1
உலகம் உவப்ப வலனேர்பு திரிதருபலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்குஓவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொளிஉறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாள்செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை (5)மறுவில் கற்பின் வாணுதல் கணவன்கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழைவாள்போழ் விசும்பில் வள்உறை சிதறித்தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்துஇருள்படப் பொதுளிய பராஅரை மராஅத்து (10)உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்மால்வரை நிவந்த சேணுயர் வெற்பில்கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக்கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோள்கோபத் தன்ன தோயாப் பூந்துகில் (15)பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின்நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச்சேண்இகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித்துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் (20)செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபுபைந்தாள் குவளைத் தூஇதழ் கிள்ளித்தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் (25)துவர முடித்த துகளறு முச்சிப்பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட்டுஉளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்புஇணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக (30)வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்நுண்புண் ஆகந் திளைப்பத் திண்காழ்நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வைதேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் (35)வேங்கை நுண்தா தப்பிக் காண்வரவெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெறியாக்கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடிவாழிய பெரிதென் றேத்திப் பலருடன்சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச் (40)சூரர மகளிர் ஆடும் சோலைமந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்பார்முதிர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச் (45)சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேல்உலறிய கதுப்பிற் பிறழ்பல் பேழ்வாய்ச்சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு (50)உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரல்கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலைஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவரவென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா (55)நிணந்தின் வாயள் துணங்கை தூங்கஇருபேர் உருவின் ஒருபேர் யாக்கைஅறுவேறு வகையின் அஞ்சுவர மண்டிஅவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர்மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து (60)எய்யா நல்லிசைச் செவ்வேல் சேஎய்சேவடி படரும் செம்மல் உள்ளமொடுநலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையும்செலவுநீ நயந்தனை ஆயின் பலவுடன்நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப (65)இன்னே பெறுதிநீ முன்னிய வினையேசெருப் புகன் றெடுத்த சேண்உயர் நெடுங்கொடிவரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்பொருநர்த் தேய்த்த போர்அரு வாயில்திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து (70)மாடமலி மறுகில் கூடல் குடவயின்இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்தமுள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக்கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் (75)அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்குன் றமர்ந் துறைதலும் உரியன், அதா அன்று
சொற்பிரிப்பு
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதருபலர்புகழ் ஞாயிறு கடற் கண்டாஅங்குஓவு அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளிஉறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாள்செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கைமறுவில் கற்பின் வாணுதல் கணவன்கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழைவாள்போழ் விசும்பில் வள் உறை சிதறித்தலைப்பெயல் தலைஇய தண் நறும் கானத்துஇருள்படப் பொதுளிய பரா அரை மரா அத்துஉருள் பூந்தண்டார் புரளும் மார்பினன்மால்வரை நிவந்த சேண் உயர் வெற்பில்கிண்கிணி கவைஇய ஒண் செஞ்சீறடிக்கணைக்கால் வாங்கிய நுசுப்பில் பணைத்தோள்கோபத் தன்ன தோயாப் பூந்துகில்பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்கைபுணைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின்நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச்சேண்இகந்து விளங்கும் செயிர்தீர் மேனித்துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச்செங்கால் வெட்சிச் சீறிதழ் இடை இடுபுபைந்தாள் குவளைத் தூஇதழ் கிள்ளித்தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்துத்துவர முடித்த துகளறு முச்சிப்பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட்டுஉளைப் பூமருதின் ஒள்ளிணர் அட்டிக்கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்புஇணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தகவண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்நுண்புண் ஆகம் திளைப்பத் திண்காழ்நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வைதேங்கமழ் மருது இணர் கடுப்பக் கோங்கின்குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர்வேங்கை நுண்தாது அப்பிக் காண்வரவெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெறியாக்கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடிவாழிய பெரிது என்றேத்திப் பலருடன்சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச்சூர் அர மகளிர் ஆடும் சோலைமந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்துச்சுரும்பு மூசாச் சுடர்ப் பூங்காந்தள்பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்பார்முதிர் பனிக்கடல் கலங்க உள் புக்குச்சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேல்உலறிய கதுப்பிற் பிறழ்பல் பேழ்வாய்ச்சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டுஉருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்குருதி ஆடிய கூர் உகிர்க் கொடுவிரல்கண் தொட்டுண்ட கழி முடைக் கருந்தலைஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவரவென்றடு விறற்களம் பாடித்தோள் பெயராநிணந்தின் வாயல் துணங்கை தூங்கஇருபேர் உருவின் ஒருபேர் யாக்கைஅறுவேறு வகையின் அஞ்சுவர மண்டிஅவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர்மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்துஎய்யா நல்லிசைச் செவ்வேல் சேஎய்இரவலன் நிலைசேவடி படரும் செம்மல் உள்ளமொடுநலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும்செலவு நீ நயந்தனை ஆயின் பலவுடன்நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்பஇன்னே பெறுதி நீ முன்னிய வினையே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.