திருமுறை 11 · 11.015 · 1

கோபப் பிரசாதம்

அருளியவர்
நக்கீரதேவ நாயனார்

1

தவறுபெரி துடைத்தே தவறுபெரி துடைத்தேவெண்திரைக் கருங்கடல் மேல்துயில் கொள்ளும்அண்ட வாணனுக் காழியன் றருளியும்உலகம் மூன்றும் ஒருங்குடன் படைத்தமலரோன் தன்னை வான்சிரம் அரிந்தும் (5)கான வேடுவன் கண்பரிந் தப்பவான நாடு மற்றவற் கருளியும்கடிபடு பூங்கணைக் காம னார் உடல்பொடிபட விழித்தும் பூதலத் திசைந்தமானுட னாகிய சண்டியை (10)வானவன் ஆக்கியும்மறிகடல் உலகின் மன்னுயிர் கவரும்கூற்றுவன் தனக்கோர் கூற்றுவ னாகியும்கடல்படு நஞ்சம் கண்டத் தடக்கியும்பருவரை சிலையாப் பாந்தள் நாணாத் (15)திரிபுரம் எரிய ஒருகணை துரந்தும்கற்கொண் டெறிந்த சாக்கியன் அன்புதற்கொண் டின்னருள் தான்மிக அளித்தும்கூற்றெனத் தோன்றியுங் கோளரி போன்றும்தோற்றிய வாரணத் தீருரி போர்த்தும் (20)நெற்றிக் கண்ணும் நீள்புயம் நான்கும்நற்றா நந்தீச் சுவரர்க் கருளியும்அறிவின் ஓரா அரக்க னாருடல்நெறநெற இறுதர ஒருவிரல் ஊன்றியும்திருவுரு வத்தொடு செங்கண் ஏறும் (25)அரியன திண்திறல் அசுரனுக் கருளியும்பல்கதிர் உரவோன் பற்கெடப் பாய்ந்துமல்குபிருங் கிருடிக்கு மாவரம் ஈந்தும்தக்கன் வேள்வி தகைகெடச் சிதைத்தும்மிக்கவரம் நந்தி மாகாளர்க் கருளியும் (30)செந்தீக் கடவுள்தன் கரதலஞ் செற்றும்பைந்தார் நெடும்படை பார்த்தற் கருளியும்கதிர்மதி தனையோர் காற்பயன் கெடுத்தும்நிதிபயில் குபேரற்கு நீள்நகர் ஈந்தும்சலந்தரன் உடலந் தான்மிகத் தடிந்தும் (35)மறைபயில் மார்க்கண் டேயனுக் கருளியும்தாருகற் கொல்லமுன் காளியைப் படைத்தும்சீர்மலி சிலந்திக் கின்னர சளித்தும்கார்மலி உருவக் கருடனைக் காய்ந்தும்ஆலின் கீழிருந் தறநெறி அருளியும் (40)இன்னவை பிறவும் எங்கள் ஈசன்கோபப் பிரசாதங் கூறுங் காலைக்கடிமலர் இருந்தோன் கார்க்கடற் கிடந்தோன்புடமுறு சோலைப் பொன்னகர் காப்போன்உரைப்போ ராகிலும் ஒண்கடல் மாநீர் (45)அங்கைகொண் டிறைக்கும் ஆதர் போன்றுளர்ஒடுங்காப் பெருமை உம்பர் கோனைஅடங்கா ஐம்புலத் தறிவில் சிந்தைக்கிருமி நாவாற் கிளத்தும் பரமே, அதாஅன்றுஒருவகைத் தேவரும் இருவகைத் திறமும் (50)மூவகைக் குணமும் நால்வகை வேதமும்ஐவகைப் பூதமும் அறுவகை இரதமும்எழுவகை ஓசையும் எண்வகை ஞானமும்ஒன்பதின் வகையாம் ஒண்மலர்ச் சிறப்பும்பத்தின் வகையும் ஆகிய பரமனை (55)இன்பனை நினைவோர்க் கென்னிடை அமுதினைச்செம்பொனை மணியினைத் தேனினைப் பாலினைத்தஞ்சமென் றொழுகுந் தன்னடி யார்தம்நெஞ்சம் பிரியா நிமலனை நீடுயர்செந்தழற் பவளச் சேணுறு வரையனை (60)முக்கட் செல்வனை முதல்வனை மூர்த்தியைக்கள்ளங் கைவிட் டுள்ளம துருகிக்கலந்து கசிந்துதன் கழலிணை யவையேநினைந்திட ஆங்கே தோன்றும் நிமலனைத்தேவ தேவனைத் திகழ்சிவ லோகனைப் (65)பாவ நாசனைப் படரொளி உருவனைவேயார் தோளி மெல்லியல் கூறனைத்தாயாய் மன்னுயிர் தாங்குந் தந்தையைச்சொல்லும் பொருளும் ஆகிய சோதியைக்கல்லுங் கடலும் ஆகிய கண்டனைத் (70)தோற்றம் நிலைஈ றாகிய தொன்மையைநீற்றிடைத் திகழும் நித்தனை முத்தனைவாக்கும் மனமும் இறந்த மறையனைப்பூக்கமழ் சடையனைப் புண்ணிய நாதனைஇனைய தன்மையன் என்றறி வரியவன் (75)தனைமுன் விட்டுத் தாம்மற்று நினைப்போர்மாமுயல் விட்டுக்காக்கைப் பின்போம் கலவர் போலவும்விளக்கங் கிருப்ப மின்மினி கவரும்அளப்பருஞ் சிறப்பில் ஆதர் போலவும் (80)கச்சங் கொண்டு கடுந்தொழில் முடியாக்கொச்சைத் தேவரைத் தேவரென் றெண்ணிப்பிச்சரைப் போலவோர்ஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்புற்றுவட்டணை பேசுவர் மானுடம் போன்று (85)பெட்டினை உரைப்போர் பேதையர் நிலத்துன்தலைமீன் தலைஎண் பலமென் றால்அதனைஅறுத்து நிறுப்போர் ஒருத்தர் இன்மையின்மத்திர மாகுவர் மாநெறி கிடப்பஓர்சித்திரம் பேசுவர் தேவ ராகில் (90)இன்னோர்க் காய்ந்தனர் இன்னோர்க் கருளினர்என்றறிய உலகின்முன்னே உரைப்ப தில்லை ஆகிலும்மாடு போலக் கூடிநின் றழைத்தும்மாக்கள் போல வேட்கையீ டுண்டும் (95)இப்படி ஞானம் அப்படி அமைத்தும்இன்ன தன்மையன் என்றிரு நிலத்துமுன்னே அறியா மூர்க்க மாக்களைஇன்னேகொண் டேகாக் கூற்றம்தவறுபெரி துடைத்தே தவறுபெரி துடைத்தே. (100)
சொற்பிரிப்பு
தவறு பெரிதுடைத்தே தவறு பெரிதுடைத்தேவெண்திரைக் கருங்கடல் மேல்துயில் கொள்ளும்அண்ட வாணனுக்கு ஆழி அன்று அருளியும்உலகம் மூன்றும் ஒருங்குடன் படைத்தமலரோன் தன்னை வான்சிரம் அரிந்தும்கான வேடுவன் கண்பரிந்து அப்பவான நாடு மற்றவற்கு அருளியும்கடிபடு பூங்கணைக் காமனார் உடல்பொடிபட விழித்தும் பூதலத்து இசைந்தமானுடனாகிய சண்டியைவானவன் ஆக்கியும்மறிகடல் உலகின் மன்னுயிர் கவரும்கூற்றுவன் தனக்கோர் கூற்றுவனாகியும்கடல்படு நஞ்சம் கண்டத்து அடக்கியும்பருவரை சிலையாப் பாந்தள் நாணாத்திரிபுரம் எரிய ஒருகணை துரந்தும்கற்கொண்டு எறிந்த சாக்கியன் அன்புதற்கொண்டு இன்னருள் தான் மிக அளித்தும்கூற்றெனத் தோன்றியும் கோளரி போன்றும்தோற்றிய வாரணத்து ஈர் உரி போர்த்தும்நெற்றிக் கண்ணும் நீள்புயம் நான்கும்நற்றா நந்தீச்சுவரர்க் கருளியும்அறிவினை ஓரா அரக்கனாருடல்நெறுநெற இறுதர ஒருவிரல் ஊன்றியும்திருவுருவத்தொடு செங்கண் ஏறும்அரியன திண்திறல் அசுரனுக் கருளியும்பல்கதிர் உரவோன் பற்கெடப் பாய்ந்துமல்கு பிருங்கி இருடிக்கு மாவரம் ஈந்தும்தக்கன் வேள்வி தகைகெடச் சிதைத்தும்மிக்கவரம் நந்தி மாகாளர்க்கு அருளியும்செந்தீக் கடவுள் தன் கரதலம் செற்றும்பைந்தார் நெடும்படை பார்த்தற்கு அருளியும்கதிர்மதி தனையோர் கால் பயன் கெடுத்தும்நிதிபயில் குபேரற்கு நீள்நகர் ஈந்தும்சலந்தரன் உடலம் தான் மிகத் தடிந்தும்மறைபயில் மார்க்கண்டேயனுக்கு அருளியும்தாருகற் கொல்ல முன் காளியைப் படைத்தும்சீர்மலி சிலந்திக்கு இன்னரசு அளித்தும்கார்மலி உருவக் கருடனைக் காய்ந்தும்ஆலின் கீழிருந்து அறநெறி அருளியும்இன்னவை பிறவும் எங்கள் ஈசன்கோபப் பிரசாதம் கூறும் காலைக்கடிமலர் இருந்தோன் கார்க்கடல் கிடந்தோன்புடமுறு சோலைப் பொன்னகர் காப்போன்உரைப்போர் ஆகிலும் ஒண்கடல் மாநீர்அங்கைகொண்டு இறைக்கும் ஆதர் போன்றுளர்ஒடுங்காப் பெருமை உம்பர் கோனைஅடங்கா ஐம்புலத்து அறிவில் சிந்தைக்கிருமி நாவால் கிளத்தும் பரமே, அதாஅன்றுஒருவகைத் தேவரும் இருவகைத் திறமும்மூவகைக் குணமும் நால்வகை வேதமும்ஐவகைப் பூதமும் அறுவகை இரதமும்எழுவகை ஓசையும் எண்வகை ஞானமும்ஒன்பதின் வகையாம் ஒண்மலர்ச் சிறப்பும்பத்தின் வகையும் ஆகிய பரமனைஇன்பனை நினைவோர்க்கு என்னிடை அமுதினைச்செம்பொனை மணியினைத் தேனினைப் பாலினைத்தஞ்சமென்று ஒழுகும் தன் அடியார் தம்நெஞ்சம் பிரியா நிமலனை நீடுயர்செந்தழற் பவளச் சேண் உறு வரையனைமுக்கட் செல்வனை முதல்வனை மூர்த்தியைக்கள்ளம் கைவிட்டு உள்ளமது உருகிக்கலந்து கசிந்து தன் கழலினை அவையேநினைந்திட ஆங்கே தோன்றும் நிமலனைத்தேவ தேவனைத் திகழ் சிவலோகனைப்பாவ நாசனைப் படரொளி உருவனைவேயார் தோளி மெல்லியல் கூறனைத்தாயாய் மன்னுயிர் தாங்கும் தந்தையைச்சொல்லும் பொருளும் ஆகிய சோதியைக்கல்லும் கடலும் ஆகிய கண்டனைத்தோற்றம் நிலை ஈறு ஆகிய தொன்மையைநீற்றிடைத் திகழும் நித்தனை முத்தனைவாக்கும் மனமும் இறந்த மறையனைப்பூக்கமழ் சடையனைப் புண்ணிய நாதனைஇனைய தன்மையன் என்று அறிவரியவன்தனைமுன்விட்டுத் தாம் மற்று நினைப்போர்மாமுயல் விட்டுக்காக்கைப் பின்போம் கலவர் போலவும்விளக்கு அங்கு இருப்ப மின்மினி கவரும்அளப்பரும் சிறப்பில் ஆதர் போலவும்கச்சம் கொண்டு கடுந்தொழில் முடியாக்கொச்சைத் தேவரைத் தேவரென்று எண்ணிப்பிச்சரைப் போலவோர்ஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்புற்றுவட்டணை பேசுவர் மானுடம் போன்றுபெட்டினை உரைப்போர் பேதையர் நிலத்து உன்தலை மீன்தலை எண் பலமென்றால் அதனைஅறுத்து நிறுப்போர் ஒருத்தர் இன்மையின்மத்திர மாகுவர் மாநெறி கிடப்ப ஓர்சித்திரம் பேசுவர் தேவராகில்இன்னோர்க் காய்ந்தனர் இன்னோர்க்கு அருளினர்என்று அறிய உலகின்முன்னே உரைப்பது இல்லை ஆகிலும்ஆடு போலக் கூடி நின்று அழைத்தும்மாக்கள் போல வேட்கை ஈடு உண்டும்இப்படி ஞானம் அப்படி அமைத்தும்இன்ன தன்மையன் என்று இரு நிலத்துமுன்னே அறியா மூர்க்க மாக்களைஇன்னேகொண்டு ஏகாக் கூற்றம்தவறு பெரிதுடைத்தே தவறு பெரிதுடைத்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.