1
முதல்வன் வகுத்த மதலை மாடத்துஇடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற்பள்ளிச் செம்புய லுள்விழு துறீஇப்புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர்எறிவளி எடுப்பினுஞ் சிறுநடுக் குறாநின்அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசைஇலங்குவளைத் தனிப்போது விரித்தஅலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே.
சொற்பிரிப்பு
முதல்வன் வகுத்த மதலை மாடத்துஇடவரை ஊன்றிய கடவுள் பாண்டில்பள்ளிச் செம்புயல் உள் விழுதுறீ இப்புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர்எறிவளி எடுப்பினும் சிறு நடுக்குறா நின்அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசைஇலங்குவளைத் தனிப்போது விரித்தஅலங்குகதிர் ஒலியல் நீ அணிந்தது என்மாறே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
மாறு தடுத்த மணிக்கங்கை திங்களின்கீறு தடுப்பக் கிடக்குமே - நீறடுத்தசெந்தாழ் வரையின் திரள்போல் திருமேனிஎந்தாய்நின் சென்னி இடை.
சொற்பிரிப்பு
மாறு தடுத்த மணிக்கங்கை திங்களின்கீறு தடுப்பக் கிடக்குமே – நீறு அடுத்தசெந்தாழ் வரையின் திரள் போல் திருமேனிஎந்தாய் நின் சென்னி இடை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
இடைதரில் யாமொன் றுணர்த்துவ துண்டிமை யோர்சிமையத்தடைதரு மூரிமந் தாரம் விராய்நதி வெண்ணிலவின்தொடைதரு துண்டங் கிடக்கினுந் தொண்டர் ஒதுக்கியிட்டபுடைதரு புல்லெருக் குஞ்செல்லு மோநின் புரிசடைக்கே.
சொற்பிரிப்பு
இடைதரில் யாம் ஒன்று உணர்த்துவது உண்டு இமையோர் சிமையத்துஅடைதரு மூரி மந்தாரம் விராய் நதி வெண்ணிலவின்தொடை தரு துண்டம் கிடக்கினும் தொண்டர் ஒதுக்கியிட்டபுடை தரு புல் எருக்கும் செல்லுமோ நின் புரிசடைக்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
சடையே, நீரகந் ததும்பி நெருப்புக் கலிக்கும்மேமிடறே, நஞ்சகந் துவன்றி அமிர்து பிலிற்றும்மேவடிவே, முளிஎரி கவைஇத் தளிர்தயங் கும்மேஅடியே, மடங்கல்மதஞ் சீறி மலர்பழிக் கும்மேஅஃதான்று, இனையஎன் றறிகிலம் யாமே முனைதவத்தலைமூன்று வகுத்த தனித்தாட்கொலையூன்று குடுமி நெடுவே லோயே.
சொற்பிரிப்பு
சடையே, நீரகம் ததும்பி நெருப்புக் கலிக்கும்மேமிடறே, நஞ்சகம் துவன்றி அமிர்து பிலிற்றும்மேவடிவே, முளி எரி கவைஇத் தளிர் தயங்கும்மேஅடியே, மடங்கல் மதம் சீறி மலர் பழிக்கும்மேஅஃதான்று, இனைய என்று அறிகிலம் யாமே முனை தவத்தலை மூன்று வகுத்த தனித்தாள்கொலையூன்று குடுமி நெடுவேலோயே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
வேலை முகடும் விசும்பகடும் கைகலந்தகாலைநீர் எங்கே கரந்தனையால் -மாலைப்பிறைக்கீறா கண்ணுதலா பெண்பாகா ஐயோஇறைக்கூறாய் எங்கட் கிது.
சொற்பிரிப்பு
வேலை முகடும் விசும்பு அகடும் கைகலந்தகாலை நீர் எங்கே கரந்தனையால் - மாலைப்பிறைக்கீறா கண்ணுதலா பெண்பாகா ஐயோஇறைக் கூறாய் எங்கட்கு இது.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
இதுநீர் ஒழிமின் இடைதந் துமையிமை யத்தரசிபுதுநீர் மணத்தும் புலியத ளேஉடை பொங்குகங்கைமுதுநீர் கொழித்த இளமணல் முன்றில்மென் றோட்டதிங்கள்செதுநீர் ததும்பத் திவளஞ்செய் செஞ்சடைத் தீவண்ணரே.
சொற்பிரிப்பு
இதுநீர் ஒழிமின் இடைதந்து உமை இமையத்து அரசிபுதுநீர் மணத்தும் புலியதளே உடை பொங்கு கங்கைமுதுநீர் கொழித்த இளமணல் முன்றில் மென் தோட்ட திங்கள்செதுநீர் ததும்பத் திவளஞ் செய் செஞ்சடைத் தீவண்ணரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
வண்ணம், ஐஞ்சுதலை கவைஇப் பவள மால்வரைமஞ்சுமி விலகிப் பகல்செகுக் கும்மேஎன்னைப், பழமுடைச் சிறுகலத் திடுபலி பெய்வோள்நெஞ்சகம் பிணிக்கும் வஞ்சமோ உடைத்தேஅஃதான்று, முளையெயிற்றுக் குருளை இன்துயில் எடுப்பநடுங்குதலைச் சிறுநிலா விதிர்க்கும் கொடும்பிறைத்தேமுறு முதிர்சடை இறைவமாமுறு கொள்கை மாயமோ உடைத்தே.
சொற்பிரிப்பு
வண்ணம் ஐஞ்சுதலை கவைஇப் பவள மால்வரைமஞ்சு மின் விலகிப் பகல் செகுக்கும்மேஎன்னைப் பழமுடைச் சிறு கலத் திடு பலி பெய்வோள்நெஞ்சகம் பிணிக்கும் வஞ்சமோ உடைத்தேஅஃதான்று முளை எயிற்றுக் குருளை இன்துயில் எடுப்பநடுங்குதலைச் சிறுநிலா விதிர்க்கும் கொடும் பிறைத்துஏமுறு முதிர்சடை இறைவமா முறு கொள்கை மாயமோ உடைத்தே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
உடைதலையின் கோவை ஒருவடமோ கொங்கைபுடைமலிந்த வெள்ளெருக்கம் போதோ - சடைமுடிமேல்முன்னநாள் பூத்த முகிழ்நிலவோ முக்கணாஇன்னநாள் கண்ட திவள்.
சொற்பிரிப்பு
உடைதலையின் கோவை ஒருவடமோ கொங்கைபுடைமலிந்த வெள்ளெருக்கம் போதோ – சடைமுடி மேல்முன்னநாள் பூத்த முகிழ் நிலவோ முக்கணாஇன்னநாள் கண்டது இவள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
இவளப் பனிமால் இமையத் தணங்குகற் றைச்சடைமேல்அவளப்புத் தேளிர் உலகிற் கரசி அதுகொண்டென்னைஎவளுக்கு நீநல்ல தியாரைமுன் எய்திற்றெற் றேயிதுகாண்தவளப் பொடிச்செக்கர் மேனிமுக் கண்ணுடைச் சங்கரனே.
சொற்பிரிப்பு
இவள் அப்பனிமால் இமையத்து அணங்கு கற்றைச் சடைமேல்அவள் அப்புத்தேளிர் உலகிற்கு அரசி அதுகொண்டு என்னைஎவளுக்கு நீ நல்லதி யாரை முன் எய்திற்று எற்றே இதுகாண்தவளப் பொடிச் செக்கர் மேனி முக் கண்ணுடைச் சங்கரனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
கரதலம் நுழைத்த மரகதக் கபாடத்துஅயில்வழங்கு குடுமிக் கயிலை நாடநின்அணங்குதுயில் எடுப்பிற் பிணங்குநிலாப் பிணையல்யாமே கண்டதும் இலமே தாமாமூவா எஃகமும் முரணும்ஓவாது பயிற்றும் உலகமால் உளதே.
சொற்பிரிப்பு
கரதலம் நுழைத்த மரகதக் கபாடத்துஅயில் வழங்கு குடுமிக் கயிலை நாட நின்அணங்கு துயில் எடுப்பிற் பிணங்கு நிலாப் பிணையல்யாமே கண்டதும் இலமே தாமாமூவா எஃகமும் முரணும்ஓவாது பயிற்றும் உலகமால் உளதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
உளரொளிய கங்கை ஒலிதிரைகள் மோதவளரொளிதேய்ந் துள்வளைந்த தொக்கும் - கிளரொளியபேதைக் கருங்கட் பிணாவின் மணாளனார்கோதைப் பிறையின் கொழுந்து.
சொற்பிரிப்பு
உளர் ஒளிய கங்கை ஒலிதிரைகள் மோதவளரொளி தேய்ந்து உள்வளைந்த தொக்கும் – கிளரொளியபேதைக் கருங்கட் பிணாவின் மணாளனார்கோதைப் பிறையின் கொழுந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
கொழுந்திரள் தெண்ணில வஞ்சிநின் கூரிருள் வார்பளிங்கின்செழுந்திரட் குன்றகஞ் சென்றடைந் தாலொக்குந் தெவ்வர்நெஞ்சத்தழுந்திரள் கண்டத் தவளப் பொடிச்செக்கர் மேனிநின்றோர்எழுந்திரட் சோதிப் பிழம்புமென் உள்ளத் திடங்கொண்டவே.
சொற்பிரிப்பு
கொழுந்திரள் தெண்ணிலவு அஞ்சி நின் கூரிருள் வார் பளிங்கின்செழுந்திரள் குன்றகம் சென்றடைந்தால் ஒக்கும் தெவ்வர் நெஞ்சத்துஅழுந்திரள் கண்டத் தவளப் பொடிச் செக்கர் மேனி நின்றோர்எழுந்திரள் சோதிப் பிழம்பும் என் உள்ளத்து இடங்கொண்டவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
கொண்டற் கார்எயிற்றுச் செம்மருப் பிறாலின்புண்படு சிமையத்துப் புலவுநாறு குடுமிவரையோன் மருக புனலாள் கொழுநஇளையோன் தாதை முதுகாட்டுப் பொருநநின்நீறாடு பொலங்கழல் பரவவேறாங்கு கவர்க்குமோ வீடுதரு நெறியே.
சொற்பிரிப்பு
கொண்டல் கார் எயிற்றுச் செம்மருப்பு இறாலின்புண்படு சிமையத்துப் புலவுநாறு குடுமிவரையோன் மருக புனலாள் கொழுநஇளையோன் தாதை முதுகாட்டுப் பொருந நின்நீறாடு பொழங்கழல் பரவவேறாங்கு கவர்க்குமோ வீடு தரு நெறியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
நெறிவிரவு கொன்றை நெடும்படற்கீழ்க் கங்கைஎறிதிரைகள் ஈர்த்தெற்ற ஏறிப் - பொறிபிதிரஈற்றராக் கண்படுக்கும் இண்டைச் சடைச்செங்கண்ஏற்றரால் தீரும் இடர்.
சொற்பிரிப்பு
நெறிவிரவு கொன்றை நெடும்படற் கீழ்க் கங்கைஎறிதிரைகள் ஈர்த்து எற்ற ஏறிப் – பொறி பிதிரஈற்று அராக் கண்படுக்கும் இண்டைச் சடைச் செங்கண்ஏற்றரால் தீரும் இடர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
இடர்தரு தீவினைக் கெள்கிநை வார்க்குநின் ஈரடியின்புடைதரு தாமரைப் போதுகொ லாம்சரண் போழருவிப்படர்தரு கொம்பைப் பவளவண் ணாபரு மாதைமுயங்கடைதரு செஞ்சுடர்க் கற்றையொக் குஞ்சடை அந்தணனே.
சொற்பிரிப்பு
இடர்தரு தீவினைக்கு எள்கி நைவார்க்கு நின் ஈரடியின்புடைதரு தாமரைப் போது கொலாம் சரண் போழ் அருவிப்படர் தரு கொம்பைப் பவளவண்ணா பருமாதை முயங்குஅடைதரு செஞ்சுடர்க் கற்றை ஒக்கும் சடை அந்தணனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
அந்த ணாளர் செந்தொடை ஒழுக்கமும்அடலோர் பயிற்றும்நின் சுடர்மொழி ஆண்மையும்அவுணர் நன்னாட் டிறைவன் ஆகிக்குறுநெடுந் தானை பரப்பித் தறுகண்மால்விடை அடரத் தாள்நிமிர்ந் துக்ககாய்சின அரவுநாண் பற்றி நீயோர்நெடுவரை நெளிய வாங்கிச்சுடுகணை எரிநிமிர்த்துத் துரந்த ஞான்றே.
சொற்பிரிப்பு
அந்தணாளர் செந்தொடை ஒழுக்கமும்அடலோர் பயிற்றும் நின் சுடர்மொழி ஆண்மையும்அவுணர் நன்னாட்டு இறைவன் ஆகிக்குறுநெடுந் தானை பரப்பித் தறுகண்மால்விடை அடரத் தாள் நிமிர்ந்து உக்ககாய்சின அரவு நாண் பற்றி நீயோர்நெடுவரை நெளிய வாங்கிச்சுடுகணை எரி நிமிர்த்துத் துரந்த ஞான்றே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
ஞான்ற புனமாலை தோளலைப்ப நாண்மதியம்ஈன்ற நிலவோடும் இவ்வருவான் - மூன்றியங்குமூதூர் வியன்மாடம் முன்னொருகால் துன்னருந்தீமீதூரக் கண்சிவந்த வேந்து.
சொற்பிரிப்பு
ஞான்ற புனமாலை தோளலைப்ப நாண்மதியம்ஈன்ற நிலவோடும் இவ்வருவான் – மூன்று இயங்குமூதூர் வியன் மாடம் முன் ஒருகால் துன்னருந் தீமீதூரக் கண் சிவந்த வேந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
வேந்துக்க மாக்கடற் சூரன்முன் னாள்பட வென்றிகொண்டசேந்தற்குத் தாதையிவ் வையம் அளந்ததெய் வத்திகிரிஏந்தற்கு மைத்துனத் தோழன்இன் தேன்மொழி வள்ளியென்னும்கூந்தற் கொடிச்சிதன் மாமன்வெம் மால்விடைக் கொற்றவனே.
சொற்பிரிப்பு
வேந்துக்க மாக்கடல் சூரன் முன்னாள் பட வென்றி கொண்டசேந்தற்குத் தாதை இவ் வையம் அளந்த தெய்வத் திகிரிஏந்தற்கு மைத்துனத் தோழன் இன் தேன்மொழி வள்ளி என்னும்கூந்தல் கொடிச்சி தன் மாமன் வெம் மால்விடைக் கொற்றவனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
கொற்றத் துப்பில் ஒன்றை ஈன்றதுணங்கையஞ் செல்வத் தணங்குதரு முதுகாட்டுப்பேய்முதிர் ஆயத்துப் பிணவின் கொழுநநின்நேர்கழல் கவைஇ இலங்கிதழ்த் தாமம்தவழ்தரு புனல்தலைப் படுநர்அவல மாக்கடல் அழுந்தலோ இலரே.
சொற்பிரிப்பு
கொற்றத் துப்பில் பொற்றை ஈன்றசுணங்கை அம் செல்வத்து அணங்கு தரு முதுகாட்டுப்பேய்முதிர் ஆயத்துப் பிணவின் கொழுந நின்நேர்கழல் கவைஇ இலங்கிதழ்த் தாமம்தவழ்தரு புனல்தலைப் படுநர்அவல மாக்கடல் அழுந்தலோ இலரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
இலர்கொலாம் என்றிளைஞர் ஏசப் பலிக்கென்றுலகெலாஞ் சென்றுழல்வ ரேனும் -மலர்குலாம்திங்கட் குறுந்தெரியல் தேவர்க்காட் செய்வதேஎங்கட் குறுந்தெரியின் ஈண்டு.
சொற்பிரிப்பு
இலர்கொலாம் என்று இளைஞர் ஏசப் பலிக்கென்றுஉலகெலாம் சென்று உழல்வரேனும் - மலர்குலாம்திங்கள் குறுந்தெரியல் தேவர்க்கு ஆள் செய்வதேஎங்கட்கு உறும்; தெரியின் ஈண்டு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
ஈண்டுமுற் றத்தொற்றை மால்விடை ஏறியை அம்முனைநாள்வேண்டிமுற் றத்திரிந் தெங்கும் பெறாது வெறுங்கைவந்தார்பூண்டஒற் றைச்செங்கண் ஆரமும் கற்றைச் சடைப்புனலும்நீண்டஒற் றைப் பிறைக் கீளும்எப் போதும்என் நெஞ்சத்தவே.
சொற்பிரிப்பு
ஈண்டு முற்றத்து ஒற்றை மால்விடை ஏறியை அம்முனைநாள்வேண்டி முற்றத்து இரிந்து எங்கும் பெறாது வெறுங்கை வந்தார்பூண்ட ஒற்றைச் செங்கண் ஆரமும் கற்றைச் சடைப் புனலும்நீண்ட ஒற்றைப் பிறைக் கீளும் எப்போதும் என் நெஞ்சத்தவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
நெஞ்சிற் கொண்ட வஞ்சமோ உடைத்தேமடவோர் விரும்புநின் விளையாட் டியல்போமருள்புரி கொள்கைநின் தெருளா மையோயாதா கியதோ எந்தை நீதியென்றுடைதலை நெடுநிலா வெறியல்கடைதலென் றருளிச் சூடிய பொருளே.
சொற்பிரிப்பு
நெஞ்சிற் கொண்ட வஞ்சமோ உடைத்தேமடவோர் விரும்பு நின் விளையாட்டு இயல்போமருள்புரி கொள்கை நின் தெருளாமையோயாதாகியதோ எந்தை நீதியென்றுஉடைதலை நெடுநிலா வெறியல்கடைதல் என்று அருளிச் சூடிய பொருளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
பொருளாக யானிரந்தால் புல்லெருக்கின் போதும்அருளான்மற் றல்லாதார் வேண்டின் - தெருளாதபான்மறா மான்மறிக்கைப் பைங்கட் பகட்டுரியான்தான்மறான் பைங்கொன்றைத் தார்.
சொற்பிரிப்பு
பொருளாக யான் இரந்தால் புல்லெருக்கின் போதும்அருளான் மற்று அல்லாதார் வேண்டின் – தெருளாதபால் மறா மான்மறிக்கைப் பைங்கன் பகட்டு அரியான்தான்மறான் பைங்கொன்றைத் தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
தாரிளங் கொன்றைநல் ஏறு கடாவித் தலைமைமிக்கஏரிள மென்முலைப் பொன்மலை யாட்டிக் கெற் றேயிவனோர்பேரிளங் கொங்கைப் பிணாவொடுங் கூடிப் பிறைக்கொழுந்தின்ஓரிளந் துண்டஞ் சுமந்தையம் வேண்டி உழிதருமே.
சொற்பிரிப்பு
தாரிளம் கொன்றை நல் ஏறு கடாவித் தலைமை மிக்கஏரிய மென்முலைப் பொன்மலை ஆட்டிக்கு எற்றே இவனோர்பேரிளம் கொங்கைப் பிணாவொடும் கூடிப் பிறைக்கொழுந்தின்ஓரிளம் துண்டம் சுமந்து ஐயம் வேண்டி உழிதருமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
உழிதரல் மடிந்து கழுதுகண் படுக்கும்இடருறு முதுகாட்டுச் சீரியல் பெருமபுகர்முகத் துளைக்கை உரவோன் தாதைநெடியோன் பாகநின் சுடர்மொழி ஆண்மைபயிற்று நாவலர்க்கிடர்தரு தீவினை கெடுத்தலோ எளிதே.
சொற்பிரிப்பு
உழிதரல் மடிந்து கழுது கண் படுக்கும்இடர் உறு முதுகாட்டுச் சீர் இயல் பெருமபுகர் முகத் துளைக்கை உரவோன் தாதைநெடியோன் பாக நின் சுடர்மொழி ஆண்மைபயிற்று நாவலர்க்கு இடர்தரு தீவினை கெடுத்தலோ எளிதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
எளியமென் றெள்கி இகழாது நாளும்அளியம்ஆட் செய்தாலும் ஐயோ - தெளிவரியவள்கயிலை நீள்பொருப்ப வான்தோய் மதிச்சடையாய்கொள்கையிலை எம்மாற் குறை.
சொற்பிரிப்பு
எளியம் என்று எள்கி இகழாது நாளும்அளியம் ஆட் செய்தாலும் ஐயோ – தெளிவரியவள் கயிலை நீள் பொருப்ப வான்தோய் மதிச்சடையாய்கொள்கை இலை எம்மாற் குறை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
குறையாப் பலிஇவை கொள்கஎன் கோல்வளை யுங்கலையும்திறையாக்கொண் டாயினிச் செய்வதென் தெய்வக்கங் கைப்புனலில்பொறைபாய் ஒருகடல் நஞ்சுண்ட கண்டா பொடியணிந்தஇறைவா இடுபிணக் காடசெம் மேனிஎம் வேதியனே.
சொற்பிரிப்பு
குறையாப் பலி இவை கொள்க என் கோல்வளையும் கலையும்திறையாக் கொண்டாய் இனிச் செய்வதென் தெய்வக் கங்கைப் புனலில்பொறை பாய் ஒரு கடல் நஞ்சுண்ட கண்டா பொடியணிந்தஇறைவா இடுபி ணக்காட செம்மேனி எம் வேதியனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
வேதியர் பெரும விண்ணோர் தலைவஆதி நான்முகத் தண்ட வாணசெக்கர் நான்மறைப் புத்தேள் நாடகாய்சின மழவிடைப் பாகநின்மூவிலை நெடுவேல் பாடுதும்நாவலம் பெருமை நல்குவோய் எனவே.
சொற்பிரிப்பு
வேதியர் பெரும விண்ணோர் தலைவஆதி நான்முகத்து அண்ட வாணசெக்கர் நான்மறைப் புத்தேள் நாடகாய்சின மழவிடைப் பாக நின்மூவிலை நெடுவேல் பாடுதும்நாவலம் பெருமை நல்குவோய் எனவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
எனவே உலகெலாம் என்றிளைஞர் ஏசநனவே பலிதிரிதி நாளும் - சினவேங்கைக்கார்க்கயிலை நாட களிற்றீர் உரியலாற்போர்க்கையிலை பேசல்நீ பொய்.
சொற்பிரிப்பு
எனவே உலகெலாம் என்று இளைஞர் ஏசநனவே பலி திரிதி நாளும் – சினவேங்கைக்கார்க் கயிலை நாட களிற்று ஈர் உரியலாற்போர்க்கை இலை பேசல்நீ பொய்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
பொய்நீர் உரைசெய்தீர் பொய்யோம் பலியெனப் போனபின்னைஇந்நீள் கடைக்கென்று வந்தறி யீர்இனிச் செய்வதென்னேசெந்நீர் வளர்சடைத் திங்கட் பிளவொடு கங்கைவைத்தமுந்நீர்ப் பவளத் திரட்செக்கர் ஒக்கும் முதலவனே.
சொற்பிரிப்பு
பொய் நீர் உரைசெய்தீர் பொய்யோம் பலியெனப் போன பின்னைஇந்நீள் கடைக்கென்று வந்தறியீர் இனிச் செய்வது என்னேசெந்நீர் வளர்சடைத் திங்கள் பிளவொடு கங்கை வைத்தமுந்நீர்ப் பவளத் திரள் செக்கர் ஒக்கும் முதலவனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.