1
திருக்கண் ணப்பன் செய்தவத் திறத்துவிருப்புடைத் தம்ம விரிகடல் உலகே, பிறந்ததுதேன்அழித்து ஊன்உண் கானவர் குலத்தே, திரிவதுபொருபுலி குமுறும் பொருப்பிடைக் காடே, வளர்ப்பதுசெங்கண் நாயொடு தீவகம் பலவே, பயில்வது (5)வெந்திறற் சிலையொடு வேல்வாள் முதலியஅந்தமில் படைக்கலம் அவையே, உறைவதுகுறைதசை பயின்று குடம்பல நிரைத்துக்கறைமலி படைக்கலங் கலந்த புல்லொடுபீலி மேய்ந்தவை பிரிந்த வெள்ளிடை (10)வாலிய புலித்தோல் மறைப்ப வெள்வார்இரவும் பகலும் இகழா முயற்றியொடுமடைத்த தேனும் வல்நாய் விட்டும்சிலைவிடு கணையிலும் திண்சுரி கையிலும்பலகிளை யவையொடும் பதைப்பப் படுத்துத் (15)தொல்லுயிர் கொல்லும் தொழிலே, வடிவேமறப்புலி கடித்த வன்திரள் முன்கைதிறற்படை கிழித்த திண்வரை அகலம்எயிற்றெண்கு கவர்ந்த இருந்தண் நெற்றிஅயிற்கோட் டேனம் படுத்தெழு குறங்கு (20)செடித்தெழு குஞ்சி செந்நிறத் துறுகண்கடுத்தெழும் வெவ்வுரை அவ்வாய்க் கருநிறத்துஅடுபடை பிரியாக் கொடுவிற லதுவே,மனமேமிகக்கொலை புரியும் வேட்டையில் உயிர்கள்அகப்படு துயருக்கு அகனமர்ந் ததுவே, இதுஅக் (25)கானத் தலைவன் தன்மை, கண்ணுதல்வானத் தலைவன் மலைமகள் பங்கன்எண்ணரும் பெருமை இமையவர் இறைஞ்சும்புண்ணிய பாதப் பொற்பார் மலரிணைதாய்க்கண் கன்றெனச் சென்றுகண் டல்லது (30)வாய்க்கிடும் உண்டி வழக்கறி யானே, அதாஅன்றுகட்டழல் விரித்த கனற்கதிர் உச்சியிற்சுட்டடி இடுந்தொறும் சுறுக்கொளும் சுரத்துமுதுமரம் நிரந்த முட்பயில் வளாகத்துஎதிரினங் கடவிய வேட்டையில் விரும்பி (35)எழுப்பிய விருகத் தினங்களை மறுக்குறத்தன்நாய் கடித்திரித் திடவடிக் கணைதொடுத்துஎய்து துணித்திடும் துணித்த விடக்கினைவிறகினிற் கடைந்த வெங்கனல் காய்ச்சிநறுவிய இறைச்சி நல்லது சுவைகண்டு (40)அண்ணற்கு அமிர்தென்று அதுவேறு அமைத்துத்தண்ணறுஞ் சுனைநீர் தன்வாய்க் குடத்தால்மஞ்சன மாக முகந்து மலரெனக்குஞ்சியில் துவர்க்குலை செருகிக் குனிசிலைகடுங்கணை அதனொடும் ஏந்திக் கனல்விழிக் (45)கடுங்குரல் நாய்பின் தொடர யாவரும்வெருக்கோ ளுற்ற வெங்கடும் பகலில்திருக்கா ளத்தி எய்திய சிவற்குவழிபடக் கடவ மறையோன் முன்னம்துகிலிடைச் சுற்றித் தூநீர் ஆட்டி (50)நல்லன விரைமலர் நறும்புகை விளக்கவிசொல்லின பரிசிற் சுருங்கலன் பூவும்பட்ட மாலையும் தூக்கமும் அலங்கரித்துஅருச்சனை செய்தாங்கு அவனடி இறைஞ்சித்திருந்த முத்திரை சிறப்பொடுங் காட்டி (55)மந்திரம் எண்ணி வலமிடம் வந்துவிடைகொண் டேகின பின்தொழில்பூசனை தன்னைப் புக்கொரு காலில்தொடுசெருப் படியால் நீக்கி வாயில்இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலைத் (60)தங்கிய துவர்ப்பூ ஏற்றி இறைச்சியில்பெரிதும் போனகம் படைத்துப் பிரானைக்கண்டுகண் டுள்ளங் கசிந்து காதலில்கொண்டதோர் கூத்துமுன் ஆடிக் குரைகழல்அன்பொடும் இறுக இறைஞ்சி ஆரா (65)அன்பொடு கானகம் அடையும் அடைந்தஅற்றை அயலினிற் கழித்தாங் கிரவியும்உதித்த போழ்தத் துள்நீர் மூழ்கிஆதரிக்கும் அந்தணன் வந்துசீரார் சிவற்குத் தான்முன் செய்வதோர் (70)பொற்புடைப் பூசனை காணான் முடிமிசைஏற்றிய துவர்கண் டொழியான் மறித்தும்இவ்வாறு அருச்சனை செய்பவர் யாவர்கொல் என்றுகரந்திருந் தவண்அக் கானவன் வரவினைப்பரந்த காட்டிடைப் பார்த்து நடுக்குற்று (75)வந்தவன் செய்து போயின வண்ணம்சிந்தையிற் பொறாது சேர்விடம் புக்குமற்றை நாளும்அவ் வழிப்பட்டு இறைவஉற்றது கேட்டருள் உன்தனக்கு அழகாநாடொறும் நான்செய் பூசனை தன்னை (80)ஈங்கொரு வேடுவன்நாயொடும் புகுந்து மிதித்து உழக்கித்தொடுசெருப் படியால் நீக்கி வாயில்இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலைதங்கிய சருகிலை உதிர்த்தோர் இறைச்சியை (85)நின்திருக் கோயிலில் இட்டுப் போமதுஎன்றும் உன்தனக் கினிதே எனைஉருக்காணில் கொன்றிடும் யாவ ராலும்விலக்குறுங் குணத்தன் அல்லன் என்நும்திருக்குறிப்பு என்றவன் சென்ற அல்லிடைக் (90)கனவில்ஆ தரிக்கும் அந்தணன் தனக்குச்சீரார் திருக்கா ளத்தியுள் அப்பன்பிறையணி இலங்கு பின்னுபுன் சடைமுடிக்கறையணி மிடற்றுக் கனல்மழுத் தடக்கைநெற்றி நாட்டத்து நிறைநீற் றாக (95)ஒற்றை மால்விடை உமையொடு மருங்கில்திருவுருக் காட்டி அருளிப்புரிவொடு பூசனை செய்யும்குனிசிலை வேடன் குணமவை ஆவனஉரிமையிற் சிறந்தநன் மாதவன் என்றுணர் (100)அவனுகந் தியங்கிய இடம்முனி வனம்அதுவே, அவன்செருப்படி யாவன விருப்புறு துவலேஎழிலவன் வாயது தூய பொற்குடமேஅதனில் தங்குநீர் கங்கையின் புனலேபுனற்கிடு மாமணி அவன்நிரைப் பல்லே (105)அதற்கிடு தூமலர் அவனது நாவேஉப்புனல் விடும்பொழு துரிஞ்சிய மீசைப்புன்மயிர் குசையினும் நம்முடிக் கினிதே, அவன்தலைதங்கிய சருகிலை தருப்பையிற் பொதிந்தஅங்குலி கற்பகத் தலரே அவனுகந்து (110)இட்ட இறைச்சி எனக்குநன் மாதவர்இட்ட நெய்பால் அவியேஇதுவெனக்கு உனக்கவன்கலந்ததோர் அன்பு காட்டுவன் நாளைநலந்திகழ் அருச்சனை செய்தாங் கிருவென்று (115)இறையவன் எழுந்த ருளினன்அருளலும் மறையவன் அறிவுற் றெழுந்துமனமிகக் கூசி வைகறைக் குளித்துத்தான்முன் செய்வதோர்பொற்புடைப் பூசனை புகழ்தரச் செய்து (120)தோன்றா வண்ணம் இருந்தன னாக இரவியும்வான்தனி முகட்டில் வந்தழல் சிந்தக்கடும்பகல் வேட்டையில் காதலித் தடித்தஉடும்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத்தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும் (125)செல்வன் திருக்கா ளத்தியுள்அப்பன் திருமேனியின்மூன்று கண்ணாய்ஆங்கொரு கண்ணிலும்உதிரம் ஒழியா தொழுக இருந்தன னாகப்பார்த்து நடுக்குற்றுப் பதைத்து மனஞ்சுழன்றுவாய்ப்புனல் சிந்தக் கண்ணீர் அருவக் (130)கையில் ஊனொடு கணைசிலை சிந்தநிலப்படப் புரண்டு நெடிதினில் தேறிச்சிலைக்கொடும் படைகடி தெடுத்திது படுத்தவர்அடுத்தஇவ் வனத்துளர் எனத்திரிந் தாஅங்குஇன்மை கண்டு நன்மையில் (135)தக்கன மருந்துகள் பிழியவும் பிழிதொறும்நெக்கிழி குருதியைக் கண்டுநிலை தளர்ந்தென்அத்தனுக் கடுத்ததென் அத்தனுக் கடுத்ததென் என்றுஅன்பொடுங் கனற்றிஇத்தனை தரிக்கிலன் இதுதனைக் கண்டஎன் (140)கண்தனை இடந்து கடவுள்தன் கண்ணுறுபுண்ணில் அப்பியும் காண்பன் என்றொரு கண்ணிடைக்கணையது மடுத்துக் கையில் வாங்கிஅணைதர அப்பினன் அப்பலுங் குருதிநிற்பதொத் துருப்பெறக் கண்டுநெஞ் சுகந்து (145)மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தலும்நில்லுகண் ணப்ப நில்லு கண் ணப்பஎன்அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்பஎன்றுஇன்னுரை அதனொடும் எழிற்சிவ லிங்கம்தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையால் (150)அன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப் பிடித்துஅருளினன் அருளலும்விண்மிசை வானவர்மலர்மழை பொழிந்தனர் வளையொலி படகம்துந்துபி கறங்கின தொல்சீர் முனிவரும் (155)ஏத்தினர் இன்னிசை வல்லேசிவகதி பெற்றனன் திருக்கண் ணப்பனே.
சொற்பிரிப்பு
திருக்கண்ணப்பன் செய்தவத் திறத்துவிருப்புடைத் தம்ம விரிகடல் உலகே, பிறந்ததுதேன் அழித்து ஊன் உண் கானவர் குலத்தே, திரிவதுபொருபுலி குமுறும் பொருப்பிடைக் காடே, வளர்ப்பதுசெங்கண் நாயொடு தீவகம் பலவே, பயில்வதுவெந்திறல் சிலையொடு வேல்வாள் முதலியஅந்தமில் படைக்கலம் அவையே, உறைவதுகுறைதசை பயின்று குடம்பல நிரைத்துக்கறைமலி படைக்கலம் கலந்த புல்லொடுபீலி மேய்ந்தவை பிரிந்த வெள்ளிடைவாலிய புலித்தோல் மறைப்ப வெள்வார்இரவும் பகலும் இகழா முயற்றியொடுமடைத்த தேனும் வல்நாய் விட்டும்சிலைவிடு கணையிலும் திண் சுரிகையிலும்பலகிளை அவையொடும் பதைப்பப் படுத்துத்தொல்லுயிர் கொல்லும் தொழிலே, வடிவேமறப்புலி கடித்த வன்திரள் முன்கைதிறல்படை கிழித்த திண்வரை அகலம்எயிற்று எண்கு கவர்ந்த இருந்தண் நெற்றிஅயில்கோட்டு ஏனம் படுத்தெழு குறங்குசெடித்தெழு குஞ்சி செந்நிறத் துறுகண்கடுத்தெழும் வெவ்வுரை அவ்வாய்க் கருநிறத்துஅடுபடை பிரியாக் கொடு விறலதுவே, மனமேமிகக்கொலை புரியும் வேட்டையில் உயிர்கள்அகப்படு துயருக்கு அகனமர்ந்ததுவே, இதுஅக்கானத் தலைவன் தன்மை, கண்ணுதல்வானத் தலைவன் மலைமகள் பங்கன்எண்ணரும் பெருமை இமையவர் இறைஞ்சும்புண்ணிய பாதப் பொற்பார் மலரிணைதாய்க்கண் கன்றெனச் சென்று கண்டல்லதுவாய்க்கிடும் உண்டி வழக்கறியானே, அதாஅன்றுகட்டழல் விரித்த கனற்கதிர் உச்சியிற்சுட்டடி இடுந்தொறும் சுறுக்கொளும் சுரத்துமுதுமரம் நிரந்த முட்பயில் வளாகத்துஎதிரினம் கடவிய வேட்டையில் விரும்பிஎழுப்பிய விருகத்து இனங்களை மறுக்குறத்தன்நாய் கடித்து இரித்திடவடிக் கணைதொடுத்துஎய்து துணித்திடும் துணித்த விடக்கினைவிறகினிற் கடைந்த வெங்கனல் காய்ச்சிநறுவிய இறைச்சி நல்லது சுவைகண்டுஅண்ணற்கு அமிர்தென்று அதுவேறு அமைத்துத்தண்ணறும் சுனைநீர் தன்வாய்க் குடத்தால்மஞ்சனமாக முகந்து மலரெனக்குஞ்சியில் துவர்க்குலை செருகிக் குனிசிலைகடுங்கணை அதனொடும் ஏந்திக் கனல்விழிக்கடுங்குரல் நாய் பின் தொடர யாவரும்வெருக்கோள் உற்ற வெங்கடும் பகலில்திருக்காளத்தி எய்திய சிவற்குவழிபடக் கடவ மறையோன் முன்னம்துகிலிடைச் சுற்றித் தூநீர் ஆட்டிநல்லன விரைமலர் நறும்புகை விளக்கு அவிசொல்லின பரிசிற் சுருங்கலன் பூவும்பட்ட மாலையும் தூக்கமும் அலங்கரித்துஅருச்சனை செய்தாங்கு அவனடி இறைஞ்சித்திருந்த முத்திரை சிறப்பொடும் காட்டிமந்திரம் எண்ணி வலமிடம் வந்துவிடைகொண்டு ஏகின பின் தொழில்பூசனை தன்னைப் புக்கொரு காலில்தொடு செருப்படியால் நீக்கி வாயில்இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலைத்தங்கிய துவர்ப்பூ ஏற்றி இறைச்சியில்பெரிதும் போனகம் படைத்துப் பிரானைக்கண்டு கண்டு உள்ளம் கசிந்து காதலில்கொண்டதோர் கூத்து முன் ஆடிக் குரைகழல்அன்பொடும் இறுக இறைஞ்சி ஆராஅன்பொடு கானகம் அடையும் அடைந்தஅற்றை அயலினிற் கழித்தாங்கு இரவியும்உதித்த போழ்தத்துள் நீர் முழ்கிஆதரிக்கும் அந்தணன் வந்துசீரார் சிவற்குத் தான் முன் செய்வதோர்பொற்புடைப் பூசனை காணான் முடிமிசைஏற்றிய துவர் கண்டொழியான் மறித்தும்இவ்வாறு அருச்சனை செய்பவர் யாவர்கொல் என்றுகரந்திருந்து அவண் அக்கானவன் வரவினைப்பரந்த காட்டிடைப் பார்த்து நடுக்குற்றுவந்தவன் செய்து போயின வண்ணம்சிந்தையிற் பொறாது சேர்விடம் புக்குமற்றை நாளும் அவ்வழிப்பட்டு இறைவஉற்றது கேட்டருள் உன் தனக்கு அழகாநாடொறும் நான்செய் பூசனை தன்னைஈங்கொரு வேடுவன்நாயொடும் புகுந்து மிதித்து உழக்கித்தொடு செருப்படியால் நீக்கி வாயில்இடுபுனல் மேனியில் ஆட்டித் தன் தலைதங்கிய சருகிலை உதிர்த்தோர் இறைச்சியைநின் திருக்கோயிலில் இட்டுப் போமதுஎன்றும் உன் தனக் கினிதே எனை உருக்காணில் கொன்றிடும் யாவராலும்விலக்குறும் குணத்தன் அல்லன் என்றும்திருக்குறிப்பு என்றவன் சென்ற அல்லிடைக்கனவில் ஆதரிக்கும் அந்தணன் தனக்குச்சீரார் திருக்காளத்தியுள் அப்பன்பிறையணி இலங்கு பின்னு புன்சடைமுடிக்கறையணி மிடற்றுக் கனல்மழுத் தடக்கைநெற்றி நாட்டத்து நிறை நீற்றாகஒற்றை மால்விடை உமையொடு மருங்கில்திருவுருக் காட்டி அருளிப்புரிவொடு பூசனை செய்யும்குணிசிலை வேடன் குணமவை ஆவனஉரிமையில் சிறந்த நன் மாதவன் என்று உணர்அவன் உகந்து இயங்கிய இடம் முனிவனம் அதுவே அவன்செருப்படியாவன விருப்புறு துவலேஎழிலவன் வாயது தூய பொற்குடமேஅதனில் தங்கு நீர் கங்கையின் புனலேபுனற்கிடு மாமணி அவன்நிரைப் பல்லேஅதற்கிடு தூமலர் அவனது நாவேஉப்புனல் விடும்பொழு துரிஞ்சிய மீசைப்புன்மயிர் குசையினும் நம்முடிக் கினிதே, அவன்தலைதங்கிய சருகிலை தருப்பையிற் பொதிந்தஅங்குலி கற்பகத்து அலரே அவனுகந்துஇட்ட இறைச்சி எனக்கு நன் மாதவர்இட்ட நெய் பால் அவியேஇதுவெனக்கு உனக்கவன்கலந்ததோர் அன்பு காட்டுவன் நாளைநலந்திகழ் அருச்சனை செய்தாங்கு இருவென்றுஇறையவன் எழுந்தருளினன் அருளலும்மறையவன் அறிவுற்று எழுந்துமனமிகக் கூசி வைகறைக் குளித்துத்தான்முன் செய்வதோர்பொற்புடைப் பூசனை புகழ்தரச் செய்துதோன்றா வண்ணம் இருந்தனனாக இரவியும்வான் தனி முகட்டில் வந்தழல் சிந்தக்கடும்பகல் வேட்டையில் காதலித்து அடித்தஉடும்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத்தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும்செல்வன் திருக்காளத்தியுள் அப்பன்திருமேனியின் மூன்று கண்ணாய்ஆங்கொரு கண்ணிலும் உதிரம்ஒழியா தொழுக இருந்தனனாகப்பார்த்து நடுக்குற்றுப் பதைத்து மனஞ்சுழன்றுவாய்ப்புனல் சிந்தக் கண்ணீர் அருவக்கையில் ஊனொடு கணைசிலை சிந்தநிலப்படப் புரண்டு நெடிதினில் தேறிச்சிலைக் கொடும் படை கடிது எடுத்து இது படுத்தவர்அடுத்த இவ்வனத்துளர் எனத் திரிந்தாஅங்குஇன்மை கண்டு நன்மையில்தக்கன மருந்துகள் பிழியவும் பிழிதொறும்நெக்கிழி குருதியைக் கண்டுநிலை தளர்ந்து என்அத்தனுக்கு அடுத்ததென் அத்தனுக்கு அடுத்ததென் என்றுஅன்பொடும் கனற்றிஇத்தனை தரிக்கிலன் இதுதனைக் கண்ட என்கண்தனை இடந்து கடவுள்தன் கண்ணுறுபுண்ணில் அப்பியும் காண்பன் என்றொரு கண்ணிடைக்கணையது மடுத்துக் கையில் வாங்கிஅணைதர அப்பினன் அப்பலும் குருதிநிற்பதொத்து உருப்பெறக் கண்டு நெஞ்சுகந்துமற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தலும்நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப என்அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப என்றுஇன்னுரை அதனொடும் எழிற் சிவலிங்கம்தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையால்அன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப் பிடித்துஅருளினன் அருளலும்விண்மிசை வானவர்மலர்மழை பொழிந்தனர் வளையொலி படகம்துந்துபி கறங்கின தொல்சீர் முனிவரும்ஏத்தினர் இன்னிசை வல்லேசிவகதி பெற்றனன் திருக்கண்ணப்பனே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.