1
ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந்தொன்றும் மனிதர் உயிரையுண் - டொன்றும்மதியாத கூற்றுதைத்த சேவடியான் வாய்ந்தமதியான் இடப்பக்கம் மால்.
சொற்பிரிப்பு
ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள் வாழ்ந்துஒன்றும் மனிதர் உயிரை யுண்டு - ஒன்றும்மதியாத கூற்றுதைத்த சேவடியான் வாய்ந்தமதியான் இடப்பக்கம் மால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
மாலை ஒருபால் மகிழ்ந்தானை வண்கொன்றைமாலை ஒருபால் முடியானை - மாலைஒளியானை உத்தமனை உண்ணாநஞ் சுண்டற்கொளியானை ஏத்தி உளம்.
சொற்பிரிப்பு
மாலை ஒருபால் மகிழ்ந்தானை வண்கொன்றைமாலை ஒருபால் முடியானை – மாலைஒளியானை உத்தமனை உண்ணா நஞ்சுண்டற்குஒளியானை ஏத்தி உளம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
உளமால்கொண் டோடி ஒழியாது யாமும்உளமாகில் ஏத்தவா றுண்டே - உளம்மாசற்றங்கமலம் இல்லா அடல்வெள்ளே றூர்ந்துழலும்அங்கமல வண்ணன் அடி.
சொற்பிரிப்பு
உளம் மால் கொண்டோடி ஒழியாது யாமும்உளமாகில் ஏத்தாவாறு உண்டே – உளம் மாசற்றுஅங்க மலம் இல்லா அடல்வெள்ளேறு ஊர்ந்துழலும்அங்கமல வண்ணன் அடி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
அடியார்தம் ஆருயிரை அட்டழிக்குங் கூற்றைஅடியால் அருவாகச் செற்றான் - அடியார்தம்அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பிஅந்தரத்தார் சூடும் அலர்.
சொற்பிரிப்பு
அடியார்தம் ஆருயிரை அட்டு அழிக்கும் கூற்றைஅடியால் அருவாகச் செற்றான் – அடியார் தம்அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பிஅந்தரத்தார் சூடும் அலர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
அலராளுங் கொன்றை அணியலா ரூரற்கலராகி யானும் அணிவன் - அலராகிஓதத்தான் ஒட்டினேன் ஓதுவன்யான் ஓங்கொலிநீர்ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர்.
சொற்பிரிப்பு
அலராளும் கொன்றை அணியல் ஆரூரற்குஅலராகி யானும் அணிவன் – அலராகிஓதத்தான் ஒட்டினேன் ஓதுவன்யான் ஓங்கொலிநீர்ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
ஊரும தொற்றியூர் உண்கலனும் வெண்தலையேஊரும் விடையொன் றுடைதோலே - ஊரும்படநாகம் மட்டார் பணமாலை ஈதோபடநாகம் அட்டார் பரிசு.
சொற்பிரிப்பு
ஊருமது ஒற்றியூர் உண்கலனும் வெண்தலையேஊரும் விடையொன்று உடை தோலே – ஊரும்படநாகம் மட்டார் பணமாலை ஈதோபடநாகம் அட்டார் பரிசு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
பரியானை ஊராது பைங்கணே றூரும்பரியானைப் பாவிக்க லாகா - பரியானைக்கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ் நன்னெஞ்சேகட்டங்கம் ஏந்தியாக் கண்டு.
சொற்பிரிப்பு
பரி யானை ஊராது பைங்கண் ஏறூரும்பரியானைப் பாவிக்க லாகா – பரியானைக்கட்டு அங்கம் ஏந்தியாக் கண்டு வாழ் நன்னெஞ்சேகட்டங்கம் ஏந்தியாக் கண்டு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
கண்டங் கரியன் உமைபாலுந் தன்பாலும்கண்டங் கரியன் கரிகாடன் - கண்டங்கள்பாடியாட் டாடும் பரஞ்சோதிக் கென்னுள்ளம்பாடியாக் கொண்ட பதி.
சொற்பிரிப்பு
கண்டம் கரியன் உமைபாலும் தன்பாலும்கண்டடங்கு அரியன் கரிகாடன் – கண்டங்கள்பாடியாட்டு ஆடும் பரஞ்சோதிக்கு என்னுள்ளம்பாடியாக் கொண்ட பதி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
பதியார் பழிதீராப் பைங்கொன்றை தாவென்பதியான் பலநாள் இரக்கப் - பதியாயஅம்மானார் கையார் வளைகவர்ந்தார் அஃதேகொல்அம்மானார் கையார் அறம்.
சொற்பிரிப்பு
பதியார் பழிதீராப் பைங்கொன்றை தாவென்பதியான் பலநாள் இரக்கப் – பதியாயஅம்மானார் கையார் வளைகவர்ந்தார் அஃதேகொல்அம்மானார் கையார் அறம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
அறமானம் நோக்கா தநங்கனையும் செற்றங்கறமாநஞ் சுண்ட அமுதன் - அறமானஓதியாள் பாகம் அமர்ந்தான் உயர்புகழேஓதியான் தோற்றேன் ஒளி.
சொற்பிரிப்பு
அறமானம் நோக்காது அநங்கனையும் செற்றங்குஅற மாநஞ்சு உண்ட அமுதன் – அறல் மானும்ஓதியாள் பாகம் அமர்ந்தான் உயர்புகழேஓதியான் தோற்றேன் ஒளி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
ஒளியார் சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கோடற்கொளியான் உலகெல்லாம் ஏத்தற் - கொளியாயகள்ளேற்றான் கொன்றையான் காப்பிகந்தான் நன்னெஞ்சேகள்ளேற்றான் கொன்றை கடிது.
சொற்பிரிப்பு
ஒளியார் சுடர் மூன்றும் கண்மூன்றாக் கோடற்குஒளியான் உலகெல்லாம் ஏத்தற்கு – ஒளியாயகள்ளேற்றான் கொன்றையான் காப்பிகந்தான் நன்னெஞ்சேகள்ளேல் தான் கொன்றை கடிது.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
கடியரவர் அக்கர் கரிதாடு கோயில்கடியரவர் கையதுமோர் சூலம் - கடியரவர்ஆனேற்றார்க் காட்பட்ட நெஞ்சமே அஞ்சல்நீஆனேற்றார்க் காட்பட்டேம் யாம்.
சொற்பிரிப்பு
கடி அரவர் அக்கர் கரிதாடு கோயில்கடியர் அவர் கையதுமோர் சூலம் – கடி அரவர்ஆன் ஏற்றார்க்கு ஆட்பட்ட நெஞ்சமே அஞ்சல் நீஆநேற்றார்க்கு ஆட்பட்டேம் யாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
யாமான நோக்கா தலர்கொன்றைத் தார்வேண்டயாமானங் கொண்டங் கலர்தந்தார் - யாமாவாஆவூரா ஊரும் அழகா அனலாடிஆவூரார்க் கென்னுரைக்கோம் யாம்.
சொற்பிரிப்பு
யாம் மான நோக்காது அலர்கொன்றைத் தார் வேண்டயா மானம் கொண்டங்கு அலர்தந்தார் – யா மாவாஆவூரா ஊரும் அழகா அனலாடிஆ ஊரார்க்கு என்னுரைக்கோம் யாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
யானென்றங் கண்ணா மலையான் அகம்புகுந்துயானென்றங் கையறிவும் குன்றுவித்து - யானென்றங்கார்த்தானே யாயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றைஆர்த்தானேல் உய்வ தரிது.
சொற்பிரிப்பு
யான் என்றங்கு அண்ணா மலையான் அகம் புகுந்துயான் என்ற அங்கு ஐயறிவும் குன்றுவித்து – யான் என்று அங்குஆர்த்தானேயாயிடினும் அம்பரன் மேல் அங்கொன்றைஆர்த்தானேல் உய்வது அரிது.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
அரியாரும் பூம்பொழில் சூழ் ஆமாத்தூர் அம்மான்அரியாரும் பாகத் தமுதன் - அரியாரும்வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்வேங்கடத்து நோயால் வியந்து.
சொற்பிரிப்பு
அரியாரும் பூம்பொழில் சூழ் ஆமாத்தூர் அம்மான்அரி ஆரும் பாகத்து அமுதன் – அரியாரும்வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்வேம் கடத்து நோயால் வியந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
வியந்தாழி நன்னெஞ்சே மெல்லியலார்க் காளாய்வியந்தாசை யுள்மெலிய வேண்டா - வியந்தாயகண்ணுதலான் எந்தைகா பாலி கழலடிப்பூக்கண்ணுதலாம் நம்பாற் கடன்.
சொற்பிரிப்பு
வியந்தாழி நன்னெஞ்சே மெல்லியலார்க்கு ஆளாய்வியந்து ஆசையுள் மெலிய வேண்டா – வியம் தாயகண்ணுதலான் எந்தை காபாலி கழலடிப் பூக்குஅண்ணுதலாம் நம்பாற் கடன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
கடனாகம் ஊராத காரணமுங் கங்கைகடனாக நீகவர்ந்த வாறும் - கடனாகப்பாரிடந்தான் மேவிப் பயிலும் பரஞ்சோதிபாரிடந்தான் மேயாய் பணி.
சொற்பிரிப்பு
கடனாகம் ஊராத காரணமும் கங்கைகடல் ஆகம் நீ கவர்ந்த வாறும் – கட நாகப்பாரிடம் தான் மேவிப் பயிலும் பரஞ்சோதிபார் இடந்தான் மேயாய் பணி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
பணியாய் மடநெஞ்சே பல்சடையான் பாதம்பணியாத பத்தர்க்குஞ் சேயன் - பணியாயஆகத்தான் செய்துமேல் நம்மை அமரர்கோனாகத்தான் செய்யும் அரன்.
சொற்பிரிப்பு
பணியாய் மடநெஞ்சே பல்சடையான் பாதம்பணியாத பத்தர்க்கும் சேயன் – பணியாயஆகத்தான் செய்துமேல் நம்மை அமரர்கோன்ஆகத் தான் செய்யும் அரன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
அரன்காய நைவேற் கநங்கவேள் அம்பும்அரன்காயும் அந்தியும்மற் றந்தோ - அரங்காயவெள்ளில்சேர் காட்டாடி வேண்டான் களிறுண்டவெள்ளில்போன் றுள்ளம் வெறிது.
சொற்பிரிப்பு
அரன் காய நைவேற்கு அநங்கவேள் அம்பும்அரம் காயும் அந்தியும் மற்று அந்தோ – அரங்காயவெள்ளில் சேர் காட்டாடி வேண்டான் களிறுண்டவெள்ளில் போன்று உள்ளம் வெறிது.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கைவெறியார்பூந் தாரான் விமலன் - வெறியார்தம்அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன்அல்லனோ நெஞ்சே அயன்.
சொற்பிரிப்பு
வெறி யானை ஊர் வேந்தர்பின்செல்லும் வேட்கைவெறியார் பூந்தாரான் விமலன் – வெறியார் தம்அல்லல் நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன்அல்லனோ நெஞ்சே அயன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
அயமால்ஊண் ஆடரவம் நாண்அதள தாடைஅயமாவ தானேறூர் ஆரூர் - அயமாயஎன்னக்கன் தாழ்சடையன் நீற்றன் எரியாடிஎன்னக்கன் றாழும் இவள்.
சொற்பிரிப்பு
அயமால் ஊண் ஆடரவம் நாண் அதளது ஆடைஅயமாவது ஆனேறு ஊர் ஆரூர் – அயமாயஎன் நக்கன் தாழ்சடையன் நீற்றன் எரியாடிஎன் நக்கு அன்று ஆழும் இவள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
ஆழும் இவளையும் கையகல ஆற்றேனென்றாழும் இவளை அயராதே - ஆழும்சலமுடியாய் சங்கரனே சங்கக் குழையாய்சலமுடியா தின்றருளும் தார்.
சொற்பிரிப்பு
ஆழும் இவளையும் கையகல ஆற்றேன் என்றுஆழும் இவளை அயராதே – ஆழும் சல முடியாய் சங்கரனேசங்கக் குழையாய்சலம் முடியாது இன்றருளும் தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத்தாராதே சங்கம் சரிவித்தான் - தாராவல்ஆனைமேல் வைகும் அணிவயல்ஆ ரூர்க்கோன்நல்ஆனையும் வானோர்க் கரசு.
சொற்பிரிப்பு
தாராய தண்கொன்றையான் இரப்பத் தான் இதனைத்தாராதே சங்கம்சரிவித்தான் – தாராவல் ஆனைமேல் வைகும்அணிவயல் ஆரூர்க்கோன் நல் ஆன்ஐயும் வானோர்க்கு அரசு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க் கம்மான்அரசுமாம் அங்கொன்று மாலுக் - கரசுமான்ஊர்தி எரித்தான் உணருஞ் செவிக்கின்பன்ஊர்தி எரித்தான் உறா.
சொற்பிரிப்பு
அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க்கு அம்மான்அரசுமாம் அங்கொன்று மாலுக்கு – அரசும் ஆன்ஊர்தி எரித்தான் உணரும் செவிக்கின்பன்ஊர் தி எரித்தான் உறா.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
உறாவேயென் சொற்கள் ஒளிவளைநின் உள்ளத்துறாவேதீ உற்றனகள் எல்லாம் - உறாவேபோய்க்காவாலி தார்நினைந்து கைசோர்ந்து மெய்மறந்தாள்காவாலி தாநின் கலை.
சொற்பிரிப்பு
உறாவே என் சொற்கள் ஒளிவளை நின் உள்ளத்துஉறா வே தீ உற்றனகள் எல்லாம் – உறாவே போய்க்காவாலி தார் நினைந்து கைசோர்ந்து மெய்மறந்தாள்கா வாலிதா நின் கலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
கலைகாமின் ஏர்காமின் கைவளைகள் காமின்கலைசேர் நுதலீர்நாண் காமின் - கலையாயபான்மதியன் பண்டரங்கன் பாரோம்பு நான்மறையன்பான்மதியன் போந்தான் பலிக்கு.
சொற்பிரிப்பு
கலைகாமின் ஏர்காமின் கைவளைகள் காமின்கலைசேர் நுதலீர் நாண் காமின் – கலையாயபால் மதியன் பண்டரங்கன் பார் ஓம்பு நான்மறையன்பால்மதியன் போந்தான் பலிக்கு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கன் சூழப்பலிக்கு மனைப்புகுந்து பாவாய் - பலிக்குநீஐயம்பெய் என்றானுக் கையம்பெய் கின்றேன்மேல்ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து.
சொற்பிரிப்பு
பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கள் சூழப்பலிக்கும் மனைப் புகுந்து பாவாய் – பலிக்கு நீஐயம் பெய் என்றானுக்கு ஐயம் பெய்கின்றேன் மேல்ஐஅம்பெய்தான் அநங்கன் ஆய்ந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
ஆயம் அழிய அலர்கொன்றைத் தார்வேண்டிஆயம் அழிய அயர்வேன்மேல் - ஆயன்வாய்த்தீங்குழலும் தென்றலும் தேய்கோட் டிளம்பிறையும்தீங்குழலும் என்னையே தேர்ந்து.
சொற்பிரிப்பு
ஆயம் அழிய அலர்கொன்றைத் தார்வேண்டிஆயம் அழிய அயர்வேன்மேல் – ஆயன் வாய்த்தீங்குழலும் தென்றலும் தேய்கோட்டு இளம்பிறையும்தீங்கு உழலும் என்னையே தேர்ந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
தேரோன் கதிரென்னுஞ் செந்தழலால் வெந்தெழுபேய்த்தேரோன் கதிரென்னுஞ் செய்பொருள்நீ - தேராதேகூடற்கா வாலி குரைகழற்கா நன்னெஞ்சேகூடற்கா வாலிதரக் கூர்.
சொற்பிரிப்பு
தேரோன் கதிரென்னும் செந்தழலால் வெந்தெழு பேய்த்தேரோன் கதிரென்னும் செய்பொருள் நீ – தேராதேகூடற் காவாலி குரைகழற்கா நன்னெஞ்சேகூடற்கா வாலிதரக் கூர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
கூரால மேயாக் குருகோடு நைவேற்குக்கூரார்வேற் கையார்க்காய்க் கொல்லாமே - கூரார்பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பேபனிச்சங்காட் டாய்கடிக்கப் பாய்ந்து.
சொற்பிரிப்பு
கூர் ஆலம் மேயாக் குருகோடு நைவேற்குக்கூரார் வேற்கையார்க்காய்க் கொல்லாமே – கூரார்பனிச்சம் காட்டு ஆர் சடைமேற் பால்மதியைப் பாம்பேபனிச்சு அங்கு ஆட்டாய் கடிக்கப் பாய்ந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனதுபாயிற் புகுதப் பணை முலைமேல் - பாயிலனற்கொன்றாய் குளிர்சடையாற் கென்நிலைமை கூறாதேகொன்றாய் இதுவோ குணம்.
சொற்பிரிப்பு
பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனதுபாயிற் புகுதப் பணை முலைமேல் – பாயிலன் நற்கொன்றாய் குளிர்சடையாற்கு என்நிலைமை கூறாதேகொன்றாய் இதுவோ குணம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
குணக்கோடி கோடாக் குளிர்சடையான் வில்லின்குணக்கோடி குன்றஞ்சூழ் போகிக் - குணக்கோடித்தேரிரவில் வாரான் சிவற் காளாஞ் சிந்தனையேதேரிரவில் வாழும் திறம்.
சொற்பிரிப்பு
குணக் கோடி கோடாக் குளிர்சடையான் வில்லின்குணக்கு ஓடி குன்றஞ் சூழ் போகிக் – குணக்கு ஓடித்தேர் இரவி இல் வாரான் சிவற்கு ஆளாம் சிந்தனையேதேர் இரவில் வாழும் திறம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
திறங்காட்டுஞ் சேயாள் சிறுகிளியைத் தான்தன்திறங்காட்டுந் தீவண்ணன் என்னும் - திறங்காட்டின்ஊரரவம் ஆர்த்தானோ டென்னை உடன்கூட்டின்ஊரரவஞ் சால உடைத்து.
சொற்பிரிப்பு
திறம் காட்டும் சேயாள் சிறுகிளியைத் தான் தன்திறங்காட்டும் தீவண்ணன் என்னும் – திறங்காட்டின்ஊர் அரவம் ஆர்த்தானோடு என்னை உடன்கூட்டின்ஊர் அரவம் சால உடைத்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
உடையோடு காடாடி ஊர்ஐயம் உண்ணிஉடையாடை தோல்பொடிசந் தென்னை - உடையானைஉன்மத் தகமுடிமேல் உய்த்தானை நன்னெஞ்சேஉன்மத் தகமுடிமேல் உய்.
சொற்பிரிப்பு
உடை ஓடு காடு ஆடி ஊர்ஐயம் உண்ணிஉடை ஆடை தோல் பொடி சந் தென்னை – உடையானைஉன்மத்தக முடிமேல் உய்த்தானை நன்னெஞ்சேஉன் மத்தக முடிமேல் உய்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
உய்யாதென் ஆவி ஒளிவளையும் மேகலையும்உய்யா துடம்பழிக்கும் ஒண்திதலை - உய்யாம்இறையானே ஈசனே எம்மானே நின்னைஇறையானும் காண்கிடாய் இன்று.
சொற்பிரிப்பு
உய்யாதென் ஆவி ஒளிவளையும் மேகலையும்உய்யாது உடம்பழிக்கும் ஒண்திதலை – உய் ஆம்இறையானே ஈசனே எம்மானே நின்னைஇறை யானும் காண்கிடாய் இன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
36
இன்றியாம் உற்ற இடரும் இருந்துயரும்இன்றியாம் தீர்தும் எழில்நெஞ்சே - இன்றியாம்காட்டாநஞ் சேற்றாஅன் காமரு வெண்காட்டான்காட்டான்அஞ் சேற்றான் கலந்து.
சொற்பிரிப்பு
இன்றியாம் உற்ற இடரும் இருந்துயரும்இன்று (இ) யாம் தீர்தும் எழில்நெஞ்சே – இன்றி யாம்காட்டா நஞ்சேற்றான் காமரு வெண்காட்டான்காட்டு ஆன் அஞ்சேற்றான் கலந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
37
கலம்பெரியார்க் காஞ்சிரங்காய் வின்மேரு என்னும்கலம்பெரிய ஆற்கீழ் இருக்கை - கலம்பிரியாமாக்கடல்நஞ் சுண்டார் கழல்தொழார்க் குண்டாமோமாக்கடனஞ் சேரும் வகை.
சொற்பிரிப்பு
கலம் பெரியார்க்கு ஆம் சிரம் காய் வில் மேரு என்னும்கலம் பெரிய ஆல் கீழ் இருக்கை – கலம் பிரியாமாக்கடல் நஞ்சுண்டார் கழல் தொழார்க்கு உண்டாமோமாக்கள் தனம் சேரும் வகை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
38
கையா றவாவெகுளி அச்சங் கழிகாமம்கையாறு செஞ்சடையான் காப்பென்னும் - கையாறுமற்றிரண்ட தோளானைச் சேர்நெஞ்சே சேரப்போய்மற்றிரண்ட தோளான் மனை.
சொற்பிரிப்பு
கையாறு அவா வெகுளி அச்சம் கழிகாமம்கை ஆறு செஞ்சடையான் காப்பென்னும் – கை ஆறுமல் திரண்ட தோளானைச் சேர் நெஞ்சே சேரப்போய்மற்று இரண்ட தோளான் மனை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
39
மனையாய் பலிக்கென்று வந்தான்வண் காமன்மனையா சறச்செற்ற வானோன் - மனையாயஎன்பாவாய் என்றேனுக் கியானல்லேன் நீதிருவேஎன்பாவாய் என்றான் இறை.
சொற்பிரிப்பு
மனையாய் பலிக்கென்று வந்தான் வண்காமன்மனை ஆசறச் செற்ற வானோன் – மன் ஐ ஆயஎன்பாவாய் என்றேனுக்கு யான்அல்லேன் நீ திருவேஎன் பாவாய் என்றான் இறை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
40
இறையாய வெண்சங் கிவைதருவேன் என்னும்இறையாகம் இன்றருளாய் என்னும் - இறையாய்மறைக்காட்டாய் மாதவனே நின்னுருவம் இங்கேமறைக்காட்டாய் என்னும்இம் மாது.
சொற்பிரிப்பு
இறையாய வெண்சங்கு இவைதருவேன் என்னும்இறை ஆகம் இன்றருளாய் என்னும் – இறையாய்மறைக் காட்டாய் மாதவனே நின்னுருவம் இங்கேமறைக்காட்டாய் என்னும் இம்மாது.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
41
மாதரங்கந் தன்னரங்கஞ் சேர்த்தி வளர்சடைமேல்மாதரங்கக் கங்கைநீர் மன்னுவித்து - மாதரங்கத்தேரானை யூரான் சிவற்காளாஞ் சிந்தனையேதேரானை யூரானைத் தேர்.
சொற்பிரிப்பு
மாதர் அங்கம் தன் அங்கம் சேர்த்தி வளர்சடைமேல்மா தரங்கக் கங்கை நீர் மன்னுவித்து – மாது அரங்கத்தேர் ஆனை ஊரான் சிவற்கு ஆளாம் சிந்தனையேதேர் ஆனையூரானைத் தேர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
42
தெருளிலார் என்னாவார் காவிரிவந் தேறும்அருகில் சிராமலையெங் கோமான் - விரியுலகில்செல்லுமதில் மூன்றெரித்தான் சேவடியே யாம்பரவிச்செல்லும்எழில் நெஞ்சே தெளி.
சொற்பிரிப்பு
தெருளிலார் என்னாவார் காவிரி வந்தேறும்அருகில் சிராமலை எம் கோமான் – விரியுலகில்செல்லு மதில் மூன்றெரித்தான் சேவடியே யாம் பரவிச்செல்லும் எழில் நெஞ்சே தெளி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
43
தெளியாய் மடநெஞ்சே செஞ்சடையான் பாதம்தெளியாதார் தீநெறிக்கட் செல்வர் - தெளியாயபூவார் சடைமுடியான் பொன்னடிக்கே ஏத்துவன்நற்பூவாய வாசம் புனைந்து.
சொற்பிரிப்பு
தெளியாய் மடநெஞ்சே செஞ்சடையான் பாதம்தெளியாதார் தீநெறிக்கண் செல்வர் – தெளியாயபூவார் சடைமுடியான் பொன்னடிக்கே ஏத்துவன் நற்பூவாய வாசம் புனைந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
44
புனைகடற்குப் பொன்கொடுக்கும் பூம்புகார் மேயான்புனைகடுக்கை மாலைப் புராணன் - புனைகடத்துநட்டங்கம் ஆட்டயரும் நம்பன் திருநாமம்நட்டங்க மாட்டினேன் நக்கு.
சொற்பிரிப்பு
புனை கடற்குப் பொன்கொடுக்கும் பூம்புகார் மேயான்புனை கடுக்கை மாலைப் புராணன் – புனை கடத்துநட்டங்கம் ஆட்டயரும் நம்பன் திருநாமம்நட்டு அங்கம் ஆட்டினேன் நக்கு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
45
நக்கரை சாளும் நடுநாளை நாரையூர்நக்கரை வக்கரையோம் நாமென்ன - நக்குரையாம்வண்டாழங் கொன்றையான் மால்பணித்தான் மற்றவர்க்காய்வண்டாழங் கொண்டான் மதி.
சொற்பிரிப்பு
நக்கு அரை சாளும் நடுநாளை நாரையூர்நக்கரை வக்கரையோம் நாமென்ன – நக்கு உரையாம்வண்டு ஆழ் அம்கொன்றையான் மால்பணித்தான் மற்றவர்க்காய்வண் தாழம் கொண்டாள் மதி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
46
மதியால் அடுகின்ற தென்னும்மால் கூரும்மதியாதே வைதுரப்பர் என்னும் - மதியாதேமாதெய்வம் ஏத்தும் மறைக்காடா ஈதேகொல்மாதெய்வம் கொண்ட வனப்பு.
சொற்பிரிப்பு
மதியால் அடுகின்ற தென்னும் மால் கூரும்மதியாதே வைது உரைப்பர் என்னும் – அது (இ) யாதேமாதெய்வம் ஏத்தும் மறைக்காடா ஈதேகொல்மாது எய்வம் கொண்ட வனப்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
47
வனப்பார் நிறமும் வரிவளையும் நாணும்வனப்பார் வளர்சடையான் கொள்ள - வனப்பாற்கடற்றிரையு மீருமிக் கங்குல்வா யான்கட்கடற்றிரையு மீருங் கனன்று.
சொற்பிரிப்பு
வனப்பார் நிறமும் வரிவளையும் நாணும்வனப் பார் வளர்சடையான் கொள்ள – வனப்பால்கடல் திரையும் ஈரும் இக்கங்குல்வாய் ஆன் கண்கடற்று இரையும் ஈரும் கனன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
48
கனன்றாழி நன்னெஞ்சே கண்ணுதலார்க் காளாய்க்கனன்றார் களிற்றுரிமால் காட்டக் - கனன்றோர்உடம்பட்ட நாட்டத்தர் என்னையுந்தன் ஆளாஉடம்பட்ட நாட்டன் உரு.
சொற்பிரிப்பு
கல் நன்று ஆழி நன்னெஞ்சே கண்ணுதலார்க்கு ஆளாய்க்கனன்று ஆர் களிற்று உரி மால் காட்டக் – கனன்றோர்உடம்பு அட்ட நாட்டத்தன் என்னையுந் தன் ஆளாஉடம்பட்ட நாள் தன் உரு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
49
உருவியலுஞ் செம்பவளம் ஒன்னார் உடம்பில்உருவியலுஞ் சூலம் உடையன் - உருவியலும்மாலேற்றான் நான்முகனும் மண்ணோடு விண்ணும்போய்மாலேற்றாற் கீதோ வடிவு.
சொற்பிரிப்பு
உரு இயலும் செம்பவளம் ஒன்னார் உடம்பில்உருவி இயலும் சூலம் உடையன் – உருவியலும்மால் ஏற்றான் நான்முகனும் மண்ணோடு விண்ணும்போய்மாலேற்றாற்கு ஈதோ வடிவு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
50
வடிவார் அறப்பொங்கி வண்ணக்கச் சுந்திவடிவார் வடம்புனைந்தும் பொல்லா - வடிவார்மேல்முக்கூடல் அம்மா முருகமருங் கொன்றையந்தார்முக்கூட மாட்டா முலை.
சொற்பிரிப்பு
வடி வார் அறப்பொங்கி வண்ணக் கச்சு உந்திவடிவு ஆர் வடம் புனைந்தும் பொல்லா – வடிவார் வேல்முக்கூடல் அம்மான் முருகமரும் கொன்றையந்தார்முற்கூட மாட்டா முலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
51
முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணான் என்னும்முலைநலஞ்சேர் மொய்சடையான் என்னும் -முலைநலஞ்சேர்மாதேவா என்று வளர்கொன்றை வாய்சோரமாதேவா சோரல் வளை.
சொற்பிரிப்பு
முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணான் என்னும்முலைநலஞ்சேர் மொய்சடையான் என்னும் - முலைநலஞ்சேர்மாதேவா என்று வளர்கொன்றை வாய்சோரமாதேவா சோரல் வளை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
52
வளையாழி யோடகல மால்தந்தான் என்னும்வளையாழி நன்னெஞ்சே காணில் - வளையாழிவன்னஞ்சைக் கண்டமரர் வாய்சோர வந்தெதிர்ந்தவன்னஞ்சக் கண்டன் வரில்.
சொற்பிரிப்பு
வளையாழி யோடகல மால்தந்தான் என்னும்வளையாழி நன்னெஞ்சே காணில் – வளையாழிவன்னஞ்சைக் கண்டமரர் வாய்சோர வந்தெதிர்ந்தவன்னஞ்சக் கண்டன் வரில்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
53
வரிநீல வண்டலம்பு மாமறைக்காட் டங்கேழ்வரிநீர் வலம்புரிகள் உந்தி - வரிநீர்இடுமணல்மேல் அந்நலங்கொண் டின்னாநோய் செய்தான்இடுமணல்மேல் ஈசன் எமக்கு.
சொற்பிரிப்பு
வரிநீல வண்டலம்பு மாமறைக்காட்டு அங்கேழ்வரிநீர் வலம்புரிகள் உந்தி – வரிநீர்இடுமணல்மேல் அந்நலங்கொண்டு இன்னாநோய் செய்தான்இடுமணல்மேல் ஈசன் எமக்கு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
54
அக்காரம் ஆடரவம் நாண்அறுவை தோல்பொடிசாந்தக்காரம் தீர்ந்தேன் அடியேற்கு -வக்காரம்பண்டரங்கன் எந்தை படுபிணஞ்சேர் வெங்காட்டுப்பண்டரங்கன் எங்கள் பவன்.
சொற்பிரிப்பு
அக்காரம் ஆடரவம் நாண்அறுவை தோல்பொடிசாந்துஅக்காரம் தீர்ந்தேன் அடியேற்கு - வக்காரம்பண்டரங்கன் எந்தை படுபிணஞ்சேர் வெங்காட்டுப்பண்டரங்கன் எங்கள் பவன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
55
பவனடிபார் விண்நீர் பகலோன் மதிதீப்பவனஞ்சேர் ஆரமுதம் பெண்ஆண் -பவனஞ்சேர்காலங்கள் ஊழி அவனே கரிகாட்டிற்காலங்கை ஏந்தினான் காண்.
சொற்பிரிப்பு
பவனடிபார் விண்நீர் பகலோன் மதிதீப்பவனஞ்சேர் ஆரமுதம் பெண்ஆண் - பவனஞ்சேர்காலங்கள் ஊழி அவனே கரிகாட்டிற் காலங்கை ஏந்தினான் காண்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
56
காணங்கை இன்மை கருதிக் கவலாதேகாணங்கை யாற்றொழுது நன்னெஞ்சே - காணங்கைபாவனையாய் நின்றான் பயிலும் பரஞ்சோதிபாவனையாய் நின்ற பதம்.
சொற்பிரிப்பு
காணங்கை இன்மை கருதிக் கவலாதேகாணங்கையால் தொழுது நன்னெஞ்சே – காணங்கைபாவனையாய் நின்றான் பயிலும் பரஞ்சோதிபாவனையாய் நின்ற பதம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
57
பதங்க வரையுயர்ந்தான் பான்மகிழ்ந்தான் பண்டுபதங்கன் எயிறு பறித்தான் - பதங்கையால்அஞ்சலிகள் அன்பாலும் ஆக்குதிகாண் நெஞ்சேகூர்ந்தஞ்சலிகள் அன்பாலும் ஆக்கு.
சொற்பிரிப்பு
பதங்க வரையுயர்ந்தான் பான்மகிழ்ந்தான் பண்டுபதங்கன் எயிறு பறித்தான் – பதங்கையால்அஞ்சலிகள் அன்பாலும் ஆக்குதிகாண் நெஞ்சேகூர்ந்துஅஞ்சலிகள் அன்பாலும் ஆக்கு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
58
ஆக்கூர் பனிவாடா ஆவிசோர்ந் தாழ்கின்றேன்ஆக்கூர் அலர்தான் அழகிதா - ஆக்கூர்மறையோம்பு மாடத்து மாமறையோ நான்குமறையோம்பு மாதவர்க்காய் வந்து.
சொற்பிரிப்பு
ஆக்கூர் பனிவாடா ஆவிசோர்ந்து ஆழ்கின்றேன்ஆக்கூர் அலர்தான் அழகிதா – ஆக்கூர்மறையோம்பு மாடத்து மாமறையோ நான்குமறையோம்பு மாதவர்க்காய் வந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
59
வந்தியான் சீறினும் ஆழி மடநெஞ்சேவந்தியா உள்ளத்து வைத்திராய் -வந்தியாய்நம்பரனை யாடும் நளிர்புன் சடையானைநம்பரனை நாள்தோறும் நட்டு.
சொற்பிரிப்பு
வந்தியான் சீறினும் ஆழி மடநெஞ்சேவந்தியா உள்ளத்து வைத்திராய் - வந்தியாய்நம்பரனை யாடும் நளிர்புன் சடையானைநம்பரனை நாள்தோறும் நட்டு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
60
நட்டமா கின்றன வொண்சங்கம் நானவன்பால்நட்டமா நன்னீர்மை வாடினேன் - நட்டமாடீயான் எரியாடி எம்மான் இருங்கொன்றைஈயானேல் உய்வ திலம்.
சொற்பிரிப்பு
நட்டமா கின்றன வொண்சங்கம் நான் அவன் பால்நட்டமா நன்னீர்மை வாடினேன் – நட்டமாடுஈயான் எரியாடி எம்மான் இருங்கொன்றைஈயானேல் உய்வ திலம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
61
இலமலரஞ் சேவடியார் ஏகப் பெறாரேஇலமலரே ஆயினும் ஆக - இலமலரும்ஆம்பல்சேர் செவ்வாயார்க் காடாதே ஆடினேன்ஆம்பல்சேர் வெண்தலையர்க் காள்.
சொற்பிரிப்பு
இலமலரஞ் சேவடியார் ஏகப் பெறாரேஇலமலரே ஆயினும் ஆக – இலமலரும்ஆம்பல்சேர் செவ்வாயார்க்கு ஆடாதே ஆடினேன்ஆம்பல்சேர் வெண்தலையர்க்கு ஆள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
62
ஆளானம் சேர்களிறும் தேரும் அடல்மாவும்ஆளானார் ஊரத்தான் ஏறூரும் - தாளான்பொய்நாடகங்க ளாட்டயரும் நம்பன் திருநாமம்நாடகங்கள் ஆடி நயந்து.
சொற்பிரிப்பு
ஆளானம் சேர்களிறும் தேரும் அடல்மாவும்ஆளானார் ஊரத்தான் ஏறூரும் – தாளான்பொய்நாடகங்கள் ஆட்டயரும் நம்பன் திருநாமம்நாடகங்கள் ஆடி நயந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
63
நயந்தநாள் யானிரப்ப நற்சடையான் கொன்றைநயந்தநாள் நன்னீர்மை வாட - நயந்தநாள்அம்பகலஞ் செற்றான் அருளான் அநங்கவேள்அம்பகலம் பாயும் அலர்ந்து.
சொற்பிரிப்பு
நயந்தநாள் யானிரப்ப நற்சடையான் கொன்றைநயந்தநாள் நன்னீர்மை வாட – நயந்தநாள்அம்பகலம் செற்றான் அருளான் அநங்கவேள்அம்பகலம் பாயும் அலர்ந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
64
அலங்காரம் ஆடரவம் என்புதோல் ஆடைஅலங்கார வண்ணற் கழகார் - அலங்காரம்மெய்காட்டு வார்குழலார் என்னாவார் வெள்ளேற்றான்மெய்காட்டும் வீடாம் விரைந்து.
சொற்பிரிப்பு
அலங்காரம் ஆடரவம் என்பதோல் ஆடைஅலங்கார வண்ணற்கு அழகார் – அலங்காரம்மெய்காட்டு வார்குழலார் என்னாவார் வெள்ளேற்றான்மெய்காட்டும் வீடாம் விரைந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
65
விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னார்விரையார் பொழிலுறந்தை மேயான் - விரையாநீறென்பணிந்தான் ஈசன் இறையான் எரியாடிஎன்பணிந்தான் ஈசன் எனக்கு.
சொற்பிரிப்பு
விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னார்விரையார் பொழிலுறந்தை மேயான் – விரையாநீர்என்பணிந்தான் ஈசன் இறையான் எரியாடிஎன்பணிந்தான் ஈசன் எனக்கு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
66
எனக்குவளை நில்லா எழில்இழந்தேன் என்னும்எனக்குவளை நில்லாநோய் செய்தான் - இனக்குவளைக்கண்டத்தான் நால்வேதன் காரோணத் தெம்மானைக்கண்டத்தான் நெஞ்சேகாக் கை.
சொற்பிரிப்பு
எனக்குவளை நில்லா எழில்இழந்தேன் என்னும்எனக்குவளை நில்லாநோய் செய்தான் – இனக்குவளைக்கண்டத்தான் நால்வேதன் காரோணத்து எம்மானைக்கண்டத்தான் நெஞ்சேகாக் கை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
67
காக்கைவளை என்பார்ப்பார்க் கன்பாப்பா னையாதேகாக்கைவளை யென்பார்ப்பான் ஊன்குரக்குக் - காக்கைவளைஆடானை ஈருரியன் ஆண்பெண் அவிர்சடையன்ஆடானை யான தமைவு.
சொற்பிரிப்பு
காக்கைவளை என்பார்ப்பார்க்கு அன்பாய் பால் நையாதேகாக்கைவளை என்பார்ப்பான் ஊர்குரக்குக் – காக்கைவளைஆடானை ஈருரியன் ஆண்பெண் அவிர்சடையன்ஆடானை யான தமைவு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
68
அமையாமென் தோள்மெலிவித் தம்மாமை கொண்டிங்கமையாநோய் செய்தான் அணங்கே - எமையாளும்சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன்சாமத்தன் இந்நோய்செய் தான்.
சொற்பிரிப்பு
அமையா மென்தோள் மெலிவித்து அம்மாமை கொண்டிங்குஅமையாநோய் செய்தான் அணங்கே – எமையாளும்சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன்சாமத்தன் இந்நோய் செய்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
69
தானக்கன் நக்க பிறையன் பிறைக்கோட்டுத்தானக் களிற்றுரியன் தண்பழனன் - தானத்தரையன் அரவரையன் ஆயிழைக்கும் மாற்கும்அரையன் உடையான் அருள்.
சொற்பிரிப்பு
தானக்கன் நக்க பிறையன் பிறைக்கோட்டுத்தானக் களிற்றுரியன் தண்பழனன் – தானத்தரையன் அரவரையன் ஆயிழைக்கும் மாற்கும்அரையன் உடையான் அருள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
70
அருள்நம்பாற் செஞ்சடையன் ஆமாத்தூர் அம்மான்அருள்நம்பால் நல்கும் அமுதன் - அருள்நம்பால்ஓராழித் தேரான் எயிறட்ட உத்தமனைஓராழி நெஞ்சே உவ.
சொற்பிரிப்பு
அருள்நம்பால் செஞ்சடையன் ஆமாத்தூர் அம்மான்அருள்நம்பால் நல்கும் அமுதன் – அருள்நம்பால்ஓராழித் தேரான் எயிறட்ட உத்தமனைஓராழி நெஞ்சே உவ.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
71
உவவா நறுமலர்கொண் டுத்தமனை உள்கிஉவவா மனமகிழும் வேட்கை - உவவாறெழுமதிபோல் வாண்முகத் தீசனார்க் கென்னேஎழுமதிபோல் ஈசன் இடம்.
சொற்பிரிப்பு
உவவா நறுமலர் கொண்டு உத்தமனை உள்கிஉவவா மனமகிழும் வேட்கை – உவவாறுஎழுமதிபோல் வான்முகத்து ஈசனார்க்கு என்னேஎழுமதிபோல் ஈசன் இடம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
72
இடமால் வலமாலை வண்ணமே தம்பம்இடமால் வலமானஞ் சேர்த்தி -இடமாயமூளா மதிபுரையும் முன்னிலங்கு மொய்சடையான்மூவா மதியான் முனி.
சொற்பிரிப்பு
இடமால் வலமாலை வண்ணமே தம்பம்இடமால் வலமானம் சேர்த்தி - இடமாயமூவா மதிபுரையும் முன்னிலங்கு மொய்சடையான்மூவா மதியான் முனி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
73
முனிவன்மால் செஞ்சடையான் முக்கணான் என்னும்முனிவன்மால் செய்துமுன் நிற்கும் - முனிவன்மால்போற்றார் புரமெரித்த புண்ணியன்தன் பொன்னடிகள்போற்றாநாள் இன்று புலர்ந்து.
சொற்பிரிப்பு
முனிவன்மால் செஞ்சடையான் முக்கணான் என்னும்முனிவன்மால் செய்துமுன் நிற்கும் – முனிவன்மால்போற்றார் புரமெரித்த புண்ணியன்தன் பொன்னடிகள்போற்றாநாள் இன்று புலர்ந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
74
புலர்ந்தால்யான் ஆற்றேன் புறனுரையும் அஃதேபுலர்ந்தானூர் புன்கூரான் என்னும் - புலர்ந்தாயமண்டளியன் அம்மான் அவர்தம் அடியார்தம்மண்டளியன் பின்போம் மனம்.
சொற்பிரிப்பு
புலர்ந்தால்யான் ஆற்றேன் புறனுரையும் அஃதேபுலர்ந்தானூர் புன்கூரான் என்னும் – புலர்ந்தாயமண்டளியன் அம்மான் அவர்தம் அடியார்தம்மண்டளியன் பின்போம் மனம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
75
மனமாய நோய்செய்தான் வண்கொன்றை தாரான்மனமாய உள்ளார வாரான் -மனமாயப்பொன்மாலை சேரப் புனைந்தான் புனைதருப்பைப்பொன்மாலை சேர்சடையான் போந்து.
சொற்பிரிப்பு
மனமாய நோய்செய்தான் வண்கொன்றை தாரான்மனமாய உள்ளார வாரான் - மனமாயப்பொன்மாலை சேரப் புனைந்தான் புனைதருப்பைப்பொன்மாலை சேர்சடையான் போந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
76
போந்தார் புகஅணைந்தார் பொன்னேர்ந்தார் பொன்னாமைபோந்தார் ஒழியார் புரமெரித்தார் - போந்தார்இலங்கோல வாள்முகத் தீசனாற் கெல்லேஇலங்கோலந் தோற்ப தினி.
சொற்பிரிப்பு
போந்தார் புகஅணைந்தார் பொன்னேர்ந்தார் பொன்னாமைபோந்தார் ஒழியார் புரமெரித்தார் – போந்தார்இலங்கோல வாள்முகத்து ஈசனாற்கு எல்லேஇலங்கோலந் தோற்ப தினி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
77
இனியாரும் ஆளாக எண்ணுவர்கொல் எண்ணார்இனியானஞ் சூணிருக்கைக் குள்ளான் - இனியானைத்தாளங்கை யாற்பாடித் தாழ்சடையான் தானுடையதாளங்கை யால்தொழுவார் தாம்.
சொற்பிரிப்பு
இனியாரும் ஆளாக எண்ணுவர்கொல் எண்ணார்இனியானம் சூணிருக்கைக்கு உள்ளான் – இனியானைத்தாளங்கையாற் பாடித் தாழ்சடையான் தானுடையதாளங்கையால் தொழுவார் தாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
78
தாமரைசேர் நான்முகற்கும் மாற்கும் அறிவரியார்தாமரைசேர் பாம்பர் சடாமகுடர் - தாமரைசேர்பாணியார் தீர்ந்தளிப்பர் பாரோம்பு நான்மறையார்பாணியார் தீர்ந்தளிப்பர் பார்.
சொற்பிரிப்பு
தாமரைசேர் நான்முகற்கும் மாற்கும் அறிவரியார்தாமரைசேர் பாம்பர் சடாமகுடர் – தாமரைசேர்பாணியார் தீர்ந்தளிப்பர் பாரோம்பு நான்மறையார்பாணியார் தீர்ந்தளிப்பர் பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
79
பார்கால்வான் நீர்தீப் பகலோன் பனிமதியோன்பார்கோல மேனிப் பரனடிக்கே - பார்கோலக்கோகரணத் தானறியக் கூறுதியே நன்னெஞ்சேகோகரணத் தானாய கோ.
சொற்பிரிப்பு
பார்கால்வான் நீர்தீப் பகலோன் பனிமதியோன்பார்கோல மேனிப் பரனடிக்கே – பார்கோலக்கோகரணத் தானறியக் கூறுதியே நன்னெஞ்சேகோகரணத் தானாய கோ.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
80
கோப்பாடி ஓடாதே நெஞ்சம் மொழி கூத்தன்கோப்பாடிக் கோகரணங் குற்றாலம் -கோப்பாடிப்பின்னைக்காய் நின்றார்க் கிடங்கொடுக்கும் பேரருளான்பின்னைக்காம் எம்பெருமான் பேர்.
சொற்பிரிப்பு
கோப்பாடி ஓடாதே நெஞ்சம் மொழி கூத்தன்கோப்பாடிக் கோகரணம் குற்றாலம் - கோப்பாடிப்பின்னைக்காய் நின்றார்க்கு இடங்கொடுக்கும் பேரருளான்பின்னைக்காம் எம்பெருமான் பேர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
81
பேரானை ஈருரிவை போர்த்தானை ஆயிரத்தெண்பேரானை ஈருருவம் பெற்றானைப் - பேராநஞ்சுண்டானை உத்தமனை உள்காதார்க் கெஞ்ஞான்றும்உண்டாம்நா ளல்ல உயிர்.
சொற்பிரிப்பு
பேரானை ஈருரிவை போர்த்தானை ஆயிரத்தெண்பேரானை ஈருருவம் பெற்றானைப் – பேராநஞ்சுஉண்டானை உத்தமனை உள்காதார்க்கு எஞ்ஞான்றும்உண்டாம் நாளல்ல உயிர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
82
உயிராய மூன்றொடுக்கி ஐந்தடக்கி உள்ளத்துயிராய ஒண்மலர்த்தாள் ஊடே - உயிரான்பகர்மனத்தான் பாசுபதன் பாதம் பணியப்பகர்மனமே ஆசைக்கட் பட்டு.
சொற்பிரிப்பு
உயிராய மூன்றொடுக்கி ஐந்தடக்கி உள்ளத்துஉயிராய ஒண்மலர்த்தாள் ஊடே – உயிரான்பகர்மனத்தான் பாசுபதன் பாதம் பணியப்பகர்மனமே ஆசைக்கட் பட்டு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
83
பட்டாரண் பட்டரங்கன் அம்மான் பரஞ்சோதிபட்டார் எலும்பணியும் பாசுபதன் - பட்டார்ந்தகோவணத்தான் கொல்லேற்றன் என்றென்று நெஞ்சமேகோவணத்து நம்பனையே கூறு.
சொற்பிரிப்பு
பட்டாரண் பட்டரங்கன் அம்மான் பரஞ்சோதிபட்டார் எலும்பணியும் பாசுபதன் – பட்டார்ந்தகோவணத்தான் கொல்லேற்றன் என்றென்று நெஞ்சமேகோவணத்து நம்பனையே கூறு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
84
கூற்றும் பொருளும்போற் காட்டியென் கோல்வளையைக்கூற்றின் பொருள்முயன்ற குற்றாலன் - கூற்றின்செருக்கழியச் செற்ற சிவற்கடிமை நெஞ்சேசெருக்கழியா முன்னமே செய்.
சொற்பிரிப்பு
கூற்றும் பொருளும்போல் காட்டியென் கோல்வளையைக்கூற்றின் பொருள்முயன்ற குற்றாலன் – கூற்றின்செருக்கழியச் செற்ற சிவற்கடிமை நெஞ்சேசெருக்கழியா முன்னமே செய்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
85
செய்யான் கருமிடற்றான் செஞ்சடையான் தேன்பொழில்சூழ்செய்யான் பழனத்தான் மூவுலகும் - செய்யாமுன்நாட்டுணாய் நின்றானை நாடுதும்போய் நன்னெஞ்சேநாட்டுணாய் நின்றானை நாம்.
சொற்பிரிப்பு
செய்யான் கருமிடற்றான் செஞ்சடையான் தேன்பொழில்சூழ்செய்யான் பழனத்தான் மூவுலகும் – செய்யாமுன்நாட்டுணாய் நின்றானை நாடுதும்போய் நன்னெஞ்சேநாட்டுணாய் நின்றானை நாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
86
நாவாய் அகத்துளதே நாமுளமே நம்மீசன்நாவாய்போல் நன்னெறிக்கண் உய்க்குமே - நாவாயால்துய்க்கப் படும்பொருளைக் கூட்டுதும் மற்றவர்க்காள்துய்க்கப் படுவதாஞ் சூது.
சொற்பிரிப்பு
நாவாய் அகத்துளதே நாமுளமே நம்மீசன்நாவாய்போல் நன்னெறிக்கண் உய்க்குமே – நாவாயால்துய்க்கப் படும்பொருளைக் கூட்டுதும் மற்றவர்க்காள்துய்க்கப் படுவதாம் சூது.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
87
சூதொன் றுனக்கறியச் சொல்லினேன் நன்னெஞ்சேசூதன் சொலற்கரிய சோதியான் - சூதின்கொழுந்தேன் கமழ்சோலைக் குற்றாலம் பாடிக்கொழுந்தே இழந்தேன் குருகு.
சொற்பிரிப்பு
சூதொன்று உனக்கறியச் சொல்லினேன் நன்னெஞ்சேசூதன் சொலற்கரிய சோதியான் – சூதின்கொழுந்தேன் கமழ்சோலைக் குற்றாலம் பாடிக்கொழுந்தே இழந்தேன் குருகு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
88
குருகிளவேய்த் தோள்மெலியக் கொங்கைமார் புல்கிக்குருகிளையார் கோடு கொடாமே - குருகிளரும்போதார் கழனிப் புகலூர் அமர்ந்துறையும்போதாநின் பொன்முடிக்கட் போது.
சொற்பிரிப்பு
குருகிள வேய்த்தோள் மெலியக் கொங்கைமார் புல்கிக்குருகிளையார் கோடுகொடாமே – குருகிளரும்போதார் கழனிப் புகலூர் அமர்ந்துறையும்போதாநின் பொன்முடிக்கட் போது.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
89
போதரங்க வார்குழலார் என்னாவார் நன்னெஞ்சேபோதரங்க நீர்கரந்த புண்ணியனைப் - போதரங்கக்கானகஞ்சேர் சோதியே கைவிளக்கா நின்றாடும்கானகஞ்சேர் வாற்கடிமை கல்.
சொற்பிரிப்பு
போதரங்க வார்குழலார் என்னாவார் நன்னெஞ்சேபோதரங்க நீர்கரந்த புண்ணியனைப் – போதரங்கக்கானகஞ்சேர் சோதியே கைவிளக்கா நின்றாடும்கானகஞ்சேர் வாற்கடிமை கல்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
90
கற்றான்அஞ் சாடுகா வாலி களந்தைக்கோன்கற்றானைக் கல்லாத நாளெல்லாம் - கற்றான்அமரர்க் கமரர் அரர்க்கடிமை பூண்டார்அமரர்க் கமரரா வார்.
சொற்பிரிப்பு
கற்றானஞ்சாடுகா வாலி களந்தைக்கோன்கற்றானைக் கல்லாத நாளெல்லாம் – கற்றான்அமரர்க்கு அமரர் அரர்க்கடிமை பூண்டார்அமரர்க்கு அமரர் ஆவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
91
ஆவா மனிதர் அறிவிலரே யாதொன்றும்ஆவார்போற் காட்டி அழிகின்றார் - ஆஆபகல்நாடிப் பாடிப் படர்சடைக்குப் பல்பூப்பகல்நாடி ஏத்தார் பகர்ந்து.
சொற்பிரிப்பு
ஆவா மனிதர் அறிவிலரே யாதொன்றும்ஆவார்போல் காட்டி அழிகின்றார் – ஆவாபகல்நாடிப் பாடிப் படர்சடைக்குப் பல்பூப்பகல்நாடி ஏத்தார் பகர்ந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
92
பகனாட்டம் பாட்டயரும் பாட்டோ டாட் டெல்லிபகனாட்டம் பாழ்படுக்கும் உச்சி - பகனாட்டம்தாங்கால் தொழுதெழுவார் தாழ்சடையார் தம்முடையதாங்கால் தொழுதல் தலை.
சொற்பிரிப்பு
பகனாட்டம் பாட்டயரும் பாட்டோடு ஆட்டு எல்லிபகனாட்டம் பாழ்படுக்கும் உச்சி – பகனாட்டம்தாங்கால் தொழுதெழுவார் தாழ்சடையார் தம்முடையதாங்கால் தொழுதல் தலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
93
தலையாலங் காட்டிற் பலிதிரிவர் என்னும்தலையாலங் காடர்தாம் என்னும் -தலையாயபாகீ ரதிவளரும் பல்சடையீர் வல்விடையீர்பாகீ ரதிவளரும் பண்பு.
சொற்பிரிப்பு
தலைஆலங்காட்டில் பலிதிரிவர் என்னும்தலை ஆலங்காடர்தாம் என்னும் - தலையாயபாகீரதி வளரும் பல்சடையீர் வல்லிடையீர்பாகீரதி வளரும் பண்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
94
பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதேர்ந்தான்பண்பாய பைங்கொன்றைத் தார்அருளான் - பண்பால்திருமாலு மங்கைச் சிவற் கடிமை செய்வான்திருமாலு மங்கைச் சிவன்.
சொற்பிரிப்பு
பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதேர்ந்தான்பண்பாய பைங்கொன்றைத் தார்அருளான் – பண்பால்திருமாலு மங்கைச் சிவற்கு அடிமை செய்வான்திருமாலு மங்கைச் சிவன்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
95
சிவன்மாட் டுகவெழுதும் நாணும் நகுமென்னும்சிவன்மேய செங்குன்றூர் என்னும் -சிவன்மாட்டங்காலிங் கனம்நினையும் ஆயிழையீர் அங்கொன்றையாலிங் கனம்நினையு மாறு.
சொற்பிரிப்பு
சிவன்மாட்டு உகவெழுதும் நாணும் நகுமென்னும்சிவன்மேய செங்குன்றூர் என்னும் - சிவன்மாட்டங்குஆலிங்கனம் நினையும் ஆயிழையீர் அங்கொன்றைஆலிங்கனம் நினையுமாறு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
96
ஆறாவெங் கூற்றுதைத் தானைத்தோல் போர்த்துகந்தங்காறார் சடையீர்க் கமையாதே - ஆறாதஆனினித்தார் தாந்தம் அணியிழையி னார்க்கடிமைஆனினத்தார் தாந்தவிர்ந்த தாட்டு.
சொற்பிரிப்பு
ஆறாவெங்கூற்றுதைத்தானைத் தோல் போர்த்துகந்தங்குஆறார் சடையீற்கு அமையாதே – ஆறாதஆனினத்தார் தாந்தம்அணியிழையினார்க்கு அடிமைஆனினத்தார் தாந்தவிர்ந்த தாட்டு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
97
ஆட்டும் அரவர் அழிந்தார் எலும்பணிவார்ஆட்டும் இடுபலிகொண் டார்அமரர் - ஆட்டுமோர்போரேற்றான் கொன்றையான் போந்தான் பலிக்கென்றுபோரேற்றான் போந்தான் புறம்.
சொற்பிரிப்பு
ஆட்டும் அரவர் அழிந்தார் எலும்பணிவார்ஆட்டும் இடுபலி கொண்டார் அமரர் – ஆட்டுமோர்போரேற்றான் கொன்றையான் போந்தான் பலிக்கென்றுபோரேற்றான் போந்தான் புறம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
98
புறந்தாழ் குழலார் புறனுரைஅஞ் சாதேபுறந்தாழ் புலிப்பொதுவுள் ஆடி - புறந்தாழ்பொன்மேற்றளிக்கோன் வெண்பிறையான் வெண்சுடர்போல் மேனியான்மேற்றளிக்கோன் என்றுரையான் மெய்.
சொற்பிரிப்பு
புறந்தாழ் குழலார் புறனுரை அஞ்சாதேபுறந்தாழ் புலிப்பொதுவுள்ஆடி – புறந்தாழ்பொன்மேற்றளிக்கோன் வெண்பிறையான் வெண்சுடர்போல் மேனியான்மேற்றளிக்கோன் என்றுரையான் மெய்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
99
மெய்யன் பகலாத வேதியன் வெண்புரிநூல்மெய்யன் விரும்புவார்க் கெஞ்ஞான்றும் -வெய்யதுணையகலா நோக்ககலா போற்றகலா நெஞ்சேதுணையிகலா கூறுவான் நூறு.
சொற்பிரிப்பு
மெய்யன்பு அகலாத வேதியன் வெண்புரிநூல்மெய்யன் விரும்புவார்க்கு எஞ்ஞான்றும் - வெய்யதுணையகலா நோக்ககலா போற்றகலா நெஞ்சேதுணையிகலா கூறுவான் நூறு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
100
நூறான் பயன்ஆட்டி நூறு மலர்சொரிந்துநூறா நொடிஅதனின் மிக்கதே - நூறாஉடையான் பரித்தஎரி உத்தமனை வெள்ளேறுடையானைப் பாடலால் ஒன்று.
சொற்பிரிப்பு
நூறான் பயன்ஆட்டி நூறு மலர்சொரிந்துநூறா நொடி அதனின் மிக்கதே – நூறாஉடையான் பரித்தஎரி உத்தமனை வெள்ளேறுஉடையானைப் பாடலால் ஒன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.