1
ஓருடம்பு ஈருரு ஆயினை ஒன்றுபுரிந்தொன்றி னீரிதழ்க் கொன்றை சூடினைமூவிலைச் சூலம் ஏந்தினைசுடருஞ் சென்னி மீமிசைஇருகோட் டொருமதி எழில்பெற மிலைச்சினை (5)ஒருகணை இருதோள் செவியுற வாங்கிமூவெயில் நாற்றிசை முரண்அரண் செகுத்தனைஆற்ற முன்னெறி பயந்தனைசெறிய இரண்டு நீக்கிஒன்று நினைவோர்க் குறுதி யாயினை (10)அந்நெறி ஒன்றுமனம்வைத் திரண்டும் நினைவி லோர்க்குமுன்னெறி உலகங் காட்டினை அந்நெறிநான்கென ஊழி தோற்றினைசொல்லும் ஐந்தலை அரவசைத் தசைந்தனை (15)நான்முகன் மேன்முகம் கபாலம் ஏந்தினைநூன்முக முப்புரி மார்பில்இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்தியஒருவநின் ஆதி காணா திருவர்மூவுல குழன்று நாற்றிசை உழிதர (20)ஐம்பெருங் குன்றத் தழலாய்த் தோன்றினைஆறுநின் சடையது ஐந்துநின் நிலையதுநான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணேஇரண்டு நின் குழையே ஒன்றுநின் ஏறேஒன்றிய காட்சி உமையவள் நடுங்க (25)இருங்களிற் றுரிவை போர்த்தனை நெருங்கிமுத்தீ நான்மறை ஐம்புலன் அடக்கியஅறுதொழி லாளர்க் குறுதி பயந்தனைஏழில் இன்னரம் பிசைத்தனைஆறில் அமுதம் பயந்தனை ஐந்தில் (30)விறலியர் கொட்டு மழுத்த வேந்தினைஆல நீழல் அன்றிருந் தறநெறிநால்வர் கேட்க நன்கினி துரைத்தனைநன்றி இல்லா முந்நீர்ச் சூர்மாக்கொன்றங் கிருவரை எறிந்த ஒருவன் (35)தாதை ஒருமிடற்று இருவடி வாயினைதருமம் மூவகை உலகம் உணரக்கூறுவை நால்வகைஇலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனைஐங்கணை அவனொடு காலனை அடர்த்தனை (40)அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனைஏழின் ஓசை இராவணன் பாடத்தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருத்தினைஆறிய சிந்தை யாகி ஐங்கதித்தேரொடு திசைசெல விடுத்தோன் (45)நாற்றோள் நலனே நந்தியிங் கிருடியென்றேற்ற பூதம் மூன்றுடன் பாடஇருகண் மொந்தை ஒருகணங் கொட்டமட்டுவிரி அலங்கல் மலைமகள் காணநட்டம் ஆடிய நம்ப அதனால் (50)சிறியேன் சொன்ன அறிவில் வாசகம்வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும்வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்துகீதம் பாடிய அண்ணல்பாதஞ் சென்னியிற் பரவுவன் பணிந்தே. (55)
சொற்பிரிப்பு
ஓருடம்பு ஈருரு ஆயினை ஒன்று புரிந்துஒன்றின் ஈரிதழ்க் கொன்றை சூடினைமூவிலைச் சூலம் ஏந்தினைசுடரும் சென்னி மீமிசைஇருகோட்டு ஒருமதி எழில்பெற மிலைச்சினைஒருகணை இருதோள் செவியுற வாங்கிமூவெயில் நாற்றிசை முரண் அரண் செகுத்தனைஆற்ற முன்னெறி பயந்தனைசெறிய இரண்டு நீக்கிஒன்று நினைவோர்க்கு உறுதி ஆயினைஅந்நெறி ஒன்றுமனம் வைத்து இரண்டும் நினைவிலோர்க்குமுன்னெறி உலகம் காட்டினை அந்நெறிநான்கென ஊழி தோற்றினைசொல்லும் ஐந்தலை அரவு அசைத்து அசைந்தனைநான்முகன் மேன்முகம் கபாலம் ஏந்தினைநூன்முக முப்புரி மார்பில்இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்தியஒருவ நின் ஆதி காணாது இருவர்மூவுலகு உழன்று நால்திசை உழிதரஐம்பெரும் குன்றத்து அழலாய்த் தோன்றினைஆறு நின் சடையது ஐந்து நின் நிலையதுநான்கு நின் வாய்மொழி மூன்று நின் கண்ணேஇரண்டு நின் குழையே ஒன்று நின் ஏறேஒன்றிய காட்சி உமையவள் நடுங்கஇருங்களிற்று உரிவை போர்த்தனை நெருங்கிமுத்தீ நான்மறை ஐம்புலன் அடக்கியஅறுதொழிலாளர்க்கு உறுதி பயந்தனைஏழில் இன்னரம்பு இசைத்தனைஆறில் அமுதம் பயந்தனை ஐந்தில்விறலியர் கொட்டு மழுத்த ஏந்தினைஆல நீழல் அன்றிருந்து அறநெறிநால்வர் கேட்க நன்கு இனிது உரைத்தனைநன்றி இல்லா முந்நீர்ச் சூர்மாக்கொன்றங்கு இருவரை எறிந்த ஒருவன்தாதை ஒருமிடற்று இருவடிவு ஆயினைதருமம் மூவகை உலகம் உணரக்கூறுவை நால்வகைஇலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனைஐங்கணை அவனொடு காலனை அடர்த்தனைஅறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனைஏழின் ஓசை இராவணன் பாடத்தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருத்தினைஆறிய சிந்தையாகி ஐங்கதித்தேரொடு திசை செலவிடுத்தோன்நால்தோள் நலனே நந்தி பிங்கிருடி என்றுஏற்ற பூதம் மூன்று உடன் பாடஇருகண் மொந்தை ஒருகணம் கொட்டமட்டுவிரி அலங்கல் மலைமகள் காணநட்டம் ஆடிய நம்ப அதனால்சிறியேன் சொன்ன அறிவில் வாசகம்வறிது எனக் கொள்ளாயாகல் வேண்டும்வெறிகமழ் கொன்றையொடு வெண்ணிலவு அணிந்துகீதம் பாடிய அண்ணல்பாதம் சென்னியில் பரவுவன் பணிந்தே
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.