1
பூமேல் அயன்அறியா மோலிப் புறத்ததேநாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் -பாமேவும்ஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தேகூத்துகந்தான் கொற்றக் குடை.
சொற்பிரிப்பு
பூமேல் அயன் அறியா மோலிப் புறத்ததேநாமே புகழ்ந்து அளவை நாட்டுவோம் – பாமேவும்ஏத்து உகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தேகூத்து உகந்தான் கொற்றக் குடை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
குடைகொண்டிவ் வையம் எலாங்குளிர் வித்தெரி பொற்றிகிரிப்படைகொண் டிகல்தெறும் பார்த்திவர் ஆவதிற் பைம்பொற் கொன்றைத்தொடைகொண்ட வார்சடை அம்பலத் தான்தொண்டர்க் கேவல்செய்துகடைகொண்ட பிச்சைகொண் டுண்டிங்கு வாழ்தல் களிப்புடைத்தே.
சொற்பிரிப்பு
குடைகொண்டு இவ்வையம் எலாம் குளிர் வித்து எரி பொன் திகிரிப்படைகொண்டு இகல் தெறும் பார்த்திவர் ஆவதிற் பைம்பொற் கொன்றைத்தொடைகொண்ட வார்சடை அம்பலத்தான் தொண்டர்க்கு ஏவல் செய்துகடைகொண்ட பிச்சை கொண்டு உண்டிங்கு வாழ்தல் களிப்பு உடைத்தே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
களிவந் தமுதூறிக் கல்மனத்தை எல்லாம்கசியும் படிசெய்து கண்டறிவார் இல்லாவெளிவந் தடியேன் மனம்புகுந்த தென்றால்விரிசடையும் வெண்ணீறும் செவ்வானம் என்னஒளிவந்த பொன்னிறமும் தொல்நடமும் காட்டும்உடையான் உயர்தில்லை அம்பலமொன் றல்லால்எளிவந் தினிப்பிறர்பால் சென்றவர்க்குப் பொய்கொண்டிடைமிடைந்த புன்மொழியால் இச்சையுரை யோமே.
சொற்பிரிப்பு
களிவந்து அமுதூறிக் கல்மனத்தை எல்லாம்கசியும் படி செய்து கண்டறிவார் இல்லாவெளிவந்து அடியேன் மனம் புகுந்தது என்றால்விரிசடையும் வெண்ணீறும் செவ்வானம் என்னஒளி வந்த பொன்னிறமும் தொல் நடமும் காட்டும்உடையான் உயர் தில்லை அம்பலம் ஒன்று அல்லால்எளிவந்து இனிப் பிறர்பால் சென்று அவர்க்குப் பொய்கொண்டுஇடைமிடைந்த புன்மொழியால் இச்சை உரையோமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
உரையின் வரையும் பொருளின் அளவும்இருவகைப் பட்ட எல்லையும் கடந்துதம்மை மறந்து நின்னை நினைப்பவர்செம்மை மனத்தினும் தில்லைமன் றினும்நடம்ஆடும் அம்பல வாண நீடு .....(5)குன்றக் கோமான் தன்திருப் பாவையைநீல மேனி மால்திருத் தங்கையைத்திருமணம் புணர்ந்த ஞான்று பெருமநின்தாதவிழ் கொன்றைத் தாரும் ஏதமில்வீர வெள்விடைக் கொடியும் போரில் ....(10)தழங்கும் தமருகப் பறையும் முழங்கொலித்தெய்வக் கங்கை ஆறும் பொய்தீர்விரையாக் கலியெனும் ஆணையும் நிரைநிரைஆயிரம் வகுத்த மாயிரு மருப்பின்வெண்ணிறச் செங்கண் வேழமும் பண்ணியல் ......(15)வைதிகப் புரவியும் வான நாடும்மையறு கனக மேருமால் வரையும்செய்வயல் தில்லை யாகிய தொல்பெரும் பதியுமென்றுஒருபதி னாயிரந் திருநெடு நாமமும்உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள் .......(20)அமரர் முன்புகுந் தறுகு சாத்திநின்தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்துஎன்னையும் எழுத வேண்டுவன் நின்னருள்ஆணை வைப்பிற் காணொணா அணுவும்வானுற நிமிர்ந்து காட்டும் (25)கானில்வால் நுளம்பும் கருடனா தலினே.
சொற்பிரிப்பு
உரையின் வரையும் பொருளின் அளவும்இருவகைப் பட்ட எல்லையும் கடந்துதம்மை மறந்து நின்னை நினைப்பவர்செம்மை மனத்தினும் தில்லை மன்றினும் நடம்ஆடும் அம்பல வாண நீடு …5குன்றக் கோமான் தன் திருப்பாவையைநீல மேனி மால் திருத்தங்கையைத்திருமணம் புணர்ந்த ஞான்று பெரும நின்தாதவிழ் கொன்றைத் தாரும் ஏதமில்வீர வெள்விடைக் கொடியும் போரில் …10தழங்கும் தமருகப் பறையும் முழங்கொலித்தெய்வக் கங்கை ஆறும் பொய்தீர்விரையாக் கலியெனும் ஆணையும் நிரைநிரைஆயிரம் வகுத்த மாயிரு மருப்பின்வெண்ணிறச் செங்கண் வேழமும் பண்ணியல் …15வைதிகப் புரவியும் வான நாடும்மையறு கனக மேரு மால் வரையும்செய்வயல் தில்லையாகிய தொல்பெரும் பதியும் நின்ஒரு பதினாயிரம் திருநெடு நாமமும்உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள் …20அமரர் முன் புகுந்து அறுகு சாத்தி நின்தமர் பெயர் எழுதிய வரி நெடும் புத்தகத்துஎன்னையும் எழுத வேண்டுவன் நின்னருள்ஆணை வைப்பிற் காணொணா அணுவும்வானுற நிமிர்ந்து காட்டும் …25கானில் வால் நுளம்பும் கருடன் ஆதலினே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
ஆதரித்த மாலும் அறிந்திலனென் றஃதறிந்தேகாதலித்த நாயேற்கும் காட்டுமே - போதகத் தோல்கம்பலத்தான் நீள்நாக கங்கணத்தான் தென்புலியூர்அம்பலத்தான் செம்பொன் அடி.
சொற்பிரிப்பு
ஆதரித்த மாலும் அறிந்திலன் என்று அஃது அறிந்தேகாதலித்த நாயேற்கும் காட்டுமே – போதகத் தோல்கம்பலத்தான் நீள் நாக கங்கணத்தான் தென்புலியூர்அம்பலத்தான் செம்பொன் அடி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
அடியொன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம் பட்டதிப்பால்முடியொன்றிவ் வண்டங்கள் எல்லாம் கடந்தது முற்றும்வெள்ளைப்பொடியொன்று தோள்எட்டுத் திக்கின் புறத்தன பூங்கரும்பின்செடியொன்று தில்லைச்சிற் றம்பலத் தான்தன் திருநடமே.
சொற்பிரிப்பு
அடியொன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம் பட்டது இப்பால்முடியொன்று இவ்அண்டங்கள் எல்லாம் கடந்தது முற்றும் வெள்ளைப்பொடியொன்று தோள் எட்டுத் திக்கின் புறத்தன பூங்கரும்பின்செடியொன்று தில்லைச் சிற்றம்பலத் தான் தன் திருநடமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
நடமாடி ஏழுலகம் உய்யக் கொண்டநாயகரே நான்மறையோர் தங்க ளோடும்திடமாட மதில்தில்லைக் கோயில் கொண்டசெல்வரே உமதருமை தேரா விட்டீர்இடமாடி இருந்தவளும் விலக்கா விட்டால்என்போல்வார்க் குடன்நிற்க இயல்வ தன்றுதடமாலை முடிசாய்த்துப் பணிந்த வானோர்தஞ்சுண்டா யங்கருநீர் நஞ்சுண் டீரே.
சொற்பிரிப்பு
நடமாடி ஏழுலகம் உய்யக் கொண்டநாயகரே நான்மறையோர் தங்களோடும்திடமாட மதில் தில்லைக் கோயில் கொண்டசெல்வரே உமது அருமை தேரா விட்டீர்இடமாடி இருந்தவளும் விலக்கா விட்டால்என் போல்வார்க்கு உடன் நிற்க இயல்வது அன்றுதடமாலை முடி சாய்த்துப் பணிந்த வானோர்தஞ்சுண்டா அங்கு அருந் தீ நஞ்சு உண்டீரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்தன்முதல் முருக்க நென்முதற் சூழ்ந்தநீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கெதிர் வந்ததேரையை வவ்வி யாங்கு யாம்முன்கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி .....(5)மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய்அயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங்குஅருள்நனி இன்றி ஒருவயி றோம்பற்குப்பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்திஅயர்த்தனம் இருந்தும் போலும் பெயர்த்துநின்று .........(10)எண்டோள் வீசிக் கண்டோர் உருகத்தொல்லெயில் உடுத்த தில்லை மூதூர்ஆடும் அம்பலக் கூத்தனைப்பாடுதல் பரவுதல் பணிதலோ இலமே.
சொற்பிரிப்பு
நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்தன்முதல் முருக்க நென்முதல் சூழ்ந்தநீர்ச்சிறு பாம்பு தன் வாய்க்கு எதிர் வந்ததேரையை வவ்வி ஆங்கு யாம் முன்கருவிடை வந்த ஒருநாள் தொடங்கிமறவா மறலி முறை பிறழ் பேழ்வாய்அயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங்குஅருள் நனி இன்றி ஒரு வயிறு ஓம்பற்குப்பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்திஅயர்த்தனம் இருந்தும் போலும் பெயர்த்து நின்றுஎண்தோள் வீசிக் கண்டோர் உருகத்தொல்லெயில் உடுத்த தில்லை மூதூர்ஆடும் அம்பலக் கூத்தனைப்பாடுதல் பரவுதல் பணிதலோ இலமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
இலவிதழ்வாய் வீழ்வார் இகழ்வார் அவர்தம்கலவி கடைக்கணித்தும் காணேன் - இலகுமொளிஆடகஞ்சேர் அம்பலத்தே ஆளுடையார் நின்றாடும்நாடகங்கண் டின்பான நான்.
சொற்பிரிப்பு
இலவு இதழ்வாய் வீழ்வார் இகழ்வார் அவர் தம்கலவி கடைக்கணித்தும் காணேன் – இலகும் ஒளிஆடகஞ்சேர் அம்பலத்தே ஆளுடையார் நின்றாடும்நாடகங் கண்டு இன்பான நான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
நானே பிறந்த பயன்படைத் தேன்அயன் நாரணன்எம்கோனே எனத்தில்லை அம்பலத் தேநின்று கூத்துகந்ததேனே திருவுள்ள மாகியென் தீமையெல் லாம்அறுத்துத்தானே புகுந்தடி யேன்மனத் தேவந்து சந்திக்கவே.
சொற்பிரிப்பு
நானே பிறந்த பயன் படைத்தேன் அயன் நாரணன் எம்கோனே எனத் தில்லை அம்பலத்தே நின்று கூத்துகந்ததேனே திருவுள்ளம் ஆகி என் தீமையெல்லாம் அறுத்துத்தானே புகுந்து அடியேன் மனத்தே வந்து சந்திக்கவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
சந்து புனைய வெதும்பி மலரணை தங்க வெருவி இலங்கு கலையொடுசங்கு கழல நிறைந்த அயலவர் தஞ்சொல் நலிய மெலிந்து கிளியொடுபந்து கழல்கள் மறந்து தளிர்புரை பண்டை நிறமும் இழந்து நிறையொடுபண்பு தவிர அனங்கன் அவனொடு நண்பு பெருக விளைந்த இனையனநந்தி முழவு தழங்க மலைபெறு நங்கை மகிழ அணிந்த அரவுகள்நஞ்சு பிழிய முரன்று முயலகன் நைந்து நரல அலைந்த பகிரதிஅந்தி மதியொ டணிந்து திலைநகர் அம்பொன் அணியும் அரங்கின் நடநவில்அங்கண் அரசை அடைந்து தொழுதிவள் அன்று முதலெ திரின்று வரையுமே.
சொற்பிரிப்பு
சந்து புனைய வெதும்பி மலரணை தங்க வெருவி இலங்கு கலையொடுசங்கு கழல நிறைந்த அயலவர் தஞ்சொல் நலிய மெலிந்து கிளியொடுபந்து கழல்கள் மறந்து தளிர்புரை பண்டை நிறமும் இழந்து நிறையொடுபண்பு தவிர அநங்கன் அவனொடு நண்பு பெருக விளைந்த இனையனநந்தி முழவு தழங்க மலை பெறு நங்கை மகிழ அணிந்த அரவுகள்நஞ்சு பிழிய முரன்று முயலகன் நைந்து நரல அலைந்த பகிரதிஅந்தி மதியொடு அணிந்து தில்லை நகர் அம்பொன் அணியும் அரங்கின் நடநவில்அங்கண் அரசை அடைந்து தொழுதிவள் அன்று முதல் எதிர் இன்று வரையுமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
வரையொன்று நிறுவி அரவொன்று பிணித்துக்கடல்தட வாக மிடலொடும் வாங்கித்திண்டோள் ஆண்ட தண்டா அமரர்க்குஅமிர்துணா அளித்த முதுபெருங் கடவுள்கடையுகஞ் சென்ற காலத்து நெடுநிலம் .....(5)ஆழிப் பரப்பில் ஆழ்வது பொறாஅதுஅஞ்சேல் என்று செஞ்சேல் ஆகித்தன்தெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில்பெளவம் ஏழே பட்டது பெளவத்தோடுஉலகு குழைத்தொரு நாஅள் உண்டதும் .....(10)உலக மூன்றும் அளந்துழி ஆங்கவன்ஈரடி நிரம்பிற்றும் இலவே தேரில்உரைப்போர்க் கல்ல தவன்குறை வின்றேஇனைய னாகிய தனிமுதல் வானவன்கேழல் திருவுரு ஆகி ஆழத்து .....(15)அடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்துஊழி ஊழி கீழுறக் கிளைத்தும்காண்பதற் கரியநின் கழலும் வேண்டுபுநிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும்அகில சராசரம் அனைத்தும் உதவிய ........(20)பொன்னிறக் கடவுள் அன்ன மாகிக்கண்டி லாதநின் கதிர்நெடு முடியும்ஈங்கிவை கொண்டு நீங்காது விரும்பிச்சிறிய பொதுவில் மறுவின்றி விளங்கிஏவருங் காண ஆடுதி அதுவெனக்கு .........(25)அதிசயம் விளைக்கும் அன்றே அதிசயம்விளையாது மொழிந்த தெந்தை வளையாதுகல்லினும் வலித்து நல்லிதிற் செல்லாதுதான்சிறி தாயினும் உள்ளிடை நிரம்பவான்பொய் அச்சம் மாயா ஆசை ........(30)மிடைந்தன கிடப்ப இடம்பெறல் அருமையில்ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்துமண்மகன் திகிரியில் எண்மடங்கு சுழற்றஆடுபு கிடந்த பீடில் நெஞ்சத்துநுழைந்தனை புகுந்து தழைந்தநின் சடையும் ..........(35)செய்ய வாயும் மையமர் கண்டமும்நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்எடுத்த பாதமும் தடுத்தசெங் கையும்புள்ளி ஆடையும் ஒள்ளிதின் விளங்கநாடகம் ஆடுதி நம்ப கூடும் .........(40)வேதம் நான்கும் விழுப்பெரு முனிவரும்ஆதி நின்திறம் ஆதலின் மொழிவதுபெரியதிற் பெரியை என்றும் அன்றேசிறியதிற் சிறியை என்றும் அன்றேநிறைபொருள் மறைகள் நான்கும்நின் அறைகழல் .........(45)இரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்தமறையவர் தில்லை மன்றுகிழ வோனே.
சொற்பிரிப்பு
வரையொன்று நிறுவி அரவொன்று பிணித்துக்கடல் தடவாக மிடலொடும் வாங்கித்திண்டோள் ஆண்ட தண்டா அமரர்க்குஅமிர்துணா அளித்த முதுபெரும் கடவுள்கடையுகம் சென்ற காலத்து நெடுநிலம் …5ஆழிப் பரப்பில் ஆழ்வது பொறாஅதுஅஞ்சேல் என்று செஞ்சேல் ஆகித் தன்தெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில்பௌவம் ஏழே பட்டது பௌவத்தோடுஉலகு குழைத்தொரு நாள் உண்டதும் …10உலக மூன்றும் அளந்துழி ஆங்கவன்ஈரடி நிரம்பிற்றும் இலவே தேரில்உரைப்போர்க்கு அல்லது அவன் குறைவு இன்றேஇனையன் ஆகிய தனிமுதல் வானவன்கேழல் திருவுரு ஆகி ஆழத்து …15அடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்துஊழி ஊழி கீழுறக் கிளைத்தும்காண்பதற்கு அரிய நின் கழலும் வேண்டுபுநிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும்அகில சராசரம் அனைத்தும் உதவிய …20பொன்னிறக் கடவுள் அன்ன மாகிக்கண்டிலாத நின் கதிர்நெடு முடியும்ஈங்கிவை கொண்டு நீங்காது விரும்பிச்சிறிய பொதுவில் மறுவின்றி விளங்கிஏவரும் காண ஆடுதி அது எனக்கு …25அதிசயம் விளைக்கும் அன்றே அதிசயம்விளையாது மொழிந்தது எந்தை வளையாதுகல்லினும் வலித்து நல்லிதிற் செல்லாதுதான் சிறிது ஆயினும் உள்ளிடை நிரம்பவான்பொய் அச்சம் மாயா ஆசை …30மிடைந்தன கிடப்ப இடம் பெறல் அருமையில்ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்துமண்மகன் திகிரியில் எண்மடங்கு சுழற்றஆடுபு கிடந்த பீடில் நெஞ்சத்துநுழைந்தனை புகுந்து தழைந்த நின் சடையும் …35செய்ய வாயும் மையமர் கண்டமும்நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்எடுத்த பாதமும் தடுத்த செங்கையும்புள்ளி ஆடையும் ஒள்ளிதின் விளங்கநாடகம் ஆடுதி நம்ப கூடும் …40வேதம் நான்கும் விழுப்பெரு முனிவரும்ஆதி நின்திறம் ஆதலின் மொழிவதுபெரியதில் பெரியை என்றும் அன்றேசிறியதில் சிறியை என்றும் அன்றேநிறைபொருள் மறைகள் நான்கும் நின் அறைகழல் …45இரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்தமறையவர் தில்லை மன்று கிழவோனே. …47
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
கிழவருமாய் நோய்மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத்துழவரும்போய் ஓயுமா கண்டோம் - மொழிதெரியவாயினால் இப்போதே மன்றில் நடமாடும்நாயனார் என்றுரைப்போம் நாம்.
சொற்பிரிப்பு
கிழவருமாய் நோய் மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத்துஉழவரும் போய் ஓயுமா கண்டோம் – மொழி தெரியவாயினால் இப்போதே மன்றில் நடமாடும்நாயனார் என்று உரைப்போம் நாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
நாமத்தி னால்என்தன் நாத்திருத் தேன்நறை மாமலர்சேர்தாமத்தி னால்உன் சரண்பணி யேன்சார்வ தென்கொடுநான்வாமத்தி லேயொரு மானைத் தரித்தொரு மானைவைத்தாய்சேமத்தி னாலுன் திருத்தில்லை சேர்வதொர் செந்நெறியே.
சொற்பிரிப்பு
நாமத்தினால் என் தன் நாத்திருத்தேன் நறை மாமலர் சேர்தாமத்தினால் உன் சரண் பணி யேன் சார்வது என் கொடு நான்வாமத்திலே ஒரு மானைத் தரித்து ஒரு மானை வைத்தாய்சேமத்தினால் உன் திருத்தில்லை சேர்வதோர் செந்நெறியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
நெறிதரு குழலை அறலென்பர்கள் நிழலெழு மதியம் நுதலென்பர்கள்நிலவினும் வெளிது நகையென்பர்கள் நிறம்வரு கலசம் முலையென்பர்கள்அறிகுவ தரிதிவ் விடை யென்பர்கள் அடியிணை கமல மலரென்பர்கள்அவயவம் இனைய மடமங்கையர் அழகியர் அமையும் அவரென்செயமறிமழு வுடைய கரனென்கிலர் மறலியை முனியும் அரனென்கிலர்மதிபொதி சடில தரனென்கிலர் மலைமகள் மருவு புயனென்கிலர்செறிபொழில் நிலவு திலையென்கிலர் திருநடம் நவிலும் இறையென்கிலர்சிவகதி அருளும் அரசென்கிலர் சிலர்நர குறுவர் அறிவின்றியே.
சொற்பிரிப்பு
நெறிதரு குழலை அறல் என்பர்கள் நிழலெழு மதியம் நுதல் என்பர்கள்நிலவினும்வெளிது நகை என்பர்கள் நிறம் வரு கலசம் முலை என்பர்கள்அறிகுவது அரிது இவ்விடை என்பர்கள் அடியிணை கமல மலர்என்பர்கள்அவயவம் இனைய மடமங்கையர் அழகியர் அமையும் அவர் என் செயமறி மழு உடைய கரன் என்கிலர் மறலியை முனியும் அரன் என்கிலர்மதி பொதி சடிலதரன் என்கிலர் மலைமகள் மருவு புயன் என்கிலர்செறிபொழில் நிலவு திலை என்கிலர் திருநடம் நவிலும் இறை என்கிலர்சிவகதி அருளும் அரசு என்கிலர் சிலர் நர உறுவர் அறிவின்றியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
அறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும்கடும்பிணித் தொகையும் இடும்பை ஈட்டமும்இனையன பலசரக் கேற்றி வினையெனும்தொன்மீ காமன் உய்ப்ப அந்நிலைக்கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப் .....(5)புலனெனும் கோண்மீன் அலமந்து தொடரப்பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந் தலைக்கும்துயர்த்திரை உவட்டில் பெயர்ப்பிடம் அயர்த்துக்குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்துநிறையெனும் கூம்பு முரிந்து குறையா ........(10)உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும்மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம்கலங்குபு கவிழா முன்னம் அலங்கல்மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப்பையர வணிந்த தெய்வ நாயக .....(15)தொல்லெயில் உடுத்த தில்லை காவலவம்பலர் தும்பை அம்பல வாணநின்அருளெனும் நலத்தார் பூட்டித்திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே.
சொற்பிரிப்பு
அறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும்கடும்பிணித் தொகையும் இடும்பை ஈட்டமும்இனையன பல சரக்கு ஏற்றி வினையெனும்தொன்மீ காமன் உய்ப்ப அந்நிலைக்கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப் …5புலனெனும் கோண்மீன் அலமந்து தொடரப்பிறப்பெனும் பெருங்கடல் உறப் புகுந்து அலைக்கும்துயர்த்திரை உவட்டில் பெயர்ப்பிடம் அயர்த்துக்குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்துநிறையெனும் கூம்பு முரிந்து குறையா …10உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும்மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம்கலங்குபு கவிழா முன்னம் அலங்கல்மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப்பையரவு அணிந்த தெய்வ நாயக …15தொல்லெயில் உடுத்த தில்லை காவலவம்பலர் தும்பை அம்பலவாண நின்அருளெனும் நலத்தார் பூட்டித்திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே. …19
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்கென்தையல் வளைகொடுத்தல் சாலுமே - ஐயன்தேர்சேயே வருமளவில் சிந்தாத மாத்திரமேதாயே நமதுகையில் சங்கு.
சொற்பிரிப்பு
செய்ய திருமேனிச் சிற்றம்பலவருக்கு என்தையல் வளைகொடுத்தல் சாலுமே – ஐயன் தேர்சேயே வருமளவில் சிந்தாத மாத்திரமேதாயே நமது கையில் சங்கு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
சங்கிடத் தானிடத் தான்தன தாகச் சமைந்தொருத்திஅங்கிடத் தாள்தில்லை அம்பலக் கூத்தற் கவிர்சடைமேல்கொங்கிடத் தார்மலர்க் கொன்றையென் றாய்எங்கை நீயுமொருபங்கிடத் தான்வல்லை யேல்இல்லை யேல்உன் பசப்பொழியே.
சொற்பிரிப்பு
சங்கிடத்தான் இடத்தான் தன தாகச் சமைந்து ஒருத்திஅங்கிடத்தாள் தில்லை அம்பலக் கூத்தற்கு அவிர்சடை மேல்கொங்கிடத் தார் மலர்க்கொன்றை என் றாய் எம் கை நீயும் ஒருபங்கிடத்தான் வல்லையேல் இல்லை யேல் உன் பசப்பு ஒழியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
ஒழிந்த தெங்களுற வென்கொ லோஎரியில் ஒன்ன லார்கள்புரம் முன்னொர்நாள்விழுந்தெ ரிந்துதுக ளாக வென்றிசெய்த வில்லி தில்லைநகர் போலியார்சுழிந்த உந்தியில் அழுந்தி மேகலை தொடக்க நின்றவர் நடக்கநொந்தழிந்த சிந்தையினும் வந்த தாகிலுமொர் சிந்தை யாயொழிவ தல்லவே.
சொற்பிரிப்பு
ஒழிந்தது எங்கள் உறவு என்கொலோ எரியில் ஒன்னலார்கள் புரம் முன் ஓர் நாள்விழுந்து எரிந்து துகளாக வென்றிசெய்த வில்லி தில்லை நகர் போலியார்சுழிந்த உந்தியில் அழுந்தி மேகலை தொடக்க நின்றவர் நடக்க நொந்துஅழிந்த சிந்தையினும் வந்தது ஆகிலுமொர் சிந்தையாய் ஒழிவது அல்லவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
அல்லல் வாழ்க்கை வல்லிதிற் செலுத்தற்குக்கைத்தேர் உழந்து கார்வரும் என்றுவித்து விதைத்தும் விண்பார்த் திருந்தும்கிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டுமுளைமுதிர் பருவத்துப் பதியென வழங்கியும் ....(5)அருளா வயவர் அம்பிடை நடந்தும்இருளுறு பவ்வத் தெந்திரங் கடாஅய்த்துன்றுதிரைப் பரப்பிற் குன்றுபார்த் தியங்கியும்ஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும்தாளுழந் தோடியும் வாளுழந் துண்டும் ....(10)அறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும்சொற்பல புனைந்தும் கற்றன கழறியும்குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப் பூட்டிஐவர் ஐந்திடத் தீர்ப்ப நொய்தில்பிறந்தாங் கிறந்தும் இறந்தாங்கு பிறந்தும் .......(15)கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும்கொப்புட் செய்கை ஒப்பின் மின்போல்உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும்நெய்யெரி வளர்த்துப் பெய்முகிற் பெயல்தரும்தெய்வ வேதியர் தில்லை மூதூர் .........(20)ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்கடவுட் கண்ணுதல் நடமுயன் றெடுத்தபாதப் போதும் பாய்புலிப் பட்டும்மீதியாத் தசைத்த வெள்ளெயிற் றரவும்சேயுயர் அகலத் தாயிரங் குடுமி ..........(25)மணிகிடந் திமைக்கும் ஒருபே ராரமும்அருள்பொதிந் தலர்ந்த திருவாய் மலரும்நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்கங்கை வழங்கும் திங்கள் வேணியும்கண்ணிடைப் பொறித்து மனத்திடை அழுத்தியாங்கு ........(30)உள்மகிழ்ந் துரைக்க உறுதவஞ் செய்தனன்நான்முகன் பதத்தின் மேல்நிகழ் பதந்தான்உறுதற் கரியதும் உண்டோபெறுதற் கரியதோர் பேறுபெற் றேற்கே.
சொற்பிரிப்பு
அல்லல் வாழ்க்கை வல்லிதிற் செலுத்தற்குக்கைத்தேர் உழந்து கார் வரும் என்றுவித்து விதைத்தும் விண் பார்த்திருந்தும்கிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டுமுளைமுதிர் பருவத்துப் பதியென வழங்கியும் …5அருளா அயவர் அம்பிடை நடந்தும்இருள் உறு பவ்வத்து எந்திரம் கடாஅய்த்துன்று திரைப் பரப்பில் குன்று பார்த்து இயங்கியும்ஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும்தாள் உழந்து ஓடியும் வாள் உழந்து உண்டும் …10அறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும்சொற்பல புனைந்தும் கற்றன கழறியும்குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப் பூட்டிஐவர் ஐந்திடத்து ஈர்ப்ப நொய்தில்பிறந்தாங்கு இறந்தும் இறந்தாங்குப் பிறந்தும் …15கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும்கொப்புட் செய்கை ஒப்பின் மின் போல்உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும்நெய் எரி வளர்த்துப் பெய்முகிற் பெயல்தரும்தெய்வ வேதியர் தில்லை மூதூர் …20ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்கடவுள் கண்ணுதல் நடமுயன்று எடுத்தபாதப் போதும் பாய்புலிப் பட்டும்மீதி யாத்தசைத்த வெள் எயிற்று அரவும்சேய்உயர் அகலத்து ஆயிரம் குடுமி …25மணிகிடந்து இமைக்கும் ஒருபேர் ஆரமும்அருள்பொதிந்து அலர்ந்த திருவாய் மலரும்நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்கங்கை வழங்கும் திங்கள் வேணியும்கண்ணிடைப் பொறித்து மனத்திடை அழுத்தியாங்கு …30உள்மகிழ்ந்து உரைக்க உறுதவம் செய்தனன்நான்முகன் பதத்தின் மேல்நிகழ் பதந்தான்உறுதற்கு அரியதும் உண்டோபெறுதற்கு அரியதோர் பேறு பெற்றேற்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
பெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள்சுற்றோட ஓடித் தொழாநிற்கும் - ஒற்றைக்கைம்மாமறுகச் சீறியசிற் றம்பலத்தான் மான்தேர்போம்கோமறுகிற் பேதைக் குழாம்.
சொற்பிரிப்பு
பெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள்சுற்றோட ஓடித் தொழாநிற்கும் – ஒற்றைக் கைம்மா மறுகச் சீறிய சிற்றம்பலத்தான் மான் தேர் போம்கோமறுகிற் பேதைக் குழாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
பேதையெங் கேயினித் தேறியுய் வாள்பிர மன்தனக்குத்தாதைதன் தாதையென் றேத்தும் பிரான்தண் புலிசைப்பிரான்கோதையந் தாமத்தண் கொன்றை கொடான்இன்று கொல்லஎண்ணிஊதையும் காரும் துளியொடும் கூடி உலாவியவே.
சொற்பிரிப்பு
பேதை எங்கே இனித் தேறியுய் வாள் பிரமன் தனக்குத்தாதை தன் தாதையென்று ஏத்தும் பிரான் தண் புலிசைப்பிரான்கோதை அம் தாமத்தண் கொன்றை கொடான் இன்று கொல்ல எண்ணிஊதையும் காரும் துளியொடும் கூடி உலாவியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
உலவு சலதி வாழ்விடம் அமரர் தொழவு ணாஎனநுகரும் ஒருவர் ஊழியின் இறுதி ஒருவர் ஆழியபுலவு கமழ்க ரோடிகை உடைய புனிதர் பூசுரர்புலிசை யலர்செய் போதணி பொழிலின் நிழலின் வாழ்வதோர்கலவ மயில னார்சுருள் கரிய குழலி னார்குயில்கருது மொழியி னார்கடை நெடிய விழியி னார்இதழ்இலவில் அழகி யாரிடை கொடியின் வடிவி னார்வடிவெழுதும் அருமை யாரென திதய முழுதும் ஆள்வரே.
சொற்பிரிப்பு
உலவு சலதி வாழ்விடம் அமரர் தொழவுணா எனநுகரும் ஒருவர் ஊழியின் இறுதி ஒருவர் ஆழியபுலவு கமழ் கரோடிகை உடைய புனிதர் பூசுரர்புலிசையலர் செய் போதணி பொழிலின் நிழலின் வாழ்வதோர்கலவ மயிலனார் சுருள் கரிய குழலினார் குயில்கருது மொழியினார் கடை நெடிய விழியினார் இதழ்இலவில் அழகியார் இடை கொடியின் வடிவினார் வடிவுஎழுதும் அருமை யார் எனது இதய முழுதும் ஆள்வரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
ஆளெனப் புதிதின்வந் தடைந்திலம் அத்தநின்தாளின் ஏவல் தலையின் இயற்றிவழிவழி வந்த மரபினம் மொழிவதுன்ஐந்தெழுத் தவைஎம் சிந்தையிற் கிடத்திநனவே போல நாடொறும் பழகிக் ......(5)கனவிலும் நவிற்றும் காதலேம் வினைகெடக்கேட்பது நின்பெருங் கீர்த்தி மீட்பதுநின்னெறி அல்லாப் புன்னெறி படர்ந்தமதியில் நெஞ்சத்தை வரைந்து நிதியெனஅருத்திசெய் திடுவ துருத்திர சாதனம் .......(10)காலையும் மாலையும் கால்பெயர்த் திடுவதுன்ஆலயம் வலம் வரு தற்கே சால்பினில்கைகொடு குயிற்றுவ தைய நின்னதுகோயில் பல்பணி குறித்தே ஓயாதுஉருகி நின்னினைந் தருவி சோரக் ...........(15)கண்ணிற் காண்பதெவ் வுலகினும் காண்பனஎல்லாம்நீயேயாகி நின்றதோர் நிலையே நாயேன்தலைகொடு சார்வதுன் சரண்வழி அல்லால்அலைகடல் பிறழினும் அடாதே அதனால்பொய்த்தவ வேடர் கைத்தகப் படுத்தற்கு .........(20)வஞ்சச் சொல்லின் வார்வலை போக்கிச்சமயப் படுகுழி சமைத்தாங் கமைவயின்மானுட மாக்களை வலியப் புகுத்தும்ஆனா விரதத் தகப்படுத் தாழ்த்துவளைவுணர் வெனக்கு வருமோ உளர்தரு .........(25)நுரையுந் திரையும் நொப்புறு கொட்பும்வரையில் சீகர வாரியும் குரைகுடல்பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றிஎண்ணில வாகி இருங்கடல் அடங்கும்தன்மை போலச் சராசரம் அனைத்தும் ......(30)நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்நீஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய்வானோர்க் கரியாய் மறைகளுக் கெட்டாய்நான்மறை யாளர் நடுவுபுக் கடங்கிச்செம்பொன் தில்லை மூதூர் .......(35)அம்பலத் தாடும் உம்பர் நாயகனே.
சொற்பிரிப்பு
ஆளெனப் புதிதின் வந்து அடைந்திலம் அத்த நின்தாளின் ஏவல் தலையின் இயற்றிவழிவழி வந்த மரபினம் மொழிவது உன்ஐந்தெழுத்து அவை எம் சிந்தையிற் கிடத்திநனவே போல நாடொறும் பழகிக் …5கனவிலும் நவிற்றும் காதலேம் வினைகெடக்கேட்பது நின் பெரும் கீர்த்தி மீட்பதுநின்னெறி அல்லாப் புன்னெறி படர்ந்தமதியில் நெஞ்சத்தை வரைந்து நிதியெனஅருத்தி செய்து இடுவது உருத்திர சாதனம் …10காலையும் மாலையும் கால்பெயர்த்து இடுவது உன்ஆலயம் வலம் வருதற்கே சால்பினில்கைகொடு குயிற்றுவது ஐய நின்னதுகோயில் பல்பணி குறித்தே ஓயாதுஉருகி நின்னினைந்து அருவி சோரக் …15கண்ணிற் காண்பதது எவ்வுலகினும் காண்பன எல்லாம்நீயேயாகி நின்றதோர் நிலையே நாயேன்தலைகொடு சார்வது உன் சரண்வழி அல்லால்அலைகடல் பிறழினும் அடாதே அதனால்பொய்த்தவ வேடர் கைத்தகப் படுத்தற்கு …20வஞ்சச் சொல்லின் வார்வலை போக்கிச்சமயப் படுகுழி சமைத்தாங்கு அமைவயின்மானுட மாக்களை வலியப் புகுத்தும்ஆனா விரதத்து அகப்படுத்து ஆழ்த்துவளைவுணர் எனக்கு வருமோ உளர்தரு …25நுரையும் திரையும் நொப்புறு கொட்பும்வரையில் சீகர வாரியும் குரைகுடல்பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றிஎண்ணில வாகி இருங்கடல் அடங்கும்தன்மை போலச் சராசரம் அனைத்தும் …30நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும் நீஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய்வானோர்க்கு அரியாய் மறைகளுக்கு எட்டாய்நான்மறையாளர் நடுவு புக்கு அடங்கிச்செம்பொன் தில்லை மூதூர்அம்பலத்தாடும் உம்பர் நாயகனே. …36
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத்தாயனைய னாயருளும் தம்பிரான் - தூயவிரைமென்றுழாய் மாலொடயன் தேட வியன்தில்லைமன்றுளே ஆடும் மணி.
சொற்பிரிப்பு
நாய் அனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத்தாய் அனைய நாயருளும் தம்பிரான் – தூயவிரைமென் துழாய் மாலொடு அயன் தேட வியன் தில்லைமன்றுளே ஆடும் மணி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம் வேர்ப்பஅம் மன்றுக்கெல்லாம்அணியாய் அருள்நடம் ஆடும் பிரானை அடைந்துருகிப்பணியாய் புலன்வழி போம்நெஞ்ச மேயினிப் பையப்பையப்பிணியாய்க் கடைவழி சாதியெல் லோரும் பிணம்என்னவே.
சொற்பிரிப்பு
மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம் வேர்ப்ப அம் மன்றுக்கெல்லாம்அணியாய் அருள்நடம் ஆடும் பிரானை அடைந்துருகிப்பணியாய் புலன் வழி போம் நெஞ்சமே இனிப் பையப்பையப்பிணியாய்க் கடைவழி சாதி எல்லோரும் பிணம் என்னவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
என்னாம் இனிமட வரலாய் செய்குவ தினமாய் வண்டுகள் மலர்கிண்டித்தென்னா எனமுரல் பொழில்சூழ் தில்லையுள் அரனார் திருமுடி அணிதாமம்தன்னால் அல்லது தீரா தென்னிடர் தகையா துயிர்கரு முகிலேறிமின்னா நின்றது துளிவா டையும்வர வீசா நின்றது பேசாயே.
சொற்பிரிப்பு
என்னாம் இனிமட வரலாய் செய்குவது இனமாய் வண்டுகள் மலர்கிண்டித்தென்னா என முரல் பொழில் சூழ் தில்லையுள் அரனார் திருமுடி அணிதாமம்தன்னால் அல்லது தீராது என்னிடர் தகையாது உயிர் கரு முகிலேறிமின்னா நின்றது துளிவாடையும் வர வீசா நின்றது பேசாயே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
பேசு வாழி பேசு வாழிஆசையொடு மயங்கி மாசுறு மனமேபேசு வாழி பேசு வாழிகண்டன மறையும் உண்டன மலமாம்பூசின மாசாம் புணர்ந்தன பிரியும் ......(5)நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும்பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும்ஒன்றொன் றொருவழி நில்லா அன்றியும்செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர்கல்வியிற் சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர் ......(10)கொடையிற் பொலிந்தோர் படையிற் பயின்றோர்குலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர்எனையர்எங் குலத்தினர் இறந்தோர் அனையவர்பேரும் நின்றில போலும் தேரின்நீயும்அஃ தறிதி யன்றே மாயப் .....(15)பேய்த்தேர் போன்று நீப்பரும் உறக்கத்துக்கனவே போன்றும் நனவுப்பெயர் பெற்றமாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக்கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத்தன்மையர் இழிவு சார்ந்தனை நீயும் ........(20)நன்மையிற் திரிந்த புன்மையை யாதலின்அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகிவளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும்பன்மீன் போலவும்மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும் .............(25)ஆசையாம் பரிசத் தியானை போலவும்ஓசையின் விளிந்த புள்ளுப் போலவும்வீசிய மணத்தின் வண்டு போலவும்உறுவ துணராச் செறுவுழிச் சேர்ந்தனைநுண்ணூல் நூற்றுத் தன்கைப் படுக்கும் ..........(30)அறிவில் கீடத்து நுந்துழி போலஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டுஇடர்கெழு மனத்தினோ டியற்றுவ தறியாதுகுடர்கெழு சிறையறைக் குறங்குபு கிடத்திகறவை நினைந்த கன்றென இரங்கி ......(35)மறவா மனத்து மாசறும் அடியார்க்குஅருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்தனைமறையவர் தில்லை மன்றுள் ஆடும்இறையவன் என்கிலை என்நினைந் தனையே.
சொற்பிரிப்பு
பேசு வாழி பேசு வாழிஆசையொடு மயங்கி மாசுறு மனமேபேசு வாழி பேசு வாழிகண்டன மறையும் உண்டன மலமாம்பூசின மாசாம் புணர்ந்தன பிரியும் …5நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும்பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும்ஒன்றொன்று ஒருவழி நில்லா அன்றியும்செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர்கல்வியிற் சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர் …10கொடையிற் பொலிந்தோர் படையிற் பயின்றோர்குலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர்எனையர் எங்குலத்தினர் இறந்தோர் அனையவர்பேரும் நின்றில போலும் தேரின்நீயும் அஃது அறிதி அன்றே மாயப் …15பேய்த்தேர் போன்று நீப்பரும் உறக்கத்துக்கனவே போன்றும் நனவுப்பெயர் பெற்றமாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக்கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத்தன்மையர் இழிவு சார்ந்தனை நீயும் …20நன்மையிற் திரிந்த புன்மையை ஆதலின்அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகிவளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும்பன்மீன் போலவும்மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும் …25ஆசையாம் பரிசத்து யானை போலவும்ஓசையின் விளிந்த புள்ளுப் போலவும்வீசிய மணத்தின் வண்டு போலவும்உறுவது உணராச் செறுவுழிச் சேர்ந்தனைநுண்ணூல் நூற்றுத் தன்கைப் படுக்கும் …30அறிவில் கீடத்து நுந்துழி போலஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டுஇடர்கெழு மனத்தினோடு இயற்றுவது அறியாதுகுடர்கெழு சிறையறைக் குறங்குபு கிடத்திகறவை நினைந்த கன்றென இரங்கி …35மறவா மனத்து மாசறும் அடியார்க்குஅருள்சுரந்து அளிக்கும் அற்புதக் கூத்தனைமறையவர் தில்லை மன்றுள் ஆடும்இறையவன் என்கிலை என் நினைந்தனையே. …39
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
நினையார் மெலியார் நிறையழியார் வாளாப்புனைவார்க்குக் கொன்றை பொதுவோ - அனைவீரும்மெச்சியே காண வியன்தில்லை யான்அருளென்பிச்சியே நாளைப் பெறும்.
சொற்பிரிப்பு
நினையார் மெலியார் நிறையழியார் வாளாப்புனைவார்க்குக் கொன்றை பொதுவோ – அனைவீரும்மெச்சியே காண வியன் தில்லையான் அருள் என்பிச்சியே நாளைப் பெறும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
பெறுகின்ற எண்ணிலி தாயரும் பேறுறும் யானும்என்னைஉறுகின்ற துன்பங்கள் ஆயிர கோடியும் ஒய்வொடுஞ்சென்றிறுகின்ற நாள்களும் ஆகிக் கிடந்த இடுக்கணெல்லாம்அறுகின் றனதில்லை ஆளுடை யான்செம்பொன் அம்பலத்தே.
சொற்பிரிப்பு
பெறுகின்ற எண்ணிலி தாயரும் பேறுறும் யானும் என்னைஉறுகின்ற துன்பங்கள் ஆயிர கோடியும் ஒய்வொடுஞ் சென்றுஇறுகின்ற நாள்களும் ஆகிக் கிடந்த இடுக்கண் எல்லாம்அறுகின்றன தில்லை ஆளுடை யான் செம்பொன் அம்பலத்தே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கேஅன்புடையர் என்னுமிதென் ஆனையை உரித்துக்கம்பலம் உவந்தருளு வீர்மதனன் வேவக்கண்டருளு வீர்பெரிய காதலறி யாதேவம்பலர் நிறைந்துவசை பேசஒரு மாடேவாடைஉயிர் ஈரமணி மாமையும் இழந்தென்கொம்பல மருந்தகைமை கண்டுதக வின்றிக்கொன்றையரு ளீர்கொடியிர் என்றருளு வீரே.
சொற்பிரிப்பு
அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கேஅன்புடையர் என்னும் என் ஆனையை உரித்துக்கம்பலம் உவந்து அருளுவீர் மதனன் வேவக்கண்டருளுவீர் பெரிய காதல் அறியாதேவம்பலர் நிறைந்து வசை பேச ஒரு மாடேவாடை உயிர் ஈரமணி மாமையும் இழந்து என்கொம்பு அலமரும் தகைமை கண்டு தகவின்றிக்கொன்றை அருளீர் கொடியிர் என்று அருளுவீரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
அருளு வாழி அருளு வாழிபுரிசடைக் கடவுள் அருளு வாழிதோன்றுழித் தோன்றி நிலைதவக் கறங்கும்புற்பதச் செவ்வியின் மக்கள் யாக்கைக்குநினைப்பினுங் கடிதே இளமை நீக்கம் ...(5)அதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சிஅதனினுங் கடிதே கதுமென மரணம்வாணாள் பருகி உடம்பை வறிதாக்கிநாணாள் பயின்ற நல்காக் கூற்றம்இனைய தன்மைய திதுவே இதனை .....(10)எனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச்செய்தன சிலவே செய்வன சிலவேசெய்யா நிற்பன சிலவே அவற்றிடைநன்றென்ப சிலவே தீதென்ப சிலவேஒன்றினும் படாதன சிலவே என்றிவை .....(15)கணத்திடை நினைந்து களிப்பவும் கலுழ்பவும்கணக்கில் கோடித் தொகுதி அவைதாம்ஒன்றொன் றுணர்வுழி வருமோ அனைத்தும்ஒன்றா உணர்வுழி வருமோ என்றொன்றுதெளிவுழித் தேறல் செல்லேம் அளிய ......(20)மனத்தின் செய்கை மற்றிதுவே நீயேஅரியை சாலஎம் பெரும தெரிவுறில்உண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயேகண்டனை அவைநினைக் காணா அதுதான்நின்வயின் மறைத்தோய் அல்லை உன்னை .......(25)மாயாய் மன்னினை நீயே வாழிமன்னியும் சிறுமையிற் கரந்தோய் அல்லைபெருமையிற் பெரியோய் பெயர்த்தும் நீயேபெருகியும் சேணிடை நின்றோய் அல்லைதேர்வோர்க்குத் தம்மினும் அணியை நீயே ........(30)நண்ணியும் இடையொன்றின் மறைந்தோய் அல்லைஇடையிட்டு நின்னை மறைப்பதும் இல்லைமறைப்பினும் அதுவும்நீயே யாகி நின்றதோர் நிலையே, அஃதான்றுநினைப்பருங் காட்சி நின்னிலை இதுவே .......(35)நினைப்புறுங் காட்சி எம்நிலை அதுவேஇனிநனி இரப்பதொன் றுடையம் மன(ம்)மருண்டுபுன்மையின் நினைத்துப் புலன்வழி படரினும்நின்வயின் நினைந்தே மாகுதல் நின்வயின்நினைக்குமா நினைக்கப் பெறுதல் அனைத்தொன்றும் ........(40)நீயே அருளல் வேண்டும் வேய்முதிர்கயிலை புல்லென எறிவிசும்பு வறிதாகஇம்பர் உய்ய அம்பலம் பொலியத்திருவளர் தில்லை மூதூர்அருநடங் குயிற்றும் ஆதிவா னவனே.
சொற்பிரிப்பு
அருளு வாழி அருளு வாழிபுரிசடைக் கடவுள் அருளு வாழிதோன்றுழித் தோன்றி நிலைதவக் கறங்கும்புற்புதச் செவ்வியின் மக்கள் யாக்கைக்குநினைப்பினும் கடிதே இளமை நீக்கம் …5அதனினும் கடிதே மூப்பின் தொடர்ச்சிஅதனினும் கடிதே கதுமென மரணம்வாணாள் பருகி உடம்பை வறிதாக்கிநாணாள் பயின்ற நல்காக் கூற்றம்இனைய தன்மையது இதுவே இதனை …10எனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச்செய்தன சிலவே செய்வன சிலவேசெய்யா நிற்பன சிலவே அவற்றிடைநன்றென்ப சிலவே தீதென்ப சிலவேஒன்றினும் படாதன சிலவே என்றிவை …15கணத்திடை நினைந்து களிப்பவும் கலுழ்பவும்கணக்கில் கோடித் தொகுதி அவை தாம்ஒன்றொன்று உணர்வுழி வருமோ அனைத்தும்ஒன்றா உணர்வுழி வருமோ என்று ஒன்றும்தெளிவுழித் தேறல் செல்லேம் அளிய …20மனத்தின் செய்கை மற்றிதுவே நீயேஅரியை சால எம் பெரும தெரிவுறில்உண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயேகண்டனை அவை நினைக் காணா அதுதான்நின்வயின் மறைத்தோய் அல்லை உன்னை …25மாயாய் மன்னினை நீயே வாழிமன்னியும் சிறுமையிற் கரந்தோய் அல்லைபெருமையிற் பெரியோய் பெயர்த்தும் நீயேபெருகியும் சேணிடை நின்றோய் அல்லைதேர்வோர்க்குத் தம்மினும் அணியை நீயே …30நண்ணியும் இடையொன்றின் மறைந்தோய் அல்லைஇடையிட்டு நின்னை மறைப்பதும் இல்லைமறைப்பினும் அதுவும்நீயேயாகி நின்றதோர் நிலையே, அஃதான்றுநினைப்பரும் காட்சி நின்னிலை இதுவே …35நினைப்புறும் காட்சி எம்நிலை அதுவேஇனி நனி இரப்பதொன்று உடையம் மனம் மருண்டுபுன்மையின் நினைத்துப் புலன்வழி படரினும்நின்வயின் நினைந்தேம் ஆகுதல் நின்வயின்நினைக்குமா நினைக்கப் பெறுதல் அனைத்தொன்றும் …40நீயே அருளல் வேண்டும் வேய்முதிர்கயிலை புல்லென எறிவிசும்பு வறிதாகஇம்பர் உய்ய அம்பலம் பொலியத்திருவளர் தில்லை மூதூர்அருநடம் குயிற்றும் ஆதி வானவனே. …45
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
வானோர் பணிய மணியா சனத்திருக்கும்ஆனாத செல்வத் தரசன்றே - மால்நாகம்பந்திப்பார் நின்றாடும் பைம்பொன்னின் அம்பலத்தேவந்திப்பார் வேண்டாத வாழ்வு.
சொற்பிரிப்பு
வானோர் பணிய மணியாசனத்து இருக்கும்ஆனாத செல்வத்து அரசன்றே – மாநாகம்பந்திப்பார் நின்றாடும் பைம்பொன்னின் அம்பலத்தேவந்திப்பார் வேண்டாத வாழ்வு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
வாழ்வாக வும்தங்கள் வைப்பாக வும்மறை யோர்வணங்கஆள்வாய் திருத்தில்லை அம்பலத் தாய்உன்னை அன்றிஒன்றைத்தாழ்வார் அறியாச் சடுலநஞ் சுண்டிலை யாகில்அன்றேமாள்வார் சிலரையன் றோதெய்வ மாக வணங்குவதே.
சொற்பிரிப்பு
வாழ்வாகவும் தங்கள் வைப்பாகவும் மறையோர் வணங்கஆள்வாய் திருத்தில்லை அம்பலத் தாய் உன்னை அன்றி ஒன்றைத்தாழ்வார் அறியாச் சடில நஞ் சுண்டிலையாகில் அன்றேமாள்வார் சிலரை அன்றோ தெய்வமாக வணங்குவதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
வணங்குமிடை யீர்வறிது வல்லியிடை யாள்மேல்மாரசர மாரிபொழி யப்பெறு மனத்தோடுணங்கியிவள் தானுமெலி யப்பெறும் இடர்க்கேஊதையெரி தூவியுல வப்பெறு மடுத்தேபிணங்கிஅர வோடுசடை ஆடநட மாடும்பித்தரென வும்இதயம் இத்தனையும் ஓரீர்அணங்குவெறி யாடுமறி யாடுமது ஈரும்மையலையும் அல்லலையும் அல்லதறி யீரே.
சொற்பிரிப்பு
வணங்கும் இடையீர் வறிது வல்லியிடையாள் மேல்மார சரமாரி பொழியப் பெறு மனத்தோடுஉணங்கி இவள் தானும் மெலியப்பெறும் இடர்க்கேஊதை எரி தூவி உலவப்பெறும் அடுத்தேபிணங்கி அரவோடு சடை ஆட நடமாடும்பித்தரெனவும் இதயம் இத்தனையும் ஓரீர்அணங்கு வெறியாடு மறியாடு மது ஈரும்மையலையும் அல்லலையும் அல்லது அறியீரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
36
ஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக்குதிகொள் கங்கை மதியின்மீ தசையவண்டியங்கு வரைப்பின் எண்தோள் செல்வஒருபால் தோடும் ஒருபால் குழையும்இருபாற் பட்ட மேனி எந்தை .....(5)ஒல்லொலிப் பழனத் தில்லை மூதூர்ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்இமையா நாட்டத் தொருபெருங் கடவுள்வானவர் வணங்கும் தாதை யானேமதுமழை பொழியும் புதுமந் தாரத்துத் ....(10)தேனியங் கொருசிறைக் கானகத் தியற்றியதெய்வ மண்டபத் தைவகை அமளிச்சிங்கம் சுமப்ப ஏறி மங்கையர்இமையா நாட்டத் தமையா நோக்கத்தம்மார்பு பருகச் செம்மாந் திருக்கும் .....(15)ஆனாச் செல்வத்து வானோர் இன்பம்அதுவே எய்தினும் எய்துக கதுமெனத்தெறுசொ லாளர் உறுசினந் திருகிஎற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும் ........(20)வார்ந்தும் குறைத்தும் மதநாய்க் கீந்தும்செக்குரல் பெய்தும் தீநீர் வாக்கியும்புழுக்குடை அழுவத் தழுக்கியல் சேற்றுப்பன்னெடுங் காலம் அழுத்தி இன்னாவரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர் .........(25)நிரயஞ் சேரினும் சேர்க உரையிடைஏனோர் என்னை ஆனாது விரும்பிநல்லன் எனினும் என்க அவரேஅல்லன் எனினும் என்க நில்லாத்திருவொடு திளைத்துப் பெருவளஞ் சிதையாது ........(30)இன்பத் தழுந்தினும் அழுந்துக அல்லாத்துன்பந் துதையினும் துதைக முன்பில்இளமையொடு பழகிக் கழிமூப்புக் குறுகாதுஎன்றும் இருக்கினும் இருக்க அன்றிஇன்றே இறக்கினும் இறக்க ஒன்றினும் ........(35)வேண்டலும் இலனே வெறுத்தலும் இலனேஆண்டகைக் குரிசில்நின் அடியரொடும் குழுமித்தெய்வக் கூத்தும்நின் செய்ய பாதமும்அடையவும் அணுகவும் பெற்றகிடையாச் செல்வம் கிடைத்த லானே.
சொற்பிரிப்பு
ஈரவேரித்தார் வழங்கு சடிலத்துக்குதிகொள் கங்கை மதியின் மீது அசையவண்டியங்கு வரைப்பின் எண்தோள் செல்வஒருபால் தோடும் ஒருபால் குழையும்இருபாற் பட்ட மேனி எந்தை …5ஒல்லொலிப் பழனத் தில்லை மூதூர்ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்இமையா நாட்டத்து ஒருபெரும் கடவுள்வானவர் வணங்கும் தாதையானேமதுமழை பொழியும் புது மந்தாரத்துத் …10தேன் இயங்கு ஒருசிறைக் கானகத்து இயற்றியதெய்வ மண்டபத்து ஐவகை அமளிச்சிங்கம் சுமப்ப ஏறி மங்கையர்இமையா நாட்டத்து இமையா நோக்கத்தம்மார்பு பருகச் செம்மாந்து இருக்கும் …15ஆனாச் செல்வத்து வானோர் இன்பம்அதுவே எய்தினும் எய்துக கதுமெனத்தெறு சொலாளர் உறுசினந் திருகிஎற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும் …20வார்ந்தும் குறைத்தும் மதநாய்க்கு ஈந்தும்செக்குரல் பெய்தும் தீநீர் வாக்கியும்புழுக்குடை அழுவத்து அழுக்கியல் சேற்றுப்பன்னெடும் காலம் அழுத்தி இன்னாவரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர் …25நிரயம் சேரினும் சேர்க உரையிடைஏனோர் என்னை ஆனாது விரும்பிநல்லன் எனினும் என்க அவரேஅல்லன் எனினும் என்க நில்லாத்திருவொடு திளைத்துப் பெருவளம் சிதையாது …30இன்பத்து அழுந்தினும் அழுந்துக அல்லாத்துன்பம் துதையினும் துதைக முன்பில்இளமையொடு பழகிக் கழிமூப்புக் குறுகாதுஎன்றும் இருக்கினும் இருக்க அன்றிஇன்றே இறக்கினும் இறக்க ஒன்றினும் …35வேண்டலும் இலனே வெறுத்தலும் இலனேஆண்டகைக் குரிசில் நின் அடியரொடும் குழுமித்தெய்வக் கூத்தும் நின் செய்ய பாதமும்அடையவும் அணுகவும் பெற்றகிடையாச் செல்வம் கிடைத்தலானே. …40
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
37
ஆனேறே போந்தால் அழிவுண்டே அன்புடையநானேதான் வாழ்ந்திடினும் நன்றன்றே - வானோங்குவாமாண் பொழில்தில்லை மன்றைப் பொலிவித்தகோமானை இத்தெருவே கொண்டு.
சொற்பிரிப்பு
ஆனேறே போந்தால் அழிவுண்டே அன்புடையநானே தான் வாழ்ந்திடினும் நன்றன்றே – வானோங்குவாமாண் பொழில் தில்லை மன்றைப் பொலிவித்தகோமானை இத்தெருவே கொண்டு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
38
கொண்டல்வண் ணத்தவன் நான்முகன்இந்திரன் கோமகுடத்தண்டர்மிண் டித்தொழும் அம்பலக்கூத்தனுக் கன்புசெய்யாமிண்டர்மிண் டித்திரி வார்எனக்கென்னினி நானவன்தன்தொண்டர் தொண் டர்க்குத் தொழும்பாய்த்திரியத் தொடங்கினனே.
சொற்பிரிப்பு
கொண்டல் வண்ணத்தவன் நான்முகன்இந்திரன் கோமகுடத்துஅண்டர் மிண்டித் தொழும் அம்பலக்கூத்தனுக்கு அன்பு செய்யாமிண்டர் மிண்டு இத்திரிவார் எனக்குஎன் இனி நானவன்தன்தொண்டர் தொண்டர்க்குத் தொழும்பாய்த்திரியத் தொடங்கினனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
39
தொடர நரைத்தங்க முன்புள வாயின தொழில்கள் மறுத்தொன்றும் ஒன்றி யிடாதொருசுளிவு தலைக்கொண்டு புன்புலை வாரிகள் துளையொழு கக்கண்டு சிந்தனை ஓய்வொடுநடைகெட முற்கொண்ட பெண்டிர் பொறாவொரு நடலை நமக்கென்று வந்தன பேசிடநலியிரு மற்கஞ்சி உண்டி வெறாவிழு நரக உடற்கன்பு கொண்டலை வேன்இனிமிடலொடி யப்பண்டி லங்கையர் கோன்ஒரு விரலின் அமுக்குண்டு பண்பல பாடியவிரகு செவிக்கொண்டு முன்புள தாகிய வெகுளி தவிர்த்தன்று பொன்றி யிடாவகைதிடமருள் வைக்குஞ் செழுஞ்சுடர் ஊறிய தெளியமு தத்தின் கொழுஞ்சுவை நீடியதிலைநக ரிற்செம்பொன் அம்பல மேவிய சிவனை நினைக்குந் தவஞ்சது ராவதே.
சொற்பிரிப்பு
தொடர நரைத்து அங்கம் முன்பு உளவாயின தொழில்கள் மறுத்து ஒன்றும் ஒன்றியிடாது ஒருசுளிவு தலைக்கொண்டு புன்புலை வாரிகள் துளையொழுகக் கண்டு சிந்தனை ஓய்வொடுநடை கெட முற்கொண்ட பெண்டிர் பொறா ஒரு நடலை நமக்கென்று வந்தன பேசிடநலி இருமற்கு அஞ்சி உண்டி வெறா விழு நரக உடற்கு அன்பு கொண்டு அலைவேன் இனிமிடல் ஒடியப் பண்டு இலங்கையர் கோன் ஒரு விரலின் அமுக்குண்டு பண் பல பாடியவிரகு செவிக்கொண்டு முன்பு உளதாகிய வெகுளி தவிர்த்தன்று பொன்றியிடா வகைதிடம் அருள் வைக்கும் செழுஞ்சுடர் ஊறிய தெளிய அமுதத்தின் கொழுஞ்சுவை நீடியதிலை நகரில் செம்பொன் அம்பல மேவிய சிவனை நினைக்கும் தவம் சதுராவதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
40
சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள்ஆழி கொடுத்த பேரருள் போற்றிமுயற்சியொடு பணிந்த இயக்கர்கோ னுக்குமாநிதி இரண்டும் ஆனாப் பெருவளத்துஅளகை ஒன்றும் தளர்வின்றி நிறுவிய .....(5)செல்வங் கொடுத்த செல்வம் போற்றிதாள்நிழல் அடைந்த மாணிக் காகநாண்முறை பிறழாது கோண்முறை வலித்துப்பதைத்துவருங் கூற்றைப் படிமிசைத் தெறிக்கஉதைத்துயிர் அளித்த உதவி போற்றி ....(10)குலைகுலை குலைந்த நிலையாத் தேவர்படுபேர் அவலம் இடையின்றி விலக்கிக்கடல்விடம் அருந்தின கருணை போற்றிதவிராச் சீற்றத் தவுணர் மூவெயில்ஒல்லனல் கொளுவி ஒருநொடி பொடிபட ......(15)வில்லொன்று வளைத்த வீரம் போற்றிபூமென் கரும்பொடு பொடிபட நிலத்துக்காமனைப் பார்த்த கண்ணுதல் போற்றிதெய்வ யாளி கைமுயன்று கிழித்தெனக்கரியொன் றுரித்த பெருவிறல் போற்றி .......(20)பண்டு பெரும்போர்ப் பார்த்தனுக் காகக்கொண்டு நடந்த கோலம் போற்றிவிரற்பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்தஅரக்கனை நெரித்த ஆண்மை போற்றிவிலங்கல் விண்டு விழுந்தென முன்னாள் ........(25)சலந்தரன் தடிந்த தண்டம் போற்றிதாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப்பரிகலங் கொடுத்த திருவுளம் போற்றிநின்முதல் வழிபடத் தன்மகன் தடிந்ததொண்டர் மனையில் உண்டல் போற்றி .......(30)வெண்ணெய் உண்ண எண்ணுபு வந்துநந்தா விளக்கை நுந்துபு பெயர்த்ததாவுபுல் எலிக்கு மூவுல காளநொய்தினில் அளித்த கைவளம் போற்றிபொங்குளை அழல்வாய்ப் புகைவிழி ஒருதனிச் ......(35)சிங்கங் கொன்ற சேவகம் போற்றிவரிமிடற் றெறுழ்வலி மணியுகு பகுவாய்உரகம் பூண்ட ஒப்பனை போற்றிகங்கையும் கடுக்கையும் கலந்துழி ஒருபால்திங்கள் சூடிய செஞ்சடை போற்றி .......(40)கடவுள் இருவர் அடியும் முடியும்காண்டல் வேண்டக் கனற்பிழம்பாகிநீண்டு நின்ற நீளம் போற்றிஆலம் பில்குநின் சூலம்போற்றிகூறுதற் கரியநின் ஏறு போற்றி .......(45)ஏக வெற்பன் மகிழும் மகட் கிடப்பாகங் கொடுத்த பண்பு போற்றிதில்லை மாநகர் போற்றி தில்லையுட்செம்பொன் அம்பலம் போற்றி அம்பலத்தாடும் நாடகம் போற்றி என்றாங்கு .........(50)என்றும் போற்றினும் என்தனக் கிறைவஆற்றல் இல்லை ஆயினும்போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே.
சொற்பிரிப்பு
சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள்ஆழி கொடுத்த பேரருள் போற்றிமுயற்சியொடு பணிந்த இயக்கர் கோனுக்குமாநிதி இரண்டும் ஆனாப் பெருவளத்துஅளகை ஒன்றும் தளர்வின்றி நிறுவிய …5செல்வம் கொடுத்த செல்வம் போற்றிதாள்நிழல் அடைந்த மாணிக்காகநாண்முறை பிறழாது கோண்முறை வலித்துப்பதைத்து வரும் கூற்றைப் படிமிசைத் தெறிக்கஉதைத்து உயிர் அளித்த உதவி போற்றி …10குலைகுலை குலைந்த நிலையாத் தேவர்படுபேர் அவலம் இடையின்றி விலக்கிக்கடல் விடம் அருந்தின கருணை போற்றிதவிராச் சீற்றத்து அவுணர் மூவெயில்ஒல் அனல் கொளுவி ஒருநொடிப் பொடிபட …15வில்லொன்று வளைத்த வீரம் போற்றிபூமென் கரும்பொடு பொடிபட நிலத்துக்காமனைப் பார்த்த கண்ணுதல் போற்றிதெய்வ யாளி கைமுயன்று கிழித்தெனக்கரியொன்று உரித்த பெரு விறல் போற்றி …20பண்டு பெரும்போர்ப் பார்த்தனுக்காகக்கொண்டு நடந்த கோலம் போற்றிவிரல் பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்தஅரக்கனை நெரித்த ஆண்மை போற்றிவிலங்கல் விண்டு விழுந்தென முன்னாள் …25சலந்தரன் தடிந்த தண்டம் போற்றிதாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப்பரிகலம் கொடுத்த திருவுளம் போற்றிநின்முதல் வழிபடத் தன்மகன் தடிந்ததொண்டர் மனையில் உண்டல் போற்றி …30வெண்ணெய் உண்ண எண்ணுபு வந்துநந்தா விளக்கை நுந்துபு பெயர்த்ததாவு புல் எலிக்கு மூவுலகு ஆளநொய்தினில் அளித்த கைவளம் போற்றிபொங்குளை அழல்வாய்ப் புகைவிழி ஒருதனிச் …35சிங்கம் கொன்ற சேவகம் போற்றிவரி மிடற்று எழ்வலி மணியுகு பகுவாய்உரகம் பூண்ட ஒப்பனை போற்றிகங்கையும் கடுக்கையும் கலந்துழி ஒருபால்திங்கள் சூடிய செஞ்சடை போற்றி …40கடவுள் இருவர் அடியும் முடியும்காண்டல் வேண்டக் கனற் பிழம்பாகிநீண்டு நின்ற நீளம் போற்றிஆலம் பில்கு நின் சூலம் போற்றிகூறுதற்கு அரிய நின் ஏறு போற்றி …45ஏக வெற்பன் மகிழும் மகட்கு இடப்பாகம் கொடுத்த பண்பு போற்றிதில்லை மாநகர் போற்றி தில்லையுட்செம்பொன் அம்பலம் போற்றி அம்பலத்துஆடும் நாடகம் போற்றி என்றாங்கு …50என்றும் போற்றினும் என்தனக் கு இறைவஆற்றல் இல்லை ஆயினும்போற்றி போற்றி நின் பொலம்பூ அடிக்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.