1
வணங்குதும் வாழி நெஞ்சே புணர்ந்துடன்பொருகடல் முகந்து கருமுகிற் கணம்நற்படவர வொடுங்க மின்னிக் குடவரைப்பொழிந்து கொழித்திழி அருவி குணகடல்மடுக்குங் காவிரி மடந்தை வார்புனல்உடுத்த மணிநீர் வலஞ்சுழிஅணிநீர்க் கொன்றை அண்ணல தடியே.
சொற்பிரிப்பு
வணங்குதும் வாழி நெஞ்சே புணர்ந்துடன்பொருகடல் முகந்து கருமுகிற் கணம் நல்பட அரவொடுங்க மின்னிக் குடவரைப்பொழிந்து கொழித்திழி அருவி குணகடல்மடுக்கும் காவிரி மடந்தை வார்புனல்உடுத்த மணிநீர் வலஞ்சுழிஅணிநீர்க் கொன்றை அண்ணலது அடியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.