திருமுறை 11 · 11.024 · 101

சிவபெருமான் திருவந்தாதி

அருளியவர்
பரணதேவ நாயனார்

1

ஒன்றுரைப்பீர் போலப் பலஉரைத்திட் டோயாதேஒன்றுரைப்பீர் ஆயின் உறுதுணையாம் - ஒன்றுரைத்துப்பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுழலும்பேரரவம் பூணும் பிரான்.
சொற்பிரிப்பு
ஒன்றுரைப்பீர் போலப் பல உரைத்திட்டு ஓயாதேஒன்றுரைப்பீர் ஆயின் உறுதுணையாம் – ஒன்றுரைத்துப்பேர்அரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுழலும்பேரரவம் பூணும் பிரான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பிரானிடபம் மால்பெரிய மந்தாரம் வில்லுப்பிரானிடபம் பேரொலிநா ணாகம் - பிரானிடபம்பேணும் உமைபெரிய புன்சடையின் மேலமர்ந்துபேணும் உமையிடவம் பெற்று.
சொற்பிரிப்பு
பிரானிடபம் மால்பெரிய மந்தாரம் வில்லுப்பிரானிடபம் பேரொலிநா ணாகம் – பிரானிடபம்பேணும் உமைபெரிய புன்சடையின் மேலமர்ந்துபேணும் உமையிடவம் பெற்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பெற்றும் பிறவி பிறந்திட் டொழியாதேபெற்றும் பிறவி பிறந்தொழிமின் - பெற்றும்குழையணிந்த கோளரவக் கூற்றுதைத்தான் தன்னைக்குழையணிந்த கோளரவ நீ.
சொற்பிரிப்பு
பெற்றும் பிறவி பிறந்திட்டு ஒழியாதேபெற்றும் பிறவி பிறந்தொழிமின் – பெற்றும்குழையணிந்த கோளரவக் கூற்றுதைத்தான் தன்னைக்குழையணிந்த கோளரவ நீ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நீயேயா ளாவாயும் நின்மலற்கு நன்னெஞ்சேநீயேயா ளாவாயும் நீள்வாளின் -நீயேஏறூர் புனற்சடையா எங்கள் இடைமருதாஏறூர் புனற்சடையா என்று.
சொற்பிரிப்பு
நீயேயா ளாவாயும் நின்மலற்கு நன்னெஞ்சேநீயேயா ளாவாயும் நீள்வாளின் - நீயேஏறூர் புனற்சடையா எங்கள் இடைமருதாஏறூர் புனற்சடையா என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

என்றும் மலர்தூவி ஈசன் திருநாமம்என்று மலர்தூற்றி யேயிருந்தும் - என்றும்------ ------ ------ ------புகலூரா புண்ணியனே என்.
சொற்பிரிப்பு
என்றும் மலர்தூவி ஈசன் திருநாமம்என்றும் அலர்தூற்றி யேயிருந்தும் – என்றும்புகலூரா ——— ——— ———புகலூரா புண்ணியனே என்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

என்னே இவளுற்ற மாலென்கொல் இன்கொன்றைஎன்னே இவளொற்றி யூரென்னும் - என்னேதவளப் பொடியணிந்த சங்கரனே என்னும்தவளப் பொடியானைச் சார்ந்து.
சொற்பிரிப்பு
என்னே இவளுற்ற மால் என்கொல் இன்கொன்றைஎன்னே இவள் ஒற்றியூர் என்னும் – என்னேதவளப் பொடியணிந்த சங்கரனே என்னும்தவளப் பொடியானைச் சார்ந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

சார்ந்துரைப்ப தொன்றுண்டு சாவாமூ வாப்பெருமைசார்ந்துரைத்த தத்துவத்தின் உட்பொருளைச் - சார்ந்துரைத்தஆதியே அம்பலவா அண்டத்தை ஆட்கொள்ளும்ஆதியென் றென்பால் அருள்.
சொற்பிரிப்பு
சார்ந்துரைப்பது ஒன்றுண்டு சாவாமூவாப் பெருமைசார்ந்துரைத்த தத்துவத்தின் உட்பொருளைச் – சார்ந்துரைத்தஆதியே அம்பலவா அண்டத்தை ஆட்கொள்ளும்ஆதியேன் றென்பால் அருள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அருள்சேரா தாரூர்தீ ஆறாமல் எய்தாய்அருள்சேரா தாரூர்தீ யாடி -அருள்சேரப்பிச்சையேற் றுண்டு பிறர்கடையிற் கால்நிமிர்த்துப்பிச்சையேற் றுண்டுழல்வாய் பேச்சு.
சொற்பிரிப்பு
அருள்சேராதார் ஊர்தீ ஆறாமல் எய்தாய்அருள்சேராதார் ஊர்தீ யாடி - அருள்சேரப்பிச்சையேற்று உண்டு பிறர்கடையிற் கால்நிமிர்த்துப்பிச்சையேற்று உண்டுழல்வாய் பேச்சு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பேச்சுப் பெருகுவதென் பெண்ஆண் அலிஎன்றுபேச்சுக் கடந்த பெருவெளியைப் - பேச்சுக்குரையானை ஊனுக் குயிரானை ஒன்றற்குரியானை நன்னெஞ்சே உற்று.
சொற்பிரிப்பு
பேச்சுப் பெருகுவதென் பெண்ஆண் அலிஎன்றுபேச்சுக் கடந்த பெருவெளியைப் – பேச்சுக்குரையானை ஊனுக்கு உயிரானை ஒன்றற்குஉரியானை நன்னெஞ்சே உற்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

உற்றுரையாய் நன்னெஞ்சே ஓதக் கடல்வண்ணன்உற்றுரையா வண்ணம்ஒன் றானானை - உற்றுரையாஆனை உரித்தானை அப்பனை எப்பொழுதும்ஆனையுரித் தானை அடைந்து.
சொற்பிரிப்பு
உற்றுரையாய் நன்னெஞ்சே ஓதக் கடல்வண்ணன்உற்றுரையா வண்ணம் ஒன்று ஆனானை – உற்றுரையாஆனை உரித்தானை அப்பனை எப்பொழுதுஆனையுரித் தானை அடைந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

அடைந்துன்பால் அன்பாய் அணிமணிகொண் டர்ச்சித்தடைந்துன்பால் மேலுகுத்த மாணிக் -கடைந்துன்பால்அவ்வமுதம் ஊட்டி அணிமலருஞ் சூழ்ந்தன்றுஅவ்வமுதம் ஆக்கினாய் காண்.
சொற்பிரிப்பு
அடைந்துன்பால் அன்பாய் அணிமணிகொண்டு அருச்சித்துஅடைந்துன்பால் மேலுகுத்த மாணிக் - கடைந்துன்பால்அவ்வமுதம் ஊட்டி அணிமலரும் சூழ்ந்தன்றுஅவ்வமுதம் ஆக்கினாய் காண்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

காணாய் கபாலி கதிர்முடிமேற் கங்கைதனைக்காணாயக் காருருவிற் சேருமையைக் - காணாய்உடைதலைகொண் டூரூர் திரிவானை நச்சிஉடைதலைகொண் டூரூர் திரி.
சொற்பிரிப்பு
காணாய் கபாலி கதிர்முடிமேல் கங்கைதனைக்காணாய்அக்கார் உருவில் சேர்உமையைக் – காணாய்உடைதலைகொண்டு ஊரூர் திரிவானை நச்சிஉடைதலைகொண்டு ஊரூர் திரி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

திரியும் புரமெரித்த சேவகனார் செவ்வேதிரியும் புரமெரியச் செய்தார் -திரியும்அரியான் திருக்கயிலை என்னாதார் மேனிஅரியான் திருக்கயிலை யாம்.
சொற்பிரிப்பு
திரியும் புரமெரித்த சேவகனார் செவ்வேதிரியும் புரமெரியச் செய்தார் - திரியும்அரியான் திருக்கயிலை என்னாதார் மேனிஅரியான் திருக்கயிலை யாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

(இப்பாட்டில் முதல் அடி கிடைக்கவில்லை)ஆம்பரிசே செய்தங் கழியாக்கை -ஆம்பரிசேஏத்தித் திரிந்தானை எம்மானை அம்மானைஏத்தித் திரிந்தானை ஏத்து.
சொற்பிரிப்பு
——— ——— ——— ———ஆம்பரிசே செய்தங்கு அழியாக்கை - ஆம்பரிசேஏத்தித் திரிந்தானை எம்மானை அம்மானைஏத்தித் திரிந்தானை ஏத்து.

15

ஏத்துற்றுப் பார்த்தன் எழில்வான் அடைவான்போல்ஏத்துற்றுப் பார்த்தன் இறைஞ்சுதலும் - ஏத்துற்றுப்பாசுபதம் அன்றளித்த பாசூரான் பால்நீற்றான்பாசுபதம் இன்றளியென் பால்.
சொற்பிரிப்பு
ஏத்துற்றுப் பார்த்தன் எழில்வான் அடைவான்போல்ஏத்துற்றுப் பார்த்தன் இறைஞ்சுதலும் – ஏத்துற்றுப்பாசுபதம் அன்றளித்த பாசூரான் பால்நீற்றான்பாசுபதம் இன்றளியென் பால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

பாலார் புனல்வாய் சடையானுக் கன்பாகிப்பாலார் புனல்வாய் சடையானாள் - பாலாடிஆடுவான் பைங்கண் அரவூர்வான் மேனிதீஆடுவான் என்றென்றே ஆங்கு.
சொற்பிரிப்பு
பாலார் புனல்வாய் சடையானுக் கன்பாகிப்பாலார் புனல்வாய் சடையானாள் – பாலாடிஆடுவான் பைங்கண் அரவூர்வான் மேனிதீஆடுவான் என்றென்றே ஆங்கு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

ஆங்குரைக்க லாம்பொன் மலர்ப்பாதம் அஃதன்றேஆங்குரைக்க லாம்பொன் அணிதில்லை - ஆங்குரைத்தஅம்பலத்தும் அண்டத்தும் அப்பாலு மாய்நின்றஅம்பரத்தும் அண்டத்தும் ஆம்.
சொற்பிரிப்பு
ஆங்குரைக்கலாம் பொன் மலர்ப்பாதம் அஃதன்றேஆங்குரைக்கலாம் பொன் அணிதில்லை – ஆங்குரைத்தஅம்பலத்தும் அண்டத்தும் அப்பாலுமாய் நின்றஅம்பரத்தும் அண்டத்தும் ஆம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

மாயனைஓர் பாகம் அமர்ந்தானை வானவரும்மாயவரு மால்கடல்நஞ் சுண்டானை - மாயவருவானை மாலை ஒளியானை வானின்உருவானை ஏத்தி உணர்.
சொற்பிரிப்பு
மாயனைஓர் பாகம் அமர்ந்தானை வானவரும்மாயவரு மால்கடல் நஞ்சுண்டானை – மாயவருவானை மாலை ஒளியானை வானின்உருவானை ஏத்தி உணர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

உணரா வளைகழலா உற்றுன்பாற் சங்கம்உணரா வளைகழல ஒட்டி - உணராஅளைந்தான மேனி அணிஆரூ ரேசென்றளைந்தானை ஆமாறு கண்டு.
சொற்பிரிப்பு
உணரா வளைகழலா உற்றுன்பாற் சங்கம்உணரா வளைகழல ஒட்டி – உணராஅளைந்தான மேனி அணிஆரூரே சென்றுஅளைந்தானை ஆமாறு கண்டு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

கண்திறந்து காயெரியின் வீழ்ந்து கடிதோடிக்கண்டிறந்து காமன் பொடியாகக் - கண்டிறந்துகானின் உகந்தாடும் கருத்தர்க்குக் காட்டினான்கானினுகந் தாடுங் கருத்து.
சொற்பிரிப்பு
கண்திறந்து காயெரியின் வீழ்ந்து கடிதோடிக்கண்டிறந்து காமன் பொடியாகக் – கண்டிறந்துகானின் உகந்தாடும் கருத்தர்க்குக் காட்டினான்கானின் உகந்தாடும் கருத்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

கருத்துடைய ஆதி கறைமிடற்றெம் ஈசன்கருத்துடைய கங்காள வேடன் - கருத்துடையஆனேற்றான் நீற்றான் அனலாடி ஆமாத்தூர்ஆனேற்றான் ஏற்றான் எரி.
சொற்பிரிப்பு
கருத்துடைய ஆதி கறைமிடற்றும் எம் ஈசன்கருத்துடைய கங்காள வேடன் – கருத்துடையஆனேற்றான் நீற்றான் அனலாடி ஆமாத்தூர்ஆனேற்றான் ஏற்றான் எரி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

எரியாடி ஏகம்பம் என்னாதார் மேனிஎரியாடி ஏகம்ப மாகும் - எரியாடிஈமத் திடுங்காடு தேரும் இறைபணிப்பஈமத் திடுங்காடு தான்.
சொற்பிரிப்பு
எரியாடி ஏகம்பம் என்னாதார் மேனிஎரியாடி ஏகம்ப மாகும் – எரியாடிஈமத்து இடுங்காடு தேரும் இறைபணிப்பஈமத்து இடுங்காடு தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

தானயன் மாலாகி நின்றான் தனித்துலகில்தானயன் மாலாய தன்மையான் -தானக்கரைப்படுத்தான் நான்மறையைக் காய்புலித்தோ லாடைக்கரைப்படுத்தான் தன்பாதஞ் சார்.
சொற்பிரிப்பு
தானயன் மாலாகி நின்றான் தனித்துலகில்தானயன் மாலாய தன்மையான் - தானக்கரைப்படுத்தான் நான்மறையைக் காய்புலித்தோல் ஆடைக்கரைப்படுத்தான் தன்பாதம் சார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

சாராவார் தாமுளரேல் சங்கரன்தன் மேனிமேல்சாராவார் கங்கை உமைநங்கை - சார்வாய்அரவமது செஞ்சடைமேல் அக்கொன்றை ஒற்றிஅரவமது செஞ்சடையின் மேல்.
சொற்பிரிப்பு
சாராவார் தாமுளரேல் சங்கரன்தன் மேனிமேல்சாராவார் கங்கை உமைநங்கை – சார்வாய்அரவமது செஞ்சடைமேல் அக்கொன்றை ஒற்றிஅரவமது செஞ்சடையின் மேல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

மேலாய தேவர் வெருவ எழுநஞ்சம்மேலாயம் இன்றிவே றுண்பொழுதில் - மேலாயமங்கை உமைவந் தடுத்திலளே வானாளும்மங்கை உமைவந் தடுத்து.
சொற்பிரிப்பு
மேலாய தேவர் வெருவ எழுநஞ்சம்மேலாயம் இன்றிவேறுண் பொழுதில் – மேலாயமங்கை உமைவந்து அடுத்திலளே வானாளும்மங்கை உமைவந்து அடுத்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

அடுத்தபொன் அம்பலமே சார்வும் அதனுள்அடுத்த திருநட்டம் அஃதே - அடுத்ததிருஆனைக்கா ஆடுவதும் மேல்என்பு பூண்பதுவும்ஆனைக்கா வான்தன் அமைவு.
சொற்பிரிப்பு
அடுத்தபொன் அம்பலமே சார்வும் அதனுள்அடுத்த திருநட்டம் அஃதே – அடுத்ததிருஆனைக்கா ஆடுவதும் மேல்என்பு பூண்பதுவும்ஆனைக்கா வான்தன் அமைவு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

அமைவும் பிறப்பும் இறப்புமாம் மற்றாங்கமைவும் பரமான ஆதி -அமையும்திருவால வாய்சென்று சேராது மாக்கள்திருவால வாய்சென்று சேர்.
சொற்பிரிப்பு
அமைவும் பிறப்பும் இறப்புமாம் மற்றாங்குஅமைவும் பரமான ஆதி - அமையும்திருவாலவாய் சென்று சேராது மாக்கள்திருவாலவாய் சென்று சேர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

சென்றுசெருப் புக்காலாற் செல்ல மலர்நீக்கிச்சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச் - சென்றுதன்கண்ணிடந்தன் றப்பும் கருத்தற்குக் காட்டினான்கண்ணிடந்தன் றப்பாமை பார்த்து.
சொற்பிரிப்பு
சென்றுசெருப் புக்காலால் செல்ல மலர்நீக்கிச்சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச் – சென்றுதன்கண்ணிடந்தன்று அப்பும் கருத்தற்குக் காட்டினான்கண்ணிடந்தன்று அப்பாமை பார்த்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

பார்த்துப் பரியாதே பால்நீறு பூசாதேபார்த்துப் பரிந்தங்கம் பூணாதே - பார்த்திட்டுடையானஞ் சோதாதே ஊனாரைக் கைவிட்டுடையானஞ் சோதாதார் ஊண்.
சொற்பிரிப்பு
பார்த்துப் பரியாதே பால்நீறு பூசாதேபார்த்துப் பரிந்தங்கம் பூணாதே – பார்த்திட்டுஉடையானம் சோதாதே ஊனாரைக் கைவிட்டுஉடையானம் சோதாதார் ஊண்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

ஊணொன்றும் இல்லை உறக்கில்லை உன்மாலின்ஊணென்று பேசவோர் சங்கிழந்தாள் - ஊணென்றும்விட்டானே வேள்வி துரந்தானே வெள்ளநீர்விட்டானே புன்சடைமேல் வேறு.
சொற்பிரிப்பு
ஊணொன்றும் இல்லை உறக்கில்லை உன்மாலின்ஊணென்று பேசவோர் சங்கிழந்தாள் – ஊணென்றும்விட்டானே வேள்வி துரந்தானே வெள்ளநீர்விட்டானே புன்சடைமேல் வேறு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

வேறுரைப்பன் கேட்டருளும் வேதம்நான் காறங்கம்வேறுரைத்த மேனி விரிசடையான் - வேறுரைத்தபாதத்தாய் பைங்கண் அரவூர்வாய் பாரூரும்பாதத்தாய் என்னும் மலர்.
சொற்பிரிப்பு
வேறுரைப்பன் கேட்டருளும் வேதம்நான்கு ஆறங்கம்வேறுரைத்த மேனி விரிசடையான் – வேறுரைத்தபாதத்தாய் பைங்கண் அரவூர்வாய் பாரூரும்பாதத்தாய் என்னும் மலர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

மலரணைந்து கொண்டு மகிழ்வாய்உன் பாதமலரணைந்து மால்நயன மாகும் - மலரணைந்துமன்சக் கரம்வேண்ட வாளா அளித்தனையால்வன்சக்க ரம்பரனே வாய்த்து.
சொற்பிரிப்பு
மலரணைந்து கொண்டு மகிழ்வாய் உன் பாதமலரணைந்து மால்நயனம் ஆகும் – மலரணைந்துமன்சக்கரம் வேண்ட வாளா அளித்தனையால்வன்சக்கர் அம்பரனே வாய்த்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

வாய்த்த அடியார் வணங்க மலரோன்மால்வாய்த்த அடிமுடி யுங்காணார் - வாய்த்தசலந்தரனைக் கொன்றிட்டுச் சங்கரனார் என்னோசலந்தரனாய் நின்றவா தாம்.
சொற்பிரிப்பு
வாய்த்த அடியார் வணங்க மலரோன்மால்வாய்த்த அடிமுடியும் காணார் – வாய்த்தசலந்தரனைக் கொன்றிட்டுச் சங்கரனார் என்னோசலந்தரனாய் நின்றவா தாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

தாமென்ன நாமென்ன வேறில்லை தத்துறவில்தாமென்னை வேறாத் தனித்திருந்து - தாமென்கழிப்பாலை சேருங் கறைமிடற்றார் என்னோகழிப்பாலை சேருங் கடன்.
சொற்பிரிப்பு
தாமென்ன நாமென்ன வேறில்லை தத்துறவில்தாமென்னை வேறாத் தனித்திருந்து – தாமென்கழிப்பாலை சேரும் கறைமிடற்றார் என்னோகழிப்பாலை சேரும் கடன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

கடனாகக் கைதொழுமின் கைதொழவல் லீரேல்கடல்நாகைக் காரோணம் மேயார் கடநாகம்மாளஉரித் தாடுவார் நம்மேலை வல்வினைநோய்மாளஇரித் தாடுமால் வந்து.
சொற்பிரிப்பு
கடனாகக் கைதொழுமின் கைதொழ வல்லீரேல்கடல்நாகைக் காரோணம் மேயார் கடநாகம்மாளஉரித்து ஆடுவார் நம்மேலை வல்வினைநோய்மாளஇரித்து ஆடுமால் வந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

வந்தார் வளைகழல்வார் வாடித் துகில்சோர்வார்வந்தார் முலைமெலிவார் வார்குழல்கள் - வந்தார்சுரிதருவார் ஐங்கொன்றைத் தாராரைக் கண்டுசுரிதருவார் ஐங்கொன்றைத் தார்.
சொற்பிரிப்பு
வந்தார் வளைகழல்வார் வாடித் துகில் சோர்வார்வந்தார் முலைமெலிவார் வார்குழல்கள் – வந்தார்சுரிதருவார் ஐங்கொன்றைத் தாராரைக் கண்டுசுரிதருவார் ஐங்கொன்றைத் தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

தாரான் எனினுஞ் சடைமுடியான் சங்கரனந்தாரான் தசமுகனைத் தோள்நெரித்துத் - தாராயநாளுங் கொடுத்தந்த வானவர்கள் தம்முன்னேவாளுங் கொடுத்தான் மதித்து.
சொற்பிரிப்பு
தாரான் எனினும் சடைமுடியான் சங்கரன் அம்தாரான் தசமுகனைத் தோள்நெரித்துத் – தாராயநாளும் கொடுத்தந்த வானவர்கள் தம்முன்னேவாளும் கொடுத்தான் மதித்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

38

மதியாரும் செஞ்சடையான் வண்கொன்றைத் தாரான்மதியாரும் மாலுடைய பாகன் - மதியாரும்அண்ணா மலைசேரார் ஆரோடுங் கூடாகிஅண்ணா மலைசேர்வ ரால்.
சொற்பிரிப்பு
மதியாரும் செஞ்சடையான் வண்கொன்றைத் தாரான்மதியாரும் மாலுடைய பாகன் – மதியாரும்அண்ணா மலைசேரார் ஆரோடும் கூடாகிஅண்ணா மலைசேர்வ ரால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

39

ஆலநிழற்கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்ஆலம் அமுதுசெய்வ தாடுவதீ - ஆலந்துறையுடையான் ஆனை உரியுடையான் சோற்றுத்துறையுடையான் சோராத சொல்லு.
சொற்பிரிப்பு
ஆலநிழற்கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்ஆலம் அமுதுசெய்வது ஆடுவதீ – ஆலந்துறையுடையான் ஆனை உரியுடையான் சோற்றுத்துறையுடையான் சோராத சொல்லு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

40

சொல்லாயம் இன்றித் தொலைவின்றித் தூநெறிக்கண்சொல்லாய்ப் பெருத்த சுடரொளியாய்ச் - சொல்லாயவீரட்டத் தானை விரவார் புரம்அட்டவீரட்டத் தானை விரை.
சொற்பிரிப்பு
சொல்லாயம் இன்றித் தொலைவின்றித் தூநெறிக்கண்சொல்லாய்ப் பெருத்த சுடரொளியாய்ச் – சொல்லாயவீரட்டத் தானை விரவார் புரம்அட்டவீரட்டத் தானை விரை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

41

விரையாரும் மத்தம் விரகாகச் சூடிவிரையாரும் வெள்ளெலும்பு பூண்டு - விரையாரும்நஞ்சுண்ட ஆதி நலங்கழல்கள் சேராதார்நஞ்சுண்ட வாதி நலம்.
சொற்பிரிப்பு
விரையாரும் மத்தம் விரகாகச் சூடிவிரையாரும் வெள்ளெலும்பு பூண்டு – விரையாரும்நஞ்சுண்ட ஆதி நலங்கழல்கள் சேராதார்நஞ்சுண்ட வாதி நலம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

42

நலம்பாயும் ஆக்க நலங்கொண்டல் என்றல்நலம்பாயும் மான்நன் குருவ - நலம்பாய்செய்தார்த்தார்க்கும் அண்ணா மலையா னிடந்.. .. ..தார்த்தார்க்கும் அண்ணா மலை.
சொற்பிரிப்பு
நலம்பாயும் ஆக்க நலங்கொண்டல் என்றல்நலம்பாயும் மான்நன் குருவ – நலம்பாய்செய்துஆர்த்தார்க்கும் அண்ணா மலையானிடந்துஆர்த்தார்க்கும் அண்ணா மலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

43

மலையார் கலையோட வாரோடக் கொங்கைமலையார் கலைபோய்மால் ஆனாள்- மலையார்கலையுடையான் வானின் மதியுடையான் காவாத்தலையுடையான் என்றுதொழு தாள்.
சொற்பிரிப்பு
மலையார் கலையோட வார் ஓடக் கொங்கைமலையார் கலைபோய் மால் ஆனாள் - மலையார்கலையுடையான் வானின் மதியுடையான் காவாத்தலையுடையான் என்றுதொழு தாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

44

தாளார் கமல மலரோடு தண்மலரும்தாளார வேசொரிந்து தாமிருந்து - தாளார்சிராமலையாய் சேமத் துணையேயென் றேத்தும்சிராமலையார் சேமத் துளார்.
சொற்பிரிப்பு
தாளார் கமல மலரோடு தண்மலரும்தாளாரவே சொரிந்து தாமிருந்து – தாளார்சிராமலையாய் சேமத் துணையேயென்று ஏத்தும்சிராமலையார் சேமத் துளார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

45

ஆர்துணையா ஆங்கிருப்ப தம்பலவா அஞ்சலுமைஆர்துணையா ஆனை உரிமூடி - ஆர்துணையாம்பூவணத்தாய் பூதப் படையாளி பொங்கொளியாய்பூவணத்தாய் என்னின் புகல்.
சொற்பிரிப்பு
ஆர்துணையா ஆங்கிருப்பது அம்பலவா அஞ்சலுமைஆர்துணையா ஆனை உரிமூடி – ஆர்துணையாம்பூவணத்தாய் பூதப் படையாளி பொங்கொளியாய்பூவணத்தாய் என்னின் புகல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

46

புகலூர் உடையாய் பொறியரவம் பூணிபுகலூர்ப் புனற்சடையெம் பொன்னே - புகலூராய்வெண்காடா வேலை விடமுண்டாய் வெள்ளேற்றாய்வெண்காடா என்பேனோ நான்.
சொற்பிரிப்பு
புகலூர் உடையாய் பொறியரவம் பூணிபுகலூர்ப் புனற்சடையெம் பொன்னே – புகலூராய்வெண்காடா வேலை விடமுண்டாய் வெள்ளேற்றாய்வெண்காடா என்பேனோ நான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

47

நானுடைய மாடேஎன் ஞானச் சுடர்விளக்கேநானுடைய குன்றமே நான்மறையாய் - நானுடையகாடுடையாய் காலங்கள் ஆனாய் கனலாடும்காடுடையாய் காலமா னாய்.
சொற்பிரிப்பு
நானுடைய மாடே என் ஞானச் சுடர்விளக்கேநானுடைய குன்றமே நான்மறையாய் – நானுடையகாடுடையாய் காலங்கள் ஆனாய் கனலாடும்காடுடையாய் காலமா னாய்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

48

ஆயன் றமரர் அழியா வகைசெய்தாய்ஆயன் றமரர் அழியாமை - ஆயன்திருத்தினான் செங்கண் விடையூர்வான் மேனிதிருத்தினான் சேதுக் கரை.
சொற்பிரிப்பு
ஆயன் றமரர் அழியா வகை செய்தாய்ஆயன் றமரர் அழியாமை – ஆயன்திருத்தினான் செங்கண் விடையூர்வான் மேனிதிருத்தினான் சேதுக் கரை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

49

கரையேனு மாதர் கருவான சேதுக்கரையேனு மாது கரையாம் -கரையேனும்கோளிலியெம் மாதி குறிபரவ வல்லையேகோளிலியெம் மாதி குறி.
சொற்பிரிப்பு
கரையேனு மாதர் கருவான சேதுக்கரையேனு மாது கரையாம் - கரையேனும்கோளிலியெம் ஆதி குறிபரவ வல்லையேகோளிலியெம் ஆதி குறி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

50

குறியார் மணிமிடற்றுக் கோலஞ்சேர் ஞானக்குறியாகி நின்ற குணமே- குறியாகும்ஆலங்கா டெய்தா அடைவேன்மேல் ஆடரவம்ஆலங்கா டெய்தா அடை.
சொற்பிரிப்பு
குறியார் மணிமிடற்றுக் கோலஞ்சேர் ஞானக்குறியாகி நின்ற குணமே - குறியாகும்ஆலங்காடு எய்தா அடைவேன் மேல் ஆடரவம்ஆலங்காடு எய்தா அடை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

51

அடையும் படைமழுவும் சூலமிலம் பங்கிஅடையும் இறப்பறுப்ப தானால் - அடையமறைக்காடு சேரும் மணாளரென்பாற் சேராமறைக்காடு சேர்மக்கள் தாம்.
சொற்பிரிப்பு
அடையும் படைமழுவும் சூலமிலம் பங்கிஅடையும் இறப்பு அறுப்ப தானால் – அடையமறைக்காடு சேரும் மணாளர் என்பால் சேராமறைக்காடு சேர் மக்கள் தாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

52

தாமேய ஆறு சமய முதற்பரமும்தாமேய வாறு தழைக்கின்றார் - தாமேல்தழலுருவர் சங்கரவர் பொங்கரவம் பூண்டதழலுருவர் சங்கரர்என் பார்.
சொற்பிரிப்பு
தாமேய ஆறு சமய முதற்பரமும்தாமேய வாறு தழைக்கின்றார் – தாமேல்தழலுருவர் சங்கரவர் பொங்கரவம் பூண்டதழலுருவர் சங்கரர் என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

53

பார்மேவு கின்ற பலருருவர் பண்டரங்கர்பார்மேவு கின்ற படுதலையர் - பார்மேல்வலஞ்சுழியைச் சேர்வர் மலரடிகள் சேர்வார்வலஞ்சுழியைச் சேர்வாகு வார்.
சொற்பிரிப்பு
பார்மேவு கின்ற பலருருவர் பண்டரங்கர்பார்மேவு கின்ற படுதலையர் – பார்மேல்வலஞ்சுழியைச் சேர்வர் மலரடிகள் சேர்வார்வலஞ்சுழியைச் சேர் வாகுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

54

வாரணிந்த கொங்கை உமையாள் மணவாளாவாரணிந்த கொன்றை மலர்சூடி - வாரணிந்தசெஞ்சடையாய் சீர்கொள் சிவலோகா சேயொளியாய்செஞ்சடையாய் செல்ல நினை.
சொற்பிரிப்பு
வாரணிந்த கொங்கை உமையாள் மணவாளாவாரணிந்த கொன்றை மலர்சூடி – வாரணிந்தசெஞ்சடையாய் சீர்கொள் சிவலோகா சேயொளியாய்செஞ்சடையாய் செல்ல நினை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

55

நினைமால் கொண்டோடி நெறியான தேடிநினைமாலே நெஞ்சம் நினைய - நினைமால் கொண்டூர்தேடி உம்பரால் அம்பரமா காளாவென்றூர்தேடி என்றுரைப்பான் ஊர்.
சொற்பிரிப்பு
நினைமால் கொண்டோடி நெறியான தேடிநினைமாலே நெஞ்சம் நினைய – நினைமால் கொண்டுஊர்தேடி உம்பரால் அம்பரமா காளாவென்றுஊர்தேடி என்று உரைப்பான் ஊர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

56

ஊர்வதுவும் ஆனே றுடைதலையில் உண்பதுவும்ஊர்வதுவு மெல்லுரக மூடுவர்கொல் - ஊர்வதுவும்ஏகம்ப மென்றும் இடைமருதை நேசித்தார்க்கேகம்ப மாய்நின்ற ஏறு.
சொற்பிரிப்பு
ஊர்வதுவும் ஆனேறு உடைதலையில் உண்பதுவும்ஊர்வதுவு மெல்லுரகம் ஊடுவர்கொல் – ஊர்வதுவும்ஏகம்பம் என்றும் இடைமருதை நேசித்தார்க்குஏகம்பமாய் நின்ற ஏறு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

57

ஏறேய வாழ்முதலே ஏகம்பா எம்பெருமான்ஏறேறி யூரும் எரியாடி - ஏறேயஆதிவிடங் காகாறை அண்டத்தாய் அம்மானேஆதிவிடங் காவுமைநன் மாட்டு.
சொற்பிரிப்பு
ஏறேய வாழ்முதலே ஏகம்பா எம்பெருமான்ஏறேறி யூரும் எரியாடி – ஏறேயஆதிவிடங்கா காறை அண்டத்தாய் அம்மானேஆதிவிடங்கா உமைநன் மாட்டு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

58

மாட்டும் பொருளை உருவை வருகாலம்வாட்டும் பொருளாய் மறையானை - வாட்டும்உருவானைச் சோதி உமைபங்கா பங்காய்உருவான சோதி உரை.
சொற்பிரிப்பு
மாட்டும் பொருளை உருவை வருகாலம்வாட்டும் பொருளாய் மறையானை – வாட்டும்உருவானைச் சோதி உமைபங்கா பங்காய்உருவான சோதி உரை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

59

உரையா இருப்பதுவும் உன்னையே ஊனின்உரையாய் உயிராய்ப் பொலிந்தாய் - உரையாயஅம்பொனே சோதி அணியாரூர் சேர்கின்றஅம்பொனே சோதியே ஆய்ந்து.
சொற்பிரிப்பு
உரையா இருப்பதுவும் உன்னையே ஊனின்உரையாய் உயிராய்ப் பொலிந்தாய் – உரையாயஅம்பொனே சோதி அணியாரூர் சேர்கின்றஅம்பொனே சோதியே ஆய்ந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

60

ஆய்ந்துன்றன் பாதம் அடையவரும் என்மேல்ஆய்ந்தென்றன் பாச மலமறுத் -தாய்ந்துன்றன்பாலணையச் செய்த பரமா பரமேட்டிபாலணையச் செய்த பரம்.
சொற்பிரிப்பு
ஆய்ந்துன்றன் பாதம் அடையவரும் என்மேல்ஆய்ந்தென்றன் பாச மலமறுத்து - ஆய்ந்துன்தன்பாலணையச் செய்த பரமா பரமேட்டிபாலணையச் செய்த பரம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

61

பரமாய பைங்கட் சிரமேயப் பூண்டபரமாய பைங்கட் சிரமே - பரமாயஆறடைந்த செஞ்சடையாய் ஐந்தடைந்த மேனியாய்ஆறடைந்த செஞ்சடையாய் அன்பு.
சொற்பிரிப்பு
பரமாய பைங்கண் சிரமேயப் பூண்டபரமாய பைங்கண் சிரமே – பரமாயஆறடைந்த செஞ்சடையாய் ஐந்தடைந்த மேனியாய்ஆறடைந்த செஞ்சடையாய் அன்பு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

62

அன்பே உடைய அரனே அணையாதஅன்பே உடைய அனலாடி - அன்பேகழுமலத்து ளாடுங் கரியுரிபோர்த் தானேகழுமலத்து ளாடுங் கரி.
சொற்பிரிப்பு
அன்பே உடைய அரனே அணையாதஅன்பே உடைய அனலாடி – அன்பேகழுமலத்துள் ஆடும் கரிஉரி போர்த்தானேகழுமலத்துள் ஆடும் கரி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

63

கரியார்தாஞ் சேருங் கலைமறிகைக் கொண்டேகரியார்தாஞ் சேருங் கவாலி - கரியாகிநின்ற கழிப்பாலை சேரும் பிரான்நாமம்நின்ற கழிப்பாலை சேர்.
சொற்பிரிப்பு
கரியார்தாம் சேரும் கலைமறிகைக் கொண்டேகரியார்தாம் சேரும் கவாலி – கரியாகிநின்ற கழிப்பாலை சேரும் பிரான் நாமம்நின்ற கழிப்பாலை சேர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

64

சேரும் பிரான்நாமஞ் சிந்திக்க வல்லீரேல்சேரும் பிரான்நாமஞ் சிந்திக்கச் - சேரும்மலையான் மகளை மகிழ்ந்தாரூர் நின்றான்மலையான் மகளை மகிழ்ந்து.
சொற்பிரிப்பு
சேரும் பிரான்நாமம் சிந்திக்க வல்லீரேல்சேரும் பிரான்நாமம் சிந்திக்கச் – சேரும்மலையான் மகளை மகிழ்ந்தாரூர் நின்றான்மலையான் மகளை மகிழ்ந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

65

மகிழ்ந்தன்பர் மாகாளஞ் செய்யும் மகளிர்மகிழ்ந்தம் பரமாகி நின்றார் - மகிழ்ந்தங்கம்ஒன்றாகி நின்ற உமைபங்கன் ஒற்றியூர்ஒன்றாகி நின்ற உமை.
சொற்பிரிப்பு
மகிழ்ந்தன்பர் மாகாளம் செய்யும் மகளிர்மகிழ்ந்தம் பரமாகி நின்றார் – மகிழ்ந்தங்கம்ஒன்றாகி நின்ற உமைபங்கன் ஒற்றியூர்ஒன்றாகி நின்ற உமை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

66

உமைகங்கை என்றிருவர் உற்ற உணர்வும்உமைகங்கை என்றிருவர் காணார் - உமைகங்கைகார்மிடற்றம் மேனிக் கதிர்முடியான் கண்மூன்றுகார்மிடற்றம் மேனிக் கினி.
சொற்பிரிப்பு
உமைகங்கை என்றிருவர் உற்ற உணர்வும்உமைகங்கை என்றிருவர் காணார் – உமைகங்கைகார்மிடற்றம் மேனிக் கதிர்முடியான் கண்மூன்றுகார்மிடற்றம் மேனிக் கினி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

67

இனியவா காணீர்கள் இப்பிறவி எல்லாம்இனியவா ஆகாமை யற்றும் - இனியவாறாக்கை பலசெய்த ஆமாத்தூர் அம்மானைஆக்கை பலசெய்த அன்று.
சொற்பிரிப்பு
இனியவா காணீர்கள் இப்பிறவி எல்லாம்இனியவா ஆகாமை யற்றும் – இனியவாறுஆக்கை பலசெய்த ஆமாத்தூர் அம்மானைஆக்கை பலசெய்த அன்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

68

அன்றமரர் உய்ய அமிர்தம் அவர்க்கருளிஅன்றவுணர் வீட அருள்செய்தோன் - அன்றவுணர்சேராமல் நின்ற அடிகள் அடியார்க்குச்சேராமல் நின்ற சிவம்.
சொற்பிரிப்பு
அன்றமரர் உய்ய அமிர்தம் அவர்க்கருளிஅன்றவுணர் வீட அருள் செய்தோன் – அன்றவுணர்சேராமல் நின்ற அடிகள் அடியார்க்குச்சேராமல் நின்ற சிவம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

69

சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்சேர்வ தாக்கும்சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்ணாம் - சிவனந்தம்சேரும் உருவுடையீர் செங்காஅட் டங்குடி மேல்சேரும் உருவுடையீர் செல்.
சொற்பிரிப்பு
சிவனந்தம் செல்கதிக்கோர் கண்சேர்வதாக்கும்சிவனந்தம் செல்கதிக்கோர் கண்ணாம் – சிவனந்தம்சேரும் உருவுடையீர் செங்காட்டங்குடி மேல்சேரும் உருவுடையீர் செல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

70

செல்லு மளவும் சிதையாமற் சிந்திமின்செல்லு மளவும் சிவனும்மைச் - செல்லும்திருமீச்சூர்க் கேறவே செங்கணே றூரும்திருமீச்சூர் ஈசன் திறம்.
சொற்பிரிப்பு
செல்லும் அளவும் சிதையாமல் சிந்திமின்செல்லும் அளவும் சிவனும்மைச் – செல்லும்திருமீச்சூர்க்குஏறவே செங்கண் ஏறூரும்திருமீச்சூர் ஈசன் திறம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

71

திறமென்னுஞ் சிந்தை தெரிந்தும்மைக் காணும்திறமென்னுஞ் சிந்தைக்கு மாமே - திறமென்னும்சித்தத்தீர் செல்வத் திருக்கடவூர் சேர்கின்றசித்தத்தீ ரேசெல்லும் நீர்.
சொற்பிரிப்பு
திறமென்னும் சிந்தை தெரிந்தும்மைக் காணும்திறமென்னும் சிந்தைக்கு ஆமே – திறமென்னும்சித்தத்தீர் செல்வத் திருக்கடவூர் சேர்கின்றசித்தத்தீரே செல்லும் நீர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

72

நீரே எருதேறும் நின்மலனார் ஆவீரும்நீரே நெடுவானில் நின்றீரும் - நீரேநெருப்பாய தோற்றத்து நீளாறும் பூண்டுநெருப்பாய தோற்றம் நிலைத்து.
சொற்பிரிப்பு
நீரே எருதேறும் நின்மலனார் ஆவீரும்நீரே நெடுவானில் நின்றீரும் – நீரேநெருப்பாய தோற்றத்து நீளாரும் பூண்டுநெருப்பாய தோற்றம் நிலைத்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

73

நிலைத்திவ் வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர்நிலைத்திவ் வுலகனைத்தும் நீரே - நிலைத்தீரக்கானப்பே ரீர்கங்கை சூடினீர் கங்காளீர்கானப்பே ரீர்கங்கை யீர்.
சொற்பிரிப்பு
நிலைத்திவ் உலகனைத்தும் நீரேயாய் நின்றீர்நிலைத்திவ் உலகனைத்தும் நீரே – நிலைத்தீரக்கானப்பேரீர் கங்கை சூடினீர் கங்காளீர்கானப்பேரீர் கங்கையீர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

74

ஈரம் உடைய இளமதியஞ் சூடினீர்ஈரம் உடைய சடையினீர் - ஈரவருங்காலம் ஆயினீர் இவ்வுலகம் எல்லாம்வருங்கால மாயினீர் வாழ்வு.
சொற்பிரிப்பு
ஈரம் உடைய இளமதியம் சூடினீர்ஈரம் உடைய சடையினீர் – ஈரவருங்காலம் ஆயினீர் இவ்வுலகம் எல்லாம்வருங்காலம் ஆயினீர் வாழ்வு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

75

வாழ்வார் மலரணைவார் வந்த வருநாகம்வாழ்வார் மலரணைவார் வண்கங்கை - வாழ்வாயதீயாட வானாள்வான் வான்கழல்கள் சேராதார்தீயாட வானாளு மாறு.
சொற்பிரிப்பு
வாழ்வார் மலரணைவார் வந்த வருநாகம்வாழ்வார் மலரணைவார் வண்கங்கை – வாழ்வாயதீயாட வானாள்வான் வான்கழல்கள் சேராதார்தீயாட வானாளு மாறு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

76

மாறாத ஆனையின்தோல் போர்த்து வளர்சடைமேல்மாறாத நீருடைய மாகாளர் - மாறாவிடுங்கையர் சேரும் எழிலவாய் முன்னேஇடுங்கையர் சேர்வாக ஈ.
சொற்பிரிப்பு
மாறாத ஆனையின்தோல் போர்த்து வளர்சடைமேல்மாறாத நீருடைய மாகாளர் – மாறாஇடுங்கையர் சேரும் எழிலவாய் முன்னேஇடுங்கையர் சேர்வாக ஈ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

77

ஈயும் பொருளே எமக்குச் சிவலோகம்ஈயும் பொருளே இடுகாட்டில் - நீயும்படநாகம் பூணும் பரலோகீர் என்னீர்படநாகம் பூணும் படி.
சொற்பிரிப்பு
ஈயும் பொருளே எமக்குச் சிவலோகம்ஈயும் பொருளே இடுகாட்டில் – நீயும்படநாகம் பூணும் பரலோகீர் என்னீர்படநாகம் பூணும் படி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

78

படியேறும் பார்த்துப் பரத்தோடும் கூட்டிப்படியேறும் பார்த்துப் பரனெப் - படியேனைப்பாருடையாய் பைங்கண் புலியதளாய் பால்நீற்றாய்பாருடையாய் யானுன் பரம்.
சொற்பிரிப்பு
படியேறும் பார்த்துப் பரத்தோடும் கூட்டிப்படியேறும் பார்த்துப் பரனெப் – படியேனைப்பாருடையாய் பைங்கண் புலியதளாய் பால்நீற்றாய்பாருடையாய் யானுன் பரம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

79

பரமாய விட்டுநின் பாதம் பணிந்தேன்பரமாய ஆதிப் பரனே - பரமாயநீதியே நின்மலனே நேரார் புரமூன்றும்நீதியே செய்தாய் நினை.
சொற்பிரிப்பு
பரமாய விட்டு நின் பாதம் பணிந்தேன்பரமாய ஆதிப் பரனே – பரமாயநீதியே நின்மலனே நேரார் புரமூன்றும்நீதியே செய்தாய் நினை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

80

நினையடைந்தேன் சித்தம் நிலையாகும் வண்ணம்நினையடைந்தேன் சித்த நிமலா - நினையடைந்தேன்கண்டத்தாய் காளத்தி யானே கனலாரும்கண்டத்தாய் காவாலி கா.
சொற்பிரிப்பு
நினையடைந்தேன் சித்தம் நிலையாகும் வண்ணம்நினையடைந்தேன் சித்த நிமலா – நினையடைந்தேன்கண்டத்தாய் காளத்தியானே கனலாரும்கண்டத்தாய் காவாலி கா.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

81

காவார் பொழிற்கயிலை ஆதீ கருவேஎம்காவாய்ப் பொலிந்த கடுவெளியே - காவாயஏறுடையாய் என்னை இடைமருதி லேயென்றும்ஏறுடையாய் நீயே கரி.
சொற்பிரிப்பு
காவார் பொழிற்கயிலை ஆதீ கருவே எம்காவாய்ப் பொலிந்த கடுவெளியே – காவாயஏறுடையாய் என்னை இடைமருதிலே என்றும்ஏறுடையாய் நீயே கரி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

82

கரியானும் நான்முகனு மாய்நின்ற கண்ணன்கரியாருங் கூற்றங் கனியே - கரியாரும்காடுடையாய் காலங்க ளானாய் கனலாடும்காடுடையாய் காலமா னாய்.
சொற்பிரிப்பு
கரியானும் நான்முகனுமாய் நின்ற கண்ணன்கரியாரும் கூற்றம் கனியே – கரியாரும்காடுடையாய் காலங்கள் ஆனாய் கனலாடும்காடுடையாய் காலமானாய்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

83

ஆனாய னாய அடலேறே ஆரூர்க்கோன்ஆனாய னாஅமுத மேஆனாய் - ஆனாய்கவரெலும்போ டேந்தி கதநாகம் பூணிகவரெலும்பு தார்கை வளை.
சொற்பிரிப்பு
ஆனாய ஆய அடலேறே ஆரூர்க்கோன்ஆனாயனா அமுதமே ஆனாய் – ஆனாய்கவர் எலும்போடு ஏந்தி கதநாகம் பூணிகவர் எலும்பு தார்கை வளை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

84

வளைகொண்டாய் என்னை மடவார்கண் முன்னேவளைகொண்டாய் மாசற்ற சோதி - வளைகொண்டாய்மாற்றார் கதுவ மதிலாரூர் சேர்கின்றமாற்றாரூர் கின்ற மயல்.
சொற்பிரிப்பு
வளைகொண்டாய் என்னை மடவார்கண் முன்னேவளைகொண்டாய் மாசற்ற சோதி – வளைகொண்டாய்மாற்றார் கதுவ மதில் ஆரூர் சேர்கின்றமாற்றார் ஊர்கின்ற மயல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

85

மயலான தீரும் மருந்தாகும் மற்றும்மயலானார் ஆரூர் மயரார் - மயலானகண்ணியர்தம் பாகா கனியே கடிக்கொன்றைக்கண்ணியலான் பாதமே கல்.
சொற்பிரிப்பு
மயலான தீரும் மருந்தாகும் மற்றும்மயலானார் ஆரூர் மயரார் – மயலானகண்ணியர்தம் பாகா கனியே கடிக்கொன்றைக்கண்ணியலான் பாதமே கல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

86

கலைமான்கை ஏனப்பூண் காண்கயிலை மானின்கலைமான் கறைகாண் கவாலி - கலைமானேஆடுவதும் பாடுவதும் காலனைப்பொன் அம்பலத்துள்ஆடுவதும் ஆடான் அரன்.
சொற்பிரிப்பு
கலைமான்கை ஏனப்பூண் காண்கயிலை மானின்கலைமான் கறை காண் கவாலி – கலைமானேஆடுவதும் பாடுவதும் காலனைப் பொன் அம்பலத்துள்ஆடுவதும் ஆடான் அரன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

87

அரனே அணியாரூர் மூலட்டத் தானேஅரனே அடைந்தார்தம் பாவம் - அரனேஅயனார்தம் அங்கம் அடையாகக் கொண்டாய்அயனாக மாக அடை.
சொற்பிரிப்பு
அரனே அணியாரூர் மூலட்டத்தானேஅரனே அடைந்தார் தம் பாவம் – அரனேஅயனார் தம் அங்கம் அடையாகக் கொண்டாய்அயனாக மாக அடை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

88

அடையுந் திசைஈசன் திண்டோள் ஆகாசம்அடையுந் திருமேனி அண்டம் - அடையும்திருமுடிகால் பாதாளம் ஆடைகடல் அங்கிதிருமுடிநீர் கண்கள்சுடர் மூன்று.
சொற்பிரிப்பு
அடையும் திசை ஈசன் திண்தோள் ஆகாசம்அடையும் திருமேனி அண்டம் – அடையும்திருமுடிகால் பாதாளம் ஆடை கடல் அங்கிதிருமுடிநீர் கண்கள் சுடர் மூன்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

89

மூன்றரணம் எய்தானே மூலத் தனிச்சுடரேமூன்றரண மாய்நின்ற முக்கணனே - மூன்றரணமாய்நின்ற சோதி அணியாரூர் சேர்கின்றவாய்நின்ற சோதி அறம்.
சொற்பிரிப்பு
மூன்றரணம் எய்தானே மூலத் தனிச்சுடரேமூன்றரணமாய் நின்ற முக்கணனே – மூன்றரணமாய்நின்ற சோதி அணியாரூர் சேர்கின்றவாய்நின்ற சோதி அறம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

90

அறமாய்வ ரேனும் அடுகாடு சேரஅறமானார் அங்கம் அணிவர் - அறமாயவல்வினைகள் வாரா வளமருக லாரென்னவல்வினைகள் வாராத வாறு.
சொற்பிரிப்பு
அறம் ஆய்வரேனும் அடுகாடு சேரஅறம் ஆனார் அங்கம் அணிவர் – அறமாயவல்வினைகள் வாரா வளமருகலார் என்னவல்வினைகள் வாராத வாறு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

91

ஆறுடையர் நஞ்சுடையர் ஆடும் அரவுடையர்ஆறுடையர் காலம் அமைவுடையர் - ஆறுடையசித்தத்தீர் செல்வத் திருக்கயிலை சேர்கின்றசித்தத்தீர் எல்லார்க்குஞ் சேர்வு.
சொற்பிரிப்பு
ஆறுடையர் நஞ்சுடையர் ஆடும் அரவுடையர்ஆறுடையர் காலம் அமைவுடையர் – ஆறுடையசித்தத்தீர் செல்வத் திருக்கயிலை சேர்கின்றசித்தத்தீர் எல்லார்க்கும் சேர்வு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

92

சேர்வும் உடையர் செழுங்கொன்றைத் தாரார்நஞ்சேர்வும் உடையர் அரவுடையர் - சேரும்திருச்சாய்க்காட் டாடுவரேல் செய்தக்க என்றும்திருச்சாய்க்காட் டேநின் உருவு.
சொற்பிரிப்பு
சேர்வும் உடையர் செழுங்கொன்றைத் தாரார் நஞ்சேர்வும் உடையர் அரவுடையர் – சேரும்திருச்சாய்க்காட்டு ஆடுவரேல் செய்தக்க என்றும்திருச்சாய்க்காட்டே நின் உருவு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

93

உருவு பலகொண் டொருவராய் நின்றார்உருவு பலவாம் ஒருவர் - உருவுபலவல்ல ஒன்றல்ல பைஞ்ஞீலி மேயார்பலவல்ல ஒன்றாப் பகர்.
சொற்பிரிப்பு
உருவு பலகொண்டு ஒருவராய் நின்றார்உருவு பலவாம் ஒருவர் – உருவுபலவல்ல ஒன்றல்ல பைஞ்ஞீலி மேயார்பலவல்ல ஒன்றாப் பகர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

94

பகரப் பரியானை மேலூரா தானைப்பகரப் பரிசடைமேல் வைத்த - பகரப்பரியானைச் சேருலகம் பல்லுயிர்கள் எல்லாம்பரியானைச் சேருலகம் பண்.
சொற்பிரிப்பு
பகரப் பரியானை மேல் ஊரா தானைப்பகரப் பரிசடை மேல் வைத்த – பகரப்பரியானைச் சேருலகம் பல்லுயிர்கள் எல்லாம்பரியானைச் சேருலகம் பண்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

95

பண்ணாகப் பாடிப் பலிகொண்டாய் பாரேழும்பண்ணாகச் செய்த பரஞ்சோதீ -பண்ணாஎருதேறி யூர்வாய் எழில்வஞ்சி எங்கள்எருதேறி யூர்வாய் இடம்.
சொற்பிரிப்பு
பண்ணாகப் பாடிப் பலி கொண்டாய் பாரேழும்பண்ணாகச் செய்த பரஞ்சோதீ - பண்ணாஎருதேறி ஊர்வாய் எழில்வஞ்சி எங்கள்எருதேறி ஊர்வாய் இடம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

96

இடமாய எவ்வுயிர்க்கும் ஏகம்பம் மேயார்இடமானார்க் கீந்த இறைவர் - இடமாயஈங்கோய் மலையார் எழிலார் சிராமலையார்ஈங்கோய் மலையார் எமை.
சொற்பிரிப்பு
இடமாய எவ்வுயிர்க்கும் ஏகம்பம் மேயார்இடமானார்க் கீந்த இறைவர் – இடமாயஈங்கோய் மலையார் எழிலார் சிராமலையார்ஈங்கோய் மலையார் எமை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

97

எமையாள வந்தார் இடரான தீரஎமையாளும் எம்மை இமையோர் - எமையாளும்வீதிவிடங் கர்விடம துண்டகண் டர்விடையூர்வீதிவிடங் கர்விடையூர் தீ.
சொற்பிரிப்பு
எமையாள வந்தார் இடரான தீரஎமையாளும் எம்மை இமையோர் – எமையாளும்வீதிவிடங்கர் விடமதுண்ட கண்டர் விடையூர்வீதிவிடங்கர் விடையூர் தீ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

98

தீயான மேனியனே செம்பவளக் குன்றமேதீயான சேராமற் செய்வானே - தீயானசெம்பொற் புரிசைத் திருவாரூ ராயென்னைச்செம்பொற் சிவலோகஞ் சேர்.
சொற்பிரிப்பு
தீயான மேனியனே செம்பவளக் குன்றமேதீயான சேராமல் செய்வானே – தீயானசெம்பொற் புரிசைத் திருவாரூரா என்னைச்செம்பொற் சிவலோகம் சேர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

99

சேர்கின்ற சிந்தை சிதையாமற் செய்வானேசேர்கின்ற சிந்தை சிதையாமற் - சேர்கின்றோம்ஒற்றியூ ரானே உறவாரும் இல்லையினிஒற்றியூ ரானே உறும்.
சொற்பிரிப்பு
சேர்கின்ற சிந்தை சிதையாமல் செய்வானேசேர்கின்ற சிந்தை சிதையாமல் – சேர்கின்றோம்ஒற்றியூரானே உறவாரும் இல்லை இனிஒற்றியூரானே உறும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

100

உறுமுந்த முன்னே உடையாமல் இன்னம்உறுமுந்த முன்னே உடையாமல் - உறுமுந்தம்ஓரைந் துரைத்துற் றுணர்வோ டிருந்தொன்றைஓரைந் துரைக்கவல்லார்க் கொன்று.
சொற்பிரிப்பு
உறுமுந்த முன்னே உடையாமல் இன்னம்உறுமுந்த முன்னே உடையாமல் – உறுமும் தம்ஓரைந்துரைத்து உற்று உணர்வோடு இருந்தொன்றைஓரைந்துரைக்க வல்லார்க் கொன்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

101

ஒன்றைப் பரணர் உரைத்தஅந் தாதிபலஒன்றைப் பகரில் ஒருகோடி - ஒன்றைத்தவிரா துரைப்பார் தளரார் உலகில்தவிரார் சிவலோகந் தான்.
சொற்பிரிப்பு
ஒன்றைப் பரணர் உரைத்த அந்தாதி பலஒன்றைப் பகரில் ஒருகோடி – ஒன்றைத்தவிராது உரைப்பார் தளரார் உலகில்தவிரார் சிவலோகம் தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.