொல் மொழியும் ......(40)ஏதமில் நிறைமதிச் சீதள நிலவால்ஆரும்மெய் உருப்பம் தீரும் என்பதும்மொழிதரும் இரத குளிகைதற் சேர்ந்தகாளிமச் சீருண நீள்இயற் கனகமாமெனக் கூறும் தோமறு மொழியும் .......(45)கருட தியானம் மருள்தப வந்தோர்நோக்கினில் தவிரும் தீக்கடு என்றலும்ஆயிரங் கிரணத் தலர்கதிர் முன்னம்பாயிருள் கெடுமெனப் பகர்பழ மொழியும்அங்கண்மா ஞாலத் தெங்கணும் ஒப்ப ....(50)இயலும் பட்டாங் கயல்அல என்னல்சரதமெய்ஞ் ஞான வரதநிற் சேர்ந்தபேதையேன் பாசத் தீவினை அகற்றித்திருவருட் செல்வம் பெருகுமா றுதவிஅளித்தருள் பேரின் பாகும் ....(55)களித்திடும் முத்திக் காழிவான் கனியே.
சொற்பிரிப்பு
ஆகு வாகனனைத் தோகை வாகனனைஉற்ற சீர் மகார் எனப் பெற்ற சுந்தரனைஞான வாரிதியில் ஆன ஆரமுதேகற்றவர் கருதும் நற்றவக் கரும்பேஇருட்குறும் பெறிந்த அருட் கலாமதியே …5கதிர்த்தொகை குன்றாது உதித்த செங்கதிரேநிறைந்த அன்பவரின் உறைந்த செந்தேனேதுன்பமொன்று அறியா இன்ப வாரிதியேமறைமுடி விளக்கும் சுடர்விடு மணியேவிறலரி பிரமன் பெறலரும் பொருளே …10சிற்பநூல் முழுதும் அற்பமின்று உணர்ந்தஓவியர் அற்புதமேவுகைத் தொழிலர்சுத்தவெண் படிகப் பித்திகைத் தலத்தின்நவமணி தெளித்துக் குவவின கூர் நுதித்தூரியம் கொண்டு சீரிதிற் குயிற்றும் …15இமைப்பிலா நாட்டத்து அமைப்பரும் கலாபநீலமேகாரமும் கோலமார் குயிலும்துப்பமர் வளைவாய் ஒப்பறு பச்சைத்தகைசிறைக் கிளியும் புகைநிறப் புறவும்மேல் நிமிர் தூவிப் பால்நிற அனமும் …20நன்மது நிகர்த்த இன்மொழிப் பூவையும்இனமெனக் கருதி மனமுவந்து அணைத்தஉயிர்நிலை பெற்ற மயில்முதற் பறவையும்கூறுபட நோக்கினர் வேறுபாட அறியாவளனொடு செறிந்த அளவிலா மாடத்து …25உறைதரு கற்பு நிறைகுல மடவார்அளிமுரல் குழலும் ஒளிகிளர் முகமும்குலாவிய புருவமும் நிலாவிரி குழையும்நறியமென் சொல்லும் சிறிய நுண்ணிடையும்தத்துநீர் உவரி முத்தமாலிகையும் …30பிரளய வெள்ளத் திரளினும் அழியாத்திருநகர் இதுவெனக் கருதி வான் முகிலும்சந்திர விம்பமும் இந்திரத் தனுவும்இலங்கு செங்கதிரும் துலங்கு வானமுதும்வாரா மின்னும் தாரா கணமும் …35ஒருங்கு வந்து இருந்த பெருந்திறன் ஏய்ப்பக்காட்சியில் பொலிந்த மாட்சிமை சிறந்தகாழி நாயகனே வாழி பூரணனேஏர்தரும் பொற்கிரி சேர்கருங்கொடியும்பொன்னிறமாம் எனச் சொன்ன தொல் மொழியும் …40ஏதமில் நிறைமதிச் சீதள நிலவால்ஆரும் மெய் உருப்பம் தீரும் என்பதும்மொழிதரும் இரத குளிகை தற்சேர்ந்தகாளிமச் சீருண நீள் இயல் கனகமாமெனக் கூறும் தோமறு மொழியும் …45கருட தியானம் மருள்தப வந்தோர்நோக்கினில் தவிரும் தீக்கடு என்றலும்ஆயிரம் கிரணத்து அலர் கதிர் முன்னம்பாய் இருள் கெடுமெனப் பகர் பழமொழியும்அங்கண்மா ஞாலத்து எங்கணும் ஒப்ப …50இயலும் பட்டாங்கு அயல் அல என்னல்சரத மெய்ஞ்ஞான வரத நிற்சேர்ந்தபேதையேன் பாசத் தீவினை அகற்றித்திருவருட் செல்வம் பெருகுமாறு உதவிஅளித்தருள் பேரின்பாகும்களித்திடும் முத்திக் காழி வான் கனியே. …56
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

காழிக்கு வேந்தர் கருணா லயர்முனம்நீகாழிக் குமரன் கவிகையினை - ஆழிக்கட்கண்டமட்டில் சூடகமும் கார்விழியிற் கங்கணமும்கொண்டனள்என் றன்னமே கூறு.
சொற்பிரிப்பு
காழிக்கு வேந்தர் கருணாலயர் முனம் நீகாழிக் குமரன் கவிகையினை – ஆழிக்கட்குஅண்டமட்டில் சூடகமும் கார்விழியில் கங்கணமும்கொண்டனள் என்று அன்னமே கூறு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

கூறுஞ் செனனக் குடில்நெடு நாள்நுழை கூன்முழுதும்மாறும்படிக்கு மருந்துளதோ சண்பை வாணர்கொண்டநீறும் திருவெழுத் தோரைந்தும் கண்டியும் நித்த நித்தம்தேறும் பொருள்என் றுணராத மாயச் செருக்கினர்க்கே.
சொற்பிரிப்பு
கூறும் செனனக் குடில் நெடு நாள் நுழை கூன் முழுதும்மாறும் படிக்கு மருந்துளதோ சண்பை வாணர் கொண்டநீறும் திருவெழுத்து ஓர் ஐந்தும் கண்டியும் நித்த நித்தம்தேறும் பொருள் என்று உணராத மாயச் செருக்கினர்க்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

செருக்குடன் இகலித் தருக்கமே தேற்றிஎம்ம னோரின் இறந்துபிறந் துழலும்மம்மரிற் பெரிய வானவர் குழுவைமெய்ப்பொருள் என்று கைப்பொருள் உதவியும்வழுத்தியும் நெஞ்சத் தழுத்தியும் வறிதே ...(5)புறவார் பசும்புற் கறவாக் கற்பசுவாயிடைச் செருகித் தூயநீர் உதவிஅருஞ்சுவைப் பால்கொளப் பெருஞ்சுரை வருடும்பேதையர் போலவும் ஓதுநஞ் சமரும்எட்டியை விரும்பி மட்டுநீர்த் தேக்கி ....(10)ஈநுழை கல்லா மேல்நிமிர் வேலிஉறும்படி அமைத்து நருங்கனி கொள்ளக்கருதி முயலுந் திருவிலி போலவும்இலகுவால் அரிசி உலைபெய எண்ணிவெற்றுமி குற்றும் பற்றிலர் போலவும் ....(15)அருநிலம் உழுததின் எருமிகப் பெய்துவித்திட் டாங்கே விளைபயன் கொள்ளச்சித்தத் துன்னும் மத்தர் போலவும்வாழ்நாள் அனைத்தும் வீழ்நா ளாக்கிஇம்மையும் மறுமையும் செம்மையிற் பொருந்தா ....(20)திடருறும் மாந்தர் புடவியிற் பலரால்அன்னவா றெளியனும் உன்னிமதி மயங்காதெய்ப்பினில் உதவு மெய்ப்பொரு ளாகிஎன்றும்ஓர் இயல்பொடு நின்றகா ரணநின்சேவடி த் தாமரைப் பூவினைப் புனைந்து ......(25)நாத்தழும் பேற ஏத்திஉள் ளுருகிப்பெருகிய அன்பென வருநீர் நிறைந்தஇதய வாவிப் பதுமமா மலரின்குணனெனப் பொருந்தும் மணமாம் நின்னைக்கண்டிறு மாந்து பண்டைவா தனைதீர்ந் ....(30)தறைகடல் அழுந்தும் நிறைகுட மதுபோன்றசைவற் றிருக்க இசையத் தருதிநிலைமிகப் பொருந்திப் பலமுறை சாரலால்உந்திய வன்ன உருமரு வுதலான்மந்திரத் துறுசுடர் மகத்துயர் தலினால் ......(35)இதம்பயில் இசைகொள் பதங்கவந் துறுதலால்வேதமே ஒப்பென ஓதுகோ புரமும்ஒழுக்குநெறி சிறிதும் வழுக்கில அதனால்நூற்பதப் பிரிவின் மேற்பதம் அதனால்பலகலை ஒளிர்மதி நிலவிய அதனால் ......(40)முத்தரை வியக்கும் பத்திமை அதனால்சிவாகமம் எனஒளிர் துவாமணி மேடையும்வெள்ளைவா ரணமேற் கொள்ளுமாங் கதனால்கட்டா மரைபல மட்டார் தலினால்அஞ்சுமந் தூரம் விஞ்சிஓங் குதலால் .........(45)இந்திரன் எனப்பொலி யந்திர வாவியும்எங்கணும் நிறைந்த வெங்குரு நாதாகருவலி தொலைக்கும் பெருமலை மருந்தேகருணைசூற் கொண்ட பெரியவான் முகிலேசிற்றிடைக் கருங்கட் பொற்றொடிக் கரத்தூள் ........(50)ஆகமார் வனமுலை அணையும்போகமார் இதழிப் பூங்கண் ணியனே.
சொற்பிரிப்பு
செருக்குடன் இகலித் தருக்கமே தேற்றிஎம்மனோரின் இறந்து பிறந்து உழலும்மம்மரில் பெரிய வானவர் குழுவைமெய்ப்பொருள் என்று கைப்பொருள் உதவியும்வழுத்தியும் நெஞ்சத்து அழுத்தியும் வறிதே …5புறவார் பசும்புல் கறவாக் கற்பசுவாயிடைச் செருகித் தூயநீர் உதவிஅருஞ்சுவைப் பால்கொளப் பெருஞ்சுரை வருடும்பேதையர் போலவும் ஓது நஞ்சமரும்எட்டியை விரும்பி மட்டு நீர்த் தேக்கி …10ஈநுழை கல்லா மேல் நிமிர் வேலிஉறும்படி அமைத்து நருங்கனி கொள்ளக்கருதி முயலும் திருவிலி போலவும்இலகுவால் அரிசி உலை பெய எண்ணிவெற்றுமி குற்றும் பற்றிலர் போலவும் …15அருநிலம் உழுததின் எரு மிகப் பெய்துவித்திட்டு ஆங்கே விளை பயன் கொள்ளச்சித்தத்து உன்னும் மத்தர் போலவும்வாழ்நாள் அனைத்தும் வீழ்நாள் ஆக்கிஇம்மையும் மறுமையும் செம்மையில் பொருந்தாது …20இடருறும் மாந்தர் புடவியில் பலரால்அன்னவாறு எளியனும் உன்னி மதி மயங்காதுஎய்ப்பினில் உதவு மெய்ப் பொருளாகிஎன்றும் ஓர் இயல்பொடு நின்ற காரண நின்சேவடித் தாமரைப் பூவினைப் புனைந்து …25நாத் தழும்பேற ஏத்தி உள் உருகிப்பெருகிய அன்பென வரு நீர் நிறைந்தஇதய வாவிப் பதும மாமலரின்குணனெனப் பொருந்தும் மணமாம் நின்னைக்கண்டு இறுமாந்து பண்டை வாதனை தீர்ந்து …30அறைகடல் அழுந்தும் நிறைகுடம் அதுபோன்றுஅசைவற்று இருக்க இசையத் தருதிநிலைமிகப் பொருந்திப் பலமுறை சாரலால்உந்திய வன்ன உருமருவு உதலான்மந்திரத்து உறுசுடர் மகத்து உயர்தலினால் …35இதம்பயில் இசைகொள் பதங்க வந்து உறுதலால்வேதமே ஒப்பென ஓது கோபுரமும்ஒழுக்கு நெறி சிறிதும் வழுக்கில அதனால்நூற்பதப் பிரிவின் மேற்பதம் அதனால்பலகலை ஒளிர்மதி நிலவிய அதனால் …40முத்தரை வியக்கும் பத்திமை அதனால்சிவாகமம் என ஒளிர் துவாமணி மேடையும்வெள்ளை வாரண மேற் கொள்ளுமாங்கு அதனால்கள் தாமரை பல மட்டு ஆர்தலினால்அஞ்சு மந்தூரம் விஞ்சி ஓங்குதலால் …45இந்திரன் எனப்பொலி யந்திர வாவியும்எங்கணும் நிறைந்த வெங்குரு நாதாகருவலி தொலைக்கும் பெருமலை மருந்தேகருணை சூற் கொண்ட பெரிய வான் முகிலேசிற்றிடைக் கருங்கட் பொற்றொடிக் கரத்தூள் …50ஆகமார் வனமுலை அணையும்போகமார் இதழிப் பூங்கண்ணியனே. …52
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

கண்ணின் றொளிருங் கருமணியின் உள்ளொளிபோல்உண்ணின் றொளிரும் ஒளிவிளக்கென் - றெண்ணிப்புகலிப் பெருமானைப் புண்ணியனைப் போற்றில்அகலுமே பாசவிருள் அன்று.
சொற்பிரிப்பு
கண்ணின்று ஒளிரும் கருமணியின் உள்ளொளிபோல்உண்ணின்று ஒளிரும் ஒளிவிளக்கென்று – எண்ணிப்புகலிப் பெருமானைப் புண்ணியனைப் போற்றில்அகலுமே பாச இருள் அன்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

இருள்அந் தகன்வரின் ஈர்எயி றேபிறை ஏய்ந்தசெவ்வான்சுருள்குஞ்சி பாசம் எனஅந்தி வந்தது தோகைசொற்றேன்பருகும் புகலிப் பிரான்எனும் பானுப் பலகிரணம்பெருகும் படிவந் துதித்தால் மின்ஆவி பெருகுவளே.
சொற்பிரிப்பு
இருள் அந்தகன் வரின் ஈர் எயிறே பிறை ஏய்ந்த செவ்வான்சுருள் குஞ்சி பாசம் என அந்தி வந்தது தோகை சொல் தேன்பருகும் புகலிப் பிரான் எனும் பானுப் பல கிரணம்பெருகும்படி வந்து உதித்தால் மின் ஆவி பெருகுவளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

பெறுவது பெற்ற உறுதிஉத் தமர்கட்காயினும் சிறந்த நேயநெஞ் சினனேயாகக் கழனியின் யோகத் தபோதனர்ஆனபேர் உழவர் மானமோ டாக்கியமுயலகன் என்னும் இயல்பெருங் கரும்பை ........(5)உதிரம் என்னும் முதிர்சா றொழுகநகையெனும் முத்தந் தொகையுறத் தோன்றச்சுந்தரப் பதமெனும் எந்திர ஆலையிட்டரைத்தக வயிரங் கரைத்த வித்தகனேகுங்குமக் கொங்கை அங்கயற் செங்கட் .....(10)பெண்ணரசி பிரியா வண்ணமெய்ப் பாகபாடலம் புன்னை ஏடவிழ் இலஞ்சிவெளிய கற்பூரம் களிகொள் கத்தூரிநறுமணம் எவையும் உறுமுறை பொருந்திஉண்ணீர் பெற்ற தண்ணீர்ப் பந்தரும் ......(15)நெய்கமழ் கருணையும் குய்கமழ் கறியும்மதிதரு நிலவெனப் புதிய வெண்டயிரும்வருக்கையின் கனியும் சருக்கரைக் கட்டியும்முதல்உப கரணம் பதனொடு மரீஇத்தளவரும் பென்ன வளமலி போனகம் .....(20)மாதவர் எவர்க்கும் ஆதுலர் எவர்க்கும்நன்னயத் துடன்அருள் அன்னசத் திரமும்பாடகச் சீரடிப் பான்மொழி மடவார்நாடகத் தொழில்பயில் நீடரங் கெவையும்கலைபயில் கழகமும் பலர்பயில் மன்றமும் ......(25)உள்ளன கரவா துவந்தெதிர்ந் தளிக்கும்வள்ளியோர் வாழும் மணிநெடு வீதியும்பூமகள் உறையு ளாமென விளங்கும்பெரும்புகழ்க் காழி விரும்புசங் கரனேஏந்தெழிற் புவன வேந்தன்நீ ஆதலின் .......(30)வளமலி நான்முகக் களமருன் ஏவலின்உரம்பெறு குலவரைக் குறும்பகப் பட்டமண்டலம் என்னும் கண்டநீள் வயலுள்சராசரத் தொகுதி விராயவித் திட்டுப்பாதவ மிருகம் பறவை மானிடர் ......(35)ஆதிப் பைங்கூழ் அமைத்தனர் நிற்பமாவுறை மருமக் காவ லாளர்வளமையின் ஓம்ப விளைவுமுற் றியபின்புரிபயன் பெறுவான் அரிதர வியற்றிமெய்வலிக் கூற்றுவக் கைவினை மாக்கனி .......(40)புலாலுடை யாக்கைப் பலாவம தகற்றிஅற்றமில் உயிரெனப் பெற்றநெற் றிரளைப்பூதசா ரத்தனுப் பூத மகாதனுபூத பரிணாமம் புகலுறு யாக்கைமூவகைப் பண்டியின் மேவர ஏற்றிப் ........(45)பொன்னில நிரயம் இந்நிலம் என்னும்இடந்தொறும் ஆங்கவை அடங்கவைத் தவற்றுள்ஒருசில வற்றைநின் திருவடி வீட்டிற்சேர்த்தனை அன்னது கூர்த்து நோக்கில்அரசுகொள் கடமை ஆறிலொன் றென்னும் ....(50)புரைதீர் முறைமை புதுக்கினை போலும் அதனால்மாசுகம் நீயுறும் வண்மைபேசுக கருணைப் பெரியநா யகனே.
சொற்பிரிப்பு
பெறுவது பெற்ற உறுதி உத்தமர்கட்குஆயினும் சிறந்த நேய நெஞ்சினனேயாகக் கழனியின் யோகத் தபோதனர்ஆனபேர் உழவர் மானமோடு ஆக்கியமுயலகன் என்னும் இயல் பெருங்கரும்பை …5உதிரம் என்னும் முதிர்சாறு ஒழுகநகையெனும் முத்தம் தொகையுறத் தோன்றச்சுந்தரப் பதமெனும் எந்திர ஆலையிட்டுஉரைத்தக வயிரம் கரைத்த வித்தகனேகுங்குமக் கொங்கை அங்கயல் செங்கட் …10பெண்ணரசி பிரியா வண்ண மெய்ப் பாகபாடலம் புன்னை ஏடவிழ் இலஞ்சிவெளிய கற்பூரம் களிகொள் கத்தூரிநறுமணம் எவையும் உறுமுறை பொருந்திஉண்ணீர் பெற்ற தண்ணீர்ப் பந்தரும் …15நெய்கமழ் கருணையும் குய்கமழ் கறியும்மதிதரு நிலவெனப் புதிய வெண் தயிரும்வருக்கையின் கனியும் சருக்கரைக் கட்டியும்முதல் உபகரணம் பதனொடு மரீஇத்தளவரும் பென்ன வளமலி போனகம் …20மாதவர் எவர்க்கும் ஆதுலர் எவர்க்கும்நன்னயத்துடன் அருள் அன்ன சத்திரமும்பாடகச் சீரடிப் பான்மொழி மடவார்நாடகத் தொழில் பயில் நீடரங்கு எவையும்கலை பயில் கழகமும் பலர் பயில் மன்றமும் …25உள்ளன கரவாது உவந்து எதிர்ந்து அளிக்கும்வள்ளியோர் வாழும் மணிநெடு வீதியும்பூமகள் உறையுளாம் என விளங்கும்பெரும்புகழ்க் காழி விரும்பு சங்கரனேஏந்தெழிற் புவன வேந்தன் நீ ஆதலின் …30வளமலி நான்முகக் களமருன் ஏவலின்உரம்பெறு குலவரைக் குறும்பகப்பட்டமண்டலம் என்னும் கண்ட நீள் வயலுள்சராசரத் தொகுதி விராய வித்திட்டுப்பாதவ மிருகம் பறவை மானிடர் …35ஆதிப் பைங்கூழ் அமைத்தனர் நிற்பமாவுறை மருமக் காவல் ஆளர்வளமையின் ஓம்ப விளைவு முற்றிய பின்புரிபயன் பெறுவான் அரிதரவு இயற்றிமெய்வலிக் கூற்றுவக் கைவினை மாக்கனி …40புலாலுடை யாக்கைப் பலாவமது அகற்றிஅற்றமில் உயிரெனப் பெற்ற நெல் திரளைப்பூதசா ரத்தனுப் பூத மகாதனுபூத பரிணாமம் புகலுறு யாக்கைமூவகைப் பண்டியின் மேவர ஏற்றிப் …45பொன்னில நிரயம் இந்நிலம் என்னும்இடந்தொறும் ஆங்கவை அடங்க வைத்து அவற்றுள்ஒரு சிலவற்றை நின் திருவடி வீட்டிற்சேர்த்தனை அன்னது கூர்த்து நோக்கில்அரசு கொள் கடமை ஆறில் ஒன்றென்னும் …50புரைதீர் முறைமை புதுக்கினை போலும் அதனால்மாசுகம் நீயுறும் வண்மைபேசுக கருணைப் பெரியநாயகனே. …53
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

பெருமானே கூடிப் பிரிந்தாலும் மங்கைக்கொருவா தருள்வரம் ஒன்றுண்டே - திருமால்விடையாய் புகலி விமலா மவுனவிடையாய் பிறியா விடை.
சொற்பிரிப்பு
பெருமானே கூடிப் பிரிந்தாலும் மங்கைக்குஒருவாது அருள்வரம் ஒன்றுண்டே – திருமால்விடையாய் புகலி விமலா மவுனவிடையாய் பிறியா விடை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

விடையம் பொருளென் றுணராத மார்க்கம் விரும்புமழுப்படையம் புயக்கரத் தெந்தாதை ஞான பரமஎன்றெண்சடையம் புனலணி வேணு புரேசன்அந் தாள்மலர்தூவிடையம் பொருளென் றிருநீஎன் றுண்மை விளம்பினனே.
சொற்பிரிப்பு
விடையம் பொருளென்று உணராத மார்க்கம் விரும்பு மழுப்படை அம்புயக்கரத்து எந்தாதை ஞான பரம என்றெண்சடை அம் புனலணி வேணு புரேசன் அந்தாள் மலர் தூவிஇடையம் பொருளென்று இரு நீ என்று உண்மை விளம்பினனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

விளம்புவன் யான்ஒன் றுளம்புகு நெறியால்எழுத்தின் உறழாது வழுத்துபொருள் இன்றிகுறிப்பொடு படாது வெறித்தபுன் சொல்லேஆயினும் பயந்ததஞ் சேயவர் சொலுமொழிகுழலினு மியாழினும் அழகிதாம் அதுபோல் .....(5)நற்றா யாகிஎற் பெற்றாய் என்சொல்திருச்செவிக் கேறும் பொருத்தமுண் டதனால்கேட்டி கேட்டி வாட்டமில் பெரியோய்மதுமழை பிலிற்றிப் புதுமணம் விரித்துப்பற்பல உதவுங் கற்பகத் தருவு ....(10)நந்தா வளன்அருட் சிந்தா மணியும்வாமமாம் மேனிய காம தேனுவும்அருளிய ஏவல் வரன்முறை கேட்பக்கடவுளர் அணிமணித் தடமகு டங்கள்காற்றுணை வருடப் போற்றினர் இறைஞ்சி ......(15)முனிவர் ஆசி நனிபல மொழியக்கரம்பயில் கவரி அரம்பையர் இரட்டக்கின்னரர் விபஞ்சி நன்னரம் புளராஇசையமு திருஞ்செவி மிசைஎடுத் தூற்றமுடங்குளைச் செங்கண் மடங்கல் அணைநாப்பண் ........(20)அமுதுகு மென்சொற் குமுதமென் செவ்வாய்இந்தி ராணி வந்தரு கிருப்பக்கருமுகில் ஆயிரந் திருமலர் பூத்துச்செங்கதிர்ச் சேகரம் துங்கவீற் றிருந்தபெருந்திறன் கடுப்ப இருந்துவிண் புரக்கும் .....(25)அண்ணல் புரந்தரப் பண்ணவன் அரசும்பழமறை கனிந்து மழவுபெற் றிருந்தசெந்நாத் தவிசின் முன்னாள் தங்கிப்பனுவ லாட்டி இனிதுவந் திருப்பவண்டுபாண் முரன்று கிண்டுபு ததைந்து .....(30)பொற்றா துண்ணா முற்றா இன்பப்பிரசமுற் றிருந்த வரசரோ ருகத்தன்நெருக்கிய புவனப் பெருக்கினைத் தனாதுதிண்ணிய மனத்திடை எண்ணியாங் கியற்றிஎம்மால் எவையும் இயன்றன என்னச் .....(35)செம்மாந் திருக்கும் சிறிய வாழ்க்கையும்திதலைபூத் தலர்ந்து மதகளி றிகலிவருமுலை சுமந்த திருமகள் பச்சைப்பசுந்துழாய் அலங்கல் அசும்புதேன் துளித்துக்கடிகமழ் மார்பிற் குடிபுகுந் திருப்பத் ....(40)தண்ணில வெனவிரி வெண்ணிறப் பாற்கடல்ஒல்லொலித் தரங்கம் மெல்லடி வருடக்காமர்தென் கால்எனுஞ் சாமரை அசையத்துத்திநெய் பரந்து பைத்தபை அகலில்அணிகிளர் பலகதிர் மணிவிளக் கொளிரச் ......(45)சுடிகைவான் அரவ நெடியபூ அணைமேல்மறுவிலா நீல வரைகிடந் தென்னஅறிதுயில் அமர்ந்த அச்சுதன் வாழ்க்கையும்அழியா இன்பம்என் றொழியா துரைப்பினும்கற்றவர் கருத்தின் உற்று நோக்குழி ......(50)இந்திர சாலம் முந்துநீள் கனவுவெண்டேர் போல உண்டெனத் தோன்றிஇலவாம் ஆதலின் நலமல ஆங்கவைநிலைபே றுடையது நின்னருட் செல்வம்அன்னதே பெறுதற் குன்னினன் தமியேன் .....(55)அதனால்எளிதினின் இரங்கி அளிசுரந் தருளுதிமரகதத் திடையிடை தரளமிட் டிழைத்தஅரமியம் அதனை விரிகுழை பொதுளிஅரும்பிய புன்னைப் பெரும்பொழில் எனவும் .....(60)ஆடக அலங்கல் அணியணி நிறைத்தசேடுயர் நீல்நிறச் செய்குன் றதனைத்துணர்த்தபூங் கொன்றை மணத்தகா எனவும்மொய்க்கும்வண் சிறையுளி மைக்கரு நிறங்கள்பளிங்கரிந் தியற்றிய துளங்கொளி மாடப் .......(65)பித்திகைத் தலத்திடைப் பத்திபாய் தலினால்வந்ததிங் கிரவெனச் சந்தத மடவார்வார்முலை ஆடவர் மார்பிடை குளிப்பப்புல்லிய கலவிப் புதியதேன் நுகரும்மல்லலங் காழி வளநகர் வாண .....(70)குறிகுணங் கடந்த மறுவில்மா மணியேஉறைபொருள் எங்கணும் நிறைபரி பூரணஅந்த மாதி முந்தையே தவிர்ந்தஅனாதி முத்த என்ஆதி நித்தஅருவுரு வில்லா ஒருபெரும் பொருளே .......(75)அளவையின் அடங்கா தொளிர்சுக நேயஉருகுமெய் அன்பர் பருகுமா ரமுதேநலங்கனி பெரிய நாயகிகலந்தபே ரின்பிற் களித்தபண் ணவனே.
சொற்பிரிப்பு
விளம்புவன் யான் ஒன்று உளம் புகு நெறியால்எழுத்தின் உறழாது வழுத்து பொருள் இன்றிகுறிப்பொடு படாது வெறித்தபுன் சொல்லேஆயினும் பயந்த தஞ்சேயவர் சொலு மொழிகுழலினும் யாழினும் அழகிதாம் அது போல் …5நற்றாயாகி என் பெற்றாய் என் சொல்திருச்செவிக்கு உறும் பொருத்தம் உண்டு அதனால்கேட்டி கேட்டி வாட்டமில் பெரியோய்மதுமழை பிலிற்றிப் புதுமணம் விரித்துப்பற்பல உதவும் கற்பகத் தருவு …10நந்தா வளன் அருட் சிந்தாமணியும்வாமமாம் மேனிய காம தேனுவும்அருளிய ஏவல் வரன்முறை கேட்பக்கடவுளர் அணிமணித் தடமகுடங்கள்காற்றுணை வருடப் போற்றினர் இறைஞ்சி …15முனிவர் ஆசி நனிபல மொழியக்கரம்பயில் கவரி அரம்பையர் இரட்டக்கின்னரர் விபஞ்சி நன்னரம் புளராஇசையமுது இருஞ்செவி மிசை எடுத்தூற்றமுடங்குளைச் செங்கண் மடங்கல் அணை நாப்பண் …20அமுதுகு மென்சொற் குமுதமென் செவ்வாய்இந்திராணி வந்து அருகிருப்பக்கருமுகில் ஆயிரம் திருமலர் பூத்துச்செங்கதிர்ச் சேகரம் துங்க வீற்று இருந்தபெருந்திறன் கடுப்ப இருந்து விண் புரக்கும் …25அண்ணல் புரந்தரப் பண்ணவன் அரசும்பழமறை கனிந்து மழவு பெற்று இருந்தசெந்நாத் தவிசின் முன்னாள் தங்கிப்பனுவ லாட்டி இனிது வந்து இருப்பவண்டு பாண் முரன்று கிண்டு புதைந்து …30பொற்றா துண்ணா முற்றா இன்பப்பிரசமுற்று இருந்த வரசரோர் உகத்தன்நெருக்கிய புவனப் பெருக்கினைத் தனாதுதிண்ணிய மனத்திடை எண்ணியாங்கு இயற்றிஎம்மால் எவையும் இயன்றன என்னச் …35செம்மாந்து இருக்கும் சிறிய வாழ்க்கையும்திதலை பூத்தலர்ந்து மதகளிறு இகலிவருமுலை சுமந்த திருமகள் பச்சைப்பசுந்துழாய் அலங்கல் அசும்பு தேன் துளித்துக்கடிகமழ் மார்பிற் குடிபுகுந்து இருப்பத் …40தண்ணிலவென விரி வெண்ணிறப் பாற்கடல்ஒல்லொலித் தரங்கம் மெல்லடி வருடக்காமர்தென் கால் எனும் சாமரை அசையத்துத்திநெய் பரந்து பைத்தபை அகலில்அணிகிளர் பலகதிர் மணிவிளக்கு ஒளிரச் …45சுடிகை வான் அரவ நெடிய பூ அணைமேல்மறுவிலா நீல வரைகிடந்து என்னஅறிதுயில் அமர்ந்த அச்சுதன் வாழ்க்கையும்அழியா இன்பம் என்று ஒழியாது உரைப்பினும்கற்றவர் கருத்தின் உற்று நோக்குழி …50இந்திர சாலம் முந்து நீள் கனவுவெண்டேர் போல உண்டெனத் தோன்றிஇலவாம் ஆதலின் நலமல ஆங்கவைநிலைபேறு உடையது நின்னருட் செல்வம்அன்னதே பெறுதற்கு உன்னினன் தமியேன் …55அதனால்எளிதினின் இரங்கி அளிசுரந்து அருளுதிமரகதத்து இடையிடை தரளமிட்டு இழைத்தஅரமியம் அதனை விரிகுழை பொதுளிஅரும்பிய புன்னைப் பெரும்பொழில் எனவும் …60ஆடக அலங்கல் அணியணி நிறைத்தசேடுயர் நீல்நிறச் செய்குன்று அதனைத்துணர்த்த பூங்கொன்றை மணத்தகா எனவும்மொய்க்கும் வண் சிறையுளி மைக்கரு நிறங்கள்பளிங்கரிந்து இயற்றிய துளங்கொளி மாடப் …65பித்திகைத் தலத்திடைப் பத்தி பாய்தலினால்வந்தது இங்கு இரவெனச் சந்தத மடவார்வார்முலை ஆடவர் மார்பிடை குளிப்பப்புல்லிய கலவிப் புதிய தேன் நுகரும்மல்லல் அம்காழி வளநகர் வாண …70குறிகுணம் கடந்த மறுவில் மாமணியேஉறைபொருள் எங்கணும் நிறை பரிபூரணஅந்தம் ஆதி முந்தையே தவிர்ந்தஅனாதி முத்த என் ஆதி நித்தஅருவுருவு இல்லா ஒரு பெரும் பொருளே …75அளவையின் அடங்கா ஒளிர் சுக நேயஉருகுமெய் அன்பர் பருகும் ஆர் அமுதேநலங்கனி பெரிய நாயகிகலந்த பேரின்பில் களித்த பண்ணவனே. …78
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

பணமஞ் சரையிருக்கப் பாவையரைச் சும்மாபுணர்கின்றீர் என்று புகலப் - புணர்வார்க்கரைக்காசு தந்தனம்என் றார்புகலி யார்மாவரைக்காசென் றான்அதற்கு மான்.
சொற்பிரிப்பு
பணமஞ்சரை இருக்கப் பாவையரைச் சும்மாபுணர்கின்றீர் என்று புகலப் – புணர்வார்க்குஅரைக்காசு தந்தனம் என்றார் புகலியார் மாஅரைக்காசு என்றான் அதற்குமான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

மானைக் கலந்த மணவாளன் காழி வரதன்செங்கணானைப் புரந்தவன் பத்தர்க்கு முத்தி அளித்தருளும்ஏனைப் பெரும்பொருள் கல்விமெய் செல்வம் இருந்தளிப்பார்தேனைத் தருஞ்செழுந் தாமரை நாமகள் செந்திருவே.
சொற்பிரிப்பு
மானைக் கலந்த மணவாளன் காழி வரதன் செங்கண்ஆனைப் புரந்தவன் பத்தர்க்கு முத்தி அளித்தருளும்ஏனைப் பெரும்பொருள் கல்வி மெய் செல்வம் இருந்தளிப்பார்தேனைத் தருஞ்செழும் தாமரை நாமகள் செந்திருவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.