திருமுறை 11 · 11.007 · 101

கோயில்

அருளியவர்
சேரமான் பெருமாள் நாயனார்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்டஎன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.
சொற்பிரிப்பு
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்டஎன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஈசனைக் காணப் பலிகொடு செல்லஎற் றேஇவளோர்பேயனைக் காமுறு பிச்சிகொ லாமென்று பேதையர்முன்தாயெனை ஈர்ப்பத் தமியேன் தளரஅத் தாழ்சடையோன்வாவெனைப் புல்லவென் றான்இமை விண்டன வாட்கண்களே.
சொற்பிரிப்பு
ஈசனைக் காணப் பலிகொடு செல்ல எற்றே இவளோர்பேயனைக் காமுறுபிச்சி கொலாம் என்று பேதையர்முன்தாய்எனை ஈர்ப்பத் தமியேன் தளர அத் தாழ்சடையோன்வாஎனைப் புல்ல என்றான் இமை விண்டன வாள் கண்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கண்களங் கஞ்செய்யக் கைவளை சோரக் கலையுஞ்செல்லஒண்களங் கண்ணுதல் வேர்ப்பஒண் கொன்றையந் தார்உருவப்பெண்களங் கம்மிவள் பேதுறும் என்பதோர் பேதைநெஞ்சம்பண்களங் கம்மிசை பாடநின் றாடும் பரமனையே.
சொற்பிரிப்பு
கண்கள்அங்குஅம்செய்யக் கைவளை சோரக் கலையும்செல்லஒண் களம் கண்ணுதல் வேர்ப்ப ஒண் கொன்றையந்தார் உருவப்பெண் களங்கம் இவள் பேதுறும் என்பதோர் பேதை நெஞ்சம்பண்கள் அங்கம் இசை பாட நின்றாடும் பரமனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பரமனை யேபலி தேர்ந்துநஞ் சுண்டது பன்மலர்சேர்பிரமனை யேசிரங் கொண்டுங் கொடுப்பது பேரருளாம்சரமனை யேஉடம் பட்டும் உடம்பொடு மாதிடமாம்வரமனை யேகிளை யாகும்முக் கண்ணுடை மாதவனே.
சொற்பிரிப்பு
பர மனையே பலி தேர்ந்து நஞ்சுண்டது பன்மலர்சேர்பிரமனையே சிரம் கொண்டும் கொடுப்பது பேர்அருளாம்சரமனையே உடம்புஅட்டும் உடம்பொடு மாதுஇடமாம்வர மனையே கிளைஆகும் முக்கண்ணுடை மாதவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

தவனே உலகுக்குத் தானே முதல்தான் படைத்தவெல்லாம்சிவனே முழுதும்என் பார்சிவ லோகம் பெறுவர்செய்யஅவனே அடல்விடை ஊர்தி கடலிடை நஞ்சமுண்டபவனே எனச்சொல்லு வாரும் பெறுவர்இப் பாரிடமே.
சொற்பிரிப்பு
தவனே உலகுக்குத் தானேமுதல் தான் படைத்த எல்லாம்சிவனே முழுதும் என்பார் சிவலோகம் பெறுவர் செய்யஅவனே அடல்விடை ஊர்தி கடலிடை நஞ்சம்உண்டபவனே எனச் சொல்லுவாரும் பெறுவர் இப்பாரிடமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

இடமால் வலந்தான் இடப்பால் துழாய்வலப் பால்ஒண்கொன்றைவடமால் இடந்துகில் தோல்வலம் ஆழி இடம்வலம்மான்இடமால் கரிதால் வலஞ்சே திவனுக் கெழில்நலஞ்சேர்குடமால் இடம்வலங் கொக்கரை யாம்எங்கள் கூத்தனுக்கே.
சொற்பிரிப்பு
இட மால் வலம் தான்; இடப்பால் துழாய் வலப்பால் ஒண்கொன்றை;வட மால்இடம் துகில் தோல் வலம்; ஆழி இடம் வலம் மான்இடமால் கரிதால் வலஞ்சேது இவனுக்குஎழில்நலம்சேர்குடம்ஆல் இடம், வலம் கொக்கரையாம் எங்கள் கூத்தனுக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கூத்துக் கொலாம் இவர் ஆடித் திரிவது கோல்வளைகள்பாத்துக் கொலாம்பலி தேர்வது மேனி பவளம்கொலாம்ஏத்துக் கொலாம்இவர் ஆதரிக் கின்ற திமயவர்தம்ஓத்துக் கொலாம்இவர் கண்டதிண் டைச்சடை உத்தமரே.
சொற்பிரிப்பு
கூத்துக் கொலாம் இவர் ஆடித் திரிவது கோல்வளைகள்பாத்துக் கொலாம் பலிதேர்வது மேனி பவளம்கொலாம்ஏத்துக் கொலாம் இவர் ஆதரிக்கின்றது இமயவர்தம்ஓத்துக் கொலாம் இவர் கண்டது இண்டைச்சடை உத்தமரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

உத்தம ராய்அடி யார்உல காளத் தமக்குரியமத்தம் அராமதி மாடம் பதிநலம் சீர்மைகுன்றாஎத்தம ராயும் பணிகொள்ள வல்ல இறைவர்வந்தென்சித்தம ராய்அக லாதுடன் ஆடித் திரிதவரே.
சொற்பிரிப்பு
உத்தமராய் அடியார் உலகாளத் தமக்குரியமத்தம் அரா மதி மாடம் பதி நலம் சீர்மை குன்றாஎத்தமராயும் பணிகொள்ள வல்ல இறைவர்வந்துஎன்சித்தம்மராய் அகலாதுஉடன் ஆடித் திரிதவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின் உள்ளும் திரிதரினும்அரிதவர் தன்மை அறிவிப்ப தாயினும் ஆழிநஞ்சேய்கரிதவர் கண்டம் வெளிதவர் சாந்தம்கண் மூன்றொடொன்றாம்பரிதவர் தாமே அருள்செய்து கொள்வர்தம் பல்பணியே.
சொற்பிரிப்பு
திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின் உள்ளும் திரிதரினும்அரிதுஅவர் தன்மை அறிவிப்பதாயினும் ஆழிநஞ்சுஏய்கரிதுஅவர் கண்டம் வெளிதுஅவர் சாந்தம்கண் மூன்றொடுஒன்றாம்பரி தவர் தாமே அருள்செய்துகொள்வர் தம் பல்பணியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பணிபதம் பாடிசை ஆடிசை யாகப் பனிமலரால்அணிபதங் கன்பற் கொளப்பனை அத்தவற் கேயடிமைதுணிபதங் காமுறு தோலொடு நீறுடல் தூர்த்துநல்லதணிபதங் காட்டிடுஞ் சஞ்சலம் நீஎன் தனிநெஞ்சமே.
சொற்பிரிப்பு
பணி பதம் பாடிசை ஆடுஇசையாகப் பனிமலரால்அணி பதங்கன் பல்கொள் அப்பனை அத்தவற்கே அடிமைதுணி பதம் காமுறு தோலொடு நீறுடல் தூர்த்து நல்லதணி பதம் காட்டிடும் சஞ்சலம் நீ என் தனிநெஞ்சமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

நெஞ்சம் தளிர்விடக் கண்ணீர் ததும்ப முகம்மலரஅஞ்செங் கரதலம் கூம்பஅட் டாங்கம் அடிபணிந்துதஞ்சொல் மலரால் அணியவல் லோர்கட்குத் தாழ்சடையான்வஞ்சங் கடிந்து திருத்திவைத் தான்பெரு வானகமே.
சொற்பிரிப்பு
நெஞ்சம் தளிர்விடக் கண்ணீர் ததும்ப முகம்மலரஅஞ்ச எம் கரதலம் கூம்ப அட்டாங்கம் அடிபணிந்துதஞ்சொல் மலரால் அணியவல்லோர்கட்குத் தாழ்சடையான்வஞ்சம் கடிந்து திருத்தி வைத்தான் பெரும் வானகமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

வானகம் ஆண்டுமந் தாகினி ஆடிநந் தாவனம் சூழ்தேனக மாமலர் சூடிச்செல் வோரும் சிதவல்சுற்றிக்கானகந் தேயத் திரிந்திரப் போரும் கனகவண்ணப்பால்நிற நீற்றற் கடியரும் அல்லாப் படிறருமே.
சொற்பிரிப்பு
வானகம் ஆண்டு மந்தாகினி ஆடிநந்தாவனம் சூழ்தேனக மாமலர் சூடிச்செல்வோரும் சிதவல்சுற்றிக்கானகம்தேயத் திரிந்துஇரப்போரும் கனக வண்ணப்பால்நிற நீற்றற்கு அடியரும் அல்லாப் படிறருமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

படிறா யினசொல்லிப் பாழுடல் ஓம்பிப் பலகடைச் சென்றிடறா தொழிதும் எழுநெஞ்ச மேஎரி ஆடிஎம்மான்கடல்தா யினநஞ்சம் உண்ட பிரான்கழல் சேர்தல்கண்டாய்உடல்தான் உளபயன் ஆவசொன் னேன்இவ் வுலகினுள்ளே.
சொற்பிரிப்பு
படிறுஆயின சொல்லிப் பாழுடல் ஓம்பிப் பலகடைச்சென்றுஇடறாதுஒழிதும் எழுநெஞ்சமே எரிஆடி எம்மான்கடல்தாயின நஞ்சம் உண்ட பிரான் கழல் சேர்தல்கண்டாய்உடல்தான் உளபயன் ஆவ; சொன்னேன் இவ்உலகினுள்ளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

உலகா ளுறுவீர் தொழுமின்விண் ணாள்வீர் பணிமின்நித்தம்பலகா முறுவீர் நினைமின் பரமனொ டொன்றலுற்றீர்நலகா மலரால் அருச்சிமின் ஆள்நர கத்துநிற்கும்அலகா முறுவீர் அரனடி யாரை அலைமின்களே.
சொற்பிரிப்பு
உலகாள் உறுவீர் தொழுமின் விண்ணாள்வீர் பணிமின் நித்தம்பல காமுறுவீர் நினைமின் பரமனொடு ஒன்றல் உற்றீர்நல கா மலரால் அருச்சிமின்; நாள்நரகத்து நிற்கும்அல காமுறுவீர் அரனடியாரை அலைமின்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

அலையார் புனல்அனல் ஞாயி றவனி மதியம்விண்கால்தொலையா உயிருடம் பாகிய சோதியைத் தொக்குமினோதலையாற் சுமந்துந் தடித்துங் கொடித்தேர் அரக்கன்என்னேகலையான் ஒருவிரல் தாங்ககில் லான்விட்ட காரணமே.
சொற்பிரிப்பு
அலையார் புனல்அனல் ஞாயிறு அவனி மதியம்விண்கால்தொலையா உயிர் உடம்பாகிய சோதியைத் தொக்குமினோதலையால் சுமந்தும் தடித்தும் கொடித்தேர் அரக்கன் என்னேகலையான் ஒருவிரல் தாங்ககில்லான் விட்ட காரணமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

காரணன் காமரம் பாடவோர் காமர்அம் பூடுறத்தன்தாரணங் காகத் தளர்கின்ற தையலைத் தாங்குவர்யார்போரணி வேற்கண் புனற்படம் போர்த்தன பூஞ்சுணங்கார்ஏரணி கொங்கையும் பொற்படம் மூடி இருந்தனவே.
சொற்பிரிப்பு
காரணன் காமரம் பாடவோர் காமர்அம்பு ஊடுறத் தன்தார்அணங்காகத் தளர்கின்ற தையலைத் தாங்குவார் யார்போரணி வேற்கண் புனற்படம் போர்த்தன பூஞ்சுணங்குஆர்ஏர்அணி கொங்கையும் பொற்படம் மூடி இருந்தனவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

இருந்தனம் எய்தியும் நின்றுந் திரிந்துங் கிடந்தலைந்தும்வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு போகநெஞ் சேமடவாள்பொருந்திய பாகத்துப் புண்ணியன் புண்ணியல் சூலத்தெம்மான்திருந்திய போதவன் தானே களையும்நம் தீவினையே.
சொற்பிரிப்பு
இருந்தனம் எய்தியும் நின்றும் திரிந்தும் கிடந்துஅலைந்தும்வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு போக நெஞ்சே மடவாள்பொருந்திய பாகத்துப் புண்ணியன் புண் இயல்சூலத்துஎம்மான்திருந்திய போதவன் தானே களையும் நம் தீவினையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

தீவினை யேனைநின் றைவர் இராப்பகல் செத்தித்தின்னமேவினை வாழ்க்கை வெறுத்தேன் வெறுத்துவிட் டேன்வினையும்ஓவின துள்ளந் தெளிந்தது கள்ளங் கடிந் தடைந்தேன்பாவின செஞ்சடை முக்கணன் ஆரணன் பாதங்களே.
சொற்பிரிப்பு
தீவினையேனை நின்று ஐவர் இராப்பகல் செத்தித் தின்னமேவினை வாழ்க்கை வெறுத்தேன் வெறுத்துவிட்டேன் வினையும்ஓவினது உள்ளம் தெளிந்தது கள்ளம் கடிந்துஅடைந்தேன்பாவின செஞ்சடை முக்கணன் ஆரணன் பாதங்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

பாதம் புவனி சுடர்நய னம்புவ னம்உயிர்ப் போங்கோதம் உடுக்கை உயர்வான் முடிவிசும் பேய் உடம்புவேதம் முகம்திசை தோள்மிகு பன்மொழி கீதம்என்னபோதம் இவற்கோர் மணிநிறம் தோற்பது பூங்கொடியே.
சொற்பிரிப்பு
பாதம் புவனி சுடர் நயனம் பவனம் உயிர்ப் போங்குஓதம் உடுக்கை உயர்வான் முடிவிசும்பே உடம்புவேதம் முகம் திசை தோள் மிகு பன்மொழி கீதம் என்னபோதம் இவற்குஓர் மணிநிறம் தோற்பது பூங்கொடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

கொடிமேல் இடபமுங் கோவணக் கீளுமோர் கொக்கிறகும்அடிமேற் கழலும் அகலத்தில் நீறும்ஐ வாயரவும்முடிமேல் மதியும் முருகலர் கொன்றையும் மூவிலையவடிவேல் வடிவும்என் கண்ணுள்எப் போதும் வருகின்றவே.
சொற்பிரிப்பு
கொடிமேல் இடபமும் கோவணக் கீளும் ஓர் கொக்குஇறகும்அடிமேல் கழலும் அகலத்தில் நீறும் ஐவாய் அரவும்முடிமேல் மதியும் முருகலர் கொன்றையும் மூவிலையவடிவேல் வடிவும் என் கண்ணுள் எப்போதும் வருகின்றவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம்வை கற்குவைகல்பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்றகில் லேன்பொடி பூசிவந்துன்அருகொன்றி நிற்க அருளுகண் டாய்அழல் வாய்அரவம்வெருகொன்ற வெண்மதி செஞ்சடை மேல்வைத்த வேதியனே.
சொற்பிரிப்பு
வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம் வைகற்கு வைகல்பொருகின்ற போர்க்கு ஒன்றும் ஆற்றகில்லேன் பொடிபூசி வந்துன்அருகுஒன்றி நிற்க அருளுகண்டாய் அழல்வாய் அரவம்வெருகுஒன்ற வெண்மதி செஞ்சடைமேல்வைத்த வேதியனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

வேதியன் பாதம் பணிந்தேன் பணிந்துமெய்ஞ் ஞானமென்னும்சோதியென் பால்கொள்ள உற்றுநின் றேற்கின்று தொட்டிதுதான்நீதியென் றான்செல்வம் ஆவதென் றேன்மேல் நினைப்புவண்டேர்ஓதிநின் போல்வகைத் தேயிரு பாலும் ஒழித்ததுவே.
சொற்பிரிப்பு
வேதியன் பாதம் பணிந்தேன் பணிந்து மெய்ஞ்ஞானம் என்னும்சோதி என்பால் கொள்ள உற்று நின்றேற்குஇன்று தொட்டு இதுதான்நீதி என்றான்செல்வம் ஆவதென்றேன் மேல்நினைப்பு வண்டுஏர்ஓதி நின்போல் வகைத்தே இருபாலும் ஒழித்ததுவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன் உவகையை ஓங்கிற்றுள்ளம்இழித்தேன் உடம்பினை ஏலேன் பிறரிடை இம்மனையும்பழித்தேன் பழியே விளைக்கும்பஞ் சேந்திரியக் குஞ்சரமும்தெழித்தேன் சிவனடி சேர்ந்தேன் இனிமிகத் தெள்ளியனே.
சொற்பிரிப்பு
ஒழித்தேன் பிறவியை; ஊர்ந்தேன் உவகையை; ஓங்கிற்று உள்ளம்;இழித்தேன் உடம்பினை; ஏலேன் பிறரிடை; இம்மனையும்பழித்தேன்; பழியே விளைக்கும் பஞ்சேந்திரியக் குஞ்சரமும்தெழித்தேன்; சிவனடி சேர்ந்தேன் - இனி மிகத் தெள்ளியனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன் தீங்கவி பாடலுற்றேன்ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன் உரைத் தார்உரைத்தகள்ளிய புக்காற் கவிகள்ஒட் டார்கடல் நஞ்சயின்றாய்கொள்ளிய அல்லகண் டாய்புன்சொல் ஆயினும் கொண்டருளே.
சொற்பிரிப்பு
தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன் தீங்கவி பாடலுற்றேன்ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன் உரைத்தார் உரைத்தகள்ளிய புக்கால் கவிகள் ஒட்டார் கடல் நஞ்சு அயின்றாய்கொள்ளிய வல்ல கண்டாய் புன்சொல் ஆயினும் கொண்டுஅருளே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

அருளால் வருநஞ்சம் உண்டுநின் றாயை அமரர்குழாம்பொருளார் கவிசொல்ல யானும்புன் சொற்கள் புணர்க்கலுற்றேன்இருளா சறவெழில் மாமதி தோன்றவும் ஏன்றதென்னவெருளா தெதிர்சென்று மின்மினி தானும் விரிகின்றதே.
சொற்பிரிப்பு
அருளால் வருநஞ்சம் உண்டு நின்றாயை அமரர் குழாம்பொருளார் கவிசொல்ல யானும் புன்சொற்கள் புணர்க்கல் உற்றேன்இருள்ஆசற எழில் மாமதி தோன்றவும் ஏன்றதுஎன்னவெருளாது எதிர்சென்று மின்மினி தானும் விரிகின்றதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

விரிகின்ற ஞாயிறு போன்றது மேனியஞ் ஞாயிறுசூழ்ந்தெரிகின்ற வெங்கதிர் ஒத்தது செஞ்சடை அச்சடைக் கீழ்ச்சரிகின்ற காரிருள் போன்றது கண்டம்அக் காரிருட்கீழ்ப்புரிகின்ற வெண்முகில் போன்றுள தால்எந்தை ஒண்பொடியே.
சொற்பிரிப்பு
விரிகின்ற ஞாயிறு போன்றது மேனி அஞ்ஞாயிறு சூழ்ந்துஎரிகின்ற வெங்கதிர் ஒத்தது செஞ்சடை அச்சடைக் கீழ்ச்சரிகின்ற கார்இருள் போன்றது கண்டம் அக்கார்இருள்கீழ்ப்புரிகின்ற வெண்முகில் போன்றுஉளதால் எந்தை ஒண்பொடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

பொடிக்கின் றிலமுலை போந்தில பல்சொற் பொருள்தெரியாமுடிக்கின் றிலகுழல் ஆயினும் கேண்மின்கள் மூரிவெள்ளம்குடிக்கொண்ட செஞ்சடைக் கொண்டலங் கண்டன்மெய்க் கொண்டணிந்தகடிக்கொன்றை நாறுகின் றாள்அறி யேன்பிறர் கட்டுரையே.
சொற்பிரிப்பு
பொடிக்கின்றில முலை போந்தில பல் சொற்பொருள் தெரியாமுடிக்கின்றில குழல் ஆயினும் கேண்மின்கள் மூரி வெள்ளம்குடிக்கொண்டசெஞ்சடைக்கொண்டல்அம்கண்டன் மெய்க்கொண்டணிந்தகடிக்கொன்றை நாறுகின்றாள் அறியேன் பிறர் கட்டுரையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

உரைவளர் நான்மறை ஓதி உலகம் எலாந் திரியும்விரைவளர் கொன்றை மருவிய மார்பன் விரிசடைமேல்திரைவளர் கங்கை நுரைவளர் தீர்த்தஞ் செறியச் செய்தகரைவளர் ஒத்துள தாற்சிர மாலைஎம் கண்டனுக்கே.
சொற்பிரிப்பு
உரைவளர் நான்மறை ஓதி உலகம் எலாம் திரியும்விரைவளர் கொன்றை மருவிய மார்பன் விரிசடைமேல்திரைவளர் கங்கை நுரைவளர் தீர்த்தம் செறியச் செய்தகரைவளர் ஒத்துளதால் சிரமாலை எம் கண்டனுக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

கண்டங் கரியன் கரியீர் உரியன் விரிதருசீர்அண்டங் கடந்த பெருமான் சிறுமான் தரித்தபிரான்பண்டன் பரம சிவனோர் பிரமன் சிரம்அரிந்தபுண்தங் கயிலன் பயிலார மார்பன்எம் புண்ணியனே.
சொற்பிரிப்பு
கண்டம் கரியன் கரி ஈர் உரியன் விரி தரு சீர்அண்டம் கடந்த பெருமான் சிறு மான் தரித்த பிரான்பண்டன் பரமசிவன் ஓர் பிரமன் சிரம் அரிந்தபுண்தங்குஅயிலன் பயில்ஆர மார்பன் எம் புண்ணியனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

புண்ணியன் புண்ணியல் வேலையன் வேலைய நஞ்சன்அங்கக்கண்ணியன் கண்ணியல் நெற்றியன் காரணன் கார்இயங்கும்விண்ணியன் விண்ணியல் பாணியன் பாணி கொள உமையாள்பண்ணியன் பண்ணியல் பாடலன் ஆடற் பசுபதியே.
சொற்பிரிப்பு
புண்ணியன் புண்இயல்வேலையன் வேலையநஞ்சன் அங்கக்கண்ணியன் கண்இயல்நெற்றியன் காரணன் கார்இயங்கும்விண்ணியன் விண்இயல்பாணியன் பாணி கொள உமையாள்பண்ணியன் பண்ணியல் பாடலன் நாடற் பசுபதியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

பதியார் பலிக்கென்று வந்தார் ஒருவர்க்குப் பாவைநல்லீர்கதியார் விடைஉண்டு கண்மூன் றுளகறைக் கண்டமுண்டுகொதியார் மழுவுண்டு கொக்கரை உண்டிறை கூத்துமுண்டுமதியார் சடைஉள மால்உள தீவது மங்கையர்க்கே.
சொற்பிரிப்பு
பதியார் பலிக்கென்று வந்தார் ஒருவர்க்குப் பாவை நல்லீர்கதியார் விடை உண்டு கண்மூன்றுஉள கறைக்கண்டம் உண்டுகொதி ஆர் மழு உண்டு கொக்கரை உண்டு இறைகூத்தும் உண்டுமதி ஆர் சடை உள மால்உளதுஈவது மங்கையர்க்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

மங்கைகொங் கைத்தடத் திங்குமக் குங்குமப் பங்கநுங்கிஅங்கமெங் கும்நெகச் சங்கமங் கைத்தலத் துங்கவர்வான்கங்கைநங் கைத்திரைப் பொங்குசெங் கண்அர வங்கள்பொங்கிப்பங்கிதங் கும்மலர்த் திங்கள்தங் கும்முடிப் பண்டங்கனே.
சொற்பிரிப்பு
மங்கை கொங்கைத் தடத்து இங்கும் அக்குங்குமப் பங்க நுங்கிஅங்கம்எங்கும்நெகச் சங்கம்அங்கைத்தலத்தும் கவர்வான்கங்கை நங்கைத் திரைப் பொங்கு செங்கண் அரவங்கள்பொங்கிப்பங்கி தங்கும் மலர்த்திங்கள் தங்கும் முடிப் பண்டங்கனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

பண்டங்கன் வந்து பலிதாஎன்றான்பக லோற் கிடென்றேன்அண்டங் கடந்தவன் அன்னம்என்றான்அயன் ஊர்தியென்றேன்கொண்டிங் குன்ஐயம்பெய் என்றான் கொடித்தேர் அநங்கன்என்றேன்உண்டிங் கமைந்ததென் றாற்கது சொல்ல உணர்வுற்றதே.
சொற்பிரிப்பு
பண்டங்கன் வந்து பலிதா என்றான் பகலோற்கிடுஎன்றேன்அண்டம் கடந்தவன் அன்னம் என்றான் அயன் ஊர்தி என்றேன்கொண்டுஇங்குன் ஐயம்பெய்என்றான்கொடித்தேர்அநங்கன்என்றேன்உண்டிஇங்குஅமைந்தது என்றாற்கு அதுசொல்ல உணர்வுற்றதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

உற்றடி யார்உல காளஓர் ஊணும் உறக்கும் இன்றிப்பெற்றம தாவதென் றேனும் பிரான்பெரு வேல்நெடுங்கண்சிற்றடி யாய்வெண்பல் செவ்வாய் இவள்சிர மாலைக்கென்றும்இற்றிடை யாம்படி யாகஎன் னுக்கு மெலிக்கின்றதே.
சொற்பிரிப்பு
உற்றடியார் உலகாள ஓர்ஊணும் உறக்கும்இன்றிப்பெற்றம்அதாவதுஎன்று ஏறும்பிரான் பெருவேல் நெடுங்கண்சிற்றடியாய் வெண்பல் செவ்வாய் இவள் சிரமாலைக்குஎன்றும்இற்றுஇடை ஆம் படியாக என்னுக்கு மெலிக்கின்றதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

மெலிக்கின்ற வெந்தீ வெயில்வாய் இழுதழல் வாய்மெழுகுகலிக்கின்ற காமம் கரதலம் எல்லி துறக்கம் வெங்கூற்றொலிக்கின்ற நீருறு தீயொளி யார்முக்கண் அத்தர்மிக்கபலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை சூடிய பல்லுயிரே.
சொற்பிரிப்பு
மெலிக்கின்ற வெந்தீ வெயில்வாய் இழுது அழல்வாய் மெழுகுதலிக்கின்ற காமம் கரதலம் எல்லி துறக்கம் வெங்கூற்றுஒலிக்கின்ற நீர்உறு தீ ஒளியார் முக்கண் அத்தர் மிக்கபலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை சூடிய பல்லுயிரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

பல்லுயிர் பாகம் உடல்தலை தோல்பக லோன்மறல்பெண்வில்லிஓர் வேதியன் வேழம் நிரையே பறித்துதைத்துப்புல்லியுஞ் சுட்டும் அறுத்தும் உரித்துங்கொண் டான் புகழேசொல்லியும் பாடியும் ஏத்தக் கெடும்நங்கள் சூழ்துயரே.
சொற்பிரிப்பு
பல்லுயிர் பாகம் உடல் தலை தோல் பகலோன் மறல் பெண்வில்லி ஓர்வேதியன் வேழம் நிரையே பறித்து தைத்துப்புல்லியும் சுட்டும் அறுத்தும் உரித்தும் கொண்டான் புகழேசொல்லியும் பாடியும் ஏத்தக்கெடும் நங்கள் சூழ் துயரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

துயருந் தொழும்அழும் சோரும் துகிலுங் கலையுஞ்செல்லப்பெயரும் பிதற்றும் நகும்வெய் துயிர்க்கும் பெரும்பணிகூர்ந்தயரும் அமர்விக்கும் மூரி நிமிர்க்கும்அந் தோஇங்ஙனேமயரும் மறைக்காட் டிறையினுக் காட்பட்ட வாணுதலே.
சொற்பிரிப்பு
துயரும் தொழும் அழும் சோரும் துகிலும் கலையும் செல்லப்பெயரும் பிதற்றும் நகும் வெய்துயிர்க்கும் பெரும்பணிகூர்ந்துஅயரும் அமர்விக்கும் மூரி நிமிர்க்கும் அந்தோ இங்ஙனேமயரும் மறைக்காட்டு இறையினுக்குஆட்பட்ட வாணுதலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

38

வாணுதற் கெண்ணம்நன் றன்று வளர்சடை எந்தைவந்தால்நாணுதற் கெண்ணாள் பலிகொடுசென்று நகும்நயந்துபேணுதற் கெண்ணும் பிரமன் திருமால் அவர்க் கரியதாணுவுக் கென்னோ இராப்பகல் நைந்திவள் தாழ்கின்றதே.
சொற்பிரிப்பு
வாணுதற்கு எண்ணம் நன்றன்று வளர்சடை எந்தை வந்தால்நாணுதற்கு எண்ணாள் பலிகொடுசென்று நகும் நயந்துபேணுதற்கு எண்ணும் பிரமன் திருமால் அவர்க்குஅரியதாணுவுக்கு என்னோ இராப்பகல் நைந்து இவள் தாழ்கின்றதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

39

தாழுஞ் சடைசடை மேலது கங்கையக் கங்கைநங்கைவாழுஞ் சடைசடை மேலது திங்கள்அத் திங்கட்பிள்ளைபோழுஞ் சடைசடை மேலது பொங்கர வவ்வரவம்வாழுஞ் சடைசடை மேலது கொன்றையெம் மாமுனிக்கே.
சொற்பிரிப்பு
தாழும்சடை சடைமேலது கங்கை அக்கங்கைநங்கைவாழும்சடை சடைமேலது திங்கள் அத்திங்கட் பிள்ளைபோழும்சடை சடைமேலது பொங்குஅரவுஅவ்வரவம்வாழும்சடை சடை மேலது கொன்றை எம் மாமுனிக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

40

முனியே முருகலர் கொன்றையி னாய்என்னை மூப்பொழித்தகனியே கழலடி அல்லாற் களைகண்மற் றொன்றுமிலேன்இனியேல் இருந்தவம் செய்யேன் திருந்தஅஞ் சேநினைந்துதனியேன் படுகின்ற சங்கடம் ஆர்க்கினிச் சாற்றுவனே.
சொற்பிரிப்பு
முனியே முருகலர் கொன்றையினாய் என்னை மூப்பொழித்தகனியே கழலடி அல்லால் களைகண் மற்றொன்றுமிலேன்இனியேல்; இருந்தவம் செய்யேன் திருந்த, அஞ்சே நினைந்துதனியேன் படுகின்ற சங்கடம் ஆர்க்கு இனிச்சாற்றுவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

41

சாற்றுவன் கோயில் தலையும் மனமும் தவம்இவற்றால்ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிந் தாற்றிஅஞ் சொல்மலரால்ஏற்றுவன் ஈசன்வந் தென்மனத் தான்என் றெழுந்தலரேதூற்றுவன் தோத்திரம் ஆயின வேயினிச் சொல்லுவனே.
சொற்பிரிப்பு
சாற்றுவன் கோயில் தலையும் மனமும் தவம் இவற்றால்ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிந்து ஆற்றி அஞ்சொல்மலரால்ஏற்றுவன் ஈசன் வந்தென் மனத்தான் என்று எழுந்துஅலரேதூற்றுவன் தோத்திரம் ஆயினவே இனிச் சொல்லுவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

42

சொல்லா தனகொழு நாவல்ல சோதியுட் சோதிதன்பேர்செல்லாச் செவிமரம் தேறித் தொழாதகை மண்திணிந்தகல்லாம் நினையா மனம்வணங்காத்தலை யும்பொறையாம்அல்லா அவயவந் தானும் மனிதர்க் கசேதனமே.
சொற்பிரிப்பு
சொல்லாதன கொழு, நாவல்ல; சோதியுட்சோதி தன்பேர்செல்லாச் செவி, மரம்; தேறித் தொழாத கை, மண் திணிந்தகல்லாம்; நினையா மனம் வணங்காத் தலையும் பொறையாம்அல்லா அவயவம்தானும் மனிதர்க்கு அசேதனமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

43

தனக்குன்றம் மாவையம் சங்கரன் தன்னருள் அன்றிப்பெற்றால்மனக்கென்றும் நஞ்சிற் கடையா நினைவன் மதுவிரியும்புனக்கொன்றை யான்அரு ளால்புழுவாகிப் பிறந்திடினும்எனக்கென்றும் வானவர் பொன்னுல கோடொக்க எண்ணுவனே.
சொற்பிரிப்பு
தனக் குன்றம் மா வையம் சங்கரன் தன்னருள் அன்றிப்பெற்றால்மனக்குஎன்றும் நஞ்சில் கடையா நினைவன் மது விரியும்புனக்கொன்றையான் அருளால் புழுவாகிப் பிறந்திடினும்எனக்குஎன்றும் வானவர் பொன்னுலகோடுஒக்க எண்ணுவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

44

எண்ணம் இறையே பிழைக்குங் கொலாம்இமை யோர்இறைஞ்சும்தண்ணம் பிறைச்சடைச் சங்கரன் சங்கக் குழையன்வந்தென்உள்நன் குறைவ தறிந்தும் ஒளிமா நிறங்கவர்வான்கண்ணும் உறங்கா திராப்பகல் எய்கின்ற காமனுக்கே.
சொற்பிரிப்பு
எண்ணம் இறையே பிழைக்கும் கொலாம் இமையோர் இறைஞ்சும்தண் அம் பிறைச்சடைச் சங்கரன் சங்கக்குழையன் வந்துஎன்உள் நன்குஉறைவதுஅறிந்தும் ஒளி மாநிறம் கவர்வான்கண்ணும் உறங்காது இராப்பகல் எய்கின்ற காமனுக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

45

காமனை முன்செற்ற தென்றாள் அவள்இவள் காலன்என்னும்தாமநன் மார்பனை முன்செற்ற தென்றுதன் கையெறிந்தாள்நாம்முனஞ் செற்றதன் றாரைஎன் றேற்கிரு வர்க்கும் அஞ்சிஆமெனக் கிற்றிலர் அன்றெனக் கிற்றிலர் அந்தணரே.
சொற்பிரிப்பு
காமனை முன்செற்றதுஎன்றாள் அவள் இவள் காலன்என்னும்தாமநன்மார்பனை முன்செற்றதென்று தன் கை எறிந்தாள்நாம்முனம் செற்றதன்றுஆரை என்றேற்கு இருவர்க்கும் அஞ்சிஆமெனக் கிற்றிலர் அற்றெனக் கிற்றிலர் அந்தணரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

46

அந்தணராம் இவர்ஆரூர் உறைவதென் றேன்அதுவேசந்தணை தோளியென் றார்தலை யாயசலவர் என்றேன்பந்தணை கையாய் அதுவும்உண் டென்றார் உமையறியக்கொந்தணை தாரீர் உரைமின்என் றேன்துடி கொட்டினரே.
சொற்பிரிப்பு
அந்தணராம் இவர்ஆர்ஊர் உறைவதுஎன்றேன் அதுவேசந்துஅணைதோளி என்றார்; தலையாய சலவர் என்றேன்பந்தணை கையாய் அதுவும் உண்டுஎன்றார்; உமைஅறியக்கொந்துஅணை தாரீர் உரைமின் என்றேன் துடி கொட்டினரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

47

கொட்டும் சிலபல சூழநின் றார்க்கும்குப் புற்றெழுந்துநட்ட மறியும் கிரீடிக்கும் பாடும் நகும்வெருட்டும்வட்டம் வரும்அருஞ் சாரணை செல்லும் மலர்தயங்கும்புட்டங் கிரும்பொழில் சூழ்மறைக் காட்டரன் பூதங்களே.
சொற்பிரிப்பு
கொட்டும் சில பல சூழ நின்றார்க்கும் குப்புற்றுஎழுந்துநட்டம் அறியும் கிரீடிக்கும் பாடும் நகும் வெருட்டும்வட்டம் வரும் அருஞ்சாரணை செல்லும் மலர்தயங்கும்புள் தங்கு இரும்பொழில் சூழ்மறைக்காட்டான் பூதங்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

48

பூதப் படையுடைப் புண்ணியரேபுறஞ் சொற்கள்நும்மேல்ஏதப் படஎழு கின்றன வாலிளை யாளொடும்மைக்காதற்படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலராற்சேதப் படுத்திட்ட காரணம் நீரிறை செப்புமினே.
சொற்பிரிப்பு
பூதப்படை உடைப் புண்ணியரே புறஞ்சொற்கள் நும்மேல்ஏதப்பட எழுகின்றன வால் இளையாளொடுஉம்மைக்காதற்படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலரால்சேதப்படுத்திட்ட காரணம் நீர் இறை செப்புமினே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

49

செப்பன கொங்கைக்குத் தேமலர்க் கொன்றை நிறம்பணித்தான்மைப்புரை கண்ணுக்கு வார்புனல் கங்கைவைத் தான்மனத்துக்கொப்பன இல்லா ஒளிகிளர் உன்மத்தமும் அமைத்தான்அப்பனை அம்மனைநீயென் பெறாதுநின் றார்க்கின்றதே.
சொற்பிரிப்பு
செப்பன கொங்கைக்குத் தேமலர்க் கொன்றை நிறம்பணித்தான்;மைப்புரை கண்ணுக்கு வார்புனல் கங்கைவைத்தான்; மனத்துக்குஒப்பன இல்லா ஒளி கிளர் உன்மத்தமும் அமைத்தான்;அப்பனை அம்மனை நீ என் பெறாது நின்றுஆர்க்கின்றதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

50

ஆர்க்கின்ற நீரும் அனலும் மதியும் ஐவாய்அரவும்ஓர்க்கின்ற யோகும் உமையும் உருவும் அருவும்வென்றிபார்க்கின்ற வேங்கையும் மானும் பகலும் இரவும்எல்லாம்கார்க்கொன்றை மாலையி னார்க்குடன் ஆகிக் கலந்தனவே.
சொற்பிரிப்பு
ஆர்க்கின்ற நீரும் அனலும் மதியும் ஐவாய் அரவும்ஓர்க்கின்ற யோகும் உமையும் உருவும் அருவும் வென்றிபார்க்கின்ற வேங்கையும் மானும் பகலும் இரவும்எல்லாம்கார்க்கொன்றை மாலையினார்க்குஉடன் ஆகிக் கலந்தனவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

51

கலந்தனக் கென்பலர் கட்டவிழ் வார்கொன்றை கட்டரவார்சலந்தனக் கண்ணிய கானகம் ஆடியோர் சாணகமும்நிலந்தனக் கில்லா அகதியன் ஆகிய நீலகண்டத்தலந்தலைக் கென்னே அலந்தலை யாகி அழிகின்றதே.
சொற்பிரிப்பு
கலம்தனக்கு என்பு அலர் கட்டவிழ் வார் கொன்றைகட்டுஅரவார்சலம்தனக்குஅண்ணிய கானகம் ஆடி; ஓர் சாண் அகமும்நிலம்தனக்குஇல்லா அகதியன் ஆகிய நீலகண்டத்துஅலந்தலைக்கு என்னே அலந்தலையாகி அழிகின்றதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

52

அழிகின்ற தாருயிர் ஆகின்ற தாகுலம் ஏறிடும்மால்இழிகின்ற சங்கம் இருந்த முலைமேல் கிடந்தனபீர்பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது வாய்கலை போனவந்தார்மொழிகின்ற தென்இனி நான்மறை முக்கண் முறைவனுக்கே.
சொற்பிரிப்பு
அழிகின்றதுஆருயிர், ஆகின்றதுஆகுலம், ஏறிடும் மால்,இழிகின்ற சங்கம், இருந்த முலைமேல் கிடந்தன பீர்,பொழிகின்ற கண்ணீர், புலர்ந்தது வாய், கலை போன; வந்தார்மொழிகின்றது என் இனி நான்மறை முக்கண் முறைவனுக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

53

முறைவனை மூப்புக்கு நான்மறைக் கும்முதல் ஏழ்கடலந்துறைவனைச் சூழ்கயி லாயச் சிலம்பனைத் தொன்மைகுன்றாஇறைவனை எண்குணத் தீசனை ஏத்தினர் சித்தந்தம்பால்உறைவனைப் பாம்பனை யாம்பின்னை என்சொல்லி ஓதுவதே.
சொற்பிரிப்பு
முறைவனை மூப்புக்கு நான்மறைக்கும்முதல் ஏழ்கடலம்துறைவனைச் சூழ் கயிலாயச் சிலம்பனைத் தொன்மைகுன்றாஇறைவனை எண்குணத்துஈசனை ஏத்தினர் சித்தம் தம்பால்உறைவனைப் பாம்பனையாம் பின்னை என் சொல்லி ஓதுவதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

54

ஓதவன் நாமம் உரையவன் பல்குணம் உன்னைவிட்டேன்போதவன் பின்னே பொருந்தவன் வாழ்க்கை திருந்தச்சென்றுமாதவ மாகிடு மாதவ மாவளர் புன்சடையான்யாதவன் சொன்னான் அதுகொண் டொழிஇனி ஆரணங்கே.
சொற்பிரிப்பு
ஓதுஅவன் நாமம் உரை அவன் பல்குணம் உன்னைவிட்டேன்போதுஅவன் பின்னே பொருந்துஅவன் வாழ்க்கை திருந்தச்சென்றுமாதவம்ஆகிடு மாதவ மா வளர் புன் சடையான்யாதுஅவன் சொன்னான் அது கொண்டுஒழி இனி ஆரணங்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

55

ஆரணங் கின்முகம் ஐங்கணை யான்அகம் அவ்வகத்தில்தோரணந் தோள்அவன் தேரகல் அல்குல்தொன் மைக்கண்வந்தபூரண கும்பம் முலைஇவை காணப் புரிசடைஎம்காரணன் தாள்தொழும் அன்போ பகையோ கருதியதே.
சொற்பிரிப்பு
ஆரணங்கின்முகம் ஐங்கணையான் அகம் அவ்வகத்தில்தோரணம் தோள் அவன் தேர் அகல் அல்குல் தொன்மைக்கண்வந்தபூரண கும்பம் முலை இவை காணப் புரிசடைஎம்காரணன் தாள் தொழும் அன்போ பகையோ கருதியதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

56

கருதிய தொன்றில்லை ஆயினும் கேண்மின்கள் காரிகையாள்ஒருதின மும்முள ளாகஒட் டாதொடுங் கார்ஒடுங்கப்பொருதநன் மால்விடைப் புண்ணியன் பொங்கிளங் கொன்றைஇன்னேதருதிர்நன் றாயிடும் தாரா விடிற்கொல்லுந் தாழ்இருளே.
சொற்பிரிப்பு
கருதியது ஒன்றில்லை ஆயினும் கேண்மின்கள் காரிகையாள்ஒரு தினமும் உளளாக ஒட்டாது அடும் கார் ஒடுங்கப்பொருத நன்மால் விடைப் புண்ணியன் பொங்கிளம் கொன்றை இன்னேதருதிர் நன்றாயிடும் தாராவிடில் கொல்லும் தாழ் இருளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

57

இருளார் மிடற்றால் இராப்பகல் தன்னால் வரைமறையால்பொருளார் கமழ்கொன்றை யால்முல்லை புற்றர வாடுதலால்தெருளார் மதிவிசும் பால்பெளவந்தெண்புனல் தாங்குதலால்அருளாற் பலபல வண்ணமுமா அரன் ஆயினனே.
சொற்பிரிப்பு
இருளார் மிடற்றால் இராப் பகல் தன்னால், வரை மரையால்,பொருளார் கமழ்கொன்றையால் முல்லை, புற்றுஅரவாடுதலால்,தெருளார் மதி விசும்பால், பெளவம் தெண்புனல் தாங்குதலால்;அருளால் பலபல வண்ணமுமால் அரன் ஆயினனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

58

ஆயினஅந்தணர் வாய்மை அரைக்கலை கைவளைகள்போயின வாள்நிகர் கண்ணுறு மைந்நீர் முலையிடையேபாயின வேள்கைக் கரபத் திரத்துக்குச் சூத்திரம்போல்ஆயின பல்சடை யார்க்கன்பு பட்டஎம் ஆயிழைக்கே.
சொற்பிரிப்பு
ஆயினஅந்தணர் வாய்மை அரைக்கலை கைவளைகள்போயின வாள்நிகர் கண்ணுறு மைந்நீர் முலையிடையேபாயின வேள் கைக் கர பத்திரத்துக்குச் சூத்திரம்போல்ஆயின பல்சடையார்க்குஅன்பு பட்ட எம் ஆயிழைக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

59

இழையார் வனமுலை வீங்கி இடையிறு கின்ற திற்றால்பிழையாள் நமக்கிவை கட்டுண்க என்பது பேச்சுக்கொலாம்கழையார் கழுக்குன்ற வாணனைக் கண்டனைக் காதலித்தாள்குழையார் செவியொடு கோலக் கயற்கண்கள் கூடியவே.
சொற்பிரிப்பு
இழைஆர் வனமுலை வீங்கி இடை இறுகின்றதுஇற்றால்பிழையாள் ‘நமக்குஇவை கட்டுண்க’ என்பது பேச்சுக்கொலாம்கழைஆர் கழுக்குன்றவாணனைக் கண்டனைக் காதலித்தாள்குழையார் செவியொடு கோலக்கயற்கண்கள் கூடியவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

60

கூடிய தன்னிடத் தான்உமை யாளிடத் தானைஐயாறீடிய பல்சடை மேற்றெரி வண்ணம் எனப்பணிமின்பாடிய நான்மறை பாய்ந்தது கூற்றைப் படர்புரஞ்சுட்டாடியநீறுசெஞ் சாந்திவை யாம்எம் அயன்எனவே.
சொற்பிரிப்பு
கூடிய தன்னிடத்தான் உமையாள் இடத்தானை ஐயாறுஈடிய பல்சடை மேல் எரி வண்ணம் எனப்பணிமின்பாடிய நான்மறை பாய்ந்தது கூற்றைப் படர்புரஞ்சுட்டுஆடிய நீறுசெஞ்சாந்து இவையாம் எம்அயன் எனவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

61

அயமே பலிஇங்கு மாடுள தாணுவோர் குக்கிக்கிடப்பயமே மொழியும் பசுபதி ஏறெம்மைப் பாய்ந்திடுமால்புயமேய் குழலியர் புண்ணியர் போமின் இரத்தல்பொல்லாநயமே மொழியினும் நக்காம் அம் மாஉம்மை நாணுதுமே.
சொற்பிரிப்பு
அயமே பலிஇங்கு மாடுஉள தாணு ஓர் குக்கிக்கு இடப்பயமே மொழியும் பசுபதி ஏறுஎம்மைப் பாய்ந்திடுமால்புய மேய் குழலியர் புண்ணியர் போமின் இரத்தல் பொல்லாநயமே மொழியினும் நக்காம் அமா உம்மை நாணுதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

62

நாணா நடக்க நலத்தார்க் கிடையில்லை நாம்எழுதஏணார் இருந்தமி ழால்மற வேனுந் நினைமின்என்றும்பூணார் முலையீர் நிருத்தன் புரிசடை எந்தைவந்தால்காணாவிடேன்கண்டி ரவா தொழியேன் கடிமலரே.
சொற்பிரிப்பு
நாணா நடக்க நலத்தார்க்குஇடையில்லை நாம்எழுகஏணார் இரும் தமிழால் மறவேனும் நினைமின் என்றும்பூண்ஆர் முலையீர் நிருத்தன் புரிசடை எந்தைவந்தால்காணாவிடேன் கண்டு இரவாது ஒழியேன் கடிமலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

63

கடிமலர்க் கொன்றை தரினும்புல் லேன்கலை சாரஒட்டேன்முடிமலர் தீண்டின் முனிவன் முலைதொடு மேற்கெடுவன்அடிமலர் வானவர் ஏத்தநின் றாய்க்கழ கல்லஎன்பன்தொடிமலர்த் தோள்தொடு மேல்திரு வாணை தொடங்குவனே.
சொற்பிரிப்பு
கடிமலர்க் கொன்றை தரினும் புல்லேன்; கலைசாரல் ஒட்டேன்முடிமலர் தீண்டின் முனிவன்; முலைதொடுமேற் கெடுவன்;அடிமலர் வானவர் ஏத்த நின்றாய்க்கு அழகல்ல என்பன்தொடிமலர்த் தோள் தொடுமேல் திரு ஆணை தொடங்குவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

64

தொடங்கிய வாழ்க்கையை வாளா துறப்பர் துறந்தவரேஅடங்கிய வேட்கை அரன்பால் இலர்அறு காற்பறவைமுடங்கிய செஞ்சடை முக்கண னார்க்கன்றி இங்கும்அன்றிக்கிடங்கினிற் பட்ட கராஅனை யார்பல கேவலரே.
சொற்பிரிப்பு
தொடங்கிய வாழ்க்கையை வாளா துறப்பர் துறந்தவரேஅடங்கிய வேட்கை அரன்பால் இலர் அறுகால் பறவைமுடங்கிய செஞ்சடை முக்கணனார்க்கு அன்றி இங்கும்அன்றிக்‘கிடங்கினில் பட்ட கரா’ அனையார் பல கேவலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

65

வலந்தான் கழல்இடம் பாடகம் பாம்பு வலம்இடமேகலந்தான் வலம்நீ றிடம்சாந் தெரிவலம் பந்திடமென்பலந்தார் வலம்இடம் ஆடகம் வேல்வலம் ஆழிஇடம்சலந்தாழ் சடைவலம் தண்ணங் குழல்இடம் சங்கரற்கே.
சொற்பிரிப்பு
வலந்தான் கழல், இடம் பாடகம்; பாம்பு வலம், இடம் மேகலந்தான்; வலம் நீறு, இடம் சாந்து; எரி வலம்பந்துஇடம்;என்புஅலந்தார் வலம், இடம் ஆடகம்; வேல் வலம், ஆழி இடம்;சலம்தாழ் சடை வலம், தண்ணங்குழல் இடம்; சங்கரற்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

66

சங்கரன் சங்கக் குழையன் சரணார விந்தந்தன்னைஅங்கரங் கூப்பித் தொழுதாட் படுமின்தொண் டீர்நமனார்கிங்கரர் தாம்செய்யும் கீழா யினமிறை கேட்டலுமேஇங்கரம் ஆயிரம் ஈரஎன் நெஞ்சம் எரிகின்றதே.
சொற்பிரிப்பு
சங்கரன் சங்கக் குழையன் சரணார விந்தம் தன்னைஅங்கரம் கூப்பித் தொழுதாட்படுமின் தொண்டீர் நமனார்கிங்கரர் தாம் செய்யும் கீழாயின மிறை கேட்டலுமேஇங்குஅரம் ஆயிரம் ஈர என் நெஞ்சம் எரிகின்றதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

67

எரிகின்ற தீயொத் துளசடை ஈசற்கத் தீக்கிமையோர்சொரிகின்ற பாற்கடல் போன்றது சூழ்புனல் அப்புனலிற்சரிகின்ற திங்களோர் தோணிஒக்கின்றதத் தோணிஉய்ப்பான்தெரிகின்ற திண்கழை போன்றுள தால்அத்திறல் அரவே.
சொற்பிரிப்பு
எரிகின்ற தீ ஒத்துள சடை ஈசற்கு; அத்தீக்கு இமையோர்சொரிகின்ற பாற்கடல் போன்றது சூழ்புனல்; அப்புனலில்சரிகின்ற திங்கள் ஓர் தோணி ஒக்கின்றது; அத்தோணி உய்ப்பான்தெரிகின்ற திண் கழை போன்றுளதால் அத்திறல் அரவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

68

அரவம் உயிர்ப்ப அழலும்அங் கங்கை வளாய்க்குளிரும்குரவங் குழல்உமை ஊடற்கு நைந்துரு கும்அடைந்தோர்பரவும் புகழ்அண்ணல் தீண்டலும் பார்வா னவைவிளக்கும்விரவும் இடர்இன்பம் எம்இறை சூடிய வெண்பிறையே.
சொற்பிரிப்பு
அரவம் உயிர்ப்ப அழலும்; அம்கங்கைவளாய்க் குளிரும்;குரவம் குழல் உமை ஊடற்கு நைந்துஉருகும்; அடைந்தார்பரவும் புகழ் அண்ணல் தீண்டலும்; பார் வான் அவைவிளக்கும்;விரவும் இடர் இன்பம் எம் இறை சூடிய வெண்பிறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

69

பிறைத்துண்டம் சூடலுற் றோபிச்சை கொண்டனல் ஆடலுற்றோமறைக்கண்டம் பாடலுற் றோஎன்பும் நீறும் மருவலுற்றோகறைக்கண்டம் புல்லலுற் றோகடு வாய்அர வாடலுற்றோகுறைக்கொண் டிவள்அரன் பின்செல்வ தென்னுக்குக் கூறுமினே.
சொற்பிரிப்பு
பிறைத்துண்டம் சூடலுற்றோ, பிச்சை கொண்டுஅனல்ஆடலுற்றோமறைக்கண்டம் பாடலுற்றோ, என்பும் நீறும் மருவலுற்றோகறைக்கண்டம் புல்லலுற்றோ, கடுவாய் அரவாடலுற்றோகுறைக்கொண்டிவள் அரன் பின் செல்வது என்னுக்குக் கூறுமினே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

70

கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற் றேவல் குளிர்மின்கண்கள்தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின்செற்றம்ஆறுமின் வேட்கை அறுமின் அவலம் இவைநெறியாஏறுமின் வானத் திருமின் விருந்தாய் இமையவர்க்கே.
சொற்பிரிப்பு
கூறுமின் ஈசனைச் செய்ம்மின் குற்றேவல் குளிர்மின் கண்கள்தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின் செற்றம்ஆறுமின் வேட்கை அறுமின் அவலம் இவைநெறியாஏறுமின் வானத்து இருமின் விருந்தாய் இமையவர்க்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

71

இமையோர் கொணர்ந்திங் கிழித்திட நீர்மைகெட் டேந்தல்பின்போய்அமையா நெறிச்சென்றோர் ஆழ்ந்த சலமகளாய் அணைந்தேஎமையாளு டையான் தலைமக ளாஅங் கிருப்பஎன்னேஉமையா ளவள்கீழ் உறைவிடம் பெற்றோ உறைகின்றதே.
சொற்பிரிப்பு
இமையோர் கொணர்ந்திங்கு இழித்திட நீர்மைகெட்டு ஏந்தல் பின்போய்அமையா நெறிச்சென்றோர் ஆழ்ந்தசலமகளாய்அணைந்தேஎமை ஆளுடையான் தலைமகளா அங்குஇருப்ப என்னேஉமையாள்அவள் கீழ் உறைவிடம் பெற்றோ உறைகின்றதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

72

உறைகின் றனர்ஐவர் ஒன்பது வாயில்ஓர் மூன்றுளதால்மறைகின்ற என்பு நரம்போ டிறைச்சி உதிரமச்சைபறைகின்ற தோல்போர் குரம்பை பயன்இல்லை போய்அடைமின்அறைகின்ற தெண்புனல் செஞ்சடைக் கொண்டோன் மலரடிக்கே.
சொற்பிரிப்பு
உறைகின்றனர் ஐவர் ஒன்பது வாயில்ஓர் மூன்றுளதால்மறைகின்ற என்பு நரம்போடு இறைச்சி உதிரம் மச்சைபறைகின்ற தோல்போர் குரம்பை பயன்இல்லை போய்அடைமின்அறைகின்ற தெண்புனல் செஞ்சடைக் கொண்டோன் மலரடிக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

73

அடிக்கண்ணி கைதொழு தார்க்ககன் ஞாலங் கொடுத்தடிநாய்வடிக்கண்ணி நின்னைத் தொழவளை கொண்டனை வண்டுண்கொன்றைத்கடிக்கண்ணி யாய்எமக் கோருர் இரண்டகங் காட்டினையால்கொடிக்கண்ணி மேல்நல்ல கொல்லே றுயர்த்த குணக்குன்றமே.
சொற்பிரிப்பு
அடிக்கண்ணி கைதொழுதார்க்கு அகன் ஞாலம் கொடுத்துஅடிநாய்வடிக்கண்ணி நின்னைத்தொழ வளைகொண்டனை வண்டுண் கொன்றைத்கடிக்கண்ணியாய் எமக்கு ஓர் ஊர் இரண்டு அகம் காட்டினையால்கொடிக் கண்ணி மேல் நல்ல கொல் ஏறு உயர்த்த குணக்குன்றமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

74

குன்றெடுத் தான்செவி கண்வாய் சிரங்கள் நெரிந்தலறஅன்றடர்த் தற்றுகச் செற்றவன் நற்றவர்க் கற்றசிவன்மன்றிடைத் தோன்றிய நெல்லிக் கனிநிற்ப மானுடர்போய்ஒன்றெடுத் தோதிப் புகுவர் நரகத் துறுகுழியே.
சொற்பிரிப்பு
குன்றெடுத்தான் செவி கண் வாய் சிரங்கள் நெரிந்து அலறஅன்றடர்த்து அற்று உகச்செற்றவன் அற்றவர்க்கு அற்றசிவன்மன்றிடைத் தோன்றிய நெல்லிக் கனி நிற்ப மானுடர் போய்ஒன்றெடுத்து ஓதிப் புகுவர் நரகத்து உறுகுழியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

75

குழிகட் கொடுநடைக் கூன்பற் கவட்டடி நெட்டிடைஊன்உழுவைத் தழைசெவித் தோல்முலைச் சூறை மயிர்ப்பகுவாய்த்தெழிகட் டிரைகுரல் தேம்பல் வயிற்றுத் திருக்குவிரற்கழுதுக் குறைவிடம் போல்கண்டன் ஆடும் கடியரங்கே.
சொற்பிரிப்பு
குழிகண் கொடுநடைக் கூன்பல் கவட்டுஅடி நெட்டுஇடை ஊன்உழுவைத் தழை செவித் தோல் முலைச் சூறை மயிர்ப் பகுவாய்த்தெழி கட்டுஇரை குரல் தேம்பல் வயிற்றுத் திருக்கு விரல்கழுதுக்கு உறைவிடம் போல் கண்டன் ஆடும் கடியரங்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

76

அரங்கா மணிஅன்றில் தென்றல்ஓர் கூற்றம் மதியம் அந்தீச்சரங்காமன் எய்யஞ்சு சந்துட் பகையால் இவள்தளர்ந்தாள்இரங்கா மனத்தவர் இல்லை இரங்கான் இமையவர்தம்சிரங்கா முறுவான் எலும்புகொள் வான்என்றன் தேமொழிக்கே.
சொற்பிரிப்பு
அரம் கா மணி அன்றில், தென்றல் ஓர் கூற்றம் மதியம் அம் தீச்சரம் காமன் எய்அஞ்சு சந்து உட்பகையால் இவள் தளர்ந்தாள்இரங்கா மனத்தவர் இல்லை இரங்கான் இமையவர் தம்சிரம் காமுறுவான் எலும்பு கொள்வான் என்தன் தேமொழிக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

77

மொழியக்கண் டான்பழி மூளக்கண் டான்பிணி முன்கைச் சங்கம்அழியக்கண் டான்அன்றில் ஈரக்கண் டான்தென்றல் என்உயிர்மேல்சுழியக்கண் டான்துயர் கூரக்கண் டான்துகில் சூழ்கலையும்கழியக்கண் டான்தில்லைக் கண்ணுத லான்கண்ட கள்ளங்களே.
சொற்பிரிப்பு
மொழியக்கண்டான் பழி மூளக்கண்டான் பிணி முன்கைச் சங்கம்அழியக்கண்டான் அன்றில் ஈரக்கண்டான் தென்றல் என்உயிர்மேல்சுழியக்கண்டான் துயர் கூரக்கண்டான் துகில் சூழ்கலையும்கழியக்கண்டான் தில்லைக் கண்ணுதலான் கண்ட கள்ளங்களே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

78

கள்ள வளாகங் கடிந்தடி மைப்படக் கற்றவர்தம்உள்ள வளாகத் துறுகின்ற உத்தமன் நீள்முடிமேல்வெள்ள வளாகத்து வெண்ணுரை சூடி வியன்பிறையைக்கொள்ள அளாய்கின்ற பாம்பொன் றுளது குறிக்கொண்மினே.
சொற்பிரிப்பு
கள்ள வளாகம் கடிந்து அடிமைப்படக் கற்றவர்தம்உள்ள வளாகத்து உறுகின்ற உத்தமன் நீள்முடிமேல்வெள்ள வளாகத்து வெண் நுரை சூடி வியன்பிறையைக்கொள்ள அளாய்கின்ற பாம்புஒன்று உளது குறிக்கொண்மினே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

79

குறிக்கொண் டிவள்பெய்த கோல்வளை யேவந்து கோள்இழைத்தீர்வெறிக்கொண்ட வெள்ளிலம் போதோ எலும்போ விரிசடைமேல்உறைக்கொன்றை யோஉடைத் தோலோ பொடியோ உடைகலனோகறைக்கண்ட ரேநுமக் கென்னோ சிறுமி கடவியதே.
சொற்பிரிப்பு
குறிக்கொண்டிவள் பெய்த கோல்வளையே வந்து கோள் இழைத்தீர்வெறிக்கொண்ட வெள்ளில் அம்போதோ எலும்போ விரிசடைமேல்உறைக் கொன்றையோ உடைத்தோலோ பொடியோ உடைகலனோகறைக்கண்டரே நுமக்கென்னோ சிறுமி கடவியதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

80

கடவிய தொன்றில்லை ஆயினுங் கேண்மின்கள் காரிகையாள்மடவிய வாறுகண் டாம்பிறை வார்சடை எந்தைவந்தால்கிடவிய நெஞ்சம் இடங்கொடுத் தாட் கவலங் கொடுத்தான்தடவிய கொம்பதன் தாள்மேல் இருந்து தறிக்குறுமே.
சொற்பிரிப்பு
கடவியது ஒன்றில்லை ஆயினும் கேண்மின்கள் காரிகையாள்மடவியவாறு கண்டாம் பிறைவார் சடை எந்தை வந்தாற்குஇடவிய நெஞ்சம் இடங்கொடுத்தாட்கு அவலம் கொடுத்தான்தடவிய கொம்பு அதன் தாள்மேல் இருந்து தறிக்குறுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

81

தறித்தாய் அயன்தலை சாய்த்தாய் சலந்தர னைத்தழலாப்பொறித்தாய் அனங்கனைச் சுட்டாய் புரம்புன லும்சடைமேற்செறித்தாய்க் கிவைபுகழ் ஆகின்ற கண்டிவள் சில்வளையும்பறித்தாய்க் கிதுபழி ஆகுங்கொ லாம்என்று பாவிப்பனே.
சொற்பிரிப்பு
தறித்தாய் அயன்தலை சாய்த்தாய் சலந்தரனைத் தழலாப்பொறித்தாய் அனங்கனைச் சுட்டாய் புரம்புனலும் சடைமேல்செறித்தாய்க்கு இவை புகழ் ஆகின்ற கண்டிவள் சில்வளையும்பறித்தாய்க்கு இதுபழி ஆகும் கொலாம் என்று பாவிப்பனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

82

பாவிக்கும் பண்டையள் அல்லள் பரிசறி யாள்சிறுமிஆவிக்கும் குற்குலு நாறும் அகம்நெக அங்கம் எங்கும்காவிக்கண் சோரும்பொச் சாப்புங் கறைமிடற் றானைக்கண்ணில்தாவிக்கும் வெண்ணகை யாள்அம்மெல் லோதிக்குச் சந்தித்தவே.
சொற்பிரிப்பு
பாவிக்கும் பண்டையள் அல்லள் பரிசறியாள் சிறுமிஆவிக்கும் குற்குலுநாறும் அகம்நெக அங்கம் எங்கும்காவிக்கண் சோரும் பொச்சாப்பும் கறைமிடற்றானைக் கண்ணில்தாவிக்கும் வெண்நகையாள் அம்மெல் ஓதிக்குச் சந்தித்தவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

83

சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம் பிணிக்குத் தனிமருந்தாம்சிந்திக்கிற் சிந்தா மணியாகித் தித்தித் தமுதமுமாம்வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும் வானோர் வணங்கநின்றஅந்திக்கண் ஆடியி னான்அடி யார்களுக் காவனவே.
சொற்பிரிப்பு
சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம் பிணிக்குத் தனிமருந்தாம்சிந்திக்கில் சிந்தாமணியாகித் தித்தித்து அமுதமுமாம்வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும் வானோர் வணங்க நின்றஅந்திக்கண் ஆடியினான் அடியார்களுக்கு ஆவனவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

84

ஆவன யாரே அழிக்கவல் லார்அமை யாவுலகில்போவன யாரே பொதியகிற் பார்புரம் மூன்றெரித்ததேவனைத் தில்லைச் சிவனைத் திருந்தடி கைதொழுதுதீவினை யேன்இழந் தேன்கலை யோடு செறிவளையே.
சொற்பிரிப்பு
ஆவன யாரே அழிக்கவல்லார் அமையா உலகில்போவன யாரே பொதியகிற்பார் புரம் மூன்றெரித்ததேவனைத் தில்லைச் சிவனைத் திருந்தடி கைதொழுதுதீவினையேன் இழந்தேன் கலையோடு செறி வளையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

85

செறிவளை யாய்நீ விரையல் குலநலம் கல்விமெய்யாம்இறையவன் தாமரைச் சேவடிப் போதென்றெல் லோரும்ஏத்தும்நிறையுடை நெஞ்சிது வேண்டிற்று வேண்டிய நீசர்தம்பால்கறைவளர் கண்டனைக்காணப் பெரிதும் கலங்கியதே.
சொற்பிரிப்பு
செறிவளையாய் நீ விரையல் குலநலம் கல்வி மெய்யாம்இறையவன் தாமரைச் சேவடிப் போது என்று எல்லோரும் ஏத்தும்நிறையுடை நெஞ்சிது வேண்டிற்று வேண்டிய நீசர் தம்பால்கறைவளர் கண்டனைக் காணப் பெரிதும் கலங்கியதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

86

கலங்கின மால்கடல் வீழ்ந்தன கார்வரை ஆழ்ந்ததுமண்மலங்கின நாகம் மருண்டன பல்கணம் வானங்கைபோய்இலங்கின மின்னொடு நீண்ட சடைஇமை யோர்வியந்தார்அலங்கல்நன் மாநடம் ஆர்க்கினி ஆடுவ தெம்மிறையே.
சொற்பிரிப்பு
கலங்கின மால்கடல் வீழ்ந்தன கார்வரை ஆழ்ந்தது மண்மலங்கின நாகம் மருண்டன பல்கணம் வானம் கைபோய்இலங்கின மின்னொடு நீண்டசடை இமையோர் அவிந்தார்அலங்கல் நன் மாநடம் ஆர்க்கினி ஆடுவது எம்மிறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

87

எம்மிறைவன் இமையோர் தலை வன்உமை யாள்கணவன்மும்முறை யாலும் வணங்கப் படுகின்ற முக்கண்நக்கற்கெம்முறை யாள்இவள் என்பிழைத் தாட்கிறை என்பிழைத்தான்இம்முறை யாலே கவரக் கருதிற் றெழிற்கலையே.
சொற்பிரிப்பு
எம்மிறைவன் இமையோர் தலைவன் உமையாள் கணவன்மும்முறையாலும் வணங்கப்படுகின்ற முக்கண் நக்கற்குஎம்முறையாள் இவள் என்பிழைத்தாட்கு இறை என் பிழைத்தான்இம்முறையாலே கவரக் கருதில் எழில் கலையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

88

கலைதலை சூலம் மழுக்கனல் கண்டைகட் டங்கம்கொடிசிலைஇவை ஏந்திய எண்டோட் சிவற்கு மனஞ்சொற்செய்கைநிலைபிழை யாதுகுற் றேவல்செய்தார்நின்ற மேருஎன்னும்மலைபிழை யார்என்ப ரால் அறிந் தோர்கள்இம் மாநிலத்தே.
சொற்பிரிப்பு
கலைதலை சூலம் மழுக்கனல் கண்டை கட்டங்கம் கொடிசிலை இவை ஏந்திய எண்தோள் சிவற்கு மனம்சொல் செய்கைநிலைபிழையாது குற்றேவல் செய்தார் நின்ற மேரு என்னும்மலைபிழையார் என்பரால் அறிந்தோர்கள் இம் மாநிலத்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

89

மாநிலத் தோர்கட்குத் தேவர் அனையஅத் தேவர்எல்லாம்ஆனலத் தாற்றொழும் அஞ்சடை ஈசன் அவன்பெருமைதேனலர்த் தாமரை யோன்திரு மாலவர் தேர்ந்துணரார்பாநலத் தாற்கவி யாமெங்ங னேஇனிப் பாடுவதே.
சொற்பிரிப்பு
மாநிலத்தோர்கட்குத் தேவர் அனைய அத்தேவர் எல்லாம்ஆ நலத்தால் தொழும் அஞ்சடை ஈசன் அவன்பெருமைதேன் அலர்த் தாமரையோன் திருமாலவர் தேர்ந்துணரார்பா நலத்தால் கவியாம் எங்ஙனே இனிப் பாடுவதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

90

பாடிய வண்டுறை கொன்றையி னான்படப் பாம்புயிர்ப்பஓடிய தீயால் உருகிய திங்களின் ஊறல்ஒத்ததாடிய நீறது கங்கையுந் தெண்ணீர் யமுனையுமேகூடிய கோப்பொத்த தால்உமை பாகம்எம் கொற்றவற்கே.
சொற்பிரிப்பு
பாடிய வண்டுறை கொன்றையினான் படப் பாம்பு உயிர்ப்பஓடிய தீயால் உருகிய திங்களின் ஊறல் ஒத்ததாடிய நீறது கங்கையும் தெண்ணீர் யமுனையுமேகூடிய கோப்பு ஒத்ததால் உமை பாகம் எம் கொற்றவற்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

91

கொற்றவ னேஎன்றும் கோவணத் தாய்என்றும் ஆவணத்தால்நற்றவ னேஎன்றும் நஞ்சுண்டி யேஎன்றும் அஞ்சமைக்கப்பெற்றவ னேஎன்றும் பிஞ்ஞக னேஎன்றும் மன்மதனைச்செற்றவ னேஎன்றும் நாளும் பரவும்என் சிந்தனையே.
சொற்பிரிப்பு
கொற்றவனே என்றும் கோவணத்தாய் என்றும் ஆவணத்தால்நற்றவனே என்றும் நஞ்சுண்டியே என்றும் அஞ்சு அமைக்கப்பெற்றவனே என்றும் பிஞ்ஞகனே என்றும் மன்மதனைச்செற்றவனே என்றும் நாளும் பரவும் என் சிந்தனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

92

சிந்தனை செய்ய மனம்அமைத் தேன்செப்ப நாஅமைத்தேன்வந்தனை செய்யத் தலைஅமைத் தேன்கை தொழஅமைத்தேன்பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்மெய் அரும்பவைத்தேன்வெந்தவெண் ணீறணி ஈசற் கிவையான் விதித்தனவே.
சொற்பிரிப்பு
சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் செப்ப நா அமைத்தேன்வந்தனை செய்யத் தலை அமைத்தேன் கை தொழ அமைத்தேன்பந்தனை செய்வதற்கு அன்பு அமைத்தேன் மெய் அரும்ப வைத்தேன்வெந்த வெண் நீறணி ஈசற்கு இவை யான் விதித்தனவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

93

விதித்தன வாழ்நாள் பெரும்பிணி விச்சைகள் கொண்டுபண்டேகொதிப்பினில் ஒன்றுங் குறைவில்லை குங்குமக் குன்றனையபதித்தனங் கண்டனம் குன்றம்வெண் சந்தனம் பட்டனையமதித்தனங் கண்டனம் நெஞ்சினி என்செய்யும் வஞ்சனையே.
சொற்பிரிப்பு
விதித்தன வாழ்நாள் பெரும்பிணி இச்சைகள் கொண்டு பண்டேகொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை குங்குமக்குன்று அனையபதித் தனம் கண்டனம் குன்றம் வெண்சந்தனம் பட்டுஅனையமதித் தனம் கண்டனம் நெஞ்சினி என்செய்யும் வஞ்சனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

94

வஞ்சனை யாலே வரிவளை கொண்டுள்ள மால்பனிப்பத்துஞ்சும் பொழுதும் உறத்தொழுதேன் சொரி மால் அருவிஅஞ்சன மால்வரை வெண்பிறை கவ்விஅண் ணாந்தனையவெஞ்சின ஆனையின் ஈருரி மூடிய வீரனையே.
சொற்பிரிப்பு
வஞ்சனையாலே வரிவளை கொண்டுள்ள மால் பனிப்பத்துஞ்சும் பொழுதும் உறத்தொழுதேன் சொரி மால் அருவிஅஞ்சன மால்வரை வெண்பிறை கவ்வி அண்ணாந்து அனையவெஞ்சின ஆனையின் ஈர் உரி மூடிய வீரனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

95

வீரன் அயன்அரி வெற்பலர் நீர்எரி பொன்எழிலார்காரொண் கடுக்கை கமலம் துழாய்விடை தொல்பறவைபேர்ஒண் பதிநிறம் தார்இவர் ஊர்திவெவ் வேறென் பரால்யாரும் அறியா வகைஎங்கள் ஈசர் பரிசுகளே.
சொற்பிரிப்பு
வீரன் அயன் அரி, வெற்பு அலர் நீர், எரி பொன் எழிலார்கார்ஒண், கடுக்கை கமலம் துழாய், விடை தொல்பறவை;பேர்ஒண் பதி நிறம் தார் இவர்ஊர்தி; வெவ்வேறு என்பரால்யாரும் அறியா வகை எங்கள் ஈசர் பரிசுகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

96

பரியா தனவந்த பாவமும் பற்றும்மற் றும்பணிந்தார்க்குரியான் எனச்சொல்லி உன்னுட னாவன் எனஅடியார்க்கரியான் இவன்என்று காட்டுவன் என்றென் றிவைஇவையேபிரியா துறையும் சடையான் அடிக்கென்றும் பேசுதுமே.
சொற்பிரிப்பு
பரியாதன வந்த பாவமும் பற்றும் மற்றும் பணிந்தார்க்குஉரியான் எனச்சொல்லி உன்னுடன் ஆவன் என அடியார்க்குஅரியான் இவனென்று காட்டுவன் என்றென்று இவைஇவையேபிரியாது உறையும் சடையான் அடிக்கு என்றும் பேசுதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

97

பேசுவ தெல்லாம் அரன்திரு நாமம்அப் பேதை நல்லாள்காய்சின வேட்கை அரன்பாலது அறு காற்பறவைமூசின கொன்றை முடிமே லதுமுலை மேல்முயங்கப்பூசின சாந்தம் தொழுமால் இவைஒன்றும் பொய்யலவே.
சொற்பிரிப்பு
பேசுவதெல்லாம் அரன் திருநாமம் அப்பேதை நல்லாள்காய் சின வேட்கை அரன் பாலது அறுகால் பறவைமூசின கொன்றை முடிமேலது, முலைமேல்முயங்கப்பூசின சாந்தம்தொழும் மால் இவை ஒன்றும் பொய் அலவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

98

பொய்யா நரகம் புகினுந் துறக்கம் புகினும்புக்கிங்குய்யா உடம்பினோ டூர்வ நடப்ப பறப்பஎன்றுநையா விளியினும் நானிலம் ஆளினும் நான்மறைசேர்மையார் மிடற்றான் அடிமற வாவரம் வேண்டுவனே.
சொற்பிரிப்பு
பொய்யா நரகம் புகினும் துறக்கம் புகினும் புக்கிங்குஉய்யா உடம்பினோடு ஊர்வ நடப்ப பறப்ப என்றுநையா விளியினும் நானிலம் ஆளினும் நான்மறைசேர்மையார் மிடற்றான் அடி மறவா வரம் வேண்டுவனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

99

வேண்டிய நாள்களிற் பாதியும் கங்குல் மிகஅவற்றுள்ஈண்டிய வெந்நோய் முதலது பிள்ளைமை மேலதுமூப்பாண்டின அச்சம் வெகுளி அவாஅழுக் காறிங்ஙனேமாண்டன சேர்தும் வளர்புன் சடைமுக்கண் மாயனையே.
சொற்பிரிப்பு
வேண்டிய நாள்களில் பாதியும் கங்குல்; மிகஅவற்றுள்ஈண்டிய வெந்நோய் முதலது பிள்ளைமை மேலது மூப்புஆண்டின அச்சம் வெகுளி அவா அழுக்காறு இங்ஙனேமாண்டன சேர்தும் வளர்புன்சடை முக்கண் மாயனையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

100

மாயன்நன் மாமணி கண்டன் வளர்சடை யாற்கடிமைஆயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தேகாய்சின ஆனை வளரும் கனக மலையருகேபோயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே.
சொற்பிரிப்பு
மாயன்நன் மாமணி கண்டன் வளர்சடையாற்கு அடிமைஆயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தேகாய்சின ஆனை வளரும் கனக மலை அருகேபோயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

101

ஆக்கியோன் பெயர்அன்றுவெள் ளானையின் மீதிமை யோர்சுற் றணுகுறச்செல்வன்றொண்டர் பின்பரி மேற்கொண்டு வெள்ளி மலையரன்முன்சென்றெழில் ஆதி உலாஅரங் கேற்றிய சேரர்பிரான்மன்றிடை ஓதுபொன் வண்ணத்தந்தாதி வழங்கிதுவே.
சொற்பிரிப்பு
அன்று வெள்ளானையின் மீது இமையோர் சுற்று அணுகுறச்செல்வன்தொண்டர் பின்பரிமேல் கொண்டு வெள்ளிமலை அரன்முன்சென்று எழில் ஆதி உலா அரங்கேற்றிய சேரர் பிரான்மன்றுஇடை ஓது பொன்வண்ணத்து அந்தாதி வழங்கு இதுவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.