திருமுறை 11 · 11.010 · 100

கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி

அருளியவர்
நக்கீரதேவ நாயனார்
தலம்
கயிலாயம் (நொடித்தான்மலை)
நாடு
வடநாடு

1

சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமாநல்லிடிஞ்சில் என்னுடைய நாவாகச் -சொல்லரியவெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்தபெண்பாகர்க் கேற்றினேன் பெற்று.
சொற்பிரிப்பு
சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமாநல்இடிஞ்சில் என்னுடைய நாவாகச் - சொல்லரியவெண்பா விளக்கா வியன் கயிலை மேலிருந்தபெண்பாகர்க்கு ஏற்றினேன் பெற்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பெற்ற பயனிதுவே அன்றே பிறந்தியான்கற்றவர்கள் ஏத்துஞ்சீர்க் காளத்திக் - கொற்றவர்க்குத்தோளாகத் தாடரவம் சூழ்ந்தணிந்த அம்மானுக்காளாகப் பெற்றேன் அடைந்து.
சொற்பிரிப்பு
பெற்ற பயன்இதுவே அன்றே பிறந்தியான்கற்றவர்கள் ஏத்தும் சீர்க் காளத்திக் – கொற்றவர்க்குத்தோளாகத்து ஆடு அரவம் சூழ்ந்து அணிந்த அம்மானுக்குஆளாகப் பெற்றேன் அடைந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அடைந்துய்ம்மின் அம்மானை உம்ஆவி தன்னைக்குடைந்துண்ண எண்ணியவெங் கூற்றம் - குடைந்துநும்கண்ணுளே பார்க்கும் பொழுது கயிலாயத்தண்ணலே கண்டீர் அரண்.
சொற்பிரிப்பு
அடைந்து உய்ம்மின் அம்மானை உம் ஆவி தன்னைக்குடைந்து உண்ண எண்ணிய வெங்கூற்று அங்கு – அடைந்து நும்கண்ணுளே பார்க்கும் பொழுது கயிலாயத்துஅண்ணலே கண்டீர் அரண்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அரணம் ஒருமூன்றும் ஆரழலாய் வீழமுரணம்பு கோத்த முதல்வன் சரணமேகாணுமால் உற்றவன்றன் காளத்தி கைதொழுதுபேணுமால் உள்ளம் பெரிது.
சொற்பிரிப்பு
அரணம் ஒருமூன்றும் ஆரழலாய் வீழமுரண் அம்பு கோத்த முதல்வன் – சரணமேகாணுமால் உற்று அவன் தன் காளத்தி கைதொழுதுபேணுமால் உள்ளம் பெரிது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பெரியவர்கா ணீர்என் உள்ளத்தின் பெற்றிதெரிவரிய தேவாதி தேவன் - பெரிதும்திருத்தக்கோர் ஏத்துந் திருக்கயிலைக் கோனைஇருத்தத்தான் போந்த திடம்.
சொற்பிரிப்பு
பெரியவர் காணீர் என் உள்ளத்தின் பெற்றிதெரிவரிய தேவாதி தேவன் – பெரிதும்திருத்தக்கோர் ஏத்தும் திருக்கயிலைக் கோனைஇருத்தத் தான் போந்தது இடம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

இடப்பாகம் நீள்கோட் டிமவான் பயந்தமடப்பாவை தன்வடிவே ஆனால் - விடப்பாற்கருவடிசேர் கண்டத்தெங் காளத்தி ஆள்வார்க்கொருவடிவே அன்றால் உரு.
சொற்பிரிப்பு
இடப்பாகம் நீள்கோட்டு இமவான் பயந்தமடப்பாவை தன்வடிவே ஆனால் – விடப்பால்கருவடிசேர் கண்டத்து எம் காளத்தி ஆள்வார்க்குஒருவடிவே அன்றால் உரு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

உருவு பலகொண் டுணர்வரிதாய் நிற்கும்ஒருவன் ஒருபால் இருக்கை - மருவினியபூக்கையிற் கொண் டெப்பொழுதும் புத்தேளிர் வந்திறைஞ்சுமாக்கயிலை என்னும் மலை.
சொற்பிரிப்பு
உருவு பலகொண்டு உணர்வரிதாய் நிற்கும்ஒருவன் ஒருபால் இருக்கை – மருவினியபூக்கையில் கொண்டு எப்பொழுதும் புத்தேளிர் வந்திறைஞ்சும்மாக்கயிலை என்னும் மலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மலைவரும்போல் வானவருந் தானவரும் எல்லாம்அலைகடல்வாய் நஞ்செழல்கண் டஞ்சி -நிலைதளரக்கண்டமையால் நண்சாரல் காளத்தி ஆள்வார்நஞ்சுண்டமையால் உண்டிவ் வுலகு.
சொற்பிரிப்பு
மலை வரும்போல் வானவரும் தானவரும் எல்லாம்அலைகடல்வாய் நஞ்செழல் கண்டு அஞ்சி – நிலை தளரக்கண்டமையால் தண்சாரல் காளத்தி ஆள்வார் நஞ்சுஉண்டமையால் உண்டு இவ்வுலகு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

உலகம் அனைத்தினுக்கும் ஒண்ணுதல்மேல் இட்டதிலகம் எனப்பெறினுஞ் சீசீ - இலகியசீர்ஈசா திருக்கயிலை எம்பெருமான் என்றென்றேபேசா திருப்பார் பிறப்பு.
சொற்பிரிப்பு
உலகம் அனைத்தினுக்கும் ஒண்ணுதல் மேல் இட்டதிலகம் எனப்பெறினும் சீசீ – இலகியசீர்ஈசா திருக்கயிலை எம்பெருமான் என்றென்றேபேசாதிருப்பார் பிறப்பு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பிறப்புடையர் கற்றோர் பெருஞ்செல்வர் மற்றும்சிறப்புடையர் ஆனாலுஞ் சீசீ - இறப்பில்கடியார் நறுஞ்சோலைக் காளத்தி யாள்வார்அடியாரைப் பேணா தவர்.
சொற்பிரிப்பு
பிறப்புடையர் கற்றோர் பெருஞ்செல்வர் மற்றும்சிறப்புடையர் ஆனாலும் சீசீ – இறப்பில்கடியார் நறுஞ்சோலைக் காளத்தியாள்வார்அடியாரைப் பேணாதவர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

அவரும் பிறந்தவராய்ப் போவார்கொல் ஆவிஎவரும் தொழுதேத்தும் எந்தை - சிவமன்னுதேக்குவார் சோலைத் திருக்கயிலை ஏத்தாதேபோக்குவார் வாளா பொழுது.
சொற்பிரிப்பு
அவரும் பிறந்தவராய்ப் போவார்கொல் ஆவிஎவரும் தொழுதேத்தும் எந்தை – சிவம் மன்னுதேக்குவார் சோலைத் திருக்கயிலை ஏத்தாதேபோக்குவார் வாளா பொழுது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்கேளார்கொல் அந்தோ கிறிபட்டார் - கீளாடைஅண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுள்நின்றகண்ணப்ப ராவார் கதை.
சொற்பிரிப்பு
வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்கேளார்கொல் அந்தோ கிறிபட்டார் – கீளாடைஅண்ணற்கு அணுக்கராய்க் காளத்தியுள் நின்றகண்ணப்பராவார் கதை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

கதையிலே கேளீர் கயிலாயம் நோக்கிப்புதையிருட்கண் மாலோடும் போகிச் - சிதையாச்சீர்த்தீர்த்தன்பால் பாசுபதம் பெற்றுச் செருக்களத்தில்பார்த்தன்போர் வென்றிலனோ பண்டு.
சொற்பிரிப்பு
கதையிலே கேளீர் கயிலாயம் நோக்கிப்புதை இருட்கண் மாலோடும் போகிச் – சிதையாச் சீர்த்தீர்த்தன்பால் பாசுபதம் பெற்றுச் செருக்களத்தில்பார்த்தன் போர் வென்றிலனோ பண்டு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

பண்டு தொடங்கியும் பாவித்தும் நின்கழற்கேதொண்டு படுவான் தொடர்வேனைக் - கண்டுகொண்டுஆளத் தயாவுண்டோ இல்லையோ சொல்லாயேகாளத்தி யாய்உன் கருத்து.
சொற்பிரிப்பு
பண்டு தொடங்கியும் பாவித்தும் நின்கழற்கேதொண்டு படுவான் தொடர்வேனைக் – கண்டுகொண்டுஆளத் தயாவுண்டோ இல்லையோ சொல்லாயேகாளத்தியாய் உன் கருத்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

கருத்துக்குச் சேயையாய்க் காண்தக்கோர் காணஇருத்தி திருக்கயிலை என்றால் - ஒருத்தர்அறிவான் உறுவார்க் கறியுமா றுண்டோநெறிவார் சடையாய் நிலை.
சொற்பிரிப்பு
கருத்துக்குச் சேயையாய்க் காண்தக்கோர் காணஇருத்தி திருக்கயிலை என்றால் – ஒருத்தர்அறிவான் உறுவார்க் கறியுமாறு உண்டோநெறிவார் சடையாய் நிலை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

நிலையிற் பிறவி நெடுஞ்சுழியிற் பட்டுத்தலைவ தடுமாறு கின்றேன் - தொலைவின்றிப்போந்தேறக் கைதாராய் காளத்திப் புத்தேளிர்வேந்தேஇப் பாசத்தை விட்டு.
சொற்பிரிப்பு
நிலையில் பிறவி நெடுஞ்சுழியில் பட்டுத்தலைவ தடுமாறுகின்றேன் – தொலைவின்றிப்போந்தேறக் கைதாராய் காளத்திப் புத்தேளிர்வேந்தே இப்பாசத்தை விட்டு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

பாசத்தை விட்டுநின் பாதத்தின் கீழேஎன்நேசத்தை வைக்க நினைகண்டாய் - பாசத்தைநீக்குமா வல்ல கயிலாயா நீஎன்னைக்காக்குமா றித்தனையே காண்.
சொற்பிரிப்பு
பாசத்தை விட்டு நின் பாதத்தின் கீழே என்நேசத்தை வைக்க நினைகண்டாய் – பாசத்தைநீக்குமா வல்ல கயிலாயா நீ என்னைக்காக்குமாறு இத்தனையே காண்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

காணா தலக்கின்றார் வானோர்கள் காளத்திப்பூணார மார்பன்தன் பொற்பாதம் - நாணாதேகண்டிடுவான் யானிருந்தேன் காணீர் கடல்நஞ்சைஉண்டிடுவான் தன்னை ஒருங்கு.
சொற்பிரிப்பு
காணாது அலக்கின்றார் வானோர்கள் காளத்திப்பூண் ஆரமார்பன் தன் பொற்பாதம் – நாணாதேகண்டிடுவான் யானிருந்தேன் காணீர் கடல்நஞ்சைஉண்டிடுவான் தன்னை ஒருங்கு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

ஒருங்கா துடனேநின் றோரைவர் எம்மைநெருங்காமல் நித்தம் ஒருகால் -நெருங்கிக்கருங்கலோங் கும்பல் கயிலாயம் மேயான்வருங்கொலோ நம்பால் மதித்து.
சொற்பிரிப்பு
ஒருங்காது உடனே நின்று ஓர் ஐவர் எம்மைநெருங்காமல் நித்தம் ஒருகால் - நெருங்கிக்கருங்கல் ஓங்கு உம்பல் கயிலாயம் மேயான்வருங்கொலோ நம்பால் மதித்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதேவம்பார் மலர்தூய் வணங்காதே - நம்பாநின்சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன்காலங்கள் போன கழிந்து.
சொற்பிரிப்பு
நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதேவம்பார் மலர் தூய் வணங்காதே – நம்பா நின்சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன்காலங்கள் போன கழிந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

கழிந்த கழிகிலாய் நெஞ்சே கழியாதொழிந்தநாள் மேற்பட் டுயர்ந்தோர் - மொழிந்தசீர்க்கண்ணுதலான் எந்தை கயிலாய மால்வரையைநண்ணுதலாம் நன்மை நமக்கு.
சொற்பிரிப்பு
கழிந்த கழிகிலாய் நெஞ்சே கழியாதுஒழிந்தநாள் மேற்பட்டு உயர்ந்தோர் – மொழிந்தசீர்க்கண்ணுதலான் எந்தை கயிலாய மால்வரையைநண்ணுதலாம் நன்மை நமக்கு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால் நம்பர்தமக்கழகு தாமே அறிவர் -அமைப்பொதும்பிற்கல்லவா நீடருவிக் காளத்தி ஆள்வாரைவல்லவா நெஞ்சமே வாழ்த்து.
சொற்பிரிப்பு
நமக்கிசைந்தவா நாமும் ஏத்தினால் நம்பர்தமக்கு அழகு தாமே அறிவர் - அமைப்பொதும்பின்‘கல்’லவாம் நீடு அருவிக் காளத்தி ஆள்வாரைவல்லவா நெஞ்சமே வாழ்த்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

வாழ்த்துவாய் வாழ்த்தா தொழிவாய் மறுசுழியிட்டாழ்த்துவாய் அஃதறிவாய் நீயன்றே - யாழ்த்தகையவண்டார் பொழிற்கயிலை வாழ்கென் றிருப்பதேகண்டாய் அடியேன் கடன்.
சொற்பிரிப்பு
வாழ்த்துவாய் வாழ்த்தாது ஒழிவாய் மறுசுழியிட்டுஆழ்த்துவாய் அஃதறிவாய் நீயன்றே – யாழ்த்தகையவண்டார் பொழிற்கயிலை வாழ்க என்றிருப்பதேகண்டாய் அடியேன் கடன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

கடநாகம் ஊடாடுங் காளத்திக் கோனைக்கடனாகக் கைதொழுவார்க் கில்லை - இடம்நாடிஇந்நாட்டிற் கேவந்திங் கீண்டிற்றுக் கொண்டுபோய்அந்நாட்டில் உண்டுழலு மாறு.
சொற்பிரிப்பு
கடநாகம் ஊடாடும் காளத்திக் கோனைக்கடனாகக் கைதொழுவார்க்கு இல்லை – இடம் நாடிஇந்நாட்டிற்கே வந்து இங்கு ஈண்டிற்றுக் கொண்டுபோய்அந்நாட்டில் உண்டு உழலுமாறு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

மாறிப் பிறந்து வழியிடை ஆற்றிடைஏறி இழியும் இதுவல்லால் -தேறித்திருக்கயிலை ஏத்தீரேல் சேமத்தால் யார்க்கும்இருக்கையிலை கண்டீர் இனிது.
சொற்பிரிப்பு
மாறிப் பிறந்து வழியிடை ஆற்றிடைஏறி இழியும் இதுவல்லால் - தேறித்திருக்கயிலை ஏத்தீரேல் சேமத்தால் யார்க்கும்இருக்கை இலை கண்டீர் இனிது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

இனிதே பிறவி இனமரங்கள் ஏறிக்கனிதேர் கடுவன்கள் தம்மில் -முனிவாய்ப்பிணங்கிவருந் தண்சாரற் காளத்தி பேணிவணங்கவல்ல ராயின் மகிழ்ந்து.
சொற்பிரிப்பு
இனிதே பிறவி இனமரங்கள் ஏறிக்கனிதேர் கடுவன்கள் தம்மில் - முனிவாய்ப்பிணங்கிவரும் தண்சாரல் காளத்தி பேணிவணங்க வல்லராயின் மகிழ்ந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

மகிழ்ந்தலரும் வண்கொன்றை மேலே மனமாய்நெகிழ்ந்து நெகிழ்ந்துள்ளே நெக்குத் - திகழ்ந்திலங்கும்விண்ணிறங்கா ஓங்கும் வியன்கயிலை மேயாய்என்பெண்ணுறங்காள் என்செய்கேன் பேசு.
சொற்பிரிப்பு
மகிழந்தலரும் வன்கொன்றை மேலே மனமாய்நெகிழ்ந்து நெகிழ்ந்துள்ளே நெக்குத் – திகழ்ந்திலங்கும்விண் உறங்கா ஓங்கும் வியன்கயிலை மேயாய் என்பெண் உறங்காள் என் செய்கேன் பேசு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

பேசும் பரிசறியாள் பேதை பிறர்க்கெல்லாம்ஏசும் பரிசானாள் ஏபாவம் - மாசுனைநீர்க்காம்பையலைத் தாலிக்குங் காளத்தி என்றென்றுபூம்பயலை மெய்ம்முழுதும் போர்த்து.
சொற்பிரிப்பு
பேசும் பரிசறியாள் பேதை பிறர்க்கெல்லாம்ஏசும் பரிசானாளே பாவம் – மாசுனை நீர்க்காம்பையலைத் தாலிக்கும் காளத்தி என்றென்றுபூம்பயலை மெய்ம்முழுதும் போர்த்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

போர்த்த களிற்றுரியும் பூண்ட பொறியரவும்தீர்த்த மகளிருந்த செஞ்சடையும் - மூர்த்திகுயிலாய மென்மொழியாள் கூறாய வாறும்கயிலாயா யான்காணக் காட்டு.
சொற்பிரிப்பு
போர்த்த களிற்று உரியும் பூண்ட பொறியரவும்தீர்த்த மகளிருந்த செஞ்சடையும் – மூர்த்திகுயிலாய மென்மொழியாள் கூறாயவாறும்கயிலாயா யான் காணக் காட்டு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

காட்டில் நடமாடிக் கங்காள ராகிப்போய்நாட்டிற் பலிதிரிந்து நாடோறும் - ஓட்டுண்பார்ஆனாலும் என்கொலோ காளத்தி ஆள்வாரைவானோர் வணங்குமா வந்து.
சொற்பிரிப்பு
காட்டில் நடமாடிக் கங்காளராகிப் போய்நாட்டில் பலிதிரிந்து நாடோறும் – ஓட்டுண்பார்ஆனாலும் என்கொலோ காளத்தி ஆள்வாரைவானோர் வணங்குமா வந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

வந்தமரர் ஏத்தும் மடைக்கூழும் வார்சடைமேல்கொந்தவிழும் மாலை கொடுத்தார்கொல் - வந்தித்துவாலுகுத்த வண்கயிலைக் கோனார்தம் மாமுடிமேல்பாலுகுத்த மாணிக்குப் பண்டு.
சொற்பிரிப்பு
வந்தமரர் ஏத்தும் மடைக்கூழும் வார்சடைமேல்கொந்தவிழும் மாலை கொடுத்தார்கொல் – வந்தித்துவால்உகுத்த வண்கயிலைக் கோமான் மாமுடிமேல்பால்உகுத்த மாணிக்குப் பண்டு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

பண்டிதுவே அன்றாயிற் கேளீர்கொல் பல்சருகுகொண்டிலங்கத் தும்பிநூற் கூடிழைப்பக் - கண்டுநலந்திக் கெலாம்ஏத்தும் காளத்தி நாதர்சிலந்திக்குச் செய்த சிறப்பு.
சொற்பிரிப்பு
பண்டிதுவே அன்றாகில் கேளீர்கொல் பல்சருகுகொண்டிலங்கத் தும்பி நூற் கூடிழைப்பக் – கண்டுநலந் திக்கெலாம் ஏத்தும் காளத்தி நாதர்சிலந்திக்குச் செய்த சிறப்பு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

செய்த சிறப்பெண்ணில் எங்குலக்குஞ் சென்றடைந்துகைதொழுவார்க் கெங்கள் கயிலாயர் -நொய்தளவிற்காலற்காய்ந் தார்அன்றே காணீர் கழல்தொழுதபாலற்காய் அன்று பரிந்து.
சொற்பிரிப்பு
செய்த சிறப்பு எண்ணில் எங்கு உலக்கும் சென்றடைந்துகைதொழுவார்க்கு எந்தை கயிலாயர் - நொய்தளவில்காலற்காய்ந்தார் அன்றே காணீர் கழல்தொழுதபாலற்காய் அன்று பரிந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

பரிந்துரைப்பார் சொற்கேளாள் எம்பெருமான் பாதம்பிரிந்திருக்க கில்லாமை பேசும் - புரிந்தமரர்நாதாவா காளத்தி நம்பாவா என்றென்றுமாதாவா உற்ற மயல்.
சொற்பிரிப்பு
பரிந்துரைப்பார் சொற்கேளாள் எம்பெருமான் பாதம்பிரிந்திருக்க கில்லாமை பேசும் – புரிந்தமரர்நாதா வா காளத்தி நம்பா வா என்றென்றுமாது ஆஆ உற்ற மயல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

மயலைத் தவிர்க்கநீ வாராய் ஒருமூன்றெயிலைப் பொடியாக எய்தாய் - கயிலைப்பருப்பதவா நின்னுடைய பாதத்தின் கீழேஇருப்பதவா உற்றாள் இவள்.
சொற்பிரிப்பு
மயலைத் தவிர்க்க நீ வாராய் ஒருமூன்றுஎயிலைப் பொடியாக எய்தாய் – கயிலைப்பருப்பதவா நின்னுடைய பாதத்தின் கீழேஇருப்பது அவா உற்றாள் இவள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

இவளுக்கு நல்லவா றெண்ணுதிரேல் இன்றேதவளப் பொடிஇவள்மேற் சாத்தி - இவளுக்குக்காட்டுமின்கள் காளத்தி காட்டிக் கமழ்கொன்றைசூட்டுமின்கள் தீரும் துயர்.
சொற்பிரிப்பு
இவளுக்கு நல்லவாறு எண்ணுதிரேல் இன்றேதவளப் பொடி இவள் மேற்சாத்தி – இவளுக்குக்காட்டுமின்கள் காளத்தி காட்டிக் கமழ்கொன்றைசூட்டுமின்கள் தீரும் துயர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

துயர்க்கெலாம் கூடாய தோற்குரம்பை புக்குமயக்கில் வழிகாண மாட்டேன் - வியற்கொடும்போர்ஏற்றானே வண்கயிலை எம்மானே என்கொலோமேற்றான் இதற்கு விளைவு.
சொற்பிரிப்பு
துயர்க்கெலாம் கூடாய தோற்குரம்பை புக்குமயக்கில் வழிகாண மாட்டேன் – வியற்கொடும் போர்ஏற்றானே வண்கயிலை எம்மானே என்கொலோமேற்றான் இதற்கு விளைவு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

38

விளையும் வினையரவின் வெய்ய விடத்தைக்களைமினோ காளத்தி ஆள்வார்- வளைவில்திருந்தியசீர் ஈசன் திருநாமம் என்னும்மருந்தினைநீர் வாயிலே வைத்து.
சொற்பிரிப்பு
விளையும் வினையரவின் வெய்ய விடத்தைக்களைமினோ காளத்தி ஆள்வார் - வளைவில்திருந்திய சீர் ஈசன் திருநாமம் என்னும்மருந்தினை நீர் வாயிலே வைத்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

39

வாயிலே வைக்கும் அளவில் மருந்தாகித்தீய பிறவிநோய் தீர்க்குமே - தூயவேகம்பெருமா தேவியொடு மன்னு கயிலாயத்தெம்பெருமான் ஓரஞ் செழுத்து.
சொற்பிரிப்பு
வாயிலே வைக்கும் அளவில் மருந்தாகித்தீய பிறவிநோய் தீர்க்குமே – தூய ஏகம் பெருமாதேவியொடு மன்னு கயிலாயத்துஎம்பெருமான் ஓர் அஞ்செழுத்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

40

அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைகள் ஆவனவும்அஞ்செழுத்துங் கற்க அணித்தாகும் - நஞ்சவித்தகாளத்தி யார்யார்க்குங் காண்டற் கரிதாய்ப்போய்நீளத்தே நின்ற நெறி.
சொற்பிரிப்பு
அஞ்செழுத்தும் கண்டீர் அருமறைகள் ஆவனவும்அஞ்செழுத்தும் கற்க அணித்தாகும் – நஞ்சவித்தகாளத்தியார் யார்க்கும் காண்டற்கு அரிதாய்ப்போய்நீளத்தே நின்ற நெறி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

41

நெறிவார் சடையாய் நிலையின்மை நீயொன்றறியாய் கொல் அந்தோ அயர்ந்தாள் - நெறியிற்கனைத்தருவி தூங்குங் கயிலாயா நின்னைநினைத்தருவி கண்சோர நின்று.
சொற்பிரிப்பு
நெறிவார் சடையாய் நிலையின்மை நீயொன்றுஅறியாய் கொல் அந்தோ அயர்ந்தாள் – நெறியில்கனைத்து அருவி தூங்கும் கயிலாயா நின்னைநினைத்து அருவி கண்சோர நின்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

42

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்யாம்என்றும் நினைந்தாலும் என்கொலோ -சென்றுதன்தாள்வா னவர்இறைஞ்சுந் தண்சாரற் காளத்திஆள்வான் அருளாத வாறு.
சொற்பிரிப்பு
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் யாம்என்றும் நினைந்தாலும் என்கொலோ - சென்றுதன்தாள் வானவர் இறைஞ்சும் தண்சாரல் காளத்திஆள்வான் அருளாதவாறு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

43

அருளாத வாறுண்டே யார்க்கேனும் ஆகஇருளார் கறைமிடற்றெம் ஈசன் -பொருளாய்ந்துமெய்ம்மையே உன்னில் வியன்கயிலை மேயான்வந்திம்மையே தீர்க்கும் இடர்.
சொற்பிரிப்பு
அருளாதவாறு உண்டே யார்க்கேனும் ஆகஇருளார் கறைமிடற்று எம் ஈசன் - பொருள் ஆய்ந்துமெய்ம்மையே உன்னில் வியன்கயிலை மேயான் வந்துஇம்மையே தீர்க்கும் இடர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

44

இடரீர் உமக்கோர் இடம்நாடிக் கொண்டுநடவீரோ காலத்தால் நாங்கள் - கடல்வாய்க்கருப்பட்டோங் கொண்முகில்சேர் காளத்தி காணஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து.
சொற்பிரிப்பு
இடரீர் உமக்கோர் இடம் நாடிக்கொண்டுநடவீரோ காலத்தால் நாங்கள் – கடல்வாய்க்கருப்பட்டு ஓங்கு ஒண்முகில்சேர் காளத்தி காணஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

45

உணருங்கால் ஒன்றை உருத்தெரியக் காட்டாய்புணருங்கால் ஆரமுதே போலும் - இணரிற்கனியவாஞ் சோலைக் கயிலாயம் மேயாய்இனியவா காண்நின் இயல்பு.
சொற்பிரிப்பு
உணருங்கால் ஒன்றை உருத்தெரியக் காட்டாய்புணருங்கால் ஆரமுதே போலும் – இணரில்கனியவாம் சோலைக் கயிலாயம் மேயாய்இனியவா காண் நின் இயல்பு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

46

நின்னியல்பை யாரே அறிவார் நினையுங்கால்மன்னியசீர்க் காளத்தி மன்னவனே - நின்னில்வெளிப்படுவ தேழுலகும் மீண்டே ஒருகால்ஒளிப்பதுவும் ஆனால் உரை.
சொற்பிரிப்பு
நின்னியல்பை யாரே அறிவார் நினையுங்கால்மன்னியசீர்க் காளத்தி மன்னவனே – நின்னில்வெளிப்படுவது ஏழுலகும் மீண்டே ஒருகால்ஒளிப்பதுவும் ஆனால் உரை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

47

உரையும் பொருளும் உடலும் உயிரும்விரையும் மலரும்போல் விம்மிப் -புரையின்றிச்சென்றவா றோங்குந் திருக்கயிலை எம்பெருமான்நின்றவா றெங்கும் நிறைந்து.
சொற்பிரிப்பு
உரையும் பொருளும் உடலும் உயிரும்விரையும் மலரும்போல் விம்மிப் - புரையின்றிச்சென்றவாறு ஓங்கும் திருக்கயிலை எம்பெருமான்நின்றவாறு எங்கும் நிறைந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

48

நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும் ஒன்றின்மறைந்தைம் புலன்காண வாராய் - சிறந்தகணியாருந் தண்சாரற் காளத்தி ஆள்வாய்பணியாயால் என்முன் பரிசு.
சொற்பிரிப்பு
நிறைந்து எங்கும் நீயேயாய் நின்றாலும் ஒன்றின்மறைந்து ஐம்புலன் காண வாராய் – சிறந்தகணியாரும் தண்சாரல் காளத்தி ஆள்வாய்பணியாயால் என்முன் பரிசு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

49

பரிசறியேன் பற்றிலேன் கற்றிலேன் முற்றும்கரியுரியாய் பாதமே கண்டாய் - திரியும்புரம்மாளச் செற்றவனே பொற்கயிலை மன்னும்பரமா அடியேற்குப் பற்று.
சொற்பிரிப்பு
பரிசறியேன் பற்றிலேன் கற்றிலேன் முற்றும்கரியுரியாய் பாதமே கண்டாய் – திரியும்புரம்மாளச் செற்றவனே பொற்கயிலை மன்னும்பரமா அடியேற்குப் பற்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

50

பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியேமுற்றாவெண் திங்கள் முளைசூடி -வற்றாவாங்கங்கைசேர் செஞ்சடையான் காளத்தி யுள்நின்றமங்கைசேர் பாகத்து மன்.
சொற்பிரிப்பு
பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியேமுற்றாவெண் திங்கள் முளைசூடி - வற்றாவாம்கங்கைசேர் செஞ்சடையான் காளத்தியுள் நின்றமங்கைசேர் பாகத்து மன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

51

மன்னா கயிலாயா மாமுத்தம் மாணிக்கம்பொன்னார மாக்கொண்டு பூணாதே - எந்நாளும்மின்செய்வார் செஞ்சடையாய் வெள்ளெலும்பு பூண்கின்றதென்செய்வான் எந்தாய் இயம்பு.
சொற்பிரிப்பு
மன்னா கயிலாயா மாமுத்தம் மாணிக்கம்பொன்னாரமாக் கொண்டு பூணாதே – எந்நாளும்மின்செய் வார் செஞ்சடையாய் வெள் எலும்பு பூண்கின்றதுஎன்செய்வான் எந்தாய் இயல்பு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

52

இயம்பாய் மடநெஞ்சே ஏனோர்பால் என்னபயம்பார்த்துப் பற்றுவான் உற்றாய் - புயம்பாம்பால்ஆர்த்தானே காளத்தி அம்மானே என்றென்றேஏத்தாதே வாளா இருந்து.
சொற்பிரிப்பு
இயம்பாய் மடநெஞ்சே ஏனோர்பால் என்னபயம்பார்த்துப் பற்றுவான் உற்றாய் – புயம்பாம்பால்ஆர்த்தானே காளத்தி அம்மானே என்றென்றேஏத்தாதே வாளா இருந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

53

இருந்தவா காணீர் இதுவென்ன மாயம்அருந்தண் கயிலாயத் தண்ணல் - வருந்திப்போய்த்தான்நாளும் பிச்சை புகும்போலும் தன்னடியார்வான்ஆள மண்ஆள வைத்து.
சொற்பிரிப்பு
இருந்தவா காணீர் இதுவென்ன மாயம்அருந்தண் கயிலாயத்து அண்ணல் – வருந்திப்போய்த்தான் நாளும் பிச்சை புகும் போலும் தன்னடியார்வான்ஆள மண்ஆள வைத்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

54

வைத்த இருநிதியே என்னுடைய வாழ்முதலேநித்திலமே காளத்தி நீள்சுடரே - மொய்த்தொளிசேர்அக்காலத் தாசை அடிநாயேன் காணுங்கால்எக்காலத் தெப்பிறவி யான்.
சொற்பிரிப்பு
வைத்த இருநிதியே என்னுடைய வாழ்முதலேநித்திலமே காளத்தி நீள்சுடரே – மொய்த்துஒளிசேர்அக்காலத்து ஆசை அடிநாயேன் காணுங்கால்எக்காலத்து எப்பிறவி யான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

55

யானென்று தானென் றிரண்டில்லை என்பதனையானென்றுங் கொண்டிருப்பன் ஆனாலும் - தேனுண்டளிகள்தாம் பாடும் அகன்கயிலை மேயான்தெளிகொடான் மாயங்கள் செய்து.
சொற்பிரிப்பு
யானென்று தானென்று இரண்டில்லை என்பதனையானென்றும் கொண்டிருப்பன் ஆனாலும் – தேனுண்டுஅளிகள்தாம் பாடும் அகன்கயிலை மேயான்தெளிகொடான் மாயங்கள் செய்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

56

மாயங்கள் செய்தைவர் சொன்ன வழிநின்றுகாயங்கொண் டாடல் கணக்கன்று -காயமேநிற்பதன் றாதலாற் காளத்தி நின்மலன்சீர்கற்பதே கண்டீர் கணக்கு.
சொற்பிரிப்பு
மாயங்கள் செய்து ஐவர் சொன்ன வழிநின்றுகாயங் கொண்டாடல் கணக்கன்று - காயமேநிற்பதன்று ஆதலால் காளத்தி நின்மலன்சீர்கற்பதே கண்டீர் கணக்கு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

57

கணக்கிட்டுக் கொண்டிருந்து காலனார் நம்மைவணக்கி வலைப்படா முன்னம் - பிணக்கின்றிக்காலத்தால் நெஞ்சே கயிலாயம் மேவியநற்சூலத்தான் பாதந் தொழு.
சொற்பிரிப்பு
கணக்கிட்டுக் கொண்டிருந்து காலனார் நம்மைவணக்கி வலைப்படா முன்னம் – பிணக்கின்றிக்காலத்தால் நெஞ்சே கயிலாயம் மேவியநல்சூலத்தான் பாதம் தொழு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

58

தொழுவாள் பெறாளேதன் தோள்வளையுந் தோற்றாள்மழுவாளன் காளத்தி வாழ்த்தி - எழுவாள்நறுமா மலர்க்கொன்றை நம்முன்னே நாளைப்பெறுமாறு காணீர்என் பெண்.
சொற்பிரிப்பு
தொழுவாள் பெறாளே தன் தோள்வளையும் தோற்றாள்மழுவாளன் காளத்தி வாழ்த்தி – எழுவாள்நறுமா மலர்க்கொன்றை நம் முன்னே நாளைப்பெறுமாறு காணீர் என் பெண்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

59

பெண்ணின் றயலார்முன் பேதை பிறைசூடிகண்ணின்ற நெற்றிக் கயிலைக்கோன் - உண்ணின்றகாமந்தான் மீதூர நைவாட்குன் கார்க்கொன்றைத்தாமந்தா மற்றிவளைச் சார்ந்து.
சொற்பிரிப்பு
பெண் இன்று அயலார் முன் பேதை பிறைசூடிகண் நின்ற நெற்றிக் கயிலைக்கோன் – உண்ணின்றகாமந்தான் மீதூர நைவாட்கு உன் கார்க்கொன்றைத்தாமந் தா மற்றிவளைச் சார்ந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

60

சார்ந்தாரை எவ்விடத்துங் காப்பனவுஞ் சார்ந்தன்புகூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவும் -கூர்ந்துள்ளேமூளத் தியானிப்பார் முன்வந்து நிற்பனவும்காளத்தி யார்தம் கழல்.
சொற்பிரிப்பு
சார்ந்தாரை எவ்விடத்தும் காப்பனவும் சார்ந்தன்புகூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவும் - கூர்ந்துள்ளேமூளத் தியானிப்பார் முன்வந்து நிற்பனவும்காளத்தியார் தம் கழல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

61

தங்கழல்கள் ஆர்ப்ப விளக்குச் சலன்சலனென்றங்கழல்கள் ஆர்ப்ப அனலேந்திப் - பொங்ககலத்தார்த்தா டரவம் அகன்கயிலை மேயாய்நீகூத்தாடல் மேவியவா கூறு.
சொற்பிரிப்பு
தங்கழல்கள் ஆர்ப்ப விளக்குச் சலன்சலனென்றுஅங்கழல்கள் ஆர்ப்ப அனலேந்திப் – பொங்கு அகலத்துஆர்த்தாடுஅரவம் அகன்கயிலை மேயாய் நீகூத்தாடல் மேவியவா கூறு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

62

கூறாய்நின் பொன்வாயால் கோலச் சிறுகிளியேவேறாக வந்திருந்து மெல்லனவே - நீல் தாவுமஞ்சடையும் நீள்குடுமி வாளருவிக் காளத்திச்செஞ்சடைஎம் ஈசன் திறம்.
சொற்பிரிப்பு
கூறாய் நின் பொன்வாயால் கோலச் சிறுகிளியேவேறாக வந்திருந்து மெல்லனவே – நீல் தாவும்மஞ்சுஅடையும் நீள்குடுமி வாள்அருவிக் காளத்திச்செஞ்சடை எம் ஈசன் திறம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

63

ஈசன் திறமே நினைந்துருகும் எம்மைப்போல்மாசில் நிறத்த மடக்குருகே - கூசிஇருத்தியால் நீயும் இருங்கயிலை மேயாற்கருத்தியாய்க் காமுற்றா யாம்.
சொற்பிரிப்பு
ஈசன் திறமே நினைந்துருகும் எம்மைப்போல்மாசில் நிறத்த மடக்குருகே – கூசிஇருத்தியால் நீயும் இருங்கயிலை மேயாற்குஅருத்தியாய்க் காமுற்றாயாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

64

காமுற்றா யாம்அன்றே காளத்தி யான்கழற்கேயாமுற்ற துற்றாய் இருங்கடலே - யாமத்துஞாலத் துயிரெல்லாங் கண்துஞ்சும் நள்ளிருள்கூர்காலத்துந் துஞ்சாதுன் கண்.
சொற்பிரிப்பு
காமுற்றாயாம் அன்றே காளத்தியான் கழற்கேயாம் உற்றது உற்றாய் இருங்கடலே – யாமத்துஞாலத்து உயிரெல்லாம் கண்துஞ்சும் நள்ளிருள்கூர்காலத்தும் துஞ்சாது உன் கண்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

65

கண்ணுங் கருத்துங் கயிலாய ரேஎமக்கென்றெண்ணி இருப்பன்யான் எப்பொழுதும் - நண்ணும்பொறியா டரவசைத்த பூதப் படையார்அறியார்கொல் நெஞ்சே அவர்.
சொற்பிரிப்பு
கண்ணும் கருத்தும் கயிலாயரே எமக்கென்றுஎண்ணி இருப்பன் யான் எப்பொழுதும் – நண்ணும்பொறியாடு அரவசைத்த பூதப் படையார்அறியார்கொல் நெஞ்சே அவர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

66

நெஞ்சே அவர்கண்டாய் நேரே நினைவாரைஅஞ்சேல்என் றாட்கொண் டருள் செய்வார் - நஞ்சேயும்கண்டத்தார் காளத்தி ஆள்வார் கழல்கண்டீர்அண்டத்தார் சூடும் அலர்.
சொற்பிரிப்பு
நெஞ்சே அவர்கண்டாய் நேரே நினைவாரைஅஞ்சேல் என்று ஆட்கொண்டருள் செய்வார் – நஞ்சுஏயும்கண்டத்தார் காளத்தி ஆள்வார் கழல்கண்டீர்அண்டத்தார் சூடும் அலர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

67

அலரோன் நெடுமால் அமரர்கோன் மற்றும்பலராய்ப் படைத்துக் காத் தாண்டு - புலர்காலத்தொன்றாகி மீண்டு பலவாகி நிற்கின்றான்குன்றாத சீர்க்கயிலைக் கோ.
சொற்பிரிப்பு
அலரோன் நெடுமால் அமரர்கோன் மற்றும்பலராய்ப் படைத்துக் காத்தாண்டு – புலர்காலத்துஒன்றாகி மீண்டு பலவாகி நிற்கின்றான்குன்றாத சீர்க்கயிலைக் கோ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

68

கோத்த மலர்வாளி கொண் டநங்கன் காளத்திக்கூத்தன்மேல் அன்று குறித்தெய்யப் - பார்த்தலுமேபண்பொழியாக் கோபத்தீச் சுற்றுதலும் பற்றற்றுவெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து.
சொற்பிரிப்பு
கோத்த மலர்வாளி கொண்டு அநங்கன் காளத்திக்கூத்தன் மேல் அன்று குறித்தெய்யப் – பார்த்தலுமேபண்பு ஒழியாக் கோபத்தீச் சுற்றுதலும் பற்றற்றுவெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

69

வெந்திறல்வேல் பார்த்தற் கருள்செய்வான் வேண்டிஓர்செந்தறுகண் கேழல் திறம்புரிந்து -வந்தருளும்கானவனாம் கோலமியான் காணக் கயிலாயாவானவர்தங் கோமானே வா.
சொற்பிரிப்பு
வெந்திறல்வேல் பார்த்தற்குஅருள்செய்வான் வேண்டி ஓர்செந்தறுகண் கேழல் திறம்புரிந்து - வந்தருளும்கானவனாம் கோலம் யான் காணக் கயிலாயாவானவர் தம் கோமானே வா.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

70

வாமான்தேர் வல்ல வயப்போர் விசயனைப் போல்தாமார் உலகில் தவமுடையார் - தாம்யார்க்குங்காண்டற் கரியராய்க் காளத்தி ஆள்வாரைத்தீண்டத்தாம் பெற்றமையாற் சென்று.
சொற்பிரிப்பு
வா மான் தேர் வல்ல வயப்போர் விசயனைப் போல்தாம் ஆர் உலகில் தவமுடையார் – தாம்யார்க்கும்காண்டற்கு அரியராய்க் காளத்தி ஆள்வாரைத்தீண்டத்தாம் பெற்றமையால் சென்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

71

சென்றிறைஞ்சும் வானோர்தம் சிந்தைக்குஞ் சேயராய்என்றும் அடியார்க்கு முன்னிற்பர் - நன்றுகனியவாஞ் சோலைக் கயிலாயம் மேயார்இனியவா பத்தர்க் கிவர்.
சொற்பிரிப்பு
சென்று இறைஞ்சும் வானோர் தம் சிந்தைக்கும் சேயராய்என்றும் அடியார்க்கு முன்னிற்பர் – நன்றுகனியவாம் சோலைக் கயிலாயம் மேயார்இனியவா பத்தர்க்கு இவர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

72

இவரே முதல்தேவர் எல்லார்க்கும் மிக்கார்இவரல்லர் என்றிருக்க வேண்டா -கவராதேகாதலித்தின் றேத்துதிரேல் காளத்தி ஆள்வார்நீர்ஆதரித்த தெய்வமே ஆம்.
சொற்பிரிப்பு
இவரே முதல்தேவர் எல்லார்க்கும் மிக்கார்இவரல்லர் என்றிருக்க வேண்டா - கவராதேகாதலித்து இன்றே ஏத்துதிரேல் காளத்தி ஆள்வார் நீர்ஆதரித்த தெய்வமே ஆம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

73

ஆமென்று நாளை உளஎன்று வாழ்விலேதாமின்று வீழ்கை தவமன்று - யாமென்றும்இம்மாய வாழ்வினையே பேணா திருங்கயிலைஅம்மானைச் சேர்வ தறிவு.
சொற்பிரிப்பு
ஆமென்று நாளை உளஎன்று வாழ்விலேதாம் இன்று வீழ்தல் தவமன்று – யாமென்றும்இம்மாய வாழ்வினையே பேணாது இருங்கயிலைஅம்மானைச் சேர்வது அறிவு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

74

அறியாம லேனும் அறிந்தேனுஞ் செய்துசெறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்றுநன்முகில்சேர் காளத்தி நாதன் அடிபணிந்துபொன்முகிலி ஆடுதலும் போம்.
சொற்பிரிப்பு
அறியாமலேனும் அறிந்தேனும் செய்துசெறிகின்ற தீவினைகள் எல்லாம் – நெறிநின்றுநன்முகில்சேர் காளத்திநாதன் அடிபணிந்துபொன்முகிலி ஆடுதலும் போம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

75

போகின்ற மாமுகிலே பொற்கயிலை வெற்பளவும்ஏகின் றெமக்காக எம்பெருமான் - ஏகினால்உண்ணப் படாநஞ்சம் உண்டாற்கென் உள்ளுறுநோய்விண்ணப்பஞ் செய்கண்டாய் வேறு.
சொற்பிரிப்பு
போகின்ற மாமுகிலே பொற்கயிலை வெற்பளவும்ஏகு இன்று எமக்காக எம்பெருமான் – ஏகினால்உண்ணப் படா நஞ்சம் உண்டாற்கு என் உள்ளுறுநோய்விண்ணப்பம் செய்கண்டாய் வேறு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

76

வேறேயுங் காக்கத் தகுவேனை மெல்லியலாள்கூறேயும் காளத்திக் கொற்றவனே - ஏறேறும்அன்பா அடியேற் கருளா தொழிகின்றதென்பாவ மேயன்றோ இன்று.
சொற்பிரிப்பு
வேறேயுங் காக்கத் தகுவேனை மெல்லியலாள்கூறேயும் காளத்திக் கொற்றவனே – ஏறேறும்அன்பா அடியேற்கு அருளாது ஒழிகின்றதுஎன் பாவமே அன்றோ இன்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

77

இன்று தொடங்கிப் பணிசெய்வேன் யானுனக்கென்றும் இளமதியே எம்பெருமான் - என்றும்என்உட்காதல் உண்மை உயர்கயிலை மேயாற்குத்திட்காதே விண்ணப்பஞ் செய்.
சொற்பிரிப்பு
இன்று தொடங்கிப் பணிசெய்வேன் யான் உனக்குஎன்றும் இளமதியே எம்பெருமான் – என்றும் என்உட்காதல் உண்மை உயர்கயிலை மேயாற்குத்திட்காதே விண்ணப்பம் செய்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

78

செய்ய சடைமுடியென் செல்வனையான் கண்டெனதுகையறவும் உள்மெலிவும் யான்காட்டப் -பையவேகாரேறு பூஞ்சோலைக் காளத்தி ஆள்வார்தம்போரேறே இத்தெருவே போது.
சொற்பிரிப்பு
செய்ய சடைமுடி என் செல்வனை யான் கண்டு எனதுகையறவும் உள்மெலிவும் யான்காட்டப் - பையவேகாரேறு பூஞ்சோலைக் காளத்தி ஆள்வார் தம்போரேறே இத்தெருவே போது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

79

போது நெறியனவே பேசிநின் பொன்வாயால்ஊதத் தருவன் ஒளிவண்டே - காதலால்கண்டார் வணங்குங் கயிலாயத் தெம்பெருமான்வண்தார்மோந் தென்குழற்கே வா.
சொற்பிரிப்பு
போது நெறியனவே பேசி நின் பொன்வாயால்ஊதத் தருவன் ஒளிவண்டே – காதலால்கண்டார் வணங்கும் கயிலாயத்து எம்பெருமான்வண்தார் மோந்து என் குழற்கே வா.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

80

வாவா மணிவாயால் மாவின் தளிர்கோதிக்கூவா திருந்த குயிற்பிள்ளாய் - ஓவாதேபூமாம் பொழிலுடுத்த பொன்மதில் சூழ் காளத்திக்கோமான் வரவொருகாற் கூவு.
சொற்பிரிப்பு
வாவா மணிவாயால் மாவின் தளிர்கோதிக்கூவாதிருந்த குயிற்பிள்ளாய் – ஓவாதேபூமாம் பொழிலுடுத்த பொன்மதில் சூழ் காளத்திக்கோமான் வர ஒருகால் கூவு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

81

கூவுதலும் பாற்கடலே சென்றவனைக் கூடுகஎன்றேவினான் பொற்கயிலை எம்பெருமான் - மேவியசீர்அன்பாற் புலிக்காலன் பாலன்பால் ஆசையினால்தன்பாற்பால் வேண்டுதலுந் தான்.
சொற்பிரிப்பு
கூவுதலும் பாற்கடலே சென்று அவனைக் கூடுக என்றுஏவினான் பொற்கயிலை எம்பெருமான் – மேவியசீர்அன்பால் புலிக்காலன் பாலன்பால் ஆசையினால்தன்பாற் பால் வேண்டுதலும் தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

82

தானே உலகாள்வான் தான்கண்ட வாவழக்கம்ஆனால்மற் றார்இதனை அன்றென்பார்- வானோர்களைகண்தா னாய்நின்ற காளத்தி ஆள்வார்வளைகொண்டார் மால்தந்தார் வந்து.
சொற்பிரிப்பு
தானே உலகாள்வான் தான்கண்டவா வழக்கம்ஆனால் மற்றார் இதனை அன்று என்பார் - வானோர்களைகண் தானாய் நின்ற காளத்தி ஆள்வார்வளைகொண்டார் மால்தந்தார் வந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

83

வந்தோர் அரக்கனார் வண்கயிலை மால்வரையைத்தந்தோள் வலியினையே தாம்கருதி - அந்தோஇடந்தார் இடந்திட் டிடார்க்கீழ் எலிபோற்கிடந்தார் வலியெலாங் கெட்டு.
சொற்பிரிப்பு
வந்தோர் அரக்கனார் வண்கயிலை மால்வரையைத்தந்தோள் வலியினையே தாம்கருதி – அந்தோஇடந்தார் இடந்திட்டு இடார்க் கீழ் எலிபோல்கிடந்தார் வலியெலாம் கெட்டு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

84

கெட்ட அரக்கரே வேதியரே கேளீர்கொல்பட்டதுவும் ஓராது பண்டொருநாள் - ஒட்டக்கலந்தரனார் காளத்தி ஆள்வார்மேற் சென்றுசலந்தரனார் பட்டதுவுந் தாம்.
சொற்பிரிப்பு
கெட்ட அரக்கரே வேதியரே கேளீர்கொல்பட்டதுவும் ஓராது பண்டொருநாள் – ஒட்டக்கலந்து அரனார் காளத்தி ஆள்வார்மேற் சென்றுசலந்தரனார் பட்டதுவும் தாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

85

தாம்பட்ட தொன்றும் அறியார்கொல் சார்வரேகாம்புற்ற செந்நெற் கயிலைக் கோன் - பாம்புற்றஆரத்தான் பத்தர்க் கருகணையார் காலனார்தூரத்தே போவார் தொழுது.
சொற்பிரிப்பு
தாம்பட்டது ஒன்றும் அறியார்கொல் சார்வரேகாம்புற்ற செந்நெற் கயிலைக் கோன் – பாம்புற்றஆரத்தான் பத்தர்க்கு அருகணையார் காலனார்தூரத்தே போவார் தொழுது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

86

தொழுது நமனுந்தன் தூதுவர்க்குச் சொல்லும்வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப்பத்தர்களைக் கண்டால் பணிந்தகலப் போமின்கள்எத்தனையுஞ் சேய்த்தாக என்று.
சொற்பிரிப்பு
தொழுது நமனும் தன் தூதுவர்க்குச் சொல்லும்வழுவில்சீர்க் காளத்தி மன்னன் – பழுதிலாப்பத்தர்களைக் கண்டால் பணிந்து அகலப் போமின்கள்எத்தனையும் சேய்த்தாக என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

87

வென்றைந்துங் காமாதி வேரறுத்து மெல்லவேஒன்ற நினைதிரேல் ஒன்றலாம் - சென்றங்கைமானுடையான் என்னை உடையான் வடகயிலைதானுடையான் தன்னுடைய தாள்.
சொற்பிரிப்பு
வென்று ஐந்தும் காமாதி வேரறுத்து மெல்லவேஒன்ற நினைதிரேல் ஒன்றலாம் – சென்று அங்கைமானுடையான் என்னை உடையான் வடகயிலைதானுடையான் தன்னுடைய தாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

88

தாளொன்றால் பாதாளம் ஊடுருவத் தண்விசும்பில்தாளொன்றால் அண்டங் கடந்துருவித் -தோளொன்றால்திக்கனைத்தும் போர்க்குந் திறற்காளி காளத்திநக்கனைத்தான் கண்ட நடம்.
சொற்பிரிப்பு
தாளொன்றால் பாதாளம் ஊடுருவத் தண்விசும்பில்தாளொன்றால் அண்டம் கடந்துருவித் - தோளொன்றால்திக்கனைத்தும் போர்க்கும் திறல் காளி காளத்திநக்கனைத் தான் கண்ட நடம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

89

நடமாடுஞ் சங்கரன்தாள் நான்முகனுங் காணான்படமாடு பாம்பணையான் காணான் - விடமேவும்காரேறு கண்டன் கயிலாயன் தன் உருவையாரே அறிவார் இசைந்து.
சொற்பிரிப்பு
நடமாடும் சங்கரன் தாள் நான்முகனும் காணான்படமாடும் பாம்பணையான் காணான் – விடம் மேவும்காரேறு கண்டன் கயிலாயன் தன் உருவையாரே அறிவார் இசைந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

90

இசையுந்தன் கோலத்தை யான்காண வேண்டிவசையில்சீர்க் காளத்தி மன்னன் - அசைவின்றிக்காட்டுமேல் காட்டிக் கலந்தென்னைத் தன்னோடும்கூட்டுமேல் கூடவே கூடு.
சொற்பிரிப்பு
இசையுந்தன் கோலத்தை யான்காண வேண்டிவசையில் சீர்க் காளத்தி மன்னன் – அசைவின்றிக்காட்டுமேல் காட்டிக் கலந்து என்னைத் தன்னோடும்கூட்டுமேல் கூடலே கூடு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

91

கூடி யிருந்து பிறர்செய்யுங் குற்றங்கள்நாடித்தம் குற்றங்கள் நாடாதே - வாடிவடகயிலை யேத்தாதே வாழ்ந்திடுவான் வேண்டில்அடகயில ஆரமுதை விட்டு.
சொற்பிரிப்பு
கூடி இருந்து பிறர்செய்யும் குற்றங்கள்நாடித்தம் குற்றங்கள் நாடாதே – வாடிவடகயிலை ஏத்தாதே வாழ்ந்திடுவான் வேண்டில்அடகு அயில ஆரமுதை விட்டு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

92

விட்டாவி போக உடல்கிடந்து வெந்தீயில்பட்டாங்கு வேமாறு பார்த்திருந்தும் - ஒட்டாதாம்கள்ளலைக்கும் பூஞ்சோலைக் காளத்தி யுள்நின்றவள்ளலைச்சென் றேத்த மனம்.
சொற்பிரிப்பு
விட்டு ஆவி போக உடல்கிடந்து வெந்தீயில்பட்டாங்கு வேமாறு பார்த்திருந்தும் – ஒட்டாவாம்கள் அலைக்கும் பூஞ்சோலைக் காளத்தியுள் நின்றவள்ளலைச் சென்றேத்த மனம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

93

மனமுற்றும் மையலாய் மாதரார் தங்கள்கனமுற்றுங் காமத்தே வீழ்வர் -புனமுற்றினக்குறவர் ஏத்தும் இருங்கயிலை மேயான்தனக்குறவு செய்கலார் தாழ்ந்து.
சொற்பிரிப்பு
மனம் முற்றும் மையலாய் மாதரார் தங்கள்கனமுற்றும் காமத்தே வீழ்வர் – புனமுற்றுஇனக்குறவர் ஏத்தும் இருங்கயிலை மேயான்தனக்கு உறவு செய்கலார் தாழ்ந்து.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

94

தாழ்ந்த சடையுந் தவளத் திருநீறும்சூழ்ந்த புலியதளும் சூழ்அரவும் - சேர்ந்துநெருக்கிவா னோர்இறைஞ்சுங் காளத்தி யாள்வார்க்கிருக்குமா கோலங்கள் ஏற்று.
சொற்பிரிப்பு
தாழ்ந்த சடையும் தவளத் திருநீறும்சூழ்ந்த புலியதளும் சூழ்அரவும் – சேர்ந்துநெருக்கி வானோர் இறைஞ்சும் காளத்தியாள்வார்க்குஇருக்குமா கோலங்கள் ஏற்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

95

ஏற்றின் மணியே அமையாதோ ஈர்ஞ்சடைமேல்வீற்றிருந்த வெண்மதியும் வேண்டுமோ - ஆற்றருவிகன்மேற்பட் டார்க்குங் கயிலாயத் தெம்பெருமான்என்மேற் படைவிடுப்பாற் கீங்கு.
சொற்பிரிப்பு
ஏற்றின் மணியே அமையாதோ ஈர்ஞ்சடை மேல்வீற்றிருந்த வெண்மதியும் வேண்டுமோ – ஆற்றருவிகல் மேற்பட்டு ஆர்க்கும் கயிலாயத்து எம்பெருமான்என்மேல் படைவிடுப்பாற்கு ஈங்கு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

96

ஈங்கேவா என்றருளி என்மனத்தில் எப்பொழுதும்நீங்காமல் நீவந்து நின்றாலும் - தீங்கைஅடுகின்ற காளத்தி ஆள்வாய் நான்நல்லபடுகின்ற வண்ணம் பணி.
சொற்பிரிப்பு
ஈங்கே வா என்றருளி என்மனத்தில் எப்பொழுதும்நீங்காமல் நீ வந்து நின்றாலும் – தீங்கைஅடுகின்ற காளத்தி ஆள்வாய் நான் நல்லபடுகின்ற வண்ணம் பணி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

97

பணியாது முன்னிவனைப் பாவியேன் வாளாகணியாது காலங் கழித்தேன் - அணியும்கருமா மிடற்றெங் கயிலாயத் தெங்கள்பெருமான தில்லை பிழை.
சொற்பிரிப்பு
பணியாது முன் இவனைப் பாவியேன் வாளாகணியாது காலம் கழித்தேன் – அணியும்கருமாமிடற்று எம் கயிலாயத்து எங்கள்பெருமானது இல்லை பிழை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

98

பிழைப்புவாய்ப் பொன்றறியேன் பித்தேறி னாற்போல்அழைப்பதே கண்டாய் அடியேன் - அழைத்தாலும்என்னா தரவேகொண் டின்பொழில்சூழ் காளத்திமன்னா தருவாய் வரம்.
சொற்பிரிப்பு
பிழைப்பு வாய்ப்பு ஒன்றறியேன் பித்து ஏறினாற்போல்அழைப்பதே கண்டாய் அடியேன் – அழைத்தாலும்என் ஆதரவே கொண்டு இன்பொழில்சூழ் காளத்திமன்னா தருவாய் வரம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

99

வரமாவ தெல்லாம் வடகயிலை மன்னும்பரமாஉன் பாதார விந்தம் - சிரமாரஏத்திடும்போ தாகவந் தென்மனத்தில் எப்பொழுதும்வைத்திடுநீ வேண்டேன்யான் மற்று.
சொற்பிரிப்பு
வரமாவது எல்லாம் வடகயிலை மன்னும்பரமா உன் பாதார விந்தம் – சிரம் ஆரஏத்திடும் போதாகவந்து என்மனத்தில் எப்பொழுதும்வைத்திடு நீ வேண்டேன் யான் மற்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

100

மற்றும் பலபிதற்ற வேண்டாம் மடநெஞ்சேகற்றைச் சடைஅண்ணல் காளத்தி - நெற்றிக்கண்ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும்சோராமல் எப்பொழுதுஞ் சொல்.
சொற்பிரிப்பு
மற்றுப் பல பிதற்ற வேண்டாம் மடநெஞ்சேகற்றைச் சடை அண்ணல் காளத்தி – நெற்றிக்கண்ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும்சோராமல் எப்பொழுதும் சொல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.