திருமுறை 11 · 11.017 · 1

போற்றித் திருக்கலிவெண்பா

அருளியவர்
நக்கீர தேவ நாயனார்

1

திருத்தங்கு மார்பில் திருமால் வரைபோல்எருத்தத் திலங்கியவெண் கோட்டுப் - பருத்தகுறுத்தாள் நெடுமூக்கிற் குன்றிக்கண் நீலநிறத்தாற் பொலிந்து நிலமேழ் - உறத்தாழ்ந்துபன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள்நின்றவா நின்ற நிலைபோற்றி - அன்றியும்புண்டரிகத் துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய்அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் - பண்டொருநாள்காணான் இழியக் கனக முடிகவித்துக்கோணாது நின்ற குறிபோற்றி - நாணாளும் (5)பேணிக்கா லங்கள் பிரியாமைப் பூசித்தமாணிக்கா அன்று மதிற்கடவூர்க் - காணவரத்திற் பெரிய வலிதொலைத்த காலன்உரத்தில் உதைத்தஉதை போற்றி - கரத்தாமேவெற்பன் மடப்பாவை கொங்கைமேற் குங்குமத்தின்கற்பழியும் வண்ணங் கசிவிப்பான் - பொற்புடையவாமன் மகனாய் மலர்க்கணையொன் றோட்டியஅக்காமன் அழகழித்த கண்போற்றி - தூமப்படமெடுத்த வாளரவம் பார்த்தடரப் பற்றிவிடமெடுத்த வேகத்தால் மிக்குச் - சடலம் (10)முடங்க வலிக்கும் முயலகன்தன் மொய்ம்பைஅடங்க மிதித்தஅடி போற்றி - நடுங்கத்திருமால் முதலாய தேவா சுரர்கள்கருமால் கடல்நாகம் பற்றிக் - குருமாறநீலமுண்ட நீள்முகில்போல் நெஞ்சழல வந்தெழுந்தஆலமுண்ட கண்டம் அதுபோற்றி - சாலமண்டிப்போருகந்த வானவர்கள் புக்கொடுங்க மிக்கடர்க்கும்தாருகன்தன் மார்பில் தனிச்சூலம் - வீரம்கொடுத்தெறியும் மாகாளி கோபந் தவிரஎடுத்த நடத்தியல்பு போற்றி - தடுத்து (15)வரையெடுத்த வாளரக்கன் வாயா றுதிரம்நிரையெடுத்து நெக்குடலம் இற்றுப் - புரையெடுத்தபத்தனைய பொன்முடியும் தோளிருப தும்நெரியமெத்தனவே வைத்த விரல்போற்றி - அத்தகைத்தவானவர்கள் தாங்கூடி மந்திரித்த மந்திரத்தைமேனவில ஓடி விதிர்விதிர்த்துத் - தானவருக்கொட்டிக் குறளை உரைத்த அயன்சிரத்தைவெட்டிச் சிரித்த விறல்போற்றி - மட்டித்துவாலுகத்தால் நல்லிலிங்க மாவகுத்து மற்றதன்மேல்பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி - மேலுதைத்தங் (20)கோட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரைவீட்டிய சண்டிக்கு வேறாக - நாட்டின்கண்பொற்கோயில் உள்ளிருத்திப் பூமாலை போனகமும்நற்கோலம் ஈந்த நலம்போற்றி - நிற்கவலந்தருமால் நான்முகனும் வானவரும் கூடிஅலந்தருமால் கொள்ள அடர்க்கும் - சலந்தரனைச்சக்கரத்தால் ஈர்ந்தரிதன் தாமரைக்கண் சாத்துதலும்மிக்கஅஃதீந்த விறல்போற்றி - அக்கணமேநக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம்தொக்கிருந்த வண்ணம் துதிசெய்ய - மிக்கிருந்த (25)அங்கைத் தலத்தே அணிமானை ஆங்கணிந்தசெங்கைத் திறத்த திறல்போற்றி - திங்களைத்தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேல் சேர்வித்துவாய்த்திமையோர் தம்மைஎல்லாம் வான்சிறையில் - பாய்த்திப்பிரமன் குறையிரப்பப் பின்னும் அவர்க்குவரமன் றளித்தவலி போற்றி - புரமெரித்தஅன்றுய்ந்த மூவர்க் கமர்ந்து வரமளித்துநின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து - நன்றுநடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயில்கடைகாவல் கொண்டவா போற்றி - விடைகாவல் (30)தானவர்கட் காற்றாது தன்னடைந்த நன்மைவிறல்வானவர்கள் வேண்ட மயிலூரும் - கோனவனைக்சேனா பதியாகச் செம்பொன் முடிகவித்துவானாள வைத்த வரம்போற்றி - மேனாள்அதிர்த்தெழுந்த அந்தகனை அண்டரண்டம் உய்யக்கொதித்தெழுந்த சூலத்தாற் கோத்துத் -துதித்தங்கவனிருக்கும் வண்ணம் அருள்கொடுத்தங் கேழேழ்பவமறுத்த பாவனைகள் போற்றி - கவைமுகத்தபொற்பா கரைப்பிளந்து கூறிரண்டாப் போகட்டும்எற்பா சறைப்போக மேல்விலகி- நிற்பால (35)மும்மதத்து வெண்கோட்டுக் கார்நிறத்துப் பைந்தறுகண்வெம்மதத்த வேகத்தால் மிக்கோடி - விம்மிஅடர்த்திரைத்துப் பாயும் அடுகளிற்றைப் போகஎடுத்துரித்துப் போர்த்த இறைபோற்றி - தொடுத்தமைத்தநாண்மாலை கொண்டணிந்த நால்வர்க் கன் றால்நிழற்கீழ்வாண்மாலை ஆகும் வகையருளித் - தோள்மாலைவிட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்தகுணம்எட்டிலங்க வைத்த இறைபோற்றி - ஒட்டிவிசையன் விசையளப்பான் வேடுருவம் ஆகிஅசைய உடல்திரியா நின்று - வசையினால் (40)பேசு பதப்பாற் பிழைபொறுத்து மற்றவற்குப்பாசுபதம் ஈந்த பதம்போற்றி - நேசத்தால்வாயில்நீர் கொண்டு மகுடத் துமிழ்ந்திறைச்சிஆயசீர் போனகமா அங்கமைத்துத் - தூயசீர்க்கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்துவிண்ணுலகம் ஈந்த விறல்போற்றி - மண்ணின்மேல்காளத்தி போற்றி கயிலைமலை போற்றிஎனநீளத்தி னால்நினைந்து நிற்பார்கள் - தாளத்தோடெத்திசையும் பன்முரசம் ஆர்த்திமையோர் போற்றிசைப்பஅத்தனடி சேர்வார்கள் ஆங்கு.
சொற்பிரிப்பு
திருத்தங்கு மார்பில் திருமால் வரைபோல்எருத்தத்து இலங்கிய வெண்கோட்டுப் – பருத்தகுறுத்தாள் நெடுமூக்கில் குன்றிக்கண் நீலநிறத்தால் பொலிந்து நிலம்ஏழ் – உறத்தாழ்ந்துபன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள்நின்றவா நின்ற நிலை போற்றி – அன்றியும்புண்டரிகத் துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய்அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் – பண்டொருநாள்காணான் இழியக் கனக முடிகவித்துக்கோணாது நின்ற குறி போற்றி – நாணாளும்பேணிக் காலங்கள் பிரியாமைப் பூசித்தமாணிக்கா அன்று மதிற்கடவூர்க் – காணவரத்திற் பெரிய வலிதொலைத்த காலன்உரத்தில் உதைத்த உதை போற்றி – கரத்தாமேவெற்பன் மடப்பாவை கொங்கைமேற் குங்குமத்தின்கற்பழியும் வண்ணம் கசிவிப்பான் – பொற்புடையவாமன் மகனாய் மலர்க்கணையொன்று ஓட்டிய அக்காமன் அழகு அழித்த கண் போற்றி – தூமப்படமெடுத்த வாளரவம் பார்த்து அடரப் பற்றிவிடமெடுத்த வேகத்தால் மிக்குச் – சடலம்முடங்க வலிக்கும் முயலகன் தன் மொய்ம்பைஅடங்க மிதித்த அடி போற்றி – நடுங்கத்திருமால் முதலாய தேவாசுரர்கள்கருமால் கடல்நாகம் பற்றிக் – குருமாறநீலமுண்ட நீள்முகில்போல் நெஞ்சழல வந்தெழுந்தஆலமுண்ட கண்டம் அது போற்றி – சால மண்டிப்போருகந்த வானவர்கள் புக்கொடுங்க மிக்கடர்க்கும்தாருகன் தன் மார்பில் தனிச்சூலம் – வீரம்கொடுத்தெறியும் மாகாளி கோபம் தவிரஎடுத்த நடத்தியல்பு போற்றி – தடுத்துவரையெடுத்த வாளரக்கன் வாயாறு உதிரம்நிரையெடுத்து நெக்கு உடலம் இற்றுப் – புரையெடுத்தபத்தனைய பொன்முடியும் தோள் இருபதும் நெரியமெத்தனவே வைத்த விரல் போற்றி – அத்தகைத்தவானவர்கள் தாங்கூடி மந்திரித்த மந்திரத்தைமேல் நவில ஓடி விதிர்விதிர்த்துத் – தானவருக்குஒட்டிக் குறளை உரைத்த அயன் சிரத்தைவெட்டிச் சிரித்த விறல் போற்றி – மட்டித்துவாலுகத்தால் நல் இலிங்கமா வகுத்து மற்று அதன்மேல்பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி – மேல் உதைத்தங்குஓட்டியவன் தாதை இருதாள் எறிந்து உயிரைவீட்டிய சண்டிக்கு வேறாக – நாட்டின்கண்பொற்கோயில் உள்ளிருத்திப் பூமாலை போனகமும்நற்கோலம் ஈந்த நலம் போற்றி – நிற்கவலந்தருமால் நான்முகனும் வானவரும் கூடிஅலந்தருமால் கொள்ள அடர்க்கும் – சலந்தரனைச்சக்கரத்தால் ஈர்ந்து அரி தன் தாமரைக்கண் சாத்துதலும்மிக்க அஃது ஈந்த விறல்போற்றி – அக்கணமேநக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம்தொக்கிருந்த வண்ணம் துதி செய்ய – மிக்கிருந்தஅங்கைத் தலத்தே அணிமானை ஆங்கணிந்தசெங்கைத் திறத்த திறல்போற்றி – திங்களைத்தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேல் சேர்வித்துவாய்த்து இமையோர் தம்மைஎல்லாம் வான்சிறையில் – பாய்த்திப்பிரமன் குறையிரப்பப் பின்னும் அவர்க்குவரமன்று அளித்த வலி போற்றி – புரமெரித்தஅன்றுய்ந்த மூவர்க்கு அமர்ந்து வரமளித்துநின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து – நன்றுநடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயில்கடைகாவல் கொண்டவா போற்றி – விடைகாவல்தானவர்கட்கு ஆற்றாது தன்னடைந்த நன்மைவிறல்வானவர்கள் வேண்ட மயிலூரும் – கோனவனைக்சேனாபதியாகச் செம்பொன் முடி கவித்துவானாள வைத்த வரம் போற்றி – மேனாள்அதிர்த்தெழுந்த அந்தகனை அண்டரண்டம் உய்யக்கொதித்தெழுந்த சூலத்தாற் கோத்துத் - துதித்தங்குஅவனிருக்கும் வண்ணம் அருள் கொடுத்தங்கு ஏழேழ்பவமறுத்த பாவனைகள் போற்றி – கவைமுகத்தபொற்பாகரைப் பிளந்து கூறிரண்டாப் போகட்டும்எற்பாசறைப் போக மேல்விலகி - நிற்பாலமும்மதத்து வெண்கோட்டுக் கார்நிறத்துப் பைந்தறுகண்வெம்மதத்த வேகத்தால் மிக்கோடி – விம்மிஅடர்த்து இரைத்துப் பாயும் அடுகளிற்றைப் போகஎடுத்துரித்துப் போர்த்த இறை போற்றி – தொடுத்தமைத்தநாண்மாலை கொண்டணிந்த நால்வர்க்கு அன்று ஆல்நிழற் கீழ்வாண்மாலை ஆகும் வகையருளித் – தோள்மாலைவிட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்த குணம்எட்து இலங்க வைத்த இறை போற்றி – ஒட்டிவிசையன் விசைஅளப்பான் வேடுருவம் ஆகிஅசைய உடல்திரியா நின்று – வசையினால்பேசு பதப்பாற் பிழைபொறுத்து மற்றவற்குப்பாசுபதம் ஈந்த பதம் போற்றி – நேசத்தால்வாயில் நீர் கொண்டு மகுடத்து உமிழ்ந்து இறைச்சிஆய சீர்ப் போனகமா அங்கமைத்துத் – தூயசீர்க்கண்ணிடந்த கண்ணப்பர் தம்மை மிகக் காதலித்துவிண்ணுலகம் ஈந்த விறல் போற்றி – மண்ணின் மேல்காளத்தி போற்றி கயிலைமலை போற்றி எனநீளத்தினால் நினைந்து நிற்பார்கள் – தாளத்தோடுஎத்திசையும் பன்முரசம் ஆர்த்து இமையோர் போற்றிசைப்பஅத்தன் அடி சேர்வார்கள் ஆங்கு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.