1
விரிகடல் பருகி அளறுபட் டன்னகருநிற மேகம் கல்முக டேறிநுண்துளி பொழிய நோக்கி ஒண்தொடிபொலங்குழை மின்னப் புருவ வில்லிட்டுஇலங்கெழிற் செவ்வாய்க் கோபம் ஊர்தரக்கைத்தலம் என்னும் காந்தள் மலரமுத்திலங் கெயிறெனும் முல்லை அரும்பக்குழலுஞ் சுணங்குங் கொன்றை காட்டஎழிலுடைச் சாயல் இளமயில் படைப்பஉள்நிறை உயிர்ப்பெனும் ஊதை ஊர்தரக்கண்ணீர்ப் பெருமழை பொழிதலின் ஒண்ணிறத்தஞ்சனக் கொழுஞ்சே றலம்பி எஞ்சாமணியும் பொன்னும் மாசறு வயிரமும்அணிகிளர் அகிலும் ஆரமும் உரிஞ்சிக்கொங்கை என்னுங் குவட்டிடை இழிதரப்பொங்குபுயல் காட்டி யோளே கங்கைவருவிசை தவிர்த்த வார்சடைக் கடவுள்அரிவை பாகத் தண்ணல் ஆரூர்எல்லையில் இரும்பலி சொரியும் கல்லோ சென்ற காதலர் மனமே.
சொற்பிரிப்பு
விரிகடல் பருகி அளறு பட்டன்னகருநிற மேகம் கல்முகடுஏறிநுண்துளி பொழிய நோக்கி ஒண்தொடிபொலம் குழை மின்னப் புருவ வில்லிட்டுஇலங்கு எழில் செவ்வாய்க் கோபம் ஊர்தரக்கைத்தலம் என்னும் காந்தள் மலரமுத்து இலங்கு எயிறு எனும் முல்லைஅரும்பக்குழலும் சுணங்கும் கொன்றை காட்டஎழில்உடைச் சாயல் இளமயில் படைப்பஉள்நிறை உயிர்ப்புஎனும் ஊதை ஊர்தரக்கண்ணீர்ப் பெருமழை பொழிதலின் ஒண் நிறத்துஅஞ்சனக் கொழுஞ்சேறு அலம்பி எஞ்சாமணியும் பொன்னும் மாசறு வயிரமும்அணிகிளர் அகிலும் ஆரமும் உரிஞ்சிக்கொங்கை என்னும் குவட்டுஇடை இழிதரப்பொங்குபுனல் காட்டியோளே கங்கைவருவிசை தவிர்த்த வார்சடைக் கடவுள்அரிவை பாகத்து அண்ணல் ஆரூர்எல்லை இல் இரும்பலி சொரியும்கல்லோ சென்ற காதலர் மனமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
மனமால் உறாதே மற்றென்செய் யும்வாய்ந்தகனமால் விடையுடையோன் கண்டத் - தினமாகித்தோன்றினகார் தோன்றிலதேர் சோர்ந்தனசங் கூர்ந்தனபீர்கான்றனநீர் எந்திழையாள் கண்.
சொற்பிரிப்பு
மனமால் உறாதே மற்று என் செய்யும் வாய்ந்தகனமால் விடை உடையோன் கண்டத்து – இனமாகித்தோன்றின கார் தோன்றில தேர் சோர்ந்தன சங்கு ஊர்ந்தன பீர்கான்றன நீர் ஏந்திழையாள் கண்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
கண்ணார் நுதல்எந்தை காமரு கண்டம் எனஇருண்டவிண்ணால் உருமொடு மேலது கீழது கொண்டல்விண்டமண்ணார் மலைமேல் இளமயி லால்மட மான்அனையபெண்ணாம் இவள்இனி என்னாய்க் கழியும் பிரிந்துறைவே.
சொற்பிரிப்பு
கண்ணார் நுதல் எந்தை காமரு கண்டம் என இருண்டவிண்ணால் உருமொடு மேலது, கீழது கொண்டல் விண்டமண்ணார் மலைமேல் இளமயில் ஆல், மடமான் அனையபெண்ணாம் இவள் இனி என்னாய்க் கழியும் பிரிந்து உறைவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
உறைகழி ஒள்வாள் மின்னி உருமெனும்அறைகுரல் முரசம் ஆர்ப்பக் கைபோய்வெஞ்சிலை கோலி விரிதுளி என்னும்மின்சரந் துரந்தது வானே நிலனேகடிய வாகிய களவநன் மலரொடுகொடிய வாகிய தளவமும் அந்தண்குலைமேம் பட்ட கோடலும் கோபமோடுஅலைமேம் பட்ட காந்தளும் இவற்றொடுகாயா வெந்துயர் தருமேல் அவரேபொங்கிரும் புரிசை போக்கற வளைஇக்கங்குலும் பகலும் காவில் மேவிமாசறு வேந்தன் பாசறை யோரேயானே இன்னேஅலகில் ஆற்றல் அருச்சுனற் கஞ்ஞான்றுஉலவா நல்வரம் அருளிய உத்தமன்அந்தண் ஆரூர் சிந்தித்து மகிழாமயரிய மாக்களைப் போலத்துயருழந் தழியக் கண்துயி லாவே.
சொற்பிரிப்பு
உறைகழி ஒள்வாள் மின்னி உரும் எனும்அறை குரல் முரசம் ஆர்ப்பக் கைபோய்வெஞ்சிலை கோலி, விரி துளி என்னும்மின்சரம் துரந்தது வானே, நிலனேகடியவாகிய களவ நன் மலரொடுகொடியவாகிய தளவமும் அந்தண்குலை மேம்பட்ட கோடலும் கோபமோடுஅலை மேம்பட்ட காந்தளும் இவற்றொடுகாயா வெந்துயர் தருமேல் அவரேபொங்கிரும் புரிசை போக்குஅற வளைஇக்கங்குலும் பகலும் காவில் மேவிமாசறு வேந்தன் பாசறையோரேயானே இன்னேஅலகுஇல் ஆற்றல் அருச்சுனற்கு அஞ்ஞான்றுஉலவா நல்வரம் அருளிய உத்தமன்அந்தண் ஆரூர் சிந்தித்து மகிழாமயரிய மாக்களைப் போலத்துயர் உழந்து அழியக் கண் துயிலாவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
துயிலாநோய் யாம்தோன்றத் தோன்றித்தீத் தோன்றமயிலால வந்ததால் மாதோ - அயலாயஅண்டத்துக் கப்பாலான் அந்திங்கட் கண்ணியான்கண்டத்துக் கொப்பாய கார்
சொற்பிரிப்பு
துயிலா நோய் யாம் தோன்றத் தோன்றித் தீத்தோன்றமயில்ஆல வந்ததால் மாதோ – அயலாயஅண்டத்துக்கு அப்பாலான் அம்திங்கள் கண்ணியான்கண்டத்துக்கு ஒப்பாய கார்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
காரும் முழக்கொடு மின்னொடு வந்தது காதலர்தம்தேருந் தெருவுஞ் சிலம்பப் புகுந்தது சில்வளைகள்சோருஞ் சிலபல அங்கே நெரிந்தன துன்னருநஞ்சாரும் மிடற்றண்ணல் ஆரூர் அனைய அணங்கினுக்கே.
சொற்பிரிப்பு
காரும் முழக்கொடு மின்னொடு வந்தது காதலர்தம்தேரும் தெருவும் சிலம்பப் புகுந்தது சில்வளைகள்சோரும் சிலபல அங்கே நெரிந்தன துன்னரு நஞ்சுஆரும் மிடற்றுஅண்ணல் ஆரூர் அனைய அணங்கினுக்கே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
அணங்குறை நெடுவரை அருமைபே ணாதுமணங்கமழ் தெரியல் சூடி வைகலும்விடுசுடர் நெடுவேல் முன்னடி விளக்காக்கடுவிசைக் கான்யாற்று நெடுநீர் நீந்திஒருதனி பெயரும் பொழுதிற் புரிகுழல்வானர மகளிர்நின் மல்வழங் ககலத்தானாக் காதல் ஆகுவர் என்றுபுலவி உள்ளமொடு பொருந்தாக் கண்ணள்கலைபிணை திரியக் கையற வெய்திமெல்விரல் நெரித்து விம்மி வெய்துயிர்த்துஅல்லியங் கோதை அழலுற் றாஅங்குஎல்லையில் இருந்துயர் எய்தினள் புல்லார்திரிபுரம் எரிய ஒருகணை தெரிந்தஅரிவை பாகத் தண்ணல் ஆரூர்வளமலி கமல வாள்முகத்துஇளமயிற் சாயல் ஏந்திழை தானே.
சொற்பிரிப்பு
அணங்கு உறை நெடுவரை அருமை பேணாதுமணம் கமழ் தெரியல் சூடி வைகலும்விடுசுடர் நெடுவேல் முன்னடி விளக்காக்கடுவிசைக் கான்யாற்று நெடுநீர் நீந்திஒருதனி பெயரும் பொழுதில் புரிகுழல்வானர மகளிர் நின்மல் வழங்க கலத்துஆனாக் காதல்ஆகுவர் என்றுபுலவி உள்ளமொடு பொருந்தாக் கண்ணள்கலை பிணை திரியக் கையறவுஎய்திமெல்விரல் நெரித்து விம்மி வெய்து உயிர்த்துஅல்லியங்கோதை அழல்உற்றாஅங்குஎல்லையில் இருந்துயர் எய்தினள் புல்லார்திரிபுரம் எரிய ஒருகணை தெரிந்தஅரிவை பாகத்துஅண்ணல் ஆரூர்வளமலி கமல வாள்முகத்துஇளமயில் சாயல் ஏந்திழை தானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
இழையார் வனமுலை ஈர்ந்தண் புனத்தில்உழையாகப் போந்ததொன் றுண்டே - பிழையாச்சீர்அம்மான் அனலாடி ஆரூர்க்கோன் அன்றுரித்தகைம்மானேர் அன்ன களிறு.
சொற்பிரிப்பு
இழையார் வனமுலையீர் இந்தண் புனத்தின்உழையாகப் போந்தது ஒன்றுண்டோ – பிழையாச்சீர்அம்மான் அனலாடி ஆரூர்க்கோன் அன்றுரித்தகைம்மா நேர் அன்ன களிறு.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
களிறு வழங்க வழங்கா அதர்கதிர் வேல்துணையாவெளிறு விரவ வருதிகண் டாய்விண்ணின் நின்றிழிந்தபிளிறு குரற்கங்கை தாங்கிய பிஞ்ஞகன் பூங்கழல்மாட்டொளிறு மணிக்கொடும் பூண்இமை யோர்செல்லும் ஓங்கிருளே.
சொற்பிரிப்பு
களிறு வழங்க வழங்கா அதர் கதிர் வேல் துணையாவெளிறு விரவ வருதிகண்டாய் விண்ணின் நின்றுஇழிந்தபிளிறு குரல் கங்கை தாங்கிய பிஞ்ஞகன் பூங்கழல் மாட்டுஒளிறு மணிக்கொடும் பூண்இமையோர் செல்லும் ஓங்குஇருளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
இருள்புரி கூந்தலும் எழில்நலம் சிதைந்ததுமருள்புரி வண்டறை மாலையும் பரிந்ததுஒண்ணுதல் திலகமும் அழிந்தது கண்ணும்மைந்நிறம் ஒழிந்து செந்நிறம் எய்திஉள்ளறி கொடுமை உரைப்ப போன்றனசேதகம் பரந்தது செவ்வாய் மேதகுகுழைகெழு திருமுகம் வியப்புள் ளுறுத்திஇழைகெழு கொங்கையும் இன்சாந் தழீஇக்கலையுந் துகிலும் நிலையிற் கலங்கிஎன்னிது விளைந்த வாறென மற்றி.•.துஅன்னதும் அறிகிலம் யாமே செறிபொழில்அருகுடை ஆரூர் அமர்ந்துறை அமுதன்முருகுவிரி தெரியல் முக்கண் மூர்த்திமராமரச் சோலைச் சிராமலைச் சாரற்சுரும்பிவர் நறும்போது கொய்யப்பெருஞ்செறி வனத்தில்யான் பிரிந்ததிப் பொழுதே.
சொற்பிரிப்பு
இருள்புரி கூந்தலும் எழில்நலம் சிதைந்ததுமருள்புரி வண்டறை மாலையும் பரிந்ததுஒண்ணுதல் திலகமும் அழிந்தது கண்ணும்மைந்நிறம் ஒழிந்து செந்நிறம் எய்திஉள்அறி கொடுமை உரைப்ப போன்றனசேதகம் பரந்தது செவ்வாய் மேதகுகுழைகெழு திருமுகம் வியப்புஉள் இறுத்திஇழைகெழு கொங்கையும் இன்சாந்துஅழீஇக்கலையும் துகிலும் நிலையில் கலங்கிஎன் இது விளைந்தவாறு என மற்றிதுஅன்னதும் அறிகிலம் யாமே செறிபொழில்அருகுஉடை ஆரூர் அமர்ந்துஉறை அமுதன்முருகுவிரி தெரியல் முக்கண் மூர்த்திமரா மரச்சோலைச் சிராமலைச் சாரல்சுரும்புஇவர் நறும்போது கொய்யப்பெருஞ்செறிவனத்தில் யான் பிரிந்தது இப்பொழுதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
பொழுது கழிந்தாலும் பூம்புனங்காத் தெள்கிஎழுது கொடியிடையாய் ஏகான் - தொழுதமரர்முன்னஞ்சேர் மொய்கழலான் முக்கணான் நான்மறையான்மன்னுஞ்சேய் போலொருவன் வந்து.
சொற்பிரிப்பு
பொழுது கழிந்தாலும் பூம்புனங்காத்து எள்கிஎழுது கொடியிடையாய் ஏகான் – தொழுது அமரர்முன்னஞ் சேர் மொய்கழலான் முக்கணான் நான்மறையான்மன்னும் சேய் போல் ஒருவன் வந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
வந்தார் எதிர்சென்று நின்றேன் கிடந்தவண் தார்தழைகள்தந்தார் அவையொன்றும் மாற்றகில் லேன்தக்கன் வேள்விசெற்றசெந்தா மரைவண்ணன் தீர்த்தச் சடையன் சிராமலைவாய்க்கொந்தார் பொழிலணி நந்தா வனஞ்சூழ் குளிர்புனத்தே.
சொற்பிரிப்பு
வந்தார் எதிர்சென்று நின்றேன் கிடந்த வண்தார் தழைகள்தந்தார் அவை ஒன்றும் மாற்றகில்லேன் தக்கன் வேள்வி செற்றசெந்தாமரை வண்ணன் தீர்த்தச் சடையன் சிராமலைவாய்க்கொந்துஆர் பொழில்அணி நந்தாவனம் சூழ் குளிர்புனத்தே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
புனமயிற் சாயற் பூங்குழல் மடந்தைமனைமலி செல்வம் மகிழா ளாகிஏதிலன் ஒருவன் காதல னாகவிடுசுடர் நடுவுநின் றடுதலின் நிழலும்அடியகத் தொளிக்கும் ஆரழற் கானத்துவெவ்வினை வேடர் துடிக்குரல் வெரீஇமெய்விதிர் எறியுஞ் செவ்வித் தாகிமுள்ளிலை ஈந்தும் முளிதாள் இலவமும்வெள்ளிலும் பரந்த வெள்ளிடை மருங்கில்கடுங்குரற் கதநாய் நெடுந்தொடர் பிணித்துப்பாசந் தின்ற தேய்கால் உம்பர்மரையதள் மேய்ந்த மயிர்ப்புன் குரம்பைவிரிநரைக் கூந்தல் வெள்வாய் மறத்தியர்விருந்தா யினள்கொல் தானே திருந்தாக்கூற்றெனப் பெயரிய கொடுந்தொழில் ஒருவன்ஆற்றல் செற்ற அண்ணல் ஆரூர்ச்செய்வளர் கமலச் சீறடிக்கொவ்வைச் செவ்வாய்க் குயில்மொழிக் கொடியே.
சொற்பிரிப்பு
புனமயில் சாயல் பூங்குழல் மடந்தைமனைமலி செல்வம் மகிழாள்ஆகிஏதிலன் ஒருவன் காதலனாகவிடுசுடர் நடுவண் நின்றுஅடுதலின் நிழலும்அடிஅகத்துஒளிக்கும் ஆரழல் கானத்துவெவ்வினை வேடர் துடிக்குரல் வெரீஇமெய் விதிர்எறியும் செவ்வியள் ஆகிமுள்இலை ஈந்தும் முளிதாள் இலவமும்வெள்ளிலும் பரந்த வெள்இடை மருங்கில்கடுங்குரல் கத நாய் நெடுந்தொடர் பிணித்துபபாசம் தின்ற தேய்கால் உம்பர்மரை அதள் வேய்ந்த மயிர்ப்புன் குரம்பைவிரிநரைக் கூந்தல் வெள்வாய் மறத்தியர்விருந்தாயினள் கொல் தானே திருந்தாக்கூற்றெனப் பெயரிய கொடுந்தொழில் ஒருவன்ஆற்றல் செற்ற அண்ணல் ஆரூர்ச்செய்வளர் கமலச் சீறடிக்கொவ்வைச் செவ்வாய்க் குயில்மொழிக் கொடியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
கொடியேர் நுடங்கிடையாள் கொய்தாரான் பின்னேஅடியால் நடந்தடைந்தா ளாக- பொடியாகநண்ணார்ஊர் மூன்றெரித்த நாகஞ்சேர் திண்சிலையான்தண்ஆரூர் சூழ்ந்த தடம்.
சொற்பிரிப்பு
கொடியேர் நுடங்கிடையாள் கொய்தாரான் பின்னேஅடியால் நடந்து அடைந்தாள் ஆவாக - பொடியாகநண்ணார் ஊர் மூன்றெரித்த நாகஞ்சேர் திண்சிலையான்தண்ஆரூர் சூழ்ந்த தடம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
தடப்பாற் புனற்சடைச் சங்கரன் தண்மதி போல்முகத்துமடப்பால் மடந்தை மலரணைச் சேக்கையிற் பாசம்பிரீஇஇடப்பால் திரியில் வெருவும் இருஞ்சுரஞ் சென்றனளால்படப்பா லனவல்ல வால்தமி யேன்தையல் பட்டனவே.
சொற்பிரிப்பு
தடப்பால் புனற்சடைச் சங்கரன் தண்மதி போல் முகத்துமடப்பால் மடந்தை மலரணைச் சேக்கையில் பாசம் பிரீஇஇடப்பால் திரியில் வெருவும் இருஞ்சுரம் சென்றனளால்படப்பாலன அல்லவால் தமியேன் தையல் பட்டனவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதிநட்ட கல்லும் மூதூர் நத்தமும்பரல்முரம் பதரும் அல்லது படுமழைவரன்முறை அறியா வல்வெயிற் கானத்துத்தேனிவர் கோதை செல்ல மானினம்அஞ்சில் ஓதி நோக்கிற் கழிந்துநெஞ்செரி வுடைமையின் விலக்காது விடுககொங்கைக் கழிந்து குன்றிடை அடைந்தகொங்கிவர் கோங்கமும் செலவுடன் படுகமென்றோட் குடைந்து வெயில்நிலை நின்றகுன்ற வேய்களும் கூற்றடைத் தொழிகமாயிருங் கடற்றிடை வைகல் ஆயிரம்பாவையை வளர்ப்போய் நீநனி பாவையைவிலக்காது பிழைத்தனை மாதோ நலத்தகும்அலைபுனல் ஆரூர் அமர்ந்துறை அமுதன்கலையமர் கையன் கண்ணுதல் எந்தைதொங்கலஞ் சடைமுடிக் கணிந்தகொங்கலர் கண்ணி ஆயின குரவே.
சொற்பிரிப்பு
பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதிநட்ட கல்லும் மூதூர் நத்தமும்பரல்முரம் பதரும் அல்லது படுமழைவரன்முறை அறியா வல்வெயில் கானத்துத்தேன்இவர் கோதை செல்ல மான்இனம்அம்சில் ஓதி நோக்கில் கழிந்துநெஞ்சு எரிவுடைமையின் விலக்காது விடுககொங்கைக் கழிந்து குன்றிடை அடைந்தகொங்குஇவர் கோங்கமும் செலவுடன் படுகமென்தோள் குடைந்து வெயில்நிலை நின்றகுன்ற வேய்களும் கூற்றடைத்து ஒழிகமாஇருங்கடற்றுஇடை வைகல் ஆயிரம்பாவையை வளர்ப்போய் நீ நனி பாவையைவிலக்காது பிழைத்தனை மாதோ நலத்தகும்அலைபுனல் ஆரூர் அமர்ந்துறை அமுதன்கலை அமர் கையன் கண்ணுதல் எந்தைதொங்கல்அம் சடைமுடிக்கு அணிந்தகொங்குஅலர் கண்ணி ஆயின குரவே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
குரவங் கமழ்கோதை கோதைவே லோன்பின்விரவுங் கடுங்கானம் வெவ்வாய் - அரவம்சடைக்கணிந்த சங்கரன் தார்மதனன் தன்னைக்கடைக்கணித்த தீயிற் கடிது.
சொற்பிரிப்பு
குரவம் கமழ்கோதை கோதை வேலோன்பின்விரவும் கடுங்கானம் வெவ்வாய் – அரவம்சடைக்கு அணிந்த சங்கரன் தார் மதனன் தன்னைக்கடைக்கணித்த தீயின் கடிது.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
கடிமலர்க் கொன்றையுந் திங்களுஞ் செங்கண் அரவும்அங்கேமுடிமல ராக்கிய முக்கண்நக் கன்மிக்க செக்கரொக்கும்படிமலர் மேனிப் பரமன் அடிபர வாதவர்போல்அடிமலர் நோவ நடந்தோ கடந்ததெம் அம்மனையே.
சொற்பிரிப்பு
கடிமலர்க் கொன்றையும் திங்களும் செங்கண் அரவும்அங்கேமுடிமலராக்கிய முக்கண் நக்கன் மிக்க செக்கர் ஒக்கும்படிமலர் மேனிப் பரமன் அடிபரவாதவர் போல்அடிமலர் நோவ நடந்தோ கடந்தது எம் அம்மனையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
மனையுறை குருவி வளைவாய்ச் சேவல்சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கிஈனில் இழைக்க வேண்டி ஆனாஅன்புபொறை கூர மேன்மேல் முயங்கிக்கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும்பெருவளந் தழீஇய பீடுசால் கிடக்கைவருபுன லூரன் பார்வை யாகிமடக்கொடி மாதர்க்கு வலையாய்த் தோன்றிப்படிற்று வாய்மொழி பலபா ராட்டிஉள்ளத் துள்ளது தெள்ளிதிற் கரந்துகள்ள நோக்கமொடு கைதொழு திறைஞ்சிஎம்மி லோயே பாண அவனேல்அமரரும் அறியா ஆதி முர்த்திகுமரன் தாதை குளிர்சடை இறைவன்அறைகழல் எந்தை ஆரூர் ஆவணத்துறையில் தூக்கும் எழில்மென் காட்சிக்கண்ணடி அனைய நீர்மைப்பண்ணுடைச் சொல்லியர் தம்பா லோனே.
சொற்பிரிப்பு
மனைஉறை குருவி வளைவாய்ச் சேவல்சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கிஈன் இல் இழைக்க வேண்டி ஆனாஅன்பு பொறை கூர மேன்மேல் முயங்கிக்கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும்பெருவளம் தழீஇய பீடுசால் கிடக்கைவருபுனல் ஊரன் பார்வையாகிமடக்கொடி மாதர்க்கு வலையாய்த் தோன்றிப்படிற்று வாய்மொழி பல பாராட்டிஉள்ளத்துஉள்ளது தெள்ளிதின் கரந்துகள்ள நோக்கமொடு கைதொழுது இறைஞ்சிஎம்இல்லோயே பாண அவனேல்அமரரும் அறியா ஆதி முர்த்திகுமரன் தாதை குளிர்சடை இறைவன்அறைகழல் எந்தை ஆரூர் ஆவணத்துறையில் தூக்கும் எழில்மென் காட்சிக்கண்ணடி அணைய நீர்மைப்பண்உடைச் சொல்லியர் தம்பாலோனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
பாலாய சொல்லியர்க்கே சொல்லுபோய்ப் பாண்மகனேஏலாஇங் கென்னுக் கிடுகின்றாய் - மேலாயதேந்தண் கமழ்கொன்றைச் செஞ்சடையான் தாள்சூடும்பூந்தண் புனலூரன் பொய்.
சொற்பிரிப்பு
பாலாய சொல்லியர்க்கே சொல்லுபோய்ப் பாண்மகனேஏலா இங்கு என்னுக்கு இடுகின்றாய் – மேலாயதேன் தண்கமழ் கொன்றைச் செஞ்சடையான் தாள்சூடும்பூந்தண் புனலூரன் பொய்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
பொய்யால் தொழினும் அருளும் இறைகண்டம் போலிருண்டமையார் தடங்கண் மடந்தையர் கேட்கிற்பொல் லாதுவந்துன்கையால் அடிதொடல் செல்லல்நில் புல்லல் கலைஅளையல்ஐயா இவைநன்கு கற்றாய் பெரிதும் அழகியதே.
சொற்பிரிப்பு
பொய்யால் தொழினும் அருளும்இறை கண்டம்போல்இருண்டமையார் தடங்கண் மடந்தையர் கேட்கில் பொல்லாது வந்துன்கையால் அடிதொடல்செல்லல் நில் புல்லல் கலைஅளையல்ஐயா இவை நன்கு கற்றாய் பெரிதும் அழகியதே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
அழகுடைக் கிங்கணி அடிமிசை அரற்றத்தொழிலுடைச் சிறுபறை பூண்டு தேர்ஈர்த்துஒருகளி றுருட்டி ஒண்பொடி ஆடிப்பொருகளி றனைய பொக்கமொடு பிற்றாழ்ந்துபூங்குழற் சிறாரொடு தூங்குநடை பயிற்றிஅக்கரை உடுத்தி ஐம்படை கட்டிஒக்கரை இருக்கும் ஒளிர்புன் குஞ்சிக்குதலையங் கிளவிப் புதல்வன் தன்னைஉள்ளச் சொரிந்த வெள்ளத் தீம்பால்உடைய வாகிய தடமென் கொங்கைவேண்டாது பிரிந்த விரிபுனல் ஊரன்பூண்தாங் ககலம் புல்குவன் எனப்போய்ப்பெருமடம் உடையை வாழி வார்சடைக்கொடுவெண் திங்கட் கொழுநில வேய்க்கும்சுடுபொடி யணிந்த துளங்கொளி அகலத்தண்ணல் ஆரூர் திண்ணிதிற் செய்தசிறைகெழு செம்புனல் போலநிறையொடு நீங்காய் நெஞ்சம் நீயே.
சொற்பிரிப்பு
அழகுடைக் கிங்கணி அடிமிசை அரற்றத்தொழிலுடைச் சிறுபறை பூண்டு தேர் ஈர்த்துஒருகளி று உருட்டி ஒண்பொடி ஆடிப்பொருகளிறு அனைய பொக்கமொடு பின்தாழ்ந்துபூங்குழல் சிறாரொடு தூங்கு நடை பயிற்றிஅக்கரை உடுத்தி ஐம்படை கட்டிஒக்கரை இருக்கும் ஒளிர்புன் குஞ்சிக்குதலை அம்கிளவிப் புதல்வன் தன்னைஉள்ளச் சொரிந்த வெள்ளத் தீம்பால்உடைய வாகிய தடமென் கொங்கைவேண்டாது பிரிந்த விரிபுனல் ஊரன்பூண்தாங்கு அகலம் புல்குவன் எனப்போய்ப்பெருமடம் உடையை வாழி வார்சடைக்கொடுவெண் திங்கள் கொழுநிலவு ஏய்க்கும்சுடுபொடி அணிந்த துளங்குஒளி அகலத்துஅண்ணல் ஆரூர் திண்ணிதிற் செய்தசிறைகெழு செம்புனல் போலநிறையொடு நீங்காய் நெஞ்சம் நீயே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
நீயிருந்திங் கென்போது நெஞ்சமே நீள்இருட்கண்ஆயிரங்கை வட்டித் தனலாடித் - தீஅரங்கத்தைவாய் அரவசைத்தான் நன்பணைத் தோட் கன்பமைத்தசெய்வான்நல் ஊரன் திறம்.
சொற்பிரிப்பு
நீ இருந்திங்குஎன் போது நெஞ்சமே நீள்இருள்கண்ஆயிரம் கை அட்டித் தனல்ஆடித் – தீஅரங்கத்துஐவாய் அரவுஅசைத்தான் நன்பணைத்தோளுக்கு அன்பமைத்தசெய்வான் நல் ஊரன் திறம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
திறமலி சின்மொழிச் செந்துவர் வாயினர் எங்கையர்க்கேமறமலி வேலோன் அருளுக வார்சடை யான்கடவூர்த்துறைமலி ஆம்பல்பல் லாயிரத் துத்தமி யேஎழினும்நறைமலி தாமரை தன்னதென் றேசொல்லும் நற்கயமே.
சொற்பிரிப்பு
திறமலி சின்மொழிச் செந்துவர் வாயினர் எங்கையர்க்கேமறமலி வேலோன் அருளுக வார்சடையான் கடவூர்த்துறைமலி ஆம்பல் பல்லாயிரத்துத் தமியே எழினும்நறைமலி தாமரை தன்னதுஎன்றே சொல்லும் நல்கயமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
கயங்கெழு கருங்கடல் முதுகு தெருவுபடஇயங்குதிமில் கடவி எறியொளி நுளையர்நெய்ம்மீன் கவரல் வேண்டிக் கைம்மிகுத்தால வட்டம் ஏய்ப்ப மீமிசைமுடிகெழு தருவலை வீசி முந்நீர்க்குடரென வாங்கிக் கொள்ளை கொண்டசுரிமுகச் சங்கும் சுடர்விடு பவளமும்எரிகதிர் நித்திலத் தொகுதியுங் கூடிவிரிகதிர் நிலவுஞ் செக்கருந் தாரகைஉருவது காட்டும் உலவாக் காட்சித்தண்ணந் துறைவன் தடவரை அகலம்கண்ணுறக் கண்டது முதலா ஒண்ணிறக்காள மாசுணங் கதிர்மதிக் குழவியைக்கோளிழைத் திருக்கும் கொள்கை போலமணிதிகழ் மிடற்று வானவன் மருவும்அணிதிகழ் அகலத் தண்ணல் ஆரூர்ஆர்கலி விழவின் அன்னதோர்பேரலர் சிறந்தது சிறுநல் லூரே.
சொற்பிரிப்பு
கயம்கெழு கருங்கடல் முதுகு தெருவுபடஇயங்கு திமில் கடவி எறி இளி நுளையர்நெய்ம்மீன் கவரல் வேண்டிக் கைம்மிகுத்தால வட்டம் ஏய்ப்ப மீமிசைமுடிகெழு தருவலை வீசி முந்நீர்க்குடரென வாங்கிக் கொள்ளை கொண்டசுரிமுகச் சங்கும் சுடர்விடு பவளமும்எரிகதிர் நித்திலத் தொகுதியும் கூடிவிரிகதிர் நிலவும் செக்கரும் தாரகைஉருவது காட்டும் உலவாக் காட்சித்தண்அம் துறைவன் தடவரை அகலம்கண்ணுறக் கண்டது முதலா ஒண்ணிறக்காள மாசுணம் கதிர்மதிக் குழவியைக்கோள்இழைத்து இருக்கும் கொள்கை போலமணிதிகழ் மிடற்று வானவன் மருவும்அணிதிகழ் அகலத்து அண்ணல் ஆரூர்ஆர்கலி விழவின் அன்னதோர்பேர்அலர் சிறந்தது சிறு நல்லூரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
ஊரெலாந் துஞ்சி உலகெலாம் நள்ளென்றுபாரெலாம் பாடவிந்தப் பாயிருட்கண் - சீருலாம்மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைகாட்டுப்பூந்துறைவாய் மேய்ந்துறங்கா புள்.
சொற்பிரிப்பு
ஊரெலாம் துஞ்சி உலகெலாம் நள் என்றுபாரெலாம் பாடுஅவிந்தப் பாய்இருள்கண் – சீருலாம்மாந்துறைவாய் ஈசன் மணி நீர் மறைகாட்டுப்பூந்துறைவாய் மேய்ந்து உறங்கா புள்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
புள்ளுந் துயின்று பொழுதிறு மாந்து கழுதுறங்கிநள்ளென்ற கங்குல் இருள்வாய்ப் பெருகிய வார்பனிநாள்துள்ளுங் கலைக்கைச் சுடர்வண் ணனைத் தொழு வார்மனம்போன்றுள்ளும் உருக ஒருவர்திண் தேர்வந் துலாத் தருமே.
சொற்பிரிப்பு
புள்ளும் துயின்று பொழுது இறுமாந்து கழுது உறங்கிநள் என்ற கங்குல் இருள்வாய்ப் பெருகிய வார் பனிநாள்துள்ளும் கலைக் கைச் சுடர்வண்ணனைத் தொழுவார் மனம் போன்றுஉள்ளும் உருக ஒருவர் திண் தேர் வந்து உலாத் தருமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
உலாநீர்க் கங்கை ஒரு சடைக் கரந்துபுலால்நீர் ஓழுகப் பொருகளி றுரித்தபூத நாதன் ஆதி மூர்த்திதிருமட மலைமகட் கொருகூறு கொடுத்துத்தன்அன்பின் அமைத்தவன் ஆரூர் நன்பகல்வலம்புரி அடுப்பா மாமுத் தரிசிசலஞ்சலம் நிறைய ஏற்றி நலந்திகழ்பவளச் செந்தீ மூட்டிப் பொலம்படஇப்பியந் துடுப்பால் ஒப்பத் துழாவிஅடாஅ தட்ட அமுதம் வாய்மடுத்துஇடாஅ ஆயமோ டுண்ணும் பொழுதில்திருந்திழைப் பணைத்தோள் தேமொழி மாதேவிருந்தின் அடியேற் கருளுதி யோவெனமுலைமுகம் நோக்கி முறுவலித் திறைஞ்சலின்நறைகமழ் எண்ணெய்ச் சிறுநுண் துள்ளிபொங்குபுனல் உற்றது போலஎன்அங்கம் எல்லாந் தானா யினளே.
சொற்பிரிப்பு
உலாநீர்க் கங்கை ஒரு சடைக் கரந்துபுலால்நீர் ஓழுகப் பொருகளிறு உரித்தபூத நாதன் ஆதி மூர்த்திதிருமட மலைமகளுக்கு ஒருகூறு கொடுத்துத் தன்அன்பின் அமைத்தவன் ஆரூர் நன்பகல்வலம்புரி அடுப்பா மாமுத்துஅரிசிசலஞ்சலம் நிறைய ஏற்றி நலந்திகழ்பவளச் செந்தீ மூட்டிப் பொலம்படஇப்பியம் துடுப்பால் ஒப்பத் துழாவிஅடாஅதுஅட்ட அமுதம் வாய்மடுத்துஇடாஅ ஆயமோடு உண்ணும் பொழுதில்திருந்துஇழைப் பணைத்தோள் தேமொழி மாதேவிருந்தின் அடியேற்கு அருளுதியோ எனமுலைமுகம் நோக்கி முறுவலித்து இறைஞ்சலின்நறைகமழ் வெண்ணெய்ச் சிறு நுண் துள்ளிபொங்குபுனல் உற்றது போல என்அங்கம் எல்லாம் தான் ஆயினளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
ஆயினஅன் பாரே அழிப்பர் அனலாடிபேயினவன் பாரோம்பும் பேரருளான் - தீயினவன்கண்ணாளன் ஆரூர்க் கடலார் மடப்பாவைதண்ணாருங் கொங்கைக்கே தாழ்ந்து.
சொற்பிரிப்பு
ஆயின அன்புஆரே அழிப்பர் அனலாடிபேய் இனவன் பார் ஓம்பும் பேரருளான் – தீயினவன்கண்ணாளன் ஆரூர்க் கடலார் மடப்பாவைதண்ணாரும் கொங்கைக்கே தாழ்ந்து.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
தாழ்ந்து கிடந்த சடைமுடிச் சங்கரன் தாள்பணியாதாழ்ந்து கிடந்துநை வார்கிளை போலயர் வேற் கிரங்கிச்சூழ்ந்து கிடந்த கரைமேல் திரையென்னும் கையெறிந்துவீழ்ந்து கிடந்தல றித்துயி லாதிவ் விரிகடலே.
சொற்பிரிப்பு
தாழ்ந்து கிடந்த சடைமுடிச் சங்கரன் தாள்பணியாதுஆழ்ந்து கிடந்து நைவார் கிளைபோல் அயர்வேற்கு இரங்கிச்சூழ்ந்து கிடந்த கரைமேல் திரை என்னும் கை எறிந்துவீழ்ந்து கிடந்து அலறித் துயிலாது இவ்விரிகடலே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.