திருமுறை 11 · 11.016 · 8

கார் எட்டு

அருளியவர்
நக்கீர தேவ நாயனார்

1

அரவம் அரைக்கசைத்த அண்ணல் சடைபோல்விரவி எழுந்தெங்கும் மின்னி - அரவினங்கள்அச்சங்கொண் டோடி அணைய அடைவுற்றேகைச்சங்கம் போல்முழங்கும் கார்.
சொற்பிரிப்பு
அரவம் அரைக்கசைத்த அண்ணல் சடைபோல்விரவி எழுந்தெங்கும் மின்னி – அரவினங்கள்அச்சங் கொண்டோடி அணைய அடைவுற்றேகைச்சங்கம் போல் முழங்கும் கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மையார் மணிமிடறு போற்கருகி மற்றவன்தன்கையார் சிலை விலகிக் காட்டிற்றே - ஐவாய்அழலரவம் பூண்டான் அவிர்சடைபோல் மின்னிக்கழலரவம் காண்புற்ற கார்.
சொற்பிரிப்பு
மையார் மணிமிடறு போற் கருகி மற்று அவன் தன்கையார் சிலை விலகிக் காட்டிற்றே – ஐவாய்அழலரவம் பூண்டான் அவிர்சடை போல் மின்னிக்கழலரவம் காண்புற்ற கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஆலமர் கண்டத் தரன்தன் மணிமிடறும்கோலக் குழற்சடையும் கொல்லேறும் - போலஇருண்டொன்று மின்தோன்றி அம்பொனவ் வானம்கருண்டொன்று கூடுதலிற் கார்.
சொற்பிரிப்பு
ஆலமர் கண்டத்து அரன் தன் மணிமிடறும்கோலக் குழல் சடையும் கொல் ஏறும் – போலஇருண்டு ஒன்று மின்தோன்றி அம்பொன் அவ்வானம்கருண்டு ஒன்று கூடுதலிற் கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

இருள்கொண்ட கண்டத் திறைவன்தன் சென்னிக்குருள்கொண்ட செஞ்சடைபோல் மின்னிச் - சுருள்கொண்டுபாம்பினங்கள் அஞ்சிப் படம்ஒடுங்க ஆர்த்ததேகாம்பினங்கள் தோள்ஈயக் கார்.
சொற்பிரிப்பு
இருள்கொண்ட கண்டத்து இறைவன் தன் சென்னிக்குருள்கொண்ட செஞ்சடைமேல் மின்னிச் – சுருள்கொண்டுபாம்பினங்கள் அஞ்சிப் படம் ஒடுங்க ஆர்த்ததேகாம்பினங்கள் தோள் ஈயக் கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கோடரவங் கோடல் அரும்பக் குருமணிகான்றாடரவம் எல்லாம் அளையடைய - நீடரவப்பொற்பகலம் பூண்டான் புரிசடைபோல் மின்னிற்றேகற்பகலம் காண்புற்ற கார்.
சொற்பிரிப்பு
கோடரவம் கோடல் அரும்பக் குருமணி கான்றுஆடரவம் எல்லாம் அளை அடைய – நீடரவப்பொற்பகலம் பூண்டான் புரிசடைபோல் மின்னிற்றேகற்பகலம் காண்புற்ற கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பாரும் பனிவிசும்பும் பாசுபதன் பல்சடையும்ஆரும் இருள்கீண்டு மின்விலகி - ஊரும்அரவஞ் செலவஞ்சும் அஞ்சொலார் காண்பார்கரவிந்தம் என்பார்அக் கார்.
சொற்பிரிப்பு
பாரும் பனிவிசும்பும் பாசுபதன் பல்சடையும்ஆரும் இருள் கீண்டு மின் விலகி – ஊரும்அரவம் செல அஞ்சும் அஞ்சொலார் காண்பார்கர இந்து அம் என்பார் அக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

செழுந்தழல் வண்ணன் செழுஞ்சடைபோல் மின்னிஅழுந்தி அலர்போல் உயர - எழுந்தெங்கும்ஆவிசோர் நெஞ்சினரை அன்பளக்க உற்றதேகாவிசேர் கண்ணாய்அக் கார்.
சொற்பிரிப்பு
செழுந்தழல் வண்ணன் செழுஞ்சடைபோல் மின்னிஅழுந்தி அலர்போல் உயர – எழுந்தெங்கும்ஆவிசோர் நெஞ்சினரை அன்பளக்க உற்றதேகாவிசேர் கண்ணாய் அக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப்பூந்தளவம் ஆரப் புகுந்தின்றே - ஏந்தொளிசேர்அண்டம்போல் மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர்கண்டம்போல் மீதிருண்ட கார்.
சொற்பிரிப்பு
காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப்பூந்தளவம் ஆரப் புகுந்தின்றே – ஏந்தொளிசேர்அண்டம்போல் மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர்கண்டம்போல் மீதிருண்ட கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.