1
சூல பாணியை சுடர்தரு வடிவனைநீல கண்டனை நெற்றியோர் கண்ணனைபால்வெண் ணீற்றனை பரம யோகியைகாலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலைநூலணி மார்பனை நுண்ணிய கேள்வியை (5)கோல மேனியை கொக்கரைப் பாடலைவேலுடைக் கையனை விண்தோய் முடியனைஞாலத் தீயினை நாதனைக் காய்ந்தனைதேவ தேவனை திருமறு மார்பனைகால மாகிய கடிகமழ் தாரனை (10)வேத கீதனை வெண்தலை ஏந்தியைபாவ நாசனை பரமேச் சுவரனைகீதம் பாடியை கிளர்பொறி அரவனைபோதணி கொன்றைஎம் புண்ணிய ஒருவனைஆதி மூர்த்தியை அமரர்கள் தலைவனை (15)சாதி வானவர் தம்பெரு மான்தனைவேத விச்சையை விடையுடை அண்ணலைஓத வண்ணனை உலகத் தொருவனைநாத னாகிய நன்னெறிப் பொருளினைமாலை தானெரி மயானத் தாடியை (20)வேலை நஞ்சினை மிகஅமு தாக்கியைவேத வேள்வியை விண்ணவர் தலைவனைஆதி மூர்த்தியை அருந்தவ முதல்வனைஆயிர நூறுக் கறிவரி யானைபேயுருவு தந்த பிறையணி சடையனை (25)மாசறு சோதியை மலைமகள் கொழுநனைகூரிய மழுவனை கொலற்கருங் காலனைச்சீரிய அடியாற் செற்ற ருள் சிவனைபூதிப் பையனை புண்ணிய மூர்த்தியைபீடுடை யாற்றை பிராணி தலைவனை (30)நீடிய நிமலனை நிறைமறைப் பொருளினைஈசனை இறைவனை ஈறில் பெருமையைநேசனை நினைப்பவர் நெஞ்சத் துள்ளனைதாதணி மலரனை தருமனை பிரமனைகாதணி குழையனை களிற்றின் உரியனை (35)சூழ்சடைப் புனலனை சுந்தர விடங்கனைதார்மலர்க் கொன்றை தயங்கு மார்பனைவித்தக விதியனைதீதமர் செய்கைத் திரிபுரம் எரித்தனைபிரமன் பெருந்தலை நிறைய தாகக் (40)கருமன் செந்நீர் கபாலம் நிறைத்தனைநிறைத்த கபாலச் செந்நீர் நின்றும்உறைத்த உருவார் ஐயனைத் தோற்றினைதேவரும் அசுரரும் திறம்படக் கடைந்தஆர்வமுண் நஞ்சம் அமுத மாக்கினை (45)ஈரமில் நெஞ்சத் திராவணன் தன்னைவீரம் அழித்து விறல்வாள் கொடுத்தனைதிக்கமர் தேவருந் திருந்தாச் செய்கைத்தக்கன் வேள்வியைத் தளரச் சாடினைவேதமும் நீயே வேள்வியும் நீயே (50)நீதியும் நீயே நிமலன் நீயேபுண்ணியம் நீயே புனிதன் நீயேபண்ணியல் நீயே பழம்பொருள் நீயேஊழியும் நீயே உலகமும் நீயேவாழியும் நீயே வரதனும் நீயே (55)தேவரும் நீயே தீர்த்தமும் நீயேமூவரும் நீயே முன்னெறி நீயேமால்வரை நீயே மறிகடல் நீயேஇன்பமும் நீயே துன்பமும் நீயேதாயும் நீயே தந்தையும் நீயே 60விண்முதற் பூதம் ஐந்தவை நீயேபுத்தியும் நீயே முத்தியும் நீயேசொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே, அதனால்கூடல் ஆலவாய்க் குழகன் ஆவதறியா தருந்தமிழ் பழித்தனன் அடியேன் (60)ஈண்டிய சிறப்பில் இணையடிக் கீழ்நின்றுவேண்டு மதுவினி வேண்டுவன் விரைந்தே.
சொற்பிரிப்பு
சூல பாணியை சுடர்தரு வடிவனைநீல கண்டனை நெற்றியோர் கண்ணனைபால்வெண்ணீற்றனை பரமயோகியைகாலனைக் காய்ந்த கறைமிடற்று அண்ணலைநூல் அணி மார்பனை நுண்ணிய கேள்வியைகோல மேனியை கொக்கரைப் பாடலைவேலுடைக் கையனை விண்தோய் முடியனைஞாலத் தீயினை நாதனைக் காய்ந்தனைதேவ தேவனை திருமறு மார்பனைகால மாகிய கடிகமழ் தாரனைவேத கீதனை வெண்தலை ஏந்தியைபாவ நாசனை பரமேச்சுவரனைகீதம் பாடியை கிளர்பொறி அரவனைபோதணி கொன்றை எம் புண்ணிய ஒருவனைஆதி மூர்த்தியை அமரர்கள் தலைவனைசாதி வானவர் தம்பெருமான் தனைவேத விச்சையை விடையுடை அண்ணலைஓத வண்ணனை உலகத்து ஒருவனைநாதனாகிய நன்னெறிப் பொருளினைமாலை தான் எரி மயானத்து ஆடியைவேலை நஞ்சினை மிக அமுதாக்கியைவேத வேள்வியை விண்ணவர் தலைவனைஆதி மூர்த்தியை அருந்தவ முதல்வனைஆயிர நூறுக்கு அறிவரியானைபேயுருவு தந்த பிறையணி சடையனைமாசறு சோதியை மலைமகள் கொழுநனைகூரிய மழுவனை கொலற்கு அரும் காலனைச்சீரிய அடியால் செற்ற அருள் சிவனைபூதிப் பையனை புண்ணிய மூர்த்தியைபீடுடையாற்றை பிராணி தலைவனைநீடிய நிமலனை நிறைமறைப் பொருளினைஈசனை இறைவனை ஈறில் பெருமையைநேசனை நினைப்பவர் நெஞ்சத்து உள்ளனைதாதணி மலரனை தருமனை பிரமனைகாதணி குழையனை களிற்றின் உரியனைசூழ்சடைப் புனலனை சுந்தர விடங்கனைதார்மலர்க் கொன்றை தயங்கு மார்பனைவித்தக விதியனைதீதமர் செய்கைத் திரிபுரம் எரித்தனைபிரமன் பெருந்தலை நிறையதாகக்கருமன் செந்நீர் கபாலம் நிறைத்தனைநிறைத்த கபாலச் செந்நீர் நின்றும்உறைத்த உருவார் ஐயனைத் தோற்றினைதேவரும் அசுரரும் திறம்படக் கடைந்தஆர்வம் உண் நஞ்சம் அமுத மாக்கினைஈரமில் நெஞ்சத்து இராவணன் தன்னைவீரம் அழித்து விறல்வாள் கொடுத்தனைதிக்கமர் தேவரும் திருந்தாச் செய்கைத்தக்கன் வேள்வியைத் தளரச் சாடினைவேதமும் நீயே வேள்வியும் நீயேநீதியும் நீயே நிமலன் நீயேபுண்ணியம் நீயே புனிதன் நீயேபண்ணியல் நீயே பழம்பொருள் நீயேஊழியும் நீயே உலகமும் நீயேவாழியும் நீயே வரதனும் நீயேதேவரும் நீயே தீர்த்தமும் நீயேமூவரும் நீயே முன்னெறி நீயேமால்வரை நீயே மறிகடல் நீயேஇன்பமும் நீயே துன்பமும் நீயேதாயும் நீயே தந்தையும் நீயேவிண்முதற் பூதம் ஐந்தவை நீயேபுத்தியும் நீயே முத்தியும் நீயேசொலற்கரும் தன்மைத் தொல்லோய் நீயே, அதனால்கூடல் ஆலவாய்க் குழகன் ஆவதுஅறியாது அருந்தமிழ் பழித்தனன் அடியேன்ஈண்டிய சிறப்பின் இணையடிக் கீழ்நின்றுவேண்டும் அது இனி வேண்டுவன் விரைந்தே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.