1
அடியும் முடியும் அரியும் அயனும்படியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்இன்ன தென அறியா ஈங்கோயே - ஓங்காரம்அன்னதென நின்றான் மலை.
சொற்பிரிப்பு
அடியும் முடியும் அரியும் அயனும்படியும் விசும்பும் பாய்ந்து ஏறி – நொடியுங்கால்இன்ன தென அறியா ஈங்கோயே ஓங்காரம்அன்னது என நின்றான் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
அந்தஇள மாக்குழவி ஆயம் பிரிந்ததற்குக்கொந்தவிழ்தேன் தோய்த்துக் குறமகளிர் - சந்தின்இலைவளைக்கை யாற்கொடுக்கும் ஈங்கோயே மேருமலைவளைக்கை வில்லி மலை.
சொற்பிரிப்பு
அந்த இள மாக்குழவி ஆயம் பிரிந்ததற்குக்கொந்து அவிழ்தேன் தோய்த்துக் குறமகளிர் – சந்தின்இலை வளைக்கையாற் கொடுக்கும் ஈங்கோயே மேருமலை வளைக் கை வில்லி மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
அம்பள வாய்மகளிர் அம்மனைக்குத் தம்மனையைச்செம்பவளந் தாவென்னச் சீர்க்குறத்தி - கொம்பின்இறுதலையி னாற்கிளைக்கும் ஈங்கோயே நம்மேல்மறுதலைநோய் தீர்ப்பான் மலை.
சொற்பிரிப்பு
அம்பவளவாய் மகளிர் அம்மனைக்குத் தம்மனையைச்செம்பவளம் தாவென்னச் சீர்க்குறத்தி – கொம்பின்இறுதலையினாற் கிளைக்கும் ஈங்கோயே நம்மேல்மறுதலை நோய் தீர்ப்பான் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
அரிகரியைக் கண்டவிடத் தச்சலிப்பாய் ஓடப்பிரிவரிய தன்பிடியைப் பேணிக் - கரிபெரிதும்கையெடுத்து நீட்டிக் கதஞ்சிறக்கும் ஈங்கோயேமையடுத்த கண்டன் மலை.
சொற்பிரிப்பு
அரி கரியைக் கண்ட விடத்து அச்சலிப்பாய் ஓடப்பிரிவரிய தன்பிடியைப் பேணிக் – கரிபெரிதும்கையெடுத்து நீட்டிக் கதஞ்சிறக்கும் ஈங்கோயேமையடுத்த கண்டன் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
அரியும் உழுவையும் ஆளியுமே ஈண்டிப்பரியிட்டுப் பன்மலர்கொண் டேறிச் - சொரியஎரியாடி கண்டுகக்கும் ஈங்கோயே கூற்றம்திரியாமற் செற்றான் சிலம்பு.
சொற்பிரிப்பு
அரியும் உழுவையும் ஆளியுமே ஈண்டிப்பரியிட்டுப் பன்மலர் கொண் டேறிச் – சொரியஎரியாடி கண்டு உகக்கும் ஈங்கோயே கூற்றம்திரியாமற் செற்றான் சிலம்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
ஆளி தொடர அரிதொடர ஆங்குடனேவாளி கொடுதொடரும் மாக்குறவர் - கோளின்இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே நம்மேற்கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று.
சொற்பிரிப்பு
ஆளி தொடர அரிதொடர ஆங்குடனேவாளிகொடு தொடரும் மாக்குறவர் – கோளின்இடுசிலையினாற் புடைக்கும் ஈங்கோயே நம்மேல்கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
இடுதினைதின் வேழங் கடியக் குறவர்வெடிபடு வெங்கவண்கல் ஊன்ற - நெடுநெடெனநீண்டகழை முத்துதிர்க்கும் ஈங்கோயே ஏங்குமணிபூண்டகழை யேறி பொருப்பு.
சொற்பிரிப்பு
இடுதினை தின் வேழம் கடியக் குறவர்வெடிபடு வெங்கவண்கல் ஊன்ற – நெடுநெடெனநீண்டகழை முத்துதிர்க்கும் ஈங்கோயே ஏங்குமணிபூண்ட கழையேறி பொருப்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
ஈன்ற குறமகளிர்க் கேழை முதுகுறத்திநான்றகறிக் கேறசலை நற்கிழங் - கூன்றவைத்தென்னன்னை உண்ணென் றெடுத்துரைக்கும் ஈங்கோயேமின்னன்ன செஞ்சடையான் வெற்பு.
சொற்பிரிப்பு
ஈன்ற குறமகளிர்க்கு ஏழை முதுகுறத்திநான்ற கறிக்கு ஏறு அசலை நற்கிழங்கு – ஊன்றவைத்துஎன் அன்னை உண்ணென்று எடுத்துரைக்கும் ஈங்கோயேமின்னன்ன செஞ்சடையான் வெற்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
ஈன்ற குழவிக்கு மந்தி இறுவரை மேல்நான்ற நறவத்தைத் தான்நணுகித் - தோன்றவிரலால்தேன் தோய்த்தூட்டும் ஈங்கோயே நம்மேல்வரலாம்நோய் தீர்ப்பான் மலை.
சொற்பிரிப்பு
ஈன்ற குழவிக்கு மந்தி இறுவரை மேல்நான்ற நறவத்தைத் தான் நணுகித் – தோன்றவிரலால் தேன் தோய்த்து ஊட்டும் ஈங்கோயே நம்மேல்வரலாம் நோய் தீர்ப்பான் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்போய்ப்பண்டிருந்த யாழ்முரலப் பைம்பொழில்வாய்க் -கண்டிருந்தமாமயில்கள் ஆடி மருங்குவரும் ஈங்கோயேபூமயிலி தாதை பொருப்பு.
சொற்பிரிப்பு
உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்போய்ப்பண்டிருந்த யாழ் முரலப் பைம்பொழில்வாய்க் - கண்டிருந்தமாமயில்கள் ஆடி மருங்கு வரும் ஈங்கோயேபூமயிலி தாதை பொருப்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
ஊடிப் பிடியுறங்க ஒண்கதலி வண்கனிகள்நாடிக் களிறு நயந்தெடுத்துக் - கூடிக்குணமருட்டிக் கொண்டாடும் ஈங்கோயே வானோர்குணமருட்டுங் கோளரவன் குன்று.
சொற்பிரிப்பு
ஊடிப் பிடி உறங்க ஒண்கதலி வண்கனிகள்நாடிக் களிறு நயந்தெடுத்துக் – கூடிக்குணமருட்டிக் கொண்டாடும் ஈங்கோயே வானோர்குணமருட்டும் கோளரவன் குன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் கேற்றதெனக்கையிற் கணைகளைந்து கன்னிமான் - பையப்போஎன்கின்ற பாவனைசெய் ஈங்கோயே தூங்கெயில்கள்சென்றன்று வென்றான் சிலம்பு.
சொற்பிரிப்பு
எய்யத் தொடுத்தோன் குறத்தி நோக்கு உற்றதெனக்கையிற் கணைகளைந்து கன்னிமான் – பையப்போஎன்கின்ற பாவனைசெய் ஈங்கோயே தூங்கெயில்கள்சென்று அன்று வென்றான் சிலம்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
ஏழை இளமாதே என்னொடுநீ போதென்றுகூழை முதுவேடன் கொண்டுபோய் - வேழஇனைக்குவால் வீட்டுவிக்கும் ஈங்கோயே நந்தம்வினைக்குவால் வீட்டுவிப்பான் வெற்பு.
சொற்பிரிப்பு
ஏழை இளமாதே என்னொடு நீ போதென்றுகூழை முதுவேடன் கொண்டுபோய் – வேழஇனைக்கு வால் வீட்டுவிக்கும் ஈங்கோயே நந்தம்வினைக் குவால் வீட்டுவிப்பான் வெற்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
ஏனம் உழுத புழுதி இனமணியைக்கானவர்தம் மக்கள் கனலென்னக் - கூனல்இறுக்கங் கதிர்வெதுப்பும் ஈங்கோயே நம்மேல்மறுக்கங்கள் தீர்ப்பான் மலை.
சொற்பிரிப்பு
ஏனம் உழுத புழுதி இனமணியைக்கானவர் தம் மக்கள் கனலென்னக் – கூனல்இறுக்கம் கதிர் வெதுப்பும் ஈங்கோயே நம்மேல்மறுக்கங்கள் தீர்ப்பான் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
ஏனங் கிளைத்த இனபவள மாமணிகள்கானல் எரிபரப்பக் கண்டஞ்சி - யானைஇனம்இரிய முல்லைநகும் ஈங்கோயே நம்மேல்வினைஇரியச் செற்றுகந்தான் வெற்பு.
சொற்பிரிப்பு
ஏனம் கிளைத்த இனபவள மாமணிகள்கானல் எரிபரப்பக் கண்டஞ்சி – யானைஇனம் இரிய முல்லை நகும் ஈங்கோயே நம்மேல்வினை இரியச் செற்றுகந்தான் வெற்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
ஒருகணையுங் கேழல் உயிர்செகுத்துக் கையில்இருகணையும் ஆனைமேல் எய்ய - அருகணையும்ஆளரிதான் ஓட அரிவெருவும் ஈங்கோயேகோளரிக்கும் காண்பரியான் குன்று.
சொற்பிரிப்பு
ஒருகணையும் கேழல் உயிர் செகுத்துக் கையில்இருகணையும் ஆனைமேல் எய்ய – அருகணையும்ஆளரி தான் ஓட அரி வெருவும் ஈங்கோயேகோளரிக்கும் காண்பரியான் குன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவத் தண்போதைத்தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் - மூங்கில்தழையிறுத்துக் கொண்டோச்சும் ஈங்கோயே சங்கக்குழையிறுத்த காதுடையான் குன்று.
சொற்பிரிப்பு
ஓங்கிப் பரந்தெழுந்த ஒள் இலவத் தண்போதைத்தூங்குவதோர் கொள்ளி எனக் கடுவன் – மூங்கில்தழையிறுத்துக் கொண்டு ஓச்சும் ஈங்கோயே சங்கக்குழையிறுத்த காதுடையான் குன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
ஓடும் முகிலை உகிரால் இறஊன்றிமாடுபுக வான்கை மிகமடுத்து - நீடருவிமாச்சீயம் உண்டு மனங்களிக்கும் ஈங்கோயேகோச்சீயம் காண்பரியான் குன்று.
சொற்பிரிப்பு
ஓடும் முகிலை உகிரால் இற ஊன்றிமாடு புக வான்கை மிகமடுத்து – நீடருவிமாச்சீயம் உண்டு மனங்களிக்கும் ஈங்கோயேகோச்சீயம் காண்பரியான் குன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
கண்ட கனிநுகர்ந்த மந்தி கருஞ்சுனைநீர்உண்டு குளிர்ந்திலஎன் றூடிப்போய்க் -கொண்டல்இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே நான்குமறைக்கீறு கண்டான் மலை.
சொற்பிரிப்பு
கண்ட கனி நுகர்ந்த மந்தி கருஞ்சுனைநீர்உண்டு குளிர்ந்தில என்றூடிப்போய்க் - கொண்டல்இறைக் கீறி வாய் மடுக்கும் ஈங்கோயே நான்குமறைக்கு ஈறு கண்டான் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
கருங்களிற்றின் வெண்கொம்பால் கல்லுரல்வாய் நல்லார்பெருந்தினைவெண் பிண்டி இடிப்ப - வருங்குறவன்கைக்கொணருஞ் செந்தேன் கலந்துண்ணும் ஈங்கோயேமைக்கொணருங் கண்டன் மலை.
சொற்பிரிப்பு
கருங்களிற்றின் வெண்கொம்பால் கல்லுரல்வாய் நல்லார்பெருந்தினை வெண்பிண்டி இடிப்ப – வரும்குறவன்கைக்கொணரும் செந்தேன் கலந்துண்ணும் ஈங்கோயேமைக்கொணரும் கண்டன் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
கனைய பலாங்கனிகள் கல்லிலையர் தொக்கநனைய கலத்துரத்தில் ஏந்தி - மனைகள்வரவிரும்பி ஆய்பார்க்கும் ஈங்கோயே பாங்கார்குரவரும்பு செஞ்சடையான் குன்று.
சொற்பிரிப்பு
கனைய பலாங்கனிகள் கல் இலையர் தொக்கநனைய கலத்து உரத்தில் ஏந்தி – மனைகள்வரவிரும்பி ஆய் பார்க்கும் ஈங்கோயே பாங்கார்குரவு அரும்பு செஞ்சடையான் குன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
கடக்களிறு கண்வளரக் கார்நிறவண் டார்ப்பச்சுடர்க்குழையார் பாட்டெழவு கேட்டு - மடக்கிளிகள்கீதந் தெரிந்துரைக்கும் ஈங்கோயே ஆல்கீழ்நால்வேதந் தெரிந்துரைப்பான் வெற்பு.
சொற்பிரிப்பு
கடக்களிறு கண்வளரக் கார்நிற வண்டார்ப்பச்சுடர்க்குழையார் பாட்டெழவு கேட்டு – மடக்கிளிகள்கீதம் தெரிந்துரைக்கும் ஈங்கோயே ஆல் கீழ் நால்வேதம் தெரிந்துரைப்பான் வெற்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
கறுத்தமுலைச் சூற்பிடிக்குக் கார்யானை சந்தம்இறுத்துக்கை நீட்டும்ஈங் கோயே - செறுத்தகடதடத்த தோலுரிவைக் காப்பமையப் போர்த்தவிடமிடற்றி னான்மருவும் வெற்பு.
சொற்பிரிப்பு
கறுத்தமுலைச் சூற்பிடிக்குக் கார்யானை சந்தம்இறுத்துக் கை நீட்டும் ஈங்கோயே – செறுத்தகடதடத்த தோல் உரிவைக் காப்பமையப் போர்த்தவிடமிடற்றினான் மருவும் வெற்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
கங்குல் இரைதேரும் காகோ தரங்கேழற்கொம்பி னிடைக் கிடந்த கூர்மணியைப் - பொங்கிஉருமென்று புற்றடையும் ஈங்கோயே காமன்வெருவொன்றக் கண்சிவந்தான் வெற்பு.
சொற்பிரிப்பு
கங்குல் இரைதேரும் காகோதரங் கேழற்கொம்பினிடைக் கிடந்த கூர்மணியைப் – பொங்கிஉருமென்று புற்றடையும் ஈங்கோயே காமன்வெருவொன்றக் கண்சிவந்தான் வெற்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
கலவிக் களிறசைந்த காற்றெங்குங் காணாதிலைகைக்கொண் டேந்திக்கால் வீச - உலவிச்சென்றொண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே பாங்காயவெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு.
சொற்பிரிப்பு
கலவிக் களிறு அசைந்த காற்றெங்கும் காணாதுஇலைகைக்கொண்டு ஏந்திக்கால் வீச – உலவிச்சென்றுஒண்பிடி காற்று ஏற்றுகக்கும் ஈங்கோயே பாங்காயவெண்பொடி நீற்றான் மருவும் வெற்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
கன்னிப் பிடிமுதுகிற் கப்பருவ முட்பருகிஅன்னைக் குடிவர லாறஞ்சிப் - பின்னரேஏன்தருக்கி மாதவஞ்செய் ஈங்கோயே நீங்காதமான்தரித்த கையான் மலை.
சொற்பிரிப்பு
கன்னிப் பிடி முதுகிற் கப்பு உருவம் உட்பருகிஅன்னைக் குடிவரலாறு அஞ்சிப் – பின்னரேஏன்தருக்கி மாதவஞ்செய் ஈங்கோயே நீங்காதமான்தரித்த கையான் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
கள்ள முதுமறவர் காட்டகத்து மாவேட்டைகொள்ளென் றழைத்த குரல்கேட்டுத் -துள்ளிஇனக்கவலை பாய்ந்தோடும் ஈங்கோயே நந்தம்மனக்கவலை தீர்ப்பான் மலை.
சொற்பிரிப்பு
கள்ள முதுமறவர் காட்டகத்து மாவேட்டைகொள்ளென்று அழைத்த குரல்கேட்டுத் - துள்ளிஇனக்கவலை பாய்ந்தோடும் ஈங்கோயே நந்தம்மனக்கவலை தீர்ப்பான் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
கல்லைப் புனம்மேய்ந்து கார்க்கொன்றைத் தார்போர்த்துக்கொல்லை எழுந்த கொழும்புறவின் - முல்லையங்கண்பல்லரும்பு மொய்த்தீனும் ஈங்கோயே மூவெயிலும்கொல்லரும்பக் கோல்கோத்தான் குன்று.
சொற்பிரிப்பு
கல்லைப் புனம் ஏய்ந்து கார்க்கொன்றைத் தார் போர்த்துக்கொல்லை எழுந்த கொழும்புறவின் – முல்லை அங்கண்பல்லரும்பு மொய்த்து ஈனும் ஈங்கோயே மூவெயிலும்கொல்லரும்பக் கோல்கோத்தான் குன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
கல்லாக் குரங்கு பளிங்கிற் கனிகாட்டஎல்லாக் குரங்கும் உடன்ஈண்டி - வல்லேஇருந்துகிராற் கற்கிளைக்கும் ஈங்கோயே மேனிப்பொருந்தஅராப் பூண்டான் பொருப்பு.
சொற்பிரிப்பு
கல்லாக் குரங்கு பளிங்கிற் கனி காட்டஎல்லாக் குரங்கும் உடன் ஈண்டி – வல்லேஇருந்து உகிரால் கல் கிளைக்கும் ஈங்கோயே மேனிப்பொருந்த அராப் பூண்டான் பொருப்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
கண்கொண் டவிர்மணியின் நாப்பண் கருங்கேழல்வெண்கோடு வீழ்ந்த வியன்சாரல் -தண்கோடிளம்பிறைசேர் வான்கடுக்கும் ஈங்கோயே வேதம்விளம்பிறைசேர் வான்கடுக்கும் வெற்பு.
சொற்பிரிப்பு
கண்கொண்டு அவிர்மணியின் நாப்பண் கருங்கேழல்வெண்கோடு வீழ்ந்த வியன்சாரல் – தண்கோடுஇளம்பிறைசேர் வான்கடுக்கும் ஈங்கோயே வேதம்விளம்பு இறை சேர் வான்கடுக்கும் வெற்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
காந்தளங் கைத்தலங்கள் காட்டக் களிமஞ்ஞைகூந்தல் விரித்துடனே கூத்தாடச் - சாய்ந்திரங்கிஏர்க்கொன்றை பொன்கொடுக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்கார்க்கொன்றை ஏற்றான் கடறு.
சொற்பிரிப்பு
காந்தளம் கைத்தலங்கள் காட்டக் களிமஞ்ஞைகூந்தல் விரித்துடனே கூத்தாடச் – சாய்ந்திரங்கிஏர்க்கொன்றை பொன்கொடுக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்கார்க்கொன்றை ஏற்றான் கடறு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
குறமகளிர் கூடிக் கொழுந்தினைகள் குத்திநறவமாக் கஞ்சகங்கள் நாடிச் - சிறுகுறவர்கைந்நீட்டி உண்ணக் களித்துவக்கும் ஈங்கோயேமைந்நீட்டுங் கண்டன் மலை.
சொற்பிரிப்பு
குறமகளிர் கூடிக் கொழுந்தினைகள் குத்திநறவம் ஆக்கு அஞ்சகங்கள் நாடிச் – சிறுகுறவர்கைந்நீட்டி உண்ணக் களித்து உவக்கும் ஈங்கோயேமைந்நீட்டும் கண்டன் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
கூழை முதுமந்தி கோல்கொண்டு தேன்பாயஏழை இளமந்தி சென்றிருந்து - வாழைஇலையால்தேன் உண்டுவக்கும் ஈங்கோயே இஞ்சிசிலையால்தான் செற்றான் சிலம்பு.
சொற்பிரிப்பு
கூழை முதுமந்தி கோல்கொண்டு தேன்பாயஏழை இளமந்தி சென்றிருந்து – வாழைஇலையால் தேன் உண்டு உவக்கும் ஈங்கோயே இஞ்சிசிலையால்தான் செற்றான் சிலம்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
கொல்லை இளவேங்கைக் கொத்திறுத்துக் கொண்டுசுனைமல்லைநீர் மஞ்சனமா நாட்டிக்கொண் - டொல்லைஇருங்கைக் களிறேறும் ஈங்கோயே மேல்நோய்வருங்கைக் களைவான் மலை.
சொற்பிரிப்பு
கொல்லை இளவேங்கைக் கொத்திறுத்துக் கொண்டு சுனைமல்லைநீர் மஞ்சனமா நாட்டிக்கொண்டு – ஒல்லைஇருங்கைக் களிறேறும் ஈங்கோயே மேல்நோய்வருங்கைக் களைவான் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
கொவ்வைக் கனிவாய்க் குறமகளிர் கூந்தல்சேர்கவ்வைக் கடிபிடிக்கும் காதன்மையாற் -செவ்வைஎறித்தமலர் கொண்டுவிடும் ஈங்கோயே அன்பர்குறித்தவரந் தான்கொடுப்பான் குன்று.
சொற்பிரிப்பு
கொவ்வைக் கனிவாய்க் குறமகளிர் கூந்தல்சேர்கவ்வைக் கடிபிடிக்கும் காதன்மையால் - செவ்வைஎறித்தமலர் கொண்டுவிடும் ஈங்கோயே அன்பர்குறித்தவரம் தான் கொடுப்பான் குன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
36
கொடுவிற் சிலைவேடர் கொல்லை புகாமல்படுகுழிகள் கல்லுதல்பார்த் தஞ்சி - நெடுநாகம்தண்டூன்றிச் செல்லுஞ்சீர் ஈங்கோயே தாழ்சடைமேல்வண்டூன்றுந் தாரான் மலை.
சொற்பிரிப்பு
கொடுவிற் சிலைவேடர் கொல்லை புகாமல்படுகுழிகள் கல்லுதல் பார்த்தஞ்சி – நெடுநாகம்தண்டு ஊன்றிச் செல்லுஞ் சீர் ஈங்கோயே தாழ்சடைமேல்வண்டு ஊன்றும் தாரான் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
37
கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர்வேங்கைமணி நீழல் விளையாடி - வேங்கைவரவதனைக் கண்டிரியும் ஈங்கோயே தீங்குவரவதனைக் காப்பான் மலை.
சொற்பிரிப்பு
கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர்வேங்கைமணி நீழல் விளையாடி – வேங்கைவரவதனைக் கண்டு இரியும் ஈங்கோயே தீங்குவர அதனைக் காப்பான் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
38
சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்தியானைமந்த மடப்பிடியின் வாய்க்கொடுப்ப - வந்ததன்கண்களிக்கத் தான்களிக்கும் ஈங்கோயே தேங்காதேவிண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு.
சொற்பிரிப்பு
சந்தனப் பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்து யானைமந்த மடப்பிடியின் வாய்க் கொடுப்ப – வந்த தன்கண்களிக்கத் தான்களிக்கும் ஈங்கோயே தேங்காதேவிண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
39
சந்தின் இலையதனுள் தண்பிண்டி தேன்கலந்துகொந்திஇனி துண்ணக் குறமகளிர் - மந்திஇளமகளிர் வாய்க்கொடுத்துண் ஈங்கோயே வெற்பின்வளமகளிர் பாகன் மலை.
சொற்பிரிப்பு
சந்தின் இலையதனுள் தண்பிண்டி தேன்கலந்துகொந்தி இனிதுண்ணக் குறமகளிர் – மந்திஇளமகளிர் வாய்க்கொடுத்து உண் ஈங்கோயே வெற்பின்வளமகளிர் பாகன் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
40
சாரற் குறத்தியர்கள் தண்மருப்பால் வெண்பிண்டிசேரத் தருக்கி மதுக்கலந்து - வீரத்தமர்இனிதா உண்ணுஞ்சீர் ஈங்கோயே இன்பக்குமரன்முது தாதையார் குன்று.
சொற்பிரிப்பு
சாரற் குறத்தியர்கள் தண்மருப்பால் வெண்பிண்டிசேரத் தருக்கி மதுக்கலந்து – வீரத்தமர் இனிதா உண்ணுஞ்சீர் ஈங்கோயே இன்பக்குமரன் முது தாதையர் குன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
41
தாயோங்கித் தாமடருந் தண்சாரல் ஒண்கானம்வேயோங்கி முத்தம் எதிர்பிதுங்கித் - தீயோங்கிக்கண்கன்றித் தீவிளைக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்வண்கொன்றைத் தாரான் வரை.
சொற்பிரிப்பு
தாயோங்கித் தாமடரும் தண்சாரல் ஒண்கானம்வேயோங்கி முத்தம் எதிர் பிதுங்கித் – தீயோங்கிக்கண்கன்றித் தீவிளைக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்வண்கொன்றைத் தாரான் வரை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
42
செடிமுட்டச் சிங்கத்தின் சீற்றத்தீக் கஞ்சிப்பிடியட்ட மாக்களிறு பேர்ந்து - கடம்முட்டிஎன்னேசீ என்னுஞ்சீர் ஈங்கோயே ஏந்தழலிற்பொன்னேர் அனையான் பொருப்பு.
சொற்பிரிப்பு
செடிமுட்டச் சிங்கத்தின் சீற்றத் தீக் கஞ்சிப்பிடியட்டமாக் களிறு போந்து – கடம் முட்டிஎன்னே சீ என்னுஞ்சீர் ஈங்கோயே ஏந்து அழலின்பொன் நேர் அனையான் பொருப்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
43
சுனைநீடு தாமரையின் தாதளைந்து சோதிப்புனைநீடு பொன்னிறத்த வண்டு - மனைநீடிமன்னி மணம்புணரும் ஈங்கோயே மாமதியம்சென்னி அணிந்தான் சிலம்பு.
சொற்பிரிப்பு
சுனைநீடு தாமரையின் தாது அளைந்து சோதிப்புனைநீடு பொன்னிறத்த வண்டு – மனை நீடிமன்னி மணம்புணரும் ஈங்கோயே மாமதியம்சென்னி அணிந்தான் சிலம்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
44
செந்தினையின் வெண்பிண்டி பச்சைத்தே னாற்குழைத்துவந்தவிருந் தூட்டும் மணிக்குறத்தி - பந்தியாத்தேக்கிலைகள் இட்டுச் சிறப்புரைக்கும் ஈங்கோயேமாக்கலைகள் வைத்தான் மலை.
சொற்பிரிப்பு
செந்தினையின் வெண்பிண்டி பச்சைத் தேனாற் குழைத்துவந்த விருந்து ஊட்டும் மணிக்குறத்தி – பந்தியாத்தேக்கிலைகள் இட்டுச் சிறப்புரைக்கும் ஈங்கோயேமாக்கலைகள் வைத்தான் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
45
தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள்இடம்புகுந்தங் கின்நறவம் மாந்தி - உடன்கலந்துமாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயேகோக்குரவை ஆடிகொழுங் குன்று.
சொற்பிரிப்பு
தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள்இடம்புகுந்து அங்கு இன் நறவம் மாந்தி – உடன்கலந்துமாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயேகோக்குரவை ஆடி கொழும் குன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
46
தாமரையின் தாள்தகைத்த தாமரைகள் தாள்தகையத்தாமரையிற் பாய்ந்துகளும் தண்புறவில் - தாமரையின்ஈட்டம் புலிசிதறும் ஈங்கோயே எவ்வுயிர்க்கும்வாட்டங்கள் தீர்ப்பான் மலை.
சொற்பிரிப்பு
தாமரையின் தாள்தகைத்த தாமரைகள் தாள்தகையத்தாமரையிற் பாய்ந்துகளும் தண்புறவில் – தாமரையின்ஈட்டம் புலிசிதறும் ஈங்கோயே எவ்வுயிர்க்கும்வாட்டங்கள் தீர்ப்பான் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
47
தெள்ளகட்ட பூஞ்சுனைய தாமரையின் தேமலர்வாய்வள்ளவட்டப் பாழி மடலேறி -வெள்ளகட்டகாராமை கண்படுக்கும் ஈங்கோயே வெங்கூற்றைச்சேராமற் செற்றான் சிலம்பு.
சொற்பிரிப்பு
தெள் அகட்ட பூஞ்சுனைய தாமரையின் தேமலர் வாய்வள்ள வட்டப் பாழி மடலேறி – வெள் அகட்டகார் ஆமை கண்படுக்கும் ஈங்கோயே வெங்கூற்றைச்சேராமற் செற்றான் சிலம்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
48
தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்குதான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து - வான்குணங்கள்பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே பாங்கமரர்சீராட்ட நின்றான் சிலம்பு.
சொற்பிரிப்பு
தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்குதான்கொணர்ந்து மக்கள் கையிற் கொடுத்து – வான்குணங்கள்பாராட்டி ஊட்டுஞ்சீர் ஈங்கோயே பாங்கமரர்சீராட்ட நின்றான் சிலம்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
49
தேன்மருவு பூஞ்சுனைகள் புக்குச் செழுஞ்சந்தின்கானமர்கற் பேரழகு கண்குளிர - மேனின்றருவிகள்தாம் வந்திழியும் ஈங்கோயே வானோர்வெருவுகடல் நஞ்சுண்டான் வெற்பு.
சொற்பிரிப்பு
தேன்மருவு பூஞ்சுனைகள் புக்குச் செழுஞ்சாந்தின்கானமர் கற் பேரழகு கண்குளிர – மேல் நின்றுஅருவிகள் தாம் வந்திழியும் ஈங்கோயே வானோர்வெருவு கடல் நஞ்சுண்டான் வெற்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
50
தோகை மயிலினங்கள் சூழ்ந்து மணிவரைமேல்ஓகை செறியாயத் தோடாட - நாகம்இனவளையிற் புக்கொளிக்கும் ஈங்கோயே நம்மேல்வினைவளையச் செற்றுகந்தான் வெற்பு.
சொற்பிரிப்பு
தோகை மயிலினங்கள் சூழ்ந்து மணிவரைமேல்ஓகைசெறி ஆயத்தோடு ஆட – நாகம்இனவளையில் புக்கொளிக்கும் ஈங்கோயே நம்மேல்வினைவளையச் செற்று உகந்தான் வெற்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
51
நறவம் நனிமாந்தி நள்ளிருட்கண் ஏனம்இறவி லியங்குவான் பார்த்துக் - குறவர்இரைத்துவலை தைத்திருக்கும் ஈங்கோயே நங்கைவிரைத்துவலைச் செஞ்சடையான் வெற்பு.
சொற்பிரிப்பு
நறவம் நனிமாந்தி நள்ளிருட்கண் ஏனம்இறவில் இயங்குவான் பார்த்துக் – குறவர்இரைத்து வலை தைத்திருக்கும் ஈங்கோயே நங்கைவிரைத் துவலைச் செஞ்சடையான் வெற்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
52
நாக முழைநுழைந்த நாகம்போய் நன்வனத்தில்நாகம் விழுங்க நடுக்குற்று -நாகந்தான்மாக்கையால் மஞ்சுரிக்கும் ஈங்கோயே ஓங்கியசெந்தீக்கையால் ஏந்தி சிலம்பு.
சொற்பிரிப்பு
நாக முழை நுழைந்த நாகம்போய் நன்வனத்தில்நாகம் விழுங்க நடுக்குற்று - நாகந்தான்மாக்கையால் மஞ்சு உரிக்கும் ஈங்கோயே ஓங்கிய செந்தீக்கையால் ஏந்தி சிலம்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
53
நாகங் களிறுநு(ங்)க நல்லுழுவை தாமரையின்ஆகந் தழுவி அசைவெய்த - மேகங்கருவிடைக்க ணீர்சோரும் ஈங்கோயே ஓங்குபொருவிடைக்க ணூர்வான் பொருப்பு.
சொற்பிரிப்பு
நாகம் களிறு நுங்க நல் உழுவை தாமரையின்ஆகம் தழுவி அசைவெய்த – மேகங்கருவிடைக்கண் நீர் சோரும் ஈங்கோயே ஓங்குபொருவிடைக்கண் ஊர்வான் பொருப்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
54
பணவநிலைப் புற்றின் பழஞ்சோற் றமலைகணவ னிடந்திட்ட கட்டி - உணவேண்டிஎண்கங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்வண்கங்கை ஏற்றான் மலை.
சொற்பிரிப்பு
பணவ நிலைப் புற்றின் பழஞ்சோற்றமலைகணவன் இடந்து இட்ட கட்டி – உணவேண்டிஎண்கு அங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்வண்கங்கை ஏற்றான் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
55
பன்றி பருக்கோட்டாற் பாருழுத பைம்புழுதித்தென்றி மணிகிடப்பத் தீயென்று - கன்றிக்கரிவெருவிக் கான்படரும் ஈங்கோயே வானோர்மருவரியான் மன்னும் மலை.
சொற்பிரிப்பு
பன்றி பருக்கோட்டாற் பார் உழுத பைம்புழுதித்தென்றி மணிகிடப்பத் தீயென்று – கன்றிக்கரிவெருவிக் கான்படரும் ஈங்கோயே வானோர்மருவ அரியான் மன்னும் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
56
பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்றுசீறி மருப்பொசித்த செம்முகமாத் - தேறிக்கொண்டெல்லே பிடியென்னும் ஈங்கோயே மூவெயிலும்வில்லே கொடுவெகுண்டான் வெற்பு.
சொற்பிரிப்பு
பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்றுசீறி மருப்பு ஒசித்த செம்முகமாத் – தேறிக்கொண்டுஎல்லே பிடியென்னும் ஈங்கோயே மூவெயிலும்வில்லே கொடு வெகுண்டான் வெற்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
57
பிடிபிரிந்த வேழம் பெருந்திசைதான் கோடிப்படிமுகிலைப் பல்காலும் பார்த்திட் - டிடராஇருமருப்பைக் கைகாட்டும் ஈங்கோயே வானோர்குருவருட்குன் றாய்நின்றான் குன்று.
சொற்பிரிப்பு
பிடிபிரிந்த வேழம் பெருந்திசை தான் கோடிப்படி முகிலைப் பல்காலும் பார்த்திட்டு – இடராஇருமருப்பைக் கைகாட்டும் ஈங்கோயே வானோர்குருவருட் குன்றாய் நின்றான் குன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
58
பொருத கரியின் முரிமருப்பிற் போந்துசொரிமுத்தைத் தூநீரென் றெண்ணிக் - கருமந்திமுக்கிவிக்கி நக்கிருக்கும் ஈங்கோயே மூவெயிலும்திக்குகக்கச் செற்றான் சிலம்பு.
சொற்பிரிப்பு
பொருத கரியின் முரி மருப்பிற் போந்துசொரி முத்தைத் தூநீரென்று எண்ணிக் – கருமந்திமுக்கி விக்கி நக்கிருக்கும் ஈங்கோயே மூவெயிலும்திக்கு உகக்கச் செற்றான் சிலம்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
59
மறவெங் களிற்றின் மருப்புகுத்த முத்தம்குறவர் சிறார்குடங்கைக் கொண்டு - நறவம்இளவெயில்தீ யட்டுண்ணும் ஈங்கோயே மூன்றுவளவெயில்தீ யிட்டான் மலை.
சொற்பிரிப்பு
மற வெங்களிற்றின் மருப்பு உகுத்த முத்தம்குறவர் சிறார் குடங்கைக் கொண்டு – நறவம்இளவெயில் தீயட்டு உண்ணும் ஈங்கோயே மூன்றுவள எயில் தீயிட்டான் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
60
மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணர நோக்கிச்சிலைநுதலி சீறிச் சிலைத்துக் - கலைபிரியஇம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயேமெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு.
சொற்பிரிப்பு
மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணர நோக்கிச்சிலைநுதலி சீறிச் சிலைத்துக் – கலைபிரியஇம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயேமெய்ம்மான் புணர்ந்த கையான் வெற்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
61
மரையதளும் ஆடு மயிலிறகும் வேய்ந்தபுரையிதணம் பூங்கொடியார் புக்கு -நுரைசிறந்தஇன்நறவுண் டாடி இசைமுரலும் ஈங்கோயேபொன்நிறவெண் ணீற்றான் பொருப்பு.
சொற்பிரிப்பு
மரை அதளும் ஆடு மயிலிறகும் வேய்ந்தபுரை இதணம் பூங்கொடியார் புக்கு - நுரைசிறந்தஇன் நறவுண்டு ஆடி இசைமுரலும் ஈங்கோயேபொன்நிற வெண்ணீற்றான் பொருப்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
62
மலையர் கிளிகடிய மற்றப் புறமேகலைகள் வருவனகள் கண்டு -சிலையைஇருந்தெடுத்துக் கோல்தெரியும் ஈங்கோயே மாதைப்புரிந்திடத்துக் கொண்டான் பொருப்பு.
சொற்பிரிப்பு
மலையர் கிளிகடிய மற்று அப்புறமேகலைகள் வருவனகள் கண்டு - சிலையைஇருந்தெடுத்துக் கோல் தெரியும் ஈங்கோயே மாதைப்புரிந்து இடத்துக் கொண்டான் பொருப்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
63
மத்தக் கரிமுகத்தை வாளரிகள் பீறஒளிர்முத்தம் பனிநிகர்க்கும் மொய்ம்பிற்றால் - அத்தகையஏனற் புனம்நீடும் ஈங்கோயே தேங்குபுனல்கூனற் பிறையணிந்தான் குன்று.
சொற்பிரிப்பு
மத்தக் கரிமுகத்தை வாளரிகள் பீற ஒளிர்முத்தம் பனி நிகர்க்கும் மொய்ம்பு இற்றால் – அத்தகையஏனற் புனம் நீடும் ஈங்கோயே தேங்கு புனல்கூனற் பிறையணிந்தான் குன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
64
மந்தி இனங்கள் மணிவரையின் உச்சிமேல்முந்தி இருந்து முறைமுறையே - நந்திஅளைந்தாடி ஆலிக்கும் ஈங்கோயே கூற்றம்வளைந்தோடச் செற்றான் மலை.
சொற்பிரிப்பு
மந்தி இனங்கள் மணிவரையின் உச்சிமேல்முந்தி இருந்து முறைமுறையே – நந்திஅளைந்தாடி ஆலிக்கும் ஈங்கோயே கூற்றம்வளைந்தோடச் செற்றான் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
65
மந்தி மகவினங்கள் வண்பலவின் ஒண்சுளைக்கண்முந்திப் பறித்த முறியதனுள் -சிந்திப்போய்த்தேனாறு பாயுஞ்சீர் ஈங்கோயே செஞ்சடைமேல்வானாறு வைத்தான் மலை.
சொற்பிரிப்பு
மந்தி மகவினங்கள் வண்பலவின் ஒண்சுளைக்கண்முந்திப் பறித்த முறியதனுள் - சிந்திப்போய்த்தேனாறு பாயுஞ்சீர் ஈங்கோயே செஞ்சடைமேல்வானாறு வைத்தான் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
66
முள்ளார்ந்த வெள்ளிலவம் ஏறி வெறியாதுகள்ளார்ந்த பூப்படியும் கார்மயில்தான் - ஒள்ளார்எரிநடுவுட் பெண்கொடியார் ஏய்க்கும்ஈங் கோயேபுரிநெடுநூல் மார்பன் பொருப்பு.
சொற்பிரிப்பு
முள்ளார்ந்த வெள் இலவம் ஏறி வெறியாதுகள்ளார்ந்த பூப்படியும் கார்மயில்தான் – ஒள்ளார்எரி நடுவுள் பெண்கொடியார் ஏய்க்கும் ஈங்கோயேபுரிநெடுநூல் மார்பன் பொருப்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
67
வளர்ந்த இளங்கன்னி மாங்கொம்பின் கொங்கைஅளைந்து வடுப்படுப்பான் வேண்டி - இளந்தென்றல்எல்லிப் புகநுழையும் ஈங்கோயே தீங்கருப்புவில்லிக்குக் கூற்றானான் வெற்பு.
சொற்பிரிப்பு
வளர்ந்த இளங்கன்னி மாங்கொம்பின் கொங்கைஅளைந்து வடுப்படுப்பான் வேண்டி – இளந்தென்றல்எல்லிப் புகநுழையும் ஈங்கோயே தீங்கருப்புவில்லிக்குக் கூற்றானான் வெற்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
68
வான மதிதடவல் உற்ற இளமந்திகான முதுவேயின் கண்ணேறித் - தானங்கிருந்துயரக் கைநீட்டும் ஈங்கோயே நம்மேல்வருந்துயரந் தீர்ப்பான் மலை.
சொற்பிரிப்பு
வான மதிதடவல் உற்ற இளமந்திகான முதுவேயின்கண் ஏறித் – தானங்குஇருந்து உயரக் கைநீட்டும் ஈங்கோயே நம்மேல்வருந்துயரம் தீர்ப்பான் மலை.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
69
வேய்வனத்துள் யானை தினைகவர வேறிருந்துகாய்வனத்தே வேடன் கணைவிசைப்ப - வேயணைத்துமாப்பிடிமுன் ஓட்டும்ஈங் கோயே மறைபரவுபூப்பிடிபொற் றாளான் பொருப்பு.
சொற்பிரிப்பு
வேய்வனத்துள் யானை தினைகவர வேறிருந்துகாய்வனத்தே வேடன் கணைவிசைப்ப – வேயணைத்துமாப்பிடி முன் ஓட்டும் ஈங்கோயே மறை பரவுபூப்பிடி பொற்றாளான் பொருப்பு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
70
வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீமுழுகிய தென் றஞ்சிமுது மந்தி -பழகிஎழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே திங்கட்கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று.
சொற்பிரிப்பு
வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண் தீமுழுகியதென்று அஞ்சி முதுமந்தி - பழகிஎழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே திங்கள்கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.