திருமுறை 11 · 11.022 · 37

சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை

அருளியவர்
கபிலதேவ நாயனார்

1

அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான்அந்தியே போலும் அவிர்சடையான் -அந்தியில்தூங்கிருள்சேர் யாமமே போலும் சுடுநீற்றான்வீங்கிருள்சேர் நீல மிடறு.
சொற்பிரிப்பு
அந்தி மதி முகிழான் அந்தி அம் செந்நிறத்தான்அந்தியே போலும் அவிர்சடையான் - அந்தியில்தூங்கிருள் சேர் யாமமே போலும் சுடுநீற்றான்வீங்கிருள் சேர் நீல மிடறு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மிடற்றாழ் கடல்நெஞ்சம் வைக்கின்ற ஞான்றுமெல் லோதிநல்லாள்மடற்றா மரைக்கைகள் காத்தில வேமழு வாளதனால்அடற்றா தையைஅன்று தாளெறிந் தாற்கருள் செய்தகொள்கைக்கடற்றாழ் வயற்செந்நெல் ஏறும்வெண் காட்டெங் கரும்பினையே.
சொற்பிரிப்பு
மிடற்று ஆழ் கடல்நஞ்சம் வைக்கின்ற ஞான்று மெல்லோதி நல்லாள்மடல் தாமரைக்கைகள் காத்திலவே மழுவாள் அதனால்அடல் தாதையை அன்று தாள் எறிந்தாற்கு அருள் செய்தகொள்கைக்கடல் தாழ் வயற் செந்நெல் ஏறும் வெண்காட்டு எம் கரும்பினையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கருப்புச் சிலைஅநங்கன் கட்டழகு சுட்டநெருப்புத் திருநெற்றி நாட்டம் - திருச்சடையில்திங்கள் புரையும் திரள்பொன் திருமேனிஎங்கள் இமையோர் இறைக்கு.
சொற்பிரிப்பு
கருப்புச் சிலை அநங்கன் கட்டழகு சுட்டநெருப்புத் திருநெற்றி நாட்டம் – திருச்சடையில்திங்கள் புரையும் திரள்பொன் திருமேனிஎங்கள் இமையோர் இறைக்கு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

இறைக்கோ குறைவில்லை உண்டிறை யேஎழி லாரெருக்குநறைக்கோ மளக்கொன்றை துன்றும் சடைமுடி நக்கர் சென்னிப்பிறைக்கோர் பிளவும் பெறுவிளிக் கொண்டெம் பிரான்உடுக்கும்குறைக்கோ வணம்ஒழிந் தாற்பின்னை ஏதுங் குறைவில்லையே.
சொற்பிரிப்பு
இறைக்கோ குறைவில்லை உண்டு இறையே எழிலார் எருக்குநறைக்கோமளக் கொன்றை துன்றும் சடைமுடி நக்கர் சென்னிப்பிறைக்கோர் பிளவும் பெறு விளிக் கொண்டு எம்பிரான் உடுக்கும்குறைக்கோவணம் ஒழிந்தால் பின்னை ஏதும் குறைவில்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

இல்லை பிறவிக் கடலேறல் இன்புறவில்முல்லை கமழும் முதுகுன்றில் - கொல்லைவிடையானை வேதியனை வெண்மதிசேர் செம்பொற்சடையானைச் சாராதார் தாம்.
சொற்பிரிப்பு
இல்லை பிறவிக் கடல் ஏறல் இன்புறவில்முல்லை கமழும் முதுகுன்றில் – கொல்லைவிடையானை வேதியனை வெண்மதிசேர் செம்பொற்சடையானைச் சாராதார் தாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தாமரைக் கோவும்நன் மாலும் வணங்கத் தலையிடத்துத்தாமரைக் கோவணத் தோடிரந் துண்ணினும் சார்ந்தவர்க்குத்தாமரைக் கோமளத் தோடுல காளத் தருவர் கண்டீர்தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடிச் சங்கரரே.
சொற்பிரிப்பு
தாமரைக் கோவும் நன்மாலும் வணங்கத் தலையிடத்துத்தாம் அரைக் கோவணத்தோடு இரந்து உண்ணினும் சார்ந்தவர்க்குத்தாமரைக் கோமளத்தோடு உலகாளத் தருவர் கண்டீர்தாமரைக் கோமளக்கைத் தவளப் பொடிச் சங்கரரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

சங்குகோள் எண்ணுவரே பாவையரைத் தம்அங்கம்பங்குபோய் நின்றாலும் பாய்கலுழிக் -கங்கைவரியராப் போதும் வளர்சடையாய் நின்போல்பெரியரா வாரோ பிறர்.
சொற்பிரிப்பு
சங்கு கோள் எண்ணுவரே பாவையரைத் தம்அங்கம்பங்கு போய் நின்றாலும் பாய் கலுழிக் - கங்கைவரி அராப் போதும் வளர்சடையாய் நின்போல்பெரியர் ஆவாரோ பிறர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பிறப்பாழ் குழியிடை வீழ்ந்துநை வேற்குநின் பேரருளின்சிறப்பார் திருக்கை தரக்கிற்றி யேதிரி யும்புரமூன்றறப்பாய் எரியுற வான்வரை வில்வளைத் தாய்இரவாய்மறப்பா வரியர நாண்இடைக் கோத்தகை வானவனே.
சொற்பிரிப்பு
பிறப்பு ஆழ்குழியிடை வீழ்ந்து நைவேற்கு நின் பேரருளின்சிறப்பார் திருக்கை தரக்கிற்றியே திரியும் புரமூன்றுஅறப்பாய் எரியுற வான் வரை வில் வளைத்தாய் இரவாய்மறப் பாவரி அர நாண் இடைக் கோத்த கை வானவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வானம் மணிமுகடா மால்வரையே தூணாகஆன பெரும்பார் அரங்காகக் - கானகத்தில்அம்மா முழவதிர ஆடும் பொழுதாரூர்எம்மானுக் கெய்தா திடம்.
சொற்பிரிப்பு
வானம் மணிமுகடா மால்வரையே தூணாகஆன பெரும்பார் அரங்காகக் – கானகத்தில்அம் மா முழவதிர ஆடும் பொழுது ஆரூர்எம்மானுக்கு எய்தாது இடம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

இடப்பா கமும்உடை யாள்வரை யீன்இள வஞ்சியன்னமடப்பால் மொழியென்பர் நின்வலப் பாகத்து மான்மழுவும்விடப்பா சனக்கச்சும் இச்சைப் படநீ றணிந்துமிக்ககடப்பார் களிற்றுரி கொண்டெங்கும் மூடும்எங் கண்ணுதலே.
சொற்பிரிப்பு
இடப்பாகமும் உடையாள் வரை ஈன் இள வஞ்சியன்னமடப்பால் மொழியென்பர் நின் வலப்பாகத்து மான்மழுவும்விடப்பாசனக் கச்சும் இச்சைப்பட நீறணிந்து மிக்ககடப்பார் களிற்று உரி கொண்டு எங்கும் மூடும் எம்கண்ணுதலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

கண்ணி இளம்பிறையும் காய்சினத்த மாசுணமும்நண்ணி இருந்தால் நலமில்லை- தண்ணலங்கல்பூங்கொன்றை யின்தேன் பொதியுஞ் சடைப்புனிதாவாங்கொன்றை இன்றே மதித்து.
சொற்பிரிப்பு
கண்ணி இளம்பிறையும் காய்சினத்த மாசுணமும்நண்ணி இருந்தால் நலமில்லை – தண் அலங்கல்பூங்கொன்றையின் தேன் பொதியும் சடைப்புனிதாவாங்கு ஒன்றை இன்றே மதித்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

மதிமயங் கப்பொங்கு கோழிருட் கண்டவ விண்டவர்தம்பதிமயங் கச்செற்ற கொற்றவில் வானவ நற்றவர்சூழ்அதிகைமங் கைத்திரு வீரட்ட வாரிட்ட தேனுமுண்டுகதிமயங் கச்செல்வ தேசெல்வ மாகக் கருதுவதே.
சொற்பிரிப்பு
மதிமயங்கப் பொங்கு கோழிருள் கண்டவ விண்டவர் தம்பதி மயங்கச் செற்ற கொற்றவில் வானவ நற்றவர் சூழ்அதிகை மங்கைத் திருவீரட்ட ஆரிட்டதேனும் உண்டுகதி மயங்கச் செல்வதே செல்வமாகக் கருதுவதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

கருதுங் கருத்துடையேன் கையுடையேன் கூப்பப்பெரிதும் பிறதிறத்துப் பேசேன் - அரிதன்றேயாகப் பிறையான் இனியென் அகம்புகுந்துபோகப் பெறுமோ புறம்.
சொற்பிரிப்பு
கருதும் கருத்துடையேன் கையுடையேன் கூப்பப்பெரிதும் பிற திறத்துப் பேசேன் – அரிதன்றேயாகப் பிறையான் இனியென் அகம்புகுந்துபோகப் பெறுமோ புறம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

புறமறை யப்புரி புன்சடை விட்டெரி பொன்திகழும்நிறமறை யத்திரு நீறு துதைந்தது நீள்கடல்நஞ்சுஉறமறை யக்கொண்ட கண்டமும் சால உறப்புடைத்தால்அறமறை யச்சொல்லி வைத்தையம் வேண்டும் அடிகளுக்கே.
சொற்பிரிப்பு
புறமறையப் புரி புன்சடை விட்டெரி பொன்திகழும்நிறமறையத் திருநீறு துதைந்தது நீள் கடல் நஞ்சுஉற மறையக் கொண்ட கண்டமும் சால உறப்பு உடைத்தால்அற மறையச் சொல்லி வைத்து ஐயம் வேண்டும் அடிகளுக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

அடியோமைத் தாங்கியோ ஆடை உடுத்தோகுடியோம்ப மாநிதியங் கொண்டோ - பொடியாடுநெற்றியூர் வாளரவ நீள்சடையாய் நின்னூரைஒற்றியூர் ஆக்கிற் றுரை.
சொற்பிரிப்பு
அடியோமைத் தாங்கியோ ஆடை உடுத்தோகுடியோம்ப மாநிதியம் கொண்டோ – பொடியாடுநெற்றியூர் வாளரவ நீள்சடையாய் நின் ஊரைஒற்றியூர் ஆக்கிற்று உரை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

உரைவந் துறும்பதத் தேஉரை மின்கள்அன் றாயின்இப்பால்நரைவந் துறும்பின்னை வந்துறுங் காலன்நன் முத்திடறித்திரைவந் துறுங்கரைக் கேகலம் வந்துறத் திண்கைவன்றாள்வரைவந் துறுங்கடல் மாமறைக் காட்டெம் மணியினையே.
சொற்பிரிப்பு
உரை வந்துறும் பதத்தே உரைமின்கள் அன்றாயின் இப்பால்நரை வந்துறும் பின்னை வந்துறும் காலன் நன் முத்திடறித்திரைவந்துறுங் கரைக்கே கலம் வந்துறத் திண்கை வன்றாள்வரைவந்துறுங் கடல் மாமறைக்காட்டு எம்மணியினையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

மணியமரும் மாமாட வாய்மூரான் தன்னைஅணியமர ரோடயனும் மாலும்- துணிசினத்தசெஞ்சூட்ட சேவற் கொடியானு மாய்நின்றுநஞ்சூட்ட எண்ணியவா நன்று.
சொற்பிரிப்பு
மணியமரும் மாமாட வாய்மூரான் தன்னைஅணி அமரரோடு அயனும் மாலும் – துணி சினத்தசெஞ்சூட்ட சேவற் கொடியானுமாய் நின்றுநஞ்சூட்ட எண்ணியவா நன்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

நன்றைக் குறும்இருமற்பெரு மூச்சுநண் ணாத முன்னம்குன்றைக் குறுவது கொண்டழி யாதறி வீர்செறிமின்கொன்றைக் குறுநறுங் கண்ணியி னான்றன்கொய் பூங்கயிலைக்குன்றைக் குறுகரி தேனும்உள் ளத்திடைக் கொள்மின்களே.
சொற்பிரிப்பு
நன்றைக் குறும் இருமற் பெருமூச்சு நண்ணாத முன்னம்குன்றைக் குறுவது கொண்டழியாது அறிவீர் செறிமின்கொன்றைக் குறுநறும் கண்ணியினான் தன்கொய் பூங்கயிலைக்குன்றைக் குறுக அரிதேனும் உள்ளத்திடைக் கொள்மின்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

கொண்ட பலிநுமக்கும் கொய்தார் குமரர்க்கும்புண்டரிக மாதினுக்கும் போதுமே- மண்டிஉயிரிழந்தார் சேர்புறங்காட் டோரிவாய் ஈர்ப்பமயிரிழந்த வெண்டலைவாய் வந்து.
சொற்பிரிப்பு
கொண்ட பலி நுமக்கும் கொய்தார்க் குமரர்க்கும்புண்டரிக மாதினுக்கும் போதுமே - மண்டிஉயிரிழந்தார் சேர் புறங்காட்டு ஓரி வாய் ஈர்ப்பமயிரிழந்த வெண்டலைவாய் வந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

வந்தா றலைக்கும் வலஞ்சுழி வானவ வானவர்தம்அந்தார் மகுடத் தடுத்தபைம் போதில்அந் தேனுழக்கிச்செந்தா மரைச்செவ்வி காட்டும் திருவடிக் குஞ்செல்லுமேஎந்தாய் அடித்தொண்டர் ஓடிப் பிடித்திட்ட இன்மலரே.
சொற்பிரிப்பு
வந்தார் அலைக்கும் வலஞ்சுழி வானவ வானவர் தம்அந்தார் மகுடத்து அடுத்த பைம்போதில் அந்தேன் உழக்கிச்செந்தாமரைச் செவ்வி காட்டும் திருவடிக்கும் செல்லுமேஎந்தாய் அடித்தொண்டர் ஓடிப் பிடித்திட்ட இன்மலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

மலர்ந்த மலர்தூவி மாமனத்தைக் கூப்பிப்புலர்ந்தும் புலராத போதும் - கலந்திருந்துகண்ணீர் அரும்பக் கசிவார்க்குக் காண்பெளியன்தெண்ணீர் சடைக்கரந்த தேவு.
சொற்பிரிப்பு
மலர்ந்த மலர் தூவி மாமனத்தைக் கூப்பிப்புலர்ந்தும் புலராத போதும் – கலந்திருந்துகண்ணீர் அரும்பக் கசிவார்க்குக் காண்பெளியன்தெண்ணீர் சடைக் கரந்த தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

தேவனைப் பூதப் படையனைக் கோதைக் திருவிதழிப்பூவனைக் காய்சினப் போர்விடை தன்னொடும் போற்றநின்றமூவனை ஈருரு வாயமுக் கண்ணனை முன்னுமறைநாவனை நான்மற வேன்இவை நான்வல்ல ஞானங்களே.
சொற்பிரிப்பு
தேவனைப் பூதப் படையனைக் கோதைக் திருவிதழிப்பூவனைக் காய்சினப் போர்விடை தன்னொடும் போற்றநின்றமூவனை ஈருருவாய முக்கண்ணனை முன்னு மறைநாவனை நான் மறவேன் இவை நான் வல்ல ஞானங்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

நானும்என் நல்குரவும் நல்காதார் பல்கடையில்கானிமிர்த்து நின்றிரப்பக் கண்டிருக்கும் - வானவர்கள்தம்பெருமான் மூவெயிலும் வேவச் சரந்தூர்த்தஎம்பெருமான் என்னா இயல்பு.
சொற்பிரிப்பு
நானும் என் நல்குரவும் நல்காதார் பல்கடையில்கால் நிமிர்த்து நின்றிரப்பக் கண்டிருக்கும் – வானவர்கள்தம்பெருமான் மூவெயிலும் வேவச் சரந் தூர்த்தஎம்பெருமான் என்னா இயல்பு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

இயலிசை நாடக மாய்எழு வேலைக ளாய் வழுவாப்புயலியல் விண்ணொடு மண்முழு தாய்ப்பொழு தாகிநின்றமயிலியல் மாமறைக் காடர்வண் காடர்வெண் தில்லை மல்குகயலியல் கண்ணிபங் கார்அன்பர் சித்தத் தடங்குவரே.
சொற்பிரிப்பு
இயல் இசை நாடகமாய் எழு வேலைகளாய் வழுவாப்புயலியல் விண்ணொடு மண்முழுதாய்ப் பொழுதாகி நின்றமயிலியல் மாமறைக்காடர் வெண்காடர் வண்தில்லை மல்குகயலியல் கண்ணியங்கார் அன்பர் சித்தத்து அடங்குவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

அடங்காதார் ஆரொருவர் அங்கொன்றை துன்றுமடங்காதல் என்வளைகொள் வார்த்தை - நுடங்கிடையீர்ஊரூரன் சென்றக்கால் உண்பலிக்கென் றங்ஙனேஆரூரன் செல்லுமா றங்கு.
சொற்பிரிப்பு
அடங்காதார் ஆரொருவர் அங்கொன்றை துன்றுமடங்காதல் என் வளைகொள் வார்த்தை – நுடங்கு இடையீர்ஊருரன் சென்றக்கால் உண் பலிக்கென்று அங்ஙனேஆருரன் செல்லுமாறு அங்கு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

அங்கை மறித்தவ ரால்அவி உண்ணும்அவ் வானவர்கள்தங்கை மறித்தறி யார்தொழு தேநிற்பர் தாழ்சடையின்கங்கை மறித்தண வப்பண மாசுணக் கங்கணத்தின்செங்கை மறித்திர விற்சிவன் ஆடுந் திருநட்டமே.
சொற்பிரிப்பு
அங்கை மறித்தவரால் அவி உண்ணும் அவ்வானவர்கள்தங்கை மறித்தறியார் தொழுதே நிற்பர் தாழ்சடையின்கங்கை மறித்து அணவப் பண மாசுணக் கங்கணத்தின்செங்கை மறித்து இரவில் சிவன் ஆடும் திருநட்டமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

நட்டம்நீ ஆடும் பொழுதத்து நல்லிலயம்கொட்டக் குழிந்தொழிந்த வாகொல்லோ - வட்டுக்கடுங்குன்ற மால்யானைக் காருரிவை போர்த்தகொடுங்குன்றப் பேயின் கொடிறு.
சொற்பிரிப்பு
நட்டம் நீ ஆடும் பொழுதத்து நல் இலயம்கொட்டக் குழிந்து ஒழிந்தவா கொல்லோ – வட்டுக்கடுங்குன்ற மால்யானைக் காருரிவை போர்த்தகொடுங்குன்றப் பேயின் கொடிறு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

கொடிறு முரித்தன்ன கூன்தாள் அலவன் குருகினஞ்சென்றிடறுங் கழனிப் பழனத் தரசை எழிலிமையோர்படிறு மொழிந்து பருகக் கொடுத்துப் பரவை நஞ்சம்மிடறு தடுத்தது வும்அடி யேங்கள் விதிவசமே.
சொற்பிரிப்பு
கொடிறு முரித்தன்ன கூன்தாள் அலவன் குருகினஞ் சென்றுஇடறும் கழனிப் பழனத்து அரசை எழில் இமையோர்படிறு மொழிந்து பருகக் கொடுத்துப் பரவை நஞ்சம்மிடறு தடுத்ததுவும் அடியேங்கள் விதிவசமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

விதிகரந்த செய்வினையேன் மென்குழற்கே வாளாமதுகரமே எத்துக்கு வந்தாய் - நதிகரந்தகொட்டுக்காட் டான்சடைமேல் கொன்றைக்குறுந் தெரியல்தொட்டுக்காட் டாய்சுழல்வாய் தொக்கு.
சொற்பிரிப்பு
விதிகரந்த செய்வினையேன் மென்குழற்கே வாளாமதுகரமே எத்துக்கு வந்தாய் – நதி கரந்தகொட்டுக் காட்டான் சடைமேல் கொன்றைக் குறுந் தெரியல்தொட்டுக் காட்டாய் சுழல்வாய் தொக்கு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

தொக்கு வருங்கணம் பாடத்தொல் நீறணிந் தேநிலவும்நக்கு வருங்கண்ணி சூடிவந் தார்நறும் புன்னைமுன்னம்அக்கு வருங்கழிக் கானல்ஐ யாறரைக் காணஅன்புமிக்கு வரும்வரும் போதவ ரைக்காண வெள்குவனே.
சொற்பிரிப்பு
தொக்கு வருங்கணம் பாடத் தொல் நீறணிந்தே நிலவும்நக்கு வருங்கண்ணி சூடிவந்தார் நறும்புன்னை முன்னம்அக்கு வருங் கழிக்கானல் ஐயாறரைக் காண அன்புமிக்கு வரும் அரும் போதவரைக் காண வெள்குவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

வெள்காதே உண்பலிக்கு வெண்டலைகொண் டூர்திரிந்தால்எள்காரே வானவர்கள் எம்பெருமான் -வள்கூர்வடதிருவீ ரட்டானத் தென்அதிகை மங்கைக்குடதிருவீ ரட்டானங் கூறு.
சொற்பிரிப்பு
வெள்காதே உண்பலிக்கு வெண்டலை கொண்டு ஊர்திரிந்தால்எள்காரே வானவர்கள் எம்பெருமான் - வள்கூர்வடதிரு வீரட்டானத் தென் அதிகை மங்கைக்குடதிரு வீரட்டானம் கூறு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

கூறு பெறுங்கண்ணி சேர்கருங் கூந்தல்சுண் ணந்துதைந்துநீறு பெறுந்திரு மேனி நெருப்புப் புரைபொருப்பொத்தாறு பெறுஞ்சடை அங்கொன்றை யந்தேன் துவலைசிந்தவீறு பெறுஞ்சென்று சென்றெம் பிரானுக்கு வெண்ணிறமே.
சொற்பிரிப்பு
கூறு பெறுங்கண்ணி சேர் கருங்கூந்தல் சுண்ணம் துதைந்துநீறு பெறுந் திருமேனி நெருப்புப் புரை பொருப்பு ஒத்துஆறு பெறுஞ்சடை அங்கொன்றை அந்தேன் துவலை சிந்தவீறு பெறுஞ் சென்று சென்று எம் பிரானுக்கு வெண்ணிறமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

நிறம்பிறிதாய் உள்மெலிந்து நெஞ்சுருகி வாளாபுறம்புறமே நாள்போக்கு வாளோ - நறுந்தேன்படுமுடியாப் பாய்நீர் பரந்தொழுகு பாண்டிக்கொடிமுடியாய் என்றன் கொடி.
சொற்பிரிப்பு
நிறம்பிறிதாய் உள்மெலிந்து நெஞ்சுருகி வாளாபுறம்புறமே நாள் போக்குவாளோ – நறுந்தேன்படு முடியாப் பாய்நீர் பரந்தொழுகு பாண்டிக்கொடிமுடியாய் என்றன் கொடி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

கொடிக்குல வும்மதிற் கோவலூர் வீரட்டக் கோளரவம்பிடிக்கில அம்முடிப் பூணலை யத்தொடு மால்விடையின்இடிக்குரல் கேட்டிடி என்றிறு கக்கடி வாளெயிற்றால்கடிக்க லுறும்அஞ்சி நஞ்சம்இருந்தநின் கண்டத்தையே.
சொற்பிரிப்பு
கொடிக்குலவும் மதில் கோவலூர் வீரட்ட கோளரவம்பிடிக்கில அம்முடிப் பூணலை அத்தொடு மால்விடையின்இடிக்குரல் கேட்டு இடி என்று இறுகக் கடி வாள் எயிற்றால்கடிக்கலுறும் அஞ்சி நஞ்சம் இருந்த நின் கண்டத்தையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக் கருங்கடல்நஞ்சுண்டல் புரிந்துகந்த உத்தமற்குத் - தொண்டடைந்தார்கூசுவரே கூற்றைக் குறுகுவரே தீக்கொடுமைபேசுவரே மற்றொருவர் பேச்சு.
சொற்பிரிப்பு
கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக் கருங்கடல் நஞ்சுஉண்டல் புரிந்து உகந்த உத்தமற்குத் – தொண்டு அடைந்தார்கூசுவரே கூற்றைக் குறுகுவரே தீக்கொடுமைபேசுவரே மற்றொருவர் பேச்சு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

பேய்ச்சுற்றம் வந்திசை பாடப் பிணமிடு காட்டயலேதீச்சுற்ற வந்துநின் றாடல் என் னாஞ்செப்பு முப்பொழுதும்கோச்சுற்ற மாக்குடை வானவர் கோன்அயன் மால்முதலாமாச்சுற்றம் வந்திறைஞ் சுந்திருப் பொற்சடை மன்னவனே.
சொற்பிரிப்பு
பேய்ச்சுற்றம் வந்து இசை பாடப் பிணமிடு காட்டயலேதீச்சுற்ற வந்து நின்று ஆடல் என்னாஞ் செப்பு முப்பொழுதும்கோச் சுற்றமாக் குடை வானவர்கோன் அயன் மால் முதலாமாச்சுற்றம் வந்திறைஞ்சும் திருப்பொற்சடை மன்னவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து வாள்அரக்கன்துன்னுஞ் சுடர்முடிகள் தோள்நெரியத் -தன்னைத்திருச்சத்தி முற்றத்தான் சித்தத்துள் வைத்தான்திருச்சத்தி முற்றத்தான் தேசு.
சொற்பிரிப்பு
மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து வாள்அரக்கன்துன்னும் சுடர்முடிகள் தோள்நெரியத் - தன்னைத்திருச்சத்தி முற்றத் தான் சித்தத்துள் வைத்தான்திருச்சத்தி முற்றத்தான் தேசு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.