1
ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர்மும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக்குடற்புலவு கமழும் அடற்கழுப் படையவன்மதலை மாமதந் துவன்றிய கதனுடைக்கடதடக் கபோலத் தோரிட மருப்பிற்கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன்சேவடி யுகளம் அல்லதுயாவையும் இலமினி இருநிலத் திடையே.
சொற்பிரிப்பு
ஒரு நெடும் கங்கை இருங்கு உறும் பைம்புகர்மும்முகச் செந்நுதி நாலிணர் வெள் நிணக்குடற் புலவு கமழும் அடற் கழுப்படையவன்மதலை மாமதந் துவன்றிய கதனுடைக்கட தடக் கபோலத்து ஓரிட மருப்பிற்கரண்டக உதரத்து முரண் தரு குழவி தன்சேவடி உகளம் அல்லதுயாவையும் இலம் இனி இருநிலத்திடையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.