திருமுறை 11 · 11.020 · 1

திருக்கண்ணப்பதேவர் திருமறம்

அருளியவர்
கல்லாடதேவ நாயனார்

1

பரிவின் தன்மை உருவுகொண் டனையவன்போழ்வார் போர்த்த காழகச் செருப்பினன்குருதி புலராச் சுரிகை எஃகம்அரையிற் கட்டிய உடைதோற் கச்சையன்தோல்நெடும் பையிற் குறுமயிர் திணித்து (5)வாரில் வீக்கிய வரிக்கைக் கட்டியன்உழுவைக் கூனுகிர் கேழல்வெண் மருப்புமாறுபடத் தொடுத்த மாலைஉத் தரியன்நீலப் பீலி நெற்றி சூழ்ந்தகானக் குஞ்சிக் கவடி புல்லினன் (10)முடுகு நாறு குடிலை யாக்கையன்வேங்கை வென்று வாகை சூடியசங்கரன் தன்னினத் தலைவன் ஓங்கியவில்லும் அம்பும் நல்லன தாங்கிஏற்றுக் கல்வனம் காற்றில் இயங்கிக் (15)கணையில் வீழ்த்துக் கருமா அறுத்துக்கோலின் ஏற்றிக் கொழுந்தீக் காய்ச்சிநாவில் வைத்த நாட்போ னகமும்தன்தலைச் செருகிய தண்பள்ளித் தாமமும்வாய்க்கல சத்து மஞ்சன நீரும் (20)கொண்டு கானப் பேருறை கண்ணுதல்முடியிற் பூசை அடியால் நீக்கிநீங்காக் குணத்துக்கோசரிக்கு அன்றவன் நேசங் காட்டமுக்கண் அப்பனுக்கு ஒருகணில் உதிரம் (25)தக்கி ணத்திடை இழிதர அக்கணம்அழுது விழுந்து தொழுதெழுந் தரற்றிப்புன்மருந் தாற்றப் போகா தென்றுதன்னை மருந்தென்று மலர்க்கண் அப்பஒழிந்தது மற்றை ஒண்திரு நயனம் (30)பொழிந்த கண்ணீர்க் கலுழி பொங்கஅற்ற தென்று மற்றக் கண்ணையும்பகழித் தலையால் அகழ ஆண்டகைஒருகை யாலும் இருகை பிடித்துஒல்லை நம்புண் ஒழிந்தது பாராய் (35)நல்லை நல்லை எனப்பெறும்திருவேட் டுவர்தந் திருவடி கைதொழக்கருவேட் டுழல்வினைக் காரியம் கெடுமே.
சொற்பிரிப்பு
பரிவின் தன்மை உருவுகொண்டு அனையவன்போழ்வார் போர்த்த காழகச் செருப்பினன்குருதி புலராச் சுரிகை எஃகம்அரையிற் கட்டிய உடைதோல் கச்சையன்தோல் நெடும் பையில் குறுமயிர் திணித்துவாரில் வீக்கிய வரிக்கைக் கட்டியன்உழுவைக் கூன் உகிர் கேழல் வெண் மருப்புமாறுபடத் தொடுத்த மாலை உத்தரியன்நீலப் பீலி நெற்றி சூழ்ந்தகானக் குஞ்சிக் கவடி புல்லினன்முடுகு நாறு குடிலை யாக்கையன்வேங்கை வென்று வாகை சூடியசங்கரன் தன் இனத்தலைவன் ஓங்கியவில்லும் அம்பும் நல்லன தாங்கிஏற்றுக் கல்வனம் காற்றில் இயங்கிக்கணையில் வீழ்த்துக் கரு மா அறுத்துக்கோலின் ஏற்றிக் கொழுந்தீக் காய்ச்சிநாவில் வைத்த நாள் போனகமும்தன்தலைச் செருகிய தண்பள்ளித் தாமமும்வாய்க் கலசத்து மஞ்சன நீரும்கொண்டு கானப்பேருறை கண்ணுதல்முடியில் பூசை அடியால் நீக்கிநீங்காக் குணத்துக்கோசரிக்கு அன்றவன் நேசம் காட்டமுக்கண் அப்பனுக்கு ஒருகணில் உதிரம்தக்கிணத்திடை இழிதர அக்கணம்அழுது விழுந்து தொழுது எழுந்து அரற்றிப்புன்மருந்து ஆற்றப் போகாதென்றுதன்னை மருந்தென்று மலர்க்கண் அப்பஒழிந்தது மற்றை ஒண் திருநயனம்பொழிந்த கண்ணீர்க் கலுழி பொங்கஅற்றதென்று மற்றக் கண்ணையும்பகழித் தலையால் அகழ ஆண்டகைஒரு கையாலும் இருகை பிடித்துஒல்லை நம்புண் ஒழிந்தது பாராய்நல்லை நல்லை எனப்பெறும்திருவேட்டுவர் தந்திருவடி கைதொழக்கருவேட்டு உழல் வினைக் காரியம் கெடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.