திருமுறை 11 · 11.009 · 12

கயிலாயம்

அருளியவர்
சேரமான் பெருமாள் நாயனார்
தலம்
கயிலாயம் (நொடித்தான்மலை)
நாடு
வடநாடு

1

திருமாலும் நான்முகனுந் தேர்ந்துணரா தன்றங்கருமால் உறஅழலாய் நின்ற - பெருமான்பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால்ஆழாதே ஆழ்ந்தான் அகலா தகலியான்ஊழால் உயராதே ஓங்கினான் - சூழொளிநூல்ஓதா துணர்ந்தான் நுணுகாது நுண்ணியான்யாதும் அணுகா தணுகியான் - ஆதிஅரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்அரனாய் அழிப்பவனும் தானே – பரனாயதேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான்மேவிய வாறே விதித்தமைத்தான் - ஓவாதேஎவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் - எவ்வுருவும்தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்ஏனோர்க்குங் காண்பரிய எம்பெருமான் - ஆனாதசீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில்ஏரார் திருக்கோயில் உள்ளிருப்ப - ஆராய்ந்துசெங்கண் அமரர் புறங்கடைக்கட் சென் றீண்டிஎங்கட்குக் காட்சியருள் என்றிரப்ப - அங்கொருநாள் (10)
சொற்பிரிப்பு
திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராது அன்றங்குஅருமால் உற அழலாய் நின்ற – பெருமான்பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்துறவாதே யாக்கை துறந்தான் – முறைமையால்ஆழாதே ஆழ்ந்தான் அகலாது அகலியான்ஊழால் உயராதே ஓங்கினான் – சூழொளி நூல்ஓதாது உணர்ந்தான் நுணுகாது நுண்ணியான்யாதும் அணுகாது அணுகியான் – ஆதிஅரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்அரனாய் அழிப்பவனும் தானே – பரனாயதேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான்மேவியவாறே விதித்தமைத்தான் – ஓவாதேஎவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் – எவ்வுருவும்தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்ஏனோர்க்கும் காண்பரிய எம்பெருமான் – ஆனாதசீரார் சிவலோகம் தன்னுள் சிவபுரத்தில்ஏரார் திருக்கோயில் உள்ளிருப்ப – ஆராய்ந்துசெங்கண் அமரர் புறங்கடைக்கண் சென்று ஈண்டிஎங்களுக்குக் காட்சி அருள் என்று இரப்ப – அங்கொருநாள்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பூமங்கை பொய்தீர் தரணி புகழ்மங்கைநாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த - சேமங்கொள்ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தைதேன் மொய்த்த குஞ்சியின்மேற் சித்திரிப்ப - ஊனமில்சீர்நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர்செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் - நொந்தாவயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டிநயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் - பயன்கொள்குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டுநலமலிய ஆகந் தழீஇக் - கலைமலிந்த (15)கற்பகம் ஈன்ற கமழ்பட் டினைஉடுத்துப்பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து - விற்பகரும்சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர்வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் - தோளாமணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங்கணிவயிரக் கண்டிகை பொன்னாண் - பணிபெரியஆரம் அவைபூண் டணிதிக ழுஞ்சன்னவீரந் திருமார்பில் வில்லிலக - ஏருடையஎண்டோட்கும் கேயூரம் பெய்துதர பந்தனமும்கண்டோர் மனமகிழக் கட்டுறீஇக் - கொண்டு (20)கடிசூத் திரம்புனைந்து கங்கணங்கைப் பெய்துவடிவுடைய கோலம் புனைந்தாங் - கடிநிலை மேல்
சொற்பிரிப்பு
பூமங்கை பொய்தீர் தரணிபுகழ் மங்கைநாமங்கை என்றுஇவர்கள் நன்கு அமைத்த – சேமம்கொள்ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தைதேன் மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப – ஊனமில்சீர்நந்தா வனமலரும் மந்தாகினித் தடம்சேர்செந்தாமரை மலர் நூறாயிரத்தால் – நொந்தாவயந்தன் தொடுத்து அமைத்த வாசிகை சூட்டிநயம்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் – பயன்கொள்குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டுநலமலிய ஆகம் தழீஇக் – கலைமலிந்த …15கற்பகம் ஈன்ற கமழ்பட்டினை உடுத்துப்பொற்கழல்கள் கால்மேல் பொலிவித்து – விற்பகரும்சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர்வாளார் நுதல்பட்டம் மன்னுவித்துத் – தோளாமணி மகர குண்டலங்கள் காதுக்கு அணிந்தாங்குஅணிவயிரக் கண்டிகை பொன் நாண் – பணி பெரியஆரம் அவை பூண்டுஅணிதிகழும் சன்னவீரம் திருமார்பில் வில் இலக – ஏர் உடையஎண்தோளுக்கும் கேயூரம் பெய்து உதர பந்தனமும்கண்டோர் மனமகிழக் கட்டுறீஇக் – கொண்டு …20கடிசூத்திரம் புனைந்து கங்கணம் கைப்பெய்துவடிவுடைய கோலம் புனைந்துஆங்கு – அடிநிலைமேல்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்துவந்து வசுக்கள் இருக்குரைப்ப - அந்தமில்சீர்எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும்அண்ணல்மேல் ஆசிகள் தாமுணர்த்த - ஒண்ணிறத்தபன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்பமன்னும் அகத்தியன்* யாழ் வாசிப்பப் பொன்னியலும்அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்துமங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் - செங்கண் (25)நிருதி முதலோர் நிழற்கலன்கள் ஏந்தவருணன் மணிக்கலசந் தாங்கத் -தெருவெலாம்வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத்தூயசீர்ச் சோமன் குடையெடுப்ப - மேவியசீர்ஈசானன் வந் தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள்வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் - தூயஉருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன்திருத்தகு மாநிதியஞ் சிந்தக் - கருத்தமைந்தகங்கா நதியமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள்பொங்கு கவரி புரையிரட்டத் - தங்கிய (30)பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண்கைந்நாகம் எட்டும் கழல்வணங்க - மெய்ந்நாகமேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய்மேகத் துருமு முரசறையப் - போகஞ்சேர்தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும்கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட - எம்பெருமான்விண்ணோர் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்வெண்ணோர் மழவிடையை மேற்கொண்டாங் - கெண்ணார்கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத்திருக்கடைகள் ஏழ்கழிந்த போதில் - செருக்குடைய (35)சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல்ஆனாப்போர் இந்திரன் பின்படர - ஆனாதஅன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக்கன்னவிலுந் திண்டோட் கருடன்மேல் – மன்னியமால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்துமேலிடப்பால் மென்கருப்பு வில்லிடப்பால் - ஏல்வுடையசங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல் எய்வான்கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த - ஐங்கணையான்காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரிவாமன் புரவிமேல் வந்தணைய - நாமஞ்சேர் (40)வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச்சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டை ஒண்கண் - தாழ்கூந்தல்மங்கை எழுவருஞ் சூழ மடநீலிசிங்க அடலேற்றின் மேற்செல்லத் - தங்கியவிச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும்சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம்கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத்தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமைகட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும் (45)குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்இடமாந் தடாரி படகம் - இடவியமத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனேமங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் - தங்கியஆறாம் இருதுவும் யோகும் அருந்தவமும்மாறாத முத்திரையும் மந்திரமும் - ஈறார்ந்தகாலங்கள் மூன்றுங் கணமுங் குணங்களும்வால கிலியரும் வந்தீண்டி - மேலை (50)இமையோர் பெருமானே போற்றி எழில்சேர்உமையாள் மணவாளா போற்றி - எமையாளும்தீயாடி போற்றி சிவனே அடிபோற்றிஈசனே எந்தாய் இறைபோற்றி - தூயசீர்ச்சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றிபொங்கரவா பொன்னங் கழல்போற்றி - அங்கொருநாள்ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப்பாசுபதம் ஈந்த பதம்போற்றி - தூயமலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர்தலைமேலாய் போற்றிதாள் போற்றி - நிலைபோற்றி (55)போற்றியெனப் பூமாரி பெய்து புலன்கலங்கநாற்றிசையும் எங்கும் நலம்பெருக - ஏற்றுக்கொடியும் பதாகையும் கொற்றக் குடையும்வடிவுடைய தொங்கலுஞ் சூழக் -கடிகமழும்பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான்வாமான ஈசன் வரும்போழ்திற் - சேமேலேமன்னும் மகதியன் என்றும் பாடம் ( மகதி எனும் வீணையை வாசிக்கும் நாரதர் என்பது பொருள்)
சொற்பிரிப்பு
நந்தி மாகாளர் கடைகழிந்த போழ்தத்துவந்து வசுக்கள் இருக்கு உரைப்ப – அந்தமில்சீர்எண்ணரும் கீர்த்தி எழுவர் இருடிகளும்அண்ணல்மேல் ஆசிகள் தாம்உணர்த்த – ஒண் நிறத்தபன்னிருவர் ஆதித்தர் பல்லாண்டு எடுத்திசைப்பமன்னும் அகத்தியன் யாழ் வாசிப்பப் – பொன் இயலும்அங்கி கமழ் தூபம் ஏந்த யமன் வந்துமங்கல வாசகத்தால் வாழ்த்து உரைப்பச் – செங்கண் …25நிருதி முதலோர் நிழற்கலன்கள் ஏந்தவருணன் மணிக்கலசம் தாங்கத் - தெருவெலாம்வாயு நனிவிளக்க மாமழை நீர் தெளிப்பத்தூயசீர்ச் சோமன் குடைஎடுப்ப – மேவியசீர்ஈசானன் வந்து அடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள்வாய்ஆர்ந்த மந்திரத்தால் வாழ்த்து உரைப்பத் – தூயஉருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன்திருத்தகு மாநிதியம் சிந்தக் – கருத்து அமைந்தகங்கா நதி யமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள்பொங்கு கவரி புடை இரட்டத் – தங்கிய …30பைந்நாகம் எட்டும் சுடர்எடுப்பப் பைந்தறுகண்கைந்நாகம் எட்டும் கழல்வணங்க – மெய்ந்நாகமேகம் விதானமாய் மின்எலாம் சூழ்கொடியாய்மேகத்து உருமு முரசறையப் – போகம்சேர்தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்து எங்கும்கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட – எம்பெருமான்விண்ணோர் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்வெண் நார் மழவிடையை மேற்கொண்டாங்கு – எண் ஆர்கருத்துடைய பாரிடங்கள் காப்புஒத்துச் செய்யத்திருக்கடைகள் ஏழ்கழிந்த போதில் – செருக்குடைய …35சேனாபதி மயில்மேல் முன்செல்ல யானைமேல்ஆனாப் போர் இந்திரன் பின்படர – ஆனாதஅன்னத்தே ஏறி அயன் வலப்பால் கைபோதக்கல்நவிலும் திண்தோள் கருடன்மேல் – மன்னியமால் இடப்பால் செல்ல மலரார் கணைஐந்துமேலிடப் பால்மென்கருப்பு வில்லி இடப்பால் – ஏல்வுடையசங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல் எய்வான்கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த – ஐங்கணையான்காமன் கொடிப் படைமுன் போதக் கதக் காரிவாமன் புரவிமேல் வந்துஅணைய – நாமஞ்சேர் …40வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச்சூழ்வளைக்கைத்தொண்டைவாய்க்கெண்டைஒண்கண் – தாழ்கூந்தல்மங்கை எழுவரும் சூழ மட நீலிசிங்க அடல் ஏற்றின் மேற்செல்லத் – தங்கியவிச்சாதரர் இயக்கர் கின்னரர் கிம்புருடர்அச்சாரணர் அரக்கரோடு அசுரர் – எச்சார்வும்சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம்கல்லலகு கல்லவடம் மொந்தை – நல் இலயத்தட்டுஅழி சங்கம் சலஞ்சலம் தண்ணுமைகட்டுஅழியாப் பேரி கரதாளம் – கொட்டும் …45குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்இடமாம் தடாரி படகம் – இடவியமத்தளம் துந்துபி வாய்ந்த முருடு இவற்றால்எத்திசை தோறும் எழுந்தியம்ப – ஒத்துடனேமங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்கிங்கரரும் எங்கும் கிலுகிலுப்பத் – தங்கியஆறாம் இருதுவும் யோகும் அருந்தவமும்மாறாத முத்திரையும் மந்திரமும் – ஈறார்ந்தகாலங்கள் மூன்றும் கணமும் குணங்களும்வாலகிலியரும் வந்துஈண்டி – மேலை …50இமையோர் பெருமானே போற்றி எழில்சேர்உமையாள் மணவாளா போற்றி – எமையாளும்தீயாடி போற்றி சிவனே அடிபோற்றிஈசனே எந்தாய் இறைபோற்றி – தூயசீர்ச்சங்கரனே போற்றி சடாமகுடத்தாய் போற்றிபொங்கரவா பொன்னங்கழல் போற்றி – அங்கொருநாள்ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப்பாசுபதம் ஈந்த பதம் போற்றி – தூயமலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர்தலைமேலாய் போற்றி தாள் போற்றி – நிலை போற்றி …55போற்றி எனப் பூமாரி பெய்து புலன்கலங்கநால்திசையும் எங்கும் நலம் பெருக – ஏற்றுக்கொடியும் பதாகையும் கொற்றக் குடையும்வடிவுடைய தொங்கலும் சூழக் - கடிகமழும்பூ மாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான்வாமான ஈசன் வரும்போழ்தில் – சே மேலே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம்கோமான் படைமுழக்கம் கேட்டலுமே -தூமாண்பில்வானநீர் தாங்கி மறையோம்பி வான்பிறையோடூனமில் சூலம் உடையவாய் - ஈனமிலா (60)வெள்ளை அணிதலால் வேழத் துரிபோர்த்தவள்ளலே போலும் வடிவுடைய - ஒள்ளியமாட நடுவில் மலரார் அமளியேகூடிய போர்க்கள மாக்குறித்துக் - கேடில்சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பாவிலங்கு கொடும்புருவம் வில்லா - நலந்திகழும்கூழைபின் தாழ வளையார்ப்பக் கைபோந்துகேழ்கிளரும் அல்குலாந் தேருந்திச் - சூழொளியகொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனங்கவரஅங்கம் பொருதசைந்த ஆயிழையார் - செங்கேழற் (65)பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகஞ்சேர்த்திநற்பெருங் கோலம் மிகப்புனைந்து - பொற்புடையபேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாகமாதரவர் சேர மகிழ்ந்தீண்டிச் - சோதிசேர்சூளிகையுஞ் சூட்டுஞ் சுளிகையுஞ் சுட்டிகையும்வாளிகையும் பொற்றோடும் மின்விலக - மாளிகையின்மேல்ஏறி நின்று தொழுவார் துயர்கொண்டுமால்ஏறி நின்று மயங்குவார் - நூல்ஏறுதாமமே தந்து சடாதாரி நல்கானேல்யாமமேல் எம்மை அடுமென்பார் - காமவேள் (70)ஆமென்பார் அன்றென்பார் ஐயுறுவார் கையெறிவார்தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார் - பூமன்னும்பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டுதுன்னரி மாலையாச் சூட்டுவார் - முன்னம்ஒருகண் எழுதிவிட் டொன்றெழுதாதோடித்தெருவம் புகுவார் திகைப்பார் - அருகிருந்தகண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளிஎன்றுபண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார் - அண்ணல்மேற்கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார்திண்ண நிறைத்தாழ் திறந்திட்டார் - ஒண்ணிறத்த (75)
சொற்பிரிப்பு
மகளிர் குழாங்கள்வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம்கோமான் படைமுழக்கம் கேட்டலுமே - தூமாண்பில்வானநீர் தாங்கி மறை ஓம்பி வான்பிறையோடுஊனமில் சூலம் உடையவாய் – ஈனமிலாவெள்ளை அணிதலால் வேழத்து உரிபோர்த்தவள்ளலே போலும் வடிவுடைய – ஒள்ளியமாட நடுவில் மலரார் அமளியேகூடிய போர்க்களமாக் குறித்துக் – கேடில்சிலம்பு பறையாகச் சேய்அரிக்கண் அம்பாவிலங்கு கொடும் புருவம் வில்லா – நலந்திகழும்கூழைபின் தாழ வளையார்ப்பக் கைபோந்துகேழ்கிளரும் அல்குலாம் தேர் உந்திச் – சூழொளியகொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனங்கவரஅங்கம் பொருது அசைந்த ஆயிழையார் – செங்கேழல்பொற்கலசத்துள்ளால் மணி நீர் முகம் சேர்த்திநற்பெருங்கோலம் மிகப்புனைந்து – பொற்புடையபேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாகமாதர்அவர் சேர மகிழ்ந்துஈண்டிச் – சோதிசேர்சூளிகையும் சூட்டும் சுளிகையும் சுட்டிகையும்வாளிகையும் பொற்தோடும் மின் விலக – மாளிகையின்மேல்ஏறி நின்று தொழுவார் துயர்கொண்டுமால்ஏறி நின்று மயங்குவார் – நூல்ஏறுதாமமே தந்து சடாதாரி நல் கானேல்யாமமேல் எம்மை அடும் என்பார் – காமவேள்ஆம்என்பார் அன்றுஎன்பார் ஐயுறுவார் கைஎறிவார்தாம்முன்னை நாணோடு சங்குஇழப்பார் – பூமன்னும்பொன் அரி மாலையைப் பூண்பார் அப் பூண்கொண்டுதுன் அரி மாலையாச் சூடுவார் – முன்னம்ஒருகண் எழுதிவிட்டு ஒன்று எழுதாது ஓடித்தெருவம் புகுவார் திகைப்பார் – அருகிருந்தகண்ணாடிமேல் பஞ்சு பெய்வார் கிளி என்றுபண் ஆடிச் சொல் பந்துக்கு உற்றுரைப்பார் – அண்ணல்மேல்கண்என்னும் மாசாலம் கோலிக் கருங்குழலார்திண்ண நிறைத் தாழ் திறந்திட்டார் – ஒண் நிறத்த
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால்தூதைச் சிறுசோ றடுதொழிலாள் - தீதில்இடையாலும் ஏக்கழுத்த மாட்டாள் நலஞ்சேர்உடையாலும் உள்ளுருக்க கில்லாள் - நடையாலும்கெளவைநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள்எவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள் - செவ்வனேர்நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்தன் செவ்வாயின்வாக்கும் பிறர்மனத்தை வஞ்சியாள் - பூக்குழலும்பாடவந் தோன்ற முடியாள் இளவேய்த்தோள்ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள் - நாடொறும் (80)ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண்சென்ற மனத்தினளாஞ் சேயிழையாள் - நன்றாகத்தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசிநீல அறுவை விரித்துடுத்துக் - கோலஞ்சேர்பந்தரிற் பாவை கொண்டாடும்இப் பாவைக்குத்தந்தையார் என்றொருத்தி தான்வினவ - அந்தமில்சீர்ஈசன் எரியாடி என்ன அவனையோர்காய்சின மால்விடைமேற் கண்ணுற்றுத் - தாய்சொன்னஇக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமன்நூல்நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் - பொற்புடைய (85)
சொற்பிரிப்பு
பேதைபேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால்தூதைச் சிறுசோறு அடு தொழிலாள் – தீதில்இடையாலும் ஏக்கழுத்த மாட்டாள் நலஞ்சேர்உடையாலும் உள்உருக்க கில்லாள் – நடையாலும்கெளவைநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள்எவ்வநோய் செய்யும் தொழில்பூணாள் – செவ்வனேர்நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள் தன் செவ்வாயின்வாக்கும் பிறர்மனத்தை வஞ்சியாள் – பூக்குழலும்பாடவம் தோன்ற முடியாள் இளவேய்த் தோள்ஆடவர் தம்மை அயர்வு செய்யாள் – நாள்தோறும்ஒன்றுரைத்து ஒன்றுன்னி ஒன்றுசெய்து ஒன்றின்கண்சென்ற மனத்தினளாம் சேயிழையாள் – நன்றாகத்தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசிநீல அறுவை விரித்துடுத்துக் – கோலஞ்சேர்பந்தரில் பாவை கொண்டாடும் இப்பாவைக்குத்தந்தை யார் என்றொருத்தி தான்வினவ – “அந்தமில்சீர்ஈசன் எரியாடி என்ன” அவனை ஓர்காய்சின மால்விடைமேல் கண்ணுற்றுத் – தாய் சொன்னஇக்கணக்கு நோக்காள் இவள் போல்வாள் காமன் நூல்நற்கணக்கின் மேல்சிறிதே நாள் செய்தாள் – பொற்புடைய
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்காரொளிசேர் மஞ்ஞைக் கவின்இயலாள் - சீரொளியதாமரை ஒன்றின் இரண்டு குழையிரண்டுகாமருவு கெண்டையோர் செந்தொண்டை - தூமருவுமுத்த முரிவெஞ் சிலைசுட்டி செம்பவளம்வைத்தது போலும் மதிமுகத்தாள் - ஒத்தமைந்தகங்கணஞ் சேர்ந்திலங்கு கையாள் கதிர்மணியின்கிங்கிணி சேர்ந்த திருந்தடியாள் - ஒண்கேழல்அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள் ஆய்பொதியிற்சந்தனந் தோய்ந்த தடந்தோளாள் - வந்து (90)திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள்கடல்பட்ட இன்னமுதம் அன்னாள் - மடல்பட்டமாலை வளாய குழலாள் மணம்நாறுசோலை இளங்கிளிபோல் தூமொழியாள் - சாலவும்வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக்கஞ்சனத்தை இட்டங் கழகாக்கி - எஞ்சாமணியாரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்திஅணியார் வளைதோள்மேல் மின்ன - மணியார்த்ததூவெண் மணற்கொண்டு தோழியருந் தானுமாய்க்காமன் உருவம் வரஎழுதிக் - காமன் (95)கருப்புச் சிலையும் மலரம்புந் தேரும்ஒருப்பட் டுடன் எழுதும் போழ்தில் - விருப்பூரும்தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன்வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் - தானமரநன்றறிவார் சொன்ன நலந்தோற்று நாண்தோற்றுநின்றறிவு தோற்று நிறைதோற்று - நன்றாகக்கைவண்டுங் கண்வண்டும் ஓடக் கலைஓடநெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் - மொய்கொண்ட
சொற்பிரிப்பு
பெதும்பைபேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்கார் ஒளிசேர் மஞ்ஞைக் கவின்இயலாள் – சீர்ஒளியதாமரை ஒன்றின் இரண்டு குழை இரண்டுகாமருவு கெண்டை ஓர் செந்தொண்டை – தூமருவுமுத்தம் முரிவெஞ்சிலை சுட்டி செம்பவளம்வைத்தது போலும் மதிமுகத்தாள் – ஒத்துஅமைந்தகங்கணம் சேர்ந்திலங்கு கையாள் கதிர்மணியின்கிங்கிணி சேர்ந்த திருந்தடியாள் – ஒண்கேழல்அந்துகில் சூழ்ந்து அசைந்த அல்குலாள் ஆய்பொதியில்சந்தனம் தோய்ந்த தடந்தோளாள் – வந்துதிடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள்கடல்பட்ட இன்னமுதம் அன்னாள் – மடல்பட்டமாலை வளாய குழலாள் மணம்நாறுசோலை இளங்கிளிபோல் தூமொழியாள் – சாலவும்வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக்குஅஞ்சனத்தை இட்டங்குஅழகாக்கி – எஞ்சாமணிஆரம் பூண்டுஆழி மெல்விரலில் சேர்த்திஅணியார் வளைதோள்மேல் மின்ன – மணிஆர்த்ததூவெண் மணற்கொண்டு தோழியரும் தானுமாய்க்காமன் உருவம் வர எழுதிக் – காமன்கருப்புச் சிலையும் மலர்அம்பும் தேரும்ஒருப்பட்டுஉடன் எழுதும் போழ்தில் – விருப்பூரும்தேனமரும் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன்வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் – தான்அமரநன்றுஅறிவார் சொன்ன நலந்தோற்றும் நாண்தோற்றும்நின்றறிவு தோற்றும் நிறைதோற்றும் – நன்றாகக்கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓடநெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் – மொய்கொண்ட
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மங்கை யிடங்கடவா மாண்பினாள் வானிழிந்தகங்கைச் சுழியனைய உந்தியாள் - தங்கிய (100)அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கிகொங்கை கமலம் முகங்கமலம் - பொங்கெழிலார்இட்டிடையும் வஞ்சி இரும்பணைத்தோள் வேயெழிலார்பட்டுடைய அல்குலுந் தேர்த்தட்டு - மட்டுவிரிகூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில்ஏய்ந்த மணி முறுவல் இன்முத்தம் - வாய்ந்தசீர்வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக்கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக் - குண்டலங்கள்காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித்தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து - மாதராள் (105)பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும்சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண் - நற்கோட்டுவெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல்ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு - தெள்ளியநீர்தாழுஞ் சடையான் சடாமகுடந் தோன்றுதலும்வாழுமே மம்மர் மனத்தளாய்ச் - சூழொளியான்தார்நோக்குந் தன்தாரும் நோக்கும் அவனுடையஏர்நோக்குந் தன்ன தெழில் நோக்கும் - பேரருளான்தோள்நோக்குந் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின்நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து - நாண் நோக்கா (110)துள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் - ஒள்ளிய
சொற்பிரிப்பு
மங்கைமங்கை இடம் கடவா மாண்பினாள் வான்இழிந்தகங்கைச் சுழியனைய உந்தியாள் – தங்கியஅங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கிகொங்கை கமலம் முகம் கமலம் – பொங்கெழிலார்இட்டிடையும் வஞ்சி இரும்பணைத்தோள் வேய்எழிலார்பட்டுடைய அல்குலும் தேர்த்தட்டு – மட்டுவிரிகூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில்ஏய்ந்த மணி முறுவல் இன்முத்தம் – வாய்ந்தசீர்வண்டு வளாய வளர் வாசிகை சூட்டிக்கண்டி கழுத்தில் கவின்சேர்த்திக் – குண்டலங்கள்காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித்தீதில் செழுங்கோலம் சித்திரித்து – மாதராள்பொற்கூட்டில் பூவையை வாங்கி அதனோடும்சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண் – நற்கோட்டுவெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல்ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு – தெள்ளியநீர்தாழும் சடையான் சடாமகுடம் தோன்றுதலும்வாழுமே மம்மர் மனத்தளாய்ச் – சூழொளியான்தார்நோக்கும் தன்தாரும் நோக்கும் அவனுடையஏர்நோக்கும் தன்னதுஎழில் நோக்கும் – பேரருளான்தோள்நோக்கும் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின்நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து – நாண்நோக்காதுஉள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்வெள்ளத்து இடையழுந்தி வெய்துயிர்த்தாள் – ஒள்ளிய
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் - ஏய்ந்தசீர்ஈசன் சிலையும் எழில்வான் பவளமும்சேய்வலங்கை வேலுந் திரள்முத்தும் - பாசிலையவஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும்மஞ்சில்வரு மாமதிபோல் மண்டலமும் - எஞ்சாப்புருவமுஞ் செவ்வாயும் கண்ணும் எயிறும்உருவ நுசுப்பும்மென் தோளும் - மருவினிய (115)கொங்கையும் வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர்பங்கயப் போதனைய சேவடியாள் - ஒண்கேழல்வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர்ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள் - ஊழித்திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தைஉருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் - பெருகொளியமுத்தாரங் கண்டத் தணிந்தாள் அணிகலங்கள்மொய்த்தார வாரம் மிகப் பெருகி -வித்தகத்தால்கள்ளுங் கடாமுங் கலவையுங் கைபோந்திட்டுள்ளும் புறமுஞ் செறிவமைத்துத் - தெள்ளொளிய (120)காளிங்கஞ் சோதி கிடப்பத் தொடுத்தமைத்ததாளிம்பத் தாமம் நுதல்சேர்த்தித் - தோளெங்கும்தண்ணறுஞ் சந்தனம் கொண் டப்பிச் சதிர்சாந்தைவண்ணம் பெறமிசையே மட்டித்தாங் - கொண்ணுதலாள்தன்னமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப்பின்னுமோர் காமரம் யாழ் அமைத்து - மன்னும்விடவண்ணக் கண்டத்து வேதியன் மேல்இட்டமடல்வண்ணம் பாடும் பொழுதீண் - டடல்வல்லவேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க் கெஞ்ஞான்றும்மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் - கோல (125)மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சாலஅணியேறு தோளானைக் கண்டாங் - கணிஆர்ந்தகோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக்கோட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி - நாட்டார்கள்எல்லாருங் கண்டார் எனக் கடவுள் இங்காயம்நல்லாய் படுமேற் படுமென்று -மெல்லவேசெல்ல லுறுஞ்சரணம் கம்பிக்குந் தன்னுறுநோய்சொல்லலுறுஞ் சொல்லி உடைசெறிக்கும் - நல்லாகம்காண லுறுங்கண்கள் நீர்மல்கும் காண்பார்முன்நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது - பூணாகம் (130)புல்லலுறும் அண்ணல்கை வாரான்என் றிவ்வகையேஅல்லலுறும் அழுந்தும் ஆழ்துயரால் - மெல்லியலாள்தன்னுருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப்பொன்னுருவங் கொண்டு புலம்புற்றாள் - பின்னொருத்தி
சொற்பிரிப்பு
மடந்தைதீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் – ஏய்ந்தசீர்ஈசன் சிலையும் எழில்வான் பவளமும்சேய்வலம் கை வேலும் திரள் முத்தும் – பாசிலையவஞ்சியும் வேயும் வளர்தாமரை மொட்டும்மஞ்சில் வரு மாமதிபோல் மண்டலமும் – எஞ்சாப்புருவமும் செவ்வாயும் கண்ணும் எயிறும்உருவ நுசுப்பும் மென்தோளும் – மருவினியகொங்கையும் வாண்முகமுமாக் கொண்டாள் கோலஞ்சேர்பங்கயப் போதனைய சேவடியாள் – ஒண்கேழல்வாழைத்தண்டுஅன்ன குறங்கினாள் வாய்ந்தசீர்ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள் – ஊழித்திருமதியம் மற்றுஒன்றாம் என்று முகத்தைஉருவுடைய நாண்மீன் சூழ்ந்தாற்போல் – பெருகொளியமுத்தாரம் கண்டத்து அணிந்தாள் அணிகலங்கள்மொய்த்து ஆரவாரம் மிகப்பெருகி - வித்தகத்தால்கள்ளும் கடாமும் கலவையும் கைபோந்திட்டுஉள்ளும் புறமும் செறிவமைத்துத் – தெள்ஒளியகாளிங்கம் சோதி கிடப்பத் தொடுத்தமைத்ததாளிம்பத் தாமம் நுதல்சேர்த்தித் – தோள்எங்கும்தண் நறும் சந்தனம் கொண்டுஅப்பிச் சதிர்சாந்தைவண்ணம் பெறமிசையே மட்டித்தாங்கு – ஒண்ணுதலாள்தன்னமர் தோழியர்கள் சூழத் தவிசுஏறிப்பின்னுமோர் காமரம் யாழ்அமைத்து – மன்னும்விடவண்ணக் கண்டத்து வேதியன் மேல்இட்டமடல்வண்ணம் பாடும் பொழுதுஈண்டு – அடல்வல்லவேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க்கு எஞ்ஞான்றும்மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் – கோலமணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சாலஅணி ஏறு தோளானைக் கண்டுஆங்கு – அணிஆர்ந்தகோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக்கோட்டி நுதல் சிவப்ப வாய் துலக்கி – நாட்டார்கள்எல்லாரும் கண்டார் எனக் கடவுள் இங்குஆயம்நல்லாய் படுமேல் படும் என்று - மெல்லவேசெல்லல் உறும் சரணம் கம்பிக்கும் தன்னுறுநோய்சொல்லல் உறும் சொல்லி உடைசெறிக்கும் – நல்ஆகம்காணல் உறும் கண்கள் நீர்மல்கும் காண்பார்முன்நாணல் உறும் நெஞ்சம் ஒட்டாது – பூண்ஆகம்புல்லல் உறும் அண்ணல் கை வாரான் என்று இவ்வகையேஅல்லல் உறும் அழுந்தும் ஆழ்துயரால் – மெல்லியலாள்தன்னுருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப்பொன்னுருவம் கொண்டு புலம்புற்றாள் – பின்னொருத்தி
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

செங்கேழல் தாமரைபோல் சீறடியாள் தீதிலாஅங்கேழ் அரிவைப் பிராயத்தாள் -ஒண்கேழல்திங்களுந் தாரகையும் வில்லுஞ் செழும்புயலும்தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையாற் - பொங்கொளிசேர்மின்னார்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையேதன்னாவார் இல்லாத் தகைமையாள் - எந்நாளும் (135)இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரைஎல்லாருஞ் செய்வர் சிறப்பென்னும் - சொல்லாலேஅல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்மல்கிய சாந்தொடு பூண்புனைந்து - நல்கூர்இடையிடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார்நடைபெடை அன்னத்தை வென்றாள் - அடியிணைமேற்பாடகங் கொண்டு பரிசமைத்தாள் பன்மணிசேர்சூடகம் முன்கை தொடர்வித்தாள் - கேடில்சீர்ப்பொன்னரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டுமன்னுங் கழுத்தை மகிழ்வித்தாள் - பொன்னனாள் (140)இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம்அண்ணல்மேல் தானிட்ட ஆசையால் - முன்னமேபாடல் தொடங்கும் பொழுதிற் பரஞ்சோதிகேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் - கூடியஇன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும்மன்னிய வீணையுங் கைவிட்டுப் -பொன்னனையீர்இன்றன்றே காண்ப தெழில் நலம் கொள்ளேனேல்நன்றன்றே பெண்மை நமக்கென்று - சென்றவன்தன்ஒண்களபம் ஆடும் ஒளிவாள் முகத்திரண்டுகண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் - ஒண்கேழற் (145)கூந்தல் அவிழ்க்கும் முடிக்கும் கலைதிருத்தும்சாந்தந் திமிரும் முலைஆர்க்கும் - பூந்துகிலைச்சூழும் அவிழ்க்கும் தொழும் அழும் சோர்துயருற்றாழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் – சூழொளியஅங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள்நங்கை இவளும் நலந்தோற்றாள் - அங்கொருத்தி
சொற்பிரிப்பு
அரிவைசெங்கேழல் தாமரைபோல் சீறடியாள் தீதிலாஅங்கேழ் அரிவைப் பிராயத்தாள் - ஒண்கேழல்திங்களும் தாரகையும் வில்லும் செழும்புயலும்தங்குஒளிசேர் செவ்வாயும் உண்மையால் – பொங்கொளிசேர்மின்னார்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையேதன்னாவார் இல்லாத் தகைமையாள் – எந்நாளும்இல்லாரை எல்லாரும் எள்குவர் செல்வரைஎல்லாரும் செய்வர் சிறப்பென்னும் – சொல்லாலேஅல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்மல்கிய சாந்தொடு பூண்புனைந்து – நல்கூர்இடை இடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார்நடை பெடை அன்னத்தை வென்றாள் – அடியிணைமேல்பாடகம் கொண்டு பரிசுஅமைத்தாள் பன்மணிசேர்சூடகம் முன்கை தொடர்வித்தாள் – கேடில்சீர்ப்பொன்அரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டுமன்னும் கழுத்தை மகிழ்வித்தாள் – பொன் அன்னாள்இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம்அண்ணல்மேல் தானிட்ட ஆசையால் – முன்னமேபாடல் தொடங்கும் பொழுதில் பரஞ்சோதிகேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் – கூடியஇன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும்மன்னிய வீணையும் கைவிட்டுப் – பொன் அனையீர்இன்றன்றே காண்பதுஎழில் நலம் கொள்ளேனேல்நன்றன்றே பெண்மை நமக்கென்று – சென்றவன்தன்ஒண்களபம் ஆடும் ஒளிவாள் முகத்திரண்டுகண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் – ஒண்கேழல்கூந்தல் அவிழ்க்கும் முடிக்கும் கலைதிருத்தும்சாந்தம் திமிரும் முலைஆர்க்கும் – பூந்துகிலைச்சூழும் அவிழ்க்கும் தொழும் அழும் சோர்துயருற்றுஆழும் அழுந்தும் அயா உயிர்க்கும் – சூழ்ஒளியஅங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள்நங்கை இவளும் நலந்தோற்றாள் – அங்குஒருத்தி
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஆரா அமுதம் அவயவம் பெற்றனையசீரார் தெரிவைப் பிராயத்தாள் - ஓராமருளோசை இன்மழலை வாய்ச்சொலால் என்றும்இருள்தீர் புலரியே ஒப்பாள் - அருளாலே (150)வெப்பம் இளையவர்கட் காக்குதலால் உச்சியோடொப்பமையக் கொள்ளும் உருவத்தாள் - வெப்பந்தீர்ந்துஅந்தளிர்போல் சேவடியும் அங்கையும் செம்மையால்அந்திவான் காட்டும் அழகினாள் - அந்தமில்சீரார் முகம்மதியம் ஆதலாற் சேயிழையாள்ஏரார் இரவின் எழில்கொண்டாள் - சீராரும்கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால்தண்ணிளங் காரின் சவிகொண்டாள் -வண்ணஞ்சேர்மாந்தளிர் மேனி முருக்கிதழ்வாய் ஆதலால்வாய்ந்த இளவேனில் வண்மையாள் - மாந்தர் (155)அறிவுடையீர் நின்மின்கள் அல்லார்போம் என்றுபறையறைவ போலுஞ் சிலம்பு - முறைமையால்சீரார் திருந்தடிமேற் சேர்த்தினாள் தேரல்குல்ஓரா தகலல் உறாதென்று - சீராலேஅந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள்மைந்தர் மனங்கவரும் என்பதனால் - முந்துறவேபூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால்காம்பொத்த தோளிணையைக் காப்பேவி - வாய்ந்தசீர்நற்கழுத்தை நல்லாரத் தால்மறைத்துக் காதுக்குவிற்பகருங் குண்டலங்கள் மேவுவித்து - மைப்பகரும் (160)காவியங் கண்ணைக் கதந்தணிப்பாள் போலத்தன்தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி - யாவரையும்ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும்கோகிலமும் போலும் குணத்தினாள் - ஆகிப்பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடிஅலர்சுமந்து கூழைய ஆகிக் - கலைகரந்துஉள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்தாழ்ந்துகள்ளாவி நாறுங் கருங்குழலாள் - தெள்ளொளியசெங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதிஅங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் - பொங்கெழிலார் (165)பொற்கவற்றின் வெள்ளிப் பலகை மணிச்சூதுநற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில் - விற்பகிரும்தோளான் நிலைபேறு தோற்றங்கே டாய்நின்றதாளான் சடாமகுடம் தோன்றுதலும் - கேளாயநாணார் நடக்க நலத்தார்க் கிடைஇல்லைஏணார் ஒழிக எழில்ஒழிக - பேணும்குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின்நலத்தீர் நினைமினீர் என்று - சொலற்கரியதேவாதி தேவன் சிவனாயில் தேன்கொன்றைப்பூவார் அலங்கல் அருளாது - போவானேல் (170)கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்துவண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் - ஒண்டாய
சொற்பிரிப்பு
தெரிவைஆரா அமுதம் அவயவம் பெற்றுஅனையசீரார் தெரிவைப் பிராயத்தாள் – ஓராமருளோசை இன்மழலை வாய்ச்சொலால் என்றும்இருள்தீர் புலரியே ஒப்பாள் – அருளாலேவெப்பம் இளையவர்கட்கு ஆக்குதலால் உச்சியோடுஒப்பமையக் கொள்ளும் உருவத்தாள் – வெப்பம்தீர்ந்துஅந்தளிர்போல் சேவடியும் அங்கையும் செம்மையால்அந்திவான் காட்டும் அழகினாள் – அந்தமில்சீரார் முகம் மதியம் ஆதலால் சேயிழையாள்ஏரார் இரவின் எழில்கொண்டாள் – சீராரும்கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால்தண் இளம் காரின் சவிகொண்டாள் - வண்ணஞ்சேர்மாந்தளிர் மேனி; முருக்கு இதழ்வாய் ஆதலால்வாய்ந்த இளவேனில் வண்மையாள் – மாந்தர்அறிவுடையீர் நின்மின்கள் அல்லார் போம் என்றுபறையறைவ போலும் சிலம்பு – முறைமையால்சீரார் திருந்தடிமேல் சேர்த்தினாள் தேரல்குல்ஓராது அகலல் உறாதென்று – சீராலேஅந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள்மைந்தர் மனங்கவரும் என்பதனால் – முந்துறவேபூங்கச்சினால் அடையப் பூட்டுறீஇப் பொன் தொடியால்காம்பொத்த தோளிணையைக் காப்பேவி – வாய்ந்தசீர்நற்கழுத்தை நல்ஆரத்தால் மறைத்துக் காதுக்குவிற்பகரும் குண்டலங்கள் மேவுவித்து – மைப்பகரும்காவியம் கண்ணைக் கதம்தணிப்பாள் போலத்தன்தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி – யாவரையும்ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும்கோகிலமும் போலும் குணத்தினாள் – ஆகிப்பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடிஅலர்சுமந்து கூழைய ஆகிக் – கலைகரந்துஉள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்தாழ்ந்துகள்ளாவி நாறும் கருங்குழலாள் – தெள்ளொளியசெங்கழுநீர்ப் பட்டுஉடுத்துச் செங்குங்குமம்எழுதிஅங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் – பொங்கெழிலார்பொற்கவற்றின் வெள்ளிப் பலகை மணிச்சூதுநற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில் – விற்பகிரும்தோளான் நிலைபேறு தோற்றம், கேடாய் நின்றதாளான் சடாமகுடம் தோன்றுதலும் – கேளாயநாணார் நடக்க நலத்தார்க்கு இடைஇல்லைஏணார் ஒழிக எழில்ஒழிக – பேணும்குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின்நலத்தீர் நினைமின் நீர் என்று – சொலற்கரியதேவாதி தேவன் சிவனாயின் தேன்கொன்றைப்பூவார் அலங்கல் அருளாது – போவானேல்கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்துவண்டார் பூங்கோதை வளம்தோற்றாள் – ஒண்டாய
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்பண்ணமரும் இன்சொல் பணிமொழியாள் - மண்ணின்மேல்கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்ஒண்டொடி கண்ணே உளவென்று - பண்டையோர்கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல்விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள் - கட்டரவம்அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்தவஞ்சிக்கொடி நுடங்கும் நுண்ணிடையாள் - எஞ்சாத (175)பொற்செப் பிரண்டு முகடு மணியழுத்திவைத்தன போல வளர்ந்தேந்தி - ஒத்துச்சுணங்கும் திதலையுஞ் சூழ்போந்து கண்டார்க்கணங்கும் அமுதமுமாய்த் தோன்றி - இணங்கொத்தகொங்கையாள் கோலங்கட் கெல்லாமோர் கோலமாம்நங்கையாள் நாகிளவேய்த் தோளினாள் - அங்கையாற்காந்தட் குலம்பழித்தாள் காமவேள் காதலாள்சாந்தம் இலங்கும் அகலத்தாள் - வாய்ந்துடனேஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால்தேய்ந்து துடித்த செழும்பவளம் -காய்த்திலங்கி (180)முத்தமுந் தேனும் பொதிந்து முனிவரையும்சித்தந் திறைகொள்ளும் செவ்வாயாள் - ஒத்துவரிகிடந் தஞ்சனம் ஆடி மணிகள்உருவம் நடுவுடைய வாகிப் - பெருகியதண்ணங் கயலும் சலஞ்சலமுந் தோன்றுதலால்வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் - ஒண்ணிறத்தகுண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதியமண்டலமே போலும் மதிமுகத்தாள் - வண்டலம்பயோசனை நாறு குழலாள் ஒளிநுதல்மேல்வாசிகை கொண்டு வடிவமைத்தாள் - மாசில்சீர்ப் (185)பாதாதி கேசம் பழிப்பிலாள் பாங்கமைந்தசீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள் - மாதார்ந்தபண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர்வெண்கவரி வெள்ளத் திடையிருந்து - ஒண்கேழற்கண்ணவனை அல்லாது காணா செவிஅவனதெண்ணருஞ்சீர் அல்ல திசைகொள்ளா - அண்ணல்கழலடி அல்லது கைதொழா அஃதான்றுஅழலங்கைக் கொண்டான்மாட் டன்பென் - றெழிலுடையவெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர்கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் - விண்பால் (190)அரிஅரணஞ் செற்றாங் கலைபுனலும் பாம்பும்புரிசடைமேல் வைத்த புராணன் - எரிஇரவில்ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழமாட மறுகில் வரக்கண்டு - கேடில்சீர்வண்ணச் சிலம்படி மாதரார் தாமுண்டகண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் - அண்ணலேவந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும்தந்தாய் இதுவோ தகவென்று - நொந்தாள்போற்கட்டுரைத்துக் கைசோர்ந் தகமுருகி மெய்வெளுத்துமட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் - கொட்டிமைசேர் (195)பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்பெண்ணார வாரம் பெரிதன்றே - விண்ஓங்கிமஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்தசெஞ்சடையான் போந்த தெரு.
சொற்பிரிப்பு
பேரிளம்பெண்பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்பண்ணமரும் இன்சொல் பணிமொழியாள் – மண்ணின்மேல்கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்ஒண் தொடி கண்ணே உளவென்று – பண்டையோர்கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம் போல்விட்டிலங்கு நல்உகிர்சேர் மெல்விரலாள் – கட்டுஅரவம்அஞ்சப் பரந்துஅகன்ற அல்குலாள் ஆய்நலத்தவஞ்சிக்கொடி நுடங்கும் நுண்ணிடையாள் – எஞ்சாதபொன்செப்புஇரண்டு முகடு மணிஅழுத்திவைத்தன போல வளர்ந்து ஏந்தி – ஒத்துச்சுணங்கும் திதலையும் சூழ்போந்து கண்டார்க்குஅணங்கும் அமுதமுமாய்த் தோன்றி – இணங்குஒத்தகொங்கையாள் கோலங்கட்கு எல்லாம் ஓர் கோலமாம்நங்கையாள் நாகு இளவேய்த் தோளினாள் – அங்கையால்காந்தள் குலம்பழித்தாள் காமவேள் காதலாள்சாந்தம் இலங்கும் அகலத்தாள் – வாய்ந்து உடனேஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்து இருபால்தேய்ந்து துடித்த செழும்பவளம் – காய்த்து இலங்கிமுத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும்சித்தம் திறைகொள்ளும் செவ்வாயாள் – ஒத்துவரிகிடந்து அஞ்சனம் ஆடி மணிகள்உருவம் நடுவுடையவாகிப் – பெருகியதண் அம் கயலும் சலஞ்சலமும் தோன்றுதலால்வண்ணம் கடல் அனைய வாள் கண்ணாள் – ஒண் நிறத்தகுண்டலம் சேர் காதினாள் கோலக் குளிர்மதியமண்டலமே போலும் மதிமுகத்தாள் – வண்டுஅலம்பயோசனை நாறு குழலாள் ஒளிநுதல்மேல்வாசிகை கொண்டு வடிவமைத்தாள் – மாசீல்சீர்ப்பாதாதி கேசம் பழிப்பிலாள் பாங்குஅமைந்தசீத அரி கொண்டுதன் மெய்புகைத்தாள் – மாதுஆர்ந்தபண்கவரும் சொல்லார் பல்லாண்டு ஏத்தப் பாய்ஒளிசேர்வெண்கவரி வெள்ளத்து இடையிருந்து – ஒண்கேழல்கண்ணவனை அல்லாது காணா செவி அவனதுஎண்ணரும் சீர் அல்ல திசைகொள்ளா – அண்ணல்கழலடி அல்லது கைதொழா அஃதால்அழல் அங்கைக் கொண்டான் மாட்டு அன்பென்று – எழிலுடையவெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர்கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் – விண்பால்அரிஅரணம் செற்றாங்கு அலைபுனலும் பாம்பும்புரிசடைமேல் வைத்த புராணன் – எரிஇரவில்ஆடும் இறைவன் அமரர் குழாம் தற்சூழமாட மறுகில் வரக்கண்டு – கேடில்சீர்வண்ணச் சிலம்படி மாதரார் தாம்உண்டகண் எச்சில் எம்மையே ஊட்டுவான் – அண்ணலேவந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும்தந்தாய் இதுவோ தகவென்று – நொந்தாள்போல்கட்டுரைத்துக் கைசோர்ந்து அகம்உருகி மெய்வெளுத்துமட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் – கொட்டிமைசேர்பண்ணாரும் இன்சொல் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்பெண் ஆரவாரம் பெரிதன்றே – விண்ஓங்கிமஞ்சடையும் நீள்குடுமி வாள் நிலா வீற்றிருந்தசெஞ்சடையான் போந்த தெரு
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

பெண்ணீர்மை காமின் பெருந்தோள் இணைகாமின்உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீரக்காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன்ஊரேறு போந்த துலா.
சொற்பிரிப்பு
பெண்ணீர்மை காமின் பெருந்தோள் இணைகாமின்உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் – தெண்ணீரக்கார்ஏறு கொன்றை அம்தார்க் காவாலி கட்டங்கன்ஊரேறு போந்தது உலா.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.